Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு : புதுக்கோட்டை மாணவர்கள் ஆவேசம் ( படங்கள் ) புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி 3 வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருக்கிற்னர். இவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். மேலும், மாணவர்கள் கொடும்பாவிகளை எரித்து எதிர்ப்புகளை காட்டினார்கள்.
  2. சென்னையில் உள்ள மத்திய வருமானவரி அலுவலகம் மாணவர்களால் முற்றுகை 14 03 2013 மாணவர் போராட்டம் தமிழகமெங்கும் வீறு எழும் இவ்வேளையில் மாணவர்கள் வரி கட்ட மாட்டோம் என்று இந்திய அரசின் வருமான வருமான வரி துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு இந்த முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டது . சாஸ்தா பொறியியல் கல்லூரி, எஸ் ஆர் எம் பல்கலை, வேல்ஸ் டெக், நந்தனம் கலைக் கல்லூரி, லயோலா கல்லூரி போன்ற பல கல்லூரி மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கு பெற்றனர் . சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அலுவலகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக முழக்கமிட்டவாறு நகர்ந்தனர். அப்போது காவல் துறை வழக்கம் போலவே மாணவர்களை தடுத்து நிறுத்தியது .மாணவர்களுக்கும் காவல்துறைக்கு வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களை தொடர்ந்து இந்திய அரசை கண்டித்தவாறு முழக்கமிட்டனர் . பின்பு மாணவர்கள் ௨௦௦ போரையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தது . இது குறித்து மாணவர் அருண் நமக்கு கூறுகையில் , இந்திய அரசு தான் தமிழினப் படுகொலையை இலங்கையோடு சேர்ந்து நடத்தியது . இன்று இலங்கையை காப்பாற்றவும் செய்கிறது . தமிழர்களுக்கு வேறு அரசு இல்லை . இந்தியா தான் தமிழர்களையும் சேர்த்து ஆள்கிறது . இந்த அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதால் எங்களுக்கு இந்திய அரசு வேண்டாம் , இந்திய அரசின் சேவையும் வேண்டாம் . அதனால் இந்திய அரசுக்கு இனி நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் , வரியை கட்ட மாட்டோம் , இந்திய அரசு தனது வருமான வரி அலுவலகத்தை மூடிவிட்டு எங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும் . தமிழருக்கு எதிரான ஒரு அரசு நிர்வாகம் எங்கள் மண்ணில் இருக்க வேண்டாம் . அதனால் தான் மாணவர்கள் நாங்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று கூறினார் . மாணவர்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள் . இனியும் இந்திய அரசு தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பது தெளிவாகிறது . நன்றி தமிழ் இணையங்கள்
  3. தமிழக மாணவச் செல்வங்களே ! இந்தியராக இருந்து இழந்தது போதும் . தமிழராக நிமிர்ந்து இழந்ததை மீட்போம். தமிழினம் காப்போம். தமிழீழம் காண்போம் ! இனியும் நாம் சூதாட்டக் கிரிக்கெட்டுக்கும் , திரைப்படத்திற்கும் அடிமையாகி விடாமல் விழிப்புடன் , பொறுப்புடன் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்போம். நாம் யாருக்கும் அடிமை இல்லை என்பதை உலகிற்கு சொல்வோம்
  4. திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...? 14 03 2013 இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது. இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது... தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள்மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம். அந்த வேளையில், இந்திய - இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார். - மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். - சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். - அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். - ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். - தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லை வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது. அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள். வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது. ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள். இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி. வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும். இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது. - இசைப்பிரியா-
  5. மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும். • அது போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும். ஒருபுறம் போலி அரசியல்வாதிகளால் மாணவர் போராட்டம் காட்டிக்கொடுக்கப்படுகிறது. இன்னொருபுறம் அரசு பொலிசாரை ஏவி அவர்களை நசுக்க முனைகிறது . “புலி என்று கூறி சிறையில் அடைப்போம”. “கல்லூரியை விட்டு நீக்குவோம்” என்றெல்லாம் அரசாலும் அதன் ஏவல் நாய்களான பொலிசாராலும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள். எட்டு மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டம் இன்று தமிழகமெங்கும் தீயாக பரவியுள்ளது. அது மக்கள் போராட்டமாக மாற வேண்டும். எனவே மக்களே மௌனமாக இருக்காதீர்கள். மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவித்து மக்கள் போராட்டமாக மாற்றுங்கள். மத்திய அரசை மிரட்டி தமிழர் நலன் பேண வேண்டிய தி.மு.க சிறு கடைகாரர்களை மிரட்டி பந்த் நடத்துகிறது. மத்தியில் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டு மாநிலத்தில் டெசோ என்று நாடகம் காட்டுகிறது. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறி ஆட்சியைப் பிடித்த அம்மையார் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூட விடாமல் பொலிசாரை ஏவி நசுக்கிறார். எனவே மாணவர் போராட்டம் இந்த போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும். போராடும் மாணவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துகள்.
  6. ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் திருச்சி தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் களமிறங்கியுள்ளனர். இதோ பின்வரும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் வெடித்துவிட்டன.அவையாவன.. (1)மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் (2)காரைக்குடி அழகப்பா கல்லூரி.. (3) காரைக்குடி ஆனந்தா கல்லூரி.. (4)சென்னை லயோலா கல்லூரி 2000 மானவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடக்கி விட்டனர். (5)கும்பகோணக் கல்லூரி ஒன்றில் இருந்து2000 மாணவர்கள் போராட்டத்தை தொடக்கி விட்டனர். (6)திருச்சி தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் காலவரை அற்ற உண்ணா நோன்பை (7)மதுரை..பெரம்பலூர் ஆத்தூர் சாலையில்(எசனை,கடகால்)மாணவர்கள் சாலைமறியலை தொடங்கியுள்ளனர். (8)கும்பகோணம் பூம்புகார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். (9)பாளையங் கோட்டை செயின்ட்.சேவியர் கல்லூரி மாணவர்களும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் அழகல்லோரிகளின் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வரவுள்ளன என்பதுடன் நாளையும் பல மாணவர்களின் போராட்டங்கள் வெடிக்கவுள்ளன.என்பது குறிப்பிடத் தக்கது.
  7. உண்மை தான்..********* கருணாநிதி எங்கை விட்டார் மாணவர போராட ..பள்ளியலை பூட்டி...மாணவ போராட்டத்தை அப்ப அடக்கி போட்டு...இப்ப ஏதோ டெசோ என்ர ஒரு அமைப்பை ஆரம்பிச்சு பூச்சாண்டி விளையாட்டு காட்டுறார்...பாலச்சந்திரனை பாலகிருஷ்ணம் என்று சொல்லி அரசியல் நடாத்தும் அந்த கயவர் கூட்டத்தை பற்றி தெரியும் தானே அவங்கள் தமிழன் மேல் எவளவு அக்கறை உள்ளவங்கள் என்று நியானி: பண்பற்ற சொற்கள் தணிக்கை
  8. இதை சிங்களம் பார்க்கனும்...முள்ளி வாய்க்கால் ஓட எல்லாம் முடிஞ்சு போச்சு என்று சொன்ன சொறி கூட்டமும் இதை பாக்கனும்..மாணவர் போராட்டம் வெல்லட்டும்
  9. தாயகம் சம்மந்தம்மான படைப்புக்கள் எங்கு இருந்து வந்தாலும் அதை விரும்பி பாப்பேன் கேப்பேன்...முள்ளி வாய்க்கால் நினைவாய் ஒரு இசை தட்டை புலத்தில் இருக்கும் எமது உறவுகள் செய்தார்கள்...அந்த இசை தட்டு பாடல்களை நிறைய தரம் கேட்டு இருக்கிறேன்..
  10. இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா...
  11. ...நெடுங்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... <3
  12. அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய நுனாவிலன் அண்ணா தமிழ் சிறி அண்ணா இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
  13. அன்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜவன்னியன் அண்ணா..... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜவன்னியன் அண்ணா.....
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.