ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்