Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதற்கு முழுப் பொறுப்பு இவர்தான் என்று யாரையும் குற்றம் சாட்ட முடியாது. தமிழர் சார்பில் செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இதில் சம பங்கு உண்டு. இலங்கையில் அதிகர பரவலாக்கத்துடன் கூடிய ஒரு அரசியலமைப்பு உருவாக்கப் பட வேண்டுமானால் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இணைந்தே அதை செய்ய வேண்டும். அதுவே நிரந்தரமானதாக இருக்கும். உலகில் வெற்றியடைந்த நாடுகளில் அப்படியே நடந்துள்ளது. கடும் சிங்கள/ தமிழ் இன தேசியவாதிகளை புறம் தள்ளி புதிய சமுதாயம் பரஸ்பர நம்பிகையை கட்டியெழுப்புவதன் மூலமே அதை செய்ய முடியும். நிச்சயமாக அதற்கு சற்று காலம் எடுக்கலாம். அண்மையில் இலங்கை சென்றிருந்த போது யாழ்பாணத்தில் அவதானித்த ஒரு நல்ல விடயம் இந்த ரிக் ரொக், முகநூலில் தேசியம் பற்றி அலட்டும் விடயங்கை பற்றி எதுவும் அறியாத அது பற்றி அறிய கூட விரும்பாத தமது கல்வி முன்னேற்றங்களிலும் தாயகத்திலேயே தமது வாழ்வை தமது கல்வி திறமைகளால் அடையவேண்டும் என்பதில் கூடுதலான கவனம் செலுத்தும், எப்போதும் தமது கல்வி, மேற்படிப்பு career என்பதில் பிஸியாக உள்ள ஒரு இளைய தலைமுறை வளர்ந்து வருகிறது. இதை ஒரு சிறந்த சமிக்ஞையாக நான் பார்கிறேன். இலங்கையில் பல மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்தை உபயோகித்து பயணம் செய்த போது சாமான்ய மக்களிடையே இனவாதம் இருப்பதை உணரவில்லை. அனைத்து தரப்பு மக்களும் இயல்பாக பழகினார்கள். இது வும் சிறந்த சமிக்ஞையே. எனது பார்வையில் இனப்பிரச்சனைக்கான தீர்வுடன் கூடிய ஒரு அரசியலமைப்பை காலப்போக்கில் அந்த புதிய தமிழ் சிங்கள சமுதாயத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர தற்போதைய இரு பகுதி அரசியல்வாதிகளாலோ புலம் பெயர் நாடுகளில் தேசியம் பேசி வியாபாரம் செய்யும் வியாபார கும்பல்களாலோ அது முடியாது.
  2. நான் ஏற்கனவே கூறியபடி இவ்வாறான அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது யாராலும் தமது அலுமாரியில் இருந்து எடுத்து தர முடியாது. பிரச்சனையில் சம்பந்தப்பட்டோர் பேசி தீர்கக வேண்டிய விடயம். பிரியாணி தான் வேண்டும் என்று அடம் பிடித்து தாம் சமைத்த சாப்பாட்டை தாமே கொட்டியவர்கள் சிறிது காலம் பசியிருக்கத்தான் வேண்டும்.
  3. புலிகள் புறக்கணித்த மாகாணசபையை நாமும் புறக்கணிப்போம் என்று கோஷம் எழுப்பினால் பாராளுமன்ற் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. மக்கள் திரும்பிக் கூடப் பார்ககவில்லை. இனி இந்த தந்திரத்தை நம்புவது வேலைகாகாது கடைசியில் அதுவும் இல்லை இதுவும் இல்லை என்று இருக்காமல் ஜதார்த்தமக சிந்தித்து இரண்டு பதவிகளையும. பெறுவதே புத்திசாலித்தனமானது என்று இந்த முடிவுக்கு வந்தினர். தமது முதலுக்கு நட்டம் என்றால் மட்டும் இந்த தீவிர தமிழ் தேசிக்காய்கள் ஜதார்த்தமாக சிந்திப்பது வழமை தானே.
  4. 13 ம் திருத்த சட்டத்தனுன் மூலம் மாகாணசபைகள் அமைக்கபடுவதை மட்டும் தான் அண்ணன் கஜேந்திரகுமார். எதிர்கிறார். மாகாணசபை தேர்தலையோ அதில் வரும் பதவிகளையோ அல்ல. மாகாணசபை தேர்தல் வந்து நம்மவர்களை போட்டியிட வைத்தால் தானே நம்மோடு நாலு பேர் நிப்பாங்க. அப்பப்ப போராட்டம் என்று நாம் அறிவித்தால் வந்து கோஷம் போடுவாங்க. இது கூட தெரியாமல் நீங்க ஏம்பபா சலூன் கடைக்கு வாறீங்க.
  5. பனையால் விழுந்தது விஜயா, அல்லது 41 உயிர்களா? உங்கள் பார்வையில் விஜய் என்றே கருதுகின்றீர்கள்.
  6. வரலாற்றில் வெற்றிகரமான பெரும்பாலான அரசியல் தீர்வுகள் தொடர்சசியான பரஸ்பர நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதன் மூலமே நடந்துள்ளன. ஆரம்பத்திலே 100 உத்தரவாதம் என்று கூறுவதே குழப்பும் தோக்கத்தை கொண்டது. துரதிஷரவசமாக அந்த நோக்கம் வெற்றியளித்தது. ஆனால் தமிழர்கள் தான் தோல்வியடைந்தனர். வாழ்கையில் சமூகம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் நம்பிக்கையின் அடிபடையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன. எதையுமே நம்பாமல் அவநம்பிக்கையுடன் எதையும் பார்பபவன் இறுதியில் அதன் விளைவாக வாழ்கையை இழந்து புலம்புவான்.
  7. உண்மை தான். பண்டாரநாயக்கா ஆட்சியில் நாகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது Mr. Naganathan is a diabetic patient. We should take care of him என்று, சிறை சாப்பாடு அவருக்கு ஒத்து வராது என்று பிரதமர் வீட்டில் இருந்து அவருக்கு உணவு சென்றதாம். பிரதமர் தனது வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டதால் பயந்து போயிருந்த சிறீமாவோ அவரது பிள்ளைகளை பாதுகாக்க நாகநாதன் வீட்டில் சில காலம் தங்க வைத்தாராம். 90 களில் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது நாகநாதனுன் மகள் தான் இலங்கை தூதராக ஜேர்மனியில் இருந்தார். 1977 தேர்தல் மேடைகளில் இரும்பு மனிதன் நாகநாதன் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாகநாதன் என்ற ரேஞ்சுக்கு வீர உரைகள் கதையாடல்கள் நடந்தன.
  8. 1987 ல் கையில் கிடைத்ததை தூக்கி குப்பையில் போட்டு திமிர் எடுத்துவிட்டு இப்போது வல்லரசுகள் 13 ஜ அமுல்படுத்த வற்புறுத்த வேண்டுமாம். கேடகவே சிரிப்பாய் உள்ளது. 😂 காற்றுள்ள போதே தூற்றிக்கொள். இப்போது காற்று போன பின்னர் புலம்புவதில் அர்ததம் இல்லை.
  9. குற்றவாளிகளும் தமக்குள் இனபேதமின்றி புரிந்துணர்வுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். இனவாதத்தை மக்களுக்குள் விதைத்த இருபக்க அரசியல்வாதிகளும் தமக்குள் இனபேதம் இன்றி இணைந்து பணியாற்றுகிறார்கள்.
  10. பாரிய குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கூட இனவெறி இன பேதம் இல்லாமல் தமக்குள் ஒன்றாக செயற்பட்டுருக்கிறார்கள் எனும் போது நாட்டின் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் தமது முன்னேத்திற்காக இனவெறி இல்லாமல் அனைவரும் இணைந்து செயற்பட்டு அரசியல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்.
  11. மாலதி ஈழப்போராட்டத்தில் முதல் களப்பலியான பெண் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். முதல் ஈழப்போராட்டத்தில் களப்பலியான பென் ஷோபா என்பது தெரிந்தும் வரலாற்றை திரிப்பவர்கள் உண்மையில் களப்பலியான பெண் போராளி ஷொபாவுக்கு தமது காழ்புணர்சசியால் உரிய மரியாதையை கொடுக்கவர்களே தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இன்று புலம்புபவர்கள்.
  12. ஈழப் போராட்டத்தில் முதல் தனது உயிரை அர்பணித்தவர் ஷோபா என்ற ஈபிஆர்எல்எவ் போராளியே. இவர் இறந்தது மே 03 1985 மாலதி முதல் பெண் போராளி என்பது தவறான தகவல். மாலதி விடுதலைபுலிகளின் முதல் பெண் போராளி என்பதே சரியான தகவல்.
  13. சீமான் வெற்றிப்பட இயக்குனர் அல்ல. அவரது படங்கள் எதுவுமே வெற்றிப்படங்கள் அல்ல. அதனால் அவரால் சினிமாவில் பணம் சேர்கக முடியாது. சரி அதை விடுங்கள், எனது முதலாவது கேள்விக்கு நீங்கள் ஏன் பதிலளிக்க முயற்சிக்கக்கூடாது. சீமானின் விருப்பம் தனி தமிழ் நாடு என்று கூறினீர்கள். அதற்கான போராட்டதை வெளிப்படையாக கூறி இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரியும் போராட்டதை ஏன் அவர் ஆரம்பிக்கவில்லை? அப்படி ஆரம்பித்தால் கைது செய்து விடுவார்கள் என்ற பயமா?
  14. சீமானின் விருப்பம் தனி தமிழ் நாடா? அப்படியானால் அதை வெளிப்டையாக அறிவித்து இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டை பிரிப்பதற்கான போராட்டடதை தொடக்க அவருக்கு என்ன தடை உள்ளது? எந்த தடையும் இல்லையே! அதை செய்ய அவருக்கு என்ன பைத்தியமா! அவரது உண்மையீன விருப்பம் தமிபிமாரை உசுப்பேற்றி அரசியலில் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதே. அந்த நோக்கத்தில் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்.
  15. உண்மை தான். தீவிர தமிழ் தேசியர்கள் போல் நடைமுறை சாத்தியமற்ற கொள்கைகளை பிடிவாதமாக கட்டி பிடித்து அழிய அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
  16. விஜய் விடியோ வெளியிட்டார். ஆனால் தனது தவறினாலும் தனது கட்சி ஏற்பாட்டாளர்கள் தவறினாலும், இவ்வளவு மக்கள் இறந்ததற்கு வருத்தம் மன்னிப்பை கோரினாரா?
  17. ஆரம்பத்தில் இருந்தே விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்கள், வெற்று சுலோகங்கள் என தனது திரைப்பட ஹீரோயிசத்தை மட்டுமே காட்டினார். தனது திரை ரசிகர்களை வைத்து திரைப்பாணியில் தனக்கு விசிலடிக்கும் கூட்டத்தை கட்டியமைக்கவே தனது சக்தி முழுவதையும் செலவிட்டார். அவரது கட்சி மகாநாடுகள், கூட்டங்கள் அவரது திருப்படம் வெளியாகும் வேளை திரையரங்குகள் எப்படி ரசிக பட்டாளங்களின் கும்மாளம் இருக்குமோ அப்படியே இருந்தன. அதன் விளைவே இந்த அனர்ததம். ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் விஜய் மற்றும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படிருக்கும். விஜய் இவ்வேளை கைது செய்யப்பட்டிருப்பார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய, பொறுப்புணர்வு அற்று செயற்பட்டு இத்தனை உயிர் இழப்புக்கு காரணமான விஜய் மீது நேர்மையான கடுமையான சட்ட நடவடிக்கைக்கு தயக்கம் கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தமது குறுகிய அரசியலை ஒதுக்கி விட்டு இணைந்து விஜய் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒன்றில் விஜய பொறுப்பான அரசியல் தலைவராக அரசியல் செய்ய வேண்டும் இல்லையெனில் மார்கெட் இருக்கும் வரை தனது ரசிகர்களை மகிழ்விக்க படங்களில் நடிக்க வேண்டும்.
  18. மாகாணசபையை எதித்து போராடி வெற்றி பெற்றோம். இன்று மாகாணசபையாவது கிடைக்காதா என்று ஏங்குகிறோம். அதன் தொடர்சசி தான் இந்த கஜே கும்பலின் சுயநல அரசியல்.
  19. „ அவுத்துப் போட மறுத்தால்“, என்று நீங்கள் எழுதி இருபதன் அர்ததம் என்ன?
  20. அறிவியல் செய்தித் தளமாக வாசகர்களை ஈர்த்த யாழ்களத்தை வளரவிடாமல் ஒரு தலைப்பட்சமாக சிலரது அரசியல் கருத்துக்களையும் அவர்களது பொழுது போக்காக உரையாடும் தளமாகவும் கிணற்று தவளைத் தளமாக மாற்ற எடுத்த முயற்சிகளை கடிவாளம் போட்டு தடுத்து அறிவியல் தளமாக பேண யாழ்கள நிர்வாகத்தினராகிய நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை நன்றியுடன் நினைவு கொள்கிறோம். உங்கள் முயற்சியில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்.
  21. இத்தனை பெருந்தொகை ஈழத்தமிழர்களும் மேற்குலகு வந்து அவுத்துப் போட்டு அவர்களை அரவணைத்து நடப்பதால் தான் எம்மை இந்த நாடுகளில் தங்குமிட வசதி கொடுத்துள்ளார்கள் என்று கூற வருகின்றீர்களா?
  22. திருமண வாழ்வு என்பது ஆணும் பெண்ணும் அன்பை பகிர்ந்து இணையர்களாக வாழ்வது. தன்னை பாலியல் வன் கொடுமை செய்தவனிடம் ஒரு பெண் அன்பை பகிர்ந்து வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்வது கந்தையா? எப்படி இதை சரியான தீர்பபு என்று கூறுவீர்கள்? அவளுக்கு அது தண்டனையல்லவா!
  23. சீமான் தான் கூறிய கிலோ கணக்கான போய்களை அவை படு பொய்கள் என்று ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்ட பின்பு கூட வருத்தம் தெரிவிப்பதில்லை அதற்கு பதில் கூட கருத்தியல் ரீதியாக தெரிவிப்பதில்லை. நைசாக நழுவி விடுவார். பின்னர் சில காலத்தின் பின்னர் அதே பொய்யை மீண்டும் வெட்கமில்லாமல் மீண்டும் கூறுவார். அண்ணன் எவ்வழி தம்பி அதே வழி. இருந்து பாருங்கள், இதே பொய்யை தமிழ் சிறீ சில காலத்தின் பின்னர் மீண்டும் வெட்கமில்லாமல் இணைப்பார். தமிழ் சிறி பொய்செய்திகளை பரப்புவது இது முதல் முறையுமல்ல.
  24. பெண்டாட்டி தெய்வானை இருக்க யானையை விட்டு துரத்தி துரத்தி வள்ளியை கரெட்க் பண்ணிய முருகன் காலத்தில் இந்த சட்டம் இல்லை. 😂ஆனால் அந்த தமிழ் கடவுளின் முன்மாதிரியை பின்பற்றுபவர்களுக்கு தான் இந்த சட்டம். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.