Everything posted by zuma
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
ஒரு சில புலம்ஸ்சுகள் சமாந்தர உலகில் சஞ்சரித்துக் கொண்டு, குண்டு சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள், அவர்களின் புலம்பல்களை தாயாக மக்கள் செவிகொடுக்காது தமது இருப்பினை தாமே தீர்மானித்துக் கொள்வார்கள். 🤪
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
வரும் தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெற்று , தமது பிள்ளை, குட்டிகளை பாதுகாப்பாக புலத்தில் வைத்துக்கொண்டு, அடிச்ச பியரும், தின்ற சோறும் சமிபாடு அடைய அரசியல் பேசும் புலம் பெயர்ந்தவர்களின் முகத்தில் கரி பூசுவர். 😜
-
அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!
அரச புலனாய்வு சேவைகளின் தலைவராக கடமையாறிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இலங்கையில் நடைபெற்ற பலவேறு குற்றச்செயல்களின் சூத்திரதாரியாக கருதப்படுகின்றார். உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக இலங்கை பாராளமனறத்தில் நடைபெற்ற விவாதங்களின் போது அமைச்சர் மனுஷ நாணயக்கார முதல் அனுர குமார திசாநாயக்க வரை பலரும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களுக்கு மேற்படி குண்டு தாக்குதல்தாரிகளுடன் இருந்த தொடர்பு குறித்த ஆதாரங்களை முன் வைத்து இருக்கின்றார்கள். குண்டுதாரிகளுக்கும் புலனாய்வு சேவையை சேர்ந்த அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற தொடர்பாடல் மற்றும் பயன்படுத்தப்பட்ட Sonic-Sonic என்கிற Code word வரை பல்வேறு தகவல்கள் குறித்த விவாதங்களின் போது வெளியிடப்பட்டு இருக்கின்றன. தென்னிலங்கை செயல்பாட்டாளர்களில் ஒருவரான வண பிதா Cyril Gamini Fernandoஅவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பிண்ணனியில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களுக்கு இருந்த தொடர்பு குறித்த பலவேறு தகவல்களை கடந்த காலங்களில் வெளியிட்டு இருக்கின்றார் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு வரை பிள்ளையான் குழு , ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுக்கள் போன்று சஹ்ரான் குழுவும் இலங்கை அரச புலானய்வு சேவையில் இணைக்கப்பட்டு இருந்தது தொடர்பான தகவல்களை வெளியிட்டு இருக்கின்றார். இது தவிர, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகொட போன்ற பல்வேறு கொலைகளின் பின்னணியிலும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகள் தான் இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் ஆவா குழு முதல் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட கிரீஸ் மனித தாக்குதல் உட்பட பல சம்பவங்களின் பின்னணியிலும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்கள் இருந்ததாக முன்னாள் சுகாதார அமைச்சர் திரு ராஜித சேனாரத்ன அவர்கள் பதிவு செய்து இருந்தார். இறுதி யுத்தத்தின் பொது கைது செய்யப்பட்ட தமிழ் வைத்தியர்களை துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஊடக பத்திரிகையாளர் மாநாட்டில் பொய் சொல்ல தூண்டிய சூத்திரதாரியாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களை சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான அமைப்பு அடையாளம் காட்டி இருக்கின்றது. பிள்ளையான் குழுவில் இருந்து தப்பி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்து இருக்கின்ற அசாத் மௌலானா என்கிற முஸ்லீம் நபரும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்கள் பிள்ளையானை பயன்படுத்தி பலவேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார் என வெளியிட்ட செய்திகளை Daily mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது. கோட்டாபயராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கருதப்படுகின்றார் மேற்படி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களை காட்டாய ஓவுதியத்துக்கு அனுப்பியது, தற்போதைய அரசாங்கம் சரியான பாதையை நோக்கி பயணிக்கின்றது எனக்கொள்ளலாம்.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அரசாங்கம் உத்தியேகபூர்மாக மதுபான உரிமை பட்டியலை அறிவிக்க வில்லை, ஆனால் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டு, திறக்கப்படாத சகல மதுபான உரிமை பத்திரங்களும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வமற்ற செய்திகளின் படி டக்ளஸ், விக்னேஸ்வரன், அங்கயன் என்பவர்கள் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. உண்மையாக பார் லைசென்ஸ் பெற்ற இந்துக்கள் மீது மென்போக்கையும், சுமந்திரன் பார் லைசென்ஸ் பெற்றார் என்ற பொய்யை கோயபல்ஸ் ( goebbels ) போல் திரும்ப திரும்ப செல்லுவது யாழ் மைய்யவாத இந்துவா துவேசமே ஆகும். எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம், இதைத்தான் பினாமி கொடுக்கல் வாங்கல் என்று செல்லுவது.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழ் சிங்கள இனவாதிகளுக்கு இனப்பிரச்சினை என்பது பிச்சைக்காரனின் புண் போன்றது, தாம் செல்லும் கருத்துக்களுக்கு ஓசன்னா சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது பாசிசம் ஆகும். 1989 இல் ரோஹன விஜேவீராவை சுட்டு, குறை உயிராக போறணையில் போட்டு எரித்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய இராணுவ அதிகாரி கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மேடைகளில் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்திருந்தார். கடந்த காலங்களில் வாழ்பவர்களை நிகழ் காலம் நிராகரிக்கும் என்பது வரலாறு.
-
வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்
தேவநாயகம் அவர்கள் நேர்மையான, வினைத்திறன் உள்ள அரச ஊழியர் என பெயர் எடுத்தவர், தொடர்ந்து அப்படியே மக்களுக்கு சேவை ஆற்றவேண்டும். என்ன நெருடல் என்றால், பதவி ஏற்க்கும் போது ஏன் பொண்டாட்டி, பிள்ளை குட்டிகளை கூட்டி வரவேண்டும்?, குடும்ப உறுப்பினர்களை முதன்மை படுத்துவதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும். மற்றையது, கடும் வெக்கையான காலநிலை கொண்ட எமது நாட்டில் ஏன் கோட்டும், சூட்டும் அணிய வேண்டும்? இன்று கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் அநுர பிரதம விருந்தனராக கலந்து கொண்ட போது, சாதாரண டபுள் பாக்கெட் ஷர்ட் அணிந்துள்ளார்.
-
முன்னாள் அமைசசர்களினால் பாவிக்கப்பட்ட பல சொகுசு வாகனங்கள் காலி முகத்திடலில் கைவிடப்பட்டுள்ளன.
- புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் பிள்ளையார் கோவிலுக்கும் சென்று உள்ளார், அன்றிரவு ஆயர் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து ஆசி பெற்று உள்ளார். இவ் காணொலிகள் அனைத்து ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஒரேநாளில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவருடைய உடையலங்காரமும் ஒரே மாதிரிக்காக உள்ளது.- புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
கண்டி பிள்ளையார் கோவிலில் ஜனாதிபதி அநுர வழிபாட்டில் ஈடுபட்டார்.- கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மற்றும் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 வது பிரிவின் விதிகளின்படி ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை 2024 நவம்பர் 21 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியாகவும் அது நிர்ணயிக்கிறது. வர்த்தமானி அறிவித்தல் மேலும் அக்டோபர் 04 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11, 2024 நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் காலத்தை வேட்பு மனுக்களாகக் குறிப்பிடுகிறது, இதன் போது வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் பெறப்படும். https://www.dailymirror.lk/breaking-news/Parliament-dissolved/108-292378#- யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
பொதுவாக ஜேவிபி தமது குடும்ப உறுப்பினர்களை முதன்மை படுத்துவதில்லை. ஜேவிபியில் இருந்து 1998/1999 இல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சின்னம்மாவின் மகனின் மனைவியை மறுமணம் முடித்து இருக்கின்றார், கேணல். சங்கரண்ணா மாதிரி. அவருடைய பெயர் மல்லிகா ரத்னாயக்க, அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.- புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
Visakesha Chandrasekharm Ramalingam Chandrasekar Saroja Savitri Paulraj Krishnan Kalaichchelvi Kitnan Selvaraj Professor Vijay Kumar I. N. Ikram Dr. Rizvi Sali Sheikh Munir Mulaffar https://www.npp.lk/en/about- வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு
தேர்தல் ஆணையத்தில் இருந்த போது, ரணிலின் வேண்டுகோளுக்கு அமைய மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க உறுதுணையாக இருந்தார். அதற்க்கு பரிசாகவே வடமாகாண ஆளுநர் பதவி கிடைக்கப்பெற்றது. இது குறித்து ஜேவிபி/NPP அப்போது அவரை கண்டித்து இருந்தார்கள்.- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
அதிகம் படித்த யாழ்ப்பாண மக்கள் தொலைபேசிக்கும், கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாமல் குத்தியிருக்கின்றார்கள்.- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
அதிகார பரிமாற்றம் என்பது சுமூகமாக நடைபெறும். 1981 ஆண்டு யாழ்ப்பாண அபிவிருத்திச் சபைத் தேர்தலில் ரணில் முன்னின்று மோசடி செய்தார் என்பது உலகறிந்ததே, ஆனால் இம்முறை அப்படி செய்வதற்கு ரணிலுக்கு குறிப்பிட்ட அளவு ஆதரவு அரசாங்க ஊழியரிடமும், பாதுகாப்பு தரப்பிடமும் இல்லை. அண்மைக்காலங்களில் ஜேவிபி/மக்கள் சக்தி பாரியளவு நிழல் அரசொன்றை கட்டி அமைத்துள்ளார்கள்இ குறிப்பாக அரச ஊழியரிடமும், பாதுகாப்பு தரப்பிடமும்.- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
எனது கணிப்பின்படி அநுர முதற்சுற்றிலே அமோக வெற்றி பெறுவார், சஜித் இரண்டாவதாகவும், ரணில் மூன்றாவதாகவும் தான் வருவார். ரணிலுக்கு கிராம புறங்களிலும், அடிமட்ட மக்களிடமும் ஆதரவு அறவே இல்லை. நகர்ப்புற மத்திய தர மக்களும், கணிசமான அளவு சிறுபான்மை மக்களுமே ரணிலுக்கு வாக்கு அளிப்பார்கள்.- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
தற்போதைய தகவலின்படி கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமலின் இருகுழந்தைகள் அவருடைய மாமியாருடன் நாடடைவிட்டு வெளியேறியதாக அறியமுடிகின்றது.- புலிகளோடு சேர்ந்து போராட மறுத்ததாலேயே JVP இல் இருந்து விலகினேன்.
காணொளிக்கு நன்றி, அந்த சிங்கள ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன எழுதிய யாழ்ப்பாணம் எரியூடல் -1981 எனற புத்தகத்தில் யாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரிகளை ஆவணப்படுத்தியுள்ளார், அதனை மனோரஞ்சன் தமிழாக்கம் செய்துள்ளார். குறிப்பாக ரணில் எப்படி முன்னின்று செய்யப்பட்டார் என்று விலாவரியாக கண்கண்ட சாட்சிகளுடன் தந்துள்ளார்.- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.- அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவது தான் எமது எதிர்பார்ப்பு - அநுர குமார
இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில், ஹர்த்தால் என்று அறிவித்தும் கடையை திறந்தவர்களுக்கு இயக்கத்தால் பச்ச மட்ட அடி விழுந்ததை யாம் கண்ணால் கண்டோம். அநுரவின் வெற்றி என்பது, தற்போது அநுர நினைத்தால் கூட நிறுத்த முடியாது.- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சுமந்திரன் பெட்டி வாங்கிவிட்டார், தன்னிச்சையாக முடிவு எடுத்தது விடடார், தேர்தலில் மோசடி செய்து வென்று விட்டார் என்று செல்லும் ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள், உசுப்பேத்தும் தமிழ் ஊடகங்களின் செய்திகள் மற்றும் தமது குறுகிய வட்டத்துக்குள் உள்ள சமூக ஊடக தகவல்களை வைத்துக்கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டு, சமாந்திர உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள், அது அவர்களின் சனநாயக உரிமையாகும்.- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இந்தியன் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே சுமந்திரனும் அவர் சார்ந்த தமிழரசு கட்சியின் சஜித்துக்கு ஆதரவு நிலைப்பாடு ஆகும். ரணிலை விலக்கி அனுரவிக்கு எதிராக சஜித்தை தனிப்பெரும் வேட்பளராக்குவது என்பது தற்பொழுது ராஜதந்திர/அரசியல் வடடாரங்களின் பேசுபொருளாக உள்ளது. அனுராவுக்கு இருப்பது மக்கள் அலை அல்ல அது சுனாமியாகும்.- யார் வெல்வார்?
இலங்கையில் இருந்து வரும் கள ஆய்வுகள், கருத்து கணிப்புகள், உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு அறிக்கைகள் என்பன அனுர தான் வெல்லுவார் என கோடிட்டுக் காட்டுகின்றன, ரணில் படு தோல்வியடைவார் (அடையவேண்டும்), மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுவார். சிங்கள, முஸ்லீம் மக்கள் பெருவாரியாக அனுரவிற்கு வாக்கு அளிப்பார்கள். தமிழ் மக்கள் சஜித் அல்லது ரணிலுக்கு வாக்கு அளிப்பார்கள். எனது கணிப்பின்படி அனுர 52% அல்லது அதற்க்கு மேற்பட்ட சதவீத வாக்குகளை பெறுவார்.- தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் வௌியீடு - புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.