Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. பகிர்விற்கு நன்றி தமிழ்சிறி.. இன்னும் ஆழமாக தமிழ்நாடு உருவாகிய வரலாற்றை தோண்டினால், கூடி வாழ்ந்தே தமிழர் குடிகெடுத்த 'கொல்டி'களின் சூழ்ச்சியும், காங்கிரஸின் துரோகமும் அறிந்து நமக்கு வருத்தமும், வேதனையுமே மிஞ்சும்.. கடந்த வருடம் திருப்பதி பகுதிகளில் பயணம் செய்தபோது இந்தியாவில் இணைந்ததால் தமிழர்கள் இழந்த பகுதிகளை எண்ணி வருந்தவே முடிந்தது..!
  2. மருத்துவ படிப்பிற்கு வஞ்சகமாய் நுழைத்துள்ள கிந்திய அரசின் 'நீட்(NEET)' தேர்வு துரோகத்தால் தற்கொலையான மாணவி அனிதாவின் மரணத்தால் கொந்தளித்துகொண்டிருக்கும் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாய் இத்தமிழனின் காணொளியை பார்க்கிறேன்.. நன்றி ஐயா..!
  3. மீதேன் நோ.. சுகில் மாஃபி.. தமிழ்நாட்டில் விளைநிலங்களில், மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறையை அரபியிடம் விளக்கியபோது அரபியின் ரியாக்க்ஷன்..
  4. ஒய் திஸ் கல்லி வல்லிdi..? பல வருடங்களாக குப்பை கொட்டுவதால் சில அரபி வார்த்தைகள் புரிந்தாலும், பட்டான்களின் கலாச்சாரத்தில் இந்த தமிழ் உல்டா பாடலுடன் அவர்களின் ஆட்டம் சிரிப்பை வரவழைக்கிறது..
  5. "ஈரம்" படத்தில் காதலின் அடிப்படையான நம்பிக்கையை வலியுறுத்தும் அருமையான காட்சி.. " I still Love her.. I still believe her.."
  6. பாதகாணிக்கையில், அத்தானை தேடும் பல்லவி..! "அத்தை மகனே போய் வரவா.. அம்மான் மகனே போய் வரவா.."
  7. மனதிற்கு சாந்தி தரும் அருமையான முருகன் பாடல்கள்..
  8. 'ஈட்டி' படத்தில்.. முன்பின் பார்த்திராமல் தொலைப்பேசியில் விபத்தால் மலர்ந்த காதல், சந்தர்ப்ப சூழலால் சென்னையில் ஒருவரையொருவர் சந்திக்க வாய்க்கிறது.. சந்திக்கும் இடமும் தீர்மானிக்கப்பட்டு காதலர்கள் இருவரும் அவ்விடத்தை நோக்கி ஆர்வமுடன் செல்கிறார்கள்.. ஆனால் நடப்பதோ..? நல்ல திருப்புமுனையுடன் இடைவேளை வருகிறது..ரசியுங்கள்..!
  9. 'வாழ்க்கைப் படகு'(1965) படத்தில் முத்தாய்பாக ஆரம்பிக்கும் பெண்மையை போற்றும் கண்ணதாசனின் பாடல் மிக இனிமையானது.. "ஆயிரம் பெண்மை மலரட்டுமே.. ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே.. ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்..!"
  10. என் இதயத்தில் தாக்குதல்.. இந்தோனிசியாவின் பாப் பாடகி 'சிட்டா சிட்டட்டா'வின் பாடலுக்கு நடனமாடும் குழந்தைகள்..! So cute..
  11. இளையராசா இசையால் தமிழர்களை கட்டிப்போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.. "பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு.. உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.. " நானே நானா.. யாரோ தானா.. ? மெல்ல மெல்ல மாறினேனா..??
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பெரியோர்களே..! Enjoy the life..
  13. "அம்மா.. அம்மா.. நீ எங்க அம்மா.. ஒன்ன விட்டா.. எனக்காரு அம்மா.."
  14. ஆளைக்கொல்லும் ஆன்லைன் விளையாட்டு.. குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? சென்னை: உயிரை குடித்து வரும் 'ப்ளூவேல்' கேம்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் தனது குழந்தை ஆன்ட்ராய்டு போனிலேயே மூழ்கிகிடக்கிறார் என்று பெருமை பேசுவதை பெற்றோர் நிறுத்திவிட்டு அவரது உயிரை காக்க முயற்சியுங்கள். அன்றைய காலகட்டங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனி விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்தன. ஆண்களுக்கு வீரம் கலந்து விளையாட்டுகளும், பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையிலான விளையாட்டுகளும் இருந்தன. உதாரணமாக, ஆண்களுக்கு ஜல்லிக்கட்டு, கபடி, கம்பு சுற்றுதல், சிலம்பம், மாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகளும், பெண்களுக்கு கல்லாட்டம், ஸ்கிப்பிங், தாயம், பரமபதம், பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளும் இருந்தன. பயத்தின் காரணமாக இன்றைய காலகட்டங்களில் கடத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பதில்லை. அதிலும் குழந்தையையும் விட்டு வைக்காத இந்த பாலியல் தொந்தரவு உள்ளிட்டவற்றால் பெண் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதற்கே பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேற்கத்திய கலாசாரம் இதனால் உட்கார்ந்த இடத்தில் விளையாடும் விளையாட்டுகளான வீடியோ கேம்ஸகளை விளையாடி வந்தனர். தற்போது படுத்துக் கொண்டே விளையாடும் அளவுக்கு ஆன்ட்ராய்டு போன்களை கையில் எடுத்தால், கீழே வைக்காத அளவுக்கு குழந்தைகள் அதில் மூழ்கிவிடுகின்றனர். பெற்றோர் கண்காணிப்பு குறைவு இதுபோல் தனியாக குழந்தைகளிடம் செல்போன் கொடுத்துவிட்டு விளையாட வைப்பதால் குழந்தைகள் தவறான ஆபாச தளங்களுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் அதுபோன்ற சைட்டுகள் குழந்தைகளின் கண்களில் படாதபடி ஃபையர் வால் போட்டு பெற்றோர் பாதுகாத்தனர். அரசும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வந்துவிட்டது எமன் இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட பெற்றோருக்கு உயிரை குடிக்கும் எமனாக ப்ளூவேல் விளையாட்டுகள் வந்துள்ளது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்பதை கூட கண்காணிக்க இயலாத நிலையில் இன்று பணத்துக்காக ஆளாய் பறந்து வருகின்றனர். விபரீதம் இதனால் தனிமையில் உள்ள குழந்தைகள் ப்ளூவேல் போன்ற உயிரை மாய்த்தும் கொள்ளும் விளையாட்டுகளில் மூழ்கிவிடுகின்றனர். இது தெரியாமல் தன் பிள்ளையிடம் ஆன்ட்ராய்டு போனை கொடுத்துவிட்டால் போதும் மணிக்கணிக்கில் அதில் மூழ்கிவிடுவான். எல்லாம் ஆப்ஷன்களும் அவனுக்கு தெரியும் என்று பெருமையடித்துக் கொள்கின்றனர். பெருமை பேசுவதை நிறுத்துங்கள் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு பெற்றோர் எந்த விளையாட்டை விளையாடுகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இந்த விளையாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடியாத நிலையில் பெற்றோர் தான் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை உணர வேண்டும். கண்டுபிடித்தால் இந்த ப்ளூவேல் கேம் என்பது முழுக்க முழுக்க குழந்தைகளை மூளைசலவை செய்து அடிமையாக்கும் விஷயமாகும். இதனால் மனமுடைந்த குழந்தைகள் நிச்சயம் நோட்டு புத்தகங்களில் ப்ளூவேல் படத்தை வரைந்தோ அல்லது வார்த்தையால் எழுதியோ வைத்திருப்பர். இதை கவனிக்க வேண்டும். மேலும் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை எழுந்தால் விசாரிக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் பிள்ளை ப்ளூவேல் கேம் விளையாடுவது குறித்து தெரிந்தால் அவர்களிடம் விளையாட கூடாது என்று சத்தியம் வாங்குவதை கைவிடுங்கள். மருத்துவரிடம் நல்ல மருத்துவரிடம் கொண்டு போய் கவுன்சலிங் கொடுக்கத் தவற வேண்டாம். கவுன்சலிங் கொடுத்தபிறகும், குழந்தையுடனேயே இருக்க வேண்டியது அவசியம். மேலும் எந்த பிரச்சினையாக இருந்தால் தன்னிடம் சொல்ல வேண்டும். யார் மிரட்டினாலும் தன்னிடம் சொல்ல வேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு தைரியம் கொடுங்கள். தைரியம் கொடுங்கள் உங்கள் தைரியமே அவர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும். அப்படியே உங்க வங்கிக் கணக்கில் உள்ள பணங்களை எடுத்துவிடுவதாக அவர்கள் மிரட்டினாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் குழந்தை போனால் என்ன செய்ய முடியும் என்பதை நினைத்து பாருங்கள். காசு, பணத்தை விட நீ தான் பெரிது என்று குழந்தையிடம் சொல்லுங்கள். உங்கள் கண்காணிப்பில் வெளியே விளையாட அனுமதி கொடுங்கள். இதை ஒவ்வொரு பெற்றோரும் செய்தால் ப்ளூவேல் கேம் விளையாடுவதை தடுத்துவிடலாம். தற்ஸ்தமிழ்
  15. வெகு எளிமையாக, அருமையாக இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர்.. அந்த வீடியோ கலைஞருக்கு ஒரு சபாஷ்!
  16. திரைப்படங்களில் சில சாதாரண, எளிமையான காட்சிகள். நம் மனதைவிட்டு அகலாமல் நிரந்தரமாக நின்றுவிடும்.. அவற்றில் சில காட்சிகள் கீழே.. சமீபத்தில் வெளியான 'வெற்றிவேல்' படத்திலிருந்து..
  17. அழியாத கோலங்கள்..! 'அழகி' படத்தில் இடம்பெற்றுள்ள இந்த நகைச்சுவை காட்சிகள், சிறுவயதில் எங்கள் கிராமத்தில் நடந்தவற்றை அப்படியே பிரதிபலிக்கிறது.. குறிப்பாக குனிந்து, நிமிர்ந்து வாய்ப்பாடு ஒப்புவிக்கும் முறையும், புதிதாக குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது நடைபெறும் நிகழ்ச்சியும் அருமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.