75% சிங்கள மக்களோடு சேர்ந்து வாழும் தீர்வு என்று வரும்பொழுது அங்கு விட்டுக்கொடுப்புக்கள் இரண்டு பக்கமும் தேவைப்படுகிறது. சிங்கள இனவாதிகளின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களில் உள்ள மிதவாதிகள் அரசை அமைக்கும் நிலை வரும் பொழுது இங்கே எமது பக்கத்தில் சீமான் வகையறாக்களை, இந்திய அருவருடிகளை, புலிகளின் பணத்தை கொள்ளையடித்த கூட்டத்தின் சொல் கேட்டு நடக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு தீர்வு நோக்கி நகர முடியாது. அதற்கு அப்படிப்பட்டவர்களை மண்டையில் போடவும் கூடாது. ஆகவே தான் மெதுவாக கட்சியில் இருந்ததை அகற்றப்பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள்.
நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள், தீர்வு என்று வரும் பொழுது குதிரை கஜேந்திரன்கள் , மருத்துவம் மட்டுமே படித்த சட்ட நுணுக்கங்கள் தெரியாதவர்கள், பள்ளிக்கூட அதிபர்கள், முன்னாள் கொலையாளிகளை எல்லாம் அனுப்பலாமா?
இதே பதிலை நீங்கள் செல்வம் அடைக்கலன்நாதனுக்கும், விக்கிக்கும், கஜேந்திர குமார் பொன்னம்பலதுக்கும் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.