Everything posted by vasee
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Forex trading https://www.babypips.com/learn/forex Crypto trading https://www.babypips.com/crypto/learn இந்த இணையத்தளத்தில் பெரும்பாலும் முக்கியமான விடயங்கள் அனைத்தையும் கற்பிப்பதால் தேவையில்லாமல் காசு செலவின்றி இலவசமாக அனைத்தினையும் அறிந்து கொள்ளலாம். இந்த புத்தகத்தினை முடிந்தால் முதலில் கேட்பது நல்லது என்பது எனது கருத்து (Trading in the zone). https://www.myfxbook.com/forex-calculators/risk-of-ruin-calculator இந்த கணிப்பினை (Risk of Ruin - அதாவது உண்மையான கணக்கில் உண்மையான காசில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன், மாதிரி கணக்கில் கற்பனை காசில் நடாத்தும் வர்த்தகத்தின் தரவுகளினடிப்படையில் உங்கள் வர்த்தக திட்டத்தின் மூலம் நீங்கள் உங்கள் காசினை இழக்க நிகழ்தகவு உள்ளதா) செய்து விட்டு உண்மையான வர்த்தகத்திலீடுபட்டால் நல்லது என கருதுகிறேன். மேலே கூறப்பட்ட அனைத்து வழிமுறைகலையும் பின்பற்ற தேவையில்லை உங்களுக்கு எது இலகுவாகவும் அதிக இலாபமும் உள்ளதோ அதனை பின்பற்றுங்கள். நான் பின்பற்றும் உத்திகள் Elementary, உடன் summer school இல் Elliott wave ( market cycle) பயன்படுத்துகிறேன் உத்திகளை தவிர்த்து அடிப்படையான Pre school, Kindergarten மிக முக்கியமாக under graduate junior & senior, Graduation முக்கியமானது. money management மிக முக்கியமானது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் 1820.58 விற்பதற்கு தீர்மானித்துள்ளேன், Stop loss 1825.58.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அதிக இலாபத்திலிருந்த தங்க வர்த்தகம் அமெரிக்க நுகர்வோர் விலைசுட்டெண் அறிவிப்புடன் எனது stop loss இனை அடைந்துவிட்டது (நட்டத்துடன் மூடப்பட்டது). எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க மாற்றம் குறைவாக வரும் என முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்து நிலவியிருந்த நிலையில் அதற்கு எதிர்மறையாக சென்றால் (பணவீக்கம் அதிகரித்தால்) அமெரிக்க நாணயம் தங்கத்திற்கு எதிராக விலை அதிகரிக்கும் (எதிர்பார நிகழ்வு சந்தையில் பாரிய தாக்கத்தினை கடந்த காலத்தில் ஏற்படுத்தியுள்ளது) என எதிர்பார்த்து அனைத்து வர்த்தகங்களில் ஒன்றினை கூட மூடாது வைத்திருந்தேன். ஆனால் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த மாதிரியே வாடிக்கையாளர்களின் செலவீடு குறைவாக வந்தமையால் சந்தையின் எதிர் முனையில் தள்ளப்பட்டேன், அத்துடன் தங்கத்தின் விலை எனது நிலைக்கு எதிராக சென்ற போது வழமையாக அனைவரும் செய்யும் ஒரு தவறினையும் செய்தேன், இன்னொரு தொகுதி தங்கத்தினை விற்றேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி கடஞ்சா, வருகைக்கும் பதிலுக்கும். நீங்கள் கூறுவது சரி (எனது கருத்து தவறானது அல்லது பெரும் பகுதி கருத்து தவறானது), நான் மேலே குறிப்பிட்ட வகை ஒரு சிறிய பங்கு மட்டுமே. https://www.bis.org/publ/qtrpdf/r_qt2212h.htm அன்னிய செலாவணி வர்த்தகத்தில் 1. Forward contracts - வங்கி மற்றும் வங்கி அல்லாத (நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள்) நிறுவனங்களின் நடவடிக்கைகள். 2. Option - வங்கி மற்றும் வங்கி அல்லாத (நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள்) நிறுவனங்களின் நடவடிக்கைகள். Forward contracts மற்றும் Option (Hedging , Speculation) இதற்குள் நான் குறிப்பிட்ட வகையினரும் அடங்குவர். இவர்கள் தவிர வங்கி மற்றும் வங்கி அல்லாத speculators அடங்குவர். https://www.cftc.gov/MarketReports/CommitmentsofTraders/index.htm 3. FX Swaps- Currency Swaps Fx swaps - இந்த வகையின்ரையே இந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார். காணொளியாளர் கூறிய கருத்து சரி அல்லது ஒரு பகுதி ( என நினைக்கிறேன்) சரி, ஆனால் அவரது கருத்து தவறு என நான் கூறிய கருத்து தவறு. https://www.investopedia.com/articles/forex/11/introduction-currency-swaps.asp இந்த இணைப்பில் நாணய பரிமாற்றம் எவ்வாறு நிகழுகிறது என குறிப்பிட்டுள்ளனர் (மேலே காணொளியாளர் கூறிய விடயத்தினை இலகுவாக விளக்கியுள்ளனர். எனது புரிதல் சரியா என்பது தெரியாது, இது பற்றி மேலும் அறிய ஆவல் அதனால யாழ்கள உறவுகள் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி ஈழப்பிரியன.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மேலே கூறிய எனது கருத்து தவறானதாக இருக்கலாம். யாழ்கள் உறவுகள் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Corporate forex forward contract margin 10% என கூறப்படுகிறது, ஆனால் உறுதியாக தெரியாது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
BIS கூறுவது போல USD Short squeeze ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. உலகம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை ஒரு மிகவும் சிக்கலான பிரச்சினைதான், ஆனால் இந்த காணொளியில் இவர் புரியாமல் தவறான கோணத்தில் BIS இன் தரவினை அணுகியுள்ளார் என தோன்றுகிறது (எனது கருத்து தவறாக இருக்கலாம்). பொதுவாக மேலை நாடுகளில் உள்நாட்டில் ஒரு பொருளை இன்னொரு வியாபார நிறுவனத்திற்கு விற்றபின் (தனியார் அல்ல இரு வர்த்தக அமைப்புகளிடையே) 2 மாத காலத்தின் பின் பணத்தினை செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்புவார்கள், பொதுவாக அதன் பின்னரே வர்த்தக நிறுவனங்கள் பணத்தினை செலுத்தும். அனால் வெளிநாட்டு வர்த்தகம் ஒரு ஆண்டு வரை செல்லும் உதாரணமாக ஜப்பானில் உள்ள சப்போரோ செமிகொண்டக்ரஸ் எனும் DDR ram தயாரிப்பதற்கு தேவையான சிப்பினை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் தனது பொருளுக்கான பணத்தினை அடுத்த ஆண்டிலேயே பெறுகிறது (உற்பத்தி தொடங்கப்பட்டதிலிருந்து - உற்பத்தி செல்வு). அந்த பணத்தினை அமெரிக்க டொலரிலேயே பெற்வார்கள். இந்த ஓர் ஆண்டுகால இடைவெளியில் அமெரிக்க டொலர் ஜப்பானிய ஜென்னிற்கு எதிராக சரியலாம் உதாரணமாக USDJPY 1.20 என வைத்து கொள்வோம் 10 மில்லியன் அமெரிக்க டொலரில் விற்பனை செய்யும் போது அந்த தொகை ஜப்பானிய ஜென்னில் 12 மில்லியன் பெற்மதியில் வருமானம் வரும். ஆனால் அடுத்த ஆண்டு USDJPY 1.00 குறைவடைந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் ஜென் வருமானம் வரும் இதனால் 2 மில்லியன் ஜென் நட்டம் ஏற்படும் இதனை தடுப்பதற்கு பயன்படுத்தப்படுவது FX Swap. future contract அமெரிக்க டொலரினை விற்பார்கள் எதிர்வரும் ஆண்டிற்குள் அதன் மூலம் வரும் 2 மில்லியன் ஜென் வருமானம் Spot currency இழப்பினை ஈடு செய்யும். இந்த நடைமுறை (Future contract short/sell) அடிப்படையில் அவர்கள் கடன் வாங்கி விற்று விட்டு பின்னர் வாங்கி கொடுப்பது ஆகும். இந்த கடன் வாங்கும் என்ற பதத்தினை அரைகுறையாக புரிந்து கொண்டு விட்டு, நிறுவனங்கள் கடன் வாங்குவதாக அர்த்தம் கொண்டு வட்டி விகித அதிகரிப்பால் அந்த கடனை கட்ட முடியாமல் நிறுவனங்கள் திவாலாகும் என தன் விருப்பப்படி கருத்து தெரிவித்துள்ளார் என கருதுகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கத்தினை மேலும் இரண்டு தொகுதிகள் 1782 மற்றும் 1787 பகுதிகளில் விற்றுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் எதிவு கூறப்பட்டது போல 1800 இல் Break out போல போலியாக விலை அதிகரித்து விலை இறங்க ஆரம்பித்த நிலையில் அனைத்து வாங்கபட்டிருந்த தங்கத்தினை விற்றுவிட்டு 1808 விலை அளவில் தங்கத்தினை விற்றுள்ளேன். யாழ் முடங்கியிருந்தமையினால் தங்கம் வர்த்தகம் தொடர்பான மேலதிக விபரம் தெரிவிக்கப்பட முடியவில்லை. இந்த நிலையில் மறு நாளும் யாழ் முடங்கியிருந்தமையால் Youtube இல் காணொளியினை தரவேற்றியிருந்தேன். முன்பு கூறப்பட்ட தரவுகளில் எதிர்பார்க்கபட்டது போல விலை சடுதியாக உயர்த்தப்பட்டு Break out trader களை உள்ளிழுத்து சந்தையின் தவறான பக்கத்திற்கு கொண்டு சென்று அவர்களது Stop loss இனை கவர்ந்து தமக்கு தேவையான திரவநிலையினை (liquidity) பெற்றிருந்தாலும். நான் முன்பு கூறியது போல 1800 இற்கு மேல் அதிகளவான Short sellers இன் stop loss கவரப்பட்டதற்கான அறிகுறி காணப்படவில்லை(Big upside wick or Bearish engulfing candle). தற்போதுள்ள இந்த வர்த்த்கத்தினை 1730 பகுதியிலுள்ள தங்கத்தினை வாங்கியுள்ளவர்களின் stop loss கவர்வதற்காக விலை 1730 இனை நோக்கி சரிந்து மீண்டும் விலை அதிகரித்து பின் விலை இறங்குவதற்கான வாய்ப்புள்ளமையால் 1730 பகுதிகளில் தங்க விற்பனையினை முடித்து விட்டு பின்னர் விலை உயர்ந்த பின்னர் மீண்டு விற்பதற்கு தீர்மானித்துள்ளேன். விலை 1810 மேல் உயர வாய்ப்பில்லை அதனால் stop loss 2 (1812) அல்லது 3 (1813)புள்ளிகள் உயர்வாக stop loss இட்டு தங்கத்தினை விற்க தீர்மானித்துள்ளேன். இப்படித்தான் நிகழும் எனும் கட்டாயம் இல்லை அதற்கான வாய்ப்பு உள்ளது எனவே கூறியுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
உண்மைதான் நான் கூட ஒரு காணொளியினை இணைத்திருந்தேன் (ஆனால் தனிப்பட்ட ரீதியில் அக்கருத்தினை நம்பவில்லை), ஆனால் பெரும்பாலும் கிரிப்டோவின் விலை சரியும் எனும் நிலைப்பாடான கருத்துகளை நீங்கள் ஆரம்ப காலம் முதல் பகிர்ந்திருந்தீர்கள். Bitcoin base support 4800 என்பதில் ஓரளவு நம்பிக்கையுண்டு, பார்ப்போம் விலை தளம்பல் 4800 அளவில் கட்டுபடுகிறதா என.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்க வர்த்தகம் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது, (trailing stop 1675 lower high) விலை சடுதியாக உயர்ந்த போது அனைத்து வர்த்தகமும் மூடப்பட்டு விட்டது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தவறான கருத்துக்கு மன்னிக்கவும் இந்த வாரம் புதன், வியாளன் (PPI, CPI) பண்வீக்க முக்கிய சுட்டிகள் வெளியாகவுள்ள, அத்துடன் வார இறுதியில் சில்லறை வர்த்தக விற்பனை செயற்பாடும், வாடிக்கையாளர் மனநிலையும் வெளியாகவுள்ளது இவை அனைத்தும் மிக முக்கியமான அமெரிக்க நாணய பணவீக்கம் மற்றும் பண பெறுமதியினை தீர்மானிக்கும் காரணிகள். திங்கள் அல்லது செய்வாய்கிழமை எனது தங்க வர்த்தகத்தினை மூட தீர்மானித்துள்ளேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நல்ல கட்டுரை, கட்டுரையின் மூலம் சிறந்த தமிழ் அரசியல்வாதிகள் (தந்தை செல்வா) இருந்துள்ளார்கள் எனபது தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் முயற்சிக்கு நன்றி. தமிழர்கள் சாதி, மதம், இடம் என பலவீனப்பட்டுள்ளார்கள், இட வேறுபாட்டினையுடைய மலையக தமிழரை இலங்கை தமிழர் ஆககுறைந்த பட்சம் தமிழர் என ஏனோ ஏற்றுகொள்ளவில்லை. அதே போல் இஸ்லாமியரையும் வேற்றாக நினைக்கும் நிலை உள்ளது, ஆனால் இஸ்லாமியரும் தம்மை தமிழரிலிருந்து வேறுபடுத்துவது அரசியல் ரீதியாக இலாபம் என நினைக்கிறார்கள், அது மிகப்பெரிய வரலாற்று தவறாக எதிர்காலத்தில் மாறலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த வர்த்தகத்தில் Sell stop பயன்படுத்தப்பட்டுள்ளது, கடைசி Green candle (Up tick) ஆகக்குறைந்த விலையின் கீழ் Sell stop order இல் விற்றல் Stop அண்மைய ஆகக்கூடிய வில்யின் மேல் இடப்பட்டுள்ளது. திட்டமிடலில் சிறிய மாற்றம் மட்டுமே உள்ளது. தங்கதில் எனது கவனம் இருந்ததால் இந்த வர்த்தகம் தவற விடப்பட்டுவிட்டது. பவுண்ஸ் வர்த்தக திட்டமிடலில் கூறப்பட்டது போல 1.1500 விலை திரும்பியுள்ளது. தங்கத்தில் குறிப்பிடத்தக்களவில் திறந்த வர்த்தகம் வார இறுதிக்கு மேலாக தொடர்ச்சியாக பேணுகிறேன் ( 5 வர்த்தகங்கள்), முடிந்தளவிற்கு இலாபத்தினை தொடர விரும்புகிறேன். அமெரிக்க வேலையின்மை விகிதம் அதிகரித்த வட்டி விகிதத்தின் உபயத்தில் குறைவாக வெள்ளிக்கிழமை வெளியான போது தங்கம் உட்பட அனைத்து நாணயங்களும் டொலரிற்கெதிராக எதிர்பார்த்தவாறே சரிவடைய தொடங்கியது. வரும் வாரம் தங்கத்தினை பொறுத்தவரை, முக்கிய செய்திகள் அமெரிக்க நாணயம் தொடர்பில் வெளியாகவில்லை என்பதால் தங்க விலை சரிவு தொடரலாம் என கருதுகிறேன், எதிர்பார்ப்பு விலை முன்பு கூறப்பட்டது போல 1566 வரை செல்லுமா என்பது தெரியவில்லை, ஆனால் விலையில் எந்த சடுதியான மாற்றமும் நிகழாவிட்டால் தொடர்ந்து தங்க வர்த்தகத்தினை தொடர எண்ணம் உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வீட்டு உற்பத்திக்கான மூலப்பொருள்கள் பெரும்பாலும் இங்கு இறக்குமதி செய்யப்படுவதாக கூறுகிறார்கள், மரங்கள் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறுகிறார்கள், அந்த துறையில் இல்லாததால் அதனைப்பற்றி தெரியவில்லை இந்த மூலப்பொருள்கள் 2019 இலிருந்து பெருமளவில் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள் வீடுகள் கட்டுபவர்கள். உலக பொருள்கள் போக்குவரத்து 35% தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதனால் புதிய வீடுகளின் வரவு குறையவும் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதுதவிர குடிவரவு குடியகல்வு கூட வீட்டு விலையினை தீர்மானிக்கின்றன. முக்கியமாக வட்டி விகித அதிகரிப்பு வீட்டு விலையினை பாதிக்கின்றன, ஆனால் அதற்கேற்ப வரிவிதிப்பு மற்றும் பாதீடுகளில் கவனம் செலுத்தினால் அந்த பிரச்சினையினை இலகுவாக கையாளலாம். உதாரணமாக வரிவிதிப்பின் நோகம் வருமான மீழ் வினியோகம் மூலம், சமூகத்தில் வருமான பங்கீடு சமன் அற்ற நிலையில் அரசு வரி மூலம் பணத்தினை சேகரித்து பாதீட்டில் வருமானம் குறைந்தவர்களுக்கு மீள் வருமானங்களை வினியோகித்தல் ஆகும். அதனால் இடது சாரி அர்சுகளின் பாதீடு பெரிதாகவும் இறுக்கமான வரிவிதிப்புகொள்கையுடையதாகவும் இருக்கும். ஆனால் வலது சாரி கட்சிகளின் வரிவிதிப்பு கொள்கை வரிக்குறைப்பு சிறிய பாதீட்டு கொள்கை என இருக்கும். அவுஸ்ரேலியாவில் கடந்த தவணை ஆட்சி செய்த வலதுசாரி அரசு 2018 வரிக்குறைப்பாக 250 பில்லியன் செயற்படுத்தியிருந்த்து அதில் அரைப்பகுதி 180000 மேல் வருமானம் பெறுபவர்களையே சென்றடைந்தது, இங்கு ஆட்சியினை தீர்மானிப்பதில் இந்த வகையினர் முக்கியமாக இருப்பதால் வலதுசாரி அரசு அவ்வாறு செயற்படுகிறது, இங்கு மட்டுமல்ல உலகெங்கும் இதே நிலைதான். தற்போதுள்ள பொருளாதாரநெருக்கடியில் இந்த வகை கொள்கையினை அரசுகள் தூக்கி எறிய வேண்டும், பிரித்தானியாவில் செய்தது போல, ஆனால் அவுஸ்ரேலியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள இடதுசாரி அரசு அதனை செய்ய தயங்குகிறது, காரணம் அரசே தூக்கியெறியப்படலாம். அரசு அதனை செய்யாவிட்டால் ஒரு பொருளாதார சரிவுகூட ஏற்படலாம், ஒவ்வொரு பொருளாதார சரிவின் போதும் அமெரிக்காவில் வருமான இடைவெளி அதிகரிப்பினாலேயே ஏற்பட்டுள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
AUDJPY stopped
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் Stop loss இனை எட்டிவிட்டது, இரண்டாவது வர்த்தகமாக் மீண்டும் 1712 விற்றுள்ளேன் ஆனால் இம்முறை 1730 இல் Stop loss இட்டுள்ளேன். AUDJPY 93.725 இன்னுமொரு தொகுதி வாங்கியுள்ளேன், தங்க வர்த்தகத்தினை Hedge செய்வதற்காக.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் 1704 விற்றுள்ளேன் Stop 1712 Profit target 1566 AUDJPY Long 93.500 Stop 93.300 TP 96.000
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ஈழப்பிரியன் நீங்கள் பவுண்ஸ் வாங்கியுள்ளீர்க்ளா? என்ன விலையில் வாங்கியுள்ளீர்கள்? Stop என்ன விலையில் இட்டுள்ளீர்கள்? உங்கள் எதிர்பார்ப்பு விலை என்ன்(Take profit)? நீண்ட கால முதலீட்டு அடிப்படையிலா வாங்கியுள்ளீர்கள்? உங்களது Risk capital for this trade எவ்வளவு விகிதம்? இவை சுய விபரங்கள், பகிர விரும்பாவிட்டால் குறிப்பிட வேண்டாம் புரிந்து கொள்வேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பவுண்ஸ், யூரோ, தங்கம் என அனைத்தும் அமெரிக்க நாணயத்திற்கெதிராக வீழ்கின்றன, இவை மிக தெளிவாக விலை இறங்கி செல்கிறது, Down trend வாங்குவது குறைந்த இலாப வாய்ப்பு ஆனால் குறுங்கால அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம். ஏற்கனவே யூரோ வர்த்தகத்தில் உள்ளேன், அத்துடன் தங்கம் வாஅங்க உள்ளேன்(Co relation trades) ஆபத்து அதிகம் என்பதால் தவிர்க்கிறேன். பவுண்சை விற்பதற்கு 4 மணித்தியால வரைபடத்தினடிப்ப்டையில் 1.1220 பகுதியில் விற்கலாம் Stop 1.1390 அடுத்த முக்கிய வலயம் 1.1500 Stop 1.1750, அடுத்த முக்கிய வலயம் 1.1640 Stop 1.1750 இது வியாபார ஆலோசனை அல்ல, இந்த முறையில் வர்த்தகம் செய்வது எளிதான உத்தி ஆகும், இந்த காணொளியில் இவ்வகையான உத்தியினை மட்டும் பயன்படுத்தி 5 மாதகாலப்பகுதியில் கிட்டத்தட்ட முதலினை 6 மாதத்திற்கு குறைவான காலப்பகுதியில் இரட்டிப்பாக்க முடிந்தது, காணொளியில் எனது வர்த்தக அறிக்கையில் உள்ள வரை படத்தினை இணத்துள்ளேன். இந்த வர்த்தகத்தில் 0.4 % - 1.0% (மொத்த கணக்கில்) மட்டுமே பயன் படுத்தப்பட்டது (Risk capital). 50 விகித வெற்றி வாய்ப்புள்ள உத்தி, R &R 1.85.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
EURUSD long வர்த்தகத்தினை இலக்கினை அடைவதற்கு முன்பாகவே மூடிவிட்டேன்,EURUSD தற்போது விற்றுள்ளேன் , முன்பு திட்டமிட்ட பகுதிக்கு முன்பாகவே விற்றுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Test vs Re test இரண்டு வலயங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
EURUSD தற்காலிக வர்த்தகத்தில் Stop இனை வாங்கிய விலைக்கு உயர்த்தியுள்ளேன் எதிர்பாராவிதமாக விலை இறங்கினால் எந்தவித இழப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
EURUSD Counter trend trade இனை வாங்குவதற்கு pending order இட்டுள்ளேன் இதன் வெற்றி வாய்பு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வர்த்தகம் முன்பு திட்டமிட்ட வர்த்தகம் அல்ல அதற்கு காத்திருக்கும் நேரத்திற்கான தற்காலிக வர்த்தகம், 1: 3.5 R&R.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மன்னிக்கவும் கணக்கினை முற்றாக இழத்தல் அல்ல மொத்த கணக்கில் 10% இழப்பதற்கான (Draw down) வாய்ப்பு (Probability).