Everything posted by ராசவன்னியன்
-
அன்றும், இன்றும்..
- "தாடி வளர்த்தது போதும்; ஷேவ் பண்ணிட்டு நாட்டை முன்னேற்றுங்க..!”
- "தாடி வளர்த்தது போதும்; ஷேவ் பண்ணிட்டு நாட்டை முன்னேற்றுங்க..!”
"தாடி வளர்த்தது போதும்; ஷேவ் பண்ணிட்டு நாட்டை முன்னேற்றுங்க..!” 😜 மோடிக்கு 'மணியார்டர்' அனுப்பிய டீ கடைக்காரர்! பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி, தாடியை ஷேவ் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், டீக்கடைக்காரர் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரர் அனில் மோர். இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 ரூபாய் பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி, தாடியை ஷேவ் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்கள் முடங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. கொரோனா பாதிப்பாலும், அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும் கோடிக்கணக்கானோர் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையே பிரதமர் மோடி தாடியை நீளமாக வளர்த்து வருகிறார். வேல்லைவாய்ப்பு, மருத்துவ வசதிகள், பொருளாதாரம் என இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் பிரதமர் மோடி, தனது தாடியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு மணி ஆர்டரில் 100 ரூபாய் அனுப்பியுள்ள டீ கடைக்காரர் அனில் மோர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 30 ஆயிரம் நிதியுதவியும் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு மணி ஆர்டர் அனுப்பியது குறித்துப் பேசியுள்ள அனில் மோர் “நமது பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் தனது தாடியை ஷேவ் செய்வதற்காக எனது சேமிப்பில் இருந்து ரூ.100 அனுப்புகிறேன். அவர் மிக உயர்ந்த பதவியில் உள்ள தலைவர். நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கொரோனா தொற்றால் ஏழைகளின் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக இதைச் செய்கிறேன். பிரதமர் மோடி தனது தாடியை நன்கு வளர்த்துக்கொண்டார். அவர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால், அது இந்த நாட்டு மக்களுக்கான வேலைவாய்ப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் அமல்படுத்தப்பட்ட இரண்டு பொதுமுடக்கங்களால் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துயரங்களிலிருந்து விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். கலைஞர் செய்திகள்- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
இதற்கு 'கரணவாய் குளத்தங்கரை'யிலிருந்து வரும் பதில்..!- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
துபாயின் விண்ணை முட்டும் கட்டிடங்கள்..! கட்டிட வடிவமைப்புக் கலையில் ஆர்வமிக்கவர்களை இக்காணொளி நிச்சயம் கவரும்..- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
சிங்கனுக்கு வயசானலும்... .... 😜🤣- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
அவருக்கு முழு குடியுரிமை இல்லை. வியாபார முதலீடுகள் காரணமாக 99 வருட குத்தகை அடிப்படையில் சிலருக்கு வதிவிட உரிமை உள்ளது. இந்த உரிமையை எப்பொழுது நினைத்தாலும் அரசு ரத்து செய்ய இயலும்.- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
இங்கே மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள் எங்குமே குடியுரிமை கிடைக்காது. இதற்கு அவர்களின் பூமி நலன் சார்ந்த அரசியல் காரணங்கள் உண்டு. அவை வெளியில் தெரிவதில்லை. ஏன், அதற்கு மேலும் கொடுக்க மயக்கமா? 😜- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
நாதமுனி சொலவது உண்மைதான், என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே குடியுரிமை கிடைக்காது.. வந்தமா, பணத்தை சம்பாதித்தோமா அல்லது செலவழித்து அனுபவித்தோமா.. என எதிலும் மூக்கை நுழைக்காமல், சொந்த நாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கோணும்..! அதுவே நிம்மதி.- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
இயற்கை வளம் என்பது பாலைவனம் தான். கச்சா எண்ணெய் இந்தப்பகுதியில் இல்லை, அல்லது தோண்டியெடுக்க முயற்சிக்கவில்லை. கச்சா எண்ணை வளம் துபாய்க்கு தெற்கே 140 கி.மீ தூரத்திலிருக்கும் அபுதாபி மாநிலத்தில் தான் மிக அதிகம். துபாயின் வருமானம், சுற்றுலா மற்றும் வியாபாரம் சார்ந்த பொருளாதாரம் மட்டுமே. தன்னிடம் இருக்கும் வளங்களைக் கொண்டு எப்படி புது புது விடயங்களை செய்யலாம் என சிந்திப்பது. அவற்றை மிக கவர்ச்சியாக, பிரமிப்புடன் உலகிற்கு அறிமுகம் செய்வதில் வல்லவர்கள். இதற்கென உலகத்தின் திறன் வாய்ந்த ஆலோசனை சொல்லும் நிறுவனங்களை (Consultants) அமர்த்தியுள்ளார்கள். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தொலைநோக்கு பார்வை, எந்த வேலையிலும் நேர்த்தி, எதை தொட்டால் நாட்டுக்கு செல்வம் பெருகும் என்ற திட்டமிடல்.. தாரக மந்திரம்,உங்கள் பணத்தை கொண்டு வாருங்கள், வசதிகளை ஒழுக்கமுடன் அனுபவியுங்கள்.. இந்தியாவில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், லஞ்சம் இங்கே இல்லை. குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள்.. இங்கே மண்ணின் மைந்தர்கள்(Natives) மக்கள் தொகை மிகக்குறைவு..பெரும்பாலும் வெளிநாட்டவரே.. 150க்கும் மேற்பட்ட வகை வகையான வெளிநாட்டவர்கள் வாழும் நாடு.- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
தெரியாமல் ஒரு 'ஃப்லோ'வில் 'பொண்ணு' என சொல்லிவிட்டேன். அது அம்மா எனும் அம்மணி..🤣- மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
துபாய் நகரின் புறநகர் பகுதியான 'துபாய் மெரீனா' என்பது பெரும்பாலும் கோடிகளில் புரளும் ஐரோப்பிய செல்வந்தர்கள் வாழும் பகுதியாகும். மற்றொருபுறம் அலுவலகங்கள் நிறைந்த ஜெ.எல்.டி(Jumeirah lake towers) எனப்படும் உயரடுக்கு மாடிகள் கொண்ட பகுதிகள். இந்த பகுதிகளுக்குள் சென்றால் நமக்கு கழுத்தில் சுளுக்கு வந்துவிடும், ஏனெனில் பெரும்பாலும் அனைத்து கட்டிடங்களும் குறைந்தது 25 மாடிகளுக்கு மேல்..சில கட்டிடங்கள் 60, 80 எனவும் உண்டு. இப்பகுதிகளைக் கடந்தால் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் நிறைந்த 'ஜெபல் அலி' பகுதிகள் வரும். எனக்கு பெரும்பாலும் இப்பகுதிகளுக்குள் அலுவலக வேலை சம்பந்தமாக அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்புக்கள் வரும்.. முதலில் மிக பிரமிப்பாக இருந்தது.. இப்பொழுது ரொம்ப பழகிப்போச்சுது.. ஆடம்பரமான வாழ்க்கை கொண்ட இப்பகுதியை பார்த்து நாம் பெருமூச்சுதான் விடமுடியும்..! அப்படி ரசித்தவைகளில் ஒன்று, இந்த புதிய "பென்ட் ஹவுஸ்.." 56 வது தளத்தில், சுமார் 6400 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இந்த அடுக்குமாடி வீட்டில், அனைத்து அடிப்படை(?) வசதிகளும் உண்டு.. விலை ரொம்ப கம்மிதான்.. 15 மில்லியன் திர்ஹாம்கள்.. உங்கள் பார்வைக்கு..! டிஸ்கி: அதுசரி, திரியின் தலைப்பிற்கும், உள்ளேயுள்ள விசயங்களுக்கும் என்ன சம்மந்தம் என முழிக்கிறீங்களா..? மாடி... அதிலிருக்கும் பொண்ணு..! சரியா இருக்கா..? ஹி..ஹி..😜- 'தமிழ் வாழ்க' - திரும்பியது..
சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் மேல்மாடியில் 'தமிழ் வாழ்க, தமிழ் வளர்க' பலகைகளை ஒளிரச் செய்த விழாவின் காணொளி தெலுகு சானலில் வந்துள்ளது..- 'தமிழ் வாழ்க' - திரும்பியது..
ஒன்றிய அரசிடமிருந்து பிராமணீய அழுத்தமாக இருக்கலாம்.. ஏனெனில் செத்த மொழிக்கு பாடை கட்டி மீண்டெழ வைக்கும் முயற்சிக்கு பங்கம் வந்துவிடக் கூடாதே..! ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு தேர்வு..! இன்ன பிற ஒரு.. ஒரு.. ஒரு..- 'தமிழ் வாழ்க' - திரும்பியது..
அனைவரின் எதிர்பார்ப்பும் அதுதான்.. ஒன்றிய அரசிடமிருந்து அழுத்தம் வரும் விடயங்களில் எப்படி முடிவெடுத்து நடக்கிறார்..? என பார்க்கலாம். ஏனெனில் பல தலைவர்களும் எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த உறுதியிலிருந்து நழுவுவதும் அடிக்கடி பார்த்துள்ளோமே..!- எந்த ஊர் என்றவரே..!
விடையை சொல்லி திரியை முடிக்கிறேன்..! இந்த சிலை கைதடி சந்தியருகேயுள்ளது. அதாவது கைதடி சந்தியிலிருந்து நாவற்குழி செல்லும் வழியில் நிறுவப்பட்டுள்ளது. அதற்குதான் ஊன்றுகோல் (கைதடி) குழி (நாவற்குழி) என கீழேயுள்ளபடி பூடகமாக சொன்னேன்..👇👇- எந்த ஊர் என்றவரே..!
நன்றி கு.சா. 🙏 சில வருடங்களுக்கு முன் உயர்மின்னழுத்த கருவிகள் பரிசோதனைக்காக ஒரு தொழிற்நுட்ப கலந்தாய்வு நடைபெற்றது. அதில் சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.அதில் ஒரு ஈழத்தமிழரும், இந்தியா, பாகிஸ்தான் மாநிலங்களை சார்ந்தவர்களும் தாங்கள் வேலை செய்துவரும் நிறுவனங்களின் சார்பாக கலந்து கொண்டிருந்தனர். தேநீர் இடைவேளையில் வராந்தாவில் நின்று நாங்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தோம். பேசி முடிந்தவுடன் மறுபடியும் பரிசோதனை கூடத்துக்கு திரும்பும் முன், ஒரு இந்தியர் (இவர் முன்னரே எனக்கு பழக்கமானவர், குஜராத்தை சேர்ந்தவர்)என்னிடம் வந்து, "ஏன் சார், நாம் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த நண்பரிடமே அதிக அக்கறையெடுத்து பேசிக்கொண்டிருந்தீர்களே, அவர் சிறீலங்கன்தானே, நாம் இந்தியர்களில்லையா..? எங்களிடம் தானே அதிகம் பேசியிருக்க வேண்டும்..?" என உரிமையுடன் தட்டிக்கேட்டார். நான் சிரித்துக்கொண்டே "May be blood is thicker than water sir.." எனக் கூறி சமாளித்தேன்..சிரித்தேன்.. அதற்கு மேல் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம், அதற்கு நான் பதிலே சொல்லவில்லை..! ஏனெனில் தர்க்கநீதியாக சிலமுறை இப்படியான கேள்விகளை இந்தியர், பாகிஸ்தானியர்களிடம் சந்தித்துள்ளேன். கு.சா குறிப்பை படித்தவுடன், ஏனோ அந்த அனுபவத்தை இங்கே எழுதவேண்டுமென தோன்றியது..!- எந்த ஊர் என்றவரே..!
முழுப் படமும் போட்டாச்சுது..! இந்த சிலை 1982ம் ஆண்டு நிறுவப்பட்டு, யுத்த காலத்தில் அழிந்து மீண்டும் 14-04-2021 ல் 'மறவன்புலவு க.சச்சிதானதன்' அவர்களால் திறக்கப்பட்டது. சலிப்பை தவிர்க்க இதுவே கடைசி புதிர்..! 😜 இந்த திரி 3000 பார்வைகளை கடந்துள்ளது என்பதைக் கண்டு மகிழ்ச்சி. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.🙏- எந்த ஊர் என்றவரே..!
ஊன்றுகோலுக்கும், குழிக்கும் இடையே அப்பு..🤭 இதுக்கு மேல் "க்ளூ" கேட்டால் "பசை" தான் கொடுக்கணும்..!- எந்த ஊர் என்றவரே..!
ஊன்றுகோல்.. 🤭- 'தமிழ் வாழ்க' - திரும்பியது..
பல வருடங்களாக 'தமிழ் வாழ்க', 'தமிழ் வளர்க' என சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் இரு புறமும் ஒளிர்ந்த 'நியான்' எழுத்துக்கள் கடந்த அதிமுக அரசால் நீக்கப்பட்டது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடிக்கடி இரவில் கடக்கும்போதெல்லாம் பார்த்து பழகிய இந்த எழுத்துக்கள், சில வருடங்களாக நீக்கப்பட்டு மூளியாக இருந்தது. இன்று மீண்டும் நிறுவப்பட்டுள்ளது, பழைய நிலைக்கு திரும்பி முழுமையடைந்த உணர்வு. இது சிறு விடயமாக இருக்கலாம், ஆனால் மீண்டும் திரும்பியது ஏனோ மனதில் நிறைவும், மகிழ்ச்சியும்..😍- எந்த ஊர் என்றவரே..!
அம்மணி சிலையின் வடிவமைப்பை உற்று நோக்குங்கள்.. நீங்கள் பதிந்த இணைப்பில் உள்ள சிலை, இரண்டு கைகளையும் கீழே வைத்துக்கொண்டு சில்வர் நிறத்தில் உள்ளது. நான் இணைத்த படத்தில் உள்ள சிலையின் உருவமைப்பும், நிறமும் வேறு. இல்லை, நந்தன் தவறான பதில்.- எந்த ஊர் என்றவரே..!
இல்லை, தவறான பதில், புங்கை..! சிலையின் உருவ ஒற்றுமை ஏறிக்குறைய இருப்பதால், இச்சிலை ஈழத்தில் தான் உள்ளது. ஆனால் எந்த ஊரில்..?- எந்த ஊர் என்றவரே..!
தவறான விடை, அம்மணி.- விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
சாமிகளே, என்ன மாதிரி பக்க விளைவுகளை, மாற்றங்களை உணர்கிறீர்கள்..? விவரிக்க இயலுமா..? நான் தடுப்பூசி போட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன. இதுவரை எந்த மாற்றத்தையும் உணரவில்லை. - "தாடி வளர்த்தது போதும்; ஷேவ் பண்ணிட்டு நாட்டை முன்னேற்றுங்க..!”
Important Information
By using this site, you agree to our Terms of Use.