Everything posted by தமிழ் சிறி
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
-
யாழ்ப்பாணத்து கூழ்.
வாஷா, நேற்று இந்தப் பதிவை யாழ் மண்ணில் பார்த்தேன். யாழ்கள உறவுகளும் நாலு நாள் ஈஸ்டர் லீவில் வீட்டில் நிற்கும் செய்து பார்க்கட்டும் என்று இங்கு இணைத்துள்ளேன். ஏற்கெனவே யாழ் மண்ணுக்கு நன்றி தெரிவித்துள்ளேன் கூழ் என்னும் போது நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஞாபகம் தான் வரும். இதோ அவரின் ஆடிக் கூழ் பாடல். ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டுமா வுருண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக்கவா யூறிடுமே குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் படைப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-
யாழ்ப்பாணத்து கூழ்.
. யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 100 கிராம் கழுவின இறால் - 100 கிராம் கழுவின பாதி நண்டு - 8 மீன்தலை - 1 புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி பயிற்றங்காய் - 10 புளி - ஒரு சின்ன உருண்டை பாலாக்கொட்டை - 100 கிராம் சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மஞ்சள் - சிறிதளவு மிளகு - சிறிதளவு நற்சீரகம் - சிறிதளவு செத்தல் மிளகாய் - சிறிதளவு செய்முறை: 1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும். 2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள். 3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும். 4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும். 5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும். 6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும். 7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார். கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும். நன்றி யாழ் மண். .
-
பெயர் மாற்றங்கள்.
. இந்தப் பக்கம் கனநாள் மோகன் அண்ணா கனநாள் வரவில்லைப் போல் தெரிகிறது. தமிழ்ப்பைத்தியம், சஜீவன், வாத்தியார் எல்லாரும் பெயரை மாத்தச் சொல்லி கியூவிலை நிக்கினம். சஜீவனின் பெயர் நல்லாய்தானே இருக்குது, ஏதோ..... உங்கடை விருப்பம்.
-
பெயர் மாற்றங்கள்.
ஈழப்பிரியன் அண்ணா, இங்கை ஒரு பெயர் உள்ள ஆட்கள் கொழும்புக்கு போனவுடன் பெயர் மாறி விடுமா..... பையா கொழும்புக்கு என்ன, அம்பாந்தோட்டைக்கு போனாலும் பையா என்று தான் கூப்பிடுவேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. யாயினி தங்கச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
பெயர் மாற்றங்கள்.
பையன் என்ன மாதிரி.... அவர் பெயர் மாற்றினாலும் நான் பையா என்று தான் கூப்பிடுவேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புக்கையிலும், முந்திரி கொட்டை கடி பட வேணும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. இங்கு யாரும் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடவில்லை . ஒரு உறவு மற்ற, உறவை வாழ்த்துவதிலாவது.... சிறிது சந்தோசம் கிடைக்குமே..... எல்லாத்திலும் நாங்கள் இளக்காத இளப்பா. வாழ்த்துங்கள். மனம் குளிர, வாழ்த்துங்கள். நீங்கள் ஒருவரை வாழ்த்துவால் , உங்களுக்கு நட்டம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. .
-
பெயர் மாற்றங்கள்.
பெரிய மாமியை விட, சின்ன மாமியிலை தான்.... ஒரு கிக் ஒண்டு இருக்குது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. நண்பர் நெடுக்காலை போவானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா சிவப்புக்கு மேலையும் பச்சை குத்தியிருக்கு மச்சான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்ட இனிய உறவுகளான......... ஈழமகள், சுஜி, நிலாமதி அக்கா, மச்சான், குமாரசாமி அண்ணா, யாயினி, ஜீவா, காவாலி, நிழலி, கிறுக்குப்பையன், வல்வைமைந்தன், சிவா, கறுப்பி, நெல்லையன், ரதி, குட்டி, ஜான்சிராணிக்கும்...... திண்ணையில் இருந்து வாழ்த்து தெரிவித்த ஷானு தினேஷ், அல்வாயன், சாம் ஆகியோருக்கும், மற்றும், தனிமடல் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி. காசை காசு எண்டு பார்க்காமல்...... இவ்வளவு பரிசுப் பொருட்களை வாங்கி அனுப்பி வைத்த அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி. தாமதமாக வாழ்த்துக்கள் தெரிவித்த சஜீவனுக்கும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. http://www.youtube.com/watch?v=m44z-223UYE இன்று பிறந்தநாளை நினைவு கூரும், நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வொல்கானோவிற்கும், தமிழ் கஜனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. மச்சானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சின்னப்புவுக்கு , உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். சின்னா, இன்று பொங்கல் என்ற படியால்... எனது அன்பு பரிசாக மூன்று பானை அன்பளிக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. kuruvikal (101), thevaki (36), yarlpaadi (20), KING ELLALAN (4), தேவன் (4), ஈழவன்85 (25), Small Point (4), லிசான் (35), yarlravi (73), கலைநேசன்1 (31), EelaMahan (33), colombotamil (29), kanja (101), terror_lanka (30), அன்புசிவம் (31), inapcha (27), பிழம்பு (100) . .. . இன்று யாழ் களத்தில் பதினேழு பேருக்கு பிறந்த நாளா ? அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. ஜம்மு பேபிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- நான் ரசித்த விளம்பரம் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. அன்பின் ராசராசனுக்கு,பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
. வணக்கம், துரைசாமி ஐயா, உங்களை யாழ் களத்துக்கு, அன்புடன் வரவேற்கின்றோம். நீங்கள் அரிச்சுவடி என்னும் பகுதியில் , உங்களை அறிமுகப் படுத்துங்கள்.