Everything posted by ராசவன்னியன்
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
ராமர் கட்டுனதாக புராணத்தில் சொல்லப்படுகிறது.. இப்பொழுதும் வட இந்தியர்களால் நம்பப்படுகிறது.. இது இயற்கையாக புவி மாற்றத்தினால் தோன்றியதாகவே இருக்கும்..! தலைமன்னாருக்கும், 'அரிச்சல்முனை'க்கும் இடையேயான திட்டுத்திட்டாக சுண்ணாம்பு பாறைகளாலான 'ராமர் பாலம்' ஏறக்குறைய 30 மைல்கள் தூரம் வரையுள்ளது.. இப்பகுதியில் கடலின் ஆழம் 1மீ முதல் 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கிறதாம். ஒரு வருடத்திற்கு முன் நான் தனுஷ்கோடி சென்றபொழுது, சாலை அமைக்கும் பணிகள் துரிதமான கதியில் நடைபெற்று வந்தது.. தனுஷ்கோடியில் வசிக்கும் மீனவர்களிடம் விசாரித்தபோது, இலங்கையின் 'ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்' தனுஷ்கோடியிலும் வேலை செய்யுமென தெரிவித்தனர். தனுஷ்கோடி சென்றால், பலரும் ஈழப்பகுதியை நெருங்கியதை உணர்வதாக சொல்லக் கேட்டுள்ளேன். நானும் உணர்ந்தேன்..!
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
அரிச்சல்முனை 1964 ல் புயலால் அழிக்கப்பட்ட தமிழ் நாட்டின் கடைக்கோடி நிலப்பரப்பான அரிச்சல் முனை மணல்திட்டு பகுதி வரை தார் சாலை போடப்பட்டு சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி அவர்களால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து 25கி.மீ தொலைவிலுள்ள அரிச்சல் முனையும் இனிமேல் முக்கிய இடம் பெறும் என நம்பப்படுகிறது. புண்ணிய பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், அரிச்சல்முனைப் பகுதிக்கு இனிமேல் எந்த பயமும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று வரலாம். கடைக்கோடி நிலப்பரப்பான அரிச்சல் முனை.
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
தற்பொழுது தனுஷ்கோடி நகரம் மேம்பாட்டை நோக்கி.. தனுஷ்கோடி நகரம் நோக்கி பழைய வழி.. தனுஷ்கோடி தாண்டி 'அரிச்சல்முனை' நோக்கி தார் சாலை.. 'அரிச்சல்முனை' கடல் விளிம்பில் இந்திய எல்லையை குறிக்கும் தூண்.. 'அரிச்சல்முனை' நொக்கி செல்லும் வழியில் தனுஷ்கோடி நகரத்தின் சிதைந்த சர்ச்..
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சென்னை மெட்ரோ ரயில்...
Update: சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்தில் அடுத்த கட்டமாக இடபெறவிருந்த சென்னை கலங்கரை விளக்கம் முதல் கோயம்பேடு வழித்தட திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதே வழித்தடம் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படுகிறது.. (இதே வழித்தடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் திட்டமிடப்பட்டிருந்த "மோனோ ரயில் திட்டம்" இனி என்னவாகும் என தெரியவில்லை! ) மற்றுமொரு இனிய செய்தி.. கோயம்புத்தூரிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.. இவற்றுக்கான அறிவிப்பை இன்று சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார்.- ஓவியர் வீரசந்தானம் ஐயா !
காணொளியின் தாக்கம் ஆழ்ந்த விசனத்தை ஏற்படுத்துகிறது.. பகிர்விற்கு நன்றி நுணா..- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
யாருமே இல்லாத திரியில டீ ஆத்துற உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா, தமிழ்சிறி..?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சென்னை மெட்ரோ ரயில்...
பச்சைகளையும், வாழ்த்துக்களையும் வழங்கிய உறவுகளுக்கு மிக்க நன்றி..! எனது வீட்டிற்கு அருகாமையில் ஒரு மெட்ரோ நிலையம் அமைந்திருந்தாலும், வெளிநாட்டில் வசிப்பதால் சென்னை மெட்ரோ சுரங்க வழியில் பயணம் செய்ய, இன்னும் அரை வருடம் நான் காத்திருக்க வேண்டும்.. சுரங்க வழியில் ரயில் சேவை துவக்க விழா படங்களும் காணொளிகளும் கீழே..!1 துவக்க விழா.. அமைச்சர்களின் முதல் துவக்கப் பயணம்.. பொதுமக்கள் பயணம்.. காணொளிகள்..- சென்னை மெட்ரோ ரயில்...
The roll out of "Blue Beauty" today..!- சென்னை மெட்ரோ ரயில்...
மெட்ரோ ரெயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயில்! சென்னை: கோயம்பேடு - நேரு பூங்கா இடையே நாளை தொடங்கி வைக்கப்படும் சுரங்க மெட்ரோ ரெயிலை தவறாகப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு, மெட்ரோ ரெயில் சொத்துகளுக்கு ஊறுவிளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப் படும். ஆபத்தான பொருட்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மெட்ரோ ரெயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம். மெட்ரோ ரெயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம். பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ.250 அபராதம். மெட்ரோ ரெயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம். ஓடும் ரெயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம். மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம். பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ.50-ம், பயணத்துக்கான பயணக் கட்டணத்தோடு அபராதம். ரெயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம். உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை. ரெயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை (சட்ட விதிகளுக்கு உட்பட்டு) விதிக்கப்படும். மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை. பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும். http://www.maalaimalar.com/News/TopN...in-damages.vpf Mock Fire Drill..- சென்னை மெட்ரோ ரயில்...
சுரங்க தளத்திலிருக்கும் ரயில் நிலையங்களின் படங்கள்..! நாளை திறக்கவிருக்கும் சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை எனக்கும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. காரணம், என் சென்னை வீட்டருகே 100மீ தொலைவில் ஒரு மெட்ரோ நிலையம் அமைந்துள்ளது.. அனைத்து ரயில் நிலையங்களிலும், "காய் ரே.. ஆஜ் மே.." என அந்நிய மொழியில் இல்லாமல் எம் தாய்மொழி தமிழிலில் எங்கும் அறிவிப்புகள் மற்றும் பலகைகள்..! இத்திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்..!- சென்னை மெட்ரோ ரயில்...
நாளை(14-05-2017) திறக்கவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்த கட்ட நகர்வான 'சுரங்கப் பாதையில்' அண்ணா நகர் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்க வழியில் ரயில் சேவை மக்களுக்காக காத்திருக்கிறது.. சில படங்கள் இங்கே பார்வைக்கு..! பச்சையப்பன் கல்லூரி ரயில் நிலையம். திருமங்கலம் ரயில் நிலையம். ஷெனாய் நகர் ரயில் நிலையம். அண்ணாநகர் கிழக்கு ரயில் நிலையம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிலாமதி..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழிலும் "மோடி" நுழைந்துவிட்டாரோ..? டெல்லியில் விவசாயிகளின் பலவகை போராட்டத்தையும் கண்டுகொள்ளாத பராமுகம் மாதிரி மேலுள்ள பதிவிற்கு ஏன் இந்த ஆழ்ந்த மெளனம்..? 'சாத்தியம்' அல்லது 'சாத்தியமற்றது' என தெரிவித்தால், நெருடல் தீரும்தானே?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் களத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுருக்க, விரிவாக்க என பெரும்பிரிவுகளின் தலைப்பின் வலதுபுறம் ஒரு குறியீடு V உள்ளது.. உதாரணமாக, யாழ் இனிது, செம்பாலை,படுமலைபாலை,செவ்வழிப்பாலை,அரும்பாலை,கோடிப்பாலை,விளரிப்பாலை. etc., போன்றவற்றை விரும்பும் வகையில் பார்க்கவோ, தவிர்க்கவோ(மறைக்க) இதன் மூலம் வசதியுள்ளது. இதே வசதி, யாழ் திண்ணைக்கும் முன்பிருந்தது. தற்பொழுது அவ்வசதி, யாழ்களம், புதிய பதிப்பிற்கு மாறியவுடன் காணவில்ல! அவ்வசதியை மறுபடியும் மீட்டெடுத்து தந்தால், வேண்டியபோது மட்டும் திண்ணையை பார்க்க வசதியாக இருக்கும். இதன் மூலம், யாழ் களத்தின் மொத்த உயர பரப்பையும் விருப்பியவாறு இன்னமும் குறைக்க முடிவதால், கீழுள்ள தலைப்புகளுக்கு செல்ல எலி சுட்டியை(Mouse) ரொம்ப தூரம் இழுக்கவேண்டிய தேவையும் குறையும். ஆவென செய்வீர்களா..? மிக்க நன்றி..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுமேரியர் மற்றும் ராஜன்விசுவா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! வாழிய பல்லாண்டு!- சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரெயில் சேவை ஜூன் மாதத்தில் தொடங்கும்-அதிகாரிகள் தகவல்! சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரம் முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரம் 2–வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன. இதில் முதல் கட்டமாக 2–வது வழித்தடத்தில் உள்ள உயர்த்தப்பட்ட பாதையான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 2 வழித்தடத்திலும் சுரங்கப்பாதையிலும், உயர்மட்ட பாதையிலும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த சுரங்கப்பாதையில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக இருப்பதால், எப்போது ரெயில் சேவை தொடங்கப்படும்? என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ஜூன் மாதம் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை உள்ள 7.6 கிலோ மீட்டர் தூரப்பணிகள் முற்றிலும் நிறைவடைந்து உள்ளன. இந்தபாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னைக்கு வந்து இறுதிக்கட்ட ஆய்வு பணியில் ஈடுபட உள்ளார். இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் மாதம் ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்த பாதையில் கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையாகும். திருமங்கலத்தில் இருந்து எழும்பூர் வரை சுரங்கப்பாதையாகும். இதில் திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரை சிக்னல் மற்றும் மின்சார இணைப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டை– விம்கோ நகர் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான விரிவாக்கத்தில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய 8 ரெயில் நிலையங்கள் வர உள்ளன. இதில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய 2 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைய உள்ளன. மீதம் உள்ள 6 ரெயில் நிலையங்களும் உயர்த்தப்பட்ட பாதையில் வர உள்ளன. வண்ணாரப்பேட்டையில் இருந்து முதல் 2 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. ‘ஆப்கான்ஸ்’ நிறுவனத்துக்கு பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மீதம் உள்ள 7 கிலோ மீட்டருக்கு விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. 2018–ம் ஆண்டு இந்தப்பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். தினத்தந்தி டிஸ்கி: யப்பாடா, இனி சென்னை சென்றால், விமான நிலையத்திலிருந்து வீடு செல்ல வாடகை மகிழுந்துகளுக்கு வரிசையில் தொங்கிக்கொண்டிருக்க தேவை இல்லை.. மெட்ரோ ரயில் சேவையை அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கினால், விமான நிலையதிற்கு செல்லும் / வரும் பயணிகள் அதிகம் பயன்பெறுவர். மெட்ரோ ரயில் சேவையின் நோக்கமும் முழுமையடையும்..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள், புங்கை..! வாழிய பல்லாண்டு!!- அழகு நிலவே
வளரும் கலைஞர்களின் இப்பாடல்களை பாடியவிதம் மிக நன்றாக ரசிக்கும்படி இருகின்றது.. ஈழத்தமிழர்களிடம் நல்ல திறமைகள் இருகின்றது, ஆனால் ஏனோ வெளியே தெரிவதில்லை.. பகிர்விற்கு நன்றி நுணா..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ்சிறி குழந்தாய் .. ! (தங்களுக்கு 9 வயதா? அல்லது 90 வயதா?)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும், நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தமிழ்சிறி நீங்கள் குறிப்பிட்ட வண்ணப்பொட்டிக்கு கீழே 'மேலதிக வண்ணங்கள்'(More colors) என இப்பொழுது புதிதாக ஒரு தெரிவு வருகிறது.. அங்கே 'க்ளிக்'கினால் பல்வேறு நிறங்கள் இருக்கிறது..! உங்கள் விருப்பதிற்கிசைய கலந்து சாத்தலாம்..!! Now more flexible to choose, I really like it..!! - சென்னை மெட்ரோ ரயில்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.