Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. அன்பு Justin க்கு "தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது." slave க்கு என்று ஒரு அடிப்படை கருத்து அன்றில் இருந்து இன்றுவரை மாறவில்லை ஆமாம், அதன் அடிப்படை கருத்து a person who is the property of and wholly subject to another and forced to provide unpaid labor. a person entirely under the domination of some influence or person: She was a slave to her own ambition. அது தொடக்கத்தில் கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் அது அப்படியான செயலில் உள்வாங்கப்பட்ட எல்லோருக்கும் நீட்டியதும் உண்மை , ஏன் என்றால் அங்கே, அதே நடவடிக்கை, அதே மாதிரியான சூழ்நிலை, அதே மாதிரியான மக்கள், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அல்லது மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அங்கு முக்கியம் இல்லை கொஞ்சம் உற்றுப் பாருங்கள், வேறு வேறு தெரிகிறதா, அடிப்படை கருத்தில் ?? திருமணம் என்ற சொல் சங்க காலத்தில், தமிழகத்தில் தோன்றியது , ஆனால் அது நீடிக்கப்பட்டு அதே கருத்துள்ள சடங்குக்கு , மக்கள் எங்கே பிறந்தார்கள் , எங்கே வாழ்கிறார்கள் என்பதை தாண்டி / தவிர்த்து பாவிக்கப் பட்டன , கருத்தை மாற்றாமல் இறுதியாக, இரண்டாயிரம் / இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் மட்டும் அல்ல , ஒரு அடிப்படை கருத்தையும் கொண்ட மணம், திருமணம் போன்ற சொற்களை, அதன் உள்பொருளை விளங்காமல் கதைப்பது என்னவென்று புரியவில்லை. அந்த திருமணம் என்ற சொல்லின் விளைவாகத் தான் கணவன் , மனைவி என்ற சொற்களே பிறந்தன , சில கருத்துக்களுடன் , அது மட்டும் அல்ல, அம்மா , அப்பா என்ற சொல்கூட, அதே போல ஆனால் அவைகள் எதையும் வழங்காத கூட்டுக்கும் அதே பெயர் ?? அப்படி என்றால், அது என்ன இலங்கைத் தமிழர், இலங்கை சிங்களவர் ? எல்லாம் இலங்கையர் என்றால் justin கூட தன் பெயரை முழுதாக கூறி இருந்து இருப்பாரே ?? ஆனால், உண்மையில் என்ன அங்கு நடந்து இருக்கும் ?? ஏன் இந்து வேறு வேறு ?? நன்றி
  2. "பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு முணுப்பை இசையாக்கிறேன் !" "வாலிப்பதை தூண்டும் சிறு இடையும் வாட்டம் காட்டாத நிலா முகமும் வாசனை கொட்டும் கரும் கூந்தலும் வாக்கியமாய் இங்கே வரைந்து காட்டுகிறேன் !" "பருவ பெண்ணை முழுதாக ரசிக்க பளிங்கு கன்னத்தில் முத்தம் இட பரவசம் கொஞ்சம் என்னை தழுவ பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] மிதலை - navel, கொப்பூழ், தொப்புள்
  3. அன்பு Justin க்கு "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன்." உங்கள் வாதத்தை பார்த்து நான் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை ?? ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கு என ஒரு கருத்தும், வரைவிலக்கணமும் , அடிப்படை சொல்லும் [வேர் சொல்லும்] உண்டு . இப்படித்தான் சொல்லை ஏற்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நான் வாதாடுகிறேன். மற்றும் படி "நீங்க வேற, நாங்க வேற" என்று இல்லை. marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், ஆண் ஆணுடன் சேருவது அல்லது பெண் பெண்ணுடன் சேருவது மற்றும் ஆண் பெண்ணுடன் சேருவது எல்லாம் ஒன்றா ?? வித்தியாசம் இருப்பது உங்களுக்கு தெரியாதா ? அதனாலதான் "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்கிறேன், மற்றும் படி அவர்களை தாழ்த்தி அல்லது உயர்த்தி காட்டிட அல்ல ஆண் பெண் சேர்தலில் ஒரு 'பிள்ளை' பிறக்கிறது அல்லது 'பிள்ளை' பிறக்க பொதுவாக வாய்ப்பு உண்டு அந்த பிள்ளையை , பிள்ளை என்று மட்டும் கூப்பிடுவதில்லை, அவர்களின் உடல் அமைப்பை வைத்து பொதுவாக ஆண் / மகன் அல்லது பெண் / மகள் என்று வேறு வேறு சொற்களில் கூறுகிறோம் , மற்றும் படி பிள்ளையை நீங்க வேற, நாங்க வேற" என்று அல்ல. ஏன் ஆண் , பெண் என்று கூறுகிறோம் ? பொதுவாக மனிதன் என்றே கூறலாமே ?? எல்லாத்துக்கும் காரணம் சொல்லுக்கு என்று கருத்தும் அதிகமாக வேர்ச் சொல்லும் உண்டு, அப்படித்தான் மனித கூட்டும் ?? வேலைக்கு போகிறவர்கள் எல்லோரும் ஊழியர் அல்லது பணியாளர் என்று கூப்பிடலாம் ?? ஏன் நாம் ஆசிரியர், மருத்துவர், பொறியியலாளர் என்று வேறு வேறாக கூப்பிடுகிறோம் ?? என என்றால் அங்கு அந்த ஊழியர்களின் தொழில் அமைப்பில் வேறுபாடு இருப்பதால் அப்படியே இதுவும். சிந்தித்தால் இலகுவான ஒன்று !! இறுதியாக, இரண்டாயிரம் / இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் மட்டும் அல்ல , ஒரு அடிப்படை கருத்தையும் கொண்ட மணம், திருமணம் போன்ற சொற்களை, அதன் உள்பொருளை விளங்காமல் கதைப்பது என்னவென்று புரியவில்லை. அந்த திருமணம் என்ற சொல்லின் விளைவாகத் தான் கணவன் , மனைவி என்ற சொற்களே பிறந்தன , சில கருத்துக்களுடன் , அது மட்டும் அல்ல, அம்மா , அப்பா என்ற சொல்கூட, அதே போல ஆனால் அவைகள் எதையும் வழங்காத கூட்டுக்கும் அதே பெயர் ?? அப்படி என்றால், அது என்ன இலங்கைத் தமிழர், இலங்கை சிங்களவர் ? எல்லாம் இலங்கையர் என்றால் justin கூட தன் பெயரை முழுதாக கூறி இருந்து இருப்பாரே ?? ஆனால், உண்மையில் என்ன அங்கு நடந்து இருக்கும் ?? ஏன் இந்து வேறு வேறு ?? நன்றி
  4. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 33 கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த மூத்த பிளினி இலங்கையில் குறிப்பிட்ட பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon] மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது. "பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு உறைபதி என்னும் உலகு." (குறள்-1015) எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498 "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த" என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது. ஆனால், மாகாவம்சத்தில், துட்டகாமினியை எடுத்துக் கொண்டால், தனது ஈட்டியில், புத்தரின் உடல் எச்சத்தை [relic] போட்டு சண்டைக்கு போனான் என்கிறது. எப்படி புத்தரின் எச்சத்தை பெற்றான் என்பது இன்னும் ஒரு ஆச்சரியமான கதை. ஆனால், அன்பே உலகம் என அமைதி விரும்பும் புத்தர் , எப்படி துட்டகாமினிக்கு அதன் மூலம் நீதி தவறாத எல்லாளனை கொல்ல உதவினார் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. அப்படி என்றால் எப்படியான ஞானம் புத்தருக்கு கிடைத்தது ? அன்பே வடிவான புத்தருக்கு இது அவமதிப்பு இல்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், தமிழ் அரசன் தித்தம்பாவை [Damila Titthamba], நாலு மாதம் ஆகியும் வெல்ல முடியாத சந்தர்ப்பத்தில், தந்திரமான முறையில், தான் தன் தாயை திருமணம் செய்ய தருகிறேன் என தன் தாயை தன்னுடன் யுத்த இடத்தில் வைத்திருந்து ஏமாற்றி அவனை கொல்லுகிறான் என்கிறது. இது வெளிப்படையாக கூறாவிட்டாலும், துணை விளக்கம் [it is stated so in the Tika, the commentary, as per the foot note in the Geiger’s translation.] கொடுக்கப் பட்டுள்ளது. மகாவம்சம் எழுதியவர் எந்த நிலைக்கும் , உதாரணமாக தாயையே எதிரிக்கு கொடுக்கும் அளவுக்கு தயாராக, தாய் இனத்தையே அவமதிக்கும் அளவுக்கு தள்ள பட்டிருப்பது, பத்தினி தெய்வம் வணக்கும் இலங்கையின் காப்பியம் ஒன்றில் எழுதப்பட்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 34 தொடரும்
  5. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 32 வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முன்னைய வரலாற்று துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார். உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market]. எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது. கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக்கொண்டனர். அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva /Chandramukhaseewa / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது. அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார்.[five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன் ? இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 33 தொடரும்
  6. நன்றிகள் எல்லோருக்கும்
  7. நன்றிகள் எல்லோருக்கும்
  8. "மாயா" செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை. பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான். நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்! என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன். முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன். அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன். 'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்! கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி! அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது! ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ? அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார். நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன். "அழகான என் செல்ல நண்பியே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?" "வாய் மூடி தலை குனிந்து வான் உயர துள்ளி குதித்து வாழ்க்கை காண கனவு கண்டவளே வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?" "என் அழகான காதல் செல்லமே என்னை விட்டு போக வேண்டாம்? என் குறும்பு இளவரசி இல்லாமல் எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?" "பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில் பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பச்சை சேலை சிவந்தது எனோ?" "மச்சம் கொண்ட உன் இளம்கால் மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன் மயான அமைதியில் உற்று நோக்கினேன் மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?" நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன். கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்! அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை' இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன். பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை ! "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்து" "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி என் கண்கள் பார்த்து பதுமையாக என் முன் நின்று பணிந்து அழைத்து வா என்றது" "என் அழகிய குட்டி கண்மணியே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து என்னை விட்டு விலகியது எனோ?" "இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. "இதயமே பேசு" "இதயமே பேசு ஆறுதல் கொடு இனிய காதலை மீண்டும் தந்திடு! இன்பம் காட்டி ஏமாற்றியது போதும் இரட்டை வேடம் இனிமேலும் வேண்டாம் இணக்கம் கொண்டு திரும்பி வந்திடு!" "அன்பு பொழிந்து ஆசை தெளித்து அழகு மொழியில் கொஞ்சிக் குலாவினியே! அகன்ற கண்ணும் சிறுத்த இடையும் அளவான மார்பும் கனவில் தோன்றி அக்கினியாய் இன்று என்னை எரிக்கிறியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 18 பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் ஒரு தோப்புக்கரணம் மூலம் அனுபவித்தவர்கள் எம் மூதாதையர்கள். இவர்கள் வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தோப்புக் கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சி ஒன்றை எதோ ஒரு கால கட்டத்தில் எமக்கு தந்துள்ளார்கள். இந்த தோப்புக்கரணம் பிள்ளையார் வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு அதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. இங்கு வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் [உக்கி போடுதல்] ஆகும். தோர்பி என்றால் ‘இரண்டு கைகளினால்’ என்றும், ‘கர்ணம்’ என்றால் ‘காதைப் பிடித்துக் கொள்வது’ என்றும் பொருள் என சிலரும், தவறுக்காக வருந்தித் திருந்திச் செய்யும் செயல் தப்புக்கரணம் என்றும், அந்த தமிழ்ச் சொல் வழக் காற்றில் திரிந்து ‘தோப்புக் கரணம்’ என்றாயிற்று என்று சிலரும் விளக்கம் கொடுக்கின்றனர். இது தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறலாம். எது எப்படியாயினும் இந்த தோப்புக்கரண பழக்கம் ஒரு ஆயிரம் ஆண்டு அல்லது சற்று முன்னும் பின்னும் பழமை வாய்ந்தது என ஊகிக்கலாம், என் என்றால், இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே போல, சங்கமருவிய கால ஐம்பெரும் காப்பியமான சிலம்பிலும் மணிமேகலையிலும் சீவகச் சிந்தாமணியிலும் கூட இல்லை. கிருஸ்துக் குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான், குப்தா காலத்தில், பிள்ளையார் ஓர் அளவு அடை யாளம் காணக்கூடிய அளவிற்கு வளரத் தொடங்கினார். பல்லவ மன்னரின் படைத் தளபதியான பரஞ்சோதி [இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார்], கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், வாதாபியில், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார். மேலும் பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே ஆகும், எனினும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பு காணக் கூடியதாக உள்ளது. அந்த குறிப்புகளிலும் கூட எங்கும் தோப்புக்கரணம் பற்றி எதுவும் காண முடியவில்லை. இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான பிள்ளையாரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்தாலும், இது ஒரு தண் டனை முறையாகும். பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக் கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் இருந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இவைகள் எல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரணமாக நடக் கும் நிகழ்வுகள், எனினும் இன்று இவை அருகி விட்டன. தோப்புக்கரணம், மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது என்றும், மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது என்றும் தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மனம் ஒருமுகப்பட்டு, ஞாபகசக்தி அதிகரித்து, படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் இன்று இந்த தோப்புக்கரணம், 'சூப்பர் பிரெ ய்ன் யோகா' என்ற பெயரில், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? [is now being researched and enthusiastically promoted in the West as "Super Brain Yoga."] லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr. Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார் [Dr. Eric Robins, a medical doctor in Los Angeles, calls it "a fast, simple, drug-free method of increasing mental energy"]. மேலும் பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண் கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் அவர் உறுதிப்படுத்தி கூறுகிறார் [He speaks of one student who raised his grades from C's to A's in the space of one semester]. காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றது என்றும், அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாகவும், இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்றும் அவர் சொல்கிறார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங் கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன், புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் செய்யும் பொழுது தமிழரின் தற்காப்புக் கலையையும் எடுத்து சென்று அங்கு அறிமுகப் படுத்தினார், ஆனால் இன்றோ நாம் தற்காப்பு கலையினை நினைக்கும் பொழுது அது சீனா அல்லது ஜப்பான் என்று கருதுகிறோம், அது போலத் தான் இந்த தோப்பு கரணமும் ஒரு காலத்தில் அமெரிக்காவினதாக மாறலாமோ என்று ஒரு ஐயப்பாடு என்னிடம் தோன்றுகிறது ? எனவே இந்த எமது பழம் பழக்கமான தோப்புக் கரணத்தின் பெருமையை உணருங்கள், மற்றவர்கள் அதை சொந்தம் கொண்டாட முன்பு இது தமிழரின் பாரம்பரியம் என்பதை எடுத்து கூறுங்கள். இது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டும் அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று இன்று நாம் அறிவியல் அடிப்படையிலும் அறிகிறோம். எனவே தமிழர்கள் அறியாத தமிழனிடத்தில் உள்ள நல்ல பழக்க வழக்கம் இதுவாகிறது. 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற வடிவில் பிறருக்கு நம்மிடத்தில் உள்ளவற்றின் அருமை - பெருமை இன்று புரிகிறது. ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தை வாய்பிளந்து பார்க்கிறோம். எம்மிடம் உள்ள நல்ல பாரம்பரி யங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் எமக்கு எனோ புரிவதில்லை? எனவே இனியாவது சிந்தியுங்கள், அறிய முயலுங்கள் !! இதனாலோ என்னவோ முன்பு பாடசாலைகளில் குழப்படி செய்யும் அல்லது பிந்தி வரும் அல்லது குறைந்த புள்ளி பெரும் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்தார்களோ என இன்று அறிவியல் பூர்வமாக மீளாய்வு செய்ய என் மனம் ஏங்குகிறது ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 19 தொடரும்
  11. மணிமேகலை புத்த மாதத்தில், அறம் என்பது என்ன என்று உரைக்கும் பொழுது: "அறமெனப் படுவது யாதெனக்கேட்பின் மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையளும் அல்லது கண்ட தில்லை" என்று சுருக்கமாக, எல்லா உயிர்களுக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் பாதுகாப்பாக வாழ இடம் ஆகிய மூன்றினை இன்றியமையாதனவாகக் கூறி, அவற்றின் வைப்பு முறையிலேயே தனித்தனி ஒவ்வொன்றின் இன்றியமையாத் தன்மையினையையும் விளக்கிக் காட்டு கிறார். [“If one should ask what is the supreme form of charity, bear this carefully in mind that it is the maintenance of all living creatures with food and clothing and places to live in safety.”] இவ்வற்றை இன்றைய புத்த பிக்குகளும், பௌத்த அரசுகளும் சரியாக கடைபிடித்தால், கட்டாயம் எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை தானாகவே ஏற்படும். அதைத்தான் புத்தரும் உண்மையில் விரும்பினார். தன் சிலைகளை நிறுவி சர்ச்சை, அமைதியின்மை, பேதம் ஏற்படுத்தவல்ல?
  12. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 31 மஹிந்த தேரர் அரசனையும் அவருடைய நாற்பது ஆயிரம் படைகளையும் புத்த மதத்துக்கு மாற்றினார் என்கிறது தீபவம்சம். ஆனால் இது ஓர் சில நாட்களில் ஒரு சொற்பொழிவின் [பிரசங்கம் / sermon] பின் நடைபெறக்கூடிய ஒன்று அல்ல. மத மாற்றம் பொதுவாக வற்புறுத்தல், தூண்டுதல், சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான அதற்கான உழைப்பு தேவை. மஹிந்த தேரர் முதலில், புத்தர் செய்தது போலவே பயத்தை, திகிலை ஏற்படுத்தும் தந்திரங்களை பாவித்தார். அவர் ஒவ்வொரு முறையும் பூக்களை எறியும் பொழுது நிலநடுக்கம் ஏற்பட்டது. வட அல்லது வடமேற்கு இந்தியா நிலநடுக்கம் ஏற்படும் இடங்கள் ஆகும், அந்த நினைவு மரபால் கதையை சோடித்து இருக்கலாம்? மேலும் மஹிந்த தேரர், ஐந்து மாதத்தின் பின், இலங்கையில் புத்தரின் நினைவுச் சின்னம் ஒன்றும் வழிபட இல்லை என்று இந்தியா [ஜம்புதீப] போக விரும்பினார். என்றாலும் தேவநம்பிய தீசன், தான் ஒரு தாது கோபுரம் கட்டுவதாகவும், ஆகவே இங்கேயே வழிபடலாம் என்றும், அதற்கு புத்தரின் உடல் எச்சங்களை அல்லது தாதுப்பொருட்களை தேடும்படி கூறினார். எனவே மஹிந்த தேரர் சுமணாவை பாடலிபுத்திரத்திற்கு அனுப்பினார். அங்கே அசோகனிடம் அதை பெற்று வரும் படி. அசோகனும் மகிழ்வாக ஒரு அன்னதான கிண்ணம் நிரப்பி அதை வழங்கினார் என்று கூறுகிறது. அசோகன் 84,000 துறவிமடங்கள் புத்தரின் உடல் எச்சங்களை நினைவு சின்னமாக வைத்து இந்தியாவில் காட்டினார் என்று பரவலாக இந்தியா மக்களால் நம்பப்படுகிறது. ஒருவரின் உடல் எச்சங்களை இந்த அளவுக்கு பிரித்து எடுக்கக் கூடிய தொழில் நுட்பம் இன்று கூட கிடையாது. அதன் பிறகு தான் அசோகன் சுமணாவுக்கும் கொடுத்தார் என்பது என்னால் நம்பமுடியவில்லை? அது மட்டும் அல்ல, நாகர்கள் கொண்டு சென்ற புத்தரின் எட்டாவது பகுதி எச்சங்களை, அசோகனால் கண்டு பிடிக்கவோ / பறித்து எடுக்கவோ முடியவில்லை என்றும், ஆனால் துட்டகாமினி அதை நாகர்களின் பாதாள லோகம் [Naga’s underworld] போய் எடுத்து வந்தார் என்று மறைமுகமாக துட்டகாமினியை பெருமைப்படுத்துகிறது. மேலும் இலங்கையிலும் அனுராதபுர காலம் வரை தமிழர்கள் பௌத்தத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தனர் என்பது தெளிவு. உதாரணமாக கந்தரோடை தலத்தில் அருகருகே அமைந்திருந்த பல தாதுகோபங்கள் தமிழ் பிக்குகள் வாழும் மடங்களாயிருந்து இருக்கலாம் என்பதும், யாழ்பாண தமிழர்கள் மற்றும் பழந்தமிழக மக்களிடையே முதல் சில நூற்றாண்டுகளில் சைவமதம் அல்லது இந்து மதம் மீண்டும் எழுச்சிபெறும் காலத்திற்கு முன்பு வரை தமிழ் வழி மகாயான (உயர்ந்த வழி) பௌத்தம் புகழ்வாய்ந்ததாக செல்வாக்கு செலுத்தி வந்ததற்கு சான்றாக இது அமைகிறது. பொதுவாக, அடித்தளம், அண்டம், தூபி ஆகிய மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது தாதுகோபம் ஆகும். மற்றது இன்று சிங்களவர்கள் ஆதரிப்பது தேரவாத பௌத்தம் (மூப்பர்களின் வழி) என்பது குறிப்பிடத் தக்கது. இதை ஒரு பழமைவாத தொகுதியாக சிலர் கருதுகின்றனர். இதுவே வடக்கே உள்ள சான்றுகள் சிங்களத்துக்கு சம்பந்தமற்றவை என்பதாகிறது. தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காதது. ஆனால் இன்று புத்த மதத்தை பின்பற்றுகிற அல்லது போதிக்கின்ற புத்த துறவிகள், புத்தர் விக்கிரகங்களை எங்கும், எதிலும் சிலவேளை வலுக்கட்டாயமாக, அங்கு வாழும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக, சிலவேளை மக்களின் காணிகளில் அல்லது பிற ஆலய காணிகளில் அத்துமீறி, நிறுவுவதில் கண்ணும் கருத்துமாக மூழ்கிப்போயிருக் கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. மணிமேகலை புத்த மாதத்தில், அறம் என்பது என்ன என்று உரைக்கும் பொழுது: "அறமெனப் படுவது யாதெனக்கேட்பின் மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையளும் அல்லது கண்ட தில்லை" என்று சுருக்கமாக, எல்லா உயிர்களுக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் பாதுகாப்பாக வாழ இடம் ஆகிய மூன்றினை இன்றியமையாதனவாகக் கூறி, அவற்றின் வைப்பு முறையிலேயே தனித்தனி ஒவ்வொன்றின் இன்றியமையாத் தன்மையினையையும் விளக்கிக் காட்டு கிறார். [“If one should ask what is the supreme form of charity, bear this carefully in mind that it is the maintenance of all living creatures with food and clothing and places to live in safety.”] இவ்வற்றை இன்றைய புத்த பிக்குகளும், பௌத்த அரசுகளும் சரியாக கடைபிடித்தால், கட்டாயம் எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை தானாகவே ஏற்படும். அதைத்தான் புத்தரும் உண்மையில் விரும்பினார். தன் சிலைகளை நிறுவி சர்ச்சை, அமைதியின்மை, பேதம் ஏற்படுத்தவல்ல? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 32 தொடரும்
  13. நன்றிகள் எல்லோருக்கும்
  14. "சமாதானம்" "விட்ட பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டு சட்டம் எல்லோருக்கும் பொதுவாக மாற்றி போட்ட தடைகளை நீதியாய் நீக்கி நட்ட ஈடுகளை வெளிப்படையாகச் சொல்லி கட்டி எழுப்பு அமைதியான சமூகத்தை!" "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இழிவு படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புக்கேள் ஒற்றுமை பிறக்கும்!" "இரண்டாயிரம் ஆண்டுகளாய் வாழும் இனத்தை இந்த நாட்டின் பூர்வீக குடிகளை இதயமற்று நசுக்குவதை உடனே நிறுத்தி இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து இருகையாலும் அணைத்தால் மலர்வது சமாதானமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. 'உறக்கம்' இன்று நடைமுறையில் கூடுதலாக sleep என்ற பொருளில் பாவிக்கப்படும் சொல்களான 'தூங்குதல்', 'தூக்கம்', 'நித்திரை' போன்ற சொற்களை சங்க இலக்கிய காலத்தில் காணமுடியவில்லை. அங்கு தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தான் நாம் காண்கிறோம். மேலும் நித்திரை என்பது சம்ஸ்கிருதச் சொல் 'nidra' ['निद्रा'] வில் இருந்து பிறந்த சொல். தமிழில் இதற்கு 'உறக்கம்', 'துயில்', 'துஞ்சுதல்' போன்ற அழகான சொற்களை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மார்ச் 15 - 'உலக உறக்க தினம்" எல்லா நாடுகளிலும் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு நாள் நம்முடைய அவசர வாழ்க்கையில் நாம் பகுதியாக நிராகரிக்கும் அல்லது தள்ளி போடப்படும் உறக்கத்தின் முக்கியத்தை எல்லோர் காதிலும் உரக்கச்சொல்ல இது ஒரு அரிய வாய்ப்பாக எமக்கு அமைகிறது. 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் எட்டு மணித்தியால வேலை கட்டுப்பாட்டை கோரி வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப் பட்டது, அவர்களின் முதன்மை முழக்கம் "எட்டு மணித்தியால வேலை, எட்டு மணித்தியால உறக்கம், எட்டு மணித்தியாலம் உங்கள் தேவைக்கு". இது ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பதை மேலோட்டமாக வரையறுக்கிறது. அவ்வகையில், நாம் உறக்கத்துக்கு கால் வாசியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு மனித ஆயுட்காலத்தை பாவிக்கிறோம். பொதுவாக மனதையும் உடலையும் மூடும் காலமாக நாம் உறக்கத்தை நினைக்கிறோம். ஆனால், உறக்கத்தைப் பற்றி சரியாக அறிவதற்கு, உண்மையில் அப்பொழுது என்ன நடக்கிறது என்பதை நாம் கொஞ்சம் விரிவாக பார்க்கவேண்டும். 1950 ஆம் ஆண்டுக்கு முன்பு உறக்கம் என்பது உயிர்ப்பற்ற பணி அல்லது செயலற்று இருக்கும் காலம் என்றே பலர் நம்பினர். இதன் போது உடலும் மூளையும் செயலற்றதாக இருப்பதாகவும் கருதினர். அதனால் தான் திருவள்ளுவர் கூட "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்" என்று கூறிச் சென்றார். ஆனால் இது உண்மையல்ல. இது எதோ சில செயல்களில் உள்ள காலமே. உதாரணமாக, முக்கியமான, உயிர் வாழ்வுக்கு தேவையான, பல செயலாக்கம், மறுசீரமைப்பு, மற்றும் பலப்படுத்துதல் அப்பொழுது ஏற்படுகிறது - இவை வாழ்க்கை தரத்துடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. அது மட்டும் அல்ல இவை மனம் மற்றும் உடல் நலத்தை பாதிக்கக் கூடியவையும் ஆகும். உறக்கத்தைப் பற்றிய ஆய்வாளர்களின், எமக்கு ஆச்சரியம் தரும் கண்டுபிடிப்புகளையும் அவர்களின் சுருக்கமான கண்ணோட்டத்தையும், இன்னும் எதை அறிய ஆய்வுகள் செய்கிறார்கள் என்பதையும் கீழே பார்ப்போம் எல்லா உறக்கமும் ஒரே மாதிரி அல்ல உதாரணமாக, நீங்கள் உறங்கும் நேரம் முழுவதும், உங்கள் மூளை மீண்டும் மீண்டும் இரண்டு வெவ்வேறு உறங்கு நிலைக்கூடாக சுழற்சிக்கு உள்ளாகிறது. அவை விரைவு அற்ற விழியியக்க நிலை மற்றும் விரைவு விழியியக்க நிலை [non-REM sleep and REM (rapid-eye movement) sleep] ஆகும். இதில், மனித உடல் உறங்கும் பொழுது , முதலில் வருவது விழி அசைவற்ற உறக்கம் ஆகும். அவை நாலு நிலைகளைக் கொண்டது. இதனின் முதல் நிலை நீங்கள் உறங்கிய உடனேயே நிகழ்கிறது. இது விழித்திருப்பதுக்கும் உறக்க நிலைக்கும் இடைப்பட்டது. எனவே இது மிகவும் குறுகிய கால அளவைக் கொண்டது. இரண்டாவது நிலை லேசான உறக்கத்தை உள்ளடக்கியது. இங்கு இதய துடிப்பு மற்றும் சுவாசம் சீராவதுடன் உடல் வெப்பமும் வீழ்ச்சி அடைகிறது. மூன்றாவது நாலாவது நிலை ஆழ்ந்த உறக்கம் ஆகும். இங்கு அந்த நபருக்கு சில உடல் அசைவுகள் இருப்பதுடன், அந்த நபரை எழுப்புவது மிகவும் கடினம் ஆகும். கற்றல் மற்றும் நினைவகம் [learning and memory] போன்றவற்றிற்கு, விரைவு விழியியக்க நிலை தான் முக்கிய பங்கு வகுக்கிறது என முன்பு நம்பியிருந்தாலும், புதிய ஆய்வுகள் விரைவு அற்ற விழியியக்க நிலை இதற்கு முக்கியம் என்பதைக் சுட்டிக்காட்டுவதுடன், உறக்கத்தின் ஓய்வுக்குகந்த கட்டமாகவும் மற்றும் மறுசீரமைப்பு கட்டமாகவும் இது [the more restful and restorative phase of sleep] தொழிற்படுவது தெரிய வந்துள்ளது. இறுதியாக விரைவு விழியியக்க நிலை ஏற்படுகிறது. இது முன்னையதை விட ஆழமானது, இங்கு கண்கள் மற்றும் கண் இமைகள் படபடக்கின்றன, இங்கு 'brain waves' எனப்படும் மூளை அலைகள், விழித்திருக்கும் போது உள்ள மூளை அலைகளைப் போலவே ஒத்து இருக்கின்றன. அத்துடன் சுவாசம் ஒழுங்கற்றதாக இருப்பதுடன், பெரும்பாலான கனவுகள் இந்த நிலையில் தான் ஏற்படுகின்றன. ஆனால் மூளை உங்கள் தசைகளை முடக்குகிறது, அதனால் தான் நீங்கள் கனவுகளைச் செயல்படுத்துவதில்லை, அதாவது கனவில் காணும் காட்சிக்கு பதில் அல்லது பதில் நடவடிக்கை செய்வதில்லை. இந்த முழு சுழற்சியும் ஒருவரின் உறக்கத்தில் நாலு ஐந்து தடவை நடைபெறுகிறது. உங்கள் உடல் உறக்க கட்டுப்பாடுகளால் கட்டப்பட்டது ஆய்வாளர்களின் முடிவின் படி, இரண்டு முக்கிய செயல்முறைகள் ஒருவரின் உறக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது. அவை சர்க்காடியன் தாளங்கள் [ரிதம்] மற்றும் உறக்க உந்தல் [circadian rhythms and sleep drive] ஆகும். சர்க்காடியன் தாளங்கள் 24 மணி நேர சுழற்சியில் உடல் செயல்பாடு, மன மற்றும் மனித நடத்தை ஆகியவற்றின் அனைத்து மாற்றங்களையும் பின்பற்றுகின்றன. மூளையில் உள்ள குறிப்பிட்ட சில இயற்கையான காரணிகளால் கட்டுப்படுத்தப் படுவதைத் தவிர, இந்த சர்க்காடியன் தாளம் பொதுவாக ஒரு நபரைச் சுற்றியுள்ள சூழலில் ஒளி நிலைகளால் பாதிக்கப்படுகிறது. ஒரு நபரின் சர்க்காடியன் தாளங்கள் உறக்க சுழற்சிகள், ஹார்மோன் உற்பத்தி, உடல் வெப்பநிலை மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளை தீர்மானிக்கிறது. உதாரணமாக அனைவருக்கும் பொதுவாக ஒரு நிலையான தினசரி உள்ளது. இந்த வழக்கம் கொஞ்சம் மாறினால், அதன் தாக்கத்தை நாள் முழுவதும் உணர முடியும். உதாரணமாக, நீங்கள் வழக்கத்தை விட தாமதமாக எழுந்தால், நாள் முழுவதும் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். உங்கள் செயல்பாடுகள் உங்கள் உடலின் உயிரியல் அட்டவணை அல்லது மணிநேரங்களைப் பின்பற்றாததால் இது நிகழ்கிறது. இதுவே உங்கள் உடலின் இயற்கையான தாளம் ஆகும். உறக்கத்தை தூண்டும் செயல் பாட்டையே உறக்க உந்தல் என்கிறோம். உணவுக்காக உடல் பசிப்பது போல உங்கள் உடலும் உறக்கத்திற்கு ஏங்குகிறது. அந்த ஏக்கமே உறக்க உந்தல் ஆகும். நீங்கள் பசியாக இருக்கும்போது சாப்பிட உங்கள் உடல் உங்களை கட்டாயப்படுத்த முடியாது, ஆனால், நீங்கள் சோர்வாக இருக்கும்போது, அது தானாகவே உங்களை உறங்க வைக்கும். அந்த செயல் தான் உறக்க உந்தல் ஆகும். உதாரணமாக, நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்தில் இருந்தாலும் அல்லது உங்கள் காரை செலுத்திக் கொண்டு இருந்தாலும் கூட, அது உங்களை உறக்கத்தில் ஆழ்த்திவிடும். மேலும் நீங்கள் உறக்க மின்மையாலோ அல்லது வேறு ஒரு காரணத்தாலோ சோர்வு அடைந்தால், நீங்கள் ஒரு சில நொடிகள் நுண் உறக்கத்துக்கு (microsleep) போகலாம். அதாவது நீங்கள் விழித்திருக்கும் வேளையிலே, கணப் பொழுதுகள் நீடிக்கும் மிகச் சிறிய உறக்கத்துக்கு நீங்கள் உள்ளாகலாம். இது ஒரு நொடி முதல் அரை நிமிடம் வரை நீடிக்கலாம். ஒருவர் சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையிலோ, ஆபத்தான இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் வேளையிலோ நுண்துயில் வருமாயின் விளைவுகள் விபரீதமாகி விடும். ஆகவே ஒழுங்கான போதுமான உறக்கம் மிக மிக அவசியம். ஏன் உங்களுக்கு உறக்கம் அவசியம்? நீங்கள் ஒரு மோசமான இரவு உறக்கத்தின் பின், உங்கள் கண் பனிமூட்டம் போல் மங்கலாக [foggy] இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள். எனவே, உறக்கம் மூளையின் செயல்பாட்டை கணிசமாக பாதிக்கிறது என்பதில் உங்களுக்கு ஆச்சரியம் இருக்காது. ஆகவே, நீங்கள் முதலில் ஆரோக்கியமான அளவு உறக்கம் அவசியம் என்பதை அறிவீர்கள், ஏனென்றால், மூளையின் உள்ளீடிற்கு ஏற்ப சரிப்படுத்த மூளையின் நெகிழ்த்தன்மை அல்லது மூளையின் திறன் அவசியம் [“brain plasticity,” or the brain’s ability to adapt to input.]. உதாரணமாக, நாம் சொற்ப நேரமே உறங்கினோம் என்றால், நாம் காலையில் கற்றுக்கொண்டவைகளை மூளை செயல்முறை படுத்தவோ அல்லது அவைகளை எதிர்காலத்தில் ஞாபகத்தில் வைத்திருக்கவோ எங்களுக்கு அதிக சிக்கல் ஏற்படலாம். அது மட்டும் அல்ல விரைவாக எதாவது ஒன்றில் தேவைக்கு ஏற்ப கவனம் செலுத்துவது மற்றும் பதிலளிப்பது அல்லது பொருத்தமான பதில் நடவடிக்கை கையாளுவது கடினம் ஆகலாம். மேலும் ஆய்வுகள், மூளை செல்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுவதை உறக்கம் ஊக்குவிப்பதாக காட்டுகிறது. அது மட்டும் அல்ல, உடலின் மற்ற பகுதிகளுக்கும் உறக்கம் மிக முக்கியம் ஆகும். பொதுவாக மக்களுக்கு போதுமான உறக்கம் இல்லாத போது, அவர்களின் உடல்நல அபாயங்கள் [health risks] அதிகரிக்கின்றன. உதாரணமாக மனச்சோர்வு, வலிப்பு [திடீர் நோய்பிடிப்பு], உயர் இரத்த அழுத்தம், மோசமடையும் ஒற்றைத் தலைவலி, வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி, போன்ற அறிகுறிகளுடன் [Symptoms of depression, seizures, high blood pressure and migraines worsen. Immunity is compromised,] நோய் மற்றும் தொற்றுக்களுக்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கும். மேலும் உறக்கம் வளர்சிதை மாற்றம் அல்லது அனுசேபத்துக்கு [Metabolism] முக்கிய பங்கு வகுக்கிறது. இங்கு வளர்சிதை மாற்றம் என்பது உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி வேதி வினைகள் [Chemical reaction] ஆகும். உதாரணமாக, ஒரு இரவு உறக்கத்தை தவறவிடுவது, முன் நீரிழிவு நோய்க்கு [pre diabetic state] ஒரு ஆரோக்கியமான நபரை மாற்றலாம்? இவ்வாறு ஆரோக்கியத்துக்கும் உறக்கத்துக்கு பல முக்கிய தொடர்புகள் உண்டு. அவைகளில் சிலவற்றை கீழே தருகிறேன். நல்ல உறக்கம் ஒருவரின் கவனத்தை அல்லது மனதை ஒருமுகப்படுத்துவதையும் மற்றும் நினைவு ஆற்றலையும் மேம்படுத்துகிறது. உங்கள் தீர்மானம் எடுக்கும் திறனையும் மற்றும் நீண்ட கால நினைவாற்றலையும் உறக்கம் இல்லாமை வெகுவாக பாதிக்கிறது. அதுமட்டும் அல்ல, காலப்போக்கில், குறைந்த உறக்கம் அறிவாற்றல் வீழ்ச்சிக்கும் ஞாபக மறதிக்கும் மற்றும் டிமென்ஷியா [மறதி நோய்] ஏற்படுவதற்கும் பங்களிக்கின்றன. வயது முதிர்ந்தவர்களுக்கும், எல்லோரும் போல், ஒரு நாளைக்கு ஏழுக்கும் ஒன்பது மணித்தியாலத்துக்கும் இடையில் உறக்கம் வேண்டும். ஆனால், வயது போனவர்கள் பொதுவாக நேரத்துடன் உறக்கத்துக்கு போய் நேரத்துடன் விழிக்கிறார்கள். உரக்க பற்றாக்குறை அறிகுறிகள் தசை வலிமை மற்றும் நீடித்துழைக்கும் திறமை அல்லது ஆற்றல் [சகிப்புத்தன்மை] குறைகிறது, முக்கிய உறுப்புகள் தன் முழுத் திறனில் அல்லது உகந்த அளவில் செயல்பட முடியாமல் போகிறது. வலியை தாங்கும் திறன் அல்லது வலி சகிப்புத்தன்மை குறைகிறது. அத்துடன் உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்திறன் குறைகிறது. இன்சுலின் இரத்தத்தின் சர்க்கரையை குறைக்க உதவும் ஒரு புரதம் ஆகும். நோய் எதிர்ப்பு அமைப்பும் வலு இழப்பதுடன், அது தொற்று மற்றும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் ஏன் குறைந்த அளவு உறக்கம் கொள்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு, பெரும்பாலானவை மிகவும் தனிப்பட்டவை ஆகும். ஆக்கம் கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் பி கு : அண்ணாவிடம் [கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்] நான் சென்றபோது எடுத்தப்படம் இணைத்துள்ளேன்
  16. "உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்" "சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!" "சோர்வாக இருக்கே என்று பின்போடாமல் சோதனை வருகுதென மனம் தளராமல் சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!" "கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!" "உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும் உயர்ந்த எண்ணங்களே அங்கு ஒளிரட்டும் உங்கள் வெற்றியே உங்கள் பலமாகட்டும் உதவாக்கரை என்றவர்கள் காலில் விழட்டும்!" "போகும் பாதையை தெளிவாக அறிந்து போதும் என்றமனதுடன் விட்டு விலகாமல் போவார் வருவார் சொற்களை கேட்காமல் போதை கொண்டு கொள்கையில் முன்னேறு!" "வெற்றிபடிக்கு பின்னல் பல தோல்விப்படிகள் வெறிகொண்டு தோல்விகளை கடந்து செல் வெற்றிகள் ஒன்றும் ஒரேஇரவில் வராது வெளிச்சம் காட்டி உன்னைக் கூப்பிடாது!" "நல்லதை மற்றவர்களுக்கு என்றும் செய்யுங்கள் நச்சுப் பாம்பாய் மோசமாய் பேசாதீர்கள் நற்பெயர் தங்கத்தை விட உயர்ந்தது நட்புடன் பழகி தரமாக வாழுங்கள்!" "சாதனைகள் புரிய கனவுகள் வேண்டும் சாத்திரம் பார்த்து வாழ்வு அமைவதில்லை சாட்சியாக உன்பாதை மற்றவர்களுக்கும் இருக்கும் சாந்தமாய் அதை தொடர்ந்து மகிழ்வாயாக!" "எதிர்த்து போராடுவது தோல்வியல்ல, முயற்சி எங்கு விடாமுயற்சியோ அங்கு வளர்ச்சி எங்கு வளர்ச்சியோ அங்கு வெற்றி எனவே மனிதா எதிர்த்து மல்லாடு!" "திறந்த மனநிலையுடன் வாழ்வை அணுகினால் தித்திக்க வைக்கும் உன்னை வெற்றியாக்கும் திறக்காத மூடியமனம் மாற்றம் அடையாது திறம்பட இயங்க ஒன்றையும் மாற்றாது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [1] Don’t make excuses, make improvements 2] Don’t stop when you’re tired, stop when you’re done 3] Honesty is a very expensive gift, do not expect it from cheap people 4] Work Hard in Silence, Let Your Success Be Your Noise 5] Don’t get side-tracked by people who are not on track 6]Behind every successful person are a lot of unsuccessful years 7]Live in such a way that if someone spoke badly of you, no one would believe it 8]Sometimes when you follow your dream, it opens the door for others to be able to follows theirs 9]Just because you are struggling does not mean you are failing 10] The hardest thing to open is a closed mind]
  17. "தந்தை எனும் தாய்" [இன்று 15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல்] தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, “அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ “எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [நானும்] அடியவர்க்கு [பிள்ளைக்கு] அவரது பிழை பொறுத்து வாழும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப் பட்டேன். 08 / 06 / 2007 திகதி அன்று. ஆமாம் திடீரென மனைவிக்கு தோன்றிய தண்டு மூளைச் சவ்வுக் காய்ச்சல் [meningitis], பதினாறு மணித்தியாலத்துக்குள், நானோ, பிள்ளைகளோ எதிர்பாராதவிதமாக காலை ஐந்து மணிக்கு அவரின் உயிரை பறித்துவிட்டது. "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள்! சிந்தை ஓடவில்லை?- எம் மனம் ஆறவில்லை? எந்தை அவள்-கண் மூடி உறங்கிவிட்டாள்!!" தாயற்ற குழந்தை போலத் என் குழந்தைகளை துன்புற வைத்துவிட்டான். இப்ப நான் தந்தையும் தாயாக இரு வேறு நிலையில், ஆனால் ஒருவனாக செயல் பட வேண்டிய கட்டாயம் உணர்ந்தேன். “நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத் தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே“ ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனும் அத்துவிதக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள பாடல் இது. அது போலத்தான் நானும் தந்தையாகவும் தாயாகவும் இனி கவனமாக வாழ்வை நகர்த்தவேண்டும் என்று தாயுமானவரின் இந்த வரி எனக்கு உறுதியையும் வலுவையும் கொடுத்ததை நான் மறுக்கவில்லை. படித்துக்கொண்டு இருக்கும் இளம் அகவையில், தாயை இழப்பது மிகப்பெரிய மோசமான இக்கட்டான சூழ்நிலை என்றாலும், அவர் மிகவும் கடுமையாக குடும்பத்துக்காக, பிள்ளைகளுக்காக நல்ல பாடசாலை, நல்ல வாழ்விட சூழல், வருங்காலத்தில் திறமையான தொழில் வாய்ப்பு பெற நல்ல படிப்புகள் எவை, எந்த பல்கலைக்கழகம் முழுமையாக இவ்வற்றை எல்லாம் வழங்குகிறது என்றெல்லாம் ஏற்கனவே தேடி தேடி வைத்தவை எனக்கு ஆறுதல் அளித்தன. அவர் என்னுள் இருந்து இயக்குவது போல் இருந்தது. அர்த்தநாரீசுவரர் போல், தாயும் தந்தையாக வாழ்வு அன்றில் இருந்து ஆரம்பித்தது. பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான் என்று புறநானூறு: "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;" கூறுவது போலத்தான் நானும் தாய்மையை ஒரு நேரத்தில் வெளிக்காட்டியும், ஆனால், அதேநேரத்தில், அதை மறைத்து தந்தையாக தனித்தும் இயங்க தொடங்கினேன்! ஆனால், எனோ தெரியாது, என் மனம் அவர்கள் தாயில்லா பிள்ளை என்று கொஞ்சம் அதிகப்படியாக வசதியை அவர்கள் எப்பவும் கவலைப்படக்கூடாது என்று கொடுத்துவிட்டேன் என்று இன்று எண்ணுகிறேன்! என்னுள் தாயும் இருந்து இயக்குகிறாள் என்பதை எப்படி மறந்தேனோ, நான் அறியேன் பராபரமே! "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ்" என்று ஐங்குறுநூறு- நீலத் திருமேனியும் தூய ஆபரணங்களும் கொண்ட அம்பிகையை ஒரு பாதியிலே கொண்ட சிவபெருமானுடைய இரண்டு திருவடி நிழலின் கீழே - அதாவது "தந்தை எனும் தாய்" யாக என் நிழலில் அவர்கள் இன்று என்பதை ஏன் நான் நினைக்கவில்லை? அது தான் எனக்கு புரியவில்லை?? என்றாலும் தாய் ஏற்கனவே வரிசைப்படுத்தி இருந்த வழிகாட்டி என்னுள் இருந்து இயங்க, அதே வழியில் அவர்கள் பல்கலைக்கழக பட்டங்கள் பெற்று இன்று நல்ல நிலைக்கு வாழ்வில் வந்து, திருமணமும் செய்து மகிழ்வாக இருக்கிறார்கள் . எப்படியாகினும் தாயுமானவர் அறிவுரை வழங்கியது போல: “என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும் கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; போதுமான காலம் கழிந்தபின், தன் கன்றின் நலன் நோக்கி, தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுவது போல, ஒருவேளை கொஞ்சம் அவர்களுக்கு பொறுப்பு ஏற்படுத்தி இருந்தால் இன்னும் மேலாக அவர்களின் வாழ்வு அமைந்து இருக்கலாம்? நம்மைப் பற்றி நமக்கும் மட்டுமே தெரியும் ஒரு ரகசியம் தான் ‘நான்! இனம்புரியா எண்ணங்களோடு ஒழிந்து கிடக்கும் ஆழ்மன ‘நான்; தான் அது! இதன் வெளிப்பாடு நம்மையறியாமல் அப்பப்ப சூசகமாக பேச்சிலோ எழுத்திலோ உடல் மொழியிலோ நடந்துக் கொண்டு தான் இருக்கும். அப்படி தந்தை என்ற நான், தந்தை எனும் தாய்; என்பதை மறந்ததே இதற்கு காரணம். ஆனால் பேரப்பிள்ளைகள் பிறக்க, அவர்கள் இப்ப மெல்ல மெல்ல ஒவ்வொரு பொறுப்பாக தாங்களே உணர்ந்து கடமையாற்றுவது, கட்டாயம் தாயின் நிழல், அவர்களை வெளிப்படையாக நகர்த்துவதை மகிழ்வாக நான் காண்கிறேன்! தந்தை எனும் தாய்; ஆகிய நானும் இனி கவலைப்பட ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளின் - தாயின் - செயலே!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. அன்பு ஈழப்பிரியனுக்கு "உடப்பு மட்டுமல்ல நீர்கொழும்பு பக்கமும் தமிழர்கள் இப்போது சிங்களவர்களாக இருக்கிறார்கள்." உடப்பு இன்னும் தமிழ் கிராமமே, நான் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை செய்த காலத்தில், சிவலிங்கம் என்ற உடைப்பு வாசியே என் office peon. அதேநேரம் எனக்கு சிங்களம் தெரியாததால், என்னிடம் வரும் சிங்கள வேலையாட்களின் குறைகளை, தேவைகளை மொழிபெயர்ப்பாளராகவும் எனக்கு உதவி புரிந்ததை நான் என்றும் மறக்க மாட்டேன். இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டு அரியணைக்குப் போரிட்ட போது அதற்கு வேண்டிய படைகளை தமிழ்நாட்டில் இருந்தே திரட்டி வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை. இன்று சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் கரவா, சலாகமுவ, துராவ போன்ற “சாதிகள்” 16 ஆம் நூற்றாண்டில் கறுவா பட்டை உரிக்கவும் மரமேறவும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளர்களே! அதேபோல, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதப் பரவர் அல்லது பரதவர் 20 ஆம் நூற்றாண்டில் இனமாற்றம் செய்யப்பட்டனர். இதனை செய்து முடித்தவர் பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர். அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். (This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese -https://en.wikipedia.org/wiki/Negombo_Tamils.) தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் சிங்கள – பவுத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு இந்த ஒருமைப்படுத்தல்தான் காரணம். “பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர்வரலாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார், “இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது. என்று கூறுகிறார்
  19. "கலித்தொகையில் வாழ்வியல்" / Kalithogai 133 - An Ethical poem" நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகள், ஒவ்வொன்றும் ஒரு நவரத்தினம்! அகத்திணை கருத்துக்களே பெரும்பாலும் இடம்பெறும் கலித்தொகையில் இப்பாடல் வாழ்வியலுக்குத் தேவையான ஒன்பது அறக்கருத்துக்களை ஒரே பாடலில் சொல்லியிருத்தல் ஒரு பெரும் சிறப்பு ஆகும். "'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை; 'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்; 'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை; 'நிறை'எனப்படுவது, மறை பிறர் அறியாமை; 'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்; 'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்." [கலித்தொகை 133] ஆற்றுதல் என்று சொல்லப்படுவது உண்மையிலே வறியவர்களுக்கு ஒன்றைக் கொடுத்து உதவுவது தான். போற்றுதல் என்பது கூடி உறவு கொண்டவர்களை என்றைக்கும் பிரியாது இருத்தல். பண்பு என்று சொல்லப்படுவது உலக நிலைமை அறிந்து நடத்தல். அன்பு என்று சொல்லப்படுவது தன் சுற்றத்தினரைக் கோபிக்காது இருத்தல். அறிவு என்று சொல்லப்படுவது அறிவற்றவர்கள் சொல்வதை எல்லாம் பொறுத்துக் கொள்ளுதல். செறிவு என்று சொல்லப்படுவது ஒன்றைச் சொல்லிவிட்டு நான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்துப் பேசாமல் இருத்தல். மறை எனப்படுவது மறைக்கப்பட வேண்டியவற்றைப் பிறருக்குத் தெரிய விடாது காத்தல். முறை என்று சொல்லப்படுவது தீங்கு செய்தது தங்களுக்கு வேண்டியவராக இருந்தாலும் உயிரை எடுத்து விடுதல். பொறை என்று சொல்லப்படுவது எம்மை மதிக்காதவர்கள்; இடத்திலும் பகை கொள்ளாது பொறுமையோடு இருத்தல். இந்தச் சங்க இலக்கியத்தில் சில நீதி நியாயங்கள் பேசப்படுகின்றன. அவற்றை அறங்கள் என்றார்கள் எம் முன்னோர்கள். ஏன் அறங்கள் என்றார்கள் என்றால் இந்த உலகமே அழிந்தாலும் அழியாமல் என்றும் நிலைத்து நிற்பது அறம். தமிழ் மக்களாகிய நாம் எத்தனையோ நூற்றாண்டுகளக்கு முற்பட்ட இந்த ஒன்பது வரைவிலக்கணங்களையும் விளங்கிக் கொண்டு எம்வாழ்க்கையில் பின்பற்றுவோமாக இருந்தால், எம் சமுதாயத்தில் பல தீமைகளை விலக்கிக் கொள்ள முடியும்! Kalittokai is a classical Tamil poetic work and the sixth of Eight Anthologies (Ettuthokai) in the Sangam literature. It is an "akam genre – love and erotic – collection par excellence", according to Kamil Zvelebil. This song from Nallanthuvanar is easily the best of all such poems in Kalithogai: This is a fantastic song! The ethical values emphasized in this poem are of great quality!! "Goodness is helping one in distress; Support is not deserting one who is dependent; Culture is to act in unison with the ways of the world; Love is not surrendering ties with one’s kin; Wisdom is to ignore the advice of the ignorant; Honesty is not to go back on one’s words; Integrity is to ignore others’ faults; Justice is awarding punishment without partiality; Patience is to suffer the ill-disposed." [Just look at the language and use of words in Kalithogai. You will be able to understand the meaning better than the other anthologies]
  20. 15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல் / Birthday Memoriam [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM] "பொன்னான இதயம் ஜூன் எட்டில் நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சியை தடுத்ததோ ஜூன் பதினைந்து இனி பிறந்தநாள் நினைவானதோ?" "நினைவுகள் பொன்னானவை யாரோ சொன்னது உண்மையாக கூட அது இருந்தாலும் எமக்கு நினைவுகள் வேண்டவே வேண்டாம் எமக்கு நீ மட்டுமே வேண்டும் வேண்டும்!" "ஆதரவும் உழைப்பும் உன் வாழ்வு குடும்பமே உன் முதல் சொத்து அனைவரையும் அணைப்பாய் இயன்றதை செய்வாய் இப்பநாம் அந்தபொன்னான நினைவில் வாழ்கிறோம்!" "உன்படுக்கைக்கு அருகில் தினம் அமர்கிறோம் எம் இதயங்கள் நசுக்கப்பட்டு புண்ணாகிவிட்டன எம்மால் முடிந்தவரை உனக்காக போராடினோம் ஏமாற்றம் தான் இறுதியில் எம்மை தழுவியது!" "நீங்கள் பிரிவதை எம்கண்ணீருடன் பார்த்தோம் நீங்கள் மறைந்துபோவதை ஏக்கத்துடன் பார்த்தோம் எங்கள் இதயங்கள் உடைந்து போயிருந்தாலும் இனிஉன்னை வேதனைவாட்டாது என்று அமைதியடைந்தோம்!" "உன் பாசங்களை உதடுகளால் பேசமுடியாது உன் கருணையை இதயங்களால் காட்டமுடியாது எம் தவிப்பை கட்டாயம்நீ அறிவாய் நாம் பலராயினும் நீஇல்லாதது தனிமையே!" "உன் அழகியஉடல் மட்டுமே எரிந்துசாம்பலாகிற்று உன் எண்ணங்களும் ஆசைகளும் எரியவில்லை எம்இதயத்திற்குள் நீ என்றும் இருக்கிறாய் எண்ணங்களையும் ஆசைகளையும் நீ இயக்குகிறாய்!" "பலஆண்டுகளாக பகிர்ந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நினைவுகளாகி இன்று கண்ணீரும்கவலையுமாய் நிற்கிறது இன்றுஉங்கள் பிறந்தநாள் இனிமையாக கொண்டாடுவோம் அழகழகாய் உங்கள் எழில்காண கனவுகாண்போம்!" "ஒவ்வொரு நிகழ்விலும் எம்முடன் வாழ்ந்தும் எம்மூச்சு காற்றுக்குள் என்றும்நிற்கும் உன்னுயிரே புத்தாடை அணிந்து எம்அருகே மீண்டும்வா எம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "A golden heart stopped beating on 8th of June Hard working hands at rest It broke our hearts to see you go Is June 15th now become Birthday Memoriam?" "They say memories are golden Well may be that is true But we never wanted memories We only wanted you, Our 'JEYA'!" "Your life was love and labour Your proud is your family You did your best for all of us We will always remember you, till we die!" "We sat beside your bedside Our hearts were crushed and sore We did our duty to the end Till we could do no more!" "In tears we watched you sinking We watched you fade away And though our hearts were breaking We were relieved, as you do not suffer anymore!" "Our lips can not speak how we loved you Our hearts can not tell what to say But you knows how we miss you In our home we are lonely today!" "Only your beautiful body burned Your thoughts and desires are not burned You are forever safe inside our hearts And direct your thoughts and desires!" "Today is full of memories happiness and tears of birthday celebrations we have shared throughout the years We feel that you are with us in everything we do So we will celebrate your birthday today 15 th of June!" "As you are living with us at every events As you are always part of our family Wear New dress & come close to us Happy Birthday to you!" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  21. "வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்" இலங்கையின் வடமேல் மாகாணக் கரையோரத்தில் சிறந்து விளங்கும் நகரம் சிலாபம் என்று சொல்லலாம். அங்கிருந்து 16 மைல் தூரத்தில், இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்து இருக்கும் எழில் மிகும் கிராமம் தான் உடப்பு. இங்கு தற்சமயம் அண்ணளவாக 10 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமம் நெய்தல் நிலத்தைச் சார்ந்ததால், இங்கு மீன் பிடித் தொழிலே முதன்மையாக இருந்தாலும், நெசவுத் தொழிற்சாலை, கயிற்றுத் தொழிற்சாலை, பனை ஓலை குடிசைத் தொழிற்சாலைகள் போன்றவையும் உள்ளன. இந்த அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம் பரப்பும் உடப்பு அல்லது உடப்பூர் கிராமத்தை, கட்டாயம் புத்தளம் மாவட்டத்தின் குட்டித் தமிழகம் என்று சொல்லலாம். இங்கு இன்று வாழும் பெரும்பாலான மக்களின் முன்னோர்கள், இராமேஸ்வரத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள். அவர்கள் 1678 ஆம் ஆண்டளவில் இங்கு குடியேறினார்கள் என்று வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, இங்கு உள்ள மக்கள் அதிகமாக தெய்வப் பெயர்களை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இன்று பிறக்கும் பிள்ளைகளைத் தவிர. அப்படியான, கடற்கரை கிராமத்தில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி; அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் - வேனிற்கால மாலைப் பொழுதிலே கதிர்காமன் என்ற இளம் பையன் சிறிது நேரம் கடலைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு இருந்தான். அப்போது அடி வானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம். இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும் போலிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டு அவன் அகலவில்லை. அவன் வாய் முணுமுணுத்தது "என்னே இம் மேகத்தின் கருனை! உடப்பு முழுவதும் அனல் வீசுகின்றது; குடி தன்ணீர் குறைகின்றது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக் கடல், தண்ணீரைத் தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்ட மடிக்கின்றதே! இது தகுமா? முறையா? இந் நெடுங் கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? ‘கொடு’ என்றால் கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும்! அதனால்த்தானோ என்னவோ இம் மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளை கொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?" இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக. கதிர்காமன் தன் மனதுக்குள் மேகத்தை வாழ்த்தினான் "முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்" (திருவெம்பாவை) கதிர்காமன் கடலைப் பார்த்து சிரித்தான். அந்த சிரிப்பு உண்மையில் தர்மராஜா முதலாளியை நினைத்துத் தான்! கதிர்காமனின் குடும்பத்தில் ஐந்து உருப்படிகள். அதில் கதிர்காமன் மூத்த பையன். கதிர்காமன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் மட்டுமல்ல மிகவும் ஆர்வமும் உள்ளவன். அவனின் தந்தை வைரவன் சிறு மீன்பிடித் தொழில் செய்பவர். என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூறாவளியுடன் ஏற்பட்ட கடும் மழையில், சிக்குண்டு தன் படகுடன் விபத்துக்குள்ளாகி, இன்றுவரை ஊனமுற்றவராக இருக்கிறார். இதனால் அவனின் குடும்ப நிலை மோசமாகி படிப்பை இடை நடுவே முடிப்பதற்கு வழிவகுத்தாலும், அவனின் படிப்புத் திறன் மேல் உள்ள நம்பிக்கை கஷ்டமான நிலையிலும் பெற்றோரால் தொடர வைக்கப்பட்டது. அவன், 1902 இல் களிமண்ணால் கட்டப்பட்டு ஓலையினால் மேயப்பட்ட சிறிய பாடசாலையாக ஆரம்பித்து, 1965 இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு, பின் 1973 விஞ்ஞான கூடமும் அமைத்து முழுமை பெற்ற உடப்பு தமிழ் மகாவித்தியாலத்தில், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரின் உதவியுடன் தன் கற்றலை தங்கு தடையின்றி தொடர்ந்தான். என்றாலும் ஒரு நேர உணவு உண்பதே சிரமமான நிலையில் தான் அவனது இளம் பராயம் கழிந்தது. பல நாட்கள் அம்மா சிலரது பெயரைச் சொல்லி பணமோ அரிசியோ வாங்கி வரச்சொல்லி கதிர்காமனை அனுப்புவார். பணம் உள்ளவர்களான, அம்மா சொல்லாதவர்களிடமும் அவன் முயற்சிப்பான். என்றாலும் சிலவேளை வெறுங்கையுடன் தான் வீடு போவான். அப்படியான நேரம் எதோ வளவில் கிடைக்கும் சில இலைவகைகளுடனும் அல்லது கிழங்குகளுடனும் அவனின் குடும்பம் சமாளித்துவிடும். மிகுதி வயிறை நீரால் நிரம்பிவிடும். இன்று அவன் முதல் முறையாக தர்மராஜா முதலாளியிடம் போயிருந்தான். இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. உனக்கெல்லாம் எதுக்குப் படிப்பு. போய் மீனைப் பிடிச்சு குடும்பத்தைப் பார், உனக்கு இப்ப வயது வந்துவிட்டது தானே என்று சத்தம் போட்டு ஏசி அனுப்பினார். அது தான் அவன் கடலைப் பார்த்து, தர்மராஜாவை நினைத்து ஏதேதோ அவன் மனதில் எழும்பியதை கொட்டித் தீர்த்தான். எப்படியோ அம்மா, அப்பாவின் முயற்சி, கதிகாமனின் வெறித்தனமான கல்வி ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றால் குடும்பத்தில் அனைவருமே படித்து நல்ல நிலைக்கு, சிறப்பான வாழ்க்கை வெளிநாட்டிலும் தலைநகரிலும் வாழத் தொடங்கினர். அப்படியான ஒரு காலத்தில் தான், இலங்கையில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை 2004/12/26 அன்று இலங்கையைத் தாக்கியதில் குறைந்தது 46,000 பேர் இறந்தனர். அது முக்கியமாக பெரும் சேதங்களைக் இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தினாலும், அவனின் ஊரும் கடற்கரைக் கிராமம் என்பதால், சில பாதிப்புக்களுக்கு உள்ளாகின, என்றாலும் ஒரு உயிர் சேதமும் அங்கு இல்லை. இதை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கேள்விப்பட்ட கதிர்காமன், தன் சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு உடனடியாக ஊர் சென்றான். அனைவருக்கும் தேவையான தற்காலிக கூடாரங்கள், உணவுப் பொதிகள், தண்ணீர் மற்றும் மாற்ற உடைகள் என பலவற்றை தமது செலவிலேயே ஒழுங்கு செய்தான். தர்மராஜா முதலாளி ஊரில் முன்னர் பெரிய செல்வந்தர். இவர்தான் கதிர்காமனை திட்டி அனுப்பியவர் கூட, அவரின் அந்த கடும் மனிதத்தன்மை அற்ற வார்த்தைகளும் அன்று கதிர்காமனை உசுப்பேற்றி, அவனை ஒரு இலக்கு நோக்கி கடுமையாக படிக்க வைத்தது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விடயம்! தர்மராஜா ஐயா, அழுதவாறே என்னை மன்னித்துவிடு தம்பி என்ற அவரின் வார்த்தைகள் கதிர்காமனுக்கு இன்று காதில் தேனாக இனிக்க வில்லை. இல்லை ஐயா, மாறாக நீங்களும் ஐயா அன்று என்னை ஏசிக் கலைத்ததால் தான் நான் இப்ப அறுவை சிகிச்சை நிபுணராக வர முடிந்தது என கண்களில் நீர் கசிய, தரும ராஜா என்ற பொருத்தமில்லா பெயரைக் கொண்ட தர்மராஜா ஐயாவிற்கு கதிர்காமன் கூறியதை, அவனின் அம்மா, சின்னக்காளி மகிழ்சியுடன், கொஞ்சம் தள்ளிநின்று பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு மனக் கர்வத்துடன்! தர்மராஜா முதலாளி ஒன்றும் பேசவில்லை, தூர தெரிந்துகொண்டு இருக்கும் கடலை பார்த்தவண்ணம், கண்ணீர் ஒழுக தன்னையே அவரின் வாய் திட்டிக்கொண்டு இருந்தது. "கருணைமா முகிலே! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று மனங்களிக்கின்றேன். கார் முகிலே! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளை கொண்ட உன்னை இம் மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர். பண்டைத் தமிழர்; நானும் கதிர்காமன் வடிவில் இன்று காண்கிறேன்!" உடப்பில், அன்றாட வழக்கில் பாவிக்கப்படும் பழமொழியில் பிரபலமான ஒன்று 'மச்சம் பிடித்தவனுக்கு மிச்சமில்லை', அதன் பொருள் எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும், முடிவில் ஒன்றும் மிச்சம் இல்லை என்பதே. மற்றது " ஊரான் வீட்டு நெய்யே ! என் பொண்டாட்டி கையே !" ஆகும். அதாவது தன் வீட்டு நெய் என்றால் மனைவி சிக்கனமாகவும் ஊரார் வீட்டு நெய் என்றால் மேம்போக்காக வாரி இறைத்தும் செலவு செய்வார் என்கிறது. தர்மராஜா முதலாளி இதை உணர்ந்தாரோ இல்லையோ, ஆனால் அவர் புதுப்பிறவி எடுத்தவர் போல், அவரின் நடவடிக்கைகள் அன்றில் இருந்து மாற்றம் அடைந்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. அன்பு கிருபனுக்கு சட்டம் ஒரு ஒழுங்கை நிலை நாட்டிட, மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. எனவே அது காலத்துக்கு காலம் மாற்றமடையலாம் ?. உதாரணமாக அந்த குறிப்பிட்ட சட்டத்தை, திருமண தம்பதியர் மற்றும் ஒருபால் கூட்டு தம்பதியர் எல்லோருக்கும் என மாற்றி அமைக்கலாம்? அது என்றும் பிரச்சனை இல்லை
  23. அன்பு Justin க்கு [Just - based on or behaving according to what is morally right and fair. / in - expressing the situation of something that is or appears to be enclosed or surrounded by something else.] மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா? இதற்கு மிக ஆழமான விளக்கம் கொடுத்துள்ளேன் . [சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.] [ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? தொடர்ச்சி என்றால் என்ன என்று சொல்லமுடியுமா ? தங்களின் தொடர்ச்சியை தாங்களே ஏற்படுத்துவது , மற்றும் படி நீங்கள் தத்து எடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுபது அல்ல , அந்த குழந்தையும் உங்களை மாதிரியே இருந்தால் தொடர்ச்சி அறுந்துவிடும் ?? அப்படி என்றால், அது உங்களில் இருந்து மாறுபட்டு இருபால் உறவு ஒன்றில் ஈடுபடவேண்டும் அல்லவா , அந்த, நீங்கள் சொன்ன தொடர்ச்சியை நீட்டிட] முதலாவது, நான் ஓரின ஒன்றி வாழ்வுக்கோ அல்லது கூட்டு வாழ்வுக்கோ எதிரிப்பு என்று எங்கும் சொல்லவில்லை இரண்டாவது, ஆனால் திருமணம் என்ற, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பண்பாட்டில் உள்ள அதே சொல்லை ஓரின கூட்டுக்கும் பாவிக்கக் கூடாது, அதற்க்கு வேறு ஒரு சொல்லை பாவிக்கலாம் என்பதே என் வாதம். [வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம்.] மூன்றாவதாக "உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ... " நான் எங்கும் அழகுபடுத்தவில்லை, ஆனால் நாகரிகமாக வரலாற்றில் இருந்தும் இயற்கையில் இருந்தும் குறிப்புகள் கொடுத்துள்ளேன் நான்காவதாக "மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்?" இது தான் கவனிக்க வேண்டியது. உதாரணமாக The proportion of the UK population aged 16 years and over identifying as heterosexual or straight was 93.6% in 2020; there has been a decreasing trend since the series began in 2014. An estimated 3.1% of the UK population aged 16 years and over identified as lesbian, gay or bisexual (LGB) in 2020, an increase from 2.7% in 2019 and almost double the percentage from 2014 (1.6%). The proportion of men in the UK identifying as LGB increased from 1.9% to 3.4% between 2014 and 2020; the proportion of women identifying as LGB has risen from 1.4% to 2.8% over the same period. ஆகவே நீங்கள் கூறிய 200K ஆண்டுகளில், இப்ப தான் இது ஒரு கணிசமான அளவு தலைகாட்டிட தொடங்கி உள்ளது . எனவே இதன் விளைவு அல்லது தாக்கம் இன்னும் நாம் உணரும் அளவு இல்லை. எனவே அதை வைத்து, 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்?" என்று சொல்லமுடியுமா?? மற்றும் படி நான் அல்லது எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால், இதன் முழுவளர்ச்சி இன்னும் 200K ஆண்டுகளில் கூட நடைபெறாது. அதுவும் எதோ ஒரு இடத்தில் தன்னை இயற்கையின் தெரிவுகளுடன் சமநிலை படுத்திவிடும். ஆனால் குடும்பம் குழந்தை இவைகளில் எப்படியான பாதிப்புக்கள், இதன் சதவீதம் ஒரு எல்லையைத் தாண்டும் பொழுது என்ன நடக்கும் என்பது தெரியாது? இன்னும் நாம் 200K ஆண்டுகள் கடந்தும் ஒரு சிறிய வீதத்தில் தான் காண்கிறோம். அதனாலதான் எந்த பாதிப்பும் பெரிதாக இன்னும் இல்லை. என்றாலும் பாதிப்புக்கள் கூட எத்தனிக்கும் பொழுது , தானாகவே சமநிலை படுத்தும் என்பதே என் நம்பிக்கை ஐந்தாவதாக, "தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? ". ஆம் , அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆறாவதாக, "இதை அனுமதித்தால், incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது" நான் incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்று கூறவில்லை, ஆனால் திருமணம் என்ற சொல்லின் வரைவிலக்கணம், அப்படியான ஒன்றுக்கும் நீட்சி பெறலாம் என்றே கூறினேன் . அதனால்த்தான் ஓரின ஒன்றிய வாழ்வுக்கு , வேறு ஒரு சொல் தேவை என்று கூறினேன். ஏழாவதாக "இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding) நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது." இது முற்றிலும் சரி. ஆனால் இதற்கு எதிர்மாறான சில செய்திகளும் வரலாற்றில் அல்லது இன்றும் உண்டு. எட்டாவதாக, "விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம்." ஆம் அது சரி, ஆனால் ஏன் அப்படியான சட்டம் வந்தது என்று சொல்ல முடியுமா ?, சட்டம் எதோ ஒன்றை தடுக்க, சொல்ல ஏற்படுவது தானே , அப்படி என்றால் ?? உங்கள் கருத்துக்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றிகள். எப்பவும் ஒரு அடித்தளத்தில் இருந்து தான் நான் பார்க்கிறேன், எழுதுகிறேன் , அலசுகிறேன் . அதனால்த்தான் இந்த எட்டு விளக்கங்களும் தோன்றின? அது தான் அடித்தளம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.