Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. நான் பேசியது ஜதார்தத அரசியல். நீங்கள் பேசுவது உங்கள் ஆசை. அவ்வாறு ஆசை கொள்ளும் முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது.
  2. பல தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கூட வட கிழக்கில் கிட்டதட்ட அரைவாசி மக்கள் மாத்திரமே ஆதரித்துள்ளனர். அந்த புள்ளிவிபரங்களை சம்பந்தபட்ட தலைவர்கள் ஆராய்ந்து ஜதார்த்தத்தை உணர்ந்து நேர்மையாக அணுகாமல் தமது அரசியல் நலன்களுக்கு ஏற்ற முறையிலேயே கொள்கைகளை வகுத்தனர்.
  3. விசுகு, நான் கூறியது அவரின் தோல்வி பற்றியதல்ல. மக்களின் மனவோட்டம் அரசியல் தலைவர்களால் புரிந்து கொள்ளப்படாமை பற்றியதே. அரசியல்க்கட்சிகள் அல்லது அரசியல் இயக்கங்கள் உருவாக்கும் கொள்கைகளை மக்கள் ஒட்டு மொத்தமாக ஏற்று கொள்ளவேண்டிய கடப்பாடு மக்களுக்கு இல்லை. மக்கள் மனவோட்டத்தை அனுசரித்தே அரசியல்கட்சிகள்/ இயக்கங்கள் தீர்மானங்களை எடுக்கவேண்டும். மக்களின் மன நிலை நிச்சயமாக ஒட்டு மொத்தமான கும்பல் மனநிலையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கவும் மாட்டாது. ஆகவே அது மக்களின் பலவீனம் அல்ல. அரசியலை முன்னெடுத்த தலைமைகளின் பலவீனம் மட்டுமே.
  4. தமிழர்களுக்குள் நடந்த கொலையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பெண். கொலையாளி தமிழர். கொலையாளி மீது கோபம் வரவில்லை. ஆனால், நோர்வே இமிக்கிறேசனை திட்டுகின்றீர்கள். பாகிஸ்தானியரை, சோமாலியரை கிழக்கு. ஐரோப்பியரை, உக்கிரேனரை கேய், லெஸ்பியனை எல்லாம் இதற்குள் இழுத்து அவர்கள் தான் இதற்கு காரணம் போல்…….. என்ன டிசைனப்பா நீங்கள்.
  5. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தவிப்பதற்கான முழு உரிமையும் திரு கஜேந்திரகுமாருக்கு உள்ளது. மக்களை பகிஷகரிக்குமாறு கோரிக்கை விடும் உரிமையும் அவருக்கு உள்ளது. அதே வேளை இவ்வாறானவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வழமைபோல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் மக்களுக்கு உள்ளது. எனது கணிப்பில் இரண்டாவது தான் நடைபெறும்.
  6. இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். அவரின் இசை எம்மை மெய்மறக்க வைக்கும். அவரின் இசைக்கு நாம் எம்மை அறியமல் அடிமையாவோம். திறமைசலியான அவருக்கு கர்வம் இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், சபை நாகரீகம் தெரியாத எதிரில் இருப்பவருக்கு அடிப்படை மரியாதையை கொடுக்க முடியாத அளவுக்கான அவரது கீழ்தரமான வார்ததை பிரயோகங்கள் அவரின் மனிதன் என்ற வகையிலான மதிப்பை குறைக்கவே செய்யும். மிக சிறந்த இசையமைப்பாளர். மிக கீழ்தரமான மனிதர்.
  7. கடந்த 75 வருடங்களாக எமது தமிழ் தரப்பு தலைமைகள் செய்தவை எல்லாம், போராட்டத்தை தொடர்சசியாக றிவேர்ஸ் கியரில் கொண்டு சென்றதே. 1948 ல் இருந்த நிலையை விட, இன்று அதல பாதாளத்தில் தமிழர் நிலை உள்ள நிலைக்கும் பாரிய உயிர் அழிவுகளுக்கும் தலைமை தாங்கிய எல்லா தலைமைகளும் பொறுப்பு கூற வேண்டும். தமது தலைமைகளின் தவறுகளுக்கு சொந்த மக்களுக்கு பொறுப்பு கூற முடியாதவர்கள் இலங்கை அரசை பொறுப்பு கூற வைக்கப்போவதாக கூறுவது வேடிக்கை. அதற்கான பொறுப்பு கூற தமிழர் அரசியலைக் நடத்துகிறோம் என்று கூறுவோருக்கு ஈகோ இடம் தரவில்லை என்றால் செய்த தவறுகளை தமக்குள்ளாவது உளப்பூர்வமாக உணர்ந்து ஏற்றுக்கொள்வதுடன் இனியாவது பொறுப்பை உணர்ந்து அறிவு பூர்வமாக செயற்பட வேண்டும். அனைத்து அமைப்புகளும் சிந்தித்து புரிந்துணர்வுடன் தற்போதைய நிலையில் சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு நடைமுறையை உருவாக்கி, அதைப் பெற இலங்கை அரசுடன் பேசுவதோடு நின்றுவிடாது, சிங்கள மக்கள் அமைப்புகளுடனும் புரிந்துணர்வுடன் உரையாடல்களை மேற்கொண்டு அதைச் சாத்தியமாக்க உழைக்க வேண்டும். அதன் மூலம் எமது தமிழ்மக்களின் பலத்தை உயர்த்த தேவையான அரசியலை செய்ய வேண்டும். அதுவே இன்றைய தமிழ் மக்களின் அபிலாசை. அதை விடுத்து இதுவரை செய்த உதவாக்கரை அரசியலை தொடர்வாரேயானால், தமிழர்களின் உண்மையான துரோகிகள் இந்த ஒட்டுமொத்தமான தலைமைகளே, என்பதை விளைவுகளை அனுபவிக்கப்போகும் எமது எதிர்கால சந்ததி கூறும்.
  8. 1982 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை பகிஷகரிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி மக்களிடம் கோரிக்கை விட, அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திரு குமார் பொன்னம்பலம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து, அதை உறுதிப்படுத்த தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் உண்மையில் மக்கள் அந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததே வரலாறு. வட கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அம்பாறை மாவட்டத்தை தவிர்தது விட்டு பார்ததால் கூட முக்கிய இரண்டு தேசியக்கட்சிகளும் சேர்ந்து 325000 வாக்குகளை பெற, குமார் பொன்னம்பலம் வெறும் 155000 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த ஜதார்த்தத்தை, தமிழ்மக்களின் மனவோட்டத்தை எமது விடுதலைப்போராட்டத்தை நடத்திய எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. சுதந்திரத்திற்கு பின்னர் தேர்தல் பகிஷகரிப்பு என்றுமே தமிழர் பகுதிகளில் வெற்றி பெறவில்லை. புலிகளில் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது அல்லது ஆயுத முனையில் மட்டுமே அது சாத்தியமானது என்பதே உண்மை வரலாறு. அதை உலகம் கருத்தில் எடுக்காது. 1999 ல் சந்திரிக்கா மீது பாரிய குற்றச்சாட்டுகளை தமிழ் சமூகம் சார்பாக உலக அளவில் பரப்புரை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கூட யாழ்பபாண மாவட்டதில் மட்டும் அவர் 52000 திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். ஜனதிபதி தேர்தலில் மூலம் அரசியல் தீர்வு திட்டத்தை எப்படியும் பெற முடியாது. ஆகவே இதனை உபயோகித்து சமயோசத்துடன் தமிழ் மக்களின் கல்வி சமூக பொருளாதார பலப்படுத்தலை செய்ய முடிந்தால் அதை தமிழ்கட்சிகள் செய்வது நல்லது. அவர்களிடம் அதற்கான வலு மட்டுமே தற்போது உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.
  9. பல்லாண்டுகள் கழித்தும் அறிக்கைகள் வெளியிட அனைத்து தமிழ் தேசிய அமைப்புகளும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாயகம், தேசியம், தன்னாட்சிவடகிழக்கு இணைப்பு போன்ற சொற்களை உள்ளீடு செய்து ஒரு நிலையான கட்டளையை (Standing order) செய்து வைப்பது நல்லது. இவர்கள் இல்லாத காலத்திலும் இவ்வாறான அறிக்கைகள் வந் து கொண்டிருக்கும். 😂
  10. பேச்சு தமிழும் தமிழ் எழுத்தின் வரி வடிவங்களும் தொடந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியதவை. மாற்றங்கள் என்பது பிரபஞ்ச விதிகளில் ஒன்று. பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்களைப் போல் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியான பூமி பந்திலும் உயிரியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. அதுவே பரிணாமம். (Evaluation) அந்த பூமியின் மக்கட் கூட்டத்தில் ஒரு சிறிய பகுதியில் வாழும் மக்களால் பேசப்படும் தமிழ் மொழியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. அம்மாற்றங்களே தமிழ் மொழியை உலகத்தோடு இணையாக பயணிக்க வைத்துள்ளது. அம்மாற்றங்கள் இல்லையெனில் தமிழ் மொழி என்றோ காணாமல் போயிருக்கும்.
  11. நீங்கள் கூறியது உண்மை. யாழ்பாணத் தேர்தல் தொகுதியில் வாழ்ந்தவர்களுக்கு உண்மை தெரியும்.
  12. இவர் ஒரு கல்வியாளர். மேலோட்டமாக பார்ககும் போது இவர் கூறுவது சரியானது போல் தெரியும். ஆனால், இவ்வாறான கோரிக்கைகளை வைக்கும் போது, சமயோசிதமான முறையில், மாணவர்களது சிரமம், பெற்றோர்களின் பொருளாதாரநிலை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை வலியுறுத்துவதன் மூலமே இந்தக் கோரிக்கையை வென்றெடுக்க முடியும். அதை விடுத்து தேவையற்ற விதத்தில் தமிழ்மக்களின் தாயகபூமியின் பல்கலைக்கழகம், தமிழரின் உரிமை போராட்டம் போன்றவற்றிற்கு இந்த பலகலைக்கழகம் தமிழ் மக்களின் ஏக போக உரிமையாக இருத்தல் அவசியம் என்பது போன்ற விடயங்களை இந்த தளத்தில் பேசுவது எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் என்ற புரிதல் இவருக்கு இல்லையா? வேண்டுமென்றே சிங்கள இனவாதத்தை தூண்டிவிட இதைச் செய்கிறாரா அல்லது தனது தலையில் தானே மண் அள்ளிப் போடும் தமிழ் தேசியத்தின் வழமையான டிசைனா? மேலும் தமிழரின் உரிமை போரை கொண்டு நடத்தும் என்ற கனவுடனேயே யாழ்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார். இவருக்கு வரலாறு தெரியாதா? தமிழ் தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பின் மத்தியிலேயே, இவர்களால் துரோகி என்று முத்திர்ரை குத்தப்பட்டவர்களின் முயற்சி/ பிரசன்னத்துடனே 1974 ம் ஆண்டு அன்றய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா இந்த பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார்.
  13. உங்கள் ஜதார்ததமான. கருத்தை வரவேற்கிறேன். உலகின் எல்லா இனங்களின் கலாச்சாரத்தை விட அனைத்து இன மக்களுக்கும் பொதுவான மனித பண்பாடே உயர்வானது. கில்மிஷாவின் வெற்றியை தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட போது சமூக ஊடகங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்ட பல்லாயிரம் சாதாரண சிங்கள பொது மக்கள் இதயபூர்வமாக கில்மிஷாவை வாழ்த்தி பின்னூட்டங்களை இட்டதை அவதானிக்க கூடியமாக இருந்தது. அது எமக்கு பெருமையாகவும் இருந்தது. எமது இனம் ஏனைய இனங்களுக்கு எத்த வகையிலும் சளைத்தது அல்ல. உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் இணையானவர்கள் நாம் என்பதை பல்வேறு துறைகளில் எமது வெற்றிகரமான செயற்பாடுகள் மூலம் உலகிற்கு காட்டுவதே எமக்கு பெருமை. அதை விடுத்து நாம் நாம் மூத்தகுடி, உலகத்திற்கே அறத்தை சொல்லி கொடுத்தவர்கள் நாம், உலகத்திற்கே தாய் மொழி எமது மொழிதான் என்று, நாமே மேடை போட்டு நாமே எமக்குள் மட்டும் காட்டு கூச்சல் இடுவது நிச்சயமாக எமக்கு பெருமையானது அல்ல. அதை எவரும் திரும்பி கூட பார்ககப்போவதில்லை.
  14. கனடா நாட்டில் காவல் துறை உயர் பதவியில் இருக்கும் ரோஷான் துரையப்பாவுக்கு வாழ்த்துகள்.
  15. ஐயோ ஐயோ கோஷான் நான் அரசியல் நகர்வு என்று கூறியது தமிழ் மக்களின் அரசியல் தரப்புக்கள் சிங்கள மக்களின் பொது அமைப்புகள் பலவற்றுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு நல்லுறவை வளர்பபதன் மூலம் இரு பக்க மக்களுக்குள் இருக்கும் இடைவெளியை குறைத்து எதிர் காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு இலகுவான நிலமையை ஏற்படுத்துவது பற்றியதே. அரசியல் Negotiation என்பது வெவ்வேறு அரசியல் கொள்கைகளுடன் பயணிக்கும் இரு தரப்புகள் படிப்படியாக தமக்குள் விட்டுக்கொடுப்புகளை செய்து ஒரு புள்ளியில் சந்திப்பது தானே. இங்கு நான் சுரேனைப்பற்றி கூறவில்லை. சுரேனை அடித்து விரட்டிவிட்டு தமிழ் தரப்புகள் சுரேனைப் போல் அதிகார தரப்புகளை மட்டும் சந்திக்காது அனைத்து அமைப்புகளையும் சந்திக்கலாம் தானே! இதனை நான் ஏற்கிறேன். ஆனால் இது நடைமுறை சாத்தியமா? சட்ட சிக்கல் இல்லையா? ஒரு நாட்டில் அரசியலில், பாராளுமன்ற பதவியில் அல்லது அமைச்சர் பதவியில் அல்லது அவர் சார்ந்த கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வேறு ஒரு நாட்டில் அரசியல் பிரச்சனையில் தலையிடலாமா? அந்த நாட்டின் அரசியல. அமைப்பின் தலைமை வகிக்கலாமா?
  16. உண்மை கோஷான். 1931 ல் இருந்து ஒவ்வொரு தலைமுறையும் தமது அரசியல் stupidness ஐ மிகக் கவனமாக வடிகட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தி அரசியல் அறிவூட்டுவதற்கு பதிலாக அரசியல் உசுப்பேற்றலை செய்து வெற்றிகரமாக இன்றைய நிலையை அடைந்தோம். இதை ஏற்றுகொள்ள எமக்குள் இருக்கும் ஈகோ இடம் தராது. ஆனால், இந்த தலைமுறையோடாவது இது ஒழிய வேண்டும் என்பதே எனது அவா.
  17. “விலை போகாத தலைமை” என்ற நிலையை அடைவதானால் தற் போதைய நிலையில் பல உள்ளூர்/ புலம் பெயர் முகநூல், இணையத்தள, அரசியல் தாதாக்களை திருப்தி செய்வது மட்டும் தான் ஒரே வழி என்பதே ground reality. அது மாறவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
  18. நான் மீண்டும் சொல்கிறேன் நான் பிரகடனத்தை பற்றி சொல்லவில்லை இப்படியான அரசியல் நகர்வுகளை பற்றி தான் பேசுகிறேன். எனது அறிவுக்கு எட்டியபடி வரலாற்றில் அரசியல் நகர்வு என்றால் இப்படி தான் இருக்கும். சிங்களவன் எதுவும் எமக்கு தரப்போவதில்லை பேசிப் பிரயோசனம் இல்லை என்ற உறுதியான முன்முடிவு இருந்தால் மீண்டும் யுத்தத்தை ஆரம்பிப்பது தான் உகந்தது. வெளி நாடுகளிலும் தாயகத்திலும் கடும் தேசியம் பேசும் அன்பர்கள் இதனை செய்ய முன்வரவேண்டும்.
  19. உங்கள் ஐடியா வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. இதுவரையான தோல்வி அடைந்த அரசியலை மறந்து புதிய தலைமையின் கீழ் புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட புதியஅரசியலை “ இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற ரீதியில் செய்தால் அது நிச்சயமாக எமக்கு பலம் சேர் க்கும். பலனளிக்கும். நன்றி.
  20. இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய முன்னணி, விக்கினேஸ்வரன் தரப்பு, அதை விட டெலோ, ஈபிஆர்எல்எவ், ஆகியவை தனித்தனியாகவோ கூட்டிணைந்தோ செய்யலாம். புலம் பெயர் நாடுகளில் நாடு கடந்த அரசு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, மக்களவைகள், மற்றும்முன்னள் புலிகளின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் அமைப்புக்கள் தனித்தனியாகவோ சேர்ந்தோ செய்யலாம்.
  21. கோஷான், நான் மீண்டும் மீண்டும் தெளிவாக எழுதியும் சுரேனின் திட்டத்தை முழுமையாக நான் ஏற்றுக்கொள்வது போன்ற தோற்றப்பாட்டுடன் பதிலளித்துள்ளீர்கள். எனது கேள்வி உலகத்தமிழர் பேரவையின் திட்டத்தை புறம்தள்ளிவிட்டு அவர்கள் செய்தது போன்ற அரசியல் நகர்வுகளை இதை விட மேம்பட்ட ரீதியில் மற்றய தமிழ்த் தரப்புகள் ஏன் மேற் கொள்ள கூடாது என்பது தான். அதை செய்ய தடையாக உள்ள காரணிகள் என்ன என்பது தான் எனது கேள்வி. இரு பகுதி மக்களிடையே உள்ள விரிசலை குறைப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்த்து இருபகுதியுனரினதும் விட்டுகொடுப்புடன் ஒரு அரசியல் தீர்வை அடைய அத்திவாரம் இடுவது சரணாகதி அரசியலா? இரண்டவது உங்கள் வகைப்படுத்தலின் 2. வதில் இருந்து 3 வதுக்கு தமிழ் அரசியல் வந்து நிற்கும் நிலைக்கு எமது கடந்த கால அரசியல் தவறு காரணம் இல்லையா? அதை பிரேரித்தது நானல்ல. அதற்கு காரணிகள் யார் என்பது உங்களுக்கு தெரியாததல்ல. அடுத்த தலைமுறையும் உணர்சசி வசப்பட்டு அதன்பால் தமது அரசியல் முடிவுகளை எடுக்க வைக்கும் படியான அரசியலையே தமிழ் தரப்பு தொடர்ந்து மேற்கொள்கிறது என்பது எனது கருத்து
  22. பெரியாரின் நினைவு நாளில் சில நாட்களுக்கு முன்பு அவரை போற்றி சீமான் இட்ட ருவிற்றர் பதிவு. ஒரு புறம் தனது அரசியல் தேவைக்காக பெரியாரை தமிழரின் எதிரி போல் பொய்யான சித்தரிப்பு. இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறியபோது தமிழகத்தை இந்தியாவிடம் கொடுக்க வேண்டாம் என்று பெரியார் ஆங்கிலேயரிடம் கூறியதற்க்காகவும் இந்திய சுதந்திர நாளை கரிநாள் என்று கூறியதற்காகவும் அவரை ஆங்கிலேய அடிமை என்று அவதூறு. மறு புறம்……… இதுதான் அரசியல்.
  23. வணக்கம் கோஷான். நான் எழுதுயது சுரேன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்க அல்ல. தாயகத்தில் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் தாயக தலமையுடன் உரிமையுடன் தொடர்புகளை பேணிய இவர்கள் உலக அரசியல் போக்குகள் குறித்த விடயங்கள், பலம் வாய்ந்த நாடுகளின் நிலைப்பாடுகள் போன்ற விடயங்களில் தாயக தலைமைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி தாயக அரசியல் நிலைப்பாடுகள், தந்திரோங்களை நெறிப்படுத்தி தந்திரோபாய அரசியல் நகர்வுகளை தாயக தலைமை எடுக்க வைக்க வேண்டிய கடப்பாடு இருந்தும் அதைச் செய்யாமல் ஆயுத போரை மட்டுமே நம்பி அதை ஊக்குவித்து மெளனமாக இருந்து இன்றய நிலைக்கு காரணமானதில் இந்த அமைப்புக்கும் பங்கு உள்ளது என்பது எனது கருத்து. ஆனால், இதுவரையான 14 வருடங்களில் தாயகத்தில் மற்றும் புலம் பெயர் நாடுகளில் அரசியல் செய்துவரும், நீங்கள் கூறியது போன்ற மக்கள் ஆதரவுடன் இருக்கும் அமைப்புக்கள்/ கட்சிகள் இந்த பிரச்சனையையை முன்னகர்தத இதை போன்ற முன்மாதிரியை முன்னரே உபயோகித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் சுரேனின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியில் தடுத்து நிறுத்தி இருக்கலாம். அதன் பெயர் பேச்சுவார்ததையோ அரசியல் தீர்வோ அல்ல. அது மிக எளிதாக விரைவாக நடக்கும் என்று நினைக்கும் அளவுக்கு எமது அரசியல் நிலை இப்போது இல்லை. அரசியல் தீர்வை காணும் வலு இன்று இயங்கும் எந்த அமைப்புக்கு இல்லை என்பது வெள்ளிடை மலை. இனவாதிகளை விடுங்கள். இரு பக்கதிலும் உள்ள மக்களுக்கு இடையிலான இடைவெளிகள், நம்பிக்கையீனங்களை களைந்து அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தையாவது ஆரம்பித்து வைக்க தாயக, புலம் பெயர் அரசியல் அமைப்புகள் இப்போதாவது ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னோடி யாக இந்த தந்திரோபயத்தை நடைமுறை சாத்தியமாக மேம்படுத்தி உபயோகிக்கலாம். சிங்கள மக்கள் அமைப்புகளுடன் நல்லுறவை பேணி சந்திப்புக்களைஆரம்பிக்கலாம் என்பது எனது கருத்து. வெளி நாடுகளில் என்னதான் அரசியல் செய்தாலும் எந்த நாடும் அதை செய்யுமாறே எம்மை வலியுறுத்தும். அவ்வாறான நடவடிக்கைக்கே ஆதரவாக இருக்கும். எமது தமிழ் அரசியலில் நல்ல பிள்ளை பெயரெடுக்க வேண்டுமானால் யோகர் சுவாமி கூறியது போல் “சும்மா இரு” என்பதே உகந்தது. அனால் ஒரு சிறிய மாற்றம், வெற்று வீர வசன அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதுடன் கூடவே தமிழ் அரசியல் முகநூல், இணையத்தள அரசியல் தாதாகளுக்களுடன் நல்லுறவையும் பேணியபடி “சும்மா இரு” என்ற கோட்பாடே நல்ல பிள்ளை பெயரெடுக்க உகந்த கோட்பாடு.
  24. பயனுள்ள மருத்துவ தகவல்களை தொகுத்து அனைவருக்கும் புரிய கூடிய விதத்தில் எளிய நடையில் கட்டுரையாக தரும் @Justin அவர்களுக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.