Everything posted by ராசவன்னியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு நல்ல வசதியை சரிவர பயன்படுத்த இயலாமல் கள உறவுகள் தடுமாறுவதாகவே படுகிறது. மன உளைச்சலோ, மனத்தாங்கல் ஏற்பட்டாலோ சில காலம் ஒதுங்கியிருக்கலாம்தானே? இந்த ஈத், ரமலான் பண்டிகைகளுக்கு இங்கே தடையை நீக்கி வெளியே விடுவார்கள்.. அதுமாதிரி கள உறவுகள், நிர்வாகமும் சேர்ந்து நல்ல பொது புரிந்துணர்வுக்கு வாங்களப்பு. 🙏🌹 ஐ.நா சபை வரை இந்த விவகாரத்தை கொண்டு செல்லாதீர்கள்.. இதற்குமேல் என்னத்தை சொல்ல..?
-
பூமாலையில் ஓர் மல்லிகை..
1967ல் வெளிவந்த இந்தப் பாடலின் எடுப்பில் மிக அருமையான ஹம்மிங்.. இன்றும் காதில் ரீங்காரமிடுவது இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் வெற்றி எனலாம்.. 'ஆபேரி' ராகத்தில் அமைந்த இந்த பாடலை, கீழே இணைத்துள்ள காணொளியில் திருமண வாத்தியக் குழு நன்றாக வாசித்துள்ளார்களென எண்ணுகிறேன். கேட்டுப் பாருங்களேன்..! 😍 ஒப்பீடுக்கு அந்த அட்டகாசமான, மிக இனிமையான பாடல்..😍
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சாமிகளே, என்ன பிரச்சினை உங்களுக்கு..? 🤔 உங்களுக்கு ஏன் முடியில்லை? சாரி.. திண்ணையில் உரிமை இல்லை..? யாழில் எல்லோரும் சமம்தானே? ஒன்னும் புரியலையே?
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
ரொம்ப வசதியா போச்சு.. எனக்கும் தலையில் முடி கொட்டி வருகிறது.. ஃபேசன் என ஆறுதல் கொள்ளலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த சாமி, ஏன் திண்ணைக்கு வர பயப்படுகிறார்..? 🤔 வழுக்கி விழுந்து படாத இடத்தில் அடி கிடி பலமா பட்டுட்டதோ?😜
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
சீக்காளி, பிச்சைக்காரன் மாதிரி இருப்பதுதான் இக்கால ஃபேசன் என புரிந்துகொண்டேன். ஏனெனில் ஒரு காலத்தில் (45 வருசத்துக்கு முன்) கல்லூரியில் படிக்கும்போது நான் ஸ்டெப் கட் வைத்திருந்தேன். 😎 அதுபோல முகத்தை சவரம் செய்யாமல் இருப்பது இப்பொழுது ஃபேசன் ஆகிவிட்டது போலும். தகவலுக்கு நன்றி..
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், மதுரை – தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் தற்போது பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மலை உச்சியில், கடலுக்கு அடியில், பாராசூட்டில் பறந்தபடி என விதவிதமான திருமணங்களை செய்திகளில் பார்த்திருப்போம். அண்மையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நடந்த திருமணம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் – மதுரை தொழிலதிபரின் மகள் தீக்சனா திருமணம் தான் இப்படி விமரிசையாக விமானத்தில் நடந்தேறியது. விமானத்தில் பறந்தபடி திருமணத்தை கண்டுகளித்த உறவினர்களும் மகிழ்ச்சியில் துள்ளினர். ஆனால் இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிறது. கொரோனா 2வது அலை கொடூரமாக வீசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தனி மனித இடைவெளியின்றி, முககவசம் இன்றி இந்த திருமணம் நடந்திருப்பதுதான் அதற்கு காரணம். இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அத்துடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருமணம் நடந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பணியாளர்கள் அனைவருக்கும் தற்காலிக பணி வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் சிவில் விமான போக்குவரத்துத் துறை முழு அறிக்கை கோரியுள்ளது. விமானத்தில் திருமணம் நடக்க இருப்பது பற்றி தங்களுக்கு தெரியாது என விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கம் ஏற்கப்படுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் விமானத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் பயணித்த மணமக்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய சிவில் விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா 2வது அலையில் கொத்து கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில் சமூக பொறுப்பின்றி, தனி மனித இடைவெளியின்றி நடந்த இந்த திருமணம் பற்றி சமூக ஆர்வலர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். நியூஸ்7
-
நான் ரசித்த விளம்பரம் .
டி.வி. ரிமோட்டிற்கான அவசர தேவையை அக்காலத்தில் உணர்த்திய அறுவை காணொளிகளை இப்பொழுதும் போட்டு ஏன் கொல்கிறீர்கள் தோழரே? 😡😟
-
நான் ரசித்த விளம்பரம் .
எனக்கு இன்றளவும் பிடிக்காத இசையும், விளம்பரமும் இதுதான். மிகவும் அந்நியமான ஒலி..! 🙄 செத்த வீட்டில் மெல்லிய ஒப்பாரி மாதிரி காதில் விழுவதால், அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை சிறிது நேரம் கழித்துதான் போடுவது வழக்கம். இன்னமும் தூர்தர்சனும், அதன் ஒளிபரப்பின் (ஆ)ரம்ப ஒலியும் இருக்கிறதா..? என தெரியவில்லை.
-
கம் செப்டெம்பர்..
முன் அறிவிப்பை ஏற்கனவே போட்டுவிட்டுதானே சென்றேன் சார்..? நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கு..! 🤔 வணக்கம் வாத்தியார் ஐயா..!🙏 "தமிழ் படிப்போம்" இன்னும் மறக்கவில்லை ஐயா.. அடிக்கடி அந்த திரிகளை பார்ப்பதுண்டு.
-
கம் செப்டெம்பர்..
1961ம் ஆண்டு செப்டெம்பரில் வெளியான பில்லி வாகன்(Billy Vaughn) குழுவினரின் மிகப் பிரபலமான இசையை எந்த உருவில் கேட்டாலும் மனம் மயங்கும்..! அதில் இதும் ஒன்று.. அசல் இசை இதோ..😍
-
என் கொறோனா அனுபவம்
இங்கே கொரானா வந்து மருத்துவ சோதனையில் உறுதியானால்(+ve), அன்னாரின் தேசிய அடையாள அட்டை எண் (EID) அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். முதலில் உடனே அவர்களை பிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு தனி இடத்தில்(Quarantine center) வைத்து கவனித்தார்கள். இப்பொழுது கடும் அறிவுறுத்தல்கள் மட்டும் கைப்பேசி அழைப்பில் பரிசோதனை முடிவு(+ve) வந்த மூன்று நாட்களுக்குள் வரும். அரசாங்க கொரானா சோதனை மையங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். அங்கு மீண்டும் பரிசோதித்துவிட்டு மணிகட்டில் ஒரு "ஸ்மார்ட் ஜி.பி.எஸ் வாட்ச்" ஒன்றை கட்டிவிடுவார்கள்.அந்த நொடி முதல் கொரானா பாதித்தவரின் இருப்பிட அசைவுகள் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும். 15 நாட்களுக்குப்பின் மறுபடியும் கொரானா பரிசோதனை செய்து முடிவில், கொரானா இல்லையென்றால் (-ve) மட்டுமே அந்த வாட்ச் கையிலிருந்து நீக்கப்படும். நான் 20 நாட்கள் கையில் வாட்ச் கட்டியிருந்தேன். வீட்டிலிருக்கும்போதும், குளிக்கும்போதும் அப்படியே நம் கையில் இருக்கும். அதை அவிழ்க்க, ஏற்கனவே கட்டிய சோதனை மையங்களால் மட்டுமே இயலும். மருத்துவரின் ஆலோசனைகளின் படி வீட்டிற்குள்ளேயே தனிமையில் உணவுண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. எனக்கு சமையல் அவ்வளவாக தெரியாது..! 😟 எங்கும் வெளியே செல்ல இயலாத நிலை. தினமும் சாப்பிடும் ஓட்டல் அதிபருடன் கைப்பேசியில் நிலைமையை எடுத்துச்சொல்லி சாப்பாடு வரவழைத்து சமாளித்தேன். தொடர் இருமல், உடம்பில் நோவு, முதலில் லேசான காய்ச்சல்.. குளிசைகள்.. அலுவலக வேலைகள்.. அத்தோடு 20 நாட்கள் தனிமை சிறை.. மறக்க இயலாது..!
-
என் கொறோனா அனுபவம்
ஏற்கனவே கொரானா வந்து குணமானவர்கள், தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள சென்றபோது மருத்துவ மனைகளில் மூன்று மாதங்களுக்குப் பின் போட்டுக்கொண்டால் போதுமென முதலில் சொல்லப்பட்டது. பின்னர் அவ்விதி தளர்த்தப்பட்டு ஒரு மாதம் கழித்து போடலாம் என அனைவருக்கும் செலுத்தப்படுகிறது. ஆனால் முதல் டோஸ் (First shot) செலுத்த கடும் தட்டுப்பாடுகள் சில நாட்கள் முன்பு வரை இருந்தன. நான் சினோபாம்(Sinopharm) தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன். வரவேற்பிற்கு மிக்க நன்றி.!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி விசு. பேரன் நல்ல சுகம். தினமும் கணனியில் பார்த்து விளையாடுவது உண்டு. நன்றி, சுவை. கரண்டு எனக்கு கடுக்காய் கொடுத்தால் 'பஸ்பம்' தான்..! "220 கிலோ வோல்ட்" நன்றி முனி. நன்றி சிறீ.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அது வேறொன்றும் இல்லை சார்.. நீங்கள் ஒருதரம் கணனியில் பதிவை தட்டிவிட, அதே நேரம் தங்கள் வீட்டம்மணி உங்கள் தலையில் குட்ட, அந்த பயத்தில் மறுபடியும் 'விசைப்பலகையில் பொத்தானை தட்டிவிடுகிறீர்கள்..' என புரிந்துகொள்கிறேன். 😜
-
என் கொறோனா அனுபவம்
களத்திற்கு நாள் கழித்து வந்தால் அப்படித்தான், பரவாயில்லை, போகட்டும்... அம்மணி. இரண்டாம் அலையால் பிப்ரவரி மாதத்தில் வந்த கொரானா தொற்றிலிருந்து முழுவதும் குணமாக 20 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. வருத்தம், உடல் சோர்வினால் வலுவிழப்பு, பயம், உணவு, வீட்டிலிருந்து அலுவலக வேலைகள், வாழும் நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகள், சட்டங்கள் என ஆளை படுத்தி எடுத்துவிட்டுதான் சென்றது. 😜 இந்த சிரம காலத்தில்தான், சக மனிதர்களின் சில அரிய(?) குணங்களையும் அறிய முடிந்தது. 🤭 சமீபத்தில்தான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மிக்க நன்றி..கு.சா.! அந்த திட்டத்தில் எனது வேலைகள் முடிந்துவிட்டன.. ஆனால் பாருங்கள், அடுத்து இரண்டு பெரிய திட்டங்கள் வந்துவிட்டன. மிக்க நன்றி, அக்கா(?)..🤔 மிக்க நன்றி, சுவி.
-
என் கொறோனா அனுபவம்
போயே போச்சே; போயிந்தே; இட்ஸ் கான்..! எனது அனுபவங்களை எழுதலாம் என்றால் தனி திரி தொடங்க இயலவில்லை. 🤔
-
May 18 - அஞ்சலிகள்..
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மீண்டும் பழைய உரிமைகள்(?) வந்துவிட்டன. மிக்க நன்றி..!- நான்தான்டா கொரானா..!
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எல்லோரும் நலமா? அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..? சொல்லுங்கள்...! Admin .., சொல்லுங்கள்..!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021..
நேற்றிரவில் ஒளிர்ந்த துபாய் புர்ஜ் கலீஃபா கட்டிடம்..! ☝️ - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.