Everything posted by zuma
-
நான் என் வேர்களை பதக்கம் போல அணிகின்றேன்.
பாடகி தீயின் புதிய பாடல், பாடல் முழுவது யாழ்ப்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!
ஒரு சில தமிழ் அதி மேதாவிகள் சிங்களவர்களை பற்றி எப்பொழுதும் குறைத்து தான் மதிப்பிடுவார்கள். வரும் ஐனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட ஒரு வேட்ப்பாளருக்கு, கோத்தாவை விட அதிக வாக்கு அளிக்க அவர்கள் காத்து இருக்கின்றார்கள். 39 வேட்ப்பாளர்களில், 30க்கு மேற்ப்பட்டவர்கள் பினாமி( proxy) வேட்ப்பாளர்களாகும்.
-
தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
நிலாந்தன் அவர்கள் காலத்துக்கு காலம், தனது எஜமான்களுக்கு செம்பு தூங்குவதில் வல்லவர் என்பது யாம் அறிந்ததே. இயக்கத்தோடு இருக்கும் காலத்தில் அவருடைய மூன்று " J " ( Jewish. Japanese, Jaffinese ). கோட்ப்பாடு பிரபலியமானது. தற்போது அவர் இந்தியன் நடுவன் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செம்பு தூக்குகின்றார். கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில், அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப மூலோபாய ரீதியாக, தமிழ் மக்களுக்கு குறைந்த சேதத்தை எற் படுத்தும் சிங்கள வேட்ப்பாளருக்கு அதிகமாக வாக்களித்துள்ளார்கள். அதே நேரத்தில், பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சார்பாக பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள். இம்முறையும் அப்படித்தான் நடைபெறும் என்பதே எனது கணிப்பாகும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, மீண்டும் மக்களின் அபிப்பிராயத்தை உரசி பார்ப்பதில் எந்த தவறுமில்லை, வரலாறு மீண்டும், மீண்டும் தன்னுள் திருப்பும், முதலில் அது துன்பியலாகவும், பின்னர் நகைச்சுவையாகவும்.
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்துக்கு அல்லது NPP க்கு வாக்கு அளிக்கலாம். நான் தாயகத்தில் இருந்தால் NPP க்கே வாக்களிப்பேன் ஏனெனில். 1. மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும் போது இனவாதம் குறைவாகும் ( முன்னைய தலைவர் சோமவன்சவின் விலகல், விமல் வீரவன்சவின் பிரிவுடன் அநேக இனவாத உறுப்பினர்கள் அவருடன் சென்றுவிட்டனர்) 2. மற்றைய கட்சிகள் போல் அல்லாது புத்த மதத்தை முன் நிறுத்தி அரசியல் செய்யவில்லை. ( பன்சலைக்கு செல்லும் போது பிக்குவினால் கட்டப்படும் பிரித் நூலை, பன்சலைவிட்டு வெளியேறும் போது அறுத்து விடுவார்கள் என்ற குற்றச்சாடும் NPP மீது உள்ளது ) 3. ஊழல்/மோசடி அற்ற கட்டுக்கோப்பான கட்சி உறுப்பினர்கள். ( அப்படி யாரும் தவறு செய்தால் உடனடியாக விசாரணை செய்து கட்சியை விட்டு விலக்கி விடுவார்கள் - இயக்கம் மாதிரி ) 4. அண்மை காலத்தில் அவர்களின் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் ( சோஷலிசத்தில் இருந்து சந்தை பொருளாதாரத்துக்கு ) 5. NPP ஆட்சிக்கு வந்தால், அவர்களுடன் இணைத்து தமிழ் தேசிய விரோத அரசியல் செய்யும் டக்ளஸ், பிள்ளையான், அருண், கருணா போன்றவர்களை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற கூடிய சாத்தியம் உள்ளது ( 90 இல் இயக்கம் பிரேமதாசாவுடன் செய்தது போல் ). 6. அரசியலில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல். 7. குடும்பவாத அரசியல் ( nepotism) இன்மை. 8. தனிமனித வாதத்தை இன்றி, கொள்கைகளை முன் வைத்து அரசியல் செய்தல். 9. தமிழ் மக்களை போல் NPP/ஜேவிபி உறுப்பினர்கள் கடுமையான அரச பயங்கரத்தைதை அனுபவித்தவர்கள், எங்களுடைய வலி அவர்களுக்கும் புரிந்திருக்கும் ( நான் பல்கலைகழகத்தில் இருந்து போது நான் உணர்ந்து இருக்கிறேன் ) இவையனைத்து எனது சுய புத்திக்கு எட்டியவை, இவற்றில் தவறுகள் இருக்கலாம்.
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் வரும் ஜனாதிபதி தேர்தலில், மரபு வழி வந்த, காலாவதியான, அறளை பெயர்ந்த தமிழ் அரசியல்வாதிகளின் பிதற்றல்களை புறக்கணித்து, கடந்த காலங்களில் ஏற்ப்பட பட்டறிவுகளில் இருந்து தமது சுய புத்திக்கு ஏற்ற மாதிரி வாக்க்களிக்கவேண்டும். தக்கன பிழைக்கும் என்பது கூர்ப்புக்கு மாத்தரமல்ல அரசியல் இருப்புக்கும் பொருந்தும்.
-
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, இலங்கை இராணுவ புலனாய்வு துறையால் வழிநடத்திப்படும் டிரிபோலி பிளாட்டூன்னாலே (Tripoli Platoon) நடத்தப்பட்டது என்பது தற்பொழுது உலகறிந்த பரமரகசியமாகும். சஹாரன் குழுவையும், புலனாய்வு துறையையும் ஒருங்கிணைப்பதில் பிள்ளையானும், அவரது சகாக்களும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்கள். எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஈடுபடடவர்களுக்கு மிகப்பெரிய ஆப்பு காத்திருக்கின்றது.
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில் இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
ஈரானும், இஸ்ரேலும் சும்மா நொட்டி விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். தம்மிடம் இருக்கும் அணு, இரசாயன ஆயுதங்களை பாவித்து தமது பலத்தை உலகறிய செய்யவேண்டும். புண்ணிய பூமி - மத்திய கிழக்கு வெடித்து சிதறுவதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
தாங்ஸ் ப்ரோ, குடும்ப சுமை, வேலைப் பளு காரணமாக யாழில் அதிகம் எழுத முடியவில்லை, புலம் பெயர்ந்த சூழ்நிலையில் தமிழை மறக்க கூடாது என்பதற்க்காக அடிக்கடி தட்டிப் பார்ப்பதுண்டு. அத்துடன், தற்போது யாழில் அரைத்த மாவை அரைப்பது போல் உணர்வு ஏற்படுகின்றது. அவர் ஒரு அம்மையார் ஆவார். https://youtu.be/52b-vgWKrpw?si=yecq9b63-ytAfYy5&t=184 வி.நி, நலம் நன்றி
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
வரும் சனாதிபதி தேர்தலில் ( நடைபெற்றால் - நரி ரணில் அதனை நிறுத்துவதற்க்கு சகல முயற்சிகளையும் செய்து வருகின்றார் ), அனுர குமார திசாநாயக்க சிறுபான்மை மக்களின் ஆதரவு இன்றி கோட்டபாய மாதிரி அமோக வெற்றி பெறுவார். அதன் பின்னர் அமையும் அமைச்சரவையில் சுமந்திரனும் , சாணக்கியனும் இடம் பெறக் கூடும் . ஒரு சில புலம்பெயர் மக்கள், அடித்த பியரும், தின்ற சோறும் செமிக்க சுமந்திரன் எதிர் புராணம் பாடி குப்புறப் படுப்பார்கள். தாயக மக்கள் தமது இருப்பை தக்க வைக்க அடுத்த கட்டம் நோக்கி நகர்வார்கள். NPP/JVP அதிகாரத்துக்கு வந்தவுடன் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடாது. தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களை தங்க தட்டில் வைத்து தரமாட்டார்கள். ஆனால் , ஊழல் செய்த அரசியல் வாதிகளுக்கும்/ அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆப்பு வைப்ப்பார்கள். ஊழலை ஒழிப்பதால் மட்டும் பொருளாதார ரீதியாக வளர்ந்து விடமுடியாது, ஆனால் ஊழலை கணிசமாக ஒழிக்காமல் ஒரு அங்குலம் கூட பொருளாதார ரீதியாக நகரமுடியாது. கொசுறு தகவல் - அடுத்த பிரதமராக தமிழ் பெண்மணி ஒருவர் வர வாய்ப்பு இருக்கின்றது ( சரோஜா சாவித்திரி பால்ராஜ் )
-
தொங்குடா.. தொங்கு..!
குசா அண்ணை, நான் சாரத்தை குறை சொல்லவுமில்லை, நினைக்கவுமில்லை. இப்பவும், கடும் சமருக்கு அங்கமெல்லாம் காற்றுப்பட சாரம் உடுத்து, வீட்டின் பின்னால் இருக்கும் மேப்பில் மரத்தின் கீழ் படுத்து இருப்பது தான் எனக்கு விருப்பமான செயல், அது ஒரு தனி சுகமானது.
-
தொங்குடா.. தொங்கு..!
நல்ல நேரம் பட்டம் விடும்போது டவ்சர் போட்டிருந்தார், சாரம் உடுத்திருந்தால் பட்டத்தோடு சேர்ந்து தம்பி மானமும் காற்றில் பறந்திருக்கும். 😜
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சீனா மத்திய வங்கி கிரிப்டோகரன்ஸிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை சட்டவிரோதமானது என்று அறிவித்து இருக்கின்றது. https://www.theguardian.com/world/2021/sep/24/china-declares-transactions-cryptocurrencies-illegal
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதலிருவரும் ஒரு tinpot சர்வாதிகாரிகள் ஆகும்.
-
யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பு நிதியை கையாளுவதற்கு ஒருபோதும்/ தற்போதைக்கு விடமாட்டார்கள்.இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுக்கமுடியாது( தங்களுடைய மக்களுக்கு செல்லவேண்டிய நிதியையே ஆட்டை போடுகின்றவர்கள், தமிழர் நிதி என்றால் சொல்லவா வேண்டும்). நேரடியாகவும் செய்ய பல முட்டுக்கட்டைகள் உள்ளன. புலம்பெயர்ந்த தமிழர் தமது நாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்யமுடியுமா எனப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, இலங்கையில் கனேடிய சர்வதேச உதவி. https://www.international.gc.ca/world-monde/issues_development-enjeux_developpement/priorities-priorites/where-ou/sri_lanka.aspx?lang=eng இலங்கை உதவி செயல்திறன் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, கனடாவும் பிற நன்கொடையாளர்களும் இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுப்பதில்லை . நன்கொடையாளர்கள் இலங்கையில் தங்கள் பணிகளை வழிநடத்துவதற்கும், சாத்தியமான இடங்களில் கூட்டு மதிப்பீடுகளை நடத்துவதற்கும் ஒரு பொதுவான கொள்கைகளை உருவாக்கி உதவிசெய்வார்கள்.
- யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்கள் படத்தை முகநூலில் ஏற்றி விட்டு( அப்படத்தை நீங்கள் மாத்திரம் பார்க்க கூடியதாய் privacy setting மாற்றிவிடுங்கள்) , பிறகு இங்கே கருத்து எழுதும் பெட்டியில் வெட்டி ஒட்டுங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கள்ளுக் கொட்டில் கள்ளடிக்கும் கு.சாமியின்- மனதை கொள்ளை கொண்ட சிங்கள சிறுக்கி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
பிள்ளை உருவாக்குதல், கலவி, பாலியல் உறுப்புக்கள் என்பவற்றை எமது சமூகத்தில் சிதம்பர ரகசியம் போல் வைத்திருக்கின்றார்கள். இங்கு பதின்ம வயது(Teen age) தொடங்க முன்னர் அவைகளைப்பற்றிய விளக்கம் பாடசாலையில் கொடுப்பார்கள்.- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
நிழலி உங்களிடம் அதீத கற்பனை வளமும், சிறந்த எழுத்தாற்றலும் உள்ளது, மென்மேலும் எழுத வாழ்த்துக்கள். அதேபோல், நீங்கள் பாலியல் fantasy இல் நாட்டம் உள்ளவர் போல் தெரிகின்றது. கட்டுப்பெட்டியான தமிழ் சமூகத்தில் பிறக்காமல், பிரஞ்சு போன்ற திறந்த மனமுடைய (open minded) சமூகத்தில் பிறந்து இருக்க வேண்டியவர்.- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
மூலங்களை, மேற்கோள் அல்லது உசாத்துணைகளுடன் குறிப்பிட்டால் , இது ஒரு வ்ரற்லாறு ஆவணமாக இருக்கும்.- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
உங்கள் ஆவணமாக்கல் பணி தொடர வாழ்த்துக்கள்- இன்று மாவீரர் தினம்!
- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நான் தமிழ் எழுத பாவிப்பது தமிழ் நெட்டின் எழுத்தொலிபெயர்ப்பி(Transcription) http://tamilnet.com/transcription/ - நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
Important Information
By using this site, you agree to our Terms of Use.