Everything posted by வீரப் பையன்26
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையின் அராஜகம் இது. படத்தில் பாருங்கள் . http://www.facebook.com/tamilnaduhungerstrike
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
உன்னாவிரதம் இருக்கும் மாணவ மாணவிகளின் புகை படங்களை பார்க்கையில் மனம் கனக்குது....
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தொடர்ந்து 6 நாட்களாக தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்த வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களில் முகமது ஜெப்ரி என்ற மாணவர் இப்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். மருத்துவமனையிலும் அவர் தனது உண்ணாநிலையை தொடர்ந்து வருகிறார். சமூக ஆர்வலர்களும்,தமிழ் உணர்வாளர்களும் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் அவர் தனது நிலையில் உறுதியாக உள்ளார். http://www.facebook.com/tamilnaduhungerstrike
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்களிடம் இருக்கும் ஒற்றுமை "இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!" fb- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நன்றி சுண்டு....இதை செய்து ஆக்கனும்...இளங்கவி நெடுங்ஸ் விறதர் போன்றவர்கள் தான் பாட்டு வரி எழுத...தமிழ் சூரியன் அண்ணா இசை அமைத்து பாடுவார் என்று எதிர் பாப்போம்- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
உறவே மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்ளி என்னவோ நான் அளித்த பதில் வேர...சரி அடுத்த முறை போடுறன்.... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி துளசி அக்கா- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
உறவே எல்லா யாழ் உறவுகளுக்கும் முக புத்தகம் இருக்கும் என்று தெரிய வில்லை...முக புத்தகம் இல்லாத ஆக்கல்...யாழில் வந்து பார்க்க சுகமாய் இருக்கும் எல்லோ..நான் அந்த லிங்சில like பண்ணிட்டன் மூன்று நாளுக்கு முதல் நண்பர்களுக்கு அறிய குடுத்து இருந்தேன் நன்றி இந்த திரியில் ஆரம்பத்தில் இருந்து கருத்து எழுதின ஆக்களின் கருத்தை வாசிச்ச தெரியும்....!- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தோழர்களே !!! அடுத்த தலைமுறை வந்துவிட்டது நமோடு போராட... வெற்றியை நோக்கி பயணிக்கிறோம் என்று நம்புவோம்... ஓசூரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துக்கு மாணவர்கள் ஆதரவு பெருகி கொண்டிருக்கும் இந்த கட்டத்தில்... நமது "தன்மானம் கலைகளத்தின்" மாணவனான கிட்டு என்கிற தமிழ்மாறன், 7 வகுப்பு மாணவன் வந்து உண்ணாநிலை போராட்டத்தில் அமர்ந்து உள்ளன்... தொடர்ந்து உன்னநிலையில் இருபதாக கூரிக்கொண்டிருக்கிறான் நாங்கள் அவனை அவன் நலம் கருதி அவன் உண்ணாநிலையில் இருக்க கூடாது என்று கேட்டுகொண்டோம் அவன் நானும் தமிழன் நான் இருப்பேன் என்று கூறி அமர்ந்திருந்தான்...பின் நங்கள் மிகவும் வேண்டி கேட்டுகொண்டதால் அவன் போரட்ட கூடத்தில் ஆதரவு மட்டும் தெரிவித்து சென்றான்... போராட களத்துக்கு வர பயப்படும் அணைத்து மாணவர்களுக்கும் ஒரு பதிலடி கொடுத்து நம்பிக்கை வரவைதுல்லான்...!!! உதவாது இனி ஒரு தாமதம் உடனே எழு தமிழா !!! இப்படிக்கு, என்றும், தோழமையுடன்.தன்மானம் சக்ரவர்த்தி.மு.ம- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
விற்கு மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் திருப்பிகடும் எத்ரிப்பை திர்ப்பை தெரிவித்த அனுப்பிய பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாளை சென்னை வருகிறார். பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம் பிரகாஷ் சிங்(38), முன்னாள் காவல்துறை அதிகாரியான இவரது முக்கிய குறிக்கோளே லஞ்ச ஒழிப்பு தான். ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடுமையை அறிந்த அவர், ராஜபக்ச வருகையை கண்டித்தார் சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடிக் கொண்டிருந்த தமிழர்களின் மீது இறுதிக் கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமை களை கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக் கோளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராஜ பக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்த கயா. சாம்ராட் அசோகர் தனது ஆயு தத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சையை போதிப்பதற்கு இந்த இடத்திலிருந்து தான் பிரசாரம் தொடங்கினார். இந்த மண்ணில் தான், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த ராஜபக்ச வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது. என்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சோம் பிரகாஷ் MLA சென்னை வருகிறார். மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் கடும் எதிர்ப்பை தெரிவித்த பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சென்னை வருகிறார்.- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ப.சிதம்பரத்துக்கு கறுப்புக் கொடி- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்கள் போராட்டத்தை முடக்க முயல்வதா? மக்கள் புரட்சி வெடிக்கும்! தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்! பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குகாலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரிநிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து பன்னாட்டு போர்க்குற்றவிசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் - தனித் தமிழீழம்அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம்பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி வரும் திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தைநடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்த நிலையில், அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தான் இந்தநடவடிக்கையை மாநில அரசு எடுத்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர்ஜெயலலிதா,‘‘இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம்புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையைஇந்தியா வலியுறுத்த வேண்டும் - இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை வலியுறுத்திதான் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.முதலமைச்சரின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவதற்காக, மாணவர்களுக்குதமிழக அரசு ஆதரவு அளித்திருக்கவேண்டும். மாறாக கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்தால் சிறுவன்முறையோ அல்லது பதற்றமோ ஏற்படாத நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்கநினைப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் இலங்கைப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மீது வைத்திருந்தசிறிதளவு நம்பிக்கையைக் கூட ஈழத்தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும்இழந்துவிட்டனர். இலங்கை பிரச்சனையில், இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும் என்றஉன்னத நோக்கத்திற்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயத்தைஉணர்ந்து, அவர்களின் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்குஆதரவாக மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், கல்லூரிகளை மூடுவதன் மூலம்மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சீறிவரும் சுனாமியை செங்கற்களைகாட்டி தடுக்க நினைப்பதற்கு சமமானதாகும். கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தை முடக்க முடியாது; மாறாக இப்போராட்டம் மக்கள்புரட்சியாக வெடிக்கும் என்று தமிழக அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94347- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ஷே படத்தை எரித்த மாணவிகள் அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேரள மாணவர்களும் போராட்டட்தில் குதிக்க வேண்டும் என சட்ட கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல் இந்நிலையில் சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திபுரம் பகுதியில் தீடீர் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.அப்போது காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.அப்போது காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்..காவல் துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்தார். இலங்கை நிறுவனம் முற்றுகை இந்நிலையில் கோவை சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள 'டம்ரோ' என்ற இலங்கையை சேர்ந்த பர்னிச்சர் நிறுவனத்துக்குள் நுழைந்து அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக பர்னிச்சர் வாங்க வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.இதனையடுத்து போராடத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். களமிறங்கிய பள்ளி மாணவர்களும் கைது இதே போன்று ஓண்டிபுதூர் பகுதியில் திருச்சி சலையில் இலங்கையில் தனி ஈழத்துக்கு பொது வாக்ககெடுப்பு நடத்த கோரி மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். உள்ளிருப்பு போராட்டம் இதே போன்று கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 30க்கும் சட்ட கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதியார் பலகலை கழக மாணவர்கள் 25 பேர் ஐந்தாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். இதே போன்று கோவை சக்தி சாலையில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களும்,இன்போ டெக் பொறியியல் கல்லூரி மாணவர்களும் சத்தியமங்கலம் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கோவையில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இப்போராட்ட செய்தியினை பரப்புவது ,பகிர்வது நமது கடமை! ............................................................................................................................."போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் மிக முக்கிய முன்னெடுப்பாக வரும் 20/03/2013 புதன்கிழமை அன்று தமிழகம் தழுவிய "ஒரு கோடி மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்" நேற்று (15/03/2013) அனைத்துக் கல்லூரி மாணவ பிரதிநிதிகளால் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் தமிழக அரசு காலவரையற்ற முறையில் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் 32 மாவட்டத்திலும் உள்ள தமிழீழ விடுதலைக்காக எழுச்சியுடன் போராடும் அனைத்து மாணவர்களும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் இப்போராட்டத்தினை முன்னெடுக்க உறுதி ஏற்பதுடன், ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மாணவர் போராட்டக்குழுக்கள் தாங்களாகவே நமது முதன்மை கோரிக்கைகளான.... 1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை... 2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு... 3) இலங்கைமீது பொருளாதாரத்தடை... உள்ளிட்ட இக்கோரிக்கைகளை இந்தியாவே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி "ஒரு கோடி மாணவர்கள் நாம் தொடர்முழக்கம்" இடுவோம் உலகத்தை நம் போராட்டத்தின் பக்கம் திருப்புவோம்.. மேலதிக தகவலுக்கு :9791162911 — ஒரு கோடி மாணர்கள் எழுக போராட்டம் (3 photos) "போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" 1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை... 2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு... 3) இலங்கைமீது பொருளாதாரத்தடை... "போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் மிக முக்கிய முன்னெடுப்பாக வரும் 20/03/2013 புதன்கிழமை அன்று தமிழகம் தழுவிய "ஒரு கோடி மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்" நேற்று (15/03/2013) அனைத்துக் கல்லூரி மாணவ பிரதிநிதிகளால் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் தமிழக அரசு காலவரையற்ற முறையில் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் 32 மாவட்டத்திலும் உள்ள தமிழீழ விடுதலைக்காக எழுச்சியுடன் போராடும் அனைத்து மாணவர்களும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் இப்போராட்டத்தினை முன்னெடுக்க உறுதி ஏற்பதுடன், ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மாணவர் போராட்டக்குழுக்கள் தாங்களாகவே நமது முதன்மை கோரிக்கைகளான.... 1)இலங்கை அரசின்மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை... 2) ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு... 3) இலங்கைமீது பொருளாதாரத்தடை... உள்ளிட்ட இக்கோரிக்கைகளை இந்தியாவே ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி "ஒரு கோடி மாணவர்கள் நாம் தொடர்முழக்கம்" இடுவோம் உலகத்தை நம் போராட்டத்தின் பக்கம் திருப்புவோம்.. மேலதிக தகவலுக்கு :9791162911- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இனி அவர்களின் இறையான்மை கீச்சு மாச்சு பூச்சாண்டி விளையாடு எல்லாம் எடுபடாது..மாணவர்கள் தெளிவாய் தான் இருக்கினம் டங்கு...உங்களால் முடிந்தால் ஒரு சில மாணவர்களை தொடர்வு கொண்டு கதையுங்கோ- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
லயோலா பற்றவைத்த லங்கா தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தணலாய் கொதிக்கிறது தமிழகம். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டங்களை மிஞ்சிவிட்டது கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள். கோயம்பேடு பகுதியில் உள்ள செங்கொடி அரங்கத்தில், லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளில் வாபஸ் வாங்கப்பட்டாலும், அவர்கள் ஆரம்பித்துவைத்த தூண்டுதல் தமிழக மாணவர்கள் அனைவரையும் வீறுகொண்டு வீதிக்கு வரவைக்கக் காரணமாகிவிட்டது. இதோ... தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் லைவ் ரிப்போர்ட்! சென்னை: அப்புறப்படுத்த நினைத்த போலீஸ்! சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 11-ம் தேதி தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், இன்னும் நீடிக்கிறது. மற்ற கல்லூரி மாணவர்களின் போராட்டத்தைவிட சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் அதிக ஆபத்து மிகுந்தது என்று காவல் துறை கருதியதோ என்னவோ... 'நீதிமன்ற வளாகத்தின் உள்ளே வெடிகுண்டு இருக்கிறது. அதனால், சோதனை நடத்த வேண்டும்’ என்று, நீதிமன்ற வளாகத்தைவிட்டு அவர்களை வெளியேற்றினர். அவர்களை வெளியேற்ற மட்டும்தான் காவல் துறையால் முடிந்தது. ஆனால், போராட்டம் தொடர்கிறது. சென்னை சட்டப் பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில், ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகிறார். சென்னைப் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி தங்களின் ஆதரவைப் பதிவுசெய்தனர். உண்ணாவிரத்தை நிறுத்தினாலும் லயோலா கல்லூரி மாணவர்கள், கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளனர். மாநிலக் கல்லூரி, மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரி என்று சென்னையில் உள்ள பல கல்லூரி மாணவர்களும் உணர்வுப்பூர்வமாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். செங்கல்பட்டு: 'இதயத்துடிப்பு குறைந்தது’ செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரி வாசலில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் பலரும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டும், மாணவர்கள் மசியவில்லை. 13-ம் தேதி... மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் சிலருக்கு உடல்நிலை மோசமானதை அறிந்த ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மருத்துவக் குழு ஒன்றை அழைத்துவந்தார். மாணவர்களை பரிசோதனை செய்த மருத்துவக் குழு, 'மாணவர்களின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை செய்தனர். கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் போலீஸார் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதை அடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மூவரை மட்டும் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள். மற்றவர்கள் தொடர்கின்றனர். கோவை: விமான நிலையத்துக்குள் நுழைந்தனர் கடந்த 11-ம் தேதி முதல் கோவை சட்டக் கல்லூரி மற்றும் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 22 பேர், ம.தி.மு.க. அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர். கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கத் தயாராகி வருகின்றனர். 13-ம் தேதி மதியம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். காவல் துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசியும் கலைந்து செல்லாமல், மூன்று அடுக்குப் பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேறு வழி இல்லாமல் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதே போல், காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி, சேலம் சட்டக் கல்லூரி , தேனி கம்மவார் கல்வியியல் கல்லூரி, கடலூர் அரசுக் கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப், கிருஷ்ணசாமி கல்லூரி, புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றிலும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது. தமிழக மாணவர்களின் போராட்டங்களாவது மத்திய அரசை உலுக்குமா? - ஜூ.வி. டீம் மாணவர் போராட்டக்குழு அமைப்பு இலங்கைக்கு எதிரான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், 'தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 14-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர், ''ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை. வல்லாதிக்க நாடான அமெரிக்கா நினைத்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரத்தில் அதைத் தட்டிக் கேட்டு தடுத்திருக்கலாம். அப்போது சில லாபங்களுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்த அமெரிக்காவுக்கு, இப்போது அந்தக் கேள்வி கேட்கும் உரிமையே கிடையாது. எங்கள் போராட்டம் விடாது தொடரும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வரும் 18-ம் தேதி ஒரே நேரத்தில் ராஜபக்ஷே, மன்மோகன்சிங் உருவ பொம்மைகளை எரித்துப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்'’ என்று கொந்தளித்தனர். வேலூர்: 'டி.சியைக் கொடுத்திடுவோம்!’ வேலூர் ஊரீசு கல்லூரியில் கடந்த 11-ம் தேதி காலை 10 மணிக்கே 50 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் கலைந்து செல்லவில்லை. வேலூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்விதான். 'போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் டி.சி. தரப்படும்’ என்று மிரட்டியும் அவர்கள் மசியவில்லை. ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள், 3 மணி அளவில் கலைந்தனர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி மாணவர்கள் 12-ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி மாணவர்களும் அன்றைய தினம் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 14-ம் தேதியில் இருந்து வேலூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். திருச்சி: தாக்கப்பட்ட போலீஸ் வாகனம்! திருச்சியில் கடந்த 12-ம் தேதி முதல் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய உண்ணாவிரதத்தில், நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது. 13-ம் தேதி புரட்சிகர மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே ராஜபக்ஷே, மன்மோகன் சிங் ஆகியோரது கொடும்பாவியை எரித்தனர். அப்போது காவல் துறையினர் அவர்களில் எட்டு பேரை கைது செய்தனர். அதனைக் கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, எட்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த மாணவர் ஒருவர் போலீஸ் வாகனத்தை ஓங்கி அடித்தார். இதனால் கோபம் அடைந்த காவலர் ஒருவர் அந்த மாணவரை அடிக்க... மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், திருச்சியில் இருந்து செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சட்டக் கல்லூரி முதல்வர், ம.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் சீனியர் வழக்கறிஞர்கள், 'பொதுமக்களுக்கு இடையூறாக மாற்றிவிடாதீர்கள்’ என்று மாணவர்களிடம் எடுத்துச் சொன்ன பிறகே, அவர்கள் அமைதியானார்கள். இந்தப் போராட்டத்தால் மூன்று மணி நேரத்துக்கும் மேல் திருச்சி ஸ்தம்பித்தது. மதுரை: பூட்டப்பட்ட தபால் நிலையம்! மதுரையில் பெரும்பாலும் அனைத்து கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 11-ம் தேதி ஸ்டேட் பேங்க் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் தபால் நிலையத்தைப் பூட்டினர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட... காவல் துறையினர் 17 மாணவர்களை கைதுசெய்தது. 13-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் மூவர் கல்லூரி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்! நெல்லையில் கடந்த 11-ம் தேதியில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பல மாணவர்களின் பெற்றோர்கள் வந்து சமாதானப்படுத்தியதில் அவர்கள் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கடை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இருந்தும் கல்லூரி நிர்வாகமும் போலீஸ் தரப்பும் தொடர்ந்து மாணவர்களை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக ம.தி.தா. இந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றாலும், உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் பல்வேறு மாணவர்களின் உடல்நிலை மோசமான நிலையை எட்டி உள்ளது. காவல் துறையினால் மாணவர்கள் எப்போதும் கைது செய்யப்படலாம். விகடன்- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
எனக்கு இரக்கம் வேண்டாம் ஈழம் வேண்டும் !!!! மாணவர்களே ஒன்று திரளுவோம்... தமிழ் ஈழத்தை பெறுவோம்... தெரிய படுத்தியமைக்கி நன்றிகள் பல- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அன்பர்களே..நேற்று(15.3.2013) தமிழகமெங்கும் நடந்தேறிய மாணவர்களின் போராட்ட எரிமலையில் இருந்து சிதறிய சில நெருப்பு ************************************************************************************************ துளிகள்! *********** மு.வே.யோகேஸ்வரன் *********************************** 15.3.2013 ************** (1) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பது மிகப் பெரிய கல்வி நிறுவனம்.லெட்சக் கணக்கான கல்விமான்களை உருவாக்கிய அற்புத கல்வியின் கோயில் என்றுகூட அதைச் சொல்லலாம்.அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.அதன் ஒரு அங்கமாக நூற்றுக் கணக்கான மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் உண்ணா நோன்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதில் அவ்வப்போது பலர் மயங்கி விழுந்தாலும்கூட கிகிச்சைக்கு பின்னர் அவர்கள் மீண்டும் வந்து போராட்டத்தில் அப்ங்கு பற்றுகின்றார்கள்.நேற்று நடைபெற்ற அவர்களின் உண்ணா நோன்புக்கு ஆதரவாக 100 கு மேற்பட்ட பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களும்,120000 ஊழியர்களைக் கொண்ட பல்கலைக் கழக ஊழியர் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.தொடர்புக்கு;ஆ.குபேரன்;அலைபேசி; 9042223563 (2) 15.3.இல் சென்னை வருமான வரி அலுவலகத்தை முற்றுகை இட்டு நூற்று கணக்கான மாணவர்கள் போராட்டம் நடாத்தினர்.அவர்களில் பலர் கைது செய்யப் பட்டனர் . (3) திருச்சி பாரதிதாசன்பல்கலைக் கழக மாணவர்கள் சுமார் 500 பேருக்குமேல் திருச்சி-புதுவை சாலையில் உண்ணாநோன்பை தொடங்கியுள்ளனர். (4) சென்னை அண்ணாசாலை தபால் நிலையத்தை புரட்சிகர மாணவர்கள் முன்னணி முற்றுகை இட்டனர். (5) திருச்சி வீதிகளில் ராஜபக்சாவின் உருவபொம்மையை எரித்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களோடு மாணவர்களும் பொது மக்களும்,பெண்களும் தள்ளு முள்ளு பட்டனர். (6) புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்களும் ராஜபக்சாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (7) தேனியில் ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ராஜபக்சாவின் உருவ பொம்மையை எரித்தனர். (8) துவாக்குடி அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 40மாணவர்கள் 2 ஆம் நாளாக உண்ணாநோன்பு இருந்தனர். (9) வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (10) நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பெரிய அளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். (11) இலட்சிய தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.அவர்கள் மத்தியில்,திரு டி.ராஜேந்தர் அவர்கள் உணர்வுடன் பேசினார். (12)இதைவிட அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னையின் பல பாகங்களிலும்,வழக்கம்போல் உண்ணா நோன்பை அன்ஷ்டித்தனர். (13 திருச்சி,கோவை,புதுச்சேரி, சேலம் செங்கல்பட்டு,போன்ற இடங்களிலும் சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் உண்ணாநோன்பில் கலந்து கொண்டு போராட்டம் நடாத்தினர். உண்ணாநோன்பையும் அனுஷ்டித்தனர். (14)கோவை,சேலம்,திருச்சி,மதுரை,புதுவை,மற்றும் தென்தமிழ் நாடு எங்கும் ஆயிரக்கணக்கில் நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடனர். இவைகளைவிட நேற்று முன்தினம் நான் குறிப்பிட்டிருந்த சகல கலைக்கல்லூரி மாணவர்கள்,நேற்றும் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களில் மாணவிகளின் பங்கு கணிசமாக இருந்தது.அவைகளை இங்கே நான் தனித்தனியாக குறிப்பிடவில்லை.வெடிக்கட்டும் இன்னும் இன்னும் மாணவர்களின் எழுச்சிப் போராட்டம்..!பரவட்டம் விடுதலை நெருப்பு..உலகம் எங்கும் - இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.