Everything posted by ராசவன்னியன்
-
"தமிழ்நாடு" சின்னத்துக்கு பின்னால இவ்வளவு இருக்கா..?
"தமிழ்நாடு" சின்னத்துக்கு பின்னால இவ்வளவு இருக்கா..? பழைய செய்தி துணுக்குதான்.. ஆனால் அறிந்துகொள்ளும்போது இனிமைதான்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித்துக்கும், சகாறா 'அக்கா'வுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 🌹
-
Lauterbrunnen - கொள்ளை அழகு..
நல்லவேளை.. செலவில்லாமல் அரிதாக கிடைத்த வாய்ப்பு.🤩 இப்பொழுதும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே கொரானா சோதனை செய்யப்படுகிறது. ஐரோப்பியர்களுக்கு இல்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சமீபத்திய செய்தி.. வாழ்த்துக்கள்..!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இணையத்தில் வந்தது.. செய்தி உண்மையானால் நல்லதே..! 👌- எங்கட ஊர்..?
சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி சந்தையில் படமாக்கப்பட்ட நாட்டுப்புற பாடல் காணொளியை பார்த்தது முதல் அடுத்து ஏதாவது ஈழத்து மண் வாசனையுடன் கிராமிய பாடல் எதுவும் இணையத்தில் உள்ளதா..? என தேடியபோது கிடைத்தது கீழேயுள்ள பாடல். பால்ய வயதில் கிராமத்து வயல்களில், ஓடைகளில் தோழர்களுடன் சட்டையில்லாமல் விளையாடிய எனது அனுபவம்.. கனாக் காலங்கள்..! இப்பொழுது கிராமத்திற்கு சென்றால் ஏக்கத்துடன் நினைத்துக் கொள்வதுண்டு. அக்காலத்தை இரைமீட்டிய பாடல் இது..!- Lauterbrunnen - கொள்ளை அழகு..
மீண்டும் காணாமல் போவதற்கு முன் சிறிய பகிர்வு..! சார்ந்த தொழிற் கல்வியின் மூலம் என்னிடம் தொற்றிக்கொண்ட பருந்துப் பார்வையின் மூலம் தமிழ் நாட்டின் சில மலைப்பகுதிகளை கண்டிருக்கிறேன். அதன் மூலம் இயற்கையாகவே சில குறிப்பிட்ட கட்டிடமோ அல்லது சிறப்பான அமைப்பு கொண்ட வடிவங்கள், ஓடைகள், அணைகள், பாலங்கள் போன்றவற்றை காணும்போது (Area of Interest) சாட்டிலைட் படங்களிலோ அல்லது கூகிள் மேப்பில் குறித்துவைத்து மனதில் நிறுத்திக்கொண்டால் அவை என்றும் மனதைவிட்டு நீங்காது. அப்படியான சிலவற்றின் வடிவங்களை மறுபடியும் ட்ரோன் காணொளி மூலம் காணும்போது நிச்சயம் அடையாளம் காண முடியும். அப்படி சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனென்(lauterbrunnen),வென்ஞன்(Wengen),கிரிண்டெல்வாட்(Grindalwald) போன்ற பகுதிகளில் நான் பார்த்து ரசித்து குறித்துக்கொண்ட சில பகுதிகளை இக்காணொளியில் காணும்போது ஏற்படும் இனிமையான அனுபவம் அலாதியானது. காலங்கள் மாறலாம், ஆனால் என் சுவிஸ் பயணத்தின் இனிமை நினைவுகள் என்றும் மறையாதிருக்கும். அதற்கு இதுபோன்ற காணொளிகள் உதவும். மீண்டும் பிறிதொரு நாளில் சந்திப்போம்..! 🙏- Lauterbrunnen - கொள்ளை அழகு..
நேரமின்மையாலும், வயதின் காரணமாக பயத்தாலும் தவறவிட்ட அருமையான பயணம், கிரிண்டல்வாடில் (Grindelwald) உள்ள இந்த த்ரிலிங் ஜிப் ட்ரைவ்(Zip drive)பயணம்தான். நாங்கள் கேபிள் கார் மூலம் மட்டுமே பயணம் செய்து பசுமை பள்ளத்தாக்குகளை ரசித்தோம். உறவுகள் யாரும் அங்கு சென்றால், தவறாமல் ஜிப் ட்ரைவில் பயணம் செய்யுங்கள்.😍- Lauterbrunnen - கொள்ளை அழகு..
இந்தியாவா............ஆஆஆ..........................? எனக்கு தமிழ்நாடு மட்டும்தான் தெரியும்..!- Lauterbrunnen - கொள்ளை அழகு..
என்ன சாமிகளே, படால்ன்னு இப்பிடி தீர்ப்பு எழுதிட்டீங்க..? 😜 சுவிஸ் உண்மையிலேயே இயற்கை தன் அழகை அள்ளித் தெளித்த சொர்க்கபுரிதான். சந்தேகமே வேண்டாம்..! இன்டர்லகன் நகரத்தின் தெருக்களினூடாக நாங்கள் நடந்து செல்கையில், பல இடங்களில் வயதானவர்களையே அதிகம் காண முடிந்தது. ஓய்வு பெற்றவுடன் இந்த சொர்க்கபுரியில் வீடு வாங்கி மீதமுள்ள நாட்களை ரசித்து அனுபவிக்கிறார்கள் போலும்..! என்னால் அவர்களை, அவர்களின் மலைசரிவின் வீடுகளை பார்த்து சிறு பொறாமையுடன் பெருமூச்சுதான் விட முடிந்தது.😍- Lauterbrunnen - கொள்ளை அழகு..
"டாப் ஆஃப் ஈரோப் - Jungfraujoch " செல்ல Lauterbrunnen ரயில் நிலையத்திற்கு வந்து மலை ரெயிலில் ஏறி, மலை மேலே மூன்று இடங்களில் ரயிலில் மாறி செல்ல வேண்டும். உச்சம் தொட்டு மேலே சென்றால் நின்றால் பனி மூடிய மலைகள், சறுக்கு விளையாடுமிடங்கள்.. வெண்பனி மூடிய பல இடங்கள்.. வெற்று மணல் பாலைவனத்தையே 23 வருடங்களாக பார்த்திருந்த எனக்கு இந்த பனிமலைகளை தொட்டு சறுக்கி சிலிர்த்த அனுபவத்தை இன்னமும் ரசிக்கிறேன்..! கீழே இணைத்துள்ள காணொளி அவ்விடத்தை பற்றி சொல்லும்..- Lauterbrunnen - கொள்ளை அழகு..
பொடி நடையாக இந்த கிராமத்தில் புல்வெளியினூடாக சிறு பாதைகளில் நடந்தால் இன்னும் பல இடங்களை ரசிக்கலாம்.- Lauterbrunnen - கொள்ளை அழகு..
உண்மையை சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..? எங்களுக்கு ஒரே தாகமாக இருந்தது. முதல்முறை, உடன் வந்த அரபி வற்புறுத்தி கூப்பிட்டதால் (எனக்கு காஃபி சாப்பிடும் பழக்கம் இல்லாவிட்டாலும் )உள்ளே அவர்களுடன் சென்று உட்கார்ந்திருந்தேன்.சிறிது நேரம் கழித்து வந்துவிட்டேன். மறுபடியும் உள்ளே சென்று வந்தேன், தப்பா நினைக்காதீங்க, ரெஸ்ட் ரூமிற்குத்தான்..! 😜 மற்ற எதையும் கவனிக்கவில்லை..! 🤣 பாஞ் அவர்களிடம் வாட்ஸ் அப்பில் கேட்டேன், அவரும் இங்கிருக்கும் விசேசம் மற்றி ஒன்றும் சொல்லவில்லை.- Lauterbrunnen - கொள்ளை அழகு..
Lauterbrunnen மற்றும் Grindelwald ஆகிய இரு இடங்களும் அவசியம் கால்நடையாக நடந்து ரசிக்கக் கூடிய அற்புதமான இடங்கள். என்னுடன் வந்த இருவருடனும் சில தூரம் நடந்துவிட்டு, பின்னர் காரிலேயே சுற்றிப் பார்த்தோம். "Top of Europe" இன்னும் அற்புதம்..! நேரம் கிட்டும்போது சுவிட்சர்லாந்து பயண நினைவுகளை எழுதுகிறேன்.- Lauterbrunnen - கொள்ளை அழகு..
என்னுடைய சுவிஸ் வருகை திட்டமிடாத திடீர் அலுவலக விசயமான பயணம்தான்.. ஒருத்தரின் தொடர்பு எண் இருந்ததது சூரிட்ஸ் இறங்கியதும் அழைத்தேன், மற்ற அண்மித்த உறவுகளின் தொடர்பு எண்கள் இல்லாதபடியால் அழைக்க இயலவில்லை. வருத்தமாகவே இருந்தது. மன்னிக்க வேண்டுகிறேன். படத்திலுள்ள இரு இடங்களுக்குள்ளும் இரண்டு முறை சென்று வந்தேன்.😝 நிச்சயம் கலந்துகொள்வேன்.- Lauterbrunnen - கொள்ளை அழகு..
சுவிட்சர்லாந்து வருகை முதலில் இரண்டு நாள் திட்டமாக இருந்தது. பின்னர் பலரும் சொல்லிய இடங்களை சுற்றிப்பார்க்க அதாவது சுவிஸ் ஆல்ப்ஸ் (Top of Europe), இன்டெர்லகன் மற்றும் லுசன்ட் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகள் மிகவம் ரம்யமானவை, வாழக்கையில் தவறவிடக்கூடாது என சொல்லியதால், நான்கு நாட்கள் சூரிட்சில் தங்கியிருந்து அலுவலக வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு இரண்டு முறை இன்டர்லகன் மற்றும் லுசன்ட் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்துவிட்டு ஞாயிறு அதிகாலை துபாய் திரும்பினேன்.- Lauterbrunnen - கொள்ளை அழகு..
இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மூன்று அடுத்தடுத்த அருவிகளுடன் பசுமை பள்ளத்தாக்கு நம் மனதை போட்டுத் தாக்குகிறது. இயற்கையின் கொள்ளை அழகு.. திரும்பி வர மனம் இல்லை..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் சடையேல்ல.. ! 😜 ஆளை மேலெயுள்ள படத்திலுள்ளது போல பார்த்த ஞாபகம்..🎤 அதான் பொருத்தமான பெயரை போட்டிருக்கு..! 😀 👆 சரியோ..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன இருக்கபோகுது..? 🤔 உடுப்பை மாறி மாறி போட்டு ஆறு வித்தியாசம் காட்டினாலும் உள்ளே இருப்பது ஒன்றுதானே? 🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இசை பிரியனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!🌹- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இருக்கிற வசதிகளை கொடுப்பதில்லை.. 😡 இதையாவது முதல் பக்கம் தெரியுமாறு Promote செய்யுங்கள். 🤔- முதல்ல ஒங்களை நம்பலை.. அதனால் பயமில்லை..
குக்கிராமத்தில் பிறந்து, பெரிய நகரங்களின் முகமறியாது வளர்ந்து, பதின்ம வயதில் 70 களில் சென்னைக்கு முதன் முறையாக தனியாக சென்று ஓரிரு நாட்கள் தங்க நேரிட்டது. சென்னையை பற்றி பலரும் சொன்னது, படங்களில், செய்திகளில் படித்தது என அனைத்தும் ஞாபகத்தில் வந்து மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்க மனம் தூண்டியது. ஆட்டோவில், மாநகரப் பேருந்துகளில் செல்லும்போது அடிக்கடி பர்ஸை தொட்டுப்பார்த்துக்கொள்வது வழக்கம்.. நகரப் பகுதிகளைப் பற்றி தெரியாததால் 6 மணிக்கெல்லாம் உறவினரின் வீட்டுக்கு திரும்பிவிடுவதும் வழக்கம். அதேமாதிரி இக்காணொளியில் வரும் பெண்ணின் சென்னையை பற்றிய மனநிலையை திரையில் பார்த்தவுடன், என் பழைய இளமைக்கால நினைவுகள்..புன்முறுவல்கள்.. ரொம்பவும் ரசிக்கும்படியாக திரைமயமாக்கியவரின் கைவண்ணம் இருந்தது.- அன்றும், இன்றும்..
எமிரேட்ஸ் விமான நிறுவனம் கடந்த 30 வருடங்களில்லாத $6பில்லியன்கள் நஷ்டத்தை (கொரானாவினால் பயணிகள் இல்லாமல்) இவ்வருடம் சந்தித்துள்ளது. Loss பல ஏர்பஸ் A380 ரக விமானங்கள், விமான நிலையத்தின் ஓரங்கள் துணிபோட்டு மூடி நிறுத்தி வைத்திருப்பதை தினமும் அவ்வழியே செல்கையில் பார்க்கிறேன்.- அன்றும், இன்றும்..
சாராயக்கடை திறப்பதற்கு முன் பூசையிட்ட குடிமகன் - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.