Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. 'தினமணி'யில் எப்பொழுதாவது சில நல்ல கருத்தாக்க வரைவுகள் சிலரால் எழுதப்பட்டு வருவதுண்டு.. அவற்றை படித்ததில் கவர்ந்த ஒன்றை பதிகிறேன்..! இறையாண்மை என்பது யாதெனில்...? (பாகம்-1) இறையாண்மை எனற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள் (Nations) உருவானபோது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. தேசம் என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல, அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை உடையவர்கள் என்பது 18-ஆம் நூற்றாண்டில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் ஐனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இது ஏற்கப்பட்டது. தேசிய இனங்கள் தேசங்களை உருவாக்கும் என்பதும், அந்த தேசிய இன மக்களுக்கே இறையாண்மை உடைமையானது என்பதும் தான் இன்றைய உலகளாவிய அரசுமுறைகளின் சாரம் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில், ஜெர்மனியின் சிதறிக்கிடந்த பகுதிகளெல்லாம் இணைக்கப்பட்டு ஜெர்மனி என்ற ஐக்கியப்பட்ட தேசம் 1871 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அது போலவே இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்டு இத்தாலி தேசம் (1871) உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல தனித் தேசங்கள் எழுந்தன. 1924 ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் 26 நாடுகள் இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் (1939-1945) நாடுகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. முன்பு இருந்த பல்தேசிய இன நாடுகளிலிருந்து மொழியடையாளத்துடன் தேசிய இனங்கள் பிரிந்து சென்று தங்கள் தாயக நிலப்பரப்பின் மீது தனித்தேசங்களைப் படைத்துக் கொண்டதால் விளைந்தது. அந்த தேசங்கள் இறையாண்மை கொண்ட தேசங்களாக விளங்குகின்றன. இன்றைய அரசு முறைகளின் அடிப்படைக் கூறுகள் இரண்டு: 1. ஜனநாயகம் (மக்களுக்கே அதிகாரம்) 2. தேசிய இனங்களுக்கே இறையாண்மை பல தேசிய இனங்கள் ஒன்றாக வாழும் நாடுகளில், ஒரு தேசிய இனம் தனது மொழி, பண்பாடு, இனநலன் ஆகியவை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் இறையாண்மையைக் கையிலெடுத்துக் கொண்டு தன் தாயகத்தை அந்த பல்தேசிய நாட்டிலிருந்து பிரித்துத் தனிதேசத்தைப் படைத்துக் கொள்ளும். இது ஐரோப்பாவில் தோன்றி உலகம் முழுவதும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. இனத்தின் இறையாண்மை - நாட்டின் இறையாண்மை: ஒரு பல்தேசிய நாட்டில் உள்ள தேசிய இனங்கள் தனித்துப் போக விரும்பினால், அதை அனுமதிப்பது தான் ஜனநாயகம். வாக்குரிமை அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உதிரிகளாக உடன் வைத்துக் கொண்டு, ஜனநாயக முத்திரையுடனேயே, ஒரு பெருந்தேசிய இனம் தன் நலத்திற்கு ஏற்ப சட்டங்களை நடைமுறை படுத்துவதும், எதிர்க்குரல் எழுப்பும் தேசிய இனங்களை சட்டங்களின் மூலமும், படைபலம் மூலமும் நிர்மூலம் செய்வதும் ஜனநாயகத்தின் பேரால் நடைமுறைப்படுத்தப்படும் எதேச்சை அதிகாரமே ஆகும். இதுதான் இந்தியாவிலும், இலங்கையிலும் நடந்து கொண்டு வருகிறது. ஒடுக்கப்படும் தேசிய இனத்தில் தேர்தல் கட்சிகளாக இருந்து கொண்டு நாடாளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள் ஒடுக்கும் தேசிய இனத்தின் சர்வாதிகார முகத்துக்கு ஜனநாயக முகமூடி அணிவித்து விடும் வேலையை மட்டுமே செய்கிறார்கள் அதற்கான பலனையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு தேசிய இனம் பிரிந்து சென்றால் ஒரு நாட்டின் இறையாண்மை என்னாவது என்ற கூக்குரலே பொருளற்றது என்பதை சில வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு புரிய வைக்கலாம் ஒரு இனத்துக்குத்தான் இறையாண்மை சொந்தமானது. அந்த இறையாண்மை, அது வாழும் நாட்டினுடையதாக உணரப்படும். ஒரு இனம் நிலையானது நாடு (State) என்பது அழியக்கூடியது, மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியது. ஒர் இனம் தனது நாட்டை இழந்து அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் கூட அதன் இறையாண்மை அதனுடனேயே இருக்கிறது. அந்த இனம் மீண்டும் ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ளும் போது, அந்த நாடு இறையாண்மை மிக்க நாடாக விளங்குகிறது. தங்கள் தாயகத்தை இழந்து உலகம் முழுவதும் உரிமைகள் இழந்து பரவிக் கிடந்த யூதர்கள், இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948-இல் ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் என்ற அதுவரை உலக வரைபடத்தில் இல்லாத, ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். இஸ்ரேல் இன்று ஒரு இறையாண்மை மிக்க நாடு. இந்த இறையாண்மை, இதுவரை வரைபடத்திலேயே இல்லாதிருந்த இஸ்ரேலுக்கு எங்கிருந்து வந்தது..? அது ஒரு இனத்திற்கே உரித்தான, பிரிக்கவியலாத பண்பு ஆகும். இன்று தங்கள் நாட்டை இழந்துவிட்ட பாலஸ்தீனியர்கள், 1967-இல் ஜோர்டானிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜோர்டான் நதியின் மேற்குக்கரை மற்றும் எகிப்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட காஸா பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அது ஒரு தேசிய இனமாக ஏற்கப்பட்டு ஐக்கிய நாடுகள் அவையில் முழு உறுப்பினராக இல்லாவிடிலும் பார்வையாளர் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் தனது நாட்டைப் பிரகடனம் செய்யும் போது, அது ஒரு இறையாண்மையுள்ள நாடு ஆகும். இந்த இறையாண்மை பாலஸ்தீன தேசிய இனத்திடமிருந்து வருகிறது முதல் உலகப் போருக்கு முன் ஆஸ்திரியா - ஹங்கேரி இறையாண்மையுள்ள ஒரே நாடு. 1919 இல் ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் தனித்தனி நாடுகளாயின. இறையாண்மை அந்தந்த தேசிய இனத்திற்கு உரிமையானது. முன்னூறு ஆண்டுகள் ஆஸ்திரியப் பேரரசுக்குள் அடங்கியிருந்த செக்கோஸ்லேவியா 1918 இல் இறையாண்மையுள்ள நாடானது. அது 1993ல் மிக அமைதியாக, செக் குடியரசும், ஸ்லோவேகிய குடியரசுமாகப் பிரிந்து தனி இறையாண்மையுள்ள நாடுகளாக விளங்குகின்றன. இப்படித்தான், யூகோஸ்லாவியா ஒரு இறையாண்மையுள்ள பல்தேசிய இன நாடாக (1946) விளங்கியது. இதிலிருந்து, 20 லட்சம் மக்கள் தொகையுடைய ஸ்லோவேனியா 1991 இலும், 20 லட்சம் மக்கள் தொகையுடைய மாசிடோனியா 1993 இலும், 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட குரோயா, 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட போஸ்னியா, 104 லட்சம் மக்கள் தொகை கொண்ட செர்பியா ஆகியவை 1994 இலும் வெளியேறித் தனி இறையாண்மை கொண்ட நாடுகளாக மாறின. மேலும் 2007 இல் செர்பியாவிலிருந்து 8 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாண்டிநிக்ரோவும், 2008 இல் 20 லட்சம் மக்கள் தொகையுடன் கொசாவாவும் பிரிந்து சென்று தனித்தனி இறையாண்மை கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. 1917 ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின், 1923 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியம் ஓர் இறையாண்மையுள்ள நாடாக விளங்கியது. தேசிய இனங்களின் இறையாண்மை அரசியல் சட்டப்படியே ஏற்பளிக்கப்பட்டிருந்தது. 1991 இல் தேசிய இனங்கள் பிரிந்து இறையாண்மையுள்ள குடியரசுகளை நிறுவிக் கொண்டன. மானுடவர்க்கத்தின் அலகுகளாக தேசிய இனங்கள் வளர்ச்சியடைவதும், தங்கள் தேசங்களை நிறுவிக் கொள்வதும், தங்கள் இனநலன் பேண ஓர்அரசை நிறுவிக் கொள்வதும், அதில் தவறும் அரசை தூக்கியெறிந்து மக்கள் நலம் நாடும் அரசை நிறுவிக் கொள்வதும் தற்கால வரலாற்றின் போக்கு ஆகும். இறையாண்மை: வரலாறும் - வரையறையும்: ஆங்கிலத்தில் 'Soveignity' என்று குறிப்பிடப்படும் சொல் 'Supreme Powers' உச்ச இறையாண்மை அதிகாரம் என்று பொருள் படும். ஒரு நாட்டின் அரசுக்கு அந்நாட்டின் மீதுள்ள முழுமுதல் அதிகாரம் என்பது இதன் பொருள். நாட்டின் நான்கு அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான இறையாண்மை மிகவும் சிக்கலான ஒரு சொல் ஆகும். பிரெஞ்சு எழுத்தாளரான ஜீன் போதின் (Jean Bodin) தமது Republic (1576) என்ற நூலில் இந்த சொல்லை முதன்முதல் பயன்படுத்தினார். தாமஸ் ஹாப்ஸ்(1588-1679), ஜான் லாக் போன்ற ஆங்கிலேய அரசியல் அறிவியலாளர்கள், நாடு எவ்விதம் தோன்றியது? அரசு வந்தவிதம் என்ன? என்பது குறித்துப் பேசும்போது சமுதாய ஒப்பந்தம் (Social contract) பற்றிப் பேசினார்கள். தொடக்க கால இயற்கை நிலையில் மக்களுக்குத் தோன்றிய பிரச்சினைகளும், அதைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை எட்டி, ஓர் அரசைப் படைத்துக் கொண்டமையும் பற்றிப் பேசினார்கள். மூன்றாவதாக சமுதாய ஒப்பந்தம் பேசியவர் பிரெஞ்சு சிந்தனையாளர் ரூசோ. ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் ஏனைய இருவரிடமிருந்து மாறுபட்டது. முழுமையான இறையாண்மையை (Absolute Sovereignty) மன்னனுக்கு உரித்தானதாகக் காட்டிய தாமஸ் ஹாப்ஸிடமிருந்தும், அரசை சமூகமே உருவாக்கியது, ஆகவே அரசை எதிர்த்து மக்கள் புரட்சி செய்யலாம் என்று கூறி அரசையும், சமூகத்தையும் இறையாண்மை உடையவையாகக் காட்டிய ஜான் லாக்கிடமிருந்தும் மாறுபட்ட சிந்தனையை அளித்தார். தொடக்க கால மக்கள் உன்னதக் காட்டுமிராண்டிகள் (Noble Savages) கால ஓட்டத்தில் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தான சூழல் உருவானது; ஆகவே மக்கள் சமூகம் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தது. அதன்படி சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளை சமூகத்திடம் ஒப்படைத்தனர், ஓர் அரசியல் சமூகம் உருவானது. அந்த சமூகத்தின் பொது விருப்பம் (Social Contract) இறையாண்மை உடையது. அந்த பொது விருப்பம் என்பது தனிமனிதர்களின் விருப்பமும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் விருப்பமும் ஆகும். அது பெரும்பான்மையானவர் விருப்பம் அல்ல. அது பொது நலன் நாடும் விருப்பம் ஆகும். அதுவே ஒவ்வொருவரின் உண்மையான விருப்பம் என்று ரூசோ கூறினார். பொது விருப்பமே, ஒரு நிர்வாக எந்திரத்தை, அரசைப் படைத்தது. அரசு என்பது பொது விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு நிர்வாகக் கருவிதான். அது இறையாண்மை உள்ள மக்களால் உருவாக்கப்படுகிறது. அரசு என்ற முகவரை (Agent) மக்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என்று ரூசோ கூறினார். சட்டங்கள் என்பவை பொது விருப்பத்தின் வெளிப்பாடுகளே. ரூசோ இவ்விதம் மக்களின் இறையாண்மையயை (Popolur Sovereignty) உயர்த்திப் பிடித்தார். ரூசோவின் சிந்தனைகள் பிரெஞ்சுப் புரட்சியையும், அமெரிக்க விடுதலைப் போரையும் உந்தி உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன. பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பா முழுவதும் தேசிய உணர்ச்சியை பல்வேறு மக்களிடம் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஐரோப்பியப் பேரரசுகளிடமிருந்து விடுபட்டு தேசங்கள் எழுந்தன. ரூசோ பேசிய மக்களின் இறையாண்மை தேசங்களுக்கான இறையாண்மையாகவே இருந்தது. ஒவ்வொரு மக்களும் பிரதிநிதிகள் மூலமாக அன்றி, நேரடியாகவே தங்களை ஆண்டுகொள்ள வேண்டும் என்று கருத்தறிவித்தார். மக்களுடைய இறையாண்மையை வேறொரு அமைப்பு பெறமுடியாது என்பது அவரது எண்ணம். ஐரோப்பாவில் ரூசோவின் சிந்தனைகள் தேசிய இறையாண்மை (National Sovereignty) என்ற கோட்பாட்டு வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு தேசிய இனமும் தன் இறையாண்மையைத் தானே கொண்டிருக்கிறது. ரூசோவின் பொது விருப்பம் கோட்பாடு, ஒரே மொழி, ஒரே தேசிய இனம், குறுகிய பரப்பு, மக்களே நேரடியாக அரசில் பங்கு பெறுதல் ஆகியவற்றுக்குச் சார்பாக இருந்தமையால், அது தேசங்களின் இறையாண்மை கருத்தாக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. National Sovereignty என்பது ஒரு கூட்டு இறையாண்மை (Collective Sovereignty) ஆகும். ஒவ்வொரு மனிதனும் இறையாண்மை உள்ளவன் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மீது, தன் உடல் மீது முழு உரிமை இருக்கிறது. இது ஆள் உரிமை அல்லது ஆளுடைமை உரிமை (Personal Liberty) என்று கூறப்படுகிறது. தான் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதுவே மனிதனின் Self-determination உரிமை ஆகும். இது தனி மனிதனின் இறையாண்மையைக் குறிக்கிறது. ஒரு தேசிய இனம் என்பது ஒரு பெரிய விரிவாக்கப்பட்ட மனித உரு (Expanded Self) போன்றது. ஓரினத்தின் இறையாண்மை (National Sovereignty) என்பது ஒரு கூட்டு இறையாண்மை ஆகும். தேசிய இனத்தின் இறையாண்மையை மறுப்பது என்பது அந்த இனத்தின் ஒவ்வொரு மனிதனின் இறையாண்மையை மறுப்பது ஆகும். இது ஜனநாயகத்தின் சாரத்தையே மறுப்பது ஆகும். ஒரு தனிமனிதனுக்கு தன் தீர்மானிக்கும் உரிமை அல்லது தன்னுரிமை ( Selff-Determination) உண்டு என்றால், அதே உரிமை அந்த்த தேசிய இனத்துக்கும் உண்டு. இதை உலகப் பிரகடனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. தேசிய இறையாண்மை என்ற சொல் முதன் முதலாக பிரெஞ்சுப் புரட்சியின் போது வெளியிடப்பட்ட மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனத்தில் (Declaration of the Rights of Man and Citizen) தான் பயன்படுத்தப்பட்டது. தேசிய இறையாண்மையும், மக்கள் இறையாண்மையும் (Popular sovereignty) ஒன்றல்ல. தேசிய இன மக்களிடம் இறையாண்மை சிதறிப் பரவிக் கிடக்கிறது என்பது பொருள் அல்ல. அதற்கு மாறாக ஒரு மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக உருவகிக்கிற தேசிய இனத்திடம் இறையாண்மை முழுமையாகத் தங்கியிருக்கிறது என்று பொருள். மொழி இன தேசிய மக்களாட்சி அரசுகளின் தொடக்கம்: அமெரிக்க விடுதலைப் போரின் போது வெளியிடப்பட்ட சுதந்திர அறிக்கை(1776) முக்கியமானது. எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். பிறரால் மாற்ற இயலாத உரிமைகளை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்த உரிமைகளைப் பாதுகாக்கவே மக்களிடையே அரசாங்கங்கள் நிறுவப்பட்டன. அரசாங்கங்களின் நியாயமான அதிகாரங்கள் ஆளப்படுவோரின் இணக்கம் என்று அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்நோக்கங்களை அழிக்க எம்முறையான அரசாங்கமும் முற்படுமானால், அதனை மாற்றி அல்லது அழித்துப் புதிய அரசாங்கத்தை நிறுவ மக்களுக்கு உரிமையுண்டு. பிரெஞ்சுப் புரட்சியிலும் ரூசோவின் தாக்கம் இருந்தது. புரட்சியின் போது 1789 இல் கூடிய தேசிய அவை (National Assembly), பிரான்சின் அரசியலமைப்பைத் தீட்டுமுன் மனிதன், குடிமகன் இவர்களின் உரிமைகளின் அறிக்கையை 1789-இல் வரைந்தது. மனிதர்கள் சுதந்திரத்துடன் பிறந்து சம உரிமையுடன் வாழ்கிறார்கள். மனிதனின் வரையறுக்க இயலாத நடைமுறை உரிமைகளைப் பாதுகாப்பது ஒவ்வோர் அரசியல் சட்டத்திற்குமுரிய நோக்கமாகும். இறையாண்மை நாட்டு மக்களிடமே இருக்கிறது. அரசியலமைப்பை மாற்றக் கூடிய வரையறுக்க இயலாத உரிமை நாட்டு மக்களிடம் இருக்கிறது. அமெரிக்க விடுதலைப் பிரகடனமும், பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் மனிதனின் - குடிமகனின் உரிமைப் பிரகடனமும் இனி அரசு முறையின் அடித்தளம் மக்களாட்சிதான் என முன்னறிவித்து விட்டன. சில தேசங்களின் காலனியாதிக்கப் பேராசை, முதல் உலகப் போருக்குக் (1914-1918) காரணமானது. ஆனால், ஐரோப்பாவில் எஞ்சியுள்ள தேசங்கள், தங்கள் விடுதலைக்காக முட்டி மோதிக் கொண்டமையும் முதல் உலகப் போருக்கு முக்கிய காரணமாகும். முதல் உலகப்போரின் இறுதியில் அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், நசுக்கப்பட்ட தேசிய இனங்கள் தேசங்களாக உரிமை பெற்று அரசியல் சமூகங்களாக நிலைபெற ஆதரவளித்தார். அதன்படி எந்த ஒரு தேசமும் இனி இன்னொரு தேசத்தின் கீழ் இருக்கத் தேவையில்லை என்ற கருத்து ஏற்கப்பட்டது. பல தேசங்களைத் தம் ஆட்சி அதிகாரத்துக்குள் அடக்கிக் கொண்டிருந்த பேரரசுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ரஷ்யா ஆகியவை பல பகுதிகளை இழந்தன. மத்திய ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு ஐரோப்பாவிலும் புதிய தேசிய இன அரசுகள் உருவாயின. பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, செக்கோஸ்லேவியா, யுகோஸ்லாவியா (ஆறு தேசங்களை உள்ளடக்கியது) ஆகியவை உருவாக்கப்பட்டன. புதிய தேசங்களின் அரசியலமைப்புகள் மூன்று முக்கியப் பண்புகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டன. அவை, 1. ஆளுரிமை (Personal Liberty) 2. மக்கள் இறையாண்மை (Popular sovereignty) 3. நாட்டுணர்ச்சி அல்லது தேசிய இன உணர்ச்சி (Nationalism) முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான அரசு முறை, தேசிய மக்களாட்சி முறை ஆகும். அதாவது தேசிய இனங்களின் இறையாண்மையுள்ள ஆட்சியும், அவற்றில் ஜனநாயக முறைமையும் என்பதே புதிய போக்கு ஆகும். இப்போக்குதான் உலகம் முழுவதும் பரவியது. சிதைக்கப்பட்ட ஜனநாயகம் என்ற ஐரோப்பாவின் முறை இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தியாவில் அது மழிக்கபட்டு செயல்படுத்தப்பட்டது. வாக்குரிமை என்ற ஜனநாயகம் ஏற்கப்பட்டு, தேசிய இறையாண்மையும், தேசிய ஜனநாயகமும் மறுக்கப்பட்டு விட்டன. இந்தியா என்ற சந்தையைக் காக்கவும், சமஸ்கிருத ஆரிய மேலாண்மையைத் தொடரவும் இந்தியாவே தேசம் என்று கற்பிதம் செய்யப்பட்டு, அதை ஏற்கும்படி கட்டாயம் செய்யப்படுகிறது. தமிழர் இறையாண்மை இந்தியாவில் எழுந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் 1947 இல் முடிவடைந்தது. Decolonisation என்னும் அன்னிய காலனிய ஆதிக்க வெளியேற்றம் சாதிக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வலுவந்தமாக இணைக்கப்பட்ட பல தேசங்கள், இன்று உள்நாட்டுக் காலனிகளாக தொடர்ந்து சுரண்டப்படுகின்றன. மேலை நாடுகளைப் போலன்றி, தமிழ்த் தேசிய இனம், ஒரு நீண்ட கால இருப்பையும், வரலாற்றையும் கொண்டது. தமிழகம் 1801 இல் தான் இந்தியாவுடன் இணைக்கபட்டு தனது இறையாண்மையை ஆங்கிலேயரிடம் இழந்தது. தேசிய இன இறையாண்மை தமிழினத்துக்கு மீண்டும் கிடைக்கவே இல்லை. ஈழத் தமிழ்த் தேசிய இனமும் – இறையாண்மையும் ஈழத் தமிழ்த் தேசிய இனம், சிங்களப் பெருந்தேசிய இனம் ஆகியவை இலங்கையிலே தனித்தனியே ஆனால் ஓர் அரசின் கீழ் இருந்து வருகின்றன. இனவெறி பிடித்த பெருந்தேசிய சிங்கள அரசு, தமிழர் மீது இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. சிங்கள மரபின் மூதாதையான விஜயன் இலங்கைக்கு வரும் முன்னரே இலங்கையில் சீர்மிகு பண்பாட்டுடன் வாழ்ந்து வந்த தமிழர்கள், 17 ஆம் நூற்றாண்டில் தனி அரசு இழந்தனர். கி.பி. 1619 இல் தமிழ் ஈழ மன்னன் சங்கிலி, போரில் வெல்லப்பட்டு, தமிழர் இறையாண்மை போர்த்துகீசியர்களால் கைக்கொள்ளப்பட்டது. 1815 இல் ஆங்கிலேயர் கண்டி தமிழ் அரசையும் வென்று, தமிழர் இறையாண்மையைக் கைக்கொண்டார்கள். 1833 இல் தமிழர் தாயகம் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு ஆங்கிலேயரால் ஒரு நாடாக உருவாக்கப்பட்டது. 1948-இல் இலங்கை விடுதலை பெற்ற போது, ஈழத்தமிழர் இறையாண்மை அவர்களுக்குத் திருப்பி அளிக்கப்படவில்லை. 1956 இல் தந்தை செல்வா, தமிழரசுக் கட்சியை உருவாக்கி இலங்கையில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கிக் கோரிக்கை வைத்தார். இது 1972 இலும் கூட ஏற்கப்படவில்லை. 1972 இல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து தனிநாடு கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கேசன்துறையில் வெற்றி பெற்றார். 1972 இல் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை சாதிக்கவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது. 1976 இல் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர்க்குத் தனிநாடு என்ற கோரிக்கையை ஆதரித்து 19க்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, ஈழத்தமிழர் தம்முடைய கருத்தை ஜனநாயக முறைப்படித் தெரிவித்தனர். ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். அது கோரும் தீர்வு, தமிழ் ஈழம் ஆகும். கடந்த 2005 இல் நடந்த நாடாளுமனறத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற, தனி ஈழம் கோரும் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படுகின்றனர். தமிழ் ஈழம் என்பது தந்தை செல்வாவால் முன்னிறுத்தப்பட்டு அவ்வப்போது ஈழத்தமிழ் மக்களால் ஜனநாயக முறைப்படி ஏற்பளிக்கப்பட்ட அரசியல் தீர்வாகும். ஈழமக்களின் அரசியல் தீர்வைத்தான் எந்த நாடும், எந்த கட்சியும் நிறைவேற்றித் தர வேண்டுமே ஒழிய, தங்களுக்குப் பிடித்த அல்லது தங்கள் நலனுக்கு உகந்த நயவஞ்சகத் திட்டங்களை அரசியல் தீர்வு என்னும் போர்வையில் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது. அரசியல் - அறிவியல் பார்வை இலங்கையில் ஈழப்பகுதியில் முப்படைகளைக் கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை யாராவது கண்டனம் செய்தால், இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவது என்று இந்திய தேசிய அரசியல்வாதிகள் கூக்குரலிடுகிறார்கள். சிங்கள இனவெறி அரசுக்கு ஆயதமும், பணமும், பயிற்சியும், உளவு வேலையும் செய்து தருகின்ற இந்திய அரசைப் பார்த்து இலங்கை ஒருமைப் பாட்டைக் காக்கிறேன் என்று இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்து விடாதீர்கள் என்று அறிவுறுத்தலாகக் கூறினால் கூட இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்று அலறுகிறார்கள். இந்திய தேசியம் என்ற பெயரில் தங்கள் சமூக, பொருளியல் மேலாதிக்கத்தை இங்கே நிறுவிக் கொண்டவர்கள். அரசியல் அறிவியல் பார்வையற்றோர் அவர்களுடன் ஒத்துப் போகிறார்கள். இந்தியாவின் அரசியல் முறை, மேற்கத்திய உலகிடமிருந்து கொண்டு வரப்பட்ட ஒன்று. இறையாண்மை கோட்பாடும், மக்களாட்சிக் கோட்பாடும் உலகம் முழுவதும் எந்த வடிவில் எந்த உணர்வில் பயன்படுத்தப்படுகிறதோ அதே வடிவில் தான் இங்கும் பயன்படுத்தப்பட வேண்டும். பழங்காலத்தில் அனுமார் இலங்கையில் தமிழர் நகரைத் தீயிட்டு எரித்ததாக ராமாயணம் கூறுகிறது. இன்று, இனப்படுகொலைக்கு ஆளாகியிருக்கிறது. 'தெற்கு ஆசியாவிலேயே எந்த தேசிய இனமும் விடுதலை அடையக்கூடாது, அவ்வாறு விடுதலை பெற்றால், இங்கே இந்தியத் தேசியப் பொய்மை தகர்ந்து போகும்' என்று அஞ்சுகிறார்கள். இறையாண்மை பெயரால், உண்மையான தேச இறையாண்மையை மறுப்பது, ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தை வதைப்பது என்பது நீண்டக்காலம் தொடர முடியாது. அரசியல் அறிவியல் இங்குள்ள மக்களின் கண்களைத் திறக்கும் போது, 'இந்தியப் பொய்மை' தகர்ந்து போகும். (தொடரும்..) Lr. C.P. சரவணன், வழக்கறிஞர். நன்றி: தினமணி
  2. கவனிக்க: பழைய திரியான சென்னை மெட்ரோ ரயில் அதிக படங்களையும், செய்திகளையும் தாங்கியிருப்பதால் கணனியில் உடனடியாக தெரிவதில் தாமதம் ஏற்படுகிறது.. ஆகையால் அதன் தொடர்ச்சி சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2 என்ற பெயரில் இங்கே.. ************************************************ சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம்...
  3. புத்தியை தீட்டாமல், கத்தியுடன் திரிந்த சென்னை கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது சென்னை: சென்னை மின்சார ரயிலில், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் பயணிப்பது போன்ற வீடியோ ஒரு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் ரயில் மீது ஏறுவது போன்ற வீடியோவும், ரயில் நிலையத்தில் மாணவர்கள் பட்டாசுகளையும் வெடித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டதும் போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது. பயணிகளை அச்சுறுத்தும் வகையிலான இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. மாணவர்கள் கலாட்டா மாணவர்களின் இதுபோன்ற செயலால் அச்சம் அடைந்த அங்கிருந்த மக்கள் கூறுகையில், "மாணவர்கள் மதுபோதையில் இருந்தனர். அவர்கள் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டியதும் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது.." நல்ல வேளை "குடிபோதையில் இருந்ததாலும், ஆயுதங்களை வைத்திருந்ததாலும் ஏதேனும் விபரீதம் நடைபெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை." பெற்றோருக்கு மன உளைச்சல் "படிக்கும் வயதில் இதுபோன்று மாணவர்கள் பொறுப்பற்று நடந்து கொண்டதால், பெற்றோருக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களை போலீஸார் நல்வழிப்படுத்த வேண்டும்" என்றனர். 4 பேர் கைது இதனிடையே வீடியோவில் அடையாளம் தெரிந்த 4 மாணவர்களை பட்டாபிராம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சென்னை மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, தியாகராயாக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் இவர்கள் விசாரணையில் திருநின்றவூரைச் சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், திருவள்ளூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் உள்ளிட்டோரா ஆவர். இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்ஸ்தமிழ் கத்தியுடன் ரயில் பயணிகளை அச்சுறுத்திய 4 கல்லூரி மாணவர்கள் கைது: மேலும் சிலருக்கு போலீஸ் வலை திருவள்ளூர், ஆவடி, சென்னை ரயில் பாதையில் கையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். திருவள்ளூர் சென்னை இடையே புறநகர் ரயில் சேவை உள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். இதில் யார் பெரியவர் (ரூட் தல) என்ற போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது. முன்பு பேருந்துகளில் (ரூட் தல) என்று மாணவர்கள் மோதிக்கொள்வார்கள். ”பஸ் டே” என்று சென்னையில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பயணிகள் தான். இதே போல் சென்னை ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாண்வர்கள் அந்தந்த கல்லூரி சார்பில் யார் பெரியவர் என்ற போட்டியில் ஈடுபடுவது தொடர் கதையாகி தற்போது யார் ரூட் தல என்ற மோதல் வரை இட்டுச் சென்றுள்ளது. இதில் நேற்று முன் தினம் சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பயங்கர ஆயுதங்களை வைத்து ரயில் பயணிகளை அச்சுறுத்தியபடி மாணவர்கள் பயணம் செய்தனர். எப்போதும் கைகளால் அடித்துக் கொல்லும் மாணவர்கள் சமீப காலமாக கத்தியை கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டி கொள்வதில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு 7 மாதம் திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையம் இடையே ஓடும் ரயிலில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதில் மாநில கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஆனாலும் இந்த இரு கல்லூரி மாணவர்களின் மோதல் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாநில கல்லூரி மாணவர்கள் ஓடும் மின்சார ரயிலில் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் தரையில் தேய்த்தப்படி சென்றனர். இதனை சக ரயில் பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் உத்தரவின் பேரில் ஆவடி உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை துவக்கிய சில மணி நேரங்களிலிலேயே சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஓடும் ரயில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.பிடிபட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் சம்பவத்தில் ஈடுபட்டது திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜகதீஸ்வரன் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது ஆயுதங்கள் வைத்திருந்தது, பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். தி இந்து
  4. ஆயிரம் சமூக, சட்ட ஓட்டைகளை காரணம் சொன்னாலும், இப்படி அப்பட்டமான தார்மீக ஒழுங்கு மீறல்களை குறைந்தபட்சம் கண்டிக்கலாம், ஆனால் சமூக காரணங்களைக் கூறி அவர்களின் பிறழ்வுகளுக்கு நியாயம் கற்பித்தல் சரியன்று. இது அவர்களின் செயலை ஊக்குவித்தலாக முடியும். இப்படி அத்துமீறும் மாணவர்களை பொறுப்புடன் கண்டிக்கவில்லையெனில் அடுத்து பெண்கள், மாணவிகள் கல்லூரிகளில்/தெருவில் நடமாட முடியுமா..?
  5. இதற்கு ஒரே வழி குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், அதும் உடனடியாக நிறைவேற்றப்படவும் வேண்டும்.. 'பயம்..பயம்..' இது ஒன்றே அனைவரையும் தவறுகளிலிருந்து விலத்தி வைக்கும்.. மத்திய கிழக்கு நாடுகளிலும் குற்றங்கள் உண்டு..ஆனால் அதற்கான தண்டனைகள் கடுமையாக, உடனடியாக நிறைவேற்றப்படுவதால் பயத்தின் காரணமாக அதிக குற்றங்கள் நிகழ்வதில்லை. தாங்கள் நியாயம் கற்பிக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரந்தாலும், அவை நீர்த்து சுருண்டுவிடும் ஐயா. சின்ன உதாரணமாக, நாடு திரும்பும் ஆசிய நாட்டவர்களின் நடத்தையை சொல்லலாம்.. விமான நிலைய 'செக் இன் கவுண்டர்'கள் முதல் விமானத்தில் அமரும் வரை வாலை சுருட்டிக்கொண்டிருப்பார்கள், அதே பயணிகள், தம் சொந்த நாட்டில் தரையை தொட்டவுடன் தன் புத்திய காட்டத் தொடங்கிவிடுவார்கள்.. ஏன்..? கட்டுப்பாடில்லாத, தண்டனை குறைவான தாமதிக்கும்,/எதற்கும் தப்பிக்க வழியிருக்கும் சனநாயக நாடு என்றபடியால் தானே இந்த அலட்சியப் போக்கு..? திமிர்..?
  6. மன்னிக்கவும்.. இப்படியொரு நியாப்படுத்துதலை எதிர்பார்க்கவில்லை.. ! எப்படிப்பட்ட ஹார்மோன்களும் கட்டுக்குள் இருக்க வேண்டும், அவரவர் வீட்டிற்குள் அதை வைத்துக்கொள்ள வேண்டும், பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் யாரும் நடக்க அனுமதிக்கக் கூடாது.. இதில் வயது வித்தியாசம் ஏன்? பொது மக்களுக்கு சட்டம் ஒழுங்கு மீது நம்பிக்கை இருக்க வேண்டுமெனில் இம்மாதிரியான பொறுக்கித்தனத்தை வயது தாட்சன்யமில்லாமல் அடக்கி ஒடுக்க வேண்டும்..
  7. சென்னை மின்சார ரயிலில், கத்தி பொல்லுகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம்..!
  8. தீபாவளிக்கு தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை: உச்ச நீதிமன்றம் புது தில்லி: தீபாவளிக்கு தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லியில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதி மதன்வீர் லோகு தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால், மாசு அதிகமாக ஏற்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, தீபாவளி பண்டிகை முடியும் வரை தில்லி மற்றும் தில்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: தில்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுப்பதற்காக தில்லி மற்றும் என்சிஆர்(NCR) பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று 2016, நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் 11-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தாற்காலிகமாக விலக்கிக் கொண்டது. மேலும், தில்லியில் தசரா, தீபாவளி பண்டிகைகளுக்கு பிறகு நிலவும் சுற்றுச்சூழல் மாசுவை கணக்கிட்டு பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவைக் கணக்கிட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே தில்லியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டும் தீபாவளி, தசரா பண்டிகளையின்போது விற்பனை செய்ய வேண்டும். புதிதாக பிற மாநிலங்களில் இருந்து பட்டாசுகளைக் கொண்டு வரக் கூடாது என்று உத்தரவிட்டிருந்து. இதனிடையே, தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையே அமல்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், கடந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. தில்லியின் காற்று மாசுக்கு பட்டாசுகளும் ஒரு காரணம் என்று நீதிமன்றம் கூறி, பட்டாசு விற்பனைக்கு முழுமையான தடை விதித்தது. அப்படி இருக்கும்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த மாதம் தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரித்து, தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தாற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது ஏற்புடையதல்ல. ஆகையால், பட்டாசு விற்பனைக்கு கடந்த ஆண்டு பிறப்பித்த முழுமையான தடை உத்தரவையே அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'உச்ச நிதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாதிரியான மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்? தில்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அதன் பின்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நடைபெற்ற பல்வேறு விவகாரங்களின் அடிப்படையில் தடை உத்தரவு தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது' என்று கூறியிருந்தார். இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து, தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தினமணி
  9. இதே போன்ற செய்திக்கு 'தற்ஸ்தமிழி'லில் ஒரு வாசகர் அளித்துள்ள கருத்து இது..
  10. "மோடியே எனது மணவாளன்” போராட்டம் நடத்தும் சாந்தி சர்மா! 'பிரதமர் நரேந்திர மோடியைதான் திருமணம் செய்வேன்' என ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாக ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் அதிகமான ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் உருவாகி உள்ளனர். அவர்களில் சிலர் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச காத்திருப்பவர்கள் மத்தியில், மோடியின் மீது அதிக காதல் பாசம் கொண்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 40 வயதுடைய 'ஓம் சாந்தி சர்மா' என்ற பெண், பிரதமர் மோடியைதான் திருமணம் செய்வேன் என ஜந்தர் மந்தரில் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் மோடி புகைப்படம் மற்றும் வாசகம் அடங்கிய பேனருடன் ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார். ஓம் சாந்தி சர்மா பேசுகையில், “எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனால், திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். அதுபோல, அவரும் (மோடி) என்னைப் போல் தனிமையில் இருக்கிறார். என்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் என பலரும் அணுகுகிறார்கள், ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சேவையாற்ற விரும்புகிறேன்,”என தெரிவித்தார். மேலும் “பிரதமர் நரேந்திர மோடியும் தனியாக இருந்து அதிகமான வேலையை செய்து வருகிறார். நான் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவருக்கு உதவி தேவை என்பது எனக்கு தெரியும், அவருக்கு சேவையாற்ற நானும் விரும்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளர். “இங்குள்ள மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள், மோடிஜியை திருமணம் செய்ய நான் விரும்பவில்லை என்று அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால் அவரிடம் எனக்கு ஒன்று இருக்கிறது, பெரியவர்களை மதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கின்றனர். நான் மோடியை மதிக்கிறேன். எங்கள் கலாச்சாரம், குழந்தை பருவத்தில் இருந்து பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவற்றின் வேலையில் அவர்களுக்கு உதவி செய்யவே விரும்புகின்றேன். பார்ப்பவர்கள் எல்லாம் மனநோயாளி என நினைத்து சிரிக்கின்றனர். ஆனால், என் மனநிலை நன்றாக உள்ளது. பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை!” என தெரிவித்துள்ளார். சாந்திக்கு தனது முதல் திருமணத்தில் 20 வயதுடைய மகள் உள்ளார். அவளது எதிர்காலத்தைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை, ஜெய்ப்பூரில் தனக்கு நிறைய நிலம் மற்றும் பணம் இருப்பதாகக் கூறுகிறார். மோடிக்கு சில பரிசுகளை வழங்குவதற்காக நிலங்கள் சிலவற்றை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், மோடி இங்கு வந்து என்னை சந்திக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்துகொள்ளவதற்காக போராட்டம் நடத்தி வரும் சாந்தி, ஜந்தர் மந்தரில் தங்கி குர்துவாஸ் மற்றும் கோவில்களில் சாப்பிட்டு வருகிறார். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவினால் வேறு இடத்திற்கு மாற்றுவதைப் பற்றி சாந்தி சர்மா கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது. “என்னை அரசு இங்கிருந்து அகற்றுமா, அகற்றினால் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது, ஒரு மாதமாக போராட்டத்திற்கு இவ்விடம் மிகவும் வசதியாக இருந்தது” என கூறியுள்ளார். தினமணி குறிப்பு: வட இந்தியர்களே இப்படித்தானா...? ஏதோ ஆகிவிட்டது..!
  11. சிம்மக்கல், வடக்கு வெளி வீதி. யானை மலை, ஒத்தக்கடை. மேல கோபுர தெரு, மேல மாசி வீதி சந்திப்பு. கீழச் சித்திரை வீதி.
  12. அப்பாவிகளா..? படிப்பறிவும், நாகரீகமும் மேம்பட்டுவரும் தற்போதைய உலகில், கொஞ்சமும் மூளையை பயன்படுத்தி சிந்திக்காமல், அறுபது எழுபது வயதுகளில் குழந்தைகளை இப்படி பெற்றுத் தள்ளினால் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்..? தாம்பத்தியம் ஆரோக்கியமன இயல்பே, ஆனால் அதை இப்படி அப்பட்ட உருவமாக வெளியேற்றித் தள்ளுவது சமூக பொறுப்பற்ற செயல், கண்டிக்கபட வேண்டியது.. வெட்கம் கெட்ட செயல்!
  13. அட, நீங்க வேறை கடுப்பை கிளப்பிகொண்டு..? மகளுக்கு கலியாணமாகி பேரக்குழந்தை இருக்கும் வயதில் இன்னொரு மகனை பெற்ற பெண்ணின் தகப்பனாருக்கு வெட்கமாயில்லை? அதற்கு உடந்தையான அந்த தாயிக்கும் அதை தடுக்க துப்பில்லை.. வெட்கக்கேடு..!
  14. 'மீம்ஸ்' கிரியேட்டர்களை 'பீன்ஸ்' கிரியேட்டர்களாக்கி கலாய்க்கும் கேப்டன்..! வார இதழொன்றில் தேமுதிக தலைவர், கேப்டன் விஜயகாந்தின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. தற்கால அரசியல் நிலைமைகள், அதில் தனது நிலைப்பாடு, தேமுதிகவின் அரசியல் எதிர்காலம், தனது மகன்களின் வளர்ச்சி, கமல், ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் தனது கருத்துகள் என்பது குறித்தெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே வந்தவர், அடுத்ததாக தன்னைக் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் மீம்ஸ்கள் குறித்த கேள்வியொன்றுக்கு அளித்த பதில் சரியான அகடவிகடம். விஜயகாந்த் என்றைக்கு தேமுதிக வைத் தொடங்கினாரோ, அன்று முதல் அவர் தமிழக 'மீம்ஸ்' கிரியேட்டர்கள் அத்தனை பேரின் செல்லப் பிள்ளையாகி விட்டார் என்றால் அது மிகையில்லை! இணையத்தில் எங்கெங்கு காணினும் அவரைக் குறித்து வெளிவரும் நகைச்சுவையான மீம்ஸ்களுக்கு ஒருபோதும் பஞ்சமே இருப்பதில்லை. ஆனால் அன்பார்ந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இதுவரை தெரிந்திராத விஷயம் ஒன்று உண்டென்றால் அது அவர்கள் இத்தனை பாடுபட்டு, மெனக்கெட்டு உருவாக்கி ஹிட்டுக்கு மேல் ஹிட் அடிக்க வைத்துக் கொண்டிருக்கும் கேப்டன் மீம்ஸ்கள், சாட்சாத் அந்த கேப்டனுக்கே புரிவதில்லை என்பது தான். இணையத்தில் வெளிவரும் மீம்ஸ்களை, தான்... பல நாட்களாக 'பீன்ஸ்' என்று தான் புரிந்து கொண்டிருந்ததாக பச்சைக் குழந்தையாகப் பதில் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்! 'அடப்போங்கையா, மீம்ஸ் கிரியேட்டர்ஸ்! இப்படி ஒரு ஒன்றும் தெரியாத அப்பாவியையா 'மீம்ஸ்களில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்..?' என்ன ஒரு அநியாயம்! தினமணி
  15. ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்! சிரியாவின் துருக்கிய மருத்துவமனையில், ஒரே நாளில் ஒரே நேரத்தில் தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய துருக்கியின், கோனியாவைச் சேர்ந்தவர் பாதிமா பிரின்சி(42), அவரது மகள் காதா பிரின்சி(21). இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பிரசவ சிகிச்சை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இதுபோன்ற அபூர்வ நிகழ்வு உலகிலேயே இது தான் முதன்முறை என்ற மருத்துவர்கள், இதுவொரு அதிசயம் என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான், தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாதிமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணி
  16. விளை பொருட்களை சேமித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய குளிரூட்டப்பட்ட கிடங்கு அமைக்கும் பணி முடிவடையாததால் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் சிரமம் உள்ளது.. ஆனால் நான்கு வெளிநாடுகளுக்கு(அமீரகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர்) விமான சேவை உள்ளதால் பயணிகளுக்கான சுங்க அதிகாரிகள் முனையம் அங்கே இருப்பதாக அறிந்தேன். Madurai airport gets custodianship for international cargo handling Madurai: Madurai airport will become an international terminal in every sense by April 2017, when it will start handling international cargo as the Department of Central Excise and Customs on Thursday issued custodianship for the same to Airports Authority of India. Announcing this, Airport Director V.V. Rao said a few infrastructure facilities, including security measures, needed to be put in place before international cargo movement was allowed from Madurai airport. ..... ..... However, Mr. Rao said efforts would be taken up to put up cold storage facility at the earliest. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Madurai-airport-gets-custodianship-for-international-cargo-handling/article16834925.ece
  17. இருண்டு கிடந்த திட்டத்திற்கு வெள்ளிசம் கிட்டியுள்ளதோ? அன்னை செயலலிதாவின் ஈகோவால் கிட்ப்பில் போடப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேம்பால சாலை திட்டப்பணிகளை மறுபடியும் புத்துயிரூட்டி ஆரம்பிக்கும் விதமாக, மத்திய அரசின் நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,(NHAI) விரிவான திட்ட வரைவு ஆலோசனைக்கான(DPR) ஒப்பத்தப் புள்ளிகளை ஊடங்களில் கோரியுள்ளது.. http://www.nhai.org/Doc/22sep17/Technical Evaluation RESULT.pdf
  18. ட்ராவலேட்டர் (Travelator) சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு (காமராஜர் முனையம்) முனையத்திற்கும், வெளிநாட்டு (அண்ணா முனையம்) முனையத்திற்கும் இடையேயான தூரத்தை பயணிகள் சிரமமின்றி அடைய 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி பல வருடங்களுக்குப் பின், வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இவ்வசதி மக்கள் பாவனைக்கு வந்தபின் பயணப்பொதிகளுடன் இறங்கும் பயணிகள், அதிக சிரமமின்றி இரு முனையங்களுக்கும் சென்று வரலாம்.. வெளிநாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள், பெரும்பாலும் நிலத்தடி தொடருந்துகளை முனையங்களுக்கிடையே இயக்கிவரும் வேளை, ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான இந்த 'ட்ராவலேட்டர்'களை மத்திய அரசிடமிருந்து சென்னை விமான நிலையம் பெற, பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.. 'ட்ராவலேட்டர்' மாதிரி வடிவமைப்பு நிறுத்தப்பட்ட 'ட்ராவலேட்டர்'களின் கூண்டுப் பாதை தற்பொழுது 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி துவக்கம்.
  19. இது தான் உண்மையென தோன்றுகிறது.. என்னதான் இந்திய வல்லரசு கானல் நீரை நினைத்து இடித்தாலும், அது ஏகாதிபத்தியத்துக்கு இன்னமும் அடிமைதான். இந்த சகதியில் சிக்கி உழலும் தலைவிதி தமிழனுக்கு...! காலம் மாறும், சந்தர்ப்பமும் வரும், பயன்படுத்தலாமென காத்திருக்க வேண்டியதுதான். தம்மிடம் இல்லாததைப் அடுத்த இடத்தில் பார்த்து ஏங்குவது மனிதனின் இயல்புதானே ஐயா? இக்கரைக்கு அக்கரை பச்சை.. குழுமத்திற்கு வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..!
  20. ஒருவேளை, ஈழம் சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்றால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல முடியுமா..?
  21. “சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ரொம்ப தூரம், இங்கயே நில்லுங்க ! என நான் சொல்ல சொல்ல, "இல்ல தம்பி நான் நடந்தே போய்டுவேன்" என வேகத்தை குறைக்காமல் அதே விறுவிறு நடையை தொடர்ந்தார். ‘அட, பெருசு சொன்னா கேக்கிறாரா பாரு!' என சலித்து நின்ற என்னை, என் மனசாட்சி மைக்ரோ நொடியில் வெளியே வந்து உலுக்கி அவர் வறுமையை மூளையில் உறைக்க வைத்தது. குற்ற உணர்வுடன் அவரை துரத்தி பிடித்தி “பஸ் காசு தரேன், பஸ்ல போங்க” என்றேன், என்ன நினைத்தாரோ என்னவோ “ஏமாத்திட்டாங்க தம்பி, நல்லா ஏமாத்திட்டானுக! அதான் நடந்தே ஊருக்கு போறேன்" என்றார். “யாரு ஏமாத்தினாங்க ?, எங்க தாம்பரமா உங்க ஊரு” “இல்ல தம்பி, காஞ்சிபுரம் !“ ஒரு நிமிடம் ஆடிப்போய், அதிர்ச்சி விலகாமல் கேட்டேன், "இப்போ காஞ்சீபுரத்துக்கா நடந்து போறீங்க !" "ஆமாந்தம்பி, காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டல்ல க்ளீனிங் வேலை பாத்துட்டு இருந்தேன், இங்க செகுயூரிட்டியா வாய்யா, 8000 சம்பளம்னாங்க, அதாங்க 6 நாளுக்கு முன்னாடி தெரிஞ்சவர் கொணாந்து இங்க விட்டார். ரோகினி, ராகினி தியேட்டர்ல டூட்டி போட்டாய்ங்க, போனப்புறம் தான் தெரிஞ்சது, அது 24 மணி நேரம் வேலை தம்பி, 18 மணி நேரத்துக்கு மேல நின்னே இருக்கணும், நைட்டு இரண்டாவது ஆட்டம் முடிஞ்சவுடன் ரெண்டு மணிக்கு மேல தியேட்டர் படிக்கட்ல படுத்துக்கலாம், ஐஞ்சு மணிக்கு க்ளீனிங் ஆளுக வந்ததும் மறுபடியும் வேலை ஆரம்பிச்சுரும், உடம்பு வலி முடியல தம்பி, அப்படியே பிச்சு திங்குதுங்க, ஒரு நாள் பூரா வேலை பாக்க முடியலைங்க சார், டூட்டி மாத்தி விட முடியுமான்னு கேட்டேன், வேலை கிடையாது, கெளம்புன்னுட்டாங்க, ஐஞ்சு நாலு உழைச்ச காசையாவது கொடுங்கனு கேட்டா, போட்ட சோத்துக்கு எல்லாம் சரியா போச்சுன்னு சொல்லிட்டாங்க தம்பி, அதான் ஊருக்கே போய் பழைய வேலையே பாக்கலாம்னு கெளம்பிட்டங்க" என அவர் சொல்லிமுடித்தவுடன் ஆத்திரமும், பரிதாபமுமாக “ஐயா, அவனுகள விடுங்க, ஒரு நிமிஷம் இருங்க பஸ் காசு தரேன் பஸ்ல போங்க" என்று பணத்தை எடுத்தேன். “அட விடுங்க தம்பி, இதே வேகத்தில் போன நைட்டு பன்னெண்டு மணிக்கு முன்ன ஊருக்கு போய்டுவேன், ஒரு நா பேரனுக்கு உடம்பு சரியில்லைன்னு வேண்டிக்கிட்டு திருப்பதிக்கு 10 மணி நேரத்தில போயிருக்கேன், இதல்லாம் சாதாரணமுங்க, என்ன நா பூரா நின்னு உழைச்ச காசை ஏமாத்திட்டானுக, அதாங்க தாங்க முடியல என மறுபடியும் நடையை தொடர, விடாப்பிடியாய் இழுத்து பிடித்து கையில் இருந்த இருநூறை அவர் கையில் திணித்தேன். ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தவர் நான் எதிர்பாரா நொடியில் சடாரென காலில் விழ எத்தனித்தார். “அட என்னங்கய்யா இது !” என அதிர்ந்து போய், அரையடி நகர்ந்து அவரை தோளை பிடித்து தூக்க கண்களில் கண்ணீருடன் கை கூப்பி நின்றார். “ஐயா, இதுக்கு ஏன் அழுவறீங்க!, போகும் போது சாப்பிட்டு போங்க என்றேன்,” கண்ணை துடைத்துக்கொண்டே சில அடி நகர்ந்தவர், திரும்பி வந்து, “பணம் தந்தத்துக்கு அழுவல தம்பி, காலைல ஒருத்தர்கிட்ட, சார் வேலைல இருந்து விரட்டிட்டாங்க சார்னேன், சில்லறை இல்லப்பானு சொல்லிட்டார். அப்பத்தான் புரிஞ்சது, இந்த ஊர்ல உதவினு கேட்டாலே பிச்சைக்காரனு நினைச்சுக்குவாங்கன்னு, ஆனா கேட்காமலியே புடிச்சு நிறுத்தி நீங்க காசு தந்தீங்களா, அதான் அடக்க முடியாம அழுதுட்டேன், அது சரி, நீங்க எந்த ஊர் தம்பி ? " அவர் கேட்டவுடன் பழக்கதோஷத்தில் கோயமுத்தூர்ங்க என் சொல்ல எத்தனித்தவன் ஒரு நொடி யோசனைக்கு பின், அவர் கையை பிடித்து தீர்க்கமாக சொன்னேன், “நானும் சென்னை தாங்க !" நண்பர் அனுப்பிய முகநூல் இணைப்பு
  22. "ரோட்ல.. பஸ்ல.. தியேட்டர்ல.. எங்கே போனாலும், ஒங்க இம்சை, தாங்க முடியலைடா..!" இன்று 'K டிவி'யில் இந்த நகைச்சுவை காட்சியை பார்த்ததில் புன்னகைத்தேன்..! அருமையான நகைச்சுவையை உருவாக்கியவருக்கு பாராட்டுக்கள்..!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.