Everything posted by ராசவன்னியன்
-
"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
உச்ச நீதிமன்ற தீர்ப்பு: “தமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு” புது தில்லி: 'காவிரி நீரில் தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம், 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கில் 4 மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து 264 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழகம் கோரியிருந்தது. ஆனால், 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. காவிரியில் இருந்து 184.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது" என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. தினமணி
-
"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை” உச்ச நீதிமன்றம். புது தில்லி: "காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று வெளியிட்ட தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும், காவிரியில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி விவகாரத்தில் பாசன வசதி பெறும் 4 மாநிலங்களும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாசித்து வருகிறார். அதில் முதல் தகவலாக, காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை என்று கருத்துக் கூறியுள்ளார். காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்து வருகிறது காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9- இல் தெரிவித்தது. இதன்படி, காவிரி வழக்கு விசாரணை ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20-ஆம் தேதி வரை 27 நாள்கள் நடைபெற்றது. விசாரணையின் போது, தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் அந்தந்த மாநில நலன்கள், உரிமைகளை முன்னிறுத்தி வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, காவிரி வழக்கு இறுதி விசாரணையில் இதுவரை நடைபெற்ற வாதங்கள், ஆவணங்கள், நீர்வள நிபுணர்களின் கருத்துகள் அடங்கிய எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அந்தந்த மாநில வழக்குரைஞர்கள் சமர்ப்பிக்க அமர்வு உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அறிவித்துள்ளது. தினமணி
-
அல்வா கிடைக்குமா..?
கடந்த வாரம் திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த பொறியாளர், அந்த ஊரின் சிறப்பான 'இருட்டுக்கடை அல்வா'வை வாங்கி வந்து கொடுத்தார்.. பொதியை திறந்து சாப்பிட்டால், என்ன ஒரு சுவையோ சுவை.. ! திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி... இக்கடையை 1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். இருட்டுக்கடை என்று பெயர் வரக் காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு மண்ணெண்ணெய் விளக்கு அகன்று ஒரு 200 Watts பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. கடைக்கு எந்த விளம்பரமும் கிடையாது.. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம். மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த இருப்பும் காலியாகிவிட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள். இருட்டுக்கடை அல்வா வாங்க வரிசையில் காத்திருக்கும் கூட்டம்...
-
எங்கடா போறே, சிறீலங்காவா..?
One of the most dangerous Rail route in the world...!
-
எங்கடா போறே, சிறீலங்காவா..?
எங்கடா போறே, சிறீலங்காவா..? ஆபத்தான விடயங்களை சீண்டிப்பார்ப்பது இளசுகளின் இயல்பு.. ஆனால் இப்படியா..? பாம்பன் பாலத்திருந்து குதிக்கும் நபர், கடலின் நீரோட்டம் பற்றி அறியாமல் விளையாடுவதை என்னவென்று சொல்வது?
-
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி எதற்கு..?
ஒரே ஆதங்கம், தமிழக அரசே முழுத் தொகையையும் கொடுத்திருக்கலாம்.. (தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை விமான நிலையத்தில் தமிழ் இல்லை, அதை தட்டிக்கேட்க இந்த அரசுக்கு துப்பில்லை..)
-
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி எதற்கு..?
அனைவரின் முயற்சிக்கும், பங்களிப்பிற்கும் நன்றி..!
-
சுவையான 'பக்கோடா' செய்வது எப்படி..?
‘அந்த’ ஒரு வார்த்தை: கூகுள் தேடலில் இந்திய அளவில் டிரெண்ட் ஆன ‘பக்கோடா’! புதுதில்லி: உலக அளவில் பிரபல தேடுபொறி தளமான கூகுளில் கடந்த வாரம் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன வார்த்தைகளில் 'பக்கோடா' முதலிடம் பிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பொழுது, 'பக்கோடா விற்பது என்பதும் ஒரு வேலை வாய்ப்புதான், பக்கோடா விற்பனை செய்யும் நபர் தன் வீட்டிற்கு ரூ. 200-ஐ வருமானமாகக் கொண்டு சென்றால், அதனை நாம் வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா..? இல்லையா..?' என்று கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்து பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்வினைகளை உண்டாக்கியது. அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாஜக அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோடியின் இந்த பேச்சினை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் விமர்சனம் செய்து இருந்தார். அவர் கூறும்பொழுது, 'பக்கோடா விற்பனை செய்வதை பிரதமர் வேலைவாய்ப்பு என குறிப்பிட்டு உள்ளார். அப்படிப்பு பார்த்தால் பிச்சையெடுப்பது என்பது கூட ஒரு வேலைதான். ஏழ்மை காரணமாக வாழ்க்கைக்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களையும் நீங்கள் வேலை வழங்கப்பட்டவர்களாக கருதலாம்' என்று காட்டமாக விமர்சித்தார். செவ்வாய்க்கிழமையன்று கூட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஜ்ஜி மற்றும் பக்கோடா விற்பனை செய்யும் போராட்டத்தினை புதுச்சேரியில் நடத்தினார். இப்படியாக பக்கோடா தொடர்பான விவாதம் எதோ ஒரு வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இதன் விளைவாக உலக அளவில் பிரபல தேடுபொறி தளமான கூகுளில் கடந்த வாரம் இந்திய அளவில் ஆன வார்த்தைகளில் பக்கோடா முதலிடம் பிடித்துள்ளது. அதிலும் அதிகமான தடவைகள் அந்த வார்த்தையினைத் தேடியவர்கள் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணி
-
பழைய புகைப் படங்கள்.
அருமையான மிக அரிதான புகைப்படங்களின் தொகுப்பும் செய்திகளும்.. மேலேயுள்ள படங்களின் அனைத்து இடங்களையும் கண்டிருக்கிறேன்.. புகைப்படத்திற்கும் தற்போதுள்ள நிலையையும் ஒப்பிடுகையில் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமானது.. அதிலும் சென்னை மவுண்ட் ரோடு, தாம்பரம் ஸ்டேசன், ரங்கநாதன் தெரு, அடையார் கிராம வயல்வெளிகள்.. பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 5 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.60.. நம்ப முடியவில்லை..! பகிர்விற்கு நன்றி, தமிழ்சிறி மற்றும் சண்டமாருதன்..
- சுவையான 'பக்கோடா' செய்வது எப்படி..?
-
இரண்டாவது விமான ஓடுதளம் - சென்னை
- இரண்டாவது விமான ஓடுதளம் - சென்னை
இரண்டாவது விமான ஓடுதளம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இரண்டாவது விமான ஓடுதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது...! ஆலந்தூர் முதல் போரூர் வரை நீள்வாக்கில்(2.925 Km) இந்த விமான ஓடுதளம் அமைந்துள்ளது. (Runway 30) Nice video:- அட..உண்மையை சொல்றேனுங்க..!
கொங்கு தமிழில் அருமையான காணொளி..- சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2
இன்னும் இரு மாதங்களில் துவங்க இருக்கும் சைதாப்பேட்டை வழியாகச் செல்லும் ஏ.ஜி-டி.எம்.எஸ் - சின்னமலை மற்றும் நேரு பூங்கா - சென்ட்ரல் மெட்ரோ வழித்தட நீட்சியின் வேலைத் திட்டங்களை தமிழக தொழிற்துறை அமைச்சர் பார்வையிட்டபோது எடுத்த படம்.. இந்த இரண்டு வழித்தட நீட்சிகளும் சுரங்கப் பாதையில் அமைத்துள்ளது.- நன்மை என்பது நாளை வருவது.. நம்பிக்கை ஒளியாகும்..
- நன்மை என்பது நாளை வருவது.. நம்பிக்கை ஒளியாகும்..
- நன்மை என்பது நாளை வருவது.. நம்பிக்கை ஒளியாகும்..
"சொல்லடி அபிராமி.." "..செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று ஜெயம் ஜெயம் என்றாட - இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு கொங்கை கொடும்பகை வென்றனமென்று குழைந்து குழைந்தாட - மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ.. கனிந்து வாராயோ.. " ஏறக்குறைய டி.எம்.எஸ் குரல்வளம் தெரிகிறது..- நன்மை என்பது நாளை வருவது.. நம்பிக்கை ஒளியாகும்..
"நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு.. பகை வந்த போது துணை ஒன்று உண்டு.. இருள் வந்த போது விளக்கொன்று உண்டு.. எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு.. உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்.. நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்..!" கவிஞர் வாலியின் பாடல் வரிகளில் பிடித்த ஒன்று.. இந்தக் காணொளியை யூ டுயூபில் காண நேர்ந்தது.. பாடகர் நன்றாகவே பாடியுள்ளார்..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களை அருளிய விசுகு, சுவி மற்றும் வளவன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி..!- 'தமிழ்நாடு' பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா!
தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா! நில அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய நிகழ்வு அது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை முதல்வர் காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர் வைத்த காங்கிரஸ் கட்சி, ஏன் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கத் தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. சட்ட மன்றத்துக்குள் நுழைந்ததும் தனது கோரிக்கையை மீண்டும் திமுக வலியுறுத்தியது. 1957 மே 7 அன்று ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. இறங்கிவந்த அரசு தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் 127. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி. இருப்பினும், மேடைகளில் ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தது திமுக.1961 ஜனவரி 30 அன்று சோஷலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை, ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், ஆளுங்கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்ட மன்றத்துக்கு உள்ளும் புறமும் எழுந்தது. குறிப்பாக, தமிழரசு கழகத்தினர் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று குரலெழுப்பினர். அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறு கோரினார் முதலமைச்சர் காமராஜர். இது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மூன்று நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்குப் பதிலாக, நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுவதற்குச் சம்மதித்தது. ஆனால், அந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டாலும், முழு வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாகவே இருந்தனர். கம்பனும் சேக்கிழாரும் இப்படி மாநில அளவில் ‘தமிழ்நாடு’ கோரிக்கை இருந்த நிலையில், அதனை இந்திய அளவுக்குக் கொண்டுசென்றவர்களுள் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா முக்கியமானவர். ஆம், தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரி இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே செய்துவிட சட்டத்தில் இடமிருக்கிறது என்பதால், அந்த முயற்சியை முன்னெடுத்தார் பூபேஷ் குப்தா. அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை வெகுவாக ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. வரலாற்றுரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிய பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு, பரிபாடல், பதிற்றுப்பத்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லி பதிலளித்த அண்ணா, கம்பனும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார். “பார்லிமெண்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்? பிரசிடெண்ட்டை ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர், ‘‘தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாகவேண்டும். மாநிலத்தின் பெயருக்கும் அதன் தலைநகரத்தின் பெயருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்ற தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது. தொடர் முயற்சி பிறகு, மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகி, பக்தவத்சலம் முதல்வராகியிருந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. 23 ஜூலை 1963 அன்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், ‘‘தமிழ்நாடு என்று சொன்னால், வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்.. மெட்ராஸ் என்றால்தானே புரியும். அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது” என்றார். அதுமட்டுமல்ல, ‘‘மாநிலத்தின் பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும். அது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார். அதற்கு எதிர்வினை ஆற்றிய திமுக, “கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது, எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. ஒரு நாட்டுக்கே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?” என்று கேட்டது. வாதங்கள் வலுவாக எடுத்துவைக்கப்பட்டபோதும் சட்ட மன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்தது. ஆக, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்விகண்ட நிலையில்தான் 1967-ல் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது. பெயர் சூட்டினார் அண்ணா! 1967 ஜூலை 18 அன்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்டவேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு - மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே என்று யோசனை சொன்னார். என்றாலும், இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவருமே ஒருமித்த எண்ணத்துக்கு வந்திருந்ததால், தமிழ்நாடு என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு பேசிய முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு” என்று மூன்று முறை அண்ணா உச்சரிக்க, மூன்று முறையும் ‘வாழ்க’ கோஷம் எழுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள். தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசு கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பங்களிப்பையும் பதிவுசெய்து பேசினார் முதலமைச்சர் அண்ணா. அதோடு, ‘‘நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்” என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது. அண்ணாவின் மனத்துக்கு நெருக்கமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டதன் பொன் விழாவைத் தற்போது கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு. - ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு’ தினமணி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்தருளிய யாழ் உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழில் சிரத்தையுடன் அருமையான காணொளி தயாரிப்பு.. ! உருவாக்கிய கரங்களுக்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தமிழ்சிறிக்கு தனிமடல் அனுப்பினால், "தமிழ்சிறி cannot receive message" என பிழை செய்தி வருகிறது.. கள அமைப்பில் ஏதேனும் பிரச்சனையா..? அறியத் தந்தால் நன்று..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தமிழ்சிறி..! பேரனுக்கு கோவிலில் விழா எடுக்க வேண்டியிருந்ததால் மூன்று வாரங்கள் தமிழகம் சென்றுவிட்டு, இந்த வாரம்தான் அமீரகம் வந்து சேர்ந்தேன்.. வேலைப் பளுவினால் களம் வர இயலவில்லை.. மன்னிக்கவும்! பாஞ், வாட்ஸ் அப்பில் சற்றுமுன் வாழ்த்து தெரிவித்துவிட்டு, யாழிலிருக்கும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்..சிறி..! மறக்காமல் வந்துவிட்டேன்!! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..! - இரண்டாவது விமான ஓடுதளம் - சென்னை
Important Information
By using this site, you agree to our Terms of Use.