Everything posted by island
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
நிறை குடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கதுதான் சுபதினம் என்று வாலி எழுதி (அந்த வாலிதான் @வாலி நம் கள உறவோ நானறியேன்) சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் ஒரு வரி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் ரசிகர்களுக்கு அந்த சுபதினம் வரவில்லை. அந்த ஏமாற்றத்தையே இந்த படமும் தந்தது.
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
இந்த விடயம் தொடர்பாக மிகவும் தெளிவான அறிவார்ந்த பார்வையுடனான தாயகத்தில் இருந்து சட்டத்தரணி ஒருவரின் கருத்து. https://m.facebook.com/story.php?story_fbid=1103923524906211&id=100058657202134
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
அடிக்கடி பல தடவைகள் எனது கருத்துக்களுக்குள் வந்து, அதற்கு தர்கக ரீதியில் பதில் சொல்லாமல் என்னை முஸ்லீமாக இனம் காட்டி வசைமாரி பொழிவதில் மும்முரமாக உள்ளீர்கள். அதற்கான காரணம் என்ன? இதற்கு பதில் கூறும் கருத்தியல் நேர்மை உங்களிடம் இல்லை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், சக உறவுகளும் அறியவேண்டும் என்பதற்காக கேட்கிறேன்.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
சோதிடம் கூறும் ஒரு சாமியாரிடம் சேர்ந்து வேலை செய்த நபர் ஒருவர் வழங்கிய பேட்டி ஒன்று பார்ததேன். பிறக்கப்போகும் பிள்ளை ஆணா, பெண்ணா என்று யாராவது தம்பதிகள் வந்தால் ஒரு துண்டு சீட்டில் பெற்றோர் பெயருடன் பெண்பிள்ளை என்று எழுதி அதை ஒரு உறையில் போட்டு பூஜை செய்துவிட்டு, தம்பதியினரிடம் மாற்றி கூறுவாராம். அதாவது ஆண்பிள்ளை என்று கூறுவாராம். பின்னர் அந்த கவரை கடவுள் சிலைக்கு கீழ் வைத்து விட்டு உங்கள் குழந்தைக்காக தினமும் பூஜை செய்யப்போவதாக கூறுவாராம். ஆண்பிள்ளை பிறந்தால் அவர் சொன்னது பலித்து விட்டது என்று அந்த கவரை திரும்ப உடைக்காமல் அப்படியே அமுக்கிவிடுவாராம். தற்செயலாக பெண்பிள்ளை பிறந்தால் அவர்களிடம் நான் பெண்பிள்ளை என்று தானே உங்களுக்கு கூறினேன் என்று கதையளப்பாராம். பெற்றோர் நம்பவில்லை என்பதால் கவரை அவர்கள் முன்பாகவே பிரித்து அதில் பெண்பிள்ளை என்று எழுதியிருப்பதை காட்டுவாராம். பெற்றோரும் நாம் தான் தவறாக விளங்கி விட்டோம் சாமி சரியாக தான் சொல்லியிருப்பார் என்று திருப்தியடைவார்களாம்.
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
மன்னிக்கவும் வாலி, நீங்கள் கூறியது போல பெண்கள் சிந்திக்க வெளிக்கிட்டால் இலங்கையில் உள்ள பல ஆயிரம் ஆண்களின் தலை எப்போதோ உருண்டிருக்கும். இலங்கையின் ஆண்களின் ஜனத்தொகையில் பாரிய வீழ்சசியும் ஏற்பட்டிருக்கும். மாதவியிடம் சென்று வந்த கோவலனை கண்டிக்காமல் வரவேற்று பணிவிடை செய்த காரணத்தால் அந்த கண்ணகியை இன்றும் கற்புக்கரசியாக கொண்டாடி கோவில் கட்டி கும்பிடும் சமூகமல்லவா! கண்ணகி அன்று இதை செய்திருந்தால் பாதகி என்றிருப்பார்கள்.
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்ததுக்கு தம்முள் சண்டையிட்ட போது சிவன் பேசாமல் ஏலத்துக்கு விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு பாம்பழம் என்று விட்டிருக்கலாம்.😂
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?
-
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
இப்போது ஆயுத போராட்டத்துக்குரிய சூழ்நிலையும் இல்லை. ஒரு அறிவார்ந்த அரசியல் போராட்டத்தை செய்யக்கூடிய புலிகள் அமைப்பில் இருந்த( பாலகுமார், யோகி, புலித தேவன் போன்ற) உறுப்பினர்களும் உயிருடன் இல்லை. இந்த நிலையில் புலிகள் அமைப்புக்கான தடை நீடிக்கப்படுவது தமிழருக்கு நல்லதே. தடையை எடுத்து விட்டால் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த இருந்த சுயநலமிகளும் புலம் பெயர்ந்த மாபியாக்களும் இயக்க சின்னங்களை தகது சுயநலத்துக்கு பயன்படுத்தி தமிழர் நிலையை இருப்பதை விட இன்னும் மோசமாகுவர். தம்மை ஏக தலைமை என்ற பல்லவியை பாட தொடங்குவர். ஆகவே இப்போதைய நிலையில் தடை தொடர்வது தமிழருக்கு நன்மையே. ஒரு அறிவார்ந்த அரசியல் போராட்டதை முன்னெடுக்கவோ ஒரு நியாயமான நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை செய்ய புலிகள் அமைப்பு தேவையில்லை. விருப்பமிருந்தால் மனமிருந்தால் இப்போதிருபவர்களாலேயே அதற்கான அரசியலை சுதந்திரமாக செய்ய முடியும்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
மொழிகளை ஒப்பிட்டு இதிலிருந்து இது பிறந்தது என்று அடிபடுவது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் பிரிவினையையுமே ஏற்படுத்தும். இவ்வாறு செய்யும் போது மொழிவெறியை மட்டுமே வைத்து மக்களிடையே அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தீய சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையும். உண்மையில் இது மொழியியல் ஆராய்சசி சம்பந்தமான விடையம். மொழியியல் அறிஞர்கள் மட்டுமே தங்களுக்குள் அறிவியல் ரீதியாக விவாதிக்க வேண்டிய விடயம். ஒரு அளவுக்கு மேல் தரவுகள் இல்லாததால் இதை 100 வீதம் நிறுவுவதும் கடினமான விடயம். உண்மையில் தூய மொழி என்று ஒன்று கிடையாது. எல்லாமே நீண்ட மனித வரலாற்றில் மொழிகள் எல்லாமே கலப்படம் தான். அதில் தவறும் இல்லை. உதாரணமாக இலவசமாக கிடைப்பதை ஓசியில் கிடைத்தது என கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. இது வந்தது பிரிட்டில் கிழக்கிந்திய கொம்பனி இந்தியாவை நிர்வாகம் செய்யயும் போது கடிதங்களை அனுப்பும் போது On Company Service (OC) என்ற முத்திரை சீல் பாவித்தால் கடிதங்களுக்கு முத்திரை ஒட்ட தேவையில்லை. அந்த பாவனை பின்னர் மருவி இலவசமாக பெறுவதற்கெல்லாம் ஓசி என்று கூறும் வழக்கம் உண்டானது. இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் கூட இலவசத்தை ஒசி என்று தமிழில் கூறுமளவுக்கு அந்த சொல் மக்களிடையே இரு நூற்றறாண்டு கடந்து சென்றடைந்துள்ளது. யோசித்து பாருங்கள் இரு நூறு ஆண்டுகளிலேயே இவ்வாறு என்றால் நீண்ட மனிதவாழ்வில் எந்த சொற்கள் எப்படி வந்தது என்பதை கண்டறிவது கடினமானது.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
சித்தார்ததர் சைவரல்ல. இது தவறு. சித்தார்த்தர் அன்றைய சனாதன வேத மதத்தை எதிர்ததார். கடவுளை மறுத்தார்.
-
ரப் பாடகர் வேடன்
பொதுவாகவே யாழ்பாண தமிழர்களை பொறுத்தளவில் குடாநாடு தாண்டி அதற்கு அப்பால் சென்றால் எல்லோரும் வேற்றினம் தான். பேச்சு நடையில் சற்று வேறுபட்டு இருந்தாலே போதும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அந்நியர்களாகவே பார்ப்பது எமது கலாச்சாரம். அமைச்சர் சந்திரசேகரனை அவரது அரசியல் கொள்கைகளுக்காக எதிர்க்கும் தமிழ் தேசியவாதிகளை விட விட அவரின் மலையக தமிழ் மொழிநடையை கிண்டல் செய்பவர்களே அதிகம் டக்லஸை கூட இந்தளவுக்கு கிண்டல் செய்யவில்லை. சந்திரசேகரனை அவரின் மொழிநடையை மிகவும் கீழ்தரமாக கிண்டல் செய்கிறார்கள். இந்த யாழ் குறுகிய தேசியவாதிகள். நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள் சந்திரசேகரம் கப்பலில் வந்தவர் என்று வேற கேலி. அதற்குள் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி வேணுமாம் இவர்களுக்கு. 😂😂😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
பரிஸ்டா உணவமல்ல இது. ஏற்கனவே சைவ முட்டை விற்கப்படுகிறதாம்.
- IMG_0380.jpeg
-
ரப் பாடகர் வேடன்
வேடன் யாழ்ப்பாண தமிழன் என்று என்று எல்லோரும. பெருமை பேசுறாங்க. ஆனால் வேடனோ நான் (யாழ்) பாணன் அல்ல என்று பாடியுள்ளார். 😂
-
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்
1993 ல் அரபாத் - ரபின் ஒப்பந்தத்திலேயே பாலஸ்தீனம் அங்கீகரிகப்படுவதறகான சூழ்நிலை உருவாகி விட்டது. அந்த சமாதானத்தை குழப்பியவர்கள் ஹமாஸ் கடும் போக்குவாத அமைப்பினரே. இலங்கையிலும் அதே நிலமை தான் 2002 சமாதானத்தை இரு தரப்பும் குறிப்பளவு விட்டுக் கொடுப்புகளுடன் தொடர்ந்திருந்தால் இத்தனை அழிவுகள் வந்திருக்காது. நல்ல விதமான முடிவுகளும் வந்திருக்கும். பிடிவாதமும் கடும் போக்கு தேசியவாதமும் கற்பனாவாதமும் அழிவுகளையே கொண்டுவரும் என்பதற்கு பாலஸதீனமும் இலங்கையும் உதாரணங்கள். இப்போதும் கூட கூட ஹமாஸ் கடும்போக்கு வாதிகள் இதை கெடுக்காமல் இருக்க வேண்டும். சமாதானத்தை கெடுத்துவிட்டு குத்துதே குடையுதே என்று புலம்புவதில் பயன் இல்லை.
-
ரப் பாடகர் வேடன்
யாழ்பாண தமிழ் வேர் என்பது அவரது பெருமை அல்ல. அவரது திறமையே அவருக்கு பெருமை. யாழ்பாணத்தில் இருந்திருந்தால் ஜாதீய ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இன்று போற்றப்படுகிறார். வாழ்த்துகள் வேடன்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கோஷான், நீங்கள் கூறியது அவர்கள் செய்த குற்றச்செயல். அமைப்பாக பாது காத்ததும் ஒரு குற்றச்செயல். நான் தெரிவித்தது அதை பற்றியதல்ல. மதததின் பெயரால் எதை எவர் கூறினாலும் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டாலும் அதை சிந்திக்காது ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டதை பேணிப்பாதுகாப்பது பற்றியது. மற்றப்படி அனைத்துமே ஒரே ரகம் தான்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அவர்கள் விரும்பினாலும் அவ்வாறு தனிமனித சுதந்திரத்தில் தலையிட முடியாத அளவுக்கு அந்த மதத்தை பின்பற்றும் மக்களிடையே விழிப்புணர்வும் அறிவியலும் மேம்பட்டுள்ளது. அதனால் அவர்களால் தலிபான்களாக மாற முடியாமல் உள்ளது. ஆனால் எம்மவரிடையே காவியையும பட்டையையும் போட்டாலே வேலன் போன்ற டுபார்கூர் பயல்களாலேயே எளிதாத சொந்த மக்களுக்கே பட்டை நாமம் சூட்டக் கூடிய நிலையே இன்னும் உள்ளது. இந்த தலிபான்களின் வாலும் ஒட்ட நறுக்கப்படல் வேண்டும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அவர்கள் சேர்சசை தாண்டி வெளியே வந்து மக்களின் வாழ்வியலின் தனிப்பட்ட சுதந்திரங்களின் தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாமிய, இந்து, சைவ தலிபான்கள் அப்படியல்ல. மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களில் தலையிடுபவர்களே தலிபான்கள் ஆவர்.
-
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!
தெரிவான விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். தெரிவானவர்களில் 8 பேர் பெண்கள் என்பது உண்மையில் சாதனை தான்.
-
குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
இது தான் உண்மையான கருத்து. இரு தரப்பும் பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டியெழுப்பும் அரசியலை நோக்கி நகவர்வதே தீர்வை நோக்கிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான முதல் காலடியாக இருக்கும். இதனையே இரு தரப்பு அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டும். இரு தரப்பு அரசியல்வாதிகளும் தத்தமது அரசியல் இலாபத்திற்காக வெறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வதானது, ஆபத்தை நோக்கி ஓடும் ஒரு றிலே ஒட்டம் போலவே இருக்கும். இந்த றிலே ஓட்டத்தில் அதிகம் ஆபத்தை எதிர் நோக்குவது சிறுபான்மை மக்களே என்ற பட்டறிவை உணர்ந்து அந்த மக்களின் அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் அதிக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எது எப்படியோ யாழின் பாரம்பரிய சைவ உணவகங்களை போல் அசுத்தமாக இருக்காமல் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் காட்சி தரும் ஒரு ஒரு சைவ உணவகம் வந்தது யாழ்பாண மக்களுக்கு கெத்தும் மகிழ்ச்சியும் தான். 😁
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஜேர்மனியின் முருகனும் நல்லூர் முருகனும் வேறு வேறு ஆட்களா நியாயம்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வண்டியை இழுப்பது கழுதை. வண்டியில் இருப்பது கோவேறு கழுதை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எம. ஆர் ராதா நடித்த படத்தில் வரும் இந்த காட்சி இந்த வேலன் என்ற கள்ளச் சாமிக்கு நல்லா பொருந்தும்.