Everything posted by island
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
நான் தவிக்கவில்லை. இனவெறி தான் இன அழிப்பை உண்டாக்கும் முக்கிய காரணி என்பதை நன்கே அறிந்துள்ளேன். சிங்கள பெண்ணை கற்பழிப்பேன் என ஒரு இனவெறியன் பகீரங்கமாக பேசி ஈழத் தமிழர் போராட்டதையே ஒரு இனவெறி போராட்டமாக மாற்றி அதை வைத்து அரசியல் செய்து வருவதை தொடர்ந்து வருவதை வெள்ளை உள்ளம் கொண்ட நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். தாம் இனவாதத்தல் பாதிக்கப்படாதாக கூறும் புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியலை நடத்துவதாக கூறும் சிலர் தாமே வந்தேறியாக மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டு, தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை வந்தேறி என்று திட்டுவதன் மூலம் தமது ஈழத்தமிழ் அரசியலானது ஒரு இனவெறி அரசியலே என்று நிரூபித்துக்கொண்டிருப்பதையும் நீங்கள் அறியவில்லைப் போலும்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
எவரும் இங்கு காறி உமிழவில்லை. வேறு வழியின்றி முட்டுச்சந்தியில் மௌனித்தாக நீங்கள் கூறிய அந்த அரசியலை முன்மாதிரியாக கொள்ள நினைப்பவர்களிடம் கேள்விகள் தான் கேட்கிறோம். உரிய நேரத்தில் மௌனித்து மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கண்டிருந்தால் யாரும் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். மக்களை எதிரிக்கு பலி கொடுத்து தமிழர் அரசியலை ஒரு வக்கற்ற நிலைக்கு, முட்டுச்சந்திக்கு கொண்டுவந்த பின்னர் இனி வேறு வழியுன்றி மௌனித்ததாக கூறியதால் தான் இத்தனை கேள்விகள். அத்தோது அந்த தவறான அரசியலை நியாயப்படுத்தி அதே பாதையில் தானே தொடர்ந்து அடுத்த தலைமுறையையும் பயணிக்க வைக்க முயன்று அவர்களையும் நாசமாக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டும் தான் இந்த கேள்விகள்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
அ என்ற அறிவு, சம்பந்தப்பட்டவர்களை வழி நடத்தி இருந்தால் மக்களை கிளி நொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு பலவந்தமாக சாய்த்துக் கொண்டு போய்ப் பலி கொடுத்திருக்க மாட்டார்களே! செய்த தப்புகளை எல்லாம் கேள்வி கேட்காது ஆமாம் சாமி போட தெரிந்தவுடன் நிறுத்திய, அதாவது ஆவன்னாவுடன் நிறுத்திய சாமான்யனும், அதாவது நாங்களும் இதற்கு பொறுப்பு தான்
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இல்லை , அடுத்த கட்டத்துக்கு நகரக் கூடாது. அப்படியே அ கூட தெரியாத கட்டதுக்கு பின் நோக்கி நகர்ந்தல் தான் எல்லா தப்புமே சரி போல் தெரியுமாம். பெரியவங்க கூறியிருகிறாங்க. 😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இறுதிப் போரை தடுத்து நிறுத்தி மக்களை காக்கும. செயலை செய்யக்கூடய வல்லமை புலிகளுக்கு மட்டுமே இருந்தது. அதை அவர்கள் உரிய நேரத்தில் செய்யவில்லை. 2009 ஜனவரிக்கு பிறகு சம்பந்தர் என்ன பாலசிங்கம் உயிரோடு இருந்திருந்தாலும் அது முடிந்து இருக்காது என்பது இயல்பான பொது அறிவு உடையவர்கள். அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் நவரத்தினம் என்ன புசத்தினாலும் வன்னி மைந்தன் என்ன புசத்தினலும் பொது அறிவு உள்ள மக்கள் இந்த புசத்தலை நம்பப் போவதில்லை. பொது அறிவு இல்லாதவர்களையே அவர்களால் ஏமாற்ற முடியும். புலிகளல் முடியாததை சம்பந்தர் தலைகீழாக நடந்தாலும் முடிந்திருக்காது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
என்ன சொல்கின்றீர்கள்? சம்பந்தர் அரசியல் சூட்சும்ம் நினைந்தவர், அரசியல் ஞானி என்றெல்லாம் புகழ்ந்து தறள்ளியுள்ளீர்கள். 2002 ல் புலிகள் அப்படிச் சொல்லவில்லை. அவர்கள் கூறியது, “இவையள் தனித்து எதுவும் செய்ய முடியாது. அதற்கான தகுதி புலிகளுக்கு மட்டுமே உள்ளது. தாங்கள் சொல்லுறத கேட்டு பாராளுமன்றதமில சொல்லுறத்துக்கு மட்டும் தான் இவயள நாங்கள் வைச்சிருக்கிறம்.” இவ்வாறு பகீரங்கமாக பத்திரிகையாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதாவது நீங்கள் கூறிய அரசியல் ஞானியை புலிகள் தாங்கள் சொன்னதை அப்படியே சொல்லும் பியோனாக தான் வைத்திருந்துள்ளார்கள். சுப்பர் பவர் இருந்த புலிகளாலேயே எதையும் சாதிக்க முடியாத போது ஒரு பியோனால் அதை செய்திருக்க முடிந்திருக்கும் என்று நினைக்கின்றீர்களா?
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
கருத்து கசக்கிறதா? அதற்கு கருத்தியல் ரீதியான பதில் இல்லையா? உடனே துரோகி என்று முத்திரை குத்து, அல்லது இழிவான இனக்குழுமத்தை சேர்ந்தவர், என்று வசைபாடு. அதுவே எமது அரசியல். அதைச் செய்யவே நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சம்ந்தரின் அரசியலும் தோற்றது புலிகளின் அரசியலும் தோற்றது. ஆனால், பல லட்சக கணக்கில் மக்களை பலி கொடுத்து இரண்டு தலைமுறை பிள்ளைகளை கொடுத்து சம்பந்தர் அரசியல் நடத்தவில்லை. எவரும் அரசியல் செய்யக்கூடாது நாம் மட்டுமே அரசியல் செவ்வோம் என்று மற்றயவர்களை பலவந்தமாக தடை செய்து தாம் மட்டுமே போராடுவோம் என்று சம்பந்தர் அரசியல் செய்திருந்தால் அவரில் முழுப்ழும் போடுவதில் ஒரு நியாயம் உண்டு. ஆகவே அவரை திட்டி அரசியல் செயவதை விட ஒட்டு மொத்தமாக எங்கு எங்கெல்லாம் எமது பக்கத்தில் தவறு நடந்துள்ளது என்பதை உணர்ந்தாலே பிரச்சனைகளை தீர்பதற்குரிய இலகுவான வழிகளை கண்டறிய முடியும். பல லட்சக கணக்கான மக்களை அதுவும் இறுதி நேரத்தில் எல்லாம் முடிந்தது என்பது நிச்சயமாகிவிட்ட நிலையிலும் பலவந்தமாக அழைத்து சென்று பலி கொடுத்து விட்டு எங்களால் முடிந்ததை செய்தோம் இனி எங்காளால் முடியாது என்று விட்டு செல்வதில் என்ன அரசியல் நன்மை தமிழ் மக்களுக்கு கிடைத்தது. இருந்த அரசியல் பலமும் சிதைந்து பேரம் பேச சக்தியற்ற இனமாக மாற்றி விட்டு சென்றதில் என்ன நன்மை? போராட தொடங்கியபோது இல்லாத பிரச்சனைகளை உண்டாக்கி அதை வைத்தே இன்று அரசியல் நடக்கிறது. இன்றும கூட அவர்களின் வாரிசுகள் புலம் பெயர் நாடுகளில் வெறும் வருடாவருடம் திருவிழா போன்ற கொண்டாட்டங்கள் மூலம் அரசியல் செய்கிறார்களே தவிர தாயகத்தில் இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பை பேண எதுவும் செய்யவில்லை. மாறாக அங்கு குழப்பங்களை உருவாக்கவே முயலுகிறார்கள். இதற்குள் ஒருவர் 2009 க்கு முன்னைய நிலைப்பாட்டுக்கு சென்று யோசித்தால் எல்லாம் சரியாக தெரியுமாம். அதாவது டிகிறி முடித்த ஒருவர 8 ம் வகுப்புக்கு முன்னர் இருந்த அறிவு நிலைக்கு சென்றால் எல்லம் சரியாகவே தெரியுமாம். 😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இன்று சம்பந்தரை திட்டி தீர்க்கும் பல தேசிய குஞ்சுகள் இலங்கை சுற்றுலாவுக்கு குடும்பத்துடன் மகிழ்சசியாக செல்லவும் வட கிழக்கு மக்களுக்கு மகிந்த கொம்பனியின் இராணுவ அடக்குமுறையை தளர்ததுவதற்கு அடிதளம் இட்டதே சம்பந்தரின் 2015 அரசியல் நகர்வே. மகிந்தவை தோற்கடிக்கும் அரசியல் நகர்வை 2015 அவர் செய்தது இதில் முக்கிய பங்காற்றியது. . 2015 வரை ஒரு பாடசாலை நிகழ்வுக்கு கூட அப்பகுதி இராணுவ தளபதியை அழைக்கவேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருந்ததையும் சிவில் நிர்வகத்தில் இராணுவம் அதிகமாக தலையுட்ட நிலை இருந்திதையும் அங்கு போய்வந்தவர்கள் அறிவார்கள். மேற்கு நாடுகளில் இருந்து செல்பவர்கள் கூட அச்சத்துடன் சென்று வந்த நிலை 2015 வரை இருந்தது. அரசியல் தீர்வு விடயத்தில் அவரல் எதுவும் செய்ய முடியவிட்டாலும் தாயக மக்களின் இயல்பு நிலையை உருவாக்கியதில் அவர் பங்காற்றியுள்ளார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதனை முக்கியமாக மகிந்தவை பதவிக்கு கொண்டு வந்து இராணுவ அடக்குமுறையை அரசு அதிகப்படுத்த உதவியவர்கள் உணரவேண்டும்.
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
மக்களின் வேட்கை, கௌரவமாக வாழ்வது, theoretically அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை எடுத்தாளவேண்டிய தலைமைகள் இப்படி வருடாந்த கொண்டாட்டங்கள், வெற்று சுலோகங்களை தமது அரசியல் நலனுக்காக மட்டும் பாவித்துவருவதும், நம்பியிருந்த மக்களை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற மனநிலைக்கு கொண்டுவந்த தலைமைகளது செயற்பாடுகள் மேலும் மக்கள் வாழ்வை எதிர் மறையிலேயே( அவர்கள் வாழ்வை அல்ல) செல்லல வைக்குமேயொழிய எந்த முன்னேற்றத்தையும் காணப்போவதில்லை. இப்போதைய நிலையில் தாயகத்தில் படித்து அங்கு தொழில் செய்யலாம், சுய வியாபாரங்களைச் செய்யலாம் என்ற மன நிலையை அங்குள்ள படித்துக்கொண்டிருக்கும் இளவயதினரிடைநே துளிர் விட தொடங்கியுள்ளதை அங்கு சென்ற போது அவதானித்தேன். அதையும் கெடுத்து அவர்களையும் வெளிநாடு நோக்கி படையெடுக்க வைத்து டயஸ் போரா தமிழ் தேசியத்தை கட்டியெழுப்புவது (சிறு திருத்தம் கொத்து ரொட்டி தமிழ் தேசியம் என்றும் அழைக்கலாம்😂) ஒரு சிலருக்கு வாழ்வை வளமாக்கவும் உதவுமேயொழிய எதுவும் நடக்கப்போவதில்லை.
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
தலைமுறை தலைமுறையாக ஒரே விடயத்தை செய்ய சொன்னால் போரடிக்காதா? பிறக்கிற பிள்ளை பிறக்க போற பிள்ளை எல்லாத்துக்கும் நீ இப்படி தான் யோசிக்கவேண்டும் இதை தான் செய்ய வேண்டும் என thinking framework போடுவது காலப்போக்கில் அவர்களுக்கு போரடிக்கவே செய்யும்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
அந்த தேர்தலில் கடும் போட்டி இருந்தது. தமிழர்கள் தன்னிசையாவே மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பர்கள் என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயம். அந்நிலையில் தேர்தல் தமிழர்களை வாக்களிக்க விடாது தடுக்கும் போது இயல்பாகவே மகிந்த வெல்வார் என்ற மிக சாதாரணமான விடயத்தைக் கூட தெரியத மடையர்களா அந்த தேர்தலை புறக்கணிக்க கூறியவர்கள். அல்லது ஊடகங்களில் கசிந்த தகவல்படி மகிந்தவுடன் உள்ளக டீலா?
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
தமிழ் நாட்டை தமிழரல்லாதவர்கள் ஆழவில்லை . என்றுமே தமிழர்கள் தான் என்றுமே ஆழுகின்றனர். உங்கள் தியறிப்படி பிரபாகரனும் மலையாள பூர்வீகம் தான்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
சரத் பொன் சேகாவுக்கு வாக்கு போடுமாறு கேட்ட போது சுமந்திரன் அரசியலுக்கு வரவில்லை. கஜேந்திரகுமார் , கஜேந்திரன் ஆகியோரும் இணைந்தே அந்த முடிவை எடுத்தனர். இருவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தனர். பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே எம்பி சீட் பிரச்சனையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறினர்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சாதாரண தமிழ் பொதுமக்கள் மட்டுமல்ல தேசிய தூண்களாக காட்டிக்கொண்ட பலரும் மகிழ்சசியாக வடகிழக்குகு மட்டுமல்ல தென்னிலங்கை சுற்றுலாவுக்கும் சென்று வந்ததை நானே பார்த்துள்ளேன் . ஏதோ சம்பந்தர் மட்டுமே மகிழ்சசியடைந்ததாக றீல் விடுகிறார்கள். 😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உலக சூழ்நிலை தனி ஈழத்துக்கு சாதகமாக இல்லை என்று நன்றாக தெரிந்து கொண்டும், உலக நாடுகள் எல்லாவற்றையும் பகைத்து தமிழீழம் அடையலாம் என்று மக்களை பேக்காட்டி, பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின உயிர்களை பலியிட்டதை விட சம்பந்தர் ஒன்றும் பெரிதாக மக்களை பேய்காட்டவில்லை புலவர். இன்று தாயகத்தில் வாழும் மக்களிடன் கேட்டால், யுத்தம் முடிந்தது தமக்கு மகிழ்சசி என்றே கூறுவர். இல்லையெனில், இப்போதும் தினமும் 10-15 எமது மக்கள் எந்த பிரயோசனமும் இன்றி இறந்து கொண்டே இருந்திருப்பர். நாமும் இனம் சிறுக சிறுக அழிவதைப் பற்றி கவலைப்படாமல் கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளை வைத்து, “ தூரம் அதிகம் இல்லை, இதோ தெரியுது எதிரி எல்லை என்று மக்களைப் பேக்காட்டி பாட்டுப்பாடி நினைவு தினங்களைக் அனுஷடித்துக்கொண்டிருந்திருப்போம். யுத்தம் முடிந்ததால் புதிய புதிய நினைவுதினங்கள் உருவாக்காமல் விட்டதென்பது நம் அனைவருக்கும் நிம்மதியே. எதிரிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இன்றைய நிலைக்கு காரணமான சூழ்நிலையை உருவாக்கிய பல தவறான அணைகுமுறைகளை எம்மவர்களே ஏற்படுத்தியதை மறைக்க இப்படி தனி நபர்களை மீது பழி சுமத்தி அரசியல் பிழைப்பு நடத்தலாமேயொழிய அதை விட தமிழ் மக்கள் விடயத்தில் எதுவுமே முன்னேற்றம் காணப்போவதில்லை. துரோகிகளாக சிலரை முத்திரை குத்தி அவர்களை வில்லன்களாக கட்டமைத்து அரசியல் நடத்து. அது போதாதெனில் நம்மவர்களுக்குளேயே சிலரை துரோகியாக முத்திரை குத்து. இதுவே தமிழ் தேசிய அரசியல் தாரக மந்திரம். இதை விட மேலதிகமாக அறிவு பூர்வமாக சிந்திக்ககும் அளவுக்கு தமிழ் தேசியர்களுக்கு……… ஆனால் தமிழ் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துவதில் தாயக புலம் பெயர் தேசியர் காட்டில் என்றும் மழை தான். அதை வெற்றிகரமாக செய்கிறார்கள். அதையாவது வெற்றிகரமாக செய்கிறார்களே என்று மகிழ்சசியடைய வேண்டியது தான்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
@goshan_che இப்படி ஆதாரம் கேட்டு ரோதனை பண்ணக் கூடாது. நான் பாடினால் அது கவிதை. நான் வரைந்தால் அது ஓவியம். அப்படி ஏற்று கொள்ளப் பழகவேணும். அதுவே நல்ல பிள்ளைக்கு அழகு. நாங்களும் அப்படி தான் வளர்ந்தனாங்கள். அது தான் எங்க மரபு, பாரம்பரியம், கலாசாரம்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அது சரி புலவர் யுத்தம் உச்சக்கட்டதில இருக்கேக்க ஏன் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தாங்க? பேச்சுவார்ததை உச்சக்கட்டதில இருகேக்க சம்பந்தரை தொடர்பு கொள்ள முயற்சித்து அவர் வராமல் இருந்திருந்தா அவரை கோவிக்கறதில ஒரு லொஜிக் இருக்கு. பேச்சுவார்ததை வேண்டாம் என்று யுத்தத்துக்கு போட்டு யுத்தம் உச்சக்கட்டத்தில இருக்கேக்க அந்தாள் வந்து என்ன என்ன செய்ய. அவர் யுத்த பயிற்சி எடுகேல்லயே!
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
உங்கள் விருப்பம் நியாயமானது . உங்களை ஜேர்மனியராக ஏற்றுக்கொண்ட ஜேர்மனிக்கும் முதலாம் தலைமுறையாக புலம் பெயர்ந்து வந்த பல ஆசிய ஆபிரிக்க மக்களை சீமான் வகையறா இனவெறி கக்கி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின் பிரச்சாரத்துக்கு எடுபடாமல் அந்த மக்களில் உள்ள திறமைகளை மட்டும் அங்கீகரித்து உயர் பதவிகளுக்கு அனுமதிக்க வாக்களிக்கும் மேற்குலக மக்களுக்கு நன்றி. இந்த முன்மாதிரியை விரும்பும் நீங்கள் உண்மையில் உயர்ந்தவர்.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
ஆமாம் நீங்கள் ஜேர்மனியர் என்பதால் உங்களது ஜனாதிபதியாக அவர் இருக்கமாட்டார்.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
எனவே… அவர் தான் எமது ஜனாதிபதி.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
அவர் இரத்தம் மாற்றி தூய தமிழ் இரத்தம் பெற்று பாற்கடலில் நீத்தி செந்தமிழன் ஆகியது உங்களுக்கு தெரியாது போலும். அவர் மேடையில் பேசும் செந்தமிழை விட டெலிபோனில் தம்பிகளுடன் பேசும் செந்தமிழ் உயர்வானது.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
தமிழ் செபஸ்ரியானையும் அவரது கொள்கைகளையும் விழுந்து விழுந்து ஆதரிக்கும் ஒரு சில தமிழர்கள் மேற்கு நாடுகளில் ஒரு செபஸ்ரியான் வந்து அதே செபஸ்ரியான் கொள்கைகளை பேசினால் அந்த செபஸ்ரியானைத் திட்டித் தீர்ப்பார்கள். அது ஏனோ?
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
அது சரி இவர் சுவிசில் மாநில முதல்வர் ஆகும் தகுதி உண்டா? பல தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்ந்து அம்மண்ணின் மைந்தர்களாக தமிழை தவிர வேறு மொழி தெரியாதவர்களையே வந்தேறி, வாழலாம், ஆளக்கூடாது, என்று அடுத்த நாட்டின் அரசியலுக்குள் புகுந்து அதுவே சரி என நாட்டாண்மை காட்டும் கும்பல்கள் எல்லாம் இந்த முதலாம் தலைமுறை வந்தேறித் தமிழர் மாநில முதல்வர் ஆகியதைப் பாராட்டுகிறார்களே! அந்த கொள்கையை தள்ளி வைத்து விட்டார்களா? இந்த அநியாயத்தை கேட்க சுவிசில் ஒரு செபஸ்டியான் இல்லையா? 😂
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கருத்தாளர்களுக்கு கருத்துகளால் பதில் கூற முடியாது எப்போதும் இனவாத வக்கிரத்தை கொட்டும் கேவலமான மனிதர்கள் பாடமெடுக்கும் நிலையில் நான் இல்லை. அரசியல் அறிவில் பூச்சியமான, வெறும் தனிமனித தாக்குதல் தான் அரசியல் என்று புரிந்து வைத்திருக்கும் யாழ்கள காமடிபீஸுக்கும் சேர்தது தான் கூறுகிறேன். 😂