Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"தந்தை எனும் தாய்" [இன்று 15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல்]
நன்றிகள் எல்லோருக்கும்
-
"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்"
நன்றிகள் எல்லோருக்கும்
-
'உறக்கம்'
'உறக்கம்' இன்று நடைமுறையில் கூடுதலாக sleep என்ற பொருளில் பாவிக்கப்படும் சொல்களான 'தூங்குதல்', 'தூக்கம்', 'நித்திரை' போன்ற சொற்களை சங்க இலக்கிய காலத்தில் காணமுடியவில்லை. அங்கு தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தான் நாம் காண்கிறோம். மேலும் நித்திரை என்பது சம்ஸ்கிருதச் சொல் 'nidra' ['निद्रा'] வில் இருந்து பிறந்த சொல். தமிழில் இதற்கு 'உறக்கம்', 'துயில்', 'துஞ்சுதல்' போன்ற அழகான சொற்களை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மார்ச் 15 - 'உலக உறக்க தினம்" எல்லா நாடுகளிலும் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு நாள் நம்முடைய அவசர வாழ்க்கையில் நாம் பகுதியாக நிராகரிக்கும் அல்லது தள்ளி போடப்படும் உறக்கத்தின் முக்கியத்தை எல்லோர் காதிலும் உரக்கச்சொல்ல இது ஒரு அரிய வாய்ப்பாக எமக்கு அமைகிறது. 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் எட்டு மணித்தியால வேலை கட்டுப்பாட்டை கோரி வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப் பட்டது, அவர்களின் முதன்மை முழக்கம் "எட்டு மணித்தியால வேலை, எட்டு மணித்தியால உறக்கம், எட்டு மணித்தியாலம் உங்கள் தேவைக்கு". இது ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பதை மேலோட்டமாக வரையறுக்கிறது. அவ்வகையில், நாம் உறக்கத்துக்கு கால் வாசியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு மனித ஆயுட்காலத்தை பாவிக்கிறோம். பொதுவாக மனதையும் உடலையும் மூடும் காலமாக நாம் உறக்கத்தை நினைக்கிறோம். ஆனால், உறக்கத்தைப் பற்றி சரியாக அறிவதற்கு, உண்மையில் அப்பொழுது என்ன நடக்கிறது என்பதை நாம் கொஞ்சம் விரிவாக பார்க்கவேண்டும். 1950 ஆம் ஆண்டுக்கு முன்பு உறக்கம் என்பது உயிர்ப்பற்ற பணி அல்லது செயலற்று இருக்கும் காலம் என்றே பலர் நம்பினர். இதன் போது உடலும் மூளையும் செயலற்றதாக இருப்பதாகவும் கருதினர். அதனால் தான் திருவள்ளுவர் கூட "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்" என்று கூறிச் சென்றார். ஆனால் இது உண்மையல்ல. இது எதோ சில செயல்களில் உள்ள காலமே. உதாரணமாக, முக்கியமான, உயிர் வாழ்வுக்கு தேவையான, பல செயலாக்கம், மறுசீரமைப்பு, மற்றும் பலப்படுத்துதல் அப்பொழுது ஏற்படுகிறது - இவை வாழ்க்கை தரத்துடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. அது மட்டும் அல்ல இவை மனம் மற்றும் உடல் நலத்தை பாதிக்கக் கூடியவையும் ஆகும். உறக்கத்தைப் பற்றிய ஆய்வாளர்களின், எமக்கு ஆச்சரியம் தரும் கண்டுபிடிப்புகளையும் அவர்களின் சுருக்கமான கண்ணோட்டத்தையும், இன்னும் எதை அறிய ஆய்வுகள் செய்கிறார்கள் என்பதையும் கீழே பார்ப்போம் எல்லா உறக்கமும் ஒரே மாதிரி அல்ல உதாரணமாக, நீங்கள் உறங்கும் நேரம் முழுவதும், உங்கள் மூளை மீண்டும் மீண்டும் இரண்டு வெவ்வேறு உறங்கு நிலைக்கூடாக சுழற்சிக்கு உள்ளாகிறது. அவை விரைவு அற்ற விழியியக்க நிலை மற்றும் விரைவு விழியியக்க நிலை [non-REM sleep and REM (rapid-eye movement) sleep] ஆகும். இதில், மனித உடல் உறங்கும் பொழுது , முதலில் வருவது விழி அசைவற்ற உறக்கம் ஆகும். அவை நாலு நிலைகளைக் கொண்டது. இதனின் முதல் நிலை நீங்கள் உறங்கிய உடனேயே நிகழ்கிறது. இது விழித்திருப்பதுக்கும் உறக்க நிலைக்கும் இடைப்பட்டது. எனவே இது மிகவும் குறுகிய கால அளவைக் கொண்டது. இரண்டாவது நிலை லேசான உறக்கத்தை உள்ளடக்கியது. இங்கு இதய துடிப்பு மற்றும் சுவாசம் சீராவதுடன் உடல் வெப்பமும் வீழ்ச்சி அடைகிறது. மூன்றாவது நாலாவது நிலை ஆழ்ந்த உறக்கம் ஆகும். இங்கு அந்த நபருக்கு சில உடல் அசைவுகள் இருப்பதுடன், அந்த நபரை எழுப்புவது மிகவும் கடினம் ஆகும். கற்றல் மற்றும் நினைவகம் [learning and memory] போன்றவற்றிற்கு, விரைவு விழியியக்க நிலை தான் முக்கிய பங்கு வகுக்கிறது என முன்பு நம்பியிருந்தாலும், புதிய ஆய்வுகள் விரைவு அற்ற விழியியக்க நிலை இதற்கு முக்கியம் என்பதைக் சுட்டிக்காட்டுவதுடன், உறக்கத்தின் ஓய்வுக்குகந்த கட்டமாகவும் மற்றும் மறுசீரமைப்பு கட்டமாகவும் இது [the more restful and restorative phase of sleep] தொழிற்படுவது தெரிய வந்துள்ளது. இறுதியாக விரைவு விழியியக்க நிலை ஏற்படுகிறது. இது முன்னையதை விட ஆழமானது, இங்கு கண்கள் மற்றும் கண் இமைகள் படபடக்கின்றன, இங்கு 'brain waves' எனப்படும் மூளை அலைகள், விழித்திருக்கும் போது உள்ள மூளை அலைகளைப் போலவே ஒத்து இருக்கின்றன. அத்துடன் சுவாசம் ஒழுங்கற்றதாக இருப்பதுடன், பெரும்பாலான கனவுகள் இந்த நிலையில் தான் ஏற்படுகின்றன. ஆனால் மூளை உங்கள் தசைகளை முடக்குகிறது, அதனால் தான் நீங்கள் கனவுகளைச் செயல்படுத்துவதில்லை, அதாவது கனவில் காணும் காட்சிக்கு பதில் அல்லது பதில் நடவடிக்கை செய்வதில்லை. இந்த முழு சுழற்சியும் ஒருவரின் உறக்கத்தில் நாலு ஐந்து தடவை நடைபெறுகிறது. உங்கள் உடல் உறக்க கட்டுப்பாடுகளால் கட்டப்பட்டது ஆய்வாளர்களின் முடிவின் படி, இரண்டு முக்கிய செயல்முறைகள் ஒருவரின் உறக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது. அவை சர்க்காடியன் தாளங்கள் [ரிதம்] மற்றும் உறக்க உந்தல் [circadian rhythms and sleep drive] ஆகும். சர்க்காடியன் தாளங்கள் 24 மணி நேர சுழற்சியில் உடல் செயல்பாடு, மன மற்றும் மனித நடத்தை ஆகியவற்றின் அனைத்து மாற்றங்களையும் பின்பற்றுகின்றன. மூளையில் உள்ள குறிப்பிட்ட சில இயற்கையான காரணிகளால் கட்டுப்படுத்தப் படுவதைத் தவிர, இந்த சர்க்காடியன் தாளம் பொதுவாக ஒரு நபரைச் சுற்றியுள்ள சூழலில் ஒளி நிலைகளால் பாதிக்கப்படுகிறது. ஒரு நபரின் சர்க்காடியன் தாளங்கள் உறக்க சுழற்சிகள், ஹார்மோன் உற்பத்தி, உடல் வெப்பநிலை மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளை தீர்மானிக்கிறது. உதாரணமாக அனைவருக்கும் பொதுவாக ஒரு நிலையான தினசரி உள்ளது. இந்த வழக்கம் கொஞ்சம் மாறினால், அதன் தாக்கத்தை நாள் முழுவதும் உணர முடியும். உதாரணமாக, நீங்கள் வழக்கத்தை விட தாமதமாக எழுந்தால், நாள் முழுவதும் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். உங்கள் செயல்பாடுகள் உங்கள் உடலின் உயிரியல் அட்டவணை அல்லது மணிநேரங்களைப் பின்பற்றாததால் இது நிகழ்கிறது. இதுவே உங்கள் உடலின் இயற்கையான தாளம் ஆகும். உறக்கத்தை தூண்டும் செயல் பாட்டையே உறக்க உந்தல் என்கிறோம். உணவுக்காக உடல் பசிப்பது போல உங்கள் உடலும் உறக்கத்திற்கு ஏங்குகிறது. அந்த ஏக்கமே உறக்க உந்தல் ஆகும். நீங்கள் பசியாக இருக்கும்போது சாப்பிட உங்கள் உடல் உங்களை கட்டாயப்படுத்த முடியாது, ஆனால், நீங்கள் சோர்வாக இருக்கும்போது, அது தானாகவே உங்களை உறங்க வைக்கும். அந்த செயல் தான் உறக்க உந்தல் ஆகும். உதாரணமாக, நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்தில் இருந்தாலும் அல்லது உங்கள் காரை செலுத்திக் கொண்டு இருந்தாலும் கூட, அது உங்களை உறக்கத்தில் ஆழ்த்திவிடும். மேலும் நீங்கள் உறக்க மின்மையாலோ அல்லது வேறு ஒரு காரணத்தாலோ சோர்வு அடைந்தால், நீங்கள் ஒரு சில நொடிகள் நுண் உறக்கத்துக்கு (microsleep) போகலாம். அதாவது நீங்கள் விழித்திருக்கும் வேளையிலே, கணப் பொழுதுகள் நீடிக்கும் மிகச் சிறிய உறக்கத்துக்கு நீங்கள் உள்ளாகலாம். இது ஒரு நொடி முதல் அரை நிமிடம் வரை நீடிக்கலாம். ஒருவர் சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையிலோ, ஆபத்தான இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் வேளையிலோ நுண்துயில் வருமாயின் விளைவுகள் விபரீதமாகி விடும். ஆகவே ஒழுங்கான போதுமான உறக்கம் மிக மிக அவசியம். ஏன் உங்களுக்கு உறக்கம் அவசியம்? நீங்கள் ஒரு மோசமான இரவு உறக்கத்தின் பின், உங்கள் கண் பனிமூட்டம் போல் மங்கலாக [foggy] இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள். எனவே, உறக்கம் மூளையின் செயல்பாட்டை கணிசமாக பாதிக்கிறது என்பதில் உங்களுக்கு ஆச்சரியம் இருக்காது. ஆகவே, நீங்கள் முதலில் ஆரோக்கியமான அளவு உறக்கம் அவசியம் என்பதை அறிவீர்கள், ஏனென்றால், மூளையின் உள்ளீடிற்கு ஏற்ப சரிப்படுத்த மூளையின் நெகிழ்த்தன்மை அல்லது மூளையின் திறன் அவசியம் [“brain plasticity,” or the brain’s ability to adapt to input.]. உதாரணமாக, நாம் சொற்ப நேரமே உறங்கினோம் என்றால், நாம் காலையில் கற்றுக்கொண்டவைகளை மூளை செயல்முறை படுத்தவோ அல்லது அவைகளை எதிர்காலத்தில் ஞாபகத்தில் வைத்திருக்கவோ எங்களுக்கு அதிக சிக்கல் ஏற்படலாம். அது மட்டும் அல்ல விரைவாக எதாவது ஒன்றில் தேவைக்கு ஏற்ப கவனம் செலுத்துவது மற்றும் பதிலளிப்பது அல்லது பொருத்தமான பதில் நடவடிக்கை கையாளுவது கடினம் ஆகலாம். மேலும் ஆய்வுகள், மூளை செல்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுவதை உறக்கம் ஊக்குவிப்பதாக காட்டுகிறது. அது மட்டும் அல்ல, உடலின் மற்ற பகுதிகளுக்கும் உறக்கம் மிக முக்கியம் ஆகும். பொதுவாக மக்களுக்கு போதுமான உறக்கம் இல்லாத போது, அவர்களின் உடல்நல அபாயங்கள் [health risks] அதிகரிக்கின்றன. உதாரணமாக மனச்சோர்வு, வலிப்பு [திடீர் நோய்பிடிப்பு], உயர் இரத்த அழுத்தம், மோசமடையும் ஒற்றைத் தலைவலி, வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி, போன்ற அறிகுறிகளுடன் [Symptoms of depression, seizures, high blood pressure and migraines worsen. Immunity is compromised,] நோய் மற்றும் தொற்றுக்களுக்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கும். மேலும் உறக்கம் வளர்சிதை மாற்றம் அல்லது அனுசேபத்துக்கு [Metabolism] முக்கிய பங்கு வகுக்கிறது. இங்கு வளர்சிதை மாற்றம் என்பது உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி வேதி வினைகள் [Chemical reaction] ஆகும். உதாரணமாக, ஒரு இரவு உறக்கத்தை தவறவிடுவது, முன் நீரிழிவு நோய்க்கு [pre diabetic state] ஒரு ஆரோக்கியமான நபரை மாற்றலாம்? இவ்வாறு ஆரோக்கியத்துக்கும் உறக்கத்துக்கு பல முக்கிய தொடர்புகள் உண்டு. அவைகளில் சிலவற்றை கீழே தருகிறேன். நல்ல உறக்கம் ஒருவரின் கவனத்தை அல்லது மனதை ஒருமுகப்படுத்துவதையும் மற்றும் நினைவு ஆற்றலையும் மேம்படுத்துகிறது. உங்கள் தீர்மானம் எடுக்கும் திறனையும் மற்றும் நீண்ட கால நினைவாற்றலையும் உறக்கம் இல்லாமை வெகுவாக பாதிக்கிறது. அதுமட்டும் அல்ல, காலப்போக்கில், குறைந்த உறக்கம் அறிவாற்றல் வீழ்ச்சிக்கும் ஞாபக மறதிக்கும் மற்றும் டிமென்ஷியா [மறதி நோய்] ஏற்படுவதற்கும் பங்களிக்கின்றன. வயது முதிர்ந்தவர்களுக்கும், எல்லோரும் போல், ஒரு நாளைக்கு ஏழுக்கும் ஒன்பது மணித்தியாலத்துக்கும் இடையில் உறக்கம் வேண்டும். ஆனால், வயது போனவர்கள் பொதுவாக நேரத்துடன் உறக்கத்துக்கு போய் நேரத்துடன் விழிக்கிறார்கள். உரக்க பற்றாக்குறை அறிகுறிகள் தசை வலிமை மற்றும் நீடித்துழைக்கும் திறமை அல்லது ஆற்றல் [சகிப்புத்தன்மை] குறைகிறது, முக்கிய உறுப்புகள் தன் முழுத் திறனில் அல்லது உகந்த அளவில் செயல்பட முடியாமல் போகிறது. வலியை தாங்கும் திறன் அல்லது வலி சகிப்புத்தன்மை குறைகிறது. அத்துடன் உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்திறன் குறைகிறது. இன்சுலின் இரத்தத்தின் சர்க்கரையை குறைக்க உதவும் ஒரு புரதம் ஆகும். நோய் எதிர்ப்பு அமைப்பும் வலு இழப்பதுடன், அது தொற்று மற்றும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் ஏன் குறைந்த அளவு உறக்கம் கொள்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு, பெரும்பாலானவை மிகவும் தனிப்பட்டவை ஆகும். ஆக்கம் கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் பி கு : அண்ணாவிடம் [கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்] நான் சென்றபோது எடுத்தப்படம் இணைத்துள்ளேன்
-
"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்"
"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்" "சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!" "சோர்வாக இருக்கே என்று பின்போடாமல் சோதனை வருகுதென மனம் தளராமல் சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!" "கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!" "உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும் உயர்ந்த எண்ணங்களே அங்கு ஒளிரட்டும் உங்கள் வெற்றியே உங்கள் பலமாகட்டும் உதவாக்கரை என்றவர்கள் காலில் விழட்டும்!" "போகும் பாதையை தெளிவாக அறிந்து போதும் என்றமனதுடன் விட்டு விலகாமல் போவார் வருவார் சொற்களை கேட்காமல் போதை கொண்டு கொள்கையில் முன்னேறு!" "வெற்றிபடிக்கு பின்னல் பல தோல்விப்படிகள் வெறிகொண்டு தோல்விகளை கடந்து செல் வெற்றிகள் ஒன்றும் ஒரேஇரவில் வராது வெளிச்சம் காட்டி உன்னைக் கூப்பிடாது!" "நல்லதை மற்றவர்களுக்கு என்றும் செய்யுங்கள் நச்சுப் பாம்பாய் மோசமாய் பேசாதீர்கள் நற்பெயர் தங்கத்தை விட உயர்ந்தது நட்புடன் பழகி தரமாக வாழுங்கள்!" "சாதனைகள் புரிய கனவுகள் வேண்டும் சாத்திரம் பார்த்து வாழ்வு அமைவதில்லை சாட்சியாக உன்பாதை மற்றவர்களுக்கும் இருக்கும் சாந்தமாய் அதை தொடர்ந்து மகிழ்வாயாக!" "எதிர்த்து போராடுவது தோல்வியல்ல, முயற்சி எங்கு விடாமுயற்சியோ அங்கு வளர்ச்சி எங்கு வளர்ச்சியோ அங்கு வெற்றி எனவே மனிதா எதிர்த்து மல்லாடு!" "திறந்த மனநிலையுடன் வாழ்வை அணுகினால் தித்திக்க வைக்கும் உன்னை வெற்றியாக்கும் திறக்காத மூடியமனம் மாற்றம் அடையாது திறம்பட இயங்க ஒன்றையும் மாற்றாது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [1] Don’t make excuses, make improvements 2] Don’t stop when you’re tired, stop when you’re done 3] Honesty is a very expensive gift, do not expect it from cheap people 4] Work Hard in Silence, Let Your Success Be Your Noise 5] Don’t get side-tracked by people who are not on track 6]Behind every successful person are a lot of unsuccessful years 7]Live in such a way that if someone spoke badly of you, no one would believe it 8]Sometimes when you follow your dream, it opens the door for others to be able to follows theirs 9]Just because you are struggling does not mean you are failing 10] The hardest thing to open is a closed mind]
-
"தந்தை எனும் தாய்" [இன்று 15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல்]
"தந்தை எனும் தாய்" [இன்று 15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல்] தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, “அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ “எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [நானும்] அடியவர்க்கு [பிள்ளைக்கு] அவரது பிழை பொறுத்து வாழும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப் பட்டேன். 08 / 06 / 2007 திகதி அன்று. ஆமாம் திடீரென மனைவிக்கு தோன்றிய தண்டு மூளைச் சவ்வுக் காய்ச்சல் [meningitis], பதினாறு மணித்தியாலத்துக்குள், நானோ, பிள்ளைகளோ எதிர்பாராதவிதமாக காலை ஐந்து மணிக்கு அவரின் உயிரை பறித்துவிட்டது. "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள்! சிந்தை ஓடவில்லை?- எம் மனம் ஆறவில்லை? எந்தை அவள்-கண் மூடி உறங்கிவிட்டாள்!!" தாயற்ற குழந்தை போலத் என் குழந்தைகளை துன்புற வைத்துவிட்டான். இப்ப நான் தந்தையும் தாயாக இரு வேறு நிலையில், ஆனால் ஒருவனாக செயல் பட வேண்டிய கட்டாயம் உணர்ந்தேன். “நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத் தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே“ ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனும் அத்துவிதக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள பாடல் இது. அது போலத்தான் நானும் தந்தையாகவும் தாயாகவும் இனி கவனமாக வாழ்வை நகர்த்தவேண்டும் என்று தாயுமானவரின் இந்த வரி எனக்கு உறுதியையும் வலுவையும் கொடுத்ததை நான் மறுக்கவில்லை. படித்துக்கொண்டு இருக்கும் இளம் அகவையில், தாயை இழப்பது மிகப்பெரிய மோசமான இக்கட்டான சூழ்நிலை என்றாலும், அவர் மிகவும் கடுமையாக குடும்பத்துக்காக, பிள்ளைகளுக்காக நல்ல பாடசாலை, நல்ல வாழ்விட சூழல், வருங்காலத்தில் திறமையான தொழில் வாய்ப்பு பெற நல்ல படிப்புகள் எவை, எந்த பல்கலைக்கழகம் முழுமையாக இவ்வற்றை எல்லாம் வழங்குகிறது என்றெல்லாம் ஏற்கனவே தேடி தேடி வைத்தவை எனக்கு ஆறுதல் அளித்தன. அவர் என்னுள் இருந்து இயக்குவது போல் இருந்தது. அர்த்தநாரீசுவரர் போல், தாயும் தந்தையாக வாழ்வு அன்றில் இருந்து ஆரம்பித்தது. பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான் என்று புறநானூறு: "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;" கூறுவது போலத்தான் நானும் தாய்மையை ஒரு நேரத்தில் வெளிக்காட்டியும், ஆனால், அதேநேரத்தில், அதை மறைத்து தந்தையாக தனித்தும் இயங்க தொடங்கினேன்! ஆனால், எனோ தெரியாது, என் மனம் அவர்கள் தாயில்லா பிள்ளை என்று கொஞ்சம் அதிகப்படியாக வசதியை அவர்கள் எப்பவும் கவலைப்படக்கூடாது என்று கொடுத்துவிட்டேன் என்று இன்று எண்ணுகிறேன்! என்னுள் தாயும் இருந்து இயக்குகிறாள் என்பதை எப்படி மறந்தேனோ, நான் அறியேன் பராபரமே! "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ்" என்று ஐங்குறுநூறு- நீலத் திருமேனியும் தூய ஆபரணங்களும் கொண்ட அம்பிகையை ஒரு பாதியிலே கொண்ட சிவபெருமானுடைய இரண்டு திருவடி நிழலின் கீழே - அதாவது "தந்தை எனும் தாய்" யாக என் நிழலில் அவர்கள் இன்று என்பதை ஏன் நான் நினைக்கவில்லை? அது தான் எனக்கு புரியவில்லை?? என்றாலும் தாய் ஏற்கனவே வரிசைப்படுத்தி இருந்த வழிகாட்டி என்னுள் இருந்து இயங்க, அதே வழியில் அவர்கள் பல்கலைக்கழக பட்டங்கள் பெற்று இன்று நல்ல நிலைக்கு வாழ்வில் வந்து, திருமணமும் செய்து மகிழ்வாக இருக்கிறார்கள் . எப்படியாகினும் தாயுமானவர் அறிவுரை வழங்கியது போல: “என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும் கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; போதுமான காலம் கழிந்தபின், தன் கன்றின் நலன் நோக்கி, தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுவது போல, ஒருவேளை கொஞ்சம் அவர்களுக்கு பொறுப்பு ஏற்படுத்தி இருந்தால் இன்னும் மேலாக அவர்களின் வாழ்வு அமைந்து இருக்கலாம்? நம்மைப் பற்றி நமக்கும் மட்டுமே தெரியும் ஒரு ரகசியம் தான் ‘நான்! இனம்புரியா எண்ணங்களோடு ஒழிந்து கிடக்கும் ஆழ்மன ‘நான்; தான் அது! இதன் வெளிப்பாடு நம்மையறியாமல் அப்பப்ப சூசகமாக பேச்சிலோ எழுத்திலோ உடல் மொழியிலோ நடந்துக் கொண்டு தான் இருக்கும். அப்படி தந்தை என்ற நான், தந்தை எனும் தாய்; என்பதை மறந்ததே இதற்கு காரணம். ஆனால் பேரப்பிள்ளைகள் பிறக்க, அவர்கள் இப்ப மெல்ல மெல்ல ஒவ்வொரு பொறுப்பாக தாங்களே உணர்ந்து கடமையாற்றுவது, கட்டாயம் தாயின் நிழல், அவர்களை வெளிப்படையாக நகர்த்துவதை மகிழ்வாக நான் காண்கிறேன்! தந்தை எனும் தாய்; ஆகிய நானும் இனி கவலைப்பட ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளின் - தாயின் - செயலே!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்"
அன்பு ஈழப்பிரியனுக்கு "உடப்பு மட்டுமல்ல நீர்கொழும்பு பக்கமும் தமிழர்கள் இப்போது சிங்களவர்களாக இருக்கிறார்கள்." உடப்பு இன்னும் தமிழ் கிராமமே, நான் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை செய்த காலத்தில், சிவலிங்கம் என்ற உடைப்பு வாசியே என் office peon. அதேநேரம் எனக்கு சிங்களம் தெரியாததால், என்னிடம் வரும் சிங்கள வேலையாட்களின் குறைகளை, தேவைகளை மொழிபெயர்ப்பாளராகவும் எனக்கு உதவி புரிந்ததை நான் என்றும் மறக்க மாட்டேன். இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டு அரியணைக்குப் போரிட்ட போது அதற்கு வேண்டிய படைகளை தமிழ்நாட்டில் இருந்தே திரட்டி வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை. இன்று சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் கரவா, சலாகமுவ, துராவ போன்ற “சாதிகள்” 16 ஆம் நூற்றாண்டில் கறுவா பட்டை உரிக்கவும் மரமேறவும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளர்களே! அதேபோல, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதப் பரவர் அல்லது பரதவர் 20 ஆம் நூற்றாண்டில் இனமாற்றம் செய்யப்பட்டனர். இதனை செய்து முடித்தவர் பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர். அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். (This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese -https://en.wikipedia.org/wiki/Negombo_Tamils.) தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் சிங்கள – பவுத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு இந்த ஒருமைப்படுத்தல்தான் காரணம். “பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர்வரலாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார், “இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது. என்று கூறுகிறார்
-
"கலித்தொகையில் வாழ்வியல்" / Kalithogai 133 - An Ethical poem"
"கலித்தொகையில் வாழ்வியல்" / Kalithogai 133 - An Ethical poem" நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகள், ஒவ்வொன்றும் ஒரு நவரத்தினம்! அகத்திணை கருத்துக்களே பெரும்பாலும் இடம்பெறும் கலித்தொகையில் இப்பாடல் வாழ்வியலுக்குத் தேவையான ஒன்பது அறக்கருத்துக்களை ஒரே பாடலில் சொல்லியிருத்தல் ஒரு பெரும் சிறப்பு ஆகும். "'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை; 'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்; 'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை; 'நிறை'எனப்படுவது, மறை பிறர் அறியாமை; 'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்; 'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்." [கலித்தொகை 133] ஆற்றுதல் என்று சொல்லப்படுவது உண்மையிலே வறியவர்களுக்கு ஒன்றைக் கொடுத்து உதவுவது தான். போற்றுதல் என்பது கூடி உறவு கொண்டவர்களை என்றைக்கும் பிரியாது இருத்தல். பண்பு என்று சொல்லப்படுவது உலக நிலைமை அறிந்து நடத்தல். அன்பு என்று சொல்லப்படுவது தன் சுற்றத்தினரைக் கோபிக்காது இருத்தல். அறிவு என்று சொல்லப்படுவது அறிவற்றவர்கள் சொல்வதை எல்லாம் பொறுத்துக் கொள்ளுதல். செறிவு என்று சொல்லப்படுவது ஒன்றைச் சொல்லிவிட்டு நான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்துப் பேசாமல் இருத்தல். மறை எனப்படுவது மறைக்கப்பட வேண்டியவற்றைப் பிறருக்குத் தெரிய விடாது காத்தல். முறை என்று சொல்லப்படுவது தீங்கு செய்தது தங்களுக்கு வேண்டியவராக இருந்தாலும் உயிரை எடுத்து விடுதல். பொறை என்று சொல்லப்படுவது எம்மை மதிக்காதவர்கள்; இடத்திலும் பகை கொள்ளாது பொறுமையோடு இருத்தல். இந்தச் சங்க இலக்கியத்தில் சில நீதி நியாயங்கள் பேசப்படுகின்றன. அவற்றை அறங்கள் என்றார்கள் எம் முன்னோர்கள். ஏன் அறங்கள் என்றார்கள் என்றால் இந்த உலகமே அழிந்தாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்பது அறம். தமிழ் மக்களாகிய நாம் எத்தனையோ நூற்றாண்டுகளக்கு முற்பட்ட இந்த ஒன்பது வரைவிலக்கணங்களையும் விளங்கிக் கொண்டு எம்வாழ்க்கையில் பின்பற்றுவோமாக இருந்தால், எம் சமுதாயத்தில் பல தீமைகளை விலக்கிக் கொள்ள முடியும்! Kalittokai is a classical Tamil poetic work and the sixth of Eight Anthologies (Ettuthokai) in the Sangam literature. It is an "akam genre – love and erotic – collection par excellence", according to Kamil Zvelebil. This song from Nallanthuvanar is easily the best of all such poems in Kalithogai: This is a fantastic song! The ethical values emphasized in this poem are of great quality!! "Goodness is helping one in distress; Support is not deserting one who is dependent; Culture is to act in unison with the ways of the world; Love is not surrendering ties with one’s kin; Wisdom is to ignore the advice of the ignorant; Honesty is not to go back on one’s words; Integrity is to ignore others’ faults; Justice is awarding punishment without partiality; Patience is to suffer the ill-disposed." [Just look at the language and use of words in Kalithogai. You will be able to understand the meaning better than the other anthologies]
-
15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல் / Birthday Memoriam [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM]
15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல் / Birthday Memoriam [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM] "பொன்னான இதயம் ஜூன் எட்டில் நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சியை தடுத்ததோ ஜூன் பதினைந்து இனி பிறந்தநாள் நினைவானதோ?" "நினைவுகள் பொன்னானவை யாரோ சொன்னது உண்மையாக கூட அது இருந்தாலும் எமக்கு நினைவுகள் வேண்டவே வேண்டாம் எமக்கு நீ மட்டுமே வேண்டும் வேண்டும்!" "ஆதரவும் உழைப்பும் உன் வாழ்வு குடும்பமே உன் முதல் சொத்து அனைவரையும் அணைப்பாய் இயன்றதை செய்வாய் இப்பநாம் அந்தபொன்னான நினைவில் வாழ்கிறோம்!" "உன்படுக்கைக்கு அருகில் தினம் அமர்கிறோம் எம் இதயங்கள் நசுக்கப்பட்டு புண்ணாகிவிட்டன எம்மால் முடிந்தவரை உனக்காக போராடினோம் ஏமாற்றம் தான் இறுதியில் எம்மை தழுவியது!" "நீங்கள் பிரிவதை எம்கண்ணீருடன் பார்த்தோம் நீங்கள் மறைந்துபோவதை ஏக்கத்துடன் பார்த்தோம் எங்கள் இதயங்கள் உடைந்து போயிருந்தாலும் இனிஉன்னை வேதனைவாட்டாது என்று அமைதியடைந்தோம்!" "உன் பாசங்களை உதடுகளால் பேசமுடியாது உன் கருணையை இதயங்களால் காட்டமுடியாது எம் தவிப்பை கட்டாயம்நீ அறிவாய் நாம் பலராயினும் நீஇல்லாதது தனிமையே!" "உன் அழகியஉடல் மட்டுமே எரிந்துசாம்பலாகிற்று உன் எண்ணங்களும் ஆசைகளும் எரியவில்லை எம்இதயத்திற்குள் நீ என்றும் இருக்கிறாய் எண்ணங்களையும் ஆசைகளையும் நீ இயக்குகிறாய்!" "பலஆண்டுகளாக பகிர்ந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நினைவுகளாகி இன்று கண்ணீரும்கவலையுமாய் நிற்கிறது இன்றுஉங்கள் பிறந்தநாள் இனிமையாக கொண்டாடுவோம் அழகழகாய் உங்கள் எழில்காண கனவுகாண்போம்!" "ஒவ்வொரு நிகழ்விலும் எம்முடன் வாழ்ந்தும் எம்மூச்சு காற்றுக்குள் என்றும்நிற்கும் உன்னுயிரே புத்தாடை அணிந்து எம்அருகே மீண்டும்வா எம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "A golden heart stopped beating on 8th of June Hard working hands at rest It broke our hearts to see you go Is June 15th now become Birthday Memoriam?" "They say memories are golden Well may be that is true But we never wanted memories We only wanted you, Our 'JEYA'!" "Your life was love and labour Your proud is your family You did your best for all of us We will always remember you, till we die!" "We sat beside your bedside Our hearts were crushed and sore We did our duty to the end Till we could do no more!" "In tears we watched you sinking We watched you fade away And though our hearts were breaking We were relieved, as you do not suffer anymore!" "Our lips can not speak how we loved you Our hearts can not tell what to say But you knows how we miss you In our home we are lonely today!" "Only your beautiful body burned Your thoughts and desires are not burned You are forever safe inside our hearts And direct your thoughts and desires!" "Today is full of memories happiness and tears of birthday celebrations we have shared throughout the years We feel that you are with us in everything we do So we will celebrate your birthday today 15 th of June!" "As you are living with us at every events As you are always part of our family Wear New dress & come close to us Happy Birthday to you!" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்"
"வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்" இலங்கையின் வடமேல் மாகாணக் கரையோரத்தில் சிறந்து விளங்கும் நகரம் சிலாபம் என்று சொல்லலாம். அங்கிருந்து 16 மைல் தூரத்தில், இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்து இருக்கும் எழில் மிகும் கிராமம் தான் உடப்பு. இங்கு தற்சமயம் அண்ணளவாக 10 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமம் நெய்தல் நிலத்தைச் சார்ந்ததால், இங்கு மீன் பிடித் தொழிலே முதன்மையாக இருந்தாலும், நெசவுத் தொழிற்சாலை, கயிற்றுத் தொழிற்சாலை, பனை ஓலை குடிசைத் தொழிற்சாலைகள் போன்றவையும் உள்ளன. இந்த அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம் பரப்பும் உடப்பு அல்லது உடப்பூர் கிராமத்தை, கட்டாயம் புத்தளம் மாவட்டத்தின் குட்டித் தமிழகம் என்று சொல்லலாம். இங்கு இன்று வாழும் பெரும்பாலான மக்களின் முன்னோர்கள், இராமேஸ்வரத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள். அவர்கள் 1678 ஆம் ஆண்டளவில் இங்கு குடியேறினார்கள் என்று வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, இங்கு உள்ள மக்கள் அதிகமாக தெய்வப் பெயர்களை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இன்று பிறக்கும் பிள்ளைகளைத் தவிர. அப்படியான, கடற்கரை கிராமத்தில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி; அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் - வேனிற்கால மாலைப் பொழுதிலே கதிர்காமன் என்ற இளம் பையன் சிறிது நேரம் கடலைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு இருந்தான். அப்போது அடி வானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம். இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும் போலிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டு அவன் அகலவில்லை. அவன் வாய் முணுமுணுத்தது "என்னே இம் மேகத்தின் கருனை! உடப்பு முழுவதும் அனல் வீசுகின்றது; குடி தன்ணீர் குறைகின்றது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக் கடல், தண்ணீரைத் தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்ட மடிக்கின்றதே! இது தகுமா? முறையா? இந் நெடுங் கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? ‘கொடு’ என்றால் கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும்! அதனால்த்தானோ என்னவோ இம் மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளை கொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?" இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக. கதிர்காமன் தன் மனதுக்குள் மேகத்தை வாழ்த்தினான் "முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்" (திருவெம்பாவை) கதிர்காமன் கடலைப் பார்த்து சிரித்தான். அந்த சிரிப்பு உண்மையில் தர்மராஜா முதலாளியை நினைத்துத் தான்! கதிர்காமனின் குடும்பத்தில் ஐந்து உருப்படிகள். அதில் கதிர்காமன் மூத்த பையன். கதிர்காமன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் மட்டுமல்ல மிகவும் ஆர்வமும் உள்ளவன். அவனின் தந்தை வைரவன் சிறு மீன்பிடித் தொழில் செய்பவர். என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூறாவளியுடன் ஏற்பட்ட கடும் மழையில், சிக்குண்டு தன் படகுடன் விபத்துக்குள்ளாகி, இன்றுவரை ஊனமுற்றவராக இருக்கிறார். இதனால் அவனின் குடும்ப நிலை மோசமாகி படிப்பை இடை நடுவே முடிப்பதற்கு வழிவகுத்தாலும், அவனின் படிப்புத் திறன் மேல் உள்ள நம்பிக்கை கஷ்டமான நிலையிலும் பெற்றோரால் தொடர வைக்கப்பட்டது. அவன், 1902 இல் களிமண்ணால் கட்டப்பட்டு ஓலையினால் மேயப்பட்ட சிறிய பாடசாலையாக ஆரம்பித்து, 1965 இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு, பின் 1973 விஞ்ஞான கூடமும் அமைத்து முழுமை பெற்ற உடப்பு தமிழ் மகாவித்தியாலத்தில், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரின் உதவியுடன் தன் கற்றலை தங்கு தடையின்றி தொடர்ந்தான். என்றாலும் ஒரு நேர உணவு உண்பதே சிரமமான நிலையில் தான் அவனது இளம் பராயம் கழிந்தது. பல நாட்கள் அம்மா சிலரது பெயரைச் சொல்லி பணமோ அரிசியோ வாங்கி வரச்சொல்லி கதிர்காமனை அனுப்புவார். பணம் உள்ளவர்களான, அம்மா சொல்லாதவர்களிடமும் அவன் முயற்சிப்பான். என்றாலும் சிலவேளை வெறுங்கையுடன் தான் வீடு போவான். அப்படியான நேரம் எதோ வளவில் கிடைக்கும் சில இலைவகைகளுடனும் அல்லது கிழங்குகளுடனும் அவனின் குடும்பம் சமாளித்துவிடும். மிகுதி வயிறை நீரால் நிரம்பிவிடும். இன்று அவன் முதல் முறையாக தர்மராஜா முதலாளியிடம் போயிருந்தான். இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. உனக்கெல்லாம் எதுக்குப் படிப்பு. போய் மீனைப் பிடிச்சு குடும்பத்தைப் பார், உனக்கு இப்ப வயது வந்துவிட்டது தானே என்று சத்தம் போட்டு ஏசி அனுப்பினார். அது தான் அவன் கடலைப் பார்த்து, தர்மராஜாவை நினைத்து ஏதேதோ அவன் மனதில் எழும்பியதை கொட்டித் தீர்த்தான். எப்படியோ அம்மா, அப்பாவின் முயற்சி, கதிகாமனின் வெறித்தனமான கல்வி ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றால் குடும்பத்தில் அனைவருமே படித்து நல்ல நிலைக்கு, சிறப்பான வாழ்க்கை வெளிநாட்டிலும் தலைநகரிலும் வாழத் தொடங்கினர். அப்படியான ஒரு காலத்தில் தான், இலங்கையில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை 2004/12/26 அன்று இலங்கையைத் தாக்கியதில் குறைந்தது 46,000 பேர் இறந்தனர். அது முக்கியமாக பெரும் சேதங்களைக் இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தினாலும், அவனின் ஊரும் கடற்கரைக் கிராமம் என்பதால், சில பாதிப்புக்களுக்கு உள்ளாகின, என்றாலும் ஒரு உயிர் சேதமும் அங்கு இல்லை. இதை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கேள்விப்பட்ட கதிர்காமன், தன் சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு உடனடியாக ஊர் சென்றான். அனைவருக்கும் தேவையான தற்காலிக கூடாரங்கள், உணவுப் பொதிகள், தண்ணீர் மற்றும் மாற்ற உடைகள் என பலவற்றை தமது செலவிலேயே ஒழுங்கு செய்தான். தர்மராஜா முதலாளி ஊரில் முன்னர் பெரிய செல்வந்தர். இவர்தான் கதிர்காமனை திட்டி அனுப்பியவர் கூட, அவரின் அந்த கடும் மனிதத்தன்மை அற்ற வார்த்தைகளும் அன்று கதிர்காமனை உசுப்பேற்றி, அவனை ஒரு இலக்கு நோக்கி கடுமையாக படிக்க வைத்தது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விடயம்! தர்மராஜா ஐயா, அழுதவாறே என்னை மன்னித்துவிடு தம்பி என்ற அவரின் வார்த்தைகள் கதிர்காமனுக்கு இன்று காதில் தேனாக இனிக்க வில்லை. இல்லை ஐயா, மாறாக நீங்களும் ஐயா அன்று என்னை ஏசிக் கலைத்ததால் தான் நான் இப்ப அறுவை சிகிச்சை நிபுணராக வர முடிந்தது என கண்களில் நீர் கசிய, தரும ராஜா என்ற பொருத்தமில்லா பெயரைக் கொண்ட தர்மராஜா ஐயாவிற்கு கதிர்காமன் கூறியதை, அவனின் அம்மா, சின்னக்காளி மகிழ்சியுடன், கொஞ்சம் தள்ளிநின்று பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு மனக் கர்வத்துடன்! தர்மராஜா முதலாளி ஒன்றும் பேசவில்லை, தூர தெரிந்துகொண்டு இருக்கும் கடலை பார்த்தவண்ணம், கண்ணீர் ஒழுக தன்னையே அவரின் வாய் திட்டிக்கொண்டு இருந்தது. "கருணைமா முகிலே! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று மனங்களிக்கின்றேன். கார் முகிலே! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளை கொண்ட உன்னை இம் மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர். பண்டைத் தமிழர்; நானும் கதிர்காமன் வடிவில் இன்று காண்கிறேன்!" உடப்பில், அன்றாட வழக்கில் பாவிக்கப்படும் பழமொழியில் பிரபலமான ஒன்று 'மச்சம் பிடித்தவனுக்கு மிச்சமில்லை', அதன் பொருள் எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும், முடிவில் ஒன்றும் மிச்சம் இல்லை என்பதே. மற்றது " ஊரான் வீட்டு நெய்யே ! என் பொண்டாட்டி கையே !" ஆகும். அதாவது தன் வீட்டு நெய் என்றால் மனைவி சிக்கனமாகவும் ஊரார் வீட்டு நெய் என்றால் மேம்போக்காக வாரி இறைத்தும் செலவு செய்வார் என்கிறது. தர்மராஜா முதலாளி இதை உணர்ந்தாரோ இல்லையோ, ஆனால் அவர் புதுப்பிறவி எடுத்தவர் போல், அவரின் நடவடிக்கைகள் அன்றில் இருந்து மாற்றம் அடைந்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
அன்பு கிருபனுக்கு சட்டம் ஒரு ஒழுங்கை நிலை நாட்டிட, மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. எனவே அது காலத்துக்கு காலம் மாற்றமடையலாம் ?. உதாரணமாக அந்த குறிப்பிட்ட சட்டத்தை, திருமண தம்பதியர் மற்றும் ஒருபால் கூட்டு தம்பதியர் எல்லோருக்கும் என மாற்றி அமைக்கலாம்? அது என்றும் பிரச்சனை இல்லை
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
அன்பு Justin க்கு [Just - based on or behaving according to what is morally right and fair. / in - expressing the situation of something that is or appears to be enclosed or surrounded by something else.] மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா? இதற்கு மிக ஆழமான விளக்கம் கொடுத்துள்ளேன் . [சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.] [ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? தொடர்ச்சி என்றால் என்ன என்று சொல்லமுடியுமா ? தங்களின் தொடர்ச்சியை தாங்களே ஏற்படுத்துவது , மற்றும் படி நீங்கள் தத்து எடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுபது அல்ல , அந்த குழந்தையும் உங்களை மாதிரியே இருந்தால் தொடர்ச்சி அறுந்துவிடும் ?? அப்படி என்றால், அது உங்களில் இருந்து மாறுபட்டு இருபால் உறவு ஒன்றில் ஈடுபடவேண்டும் அல்லவா , அந்த, நீங்கள் சொன்ன தொடர்ச்சியை நீட்டிட] முதலாவது, நான் ஓரின ஒன்றி வாழ்வுக்கோ அல்லது கூட்டு வாழ்வுக்கோ எதிரிப்பு என்று எங்கும் சொல்லவில்லை இரண்டாவது, ஆனால் திருமணம் என்ற, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பண்பாட்டில் உள்ள அதே சொல்லை ஓரின கூட்டுக்கும் பாவிக்கக் கூடாது, அதற்க்கு வேறு ஒரு சொல்லை பாவிக்கலாம் என்பதே என் வாதம். [வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம்.] மூன்றாவதாக "உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ... " நான் எங்கும் அழகுபடுத்தவில்லை, ஆனால் நாகரிகமாக வரலாற்றில் இருந்தும் இயற்கையில் இருந்தும் குறிப்புகள் கொடுத்துள்ளேன் நான்காவதாக "மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்?" இது தான் கவனிக்க வேண்டியது. உதாரணமாக The proportion of the UK population aged 16 years and over identifying as heterosexual or straight was 93.6% in 2020; there has been a decreasing trend since the series began in 2014. An estimated 3.1% of the UK population aged 16 years and over identified as lesbian, gay or bisexual (LGB) in 2020, an increase from 2.7% in 2019 and almost double the percentage from 2014 (1.6%). The proportion of men in the UK identifying as LGB increased from 1.9% to 3.4% between 2014 and 2020; the proportion of women identifying as LGB has risen from 1.4% to 2.8% over the same period. ஆகவே நீங்கள் கூறிய 200K ஆண்டுகளில், இப்ப தான் இது ஒரு கணிசமான அளவு தலைகாட்டிட தொடங்கி உள்ளது . எனவே இதன் விளைவு அல்லது தாக்கம் இன்னும் நாம் உணரும் அளவு இல்லை. எனவே அதை வைத்து, 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்?" என்று சொல்லமுடியுமா?? மற்றும் படி நான் அல்லது எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால், இதன் முழுவளர்ச்சி இன்னும் 200K ஆண்டுகளில் கூட நடைபெறாது. அதுவும் எதோ ஒரு இடத்தில் தன்னை இயற்கையின் தெரிவுகளுடன் சமநிலை படுத்திவிடும். ஆனால் குடும்பம் குழந்தை இவைகளில் எப்படியான பாதிப்புக்கள், இதன் சதவீதம் ஒரு எல்லையைத் தாண்டும் பொழுது என்ன நடக்கும் என்பது தெரியாது? இன்னும் நாம் 200K ஆண்டுகள் கடந்தும் ஒரு சிறிய வீதத்தில் தான் காண்கிறோம். அதனாலதான் எந்த பாதிப்பும் பெரிதாக இன்னும் இல்லை. என்றாலும் பாதிப்புக்கள் கூட எத்தனிக்கும் பொழுது , தானாகவே சமநிலை படுத்தும் என்பதே என் நம்பிக்கை ஐந்தாவதாக, "தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? ". ஆம் , அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆறாவதாக, "இதை அனுமதித்தால், incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது" நான் incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்று கூறவில்லை, ஆனால் திருமணம் என்ற சொல்லின் வரைவிலக்கணம், அப்படியான ஒன்றுக்கும் நீட்சி பெறலாம் என்றே கூறினேன் . அதனால்த்தான் ஓரின ஒன்றிய வாழ்வுக்கு , வேறு ஒரு சொல் தேவை என்று கூறினேன். ஏழாவதாக "இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding) நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது." இது முற்றிலும் சரி. ஆனால் இதற்கு எதிர்மாறான சில செய்திகளும் வரலாற்றில் அல்லது இன்றும் உண்டு. எட்டாவதாக, "விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம்." ஆம் அது சரி, ஆனால் ஏன் அப்படியான சட்டம் வந்தது என்று சொல்ல முடியுமா ?, சட்டம் எதோ ஒன்றை தடுக்க, சொல்ல ஏற்படுவது தானே , அப்படி என்றால் ?? உங்கள் கருத்துக்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றிகள். எப்பவும் ஒரு அடித்தளத்தில் இருந்து தான் நான் பார்க்கிறேன், எழுதுகிறேன் , அலசுகிறேன் . அதனால்த்தான் இந்த எட்டு விளக்கங்களும் தோன்றின? அது தான் அடித்தளம்
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இன்று இந்த தன்பாலின தம்பதிகளுக்கு திருமண உடன்படிக்கை அவசியம் என நம்புகிறேன் ஏனெனில் "அவர்களது குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் சட்டரீதியான பி்ரச்சனைகள் வராது இருக்க". நன்றி அன்பு P.S.பிரபா முதலாவது, எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் விபரமாக விளங்கப்படுத்தி உள்ளேன், ஆனால் அதை "திருமணம்" என்ற பெயரில் அழைக்க முடியாது, வேண்டும் என்றால் வேறு ஒரு பெயரில் அழைக்கலாம் என்பதே என் வாதம், அதற்கான முழு காரணங்களும் வரிசைப்படுத்தி தந்துள்ளேன். இரண்டாவது, என்றாலும் "அவர்களது குழந்தைகளுக்கு" ???? இதை விளங்கப் படுத்துகிறீர்களா ??? அதுவும் நான் உதாரணங்களுடன் விளங்கப்படுத்தி உள்ளது தான் Is an Adopted Child Entitled to Inheritance? If a person dies intestate (dies without having made a Will) then both biological children and adopted children of the deceased have the exact same rights to inherit any share of the estate as each other. However, this is dependent on whether the adopted children have been validly adopted under UK law. Can an Adopted Child Inherit From Biological Parents in the UK? Ultimately, it depends on whether the child was adopted before or after the death of their biological parents. If a child was orphaned and adopted at a later date then he/she would still have the right to inherit from their biological parents. If the child is adopted before the death of their biological parents then, if the adoption is formalised under UK law, the legal relationship between the child and biological parent is severed and the child loses the legal right to inherit from their biological parents. Under the Rules of Intestacy, ONLY biological or adopted children can inherit from the (adoptive) parents. இது அதிகமான நாடுகளுக்கும் பொருந்தும் என்று எண்ணுகிறேன் . ஆகவே இருவரும் சேர்ந்து தத்துப்பிள்ளை ஒன்றையோ அல்லது பலதையோ சட்ட ரீதியாக எடுக்கும் பொழுது அங்கு பிரச்சனை இல்லை மேலும் கட்டாயம் இரு ஓரினச்சேர்கையாளர்களுக்கு குழந்தைகள் இருக்காது. ஆனால் அவர்களின் முன்னைய இரு பால் திருமணம் ஒன்றின் ஊடாக மட்டுமே இருக்கலாம்? அப்படி என்றால் , அந்த தாய் அல்லது தந்தையூடாக மற்றும் இன்று பிரிந்துவிட்ட மற்ற தந்தை அல்லது தாய் ஊடாக அவர்களின் உரிமைகள் வரையறுக்கப்படு கின்றன. மேலும் Ways to become a parent if you're LGBT+ There are several ways you could become a parent if getting pregnant by having sex is not an option for you. Possible ways to become a parent include: donor insemination IUI (intrauterine insemination) surrogacy adoption or fostering co-parenting [If you are in a lesbian or gay relationship, co-parenting is becoming an increasingly popular option. It involves making an agreement for both couples to be involved in the child's upbringing. The level of parental responsibility would depend on various factors including whether the lesbian couple are in a civil partnership and the amount of contact each couple wish to have with the child. All issues of contact and responsibility must be clearly communicated prior to any insemination taking place. It is strongly recommended that legal advice is sought and a donor or co-parenting agreement is in place to reduce any potential problems with co-parenting situations.]
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நன்றி எல்லோருக்கும்
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
எல்லோருக்கும் நன்றிகள்
-
"வெள்ளந்தி மனிதர்கள்"
"அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா!!" எல்லோருக்கும் நன்றிகள்
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 08 4] தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology] மீவுமனிதர் [Transhuman] என்பது படிவளர்ச்சிக்கு அமைய மனிதரில் இருந்து அல்லது மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செலுத்த போகும் உயிரினம். இது தற்போது ஒரு கருதுகோளே. மரபணு பொறியியல், தானியங்கியல், நனோ தொழில்நுட்பம் போன்ற நுட்பங்கள் மீவுமனிதரை உந்துவிக்ககூடும் என்று சிலர் எதிர்வு கூறுகின்றனர். இதன் அடிப்படையில், 2017, இல் ,தானாக இயங்கி செலுத்தும் மோட்டார்க் காரை உருவாக்கிய முன்னைய கூகிள் விஞ்ஞானி [former Google self-driving car developer Anthony Levandowski], அந்தோணி லெவண்டோவ்ஸ்கி, "எதிர்காலத்தின் வழி" ["Way of the Future"] என்ற ஒரு புதிய மத அமைப்பை உருவாக்கினார். இந்த புதிய "தேவாலயம்" செயற்கை நுண்ணறிவு [artificial intelligence] மனிதனை விட உயர்ந்த ஒரு சத்தியென புகழ்ந்து, நம்மை அது எதிர்காலத்தில் அழிக்காதபடி பார்த்துக்கொள்ள அதை வணங்க வேண்டும் என போதிக்கிறது. செயற்கை நுண்ணறிவுடன் மனித நாகரிகத்தை ஒட்டியிணைத்தல் அல்லது ஒன்று சேர்த்தாலே அவரின் இறுதி இலக்கு ஆகும். இப்படி வேறு சிலரும் முன்னின்று செயல்படுகிறார்கள். கூகிளின் பொறியியல் இயக்குனர், ரே குறவெய்ல் [Ray Kurzweil], 21 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்கு முன், ஒரு நுட்பியல் ஒற்றைப்புள்ளி [technological Singularity] ஏற்படும், அதாவது தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே நுட்பியல் ஒற்றைப்புள்ளி (Technological Singularity) எனப்படுகிறது. இம்மாற்றம் எவ்வாறு அமையும் என்று தெளிவாக எதிர்கூறமுடியாது, ஆனால் குமுகம் (சமூகம்), அரசியல், சூழல், பொருளியல் என அனைத்து தளங்களிலும் இந்த மாற்றம் இருக்கலாம், அத்துடன் மனித இருப்பின் பொருள் அல்லது தன்மையைக் கூட இந்த நிகழ்வு மாற்றி அமைக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. சுருக்கமாக ஒரு இயந்திரங்கள் மற்றும் கணினிகளின் தொகுதி, மனிதர்களை விட புத்திசாலியாக மாறும் என்கிறார். மேலும் இன்றைய மேற்கத்திய நாகரிகம் [Western civilization] இந்த கொடூரமான சம்பவத்தால் வாழ முடியாமால் போகலாம் என்று ஊகம் கூறுகிறார். இன்று உலகின் உயர்ந்த உயிரினமாக மனிதன் காணப்படுகிறான். அவன் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தில் பாரிய வளர்ச்சி அடைந்து, நினைக்கும் எதையும் செய்து முடிக்கும் வல்லமை படைத்தவனாக விளங்குகிறான். உலகில் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு உயிரணுவில் உருவான உயிரியல், பரிணாமம் அடைந்து, இன்று மனிதனாக இருக்கிறான். ஆனால் அதனினும் வியப்பு, இது முற்றுப்பெறாத மாற்றமாக, பரிணாமமாக இன்னும் தொடரும் என்ற ஊகம் தான். அதன் விளைவைத்தான் மீவுமனிதத்துவம் [Transhumanism] என்ற மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில் நுட்ப துறைகளுக்கு ஆதரவான இந்த இயக்கம் ஆகும். உதாரணமாக, ஊனம், வலி, நோய், முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க இந்த இயக்கம் முயல்கிறது. மீவுமனிதர் என்பது படிவளர்ச்சிக்கு அமைய மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செய்யபோகும் ஒரு உயிரினம் என்ற ஒரு கருதுகோள் ஆகும். கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [“Gilgamesh Epic”/ written c. 2150 - 1400 BCE] முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க வழி தேட தூண்டும் ஒரு உந்தலை காண்கிறோம். உதாரணமாக, இந்த இதிகாசத்தில், ஒரு கட்டத்தில், என்கிடு [Enkidu] என்ற ஒரு காட்டு வாசியும் உற்ற நண்பரும் தனது சாவைப் பற்றிய கவலையை கில்கமெஷிடம் தெரிவிக்கிறான். அதற்கு கில்கமெஷ் இவ்வுலகில் எவருமே நிரந்தரமாக இருப்பதில்லை, நம் வாழ்வு குறுகியது, முகில் போலக் கலைந்து போகும்; என சிரித்து அதை நிராகரிக்கிறான். என்றாலும், என்கிடு இறந்ததும், கில்கமெஷ் மிகவும் கலக்கம் அடைந்து, குழப்பம் அடைந்து, இறப்பு அற்ற நிலைவாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம் (Utnapishtim) என்ற கடவுளை நாடி, மரணமில்லாமை பற்றிய ரகசியத்தை அறிய முயற்சிக்கும் கில்கமெஷின் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது. கில்கமெஷ் அழியாத வாழ்வை பெறாவிட்டாலும், 126 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாகவும் [the Sumerian King List records his reign as 126 years] மிகப்பெரிய வலிமை கொண்டவனாகவும் இருந்தான் என்கிறது. அதே போல மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி, பாற்கடலை கடைந்து அங்கு திரண்டெழும் (சாகாமல் உயிர்வாழ உதவும்) அமுதத்தை அசுரர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆனால் பின் மகாவிஷ்ணுவின் உதவியுடன் ஏமாற்றி, தேவர்கள் மட்டும் குடிக்கும் ஒரு "பால் கடல் கடைதல்" என்ற புராண கதையை இந்து புராணத்திலும் காண்கிறோம். இவையும் சாகா உயிரை அல்லது மனிதனை உண்டாகும் ஒரு பண்டைய கற்பனை முயற்சியே எனலாம்? ஆனால் ஒரு உண்மையான முயற்சி ஒன்றை, கிமு 221 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் யிங் ஷெங் [Ying Zheng] என்னும் சொந்தப் பெயர் கொண்ட சின் ஷி ஹுவாங் ,கிமு 259 – செப்டெம்பர் 10, கிமு 210, [Qin Shi Huang, 'First Emperor of Qin, 18 February 259 BC – 10 September 210 BC ] என்பவர், தான் பெற்ற அதிகாரத்தையும் வலிமையையும் நிரந்தரமாக பாதுகாக்க, என்றென்றும் இறைவா வாழும் யோசனை ஒன்றை கொண்டிருந்தார். தனது கடைசி காலத்தில், புராணத்தில் கூறப்பட்டிருந்த, அனைத்து நோய் நிவாரணியான அமுதம் ஒன்றை [mythical elixir of life] இறைவா மருந்தாக அருந்த பாடுபட்டார். ஆனால் அவர் பாதரச மாத்திரைகளை [mercury pills] அந்த முயற்சியில் சாப்பிட்டு தன் உயிர் நீத்தார் என வரலாறு கூறுகிறது. என்றாலும் அவரின் சாவிற்கு பின்பும் அவர் ஆரம்பித்த முயற்சி நிற்கவில்லை. ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டில், சீன துறவிகள், அப்படி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில், அவர்கள் கண்டு பிடித்தது தான், உடனடி இறப்பை ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொடுக்க வழிசமைத்த வெடிமருந்து [gunpowder] ஆகும். தேச ஆராய்ச்சிக்காரன், பொன்சே டி லியோன் [Spanish explorer Ponce de Leon,1474 – July 1521] என்பவர், பூர்வீக கரீபியன் தீவுவாசிகள் [native Caribbean islanders] மூலம் அறிந்த ஒரு கதை, அவரை பிமினி [an island known as Bimini] என்ற ஓர் தீவில் உள்ளதாக நம்பப்படும் ஒரு மாயாஜால நீரின் நீர் என்று அழைக்கப்படும் இளைஞனின் நீரூற்று [“fountain of youth”] ஒன்றை தேட தூண்டிவிட்டது. நவீன உலகில் முதிர்ச்சியடைதல் பெரிய குறைபாடாகிறது. வலுவான, உறுதியான உடல்கள், மென்மையான, சுருக்கம் இல்லாத தோற்றம், விரைவான சிந்தனை மூளை, அவர்களில் இளைஞர்களைப் போன்ற சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் பொது ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவதற்கான வழிகளை மக்கள் தொடர்ந்து தேடுகிறார்கள். இவரும் அப்படியான நம்பிக்கையில், அதாவது அந்த நீரூற்றில் நீந்தினால் ஆயுளை அல்லது உயிர் ஆற்றலை மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கையில், தனது தேடுதலை தொடங்கினார். அந்த தேடுதலில் அவர் கண்டு பிடிச்சது தான் புளோரிடா மாநிலம் [state of Florida]. ஆனால், அவரால் அப்படி ஒரு நீரூற்று ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 16 தொடரும்
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 16 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள்" / "Food Habits of Ancient Indus valley people or Harappans" சிந்து சம வெளியில் வாழ்ந்த ஹரப்பான் தமது சமையல் குறிப்புகளை, அதாவது சேர்மானங்கள், செய்முறைகளை பதிந்து வைக்க வில்லை. சிந்து வெளியில் இருந்து பல முத்திரைகள் கண்டு எடுத்தாலும், அவை மிகச் சிறிய குறிப்புகளையே கொண்டிருந்தன. சுமேரியர் போல எந்த இலக்கியமும் அல்லது பெரிய குறிப்புகளும் அங்கு இதுவரை கண்டு பிடிக்கப்பட வில்லை. அது மட்டும் அல்ல, இன்னும் சிந்து சம வெளி மொழி சரியாக மொழி பெயர்க்கப்பட வில்லை. எனினும் அவை திராவிட மொழி அல்லது பழைய தமிழ் என்பதில் ஆய்வாளர்கள் பலரும், அதிகமாக எல்லோரும் உடன் படுகிறார்கள். இங்கு எழுத்து மூலமான சான்றுகள் இல்லாத நிலையில், சிந்து சம வெளி மக்களின் உணவு பழக்கங்கள் என்ன என்பதை அறிய எமக்கு அங்கு சமையல் பாத்திரங்கள், கருகிய உணவின் எச்சங்கள், விவசாய கருவிகள், மற்றும் படங்களுடன் கூடிய முத்திரைகள் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டனவா போன்ற கேள்விகள் எழுவது இயற்கையே. அங்கு பல தரப்பட்ட அளவில், வடிவங்களில் பானைகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை அதிகமாக, பலதரப் பட்ட தானியங்களை அல்லது திரவங்களை சுமக்க, சேமிக்க பாவிக்கப்பட்டு இருக்கலாம்?மேலும் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட துளையிடப் பட்ட பானைகள் அதிகமாக பாற்கட்டி [சீஸ்] தயாரிக்க பாவிக்கப்பட்டு இருக்கலாம்?அத்துடன் அங்கு கண்டு எடுக்கப்பட்ட விளும்புடன் கூடிய செம்பு மற்றும் வெண்கல தட்டுகள், அதிகமாக நகரத்தில் வாழும்,பணக்கார மேல் வகுப்பினர் தமது உணவை சாப்பிட பாவித்து இருக்கலாம்? ஹரப்பாவில் பொதுவாக மண்பாத்திரங்கள் சமைப்பதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. என்றாலும், வசதியானவர்கள் உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தி யிருக்கிறார்கள். அங்கு கண்டு எடுக்கப் பட்டவைகளில் இருந்து மற்றும் ஆய்வுகளில் இருந்தும், அவர்களின் முதன்மை உணவு கோதுமையையும் பார்லியையும் அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. இவைகள் வேகவைத்து ரோட்டியாகவும், மேலும், ஒரு வேளை, அவை நீருடன் சேர்த்து கஞ்சி அல்லது கூழ் போன்றவையாகவும் சமைத்து இருக்கலாம். குறிப்பாக, இன்றைய குஜராத் இருக்கும் பகுதிகளில், அவர்கள் உள்நாட்டு சில வகை திணை பயிர்களை விவசாயம் செய்தார்கள் என அறிய முடிகிறது. இது அதிகமாக தென் மத்திய ஆசியாவில் இருந்து அறிமுகப் படுத்தப் பட்ட பனிவரகாக [broom corn millet] இருக்கலாம். இவர்கள் காட்டு அரிசியை கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து இருந்தாலும், அதன் பொருட்டு, அங்கு அரிசியை பயிரிடத் தொடங்கி இருந்தாலும், அரிசி இவர்களின் முதன்மை உணவாக பிந்திய - ஹரப்பான் காலத்திலேயே பெரும்பாலும் வந்தன. அரிசி லோத்தல் மற்றும் குஜராத்தின் சில இடங்களில் பயிரிடப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது. பயறு, மற்றும் பட்டாணி, சுண்டல், பாசிப்பயிறு, உளுந்து போன்ற பருப்பு வகைகளும் அங்கு ஹரப்பானால் வளர்க்கப்பட்டன. அது மட்டும் அல்ல, ஹரப்பான் மக்கள் பல தரப்பட்ட பழங்கள், காய்கறிகள், வாசனைத் திரவிய பொருள்கள் [spices] உட்கொண்டனர். இவை கடுகு, கொத்தமல்லி, பேரீச்சம்பழம், இலந்தைப்பழம், வால்நட்ஸ் (WALNUTS) எனப்படும் அக்ரூட் பருப்புகள், திராட்சை, அத்தி, மற்றும் மாம்பழம், மாதுளம்பழம், வெண்டைகாய், ஊறுகாய் போட உதவும் துள்ளு எனப்படும் ஒரு முட்செடி வகையின் மலர் [caper], கரும்பு, உள்ளி, மஞ்சள், இஞ்சி, சீரகம், கறுவா போன்றவையாகும். இவை ஹரப்பான் மக்களால் வளர்க்கப்பட்டு இருக்கலாம் அல்லது தானாக வளர்ந்ததில் இருந்து பொருக்கி எடுக்கப் பட்டதாக இருக்கலாம். என்றாலும் இவைகளுக்கான சான்றுகள் குறைவாகவே காணப் படுகின்றன. எப்படியாயினும், பழங்கள் - காய்கறிகளின் எச்சங்கள் அங்கு கண்டு எடுக்கப்பட்ட பானை, மட்பாண்டங்களில் காணப் பட்டது, அங்கு குறைந்தது வாழை [வாழைப்பழம்] , பேரீச்சை, பூசணி, மாதுளை, போன்றவை பாவிக்கப்பட்டது தெரிகிறது. எள், அங்கு எண்ணெய் எடுப்பதற்கு வளர்க்கப்ப ட்டன. அதே நேரம் அவர்கள் ஆளி விதை [Flaxseed] எண்ணெயும், மிருகங்களின் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களும் பாவித்தார்கள். கிமு.3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பயிரிடப்பட்டு வந்த ஆளி விதை இதய நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள். மொகஞ்சதாரோவில் நல்லெண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்கள் பயன்படுத்தப் பட்டதாக உணவியல் அறிஞர் கே.டி. ஆசயா [Dr. K.T. Achaya] குறிப்பிடுகிறார். இவைகளுக்கு நேரடியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், சிந்து வெளி மக்கள், தமது ஆபரணங்களை பல பழங்களின் வடிவங்களில் செய்து அணிந்தது உறுதிப்படுத்துகிறது. ஹரப்பா நகரில் காணப்பட்ட சில களஞ்சியங்கள், அங்கு பெரும் அளவு தானியங்கள் உற்பத்தி செய்து இருக்கலாம் என்பதை பறை சாற்றுகிறது. சிந்து வெளியில் காட்டு இனங்களான காட்டுப் பன்றி, மான், ஒரு வகை மீன் சாப்பிடும் பெரிய முதலை [gharial also known as the gavial] போன்ற வற்றின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன, மற்றும் ஒரு சுவாரசியமான கண்டு பிடிப்பு வாழைப்பழம் ஆகும். என்றாலும் வாழை ஹரப்பாவில் வளர்க்கப்பட்டனவா அல்லது வர்த்தகம் மூலம் வாழைப்பழம் பெறப்பட்டனவா என்பது இன்னும் தெரியாது. மேலும் நியூ கினியாவின் குக் சகதிப்பகுதி யில் (Kuk swamp) நடந்த அகழ்வாராய்ச்சிகளின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப் பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. மொகஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு அந்நிய நாடுகளுடன் வணிகரீதியான உறவு இருந்த காரணத்தால், கிரேக்கம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் உணவுப் பொருட்கள் அறிமுகமாகி யிருக்கின்றன. சுமேரியாவுக்கு இந்தியாவில் இருந்து எள் கொண்டு போகப்பட்டிருக்கிறது. ‘ராகி’ எனப்படும் கேழ்வரகின் தாயகம் உகாண்டா. ஆப்பிரிக்காவில் இருந்து மனித இடப்பெயர்வின் போது ராகியை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 1800-ல் ராகி இந்தியாவில் உணவு தானியமாக இருந்திருப்பதை அகழ்வாய்வுகள் நிரூபணம் செய்கின்றன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 17 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 16 "Food Habits of Ancient Indus valley people or Harappans" The Harappans who lived in the Indus Valley civilization did not pass down their recipes, but they had various Terracotta pots of all shapes and sizes were found at Mohenjo-Daro and other Indus Valley sites. Pots were probably used to carry and store many different types of liquids and grains. Also, perforated pots, they found along with others, may have been used for cheese making. Plate with vertical sides. Copper and bronze plates were also found, probably used exclusively by wealthy upper class city dwellers. Their main staples were wheat and barley, which were presumably made into bread and perhaps also cooked with water as a gruel or porridge. In some places, particularly Gujarat, they also cultivated some native millets; possibly broomcorn millet, which may have been introduced from southern Central Asia; Though they fed wild rice to their cattle, and probably began to cultivate it, though rice does not become an important crop until Post - Harappan times. The Harappans grew lentils and other pulses (peas, chickpeas, green gram, black gram) also. The Harappans must have eaten a range of fruit, vegetables and spices: these included a variety of brassica, brown mustard greens, coriander, dates, jujube, walnuts, grapes, figs; many others, such as mango, okra, caper, sugarcane, garlic, turmeric, ginger, cumin and cinnamon, were locally available and probably grown or gathered by the Harappans, but the evidence is lacking. However, fruits and vegetables remains found in pots and pottery illustrations prove that banana, date, gourd, pomegranate were in use. Sesame was grown for oil, and linseed oil may also have been used. The people of the valley were habituated in creating ornaments in the shape of various fruits which were found during excavation, further supporting these facts. The granaries found at some Harappan cities clearly indicate that cereals were produced in large quantity. However, archaeological evidence from Indus Valley sites (c. 3300 BC to 1300 BC) in present-day India and Pakistan suggests that a purely vegetarian meal will not provide a complete picture of what the Harappan people ate. “To judge from the quantity of bones left behind, animal foods were consumed in abundance: Bones of wild species such as boar, deer, and gharial also known as the gavial, and the fish-eating crocodile, are also found in Indus valley and food historian K T Achaya recorded beef, buffalo, mutton, turtles, tortoises, gharials, and river and sea fish in his magisterial history of Indian food, Indian Food: A Historical Companion (Oxford University Press, 1994). Also, Achaya writes that oilseeds such as sesame, linseed, and mustard were also grown. Another interesting find is the banana, which was first cultivated in Papua New Guinea. It is not clear if banana was cultivated in the Harappan region or if it was obtained via trade with people in the East via the trading hubs of the ancient world. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 17 WILL FOLLOW
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
"ஒருபால் திருமணம்" [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்] திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது, ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இதற்கு புறம்பாக, எதாவது ஒன்றை திருமணம் என்று அழைப்பது திருமணம் ஆகா. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். இது அதன் இயல்பாகவே, குழந்தைகளின் இனப்பெருக்கம் அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துணைகளின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வு நோக்கி தம்பதியர்களுக்கு அறிவுறுத்துகிறது அல்லது கட்டளையிடுகிறது. ஆனால் ஒருபால் திருமணத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதை ஊக்கிவிப்பவர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே முன்மொழிகிறார்கள். அதாவது இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் இதை முன்மொழிகிறார்கள். இது சுயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் உயிரியல், உடலியல் மற்றும் உளவியல் வித்தியாசங்களையும், அதனால் திருமணத்தில் இணைந்து அவர்கள் காணும் வாழ்வின் முழுமையையும் மறுக்கிறது. அது மட்டும் அல்ல, மனித இனத்தின் பெருக்கம் மற்றும் குழந்தைகளை அவர்களின் இயற்கையான இரு பெற்றோர்களுடன் வளர்வதையும் தடுக்கிறது. அதாவது, சிலவேளை அதில் ஒருவருக்கு வேறு யாராவதின் மூலம் ஒரு அல்லது பல குழந்தை இருந்து அவர்களுடன் வாழ நேரிட்டால், ஒரு பால் திருமணம் அந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் முழுமையான பங்கை உணர முடியாமல் தடுத்து விடுகிறது. டார்வின் தனது இயற்கைத் தேர்வு என்ற அத்தியாயத்தில், வெற்றிகரமான உயிரினங்கள், இறக்கும் தன் மூத்தவர்களை ஈடு செய்வதற்கு தேவையானதை விட, அதிக சந்ததிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்குகின்றன என்கிறார். மேலும் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தி, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை தக்கவைக்கும் என்கிறார். உதாரணமாக ஒரு பால் உறவு, இயற்கையானது என்றால் அது ஏன் இனப்பெருக்கம் செய்யவில்லை ?.ஏனென்றால் அந்த இனம் தொடர்ந்து பிழைத்து வாழ அது மிக மிக முக்கியம். ஒருபால் மக்களுக்கு திருமணத்தை மறுப்பதால், அவர்களை மற்றொரு நபருடன் அன்பான அர்ப்பணிப்புக்கு மறுப்பதாக நீங்க ஒருவேளை நினைக்கலாம்?. உண்மையில் அது தவறு. மக்கள் எல்லா நேரமும் மற்றவர்களை நேசிப்பதுடன் அர்ப்பணிப்பும் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் திருமணம் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அந்த உறவிற்கு என தனிப்பட்ட இயல்புகள் உண்டு. வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம். ஆனால் திருமணம் என்று இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு உறவுக்கும், இனப்பெருக்கம் ஆற்றல் உள்ள ஒரு உறவுக்கும் ஒரே மாதிரி வைப்பது தான் பிழை என்கிறோம்? ஒரு பால் உறவு அல்லது தற்பால்சேர்க்கை என்பது, ஒருவர் தனது பாலை சேர்ந்த இன்னும் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைப்பது ஆகும். உதாரணமாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஆகும். உலக வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், ஒரு பால் உறவு பல்வேறு விதமாக அங்கீகரிக்கப்பட்டும் , பொறுத்துக்கொள்ளப்பட்டும், தண்டிக்கப்பட்டும் மற்றும் தடைசெய்யப்பட்டும் வந்துள்ளது. பண்டைய உலகில் ஒரு பால் உறவுகளுக்கான பல ஆதாரங்களை, அதிகமாக பண்டைய கிரீஸ், ரோம், பண்டைய மெசொப்பொத்தேமியா, சீனாவின் சில பகுதி, மற்றும் இந்தியாவின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சில ஆலய சிற்பங்களிலும் காண்கிறோம். எனவே ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம். "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463] ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது? திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்) "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது? இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள். ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்? உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம். திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்? ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது. உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை! ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது. ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப்பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?. உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால் அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ? நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல் (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman) போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும். எனவே தான் என்னை பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை. ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை. ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம். உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது. தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது. உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை. சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும். அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை [போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம். ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன், விலங்கு உலகில் ஆவணப்படுத்தப்பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா ?. மனித ஓரினச்சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology]. உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.]. அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.]. இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார். உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக் காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு வெவ்வேறு பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன. விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம். “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி” “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.” இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று : “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!" “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.” என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting]. இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது. எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை. ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் திருமணம் என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்க்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு. மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
'உன் நினைவுகளில் என்றும் நாம்'
'உன் நினைவுகளில் என்றும் நாம்' "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டற கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதை கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி கண்டவர்கள் மனம் நிறைந்த அலைமகளே!" "மீதி வாழ்வை பாதியில் விட்டுவிட்டு மீளாதுயரில் எம்மை ஆழ்த்தியது எனோ? மீட்சி உண்டோ விடிவுஉண்டோ எமக்கு ? மீண்டும்நீ எம்மிடம் வரும் வரை?" "சொல்லாமல் கொள்ளாமல் நீ பிரிந்ததை சொல்லியழ எமக்கு வார்த்தை இல்லை சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் சொந்தமாய் அதில்நீ என்றும் இருப்பாய்!" இயற்கையின் அழைப்பை ஏற்றதனால் - நீர் இசைந்து எம்மை விட்டு விரைந்தீரோ ? இளகிய இதயம் கொண்டதனாலா - அவன் இயமன் வலையில் நீர் விழுந்தீரோ?" "உறவாய் உற்றவளாய் உடன் பிறப்பாய் உத்தமியாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர்? உயிராய் உன்கொள்கைகளை நாம் போற்றி உன்நினைவுகளில் என்றும் நாம் வாழ்ந்திடுவோம்!". [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 17 பண்டைய காலத்தில் ஆண்கள் வெளி வேலையும் பெண்கள் வீட்டு வேலையும் செய்தனர், அது மட்டும் அல்ல ஆண்களின் வேலை கடுமையானதாகவும் நிறைய தசை வேலையாகவும் இருந்தன [on field work which involved lots of muscle work], ஆனால் பெண்களின் வேலை அதிக உடல் வேலையற்று இருந்தது, இதனால், குறைந்த உடற்பயிற்சி மற்றும் செயல்பாடுகளால் பெண்களின் இரத்த அழுத்தம் கூட வாய்ப்பு இருந்தது. அவர்கள் ஒரு பொறுமையின்மை [impatience] நிலையை அடைந்தார்கள். எனவே இதை கட்டுப்படுத்த பெண்களை அவர்களின் மணிகட்டை, வயிறை, கணுக்காலை, மற்றும் கையை சுற்றி ஏதாவது ஒன்றால் கட்ட சொன்னார்கள் [women were asked to bind their wrists, stomach, ankles and arms]. இதனால் வளையல்கள், இடுப்புப்பட்டி அல்லது ஒட்டியாணம், கொலுசு, கையைச் சுற்றி அணியும் சித்தரிக்கப்பட்ட பட்டை போன்ற ஆபரணங்கள் [bangles,waist belt,anklets,armlets etc] நம் கலாச்சாரத்தில் வந்து சேர்ந்தன என ஒரு ஊகம். அதன் பின் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாறு நகைகள் அணிவது பெண்ணின் வாழ்வின் அத்தியாவசிய அல்லது ஒருங்கிணைந்த பண்பாக மாறியது எனலாம். ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டு பழமைவாய்ந்த உலகின் முதலாவது படைத்தல் கதை கொண்ட சுமேரியன் முத்திரை ஒன்று பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டதும், அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு ஆண் தெய்வங்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது என பதிந்து உள்ளது. அந்த பழம் முத்திரை: "மனிதனைப் போன்ற கடவுளர்கள் வேலையில் மனச்சலிப்பு அடைந்து உடல் வேதனை அடையும் போது, அவர்களின் உழைப்பு கடுமையாயிற்று, வேலை கனமாயிற்று, துன்பம் அதிகரித்தது" [ "When the gods like men bore the work and suffered the toil, the toil of the gods was great, the work was heavy, the distress was much"] என கூறுகிறது. இது சங்க காலத்திற்கு முன்பே ஆண்கள் கடும் வெளி வேலை செய்து கொண்டு பெண்களை வீட்டில் அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வைத்திருந்தனர் என்பதை சுட்டி காட்டுகிறது எனலாம். அந்த அழகை இருபாலாருக்கும் நகைகள், உடைகள் கொடுத்து இருக்கும், எனினும் சுமேரியன் பெண்கள் மிகவும் பரந்த அளவில், உதாரணமாக தங்கத்தினால் சித்தரிக்கப்பட்ட இலைகள் மலர்கள் கொண் ட தலை பாகை, பெரிய பிறை வடிவ மூக்குத்தி, முறைப்பான கழுத்துப்பட்டை, பெரிய கழுத்தணிகள், ஒட்டியாணம், ஆடை முள், மோதிரம் போன்ற [Sumerian women wore a much wider variety of jewelry such as golden head dresses made of sheet gold in the form of foliage and flowers, huge crescent shaped earrings, chokers, large necklaces, belts, dress pins and finger-rings] பல்வேறு நகைகளை அணிந்திருந்தார்கள் என அறிய முடிகிறது. கி. மு. முதல் நூற்றாண்டில் அதிகமாக எழுதப்பட்ட மனு ஸ்மிருதி அல்லது மனு நீதி, தனது மூன்றாவது சருக்கத்தின் 62-வது செய்யுளில் மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது என்று அர்த்தத்தில்,"ஒரு மனைவி அழகாக மகிழ்வோடு அலங்கரித்தால், அவளுடைய வீடு முழுவதும் அழகுபடுத்தப்படும், மகிழ்ச்சி அடையும்; ஆனால், அவள் ஆபரணத்தை கைவிட்டால், அனை வரும் அழகை இழப்பர், மகிழ்வை துறப்பர் என்கிறது ["A wife being gaily adorned, her whole house is embellished; but, if she be destitute of ornament, all will be deprived of decoration."- The Laws of Manu ,chapter III, Verse 62]. பண்டைய சங்க பாடலும் ஆணின் அறிவையும் பெண்ணின் அழகையுமே முதன்மை படுத்துகிறது. பூவையரின் அங்கங்களில் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ நம் முன்னோர்கள் அந்த அணிகளுக்கு ‘நகை’ என்னும் பொருத்தமான பெயரை சூட்டினர் எனலாம். அந்த அழகு மகிழ்வுதான் மனு நீதி சொன்னமாதிரி குடும்பத்தில் ஒரு மகிழ்வை கொடுத்தது. உதாரணமாக, கோவலன் ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்கிறான். 'உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்று புறநா னூறு: 189 இல் நக்கீரர் கூறுகிறார். அதாவது இடுப்பை சுற்ற ஒரு துண்டும் மேலே போட ஒரு தூண்டும் என்கிறது. முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரை யில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் பொதுவாக வெற்றுடம்பாகத்தான் இருந்தார்கள். அந்த மேலே போடும் துண்டு தோளிலோ அல்லது தலைப் பாகையாக தலையிலோ அதிகமாக இருந்தன. மார்பை மறைக்கும் உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள் என்பதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக, சிறுபாணாற்றுப்படை, வரி 26 இல் : 'பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என' - அணிகலன் கிடக்கின்ற விருப்பம் தருகின்ற முலையும், முலையைப் போன்ற, என்று கூறுகிறது. திரு ஞான சம்பந்தர் கூட தனது தேவாரத்தில் 'மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்' - பெரிய கொங்கைகளையுடையவளாய், ஒளி பொருந்திய ஆபரணங்களை அணிந்த, பெரிய கண்களையுடைய, மலையான் மகள் பாட என்கிறார். எனவே பாரம்பரியமாகவே அன்றில் இருந்து இன்றுவரை நகைகள் அணிவது தமிழர் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. தங்கம், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டிவிடப்பட்டு உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கவும் இது உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது. வர்மம் அல்லது அழுத்துமிடம் அல்லது உயிர் நிலைகளின் ஓட்டம் என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். மனித உடலில் 108 வர்மங்கள் உள்ளன என அகத்தியர் கூறுகிறார். சித்தர்கள் அன்று நோய்களை களைய வர்ம புள்ளிகளை அதன் பயன்பாட்டை பொறுத்து கையாண்டனர் என அறிகிறோம். பொதுவாக அணிகலன்களையும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன். இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எனவே மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, புறநானுறு 398 இல்: 'வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு' - மலை போன்ற தன் மார்பில் அணிந்திருந்த, உலகம் எல்லாம் வியக்கும், பல மணிகள் கோத்து ஒளியுடன் விளங்கும் பாம்பு போல் வளைந்த மாலையையும் என்கிறது. மேலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் இருந்து மலையகத்துக்கு புலம் பெயர்ந்தோரின் நாட்டுப் பாடல் ஒன்றில் காதில் ஆண்கள் அணியும் கடுக்கண் பற்றி ஒரு செய்தி உள்ளது. அதில் சில வரியை மட்டும் கீழே தருகிறேன்; “கலகலண்ணு மழை பெய்ய கம்பளித் தண்ணி அலை மோத காரியக்காரராம் நம்பய்யா கங்காணி கடுக்கன் மின்னலைப் பாருங்கடி’’ இலங்கையில் 1958ம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது பெரும்பாண்மை இனத்தவர் தமிழர்களின் தலையை முகர்ந்து பார்த்தும் ( நல்லெண்ணை வைத்து படிய வாரி இழுக்கும் வழக்கம் தமிழரிடம் இருந்தது), காதுத் துவாரத்தை அல்லது கடுக்கண்ணை வைத்தும் அவர்களைத் தமிழர்களாக இனம் கண்டு கொண்டதாகவும் ஒரு செய்தி உண்டு. ஆயுர்வேதத்தின் படி, வெள்ளி தங்கம் என்பன குளிரூட்டும் பண்புகளை கொண்டு இருப்பதுடன் நமது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் தன்மையையும் கொண்டு உள்ளது. [metals like silver and copper have cooling properties which directly affect our nervous system]. வெள்ளி நகைகள் உடலின் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கிய மாக்குமாம். பொதுவாக தமிழர் உடலின் மேல் பகுதியில் தங்க நகைகளையும், உடலின் கீழ் பகுதியில் வெள்ளி நகைகளையும் பாரம்பரியமாக அணிகிறார்கள். உதாரணமாக காலில் அணியும் வெள்ளி கொலுசுவையும் கழுத்தில் அணியும் தங்க சங்கிலியையும் சொல்லலாம். மேலும், பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படுகின்றது என்றும், இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம் என்றும், அதனாலே தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு அணிவிக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 18 தொடரும்
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 30 வசப மன்னரின் காலத்தில், நாகதீபத்தை [யாழ்ப்பாணம்] ஆட்சிசெய்த 'இசுகிரி' யைப் பற்றி லயனல் சரத் கூறுகையில் [வல்லிபுர தங்க ஓலைச் சுவடி], அவரை சிங்களவர் என்று கூறமுடியாது என்றும், ஏன் என்றால், இசு என்ற பதம் பிராமணரை குறிக்கும் என்றும், கிரி என்னும் சமணர் [நிர்வாணத் துறவி], வலகம்பா மன்னர் தமிழர்களுடன் போரிட்டு தோல்வியடைந்து ஓட்டம் பிடித்த வேளை 'கரிய நிற சிங்களவன்' என்று கூறி நிந்தனை செய்தவர் என்றும், எனவே 'இசுகிரி' சிலவேளை தமிழ் பௌத்த ஆட்சியாளராக இருக்கலாம் என்கிறார். அதற்கு இன்னும் ஒரு எடுத்து காட்டாக, ஆறாவது பராக்கிரமபாகு மன்னருக்காக 'சபுமல்' என்னும் தமிழ் இளவரசர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி ஆட்சி புரிந்தமையை கூறுகிறார். தற்காலத்தில் ஆங்கில மொழியை கலந்து உரையாடுவதை பெருமைக்குரியதாக கருதுவது போல, அன்றைய காலத்தில் தமிழ் மொழியை கலந்து பேசுவதன் மூலம் தமது உயர் நிலையை வெளிப்படுத்தினர் என்கிறார். இதற்கு சான்றாக, ஐந்நூற்று ஐம்பது ஜாதகம், உம்மங்க ஜாதகம் ஆகிய நூல்களில் சிங்கள அமைப்பில் அமைந்த தமிழ் வசனங்கள் காணப்படுகின்றன என்றும், தமிழ் பகைமைகளை காட்டுகின்ற 'இராஜவலி' யில் கூட முற்று முழுதாக தமிழ் சிங்கள கலப்பு மொழி பாவிக்கப்பட்டுள்ளதை உதாரணம் காட்டலாம் என்கிறார். இன்னும் ஒரு உதாரணமாக, 'சுபா சித' என்னும் காவியத்தை எழுதிய அகலியவன்ன முகவெடிதுமா அவர்கள், தனது நூலில், 'பிரபல்யம் பெற்ற பழைய முனிவர்களின் வாயால் மனதை கவரும் தமிழ், வடமொழி பாளி ஆகிய மொழிகளைக் கற்காத அறிவு குறைந்த மக்களுக்கு புகழ் பெற்ற நீதி சாஸ்திரம் உள்ள சொற்களின் பொருளினை புரியும் வண்ணம், சிங்கள மொழியில் சுருக்கமாக செய்யுள் வடிவத்தில் [ஐந்தாவது செய்யுளில்] கூறியது இதனாலேயாகும்' என்கிறார் என்று சுட்டி காட்டுகிறார். பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர்வரலாறு - கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார், “இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர், வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது என்று கூறுகிறார். மற்றும் நாகர், தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும், எந்த வித ஐயப்பாடும் இன்றி, இலங்கையில் தமிழர் குறைந்தது கி மு 500 ஆம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வந்து இருக்க வேண்டு மென்றாலும், அதன் பின் பண்டைய கேரளா, தமிழ் நாடு போன்றவற்றில் இருந்து வந்த குடியேற்றங்களால் மேலும் பல்கிப் பெருகியது எனலாம். மற்றது பண்டைய கேரளா தமிழ் மொழி பேசும் சேர நாடு என்பதும் குறிப்பிடத் தக்கது. இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டு அரியணைக்குப் போரிட்ட போது அதற்கு வேண்டிய படைகளை தமிழ்நாட்டில் இருந்தே திரட்டி வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை. இன்று சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் கரவா, சலாகமுவ, துராவ [Karawa, Salagama, Durawa] போன்ற “சாதிகள்” 16 ஆம் நூற்றாண்டில் கறுவா பட்டை உரிக்கவும் மரமேறவும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளர்களே! அதே போல, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதப் பரவர் அல்லது பரதவர் 20 ஆம் நூற்றாண்டில் இனமாற்றம் செய்யப்பட்டனர். தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் சிங்கள – பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு இந்த ஒருமைப்படுத்துதலும் ஒரு காரணம் ஆகும். மேலும் தமிழரின் அன்றைய மனப்பான்மையை, மணிமேகலையின் சில முக்கிய வரிகள் எமக்கு இன்றும் எடுத்து காட்டுகிறது. “ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்ற மாக்கள் தம்முட னாயினும் செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்” (மணிமேகலை,1. விழாவறை காதை - 60-63) யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து பல்வேறு சமயங்களை சாரந்தவர்கள் சொற் போரில் வென்று நிலை நாட்ட ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய சமயக்கருத்தை ஏற்க முடியவில்லை யென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள் எனவும் கூறுகிறது. அதாவது எம் மதமும் சம்மதம் என்ற பெருந் தன்மையுடன் தமிழர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற தோரணையில், அறிவு பூர்வமாக பட்டி மன்றத்தில் விவாதித்து அதன் பெறுபேறுகளை ஏற்றுக் கொண்டதுடன், எல்லோரையும், எல்லா மத பிரிவினரையும் சமஉரிமை கொடுத்து அணைத்து வாழ்ந்தனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 31 தொடரும்
-
"மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்"
"மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்" "வாலிப வயதில் தவற விட்டதை வானம் பார்த்து ஏங்கி துடித்ததை வாலைக் குமாரியை தொழுது கேட்கிறேன் வாட்டம் தராமல் வாலியம் அருள்வாயா வாழா என் வாழ்வை வாழவே!" "வண்டுக் கண்கள் விரிந்து பார்த்து கண்டும் காணாத அழகை ரசித்து குண்டுக் கன்னத்தில் முத்தம் கொடுக்க மண்ணின் வாழ்வு முழுமை பெற மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [‘வாலைக் குமரி’ : இது, பொதுவாக, கடவுளைப் பெண்ணாக வணங்கிப் போற்றும் கவிஞர்கள் கையாளும் சொற்றொடர்!]
-
"ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!"
"ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!" "அமைதியாய் இருந்து அவன் படித்தான் அடக்கம் கொண்டு தனிமை கண்டான் அறிவு பகிர்வென துணையாய் வந்தாள் அழகாக அமர்ந்து ஆசை ஊட்டினாள் !" "ஆசிரியர் போல அவனுக்கு இருந்தாள் ஆனந்தமாய் அவனும் கனவு கண்டான் ஆகாரம் தீத்துவது போல அவளோ ஆதரவாய் அன்பாய் காதலும் கொடுத்தாள் !" "இன்பம் என்றால் என்ன என்று இலக்கியம் காட்டிய தனி வழியில் இனிதாய் இருவரும் ஒன்றி இருந்து இரகசியம் இல்லா பாடம் பகிர்ந்தனர் !" "ஈசன் இவளே இனி என்று ஈடு இல்லா இச்சை கொண்டு ஈயம் உருகியது போல அவனும் ஈருடல் ஓருடலாக எண்ணி வாழ்ந்தான் !" "உடலை உடைத்து எங்கோ போனாள் உருவம் கண்ணில் மறைந்து போனது உள்ளம் ஒடிந்து காரணம் தேடுகிறான் உயிரை பிடித்து இன்னும் வாழ்கிறான்!" "ஊமையாக வாழ்வு எதோ நகருது ஊக்கம் குறைந்து சோர்வு தொற்றுது ஊர்கள் எல்லாம் இருட்டாய் தெரியுது ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வெள்ளந்தி மனிதர்கள்"
"வெள்ளந்தி மனிதர்கள்" கள்ளங்கபடமற்ற அப்பாவியாக, வெள்ளந்தியாக அல்லது காலத்திற்கு ஏற்ற புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத, பழைய சம்பிரதாயங்களைக் கைவிடாத பழம்போக்கு கொண்டவர்களாக, பத்தாம்பசலியாக, அதிகமாக கிராம புறங்களில் வாழும் மக்கள் இருப்பதாக பலர் கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன். இன்றைய தொழில் நுட்ப வசதிகள் மற்றும் நவீன போக்குவரத்து வாய்ப்புகள் நிறைந்த உலகிலும் உண்மை நிலை இன்றும் இதுதானா? என்னை சிலநாளாக வாட்டும் கேள்வி இது! நான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே இப்ப வேலையும் செய்கிறேன். எனவே ஒரு சில நாளாவது கிராமத்தில் இருந்து உண்மையை அறிய வேண்டும் என்ற அவா உந்த, ஒருவாறு தற்காலிக இடமாற்றம் பெற்று இன்று, அந்த குக்கிராமத்துக்கு, பேரூந்தில் செல்கிறேன். எனக்கு பக்கத்திலும் , பின்னாலும் ஒரு தாயும் இரு மகளும் அவர்களின் பாட்டி, தாத்தாவுடன் அதே கிராமத்துக்கு பயணம் செய்தார்கள். எனக்கு பக்கத்தில் தாத்தாவும் பாட்டியும் , பின்னால் மற்ற மூவரும் வந்து அமர்ந்தார்கள். அவர்களின் கதைகளில் இருந்து அவர்கள் எல்லோருமே நெடுங்காலமாக பட்டண வாசிகள் என்று தெரிய வந்தது. இது நீண்ட தூர பயணம் என்பதால், நான் அவர்களின் தாத்தா பாட்டிக்கு ஒரு அறிமுகத்துக்காக, 'வணக்கம்' கூறினேன், பின் திருப்பி தாயையும் இரு மகளையும் பார்த்தேன், அக்காவும் தங்கையும் தமக்குள் எதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கும் 'வணக்கம்' என்றேன். அவர்களின் தாத்தா ஆங்கிலத்தில், 'தம்பி நீங்க என்ன செய்கிறீர்கள், உங்க ஊர் அந்த குக்கிராமமா?' என்று கேட்டார், நான் மறுமொழி சொல்ல முன்பே தாம் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்ததாகவும், தாமுண்டு தமது வாழ்வுண்டு என்று எல்லா வசதிகளுடனும் வாழ்வதாக கதையை ஆரம்பித்தார். நான் தமிழில், 'நான் ஒரு பொறியியலாளர், அதே பட்டணத்தில் தான் பிறந்து வளர்ந்தவன், இப்ப ஒரு தற்காலிக இடமாற்றத்தில் சில மாதங்களுக்கு அந்த கிராமத்துக்கு போகிறேன். எனக்கு அரச விடுதியும் ஒரு வாகனமும் ஒதுக்கி உள்ளார்கள். ஆகவே எனக்கு அங்கு ஒருவரையும் தெரியாது என்றாலும், பிரச்சனை இருக்காது' என்றேன். அதன் பின் பாட்டி, தாம் அங்கு ஒரு கல்யாண வீட்டுக்கு போவதாகவும், அவர்களை முன்பு ஒருமுறை பட்டணத்தில் தமது கடையில் உடுப்புக்கள் வாங்கும் பொழுது சந்தித்ததாகவும், அதன் பின் நண்பர்களாகி விட்டார்கள் என்றும், இந்த கல்யாணத்துக்கான உடுப்புகள், நகைகள் எல்லாம் தம்மிடமே வாங்கியதாகவும் பெருமையாக கூறினார். அப்ப தான் அவர்கள் ஒரு பெரும் கடைக்காரர்கள் என்று தெரிய வந்தது. 'வரிகள் எல்லாம் அரசாங்கம் கூட்டி இருக்கிறார்களே, உங்களை பாதிக்கவில்லையா?' என்று தாத்தாவிடம் கேட்டேன். அதற்கு தாத்தா , தனக்கு தெரியாது முகாமையாளரைத்தான் கேட்க வேண்டும் என்றார். 'நீங்க எந்த கட்சிக்கு வாக்கு போட்டீர்கள்?' என்று கதையை தொடங்கி 'தேர்தல் வரப்போகிறது, உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள். உங்கள் கோரிக்கை எதாவது உண்டா ?, இந்த வரிகளில் இருந்து தப்பிப்பிழைக்க' என்று முடித்தேன். அப்ப பாட்டி, 'நம்மை மதித்து வாக்கு கேட்கிறார்கள், அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும். நம்மை மதித்து வருகிறார்களே அதுவே போதும். நமக்கு அவர்களாக பார்த்து ஏதாவது செய்வாங்க', 'எமக்கு எம் சாமி உண்டு, அவன் எல்லாம் கவனிப்பான், கைவிடமாடடான்' என்று கூறி, தன் தலையில் இரு குட்டும் குட்டினார். அதற்குள் தாத்தா குறட்டை விட தொடங்கிவிட்டார். அதை பார்த்த பின்னல் இருந்த தாய், 'அந்த பையன் பாவம், நீங்க இருவரும் பின்னல் வாங்க, பிள்ளைகள் முன்னால் போகட்டும்' என்று கூறி அவர்களை இடம் மாற்றினார். இப்ப தான் அவர்களின் இரு மகளையும் முழுமையாக பார்த்தேன். பெரியவளுக்கும் சின்னவளுக்கும் நல்ல வயது வித்தியாசம். சின்னவள் இன்னும் பாடசாலை மாணவி போலவே தெரிந்தது. எனவே பெரியவளை பார்த்து 'ஹலோ' என்றேன். உண்மையில் அவள் மிக அழகாக அமைதியாக இருந்தாள், சின்னவளும் அழகு என்றாலும் இன்னும் சின்னபிள்ளைத்தனம் மாறவில்லை. எதோ அக்காவுடன் குறும்பு செய்து கொண்டு இருந்தாள். நான் மீண்டும் 'வணக்கம்' என்றேன். பதிலுக்கு இருவருமே 'தேங்க்ஸ்' என்றனர். அதன் பின் அக்கா ஒரு புன்சிரிப்புடன், பின்னுக்கு தாயைப் பார்த்துவிட்டு - அவர்கள் மூவரும் அப்பொழுது தூங்கிவிட்டார்கள் - 'ஹாய்' என்றார். 'நீங்க என்ன செய்கிறீர்கள்' என்று கதையை தொடங்கினேன். இப்ப சின்னவளும் அக்காவின் மடியில் தலை சாய்ந்து படுத்துவிட்டார், நானும் அவளும் தான் முழிப்பு. எனக்கு அவளை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும், கதைக்க வேண்டும் என்ற ஒரு ஆசை தூக்கத்தை தடுத்துவிட்டது. அவளுக்கு எப்படியோ எனக்கு தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக இப்ப அவள் மெல்ல மெல்ல தாராளமாக கதைக்க தொடங்கினாள். அதில் பல அப்பாவித்தனத்தையும் நிறைய மூட நம்பிக்கைகளையும் காணக்கூடியதாக இருந்தது. கிராமப்புற மக்கள் என்றால் கள்ளம் கபடமற்றவர்கள். எளிதில் யாரிடமும் ஏமாந்து விடுவார்கள் என்று தமிழ் திரைப்படங்களில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக, பட்டணத்து வாசியான இவள் அதே குணஇயல்பில் இருப்பதைக் கண்டு ஆச்சிரியப் பட்டேன்! சாடிக்கு ஏற்ற மூடி மாதிரி, பாட்டிக்கு ஏற்ற பேத்தி என்று எண்ணினேன். ஆமாம் பாட்டியின் முன்னைய பதில் அப்படித்தான் எண்ண வைத்தது. பழைய கள்ளங் கபடம் இன்னும் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் வெள்ளந்தி மக்கள் கிராமத்தினர் மட்டுமே என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம். ஆனால் இந்த நகர்ப்புற குடும்பத்தை பார்த்ததும் அது முற்றிலும் பிழை என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் எங்கும் இருக்கலாம்? அப்படி என்றால் தேவை இல்லாமல் மாற்றத்தை கேட்டு பெற்றுள்ளேன் என்று என்னையே நான் நொந்தேன். பரவாயில்லை, இந்த பயணம் தானே ஒரு அழகிய, ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை அப்படியே பேசும் இவளை அறிமுகப் படுத்தியது என்று சமாதானம் செய்து கொண்டு, மேலும் அவளின் சுவாரஸ்யமான [கவர்ச்சியான] பேச்சுக்களை கேட்க சில தனிப்பட்ட கேள்விகளை கேட்ப்போம் என்று முடிவு எடுத்தேன், அதற்கு சாதகமாக எல்லோரும் உறக்கத்தில் இருப்பதும் துணை புரிந்தது. உங்களுக்கு ஆண் நண்பர் [பாய் பிரின்ட்] உண்டா என்ற கேள்வியுடன் மீண்டும் ஆரம்பித்தேன். அவள் அதெல்லாம் இல்லை என்று கண் மூடிய படியே பதில் சொன்னாள். அப்படி என்றால் எப்படியானவரை காதலிக்க அல்லது கல்யாணம் கட்டிட விருப்பம் என்று தொடர்ந்தேன். அதெல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான். படைத்தவனுக்கு படி அளக்க தெரியாதா? என்று என்னை பார்த்து குறும்பாய் சிரித்தாள். உங்களுக்கு என்று ஒரு விருப்பமும் இல்லையாடா என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்டேன். என்னை படைத்தவனுக்கு அதெல்லாம் தெரியும் தானே? பின் எதற்க்காக நான் கவலைப்பட வேண்டும் என்று எள்ளிநகை யாடினாள். இவளுடன் கதைப்பதில், நான் தான் இறுதியில் முட்டாள் ஆகிவிடுவேனோ என்று எனக்குத் தோன்றியது. என்றாலும் கடைசியாக, நீங்க திருமணம் செய்த பின், எத்தனை பிள்ளைகள், எப்படி வேண்டும் என்ற திட்டமாவது ஒன்று உங்களிடம் உண்டா என்று கேட்டேன். கொஞ்சம் பின்னுக்கும் , தங்கையையும் இன்னும் எல்லோரும் உறக்கமா என்று பார்த்துவிட்டு, பிள்ளை பெறுவது எம் கையில் இல்லை, எல்லாம் அவன் செயலே! அவன் எதை தருகிறானோ, அதுவே என் விருப்பம் , இதற்கு எல்லாம் திட்டம் எதற்கு என்று என்னைப் பார்த்து கேட்டாள். நான் அதற்குப் பின் தனிப்பட்ட கேள்விகளை நிறுத்திவிட்டேன். அவளும் கொஞ்ச நேரத்தால் கண் அயர்ந்துவிட்டாள். எனக்கு நித்திரை வரவில்லை அவளின் முகத்தை, அழகை ரசித்தபடியே மிகுதி பயணத்தை தொடர்ந்தேன். "சயனகோலம் அவளின் அழகு கோலம் சரிந்த படுக்கையில் தேவதை கோலம் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகிறது அவளின் பார்வை!" "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில் சற்று நானும் என்னை மறந்தேன்!" "சக்கர தோடு கழுத்தை தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கை கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுது இள நகை!" "சகுனம் பார்த்தே காரியம் செய்வாளாம் சஞ்சலம் தந்து என்னை வருத்துகிறாள் சகிதமாய் குடும்பம் சூழ பயணிக்கிறாள் சந்தோசம் பொங்க நானும் ரசிக்கிறேன்! " "சங்கீதம் பொழியும் அவள் குரல் சந்தனம் மணக்கும் அவள் உடல் சச்சரவு தரா அவள் நடத்தை சம்மதம் கேட்க இதயம் ஏங்குது!" "சதாசிவன் மகிழ்ந்த நடன மகள் சரஸ்வதி ரசித்த இசை மகள் சந்திக்க எனக்கும் சந்தர்ப்பம் வந்ததே சத்த மின்றி அவள் ஒதுங்குகிறாளே! " அந்த அவளின் முகம் எனக்கு பல கதைகள் சொல்லிக்கொண்டு இருந்தது மட்டும் அல்ல, கிராமத்தினர் மட்டுமே வெள்ளந்தியாக இருப்பர் என்ற கதாசிரியர்கள், திரைப்பட ஆசிரியர்களின் சுவை தரும் எண்ணங்களுக்கு ஆப்பு வைப்பது போல இருந்தது. என்னை அறியாமலே அவள் மேல் ஒரு இரக்கமும் அதே நேரம் காதலும் இருந்தது. அவள் தன் பெயர் சயந்தி என்று, தொடக்கத்தில் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்குது. சயந்தி என்றால் இந்திரன் மகள் என்று எப்போதோ படித்தது நினைவில் வந்தது. அவள் உறங்கி இப்ப ஒரு மணித்தியாலம் இருக்கும். நான் மீண்டும் அவள் முகத்தை பார்த்தேன். அவள் மெல்ல கண்விழித்தது தெரிந்தது, 'ம்ம் நல்ல நித்திரை ஆக்கும்' என்று கதையை ஆரம்பித்தேன். அவள் ஒன்றும் பேசவில்லை. கண் வெட்டாமல் என்னையே , பாத்தாள், பின் மெல்ல குனிந்து 'ஐ லவ் யு' என்று சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சரியம், என்ன நடந்தது என்று வியப்பில் இருக்கும் பொழுதே, 'ஆண்டவன் உறக்கத்தில் வந்து, நீங்க தான் இனி என் வருங்கால கணவன்' என்று சொல்லிவிட்டு போனார் என்று ஒரு போடு போட்டாள். எனக்கு உள்ளுக்குள் விருப்பம் இருந்தாலும், வெளியில் அதைக் காட்டவில்லை. எல்லோரும் உறக்கத்தில் இருப்பதால், பட் என்று கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் அப்படியே மலைத்துப் போய் இருந்தாள்! மீண்டும் அவள் என் கண்ணை உற்றுப் பார்த்தாள், எனக்கு நல்ல சந்தோசம், நீங்களும் ஆம் என்பதால் தானே முத்தம் தந்தீர்கள் என்று கொஞ்சம் வெட்கத்துடன் தலை குனிந்து சொன்னாள். நான் இல்லை, என் கனவில் அப்படி ஆண்டவன் சொல்லவில்லை, ஆக முத்தம் கொடு என்று மட்டுமே சொன்னார் என்று ஒரு பொய் கூறினேன். ஆண்டவன் அப்படி செய்யார். எனக்கு நம்பிக்கை உண்டு, நீங்க பொய் சொல்லுகிறீர்கள் என்று கொஞ்சம் கோபத்துடன் கண்ணீர் துளி ஒன்று இரண்டு விழ, என்னைப் பார்த்தபடி சொன்னார். நான் அப்படி வந்து சொன்னால் சொல்கிறேன் என்று சொல்லவும் சின்னவள் உறக்கத்தில் இருந்து எழும்பவும் சரியாக இருந்தது. அவள் கொஞ்ச நேரம் என்னையே பார்த்தபடி இருந்தாள். அவள் கண் மௌனத்தில் பல கேள்விகள் என்னைக் கேட்டுக் கொண்டு இருந்தன. பின் ஒரு சிறுதாளில் தன் தொலை பேசி இலக்கத்தை எழுதி 'மூன்று நாட்களுக்குள் சொல்லவேண்டும், எனக்கு வந்த ஆண்டவன் கட்டாயம் உங்களுக்கும் வருவார். சொல்லுவார். முத்தம் கொடு என்று ஆண்டவன் சொன்னது, நான் இனி உங்களுடையவளே என்பதால் தானே? ஆண்டவன் என்றும் பிழைவிடார் , காத்து இருப்பேன். மறுமொழி இல்லை என்றால், நான் இனி இப்படியே காலம் கழிப்பேன், இது சத்தியம்' என்று அதில் இருந்தது. அவள் எழுதியதை வாசித்து முடிக்கவும், பேரூந்து அந்த கிராமத்து பேரூந்து தரிப்பிடத்துக்கு வரவும் சரியாக இருந்தது. அவள் என்னைத் திருப்பி கூட பார்க்கவில்லை, சின்னவளும் மற்றவர்களும் கை அசைத்து, மீண்டும் சந்திப்போம் என்று இறங்கி போனார்கள். நான் அங்கிருந்து வாடகை மோட்டார் வண்டியில், எனக்கு என தரப்பட்ட விடுதிக்கும் போனேன். என்றாலும் என்னால் அவளின் அந்த கடைசி நேர வாடிய முகத்தை மறக்க முடியவில்லை. அவள் தந்த தொலைபேசி இலக்கத்தை திருப்ப திருப்ப பார்த்தேன். பாவம் அவள் என்ற நினைப்புத்தான் மனதில் விடாமல் தோன்றிக்கொண்டு இருந்தது. நான் புது வேலையை பாரம் எடுத்து, அதில் மும்மரமாக போனதால் அவளை ஓரளவு மறந்தே விட்டேன். மூன்றாம் நாள் , நான் வேலை முடித்து, அருகில் இருந்த பொது விடுதியில், கொஞ்சம் களைப்பு ஆற பீர் [beer] அருந்தும் பொழுது, அங்கு சில சோடிகள் வயலில் ஒன்றாக மகிழ்வாக வேலை முடித்துக் கொண்டு வரம்பில் இருந்து கதைப்பதை பார்க்கும் பொழுது தான் அவளின் ஞாபகம் மீண்டும் வந்தது. ஏன் நீ அவளுக்கு அவசரப்பட்டு முத்தம் கொடுத்தாய்? என்று உள்மனம் என்னைத் திட்டுவது போல இருந்தது. நேரத்தை பார்த்தேன் ஐந்து மணி ஆகிறது. அவள் அன்று ஆறுமணி அளவில், மூன்று நாளுக்கு முன் தொலை பேசி இலக்கம் குறித்த தாள் தந்தது ஞாபகம் வந்தது. இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள் நான் விடை கொடுக்க வேண்டும். உடனே என் தொலை பேசியில், அவள் தந்த இலக்கத்துக்கு அழைப்பு விட்டேன். அது ஒலித்துக்கொண்டு இருந்தது, ஆனால் அவளோ அல்லது யாரோ எடுக்கவில்லை எனக்கு ஒன்றும் புரியவில்லை, மீண்டும் மீண்டும் அழைப்புவிட்டேன். கடைசியாக சின்னவள் எடுத்து யார் என்றார். நான் பேரூந்தில் சந்தித்த அண்ணா, அக்கா எங்கே என்றேன் ?. சின்னவள் அக்கா சாமி கும்பிடுகிறார். இன்று எனோ சில மணித்தியாளமாக சாமி அறையிலேயே இருக்கிறார் என்றார். நான் விறைத்தே போய்விட்டேன். நான் அதில் 'சாமி வந்தார். சம்மதம் சொல்ல சொன்னார்' என்று சிறு செய்தி அனுப்பி அக்காவிடம் கொண்டுபோய் உடன் கொடுக்கும் படி கூறினேன். அவர் ஆம் கட்டாயம் என்றார். சிலவேளை பொய் ஒருவருக்கு சந்தோசம் கொடுக்கும் என்றால் சொல்லலாம் என்று நினைக்கிறன். இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது. ஆனால் அதன் பின்பும் ஒரு பதிலும் அவளிடம் இருந்து வரவில்லை. இன்னும் ஒரு அழைப்பு விடுவதா இல்லையா என்று எனக்குப் புரியவில்லை. நான் இனி நடப்பது நடக்கட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டு, இரவு சாப்பாடு சாப்பிட தொடங்கினேன். மணி பத்தாகி விட்டது. நான் சாப்பிட்டு விட்டு உறங்கிவிடேன். அடுத்த நாள் வழமை போல வேலைக்கு போக ஆயுத்தமாகிக்கொண்டு இருந்தேன், அப்பொழுது என் தொலை பேசி விடாமல் அலறத் தொடங்கியது. எடுத்துக் பார்த்தேன். அது அவள் தான். நான் எடுத்து 'ஹாய் சயந்தி' என்று சொல்லவும் அவள் 'ஐ லவ் யு' சொல்லவும் சரியாக இருந்தது. 'ஏன் நேற்று பேசவில்லை?' என்று என் அவாவை கேள்வியாக கேட்டேன் . அவள் ஒரு புன்முறுவலுடன் , 'நான் நல்ல நேரத்துக்கு காத்திருந்தேன்' என்று மகிழ்வாக சொன்னார். நானும் உடன் 'ஐ லவ் யு' என்றேன். அவளின் அழகுடன் அவளின் வெள்ளந்தியான பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. மெத்தப் படித்த குடும்பம் தான். அவளின் பேச்சில் உண்மை இருந்தது. அதனால் கள்ளம் கபடம் அங்கு காணவில்லை. இப்போது படிக்காதவர்கள் கூட வெள்ளந்தி மனிதர்கள் என்று என் முடிவை மாற்றவேண்டி இருந்தது? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 14 [இணைய கலாச்சாரம் தொடர்கிறது] இணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு, அது, பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [sedentary lifestyle] ஒருவரை உள்ளாக்குவது ஆகும். கிட்டத் தட்ட அனைத்தையும் ஓர் சில அழுத்தத்தின் [clicks] மூலம் கையாளலாம் என்றால். யார் தான் தமது உடலை அசைக்க [physical movement] விரும்புவர் ? இது தான், இந்த குறைபாட்டிற்கு காரணம். வைப்பிடுதல், வணிகம், வைத்தியசாலைக்கு முன்பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் அல்லது உங்கள் கனவு வீட்டை தேடுதல் [banking, shopping, booking hospital, paying bills or searching your dream home] போன்ற அத்தனையையும் இணையத்தில் மிகவும் எளிதாக நாம் செய்யலாம். ஆனால் இது உண்மையில் இளைஞர்களை நோய்க்கு உள்ளாக்கி விடுகிறது. எனவே நாம் உடல்பருமன், இதய நோய்கள் மற்றும் மனத் தளர்ச்சி [Obesity, Heart Ailments and depression] ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பல வழிகளில் அம்பலப்படுத்துவது, மக்கள் தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு கட்டாயப்படுத்தி திணிப்பது, மற்றும் முக்கிய அரசாங்கத் தகவல்களை திருடுவது போன்ற கெட்ட செயல்களுக்கும் இது உடந்தையாவது எம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவைகளுடன் குழந்தை பாலுணர்வு [ஆபாச] படைப்புக்கள், பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆட்சேர்ப்பு [Child Pornography, Recruitment for terrorism purposes] மற்றும் மக்களை தீவிரப்படுத்துதல் [radicalize people], துன்புறுத்தல் [Harassment] போன்ற செயகளுக்கும் இணையம் வழிவகுக்கிறது. எனவே இணைய பாவனை ஒரு வழியில் ஒழுக்க சீர்கேடுகளையும் [moral decadence] சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. இதில் முக்கியமானது பாலுணர்வு [ஆபாச] படைப்புக்களாகும். மற்றது தவறான மற்றும் தப்பு வழியில் அழைத்துச் செல்லக்கூடிய [false and misleading] செய்திகளை, தகவல்களை பரப்புதலாகும். ஆகவே எம்மில் எழும் முக்கிய கேள்விகள், 1] நிகழ்நிலை [online] யில் செலவழிக்கும் காலம் அவர்க ளின் நேரடியான சமூக இணைப்புகளை பாதிக்கிறதா [social connections] ? 2] இணையம் சமூக நெறி முறைகளின் வலுவை அல்லது பிடியின் செறிவை குறைக்க [dilution of social norms] பங்களிப்புச் செய்கிறதா ? இணையம் பொதுவாக மக்களை, மக்களுடனான நேரடி தொடர்பில் இருந்து [in-person contact] தூக்கி எறிந்து, அந்நியப்படுத்துவதுடன், நிஜ உலகத்துடனான தொடர்புகளுக்கான வாய்ப்புகளை துண்டிக்க ஊக்கு விப்பது, இன்று ஒரு பரவலான கவலையாக உள்ளது. இணையம் மக்களை வசப்படுத்தி, இயங்கலையில் [online] பல மணிநேரம் செலவழிக்க தூண்டுகிறது. அதனால், அவர்கள் கணனி திரைக்கு முன், வெளியே அயலவருடன், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் கூடிப் பேசாமல், கதிரையில் இருந்து காலம் கழிக்கிறார்கள். இப்படி எதுவாகினும் உங்கள் நேரத்தில் கூடிய பங்கை எடுப்பது, உங்கள் ஆரோக்கியத்தை, கட்டாயம் எதோ ஒரு வழியில் பாதிக்கும். மேலே கூறியவாறு சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி இருக்கும் மக்கள் ஒரு எதிர்மறையான பக்க விளைவுகளை அதிகமாக சந்திக்கலாம். உதாரணமாக, கண்கள் சோர்வு அடைதல், சமூகத்தில் இருந்து ஒதுங்குதல், அல்லது தூக்கம் இல்லாமை போன்றவை [eye strain, social withdrawal or lack of sleep.] வரக்கூடும். அது மட்டும் அல்ல, கணனியில் ஆய்வுகளில் ஈடுபடுபவர்களும் அல்லது மக்களுடன் பலமணிநேரம் வாதிடுபவர்களும் கூட இதே நிலையைத்தான் பெறுவார்கள். என்றாலும் சமூக ஊடகத்தில் அடிமையாகிறதே எல்லாவற்றையும் விட கொடுமையானது. இன்று இந்த நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற இணைய சாதனங்களை [smartphones and other devices] பலர் தம்முடன் எடுத்து செல்வதால், இணையத்தில் இருந்து தப்பிப்பது மிக மிக கடினமாகும். மேலும் அவர்கள் இந்த வசதிகளால் கூடுதலான நேரம் தம்மை அறியாமலே முகநூல், கீச்சகம் மற்றும் படவரி [Facebook, Twitter and Instagram ] போன்ற சமூக ஊடகங்களில் கூடுதலான நேரம் செலவளிக்கிறார்கள். இந்த தளங்களுக்கு பழக்க அடிமையாகி விடக்கூடியவர்களுக்கு, இது அவர்களின் வாழ்க்கையிலும், அவர்களுடைய ஆரோக்கியத்திலும் கட்டாயம் ஒரு தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு மற்றும் முகத்திற்கு முகம் சந்திக்கும் உறவு போன்றவற்றை குறைத்து விடும். இந்த நடவடிக்கைகளில் சில மிகவும் நடுநிலையானவை, அவைகள், உதாரணமாக கட்டணங்களை செலுத்துவது, பொருள்கள் வாங்குவது, வேலைக்கு மனு செய்வது, மற்றவருடன் தொடர்பு கொள்வது, போன்றவை இன்றைய உலகில் சில சில விடயங்களுக்கு தேவையானவை, ஆனால் மற்றவைகள், உதாரணமாக, ஆபாசமான புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் , ஒன்லைன் உறவுகள், போன்றவை வலுவான உணர்ச்சிகளை, அதனால் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவை. நாம் வாழும் இன்றைய நூற்றாண்டு நம் கையை விட்டு நழுவி பெரும்பாலும் இணையத்தின் பிடியில் அகப்பட்டுள்ளது. இந்த இணையம் என்ற தளமும் பிற தளங்களை போன்று மக்களை காக்கவும் செய்கிறது, அழிக்கவும் செய்கிறது. இணையத்தில் வாழ்ந்தார்கள் என்பதை விட இன்று அழிந்தார்கள் என்பது கூடிக்கொண்டு போகிறது. உதாரணமாக, இணையத்தை அதிகம் பயன் படுத்துபவர்கள் 14 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. அத்துடன் இவர்கள் அதிகமாக, தினமும் பயன்படுத்தும் சூழலையும் காண்கிறோம். இன்றைய இணையத்தில் பெருவாரியான ஆபாச செயல்கள் பயன்படுத்தப் படுகிறது என்று ஒரு கணிப்பு சுட்டிக் காட்டுகிறது. இன்றைய இளைய சமுதாயம் ஆபாசமயமாகி வளர சந்தர்ப்பம் அதிகமாகிறது. இப்படியான ஆபாசத்தின் விளைவுகள், உதாரணமாக, சுயஇன்பம், விபச்சாரம், ஓரினசேர்க்கை, என்று பல வித பாதிப்புக்களை இந்த சமூகத்தில் உருவாக்கி உள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் கைத்தொலை பேசி, நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் பகுதி ஆகிவிட்டது. உதாரணமாக கைத்தொலை பேசியின் திரையில், பெரும்பாலோனோர் கட்டுண்டு கிடக்கின்றார்கள். ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய கைத்தொலை பேசி, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால். கணனியில் இருக்கும் அத்தனை வசதிகளையும் இன்று கொண்டு உள்ளது. ஒரு நாளைக்கு நீங்கள் இணையத்துடன் எத்தனை மணி நேரம் செலவிடுகின்றீர்கள்? செல விட்ட நேரத்தில் நீங்கள் எதனைக் கற்றுக் கொண்டீர்கள்? இந்தக் கேள்விகளுக்கு தைரியமான பதிலொன்று உங்களிடமிருந்து கிடைக்குமெனில் உங்களைப் பற்றி கவலையடையத் தேவயில்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். எனவே, இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும். இணையத்தில் சிறந்த கருத்துக்கள், வரலாறுகள், கலைகள், செய்திகள், விஞ்ஞானம், மருத்துவம், தொழில் நுட்பம் என எண்ணிலடங்கா விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் உங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரானக் கத்தியாகவே காணப்படுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 15 தொடரும்