Everything posted by island
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஜேர்மனியின் முருகனும் நல்லூர் முருகனும் வேறு வேறு ஆட்களா நியாயம்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வண்டியை இழுப்பது கழுதை. வண்டியில் இருப்பது கோவேறு கழுதை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எம. ஆர் ராதா நடித்த படத்தில் வரும் இந்த காட்சி இந்த வேலன் என்ற கள்ளச் சாமிக்கு நல்லா பொருந்தும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சரி நைனா! பன்றி இறைச்சி
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கற்பனை செய்து பாருங்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழர் இனப்படுகொலை என ICC இல் வழக்கு தொடுத்து ICCஆதாரம் கேட்டால் இதே போல தான் ஒவ்வொரு தவணைக்கும் மாற்றி மாற்றி ஒவ்வொரு சப்பை காரணங்களை சொல்லி வழக்கையே சொதப்பி விடுவர். 😂😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சைவ உணவு என்று அறிவிக்க வைத்த வெற்றியை கொண்டாட வேலன் சாமி வீட்டில் கோழி குழம்பும் குவாட்டருமா பார்ட்டியாம். 😂😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கூகிள் வரைபடத்தின்படி, Barista cafe உணவகம் இருக்கும் இடத்திற்கும் நல்லூர் கோவில் இருக்கும் இடத்திற்குமான தூரத்தை விட சென்ற் ஜேம்ஸ் சேர்ச் தான் மிக அண்மையில் உள்ளது. 😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
@வாலி வாலி கூறிய விடயங்கள் அடங்கிய யாழ்பாண வைபவமாலை நூலின் பக்கங்களை இங்கு தந்துள்ளேன். பன்றியிறைச்சியை போட்ட கதை மட்டுமல்ல புத்த கோவில்களை இடித்து சிங்களவரை துரத்திய வரலாறும் அங்கு உள்ளது. மதம் மாறிய ஒரே காரணத்துக்காக மன்னாரில் பெண்கள் குழந்தைகள் என்று பாராது 600 க்கு மேற்பட்ட சொந்த மக்களையே சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. இதை யெல்லாம் பார்ககும் போது, “ செய்த பாவம் தீருதடா சிவகுரு நாதா” எனப் பாடத் தோன்றுகிறது. 😂😂
- IMG_0285.jpeg
- IMG_0283
- IMG_0284.jpeg
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இந்த வேலன் என்ற மத வெறியர் கடந்த சில வருடங்களாக எல்லா விடயங்களிலும் மூக்கை நுளைத்து குரைத்து வருகிறார். பாமரத்தனமாக அரசியலும் பேசுகிறார். மக்களின் அரசியலுக்கு உசுப்பேற்றல் வெறுப்பு பேச்சால் மக்கள் பிரச்சனைகளை தீர்பதற்கு பதிலாக சிக்கலாக்குதல். சொந்த குடும்ப தேவைகள் என்றால் பின்கதவால் உரியவர்களிடம் பேசி கமுக்கமாக அலுவலை முடிப்பது என்ற தமிழ் தேசிய கொள்கையை இவரும் குத்தகைக்ககு எடுத்துள்ளார். ஆர்எஸ் எஸ் சங்கித் தனத்தை தமிழர் அரசியலுக்குள் புகுத்த முயல்கிறார். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்உ இவர் கூறும் வார்த்தையே கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளே அனுமதிக்காது அவர்களை திருப்திப்படுத்த கூறப்பட்ட வார்ததை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அப்ப நல்லை கந்தனும் ஊரில் அடுத்த சாதி தமிழர்கள் மீது வன்மம் காட்டும் யாழ்பாண தமிழர்கள் போல் சகிப்பு தன்மை இல்லாமல் பன்றியை போட்டு அயலானை விரட்டியடித்தாரா? 😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அங்கெல்லாம் எமக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தை வாங்கி தாங்கோ, அப்புறம் நாங்கள. யார் என்று காட்டுகிறோம். 😂 போதுவாக இப்படியான விடயங்களுக்கு ஓவரா பொங்குறவர்கள. யாரெண்டா 25 நாள் திருவிழா எப்ப முடியும் என்று காத்திருந்து 26 ம் நாள் பூங்காவனம் முடிய மீன்சந்தைக்கும் இறைச்சிகடைக்கும் படையெடுப்பவர்களாக தான் இருக்கும். அதுக்குள்ள சதி அது இது என்று வேலன் சாமி என்ற **** பொங்கு***
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இந்த தீர்ப்பு மலையக தமிழர்களை அன்றைய இலஙகை அரசு இந்தியாவுக்கு திருப்பு அனுப்பிய சமயம் வந்திருந்தால் மிகவும் மகிழ்சசியடைந்திருப்பேன். 7 அல்லது 8 எம்பிகளை பாராளுமன்றம் அனுப்பும் அளவு மலையக தமிழர்கள் 1950 ல் இருந்தார்கள். அவர்களில் 25 வீதத்தை வட கிழக்கில் குடியேற்ற அன்றைய தமிழ் தலைவர்கள் முயற்சி எடுத்திருந்தாலே வட கிழக்கில் நிலங்கள் பறி போயிருக்காது. 1977 கலவரத்தில் வந்தவர்கள் கூட திரும்பி மலையகம் செல்ல வேண்டிய நிலையே வந்தது. தோட்டக்காட்டான் என்று அவர்களை வெறுத்த யாழ்ப்பாண dominant சமூகம் அதன் பலனை இன்று அனுபவிக்கிறது.
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
நீங்கள் கூறியது போல் தமிழ்கவி ஆழமான அரசியல் பார்வை கொண்டவரல்ல. அவர் புலிகளுடன் இருந்த போது கூட ஒரு கவிஞராக சாமான்ய மக்களிடையே போர்பரணியை ஊக்குவிக்கும் கலை நிகழ்வுகளை ஒருங்கு செய்யும் ஒருவராகவே இருந்தவர். பழைய ஒளிவீச்சு வீடியோகளைப் பார்ததால் இதைத் தெரிந்து கொள்ள முடியும் தனது பிள்ளைகளையும் மாவீரர் ஆக்கியவர். சாமான்ய மக்களுடன் வாழ்ந்தவர். அவரது அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மக்களின் குரலாக யுத்த இறுதி நாட்களில் நடந்த பல உண்மைகள் அவரின் செவ்வியில் இருப்பதை மறுக்க முடியாது. அதில் பலருக்கு உவப்பில்லாத அவர்கள் மறைக்க விரும்பும் உண்மைகள் இருக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் விடுதலை அடைய அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து காவியம் எழுதி அதை அடுத்த சந்ததிக்கு கடத்தினால் மீண்டும் இதே கசப்பான அனுபவங்களே ஏற்படும் நிலாந்தன் அப்படிப்பட்டவர் அல்ல. வன்னியில் இருந்தபோது பல அரசியல் ஆய்வுகளை வெளியிட்டவர். சர்வதேச அரசியல் நிலை பற்றி அறிந்தவர். அப்போது புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சித்து அதை அவர்களுக்கு எடுத்து கூறாமல், அவர்களை தவறாக வழிநடத்தியவர். அதன் மூலம் நடந்த பேரழிவுக்கு பொறுப்பு கூற வேண்டியவர். இன்றும் கூட அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் நடைமுறை அரசியலுக்கு அப்பால் மக்களை கற்பனாவாதத்திற்குள் வைத்திருக்கும் அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
சிங்க கொடியின் நிழலில் நாட்டை ஆள்வது முக்கியமல்ல. அனைத்து இனங்களும் தத்தமது பாதுகாப்பை உணரும் ஒரு அரசியல் பொறிமுறையை கொண்ட அரசியலமைப்பை உருவாக்காதது இவரது பாரிய தோல்வியாகும். இதுவே ஶ்ரீலங்கா நாட்டின் படிப்பினை. இப்போதைய ஆட்சியளர்கள் உணர வேண்டிய மிக முக்கிய விடயம். தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வெற்று கோஷங்களை விடுத்து இதை வலியுறுத்தி நடைமுறை சாத்தியமான அரசியலுக்கு வரவேண்டும்.
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
சிறந்த கருத்து! 👍 நன்றி வீரப்பையன்.
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் ! இன்று தமிழ் இனவாதப் பேச்சுக்களைப் முழங்குபவர்கள் போராட்ட வயதில் இருந்த போது ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள் ! மே 17 வரை களத்தில் நின்ற, போராளிகளின் தாய், போராளி, ஆற்றல் மிகு பெண் ஆளுமை தமிழ் கவி அம்மா தன் முள்ளிவாய்க்கால் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றார்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
ஐரோப்பா வந்த புதிதில் நசனாலிற்றி உள்ள பெண்ணை திருமணம் செய்தால் தான் தனக்கு பாதுகாப்பு என்று தேடி திரிந்த இவர், இன்று விரும்பியபடி வெளிநாட்டில் செற்றில் ஆகியதும் வருமானம் தரும் தாயக ஊடகவியலாளராகி பிழைப்பு நடத்துகிறார். தாயக அரசியல்வாதிகளடையே சிண்டு முடிவதில் இவர் வல்லவர்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
உங்கள் நினைவு சரியானது. மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பிப் போக மறுத்தவர். ஈபிஆர்எலெவ் அமெரிக்க அலன் தம்பதியரை கடத்திய பின்னர் வைத்த கோரிக்கைகளில் ஒன்று இவரை விடுதலை செய்யவேண்டும் என்பது. அந்நேரத்தில் சிறையில் இருந்தபடி, அலன் தம்பதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கடத்தல்காரர்களுக்கு இவர் வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோள் அடங்கிய குரல் பதிவை இலங்கை வானொலி பலமுறை ஒலிபரப்பியது. இவர் பின்னர் இயற்கை மரணமடைந்ததாக ஊடகங்களில் வாசித்தேன்.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
எனது முதல் கருத்து இனப்படுகொலை பற்றியதல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். அது எதிர்காலத்தில் எம்மவர் செய்யும் அறிவுபூர்வமான அரசியலைப் பொறுத்தது. ஆனால், தமிழர் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என்று ஒருவர் கூறுவதை நம்பித் துள்ளிக்குதிக்கும் அளவுக்கு அறிவு உடையவர்களுக்கு தமிழர் இனப்படுகொலையை உலகம் ஏற்றுக்கொள்ளவைக்கும் அரசியலைச் செய்யும் திறன் இல்லை.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
நடக்க முடியாத விடயங்களைப் பற்றி பேசி ஆவேச உணர்சசி வசப்படுத்தும் பேச்சுக்களும் அதையொட்டிய அரசியலும் தமிழருக்கு எந்த முன்னேற்றதையும் கடந்த 75 வருடத்தில் தராதது மட்டுமல்ல பாரிய பின்னடைவையும் பேரழிவையும் தந்தது என்ற பட்டறிவால் வந்த நெருடலே. மக்களை அறிவின் பால் சிந்திக்கவிடாது இப்படி உணர்சசிவசப்படுத்தி அதன் மூலம் தாம் இலாபமடைவது சில கும்பல்களின் டிசைன்.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
இந்த செய்தியை வாசிதததும் பதறிப் போன கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் அவசரம் அவசரமாக தூதகரத்தை இழுத்துப் பூட்டிவிட்டு தூதரக அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு தலையில் துண்டை போட்டபடி அங்கிருந்து வெளியேறி இலங்கைக்கு பறந்துகொண்டிருப்பதாக இறுதியாக கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
-
🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
உங்களது கருத்தில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. அப்படி நடந்தால் நிச்சயபாக ஈழத்தமிழர்களாகிய நாம் மகிழ்சசியடையவேண்டும். ஆனால் தமிழர் தரப்பில் தீவிர தமிழ் தேசியம் பேசி அரசியல் செயவோர் இதனை குழப்ப தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வர் என்பதே இன்றைய ஜதார்த்தம். இது வெறும் அனுமனம. என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பட்டறிவு அப்படி உள்ளது. தமிழர் தரப்பில் இன்றும் நெகிழ்வு தன்மையுல்லாது கற்பனாவாதத்தை பரப்பும் இறுக்கமான மனநிலையில் இருந்தபடி மக்களுக்கும் அவ்வாறான அரசியல் தூண்டுதல்களை செய்யும் கருத்துக்களை சமூக ஊடகங்கள் மூலமும் மறைமுகமாக அமைப்புகள் மூலமும் விதைக்கும் பலர் புலம் பெயர் நாடுகளில் உள்ளனர்.