Jump to content

zuma

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  839
 • Joined

 • Last visited

Everything posted by zuma

 1. யாழ் கருத்துக்கள பொறுப்பாளராக இருந்து கொண்டு இப்படி பொசுக்கென்று சொல்லி விட்டீர்களே. தேசியத்தையும், தலைவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்று, பல்லாண்டு காலமாக காத்திரமான பங்களிப்பை செய்து வந்த மாற்று கருத்து மாணிக்கங்களை துரத்தி விட்டு அல்லது விலக செய்து விட்டு, இப்படி ஊடக சுகந்திரத்தை பற்றி நீட்டி முழங்குவது பாசாங்குத்தனமாக(Hypocrisy) தெரியவில்லையா? கட்டற்ற ஊடக சுகந்திரத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.
 2. ரஷ்யாவின் உக்கிரேன் மீட்பு போருக்கு விசில் அடிச்சு ஆதரவு வழங்கி போட்டு இப்படி ஜகா வாங்குகின்றிர்களே. ரஷ்யா ஐரோப்பவிக்கான எரிவாயு வழங்களை நிறுத்தி நேட்டோவிக்கும் அதன் குடிமக்களுக்கும் தகுந்த பாடம் புகட்டிட வேண்டும். #தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். ஒவ்வொரு கண்டத்துக்கும் 10 அணுஆயுதங்கள் கானும் மனித குலத்தை அழிப்பதற்கு, மனித இனம் இல்லாத உலகம் சாந்தியும் சமாதானமாகவும் இருக்கும்.
 3. நல்ல விசயம். அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆயிரக்கணக்கான அணுஆயுதங்களை வைத்துக் கொண்டு சும்மா நொட்டி விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள். சில அணுஆயுதங்களை ஏவி வாண வேடிக்கை காட்ட வேண்டும்.
 4. இது என்ன கோதரியாக இருக்குது, யார் சொன்னது சிங்களவர் புத்த சீலர்கள் என்று, அவர்கள் புத்த சீலர்ககளாக இருந்தால் நாம் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. உண்மையை சொன்னால் ஏன் கோவிக்கின்றிர்கள், கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 90 % இடங்களில் டெபொசிட் இழந்துள்ளது.
 5. அரசாங்கம் சின்ன பிள்ளைகள் விளையாடுகின்ற கள்ளன், போலீஸ் விளையாட்டு விளையாடுது. கள்ளனும் அவர்களே, போலீசும் அவர்களே. இந்த விளையாட்டு இம்முறை மக்களிடம் எடுபாடாது என நம்புவோமாக.
 6. உதை தான் அவங்களும் சொல்லுகின்றார்கள், இலங்கையரை இலங்கையர் சொல்லாத ஆட்களை கட்டிவைச்சு கருக்குமட்டையடி வைத்தியம் கொடுத்தால் எல்லாம் சரிவருமாம். தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காக இனவாதத்தை பரப்புகின்றார்களாம், அவர்களை தடை செய்யவேண்டுமாம். எங்கை அய்யா, இணை பிரபஞ்சத்திலா?
 7. உதை தான் சிங்களவனும் சொல்லுகின்றான், நாம் எல்லோரையும் இலங்கையர் என அழைக்க வேண்டும். அப்படி அழைப்பதினால் இனப்பிரச்சனை தீர்ந்து விடுமாம். அநேகமான மேயர் பதவிகளை பெண்கள் அலங்கரிக்கின்றார்கள்.
 8. ஞாபகம் வருகின்றதோ......நான் ஜாம் போத்தல் விளக்கில் தான் O/L உம் , A/L உம் படித்தேன். அதனால் தான் இன்றுவரை மின்சாரத்தை சிக்கனாக பவிக்கின்றேன்.
 9. நான் நினைக்கவில்லை ஸ்டாலினின் தனது சுயசரிதை எழுதி இருப்பார் என்று ,அவருடைய மொழியறிவு யாம் அறிந்ததே, அநேகமாக கனிமொழி எழுதியிருக்க கூடும். மோடிக்கு எதிரான தேசிய சக்திகளை ஒன்றினைக்கும் ஒரு மேடையாக இந்த புத்தக வெளியீடு பாவிக்கப்பட்டுள்ளது.
 10. அமெரிக்காவுக்கு எப்படி ஈராக், ஆப்கானிஸ்தான் அமைந்ததோ, அதே போல் ரஸ்யாவுக்கு இன்னுமொரு ஆப்கானிஸ்தான் ஆக அமைய வாழ்த்துக்கள்.90 களில் ஆப்கானிஸ்தான் போருக்கு பின்னர் தான் சோவியற் யூனியன் உடைந்தது பல இனக்குழுமங்கள் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்தியது, அதேபோல் இம்முறையும் எஞ்யுள்ள இனக்குழுமங்களும் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்த முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
 11. நான் மேலைத்தேய நாடுகளுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, நிச்சயமாக அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிபப்படட தலைவர்களை சனநாயக ரீதியாக நாம் அகற்ற முடியும், அகற்ற வேண்டும் . புட்டின் ஒரு அதிகார வெறிபிடுத்த manic, கடந்த 25 வருடங்களாக ரஷ்யயாவை இரும்பு பிடியுக்குள் வைத்திருக்கின்றார், அவரை ஆதரிப்பவர்கள் மண்டையை பரிசோதிக்கவேண்டும்,சனநாயக நாட்டில் இருந்து டிரம்ப் போற வரையறைகள் அவரை ஆதரிப்பார்கள். https://www.theguardian.com/us-news/2022/feb/27/donald-trump-defends-calling-putin-smart-hints-at-2024-presidential-bid
 12. ஆக்கிரமிப்பு யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி. சில பேர் சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து , அதனை சுகித்து கொண்டு புட்டினின் ரஷ்யயாவை ஆதரிக்கிறார்கள், அவர்களை பொதி செய்து ரஷ்யயாவுக்கு அனுப்பி புட்டினின் வைத்தியம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சுகமடைவார்கள்.
 13. யான் என்ன விசில் அடிச்சான் குஞ்சா?. இயன்ற வரை சொந்த புத்தியில் நடக்கிறவன்.
 14. இனி தமிழ்நாட்டில் ஈழ அரசியல் ஐஞ்சியத்துக்கு எடுபடாது, வேண்டுமென்றால் புலம் பெயர்தேசங்களில் இருந்து குலுக்கல்(வசூலிப்பு) கிடைக்கும்.
 15. ஆடு அறுக்கிறத்துக்கு முன் #### அறுகின்ற கதையாய் இருக்குது. # - சுய தணிக்கை
 16. நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்யப்பட்ட பின் எவ்வாறு காட்சியளிக்கும் எனபதற்கான மாதிரிப்படம் யாழ்பாண மரபுரிமை மையத்தினால் வெளியிடப்பட்டது. மூலம்: முகநூல்
 17. பலகாரணங்கள் உண்டு. 1. சீமானை பல்லக்கில் தூக்க ஒரு கூட்டம் யாழ் களத்தில் திரிகின்றார்கள் , அவர்களை கடுப்பு ஏத்த. 2. ஆமைக்கறி சாப்பிட்டது,ஆமை ஓட்டை படகாக பயன்படுத்தி கடலில் பயணம் செய்தது, ஆஸ்திரேலியாவின் அரிசி கப்பல், தலைவரிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றது, ஏகே 74 துப்பாக்கி என புதுப்புது கதைகளை வடிவமைத்து எமது போராட்டத்தை விற்று வயிறு வளர்ப்பது . 3. நாம் தமிழர்கள் என்று கூறிக்கொண்டே தனது சோம்பிகளிடம் சுயசாதி வெறியை தூண்டி விடுவது. 4. தனது 45 வயதுவரைகடவுள் மறுப்பு பேசிவிட்டு, ஏழு கழுதை வயதில் புத்தி வந்துவிட்டது போல் தற்போது வயிற்றுப் பிழைப்பிற்காக முப்பாட்டன் முருகன் என்று காவடி தூக்கி மதவாத சக்திகளுக்கு துணை போவது. 5.பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து அரசியல் செய்வது . 6. தனது ஓனர்களான பாஜக மற்றும் அதிமுகவை பெரும்பாலும் விமர்சனம் செய்யாமல், கடந்த 9 வருடங்களாக ஆட்சியிலயே இல்லாத திமுக, காங்கிரஸ் கட்சிகளை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்தது. 7. தலைவரை கைது செய்துதமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து தூக்கில் போடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா அவர்களை ஈழத்தாய் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அழைத்தது. 8. தமிழர்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரை வந்தேறி என்று தூற்றி விட்டு, கைபர் கணவாய் வழியாக பஞ்சம் பிழைக்க வந்த பார்ப்பானை பச்சைத் தமிழர் என்று புகழ்வது. 9.ஈழத்து விதவை பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு பணக்கார பெண்ணை பார்த்தவுடன் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு தனது மகள் வயது பெண்ணான கயல்விழியை திருமணம் செய்தது. 10.சாதித் தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் குய்யோ முய்யோவென கத்துவது, சேரித்தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் நவதுவாரங்களை பொத்திக்கொள்வது. என்று இன்னும் பல காரணங்கள் உண்டு.
 18. சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து அதனை சுகித்து கொண்டு, எப்படி நான் சொல்லுவேன் பணத்துக்காக வாக்கு செலுத்துவது சரியென்று. நான் சொல்லவந்தது யாதெனில் இந்திய( தமிழ்நாடு ) அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் யோக்கியவர்கள் அல்ல என்பதே.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.