Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"ஒருபால் இருபால் அவரவர் முடிவு"
"ஒருபால் இருபால் அவரவர் முடிவு" "பண்டைய நாட்களில் இயற்கையின் அழைப்பில் பலரும் பாராட்டிட திருமணம் அரங்கேறி பருவமடைத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பக்குவமான பிணைப்பு பின்னிப் பிணைந்தது!" "சுமேரிய நாகரிகம் வழியில் சங்கத்தமிழனும் சுத்தமான இயற்கையான அணைப்பில் மூழ்கி சுதந்திர பிணைப்பில் வாழ்வை அமைத்து சுவர் அமைத்தான் குடும்பம் காக்க! " "இன்றைய நவீனம் புதியகுரல்களை உள்வாங்கி இணக்கம் கொண்ட ஒருபாலாரையும் இணைத்து இதயங்கள் ஒன்றுசேர சமஉரிமை தந்து நவீனஃபிளாஷ் [modern flash] பழைய மதிப்புகளை சந்தித்தன!" "கடந்தகால மரபும் தொடர்ந்து வாழ கள்ளமில்லா ஒருபால் அன்பும் இணைந்துவாழ களங்கமில்லா மரபுகளின் உட்கருத்தை விளக்க இருவேறு சொல்லில் வரையறுத்தால் என்ன ?" "வார்த்தைக்கு ஆழமான அகலமான சக்தியுண்டு வாழ்வின்பொருள் அறிந்து உணர்ந்து இணைந்தால் வாட்டமில்லா மோதலில்லா சமூகம் தோன்றி வாயார வாழ்த்துமே வரம்புகளை அறிவதாலே!" "திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றாகட்டும் இருமனம் சேரும் ஒருபாலார் சிவில் யூனியனாகட்டும் இரண்டுக்குமே ஒரே சட்டம் பார்வையாகட்டும் இல்லறமென்பது யாதென மனிதன் அறியட்டும் !" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
"ஒருபால் இருபால் அவரவர் முடிவு" "பண்டைய நாட்களில் இயற்கையின் அழைப்பில் பலரும் பாராட்டிட திருமணம் அரங்கேறி பருவமடைத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பக்குவமான பிணைப்பு பின்னிப் பிணைந்தது!" "சுமேரிய நாகரிகம் வழியில் சங்கத்தமிழனும் சுத்தமான இயற்கையான அணைப்பில் மூழ்கி சுதந்திர பிணைப்பில் வாழ்வை அமைத்து சுவர் அமைத்தான் குடும்பம் காக்க!" "இன்றைய நவீனம் புதியகுரல்களை உள்வாங்கி இணக்கம் கொண்ட ஒருபாலாரையும் இணைத்து இதயங்கள் ஒன்றுசேர சமஉரிமை தந்து நவீனஃபிளாஷ் [modern flash] பழைய மதிப்புகளை சந்தித்தன!" "கடந்தகால மரபும் தொடர்ந்து வாழ கள்ளமில்லா ஒருபால் அன்பும் இணைந்துவாழ களங்கமில்லா மரபுகளின் உட்கருத்தை விளக்க இருவேறு சொல்லில் வரையறுத்தால் என்ன ?" "வார்த்தைக்கு ஆழமான அகலமான சக்தியுண்டு வாழ்வின்பொருள் அறிந்து உணர்ந்து இணைந்தால் வாட்டமில்லா மோதலில்லா சமூகம் தோன்றி வாயார வாழ்த்துமே வரம்புகளை அறிவதாலே!" "திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றாகட்டும் இருமனம் சேரும் ஒருபாலார் சிவில் யூனியனாகட்டும் இரண்டுக்குமே ஒரே சட்டம் பார்வையாகட்டும் இல்லறமென்பது யாதென மனிதன் அறியட்டும் !" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாண ம்]
-
"என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000]
"என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000] "பாராட்டுகள் எதிர்பாராத, பெருமை பேசாத பாசாங்கு செய்யாத, அமைதியான அண்ணல் ! பாசம் கொண்டு, எம்மை உயிராய்நேசித்து பார்த்து வளர்த்த, பெருந்தகை இவன் !" "அன்னாரின் கனவுகளை, இன்று நிறைவேற்ற அன்னாரின் விருப்பங்களை, இன்று முழுமையாக்க அன்னாரின் கவலைகளை, இன்று நீக்கிட அயராது நாம்என்றும், உறுதியாக இருக்கிறோம் !" "எம் வாழ்வின், அனைத்து புயல்களிலும் எம்மை கைபிடித்த, துணிவுமிக்க வீரன் ! எம் மனஅழுத்தம், சச்சரவு காலங்களில் எம்மை வழிநடத்தும், உண்மையான நண்பர் !" "நல்ல கெட்ட நேரங்கள் எல்லாம் நட்புடன் ஆசீர்வதித்து தேற்றிய ஆசான் ! நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி நறும்புகை ஏற்றி வழிபடும் தெய்வம் !" "உலகம் அறியும் நாயகன் இவனல்ல உண்மை பேசும் உத்தமன் இவன் ! உதாரணம் காட்டி தவறுகள் திருத்தி உரிமையுடன் அதட்டி மனிதனாக்கிய தலைவன் !" "நடந்தது நடந்ததே என்று கூறி நடப்பதை எதிர்கொள்ள பலம் தந்து நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்று நயமாக இயம்பிய தந்தை இவன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 38 உண்மையில் உயரிய வரலாற்றுக் குறிப்பான மகாவம்சம் இலங்கையினதோ அல்லது சிங்களவர்களினதோ வரலாறாக எழுதியது என்பதை விட, அது மகாவிகாரையின் அல்லது தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்று கூறுவதே பொருத்தம் என்று எண்ணுகிறேன் [The Mahavamsa (Great Chronicle of historical poem) was written not as a history of Sri Lanka (or Sinhalese) but as a history of the Mahavihara (Theravada Buddhists)]. உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை மட்டுமே சொல்லுகிறது, அப்பொழுது சிங்கள இனம் என்று ஒன்றும் இல்லை, எனவே சிங்கள பௌத்தம் [Sinhala Buddhists] என்ற சொல்லுக்கே இடமில்லை. எனவே உண்மையில் இலங்கையின் சரியான வரலாற்றையும், அதன் மக்களையும் [சிங்களவர், தமிழர்], அதன் பண்டைய மதங்கள் [இந்து [சைவம்], புத்த], அதன் பண்டைய மொழிகள் அல்லது எழுத்து வடிவங்கள் மற்றும் அதன் பண்பாடுகளையும் அறிய வேண்டுமாயின், [To study the history of Sri Lanka and its people (Sinhalese/Tamils), its ancient religions (Buddhism / Hinduism), its languages/scripts and its culture], நாம் வடக்கு தெற்கு இந்தியாவின் வரலாற்றையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இலங்கையின் வரலாற்றின் மூலம் (origin / roots) அங்குதான் ஆரம்பிக்கிறது. அதுமட்டும் அல்ல அந்நியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெரும் மட்டும் இவை இரண்டின் வரலாறும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொப்புள் கொடி உறவாகவே இருந்தன எனலாம் [interconnected / umbilical cord]. நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது, இந்த பாளி நூல்கள், இலங்கையின் புத்த அரசர்களின் இனப் பின்னணி [ethnic background] பற்றி குறிப்பிடவில்லை. எனவே அவர்களின் பெயர்களிலும் அதன் கருத்து அல்லது அதன் பின்னணியிலுமே நாம் அதைத் தேட வேண்டி உள்ளது. மேலும் வரலாற்று அறிஞர்களின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் தான் நாகர் என்ற பதம் அல்லது பெயர், இலங்கை வரலாற்றில் இருந்து, அதாவது கல்வெட்டுகளில் [stone inscriptions] இருந்து வழக்கொழிந்து போயின என்கின்றனர். அதன் பின் தான் மிகவும் தெளிவாக இரண்டு முதன்மை இனக்குழுக்களாக [ethnic groups], அதாவது, ஹெல / சிகல மற்றும் தமிழர் [Hela / Sihala and Demela] என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது எனலாம். ஆகவே வரலாற்று ஆசிரியர்கள், நாகர்கள் இந்த இரண்டு முதன்மை இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று நம்புகிறார்கள். பேராசிரியர் க இந்திரபாலாவின் [Prof. K. Indrapala] கூற்றின்படி, வரலாற்றுக்கு முந்தைய காலம் [prehistoric times] மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ [மூல அல்லது முதனிலை] வரலாற்று காலத்திலும் [proto-historic times], வாழ்ந்த பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் [As per Prof. K. Indrapala, ‘The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the common ancestors who lived in the country in prehistoric and proto-historic times] இவர்கள் இருவரும் என்றும் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக வரலாற்றை இலங்கையில் பகிர்ந்துள்ளார்கள் என்றும் கூறுகிறார். இதை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், இன்று நாம் சிங்களவர், நாம் தமிழர் என இலங்கையில் கூறுபவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே ஆவார்கள் என்பது கண்கூடு. நாம் மகாவம்சத்தில் விஜயனின் வருகையை பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம். உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது. கி மு 205 க்கும் கி மு 161 க்கும் இடைப்பட்ட துட்ட காமினி, எல்லாளன் [Dutugemunu and Ellalan] பெரும் போரைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. துட்ட காமினியின் பத்து மாபெரும் வீரர்கள் என வர்ணிக்கப்படுபவர்களில், நந்திமித்ரா [Nandhimitta], வேலுசுமணா என்ற இருவர் தமிழர் ஆகும். உதாரணமாக நந்திமித்ரா, எல்லாளனின் தமிழ் சேனாதிபதியான மித்ராவின் [Mitta] சகோதரி மகனாகும் [nephew]. அதே போன்று, எல்லாளனின் படையில் பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்த்தவர்களின் மூதாதைய வீரர்கள் மட்டுமல்ல, சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். உதாரணமாக தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. ஆவார்கள். இந்த சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அந்த கால பகுதியில் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை, ஆனால் இவர்களின் பவுத்த பரம்பரை பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்தார்கள் என்பது தான் உண்மை. இது இந்த பெரும் யுத்தம், மொழி, இனம் அடிப்படையில் அல்ல, மத அடிப்படை மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது. எனவே, எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் சைவ மதத்தினருக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர் என்பதே உண்மையாகும். துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன் [Kavantissa]. காகவண்ண தீசனின் பூட்டன் பெயர் மகாநாகன் ஆகும் [Kavantissa - a great-grandson of King Devanampiyatissa's youngest brother Mahanaga]. மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் [Mutasiva / மூத்தசிவா]! இது ஒன்றே துட்ட கைமுனு யார் என்று எடுத்து காட்டுகிறது. அது மட்டும் அல்ல, துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள் [Dutugemunu's mother was Viharamahadevi, daughter of Tissa, king of Kalyani.]. எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்து விட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ [Chapter XXV of Mahāvaṃsa depicts the story of the “The Victory of Duṭṭhagāmaṇi.” After having a relic placed on his spear, Duṭṭhagāmaṇi takes five hundred bhikkhus with his army to march in conquest across the Tamil occupied territories. He victoriously conquers many kings, but states, “Not for the joy of sovereignty is this toil of mine, my striving (has been) ever to establish the doctrine of the Saṃbuddha. And even as this is truth may the armour on the body of my soldiers take the colour of fire.”] என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது. “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள பவுத்த மன்னன், எல்லாளன் என்ற தமிழ் சைவ மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது என்பது வெள்ளிடை மலையாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 39 தொடரும்
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 37 மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவர்களையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழர்களினதும் இலங்கை வருகை நாளை செயற்கையாக, புத்தரின் மரண நாளுடன் ஒத்து போக செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் கட்டாயம் தெரியும் [The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. உதாரணமாக, இந்த தந்திரத்தால், விஜயனிற்கு பிறகு ஆட்சி அமைத்த சில அரசர்களின் ஆட்சி காலத்தை நீடித்தது தெரிய வருகிறது, குறிப்பாக தந்தையும் மகனுமாக '130' ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என குறிப்பிடுகிறார் ?. மன்னன் பண்டு அபயன் 70 ஆண்டுகளும் அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் மூத்த சிவன் என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்கிறது. [King Pandukhabaya, nephew of Abhayan was supposed to have ruled from 377 BC – 307 BC that is 70 years. Muttasivan, son of Pandukhabaya ruled for 60 years from BC 307 to BC 247], இதில் இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால், அறிவிற் சிறந்த அரசன் பாண்டுஅபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் என்றும் அதன் பின்பு தான் எழுபது வருடகாலம் சீரும், செல்வமும் மிக்க அனுராதபுரத்திலிருந்து அவனுடைய அரசாட்சியை ஆண்டு வந்தான் என்கிறது மகாவம்சம். அதாவது அவன் 107 ஆண்டுகள் வாழ்ந்துள்ளான். அதேவேளை, முத்தசிவனின் [மூத்தசிவனின்] பிறப்பு பற்றி எந்த செய்தியும் அங்கு இல்லை. ஆனால், பாண்டுஅபயன் தனது மனைவி, சுவன்னபலியை [Suvannapali] பதினாருக்கும் பதினெட்டு வயதுக்கும் இடையில் சந்தித்து உள்ளான். ஆகவே மூத்த மகன் அதிகமாக இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருக்கலாம் என்று நாம் ஊகித்தால், முத்த சிவன் குறைந்தது அகவை 137 க்கும் 147 க்கும் இடையில் [between 107 - 30 + 60 & 107 - 20 + 60] வாழ்ந்திருப்பான். அதேபோல முத்தசிவவின் மகன் திஸ்ஸ முத்தசிவவின் அகவை இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருந்தால், திஸ்ஸ [தேவநம்பிய திசா] குறைந்தது அகவை 147 க்கும் 157 க்கும் இடையில் [between 137 - 30 + 40 & 137 - 20 + 40] வாழ்ந்திருப்பான். இவனுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதை தொடர்ந்து சேனனும் குத்திகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் என்று ஊகம் செய்தால், குறைந்தது 179 அகவையில் [147 - 20 + 10 + 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். கௌதம புத்தரே தனது எண்பதாவது அகவையில் இறந்தது குறிப்பிடத் தக்கது. இவை தான் நம்ப முடியாத செய்திகள் ஆகும். மேலும் மகாவம்சம் 1000 ஆண்டுகளிற்கு பின் எழுத பட்ட கதை ஆகும். இதுவும் நம்ப முடியாத செய்திகளுக்கு ஒரு காரணமாகும். யார் வரலாற்றை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் நாட்டை வைத்துள்ளார்கள், ஆட்சி செய்வதற்கான உரிமையை வைத்துள்ளார்கள், மற்றும் இருப்பதற்கான உரிமையையும் வைத்துள்ளார்கள் என்கிறார் ஹெல்மண் -ராஜநாயகம் [“Whoever possesses the history possesses the country, possesses the right to rule, the right to exist” - Hellmann-Rajanayagam]. அதனாலேயே மகாநாம தேரர் இவ்வாறு குழப்பி உள்ளார் என்று எண்ணுகிறேன். இதை இன்றும் இலங்கைவாழ் பல புத்த தேரர்களிடமும், இலங்கை பெரும்பான்மை அரசியல் வாதிகளிடமும், தொல்பொருள் திணைக்களத்திடமும் இன்னும் காணலாம்? அரசபடைகளின் உதவியுடன் நடக்கும் தில்லுமுல்லுகள் இதற்கு சான்று பகிர்கின்றன, உதாரணமாக, அண்மையில் மார்ச் 2023 இல் பறிபோன நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை , யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்த ஆதிசிவன் ஆலயம், பழமைமிகு கிருஸ்ணன் கோயில், சடையம்மா மடம், கதிர்காமத்துக்கு யாத்திரை ஆரம்பிக்கும் முருகன் கோயில் என்பன இடித்தழிக்கப்பட்டு, அங்கு மாளிகை கட்டப்பட்டது, முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம், அச்சுவேலியில் முளைத்த அதிசய புத்தர், ஊர் மக்களின் எதிர்ப்பால் 'இராணுவத்தினரால்' அகற்றப்பட்டது மற்றும் இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக போற்றப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிகள் தற்பொழுது பௌத்த மயமாக்கல் பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது எல்லாம் மகாநாம தேரரின் திட்டம் இன்னும் இன்றுவரை தொடர்வதை எடுத்து காட்டுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையில், ஏழு அரசர்கள் 107 க்கும் குறைந்தது 189 க்கும் இடையில் நீண்ட வாழ்வு வாழ்ந்து உள்ளார்கள் ? இது ஒன்றே மகாவம்சத்தை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதற்கு ஒரு உதாரணம் ஆகும். அது மட்டும் அல்ல, பண்டுவாசுதேவனில் இருந்து துட்டகாமினி வரை, அவர்கள் ஆண்ட காலங்கள் 30, 20, 70, 60, 40, 10, 10, 10, 10 என நேர்த்தியான பத்தின் பெருக்குங்கள் ஆகும், இந்த பரம்பரையில் வராத சேனன் குத்திகன் தவிர. [இவர்கள் 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.] இந்த உண்மையின் அடிப்படையில் நோக்கும் பொழுது, இந்த பரம்பரை முழுவதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது? அது மட்டும் அல்ல, எல்லாளன் கூட, மனுநீதி சோழன் மற்றும் சிபி சக்ரவர்த்தி போன்றோர்களின் கதையின் தழுவல் போலவே தெரிகிறது. துட்டகாமினி கூட, இறந்து கொண்டு இருந்த ஒரு புத்த பிக்குவின் அவதாரம் என்கிறது [Dutthagamani who killed Elara must also be an invented person. He is the re-incaranation of a dying monk as per the Mahavamsa,] அதாவது விஹார மகாதேவியின் வயிறில் நேரடியாக அந்த பிக்கு கருவாக அவதரித்தார் என்கிறது. எனவே உயிரியல் தொடர்பு துட்டகாமினிக்கு, தந்தை காவந்தீசனிடம் இல்லை என்றாகிறது. இது கர்ணன் குந்திதேவிக்கு பிறந்ததை நினைவூட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் நான் அவரை இனவெறியாளர் என்றோ அல்லது அவர் தனது கவிதை இலக்கியமான மகாவம்சத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இது [புத்த சமய] தெய்வ பக்தர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளுக்காக தொகுக்கப்பட்டது [‘serene joy and emotion of the pious’] என்று வெளிப்படையாக எழுதி இனவெறி கோட்பாட்டை விதைத்தார் என்றோ நான் குற்றம் சாட்ட வில்லை. ஏன் என்றால், அந்த காலப்பகுதியில் புத்த சமயத்திற்கு இந்து, [சைவ] மதத்தில் இருந்து அச்சுறுத்தல்கள் கூடி, புத்த மதத்தின் செல்வாக்கு தென் இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும் சரிந்து போய்க்கொண்டு இருந்ததுடன், அதன் தாக்கம் இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியிலும் தலை தூக்கி இருந்தது. எனவே மகாநாம தேரருக்கு ஒரு தேவை இருந்தது, எப்படியும் இந்தியாவில் அழிந்து கொண்டு இருக்கும் புத்த மதத்தை இலங்கையிலாவது நிலைநாட்ட வேண்டும் என்று. அதைத்தான் அவர் செய்தார் என்று நம்புகிறேன். மற்றது எனது இந்த தொடர் கட்டுரை இலங்கை வரலாற்றின் ஆழமான பகுப்பாய்வு அல்ல. அதை கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். எனவே கட்டுக்கதைகள் மற்றும் தவறுகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கண்ணோட்டம் மட்டுமே என் கட்டுரையாகும். மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் [Dhammapada] என்ற நூலில், உண்மையை உண்மை என்று அறிபவரும், அதேபோல பொய்யை பொய் என்று அறிபவரும் உண்மையை உணர்கிறார் [they who know truth as truth and untruth as untruth arrive at truth] என்ற அவரின் கூற்றை காண்கிறோம். அதைத்தான் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 38 தொடரும்
-
"தொட்டால் கொரோனா மலரும்"
நன்றிகள்
-
"தொட்டால் கொரோனா மலரும்"
"தொட்டால் கொரோனா மலரும்" "தொட்டால் கொரோனா மலரும் தொடாமலும் அது பரவும் பட்டால் முகம் சிவக்கும் படாமலும் நீ சிவப்பாய் !" "கண்கள் படாமல், கைகள் தொடாமல் காச்சல் வருவதில்லை இருமல் வாட்டுவதில்லை !" "நேரில் வராமல் சந்திப்பு செய்யாமல் வேலை கெடுவதில்லை காதல் தொலைவதில்லை !" "தும்மல் வந்ததாலும் இருமல் வந்ததாலும் முகத்தை மூடிவிடு திசுவால் தொடைத்துவிடு !" "வெளியெ சென்றாலும் உள்ளே இருந்தாலும் கையை கழுவிவிடு சானிடைசர் தடவிவிடு !" "மரபணு பிறழ்வடையும் புதிதாய் திரிபடையும் மரணம் அதிகரிக்கும் வாழ்வை முடக்கிடும் !" "வீட்டில் இருந்தாலும் துப்பரவாய் இருந்தாலும் பாதுகாப்பாய் இரு இடைவெளி விட்டுஇரு !" "ஆரோக்கியமாக இருந்தாலும் இளமையாக இருந்தாலும் தடுப்பூசி ஏற்றிவிட்டு கூட்டத்தை தவிர்த்துவிடு !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நான் தனிப்பட்ட முறையில் கீழே உள்ள முடிவுக்கு வருகிறேன். ஆனால் 'திருமணம்' என்ற வார்த்தையை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் உணர்கிறேன், இல்லையெனில் மனித சமூகத்தின் சமூக அமைப்பும் அதன் அற்புதமான கலாச்சாரமும் எதிர்காலத்தில் வெடிக்கலாம் ?? குறிப்பாக சமூக கட்டமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் என்று எண்ணுகிறேன் எனினும் சமூகங்கள் வரலாற்று ரீதியாக சமூக விதிமுறைகள் மற்றும் வரையறைகளில் மாற்றங்களுக்கு ஏற்றதாக காலப்போக்கில், தன்னை சரிப்படுத்தி, ஆரம்பத்தில் சீர்குலைப்பதாகத் தோன்றுவது சாதாரணமாகி ஏற்றுக்கொள்ளப்படுவதும் உண்டு என்பதையும் நம்புகிறேன் ஒரே பாலின இணைப்பு அதிகாரப்பூர்வமாக "திருமணம்" என்று அழைக்கப்பட வேண்டுமா என்பது வரலாற்று, சமூக, மொழியியல் மற்றும் நெறிமுறை பரிமாணங்களை [historical, social, linguistic, and ethical dimensions] உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது. இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் சில மதிப்புமிக்க காரணங்கள் என் மனதில் தோன்றின. அவை சரியா பிழையா என்பதை நீங்கள் எடுத்துக் கூறலாம் ஒரே பாலின சங்கங்களை "திருமணம்" என்று அழைப்பதை ஏற்றுக் கொள்வதற்கான சில காரணங்களை கீழே தருகிறேன் சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாதது / Equality and Non-Discrimination: சட்ட அங்கீகாரம் / Legal Recognition : ஒரே பாலினத் சங்கங்களை அல்லது இணைந்து வாழ்வதை "திருமணம்" என்று அழைப்பது, இந்த ஜோடிகளுக்கு பரம்பரை, வரிவிதிப்பு மற்றும் உடல்நலப் பாதுகாப்பு நலன்கள் [inheritance, taxation, and healthcare benefits] உட்பட, பாலினத் தம்பதிகளைப் போலவே சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் உரிமைகளை வழங்குகிறது இன்றைய நடை முறையில் [என்றாலும் சட்டங்களை அதற்குத் தக்கதாக, ஒரு பாலின கூட்டுக்கும் அவை செல்லுபடியாகும் என்று இலகுவாக மாற்றலாம்?? என்பதும் கவனிக்கத் தக்கது!!] சமூக ஏற்றுக்கொள்ளல் / Social Acceptance: இது, மேலே கூறியவை, சமூக ஏற்றுக்கொள்ளலை ஊக்குவிக்கிறது மற்றும் ஒரே பாலின உறவுகளின் செல்லுபடியாகும் தன்மையை பாலின உறவுகளுடன் சமமான நிலையில் அங்கீகரிப்பதன் மூலம் களங்கத்தை குறைக்கிறது. மொழியின் பரிணாமம்: மாறும் இயல்பு: சமூக மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மொழி காலப்போக்கில் உருவாகிறது. "திருமணம்" போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தற்கால புரிதல்கள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற கருதுகோள் முன்னோடிகள்: திருமணத்தின் வரையறை காலப்போக்கில் பல்வேறு வடிவங்கள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கியதாக மாறி உள்ளது உதாரணமாக, பலதார மணம் என்பது பல கலாச்சாரங்களில் பொதுவானதாக இருந்தது, ஆனால் இப்போது குறைவாகவே உள்ளது. வரலாற்று சூழல்: பல்வேறு நடைமுறைகள்: வரலாறு முழுவதும், பல்வேறு வகையான இணைவுகள் மற்றும் இருவர் ஒன்றாக வாழ்தல் உள்ளன. உதாரணமாக, சில பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்கள் ஒரே பாலின இணைவை அங்கீகரித்தன, இருப்பினும் அவர்கள் "திருமணம்" என்று என்றும் அழைக்கவில்லை. விரிவுபடுத்தும் வரையறைகள்: பல பாலினச் சூழல்களுக்குள்ளும் கூட, திருமணத்தின் கருத்து காலகட்டங்களில் கணிசமாக வேறுபட்டுள்ளது ஒரே பாலின சங்கங்களை "திருமணம்" என்று அழைப்பதை நிராகரிப்பதற்கான காரணங்கள் கீழே தருகிறேன் பாரம்பரிய வரையறைகள்: வரலாற்று நிலைத்தன்மை / Historical Consistency: "திருமணம்" என்ற சொல் வரலாற்று ரீதியாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சங்கத்தை குறிக்கிறது, சுமேரிய நாகரிகத்திலிருந்து தமிழ் சங்க காலம் மற்றும் பல கலாச்சாரங்கள் வரை அப்படியே பார்க்கப்படுகிறது. கலாச்சார முக்கியத்துவம்: பல கலாச்சாரங்களில், திருமணம் என்பது மரபுகள் மற்றும் மத நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது, இது இரு பாலின சேர்க்கை, அதாவது ஆண் & பெண் என்று கண்டிப்பாக வரையறுக்கிறது. மாற்று சொற்கள் / Alternative Terminology: சிவில் யூனியன்கள் / Civil Unions: ஒரே பாலின தம்பதிகள் தங்கள் கூட்டு வாழ்வை "சிவில் யூனியன்கள்" அல்லது "வீட்டு கூட்டு வாழ்வு / "domestic partnerships," போன்ற வேறுபட்ட வரையறைவுகளின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர், இதனால் திருமணத்தின் பாரம்பரிய கருத்தை மாற்றாமல் ஆனால், ஒரே மாதிரியான சட்ட உரிமைகளை வழங்க முடியும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் / Respecting Diversity: வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துவது உறவுகளின் பன்முகத்தன்மையை மதிப்பதுடன் அதன் இயல்பையும் தானாகவே வரையறுத்து, விளக்கமான கருத்தை துல்லியமாக கொடுக்கிறது. சமூக பதற்றத்திற்கான சாத்தியம்: திருமணத்தின் வரையறையை மாற்றுவது சமூக மற்றும் பாரம்பரிய கருத்துக்களை இலகுவாக சிதைத்து, வருங்கால சந்ததிக்கு எப்படியும் வாழலாம் என்ற ஒரு கட்டுப்பாடற்ற நிலையை அல்லது இதை புது நடப்பாக , ஃபேஷன்னாக ஊக்கிவிக்கலாம் ?? சமரச தீர்வுகள்: எனவே "சிவில் யூனியன்" போன்ற சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம், இது, இந்த கூட்டு என்ன என்பதையும், அதன் தாற்பரியங்களையும் இலகுவாக எடுத்துரைக்க முடியும் இறுதியாக, உங்கள் முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் . அது உங்களைப் பொறுத்தது நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"புத்தாண்டுப் பரிசு"
அன்பு ஏராளன் னுக்கு இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை / நிகழ்வுகளை ஒட்டி, அந்த சூழலில், ஆனால் கற்பனை கதை எழுதுவதே வழமை. அப்படியான ஒன்றே இது . என்றாலும் உண்மை கதைகளும் சில எழுதி உள்ளேன் நன்றி
-
"புத்தாண்டுப் பரிசு"
"புத்தாண்டுப் பரிசு" ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே [சிங்களத்தில் ஏன் எழுதப்படவில்லை என்பது ஆய்வுக்குரிய ஒரு விடயம்?] எழுதப்பட்ட கற்றூண் [stone pillar] அல்லது கற்பலகை [Rosetta Stone] ஒன்று எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் காலியில் கண்டெடுத்தார் என்பதும், அதைத்தொடர்ந்து 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் தமிழ் எழுத்துக்களால் பதியப் பட்ட, கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசக கல் ஒன்றும் கண்டு எடுக்கப் பட்டது, அன்று காலியில் குறிப்பிட்ட அளவு தமிழர் அல்லது தமிழ் மொழி வாழ்ந்ததை உறுதிப் படுத்துகிறது. 9:30 மணி அளவில், ஹிக்கடுவை பெரலிய என்ற இடத்தில் ஆழிப்பேரலை [சுனாமி] மாத்தறை கடுகதி புகையிரத்தை தாக்கி, அந்த கிராம மக்களையும் சேர்த்து 1700 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்டது. நான் என் பெற்றோர், சகோதரங்கள் மற்றும் புத்தாண்டுப் பரிசு அத்தனையையும் அதில் இழந்தேன். அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 திகதி காலை நான் என் பெற்றோர்களின், சகோதரர்களின் நினைவாக மாத்தறை புகையிரத வண்டியில் புத்தாண்டுப் பரிசுகளுடன், ஹிக்கடுவை பெரலியவில் அஞ்சலி செலுத்தி, மாமா விடு போகத் தொடங்கினேன். தொடக்கத்தில் நான் சின்ன பிள்ளை என்பதால், அம்மம்மாவுடன் சென்றாலும், உயர் வகுப்புக்கு பின் நான் தனியாகவே போவது வழமையானது. இன்று டிசம்பர் 26, 2023, காலை நாலு மணிக்கே எழும்பிவிட்டேன். நான் கொட்டாஞ்சேனை, புதுச் செட்டி வீதியில் வாடகைக்கு இருந்து கொண்டு என் முதலாவது உத்தியோகமாக இலங்கை கடற்தொழில் அமைச்சு, காக்கை தீவு, கொழும்பு 15 இல் இந்த ஆண்டுதான், பொறியியல் பட்டம் பெற்று வேலைக்கு சேர்ந்தேன். ஆகவே தான் வரும் புத்தாண்டு ஒரு விசேட நாளாக எனக்கு பலவழிகளில் இருக்கிறது. நான் என் பணத்தில் மாமா வீட்டிற்கு புத்தாண்டு பரிசு வாங்கிக் கொண்டும் மற்றும் மாத்தறை வண்டியில் நினைவு தின அஞ்சலிக்கும் போகிறேன். மாமாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள், அதில் மூத்தவள் இப்ப முதலாம் ஆண்டு விஞ்ஞான பீட மாணவி. அவளைத்தான் நான் இன்னும் சில ஆண்டுகளில் கல்யாணம் கட்டப் போகிறேன். அவளின் பெயர் ஜெயக்குமாரி. இது சின்ன வயதிலேயே அம்மம்மாவால் முன்மொழியப் பட்டாலும், உண்மையில் நாம் இருவரும் ஒரு வயதின் பின் விரும்பிய ஒன்றே! மற்றவர்கள் இன்னும் மேல் நிலைப் பள்ளி மாணவிகள். நான் முதல் நாளே மாமா மாமியுடன் கதைத்து, ஜெயக்குமாரியையும் ஹிக்கடுவை பெரலிய கிராமத்துக்கு அஞ்சலிக்கு வரும் படி கூறி இருந்தேன். என் பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும், சுனாமி வந்த அந்த குறிப்பிட்ட நேரத்தில், அங்கே அவர்களின் படத்துக்கு, மற்றவர்கள் எல்லோருடனும் மலர்வளையம் சாத்தி மௌன அஞ்சலி செலுத்துவது வழமை. ஆனால் இம்முறை முதல் முதல் ஜெயக்குமாரியுடன் சேர்ந்து அந்த அஞ்சலி செலுத்தப் போகிறேன். அது மட்டும் அல்ல புத்தாண்டு பரிசாக அவளுக்கு மோதிரமும், சங்கிலியும், அங்கே அவர்களின் படத்துக்கு முன் போடப்போகிறேன். ஆனால் அதை நான் எவருக்கும் சொல்லவில்லை. அது ஆச்சரியமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். என்றாலும் அம்மம்மாவுக்கு நான் ஒன்றும் மறைப்பது இல்லை. அவரின் ஆசியுடன் தான் இதை யோசித்தேன்! ஐந்து மணி அளவில் நான் குளித்து வெளிக்கிட்டு விட்டேன். அஞ்சலி செலுத்தும் வரை நான் எதுவுமே சாப்பிடுவதில்லை. தண்ணி உட்பட. ஆகவே எதோ என் மனதில் பட்டவையை ஒரு அஞ்சல் கவிதையாக எழுதி, அவளின் பெயரையும் சேர்த்து பதிவு செய்துவிட்டு, புத்தாண்டு பரிசாக அவளுக்கும், மற்றவர்களுக்கும் வாங்கியதை ஒழுங்காக அடுக்கி, என் பெட்டியை எடுத்துக்கொண்டு கோட்டை புகையிரத நிலையத்துக்கு போனேன். ஆனால் இம்முறை உண்மையான புத்தாண்டு பரிசு இந்த பொருட்கள் அல்ல, என் பெற்றோருக்கு நான் கொடுக்கப் போகும் மருமகள் தான் என என் மனது சொல்லிக்கொண்டு இருந்தது. ஹிக்கடுவை பெரலிய சுனாமி நினைவு மண்டபத்துக்கு நான் நேரத்துடன் போய்விட்டேன். அங்கு பெரும் திரளான மூவின மக்களும் வந்திருந்தனர். ஒவ்வொருவரின் கதைகளும் ஒவ்வொரு கதை சொல்லிக்கொண்டு இருந்தன. நான் என் பெற்றோர்கள், சகோதரங்கள் படத்தை ஒரு ஒதுக்குப் புறமாக வைத்து, ஜெயக்குமாரி வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன். நேரம் மெல்ல மெல்ல ஒன்பது முப்பதை அண்மித்துக்கொண்டு இருந்தது, ஆனால் அவள் வரவில்லை. என்ன நடந்தது எனக்குப் புரியவில்லை. மாமாவுக்கும் ஜெயக்குமாரிக்கும் மூன்று நான்கு தடவை அழைப்பு எடுத்து பார்த்துவிட்டேன். ஒரு பதிலும் இல்லை. என் அம்மா, அப்பாவின் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன். நான் ஆச்சரியப் படுத்த நினைத்தது ஒன்று, இப்ப என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவது வேறு ஒன்று! நேரம் நெருங்கிவிட்டது, நான் பெற்றோருக்கான கடமையை முதல் செய்யவேண்டும். எனவே எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து மலர் சாத்தி மௌன அஞ்சலி செய்தேன். முப்பது மீட்டர் உயரம் கொண்ட ஞாபகார்த்த புத்தர் சிலை ஆழ்கடலை பார்த்துக்கொண்டு நின்றது. நான் புறம்பாக பத்திரமாக கொண்டு வந்த மோதிரம், சங்கிலி இரண்டையும் எடுத்து பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஆச்சரியமாக அவ்வற்றை அவளுக்கு போட்டு, என் பெற்றோரின், சகோதரர்களின் அஞ்சலியில் என்னுடன் ஒன்றாக முதல் முதல் ஈடுபடுத்த வேண்டும் என்ற என் கனா சுக்கு நூறாக உடைவது போல் இருந்தது. நான் மீண்டும் புத்தரின் கருணைக் கண்ணை உற்றுப் பார்த்தேன். அதில் ஒரு மாற்றமும் இல்லை! நான் மீண்டும் இம்முறை மாமிக்கும் சேர்த்து அழைப்பு எடுத்தேன். அதே நிலை தான். ஒரு பதிலும் இல்லை. அப்படி என்றால் அங்கு போய்த்தான் என்ன பிரயோசனம் ? எனோ எனக்கு கொஞ்சம் கோபமாகவும் இருந்தது, அதே நேரம் எதாவது நினைக்க முடியாதது நடந்து விட்டதா என்ற குழப்பமும் இருந்தது. எதுவாகினும் போய்த்தான் என்ன என்று பார்ப்பமே என தீர்மானித்து, அருகில் இருந்த புகையிரத நிலையம் போனேன். அங்கே நான் சீட்டுப் பெறுமிடத்திற்கு அருகில் செல்லும் பொழுது, யாரோ என் தோளில் கை போடுவதை உணர்ந்தேன். திரும்பி பார்த்தேன். அது வேறு யாரும் இல்லை. அவளின் மூத்த தங்கை. அழுதுகொண்டு நின்றாள். அக்காவை புகையிரதத்தில் ஏற்றிவிட தாம் எல்லோரும் போனதாகவும், ஒரு சந்தியில் அவர்களின் வண்டி ஒரு பார ஊர்த்தியுடன் மோதுண்டு விட்டதாகவும் அம்மா. அப்பா , அக்கா கடுமையாக அடிபட்டதால் இன்னும் வைத்திய சாலையிலேயே இருப்பதாகவும், கடைசி தங்கையை அங்கேயே விட்டுவிட்டு, தொலை பேசிகள் அந்த மோதலில் உடைந்து விட்டதால், வேறு வழி தெரியவில்லை, எனவே நேரடியாக வந்ததாகவும் சொன்னார். நான் உடனடியாக வாடகை வண்டி எடுத்துக்கொண்டு, அவளின் மூத்த தங்கையுடன் காலி வைத்திய சாலைக்கு போனேன். அவர்கள் மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்கள். கடைசித் தங்கச்சி, வெளியே ஒரு வாங்கில். ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார். மாமாவுடன் வேலை செய்யும் சில சக ஊழியர்களும் அங்கு வந்து இருந்தனர். மூவரில் முன்னுக்கு இருந்த இருவரின் நிலைமையும் கவலைக்கு இடம்மென்றும், பின்னல் இருந்த மாமி பரவாயில்லை என்றும் அங்கு இருந்த மூத்த மருத்துவர் ஒருவர் எமக்கு கூறினார். நான் எவ்வளமோ கெஞ்சி கேட்டபின், ஜெயக்குமாரி மற்றும் மாமாவை ஒரு சில நிமிடம் பார்கவிட்டனர். அது தான் நான் கடைசியாக உயிருடன் பார்த்தது. இன்று 2024 ஆம் ஆண்டு முதல் நாள். எல்லோரும் புத்தாண்டு பரவலாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். மாமா வீட்டிலும் அயலவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு கூட்டமே கூடி இருக்கிறது. ஆனால் புத்தாண்டுக்கு அல்ல, புத்தாண்டு பரிசு தேடுவார் அற்று ஒரு மூலையில் இருக்கிறது. வாழை, தோரணம் கட்டப் படுகிறது. ஆனால் இங்கு தோரணம் மூன்று குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கிறது. நிலத்தில் விழுகின்றன, மடிகின்றன என சொல்லாமல் சொல்கிறது. தந்தையும் மகளும் தமது கடைசி யாத்திரையை ஒன்றாக, அருகருகே பயணிக்கின்றன. என் அம்மாவின் தம்பியும் மருமகளும் அம்மாவிடம் செல்கின்றனர். நான் எதை அம்மா அப்பாவுக்கு புத்தாண்டு பரிசாக கொடுக்க நினைத்தேனோ, அது என் பெற்றோரை தேடித் தானாகவே, என்னை விட்டுவிட்டு போகிறது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்'] / பகுதி 36 இலங்கையின் பழங்குடியினர் எனக்கருதப்படும் வேடர் [வெத்தா எனும் வேடுவ இனத்தவர்] சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆரியரின் வருகைக்கு முன்னரே இலங்கையின் ஆதிக்காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மை கொண்டவர்கள் என்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இலங்கையின் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மற்றும் தமிழ் இனத்தவருடன் கலந்து தன் அன்றாட வாழ்வியலை கடத்தி வருகின்றனர். மற்றும் நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபின் வழி வந்தவர்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இவர்களை சிங்கள மொழியில் 'வெத்தா' என்று அழைக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" Wanniyala-Aetto என்று குறிப்பிட்டு கொள்கின்றனர். தங்கள் தெய்வங்களுக்கு காட்டில் கிடைக்கும் காய்கள், கனிகள், தூப வகைகள், தீபங்கள், பூக்கள் என்பவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தமது பாரம்பரிய ஆயுதங்களான ஈட்டி, வில், அம்பு முதலியவற்றுக்கு வழிபாடுகளின் போது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இவர்களின் சடங்குகளின் போது மூதாதையர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்ட பின்னைரே தெய்வங்களை அழைத்து வழிபடுகின்றனர். இவர்களின் நம்பிக்கையில் காகம் கரைதல், கிளி தலை கீழாக தொங்குதல், பறவைகள் ஒலியெழுப்புதல், தும்மல், நாய்கள் பதறி போய் குரைத்தல், மனைவியின் பொட்டு அழித்தல் போன்ற சம்பவங்கள் நிகழும் போது தாம் நினைத்தவைகள் நடைபெறாது என இவர்களால் நம்பப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. மகாவம்சம் குறிப்பிடுகின்ற விஜயனின் கதையும் மற்றும் விஜயனின் தம்பி சுமித்தவின் [Sumitta] இளையகுமாரன் பண்டு வாச தேவனின் [Panduwasa Dewa] கதையும் ஐதிகக் கதைகளாகவே தெரிகிறது. முதலாவதாக விஜயனின் தாய் தந்தையரின் பிறப்பும் மற்றும் பல நிகழ்வுகளும் எந்த காரணங்களையும் கொண்டு அறிவியல் ரீதியாக எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதைப்பற்றி முன்பே விரிவாக கூறிவிட்டோம். இரண்டாவதாக, பண்டுவாச தேவனைப் பற்றி பார்க்கும் பொழுது, பண்டு வாசதேவ இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் முதலாவது அரச மரபைத் தோற்று வித்தவனும் முதல் அரசனுமான கலிங்க இளவரசன் விஜயனின் உடன் பிறந்தான் மகன் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் [Paṇḍuvāsa] என்று குறிப்பிடுவதைக் கொண்டு இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தான் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர். உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது வாசி யின் திரிப்பாகும், எனவே பாண்டியவாசி என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality]. விஜயனின் மனைவி ஒரு பாண்டிய இளவரசி என்பதால், மேலும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். இது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்? கொஞ்சம் நடு நிலையாக சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான், இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம். இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால் , அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். எனவே பாண்டிய நாட்டுடன் நல்ல நட்பு தொடர்பு இருந்ததிற்கு இதுவே காரணம். இதனால், பாண்டிய நாட்டின் எதிரியான சோழ நாடு அனுராதபுர அரசர்களுக்கும் எதிரியாகவே இருந்தது எனலாம். அதுவே மஹாநாம தேரர் சோழருக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மைக்கு [to be Chola phobic] ஒரு காரணமாகும் என்று நம்புகிறேன். மற்றது மகாவம்சத்தில் காணப்படும் தமிழருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு முக்கிய காரணியாக விளங்கியவர், கி.பி 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானியான, காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் [the great commentator Buddhaghosa] ஆவார். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறியதால், பாளி மொழியில் நன்கு புலமையும் பெற்றிருந்தார். இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாளி மொழியில் இயற்றினார். மேலும் இலங்கையில் இருந்த பல பௌத்த நூல்களை இவர் பாளி மொழியில் மொழிபெயர்த்தபின், அந்த மூலப்பிரதிகளை எரித்துவிட்டார். காரணம் இவரின் அசல் மொழி கருத்து எண்ணம் ஆகும் [He burnt the originals after translating into Pali, introducing the Mula Bhasha [मूल भाषा {mul bhaSha} = ORIGINAL LANGUAGE] concept.]. இதுவே மஹாநாம வுக்கு கொடுத்த உத்வேகமாக இருக்கலாம்? மகாபாரதத்தில் விதுர நீதி என்ற ஒரு பகுதி உள்ளது. அது " நீ எப்பவும் உண்மை சொல்ல வேண்டும், ஆனால் சொல்லும் உண்மை தீங்கு விளைவிக்கும் என்றால், அதை சொல்லாதே, பொய் உதவும் என்றால், பொய்யை உண்மை போல் சொல்லிவிடு" என்கிறது. [There is a verse in Mahabharata.YOU SHOULD ALWAYS TELL THE TRUTH.IF TELLING TRUTH WOULD HARM THE PEOPLE THEN DON’T TELL THAT.IF TELLING A LIE WILL HELP PEOPLE THEN TELL THAT LIE AS A TRUTH.That is from Vidura niti of Mahabharata]. இதைத்தான் மகாவம்சத்தின் ஆசிரியர் தம் இனத்திற்கு என்றும் வரலாறு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் மாற்றி சொல்லி இருப்பார் என்றும் எண்ணுகிறேன். உதாரணமாக இன்று குருந்தூர் மலை விடயத்தை எடுத்துக்கொண்டால், அங்கு காணப்படும் பௌத்த எச்சங்கள், அன்று வாழ்ந்த தமிழ் பௌத்தர்களினதாக இருந்தும், அதை சிங்களவர்கள் வாழ்ந்த இடமாக வரலாற்றை மாற்ற முற்படுவதுடன், மற்றும் சிங்கள மக்கள் வசிக்காத ஒரு இடத்தில் பௌத்தம் சார்ந்த ஒரு அழிபாடுகள் கண்டுபிடிக்கப்படுமானால் அவற்றை மீளக்கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைப்பதை ஏற்பதாக தொல்லியல் சட்டம் கூறவில்லை என்பதையும் மறந்து, நீதிமன்ற உத்தரவையும் மீறி, பௌத்த பிக்குகளும், அரசாங்கமும் பௌத்த விகாரை ஒன்று அங்கு கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட இருப்பது தெளிவாக அவர்களின் நோக்கத்தையும் மனநிலையையும் காட்டுகிறது. அதுமட்டும் அல்ல, அநுராதபுரத்தில் 20 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் சைவ ஆலயங்கள், திராவிட கலை மரபில் கட்டப்பட்டவை. அந்த ஆலயங்களின் அழிபாடுகள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாகக் கருத்திற்கொண்டு பார்க்கப்பட்டதே தவிர, அவை மீள அமைக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய ஆலயங்களாக அமைக்கப்படவில்லை. அவற்றில் ஒரு காளிகோவிலைத் தவிர ஏனையவை எங்கிருந்தன என்பது கூட அடையாளங்காண முடியாதளவுக்கு அதனுடைய நிலைமை காணப்படுகின்றது என்பது கவலைக்குரிய விடயமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 37 தொடரும்
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 17 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள் அல்ல என்பதும், சைவ உணவுப் பொருட்களுடன் சிந்து சமவெளி நாகரிக மக்களும் இறைச்சியை உட்கொண்டனர் என்பதும் இறந்தவர்களுக்காக வழங்கப்படும் பிரசாதங்களில் இறைச்சி சேர்க்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் தெளிவாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் அங்கு மாட்டிறைச்சி, குறைந்தது சிலராவது சாப்பிட்டதற்கு சான்றுகள் உண்டு. அங்கு தோண்டி எடுக்கப் பட்ட தொல்பொருள்களில், ஒரு வேட்டையாடும் கருவியான, சுண்டுவில்லில் [கவண்வில் அல்லது கவட்டை / slingshot] பாவிக்கும் களிமண் பந்துக்கள், மற்றும் செம்பு மீன் கொக்கிகள், அம்புவின் நுனி, எறியும் கத்தி போன்றவை எடுக்கப் பட்டுள்ளது. அவை விலங்குகளை கொல்ல பாவிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுவதுடன், அவை மேலும் சிந்து வெளி மக்கள் விவசாயிகளாக மட்டும் இன்றி, அவர்கள் ஆற்றல் வாய்ந்த, மற்றும் திறமையான வேட்டைக் காரர்களாகவும் மீனவர்களாகவும் இருந்தனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இதுபோலவே தானியங்களை அரைக்கும் கல்திருகைகள் மொகஞ்சதாரோவில் கண்டறியப் பட்டுள்ளன. லோத்தலில் தந்தூரி அடுப்பு போன்ற சுடு அடுப்புகள் காணப் படுகின்றன. இறைச்சி பொதுவாக கால்நடையில் இருந்து வந்தன. அவை ஆடு, மாடு, பன்றி, போன்ற கால் நடைகளுடன் மற்றும் கோழி, ஆமை, பறவையும் ஆகும். மேலும் எருமைகள், செம்மறியாடு, ஆடுகள், மாடுகள் போன்றவை பால் எடுப் பதற்க்காக வளர்க்கப் பட்டன. அத்துடன் காட்டுக் கோழி, காட்டு விலங்குகளான, மான், மறிமான் (Antelope), காட்டுப்பன்றி போன்றவை அங்கு வேட்டையாடப் பட்டன. ஆறு, குளம், கடலில் இருந்து பெறப்படும் உடன் மீன் [fresh fish], மட்டி போன்ற வற்றையும் அவர்கள் உண்டார்கள். அத்துடன் பல மீன்கள் காயவிடப்பட்டன அல்லது உப்பு இடப்பட்டன. மீனுடன் அவர்கள் பழங்கள், காய்கறிகள் முதலிய வற்றையும் காயவைத்து அங்கு நிலவிய கடுமையான குளிர்காலத்தில் பாவித்தார்கள். பாறை மீன், கெழுத்தி மீன் போன்ற கடல் மீன்களின் எலும்புகள் மற்றும் ஓடுகள், சிந்து சம வெளி நாகரிகத்தை சேர்ந்த ஹரப்பா வீடுகளைச் சுற்றி கண்டு எடுக்கப்பட்டன. இவை எல்லாம் அங்கு மக்கள், கடல் உணவு உட் கொண்டதை எடுத்து காட்டுகிறது. மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள எலும்புக்கூடுகளின் பற்களைப் பரிசோதனை செய்த போது, அங்கு ஆண்களை விடப் பெண்கள் மிகக் குறைவாகவே உணவு உட்கொண்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் உணவுப் பண்பாடு என்ற கட்டுரையில் தமிழ் அறிஞர் அ.கா.பெருமாள் ஹரப்பா நாகரிக காலகட்ட உணவு வகைகள் பற்றித் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார். ஹரப்பன் வீடுகளில் முற்றத்தின் வெளியில் சமையலறை செங்கல்லால் கட்டப்பட்ட அடுப்பைக் கொண்டு இருந்தன. அங்கு சமையலுக்கு பல்வேறு அளவுகளில் மட்பாண்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன; அதே நேரம் பணக்கார வீடுகளில் உலோக பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. சில குறிப்பிட்ட விவசாய கருவிகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, அங்கு கண்டு பிடிக்கப்பட்ட தீக்கல் (Flint) அல்லது சிக்கிமுக்கிக் கல் கத்திகள் அறுவடைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இன்று ஊகிக்கப் படுகிறது. அது மட்டும் அல்ல, பண்டைய காலத்தில் ஹரப்பன் காளிபங்கானில் [தற்கால தார் பாலைவனத்தில் பாயும் காகர் நதியின் தென்கரையில் அமைந்த சிந்துவெளி பண்பாட்டுக் கள நகரம் ஆகும்] உழவு செய்யப்பட்ட வயல் கிமு 3 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் கலப்பை அங்கு பயன்பாட்டில் இருந்ததைக் எடுத்துக்காட்டுகிறது; மேலும் ஒன்றையொன்று கடக்கும் கோடுகளின் வடிவத்தில் [criss-cross] அமைந்த, ஒரு கலப்பை மூலம் தரையில் செய்யப்பட்ட நீண்ட, குறுகிய அகழிகள் [furrows], ஒரே வயலில் இரண்டு பயிர்களை வளர்க்கப் பயன்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நடைமுறை இன்றைய நவீன காலத்திலும் தொடர்வதே! இன்று நமது முக்கிய உணவுகளான - உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய், புளித்த ரொட்டி [ வேகவைத்த பொருட்களை பஞ்சுபோன்றதாகவும் மென்மையாகவும் மாற்றும் நுரைமம் அல்லது நொதி கொண்ட பாண் / leavened bread], சீஸ், ஆப்பிள்கள் - உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவை ஆகும். உதாரணமாக, சிந்து சமவெளி மக்களும் மற்றும் பண்டைய இடைக்கால இந்தியாவின் மக்களும் உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை அறிந்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில், நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் சாப்பிட்டவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் நம் தட்டுகளில் இருந்து மறைந்து விட்டன. இந்த மறைந்த உணவுகளில் துணைக்கண்டத்தில் ஒரு காலத்தில் வேட்டையாடப்பட்ட அல்லது வளர்க்கப்பட்ட பல விலங்குகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரை நாம் எடுத்துக்காட்டிய உணவுகளை நன்றாக உற்றுப் பார்த்தால், சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த நம் முன்னோர்கள் இன்று நாம் உட்க்கொள்ளுவதையே அதிகமாக சாப்பிட்டுள்ளனர் என்பது தெளிவாகும். மாறாக, உண்மையில், அவர்கள் சாப்பிட்டதையே நாம் அதிகமாக இன்று இன்னும் சாப்பிடுகிறோம்! "விவசாய உபரிகளை உற்பத்தி செய்து கட்டுப்படுத்தும் திறன் ஆரம்பகால சிக்கலான சமூகங்கள் மற்றும் நகரங்களின் எழுச்சிக்கு ஒரு அடிப்படை காரணியாக இருந்தது." என்பதற்கு, இந்த உண்மைக்கு, சிந்து சமவெளி நாகரிகம் [கிமு 3300-1300 க்கு இடைப்பட்ட காலத்தில்,] சந்தேகமில்லாமல் ஆதாரம் காட்டுகிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 18 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 17 "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" The fact that the people of the Indus Valley civilization were not all vegetarians and Along with the vegetarian food items the people of Indus valley civilization also consumed meat that was evident or confirmed from the fact that meat was included in the offerings made for the dead and there is also evidence that at least some people in Harappan sites ate beef. Also With the excavation of number of artefacts like sling balls of clay, copper fish hooks, the arrow heads, the flying knives etc strongly prove that these were required to kill and this also prove that, the Indus valley people were not only farmers, they were competent and efficient hunters and fishermen. Meat came mainly from cattle, but Included in this list are chicken, mutton, beef, pork. Buffaloes, sheep, goats and cows were reared for milk too. Along with that, they also hunted a wide range of wildfowl and wild animals such as deer, antelopes and wild boar. They also ate fish and shellfish from the rivers, lakes and the sea; as well as being eaten fresh, many fish were dried or salted. Along with fish, fruits & vegetables also dried for use in the harsh winters.– many bones and shells in hard form from marine fish such as jack and catfish etc has been found in and around the houses of the Indus valley civilization, at Harappa, far inland. Harappan houses had a kitchen opening from the courtyard, with a hearth or brick-built fireplace. Pottery vessels in a range of sizes were used for cooking; in wealthy households metal vessels were also used. Few certain agricultural tools have been found. Flint blades were probably used for harvesting. A ploughed field at Early Harappan Kalibangan shows that the plough was in use by the early 3rd millennium BC; its criss-cross furrows allowed two crops to be raised in the same field, a practice that has continued into modern times. Many of our staples today — potatoes, tomatoes, chillies, leavened bread, cheese, apples — came to India from other parts of the world. The people of the Indus Valley, as well as those of ancient and most of medieval India, for example, would not have known what to with a potato or a tomato. At the same time, much of what was once eaten by our ancestors has been taken off our plates over time, thanks to cultural and economic forces. Among these foods are a number of animals that were once hunted or reared in the subcontinent. If you have a good look at the food and it becomes clear that our ancestors of the Indus-Valley civilization ate a lot of what we do today. Rather, we eat a lot of what they ate! So powerful that people still continue to follow that !! An examination of the teeth of the skeletons found at mohenjo-daro revealed that women consumed much less food than men. Also, Tamil scholar A.K. Perumal has clearly explained the food types of the Harappa civilization period in his article 'Food Culture'. “The ability to produce and control agricultural surpluses was a fundamental factor in the rise of the earliest complex societies and cities.” For this fact, the Indus Valley Civilization [of the period between 3300-1300 BC,] bears unequivocal evidence. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 18 WILL FOLLOW
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 16 [தொழில்நுட்பத்துடன் இணைத்தல் தொடர்கிறது] "பால் கடல் கடைதல்" என்ற புராணத்தில், அங்கு கடைந்து எடுத்தது ஒரு இறப்பில்லா வாழ்வு தரும் அமுதம் என்பதால் தேவர்கள், தங்களுடன் சேர்ந்து கடைந்த மற்றவர்களை ஏமாற்றி தாம் மட்டும் உண்டதற்கு மாறாக, 'ஒரு மருந்தேயாயினும் விருந்தோடு உண். இறப்பில்லா வாழ்வு தரும் அமுதமே ஆனாலும், விருந்தினர்க்கும் பகிர்ந்து அளித்து உண்ணவேண்டும்' என்கிறது தமிழரின் கொன்றை வேந்தன். அது மட்டுமல்ல புறநானுறு 91 இல், பெரிய மலையிடத்து மிகவும் இடருக்குப் பின் பெற்ற அரிய நெல்லிக்கனியை உனக்கென்று கொள்ளாமல், அதன் சிறப்பை எனக்குச் சொல்லாமல், ஈந்து எனக்கு இறப்பில்லா வாழ்வு ஈந்தனையே என்று அதியமான் நெடுமான் அஞ்சியை, அவ்வையார்; "பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின்னகத்து அடக்கிச், சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே" என்று வாழ்த்திப் பாடுகிறார். இது தான் தமிழ் இலக்கியத்தின் சிறப்பு. இன்றைய தொழில் நுட்பத்தில் மனிதன் இறைவா தன்மையை [Human immortality] அடைதல் சாத்தியமாக தெரியவில்லை. என்றாலும் உயிரியல் ரீதியாக [biologically] நித்திய ஜீவன் [eternal life] ஒன்றை அடையாக கூடிய சாத்தியக் கூறுகளை, இறப்பில்லா உயிரி என அழைக்கப்படும், ஒரு இன ஜெல்லிமீன் அல்லது இழுது மீன் [one species of jellyfish, Turritopsis dohrnii] ஒன்றில் காண்கிறோம். அந்த குறிப்பிட்ட ஜெல்லிமீனின் வாழ்க்கை வட்டம், 'பொலிப்' (Polyp) என்ற குழந்தை பருவத்தில் ஆரம்பித்து, 'மெடுசா' (Medusa) என்ற முதிர்ந்த பருவத்தை அடைகிறது, அதன் பின் அது இறப்பதற்குப் பதிலாக மீண்டும் குழந்தை பருவமான 'பொலிப்' பிறகு திரும்பி வந்து மீண்டும் தனது வாழ்க்கை வட்டத்தை அழிவில்லாமல் தொடர்கிறது. இது மனிதனுக்கு ஒரு தெம்பு தரும் சான்றாகும். ரஷ்ய இணைய முக்கியஸ்தரான டிமிட்ரி இட்ஸ்கொவ் [Russian Internet mogul Dmitry Itskov] இப்படியான நம்பிக்கையை, அவரின் புதிய முயற்சி 2045 [2045 Initiative] மூலம் அடையலாம் என எதிர்பார்க்கிறார். அவர் இந்த முயற்சியை பெப்ரவரி 2011 இல் ஆரம்பித்து, ரஷ்ய வல்லுநர்கள் பலருடன் இணைந்தது, இன்று செயலாற்றுகிறார். ஆனால் இது முற்றிலும் ஒரு உயிரியல் முயற்சி அல்ல. இது மனிதனையும் இயந்திரத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். அதனால் ஒரு மீவு மனிதனை பரிணாம படுத்துதல் ஆகும். மீவு மனிதன் என்பது "Humanoide" எனப்படும் எந்திர மனிதன் ஆகும். மீவு மனிதன் இயற்கையாக பரிணாமம் அடைந்து தோன்றினால், அதனால் பெரிதாக கெடுதல் ஒன்றும் ஆகாது. ஆனால் மனித இனத்தின் மீது செயற்கையாய் திணிக்கும் முயற்சி அப்படி இல்லை. மீவுமனிதத்துவதுக்கு உட்பட்ட மனிதனை "Post-Human" என்றும் அழைக்கலாம். இந்த சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மனிதர்கள் இயல்பாகவே குறைபாடு [inherently flawed] உள்ளவர்கள் என்றும் அதை தொழில் நுட்ப படைப்புகளால் மீட்கலாம் என்றும் நம்புகிறார்கள். மெய்மை அல்லது ஒன்றின் உண்மையான நிலை [reality] யை இவர்கள் ஒரு சிறைச்சாலையாக பார்ப்பதுடன், ஒரு மாய உலகிற்கு [virtual world] தப்பித்து போக முயலுகிறார்கள். அத்துடன் இவர்கள் மரணத்தை இல்லாமல் ஒழிக்கவும், அறிவை மேம்படுத்தவும், மனிதத் தெய்வத்தன்மை அடைவதற்கும் [to cheat death, enhance intelligence, and achieve human godhood], இவர்கள் மனிதனை இயந்திரங்களுடன் இணைக்க முயல்கிறார்கள். இது தான் இன்றைய மனித சமுதாயத்தின் பெரும் கேள்வியாக உள்ளது. நாம் என்ன யோசனையை தழுவியிருந்தால், மனிதகுலத்தின் நலனுக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக, இடைஞ்சலாக இருந்து இருக்கும்? என்று யாராவது கேட்டால், இன்றைய காலகட்டத்தில், கட்டாயம் அது மீவுமனிதத்துவம் [Transhumanism] என்றே கூறலாம். ஏன் என்றால் அது மனித இனத்தை, அதன் உயிரியல் கட்டுப்பாடுகளிலிருந்து [biological constraints] விடுவிப்பதை நோக்கமாக கொண்டது. அதனால் வரும் விளைவு, நன்மையா தீமையா இன்னும் சரியான பதில் இல்லை? ஒரு மட்டத்தில் இயக்கத்தின் இலக்குகள் தீங்கற்றதாகத் தோன்றினாலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனித பரிணாமத்தை மிக தீவிரமாக்கி, முடிவில் இன்றைய மனிதனை அது இல்லாமல் செய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது. அதன் பின் ஒரு உயர்ந்த தொழில்நுட்பம் ஆட்க்கொள்ளும் மனிதர் [posthuman] தோன்றுமாம் ? இன்று செயற்கை நுண்ணறிவுடன் மனித நாகரிகத்தை ஒட்டிஇணைப்பதாலும் [fuse human civilization with artificial intelligence], மற்றும் ஒவ்வொரு புது கண்டு பிடிப்புகளாலும், நாம் சமுதாயத்துடனான எம் தொடர்பை மேலும் மேலும் துண்டிப்பதை அல்லது குறைப்பதை காண்கிறோம். என்றாலும், இவையை அளவோடு நாம் கடைப்பிடிக்கும் பொழுது, இவை பெரிதாக எம்மை, எம் சமுதாயத்தை பாதிக்கப் போவதில்லை, அதை பொறுத்தவரையில் சந்தோசம். ஆனால், எதுவும் எல்லை மீறினால் பிரச்சனை தானே? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நம்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 17 தொடரும்
-
"மாயா"
நன்றிகள் எல்லோருக்கும்
-
"விலைவாசி" [இரட்டைக் கிளவி]
நன்றி எல்லோருக்கும்
-
"விலைவாசி" [இரட்டைக் கிளவி]
"விலைவாசி" [இரட்டைக் கிளவி] "கிசுகிசு ஒன்றைக் வானொலியில் கேட்டேன் கிறுகிறு என்று தலை சுற்றுதே! மலங்கமலங்க விழித்து சம்பளத்தைப் பார்த்தேன் வெடுவெடு என நடுக்கம் வந்ததே!" "நறநற என்று பல்லைக் கடித்தேன் குளுகுளு அறைக்கு விடை கொடுத்தேன் கரகரத்த குரலில் மனைவியைக் கூப்பிட்டேன் பரபரக்க வைக்கும் செய்தியைச் சொன்னேன்!" "கிடுகிடு என்று விலைவாசி கூடிற்று தகதக மின்னும் உன் மேனியும் நொகுநொகு என்று மாவை அரைக்கணும் மாங்குமாங்கு என தினம் உழைக்கணும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்"
"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு முணுப்பை இசையாக்கிறேன் !" "வாலிப்பதை தூண்டும் சிறு இடையும் வாட்டம் காட்டாத நிலா முகமும் வாசனை கொட்டும் கரும் கூந்தலும் வாக்கியமாய் இங்கே வரைந்து காட்டுகிறேன் !" "பருவ பெண்ணை முழுதாக ரசிக்க பளிங்கு கன்னத்தில் முத்தம் இட பரவசம் கொஞ்சம் என்னை தழுவ பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] மிதலை - navel, கொப்பூழ், தொப்புள்
-
"திரு.கந்தையா ஈஸ்வரன் அவர்களின் நினைவாக / "In Memory of Mr. Kandiah Easwaran" [15/06/2024]
எல்லோருக்கும் நன்றிகள்
-
"திரு.கந்தையா ஈஸ்வரன் அவர்களின் நினைவாக / "In Memory of Mr. Kandiah Easwaran" [15/06/2024]
15/06/2024 அன்று என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக நண்பர் [பொறியியல் பீடம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன்] மற்றும் கட்டிட பொறியாளர் 'திரு கந்தையா ஈஸ்வரன்' ஆகியோரின் இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரின் இறுதிக்கிரிகைகள் ஜூன் 20, வியாழன் அன்று Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue L3R 5G1, Toronto, Canada தொலைபேசி 905 305 8508. காலை 10.00 மணி முதல் மதியம் 1,30 மணி வரை பார்வையிட்டு, அதே நாளில் மதியம் 2.00 மணிக்கு தகனம் செய்யப்படும் . "திரு.கந்தையா ஈஸ்வரன் அவர்களின் நினைவாக / "In Memory of Mr. Kandiah Easwaran" [15/06/2024] "யாழ் மத்திய கல்லூரியில் ஒன்றாக படித்து பேராதனை பொறியியல் கற்றல் அழைப்புக்கு எதிர்கால பிரமாண்ட கனவுகள் உடன் நாங்கள் ஒன்றாக கைகோர்த்து பயணித்தோமே! அறிவு பாய்ந்த எந்திரவியல் வகுப்பறைகளில் பகிர்ந்த கனவுகள் எங்கள் நட்பை வளர்த்ததே! நீங்கள் ஒரு சிவில் இன்ஜினியர்! மிகவும் பிரகாசமானவர்! வலிமையின் கலங்கரை விளக்கு! வழிகாட்டும் ஒளி! நாம் நடந்த பாதைகள், செய்த திட்டங்கள் அழியாத எண்ணற்ற பல நினைவுகள் பகிரப்பட்ட சிரிப்பிலிருந்து அமைதியான இரவுகள் வரை உங்கள் முன்னிலையில் எல்லாம் சரியாகவே இருந்தது! நோய் கடுமையாக பாதிக்கப் பட்டாலும், உங்கள் ஆத்மா உறுதியானது வலிமையானது முழுமையானது ஸ்கார்பரோவின் அமைதியான அரவணைப்பில் நீங்கள் எல்லையில்லா கருணையுடன் இவ்வுலகம் இன்று [15/06/2024] நீத்தீர்கள்! அன்று, மே 25, 2024 நாங்கள் சந்தித்தோம் நினைவுகளுக்கு மத்தியில் நாம் என்றும் மறக்க மாட்டோம் சொற்கள் குறைவாக இருந்தாலும் உங்கள் கண்கள் பேசின புன்னகையுடன் நீங்கள் எங்களிடம் விடைபெறுகிறீர்கள்! இப்போது நிம்மதியாக ஓய்வெடுங்கள் அன்பு நண்பரே உங்கள் மரபுப் புகழ் தென்றல் போல வாழ்கிறது எங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் உங்கள் வழியில் எங்களை வழிநடத்துங்கள்! தூர இடைவெளி இருந்தாலும் நேரம் பறந்தாலும் நீங்கள் விதைத்த நட்பின் விதைகள் ஒவ்வொரு நாளும் நம் இதயங்களில் மலரும் மீண்டும் ஒரு நாள் நாம் சந்திக்கும் வரை!" அன்புடன் உங்கள் நண்பன் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] In Memory of Mr. Kandiah Easwaran "From Jaffna Central's hallowed halls, To Peradeniya's learned calls, Together we journeyed, hand in hand, Dreaming of a future grand. In classrooms where knowledge flowed, Through shared dreams, our friendship sowed, You, a Civil Engineer, so bright, A beacon of strength, a guiding light. The paths we walked, the plans we made, The countless memories that won't fade, From the laughter shared, to silent nights, In your presence, everything felt right. Though illness took a heavy toll, Your spirit, steadfast, strong, and whole, In Scarborough's quiet embrace, You faced the end with boundless grace. On that day, in May 25, 2024, we met, Amidst the memories, we will never forget, Though words were few, your eyes spoke true, With a smile, you bid us adieu. Rest now, dear friend, in peace, at ease, Your legacy lives on, like the breeze, In our hearts, you'll always stay, Guiding us in your own way. Though miles apart, and time has flown, The seeds of friendship you have sown, Will blossom in our hearts each day, Until we meet again, someday." Sincerely your friend [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 35 இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தை சேர்ந்த வர்த்தக பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தாம் பயணித்த பாதையில் வட இலங்கை, தென் இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தார். மேலும் பல சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் பரவிக் கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தமானில் இருந்து புறப்பட்டு, ஜைலன் (சிலோன்-இலங்கை) / SEILAN] என்ற இலங்கை தீவின் வட பகுதியை அடைந்தான். அங்கு தமிழ் அரசன் செண்டெமைன் [SENDEMAIN / probably a corruption of the Tamil word ‘Sandamann’ or யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சந்திரபானுவின் மகன் சாவகன்மைந்தன்] அரசாட்சி செய்தான். அங்குள்ள மக்கள் சிலைகளை வணங்கினர். அது எந்த ஒரு நட்டையும் சாராத சுதந்திர நாடு. ஆடவரும் பெண்டீரும் ஒரே ஒரு துணியை உடலில் சுற்றி இருப்பார்கள். அரிசி மற்றும் எள்ளு அங்கு விளைகின்றன பால், அரிசி, இறைச்சி இவர்களின் உணவு. எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். [பனை] மரங்களில் இருந்து கள்ளு எடுக்கிறார்கள் என்கிறார். இவைகள் எல்லாம் தமிழும் தமிழரும், சைவமும் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்ததை எடுத்து காட்டுகின்றன. குறைந்தது பதினெட்டிற்கு மேற்படட பயணிகள், உதாரணமாக ஒரு ரோமன், ஒரு கிரேக்கம், இரண்டு சீனர்கள், நான்கு இத்தாலியர்கள். ஒரு வடமேற்கு மொராக்கோவில் உள்ள ஒரு நகரமான டன்கிரில் வசித்த சோனகர், ஒரு போர்த்துகீசிய சிப்பாய்-வரலாற்றாசிரியர், இரண்டு டச்சுக்காரர்கள், ஒரு ஜெர்மன், ஒரு பிரஞ்சு கோமகன், ஒரு டச்சு கடற் படை அதிகாரி, ஐந்து பிரித்தானியர்கள் [a Roman, a Greek, two Chinese, four Italians, a Moor from Tangier, a Portuguese soldier-historian, two Dutchmen , a German, a French Count, a Dutch admiral and five Britons.] ரோமன் காலத்தில் இருந்து பிரிட்டிஷ் காலம் வரை இலங்கைக்கு வந்து, இலங்கையைப் பற்றி தமது குறிப்புகளில் எழுதியுள்ளார்கள். அவர்களில் சிலரை நாம் இங்கு சுட்டிக்காட்டி உள்ளோம். முதலாவது கண்டியின் அதிகாரி, பிலிமத்தலாவ [The First Adikar of Kandy, Pilimatalava,], பிரிட்டிஷ் காலனி அரசின் பிடியில் இருந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்குக்கு, தனது விசுவாசமான குடிமக்களுடன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பல்லக்கில் அனுராதபுரத்தின் ஊடாக வன்னிக்கு காவிச் சென்றனர். அவர் மிகவும் சோர்வுற்று களைத்துப்போய் இருந்தார். என்றாலும் எல்லாளனின் நினைவு தூபி வந்ததும், பல்லக்கில் இருந்து இறங்கி, நீண்ட தூரம் நடந்து போனார் [He was exhausted and tired, but he got down where he thought that the Elara’s memorial was and started walking for a long distance.] அவரின் விசுவாசமான குடிமக்கள், நினைவு தூபியை கடந்து நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்று சொல்லியும், இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தே, பல்லக்கில் ஏறினார் என்பது வரலாறு. அந்த பெருமைமிக்க தமிழ் அரசன் தான் எல்லாளன்! நான் இந்த நேரத்தில், இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும். தீபவம்சம், விகாரமகாதேவியின் எந்த கோரமான ஆசைகளையும் [the gory desires of Vihara Mahadevi] சொல்லவில்லை, ஆக மகாவம்சமும் அதன் பின் எழுதப்பட்ட காப்பியங்களும் தான் சொல்லுகின்றன. இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும், ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை / வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப் பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந் தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள். [Although in modern times speakers of the various Dravidian languages have mainly occupied the southern portion of India & north & east of Srilanka, nothing definite is known about the ancient domain of the Dravidian parent speech. It is, however, a well-established and well-supported hypothesis that Dravidian speakers must have been widespread throughout the Indian subcontinent before a series of Indo-Aryan migrations]. மேல் கூறப்பட்ட பயணிகளின் குறிப்புகளுடனும், புத்தரின் மூன்று இலங்கை வருகையை சித்தரிக்கும் கதைகளுடனும், இதையும் [மேலே கூறியவற்றையும்] நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். முதலியார் செ இராசநாயகம் 'எலு' என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் 'ஈழு' என்னும் நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம், ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார். உதாரணமாக, பட்டினப் பாலை "ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் " என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் 'ஈழ' என்றும் இரண்டாவது சாசனம் 'ஈலா' என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். மேலும் இயக்கர், நாகர் இனத்தவர்கள் திராவிடர்கள் என்பது, அதிகமாக, 1] ஈமச் சின்னங்கள், 2] ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள், 3] ஆதி மக்களது சமய வழிபாடு போன்றவை எடுத்துக் காட்டுகின்றன என கலாநிதி க குணராசா அவர்கள் தனது 'ஈழத்தவர் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 36 தொடரும்
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 34 யாழ்ப்பாண அரசைப்பற்றிய அரிய தகவல் ஒன்றை 8ஆம் நூற்றாண்டு அரபுப் பயணி அல் மசுடி/ மாசுடி [கி பி 896–956] என்பவர் தன் பயணக் குறிப்பில் எமக்கு தருகிறார். இவர் யாழ்ப்பாண துறைமுகத்தை கி பி 912 இல் அடைந்து, அங்கு தாம் கண்டதை விபரிக்கிறார்.[Al-Masudi, the great Mohammedan traveler, reached the Port of Jaffna in 912 A D] அவர் அங்கு ஒரு சைவ [இந்து] அரசனின் இறுதி சடங்கு ஒன்று பார்த்ததாகவும், அங்கு அரசனின் இறந்த உடல் உயரம் குறைந்த ஒரு தேர் மீது வைக்கப்பட்டு, அது வீதியால் இழுக்கப் பட்டது. அப்பொழுது ஒரு பெண் தரையை பெருக்கி, இறந்த ராஜாவின் தலை முடிக்கு தூசி வீசி எறிந்தாள், அத்துடன் அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்க்கையின் பயனற்ற தன்மையை உணர்ச்சி பொங்கக் கூக்குரலிட்டதுடன், கடவுளை வணங்கி புகழ்ந்து பாடினார்கள் என்றும், உடல் இறுதி சடங்கில் சிதையில் வைக்கும் முன்பு, உடல் முழுவதும் சந்தனம் பூசி, அரசனின் உடல் நாலு பகுதிகளாக வாளால் வெட்டப்பட்டது என்றும் பதிவு செய்து உள்ளார். [Masudi states that the King was placed on a low chariot and while it was being drawn, a woman swept the ground and threw dust on the hair of the dead king, exclaiming the futility of life and extolling the worship of God. Before the body was put on the funeral pyre, it was smeared with sandalwood and cut into four pieces with a sword]. இறந்தவர்களுக்காக வருந்தி பாடும் பாடலே ஒப்பாரி ஆகும். மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது எனலாம். இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறியவும் இது உதவுகிறது. இந்த ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை “ என்று சங்க இலக்கியங்கள் கூறுவதையும் காணலாம். உதாரணமாக, “ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின் கற்றோர் உரைப்பது கையறு நிலையே “ என சிற்றிலக்கியமான [சிறு பிரபந்தம்], பன்னிரு பாட்டியல் கூறுகிறது. அப்படி யாழ்ப்பாண அரசன் ஒருவன் விண்ணகம் அடைந்த நிகழ்வையே இங்கு அல் மசுடி விவரிப்பதை காண்கிறோம். போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லை (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்கு செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் என புறநானுறு 93, மிக விரிவாக தமிழரின், குறிப்பாக தமிழ் மன்னர்களின் அன்றைய பண்பாட்டை எடுத்து கூறுகிறது. "அவர் தீது மருங்கு அறுமார், அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, “மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க” என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ," [புறநானுறு 93] இதைத் தான் அல் மசுடி கண்டார் என்பதை நாம் இலகுவாக ஊகிக்கலாம், மற்றது அவர் தலைமுடிக்கு தூசி வீசி எறிந்தனர் என்பது கட்டாயம் திருநீறை குறித்து இருக்கலாம்?அப்படியே, கூக்குரலிட்டனர் என்பது ஒப்பாரிப்பாட்டாக இருக்கலாம் ? அது இன்னும் தொடரும் தமிழர் பண்பாடாகும். எனவே இது கட்டாயம் ஒரு தமிழ் சைவ அரசன் என்பது மிகவும் தெளிவாகிறது. அத்துடன் எட்டாம் நூற்றாண்டிலும் யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நடந்தது என்பது வரலாற்று சான்றாக இங்கு சாட்சிகளுடன் பதியப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 35 தொடரும்
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 08 குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள், முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது என்றும், அதாவது குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்கின்றனர். “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனோடு நாவே மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே ஆறறி வதுவே அவற்றோடு மனனே” மெய், வாய், மூக்கு, கண், செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியை தொல்காப்பியர் மேலே கூறியவாறு 2000-2500 ஆண்டுகளுக்கு முன் சொல்லி சென்றார் [தொல்காப்பியம் /பொருளதிகாரம் / மரபியல்: 27-33]. அதாவது உயிரினங்களை ஓர் அறிவு முதலாக ஆறு அறிவு உள்ளனவாகப் பகுத்து, "மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே" என மேலும் உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி படிப்படியான பரிணாம வளர்ச்சி நிலைகளை அப்போதே கூறியுள்ளார். என்றாலும், அவர் கூற்றில் சில சில பிழைகள் உண்டு. உதாரணமாக தேனீக்கு மெய், வாய், மூக்கு, கண் ஆகிய நான்கு அறிவுகள் உண்டென்று கூறியது [தேனீக்கு மூக்கு இல்லை / Bees, Like All Insects, Do Not Have Noses With Nasal Passages]. மக்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக கூறியது [இது அறிவியல் முறைப்படி தவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை] போன்றவை ஆகும். மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை ஆகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் கூறும் மனித இனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன் ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிவியலின் கருத்துப் படி மனிதர் படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள். சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து 5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர். அதன் பின் பல மனித இடை நிலை இனங்கள் இருந்து, தற்போதைய Homo sapiens 400,000 இருந்து 250,000 முன்னர் கிளை விட்டனர் என்கிறது. குமரிக் கண்டம் என்ற கோட்பாடை நம்புபவர்கள், அங்கு தமிழே, 12000 வருடங்களுக்கு முன்பே, உறுதிப் படுத்தப்பட்ட மொழியாக இருந்துள்ளது எனவும் நம்புகிறார்கள். அத்துடன் அங்கு தலைமை தெய்வமாக சிவா இருந்ததாகவும் கூறுகிறார்கள். இந்திய சமுத்திரத்தின் திடீர் வெள்ளத்தால் தள்ளப்பட்ட இவர்கள், இரண்டு பிராந்தியத்திற்கு [நிலப்பரப்பிற்கு] போயிருக்கலாம் என்றும், அதில் ஒரு தொகுதி சரஸ்வதி ஆறு வழியாக வட இந்தியாவிற்கும் [சிந்து சமவெளி நாகரிகம்] மற்ற தொகுதி, பெர்சியன் கடல் வழியாக மெசொப்பொத்தாமியாவிற்கும் [இன்றைய ஈராக், துருக்கி, சீரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதியில் அமைந்து இருந்த சுமேரிய நாகரிகம் ] போயிருக்கலாம் அல்லது வட இந்திய ஊடாக அங்கு போயிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். அவர்கள் இந்த கோட்பாட்டிற்கு பாகிஸ்தானில் உள்ள இடங்களின் பெயர்களை சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக: கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) & கோளி (Koli) ஆகும். அதே போல ஆப்கானிஸ்தானில் கொற்கை (Korkay. Gorkay), பூம்பகார் (Pumbakar) ஆகும். அவைகள் சங்க கால நகரங்களான, கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் என்பனவற்றுடன் ஒத்து போவதை சான்றாக எடுத்து காட்டுகிறார்கள். மொழியறிஞர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவு கூட கூட, அந்த மொழி திரியும் வாய்ப்பும், அதிகரிக்கும் என்கின்றனர். இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு ஒரு நல்ல சான்று என்று அவர்கள் எடுத்து காட்டுகின்றனர். இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது. ஈனும் -மா - எல் - இசு (Enuma-Elish) - எனப்படும் சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட சுமேரிய இலக்கியமும், வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும் செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கில்கமெஷ் (GILGAMESH) எனப்படும் மெசொப்பொத்தாமியா / பாபிலோனிய இலக்கியமும் உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள் ஆகும். மேலும் அதிசயம் என்னவென்றால், இவ்விரண்டு நூல்களுமே, வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப் பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மனிதனைப் பற்றியும் கூறுகின்றன. மெசொப்பொத்தாமியா என்ற நாடு இருக்கும் இடத்தில், இது வரை உலகமே அழிந்து போகும் வண்ணம், வெள்ளம் வந்து இருப்பதற்கு சாத்திய கூறுகளே கிடையாது. பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றி இரு இலக்கியங்களிலும் பேசுகின்றார்கள் என்பது ஒரு புதுமையே !. இது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. மேலும் அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை அறிய அந்த மெசொப்பொத்தாமியா வெள்ள கதையில் இருந்து ஒரு பந்தி கிழே தரப்பட்டுள்ளது. "அனைத்து காற்று புயல்களும் ஒன்றுகூடி, மிக சக்தியுடன் பொங்கி எழுந்தன [தாக்கின], பூமியின் மேற்பரப்பில் வெள்ளம் பெருகியது, ஏழு நாட்கள் மற்றும் ஏழு இரவுகளின் பிறகு, நாடு முழுவதும் [நிலத்தில்] வெள்ளம் பெருகியது, பெரிய நீரின் மேல், பெரிய படகு தூக்கி எறியப்பட்டது. உத்து [சூரியக் கடவுள்] தோன்றினார் [வெளிவந்தது], அவர் வானத்திலும் பூமியிலும் ஒளி ஏற்றினார் [கொடுத்தார்] ஜீசுத்ரா பெரிய படகின் ஜன்னலைத் திறந்தார் மன்னர் ஜீசுத்ரா, உத்து முன் சிரம் பணிந்தார்" "All the windstorms, exceedingly powerful attacked as one. The deluge raged over the surface of the earth. After, for seven days and seven nights. The deluge had raged in the land. And the huge boat had been tossed about on great waters. Utu [Sun God] came forth, who sheds light on heaven and earth. Ziusudra opened a window of the huge boat. Ziusudra, the king. Before Utu prostrated himself." [One passage from Mesopotamian Flood Story] இங்கு கடவுளுக்குப் பயந்த ராஜா 'ஜியுசுத்ரா', அழியாத மூப்பரான 'உட்னாபிஷ்டிம்' மற்றும் பக்தியுள்ள தேசபக்தர் 'நோவா' ஆகியோர் ஒரே நபர், ஒரே பாத்திரம், சுமேரியர்கள், பாபிலோனியர்கள் மற்றும் பைபிளின் பண்டைய ஆசிரியர்களால் மட்டுமே வித்தியாசமாக பெயரிடப்பட்டுள்ளனர் என்பது மூன்று வெள்ளக் கதையிலும் உள்ள ஒற்றுமையில் இருந்து நாம் ஊகிக்கலாம். எவ்வாறாயினும், 'குமரிக்கண்டம்' என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற கேள்வி பலர் மனதில் இன்று எழுகிறது? குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் / முயற்சிகள் இந்தியாவால் அல்லது தமிழ் நாட்டால் தொடங்கப்பட்டதா? 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி இதே பகுதியில் சுனாமி [Tsunami] அல்லது கடற்கோள் என்ற பெரும் ஆழிப் பேரலையில் இயற்கையின் கொடூரத்தை உலகம் கண்டது. சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். கடலின் அடியில் உள்ள டெக்கான் தட்டுகளின் [tectonic plate] விலகல் [அல்லது நகர்தல்] மூலம் இந்த ஆழிப் பேரலை உண்டானது. 8.6 ரிக்டர் அளவுகள் [richter scale] பூகம்பம் ஏற்பட்டது. ஆகவே ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டதாக கருதப்படும் குமரிக்கண்டத்தை மூழ்கடித்த ஆழிப் பேரலை, நாம் 20 வருடங்களுக்கு முன்பு கண்ட சுனாமியை விட பல பல மடங்கு கட்டாயம் பெரிதாக இருக்க வேண்டும் ? என்று எண்ணத் தோன்றுகிறது. இது சாத்தியமா ? இல்லையா என்பதை மேலதிகமான ஆய்வுகள் தான் நிரூபிக்கும். பண்டைய தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம் பற்றிய உண்மையை உறுதிப் படுத்துவது இன்றைய அறிவு நிலையில் மிக மிக கடினம். அதற்கு நேரடியான சான்றுகள் இல்லை என்றே சொல்லலாம். எனினும் சில ஊகங்கள் அங்கொன்று இங்கொன்றாக காணப்படுகிறது. அவையில் சிலவற்றை ஏற்கனவே கூறிவிட்டேன். மிகுதியை சுருக்கமாக கீழே தருகிறேன் இந்த குமரி கண்டம் இன்று இலெமூரியா [Lemuria] என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் [Philip Scatler] இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு இலெமூரியா என்று பெயரிட்டார். இவர் தனது கூற்றுகளில் இலெமூர் [Lemurs] இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மற்றும் இவை இரண்டுக்கும் இடையில் உள்ள பகுதிகளில் இல்லை எனவும் கண்டார். ஆகவே இவை இரண்டையும் இணைக்கக் கூடியதாக ஒரு மாபெரும் நிலப் பரப்பு இருந்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் [Oceanographic Researchers] அறிக்கையின் படி, கடந்த 14,500 ஆண்டுகளில், இந்திய தீபகற்பகத்தை [Indian peninsula] சுற்றி கடல் மட்டம் 100 மீட்டர் உயர்ந்துள்ளது. இது குமரிக் கண்டம் கடலில் மூழ்க எதுவாக இருந்து இருக்கலாம் ? பதினைந்தாம் நூறாண்டு கந்த புராணத்தில், அண்டகோசப் படலத்தில், முதல் முதலாக குமரி கண்டம் என்ற சொற்பதம் பாவிக்கப் பட்டுள்ளது. "மெய்ந்நெறிசேர் வதுகுமரி கண்டம் ஏனை மிலேச்சரிடம் ஓரெட்டும் வியப்பி லாவே." [- 47] என்று. இந்து தொன்மவியலின் படி, இந்தியாவின் 'தென்பகுதியின் அல்லது திராவிட' மன்னனாக மனு இருந்ததாகவும் [kingdom of Dravida, ruled by King Manu], அங்கு அப்பொழுது ஊழிவெள்ளம் வந்ததாகவும், வைணவ சமயக் கடவுள் விஷ்ணு தனது முதல் அவதாரமான மச்ச அவதாரம் எடுத்து காப்பாற்றியதாகவும் கூறுகிறது. சிலர் இதை குமரி கண்டத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். குமரி கண்டம் பற்றிய நம்பிக்கை இன்னும் பல தமிழ் புத்திஜீவிகள், மறுமலர்ச்சிவாதிகள் மற்றும் மேலாதிக்கவாதிகளிடம் இருந்தாலும், பிலிப் ஸ்க்லேட்டருக்கு பின், பல மாற்றம் அடைந்து, 1950 அளவில், கண்டத்தட்டு இயக்கவியல் (plate tectonics) என்ற ஒரு புதிய யோசனை நடைமுறைக்கு வந்து, முன்மொழியப்பட்ட குமரி கண்டம் என்ற கருத்தை மீண்டும் சிந்திக்க வைத்துள்ளது. கண்டத்தட்டு இயக்கக் கோட்பாட்டின்படி புவியின் மேலோடு அடிக்கற்கோளம் (lithosphere), உள் மென்பாறைக்கோளம் (asthenosphere) எனும் இரண்டு அடுக்குகள் அல்லது படைகளால் ஆனது. கற்கோளம் மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்து கொண்டு போகக் கூடியது. [In plate tectonics, Earth’s outermost layer, or lithosphere — made up of the crust and upper mantle — is broken into large rocky plates. These plates lie on top of a partially molten layer of rock called the asthenosphere & can move over the the molten upper portion of the mantle from two to 15 centimetres (one to six inches) per year] எனவே இந்த புதிய திருப்பம் பிலிப் ஸ்க்லேட்டரின் கொள்கையை மீண்டும் திருப்பி பார்க்க வைத்தது. அதாவது ஆபிரிக்க, மடகாஸ்கர், இந்தியா ஒரே நிலப்பரப்பாக இருந்து இருக்கும் என்றும், பின் இணைக்கப் பட்ட படத்தில் காட்டியவாறு, அவை பிளவுபட்டு வேறாக, எதிர் திசையில் சறுக்கி போய் இருக்கலாம் என நம்பப் படுகிறது. எனவே இலெமூர் [Lemurs] என்ற விலங்கு அவை ஒன்றாக இருந்த கால பகுதியில் மடகாஸ்கரில் இருந்து இந்தியா சென்று இருக்கலாம் என்பது இப்போது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. எனவே இது குமரி கண்டம் கடலில் மூழ்கியது என்ற கொள்கையை அல்லது யோசனையை முற்றாக நீக்குகிறது அல்லது வலுவிழக்க செய்கிறது எனலாம். எப்படியாகினும், தமிழ் அறிஞர்கள், சிறந்த வானியலாளர்கள், மற்றும் கணித வல்லுநர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, உண்மையை அறியும் ஆய்வில் ஈடுபட்டு, குமரி கண்டம் என்ற கொள்கை உண்மையா பொய்யா என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்து இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 09 தொடரும்
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
அன்பு Justin க்கு "கனேடிய விசா" கூட திருமணத்திற்கு காரணமாக, மையமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இருக்கிறது. போலி திருமணங்கள் செய்து விசா பெறுவது யாரும் அறிந்ததே . அது ஒருவர் ஏமாற்றும் செயல் ஆனால், அதே கனடா , இங்கு எதை, எவர் எவரை திருமணம் என்று அங்கீகரிக்கிறது என்று தெரியுமா ? உண்மையானது பொய்யானது என்பதை விட, அந்த கனடா அங்கீகரிக்கும் இருவரும் சட்டப்படி இணைந்து இருக்கிறார்களா என்பதிலேயே கவனம் செலுத்துகிறது அது சரியா பிழையா என இங்கு நான் வாதாட வரவில்லை. சட்டத்தில் உள்ள ஓட்டையை தமக்கு சாதகமாக ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. அது முற்றிலும் பிழையான செயலும் உதாரணமுமே "இதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று வெறுத்துப் போய் இருக்கிறேன்" எம் வாதத்தின் தலைப்புடன் ஒத்துப் போகக்கூடியதாக இதில் எண்ணத்தை விளங்கப்படுத்த இருக்கிறது? மற்றும் வெறுப்பதற்கு ?? "அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டிருக்கிறீர்கள். இது கேள்வி? இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியவில்லையென்றால்" அன்பு மட்டும் சட்டபூர்வமான திருமணத்துக்கு காரணம் அல்ல. அதுவும் ஒன்று என்பதே உண்மை !! "செருப்பிற்காக காலை வெட்டும்" வேலை எனக்குத் தெரியாது. நீங்க சொல்லித்தான் கேள்விப்படுகிறேன். நான் காலுக்கு தான் செருப்பு போடுறவன் , அளவு இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விடுவேன் , அவ்வளவு தான். சமயம், மூட நம்பிக்கைகள் எல்லாம் நான் எறிந்தவைகளில் அடங்கும் "வாசிப்பவர்களுக்கு எந்தப் பக்கம் ஓட்டை இருக்கிறதென்பது தெளிவாகத் தெரியும்! கவலை வேண்டாம்." நான் கவலைப்பட ஒன்றுமே இல்லை, அப்படி ஒன்றை நான் யோசிக்கவே இல்லை. நீங்க யோசித்து சொல்லித்தான் இப்ப வாசிக்கிறேன். கவலைப்பட வேண்டாம்?? நன்றி
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
அன்பு Justin க்கு அன்பு அன்புக்கே அதில் குழப்பம் இல்லை அண்ணன் தங்கை, அம்மா மகன் இப்படி எங்கும் அன்பு அன்புக்கே அது உலகலாவியது அதனால்த்தான் அன்பே கடவுள் என்றான் பண்டைய தமிழன் அதில் எவருக்குமே ஆட்சேபனை இல்லை ஆனால் அதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு ? திருமணம் இல்லாமலே அன்பு அன்புக்கு என்று யாரும் அல்லது குறிப்பிட்ட இருவரோ அல்லது பலரோ வாழலாம்?? ஒருவரும் தடுக்கப் போவதில்லை அது தெரியாதா?? "சமூகம் மாறுகிறது, புதிய புரிதல்களும், இது சரி, இது தவறு என்ற புதிய தகவல்களும் கிடைக்கின்றன. சொற்களின் - குறிப்பாக மனிதர்கள் ஆதியில் உருவாக்கிய கலாச்சாரக் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சொற்களும் புதிய அர்த்தம் பெறுகின்றன. ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்." அது முற்றிலும் சரி . அது தான் மூட நம்பிக்கைகளுக்கு வழிவிடுகிறது ஆனால் அதற்கும் திருமண பந்தத்தில் வாழ்வதற்கும் என்ன தொடர்பு? திருமணம் செய்ய விரும்பாதவர்கள் தாராளமாக living together / ஒன்றாக இணைந்து வாழலாம் இன்றைய சமூக அம்மைப்பில். ஒரு தடையும் இல்லை "ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்." இது தான் எனக்கு புரியவில்லை ?? சாப்பிடு என்றால் சுமேரிய காலத்தில் இருந்து சாப்பிடுதல். அடிப்படை கருத்து மாறவில்லை அது போலவே மற்ற சொற்களும். மாறியவை அந்த சொற்களின் அடிப்படை கருத்து அல்ல, ஆனால் அந்த அடிப்படை கருத்து மாறாமல் விரிவடைகின்றன என்று கூறலாம். திருமணம் என்ற சொல் பலதாரமாக அல்லது கூட்டாக இருந்து , பின் ஒரு தாரமாக , ஒருவருக்கு ஒருவராக மாறியது. ஆனால் திருமணம் என்ற செயலில் மாற்றம் இல்லை. மற்றது நான் உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அல்லது ஐயப்பாடுகளுக்கும் கோடிட்டு மறுமொழி தந்து கொண்டே இருக்கிறேன் ஆனால், நீங்கள் என்னுடைய ஒவ்வொரு கேள்விகளுக்கோ, ஐயப்பாடுகளுக்கோ நேரடியாக பதில் இல்லை. அது குப்பையில் போகிறது ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு ஒன்றை சேர்த்துக்கொண்டு / சொல்லிக்கொண்டு போகிறீர்கள் சேர்ப்பதில் பிழை ஒன்றும் இல்லை, ஆனால் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, அதற்கு சான்றாக அல்லது மேலதிகமாக சொல்லலாம், அதுவே வாதத்தில் சரியானது . அது புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன் அல்லாவிடால் அது விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் அப்படித்தான் அது இருக்கிறது நன்றி துளி/DROP:669 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01]: https://www.facebook.com/groups/978753388866632/permalink/2570752476333374/ துளி/DROP:670 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02]: https://www.facebook.com/groups/978753388866632/permalink/2584280864980535/
-
God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
அன்பு Justin க்கு சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது என்பதில் ஐயம் இல்லை ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு பொது இயல்பு மாறவில்லை, ஆக நீங்கள் இன்றைய வசதியை பொறுத்து அதை தங்கள் விருப்பம் படி சரிபண்ணுகிறீர்கள் . அவ்வளவுதான். ஆனால் அடிப்படை மாறவில்லை ?? அது கூட புரியவில்லை என்றால், நான் இனி எழுதுவத்துக்கு ஒன்றும் இல்லை தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? இதற்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு ?? அது அவர்களின் உடலின் சில குறைபாடுகளால், அல்லது அவர்களின் தனிப்பட்ட எண்ணங்களால் அதை இன்னும் அல்லது இன்றைய விஞ்ஞானத்தால் சரிபண்ண முடியாத சூழலில், அப்படியான ஒன்றுக்கு போகிறார்கள் . அவ்வளவு தான் சிந்திக்க தெரிந்தால், அது புரியும். குழப்பத் தேவை இல்லை ?? பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின் அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே? ஆமாம், அது தெரிவு, இயற்கை அல்ல?? தெரிவு அறிவியல் வளர்ச்சியுடனும், நவீனமாக்களுடனும் வளரும் ஒன்று!! அவ்வளவு தான். அதற்கும் திருமணம் என்ற சொல்லுக்கும், செயலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள் ?? உங்கள் கருத்தை நீங்கள் எப்படியும் சொல்லலாம். அது உங்கள் சுதந்திரம் . அவ்வளவுதான் !! ஆனால் அதில் அடிப்படை இருக்கவேண்டுமே ?? நன்றி