Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. வாழ்க்கையின் முதல் விமானப் பயணம் எவ்வளவு எதிர்ப்பார்ப்புடனும், சிலிர்ப்புடனும் இருக்குமென்பதை அனுபவபூர்வமாக வர்ணித்து எழுதியுள்ளது சிறப்பு. இந்தக் காணொளியின் இறுதியில் சென்னையில் இறங்கி, வெளிவரும்போது சொல்லிருப்பார். காணொளிகளின் கீழே தமிழக உறவுகளின் பின்னூட்டங்களில், இவருக்கு எவ்வளவு வரவேற்பு இங்கே இருக்கிறதென்பதை அறியக்கூடியதாக உள்ளது.
  2. யாழ்ப்பாண உணவு முறைகள், பேச்சு வழக்கு முதலியன மலையாள பச்சைத் தமிழை ஒட்டியே இருக்கின்றன. கலாச்சார வரலாற்று தொடர்புகளால் இவை ஒன்றியிருக்கலாம். முப்பது வருடங்களுக்கு முன் அரசுப் பணியில் நான் இருந்தப்போது, இப்பகுதிகளில் சர்வே சம்பந்தமாக சுற்றியிருக்கிறேன். பல கடைகளில் பேக்கறி, லாறி என வியாபார கடைகளில் எழுத்துக்களும், அவர்களின் தமிழ் உச்சரிப்பில் மலையாளமும் கலந்து வீசும்
  3. உண்மைதான்.. ஆனால் மார்த்தாண்டம் பகுதி இன்னமும் செழிப்புடன் (பனை மரக்காடுகள் பொட்டல் வெளிகள் இல்லாமல்) இருக்குமென எண்ணுகிறேன். கீழேயுள்ள நதியின் மண்டபத்தை பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கு.சா. இது மார்த்தாண்டம் அண்மித்த பகுதியில்தான் உள்ளது.
  4. இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..! ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔 வாழ்க வளமுடன்..! 🙌 வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது. (சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!) காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும் ஈழத்துக்கு கூட்டிட்டு போய் கொண்டு வந்து விடு..!" என சொல்வது ரசிக்கத்தக்க வேடிக்கை. இந்த தம்பி, சென்னையின் நகர்புறம் சென்று பேசினால் இந்த அன்னோன்யம் இருக்குமாவென தெரியவில்லை ஈழம் சென்று கதைக்க, தரிசிக்க எங்களுக்கும் ஆவல் பெருகுகிறது..! 😍
  5. தொடருங்கள்.. அதேவேளை, யம்மா.. எந்த ஊருக்கு போனீங்கள்..? என உத்தேசமாக கோடிட்டு காட்டினால், நாங்களும் அப்பகுதியின் புவி அமைப்பையும் மண்ணின் வளத்தையும் அறிந்துகொள்வோம். 🙂
  6. ஓ போடு..! ஓ போடு..!! திடீரென ஆச்சரியமூட்டும் வகையில் வீடு தேடி வரும் பரிசுகளும், வாழ்த்துக்களும்..! 😍 இப்படியும் ஒரு வியாபார முயற்சியா? தமிழகத்தில் இல்லாத யுக்தி.. ரொம்பவும் ரசித்தேன்..! 😇 டிஸ்கி: இது விளம்பரமல்ல, ரசித்த காணொளி அவ்வளவே..!
  7. 2010ல், சோனி 27 இன்ச் DRC குழாய் வடிவ(CRT) தொலைக்காட்சியிலிருந்து சாம்சுங் 46 இன்ச் தட்டை (Flat TV) தொலைக்காட்சிக்கு மாறினேன். அப்பொழுது இந்த ஸ்மார்ட் டிவி(Smart TV) எனப்படும் எந்த அம்சங்களும் வரவில்லை. அதிக விலை கொடுத்து வாங்கிய தொலைக்காட்சி பெட்டி என்பதால், விற்கவோ அல்லது மாற்றவோ மனமில்லை. 'இணையத்தில் வரும் பல ஓடிடி(OTT) சேவைகளை(Amazon, NetFlix etc) எப்படி பயன்படுத்துவது..?' என தவித்தேன். இறுதியில் துபை எலெக்ட்ரானிக் ஷாப்பில் இந்த என்விடியா(NVidia) செட்டாப் பாக்ஸ்-ஐ கண்டுபிடித்து சிறப்பம்சங்களை சரிபார்த்து வாங்கினேன். அதனோடு, பேரன் தொலைக்காட்சி பெட்டியில் கேம்ஸ் விளையாட இரண்டு ஜாய்-ஸ்டிக்களும்(Joy Sticks) வாங்கினேன். https://www.nvidia.com/en-us/shield/shield-tv-pro/ https://www.nvidia.com/en-us/shield/compare/ சென்ற மாதம் சென்னை சென்றபோது பேரனோடு விளையாடினேன். மிக அருமையாக உள்ளது. குடும்பத்தாருக்கும், எனக்கும் மிக்க மகிழ்ச்சி.😍
  8. கைப்பேசிகளில்(Android & iPhone) வரும் பிரச்சினைகளை திருத்த, இந்த இணையத்தில் மென்பொருள்கள் உள்ளன. (Paid software) https://drfone.wondershare.com/ காசு கட்டி தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நான் இதிலுள்ள வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கான மென்பொருளை வாங்கி, தரவுகளை என் புது ஐபோனிற்கு மாற்றிக்கொண்டேன். யாழ்கள உறவுகளுக்கு இந்த இணைப்பு பயன்படலாம். (May be).
  9. எனது பழைய ஆன்ட்ராய்ட் கைப்பேசியிலிருந்து (HUAWEI P20 Pro) புது ஐபோனிற்கு(iPhone 13) வாட்ஸ்அப் (WhatsApp)தரவுகளை பலவிதங்களிலும் முயன்றும் பரிமாற்றம் (Transfer) செய்ய இயலவில்லை. முடிவில் இணையத்தில் மென்பொருளை(Dr.Fone) காசுகொடுத்து வாங்கி மாற்றிக்கொண்டேன். அதிலும் பாருங்கள், ஐக்ளவுடில்(iCloud) இலவசமாக 5ஜிபி(5GB) தான் நாம் சேமிக்க முடியும். அதற்கு மேல் எந்த தரவுகளையும் சேமிக்க மாதாந்தம் வாடகை செலுத்த வேண்டுமாம். இதெனப்பு கொடுமையா இருக்கு..? 😪 ஆன்ட்ராய்ட் கைப்பேசியில், ஐக்ளவுடை விட மிக அதிகமான தரவுகளை கூகிள் ட்ரைவில்(Google Drive) சேமிக்க இயலுமே..! யானையை வாங்கி தீனி போடுவது போல ஐபோன் வாங்கி செலவு செய்ய வேண்டியிருக்கு..! "இதுக்கு பருத்தி மூட்டை கொடவுனிலேயே இருந்திருக்கலாம்..!!"
  10. இரு வாரங்களுக்கு முன் சென்னை, மதுரை, திருநெல்வேலி போனேனா..! 😍 அதிர்ச்சியாக எனக்கு ஐபோன் 13ம் ஆப்பிள் 7 கைக்கடிகாரமும் பிறந்த நாள் பரிசுகளாக என் வாரிசுகளிடமிருந்து கிட்டியது..🤫 இதில் என்ன குழப்பம் என்றால் இதுநாள் வரை Huawei P20 Pro ஆன்ராய்ட் கைப்பேசியே உபயோகித்து வந்த நான், இன்னும் ஆப்பிளுக்கு மாற இயலவில்லை..! ஒரே குழப்பமாக உள்ளது.. ஆகவே Huawei P20 கைப்பேசியை அதிகமாகவும், ஆப்பிள் 13 கைப்பேசியை குறைவாகவும் பயன்படுத்தி வருகிறேன். வெகுநாள் பழகிய ஆன்ட்ராய்ட் என்னை பொறுத்தவரையில் இன்னமும் கையாள்வதற்கு வசதியாக உள்ளது. ஆப்பிளுக்கு மாற இனிமேல்தான் பழக வேணும்.. ☹️
  11. மணப்பெண் நடனமாடி மேடைக்கு வந்த காலம் போய், இப்பொழுது மணமக்கள் மேடையில் ஆடும் கலாச்சாரம்.. நல்ல முன்னேற்றம்..!
  12. இதை எங்களிட்டே சொல்லி என்ன ஆகப்போகுது..? 'உதார்' காட்டின பரிமளம் அம்மணிட்ட சொன்னீங்களா..? 😉
  13. சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அக்னி, ஏராளன், மற்றவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  14. இந்தக் காணொளியில், பருத்தித்துறை பகுதிகளில் எப்படி பட்டம் வடிமைத்துக் கட்டுகிறார்களென காண்பித்துள்ளார்கள்..! வில்லு மாதிரி அமைப்பில் இருபுறமும் ஏதோ 'டப்பா' போல கட்டி அதில் பட்டையான நூலை இழுத்துப் பிடித்து முறுக்கேறியிருகிறார்கள், அதிலிருந்து வரும் விநோதமான ஒலியைக் கேளுங்கள். 🤔 இறுதியில் பொடியன்கள் கயிறைப் பிடித்து தொங்கி விளையாடுவது நல்ல த்ரிலிங்கான மற்ற்ம் வேடிக்கையான அனுபவம்.
  15. நண்பர்களுடன் சேர்ந்து ராட்சத அளவிலான பட்டத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவர், பட்டத்தின் கயிற்றை விட மறந்ததால் கயிற்றுடன் ஆகாயத்தில் பறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கவுண்டமணி பட காமெடி போல நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 'நினைவுச்சின்னம்' படத்தில் இடம் பெற்ற காமெடிக்காட்சியில் ராட்சத பலூனில் இணைத்திருக்கும் கயிற்றை கெட்டியாக பிடித்திருக்கும் செந்திலை, கயிற்றோடு சேர்த்து வானில் பறக்கவிட்டு "இந்த பக்கம் போனால் பஞ்சாப்பு... அந்தப்பக்கம் போனால் சிலோனு..." என்று கவுண்டமணி அடிக்கும் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் சம்பவம் ஒன்று யாழ்பாணத்தில் அரங்கேறி உள்ளது யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, 13 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலான பட்டம் செய்து அதனை பறக்கவிட ஆயுத்தமாகி கொண்டிருந்தனர். பல இளைஞர்கள் சேர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டு பட்டத்தை வானில் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் வேகமாக பறக்க ஆரம்பித்தது அப்போது முன் வரிசையில் இருந்த இளைஞர் பட்டத்தின் கயிற்றை விடுவதற்குள் அவருக்கு பின்னால் நின்ற இளைஞர்கள் கயிற்றை விட்டு விட்டனர். அடுத்த நொடி காற்றின் வேகத்துக்கு ஜெட்டாக வானை நோக்கி பறந்த பட்டத்தோடு அந்த முன்வரிசை இளைஞரும் தூக்கிச்செல்லப்பட்டார் முன்னதாக இளைஞர்கள் பட்டம் ஏற்றும்போது அதன் கயிற்றை ஒருமரத்தில் கட்டிவிட்டே பட்டம் ஏற்றியிருக்கிறார்கள், இதனால் பட்டத்தை ஏற்றிய இளைஞர்கள் அனைவரும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போயினர் பட்டத்தின் கயிற்றை விடாமல் கெட்டியாக பிடித்திருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில், 'யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா ?' என்ற எதிர்பார்ப்பில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர் ஹீரோயினை காப்பாற்ற செல்லும் ஹீரோ போல பட்டத்தின் கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை மீட்க இயலாமல் அனைவரும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். இதையடுத்து 'தன் கையே தனக்கு உதவி' என்று சமயோசிதமாக யோசித்த அந்த பட்டக் கயிறு ஜேம்ஸ் பாண்டு, கயிற்றின் பின் நகர்ந்து வர ஆரம்பித்தார் மெல்ல மெல்ல கயிற்றில் தொங்கியபடியே நகர்ந்து, வந்த அந்த இளஞர் சுமார் இருபது அடி உயரம் வரை வந்தார், அதற்கு மேல் நகர இயலாத நிலையில் தனது கையை விட்ட நிலையில் தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்ததால் உயிர் தப்பினார் விழுந்த வேகத்தில் உடலில் ஏற்பட்ட உட் காயங்களுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உடனடி சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள் தெரிவித்தனர் இதற்கிடையே அந்தரத்தில் பட்டத்தின் கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பேட்மேன் தொங்கிக் கொண்டிருந்த போது, 2K லிட்டில் பிரின்சஸ் ஆன அவரது மகள், தந்தை கயிற்றில் தொங்கிய நிலையில் பறப்பதை கண்டு ஆபத்தை உணராமல், ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பாலிமர் செய்திகள்
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிழலி.
  17. "இங்க இழப்பில்லாத குடும்பம் ஒன்டுமே இல்ல..!" இந்தக் காணொளியை இன்று பார்க்க நேர்ந்தது.. இதில் வரும் வாகன ஓட்டுநரின் பார்வையில்/கருத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாக தோன்றுகிறது...
  18. "தமிழ்நாடு" சின்னத்துக்கு பின்னால இவ்வளவு இருக்கா..? பழைய செய்தி துணுக்குதான்.. ஆனால் அறிந்துகொள்ளும்போது இனிமைதான்..!
  19. ரஞ்சித்துக்கும், சகாறா 'அக்கா'வுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 🌹
  20. நல்லவேளை.. செலவில்லாமல் அரிதாக கிடைத்த வாய்ப்பு.🤩 இப்பொழுதும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே கொரானா சோதனை செய்யப்படுகிறது. ஐரோப்பியர்களுக்கு இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.