Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்.. கோகுல இந்திரா நீக்கம்: தினகரன் அதிரடி அறிவிப்பு! சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திராவை நீக்கிவிட்டு நடிகர் செந்திலை அந்த பொறுப்பிற்கு டிடிவி. தினகரன் நியமித்துள்ளார். அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியது முதல் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் மாற்றத்தை அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி . தினகரன் வெளியிட்டு வருகிறார். அமைச்சர்கள் காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர், ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை தினகரன் வெளியிட்டார். இந்நிலையில் இன்று அதிரடியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து கோகுல இந்திரா நீக்கம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். 3 மா.செக்கள் மாற்றம் இதே போன்று அரியலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமரை எஸ்.ராஜேந்திரன் நீக்கப்பட்டு பெ.முத்தையன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து குமரகுரு எம்எல்ஏ விடுவிக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ ஞானமூர்த்தியும், சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் செந்தில்நாதன் விடுவிக்கப்பட்டு உமாதேவன் புதிய செயலாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். பல நிர்வாகிகள் மாற்றம் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து குமார் எம்பி, அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து கீர்த்திகா முனியசாமி, அதிமுக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எஸ்.ஆர். ராஜவர்மன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுரை அவனியாபுரம் அதிமுக இலக்கிய அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராமலிங்கம் ஜோதியும் நீக்கப்பட்டுள்ளார். ஆதரவாளர்களுக்கு பொறுப்பு கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தினகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் பொறுப்பிற்கு கோனேஸ்வரனும், ஜெயலலிதா பேரவைக்கு இணைச் செயலாளர்களாக எஸ்.ஏ.மணிகண்டராஜா, ஜெயராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எம்ஜிஆர், ஜெ. பேரவையிலும் மாற்றம் இதே போன்று எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்களாகக மதுரை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கமும், சங்கர், இரவுசேரி முரகன் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைச் செயலாளராக தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பால மணிமார்பனும் நியமிக்கப்பட்டுள்ளார். வளர்மதிக்கு பொறுப்பு அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பிற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசரை செயலாளராக கே.சி.விஜயும் அறிவிக்கப்பட்டுள்ளார். தட்ஸ்தமிழ்
  2. '70களில் தென் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் கோலோச்சி, எங்கள் மனதை கொள்ளைகொண்ட இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் குரல்களைக் கேட்டு அக்காலத்தை இரைமீட்கும் நினைவுகள் இங்கே.. கே.ஜெயக்கிருஷ்ணா.. திருமதி. ராஜேஸ்வரி சண்முகம்..
  3. வாட்ஸ் அப்பில் வந்த அருமையான செய்தி: ஐந்து மாநிலங்களின் கழிவுகளை சுமந்தாலும் கங்கைதான் புனித நதி, காவிரி அல்ல! ஐவரைக் கலந்தாலும் பாஞ்சாலிதான் பத்தினி, கண்ணகி அல்ல! பல மொழிகள் கலந்திருந்தாலும் இந்தியும், சமற்கிருதமும்தான் உயர்ந்தவை, தமிழ் அல்ல! உலகின் முதல் மாந்தனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன், தமிழன் அல்ல! மனித வாழ்வியலுக்கான உலகப் பொதுமறையாக போற்றப்பட்டாலும் மகாபாரத, இராமாயண புராணப் புரட்டுகளே உயர்ந்தவை, திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ அல்ல! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஆரிய இந்துத்துவா கழிசடைகள் ஆளும் இந்தியாவின் பார்வை இதுதான்! இது மாறாது, தமிழினம் இதை உணர்ந்துள்ளது! ஆகையால்தான் தமிழ்த்தேச விடுதலையே தமிழ்த்தேசியம் என்று இறுதி செய்துள்ளது நிகழ்கால தமிழர் வரலாறு..! .
  4. ஆர்ப்பாட்டம், அமர்க்களமில்லாத கிராமத்து 'லொள்ளு' இக்கலைஞனுடையது..!
  5. அமெரிக்கன் கல்லூரி, மதுரை. எல்லீஸ் நகர் பாலம். வைகை நதி வைகை நதியின் மேல் 'ஆல்பர்ட் விக்டர்' பாலம். திருப்பரங்குன்றம் மலை.
  6. மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்? மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம். பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. லெமூரியா கண்டத்தின் நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் தங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். இரண்டு மீன்களின் இருபுறமும் உள்ள கண்கள் தெரிய வேண்டுமென்பதற்காக செங்குத்தாக நிற்பது போல் அமைத்தனர். எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர். கொற்கையை ஆண்ட சடவர்மன் வீரபாண்டியன், இலங்கையில் போர்தொடுத்து வென்று, திரிகோணமலை பாறையில் மீன்கொடியை பொறித்தான். பிற்காலத்தில் டச்சுக்காரர்கள், அந்த பாறையை பெயர்த்தெடுத்து, தூய பெரடரிக் கோட்டை சுவர் மீது வைத்தனர். பாண்டிய மன்னர்கள் வாணிப செலாவணிக்காக காசுகளை அச்சடித்தனர். கொற்கை துறைமுகம் கடல்கோளால் சீரழிய, பழைய காயலுக்கு துறைமுகம் இடம்பெயர்ந்தது. இங்கும் கடல்கோளால் 4 கி.மீ., தூரத்தை கடல்கொண்டது. இப்படி அடிக்கடி ஏற்பட்ட கடல் கோள்களில் இருந்து தப்பிக்க, பாண்டியர் தலைநகரை மதுரைக்கு மாற்றினர். கொற்கையை ஆண்ட கடைசி மன்னர் முடத்திருமாறன். மதுரையை பாண்டியர்கள் ஆண்டாலும், கொற்கையை அவர்களது வாரிசுகள் ஆண்டனர். கொற்கை, பழைய காயலில் இருந்து பாண்டியர் தலைநகரம் மதுரைக்கு இடமாறியதை பிளினி போன்ற பேராசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். அழகர் கோவிலில் உள்ள பிராமி கல்வெட்டில் மதுரையை "மதிரய்' என சமணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 1310 முதல் பாண்டியர்களுக்கு சோதனை காலமானது. குலசேகர பாண்டியன் வாரிசுகள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இடையே வாரிசுரிமை போர் மூண்டது. இதை பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையில் படையெடுத்ததை தொடர்ந்து, கி.பி.1330 -78ல் முகமதியர் ஆட்சி நடந்தது. பின், விஜயநகர அரசர் குமார கம்பணன் மதுரையை வென்று ஆட்சியை நிறுவினார். இதைதொடர்ந்து நாயக்கர் ஆட்சி நடந்தது. 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல்லை பகுதிக்கு சென்ற பாண்டிய மன்னர்கள், தென்பாண்டி நாட்டை குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர். கி.பி.17ம் நூற்றாண்டு வரை இவர்களது சந்ததியினர் கொற்கை, தென்காசி, கரிவலம் வந்தநல்லூரில் ஆட்சி செய்தனர். பாண்டியர் மன்னர்களில் கி.பி.1422 - 63 வரை ஆட்சி செய்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் குறிப்பிடத்தக்கவர். இவர் சேர மன்னனை வென்றார். தென்காசியில் கோயில் எழுப்பினார். 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இருந்தாலும், மதுரை என்றாலே "பாண்டிய நாடு' என்ற பெருமையை தந்தவர்கள் பாண்டிய மன்னர்கள்தான். -படித்தது.
  7. அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு..? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு..?
  8. அணிகள் இணைப்பா..? எங்களுக்கு தெரியாது..! ஒரே மாதிரி சொல்லும் ஓ.பி.எஸ் அணியினர்! சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதேபோன்று முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். 4 மணிநேரம் இப்படி நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவடைந்தது. இதன்பிறகு ஓ.பி.எஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர் ஆதரவு மூத்த நிர்வாகிகளான பி.ஹெச்.பாண்டியன், பொன்னையன், மதுசூதனன் ஆகியோர் ஒரே மாதிரி வார்த்தைகளைத்தான் கூறினர். அணிகள் இணைப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அதுகுறித்து பன்னீர்செல்வம்தான் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் கூறி கலைந்து சென்றனர். பன்னீர்செல்வமும் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தட்ஸ்தமிழ்
  9. இன்று வட பழனி - அரும்பாக்கம் இடையே சென்னை மெட்ரோ இரயிலின் என்ஜின் பழுதால், பயணிகள் அருகேயுள்ள அடுத்த ரயில் நிலையத்திற்கு நடந்து செல்லும் காட்சி..! Typical Indian quality of operation & maintenance..?
  10. நம்பிக்கைதான்.. விசு..! ஈழத்தில் நடக்கும்பொழுது, தமிழ்நாட்டிலும் அதிசயம் நடக்காதா?
  11. கருத்திற்கு நன்றி..! எனக்கு மதுரைக்கு அடுத்தபடியாக சென்னை பிடிக்கும்.. தமிழகத்திற்கு வெளியே மிகவும் பிடித்த நகரம் சிங்கப்பூர் மற்றும் யாழ்ப்பாணம். சுயநலமில்லாத தமிழுணர்வுள்ள தலைமை தமிழகத்திற்கு வாய்த்தால் இழந்த தமிழகத்தின் சிறப்பும், சென்னையின் பொலிவும் மீளும். கிந்தியாவுடன் இணைந்ததால் இழந்த தமிழகத்தின் திருப்பதி, இடுக்கி போன்ற பகுதிகள் மீட்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம் இதுவரை சென்றதில்லை.. கூகிள் எர்த் மூலம் அடிக்கடி பார்ப்பதால், நகரத்தின் பகுதிகளை என்னால் நினைவில் சுழலவிட்டு (Visualize) உணர இயலும்.
  12. ஜல்லிகட்டு போராட்டத்திற்கு கூடியதை பார்த்து சிறிது நம்பிக்கை வந்துள்ளது.. மந்தைகளை மேய்க்க சரியான தலைமை இல்லை.. அதற்கும் காலம் வரும்.
  13. சென்னை உயர்நீதி மன்றம் சென்ட்ரல் ரயில் நிலையம் மெரீனா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.