Everything posted by zuma
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமானும் அவர்களுடைய தொண்டரடிப்பொடிகளும் இணைபிரபஞ்சத்தில் உலாவுகின்றார்கள், அவர்களை அப்படியே விட்டு விடுவது ஊர் உலகத்துக்கு நன்மை பயக்கும். 🤗
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.😜
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமானின் பாதுகாவலரும், அவருடைய செயலாளரும் சேர்ந்து அழைப்பாணையை கிழித்துள்ளனர். அவையனைத்தும் ஊடகவியாளரால் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அதையறிந்து தான் காவல்துறை வந்தது. காவல்துறை வந்து அவர்களிடம் கொஞ்சி விளையாடுவார்கள் என்று நினைத்துள்ளார்கள். 🤪
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.
-
இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
ஆம், கொழும்புத்துறையை தவற விட்டிட்டேன். சமருக்கு இங்கும் பொழுது போக்குக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சைக்கிள் ஓடுகின்றனன் ( சாரத்தோடு அல்ல ) , அதனால் என்னவே பெரிய பெரிய கஷ்டமாக தெரியவில்லை.
-
இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
கடந்த மாதம் ஊருக்கு சென்ற பொது, பல மீனவர்களை சந்தித்து கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் அநுராவின் அரசாங்கத்தில் பெரும் நம்பிக்கையில் இருக்கின்றார்கள், தாங்கள் அநுராவின் அரசாங்கத்திடம் ஒன்றும் எதிகாக்கவில்லையெனவும், இந்தியன் மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடியை தடுப்பதே தமக்கு செய்யும் பெரும் உதவி என கூறினார்கள், மேலும் கடந்த காலங்களை போல் இல்லாமல் தற்போது இந்தியன் மீனவர்களின் வருகை குறைந்ததிருப்பதாகவும் சொன்னார்கள். ஊரிலே நின்ற பொது அதிகாலையே கடற்கரைக்கு போய் மீன் வாங்குவதை வழமையாக கொண்டு இருந்தேன். பாசையூர், குருநகர், பன்னை பாலம், மண்டைதீவு, காக்கைதீவு (மாலை நேரம்) , நாவாந்துறை என பல இடங்களில் மீன் வாங்கி இருந்தேன். புலம் பெயர் தேசங்களில் என்ன தான் சொகுசு வாகனங்கள் ஓடினாலும், ஊரிலே காற்றோட்டமாக சாரமும் உடுத்துக்கொண்டு சைக்கி்ளில் போய் மீன் வாங்குவது ஒரு சுகமான அனுபவம் தான்.🤪
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
ஹரிணி அமரசூரிய அவர்கள் உண்மையில் சொன்னது எதுவெனில் " முன்பு எமது தலைவர்கள் எமது கடந்த கால பெருமைகளை பற்றி பேசினார்கள் (Previously our leaders talked about the glories of our past)" . வீரகேசரியில் வேலை செய்பவர்களுக்கு ஆங்கில மொழியாக்க வறுமை இருக்கின்றது. இப்பொழுது கூகுள் மொழிபெயர்ப்பி, செயற்கை நுண்ணறிவு கருவிகள் என்பன இலவசமாக கிடைக்கின்றன, அவற்றை பயன்படுத்தலாம் தானே.சிங்கள தலைவர்கள் மட்டும் அல்ல, எமது தமிழ் தலைவர்களும் கால பெருமைகளை பற்றி பீத்திக்கொள்வார்கள்.
-
வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி - ரவிகரன் எம்.பி
பிச்சைக்காரனுக்கு பிச்சை எடுப்பதற்க்கு புண் தேவைதான். அம்மண்ணின் மக்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு வட்டுவாகல் பாலம் எவ்வளவு முக்கியமானது என்று.
-
பாரிசில் இலங்கைத் தமிழர்கள்: பிரான்சின் இதயத்தில் குட்டி யாழ்ப்பாணம்
- ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
நீங்கள் தலைகீழாக செல்லுகிறீர்கள் அப்படி செய்ததற்காக அவர் சார்பாக நின்போம் என தான் அநுர சொல்லியிருந்தார்.- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், யாழ்ப்பாணிகள் தமது குடிப்பரம்பலை வன்னி நோக்கி நகர்த்த வேண்டும். யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் காணி விலை, கொழும்பை விட அதிகமாக உள்ளது. குடிசன அடர்த்தி (/km2) யாழ்ப்பாணம் 629, முல்லைத்தீவு 38, மன்னார் 53, கிளிநொச்சி 94, வவுனியா 92.- ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
சவேந்திர சில்வா ஓய்வு என்பது ஒரு கட்டாய ஓய்வாகும், அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு பாதுகாப்புப் படைகளின் பிரதானி எனற பதவியை தற்போதைய அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது.- காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம்தான்( context) அவற்றை நல்லதாகவோ கெட்டதாகவோ மாற்றுகிறது. வார்த்தைகள் முற்றிலும் குற்றமற்றவைகள் ஆகும்.- காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அது காரண இடு குறி பெயராகும், அப்படிப்பார்த்தால் தீவார் என்பதும் பிரதேசவாதமாகும்.- காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அருகில் உள்ள மக்கள்(குழைக்காட்டார்) பனையோலையை/காவோலையை நிமிர்த்துவத்துக்கு வீதியமைக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளார் போல் உள்ளது.- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை. 2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்) https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.- மஹிந்தவிடம் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற டக்ளஸ் - சுப்பையா பொன்னையா குற்றச்சாட்டு!
அத்தியடி குத்தியனின் ஊழல் பட்டியல் மிக நீளமானது, அவற்றில் சில ( கொலை, ஆட்கடத்தல், காட்டிக்கொடுத்தல், கூட்டிக்கொடுத்தல் என்பன புறம்பாகும்) - யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் மூலம் நான்காயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக சம்பாதித்திருக்கின்றார். - ஸ்ரீதர் திரையரங்கு உட்பட தனியார் சொத்துக்களை அபகரித்து இருக்கின்றார். - அரச சொத்துக்களை முறை தவறி பயன்படுத்தியதன் மூலம் அரச நிதிக்கு இழப்பை ஏற்படுத்திருக்கின்றார் - பிரதேச மற்றும் நகர சபைக்களுக்கு சொந்தமான அரச வாகனங்களை அபகரித்திருக்கின்றார் - அரச பொது நிர்வாகத்தில் அத்துமீறி தலையீடு செய்து அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார் - சிபாரிசுகள் மூலமான முறைகேடான அரச ஊழியர் நியமனங்கள் ஊடக திறைசேரிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார் - பனை அபிவிருத்தி சபை, திக்கம் வடிசாலை, வட கடல் நிறுவனம் உட்பட நிறுவனங்களை சீரழிந்து இருக்கின்றார் - திருமதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் மட்டும் விடுவிக்கப்பட்ட 81 கோடி ரூபா பணத்தை ஒரே தடவையில் கையாடல் செய்து இருக்கின்றார் - பாராளமன்ற உறுப்பினருக்குரிய வரி சலுகை மூலம் இறக்குமதி செய்த Toyata Land Cruiser வாகனத்தை GAPC பெரேரா என்பவருக்கு விற்று காசு சம்பாதித்திருக்கின்றார் இழுவை மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களிடம் கப்பமாக ரூபா 5,000 வசூலித்திருக்கின்றார் - யாழ்ப்பாண ஈ பி டி பி அலுவலகத்திற்கான லட்சக்கணக்கான மின்சார நிலுவையை செலுத்த தவறி ஏமாற்றியிருக்கின்றார் - கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4, ளிலும் தனக்கு சொந்தமாகவிருந்த வீடுகளுக்கான 1 கோடிக்கும் அதிகமான தண்ணீர் கட்டணத்தை செலுத்த தவறியிருக்கின்றார். - வீதி புனரமைப்பு உட்பட அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதன் திறைசேரிக்கு கோடிக்கணக்கான இழப்பை ஏற்படுத்திருக்கின்றார் - யாழ்ப்பாண மற்றும் கொழும்புக்கு இடையில் பசில் ராஜபக்சே சகிதம் நடத்தபட்ட சொகுசு பஸ் சேவையில் முறைகேடுகளில் ஈடுபட்டு அரச நிதிக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார் கோவில்கள் புனரமைப்பு என்கிற பெயரில் முறைகேடான காசோலை மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றார் - முறைகேடான கஸ்தூரியார் வீதி புது கட்டட ஒப்பந்தம், - DD தொலைக்காட்சி நிறுவனத்தையும் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தையும் சட்டவிரோதமாக நடத்தியமை, - மாநகரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிக நியமனங்கள் என பல்வேறு தரப்பட்ட மோசடிகள் ஊடாக யாழ் மாநகர சபைக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார் - கடலட்டை பண்ணைகளை முறைகேடாக வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றார் - பளை உட்பட பல பகுதிகளில் ஈபிடிபி உறுப்பினர்கள் முறைகேடாக அரச காணிகளை அபகரிக்க துணை போயிருக்கின்றார் - டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவர் தம்பி தயானந்தா ஆகியோர் மதுபான அனுமதி பத்திரங்களை முறைகேடாக பெற்று இருக்கின்றார்கள். மூலம்: இனமொன்றின் குரல் முகநூல்- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
அநுராவுக்கு தெரியும் இந்தியாவை தாண்டி இலங்கையில் ஒண்டும் பிடுங்க முடியாது என்று அதுதான் இந்தியாவுக்கு முதல் விஜயம், அடுத்த மாதம் அநுர சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தியா கிள்ளி தான் கொடுக்கும் ஆனால் சீனா அள்ளிக்கொடுக்கும்.- சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
அசோக்க ரன்வல தொடர்ந்து சபாநாயகராக இருக்க தகுதி அற்றவர், அவராக பதவிவிலக வேண்டும் அல்லது விலக்கப்படவேண்டும். இப்படித்தான் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் அவர்களும் கலாநிதி என்று சொன்னவர்கள்.- இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
சிங்களவர்கள் மட்டுமல்ல முஸ்லிங்களும் சேர்த்துதான்.- இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
மருத்துவர் அருச்சுனா தனது விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு உரையாற்றியுள்ளார்( play to the gallery). மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என விழித்து அவர்களை அவமதித்து உள்ளார், இலங்கையில் உள்ள கிட்டதட்ட அனைவருமே இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
எனக்கு தெரிந்த சிங்கள சிற்றறிவுக்கு, யாழ், கிளிநொச்சி மாவட்ட மாதுபான அனுமதி பத்திர விபரங்களை மொழி மாற்றம் செய்துள்ளேன். இந்த விபரங்களை வெளியிடாமல் தமிழ் ஊடகங்கள் கள்ள மௌனம் காப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியலை கீழுள்ள லிங்கில் பார்க்க முடியும், சிங்கள மொழியில் உள்ளது. பல அனுமதிகள் தனியார் பெயரில் இல்லாது நிறுவனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ளது. https://cdn.newsfirst.lk/sinhala-uploads/2024/12/Surapath.pdf- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மாவீரர் நாள் முகநூல் பதிவு சம்பந்தமாக மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றைய இருவரும் சிங்களவர்கள் ஆகும், ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் படங்களைப் போட்டு புலிகளின் மீள் வருகையென பிரச்சாரம் செய்திருக்கின்றார்கள். NPP அரசாங்கம் இரண்டு பக்க அதிதீவிர தேசியவாதிக்குக்கும் செய்தி ஒன்றை சொல்லியுள்ளார்கள். https://www.dailymirror.lk/breaking-news/Three-suspects-arrested-for-promoting-banned-LTTE-activities-via-social-media/108-297125#- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
It seems there’s been a misunderstanding. Xenophobia means fear or dislike of things that seem foreign or unfamiliar, often based on dividing people into "us" and "them." Gandhi, Mandela, and Pirabakaran fought for justice and freedom from oppression or colonialism. They did not act out of fear or hatred of anything foreign, so they were not xenophobic. இனவாதம், இனத்தூய்மைவாதம், மதவாதம், பிரதேசவாதம், ஊர்வாதம், சாதிவாதம் இவை எல்லாம் ஒரே குட்டையில் உறிய மட்டைகள் என்ற சீரிய தெளிவு எனக்கு உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள், நேரம் கிடைத்தால் பதில் அளிக்கின்றேன். இனிய இரவு வணக்கங்கள். - ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
Important Information
By using this site, you agree to our Terms of Use.