-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
யாழ் கள உறவுகள் யாவருக்கும் நலமும் செல்வ வளமும் நோய் நொடியற்ற வாழ்வும் அமைய என் பிரார்த்தனைகள் .
-
சிரிக்கலாம் வாங்க
இறங்க வேண்டிய இடம் .ஏரங்குடி ஏறங்கடி ஏறங்கடி ஏறங்கடி
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
கடன் பட்டு வெளி நாடு சென்ற பின் தான் "அக்கரைகள் பச்சை இல்லை என புரிகிறது" பையனும் இல்லை.கடனை உழைத்து கொடுக்க வழியும் இல்லை. ...தீர வர ஆராய்ந்து யாராவது உறவுகளின் உதவி யோடு இன்னும் கொஞ்சக் காலம் கடத்தி இருக்கலாம். முன்பு ஒரு காலத்தில் உயிர் காத்திட சென்றார்கள் .தற்போது உழைக்கவேணும் வெளி நாட்டில் வாழ்கிறேன் என்று என்று பந்தா காடடனும் என்று உயிரை பயணம் வைத்து செல்கிறார்கள்.
-
மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்
குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இந்த வயசில "லவ்" பெயிலியர் இல்லை லிவர் பெயிலியராக இருக்கும். கொஞ்ச நஞ்ச குடியா குடிச்சாங்கள். 😃
-
வணக்கம்உறவுகளே
வணக்கம் ...பெயர் கேள்விப்படட ஞாபகம் இருக்கு . வெண்ணிலா ஜமுனா காலத்தில் ...கலகலப்பாக கலந்து கொண்டவர் என நினைக்கிறேன் .
-
கார்கால மழையில் நனைகின்ற மலரே.
உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
-
-
இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கு மா? படித்ததும் பகிர்ந்ததும்
இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!! பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....! ஆஸ்திரேலியா- சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..! மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..! சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!! "ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..! " சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது? பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா.. கோபாலன் மௌனமானான்!! USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..! சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!! காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.! கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்.. "Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..! அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!! " why are you looking sad dad? Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..! அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!! ன்னையில் காலை 10.30..! பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..! வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..! தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..! அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....! சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!... நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..! இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது. காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..! BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது... மணி 4.30 சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..! "நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள். விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது.. சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார். உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார். பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார். வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி "சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார். திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..! ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்.. கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்... இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...! சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..” படித்ததும் பகிர்ந்ததும்
-
சிரிக்கலாம் வாங்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
Soy meat is made by processing defatted soy flour through a process called extrusion to create a high-protein, fibrous meat-like texture.- உணவு செய்முறையை ரசிப்போம் !
சோயா மீட் எதிலிருந்து தயாரிக்க படுகிறது ?- இரசித்த.... புகைப்படங்கள்.
இல்லை அண்ணா இலக்கம் மட்டுமே தெரிகிறது .- இரசித்த.... புகைப்படங்கள்.
எனக்கு இந்த படம் பார்க்க முடியவில்லை ஏன் ? இலக்கம் மட்டும் தெரிகிறது .- திறமை எங்கிருந்தாலும் பாராடட படவேண்டும் .
- ரசிக்கலாம் வாங்க
மாற்றங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.