Everything posted by ராசவன்னியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- கேலக்ஸி S9 - 'புர்ஜ் கலீபா'வில் வர்ண ஜாலம்..!
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- ட்ராவலேட்டர்..
இத்திட்டம் ஏழு வருடங்களுக்கு முன் போடப்பட்டது.. மத்திய அரசு ஜவ்வாக இழுத்தடித்து, இப்பொழுதான் முடிவிற்கு வந்திருக்கிறது.. ஒரு முனையத்திலிருந்து மற்றொரு முனையத்திற்கு இதுவரை பேட்டறி கார்கள் தான் இயங்கி வந்தன. பயணப்பொதிகளை தூக்கிகொண்டு அலைவது மிக சிரமமாக இருக்கும். இனி வருகை தளம் வந்தவுடன் மின் தூக்கி மூலம் மேலே ஏறி ட்ராவலேட்டர் மூலம் இரு முனையத்திற்கும், மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் எளிதாக செல்லலாம். இதில் திராவிடக் கட்சிகளின் பங்கு ஏதும் இல்லை, தமிழ் சிறி..!- ட்ராவலேட்டர்..
கடந்த நான்கு மாதங்களாக சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கும், உள்நாட்டு விமான முனையத்திற்கும் இடையே இணைக்கும் தானியங்கி நகரும் நடை மேடை (ட்ராவலேட்டர்) அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவுற்று இம்மாத இறுதிக்குள் மக்கள் பாவனைக்கு திறக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியின் நீட்சி சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தையும் இணைக்கிறது. மேலதிக செய்திகளுக்கு கீழே சொடுக்கவும்.. இந்து- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தங்கள் சுய விவரணையில்(Profile) வயது 10 என்கிறது. நிச்சயம் பத்து வயது குழந்தைக்கு, திருமணத்திற்கு 'உவகை'யில் வரன் தேடுமளவிற்கு குழந்தைகள் இருக்காது. 60 வயது என்பதும் வதந்தி என்கிறீர்கள். .. குழப்பத்தை தீர்க்க, தங்கள் பிறப்பு சான்றிதழை காண்பித்தால் நன்று..!- "ஹைப்பர் லூப்" - அதிவேக போக்குவரத்து!
ஹைப்பர் லூப் துபாய் ஆர்.டி.ஏ(RTA) நிறுவனத்தால் துபாயிலிருந்து அபுதாபி வரை செல்ல அதிவேக "ஹைப்பர் லூப்" (Hyper Loop) போக்குவரத்து வடிவமைப்பு திட்ட வடிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் செல்லும் வாகனங்கள், துபாயிலிருந்து அபு தாபிக்கு 12 நிமிடத்தில்(140கி.மீ தூரம்) சென்றுவிட முடியுமென்கிறார்கள். சாதாரணமாக இந்த தூரத்தை அடைய பேருந்து மூலம் பயணித்தால் 1 மணி 30 நிமிடங்கள் நேரம் செலவாகும். இத்திட்டம் மிக கூடிய விரைவில் செயல் வடிவம் பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. Check this video.. மேலதிக செய்திகளுக்கு, இணைப்பை சொடுக்கவும்! கலீஜ் டைம்ஸ்- அடார் 'லவ்' - யாருகிட்ட.. ம்..?
அந்த சிரிப்பிற்கான 'பொருள்' எனக்கும் தெரியும்தானே..? மேலேயுள்ள காணொளி 'கோரல் வீடியோ(Corel Video Studio Ultimate)' மென்பொருளால் தயாரித்தேன்.. பொருத்தங்களுக்கு 'உவகை'யை நாடும் நேரமும் உங்களுக்கு வந்துவிட்டதால் நீங்களும் இந்த மென்பொருளில் பயிற்சி எடுக்கலாம்.. பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும்..!- அடார் 'லவ்' - யாருகிட்ட.. ம்..?
சில நேரம் திட்டப்பணிகள் இல்லாத நேரங்களில் ஓய்வாக இருக்கும்.. அப்பொழுது இம்மாதிரி ஏதாவது விடயம் கிட்டினால், 'அட..! இதை சிறிது உல்டா செய்து யாழில் பதிவிடலாமே!' என தோன்றும்.. அப்படி உருவாக்கியதுதான் இந்தக் காணொளி..! இங்கே வேலைக்கு சேரும்போது டிஸ்கோ & ஸ்டெப் கட்டுடன் இருந்த எனது தலைமுடியின் நேர்த்தி, பணி அழுத்ததினால் பின்புறம் பிறை விழுந்து நரைகளும் வந்துவிட்டது. உங்களை மாதிரி இல்லை, தமிழ்சிறி..!!- அடார் 'லவ்' - யாருகிட்ட.. ம்..?
நான் தனித்தனியாக கிடைத்த காணொளிகளை இணைத்து தமிழ் எழுத்துக்களால் தலைப்பு சேர்த்து ஒரே காணொளியாக வெளியிட்டுள்ளேன்.. இதன் மூலத்தை நகைச்சுவையுடன் கற்பனையை கலந்து உருவாகியவர்களின் திறமையை நிச்சயம் பாராட்ட வேண்டும்.. அதுவும் அர்னால்டு உருவத்தை 'மாஸ்க்' செய்து படக்கலவை செய்த விதம் அருமையான கற்பனை வளம்.- அடார் 'லவ்' - யாருகிட்ட.. ம்..?
அவரு ஆஸ்திரியாவாச்சே..?- அடார் 'லவ்' - யாருகிட்ட.. ம்..?
அடார் ‘லவ்’வா..? யாருகிட்ட..? பிரியா பிரகாஷின் முக பாவனைகள், க்யூட் எக்ஸ்பிரஷன்கள் பலரையும் கவர்ந்து வீழ்த்தினாலும், ஒருத்தர் மட்டும் அசராமல், "அம்மாடி.. உன் சில்மிசத்தை வேறெங்காவது போய் காட்டு..!" என கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றினர்.. யாரவர்..? என்ன எதிர்வினை..?? காணொளியை இறுதிவரை பாருங்கள் தெளிவீர்கள்..!- தமிழ் தொன்மையானது' என மோடி கூறியது உண்மையே..!
'தமிழ் தொன்மையானது' என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம் தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், 'பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம்' என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 'தி இந்து'விடம் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: 'மொழி என்பது பல்லாயிரம் காலம் மக்களால் பேசப்பட்டு வந்தாலும், அதற்கான சான்றுகள் கிடைத்தால் தான் அதன் காலத்தை அறிய முடியும். வட இந்தியாவில் கிடைத்த முதன்மையான கல்வெட்டுகளான அசோகன் கல்வெட்டுகளின் மொழி சமஸ்கிருதம் அல்ல. அவை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த 'பாகதம்' என்று சொல்லக்கூடிய 'பிராகிருத மொழி' ஆகும். இதை மகதப்பகுதி மொழி வழக்கு என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். வேதங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் குடும்ப மொழியால் பாடல்களாகப் பாடப்பட்டவை. காலத்திற்கு ஏற்ப அவை திருத்தம் பெற்றவை. எனவே வேதங்கள் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றவை என்பது சான்றுகள் அற்ற வாதங்கள். இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருத வழக்கின் கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. அதில், அசோகர் காலத்தில் இருந்த நீர் அணையை அவருக்குப் பின் வந்த ருத்ரதாமன் என்பவர் புதுப்பித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜுனாகரில் இந்த நீர் அணை அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக பிராகிருத மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் இருந்து அசோகர் காலத்து பிராகிருதம் அடுத்த 200 ஆண்டுகளில் ருத்ரதாமன் காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதத் தொடங்கி இருப்பதை உணரலாம். கி.மு.500-க்கு முற்பட்ட தமிழி தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளிலும், இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களிலும் எழுதப்பட்டவை, 'தமிழி' எனப்படும் 'தமிழ்-பிராமி' எழுத்துகள் ஆகும். கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழாய்வுகளில் கிடைத்த தமிழி எழுத்துகள் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியல் காலக் கணிப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அசோகனுடைய காலத்திற்கும் 200 ஆண்டுகள் முற்பட்டது. 600 மட்கலன்களில் தமிழ் பிராமி தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் அங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்கலன்களில் தங்களின் பெயரை எழுதியுள்ளன. அண்மையில் நடைபெற்ற கீழடி அகழாய்விலும் கொற்கை கொடுமணல், அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர். கருவூர் போன்ற ஊர்களில் மட்கலன்களில் தமிழ் பிராமியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில் மட்டுமே 600 மட்கலன்களில் தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்கள் உள்ளன. கொடுமணல் அகழாய்வில் மக்கள் பயன்படுத்திய மட்கலத்தில் எழுத்துப் பொறிப்பு மட்கலப் பொறிப்புகளில் சமஸ்கிருதம் இல்லை வட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. தமிழில் உருவான சமஸ்கிருதம் மக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளிலிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே 'செய்யப்பட்ட மொழி' என்று பொருள். தலையான மொழி தமிழ் - ஐரோப்பிய அறிஞர்கள் தமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.' இவ்வாறு பேராசிரியர் ராசவேலு தெரிவித்துள்ளார். தி இந்து- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி, என்ன விரதம்..?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 60வது பிறந்தநாள் கொண்டாடும் ‘கொயந்தை’ தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்..- சிரிப்போமா..?
சிரிப்போமா..? மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க..?" கணவன் : "Unmarried-னு சொல்லுவாங்க" மனைவி : "யோவ் நில்லுய்யா.. ஓடாத..!!" ********* கணவர்: "இந்த பொடுகு மருந்தை தேய்ச்சி விடேன்டி!" மனைவி: "ஏன், நீங்களே தேய்க்க கூடாதா?" கணவர்: "அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர் சொல்லி அனுப்பினார், அதான் உன்னை கூப்பிட்டேன்.." ********* சன்யாசிக்கும், சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்? புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி. புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி. ********* கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா... 'ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி "வரமா" இருக்கனும்..! இல்ல, ஊருக்கு போன மனைவி "வராம" இருக்கனும்...!! ********* மகன்: சகலை என்றால் என்னப்பா? அப்பா: ஒரே கம்பெனி பொருளை வாங்கி ஏமாந்தவங்கப்பா... ********* மகன்: "Daddy....இந்த அப்ளிகேஷன்லே, 'Mother Tongue' குன்னு இருக்கு... என்ன எழுத..?" அப்பா: "ரொம்ப நீளம்னு எழுது..." -படித்தது.- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்க்கும்..! சித்தராமையா தடாலடி பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இன்னும் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், நேற்று, காவிரி வழக்கில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று நிருபர்களிடம் கூறுகையில், "பொதுவாக எந்த ஒரு நதிநீர் விவகாரமாக இருந்தாலும், மேலாண்மை வாரியம் அல்லது, கண்காணிப்பு குழு அமைப்பது வழக்கம்தான். காவிரி விவகாரத்தில் கண்காணிப்பு குழு ஏற்கனவே செயல்பட்டு வருவதால், மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும். காவிரி பாசன மாநிலங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஒருங்கிணைத்து இதற்கு தீர்வு காண வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதாக ஊடகங்களில் தப்பாக செய்தி வெளியாகியுள்ளது. நான், தீர்ப்புக்கு பிறகு கர்நாடக, வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே தவிர, குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை(?) என தெரிவித்தனர். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார். ஒன் இந்தியா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், அகஸ்தியன், நுணா.- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
'விவசாயி நல்லசாமி' சொல்வதில் நியாயம் இருக்கிறது.. ஒவ்வொரு நாளும் இவ்வளவு நீர் என பிரித்துக் கொடுத்துவிடுவதே சிறந்த வழி, குழப்பங்களை, மனக்கசப்பை தவிர்க்கும்.- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
நிச்சயம் வராது. ஏட்டில் மட்டுமே இருக்கும்..! இந்தியாவின் நீதி(?)யை எவரும் மதிப்பதில்லை. தமிழக மக்களும் சில நாளில் மறந்து அடுத்த சூடான செய்திக்கு மாறிவிடுவார்கள். ஒரே உலக அதிசயம், ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமே.அதுவும் மிகவும் வீக்கான மந்திரிசபை இருந்ததால் தான் அவ்வளவு கூட்டம். அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் இவ்வளவு பெரிய அளவில் வளர விட்டிருக்க மாட்டார். ஏவல்துறையை ஏவி அடக்கியிருப்பார்.- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
இருக்கிற 'கூத்தாடிக் கோமாளிகள்' பத்தாதுன்னு இவரு வேறை 'ஆன்மீகம், கோமியம்'ன்னு அரசியலை குழப்புறது..- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
'மத்திய அரசு நியாயமான தீர்வை தரும்' என நம்பியிருப்பது இலவு காத்த கிளி கதை தான். இரண்டே வழிகள்: இலவசங்களுக்கு சோரம்போகும் மக்களின் எண்ணம் மாறி, அசுர பலம் பொருந்திய, தீர்க்கதரிசியான தமிழக தலைமை வரவேண்டும்.. அல்லது தனியாக பிரிந்து சென்று பண்டைய மன்னர்கள் போல் தட்டிப்பறிக்க வேண்டும்.. இரண்டுமே தற்போது கானல்நீர் தான்..!- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நதிநீர் வழக்கு: தீர்ப்பின் முக்கியம்சங்கள்! புது தில்லி: "காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை!" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று வெளியிட்ட தீர்ப்பில் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்திருந்தார். மேலும், காவிரியில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டது. அந்த தீர்ப்பில், காவிரி நீர் என்பது தேசத்தின் பொதுச் சொத்து. காவிரி நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்துக் கூறியிருந்தனர். காவிரி நதிநீர் எங்களுக்கேச் சொந்தம் என்று கர்நாடகம் கூறி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர். தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து 184.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியரசுத் தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. குடிநீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பெங்களூருவுக்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழகத்துக்கு நிலத்தடி நீர் இருப்பதை நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும், நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், 'காவிரி நதிநீர் விவகாரத்தில் மெட்ராஸ் - மைசூர் இடையேயான ஒப்பந்தம் செல்லும் என்றும், அதன்படி, 1892, 1924ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி நதியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட முடியாது' என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்படும் 14 டிஎம்சி தண்ணீரில் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு 4 டிஎம்சியும், தொழில் நிறுவனங்களுக்கு 10 டிஎம்சியும் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடகம் வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகள் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு' என்று தெரிவித்துள்ளார். தினமணி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.