Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. நன்றி கோசான், பிரபா பொதுவாக வங்கிகள் தமது வீட்டுக்கடன் மூலம் ஏற்படும் இழப்பை முன்னரகாவே கணித்து அதற்கேற்ப செயற்படுவார்கள்தான் EL (Expected loss)=PD (probability of default) X LGD (loss given default) X EAD (exposure at default) ஆனால் எதிர்பாராமல் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை கையாளக்கூடிய நிலையில் நிதி நிறுவனங்கள் உள்ளனவா? பணச்சந்தையில் திரவநிலையில் ஏற்பட்ட தேக்கமும் ( வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் மூலம் பெறப்பட்ட பண இழப்பு) சங்கிலித்தொடராக பொருளாதாரத்தினை சரித்தது. அவுஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டு விலைகள் சீராகும்போது (market correction) அது பணச்சந்தையில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்? இப்போதிருக்கும் வீட்டின் விலையில் கடன் கட்டணம் அதிகர்த்தமையால் மோசமான கடன் கட்டணம் செலுத்துபவர்கள் மற்றும் கோவிட் தாக்கம், அரசின் அதிகரித்த சமூக செலவுகள் பணச்சந்தையில் மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. அது தவிரவும் அவுஸ்திரேலிய அரசு உருவாக்கும் பூகோள அரசியல் சர்ச்சைகளும் பொருளாதாரத்தில் அழுத்தங்களை உருவாக்குகிறது.
  2. அவுஸ்திரேலியாவில் சாதாரண சூழ்நிலையில் 10 வருடத்தில் உங்களது வீட்டு முதலீட்டின் பெறுமதி இரு மடங்காகும் என கூறுகிறார்கள் (நகர்புற முதலீட்டில்), இது ASX 200 index முதலீட்டிற்கு ஒப்பானதாகும் (8 வருடத்தில் இரட்டிப்பாகும் எஙிறார்கள்) இந்த இரண்டு முதலீடுகளும் கடந்த ஆண்டு ஆரம்பபகுதியில் 26-28 விகிதம் சரிவை கண்டு பின்னர் வரலாறு காணாத உயர்வை எட்டியது. ஆனால் ஒப்பீட்டளவில் வீடுகளில் முதலிடுவது பாதுகாப்பானது, இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே,நடை முறை கோவிட் தாக்கத்தினால் 10 இல் 1 தமது வீட்டுக்கடனை கட்டமுடியாமல் போகலாம் என கூறுகிறார்கள், ஆனாலும் அவுஸ்திரேலியாவில் 50% வீட்டுக்கடன், வீட்டு உரிமையாளர் வசிக்கும் வீடுகாளாக உள்ளது அத்துடன் நீங்கள் கூறியது போல மிக குறைந்த வட்டி விகிதமும் குறைந்த வேலையின்மை விகிதம் உள்ளமையால் அதிகம் வீட்டு விலை சரிவு ஏற்படாது ( எனது தனிப்பட்ட கருத்தாகும்) ஆனால் ஏற்கனவே வீட்டு விலை அதிகரிப்பு சராசரி நுகர்வோர் விலையை மீறிவிட்டது(affordability), அத்துடன் குடி நுழைவு நிறுத்தப்பட்டுள்ளது, வேலை இன்மை விகிதம் 20% உயர்ந்தால் வீட்டு விலை சரிவு ஏற்படலாம் என சொல்கிறார்கள். 2008 இல் அமெரிக்காவில் வீட்டு விலைகள் சடுதியாக உயர்ந்து பின்னர் விலை உயர்வு மந்த நிலையுற்று பின்னரே வீட்டு விலை சரிவு ஏற்பட்டதாக கூறுகிறார்கள், அதற்கு காரணம் மோசமான வங்கிக்கடன் ஒரு காரணமாகும், அவுஸ்திரேலியாவில் மோசமான வங்கி கடன் இருப்பதாக உணரவில்லை. ஆனால் தற்சமயம் வீட்டு விலைகளை பார்ர்கும் போது ஆபத்தான முதலீடாக இருக்குமா? உங்களது அபிப்பிராயம் என்ன? இந்த கருத்து முன்னர் பதிவு செய்த ஒன்று பின்னர் அழித்து விட்டேன், எனது அபிப்பிராயம் தவறாக இருக்கலாம் என்பதால்.
  3. The Three Skills of Top Trading: Behavioral Systems Building, Pattern Recognition, and Mental State Management master the markets இரண்டு புத்தகங்களும் இணையத்தில் தரவிறக்கலாம்.
  4. https://www.amazon.com/Buy-Side-Street-Traders-Spectacular/dp/0770437176 இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாகவும் தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேண், இந்த புத்தகத்தில் முறையற்ற பங்கு சந்தை வர்த்தக செயற்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது, இந்த புத்தகத்தில் ராஜ் ராஜரத்தினத்தை பற்றியும் கூறப்பட்டுள்ளது.
  5. இலாபத்தை மட்டுமே எதிர்பார்த்து முதலீடு செய்யும்போது ஆரம்பத்தில் அதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே கவனம் இருக்கும், எந்த பாதுகாப்பு நடவடிக்கையின்றி முழுப்பணத்தையும் முதலீடு செய்து விட்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போது சந்தை எமெக்கெதிராக மாறும் போது தொடர்ச்சியாக பல தவறுகளை செய்வோம் கடைசியாக முழுப்பனத்தையும் இழப்போம்.
  6. பங்கு வர்த்தகம் சவால்கள் நிறைந்த ஒன்றுதான், முன்பு குறிப்பிட்டது போல யூ டுயூப் விடியோ மற்றும் புத்தகங்களில் வாசித்து விட்டு எப்படி மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் பங்கு வர்த்தகமும். ஒருவர் பங்கு வர்த்தகத்திலோ அல்லது நவீன தொழில் முறையில் வெற்றி பெறுவதற்கு எமது உள்ளுணர்வு தடையாகவிருக்கிறது என கூறுகிறார்கள். கற்கால மனிதனின் சுய பாதுகாப்பு பொறிமுறை அதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகிறார்கள். fxcm என்ற நிறுவனம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது, அதில் 90% அவர்களது வாடிக்கையாளர்கள், தமது பணத்தினை இழப்பதாக வெளியிட்டிருந்தது. அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன். அதன் பின்னர் இடம்பெற்றது இன்னும் வேடிக்கையானது, அந்த நிறுவனம் நாணயச்சந்த்தையில் CFD முறையில் வர்த்தகத்திலீடுபட்டது 90% எப்படியோ பணத்தை இழக்கப்போகிறார்கள்தானே அதனை நேரடியாக தமது வங்கியில் போட்டு விட்டார்கள் (Hedge செய்யவில்லை). 2018 தை அல்லது மாசி ஆக இருக்கலாம் ஒரு பாகிஸ்தானிய நாணய வர்த்தகரால் போலியான விற்றல் வாங்கல்களை கணனியில் உருவாக்கியதன் மூலம் ஒரு சடுதியான சரிவை குறுகிய நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது (flash crash) இதனால் பல பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கட்டுபடுத்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள் இதனால் அவரை சாதாரண நாணய வர்த்தகர்கள் ரொபின் கூட் வர்த்தகர் என கூறுகிறார்கள், இந்த நிகழ்வின் போது fxcm நிறுவனம் ஏறத்தாழ வங்குறோத்து நிலையை எட்டியது.
  7. மாற்றுக்கருத்தாளர்களுக்குள் சில வெளியே தெரியாத இரகசியங்கள் இருக்கலாம் அதை மறைக்க சிலர் மாற்றுக்கருத்து முகமூடி போடுவதுண்டு,இந்த கைது அப்படியிருக்கக்கூடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.