Everything posted by ராசவன்னியன்
-
புரியாது.. வாழ்க்கையின் ரகசியம் புரியாது..!
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, "25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன..?" என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்..அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது. அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள். மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்..!!! இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன். அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள். அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது" என்றார் கணவர். -படித்தது..
-
எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்..!
எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்..! - ஓ.பி.எஸ் சென்னை : தங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2 ஆயிரத்து 315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கிள்ல நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வமும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "எங்களைப் போன்ற நல்ல அரசயில்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியைப் போலவே தற்போதும் கல்வித்துறை அதே வளர்ச்சிப் பாதையை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்றும் கூறி ஐஸ் வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். தற்ஸ்தமிழ்
-
குடும்ப அட்டை கூத்துக்கள்..
குடும்ப அட்டை குளறுபடிகள்.. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான உணவுப்பொருள் வழங்கல் மற்று நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் வாடிக்ககையாளர்களுக்கு மேம்பட்ட குடும்ப அட்டை (Smart Card) வழங்குவதில் மிகுந்த ரசனையுடன் சேவையாற்றி வருகிறது.. அவற்றை இப்படங்கள் மூலமாக ரசிக்கலாம்.. ஈழத்தின் சங்கக் கடைகளில் இப்படி குளறுபடிகள் நடந்துள்ளனவா? படங்கள் உதவி : தற்ஸ்தமிழ்
-
நடந்தாய் வாழி காவேரி..
ஏற்கனவே காவிரியின் பாதி உயிரை கர்நாடகாவிற்கு விற்றுவிட்டார்கள்.. காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி முன்பு சென்னை ஒருங்கிணைந்த மாநிலமாக இருக்கும்வரை தமிழர்களே அப்பகுதியில் பெருமளவு வசித்தார்கள்.. மொழிவாரி மாநிலமாக பிரிக்கையில் அப்பகுதி கர்நாடகாவிற்கு போய்விட்டது..
-
நடந்தாய் வாழி காவேரி..
அவர் அனைத்தையும் களைய நினைத்திருப்பார், ஆனால் வகிக்கும் பதவியின் கெளரவமும், சுற்றிலும் பெண்களும் இருப்பதாலும் வெட்கத்தில் தவிர்த்திருப்பர் என எண்ணுகிறேன்.. அவரை சூழ்ந்திருப்பது அவரின் அல்லக்கைகள். பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது யாரும் சேர்ட், பெனியன் எல்லாம் போட்டுக் கொண்டு குளிப்பதில்லை.
-
நடந்தாய் வாழி காவேரி..
நடந்தாய் வாழி காவேரி.. காவிரியில் புண்ணியம் தேடும் முதல்வர் பழனிச்சாமி..
-
விடுதலை..
மே 17 இயக்கத் தோழர்கள் விடுதலை
-
மெட்ரோவுடன் மேம்பால ரயில் ஒருங்கிணைப்பு பேச்சு துவக்கம்..
மெட்ரோவுடன் மேம்பால ரயில்(MRTS) ஒருங்கிணைப்பு பேச்சு துவக்கம்! ஆவணங்களை அளிக்க சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவு.. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துடன், மேம்பால ரயில் போக்குவரத்தை (Madras Rapid Transit System - MRTS) ஒருங்கிணைப்பதற்காக, அதிகாரிகள் நிலையிலான, அதிகாரபூர்வ பேச்சு துவங்கியுள்ளது. இதற்காக மேம்பால ரயில் திட்ட ஆவணங்களை ஒப்படைக்க, பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், முதல்கட்டமாக, 42 கி.மீ., தொலைவுக்கு, மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. இதில் விமான நிலையம் முதல், சின்னமலை வரையும், பரங்கிமலை முதல் நேரு பூங்கா வரையிலான வழித்தடங்களில், போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கடற்கரை ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை மேம்பால ரயில் திட்டத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை நிர்வகித்து வரும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை, இதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் கருத்து கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் மேம்பால ரயில் திட்டங்களை(MRTS) ஒருங்கிணைப்பதற்கான அதிகாரிகள் கூட்டம், அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் மெட்ரோ ரயில், போக்குவரத்து துறை, சி.எம்.டி.ஏ., தெற்கு ரயில்வே ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுடன், இரண்டு தனியார் கலந்தாலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிறுவனத்துடன், எம்.ஆர்.டி.எஸ்., எனப்படும் மேம்பால ரயில் திட்டத்தை ஒருங்கிணைப்பது குறித்து, முதல் முறையாக அதிகாரபூர்வ பேச்சு துவக்கப்பட்டுள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கலந்தாலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் விளக்கினர். மேம்பால ரயில் திட்டத்தை பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை குறித்தும், இந்த ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு, ரயிவே துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். மேம்பால ரயில் திட்டம் தொடர்பான அரசாணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அளிக்குமாறு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. வீட்டுவசதி துறை, வருவாய் துறையினரிடமும், ஆவணங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த ரயில் நிலையங்களில், எந்த பகுதி இருப்பு பாதையை, ரயில்வே வைத்துக்கொள்வது, எதை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒப்படைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்கரை ரயில் நிலையத்தை அழகுபடுத்துவதற்கான வரைவு திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக அடுத்த கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேம்பால ரயில் கடந்து வந்த பாதை... முதல்கட்டம் - கடந்த, 1984ல், கடற்கரை - மயிலாப்பூர், மேம்பால ரயில் திட்ட பணிகள் துவக்கம் - நீளம்: 8.55 கி.மீ., - நிலையங்கள்: எட்டு - இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து, 1998ல் துவக்கம் - 100 சதவீத நிதி மத்திய அரசு வழங்கியது. இரண்டாம் கட்டம் - கடந்த, 1998ல், மயிலாப்பூர் - வேளச்சேரி இரண்டாம் கட்டப்பணிகள் துவக்கம் - நீளம்: 11 கி.மீ., - நிலையங்கள்: ஒன்பது - ரயில் போக்குவரத்து, 2007ல் துவக்கம் - இரண்டாம் கட்ட திட்ட பணிக்கான நிதியில் தமிழக அரசின் பங்கு, 67 சதவீதம்; மத்திய அரசு பங்கு, 33 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பு. இரண்டாம் கட்டம் விரிவாக்கம் - கடந்த, 2007ல், வேளச்சேரி - பரங்கிமலை, இரண்டாம் கட்ட விரிவாக்க திட்ட பணிகள் துவக்கம் - நீளம் : 5 கி.மீ., - நிலையங்கள்: மூன்று - திட்ட செலவில், மூன்றில் இரண்டு பங்கு தமிழக அரசும்; மூன்றில் ஒரு பங்கை, மத்திய அரசும் ஏற்றுள்ளது - நிலம் கையகப்படுத்துதல் வழக்குகளால் இறுதி கட்ட பணிகள் தொய்வடைந்துள்ளன. தினமலர்
-
விடுதலை..
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத் தோழர்கள் விடுதலை.. ஜெனீவாவில் வைகோ உரையாற்றியபோது..
-
சுப்ரபாதம் பாடல்
இன்று தொடங்கும் நவராத்திரி கொலுவிற்கு இந்த பாடல் உபயோகமாக இருக்குமென எண்ணுகிறேன்..
-
தத்தியா..? புத்தியா..??
நாட்டின் 'தேசிய கீதம்' இசைக்கும்போது நடக்கும் பிரதமர்..!
- ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
-
சிரிக்க மட்டும் வாங்க
இப்படி 'பேய்க்காயாக' இருந்தால், ரொம்பக் கஷ்டம்..!
-
நம்பினார் கெடுவதில்லை.. நான்கு மறை தீர்ப்பு..
நம்பினார் கெடுவதில்லை.. நான்கு மறை தீர்ப்பு..! நாலுவேலி நிலம்(1959) படத்தில் வரும் இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் பால்ய வயது நினைவுகளும், சிறுவயதில் இலங்கை வானொலி எப்படி எம்மை இனிமையான பாடல்களால் வசீகரித்தது என்ற எண்ணமும் மேலோங்கும்.. யாழ் களத்தில் 1955 முன் பிறந்தவர்களின் நினைவில் இப்பாடல் நிச்சயம் குடிகொண்டிருக்கும்..! என்ன இனிமையான நாட்கள் அவை..! "இந்த மாநிலத்தை பாராய் மகனே..! உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே.!!"
- நடிகர் கமலகாசன் 'அமைச்சரவை'
- தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?
- தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?
- தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?
-
டேய் அப்பா.. ஏன்டா இந்தமாதிரி பண்ற...?
டேய் அப்பா.. ஏன்டா இந்தமாதிரி பண்ற...?
-
தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?
தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு? தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாக இருக்க வேண்டும், மலையாளத்தைக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். மேற்கு வங்கப் பள்ளிகளிலும் வங்க மொழியைச் சமீபத்தில் கட்டாயமாக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பள்ளிகளில் வேறு எந்த மொழியை யும் கற்றுக்கொடுப்பதைத் தடுப்பதல்ல இந்த உத்தரவுகளின் நோக்கம். தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே. மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் பதிலடியாகவும் இந்த உத்தரவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் அவர் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான தகுதி மட்டுமே என்று பெற்றோர் கள் கருதும் வரையிலும் தாய்மொழிக் கல்வியை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க முடியாது. இந்நிலையில், குறைந்தபட்சம் தாய்மொழி ஒரு பாடமாகவேனும் கட்டாயமாகப் பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மொழியுரிமை குறித்து கர்நாடகம், கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் தமிழகம், இந்த உரிமைப் போராட்டத்தில் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய்மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லையென்றால், அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகிவிடும் என்பது கல்வியாளர்களின் கருத்து. கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? இந்து
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சென்ற ஆகஸ்ட் 14ல் எழுபது வயதடைந்த 'இளம் முனைவருக்கு' மறுபடியும் பிறந்த நாளா?
- ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
- காற்றில் கலந்த கனவு..
-
'நீட்'ட நான் வச்சுக்கிறேன்.. 'சீட்'ட நீ வச்சுக்கோ..!
'நீட்'ட நான் வச்சுக்கிறேன்.. 'சீட்'ட நீ வச்சுக்கோ..!
-
பதில் கேள்விகள்..
பதில் கேள்விகள்..!