Everything posted by kandiah Thillaivinayagalingam
-
28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள்
28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள் நிகழ்வில், நான் அவருக்கு அர்ப்பணிக்கும் ஒரு இதயப்பூர்வமான கவிதை: "இந்த ஆண்டு ஐம்பத்திஒன்றாவது ஆண்டோ? காதல் சிரிப்பு மகிழ்ச்சியின் பயணமோ? வலி கண்ணீர் துக்கத்தை மறந்து நாங்கள் ஒன்றாக இங்கே கூடுகிறோம்!" "என் மூத்த அன்பு சகோதரிக்கு என் சிறந்த புத்திசாலி அத்தானுக்கு வலுவான உங்கள் பந்தம் வளரட்டுமே! உங்கள் அன்பு வானங்களையும் வென்றதே!" "ஐம்பத்திஒன்றாவது வருட கனவுகள் நிறைவேற ஏற்றத் தாழ்வுகள் அற்றுப் போக அன்பு நீரோட்டம் பொங்கிப் பாய ஒன்றாய் இன்றுபோல் என்றும் வாழ்க!" "உங்கள் அர்ப்பணிப்பு எமக்கு உத்வேகமே! தளராத காதல் உயர்ந்து நிற்கட்டுமே! ஆறுதலையும் அமைதியையும் அது காட்டட்டுமே! என்றும் மங்காத வாழ்வு ஒளிரட்டுமே!" "நரைத்த முடியும் அனுபவ கோடுகளும் தொடர்ந்து ஒளிரும் அன்பின் சான்றும் ஆண்டுகள் தோறும் வலுப்பெறும் உறவும் அன்பின் மெல்லிசை வாழ்நாள் பாடலே!" "பொன்னாண்டுகழிந்த முதலாம்ஆண்டில் நான் உளறுகிறேன்! பழையதை மீட்டு கண்ணீர் வடிக்கிறேன்! தம்பியும் நானும் பக்கத்தில் படுத்து பொன்னியின் செல்வன் கேட்டதை மறப்போமா!" "பெற்று வளர்த்த பெற்றோரை நினைத்து விட்டுப் பிரிந்த உடன்பிறப்புகளை நினைத்து வானத்தில் இருந்து அவர்கள் வாழ்த்த ஐம்பத்திஒன்றாவது ஆண்டு மகிழ்வாக மலரட்டும்!" என் அன்பு அக்காவிற்கு ஐம்பத்திஒன்றாவது திருமணநாள் வாழ்த்துக்கள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
25 / 05 / 2024: பேரன் 'கலை' யின் ஐந்தாவது பிறந்த நாள் இன்று!
25 / 05 / 2024: பேரன் 'கலை' யின் ஐந்தாவது பிறந்த நாள் இன்று! "கலையின் பிறந்த நாள் இன்று கலை விழாவா பெரு விழாவாவென கண்கள் தடுமாறி வியந்து பார்க்க கலையின் பிறந்த நாள் இன்று !" "தில்லை கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற செல்வன் இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திருநாள் இது இவனின் பொன்நாள் !" "திங்கட்குடையோன் இவனோ என மயங்க தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒலிக்க தித்திக்கும் பிறந்த நாள் இன்று !" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆண்டு ஐந்து இன்று உனக்கு ஆகாயத்தில் அம்மம்மாவின் வாழ்த்து கேட்குது ஆகாரம் பலபல சுவையில் இருக்குது ஆசி பெற்று அறிஞனாய் வளர்வாயாக !" "இளமை கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "ஆசை வேண்டும் ஒழுக்கம் வேண்டும் ஆடிப் பாடி மகிழவும் வேண்டும் ஆதிரனாக என்றும் ஒளிர வேண்டும் ஆலமர நிழல்போல் வாழ வேண்டும்!" "ஈன்ற பெற்றோரை நன்கு மதித்து ஈரக் கண்ணீர் சிந்த விடாமல் ஈவு இரக்கம் காட்ட வேண்டும் ஈனப் புத்தி என்றும் வேண்டாம்!" "ஆச்சாரம் அறிந்து ஒழுக வேண்டும் ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும் ஆடை நேர்த்தியாக உடுக்க வேண்டும் ஆதரித்து அனுசரித்து உதவ வேண்டும்!" "உலகம் போற்றும் வாழ்வு எட்ட உள்ளம் வைத்து ஆற்ற வேண்டும் உரிமை உள்ள ஒரு மனிதனாக உயர்ந்து நின்று வாழ வேண்டும்!" "ஊக்கம் வேண்டும் பற்று வேண்டும் ஊரார் எண்ணம் அறிய வேண்டும் ஊமையாக நீ காலத்தை கழிக்காமல் ஊன்றுகோலாய் உண்மையை நிறுத்த வேண்டும்!" "ஆதிக்க வெறி தவிர்க்க வேண்டும் ஆயுதம் தவிர்த்து அன்பால் இணையவேண்டும் ஆனந்தம் பொங்கிட அழகு 'கலை'க்கு ஆரவாரம் ஒலிக்க பிறந்தநாள் வாழ்த்துகிறோம்! தாத்தா : [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ராமன் எத்தனை வஞ்சகனடி?"
நன்றி
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
இல்லை, பேரப்பிள்ளைகளுடனும் மற்றும் ஒரு பேரப்பிள்ளையின் பிறந்த நாளுடனும் [25 / 05 / 2024] கொஞ்சம் நேரம் இல்லாமல் போய்விட்டது. மீண்டும் ஜூன் ஒன்று / இரண்டு இளைய மகளிடம் பயணம். நன்றி "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இரு குழவிகள் இறங்கும் நேரம் இது!" "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னை தழுவுது!" "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!" "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றை திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தர" "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!" "மடியின் மேல் ஒருவர் எற மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !" "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறி கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளி குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 26 டச்சு காலத்தில், கிபி 1656 முதல் கிபி 1796 வரை, இலங்கையில் அடிமட்ட சமூக உறவுகளில், சிங்களம் தமிழ் என்ற வேறுபாடுகள் காணப்படவில்லை என்றும், ஆனால் பல்வேறு சாதி பிரிவுகளே காணப்பட்டதாகவும் அருட்தந்தை வீ. பெர்னியோலா அடிகள் கூறுகிறார் [Vito Perniola, in observing the social relations at the grassroots level in the Dutch period of SriLanka, did not see "any racial distinction between Sinhala and Tamils," but "rather the division into various castes"]. கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்த நாயக்கர் அரச மரபு [வம்சம்] எமக்கு எடுத்து கட்டுவது, அரசன் சிங்களவனாக இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் அப்பொழுதும் இலங்கையில் இருக்கவில்லை என்றும், ஆனால் புத்த மதத்திற்கு ஆதரவளிக்க மட்டுமே அங்கு வலியுறுத்தப்பட்டது என்பதாகும் [The longevity of the Nayakkar dynasty (1739-1815) in the kingdom of Kandy indicates that there was no requirement for the king to be Sinhalese, while his patronage to Buddhism was insisted upon]. இலங்கையில் கண்டு எடுக்கப் பட்ட கல்வெட்டுகள், சிங்களம் என்பது கி மு 500 ஆண்டில் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகளால் கொண்டு வரப் பட்ட பிராகிருதத்தில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்த ஒரு மொழியாகும் என்பதை உறுதிப் படுத்துகிறது. இது இந்திய-ஆரிய மொழிகளில் இருந்து தனிமை படுத்தப் பட்டதால், அதன் வளர்ச்சி ஓரளவு சுயாதீனமாக இருந்தது எனலாம். திராவிட மொழிகளில் மூத்தது தமிழ் என்பதாலும், சிங்கள இனம் என்ற ஒன்றின் தோற்றம் ஆரம்பத்தில் இருந்தே தமிழுடன் தலைமுறைகளாக இணைந்திருந்ததாலும், சிங்கள மொழியின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு பெற்று, சிங்கள மொழியின் ஒலியியல், இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களில் தமிழின் தாக்கத்தை இன்று காணக் கூடியதாக உள்ளது. [Stone inscriptions suggest that Sinhala developed from the Prakrits, brought to Sri Lanka by settlers from Northwestern and Northeastern India in the 5th century BCE. Because of its isolation from the other Indo-Aryan languages of mainland India, Sinhala’s development was somewhat independent. Since Tamil, the oldest of the Dravidian languages, and Sinhala have coexisted for generations, it strongly influenced Sinhala’s phonology, grammar, and vocabulary.] கி மு 300 ஆம் அல்லது கி மு 200 ஆம் ஆண்டில் இருந்து சிங்கள பிரகிருத் அல்லது சிங்கள மொழிக்கு முன்னைய கல்வெட்டுக்கள் [Sinhalese Prakrit inscriptions] காணப்பட்டாலும், சிங்கள கல் வெட்டுக்கள் 6ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே, அதிகமாக 9ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே தான் காணப்படுகின்றன. தொடக்கத்தில் இரண்டு மூன்று வரிகளில் நன்கொடைகளைப் பற்றிய விபரங்களை தந்தன, ஆனால் 10ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கூடுதல் விளக்க முள்ளதாக அமைந்ததாக காணப்படுகிறது [At the beginning the inscriptions had two or three short lines containing the information about donations made to bhikkhus. After the 10th century A.C these have become more descriptive because they contained appreciations made for some kings]. தமிழ் மொழியின் செல்வாக்கு இலங்கையில் பரந்து பட்டு இருந்தன என்பதற்கு தமிழ் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன. உதாரணமாக, காலி கல்வெட்டு, பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு, அனுராதபுரத்தில் உள்ள அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு, கேகாலை மாவட்டத்தில் உள்ள கோட்டகமைக் கல்வெட்டு போன்றவை சான்றாகும். இந்த கல்வெட்டுக்கள் எல்லாம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியே, இலங்கையின் வெவ்வேறு திக்குகளில் கண்டு எடுக்கப் பட்டவையும் ஆகும். காலி கல்வெட்டு என்பது 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும். பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு என்பது இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது. அதேபோல, அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கோட்டகமைக் கல்வெட்டு என்பது, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் கம்பளை அரசின் மீதான போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதுவிக்கப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்குபடுத்தியுள்ளர்கள். "சேது கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர் சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர் தங்கள்மடமாதர் தாம்" இதன் கருத்து "சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்" என்பதாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 27 தொடரும் படம் 01: [1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும் / Dutch Reformed Church – Galle / The current Dutch Reformed Church was completed in 1755 and stands at the highest point of the Galle Fort./ One of the most unusual stones in the church was this one, written in Tamil. Unfortunately, it is quite worn and hard to make out, / Apparently this is the grave of the first Tamil convert to Christianity] படம் 02: [பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது / In the 12th Century CE, the Velakkaras set up a Tamil inscription were they promised to protect the Relic of the tooth of the Buddha at Polonnaruwa ] படம் 03: [அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது.]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 05 இன்றைய நவீன மனிதன் என அழைக்கப்படும் ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] ஆஃப்ரிக்காவில் [ஆப்பிரிக்காவில்] இருந்து ஏறத்தாழ 60,000 - 70,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட அளவு மக்களுடன் புலம்பெயரத் தொடங்கினார்கள் எனக் கருதப்படுகிறது. அவர்கள் பூமியின் எல்லா மூலைகளிலும் பரவும் வரை தமது பயணத்தை தொடர்ந்தார்கள். எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு கெதியாக அவர்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பது, அங்கு நிலவிய கால நிலை, மக்களின் நெருக்கடிகள் மற்றும் படகு அல்லது மற்ற தொழில் நுட்பங்ககளின் கண்டு பிடிப்புக்கள் போன்றவற்றில் தங்கி இருந்தன. அவர்கள் அதிகமாக கடற் கரை ஓரமாக பயணித்து இருக்கலாம்? அது குறிப்பாக செங்கடல், மத்திய தரைக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் [Red Sea, the Mediterranean Sea, and the Indian Ocean] ஆகும். இன்று அவர்கள் சென்ற பாதையை அல்லது வழித்தடத்தை மரபியல் [genetics] உதவியுடன் சரிபார்க்கவும் மற்றும் உறுதிப்படுத்தவும் முடிகிறது. அப்படி சரிபார்க்கப்பட்ட அட்டவணை கீழே சுருக்கமாக தரப்பட் டுள்ளது. மனித மரபணு புலம்பெயர்வு பாதை [வழித்தடம்]: நீடித்த வரட்சி காரணமாக ஹோமோ சேப்பியன்ஸ் ஆஃப்ரிக்காவை விட்டு 60,000 - 70,000 வருடங்களுக்கு முன், M168, 'ஆஃப்ரிக்கா இனம் அடையாளம் காட்டியுடன் வெளியேறியது [புலம்பெயர்ந்து] [The M168 lineage, the common male ancestor of practically all non-African people emerged in Sudan or Ethiopia in a rather imprecise time band of 79,000 to 31,000 years before present.] அது கடற்கரையோர அடையாளம் காட்டியாக உருமாறி, M130 (M168-M130), அரேபியாவிற்குள் நுழைதலுடன், கடற்கரையோர மக்கள் [coastal people] கரையோரம் இடம் பெயர்ந்தனர். அவர்கள் விரைவாக ஆஸ்திரேலியாவை அடைந்தனர். இவை எல்லாம் 60,000 - 50,000 வருடங்களுக்கு முன் நடந்தேறி உள்ளன. [The first to branch of from the M168 lineage was defined by the M174 (around 50,000 years BP) lineage that travelled by the coastal route of Middle East to the Andamans, South East Asia and then turning upwards to Japan and Mongolia. About the same another branch emerged from M168, that is M130 that appears to have accompanied M174 in the same great coastal migration from Africa. M130 is found in India and Lanka in large numbers and represents one of the oldest substratum populations of India. It also reached Australia and founded the human population in that continent.] இதற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள் [ஆதிவாசிகள்] இன்றும் சான்று கூறுகின்றனர். அந்தமான் பழங்குடிகள் இந்த இடபெயர்ச்சியின் எச்சமிச்சம்களே ஆகும். இன்று இந்த அடையாளம் காட்டி ஆக இந்தியாவின் குடித்தொகையில் 5% மட்டுமே உள்ளன. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. அதைத் தொடர்ந்து, 45,000 வருடங்களுக்கு முன், M89 [[M168 > M89] மெசொப்பொத்தேமியன் அடையாளம் காட்டி மக்கள் மெசொப்பொத்தேமியாவில், இரு நதிகள் கொண்ட பெருநிலத்தில், போதுமான தண்ணீர் வசதியுடனும் உண்பதற்கு போதுமான காட்டு கால் நடைகளுடனும் [wild cattle] வேட்டையாடி சேகரித்து [hunter gatherer] வாழும் ஒரு நிலையில் அங்கு மகிழ்ந்து இருந்தார்கள். [M168 also gave rise to yet another lineage in north-east Africa or the Middle East- M89 around 45,000 years BP] அதை தொடர்ந்து, 40,000 வருடங்களுக்கு முன் M9 [M168 > M89 > M9] துரேனிய இனக் குழு மக்கள் [Turan Basin Clan people], மெசொப்பொத்தேமியாவில் இருந்து வெளியேறி துரேனிய ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தக் கால கட்டத்தில் குடியேறினார்கள். [The major successor of the M89 lineage was the M9 lineage, which started migrating towards the steppes of central Asia and underwent a remarkable explosion there to spawn lineages in all direction. This M9 lineage may be termed the principal Eurasian ancestor.] இதன் பின், M20 (M168 > M89 > M9 > M20) தொடக்க நாட்டுப்புற வாழ்க்கை வாழும் [Early pastoral Dravidian clan / கால்நடை வளர்ப்பில் வாழும்] திராவிட இனக்குழு, 30,000 வருடங்களுக்கு முன், இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். தொடக்க திராவிடர்கள் வேடுவர்களாகவும் கால்நடை வளர்ப்பவர்களாகவும் இருந்தனர். தென் இந்தியரில் 50% வீதத்தினர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள, திராவிட மொழி பேசுபவர்கள் [தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், .... ] இப்படி மாறுதலடைந்து [பிறழ்வு / Mutation] புது உயிரினமாக தோன்றியவர்களே. இந்த மாற்றம் [மாறுபாடு] M9 மக்கள் தொகையில் இருந்து தோன்றியது ஆகும். [One major descendent of M9 was the M20 lineage that moved south and brought about the first major colonization of India around 30,000 years ago. It is one of the dominant Indian Y- types accounting for about 50% or more of the South Indian Y-chromosomes. This population appears to have displaced the coastal migrant males on the large scale while acquiring their females enmasse. The connections of this group with the Dravidians is worth exploration.] இறுதியாக, 10,000 வருடங்களுக்கு முன், தென் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் [Southern Russia and Ukraine] தோன்றிய M17 (M168-M9-M173-M17) இந்தோ - ஐரோப்பியன் இனக்குழு [Indo Europeans people] துருக்கியின் அனடோலியன் மக்களுடன் [அனத்தோலியா அல்லது ஆசியா மைனர் மக்களுடன் / Anatolians] பண்பாட்டு கலப்பின் மூலம் விவசாயத்தை அறிந்தது. இவர்கள் குதிரையை வீட்டுச் சூழலுக்கு பழக்கி எடுத்தார்கள். ஆரிய கொள்கையின் கதாநாயகர்கள் இவர்களே ஆகும். [From M9 also emerged M45 which also moved northwards into the steppes around 35,000 years. It split into two lineages, one of which moved eastwards – M242. Other one - Eastwards moving branch descending from M45 was M173 around 30,000 years BP. It started moving towards Europe where it spawned M343 the ancestor of most modern Europeans. Another branch of M173 that moved southeastwards was the M17 after arising in the steppes about 10,000 years BP. It is spread in central Asia and Europe and is very prevalent in India. It appears to be the marker of the Aryan invaders of India. The coalesence time of the M17 lineage suggests that Aryan invasion occured somewhere between 4000-2000 BC. ] மேல் அட்டவணையில் இருந்து, நாம் சுருக்கமாக அறிவது என்னவென்றால், ஹோமோசப்பியன்ஸ் [Homo sapiens] என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஆஃப்ரிக்காவில் தோன்றி கடந்த 60,000 - 70,000 ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் M168 எனப்படும் மரபுயிரியல் குறியீட்டை தங்கள் Y குரோமோசோமில் கொண்டிருந்தனர். Y குரோமோசோம் எனப்படுவது மனித இனத்தில் ஆண்களை அடையாளங் கானச் செய்யும் மரபுக் கூறுகளைக் கொண்டதாகும். இவர்களின் இடப் பெயர்தலின் முதல் கட்டமாக கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து நீக்ரோய்ட் இனக் குழு [Negroid / கருப்பினத்தவர்] ஆதி மனிதர்கள் செங்கடல், அரேபிய குடா நாடுகள், பாரசீக வளைகுடா கடற்கரைகள் வழியாக தற்கால தமிழக - இலங்கைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இந்த பரம்பலின் மூலம் M130 என்ற புதிய மரபுயிரியல் குறியீடு [genetic code] இம் மக்களிடையே உருவாக்கியது. இவர்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் இருந்து ஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 என்ற மரபுயிரியல் குறியீட்டை கொண்ட திராவிடர்களின் மூதாதையர்கள் என்று கூறிக்கப்படும் மனிதர்கள், தற்கால தமிழக இலங்கை பகுதிக்கு புலம் பெயர்ந்தனர். பல ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் ஏறத்தாழ 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆசிய பகுதிகளில் மந்தை மேய்க்கும் நாடோடிகளாக இருந்த இனக் குழுக்கள் ஈரான் வழியாக தற்கால இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர். இவர்களிடம் M17 எனும் மரபுயிரியல் குறியீடு காணப்படுகிறது. இவர்களே இந்தோ –ஆரிய இனக்குழு மக்கள் ஆவார். அதாவது இந்தியாவின் குடியேறிய முதலாவது மனிதர்கள் மரபணுக் குறியீடு M130 உடையவர்கள் என நம்பப்படுகிறது. அவர்கள் கரையோரமாக ஆஃப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார்கள். அவர்களின் மரபினர் [வழித்தோன்றல்] இன்னும் அந்தமான் தீவுகளிலும் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள். உதாரணமாக இம் மனிதர்களின் இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின் நீலகிரி மலைச்சாரலிலும், இலங்கையில் வாழும் வேடர்களும் ஆவர். அதே போல M20 உடையவர்களும் திராவிட மொழியும் இன்னும் இந்தியாவில், இலங்கையில் உள்ளது. இவர்கள் 30,000 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். அது போல ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் M17 உடையவர்களும் அங்கு இருக்கிறார்கள். இவர்கள் 4000 வருடங்கள் அளவில் அல்லது அதற்கு பின் வந்தவர்கள். பூகோளம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சியான [தேசிய புவியியல் ஒளியலை வரிசை / நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சி / National Geographic channel] "மனித இனத்தின் பயணம்" என்ற தொடரில், அதன் தயாரிப்பாளர் "ஸ்பென்சர் வேல்ஸ்" [Spencer Wells], ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே, முற்காலத்திய மனிதனின் முதலாவது இடப் பெயர்வு 60,000 வருடங்களுக்கு முன்பு கிழக்கு கரையோரமாக, குறிப்பாக தமிழ் நாடு வழியாக நடை பெற்றது என்கிறது. உள்ளூர் மக்களின் மரபணு இதற்கு சாட்சியாக உள்ளது. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள், 50000 வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட "எம்130 டி.என்.ஏ" யையும் 30000 வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட "எம்20 டி.என்.ஏ" யையும் கள்ளர் சமுதாயம் உட்பட, இன்றைய தமிழ் நாட்டின் உள்ளூர் மக்களிடம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு ஆஃப்ரிக்கா மக்களிடமும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் மக்களில் [Australian aborigines] பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் "எம்130 டி.என்.ஏ" இருப்பதாக டாக்டர் பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குமரி கண்டம் கடலில் மூழ்கிய பொழுது, மனித இனம் ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது என கூறுபவர்களும் உண்டு? ஆனால் இதற்கு சரியான ஆதாரங்கள் இன்னும் இல்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி :06 தொடரும்
-
எனது அறிமுகம்
நன்றி
-
"பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!"
நன்றி
-
"ராமன் எத்தனை வஞ்சகனடி?"
நன்றி
-
"கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்! முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!"
"கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்! முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!" பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே, கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு, அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து, சதையை தாண்டி விதியை காண்பது காதல் .... அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான் [Shah Jahan], மும்தாஜ் மஹால் [Mumtaz Mahal] இறந்த பின் ..... கண்களை கலந்து, இதயங்களை ஒன்றாக்கி, மௌனத்தை மொழியாக்கி, சிந்தனையை சீராக்கி, வாழ்வை வசந்தமாக்கி, இன்பத்தை இரட்டிப்பாக்கி கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்! வேறு பல மனைவிகள் இருந்தும்??, அவள் 14 பிள்ளைகள் பெற்றப் பின்பும், அவள் மீதான அன்பு தனியாமல் இருந்ததால், அது காதலின் சின்னம் என்று சொல்லப்படுகிறது!! ......................... உன்னை ஒரு பார்வை கேட்டேன், கண்கள் பேசும் சில வார்த்தை கேட்டேன். கன்னத்தில் வந்த ஈரமும் இதயத்தில் நொந்த காயமும்தான் எனக்காக நீ கொடுத்தது! இந்த முறிந்த காதலியை இனி நினைக்க முடியாது! என் என்றால் அவள் எங்கோ யாருடனோ இப்ப வாழ்கிறாள்!! அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே என மறக்கவும் முடியாது! என் என்றால், என் நெஞ்சுக்கு [வேறு] நினைவில்லை என் நிழலுக்கு [இப்ப] உறக்கமில்லை ... தன் சிறு பருவத்திலிருந்தே லைலா [Laila] என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்பு கொண்டு வளர்கிறான் 'கைஸ்' [Qays]. அன்பு முற்றிக் காதலாகிறது. காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்து விட்ட கைஸ் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப் போல் ஆகிவிட்டான். மக்கள் அவனை "மஜ்னூன்" [Majnun] என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகி விடுகிறது. மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்து விடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார். இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான். ஒரு முறை,லைலாவின் தெருவில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை பாடினான்! "லைலாவின் தெருவில் அவள் வீட்டின் சுவர்களை முத்தமிடுகிறேன் நான். இந்தச் சுவற்றின் மீதோ அல்லது அந்தச் சுவற்றின் மீதோ காதல் கொண்டவனல்ல நான். என் மனதில் பொங்கி வழிவது அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!" "I pass by these walls, the walls of Layla And I kiss this wall and that wall It’s not Love of the walls that has enraptured my heart But of the One who dwells within them" அதே மஜ்னூன், முறிந்த காதலியை பற்றி ஒரு முறை இப்படி சொல்கிறான் : "ரோஜா காதலின் சின்னம் என்பது சரிதான். காலையில் இருக்கிறது அவளைப் போல். மாலையில் ஆகிறது என்னைப் போல்." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]
"மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல்ல; அவர் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தார். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும் நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின் நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான். குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும் சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான். ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்? மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும் 'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான். சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்! ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்! புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும் தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர். "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும், அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும் இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது. ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින් පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා දහවල පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා මදකින් පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ ?' குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன் இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்? தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே இதயம் அலைந்து உன்னைத் தேடுதே! கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது. "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது. வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கசக்கும் உண்மைகள்"
"கசக்கும் உண்மைகள்" "பொய்களை பூசி பெருமை பேசுகிறான் மற்றவனை தாழ்த்த புராணம் படைக்கிறான்! மகாவம்சம் ராமாயணம் இனிக்கும் பொய்கள் உண்மையான வரலாறு கசக்கும் உண்மைகள்!" "கல்வெட்டு தொல்பொருள் சான்றுகள் வர கன்னத்தில் கைவைத்து தடைகள் செய்கிறான்! மாயைத்திரைகள் கிழிந்து உண்மை கட்டிட அரச படையுடன் அட்டகாசம் புரிகிறான்!" "தைரியம் கொண்டு கசப்பை ஒப்புக்கொள் ஆழங்களில் உள்ள ஞானம் வெளிவரும்! வளர்ச்சிக்கான வாய்ப்பு, கட்டாயம் உயரும் உண்மைகள் விழித்து விடுதலை ஓங்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"விலைபோகும் நீதி"
"விலைபோகும் நீதி" "விலைபோகும் நீதி முல்லைத்தீவில் புரியுது தலையாட்ட மறுத்தவனுக்கு பயமுறுத்தல் வேறு! கொலைக்குப் பயந்து நாட்டையே துறந்தான் அலையாத மனமும் திரையில் மறைந்தது!" "அடங்காத வெறியர்களின் ஆட்டத்தை நிறுத்த அறிவாகத் தர்மத்தை எடுத்து உரைத்தானே! அளவாகச் சட்டத்தை நேர்மையாகப் பாவித்தவனுக்கு அசிங்கமான பேச்சே பரிசாகக் கிடைத்ததே!" "புத்தநாடு இதுவென பெருமையாகக் கூறுபவனே புத்தன் போதித்த கொள்கை தெரியுமா? புகழ்மிக்க எங்கள் இலங்கை நாட்டை புற்று நோயாய் மகாவம்சம் கெடுக்குதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!"
"பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!" முதற்கண் [முதலில்] தாழ்மை பற்றிய சொல்லின் பொருளை பார்ப்போம். 1] lowliness of mind, humility, பணிவு 2] inferiority of rank ; கீழ்மை 3] poverty, எளிமை ஆகும். ஆகவே தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..! அதாவது தாழ்மை என்பது ‘பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்’ என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது. இது நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது என்று பொருள்படாது. ஆணவத்தை அல்லது ‘நான்’ என்கின்ற சிந்தனையை அடக்குவதே என பொருள் கொள்ளலாம். ‘நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டு மெனில் தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார் ரவீந்திரநாத் தாகூர். தாழ்மையைப் பற்றி சமயங்கள் என்ன கூறுகின்றது என்று பாருங்கள்: 'தங்களது பிரார்த்தனையில் தாழ்மையாய் இருக்கும் மக்களையே வெற்றிகள் வந்து சேரும்' - இஸ்லாம். 'கடவுளுக்கு முன்பாக தனது ஒன்றுமில்லாமையைக் குறித்து அழுது புலம்பி வேண்டினால் கடவுளைக் காணலாம்' - அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் மதம். 'தாழ்மையாய் இருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாய் இருங்கள், குருவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், தன்னலத்தை விட்டொழியுங்கள்' -பகவத் கீதை. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - (மத்தேயு 23:11-12) 'கர்வத்தைத் தாழ்மையால் வெல்லுங்கள்'- சமண மதம். இப்படி எல்லா சமயங்களும் கற்பிக்கும் தாழ்மை, எமது மனதில் இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற எல்லா தடைகளையும் குறைகளையும் இலகுவாக வென்று விடலாம் என்பதே உண்மை. “மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய” என்பது தொல்காப்பிய நூற்பா.(தொல். பொருளியல். 31) இல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக் கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும் [தாழ்தலும்], அவன் அவ்வாறு பணிந்த [தாழ்ந்த] போது, நாயகி அச்சமும் நாணமுமின்றி நாயகனின் பணிதலை [தாழ்தலை] ஏற்றுக் கொள்வதும் தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 11 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது"" / "Food Habits Of Ancient Sumer continuing" உலகெங்கிலும் உள்ள பண்டைய விவசாயிகளின் பிரதான பயிர் எப்போதும் தானியமாக இருந்தது. மெசொப்பொத்தேமியாவில், முக்கிய பயிர் பார்லி. ஆனால் அரிசி மற்றும் சோளம் ஆகியவை அங்கு அறியப்படவில்லை, காரணம் மெசொப்பொத்தேமியாவில் உள்ளதை விட குறைந்த உப்புத்தன்மை கொண்ட மண்ணில் தான் கோதுமை செழித்து வளர்க்க கூடியது. இதனால் பார்லியும் அதன் மாவிலிருந்து சுடப்படும் ரொட்டியும் வாழ்வின் தூண்களாக அங்கு இருந்தன. மெசொப்பொத்தேமியா மற்றும் பல பழங்கால கலாச்சாரங்களில் ரொட்டியை புளிக்க ஈஸ்ட் பயன்படுத்தியதற்கான வெளிப்படையான ஆதாரங்கள் இல்லாததால், இந்த கலாச்சாரங்களில் உள்ள அனைத்து ரொட்டிகளும் தட்டையானதாகவும் அடர்த்தியானதாகவும் இருந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது. எனவே, மெசொப்பொத்தேமியரின் ரொட்டி பொதுவாக கரடு முரடாக, தட்டையாக. புளிப்பில்லாததாக இருந்தன. ஆனால், அவர்களின் செல்வந்தர்களுக்கான, தரமும் விலையும் உயர்ந்த ரொட்டி, அதிகமாக மென்மையான மாவால், இனிப்பும் வாசனையும் உள்ள மெதுவான ரொட்டியாக, சுடப்பட்டு இருக்கலாம் என நம்பப் படுகிறது. அப்படியான ரொட்டி துண்டு, ஊர் நகர அரசி ஷுபாத்தினது [Queen Shubad's / Puabi's] கல்லறையில் காணப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. இது அவளின் மறுமை வாழ்விற்காக அங்கு வைக்கப் பட்டதாக கருதப்படுகிறது. மேலும் ரொட்டி விலங்கு, காய்கறி கொழுப்புகளினாலும், பால், வெண்ணெய், பால் கட்டி [சீஸ்], பழம், பழச்சாறு, எள்விதைகளாலும் செறிவூட்டப்பட்டன. அனைத்து சமையல் குறிப்புகளிலும் - பூண்டு, வெங்காயம், வெந்தயம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள், வாசனைக்காக கடுகு, சீரகம், மல்லி, புதினா (Mentha spicata / ஒரு மருத்துவ மூலிகை], சைப்ரஸ் [cypress] காய்கள் சேர்த்திருக்கின்றனர். கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்கு மாவுப் பொருள்கள், அரைத்த பார்லி, மெதுவான தன்மைக்கு நீர் சேர்ப்பது என்ற அனைத்து வகை கலைகளிலும் கை தேர்ந்தவர்களாக சுமேரியர் இருந்தனர். சில சமயம், உணவு மெதுவாக, மென்மையாக இருக்க பால், பியர் மற்றும் இரத்தம் போன்ற வற்றையும் அவர்கள் சேர்த்தனர். ஈராக், மெசபடோமியாவில் உள்ள களிமண் மாத்திரைகள், 3100-3000 BCE காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது. அது இப்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரொட்டி உணவுகள் தலையின் முன் ஒரு கிண்ணத்தை (ஒரு முக்கோணப் பொருளை) இணைத்து எழுதப்பட்டுள்ளது (புகைப்படம் - 05). இந்த தலை, கிண்ணம் இணைப்பு, பிற்கால சுமேரிய நூல்களில், "சாப்பிட" என்று பொருள்படுகிறது. இப்படியான முக்கோணப் பொருள் ரொட்டியின் வழக்கமான பிரதிநிதித்துவமும் ஆகும். பேரீச்சை மரம் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் முக்கிய உணவு பயிராக இருந்தது. இதுவும் பார்லி மாதிரி உப்பு மண்ணில் விளையக் கூடியது. இது, சர்க்கரை மற்றும் இரும்பு சத்து கொண்டதுடன் இலகுவாக பேணக்கூடியதும், விவசாயிகள் முதலில் வீட்டு வளர்ப்பாக்கிய காட்டுத் தாவரங்களில் இதுவும் ஒன்று ஆகும். ஆனால், இன்று மத்திய தரைக் கடல் பகுதியில் முக்கிய உணவாக காணப்படும் ஆலிவ் [olive], மற்றும் திராட்சை போன்றவை மெசொப்பொத்தேமியா உணவில் அன்று அருமையாகவே காணப் பட்டன. பொதுவாக இறைச்சி வறுத்தும் கொதித்தும், வாட்டியும் அல்லது சுட்டும் சமைக்கப்பட்ட துடன், அவை காயவைத்து, புகையிட்டு அல்லது உப்பு தடவி பேணப்பட்டன. சுமேரியர்களின் பெரும்பான்மையான உணவுகள் நீரில் அல்லது திரவத்தில் சமைக்கப்பட்டன. நீரில் கொதிக்க வைத்து சமைப்பது என்பது, சமையல் அறிவியலில் புதுமை கலந்த ஓர் முக்கியமான மைல் கல்லாகும். அதுவரை மக்கள், நேரடியாய் நெருப்பில் போட்டு சமைத்தனர்; பின் சுட்டனர்; பிறகு பாத்திரத்தில் போட்டு வதக்கினர்; பாத்திரத்தில் போட்டு வறுத்தனர். நெருப்பு தணலில், தீயில் வாட்டினர்; லேசாக புரட்டி புரட்டி வாட்டினர். இதெல்லாம் போக நீரில் போட்டு சமைப்பது, சுவையான, வசதியான சமையலாகும். நீரில் போடுவதன் மூலம், உணவின் சுவை கூடுகிறது. மேலும் அதன் மணத்தை அதிகரிப்பதும், சமையலை வளமாக்குவதும், பல வகை உணவுகள் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கின்றது. இந்த சுவையை வறுத்தல் சுடுதல், புரட்டுதல் மூலம் செய்ய முடியாது. தண்ணீரில் உணவுக்கான பொருட்களை போட்டு, வேக வைத்து உண்பது என்பது நவீன புதிய முறை. இந்த திரவத்தில் சமைக்கும் நவீன புதிய முறை, மெசொப்பொத்தேமியாவில் உள்ள மாறுபட்ட எல்லா இன குழுக்களிடமும் முழுமையாக பரவியதுடன் இந்த இனக்குழுக்கள் பல, உணவு பழக்கங்களை தமக்குள்ள பொதுவாக பகிர்ந்தனர். அத்துடன் சமையல் பாத்திரமும் பரிணாமம் பெற்று பல புது நவீன சமையலுக்கு வழிவகுத்தன. இப்படி மெசொப்பொத்தேமியாவில் முதல் முதல் தொடங்கப்பட்டு, பின் அங்கு வழமையில் இருந்த பல சமையலின் குறிப்புகளை, சுமேரியர்களை வென்ற பாபிலோனியர்கள் வெகு புத்திசாலித் தனத்துடன் சுட்ட களிமண் பலகையில் பதிவும் செய்துள்ளனர். சுமேரியர்கள் கியூனிபார்ம் எழுத்தை கி மு 3100 ஆண்டளவில் கண்டுபிடித்தார்கள். இந்த எழுத்து மெசொப்பொத்தேமியாவின் பிற பகுதிகளுக்கும் பரவி, மற்ற குழுக்கள் தமது மொழியை எழுத அதை பாவித்தனர். கி மு 1900 ஆண்டளவில் பொதுவான கியூனிபார்ம் எழுத்தை பாவித்து சுமேரியன் மற்றும் அக்காடியன் மொழியில் 800 இக்கு மேற்பட்ட உணவு மற்றும் குடிவகை சொற்களை பாபிலோனியரால் தொகுக்கப்பட்டன. சுமேரியர்கள் தமது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே, ரொட்டிகள் சுடுவதற்கு ஏற்ற கல் அடுப்புகள் உருவாக்கினார்கள். அதை தொடர்ந்து கி மு 2500 ஆண்டு அளவில் தீச்செங்கல் அடுப்பு பாவனைக்கு வந்தன. அத்துடன் சில அடுப்புகள் தட்டையான மேற்பரப்புடன் வடிவமைக்கப்பட்டன. அவை "களி" மண்ணாலோ அல்லது வெண்கலத்தாலோ செய்த மெதுவாக வேகவைகிற சட்டியை அல்லது வறுக்குஞ்சட்டியை [வாணலி] தாங்கக் கூடியதாக இருந்தன. அங்கு சமையல் ஒரு கலையாகவே கருதப்பட்டது. அக்காடியன்கள் ஒரு சமையலறையின் பொறுப்பாளருக்கு 'முபன்னு' அல்லது 'அலங்காரக்காரர்' ['Mubannu' or 'embellisher] என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 12 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 11 "Food Habits Of Ancient Sumer continuing" The staple crop of ancient farmers around the world was always grain. In Mesopotamia, the chief crop was barley, Rice and corn were were unknown and Wheat flourished on a soil less saline than exists in most of Mesopotamia. Thus barley and the bread baked from its flour become the staff of life. Because we are lacking explicit evidence for the use of yeast to leaven bread in Mesopotamia and many other ancient cultures, the cuisines of these cultures have assumed that all of the bread in these cultures was flat and dense like hardtack. So, Mesopotamian bread was not exceptional, usually coarse, flat, and unleavened, but a more expensive bread could be baked from finer flour as Pieces of just such a bread were found in the tomb of Queen Puabi of Ur, stored there to provide her spirit with sustenance in the afterlife. Bread could also be enriched with animal and vegetable fat; milk, butter, and cheese; fruit and fruit juice; and sesame seeds. The gardens of Mesopotamia watered by irrigation canals , were lush with fruits & vegetables, Among the fruits were date - palm thrived on relatively saline soil and was one of the first plant farmers domesticated. As for vegetables, the onion was king along with its cousin garlic. Other vegetables included lettuce, cabbage and cucumber, carrots ? and radishes, beets and turnips and a variety of legumes, including beans, peas and chickpeas. It is found from the clay tablets in Mesopotamia, Iraq, belongs to Late Uruk Period, 3100-3000 BCE, now available at the British Museum, London, that the Bread Rations was written by combining a human head a bowl (a triangular object in front of the head / Photo - 05). This combination, in later Sumerian texts, means "to eat". The triangular object was the regular representation of bread. The most important food crop especially in southern Mesopotamia was the date palm. Rich in sugar and iron, dates were easily preserved. Like barley, the date - palm thrived on relatively saline soil and was one of the first plants farmers domesticated. Curiously, two mainstays of the present Mediterranean diet -- olives and grapes. were seldom found in Mesopotamian cuisine. Meats were cooked by roasting, boiling, barbecuing or broiling and preserved by drying, smoking or salting. Although Mesopotamia was a hodgepodge of ethnic groups, the written evidence indicate that the different people shared many food habits. The Sumerian invented cuneiform writing around 3100 BC. The writing system spread to Mesopotamia's other groups to record their language and by about 1900 BC, the Babylonians compiled a concordance with more than 800 food & drink terms in Sumerian & Akkadian [The language spoken by the Babylonians] using the common cuneiform script. One of the largest categories was for foods cooked in liquid. These are simply names without gastronomic detail, but the large number of culinary terms suggests that sophisticated cooking had spread throughout Mesopotamia's different ethnic groups. Cooking equipment also evolved to allow more sophisticated cookery. The Sumerians in their prehistory developed stone ovens capable of baking loaves of bread, Fire brick ovens followed by about 2500 BC, Some designed with flat areas that could hold stewing or frying pans, made from either clay or bronze, allowing the efficient use of fuel. Cooking was considered an art. Akkadians honoured the person in charge of a kitchen with the title 'Mubannu' or 'embellisher' Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 12 WILL FOLLOW
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 10 'பாலியல் நோக்குநிலை [sexual orientation]' தொடர்கிறது ... தற்பால்ச்சேர்க்கையில் ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் கே [gay] என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை லெஸ்பியன் [lesbian] என்கிறார்கள். இந்த தற்பால் சேர்க்கையை விரும்பும் மனிதர்கள் இருபால் சேர்க்கையை விரும்பும் நபர்களாக இருக்கவும் பொதுவாக வாய்ப்புண்டு. கே என்ற சொல், உகவை அல்லது மகிழ்ச்சியை குறிக்கும் பழைய ‘gai’ என்ற பிரஞ்சு சொல்லில் இருந்து பன்னிரெண்டாம் நூறாண்டில் பிறந்த சொல்லாகும். இது தொடக்கத்தில் “joyful”, “carefree” “full of mirth”, or “bright and showy” இப்படி குறித்தாலும், பிற்காலத்தில் ஆண் - ஆண் உறவை குறிக்கும் சொல்லாக மாறியது, ஆனால், லெஸ்பியன் என்னும் சொல் வித்தியாசமான வரலாற்றை கொண்டுள்ளது. கி.மு 600ல் லெஸ்பாஸ் [island of Lesbos] என்ற தீவைச் சேர்ந்த, ஓரின சேர்க்கையாளரான ஸாப்போ [சாஃபோ / Sappho] என்ற கிரேக்கப் பெண்ணின் காதல் கவிதைகள் மூலம் அவர் எதிர்பாலினத்தை விட, தன் பாலினத்தின் மீதே அதிகம் காதல் கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது. சாஃபோ-வின் கவிதைகளில் பெருமபன்மை யானவை இன்று அழிந்துபோயின. பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை குறிக்கும் லெஸ்பியன் என்ற சொல் சாஃபோ - வைக் குறித்தே உருவாக்கப்பட்டது. லெஸ்போஸ் தீவை பிறப்பிடப்பிடமாகக் கொண்டதால் சாஃபோ லெஸ்பியன் என்று அழைக்கப்பட்டார். அதுவே பின் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளப்படுத்தும் சொல்லாக வழங்கப்பட்டது ஆகும். விஞ்ஞானிகளிடையே எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை அல்லது வேறு பாலியல் நோக்குநிலை [heterosexual, bisexual, gay or lesbian orientation], எப்படி, ஒரு தனிப்பட்ட ஒருவரிடம் உருவாகுகின்றன என்பதற்கான, சரியான தனித்தன்மை வாய்ந்த காரணம் பற்றி இன்னும் ஒருமித்த கருத்து இல்லை. பலர் இயற்கையும் மற்றும் வளர்ப்பும் காரணம் என்கிறார்கள். என்றாலும் பொதுவாக, ஒரு ஒருபால் மரபணு [gay gene] ஒன்று இருக்கலாம் என்ற கருத்து இன்று நிலவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களாக ஒருவர், வளர்ப்பு காரணம் இன்றி, இயற்கையாகவே அப்படியான பாலுணர்ச்சியுடன், பிறந்து இருந்தால் ?, அது அவர்களின் தேர்வு அல்ல, எனவே நாம் அவர்களும் இணைந்து குடும்பமாக வாழ வழிவிட வேண்டும், அதில் ஒரு தப்பில்லை. ஆனால் என்னை ஒரு கவலையும் வாட்டுகிறது, ஏனென்றால் 1] அடுத்த தலைமுறைக்கு எமது நாகரிகத்தை கொண்டு செல்ல அவர்களால் குழந்தைகளை உருவாக்கும் தகுதி இயற்கையாகவோ அல்லது வேறு வழியாகவோ இன்னும் இல்லை. என்றாலும் அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என யாரும் வாதாடலாம், அது பிழையில்லை, இன்றைய சூழலில் ,உதாரணமாக 2010 ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள பாலியல் மனப்பான்மை மற்றும் வாழ்க்கை பாணியிலான தேசிய ஆய்வு [The National Survey of Sexual Attitudes and Lifestyles (Natsal) in Britons], வயது வரம்பு 16 முதல் 74 வரை உள்ள பெண்களில் 1% மற்றும் ஆண்களில் 1.5% தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கருதுகின்றனர் என்கிறது. மேலும் பெண்களில் 1.4% மற்றும் ஆண்களில் 1% பேர் தங்களை இருபால் உறவு கொண்டவர்கள் என கருதுகின்றனர் என்கிறது. அது மட்டும் அல்ல, வயது வரம்பில் 16 முதல் 44 வயது வரை உள்ள பெண்களிலும் ஆண்களிலும், இப்படியான ஓரின பாலின அனுபவங்களைக் கொண்டிருக்கும் விகிதாசாரம் கடந்த 20 ஆண்டுகளில் வியத்தகு அளவு கூடியுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. உதாரணமாக பெண்களில், 1990 ஆம் ஆண்டில் 4% இருந்து 2000 ல் 10% மற்றும் 2010 இல் 16% ஆக உயர்ந்து உள்ளது காணப்பட்டுள்ளது - இது ஒரு குறுகிய காலத்தில், ஒருபால் உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை சுடிக் காட்டுகிறது, எனவே இந்த விகிதத்தில் அல்லது ஒரு ஏற்றத்தில் இந்த பாலின நடவடிக்கைகள் கூடிக்கொண்டு போனால், ஒருவேளை, ஒருகட்டத்தில் தத்து எடுக்க குழந்தைகளும் இல்லாமல் போகலாம் ? அல்லது அடுத்த தலைமுறைக்கு நாகரிகம் கலாச்சாரம் கடத்தும் வாய்ப்பு குறைந்து அதனால் சமூகம் சமுதாயம் உடையத் தொடங்கலாம் ? 2] எச்.ஐ.வி[HIV] தொற்றுக்களால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆண்கள் [MSM] என்று அறிக்கைகள் தெரியப் படுத்துகின்றன. இது ஏனென்றால் ஆண்களுடன் பால் உறவு வைத்துள்ள ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாலியல் செயல், பொதுவாக, குதவழிப் பாலுறவு [anal sex] ஆகும். இது இயற்கையான யோனி பால் உறவை [vaginal sex] விட எச்.ஐ. வி பரவ வாய்ப்பு அதிகமென புள்ளி விபரம் காட்டுகிறது. உதாரணமாக அமெரிக்க புள்ளிவிபரம் / எச்.ஐ.வி.அரசாங்கம் [U.S. Statistics / HIV.gov] இல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் சமீபத்திய மதிப்பீடுகள் படி [According to the latest estimates from the Centers for Disease Control and Prevention (CDC)]: 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 38,700 பேர் எச்.ஐ. வி நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டனர். அதில் ஒருபால், இருபால், மற்றும் ஆண்களுடன் பால் உறவு வைத்த ஆண்கள் மிகவும் பாதிக்க பட்டவர்களில் அடங்குகின்றனர். இவர்கள் அந்த 38,700 பேரில், 26,000 ஆக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது [Gay, bisexual, and other men who have sex with men bear the greatest burden by risk group, representing an estimated 26,000 of new HIV infections per year.]. அதேபோல, 2017 இல் :ஒருபால் மற்றும் இருபால் ஆண்கள், மொத்த எச் ஐ வி நோய் தொற்றியவர்களில் 66% ஆக இருந்ததுடன், மொத்த எச்.ஐ.வி ஆண்களில் 82% ஆக இருந்தனர் [Gay and bisexual men accounted for 66% of all HIV diagnoses and 82% of HIV diagnoses among males.] என்பது, இந்த பாலியலின் ஆபத்து தன்மையை வெளிக் காட்டுகிறது. அமெரிக்க தரவுகளைப் பயன்படுத்தி 2009 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஒருபால் திருமணத்தை அனுமதிப்பதன் மூலம் புள்ளி விவர ரீதியில் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவு எதுவும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரிகிறது. 2014 இல் மற்றொரு அமெரிக்க ஆய்வு, ஒரே பாலின ஜோடிகளை திருமணம் செய்வதற்கு அனுமதித்தது, எதிர் பாலின திருமண விகிதத்தை குறைத்தது என்பதற்க்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் சுடிக் காட்டுகிறது. மேலும் ஒருபால் திருமணம் அனுமதிக்கப் பட்டு, சமூகத்தின் மேலான அதன் தாக்கத்தின் விளைவுகளை அல்லது பாரம்பரிய திருமணத்தின் சமூக நோக்கத்தை அது பலவீனப்படுத்துகிறதா என்பனவற்றை கண்காணிக்க ஒப்பீட்டளவில், எமக்கு ஒரு குறுகிய கால இடைவெளி மட்டுமே இருந்து உள்ளது. எனவே இந்த ஆராய்ச்சிகளில் இருந்து கிடைக்கப் பட்ட கண்டுபிடிப்புகள் ஒரு முதல் கட்டம் என்பதால், அதன் முடிவுகளை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று நான் நம்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 11 தொடரும்
-
"யாழ் மீனவனின் துயரம்"
"யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம் வளம் பெற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் இந்நாளிலும், குறிஞ்சி வாழ்ப் பழங்குடி மக்களுடன் தங்கள் தொன்மையை இழக்காமல் பண்பாட்டைச் சமரசம் செய்து கொள்ளாமல், கால ஓட்டத்தை எதிர்த்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது! அப்படியாயன ஒரு மீனவ சமூகத்தில், ரவி என்ற எளிய மீனவன், இலங்கையின் வடக்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணத்தின் ஒரு பாரம்பரிய மீனவ கிராமத்தில் வாழ்ந்து வந்தான். ரவியின் வாழ்க்கை எப்போதும் அலைகளின் தாளத்திலும் வலைகளின் இழுப்பிலும் சுழன்று கொண்டிருந்தது. என்றாலும் அவனது ஏக்கம் எல்லாம் கொந்தளிக்கும் கடல் அலைகளோ, தூக்கி எறியும் புயல் காற்றுகளோ அல்ல, அதை அவன் எப்படி சமாளிப்பது என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டு, அவனின் பரம்பரையின் அனுபவம் அவனுக்கு கற்றுக் கொடுத்து விட்டது. ஆனால் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் எல்லைக்குள் புகுந்து, கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுத்தும் இழுவைப்படகு மீன்பிடியில் அத்துமீறி ஈடுபடுவதுடன், இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தும் அந்நிய நாட்டு மீனவர்களின் கொடுமை தான் அவனின் முதன்மை ஏக்கம். தன் குடும்பம், தன் சமுதாயம் நிம்மதியாக வாழவேண்டும் என்பது தான் அவனின் ஒரே கனவு. அதேநேரம் பொதுவாக எல்லா இளம் சமூகத்தினர் போல, காதலிலும் அவன் விழாமல் இருக்கவில்லை. அவனின் காதலியின் பெயர் மீரா, அவள் கூந்தல் ஆற்றின் நீரோட் டத்தால்,வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல் இருக்கிறது, நெற்றியோ பிறைநிலா போல் இருக்கிறது, புருவம் வில் போல் வளைந்தும், அழகிய இளமையான குளிர்ந்த கண்ணுடன் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாய். அந்த கொஞ்சும் பேச்சுத்தான் அவனின் இதயத்தை நிரப்பியது என்றே கூறலாம்? மீராவுடனான ரவியின் காதல், கடற்கரையின் தாள அலைகளுக்கு மத்தியில் எளிமையாக பகிர்ந்த உணர்வுகள் மற்றும் அவர்களால் திருடப்பட்ட மகிழ்ச்சியின் இழைகளால் பின்னப்பட்ட ஒரு நாடா! அவள் தன் மீனவ தந்தையின் மீன் பிடிப்புகளை, கூடையில் சுமந்து விற்கும் பொழுதுதான் அவன் அவளை முதல் முதல் சந்தித்தான். . "நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே" நிலவையும் அதனோடு சேர்ந்த இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலையும், அதன் கரையிலுள்ள சோலையையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுமுடைய அவனின் அதே கிராமத்தில் தான் அவளைச் சந்தித்தான். சூரியன் தினம் முத்தமிட்ட இதமான தனது தோலுடனும், கடல் மாதாவின் பாடலை எதிரொலிக்கும் சிரிப்புடனும் மீரா ரவியின் மனதில், உணர்வில் ஒரு விறுவிறுப்பைக் என்றும் கொடுத்துக் கொண்டு வந்தார். மணற்பாங்கான கரையில் அவர்களின் காதல் ஒரு மென்மையான நடனம் போல் இருந்தது, அங்கு அலைகளின் ஒலி அவர்களின் காதல் இசையாக செயல் பட்டது. ரவியும் மீராவும் அடிக்கடி தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி, கரையோரம் கைகோர்த்து நடந்து, அன்பும் மிகுதியும் நிறைந்த எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இருவரும் தங்கள் கால்களை அலைகளில் நனைத்தபடி கைகள் உடல்களை அணைத்தபடி, “இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே” ஆக அங்கு கொஞ்ச நேரம் நடந்து இயற்கையின் அழகை ரசித்தனர்; “ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும் சீதையின் நடையை நூக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் மாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் செய்தாள் ” கம்பனின் காதல் காட்சிப் படைப்பு இவர்களில் அப்படியே மாறாமல் இருந்தது. கோதாவரி ஆற்றுக்குப் பக்கத்தில் அமர்ந்து ஒருவர் மற்றொருவரைக் கண்டு, அன்னத்தின் நடையை சீதையின் ஒய்யார நடையுடன் ஒப்பிட்டு ராமன் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத் ராமனின் நடையுடன் ஒப்பிட்டு இருவரும் மகிழ்ந்தது ரவியிலும் மீராவிலும் வெளிப்படையாகவே தெரிந்தது. அங்கு அச்சம், மடம், நாணம் ,பயிர்ப்பு என்று ஒன்றுமே இருக்கவில்லை, அவை கவிதைக்கு அழகேற்ற பாவிக்கும் வார்த்தைகளே என்பதை அவர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள், ஆனால், "காதல் என்பது இயற்கை தரும் போதை", அதிலும் " முதல் காதல் என்பது ஒருத்தர் உணர்த்தும் உணர்ச்சிகளை காதலிப்பது" என்பதின் உண்மையை ரவி அன்று உணரவில்லை. அவன் "முதிர்ந்த காதல் ஒருத்தரைக் காதலிப்பது", அப்படித்தான் மீராவும் என்று தான் எண்ணினான். வங்காள விரிகுடாவின் பரந்த நிலப்பரப்பைக் கண்டும் காணாத பாறைகளின் மீது பின் அமர்ந்து நாளை தான் கடலுக்கு புறப்படும் திட்டத்தைக் கூறி, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் வானத்தை வரைந்து, அடிவானத்திற்கு கீழே சூரியன் மறையும் தருவாயில் மீராவின் முத்தத்துடன் வீடு திரும்பினான். ஒரு மகிழ்வு தரக்கூடிய சுறுசுறுப்பான அடுத்தநாள் காலையில், சூரியன் அடிவானத்தை தங்க நிறத்தில் வரைந்தபோது, ரவி தனது காதலி மீராவிடம் விடை பெற்றுக்கொண்டு, இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் தன் திருமணத்துக்கு நிறைய மீன்கள் தினமும் பிடிபட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் "சூர்யா" என்ற தனது படகில் புறப்பட்டான். ஆனால் இந்த நாள் அவனது வாழ்க்கையில் ஒரு வேதனையான அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதை அவன் அந்தநேரம் அறிந்திருக்க வில்லை. அவன் மீராவின் அழகில், அவளின் காதலில், அவளின் கொஞ்சும் பேச்சில் எங்கு எங்கேயோ பறந்துகொண்டு இருந்தான்! சில வேளைகளில் ரவி தனது படகான "சூர்யா" வில் மீன்பிடிக்க, திறந்த கடலின் நீரில் பயணிக்கும்போது, மீரா சில சமயங்களில் அவனுடன் செல்வாள். படகின் மென்மையான அசைவும் உப்பு நிறைந்த காற்றும் அவர்களிடையே பகிரப்பட்ட சொல்லப்படாத வாக்குறுதிகளுக்கு சாட்சிகளாக இருக்கும். கடல், அதன் பரந்த மற்றும் கணிக்க முடியாத தன்மையுடன், அவர்களின் அன்பின் ஆழத்தை பிரதிபலிக்கும். ஆனால் இம்முறை அவன் தனியாவே தன் கூட்டாளிகளுடன் புறப்பட்டான். தாராளமாக மீன்பிடிபடும் என்ற நம்பிக்கையுடன் அவன் தனது கடற்பயணத்தை மேற்கொண்ட போதும் , அவர்கள் எதிர்பாராத சவாலை எதிர்கொண்டனர். இந்திய மீன்பிடி படகுகள், நவீன தொழில் நுட்பத்துடன், கூடிய எண்ணிக்கையில், விலைமதிப் பற்ற இலங்கைக்கே உரித்தான கடற் பரப்பில் தமது இழுவை வலைகளை வீசியது மட்டும் அல்ல, இலங்கையின் மீன் பிடி வளத்தை சேதப்படுத்தியதுடன், இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப் படுத்தினர். இவர்களின் அத்து மீறிய செயல்களால் தனது மட்டும் அல்ல, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமும் நழுவுவதைக் கண்டு ரவி விரக்தியும் கோபமும் அடைந்தான். கிழிந்த வலைகள் வெறும் நூல்களும் கயிறுகளும் அல்ல; அவை ரவியின் அபிலாஷைகளின் உயிர்நாடியாக இருந்தன. ஒவ்வொரு முறையும் கிழிந்த வலைகளை சரிசெய்து மீண்டும் மீன் பிடியில் ஈடுபட்டாலும், அவன் தனது நம்பிக்கை மேலும் அவிழ்ப்பதைக் கண்டான். அவனை கடலுடன் இணைத்த ஒரு காலத்தில் துடிப்பான இந்த நூல் வலைகள் இப்போது அவனது சிதைந்த கனவுகளுக்கு ஒரு உருவகமாக மாறியது. ரவி … நான்கைந்து பேருடன் சாதாரண படகில் இரவில் தான் கடலுக்குள் செல்வன். அவர்கள் எல்லோரும் தாய் அல்லது மனைவி கொடுத்து அனுப்பும் கஞ்சியோ அல்லது பழைய சோறோ கையில் வைத்திருப்பர். இரவு முழுக்க கண் விழித்து, வலை வீசுவார்கள். சில சமயம் நல்ல, தேவைக்கு அதிகமாக மீன்கள் கிடைக்கும். உடனே அடுத்த நாளே திரும்புவர். பல சமயங்களில் மீன்கள் கிடைக்காது. அதனால் படகில் சென்ற இவர்கள், இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று செல்வர் மீன்கள் கிடைக்கும் வரை. கையில் இருக்கும் குடிநீரும் தீர்ந்திருக்கும். அரை வயிறுதான் சாப்பிடுவர். இவர்கள் வர இதனால் தாமதிக்கும் பொழுது பெண்கள் எல்லாம் கடல் அன்னையையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள் கண்களில் கண்ணீரோடு. இது தான் அவர்களின் வாழ்க்கை. இந்த எளிய வாழ்க்கைக்கு தான் இந்த இந்திய மீனவர்கள் கொடுமை செய்கிறார்கள். அது தான் ரவி கோபத்துடன் இருந்தான். நாட்கள் வாரங்களாக மாறியது, ரவி தனது வாழ்க்கையைச் சந்திக்க சிரமப்பட்டான். அவனது வருமானம் குறைந்துவிட்டது, மேலும் அவனது குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சுமை தாங்க முடியாத சுமையாக மாறியது. அவனது வாழ்க்கையின் காதலாக இருந்த மீரா, தொடர்ச்சியான நிதி நெருக்கடியால் அவன் மேல் ஒரு சோர்வு கொண்டாள். அவனின் கனவுகளின் சிதைந்த எச்சங்களில் தனது எதிர்காலத்தைப் பார்க்க முடியாமல், அவள் தயக்கத்துடன் ரவியைப் பிரிந்தாள். அவள் ரவியை காதலித்தாலும், தனது எதிர்காலத்தை நல்ல மகிழ்வான வாழ்வாக அமைக்க வேண்டும் என்பதில், கூடுதலான அக்கறை கொண்டவளாகவும் இருந்தாள். தென்னிந்திய மீனவர்களுடனான அடிக்கடி நிகழும் சம்பவம் ரவியும் மீராவும் ஒரு காலத்தில் பகிர்ந்து கொண்ட அமைதியைத் தகர்த்தது. சேதமடைந்த வலைகள் மற்றும் குறைந்து வரும் மீன் பிடிப்புகள், ஒரு காலத்தில் அவர்களின் உறவை வரையறுத்த மகிழ்ச்சியை, சிதைக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் அவர்களின் காதலுக்கு சாட்சியாக இருந்த கடல், மீரா விலகிச் சென்ற இந்த நாட்களில், அது இப்ப புலம்புவது போல் ரவிக்குத் தோன்றியது. கரையில் தனியாக நின்று மீராவின் நிழற்படத்தை தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த போது மோதிய அலைகள் அவன் இதயத்தின் வலியை எதிரொலித்தன. ஒரு காலத்தில் துடிப்பான கடல் பரப்பும் அதனுடன் சேர்ந்த நிலப்பரப்பும் இப்போது பாழடைந்ததாக அவன் உணர்ந்தான். அவனுக்கு நங்கூரமாக இருந்த மீரா இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் அவன் தவித்தான். அந்தத் தனிமையான இன்றைய தருணத்தில், காற்றில் உப்பு வாசனையோடும், தலைக்கு மேல் கடற்பறவைகளின் அழுகையோடும், ஒரு காதலியை மட்டுமல்ல, அவனுடன் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொண்ட ஒரு தோழியையும் இழந்த ஆழ்ந்த தனிமையை ரவி இன்று அனுபவிக்க தொடக்கி விட்டான். ஒரு காலத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்த கடல், இப்போது இழந்த காதல் மற்றும் கனவுகள் சிதைந்த கசப்பான நினைவுகளை அவனுக்கு உணர்த்திக்கொண்டு இருந்தது. ஆனால் மீரா இப்ப யாரோ ஒருவனின் மனைவியாக , அதே கடற்கரையில், தன் கணவனின் மடியில் கொஞ்சி செல்லம் பொழிந்து கொண்டு இருக்கிறாள். அவள் ரவியை மறந்தேவிட்டாள்?? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"மாற்றம் ஒன்றே மாறாதது"
"மாற்றம் ஒன்றே மாறாதது" "காதல் ஏற்றிய விழியும் குருடாகும் காமம் வீசிய எழிலும் முதுமையாகும் காவலர்கள் கூட அநீதி இழைப்பர் காரணம் எதுவாகினும் மாற்றம் மாறாதது!" "உற்சாகம் தரும் அமுதமும் விடமாகும் அற்புதம் நிகழ்த்திய உடலும் கருகும் குற்றம் புரிந்தவனும் நீதிபதி ஆவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [விடம் - நஞ்சு]
-
"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!"
நன்றி
-
"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!"
நான் பொறியியலாளர் தான், மனைவியின் பிரிவின் பின், முதல் முதல் ஏதாவது ஒன்றில் மனதைக் கட்டுப்படுத்த தொடங்கியதே எழுத்து. அது தொடக்கத்தில் மிக மிக மந்தமாக, பல எழுத்துப் பிழைகளுடன் ஆரம்பித்து, மெல்ல மெல்ல இந்த நிலைக்கு 15 ஆண்டுகளுக்குப் பின் வந்துள்ளது நன்றி உங்க கருத்துக்கும் ஊக்கத்துக்கும்
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 12 ஒரு மனிதனின் உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்று உறக்கமாகும். அவன் வாழ்வில் பொதுவாக இது மூன்றில் ஒரு பங்கு அது வகுக்கிறது. உடலிலுள்ள அத்தனை உயிரணுக்களை [cells] தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், அவனுக்கு தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. குறுந்தொகை 6, உறக்கம் [துயில், துஞ்சுதல், நித்திரை] பற்றி கூறுகையில், நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கி விட்டன. வெறுப்பு எதுவும் இன்றி இனிமையாக மக்கள் உறங்கு கின்றனர். அகன்ற உலகமும் உறங்குகின்றது என "நள்ளென் றன்றே யாமம், சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி, நனந்தலை உலகமும் துஞ்சும்" என்கிறது. மேலும் ‘பசிக்கு ருசி வேண்டாம், நித்திரைக்குப் பாய் வேண்டாம்’ என்ற பழமொழியையும் சேர்த்து பார்க்கும் பொழுது, எமக்கு ஒன்று புலப்படுகிறது. அதாவது தூங்குவதற்கு ஏற்ற காலம், பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி குளிர்ச்சி பொருந்திய அமைதியான இரவு என்பதும், அவர்கள் அன்று பாய், அல்லது பாய் போன்ற ஒன்றில் உறங்கினார்கள் என்பதும் தெரியவருகிறது. அதே போல எல்லா உயிர்களும் எதோ ஒரு நேரத்தில் உறங்குகின்றன. உதாரணமாக புறநானூறு, பாடல் 229 , "மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்" என்ற வரி மூலம் வலிமையான யானையும், துதிக்கையை நிலத்தில் போட்டு உறங்குவதையும், அதே போல புறநானூறு 384 "வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை" என்ற வரியில் நாரை மரத்தின் கிளையில் உறங்குவதையும் காண்கிறோம். பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை, தமிழரின் தூங்கும் முறையை கூறும் பொழுது, படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை (வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு) பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல் மேல் போர்த்தி உறங்குவது நல்ல நெறி என "கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி" என்று பாடல் 30 ஆல் கூறுகிறார். 'வராத வாழ்வு வந்தாலும் வடக்கே தலை வைக்ககூடாது' என்றும் 'விடக்கை ஆயினும் வடக்கு ஆகாது' என்றும் சில பழமொழிகளும் உண்டு. அதையே அவர்கள் பாரம்பரியமாக பின்பற்று கிறார்கள் எனினும், மன அழுத்தம், பணிப்பளு, பரபரப்பான வாழ்க்கை முறை [இணையம், அலைபேசி,...], இரவு வேலை என, மிகுந்த நெருக்கடிக்கு இடையே பொழுதை கழிப்பதால், எல்லோரும் அப்படி இன்று ஒழுகுவதில்லை. சிலர் பகலில் உறங்குகின்றனர். "சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்" என ஒரு சித்தர் பாடல் கூறுகிறது. அதாவது வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல், இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும் என்கிறது. "வாழ்ந்தாலும் வடக்கே தலைவைக்காதே, கெட்டாலும், கிழக்கே தலைவைக்காதே", என்றும் "வடக்கே தலைவைத்தால் வாடை காத்து, தெக்கே தலைவைத்தால் தென்றல் காத்து" என்றும் சொல்லும் ஒரு வழக்கம் எம் மூதாதையர்களிடம் உண்டு. நம் உடலில் ஒரு காந்த ஆற்றல் இருப்பதாகவும், நமது தலை பகுதி வடதுருவமாக செயல்படுகிறது என்றும், பூமியின் வடதுருவமும் நம் உடலில் உள்ள வடதுருவமும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பதால், நமக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது என்றும் நம்புகிறார்கள். சமீப கால ஆய்வு படுக்கும் திசை, ஆரோக்கியம், தூக்கத்தின் தரம் இவைகளுக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பதை காட்டுகிறது [a significant correlation between the direction of sleep, health, and the quality of sleep]. மேலும் ஒரு புது ஆய்வு, சில பாலூட்டிகள் மேய்வதும் உறங்குவதும் வடக்கில் அல்லது தெற்கில் [some mammals graze and sleep facing north or south direction and the earth’s magnetic field is causing this.] என கண்டு பிடித்து உள்ளார்கள். இதற்கு காரணம் பூமியின் காந்தப்புலம் என்கின்றனர். அதை தொடர்ந்து இன்னும் ஒரு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கிழக்கு- மேற்கு நிலையில் மனிதன் தூங்கினால், அவன் வடக்கு- தெற்கு நிலையில் தூங்குபவரை விட ஒப்பீட்டு அளவில் குறைந்த குறுகிய விரைவு விழி இயக்க [விரைவான கண் இயக்கங்கள்] தூக்க சுழற்சிக்கு உள்ளாவ தாகவும் கண்டு பிடித்து உள்ளார்கள் [ it was found that the human sleeping in the East-west position has lesser shorter rapid eye movement (REM) sleep cycles when compared to people sleeping in the north-south direction]. நாம் தூங்கும் பொழுது நான்கு நிலைகள் சுழற்சியாக மீண்டும் மீண்டும் வருகின்றன. முதல் மூன்று நிலைகளிலும் நம் விழி அசைவற்ற [Non REM]ஆழ் நிலை தூக்கத்தில் இருக்கும். நான்காவது நிலையை அடையும் பொழுது நம் விழிகளில் அசைவு இருக்கும் [REM]. மொத்த துக்காதில் 25% மேலாக நாம் இந்த ஆர் இ எம் (REM)நிலையில் கழிக்கிறோம். REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும் போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் இன்னும் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும். எனவே எந்த நிலையில் நீங்கள் படுக்கிறோம் என்பதில், சில நன்மைகளை உங்கள் ஆரோக்கியத்தில் பெறக்கூடியதாக இருக்கும். உதாரணமாக, அது விரைவு விழி இயக்கத்தை [REM] கூட்டவும் மற்றும் உங்கள் உடலின் ஆற்றல் ஓட்டத்தை கூட்டவும் துணை புரியும். [The position in which you sleep has some beneficial effect on your health like it increases REM and the energy flow of your body]. இன்னும் இந்த ஆய்வு நடைபெறுகிறது, இது வடக்கு தெற்கு, உறங்குவதற்கு ஒரு சிறந்த நிலையாக காட்டுகிறது. ஆனால் தலை வடக்கா, கிழக்கா என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை. உறங்குவதற்கு தெற்கு திசை மிகச்சிறப்பான திசையாக, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது ஆய்வின் ஒரு பகுதியுடன் ஒத்து போகிறது, ஆனால் மற்றவை முரணாகின்றன, உதாரணமாக, ஆசாரக்கோவை கூறுவது போல, வாஸ்து சாஸ்திரமும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கூறுகிறது. ஒரு மொழியைப் பேசுவோரின் பண்டைய அல்லது பழம் பண் பாடு, வரலாறு, விஞ்ஞான அறிவு போன்றவற்றை அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் நன்றாகப் புலப்படுத்தும். இதன் அடிப்படையில் நாம் நோக்கினால், உதாரணமாக, தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் பழங்காலத்தில் அரணாக இருந்தது. எனவே, ஊடுருவல்கள் எல்லாம் அங்கு வடக்கிலிருந்தே ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் நான்கு திசையில் இருந்தும் வீசும் காற்றுக்கும் தமிழில் வேறு வேறு பெயருண்டு. அவை பொதுவாக காரண பெயர்களாக இருக்கவே வாய்ப்பு உண்டு. வடக்கில் இருந்து வீசும் காற்றை வாடை என்கின்றனர். இது மக்களுக்கும் மற்றும் விலங்கு, பறவைகள் முதலிய வற்றுக்கும் ஒவ்வாத குளிர் காற்று ஆகும். எனவே ஊடுருவல்கள், வாடைக்காற்று இவை இரண்டின் காரணமாகத் தமிழ் மக்கள் வட திசையை வெறுத்து வந்தனர் எனலாம். பழங்காலத்தில் வாழ்ந்த சான்றோர் மேற் கொண்ட ஒரு வழக்கு வடக்கிருத்தல் எனப் படும். வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற் கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் ஆகும். எனவே துக்ககரமான நிகழ்விற்கு, தனக்கு பிடிக்காத வடக்கு திசை நோக்கி இருப்பதை காண்கிறோம். இவை எல்லாம் தமிழர் விரும்பாத திசை வடக்கு என்பதை காட்டுகிறது, இதை உறுதிப் படுத்துவது போல ‘வாழ்ந்தவன் வடக்குப் போகான்...' என்ற பழமொழியையும் காண்கிறோம், இவைகள் அவன் மனதில் பதித்த தாக்கம் 'மதியார் வாசல் மிதியாதே' என்று ஒளவையார் கூட தெளிவாக கூறியது போல, ஒரு வேளை வடக்கில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். அதுவே வடக்கில் தலை வைத்து படுக்காததிற்கும் காரணமாக இருந்திருக்கலாம் என் நம்புகிறேன். ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை தமக்கு விரும்பாத வடக்கு - தெற்கு நோக்கி வைப்பதும், அவர்களின் அந்த வடக்கு திசையின் வெறுப்பே ஆகும் போல் எனக்குப் புரிகிறது. உதாரணமாக, தமிழரின் முன்னைய நாகரிகமான சிந்து வெளி நகரத்தில் அகழாய்வு செய்கையில் அங்கு இடுகாடு [burial site] மூன்று விதமாக உள்ளது கண்டு பிடிக்கப் பட்டது. அதில் முதலாவது வகையில் இறந்தவரின் உடல் மல்லார்ந்த படுக்கை நிலையில், சவக்குழிகள் வடக்கு தெற்காக வெட்டப் பட்டு, தலைகளை வடக்குப் பக்கமாகத் திருப்பி வைத்து, புதைத்துள்ளது தெரிய வந்தது. இது அவர்களின் வெறுப்பு குறைந்தது 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை மேலும் எடுத்துக் காட்டுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 13 தொடரும்
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 25 போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the king of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). "The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries"] . Kotte என்ற சொல்லே தமிழ் சொல் 'கோட்டை' யில் இருந்து பெறப்பட்டதாகும்.[Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.] அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British] உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களை தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை. சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, எனவே சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.] சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்” கண்டி அரச மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4 மணிக்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அட்டவனை 10, அவர்களின் கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின் கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphabets were used] எல்லா இலங்கை காவியமும் [நாளாகமமும் / chronicles], இலங்கையை புத்தர் தன் கொள்கைகளை பரப்ப தயாராக்கினார் என்றும் இலங்கைக்கு மூன்று தரம் அதற்காக வருகை தந்தார் என்றும் இன்று வரை கூறினாலும், புத்தர் இறக்கும் தருவாயில், புத்த மதத்தினர் கட்டாயம் வருகை தந்து வணங்க வேண்டிய நாலு இடங்களாக லும்பினி [புத்தர் பிறந்த இடம்], புத்தகயை அல்லது புத்த கயா [புத்தர் அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம்], சாரநாத் அல்லது இசிபதனம் [இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்], குசிநகர் அல்லது குஷி நகர் [புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம்] [The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara.] என அடையாளம் காட்டி உள்ளார். ஆனால் புத்தர் தான் பிரத்தியேகமாக தேர்ந்து எடுத்து, மூன்று தரம் வந்து, போதனை செய்து, கால் பதித்த இலங்கையை அடையாளப் படுத்தவில்லை ? ஏன் யாருக்காவது புரிகிறதா ?? மேலும் அசோகா காலத்திலும். அசோகன் இன்னும் நான்கு இடங்களை புனித இடங்களாக அடையாளப் படுத்தினான். அவை சவத்தா [சிராவஸ்தி / கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தின் ஜேடவனத்தில் இருபத்து நான்கு முறை சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டார்], சங்கிசா அல்லது சங்காசியா [கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா], ராஜகிரகம் [மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது] மற்றும் வைசாலி [கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில் தான் மேற்கொண்டார்.] [Savatthi, Sankasia, Rajagaha and Vesali.] ஆகும். இங்கும் அசோகன் இலங்கையை புனித புத்த பூமி என்று கருதவில்லை. இதில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது ? புத்தருக்கோ அல்லது அசோகனுக்கோ இலங்கை ஒரு பெரும் பொருட்டாக இருக்கவில்லை அல்லது இலங்கையை பற்றி எந்த அறிவும் இல்லை என்பதே உண்மையாகும்! இது மகாவம்சத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படையாகவே உலகத்திற்கு காட்டுகிறது. இதில் நான் ஒன்றும் சொல்லவில்லை. உண்மை என்றும் வெல்லும்!! ஆகவே அந்த அடிப்படையில் நாம் ஆராயும் பொழுது, புத்தர் இலங்கைத் தீவுக்கு மூன்று முறை வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும் என்பது புலன்படுகிறது. புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் சென்றார் என்பது பாளி நியமன படைப்புகள் [canonical works] ஒன்றிலும் அல்லது வரலாற்று சான்றுகளிலும் காணப் படவில்லை. மற்றது மாயா ஜால வித்தைகள் மூலம் காற்றினூடாக வானத்தில் பயணித்தார் என மகாவம்சம் கூறுவதையும் கட்டாயம் ஏற்க முடியாது, ஏன் என்றால்; புத்தர் மந்திர தந்திர ஜாலங்கள் போன்றவற்றிற்கு எதிரானவரும் ஆவார். மேலும் புத்தர் நிர்வாணம் [enlightenment] அடைந்த நாளில் இருந்து, அவர் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குசிநகரில் [Kusinagar or Kusinara] தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடையும் வரை, புத்தர், வெறும் காலுடன் புத்தகயாவில் [Buddha Gaya] இருந்து குசிநகர் வரை நடந்து சென்றார் என தெரிய வருகிறது. பெலுவ [Beluva] என்ற ஒரு குக்கிராமத்தில், அவர் தனது சீடன் ஆனந்தாவை பார்த்து, "ஆனந்தா நான் இப்ப வயதாகி விட்டேன், உடலும் தளர்ந்து விட்டது, வாழ்க்கை பாதையை கடந்து விட்டேன், நான் வாழ்க்கை காலமான எண்பது வயதைக் கடந்துவிட்டேன் [“Ananda, I am now old, worn out, one who has traversed life’s path, I have reached the term of life which is eighty.”] என்கிறார். எனவே புத்தர் காற்றில் பறந்து வந்தார் என்று மகாவம்சம் கூறுவது ஏற்புடையதாக இல்லை. மற்றும் அது புத்தரின் நம்பிக்கைக்கும் போதனைக்கும் எதிரானதும் ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 26 தொடரும்
-
"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!"
"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!" "கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!- அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" [நற்றிணை 174] ஆண்பறவை ஒன்று தன் பெண் பறவையை கூவி அழைக்கின்றது. அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும் படி முழக்க மிடுகிறது. அப்படியான கோடைக் காற்று வீசுகின்ற கடினமான வீதியால் சென்ற உன் காதலர் மீண்டு வந்து உன்னை கட்டிப் பிடித்து இனிதாக நீங்களிருவரும் ஓரிடத்தே ஒன்றாக பிரிக்க முடியாதவாறு இருந்தீர்கள். ஏன் இப்ப நீ பெரிதும் வருந்துகின்றாய்? என தோழி கேட்டாள். அதற்கு அவள் உண்மையை அறியாதவர்க்கு அத்தன்மை யாகவே தான் காணப்படும்; என் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டை யுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை கொடுத்து விட்டான், இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு, கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? இது காதல் கனிவு இல்லாத புணர்ச்சி அல்லவா? எப்படி அவனை நான் உண்மையாக காதலிக்க முடியும்? நான் மனைவி மட்டுமே .. காதலி அல்ல .. என்கிறாள். அப்படி என்றால், யாரை, எப்படிப் பட்ட வரை, அவள் உண்மையாக காதலிக்க முடியும் என்கிறாள்? அதற்கும் சங்க பாடல், அகநானூறு விடை கூறுகிறது. இப்பாடல்கள் எல்லாம் கி.மு. காலத்துப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது. இனி அகநானூறு 268 பார்ப்போம். "அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய காமம் கலந்த காதல் உண்டுஎனின், நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; " இங்கு தலைவி தோழியை பார்த்து சொல்கிறாள்: "தோழி! நீ அறியாமல் பேசுகிறாய். யானையும் புலியும் சண்டையிட்டுக் கொண்ட களத்தில் ஒடும் இரத்தம் புலால் நாற்றம் ஆடிக்கும். அங்குப் பூக்கும் வேங்கை (Pterocarpus marsupium), குளவி (Patchouli) ஆகிய பூக்கள் அந்தப் புலால் நாற்றத்தைப் போக்கும். அப்படிப் பட்ட மலை நாட்டின் தலைவன் அவன். அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது. அதனை நீ தேடித் தருவ தென்றால் அவனிடம் செல்லும் படிக் கூறு. "வெறும் காமம் என்றால், தயவு செய்து வேண்டாம் என்கிறாள். அதாவது, காதல் மிகுந்த காமக் கூட்டம் ( புணர்ச்சி ) உளதாயின் அது மிக நன்றாகும் என்கிறாள். இன்னும் ஒரு தலைவி, அகநானூறு 332 இல், திருமணத்திற்குப் பின்னர் தோழியிடம் கூறுகிறாள் : "நின் புரை தக்க சாயலன் என, நீ அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் வண்டு இடைப் படாஅ முயக்கமும், தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! " தோழி! “நாடன் [மன்னன், தலைவன்] உன் புரைமைக்குத் [உயர்ச்சி, பெருமை] தக்க சாயலை உடையவன்” என்று நான் அடங்குமாறு நீ அன்போடு கூறிய இன்சொல் உண்மையாகவே வாய்க்கப் பெற்றுள்ளேன். விரும்பியவர்க்கு அமிழ்தம் கிடைத்தது போல, திருமண மாலையுடன் கூடிய மார்பினை வண்டொலியும் இடையில் புகமுடியாத படி அவன் என்னைத் தழுவினான். களவுக் காலத்தில் முதல்நாள் துய்த்த இன்பம் போல இன்றும் சிறந்து நிற்கின்றன." என்கிறாள். மற்றும் ஒரு சங்கத் தலைவி, அகநானூறு 361 இல், "வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும் கவவுப் புலந்து உறையும் கழிபெரும் காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் ...", அதாவது, "நெஞ்சே ! தலைவியின் மார்பில் தோய்ந்து முயங்கும் [தழுவுதல்; புணர்தல்] முயக்கத்தினை ஒரு நூல் இடையே தடுப்பினும் அதனை வெறுத்து உறையும் மிகப் பெரிய காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் [அனுபவம்] காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை என்று அடித்து சொல்கிறாள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காசேதான் கடவுளடா"
"காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 04 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் மரபணு [ஜெனடிகல் / genetical] ரேகைகளை விட்டு விட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இதற்கு மரபணு திட்டம் [ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் / Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனித உடல் மரபணுக்களின் [ஜீன்களின் / Gene] கட்டமைப்பாலானது. மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள், திறவுகோல்கள் மரபணுக்களில் இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்கு நோய் வருதலும் மரபணுக்களை சார்ந்ததே. "நான் ராஜ பரம்பரையிலிருந்து வந்தவன்'', "நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப் பழக்கப்படவர்கள் இல்லை!, அப்படியே இவன் அப்பனை உரிச்சு வச்சிருக்கான்'' இவையெல்லாம் நாடக அரங்கில் அல்லது திரை அரங்கில் பேசுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால் இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. நிறைய நிறைய தொடர்பு உண்டு. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடத்தி வருவது இந்த ஜீன் எனப்படும் மரபணுதான். அதாவது மரபணு என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன. உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (குருதி வகை) இருக்கலாம். ஒருமுறை குலோத்துங்க மன்னனின் குலகுருவான ஒட்டக்கூத்தர், குலோத்துங்க மன்னனுக்கு பாண்டியர் மகளை பெண் கேட்க சென்றார். அதற்கு பாண்டிய மன்னர் மறுப்பு கூற ஒட்டக்கூத்தர் பாண்டியர் சோழரை விட பரம்பரையில் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில் இப்படி பாடினார். "ஆருக்கு வேம்பு நிகராகுமா அம்மானே? ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே? வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே? வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே? ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே? ஒக்குமோ சோனாட்டைப் பாண்டிநாடு அம்மானே?" அதாவது சூர்ய வம்சத்துக்கு சந்திர வம்சம் ஈடாகாது [ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?] என்றும் மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது [வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?] என்றும் கூறியதின் அர்த்தம் இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும். உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்கு சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது தான் இந்த, மரபணு திட்டம் ஆகும். மனிதர்களின் Y - நிறப்புரிகளை [குரோமோசோம் / Chromosome] அடிப்படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம் ஆகும். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியா மற்றும் இலங்கையினை குறுக்காக கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130 ஆகும். இது நடந்தது சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். அதன் பின், 30,000 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலையின் கணவாய்களின் [a narrow-pass between hills] வழியாக வந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும் வழித்தடம் M20 ஆகும் அப்படியே மற்றவையும் ஆகும். நாம் இலங்கையை கருத்தில் எடுத்துக் கொண்டால், பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார். அது மட்டும் அல்ல, இவ்வற்றை மெய்ப்பிப்பது போல, இடைக் கற்காலஞ் சார்ந்த இரு பக்க மக்களும் ஒரேவித ஆயுதங்கள், கருவிகள் பாவித்து உள்ளார்கள் [There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka.] என்றும் கூறுகிறார். மேலும் சில காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த R. L. கிர்க் [R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia] என்பவர் சிங்கள மக்கள் தென் இந்தியாவை சேர்ந்த தமிழ் மற்றும் கேரள மக்களுடனும் மற்றும் உயர் குல வங்கநாட்டவர்களுடனும் [பெங்காலி] நெருக்கமாக உள்ளன என்கிறார். இங்கு கேரள மக்கள் அன்று உண்மையில் சேர நாட்டு தமிழர் என்பது குறிப்பிடத் தக்கது. இதை விக்கிப்பீடியாவில் சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை மேலும் உறுதி படுத்துகிறது [Refer Genetic studies on Sinhalese / Wikipedia] ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப்பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும் இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை கீழே தருகிறேன், இது இலங்கையில் தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்றே வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்துகிறது. மேலும் அப்பொழுது இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சிங்களம் என்றொரு ஒரு மொழி, மலையாளம் மாதிரி இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சிங்கள மொழி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு தான் தோற்றம் பெற்றது. "அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல், பெருந் தோட் குறுமகள் மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் வட புல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி, இவ் உலகத்தானே!" [நற்றிணை 366] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி :05 தொடரும்