Everything posted by ராசவன்னியன்
-
சென்னையில் ஈரடுக்குச் சாலை..!
சென்னையில் ஈரடுக்குச் சாலை.. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் ஒரு பகுதி, அடுக்குச் சாலையின் மீது தரமணியிலிருந்து சிறுசேரி வரை 17.2 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படவிருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலை, ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’யாக, 2000-களின் தொடக்கத்தில் மாறிய பிறகு, சென்னை நகரம் தன்னை மெட்ரோ நகரமாகப் புதுப்பித்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே நெரிசலாக இருக்கும் ஆறு-வழி ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’ இப்போது எதிர்காலத்துக்கான சாலையாக மாறவிருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், நான்கு வழி அடுக்குச் சாலையின் மேல் மெட்ரோ ரயிலின் உயர்தடம் அமைக்கப்படும். தரமணியிலிருந்து சிறுசேரிவரையிலான 17 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தத் தடம் ‘எக்ஸ்பிரஸ்வே’-யில் அமைக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), தமிழ்நாடு சாலை வளர்ச்சி நிறுவனம் (TNRDC) என்ற இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்குப் பிறகு இந்த உள்கட்டமைப்புத் திட்டம் உருவாகியிருக்கிறது. இந்த அடுக்குச் சாலையின் முதல் கட்டம், ‘எஸ்.ஆர்.பி. டூல்ஸ்’ சந்திப்பிலிருந்து சிறுசேரிவரை, 5.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் மேலடுக்கில் 4.5 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் தடம் அமையவிருக்கிறது. சுங்க வசதியுடன் 2008-ம் ஆண்டு டிசம்பரிலிருந்து செயல்படும் இந்த ஆறு வழி சாலையில், நாள் ஒன்றுக்குச் சுமார் 63,000 வாகனங்கள் கடந்துசென்றன. தற்போது இந்தச் சாலையில் தினசரி 1.30 லட்சம் வாகனங்கள் கடந்துசெல்கின்றன. இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளுக்குமுன் முன்வைக்கப்பட்டது என்று ‘டிஎன்ஆர்டிசி’ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்தைப் பற்றிய விரிவான அறிக்கை மாநில அரசுக்குத் தாக்கல்செய்யப்பட்டது. நிதி ஆதாரம் திரட்டும் பணியில் தற்போது அரசு ஈடுபட்டிருக்கிறது. இரண்டு திட்டங்களில் முதலில் 17.2 கிலோமீட்டர் நீளம் இருக்கும் அடுக்குச் சாலை முதலில் தொடங்கப்படவிருக்கிறது. இந்தத் திட்டம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம். “சாலையில் அதிக இடத்தைக் கட்டுமானத்துக்காக எடுத்துகொள்ள முடியாது. அதனால், கூடுமானவரை கட்டுமான நேரத்தைக் குறைப்பதற்காக முன்னதாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் ‘டிஎன்ஆர்டிசி’ அதிகாரி ஒருவர். இந்த அடுக்குத் தடத்தை ஆறு-வழி சாலையில் திட்டமிடக் காரணம் அதன் அகலம்தான் என்கின்றனர் சி.எம்.ஆர்.எல். அதிகாரிகள். இதனால் கட்டுமானத்தை முடிப்பது எளிமையாக இருக்கும் என்று சொல்கின்றனர் அவர்கள். இந்தப் பாதை 22 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. டைடல் பார்க், பெருங்குடி, ஒக்கியம்பேட்டை, இன்ஃபோசிஸ், சத்யபாமா பல்கலைக்கழகம், சிறுசேரி, சிப்காட் உள்ளிட்ட 22 நிலையங்களை உள்ளடக்கியதாக இருக்கும். “இந்தத் தடத்தில் ஐடி துறையினர் அதிகமாகப் பயணிக்கின்றனர். அதனால், இந்தத் திட்டத்தை இரண்டாம் கட்டமாகத் தொடங்கவிருக்கிறோம்” என்று சொல்கிறார் அதிகாரி ஒருவர். குறுகிய காலத் தீர்வுகள்: சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டத் திட்டத்திலும் ஒரு மேம்பாலம் வடபழனி வழியாக அமைக்கப்பட்டது. இதை முடிப்பதற்கு ஆறு ஆண்டுகளானது. “இந்த மாதிரி திட்டங்களை முடிப்பதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும். சென்னை மெட்ரோ ரயில் வெற்றிபெறுவதற்குப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி முக்கியம். போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி இல்லாத மெட்ரோ ரயிலின் தேவை குறைவானதாக இருக்கும். ஏனென்றால், இந்தத் திட்டத்தை முடிக்க நீண்டகாலம் ஆகும். அதனால், குறுகிய காலத்துக்கு, விரைவுப் பேருந்து சேவை செலவு குறைந்த தீர்வாக இருக்கும்” என்று சொல்கிறார் ஐஐடி-மெட்ராஸ் போக்குவரத்துப் பொறியியல் துறை பேராசிரியர் கீதாகிருஷ்ணன் ராமதுரை. “ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையை இணைப்பதற்குச் சரியான சாலைகள் இல்லை. ‘ஓ.எம்.ஆர்.’ போக்குவரத்து நெரிசலை இந்தச் சாலைக் கட்டுப்படுத்தும். சிறிய உட்சாலைகளைப் பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும்தான் கிழக்குக் கடற்கரை சாலைக்குச் செல்ல இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர்” என்கிறார் போக்குவரத்தைத் திட்டமிடுபவர் ஒருவர். இந்தச் சாலையில் கட்டமைப்பு வளர்ச்சி இல்லாததால் வாகனங்கள் முக்கிய ‘கேரேஜ்வே’, ‘சர்வீஸ்’-வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. தி இந்து
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் யாழ் நட்சத்திர பதிவாளர்கள்... சண்டமாருதன், ரகுநாதன், வல்வை சகாறா மற்றும், முத்து, சிதம்பரதன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! வாழிய பல்லாண்டு..!! 'வயதில் மூத்தவரான' அன்பர் சண்டமாருதன் அவர்களுக்கான வாழ்த்துக் காணொளி இதோ..
-
தாயின் நம்பிக்கை..
தாயின் நம்பிக்கை.. குழந்தையின் மீதான தாயின் நம்பிக்கையை பற்றிய அருமையான சொற்பொழிவு..!
-
யாருக்கு ஒழுக்கம்..?
யாருக்கு ஒழுக்கம்..? அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்..?” மகள்.... கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள் .. “நூல்தாம்ப்பா பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது..! ” அப்பா சொன்னார், “இல்லை மகளே, நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு..!” மகள் சிரித்தாள். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. “ஒழுக்கம் இப்படியானதுதான் மகளே..! அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே..!” என்றார். ஒரு பெண்ணுக்கு ஒழுக்கமான வாழ்வே அவளை உயரே பறக்க வைக்கும். அதை 'சுதந்திரம்' என்ற போர்வையால் மூடிவிட்டு இஷ்டப்படி வாழுகிற போது கடைசில நூலறுந்த பட்டமாக ஆகிவிடுவாள். இது ஆண்களுக்கும் சேர்த்துதான்...! -படித்தது.
-
'துபாய் ஃப்ரேம்'
- 'துபாய் ஃப்ரேம்'
துபாயின் புதிய கவர்ச்சி அம்சமான "துபாய் ஃப்ரேம்" (Dubai Frame)கட்டிடம் வரும் சனவரி (2018) மாதம் முதல் மக்களின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. துபாய். துபாய் 'சபீல் பார்க்'( Zaabeel Park ) அருகில் இந்த புகைப்பட ஃப்ரேம் போன்ற கட்டிடம் சுமார் 150 மீட்டர் உயரமும், 93 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது. இந்த கட்டிடமானது பழைய துபாய் மற்றும் புதிய துபாயின் அழகினை தனித்தனியே ஒரு புகைப்பட ஃப்ரேமிற்குள் காண்பதுபோன்ற காட்சியைத் தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதன் வாயிலாக ஒட்டு மொத்த துபாய் நகரின் ரம்யமான அழகையும் நம்மால் ரசிக்க முடியும் என்றும், இந்த முயற்சி சுற்றுலப்பயணிகளால் மிகவும் வரவேற்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடத்தின் கடைசி மேல் தளத்தில் கண்ணாடியால் அமைந்துள்ள தளத்தின் மூலமாக ஒட்டு மொத்த துபாய் நகரின் எழில்மிகு அழகை பனோரமிக் காட்சியில் நம்மால் கண்டுகளிக்க முடியும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த கட்டிடத்தின் ஒரு புறத்தில் கீழிருந்து மேல் செல்லும் வகையில் கண்ணாடியினால் அமையவுள்ள 'லிஃப்ட்' மூலம் பழைய துபாய் பகுதிகளான கராமா, பர் துபாய், தெய்ரா மற்றும் துபாய் கிரீக் போன்ற பகுதியினை காணமுடியும் எனவும் அதே போல மற்றொரு பக்கத்தில் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, புகழ் பெற்ற ஏழு நட்சத்திர ஹோட்டலான புர்ஜ் அல் அரப் போனற புது துபாயின் அழகினைக்காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை பார்வையிட பெரியவர்களுக்கு திர்ஹாம் 50ம், சிறுவர்களுக்கு திர்ஹாம் 30ம் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். செய்தி மூலம்: https://www.khaleejtimes.com/nation/dubai/dubai-frame-to-open-to-the-public-in-january- சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2
சென்ற மாதம் சென்னை சென்றபோது சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.. மேம்பால பாதையில் கடக்கும் ரயில் நிலையங்களை விட சுரங்கப்பாதை ரயில் நிலையங்களின் குறைகள் சில இருந்தாலும் உள்கட்ட வடிவமைப்பு நன்றாக உள்ளது.. பகல் நேரங்களில் பேரனுடன் பயணம் செய்தபோது கூட்டம் குறைவாக இருந்தது.. ஆனால் மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் கூட்டம் அதிகமாக உள்ளது.. சென்னை சென்ட்ரல் வரை சேவைகள் திறந்தவுடன் கூட்டம் மிக அதிகமாக இருக்குமென தெரிகிறது.. புதிய மேம்பட்ட 'மெட்ரோ ரயில் சேவை', சென்னைக்கு ஒரு வரப்பிரசாதமே!- இண்டிகோ - அடிங்கோ..!
இண்டிகோ - அடிங்கோ..! இண்டிகோ விமான ஊழியர்கள், அதில் பயணம் செய்த பயணியை அடித்து வீழ்த்தி கழுத்தை நெரித்த காணொளி இணையத்தில் வைரலாக உலா வரும் இவ்வேளையில், அந்நிறுவனத்தின் வியாபார சின்னத்தை(Logo) மாற்றியமைத்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.. 'இண்டிகோ' என்பது 'அடிங்கோ'வாக மாறியுள்ளது..! சின்னத்திலுள்ள விமான படத்தையும் எட்டி உதைக்கும் விதமாக மாற்றியுள்ளனர். சின்னத்தின் கீழே அருமையான வாசகத்தையும் பொறித்துள்ளனர்.. "நம்பி வாங்க.. அடி வாங்கிட்டுப் போங்க..!"- சென்னையிலிருந்து டெல்லி சென்ற பயணியைத் தாக்கும் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்..!
சென்னையிலிருந்து டெல்லி சென்ற பயணியைத் தாக்கும் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்..! விமானப் பயணி ஒருவரை 'இண்டிகோ' விமான நிறுவன ஊழியர்கள் தாக்குவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏற முயற்சிக்கும் 'ராஜீவ் கட்டியால்' என்ற பயணியிடம் விமான நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், 2 ஊழியர்கள் அவரைத் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. அந்த சம்பவத்தின்போது உடனிருந்த மற்றொரு ஊழியரான 'மோண்டு கர்லா' என்பவர், அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து, தற்போது வெளியிட்டதாகத் தெரிகிறது. சம்பவத்தின்போது, சக ஊழியர்கள் அந்தப் பயணியைத் தாக்குவதை 'மோண்டு கர்லா' தடுக்க முயல்வதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. விகடன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்தமிழை என்றும் கற்றுக்கொள்ள ஆசைதான்.. ஆனால் வாத்தி கிட்டணுமே..? ஆள், 'பள்ளி'யை விட்டு விளையாடப் போய்விட்டார் போல தெரிகிறது, களம் வரட்டும், பிடிப்போம்..! பிடிப்போம்..!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- வழி சொல்லுங்க..!
வழி சொல்லுங்க..! விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு... அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு... கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு... த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது... சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு... அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது... பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு... விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு... ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்... எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள், இப்படித்தாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா? முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க... அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்...! முகநூல் இணைப்பை ரசித்தது- வாய்விட்டு பாடினால் நோய்விட்டு போகும்?
புறநகர் ரயிலில் களைகட்டிய கச்சேரி: வாய்விட்டு பாடினால் நோய்விட்டு போகும்? பல்லாவரம் ரயில் நிலையம்... அலுவலகம் செல்லும் காலை பொழுது... வழக்கம் போல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. அலுவலகம் செல்லும் அவசரத்தில் நானும் ஓடோடி வந்து பல்லாவரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறினேன். சுமாரான கூட்டம் தான். ரயில் புறப்பட்டு திரிசூலம் ரயில் நிலையத்தை நெருங்கியது. அவசர அவசரமாக வந்த பதற்றம் - வேகமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஆதங்கம், ஓட்டமும் நடையுமாக வந்ததால் டென்ஷன் குறைய வில்லை! திடீரென பாட்டுச் சத்தம் கேட்டது. புறநகர் மின்சார ரயில்களில் சிலர் பாட்டு பாடிக் கொண்டே பணம் வசூலிப்பது வாடிக்கை. அதுபோன்று சிலர் பாடுகிறார்களோ என எண்ணினேன். ஆனால் அது தவறு என சற்று நேரத்தில் தெரிந்தது. பாட்டு பாடியவர் சக பயணி, அவரது பாட்டிற்கு ரயிலின் சுவர் பகுதியில் தட்டி தாளம் வர வைத்துக் கொண்டிருந்தவரும் சக பயணி. வழக்கமான கச்சேரி போன்றே சுவாமி பாடலில் துவங்கி, சினிமா பாடல் என களைகட்டியது. நேரம் செல்ல செல்ல பலரும் அந்த கச்சேரி குழுவினருடன் இணைந்து கொள்ள தனி பாடலில் துவங்கி, குழு பாடல் என கச்சேரி முழு வீச்சில் நடந்தது. அவர்களது பாடலுக்கு மொத்த கூட்டம் தலையாட்டி கை தட்டி வரவேற்றது. பாட்டு பாடிய பலரும், நாற்பது வயதைக் கடந்தவர்கள். பலரும் அலுவலகங்களில் பணி செய்பவர்கள். அலுவலக நாட்களில் ஒன்றாக பயணம் செய்வதுடன், வித்தியாசமான முறையில் தங்கள் பயண நேரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். செய்தித்தாள் படிப்பது, அரட்டை அடிப்பது, அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது என புறநகர் ரயில்களில் முன்பு பார்த்த காட்சிகள் இப்போது இல்லை. செல்போன் வந்த பின்பு பயண நேரத்தில் அதை பார்ப்பதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ள ரயில் பயணிகள் ஏராளம். சக மனிதர்களுடன் மனம் விட்டு பேசுவது கூட குறைந்து விட்டது. இதுபோன்ற மனிதர்கள் மத்தியில், இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். மனம் விட்டு பேசுவது மட்டுமின்றி மனம் விட்டு பாடியபடி செல்கின்றனர். தங்கள் கல்லூரி நாட்களில், தங்களை ஈர்த்த சினிமா பாடல்களையும் மனம் விட்டு பாடி, மீண்டும் கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்திக் கொள்கின்றனர். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும், தினந்தோறும் வாய்விட்டு பாட வாய்ப்பு கிடைத்தால், அதை கேட்டு ரசிக்க ரசிகர்கள் கூட்டமும் இருந்து விட்டால் மகிழ்ச்சிக்கு குறைவு ஏது? தங்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம் சவுந்திரராஜன் என பாவித்துக் கொண்டு உருக்கமாக பாடினர். அவர்கள் குரலும், பாடிய விதமும், தொழில்முறை பாடகர்கள் போன்று இல்லா விட்டாலும், ஆத்மார்த்தமாக அவர்கள் பாடிய விதம் ரசிக்கும் படியாக இருந்தது. ஏறக்குறைய மினி மேடை கச்சேரியாக மாறியது ரயில் பயணம். எனக்கும் இது, புதிய அனுபவமாக இருந்தது. எனினும் அவரவர் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் இறங்கிக் கொண்டனர். புதியவர்கள் கச்சேரியில் இணைந்து கொண்டனர். ஆட்கள் மாறினாலும் கச்சேரி மட்டும் நிற்கவில்லை. நான் இறங்க வேண்டிய எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. கச்சேரி தொடர்ந்தது. நானும் பழைய நினைவுகளை அசை போட்டபடியே ரயிலில் இருந்து இறங்கி அலுவலகம் செல்லும் பேருந்தை பிடிக்க வேகமாக விரைந்தேன். தி இந்து- சென்னையின் முகம்..
- மோடி அரசின் மொத்த சாதனையையும் சொல்ல இந்த ஒரு படம் போதும்!
மோடி அரசின் மொத்த சாதனையையும் சொல்ல இந்த ஒரு படம் போதும்! சென்னை: மோடி அரசின் மொத்த சாதனையையும் ஒரே படத்தில் சொல்ல வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? இதோ இந்த படம்தான் அதற்கு சாட்சி என்கிறார் இந்த இயக்குநர். பாலிவுட் பட இயக்குநர் சிரிஷ் குண்டர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ள இந்த படம் வைரலாக சுற்றி வருகிறது. அந்த போட்டோவில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ஏடிஎம் மையத்திற்குள், பசு மாடு சாணம் போட்டுவிட்டு படுத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போனது. ஆட்சிக்கு வந்தது முதல் பசுவை பாதுகாப்பதாக கூறி, பாஜகவை சேர்ந்த உப, துணை அமைப்பினர் பல அட்டகாசங்கள் செய்தனர். ஸ்வச் பாரத் என்று கூறி நாட்டை தூய்மைப்படுத்துவதாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தனர். இவை ஒன்றோடொன்டு பிண்ணி பிணைந்து இந்த படத்தில் காணப்படுகிறது. ஏடிஎம் மையத்தில் கூட சுத்தம் இல்லை, பசுவை பாதுகாக்க ஆளில்லாமல் ஏடிஎம்முக்குள் படுத்துள்ளது. நாட்டில் பணப்பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் வரத்து ஏடிஎம்களுக்கு இல்லை. இப்படி ஒரு கோணத்தையும் காட்டுகிறது இந்த படம். தற்ஸ்தமிழ்- முதல் முறையாக துபாயில் பார்க்குமிடமெல்லாம் 2.0 டிஜிட்டல் பேனர்கள்!
துபாய்: ஒரு ஹாலிவுட் படத்துக்குக் கூட செய்யப்படாத புரமோஷன் ரஜினிகாந்தின் 2.0 படத்துக்கு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நாளை துபாயில் நடக்கவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ரூ 12 கோடி. நிகழ்ச்சி நடக்கும் துபாயின் முக்கிய மால்கள் அனைத்திலும் ரூ 2 கோடி செலவில் எல்இடி திரைகளை அமைத்து பொதுமக்களை இலவசமாகப் பார்க்க வைக்கின்றனர். துபாய் நகரில் இதற்கு முன் எந்தப் படத்துக்கும் வைக்காத அளவுக்கு டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். மால்கள், ரயில் நிலையங்கள், சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் 2.0 பேனர்கள்தான். இசை நிகழ்ச்சி நாளை நடக்கிறது. அதற்கு ஒரு நாள் முன்பாக, இன்று துபாய் பர்ஜ் அல் அரப் ஹோட்டலின் பெரிய ஹாலில் பிரஸ் மீட் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏஆர் ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் சர்வதேச செய்தியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டாலும், இலவசமாக 12000 பார்வையாளர்களுக்கு பாஸ் தரப்பட்டுள்ளது. இவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் இருபக்கத்திலும் நின்று பார்வையிடலாம். 2.0 இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்றே ரஜினிகாந்த் துபாய் வந்துவிட்டார். அவர் பர்ஜ் அல் அரப் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். தற்ஸ்தமிழ் Disc: துபாயில் தான் பணத் திமிரில், பொட்டல் பலைவனங்களை விட்டுவிட்டு, கடலில் மண்ணைக் கொட்டி, பணத்தினையும் கொட்டி கொட்டமடிக்கிறார்களென்றால், காய்ஞ்சுபோன நம்மாட்களும் அவர்களுக்கு இணையாக அபுதாபியிலும், துபாயிலும் காசை கரியாக்குகிறார்களே..! தமிழ்நாட்டில் விழா வைக்க இடமா இல்லை? இது பற்றிய வாசகர்களின் கருத்துக்கணிப்பு இதோ..- தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
புரிந்தது தமிழ்சிறி அவர்களே, ஆனால் அதில் சிறு இலக்கணப் பிழையிருந்தது.. சமகாலத்திற்கேற்றவாறு திருத்தம் செய்து மீள பதிந்துள்ளேன்.. சரியாக உள்ளதா..?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சசி.. வாழிய பல்லாண்டு!- தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
தீபாவளிக்கு பொருட்கள் வாங்க, சென்னையின் பகுதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்..- தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
இன்னாங்கப்பா இது..? ஈழத்தில், யாரும் தீபாவளி கொண்டாடுவது இல்லையா? ஏனிந்த அமைதி..??- 90-களுக்கு முன் தீபாவளி கொண்டாட்டம்..
தீபாவளியை வடிவேலு எப்படி கொண்டாடுகிறாரென இந்த காணொளித் தொகுப்பு அருமை..!- 90-களுக்கு முன் தீபாவளி கொண்டாட்டம்..
90-களுக்கு முன் தீபாவளி கொண்டாட்டம் : நெகிழ்வூட்டும் நினைவுகளின் பயணம்! தீபாவளி கொண்டாட்டம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இன்றைய தலைமுறை ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு சென்று விடுவார்கள். சென்ற தலைமுறையிடம் கேளுங்கள், ஒரு கட்டுரையே எழுதுவார்கள். நான்கைந்து நாட்களும் கொண்டாட்டம். தீபாவளி வரும் பத்து நாளுக்கு முன்னரே வீதிகளில் ஆங்காங்கே பழைய பட்டாசுக்கள் வெடித்து சிதறும். தாத்தா, பாட்டி தீபாவளி பணம், அம்மா சுடும் சுவையான பலகாரம். மாமா, பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கு வந்து செல்வது. தையல் காரரிடம் துணி தைக்க கொடுத்து காத்திருந்து வாங்கி உடுத்துவது. நிச்சயம் இந்த விஷயங்கள் உங்களை குழந்தை பருவத்திற்கு கூட்டி செல்லும். நினைவு #1 நண்பர்களில் யாருக்கு அதிக தீபாவளி பணம் கிடைத்தது என்ற தேடல். நினைவு #2 தைக்க கொடுத்த தீபாவளி புதுத்துணியை தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா ஏக்கம். நினைவு #3 ஒரு வாரத்திற்கு முன்னதாக அம்மா தீபாவளி பலகாரம் செய்யும் போது, அருகே அமர்ந்து சுடசுட ருசிப் பார்ப்பது. நினைவு #4 எண்ணெய் தேய்த்து, ஒருசில வார இதழ்கள், தின பத்திரிக்கைகள் இலவசமாக இணைத்து தரும் கங்கா நீர் கலந்து குளிப்பது. நினைவு #5 தெருவில் முதல் ஆளாக எழுந்து யார் பட்டாசு வெடிப்பது என்ற போட்டிப் போட்டு சீக்கிரமாக முதல் சரம் வெடிப்பது. நினைவு #6 ஆசை, ஆசையாக வாங்கி வைத்த புத்தாடையில், அம்மா எப்போது மஞ்சள் வைத்து தருவார் என காத்திருப்பது. (சிலருக்கு அந்த மஞ்சள் வைப்பது பிடிக்காது. அதற்கு அடம் பிடிப்பது தனிக் கதை) நினைவு #7 வேண்டாம், வேண்டாம் என அடம்பிடித்து, கண்கள் எரிய, கண்ணீர் கசிய சீயக்காய் தேய்த்து அம்மா கையால் தலைக்கு குளிப்பது. நினைவு #8 அப்பா, அம்மா காலில் விழுந்து தீபாவளி அன்று புத்தம் புதிய தாளை வாங்கி கசங்காமல் பத்திரப்படுத்துவது. நினைவு #9 ஊர் முழுக்க பட்டாசு வாசனை அடித்தாலும், சரியாக 8 மணிக்கு அம்மா ஸ்பெஷலாக சமைக்கும் உணவின் வாசனை மூக்கை துளைக்க, பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டு ஓடி சென்று சாப்பிடுவது. நினைவு #10 சரம் தீர்ந்து விட்டால் பிஜிலி வெடியை சரம் போல கோர்த்து வெடிப்பது. வருடம் முழுக்க ஒதுக்கப்பட்டாலும், தீபாவளி அன்று தேடப் பிடித்து பழைய பீர் பாட்டில் எடுத்து ராக்கெட் விடுவது. தற்ஸ்தமிழ்- எப்படி சாதாரண தொலைக்காட்சி பெட்டியை திறனுடைய தொலைக்காட்சி பெட்டியாக(Smart TV) மாற்றுவது...?
- தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
விரைவில் தமிழ்நாடு செல்வதால், யாழ் உறவுகள் அனைவருக்கும் முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!- இறையாண்மை என்பது யாதெனில்...?
- 'துபாய் ஃப்ரேம்'
Important Information
By using this site, you agree to our Terms of Use.