-
Posts
4944 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அன்புத்தம்பி
-
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்?
அன்புத்தம்பி replied to அன்புத்தம்பி's topic in தமிழும் நயமும்
ஒழுக்கத்துக்கும் இந்து மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை! 'பகவான் வர்ணாச்சிரம தர்மம் பற்றிக் கூறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதிலொன்றும் தவறில்லையே! விருப்பு வெறுப்பின்றிப் பார்த்தால் 'வருண ஆச்சிரம தர்மம்' என்பது நால்வகை அறநெறியைக் குறிக்கும் வர்ணாச்சிரமப் பிரிவு சாதிகளில் மேல்தட்டு, கீழ்த்தட்டுக்களை உண்டாக்குவதற்கு ஏற்பட்டதல்ல. ஒரு சமுதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகையான தொழில் வர்க்கங்கள்தாம்' என்கிறார் கவிஞர் கண்ணதாசன். கண்ணன் அருளிய பகவத் கீதை என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால் வர்ண தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்பதை கண்ணன் கீதையில் திரும்பத் திரும்பச் சொல்கிறான். பாவிகள் என்னைப் பணிவார் ஆயினும், மாதரேனும், வைசியரேனும் சூத்திரரும் பரகதி பெறுவார். அப்படியிருக்க தூய்மை யார்த்த அந்தணரும் ராஜரிஷிகளும் எனக்கு அன்பராயின், என்னே? ஆதலால் நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய இவ்வுலகப் பிறவி யெய்திய நீ என்னை வழிபடக் கடவாய்! (பாரதியார் உரை அத் 9-32) இனிக் கவிஞர் கண்ணதாசனின் உரையைப் பார்ப்போம். 'அர்ச்சுனா! தாழ்ந்தவர்கள் என்று கூறப்படுவோரும், மாதர்களும், வணிகர்களும், நாலாம் வருணத்தவரும் (சூத்திரர்) கூட என்னை வணங்கினால் நல்ல கதியை அடைவார்கள். அப்படியிருக்க நற்குடிப்பிறந்த பிராமணர்களும் பக்தி மிக்க ராஜரிஷிகளும் அதே உயர்ந்த கதியை அடைவார்கள் என்பதற்கு வேறு சாட்சியா வேண்டும்? ஆகவே அழியக் கூடிய துன்பம் நிறைந்த இந்த உலகில் நீ இருப்பதால் என்னையே வழிபடுவாயாக. (அத் 9-32) வேத சாத்திரங்கள் பெண் பாபயோனியில் பிறந்ததாகச் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பரகதி இல்லை. அவர்கள் பரகதி அடைய வேண்டும் என்றால் பூமியில் ஆணாகப் பிறந்து வந்தால்த்தான் உண்டு. இதன் காரணமாகவே இந்த சுலோகத்தில் பெண்கள், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஒரு பக்கமும் அந்தணர் எதிர்ப் பக்கத்திலும் வைத்துப் பேசப்படுகிறார்கள். கண்ணதாசன் நாடோடி திரைப்படத்துக்கு எழுதிய பாடலில் படைத்தவன் பேரில் சாதி வைத்ததை சாடுகிறார். உண்மையில் அவ்வையார் சாதியைச் சாடிப் பாடிய 'சாதியிரண்டொழிய வேறில்லை .............இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்' என்ற பாடல் கருத்தைத் தழுவியே இந்தப் பாடலை எழுதியுள்ளார். 'கொடுப்பவனே மேல் சாதி கொடுக்காதவனே கீழ் சாதி படைத்தவன் பேரால் சாதி வைத்தான் பாழாய்ப் போன இந்தப் பூமியியே' எனவே கண்ணதாசன் பகவத் கீதைக்கு எழுதிய முன்னுரைiயில் கூறியிருப்பது வர்ண தர்மத்துக்கு அவர் உரை என்ற பெயரில் மேற்கொண்ட பூச்சு ஆகும். அப்படிப் பூசி மெழுகாது விட்டால் இந்து மதவாதிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு பக்தி நூலில் கடவுளின் அவதாரமான பரந்தாமனே வர்ண தர்மத்தை தானே உண்டாக்கியதாகவும் ஆனால் தான் நினைத்தால் கூட அதனை மாற்ற முடியாது என்று வெளிப்படையாக உபதேசம் செய்யும் வெட்கக் கேட்டை கண்ணதாசன் ஒத்துக் கொண்டதாக முடிந்துவிடும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கண்ணதாசனின் பகவத் கீதைக்கு அருளுரை வழங்கி இருப்பவர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா சுவாமிகள். பொருத்தமான ஆள்தான் பொருத்தமான நூலுக்கு அருளுரை வழங்கியுள்ளார். பகவத் கீதை பகவானே தனது பக்தனை கொலை செய்யுமாறு உபதேசம் செய்யும் நூல்! கொலைசெய்தல் சத்திரியனான அர்ச்சுனனது சுயதர்மம் என்று எடுத்துரைக்கும் நூல்! -
இணுவில் செகராஜசேகரப் பிள்ளையார் கோவில் வருடார்ந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழாவில் சுவாமி எழுந்தருளலின் போது இடம்பெற்ற தவில் நாதஸ்வரத்தின் மல்லாரி இசை கச்சேரி
-
performed by Christoph Sietzen Rajhesh Vaidhya Veena | Kannuodu Kaanbadhalam
-
Aadumayilae (Thaipusam Song) by Bangalore A.R Ramani Ammal... ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன் கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன் அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன் வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன் கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே விளையாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் ஆறுமுகம் கொண்ட சரவண முருகன் கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன் கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
-
Kungumam 1963 starring Sivaji Ganesan, Vijaya Kumari, and Saradha. screenplay was written by Sakthi T. K. Krishnasamy வாசல் ஒன்றிருக்கும் கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி - அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
-
Vedhala Ulagam - Tamil Movie Star Cast: T. R. Mahalingam, K. Sarangapani, Pandari Bai, 'Baby' Kamala, Lalitha-Padmini Music: R.Sudarsanam ஆடும் மயில் பாடும் குயில்
-
Paadha Kaanikkai 1962 directed by K. Shankar. Gemini Ganesan, Savitri, M. R. Radha and Kamal Haasan in lead roles. produced by G. N. Velumani, musical score by Viswanathan–Ramamoorthy ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
Oru Thaalam Uruvagum Singers | SN Surender, S Janaki Music by Sankar Ganesh Starring ||Vijayakanth,Aziz Chowdry,Poornima Devi Movie Name || Sattam Oru Iruttarai உன்னிடம் இன்று தான் மாற்றமே கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாலும் பூவாக மாறும் இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓட வேண்டும் தனிமையிலே ஏ ஏ ஒரு -
Song: Manivanna Unthan Singer: Vani Jayaram மணிவண்ணா உந்தன்
-
மொழி புரியாவிடடாலும் ,எதோ ஒரு இனிமை இருக்கத்தான் செய்கின்றது ..
அன்புத்தம்பி replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது
Parole Movie Director: Sharath Sandith Starring: Mammootty, Iniya, Miya Music: Sharreth, Ellwyn Joshua Language: Malayalam Year: 2018 இதுவும் திரைப்படம் பார்த்தபின் இந்த பாடல் இனிமை ஆனாலும் ஒரு வித சோகம் நிறைந்த பாடல்,,திரைப்படமும் எனக்கு பிடித்து இருந்தது ,நீங்களும் கேட்டு பாருங்கள்,திரைப்படம் பார்க்க வாய்ப்பிருந்தால் ,தமிழிலும் வந்திருக்கின்றது பாருங்கள் -
Allahvin Arulai Thedum - Latest Tamil Islamic Song
-
சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந் திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர் ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப் பாலமுத முண்டாரு மரசு மெய்திப் பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே. சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வறுமை மிகுதியினாலே நிலங்களை விற்றும், அடிமைகளை விற்றும், செலவழித்தார். இப்படி எல்லாம் செலவானமையால், அவருடைய மக்களும் சுற்றத்தவர்களும் வருந்தினார்கள். ஒருநாள் அவர்மனைவியார், அரிசி முதலியன வாங்குதற்கு ஒன்றும் இல்லாமையால் இரண்டுநாளாகப் பட்டினியிருந்து வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, தம்முடைய தாலியை அக்கணவர் கையிலே கொடுத்து, "இதற்கு நெல் வாங்கிக் கொண்டு வாரும்" என்றார். குங்குலியக்கலயநாயனார் அந்தத் தாலியை வாங்கிக் கொண்டு, நெல்லுக் கொள்ளும்படி போனார். போம்பொழுது வழியிலே ஒருவணிகன் குங்குலியப் பொதி கொண்டு தமக்கு எதிரே வரக்கண்டு, மனமகிழ்ந்து "சுவாமிக்குத் தூபம் இடும்படி குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டேன். இதினும் பார்க்க மேலாகிய பேறு உண்டோ" என்று சொல்லி, தம்முடைய கையில் இருந்த தாலியைக் கொடுத்து, அந்தக் குங்குலியப் பொதியை வாங்கிக்கொண்டு, ஆலயத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள பண்டாரத்திலே அக்குங்குலியத்தை வைத்துவிட்டு, சுவாமியைத் துதித்துக்கொண்டு அங்கே இருந்தார். அவர் அங்கே இருக்க, வீட்டிலே அவர் மனைவியாரும் மக்களும், பசியினாலே வாடி, அன்று ராத்திரியிலே இளைப்புற்று நித்திரை செய்யும் பொழுது; கருணாகரராகிய கடவுள் அவ்வீடு முழுவதிலும், பொற்குவியலும் நெற்குவியலும் அரிசிக்குவியலும் பிறவளங்களும் நிறைந்து கிடக்கும்படி அருள்செய்து, அம்மனைவியாருக்குச் சொப்பனத்தில் தோன்றி, அநுக்கிரகஞ் செய்தார். உடனே அவர் விழித்தெழுந்து, அங்கே இருக்கின்ற செல்வத்தைக் கண்டு, பரமசிவனுடைய திருவருளை வியந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, தம்முடைய நாயகராகிய குங்குலியக்கலயநாயனாருக்குத் திருவமுது பாகம் பண்ணப் பிரயத்தனஞ்செய்தார். கிருபாநிதியாகிய பரமசிவன் குங்குலியக் கலயநாயனாருக்குத் தோன்றி, "நீ மிகப் பசி கொண்டிருக்கின்றாய். உன்வீட்டுக்குப் போய்ப் பாலும் அன்னமும் உண்டு துன்பத்தை ஒழி" என்று திருவாய்மலர்ந்தருளினார். குங்குலியக் கலயநாயனார் அதைக் கேட்டுக் கைகூப்பி வணங்கி அவருடைய ஆஞ்ஞையை மறுத்து இருத்தற்கு அஞ்சி, அதனைச் சிரசின் மேலே வகித்து திருக்கோயிலினின்றும் நீங்கிப் போய்த் தம்முடைய வீட்டினுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அவ்வீடெங்கும் நிறைந்திருக்கின்ற நிதிக்குவைகளைக் கண்டு, மனைவியாரை நோக்கி "இந்தச் சம்பத்துக்கள் எல்லாம் எப்படி வந்தன" என்று கேட்க; அவர் "எம்பெருமானுடைய திருவருளினால் வந்தன" என்றார். அதுகேட்ட நாயனார் "ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் ஆட்கொள்ளும் பொருட்டு நமது கடவுளுடைய கருணை இருந்தபடி இப்படியோ" என்று கடவுளை வணங்கினார். மனைவியார் விரைவிலே கணவரையும் சிவனடியார்களையும் விதிப்படி தூப தீபங்களால் ஆராதனை செய்து, திருவமுது செய்வித்தார். குங்குலியக்கலயநாயனார் பரமசிவனுடைய திருவருளினாலே பெருஞ்செல்வமுடையவராகி, சிவனடியார்களைத் தயிர் நெய் பாலோடு திருவமுது செய்வித்து வந்தார். இப்படி நடக்குங்காலத்திலே, திருப்பனந்தாளென்னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற சிவலிங்கம் சாய்ந்திருக்கின்றமையால், அதனை நிமிரப்பண்ணிக் கும்பிடுதற்கு விரும்பி, இராசாவானவர் தம்முடைய யானைகளெல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தார். இழுப்பித்தும், அது நிமிராமையால் அகோராத்திரம் தீராத கவலையுற்றிருந்தார். குங்குலியக்கலய நாயனார் அந்தச் சமாசாரத்தைக் கேள்வியுற்று சுவாமி தரிசனஞ்செய்யும்பொருட்டுத் திருப்பனந்தாளை அடைந்தார். அங்கே சிவலிங்கத்தை நிமிரப்பண்ணவேண்டுமென்கின்ற ஆசையாய் இராஜாவருத்தமுறுதலையும், சேனைகள் யானைகளோடு சிவலிங்கத்தை இழுத்துத் தங்கள் கருத்து முற்றாமையால் பூமியின்மேலே வலி குறைந்து விழுந்து இளைத்தலையும் கண்டு, மனசிலே துன்பங்கொண்டு, "அடியேனும் இளைப்பைத் தருகின்ற இந்தத் திருப்பணியைச் செய்ய வேண்டும்" என்று விரும்பி, சிவலிங்கத்திலே கட்டப்பட்ட கயிற்றைத் தம்முடைய கழுத்திலே கட்டிக்கொண்டு இழுத்தார். உடனே சிவலிங்கம் நிமிர்ந்தது. அப்படி நிமிர்ந்தது அவர் புறத்திலே கட்டி இழுத்து அக்கயிற்றினாலே அன்று; அகத்திலே கட்டியிழுத்த அன்புக்கயிற்றினாலேயாம். அது கண்டு இராஜாவும் சேனைகளும் மிகுந்த களிப்பையடைந்தார்கள். இராஜா குங்குலியக்கலயநாயனாரை நமஸ்கரித்து வியந்து ஸ்தோத்திரம் பண்ணி, சுவாமிக்கு வேண்டிய திருப்பணிகள் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டு தம்முடைய நகரத்துக்குப் போய்விட்டார். குங்குலியக்கலயநாயனார் சிலநாள் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே இருந்து, பின் தமது வாசஸ்தானமாகிய திருக்கடவூருக்குப் போய், தாஞ்செய்யுந் திருப்பணியைச் செய்து கொண்டிருந்தார். இருக்குநாளிலே, அந்த ஸ்தலத்திற்கு எழுந்தருளிவந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரையும் திருநாவுக்கரசநாயனாரையும் எதிர்கொண்டு, தமது வீட்டுக்கு, அழைத்துக்கொண்டுபோய், திருவமுது செய்வித்து அவர்களுடைய திருவருளையும், பரமசிவனுடைய திருவருளையும் பெற்றார். பின்னுஞ் சிலகாலம் அன்பு மேன்மேலும் பெருகப் பல திருப்பணிகளையும் செய்து கொண்டிருந்து சிவபதமடைந்தார்.
-
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்?
அன்புத்தம்பி replied to அன்புத்தம்பி's topic in தமிழும் நயமும்
முடிவாக ஒரு கருத்தை கண்ணன் சொல்கிறான். அவனது கடைசி ஆயுதம் அது! 'எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு, எல்லாப் பாவங்களின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.' (மேற்படி 18-66) இதன் பொருள் ஒருவனுக்கு பக்தி இருந்தால் போதும். அவன் அறச் செயல் எதையும் செய்ய வேண்டியதில்லை. நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டியதில்லை. பக்தி செலுத்தினால் எல்லாப் பாவங்களும் போய்விடும். இப்படிப்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்தப் பாவத்தையும் செய்யலாம். கடவுள் மீது பக்தி செலுத்தினால் போதும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். அவர்களுக்கு முக்தி கிடைக்கும். சிவராத்திரி கதையொன்றே இதற்குத் தக்க சான்றாகும். கீதைகள், புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள் மனிதர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன. ஆதி சங்கரர் போலவே அவரால் தோற்றுவிக்கப்பட்ட சங்கர மடங்களும் வர்ண தர்மத்தையும் பிராமணியத்தையும் கட்டிக் காப்பதில் இற்றைவரை கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன. வர்ண தர்மம் சேமகரமானது என்றும் இந்து மதம் ஒன்றில் மட்டுமே இந்த வர்ண தருமம் இருக்கிறது என்றும் ஏனைய மதங்களில் இல்லை என்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்! (தெய்வத்தின் குரல்) 'யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய் எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்தபிற்பாடுதான் மத உணர்ச்சி குன்றி நாஸ்திகம் அதிகமாகி இருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடம் இன்றித் தெரிகிறது. இதில் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. அதாவது ஒரு மதம் சனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால் அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஐக்கியமும் இல்லாமல் இருக்கும் என நினைக்கிறோம். இப்படிப்பட்ட மதம்தான் சண்டையால் தனக்குள்ளே உளுத்துப்போயவிழுந்து விடும் என்று தோன்றுகிறது. ஆனால் பலவகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரிந்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்று மூச்சைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிர் வாழ்கிறது. ஆயிரம் பதினாராயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? எமது சாஸ்திரங்களை ரஷித்துக் கொண்டிருக்கும் ஸவதர்மம்.....' என்கிறார். (தெய்வத்தின் குரல்) சித்ர்களும், விவேகானந்தரும், காந்தியும், பாரதியும், வள்ளலாரும் எந்த வர்ண தர்மத்தை இந்து மதத்தின் சாபக்கேடு, கறை, கருப்புப் புள்ளி என்றெல்லாம் சொல்கிறார்களோ அதுவே இந்து மதத்திற்கு ஜீவ களையாக இருக்கிறது என்கிறார்! நாம் சுண்ணாம்பு என்பதை சங்கராச்சாரியார் வெண்ணெய் என்கிறார்! நாம் நஞ்சு என்பதை அவர் அமிர்தம் என்கிறார்! -
🧟♀️,,,,,,,,,,,,,எனக்கும் தெரியுமே............
-
பெண்ணைக் குறிக்கும் சொற்கள், தமிழில் ஏராளம் உண்டு. அதில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவங்களுக்கும் தனித்தனிப் பெயர்கள். இவற்றைத்தவிர, வேறு சில சொற்களும் உள்ளன. அவை, அணங்கு, ஆடவள், ஆட்டி, இளம்பிடி, இளையாள், காந்தை, காரிகை, கோதை, சிறுமி, சுந்தரி, சுரிகுழல், தையல், நல்லாள், நாரி, நுண்ணிடை, பாவை, பூவை, பெண்டு, மகடூ, மகள், மடவரல், மடவோள், மாது, மாயோள், மானினி, மின், வஞ்சனி, வஞ்சி, வனிதை, நங்கை, மதங்கி, யுவதி, விறலி.
-
Bangalore A.R. Ramani Ammal- "Pal Manakkuthu Pazham Manakkuthu Pazhani Malaiyile" பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம் பழனி மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம் … !!! முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே அப்பப்பா முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே. எங்கும் தேடி உன்னைக் காணா(து) மனமும் வாடுதே முருகா உன்னைத் தேடித் தேடி எங்கும் காணேனே தேனிருக்குது தினையிருக்குது தென் பழனியிலே தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடியாம் சர்க்கரைக் காவடி சந்தனக் காவடி சேவல் காவடியாம் சர்ப்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம் மலையைச் சுற்றிகாவடி ஆட்டம் தினமும் நடக்குதாம் வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா… !!! அதோ வாராண்டி பழனி ஆறுமுகம் தாண்டி – அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி வேல் இருக்குது மயில் இருக்குது விராலிமலையிலே இந்த விராலிமலையிலே … !!! மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம் விராலி மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம் முருகா உன்னைத் தேடி தேடி எங்கும் காணேனே… !!!
-
English Notes | H.N.Muthiah Bhagavatar இனிமையான இசை
-
Film : Enga veettu mahalakshmi (1957) Singer : Ghantashala, P Susheela Music : Master Venu ஆடி பாடி வேலை செஞ்சா அலுப்புருக்காது அதில் நீயும் நானும் சேராவிட்டால்..
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
படம். சத்தியம் 1977 ஆம்வருடம் சிவாஜி மஞ்சுளா தேவிகா கமல் ஜெயசித்ரா நடித்தது சொந்தங்கள் சேரட்டும் கண்ணா கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் கண்களில் தெரியுது தெளிவாக வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணா கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் -
அருள் மணக்குது | Islamic Song | Nagore Hanifa அருள் மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே
-
பெயர்: உழைக்கும் கரங்கள் ஆங்கில பெயர்: Uzhaikkum Karangal நடிகர்கள்: எம்ஜிஅர் , லதா & more இயக்குனர்: கே.சங்கர் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் தயாரிப்பு: Kesi Films வெளியீடு: 23-05-1976 கண்ணில் ஒன்றாய் இருக்க திங்களாய் பிறந்தேனோ கற்றை குழலிருக்க கங்கையாய் நடந்தேனோ கழுத்தில் சுழன்றிருக்க பாம்பென பிறந்தேனோ கையில் அமர்ந்திருக்க மான் என பிறந்தேனோ
-
மாணிக்கவாசகர் அருளிய அடைக்கலப் பத்து செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்; புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே. வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர் அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத் தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு, இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச் சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய, அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு, இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண் வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான், அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து, தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள், வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்? ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டு, புன் கணன் ஆய், புரள்வேனை, புரளாமல், புகுந்து அருளி, என்கணிலே அமுது ஊறி, தித்தித்து, என் பிழைக்கு இரங்கும் அம் கணனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்; பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம். ஆ! கெடுவேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ், மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பது ஓர் நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும் அறிவு அறியேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு, விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன், என் விதி இன்மையால்; தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து, உய்யக் கொள்ளாய்; அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
-
உண்டு கெட்டது வயிறு உண்ணாமல் கெட்டது உறவு பார்த்துக் கெட்டது பிள்ளை பாராமல் கெட்டது பயிறு கேட்டுக் கெட்டது குடும்பம் கேளாமல் கெட்டது கடன். வாரியார் சுவாமி
-
அன்புள்ள கடவுளுக்கு தம்மா துண்டு தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக்கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக்கும். கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே. அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும். கோடம்பாக்கத்துல மழை வந்துதா? கோவில்பட்டியில வெயில் அடிக்கிறதா? என்பதையும் பார்த்தாகனும். செத்தது எத்தனை பேரு, புதுசா பொறந்தது எத்தனை பேரு, அவனுக்கு என்ன கதை, என்ன பாத்திரம் என்று பிரிச்சு கொடுத்தாகனும். ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிறுத்து போகிறது. இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில் உன்னால் படைக்கப்பட்ட இந்த சின்ன ஜீவனின் கடிதத்தை நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். ஆமாம் கடவுளே உனக்கு என்ன பாஷை தெரியும். எங்க ஊரு ஐயரு சமஸ்கிருதத்தில பேசுனா தான் உனக்கு புரியும் என்கிறார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தமிழ் மொழி தான் ஆதி மொழி அது தான் உனக்கு பிரியமானது என்று எங்க ஊரு தமிழ் வாத்தியார் சொல்றார். இதில் எது நெசம். இவங்க இரண்டு பேரும் சொல்கிற மாதிரி தமிழோ, சமஸ்கிருதமோ இரண்டில் ஒன்று உனக்கு தெரியும் என்றே வைத்து கொள்வோம். சீனாகாரனும், ஆப்ரிக்காகாரனும் உன்கிட்ட எப்படி பேசுவான்? அவனுக்கு தான் தமிழும், சமஸ்கிருதமும் தெரியவே தெரியாதே. ஒரு வேளை உனக்கு காதுகளே கேட்காதோ? இங்க உள்ளவங்க தான் வீணாக குடுமியை பிடித்து சண்டை போட்டு கொள்கிறார்களோ? இது சம்பந்தமா உன் கருத்து என்னென்னு எனக்கு கண்டிப்பா பதில் எழுது. இப்ப கொஞ்ச நாளாகவே என் மண்டைக்குள்ள ஒரே குழப்பம். எங்க ஊரு கறிகடை பாய் அல்லா மட்டும் தான் ஒரே கடவுள் அவரை விட்டா கடவுளே இல்ல என்கிறார். அவரு சொல்லுகிற விதத்தை பார்த்தா ஒருவேளை இவரு சொல்வது தான் சரியாக இருக்குமோ என்று ஒரு நிமிஷம் தோணியது. அடுத்த நிமிசமே டீ கடை ராபர்ட் சொன்னது நினைப்பில் வந்து போச்சு. இந்த உலகில் கர்த்தர் மட்டும் தான் வணங்க கூடிய கடவுள். அவரே எல்லா ஜீவன்களின் போஷகராய் இருக்கிறார். இப்படி ராபர்ட் சொன்னது சரியா? பாய் அண்ணாச்சி சொன்னது சரியான்னு? புதிய குழப்பமே வந்து போயி இட்லி கடை வைத்திருக்கும் ராகவாச்சாரியாரிடம் அல்லா கடவுளா? கர்த்தர் கடவுளா? என்று கேட்டேன். அவர் ஒரே, போடாக அட போடா அசட்டு அம்பி, அல்லாவும் இல்ல கர்த்தரும் இல்ல. பெருமாள் தான்டா உண்மை தெய்வம்ன்னு சொல்லி புது குழப்பத்தை உருவாக்கி விட்டார். இத போயி சாதாரணமா ஒரு பைத்தியகாரனின் கேள்வின்னு தூக்கி போட்டுடாத. நீ படைத்த பூமியில இன்றைக்கு பத்தி எரியும் பிரச்சனை இது தான். ஒரு பக்கம் உள்ளவன் எல்லோரும் மனம் திரும்புங்க. கர்த்தரை ஏத்துங்க என்று ஆசை வார்த்தை காட்டி பார்க்கிறாங்க. மசியாதவர்களை கையில ஆயூதத்தை கொடுத்து ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டி சாகுபடியா செய்கிறான். இன்னொருத்தனோ அல்லாவ ஏத்துக்காத எவனும் பூமியில வாழ கூடாதுன்னு அங்கங்க குண்டு போடுகிறான். கடவுள் படைச்ச உசுருகளை அழிக்கலாமன்னு திருப்பி கேட்டா அல்லாவை வணங்காதவன் எவனும் சாத்தானின் மக்களே அவர்களை கொல்லுவது தான் புனித போர் என்கிறான். தொப்பியும் சிலுவையும் தான் முரட்டு தனமா இருக்கிறது என்று காவி வேட்டி கட்டியவனின் பேச்சை கேட்டால் இன்னும் கொடுமையாக இருக்கிறது. நான் தான் ஆதியில வந்தவன்னு பாதியில் வந்தவன் தான் அவனுங்க இரண்டு பேரும் அவனுங்கள ஒழிச்சு கட்டினா தான் பூமி அமைதியாகும்ன்னு சூலத்த தூக்கி கிட்டு குத்த வரான். இந்த இடத்துல நீ என்ன பார்த்து ஒரு கேள்வி கேட்கலாம். ஏன்டா அவனுங்ககிட்ட போன அப்படியும் இல்லாம இப்படியும் இல்லாம நடுவுல இருக்கிறவன் கிட்டையோ கடவுளும் கிடையாது. மண்ணாங்கட்டியும் கிடையாது என்கிறவன் கிட்டையோ போய் விளக்கம் கேட்க வேண்டியது தானே என்று. நீ கேட்பதுவும் சரிதான். அப்படிபட்ட மனுஷங்கிட்டையும் போய் கேட்டேன். அவன் என்னடான்னா இவனுக மூணு பேரை விடவும் மோசகாரனா இருக்கிறான். ஒருத்தன் சொல்கிறான் அல்லா உசத்தின்னு சொல்கிறவனுக்கும் ஆமாம் போடு, அடுத்தத உசத்தி பேசறவனுக்கு ஆமாம் போடு, ஆனா குறிப்பா நீ போட்ட ஒவ்வொரு ஆமாவுக்கும் கராரா காசை வசூல் பண்ணிடு. எந்த ஆடு முட்டிகிட்டா நமக்கு என்ன நமக்கு தேவை ரத்த வறுவல் தானே என்று கண்ணை சிமுட்டுகிறான். கடவுளே இல்லை என்பவனிடம் போனேன். கடவுள் இருப்பத ஒத்துக்கிட்டா கண்ணுக்கு தெரியாத நியாய தர்மத்தையும் ஒத்துக்கணும். நியாய தர்மம் என்பதே பத்தாம் பசலித்தனம். அதன்படி எல்லாம் நடக்க ஆரம்பிச்சா மனுஷனா பிறந்த சுகத்த அனுபவிக்க முடியாது. வாழ்வது கொஞ்ச நாள் தான். அந்த காலத்துக்குள்ள கிடைக்கிறத அனுபவிச்சி செத்து போகப்பாரு வீணா கடவுள் அது இதுயென்று காலத்த வீணடிக்காத என்கிறான். ஒவ்வொருத்தனும் தன் சுகத்தையே பெரிசா பார்த்தா உலகம் பூரா சுடுகாடாகத் தானே மாறும்? அதனால தான் உங்கிட்ட இந்த கேள்விய கேட்க போறேன். யோசிச்சு நிதானமா பதில சொல்லு, ஒண்ணும் அவசரம் இல்லை. உண்மையிலேயே நீ யாரு? உன் பெயர் என்ன? அல்லாவா? கர்த்தரா? பெருமாளா? இந்த மூணுமே உன் பெயர் இல்லையின்னா இவங்க மூணு பேரும் யாரு? அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நாங்க யாரும் அவுங்கள பார்த்தது இல்ல. நீயாச்சும் பார்த்து இருக்கியா? நீ சொல்ல போற பதிலில் தான் இந்த உலகத்தோட எதிர்காலமே இருக்கு. அடுத்து முக்கியமா இன்னொரு கேள்வி. ஒரு மனுஷனுக்கு முக்கியமா என்ன வேணும்? மானத்த மறைக்க ஒரு துணி மழைக்கு, வெயிலுக்கு ஒதுங்க ஒரு கூரை பசியெடுத்தா ஒரு பிடி சாதம் அவ்வளவு தான். ஆனா எங்க நாட்டுல பல பேரு ஊர கொள்ளையடிச்சி கோடி கோடியா மறைச்சு வைக்கிறான். சொத்து சுகத்துகாக ஆத்தாளையும், அப்பனையும் கூட வெட்டி மாய்க்கிறான். இத்தன பணம் மனுஷனுக்கு எதுக்கு? பத்து துணிய ஒரே நேரத்துல போட்டுக்க முடியுமா? பத்து வூட்டுல ஒரே ராத்தியில் படுத்து தூங்க முடியுமா? பசி வந்தா காச வறுத்து திங்க முடியுமா? இவை எல்லாம் முடியாதுன்னு எல்லா மனுஷனுக்கும் தெரிஞ்சும் பணத்த நோக்கியே ஏன் ஓடுகிறான்? மனுஷன் ஓடுவது இருக்கட்டும் நோய குணப்படுத்தினா, கல்யாணம் பண்ணிகிட்டா? பிள்ளை குட்டி பெத்துகிட்டா உனக்கு கூட உண்டியலில் காசு போட சொல்கிறாயாமே. உலக பொருட்களில் ஆசை வைக்காதேன்னு உபதேசம் செய்கிற நீயே நகையும் நட்டும் பணமும் காசும் காணிக்கையாக கேட்பது ஏன்? அல்லது உன் பெயரால் யாரோ வசூல் செய்கிறார்கள் என்றால் எல்லாம் தெரிந்த நீ அதை அனுமதிப்பது ஏன்? இப்படி இன்னும் ஏராளமான கேள்விகள் பதிலே இல்லாமல் எனக்குள் மலை மாதிரி குவிந்துக்கிடக்கிறது. அத்தனையும் இந்த ஒரே கடிதத்தில் கேட்டால் பாவம் உனக்கு தலைசுற்றல் வந்து விடும். எங்கள் ஊரில் குடி தண்ணீர் குழாயில் வீட்டுக்கு வருவது இல்லை. இரண்டு கிலோ மீட்டர் நடந்து போயி தான் தண்ணீர் கொண்டு வர வேண்டும். ராத்திரி நேரத்தில் தலைவலி, காய்ச்சல் என்றால் தெருவில் இறங்கி மருத்துவமனைக்கு போக முடியாது. காரணம் தெருவில் விளக்கு இல்லை. தெரு நாய் தொல்லை ரோடெல்லாம் ஆளை விழுங்கும் பள்ளம் இத்தனையும் தாண்டி டாக்டர் பீஸ் கொடுப்பதற்கு பொண்டாட்டி தாலியை அடகு வைக்க வேண்டும். கரண்ட் பில்லோ மூட்டை அளவு என்றாலும் பணத்தை கட்டுகிறோமே தவிர விளக்கெரிக்க கரண்ட் வருவதில்லை. விலையேற்றத்தால் தங்க நகைகளை மறந்து போனது போல காய்கறிகளின் விலையும் ஏறி போனதினால் மாதத்தில் ஒரு நாள் தான் சாதத்திற்கு சாம்பாரே கிடைக்கிறது. வெங்காயம் கத்தரிக்காய் என்ற பெயர்களை மறந்து போச்சி ஸ்கூல் பீஸ் கட்டி மாளாது என்பதினால் எங்களில் பலர் பிள்ளைகளை பெற்று கொள்வதையே விட்டுவிட்டோம். ஆகாய உசரத்திற்கு மண்ணு விலை ஏறி போனதினால் சொந்த வீடுன்னு நினைச்சு பார்க்கவே முடியாது. வாடகை வீட்டுக்கு பணம் கொடுத்தே பாதிப்பேர் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டோம். வயசுக்கு வந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கனவுல கூட முடியல. படிச்ச பசங்களோட உள்ளங்காலும் செருப்பும் வேலை தேடியே தேய்ந்து போனது. எங்க ஊரு தலைவருங்க தங்கள் பேரன் பேத்திக்கும் பெற்ற மக்களுக்கும் பதவி கிடைக்கலைன்னா அரசாங்கத்தைமே மிரட்டுவாங்க தப்பித் தவறி ஊழல் செய்து மாட்டிக்கிட்டா ஜாதிப் பெயரைச் சொல்லி தப்பிக்க பார்ப்பாங்க தன்னோட கட்சி வளருவதற்காக மதச்சண்டைகளை தூண்டி விடுவாங்க இத்தனை நெருக்கடியில் தான் உனக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். என் நெருக்கடி எப்போதுமே தீரபோவதில்லை. என் தலையெழுத்து இப்படி தான். ஆனாலும் நீ சிறிது ஆறுதலை நான் அடைந்து விட்டு போகட்டுமே என்று தயவு செய்து பதில் எழுது. அரசியல்வாதி பெற்ற விண்ணப்பத்தை குப்பை கூடையில் போடுவது போல் போட்டு விடாதே. – யோகி ஸ்ரீராமானந்த குரு இப்படிக்கு சாமான்ய மனிதன்