Everything posted by ராசவன்னியன்
-
பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்கள், நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை மாநகரில் தொழில்துறையின் வளர்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது. இதனால் சென்னையை நோக்கி இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகப்படியான விமான சேவையை சமாளிக்க முடியாமல் திணறும் நிலைக்கு மீனம்பாக்கம் ஆளாகியுள்ளது. எனவே நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இதற்கான இடத்தை பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, போதிய இடவசதி கொண்ட பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய நான்கு இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையக் குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதுதொடர்பான விரிவான அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. அதன்படி, பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் மத்திய அரசிடம் முன்மொழியப்பட்டன. இதுதொடர்பாக திமுக எம்.பி டாக்டர்.கனிமொழி சோமு மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 1) கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பரந்தூர் அமைந்துள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க 4,791 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இங்கு போதுமான இடம் மற்றும் வான்வெளி இருக்கிறது. விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் மற்றும் கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருக்கக்கூடிய விமான நிலையங்களுக்கான விரிவானப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான நிதி திரட்ட பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ’டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், வெளிநாட்டு முதலீடு மற்றும் மத்திய நிதி ஆகியவற்றைக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் மூலம் முதல் 8 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமயம்
-
"அடுத்த ஜென்மத்திலேயும் இவரே கணவரா வரணும்.."
அப்போ அறுபது வயதுக்கு மேல் விதைக்க ஐ மீன், பெண்களின் மனதை கவர முடியாதா? 🤔 😭 😛
-
"அடுத்த ஜென்மத்திலேயும் இவரே கணவரா வரணும்.."
'அந்தாளு' இவர்தான்..! கருவுற்றதை சாம்பிள் காட்டுகிறார்களாம்..!
-
பேச்சு பேச்சா இருக்கோணும்..
பேச்சு பேச்சா இருக்கோணும்.. நல்ல வேடிக்கையான அறிவுறுத்தல்..! 🤗
-
"அடுத்த ஜென்மத்திலேயும் இவரே கணவரா வரணும்.."
சென்னை : பிரபல நடிகை, தனது கணவருக்கு பாத பூஜை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். 🤭 "கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருசன்...(?😛)" என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இந்தக் காலத்தில் ஆணுக்குச் சமநிலையில் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் இன்றும் கணவனுக்குப் பயப்படும் மனைவியையும், மனைவிக்குப் பயப்படும் கணவனையும் பார்க்க முடிகிறது. கணவனுக்குப் பயப்படும் மனைவியைப் பார்ப்பது இக்காலத்தில் அரிதாக இருந்தாலும், மனைவிக்குப் பயப்படும் கணவனை அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஆனால், மார்டன் பெண்கள் என்று சொல்லிக் கொள்ளும் பிரபல நடிகையே கணவனுக்கு பாத பூஜை செய்ததை பார்த்து பல பெண்களே வாய்பிளந்து நிற்கிறார்கள். கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரணிதா, 'உதயம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை தொடுத்தார். இதையடுத்து,கார்த்தியுடன் 'சகுனி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சூர்யாவுடன் 'மாஸ்', ஜெய்யுடன் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லை தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர், போன வருடம் நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பிரணிதா சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரின் பிறந்த நாளில் கர்ப்பாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, ஜூன் மாதம் பிரணிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவனுக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். நேற்று தென்னிந்தியா முழுவதும் பீமா அமாவாசை தினம் கொண்டாடப்பட்டது. அதாவது, பார்வதி தேவிக்கு சிவபெருமான் அவருடைய பக்தியை புரிந்துகொண்டு ஆசீர்வதித்த நாள் தான் பீமா அமாவாசை தினம். இந்த தினத்தில் கணவருக்கு பாத பூஜை செய்யும் மனைவி நீண்ட ஆயுள் கூடி எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பல பெண்கள், பீமா அமாவாசை தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நடிகை பிரணிதாவும் தனது கணவருக்கு பாதபூஜை செய்து கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை பார்த்த பல பெண்கள், 'அட இப்படி ஒரு விஷயம் இருக்கா..? இது தெரியாம போச்சே..!' என்று புலம்பி வருகின்றனர். அவர் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்பிலிம்பீட் *************************** கொடுமையடா சாமி..! 😛
-
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
இந்தக் காணொளியை நேரமிருந்தால் முழுவதும் பாருங்கள்..😌
-
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
- 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
சென்னை மாமல்லபுரத்தில், உலகின் 188 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டினை கற்பித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நம் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் சதுரங்கம் தொடர்பான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான வரவேற்பு காணொளி தற்பொழுது வெளியாகியுள்ளது.- சென்னையில் இறங்கிய ஏர்பஸ் 'பெலுகா' விமானம்..
ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். 😎 காங்கேசன்துறையில் டைட்டானிக் கப்பலே வந்து நிற்குமல்லோ? (மயிலிட்டி மாதிரி அல்ல..!🤪)- சென்னையில் இறங்கிய ஏர்பஸ் 'பெலுகா' விமானம்..
திமிங்கல வகையறாக்களில், பெலுகா என்றொரு வகையும் உண்டு, ஏராளன்.- சென்னையில் இறங்கிய ஏர்பஸ் 'பெலுகா' விமானம்..
சென்னை வந்திறங்கிய ஏர்பஸ் பெலுகா, மீளவும் புறப்படும் அழகு..! சின்ன திமிங்கல குட்டியை பார்த்து வடிவமைத்திருப்பார்கள் போலுள்ளது. 😌- "எங்க அம்மாவை காப்பாத்துங்க..!" - நெகிழ்ச்சி
குட்டிக்கு ஏற்பட்ட விபத்தும், அதிலிருந்து தன்னல் இயன்றவரை மீட்க போராடியபோது ஏற்பட்ட தொய்வினால் தாய்க்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காட்டு யானைகளை அங்கேயே சுதந்திரமாக விடுவதுதான் அவைகளுக்கு நல்லது. அதையே யானைகளும் விரும்பும். தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில், யானைகளை எப்படி காட்சிப்படுத்துகிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்துள்ளேன்.- தாலி..வேலியா..? பாரமா..??
"தாலியை கழட்டிவைப்பது கணவருக்கு மன உளைச்சலைத் தரும்" : விவகாரத்து வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து. சென்னை: "தாலியை கழட்டிவைப்பது கணவருக்கு மன உளைச்சலைத் தரும் செயல்" என்று விவாகரத்து வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் விஎம் வேலுமணி, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வின் முன் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஈரோடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக உள்ள சி.சிவகுமார் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், அவரது விவாகரத்து மனுவை கடந்த 2016-ஆம் ஆண்டு உள்ளூர் குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை ரத்து செய்யக் கோரி சிவகுமார் உயர் நீதிமன்றத்தை அனுகினார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவகுமாரின் மனைவியிடம் நடந்த விசாரணையின்போது, அவர் "தான் தாலியை கழட்டிவைத்தது உண்மைதான்" என ஒப்புக் கொண்டார். "தாலி செயினை மட்டுமே லாக்கரில் வைத்துள்ளதாகவும், தாலி தன்னிடமே உள்ளதாகவும்" அவர் கூறினார். இருப்பினும், "தாலியை கழட்டிவைக்கும் செயலே கவனிக்கத்தக்கது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக, அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் "இந்து திருமண சட்டம் 7ஐ சுட்டிக்காட்டி, தாலி கட்டுவது அவசியமில்லை. ஆகையால் ஒருவேளை தனது கட்சிக்காரர் அவ்வாறு செய்திருந்தாலும் கூட அது திருமண வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், "ஆனால் நம் நாட்டில் தாலி கட்டுவது திருமண வைபவத்தில் ஒரு முக்கிய சடங்காக இருக்கிறதே" என்று சுட்டிக் காட்டினர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில் உள்ள ஆவணங்களைப் பார்க்கும்போது, சம்பந்தப்பட்ட பெண் தாலியை கழட்டி வைத்ததை தெளிவாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துப் பெண் எவருமே கணவன் உயிருடன் இருக்கும்போது தாலியை கழட்டி வைக்கமாட்டார். அது ஒரு புனித அடையாளமாக இருக்கிறது. திருமண வாழ்க்கை தொடர்வதையே அது குறிக்கிறது. கணவனின் மரணத்திற்குப் பின்னரே இந்துப் பெண்கள் தாலியை அகற்றுகின்றனர். அதனால் வழக்கை தாக்கல் செய்தவர் கூறியதுபோல் இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். தாலியை அகற்றியது மட்டுமே திருமண பந்தத்தை முறித்துவிடும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், தாலியை அகற்றியது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பது நிரூபணமாகிறது. மேலும், இத்தம்பதி கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே பிரிந்துதான் வாழ்கின்றனர். அதனால் அவர்கள் எவ்வித சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பது தெரிகிறது. இதனால் கீழமை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து இத்தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது" என்றனர். தமிழ் இந்து- தாலி..வேலியா..? பாரமா..??
"விவாகரத்துக்கு முன்பாக கணவரை பிரிந்த மனைவி, தாலிச் சங்கிலியை கழற்றுவது என்பது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல்" எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர், வேறொரு பெண்ணுடன் தமக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அரசு ஆசிரியரான தனது மனைவி, மனரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்கக் கோரியும் கணவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் சவுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பணியிடத்துக்கு சென்று கணவரைப் பற்றி அவதூறு பரப்பியது மனரீதியில் துன்புறுத்துவதற்கு சமம் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையின் போது "விவாகரத்துக்கு முன்பாக கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டதாக மனைவி கூறியதும் கூட கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம்" என கூறி, கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். "தாலி என்பது கணவன் உயிருள்ள வரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில் அவரை பிரிந்ததும், தாலிச் சங்கிலியை கழற்றியது சம்பிரதாயமற்ற செயல்!" எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர். பாலிமர் செய்திகள்- குர்பாணி கொடுக்க முயன்று பிரியாணியானார்..!
காளையை பலியிட்டு, குர்பாணி கொடுக்க முயன்றவரை, அந்த காளை திருப்பித் தாக்கி இழுத்துச்சென்றதால் இளைஞர் பரிதாபமாக உயிழந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்.. தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்!" என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ற சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. கராச்சியில், குர்பாணி கொடுப்பதற்காக பிடித்து வரப்பட்ட காளை ஒன்றின் முன்னங்கால்களை கட்டி அதனை கீழே தள்ளி பலி கொடுக்க இருவர் முயன்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு உதவுவதற்காக வானரம் போல வந்த இளைஞர், காளையின் வாலைப்பிடித்து இழுக்க ஆவேசமான காளை துள்ளி குதித்து தன்னை பிடித்திருந்தவர்களை முட்டி கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியது. மாட்டின் காலில் கட்டுவதற்காக மாட்டுடன் பிணைக்கப்பட்டிருந்த நீளமான கயிறு, மாட்டை பிடித்திருந்த இளைஞரின் கழுத்தில் சிக்கியதில் அவரை மாடு வீதியில் இழுத்துச்சென்றது. மாடு இழுத்துச்சென்ற வேகத்தில் கழுத்தில் கயிறு இறுக்கியதால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மாட்டை பின் தொடர்ந்து சென்று அந்த இளைஞரின் சடலத்தை உறவினர்கள் மீட்டனர். பாலிமர் செய்திகள்- "எங்க அம்மாவை காப்பாத்துங்க..!" - நெகிழ்ச்சி
குழியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையின் இதயம் நின்றுவிட, கூச்சலிட்டே அக்கம்பக்கத்தினரை அழைத்த குட்டி யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குட்டி யானைகளின் விளையாட்டுகளையும், குறும்புகளையும் பார்ப்பதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் குறும்புத்தனத்தையும் தாண்டி குட்டி யானை ஒன்றின் செயல் நெகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. தாய்லாந்தில் சில நாட்களாவே கனமழை பொழிந்து வரும் நிலையில், கனமழையில் வழிதவறிய குட்டியானை ஒன்று சுமார் 5 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தவறி விழுந்தது. அப்பொழுது குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானை பள்ளத்திற்குள் தலையை செலுத்தியது. அப்பொழுது தாய் யானையின் இதயம் நின்றுவிட்டது. பள்ளத்திற்குள் உடலை செலுத்தியவாறே தாய் யானை ஸ்தம்பித்து நின்றது. உடனே தாய்க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை உணர்ந்த குட்டி யானை ''எங்க அம்மாவை காப்பாத்துங்க..!'' என்ற உணர்வுடன் பீறிட்டு தனது குட்டி குரலில் பிளிறியது. சத்தம் கேட்டு உடனே சம்பவ இடத்திற்கு வந்த மக்கள், தாய் யானையை பள்ளத்தில் இருந்து கிரேன் உதவியுடன் வெளியே கொண்டுவந்தனர். 'ஒருபுறம் குட்டி யானையின் கதறல், மறுபுறம் இதய துடிப்பில்லாமல் வீழ்த்துகிடக்கும் தாய் யானை' என சம்பவ இடமே பரபரப்பானது. அங்கு வந்திருந்த பெண் ஒருவர் இந்த காட்சிகளை கண்டு கண்ணீர் விட்டபடியே தாய் யானையின் இதயம் இருக்கும் பகுதியை ஓங்கி குத்தி, தாய் யானையின் இதயத்தை செயல்பட வைக்க முயற்சித்தார். தொடர் முயற்சியின் பலனாக தாய் யானை எழுந்து நின்றது. மறுபுறம் மீட்கப்பட்ட குட்டி யானையும் தாய் யானையிடம் ஓடி ஒட்டிக்கொண்டது. அங்கிருந்தோர்களின் கண்களில் இருந்த கண்ணீரும் ஏராளம். அந்த இளம்பெண் கண்ணீரை அடக்கமுடியாமல் அழுதார். தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் தமிழகத்தில் கூட குட்டி யானை ஒன்று கூட தாய் சேருவதற்காக வனத்துறையினருடன் குட்டி நடைபோட்டது வைரலானது குறிப்பிடத்தக்கது. நக்கீரன்- சென்னையில் இறங்கிய ஏர்பஸ் 'பெலுகா' விமானம்..
ஏர்பஸ் "பெலுகா" விமானம் எப்படி தயாரிக்கப்படுகிறது? என்பதை விளக்கும் காணொளி..!- சென்னையில் இறங்கிய ஏர்பஸ் 'பெலுகா' விமானம்..
சிறிய விமானத்தையே தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST. உலகம் முழுவதும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கி வரும் இந்த கார்கோ விமானம், ஜூலை 7ம் தேதி பிரான்ஸ் நாட்டின் டோலூஸி என்ற இடத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மெர்சிலி, கெய்ரோ, அபுதாபி, அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. பின்னர் இன்று இந்த விமானம் சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகருக்குச் சென்றது. இந்த ஏர்பஸ் பெலுகா விமானம் வந்தது சென்னைக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவிற்கே இதுதான் முதல் முறை. Airbus நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், வழக்கமான விமானங்களைப்போல் இல்லாமல் மிகப்பெரிய திமிங்கிலத்தைப்போல வடிவமைக்கப்பட்டது. இதன் நீளம் 56.16 மீட்டர், அகலம் 7.7 மீட்டர், உயரம் 17.25 மீட்டர். இது அதிகபட்சமாக சுமார் 155 டன் வரை எடை சுமக்கும் திறன் கொண்டது. அதாவது திமிங்கிலத்தின் வாயைப்போல விரியும் இதன் முன்பக்க கேபினில் மிகப்பெரிய எந்திரங்கள், கிரேன், சிறிய விமானம், ஹெலிகாப்டர், கப்பல் போன்றவற்றையே ஏற்றிச் செல்லலாம். இதில் இருக்கும் 'semi-automated main deck cargo loading system', Multi-Purpose-Pallet (MPP) மற்றும் 'automated on-board cargo loader (OBCL)' போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வளவு பெரிய பொருள்களாக இருந்தாலும் விமானத்தில் எளிதாக ஏற்றி, இறக்கிவிடும். உண்மையில் இதன் அருகில் நின்று பார்த்தல் ஒரு பெரிய ஹெலிகாப்டரை இந்த விமானம் விழுங்குவதுபோல் காட்சி அளிக்கும். 1996 முதல் இயக்கப்பட்டு வரும் இந்த வகை விமானங்கள் பெரும்பாலும் ஹெலிகாப்டர், கப்பல் மற்றும் விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பெரிய அளவிலான பாகங்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு இதன் சரக்குப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. உலகளவில் விமானம், ஹெலிகாப்டர், அதிவேக ஜெட்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கிவரும் 'Airbus' நிறுவனம், இந்தப் பிரமாண்டமான ஏர்பஸ் பெலுகாவைப்போல, 'Airbus Beluga XL' என்னும் அதைவிட பெரிய விமானம் ஒன்றையும் தன்வசம் வைத்துள்ளது. இவை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்குச் சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனந்த விகடன்- கருத்து படங்கள்
காலக் கூத்து..!- இலங்கை சனாதிபதி வீட்டை சுற்றி பார்க்கலாமா..?
ஒரு நாட்டின் சனாதிபதியை துரத்திவிட்டு பொது மக்களை குடும்பம் குடும்பமாக சுற்றுலா இடமாக பார்க்க வைத்த நிலைமை நல்ல வேடிக்கை..! காணொளி விளக்கம், அழகு தமிழில்..! 😎- திருவள்ளுவர் உருவத்தில் நெல் நடவு..!
எனக்கும் செய்தியையும், காணொளியையும் பார்த்தவுடன் மிக ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவரின் தமிழ் உணர்வும், அதற்கான முனைப்பும் போற்றத்தக்கது..! இம்மாதிரி சாதாரண மக்களில் தமிழ் உணர்வாளர்கள் இன்னமும் பெருக வேண்டும்.- திருவள்ளுவர் உருவத்தில் நெல் நடவு..!
- திருவள்ளுவர் உருவத்தில் நெல் நடவு..!
தமிழ் மீது உள்ள அதீத பற்றால் விவசாயி இளங்கோவன், சின்னார் என்ற நெல் ரகத்திலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்திலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தில் நடவு செய்துள்ளார். இதை கழுகு பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவரின் உருவமைப்பு தெரிவது சிறப்பம்சமாகும். இது பற்றி தகவல் அறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா, வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, மலையப்பநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் சாத்தாவு ஆகியோர் மற்றும் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவசாயி இளங்கோவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் விவசாயி இளங்கோவன் கூறியதாவது, "நான் பத்து வருடங்களுக்கு மேலாக இந்த இயற்கை விவசாயத்தை செய்து வருகிறேன். திருவள்ளுவர் எழுதிய மொத்த குறளில் 11 குறள்களில் இயற்கை விவசாயத்தைப் பற்றி கூறியுள்ளார். அந்த குறள்களின் தாக்கத்தால் தான் நான் திருவள்ளுவர் உருவத்தில் விவசாயம் செய்தேன்" என மகிழ்ச்சியாக கூறினார். மேலும் "இந்த உருவ அமைப்பினை ஏற்படுத்துவதற்கு தனி ஆளாக நான் மட்டும் ஐந்து நாட்களாக இந்த நடவு முறையினை செய்தேன். இயற்கை விவசாயத்தை அனைவரும் செய்ய வேண்டும். இயற்கை உணவுகளை அனைவரும் உண்ண வேண்டும் என்பதே எனது அடிப்படை நோக்கமாக இருக்கிறது. மேலும் பிற்காலத்தில் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை நட உள்ளேன்.." என கூறினார். தமிழ் நியூஸ்18- கருத்து படங்கள்
கோடு போட்டு, மொழி வாரி ராஜ்ஜியம்தான். ஓ.கே? 😛 அப்புறம் சின்ன சின்ன உரசல் இருக்கும், காலப்போக்கில் சரியாகிவிடும். தமிழர் பெயின்ற் மட்டும்தான். 😎- கருத்து படங்கள்
ஏன் இந்த சிரமம்? இன்னமும் யோசிக்காமல் சட்டு புட்டுன்னு வந்து சேரப் பாருங்கோ. அப்படியாவது தனி மாநிலமாவது கிடைக்குதான்னு பார்ப்போமே? 🤔 (இது தவிச்ச முயல் கதை அல்ல, சிரமப்படுவதை சகிக்காமல் அக்கறையில் சொல்வது! 😌) - 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
Important Information
By using this site, you agree to our Terms of Use.