-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டியை திறம்பட நடத்தியமைக்கு நன்றியும் பாராட்டுக்களும் கந்தப்பு அண்ணா. போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள், குறிப்பாக ஈழப்பிரியன் அண்ணா, வீரப்பையன்.
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றி, இது நிரந்தரமில்லை, பிரான்ஸ் பிரதமர் மாதிரி, எந்நேரமும் கதிரை காலியாகலாம். நன்றி, எத்தனை முறை விழுந்தாலும், எழும்பி தூசை தட்டி விட்டு ஓட வேண்டியதுதான்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இங்கிலாந்து ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? - பாகிஸ்தான் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா தென்னாபிரிக்கா 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? கொழும்பு 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெரியப்படுத்தினத்துக்கு நன்றி @Eppothum Thamizhan , இனிமேல் திருத்த முடியுமோ தெரியாது. போட்டியில் உங்கள் எல்லோருடனும் இருப்பதே மிக்க மகிழ்ச்சி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன், நானும் இம்முறை கலந்து கொள்கின்றேன்.- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
இவரின் தனித்துமான குரலுக்கு மயங்காதவர்கள் கிடையாது.- வாடியிட்டபுலம்
- வாடியிட்டபுலம்
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1.பிள்ளை பிடிகாரன் வாரான் என்று பள்ளிக்கூட பின் வேலியை கடந்து போகையில் முட் கம்பி வேலி கீறினது. (வந்தது ஊசி போடுறவங்கள் ) 2. சுகாதார படம் காட்ட வருவாங்கள் என்று காத்திருந்து ஏமாந்தது 3. சிவாஜி மற்றும் பிரபு நடித்த முதல் படம் "சங்கிலி" வீடியோ செட் கொண்டு வந்தவன் கார் பிழைபட்டு வராமல் நின்றது இவற்றில் ஏமாந்ததில் ஒரு ஆனந்தமும் இருந்தது. (நீங்களே யோசியுங்கள் )Ahasthiyan changed their profile photo- வாடியிட்டபுலம்
- வாடியிட்டபுலம்
வாடியிட்டபுலம் வாடியிட்டபுலம் இயற்கை அழகு, பரவிக் கிடக்கும் வயல்வெளிகள், சுற்றிவர இருக்கும், பசுமையான காடுகள், கோடையிலும் வற்றாத குளம் கொண்ட அழகிய கிராமம். வானவில்லின் நிறங்களில் பூத்திருக்கும் வண்ணமயமான பூக்களுடன் கூடிய நெல் வயல்கள் கண்களுக்கு விருந்து படைக்கும். வயல்களுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் கதிரவன் ஒளியில் மின்னி, கிராமத்தின் அழகை மெருகூட்டுகின்றன. தென்றல் காற்று, பறவைகளின் கீச்சுக் குரல்கள் என வயல்வெளி நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணிலடங்கா. கிராமத்தின் இதயமென இருக்கும் குளம் மனிதருக்கு மட்டுமல்ல பலவித உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமே இந்த குளம் தான். வயல்வெளியில் ஓடி விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு ஒலி, குளக்கட்டில் நீச்சலடிக்கும் சிறுவர்களின் குரலோசை கிராமத்தின் அமைதியை உடைத்து மகிழ்ச்சியை பரப்புகிறது. சேந்தன் தலை நகரத்தில் உள்ள வெளி நாட்டு நிறுவனத்தில் கணனி துறையில் வேலை செய்கிறான். இக்கரைக்கு அக்கரை பச்சை போல் பலரும் வரத் துடிக்கும் அதிக வருமானம் கொண்ட தொழில். கார் வீடு என பல வசதிகள் இருந்தாலும் ஒரு நிறைவற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தான் சேந்தன். 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இளமையை தொலைத்து இரவு பகல் வேலை செய்தான். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. நகரத்தின் கொந்தளிப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ஒரு அமைதி தரும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை சேந்தனுக்கு எப்போதும் இருந்து வந்தது. ஒரு நாள் தனது பள்ளி நண்பன் மலரவனை பார்க்க அந்த அழகான கிராமம் வாடியிட்டபுலத்திற்கு புறப்பட்டான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே காதுக்கு இனிமை தரும் பறவைகளின் ரீங்காரம் சேந்தனை வரவேற்றது. கிராமம் என்றாலே இளையராஜாவின் பாடல் இல்லாமலா போகும், எங்களை போன்ற நகரத்து வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது அவரின் பாடல்களே. "வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே" . . பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு பச்ச மனசு பத்திக்கிருச்சு கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு” எங்கிருந்தோ வந்த பாடல் வரிகள் செவிக்கு விருந்தளித்தது. மலரவனை அவன் வீட்டில் சந்தித்தான். மலரவனும் உரிய முறையில் உபசரித்தான். மதிய உணவின் பின்பு மாமர நிழலில் சாக்கு கட்டிலில் சரிந்தவாறு தங்கள் பாடசாலை கதைகளை அசை போட்டார்கள். பாடசாலையில் தங்களுடன் படித்த செங்கமலம் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் கலை பீடத்தில் படித்ததாகவும், அவள் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததாகவும் சேந்தன் சொன்னான். ஒரு சிறிய இடைவெளியின் பின்பு "விதி எங்கள் வாழ்க்கையில் விளையாடியது" என்றான். அவள் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டாள், காரணம் தெரியவில்லை. அவளின் சிநேகிதி மூலமாக பல கடிதங்கள் அனுப்பினேன், பதிலில்லை என்றான். சேந்தன் பல்கலைக்கழக படிப்பை முடித்து கணனி துறையில் வேலை செய்ய தொடங்கினான். ஒரு நாள் செங்கமலத்தின் சிநேகிதி ஊடாக ஒரு கடிதம் சேந்தனுக்கு வந்தது. ஆம் அது செங்கமலத்திடம் இருந்து தான் வந்தது. படபடப்புடன் கடிதத்தை திறந்து படித்தான். அன்பின் சேந்தன், நான் நலம், நீங்களும் அது போலவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கடிதங்கள் கிடைத்தன, நான் பதில் போட முடியாத நிலையில் இருந்தேன், மன்னிக்கவும். உங்கள் உள்ள கிடைக்கைகளை தெளிவாக எழுதி இருந்தீர்கள். நீங்கள் மிகவும் நல்லவர், அன்பானவர். நான்தான் உங்களை அடைய கொடுத்து வைக்கவில்லை. கடமையா? காதலா? என்றால், என்னுள் கடமைதான் வென்றது. அன்று உங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் தேசம் காக்க புறப்பட்டுவிட்டேன். சிலவேளை இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது நான் இந்த உலகில் இருப்பனோ தெரியாது. என்னை மறந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என்றும் அன்புடன் செங்கமலம் சேந்தனின் கதையை கேட்டு மலரவன் கண்களில் நீர் பனித்தது. அவனது வீட்டு வானொலியில் ஸ்ரீனிவாஸின் பாடல் ஒலித்தது. "நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" மன்னிக்கவும் எனது சோகக் கதையை சொல்லி உன்னை அழ வைத்து விட்டேன், என்றான் சேந்தன். மூன்று நாட்கள் மலரவனுடன் தங்கி விட்டு, அவனது உந்துருளியில் அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையம் சென்றான். அவன் பேருந்து படிகளில் ஏறும் போது கால்கள் இயலாத பொண்ணு ஊன்று தடிகளுடன் இறங்க முற்பட்டாள். சேந்தன் அவளுக்கு உதவ போனான் "உங்களுக்கு சிரமம் தந்து விட்டேன் " என்றாள். எங்கேயோ கேட்ட பழகிய குரல், திரும்ப கண்களை பார்த்தான் " ஆமாம் நம்ம செங்கமலம்". தனது நண்பன் மலரவனை அழைத்தான், அவன் மனம் ஆகாயத்தில் சிறகடித்து பறந்தது. பேச்சு வரவில்லை. மலரவன் அந்த பெண் செங்கமலம் தான் என்று உறுதி செய்தான். அவள் அருகில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இருப்பதாக சொன்னாள். தனது சக தோழியை காப்பாற்ற போய் கண்ணி வெடிக்கு கால்களை இழந்ததாக சுருக்கமாக கூறினாள். சேந்தன் கண்களில் நீர் வழிந்தது. என்னவள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோசமா? இல்லை இந்த நிலையில் அவளை பார்க்கிறேன் என்ற சோகமா? நிச்சயமாக முதலாவதுதான். நகரத்தில் தனது சொத்துக்களை விற்று, தனது வேலையும் ராஜினாமா செய்தான் சேந்தன். அவளையும் அவளைப்போன்று இருக்கும் பலருக்கு தான் உதவி செய்ய போவதாக முடிவெடுத்தான். மலரவனின் உதவியுடன் வாடியிட்டபுலத்தில் 6 ஏக்கர் நிலம் வேண்டி கூட்டு பண்ணை விவசாயம் தொடங்கினான். செங்கமலத்தை சம்மதிக்க வைத்து திருமணமும் செய்தான். இன்று இவர்களின் நிழலில் பலர் வாழ்கிறார்கள். ரெண்டு மரங்கள் வைத்தவன் இன்று ஒரு தோப்பையே உருவாக்கினான். நகரத்தில் ஒரு நிறைவற்ற வாழ்க்கை வாழ்ந்த சேந்தன் இப்போ மிகவும் சந்தோசமாக வாழ்கிறான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், மரங்களுக்கு இடையே வரும் குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே தனக்கு பிடித்தவளுடன் வாழ்கிறோம் என்ற ஆத்ம திருப்தி அவனது இதயத்தை நிரப்புகிறது. முற்றும் அகஸ்தியன்- உறவுகளின் சங்கமம்
உறவுகளின் சங்கமம் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில், மேரி மற்றும் பீட்டர் இருவரும் வாழ்ந்து வந்தனர். மேரி, ஒரு புத்தகப் பிரியா. கடற்கரையில் உட்கார்ந்து புத்தகங்களைப் படிப்பதே அவளது பொழுதுபோக்கு. பீட்டர், ஒரு திறமையான கலைஞர். கடற்கரையின் அழகை ஓவியங்களாக வரைவது அவனது ஆர்வம். ஒரு அற்புதமான மாலை, மேரி தனது புத்தகத்துடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தாள். அப்போது, அருகில் வந்து தனது ஓவியத்தை காட்டிக்கொண்டான் பீட்டர். அவர்களது உரையாடல் இயல்பாகவே ஆழமானது. இருவரும் ஒரே விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை அறிந்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து, அவர்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். நாட்கள் செல்லச் செல்ல, அவர்களது நட்பு காதலாக மாறியது. பீட்டர், மேரியின் புன்னகையைப் பார்க்கும்போது, அவன் இதயம் துடிப்பதை உணர்ந்தான். மேரி, பீட்டரின் கலைத் திறமைக்கு மெய் மறந்து போயிருந்தாள். அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட விரும்பினர். கடற்கரையில் நடப்பது, கலைக் கண்காட்சிகளுக்குச் செல்வது என அவர்களின் நாட்கள் மகிழ்ச்சியாக கழிந்தன. ஒரு நாள், பீட்டர், மேரியை ஒரு அழகான இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு, அவன் தனது முழங்காலில் விழுந்து மேரியை மணமுடிக்க வேண்டும் என்று கேட்டான். மேரி, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆம் என்று கூறினாள். அவர்களது திருமணம், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, மேரி மற்றும் பீட்டர் இருவரும் இணைந்து வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர். அவர்கள் ஒரு அழகான வீட்டைக் கட்டி, ஒரு குடும்பத்தை உருவாக்கினர். பீட்டர், தனது கலைப் பயணத்தை தொடர்ந்தார். மேரி, ஒரு நூலகத்தில் வேலை செய்து, தனது புத்தகப் பிரியத்தைத் தொடர்ந்தாள். அவர்கள் இருவரும், ஒன்றாக வாழ்க்கையின் அனைத்து மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் பகிர்ந்து கொண்டனர். மேரி பீட்டர் இருவருக்கும் 3 பிள்ளைகள் பிறக்கின்றன. மேரி பிள்ளைகளை வளர்க்கும் ஒரு சாதாரண தாய். அவர்களது நாளாந்த வாழ்க்கை, சவால்கள், மகிழ்ச்சிகள், கவலைகள் நிறைந்ததாக அமைகிறது. நான்காவது பிள்ளை கீத் வயிற்றில் இருக்கும் போது மேரி பீட்டர் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. மனப்பிளவு பூனையின் பாதங்களின் ஒலி போல இவர்கள் வாழ்க்கையில் புகுந்து கொண்டது. இந்த 4 வது பிள்ளை தனது பிள்ளை இல்லை என்ற காரணத்துடன் இவர்கள் மணவாழ்க்கை முறிவடைகிறது. மேரி ஒரு நாள் தனது வயிற்று பிள்ளையுடன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது ரிச்சர்ட் என்ற ஊழியரின் அறிமுகம் ஏற்படுகிறது. மேரியின் முழு கதையையும் கேட்ட ரிச்சர்ட் வயிற்றில் பிள்ளயுடன் இருக்கும் குழந்தையையும் மற்ற பிள்ளைகளும் தான் வளர்ப்பதாக கூறி தியாக மனத்துடன் அவளை திருமணம் செய்கின்றார். நாலாவது பிள்ளை கீத் பிறந்தவுடன் ரிச்சர்டை தனது அப்பா என்று கூப்பிட்டது, அவனுக்கு உண்மையான அப்பாவை தெரியாது. அதிலும் கீத் பிறக்கும் போது சிறிய குறைபாட்டுடன் பிறந்தாலும், அதே பின்னாளில் அவனின் அபார முன்னேற்றத்திற்கு வழி கோலியது. சொந்த அப்பாவை தெரியாத கீத் வந்த அப்பாவை உரிமையோடு அப்பா என்று செல்லம் பொழிந்து வளர்ந்தான் , அவரும் அவனை மற்ற 3 பிள்ளைகளை விட அதி கூடிய அக்கறையுடன் வளர்த்தார், கடைக்குட்டி அல்லவா. காலங்கள் புரண்டு ஓடியது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். தங்களுக்கு என வாழ்க்கையை உருவாக்கினார்கள். கீத் தனது துணையை தேடினார். வயது வர அவர்கள் அம்மா மேரியும் நல்ல வாழ்வு வாழ்ந்து மறைந்தார். தனித்து வாழ்ந்த ரிச்சர்ட் மேரியின் நினைப்பில் காலத்தை கழித்தார். அவரை பராமரிக்கும் முழு பொறுப்பையும் கீத் தானே எடுத்துக்கொண்டான். அவரும் அடிக்கடி உனது அம்மா தேவலோகத்தில் தன்னை இரு கரம் நீட்டி அழைப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார், இதை செவி மடுக்கும் போது கீத் கண்ணில் கண்ணீர் வரும். உண்மையான அப்பா இருந்திருந்தால் கூட என் அம்மாவை இவ்வளவு அன்புடனும் அக்கறையுடனும் பார்த்திருப்பார் என்பது சந்தேகமே. காலங்கள் கடந்து கால தேவன் தனது வேலைகளை காட்ட தொடங்கினான். இவர்களை தனியாக தவிக்க விட்டு சென்ற உண்மையான தகப்பன் பீட்டரை அவரது புது துணைவியார் சில காலங்களில் பிரிந்து சென்றார். முதுமையில் நோயை விட தனிமை அவரை ஆட்டி படைத்தது. தன் பிள்ளைகளை சந்திக்க பல தூது விட்டார், கடிதங்கள் எழுதினார். ஒருவரும் சென்று அவரை பார்க்கவில்லை. வளர்ப்பு தந்தை எவ்வளவு எடுத்து சொல்லியும் இந்த விடயத்தில் சமாதானம் ஆகவில்லை. பீட்டரின் இறுதி கடிதம் அவர் மரண தறுவாயில் இருப்பதை சொல்லியது. மூத்த பிள்ளைகள் மூவரும் தந்தை பீட்டரை பார்க்க முடிவு செய்து கீத் ஐயும் தங்களுடன் பார்க்க வருமாறு அழைத்தனர்.கீத் மறுத்து விட்டார், அவர்களிடம் தனது முகம் தெரியாத அப்பாவுக்காக ஒரு கடிதமும் கொடுத்து விட்டார். அன்பிற்குரியவருக்கு, என்னை உங்களுக்கு தெரியாது, உங்களுக்கும் என்னை தெரியாது. என்னிடம் உள்ள குறைபாட்டினால், ஒரு வேளை நீங்கள் என்னை தெரிந்திருந்தாலும் , நீங்கள் விரும்பும் பிள்ளையாய் நான் இருந்திருக்க வாய்ப்பில்லை. என்னை மூச்சுக்கு முன்னூறு தடவை தனது மகனே என்று அழைக்கும் என்னை பெறாத அப்பா, தேவலோகத்தில் தனது மனைவி அழைப்பதாக தினமும் கூறிக் கொள்ளும் ஒரு முழு வாழ்க்கையினை வாழ்ந்த ரிச்சர்ட் இவரே எனது உலகம், இவரே எனது தெய்வம். தான் பார்க்காத உலகத்தை என்னை பார்க்க வைத்தார். என் வளர்ச்சி தான் தன் வளர்ச்சி என்று வாழ் நாள் முழுக்க தியாகம் செய்த ஒரு தெய்வத்துடன் நான் எஞ்சிய காலத்தை கழிக்க விரும்புகின்றேன். உங்களுக்கு வேண்டாத பிள்ளை தெரியாமேலே இருந்து விடுகின்றேன். இதில் வன்மம் இல்லை, பழி வாங்கல் இல்லை. நான் உங்களை சந்திக்காமல் இருப்பது எதையும் மனதில் வைத்து கொண்டு சாதிப்பதாக இல்லை. என் பிரார்த்தனையெல்லாம் உங்கள் ஆத்மா நல்ல முறையில் சாந்தி அடையட்டும், அதை நான் வணங்கும் கடவுளுடன் தினமும் வேண்டுகிறேன் இப்படிக்கு கீத் 90 வயதை கடந்த ரிச்சர்ட் கீத் மற்றும் பிள்ளைகள் உறவுகள் சூழ தன்னை கை நீட்டி கூப்பிடும் ஆன்மாவுடன் சங்கமமானார். எப்படியும் வாழலாம் என்றிருக்கும் மனிதர்கள் மத்தியில் ரிச்சர்ட் என்ற ஒரு மனிதரும் தனது முழுமையான வாழ்வை வாழ்ந்தார் குறள் "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு" முற்றும் அகஸ்தியன் - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.