Song : Vannam Intha Vanjiyin Vannam Film : Prema Paasam : S.P. Balasubrahmanyam, S. Janaki & Chorus Composer : Gangai Amaran
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ வேண்டிய வண்ணம் நான் வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நான் வேண்டிய வண்ணம் நீ வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்
கருநீல திராட்சைகள் தானோ
கண்ணே உன் கண்களின் வண்ணம்
கார்கால மேகங்கள் தானோ
கலையாத கூந்தலின் வண்ணம்
விழி மீது ஒவ்வொரு நாளும்
அன்பே உன் கற்பனை வண்ணம்
நீ தானே நெஞ்சினில் இருந்தே
நீங்காத காவிய வண்ணம்
மங்கை என்னும் தங்கக்கிண்ணம் மெல்ல நடக்க
முன்னும் பின்னும் வண்ணங்களை வாரி இறைக்க
அம்மம்மா ஒ மன்னன் வந்தான் அள்ளி எடுக்க
அள்ளிக் கொண்ட பின்னும் இங்கு மிச்சம் இருக்க
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
அதிகாலை சூரியன் போலே
சிவப்போ உன் தேனிதழ் வண்ணம்
அடடா என் கைவசம் கண்டேன்
அழகான தேவதை வண்ணம்
பிரியாது ராத்திரி நேரம்
மடி மீது துஞ்சிய வண்ணம்
உறவாட ஏங்குது இங்கே
உனக்காக தோகையின் வண்ணம்
அஞ்சி அஞ்சி பின்னும் நடை தென்றல் வண்ணமோ
மண்ணில் வந்து தத்திச் செல்லும் மின்னல் வண்ணமோ
மன்னன் கொண்ட உள்ளம் என்ன முல்லை வண்ணமோ
மெல்லப் பொங்கும் பாலைப் போல வெள்ளை வண்ணமோ
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்……