இலங்கை கிரிக்கெட் வீரர்களை அனுமதிக்கக் கூடாது: சென்னை போலீசாரிடம் மாணவர்கள் மனு
தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை அணியை எப்போதும் சேர்க்கக் கூடாது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இருக்கும் இலங்கை வீரர்களை நீக்க வேண்டும். மும்பையில் குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தான் அணியை எப்படி ஐபிஎல் அணியில் இருந்து நீக்கினார்களோ, அதுபோல் இலங்கையையும் ஐபிஎல் அணியில் இருந்து நீக்க வேண்டும். இதுசம்மந்தமாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை அணியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றனர்.
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95288