Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. முதல்வர் தமிழரசு கட்சி ✅. துணை முதல்வர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒட்டுக்குழு கட்சியா? அல்லது…. இருவரும் ஒரே கட்சியா.
  2. நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை ஒன்றில் விழுந்து மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் - நடக்கக்கூடாது 🤲🤲🤲 - முதலில் என்ன செய்வீர்கள்? அது பற்றிய சில வழிகாட்டல்களையே இங்கு பார்க்கப் போகிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாது. ஆதலால் நீங்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றத் தவறாதீர்கள். ♦️நீங்கள் உடனே கதவுகளைத் திறக்க முயற்சித்து நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் தண்ணீரின் அழுத்தம் அதனை திறப்பதை சாத்தியமற்றதாக்குகிவிடும். தப்பிக்கவும் முடியாமல் போகும். ♦️ஜன்னல்களையும் நீங்கள் பணிக்க முற்படாதீர்கள். ஏனெனில் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் சிக்கி, உங்களால் தப்பிப்பது மிகவும் கடினமாகும். ♦️உங்கள் வாகன இருக்கையில் காணப்படும் "ஹெட்ரெஸ்ட்டை" தலைத் தலையாணையை கழற்றி, அதிலுள்ள உலோக முனையை பயன்படுத்தி அல்லது வாகனத்தினுள் காணக்கிடைக்கும் ஏதாவது உடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நீங்கள் தப்பிக்க இலகுவான வழியாகும். ♦️ஏன் பின்புறக் கண்ணாடி? பெரும்பாலான வாகனங்கள் தணீணீரில் மூழ்கும் போது முதலில் பின்புறம் மிதக்கும் படியாகவே வடிவமைக்கப்படுகின்றன. ♦️ஆதலால் தீங்கள் பின்புற கண்ணாடியால் தப்பிக்க முயற்சிப்பதே மிகவும் எற்றமான மற்றும் பாதுகாப்பான வழியாகும். பாதுகாப்பான பயணம் அமைய வாழ்த்துக்கள். Imran Farook
  3. அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு! அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அலாஸ்கா நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், பிற்பகல் பிற்பகல் 2:45 மணிக்கு சுனாமி எச்சரிக்கை முற்றிலும் நீக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1439478
  4. இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.
  5. ஈழத்தில் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கிய தங்க தாத்தா !!!
  6. தமிழுக்காக அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ என்றழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ( 25.05.1878 - 10.07.1953 ) யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் 1878 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதோடு ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். 'அட்டகிரி முருகன் பதிகம்', 'அட்டகிரி முருகன் திருஊஞ்சல்', 'சாவித்திரி கதை', 'பசுவின் கதை' உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை. வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கி அங்கு நாற்பது ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி தமிழ், ஆங்கிலம் மற்றும் இதிகாசங்களைக் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமய பாடங்களைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தினார். பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள்ளார். 400 இற்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தமானது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. யாப்பிலக்கணங்களைக் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். 'சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910 இல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927 இல் ஈழத்துத் தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர். ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். குழந்தைகளுக்கான 'ஆடிப்பிறப்பு', 'கத்தரிவெருளி', 'புளுக்கொடியல்', 'பவளக்கொடி', 'இலவுகாத்த கிளி' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி "சிறுவர் இலக்கிய முன்னோடி" என்ற பெருமை பெற்றார். 'தாடி அறுந்த வேடன்', 'எலியும் சேவலும்' உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை. ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. தமிழி_அமைப்பு
  7. ஆடிக்கூழ். நாளை ஆடிப்பிறப்பு. (17.07.2025) ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சுதல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெரும்பாலான (வீடுகளில்) இடங்களில் நடைபெறும் சம்பிரதாயம். ஆடிக்கூழ் செய்யும் முறை 👇 தேவையான பொருட்கள்: 750 கிராம் பனங்கட்டி 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி ½ கப் முழுப் பயறு ½ கப் வறுத்த உளுத்தம் மா ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு செய்முறை: அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும். முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும். அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். ஆடிக் கூழ் தயார்! குறிப்பு: கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும். பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும். சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / உருண்டைகளை செய்யவும். வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும். Babu Babugi
  8. மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் உள்ளூராட்சி அமைப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த பாதீட்டில் இருந்து 23 பில்லியன் ரூபாவும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்திப் பணிகளுக்காக 53 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1439452
  9. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை! அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெலிகெபொல ஹட்டங்கல பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகலவினால் குறித்த உத்தரவு இன்று (16) பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1439445
  10. 8ஆண்டுகள் குழந்தைகளுடன் குகையில் வாழ்ந்துவந்த பெண் வெளியிட அதிர்ச்சி தகவல்கள்! கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பத்திரமாக மீட்ட கர்நாடக பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார் , மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருப்பதை அவதானித்துள்ளனர். அவரை விசாரித்தபோது, அவரது பெயர் நினா குடினா (40) எனவும், அவர் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருப்பதாகவும் கூறினார். இதையடுத்து 3 பேரையும் பொலிஸார் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கி விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை மேற்கொண்ட கோகர்ணா பொலிஸாரிடம் உண்மைகளை கூறிய நினா , ”நான் ரஷ்யாவைச் சேர்ந்தவள். 2016ஆம் ஆண்டு சுற்றுலா பயணியாக கோவாவுக்கு வந்தேன். அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து கோகர்ணாவில் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். இங்கிருந்து நேபாளத்துக்கு சென்று, 2017இல் மீண்டும் கோகர்ணாவுக்கு வந்தேன். இந்த குகையை எனக்கு கடந்த‌ 8 ஆண்டுகளாக தெரியும். ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால் உள்ளூர் சாமியார் ஒருவர் தியானம் செய்வதற்காக இந்த குகையை காட்டினார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் மூலம் 2 பெண் குழந்தைகளையும் பெர்றேடுத்துக்கொண்டேன். தற்போது அவரிடம் இருந்து பிரிந்து வாழும் நிலையில், என்னுடன் மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) இருக்கிறார்கள். என் மகள்க‌ளுக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறேன், நாங்கள் தினமும் ஆற்றில் குளித்துவிட்டு 3 பேரும் தியானம் செய்வோம். 10 நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வருவேன். எனக்கு தேவையான பணத்தை உறவினர்கள் சிலரும், நண்பர்களும் அனுப்பி வைப்பார்கள். என்னிடம் தொலைபேசி இருந்தாலும், அதனை பெரிதாக பயன்படுத்த மாட்டேன். இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும். எனக் கூறியுள்ளார். குறித்த விசாரணையை அடுத்து பொலிஸார் ரஷ்ய பெண்ணையும், அவரது மகள்களையும் கோகர்ணா மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களின் கடவுச்சீட்டு , விசா போன்றவற்றை பரிசோதித்து, ரஷ்யாவுக்கு மீண்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1439472
  11. ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை அமுல் ! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஒன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அமுலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து ஹலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கூறிய பதில்தான் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுபாட்டில்களின் மூடிகளை தின்றுவிட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக கூறினர். இந்த பதிலை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஊழியர்கள் கூறியது பொய் என்பதை அறிந்த அதிகாரிகள் அந்த ஊழியர்களுக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து பொலிஸார் அதிகாரி ராம்லீலா ரவாணி தெரிவிக்கையில், மதுபோத்தல்களை எலிகள் குடித்ததா இல்லையா என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அரசு உங்களிடம் கொடுத்தது முழு மதுபோத்தல்களை அதேபோல் நீங்களும் எங்களிடம் முழு மது பாட்டில்களையும் ஒப்படையுங்கள் என கூறினார். காலியான அந்த மதுபோத்தல்களுக்கும் சேர்த்து பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார். மதுபோத்தல்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439386
  12. ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளியேற ஆர்வம் உள்ளவர்கள் வணிக விமானங்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1439405
  13. கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை. சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வென்கூவர் தீவிலுள்ள விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது. விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த விமானம் வென்கூவரில் தரையிறங்கியதும், அதிலிருந்த ஒரே பயணியாகக் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அரசாங்க ஊடகமான CBC வெளியிட்ட புகைப்படங்களில், தரையிறங்கிய செஸ்னா விமானத்தை பாதுகாப்பு வாகனங்கள் முற்றுகையிட்டதைக் காணலாம். குறித்த விமானம் விக்டோரியாவில் உள்ள ஒரு விமான மன்றத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தால், வென்கூவர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், 9 உள்நாட்டு விமானங்கள் மாற்றுத் திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1439372
  14. இவர் ஏற்கெனவே இராணுவத்தில் இருந்து விலகி, பிக்குவாகவும் சில காலம் இருந்தவர் என்ற படியால்..... இவருக்கு மடகாஸ்கர் தண்டனைகளை கொடுக்க மாட்டார்கள். மாறாக பதவி பதவி உயர்வு கொடுத்து அழகு பார்ப்பார்கள்.
  15. செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் முக்கியத் தகவல்! செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி, மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து, தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார். நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும். அத்துடன் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது. செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன. மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை. எனவே இது சம்பந்தமான மேலதிக மான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார். செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார். சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது. 21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள் அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439350
  16. 35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது! சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது 01.1 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1439346
  17. ஜூலை முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் வருகை! இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,247,815 ஐத் தாண்டியுள்ளது. முதல் 13 நாட்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இதில் 16,329 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இது 20.5 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்தும், அவுஸ்திரேலியாவில் இருந்தும் அதிகளவானோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு, இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 258,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். https://athavannews.com/2025/1439324
  18. அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார். அத்துடன் சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார். சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸார் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். கல்னேவா புதிய நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கே.பி. மதுரங்க ரத்நாயக்க, முன்னர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் அவரை அடையாளம் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439344
  19. ட்ரம்பின் அச்சுறுத்தலால் கலங்காத புட்டின் மேலும் போராடுவார் – ரஷ்ய வட்டாரங்கள் தகவல்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான தடைகள் குறித்த அச்சுறுத்தல்களால் கலங்காத மேற்குலகம், தனது அமைதிக்கான நிபந்தனைகளில் ஈடுபடும் வரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் தொடர்ந்து போராட திட்டமிட்டுள்ளார். மேலும், ரஷ்யப் படைகள் முன்னேறும்போது அவரது பிராந்திய கோரிக்கைகள் விரிவடையக்கூடும் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமான மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன. 2022 பெப்ரவரியில் உக்ரேனுக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்ட புட்டின், ரஷ்யாவின் பொருளாதாரமும் அதன் இராணுவமும் எந்தவொரு கூடுதல் மேற்கத்திய நடவடிக்கைகளையும் தாங்கும் அளவுக்கு வலிமையானவை என்று நம்புவதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க புட்டின் மறுத்ததால் திங்களன்று (14) ட்ரம்ப் விரக்தியடைந்தார். மேலும், பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் உட்பட உக்ரேனுக்கான ஆயுத விநியோக அலையை அறிவித்தார். அத்துடன், 50 நாட்களுக்குள் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார். கிரெம்ளினின் உயர்மட்ட சிந்தனையை நன்கு அறிந்த மூன்று ரஷ்ய வட்டாரங்கள், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தின் கீழ் புட்டின் போரை நிறுத்த மாட்டார் என்றும், மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளுக்கு மத்தியில் ரஷ்யா, மொஸ்கோவின் எண்ணெய் வாங்குபவர்களை குறிவைத்து அச்சுறுத்தப்பட்ட அமெரிக்க வரிகள் உட்பட மேலும் பொருளாதார நெருக்கடியைத் தாங்கும் என்று நம்புவதாகவும் கூறின. ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு இடையே பல தொலைபேசி அழைப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த போதிலும், அமைதித் திட்டத்திற்கான அடிப்படை குறித்து விரிவான விவாதங்கள் எதுவும் இல்லை என்று ரஷ்யத் தலைவர் நம்புவதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான புட்டினின் நிபந்தனைகளில் நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்ற சட்டப்பூர்வ உறுதிமொழி, உக்ரேனிய நடுநிலைமை மற்றும் அதன் ஆயுதப் படைகள் மீதான வரம்புகள், அங்கு வசிக்கும் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவின் பிராந்திய ஆதாயங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது குறித்து விவாதிக்கவும் புட்டின் தயாராக உள்ளார், இருப்பினும் இது எவ்வாறு செயல்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேன் தனது கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீதான ரஷ்யாவின் இறையாண்மையை ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும், நேட்டோவில் சேர விரும்புகிறதா என்பதைத் தீர்மானிக்கும் இறையாண்மை உரிமையை கெய்வ் தக்க வைத்துக் கொள்கிறது என்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். கிரெம்ளின் சிந்தனையை நன்கு அறிந்த இரண்டாவது வட்டாரம், மேற்கத்திய அழுத்தத்தால் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார இழப்புகளையும் விட மொஸ்கோவின் இலக்குகளை புட்டின் மிக முக்கியமானதாகக் கருதினார் என்றும், ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக சீனா மற்றும் இந்தியா மீது வரிகளை விதிக்கும் அமெரிக்க அச்சுறுத்தல்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை என்றும் கூறியது. போர்க்களத்தில் ரஷ்யாவின் கை மேலோங்கியுள்ளதாகவும், போரை நோக்கிச் செல்லும் அதன் பொருளாதாரம், பீரங்கி குண்டுகள் போன்ற முக்கிய ஆயுதங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியின் உற்பத்தியை விட அதிகமாக உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேன் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கை ஏற்கனவே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, கடந்த மூன்று மாதங்களில் சுமார் 1,415 சதுர கிமீ (546 சதுர மைல்) முன்னேறியுள்ளது என்று உளவுத்துறை வரைபடமான DeepStateMap இன் தரவுகள் தெரிவிக்கின்றன. ஷ்யா தற்போது கிரிமியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, அதை 2014 இல் இணைத்துக் கொண்டது. மேலும் லுஹான்ஸ்க் கிழக்குப் பகுதி முழுவதையும், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் 70% க்கும் அதிகமான பகுதிகளையும், கார்கிவ், சுமி மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான மோதலான ரஷ்ய – உக்ரேன் போரில் 1.2 மில்லியன் மக்கள் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்கா கூறுகிறது. ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ தங்கள் இழப்புகளுக்கான முழு புள்ளிவிவரங்களையும் வழங்கவில்லை. மேலும் மொஸ்கோ மேற்கத்திய மதிப்பீடுகளை நிராகரிக்கின்றது. போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த பின்னர் 2025 ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப், ரஷ்யாவுடனான உறவுகளை சரிசெய்ய முயன்று வருகிறார். புட்டினுடன் குறைந்தது ஆறு முறை தொலைபேசியில் பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439332
  20. 1999ஆம் ஆண்டு செம்மணி புதைகுழி வழக்கை தற்போதைய செம்மணி மனித புதைகுழி வழக்கோடு இணைத்து அழைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சட்டத்தரணி கருத்து தெரிவித்த அந்த வாரத்திலிருந்தே அரியாலை - செம்மணி பிரச்சினையை கிளப்பி அந்த முயற்சிகளை நிறுத்தும் நோக்கத்தோடு கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது….. செம்மணி இங்கு இடம்பெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொ*லையின் முக்கிய சாட்சியமாக மாறக்கூடும். இங்கு நாளாந்தம் எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் அதற்கு ஒரு முக்கிய சாட்சிகள். குழந்தைகளின் என்புத் தொகுதி என சந்தேகிக்கப்படும் ஒன்றரை அடி என்புத் தொகுதிகள், சிறுவர்களின் என்புத் தொகுதிகள் என சந்தேகிக்கப்படும் 3 அடிக்கும் குறைவான என்புத் தொகுதிகள், மண்டையோடுகள் நொருங்கிய நிலையில் காணப்படும் என்புத் தொகுதிகள், முழங்கால்கள் மடக்கப்பட்டு கைகள் கால்கள் கட்டப்பட்டது போன்ற சந்தேகத்துக்கிடமான என்புத் தொகுதிகள், பாடசாலை புத்தகப்பை, குழந்தைகள் விளையாடும் பொம்மை, சிறுமியின் ஆடை, வளையல், பெண்களின் பாதனிகள் என இதுவரை வெளிவந்த சான்றுப் பொருட்கள் செம்மணியின் கொடூரத்தை இந்த உலகிற்கு பறைசாற்றுகின்றன. செம்மணியில் நிகழ்ந்த படுகொ*லைகள், கிருசாந்தி படுகொ*லை, பழைய செம்மணி புதைகுழி அகழ்வு எல்லாம் தற்போது செம்மணி சித்துப்பாத்தி மயானத்தின் புள்ளியில் இணைவதை திசை திருப்பத சிலர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தற்போதைய புதைகுழி வேறு 1999 செம்மணி புதைகுழி வேறு என்ற கருத்துவாக்கத்தை அவசர அவசரமாக ஏற்படுத்தி செம்மணி புதைகுழியில் ஏற்பட்டிருக்கும் கவனத்தை சிதைக்க முற்படுகின்றார்கள். இவ்வளவு காலமும் அமைதியாக இருந்தவர்கள் கடந்த வாரத்திலிருந்து தங்களுக்கு தரப்பட்ட பணியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவசர அவசரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன்னில் கடந்த வாரமே” நீதிமன்றின் முறையான அனுமதியோடு பழைய செம்மணி புதைகுழி வழக்கை(1999) தற்போதைய செம்மணி மனித புதைகுழி வழக்கோடு இணைத்து அழைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி கருத்து தெரிவித்தார். நான் அவதானித்தவரை அன்றிலிருந்து அரியாலை - செம்மணி பிரச்சினையை கிளப்பி அந்த முயற்சிகளை நிறுத்தும் நோக்கத்தோடு கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை செம்மணி என அழைக்கக்கூடாது என அந்த பிரதேசத்திலிருக்கும் தங்களின் விசுவாசிகளிடமிருந்து கருத்துவாக்கங்களை சிலர் முதலில் எழுப்புகின்றனர். அகழ்வு இடம்பெறும் இடத்தினை செம்மணி என கூறக்கூடாது என்று கூறுபவர்களின் முகநூல் பதிவுகளை பார்த்தாலே தெரியும் அவர்கள் யார்? அவர்களை இயக்குபவர்கள் யார் என? செம்மணியில் வெளிவரும் என்புத் தொகுதிகளையும் அதன்பின்னால் இருக்கும் இருண்ட பக்கங்களையும் ஆராயாமல் செம்மணி என்ற சொல்லை பயண்படுத்த விடாமல் கருத்துவாக்கத்தைச் செய்து செம்மணி புதைகுழி வழக்கை வேறொரு கோணத்திற்கு கொண்டுசெல்ல பார்க்கிறார்கள். எங்களுக்கு இடையில் உருவாக்கப்படும் கருத்துவாக்கங்களின் பின்னனிகளை ஆராய வேண்டும் செம்மணி எங்களுக்கு நடந்த இனப்படுகொ*லையை பறைசாற்றும். அதனை தடுக்க இடமளியோம்…. செம்மணி புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை செம்மணி என அடையாளப்படுத்துவதற்கு எதிராக நிற்பவர்களின் சூழ்ச்சியையும் அவர்களின் பின்புலத்தையும் அறிந்துகொள்வோம்.. செம்மணி என்பதை தவிர்த்துவிட்டு போவதற்கு இடமளியோம். பிரபாகரன் டிலக்சன்
  21. 4-5 வயதுடைய சிறுமி செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினால் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் டிலக்சன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.