Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. அது மட்டுமல்ல சீமானின் இனவெறுப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தினால் இந்த ஈழத்தமிழ் பெண் உதவி மேயராக வர முடிந்திருக்காது.
  2. உங்கள் ஆதங்கம் அதுவல்ல. உண்மையில் முன்னைய அரசுகளை விட இப்போதைய ஸராலின் அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு அதிக உதவிகளை செய்துள்ளதாகவே அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள். அண்மையில் அங்கு சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த யூருப்பர் ஈழத்தமிழ் மக்களை சந்தித்த போதும் அதை தெரிவித்திருந்தனர். பாஜக கொண்டுவர முற்படும் புதிய கலவிகொள்கை அமுலுக்கு வந்தால் அதனால் பாதிக்கப்படுவர்களல் ஈழத்தமிழ் அகதிகளும் அடங்குவர். புதிய கல்விகொள்கையை அமுல் படுத்துவதை திமுக அரசு கடுமையாக எதிர்ககிறது. ஆனால் பிரபாகரனை வைத்தும் இனவெறியை வெறியை வைத்தும் அரசியல் செய்யும் உங்கள் செபஸ்ரியன் சீமான் புதிய கல்விகொள்கையை எதிர்த்து என்ன போராட்டங்களை மேற்கொண்டார். ஈழத்தமிழ் மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சியில் வழங்கப்பட்ட உயர் கல்வி இட ஒதுக்கீட்டை, உங்கள் அண்ணன் செபஸ்ரியனால் ஈழத்தாய் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட, ஜெயலலிதா பறித்ததார். 1996 ல் கருணாநிதி அதை திரும்ப வழங்கினார். அண்மையில் பெரியாரை எதிர்பதற்காக மபொசியை தமிழ் பெரியார் என உங்கள் அண்ணன் பெருமைப்படுத்தினார். புலிகள் இயகத்தை கொடிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்தவர் மபொசி. பிரபாகரனை எனது தலைவன் என்று கூறி அரசியல் நடத்திக்கொண்டு அவரது புலிகள் இயக்கத்தை கொடிய பயங்கரவாதிகள் என்று அழைத்த மபொசியை பெரியார் என்று அழைப்பது அயோக்கியத்தனம் அல்லவா. வெறும் அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறான மோசமான அயோக்கியத்தனத்தை புரியும் சீமானை ஆதரிக்கும் நீங்கள் மற்றைய சாதாரண அரசியல்வாதிகளை நோக்கி விரல் நீட்டலாமா?
  3. தீவிர அரசியலில் இருக்கும் போது இவ்வாறான அறிவூட்டல்களை செய்திருக்கலாம். அப்போது தனது சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் தராத வெற்று கோஷ அரசியலை செய்துவிட்டு அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னர் இவ்வாறான அறிவூட்டல்களை செய்வது தகுந்த பலன்களை கொடுக்காது. இருப்பினும் இவ்வாறான மக்கள் நலன் விரும்பும் அறிவூட்டல்களை கல்வியாளர்கள் செய்வது வரவேற்கத்தக்கது.
  4. எனது கருத்தில் நான் தெரிவித்திருந்தது யுத்தம் நிறுத்தப்பட்டதால் தொடர்சசியான மக்கள் அழிவு நிறுத்தப்பட்டது எனக்கு மகிழ்சியே என்பதையே. யுத்தத்தை உரிய வேளையில் எமது தரப்பில் இருந்து நிறுத்ததப்பட்டிருந்தால் எமது மக்களின் அரசியல் பலமும் மனோபலமும் காப்பாற்றப்பட்டிருக்கும். அவர்களால் யுத்தத்தை நிறுத்த வைத்தது எமது நிலையை அடி மட்டத்திற்கு தள்ளியது. இந்த விடயத்தில் அன்றைய பிழை இன்று சரி என்று நீங்கள் கூறுவது வெறும் நொண்டி சாட்டு மட்டுமே. அன்றைய பிழையை அன்றே அது பிழை என்று உணர்ந்து அதை எடுத்துரைத்தோர் எச்சரித்தோர் பலர் உண்டு. அவர்களெல்லாம் வன்முறைமூலம் மௌனிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் அன்றே கூறியது சரி என்பது அவர்களை மௌனிக்க வைத்தவர்கள் முட்டு சந்திக்கு மக்களை அழைத்து சென்றுவிட்டு வேறு வழியின்றி மௌனித்தபோது தான் மிக தெரிந்து கொண்டனர். அதை வெளிப்படையாக சொல்ல இன்றும் ஈகோ பலரை அனுமதிப்பதில்லை .
  5. யுத்தம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்திருத்தால் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் குறைவாகவும் இப்படியான நினைவு சின்னங்கள் அதிகமாகவும் இருந்திருக்கும். நல்ல வேளை யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் தொகை வளர்சசியை அடைகிறது
  6. ஆனால், அண்ணருக்கு சகல விதமான வாடிக்கையாளர்களிடம் இருந்து payment எல்லாம் சரியாக பைசல் பண்ணப்பட்டதாக book-keeping report வந்தாலே வெற்றிதான். 🤣 ImgBBIMG 7311 hosted at ImgBBBild IMG 7311 gehostet auf ImgBB
  7. கடந்த பதினாறு வருடங்களாக செபஸ்ரியன் சீமான் பிரபாகரனை வியாபார பொருளாகவே பயன்படுத்தி வருகிறார். அவரிடம் கற்றுக்கொண்டதை தான் பயன்படுத்தினால் என்ன என்று அவர் நினைத்திருக்கலாம். செபஸ்ரியனுக்கு மட்டுமே பிரபாகரனை உபயோகிக்கும் copy right உள்ளது என்று நீங்கள் நினைப்பதை போல் காளியம்மாள் நினைக்கவில்லைப் போலும்.
  8. யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..! யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும் குருக்களே என தெரிவிக்கப்டுகிறது வழமையாக அவர் அங்கு தொழில் நிமிர்த்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://yarlvasal.lk/?p=92893
  9. மத அடிப்படை வாதம் மக்களை முட்டாள்கள் ஆக்கும். இயன்ற அளவுக்கு அது அரசியலில் இருந்து அகற்றப்படல் வேண்டும்்அல்லது அரசியலில் ஆக குறைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் பலவீனப்படுத்தப்படல் வேண்டும். ஆரம்பத்தில பாலஸ்தீன விடுதலை என்று புறப்பட்ட பாலஸ்தீன விடுதலை இன்று ஹமாஸின் இஸலாமிய மத அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது. மத்திய காலத்தில் மனிதர்களை மூடபழக்கங்களுக்குள் தள்ளிய உலகில் உள்ள எல்லா மதங்களும் மீண்டும் அந்த நிலைக்கு போக அனுமதிக்கக கூடாது. இலங்கையில் புத்தமதம் இந்தியாவில் இந்துமதம் ஆகியவையும் இதே போல செல்லவே முயலுகின்றன. ஈழத்தமிழர்களிடமும் மத அடிபடைவாதத்தை புகுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களிடையே முட்டாள்தனங்களை பரப்பி அதை விமர்சிக்கமுடியாத அளவுக்கு புனிதப்படுத்திவிட்டால் கேள்விகள் எதுவும் இன்று தமது எதேச்சதிகாரத்தை தொடர முடியும் என்பதும் கேள்வி கேட்பவனை கடவுளுக்கு எதிரானவன் என்று அடக்கலாம் என்பதுமே மத அடிப்படைவாதத்தின் நோக்கம். மத அடிப்படைவாதம், கண்மூடித்தனமான தேசபக்தி, இனப்பற்று என்ற ரீதியிலான இனவெறி என்பன மக்களை தர்ககரீதியாக நியாயமான கேள்விகளை கேட்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் கருவிகள். அதை நாடுகளும் விடுதலை இயக்கங்கள் என்று கூறப்படுபவையும் சிறப்பாக பயன்படுத்துகின்றன.
  10. அமெரிக்கா உலகம் முழுவதுலும் உள்ள கடற்பரப்புகளை உயர் தொழில் நுட்பம் மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு கண்காணிக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது. இதில் என்ன பகீரங்கப்படுத்துவதற்கு உள்ளது.
  11. எடுத்ததற்கெல்லாம் பழமைவாதம் பேசும் நீங்எள் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய பதிவு திருமண முறையை மட்டும் ஏற்பதேனோ? இங்கு திரிக்கு திரிக்கு ஒரே விடயத்தை பலர் காவித்திரியும் போது இப்படி நீங்கள் அவர்களை கேள்வி கேட்டதில்லை. மாறாக அவர்களுடன் நீங்களும் இணைந்து லூட்டி அடித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன் சார்? அவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதாலோ?
  12. இங்கு எனது கருத்தில் இனம் மதம் எங்கு வந்தது? சீமான் என்ற மூன்றாந்தர அரசியல்வாதியுடன் சேர்ந்து அடுத்தவன் நாடுவரை எல்லை தாண்டிச் சென்று நீங்கள் தூவும் இனதுவேசம் என்ற விசம் கண்டிக்கத்ததல்லவோ!
  13. ஐரோப்பாவில் வாழும் உங்களுக்கு நன்றாக தெரியும், இங்கு மத வெறி, மத அடிப்படைவாதம் இல்லை என்பது. அப்படி இருந்தால் அது ஆசிய/ ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வாழும் மக்களிடையே தான் அது வீரியத்துடன் இருக்கிறது என்பது. உங்களுக்கு தெரியும், ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பாவில் இனவெறி மிக குறைவான அளவில் உள்ளதென்பது. உங்களுக்கு தெரியும், இலங்கை தமிழர்களுக்கு இருக்கும் இனவெறியை விடவே ஐரோப்பியர்களுக்குள் இனவெறி மிக குறைவு என்பது . உங்களுக்கு தெரியும் வரட்டு கெளரவம், வெற்று பழமைவாதம் ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு குறைவு என்பது. உங்களுக்கு அது நன்றாக தெரிந்ததால் தான் அப்படியான பிற்போக்குத்தனம் உள்ள நாட்டில் இருந்து இவ்வாறான தாராளமயமான நாடுகளில் குடியேறி அவர்களின் நாட்டு முன்னேற்றத்தால் பலன் பெற்று மகிழ்சசியாக வாழ்கின்றீர்கள். இவ்வாறாக, அனைத்தும் உங்கள் அறிவுக்கு தெரிந்த நீங்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். காரணம் அதே வரட்டு கௌரவம், போலி பெருமை பேசுவதற்காக என்பதும் என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும். இப்படி அனைத்தும் தெரிந்த உங்களுக்கு எனது அறிவுரை தேவையில்லை என்பது எனக்கு தெரியும்.
  14. அப்ப சீமான் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தது என்ன கணக்கு. முப்பாட்டன் முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தாதால் அதை பின்பற்றி செபஸ்டியன் சீமானும் வைத்திருந்தார் என்று கூறிவீர்களா புலவரே!
  15. மதவெறி, வரட்டு கௌரவம், வெட்டி வீரம், முட்டாள்தனமான பழமைவாதம் போன்வற்றை கைவிட்டு அறிவு பூர்வமாக அரசியலை செய்வதே நீங்கள் கூறிய இனங்களின் வெற்றிக்கான முதற்படி. அதை செய்யாதவரை அழிவுகளும் புலம்பல்களும் தொடரும்.
  16. ஆயுதங்களை மட்டும் வைத்து கொண்டு உணர்ச்சி மற்றும் வெற்று பிடிவாதத்துடன் அறிவில்லாமல் சண்டை செய்தால் அழிவு நிச்சயம் என்பதற்கு ஈரானும் உலகத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிவிட்டது.
  17. அடுத்த மூன்று மாதத்தில் விஜை ஆட்சிக்கு வந்தால் தனக்கு நீதி கிடைப்பது கடினமாகிவிடும் என்பதால் தான் ஆட்சிக்கு வர முதல் சங்கீதா வழக்கு போட்டுள்ளார் என்றால் அது சரியானதே.
  18. மேற்குலகில் இசை அல்பங்களை உருவாக்கும் படைப்பாளிகள் சுயமாக தாமே இசை நிறுலனங்களாக, தமது அல்பமாக அதை உருவாக்குகின்றனர். அதன் காரணமாக அவர்களால் உருவாக்கப்படும் அல்பங்களின் உரிமை அவர்களிடமே இருக்கும். ஆனால், இந்தியாவில் படங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் படத்தில் இசையமைத்து அதற்கான கூலியை இசையமைப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் போது போது அந்த இசை அல்பங்களின் றோயல்ரி தானாகவே பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுவிடுவதே இதன் காரணம் என நினைக்கிறேன். எதிர்காலத்தில் இசைமைப்பாளர்கள் இசை தயாரிப்பு நிறுவனங்களைப் பதிவு செய்து அந்திறுவன உரிமையாக பாடல்களை உருவாக்கி, தாம் உருவாக்கும் பாடல்களை ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் பாவிக்கும் உரிமையை மட்டும் விற்பனை செய்தால் இவ்வாறான பிரச்சனைகள் எழாது என்பது எனது அபிப்பிராயம்.
  19. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் அன்று எழுத்து மூலம் அங்கீகரித்தது. அதை அன்று ஏற்றுக் கொண்டு, அதை பலப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் எமது பங்களிப்பை வழங்கி, தொடர்ந்து அதில் இருந்த போதாமைகளுக்காக அரசியல் ரீதியில் போராடியிருந்தால், வட கிழக்கு தமிழரின் தாயகம் என்பது நடைமுறையில் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. அதை அடியோடு நிராகரித்த நாம் அதில் இருந்த நல்ல விடயங்களைக்கூட இழந்து இன்று அதை விட பலமடங்கு பின்னோக்கி சென்றிருக்கிறோம். சொற்களிலும் வசனங்களிலும் தொங்கிக் கொண்டு பிடிவாதம் பிடித்து ஈகோ பிரச்சனைகளை உருவாக்காமல் நடைமுறையில் தமிழர் பிரதேசங்களை தக்க வைக்க தந்திரோபாய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு உடனடித்தேவை. அரசியல்வாதிகளுக்கு தேவைகள் வேறு இருக்கலாம்.
  20. எல்லாப் பாதையும் எப்போதும் ரோம் நகரை நோக்கியே டிசைன் செய்யப்பட்டுள்ளது.
  21. சுட்டது பிழை. அல்லைப்பிட்டில் வாகனத்தை நள்ளிரவில் பொலிஸ் மறித்தபோது வாகனத்தை நிறுதமாமல் மண்டைதீவுப்பக்கம் வாகனத்தை திருப்பியது முதல் பிழை. மண்டைதீவு பொலிஸாருக்கு தகவல் அனுப்ப அங்கு மண்டை தீவு பொலிசால் வாகனத்தை நிறுத்த முயற்சிக்க, அங்கும் வாகனத்தை நிறுத்தாமல் வாகனத்தை அல்லைப்பிட்டிக்கு திருப்பியது முதலாவது பிழையை விட அடுத்த பெரிய பிழை. அதன் பின்னர் அல்லைப்பிட்டில் இருந்து துரத்திவந்த அல்லைப்பிட்டிப் பொலிசார் சுட்டிருக்கின்றனர். இரண்டு முறை பொலிசாருக்கு டிமிக்கி கொடுக்க டிமிக்கி கொடுக்க முயற்சித்தது பாரிய தவறு, அதுவும் நள்ளிரவு நேரத்தில். கூட இருந்தவர்களாவது சிறுவனுக்கு அறிவுரை கூறியிருக்கலாம்.
  22. ஒம் கோசான்.இயக்கங்களின் கிளைகள் அமைப்பு ரீதியாக வளர்சசியடையாத காலகட்டம். ஒரு புளொட் உறுப்பினர் தனது இயக்கத்திற்கு நிதி சேகரித்தார். அதே வேளை புலிக்கு சேர்ததவரும் அந்த நகரத்துக்கு வந்து கூட்டம் வைத்தார். புலிக்கு காசு சேர்தவருக்கு இவர் ஊரிலேயே நெருங்கிய நண்பர். புலி உறுப்பினர் தூரம் காரணமாக அடிக்கடி வர முடியாத நிலை. எனவே ஏற்கனவே மக்களிடம் பேசி உறுதியளிக்கப்பட்ட பணத்தை சேர்க்க நம்பிக்கையான ஆள் தேவை. தனக்கு நம்பிக்கையான இந்த புளொட்உறுப்பினரிடம் உதவியை பெற்றார். இவரும் இரண்டு இயக்கத்துக்கும் நிதி சேர்தது புலிக்கு சேர்ந்த பணத்தை தனது நண்பரான புலி உறுப்பினருக்கும் , புளொட்டுக்கு சேர்ந்த பணத்தை தனது அமைப்புக்கும் அனுப்பினார். கணக்கு பார்த்து சரியாக அனுப்பினாரா அல்லது கணக்கு விட்டாரா நாமறியோம். 😂 அந்த நேர வேகத்தில் இது பற்றிய அக்கறையும் இல்லை.
  23. புளொட்டுக்கும், புலிக்கும் ஒரே ஆளே காசு சேர்த்ததும் ஒரு காலத்தில் இருந்தது கோசான். பகடிக்கு சொல்லவில்லை உண்மையில் நடந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.