Jump to content

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1085
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / பகுதி: 03 நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன?உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன?ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடைய வர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்த வர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. ஆகவே சமாதான வழிகள் அன்றே ஆரம்பித்துவிட்டன, ஆனால் இன்று வரை அவை திருப்ப திருப்ப எதிரொலிக்கின்றன ஒழிய இன்னும் நிறைவேறியதாக காணவில்லை? எனவே, முதலில் மனித மனம் மாறவேண்டும் / பக்குவமடைய வேண்டும். அதை கலந்து, அலசி ஆராய்ந்து யாரையும் தாழ்த்தாமல், பக்குவமாக உரையாடுதன் மூலம் அறிவை / சிந்தனையை பரவலாக்கவேண்டும் என்று நம்புகிறேன்! இப்ப இவை தொடர்பாக எனக்கு ஞாபகம் வரும் ஆறு பாடல்கள் கிழே தருகிறேன். அவை பொருத்தமான பாடல்களாக எனக்கு தோன்றுகிறது "When there is righteousness in the heart, there is beauty in the character; When there is beauty in character, there is harmony in the home; When there is harmony in the home there is order in the nation; When there is order in the nation, there is peace in the world." [A.P.J. Abdul Kalam] யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே [கணியன் பூங்குன்றனார்] "'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை; 'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்; 'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை; 'நிறை'எனப்படுவது, மறை பிறர் அறியாமை; 'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்; 'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்." [கலித்தொகை 133] "தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் குமே அதனால் செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே , தப்புந பலவே" [மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்] Imagine there is no heaven no hell below us [Above us, only sky] all men are even and God is with us [Imagine there's no countries It isn't hard to do] Imagine there are no boundaries One is a human not a countrymen And all people are living life in peace. [You may say I'm a dreamer But I'm not the only one I hope someday you'll join us And the world will be as one] [Imagine no possessions I wonder if you can No need for greed or hunger A brotherhood of man] [Imagine all the people Sharing all the world] I am a poet and i write but i hope someday everybody will come together as one and the world will change forever [John Lennon] "I many times thought Peace had come When Peace was far away — As Wrecked Men — deem they sight the Land — At Centre of the Sea — And struggle slacker — but to prove As hopelessly as I — How many the fictitious Shores — Before the Harbor be" — [Emily Dickinson ] அதே நேரத்தில் சமயம், காலம் கடந்த திருக்குறளில் இருந்து ஒரு சில உதாரணத்தை சான்றாக தருகிறேன். குறள் 212: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே. குறள் 851:. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும். குறள் 853:. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். மனமாறுபாடு என்னும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும். குறள் 856:. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும். இது என் சிறிய சிந்தனை இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம் இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / பகுதி: 02 நாம் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்ககளை கவனத்தில் எடுத்தால், உதாரணமாக 'அன்பே சிவம்' அதாவது அன்புதான் கடவுள் என்று பறைசாற்றுகிறது 'எம்மதமும் சம்மதம்', அதாவது எல்லா சமயமும் எமக்கு ஒன்றே என்கிறது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' , அதாவது அனைத்து மக்களும் நமது உறவினர்களே 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' 'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் [உதாரணம்: செல்வத்தை நியாயமான அளவில் பிரி, ஆயுத விற்பனையை கட்டுப்படுத்து, உண்மையை சரியாக, ஆராந்து புரியாமல், நாங்கள் நம்பும் உண்மையே உண்மை என அடம்பிடிப்பது ... இப்படி பல. உதாரணமாக ஒரு நாள் அரசன் ஒருவன் மூன்று அறிஞர்களை, தன் அரசவைக்கு கூப்பிட்டு, பாண் [ரொட்டி] என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு முதலாவது அறிஞர் ரொட்டி என்பது ஜீவனாம்சம் கொடுக்கும் ஒரு உணவு என்றான், இரண்டாவது அறிஞன் ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்து, நெருப்பின் வெப்பத்தில் சுட்ட ஒன்று என்றான், மூன்றாவது அறிஞனோ ஆணடவனின் கொடை என்றான் . இப்படி ஒரு சாதாரண உணவுக்கே கருத்து வேறுபாடு இருப்பதை இங்கு காண்கிறோம். இங்கு தான் எம் கல்வி / அறிவு / நம்பிக்கைகள் சரியாக ஒழுங்கு படுத்தப் படவேண்டும். இல்லாவிட்டால் முரண்பாடுகள் அதிகரித்து சமாதானத்தை குழப்பலாம்? ] இன்றைய சூழலை உற்று நோக்கின் பலர் 'மதக் கருத்தை உணராமல், மதம் தோற்றிவித்தவனை வணங்க ஆரம்பிக்கிறார்கள் / ஆரம்பித்துள்ளார்கள் ' [உதாரணம் புத்த சமயம், தமிழர் வரலாற்று நிலங்களில் அத்துமீறி புத்தரை ஒரு பட்டாளத்துடன் குடியேறிக்கொண்டு, சமாதானத்துக்கு எதிராக புத்தரை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்] புதிது புதிதாக மதம் / மத பிரிவு வந்து கொண்டே இருக்கிறது சமாதானம் வேண்டுமாயின் திட்டம் வகுக்கலாம். ஆனால் அதற்க்கு , அதை ஒரு சமயமாக / நம்பிக்கையாக பெயரிடும் பொழுதே , அது சமாதானத்துக்கு ஆப்பு வைக்கிறது. பிறகு அதை வளர்க்க, பரப்ப, முன்பே இருந்த சமயங்களுக்குள் நுழைந்து மக்களை பிரித்து எடுக்கிறார்கள். அங்கு தான் பிரச்சனை எழுகிறது. உதாரணமாக, அண்மையில் , 1844 ஆண்டில் தொடங்கிய பஹாய் நம்பிக்கையை / Baha’i Faith எடுத்தால், அதன் முக்கிய கோட்பாடுகள் கடவுள் ஒருவரே. மனிதர்கள் அவரை எப்பெயரிட்டு அழைத்தபோதிலும், அவர் ஒருவரே சமயங்கள் ஒன்றே. மனிதகுலத்தைப் படைத்த கடவுள், அவர்களுக்குக் காலம் காலமாக தமது அவதராங்களின் மூலமாக வழிகாட்டி வந்துள்ளார். மனிதர்கள் வாழும் காலம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்து இந்த அவதராங்கள் போதனைகளை வழங்கி வந்துள்ளனர். சமயங்கள் அனைத்துமே ஒரே புத்தகத்தின் தொடர்ந்துவரும் அத்தியாயங்களே. மனிதகுலம் ஒன்றே மனித குலத்தைப் படைத்தவர் ஒரே கடவுள். மனிதர்கள் அவரிடமிருந்தே தோன்றியுள்ளனர். மனித ஆன்மா இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளது மற்றும் எல்லாருக்குள்ளும் ஒரே விதமாகவே படைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள், ஒரே குடும்பத்தினர் என்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் சமயம் / தமிழரின் சைவ தத்துவத்தை மற்றும் இலக்கியத்தை எடுத்தால் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற பொன்னான வாக்கியத்தை காண்கிறோம் 'வாழு வாழவிடு' என்ற தோரணையில், மணிமேகலையில் ஒரு காட்சி அமைகிறது. அதில் தமிழரின் அன்றைய மனப்பான்மையை, சில முக்கிய வரிகள் எமக்கு இன்றும் எடுத்து காட்டுகிறது. “ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்ற மாக்கள் தம்முட னாயினும் செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்” (மணிமேகலை,1. விழாவறை காதை - 60-63) யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து பல்வேறு சமயங்களை சாரந்தவர்கள் சொற் போரில் வென்று நிலை நாட்ட ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய சமயக்கருத்தை ஏற்க முடியவில்லை யென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள் எனவும் கூறுகிறது. அதாவது எம் மதமும் சம்மதம் என்ற பெருந் தன்மையுடன் தமிழர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற தோரணையில், அறிவு பூர்வமாக பட்டி மன்றத்தில் விவாதித்து அதன் பெறுபேறுகளை கொண்டு ஏற்றுக்கொண்டதுடன், எல்லோரையும், எல்லா மத பிரிவினரையும் சமஉரிமை கொடுத்து அனைத்து வாழ்ந்தனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம். சகிப்புத்தன்மையின் இலட்சியத்தை இங்கு காண்கிறோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 03
  3. "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / பகுதி: 01 காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராடினார் பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வு தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்பு களுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த கால, சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர்,உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல,இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை.- பைபிளுடன் தொடங்கு,அது வெற்றி தரவில்லை என்றால்,வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள்.விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை.முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!! இன்னும் ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது. இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese] ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன். அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும். எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 02
  4. "கந்தையா கனகம்மா" [உண்மைக் கதை] அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது. கிழக்கு வடக்கு மாகாணம் எங்கும் ஒரு பாதுகாப்பற்ற சூழல். தனித்துப்போன கனகம்மா, தன் இளைய மகளுடன் அத்தியடியிலேயே வாழத் தொடங்கினார். தொடக்கத்தில் போரின் பாதிப்புகள் குறைவாக இருந்ததாலும், தட்டுப்பாடுகள் அவ்வளவாக பாதிப்பு அடையாததாலும் வாழ்வு ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருந்தது. என்றாலும் வேலைகளுக்கு போய் வருவதும், பாடசாலைக்கு போய் வருவதும் பல இடர்பாடுகளை சந்தித்தது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் பொதுவாக எல்லா வடக்கு கிழக்கு மக்களிடமும் இருந்தது. இனப் போரின் திவீரமும் அதனால் தட்டுப்பாடுகளும் போக்கு வரத்துக்களும் பிரச்சனைகளுக்கு உள்ளாக, குடும்பத்துக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. பிள்ளைகளின் படிப்பை தொடரவேண்டும், அதேநேரம் பாதுகாப்பும் வேண்டும் தாயையும் பார்க்கவேண்டும் போன்ற சுமைகள் ஒருபக்கம். இவற்றை ஓரளவு சமாளிக்க யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்புக்கு போகவேண்டும் என்று இளைய மகளும், தான் பிறந்த மண்ணை விட்டு வரமாடடேன் என்று தாயும் இரு வேறு திசையில் இருந்தார்கள். மகளின் தற்காலிக முடிவு நல்லதாக இருந்தாலும், பிறந்த மண்ணில் தாய் கொண்ட பற்று இழுபடியை கொடுத்தது. கனகம்மா, மகள் குடும்பம் கொழும்பு போவதைத் தடுக்கவில்லை, ஆனால் தன்னை பார்க்க வேலைக்கு ஒரு ஆளை ஒழுங்குபடுத்தி, தன் அத்தியடி வீட்டிலேயே, தன்னை விட்டு விட்டு போகும்படி எந்த நேரமும் கேட்டுக் கொண்டே இருந்தார். அச்சுவேலி, இடைக்காட்டை பூர்வீக இடமாக கொண்ட , ஆனால் அத்தியடியில் 1917 இல் பிறந்து வளர்ந்த கனகம்மா, எட்டுப் பிள்ளைகளின் தாயாக இருந்தாலும், இரண்டு பிள்ளைகள் இளம் வயதிலேயே காலமாகியும், ஐந்து பிள்ளைகள் ஒவ்வொருவராக தங்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு போனதாலும், மிஞ்சி இருக்கும் இளைய மகளின் அரவணைப்பும் பாதுகாப்பும் அவசியம் என்பதை அறியாதவர் அல்ல கனகம்மா. பணம் அவருக்கு பிரச்சனை இல்லை. அவரின் பிரச்சனை தன் வீட்டை, மண்ணை விட்டு வெளியே போவது தான். கனகம்மா அதே சிந்தனை, அதனால் அவரின் கவலையும் அதிகரித்து, அவரின் முகத்தின் செந்தளிப்பும் குறையத் தொடங்கியது. அரசை, அரசியல்வாதிகளை தன்பாட்டில் திட்டுவார். சிலவேளை முற்றத்து மண்ணைத் தூக்கி எறிவார். கனகம்மாவின் போக்கு ஒரு வித்தியாசமாக மாறிக்கொண்டு இருந்தது. கணவனின் மறைவிற்கு பிறகு, அவரின் வாழ்வில் ஒரு கை முறிந்தது போல உணர்ந்தார். ஆனால் அவரின் மருமகன் அந்தக்குறையை விடாமல், தேவையான வெளி உதவிகளை அன்பாகவும் ஆதரவாகவும் செய்தார். ஆகவே கனகம்மாவிற்கு பெரும் பிரச்சனை என்று ஒன்றும் இருக்கவில்லை, முதுமையும் கவலையும் தான் அவரை வாட்டிக் கொண்டு இருந்தது. யாழில் அடிக்கடி நடைபெறும் ஆகாயத்தில் இருந்து குண்டு வீச்சிலும், கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதலும் மற்றும் படையினரின் கெடுபிடிகளும் கனகம்மாவின் இளைய மகளுக்கு எப்பவும் ஒரு பதற்றத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. அது ஞாயமானது கூட. எவ்வளவு கெதியாக வடமாகாணத்தை விட்டு வெளியே போக வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருந்தார். ஆனால் தாயின், கனகம்மாவின் பிடிவாதம் தளர்ந்த பாடில்லை. தாயை தனிய விட்டு விட்டு போகவும் மனம் இல்லை. முதியோரின் தனிமை எவ்வளவு கொடுமை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு காலத்தில், புதிதாக வீட்டுடன் அணைத்துக் கட்டிய புதுவிறாந்தை முழுவதும் பொயிலை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மேல் ஏறி, தம்பி இருவருடனும் விளையாடும் போது வாங்கிய அடிகள் எத்தனையாக இருந்தாலும், 'அம்மா, கனகம்மா என்றும் எங்களை மிக அன்போடும், கண்டிப்போடும் வளர்த்திருந்தாள். பிள்ளைகளை கண்ணுங்கருத்துமாக வளர்த்து கரை சேர்த்திருந்தாள்' .... மகள் அதை முணுமுணுத்தபடி வானத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்? பேரப்பிள்ளைகளின் உலகத்தில் கனகம்மா ஒரு குழந்தையாகவே மாறிப் போவாள். கனகம்மாவிடம் அன்பு எவ்வளவு இருந்ததோ அந்த அளவு வைராக்கியமும் இருந்தது. அது மட்டும் அல்ல, அவரது வார்த்தைகள் உச்ச ஸ்தாயில் [மண்டிலத்தில்] வெளிப்படும் தன்மை கொண்டவை. எனவே அந்த பேச்சை கோபப் பேச்சாக புரிந்து கொண்ட உறவுகளும் இல்லாமல் இல்லை. அந்த இரண்டும் தான் அவரின் குறைபாடு என்று சொல்லலாம். கனகம்மா இப்ப அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வாசகம் படுக்கையில் போட்டு வதைக்காமல், இவங்களின் கெடுபிடியால் அகப்படாமல், சீக்கிரமே போயிரணும். வீட்டின் வளவில் பதுங்கு குழிகள் கட்டி இருந்தாலும், கனகம்மா அங்கெல்லாம் போகமாட்டார். அப்படியான சூழலில் அத்தியடி பிள்ளையாரையும் நல்லூர் முருகனையும் திட்டித் தீர்த்துவிடுவார். கந்தையா இறந்ததிலிருந்து கனகம்மா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள். பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கோணல் பார்வைகளுக்கு இரையாவதை விட தனிமையில் அமைதி பெறுவதையே அவர் அதிகமாக விரும்பினார். ஒரு சில நேரங்களில் பழைய நினைவலைகளில் சிக்கி, அவளுக்குள்ளேயே ஒப்பாரிவைத்து அழுவதும் உண்டு. ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்க தொடங்குவதும் அவர்களின் உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். அதனை கனகம்மாவின் இளைய மகள் நன்கு உணர்ந்தவர். அது தான் அவரை விட்டு விட்டு போகாமல் இன்னும் அத்தியடியிலேயே இருந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம்.அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா? "இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே" இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்று கோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும், முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அப்படித்தான் கனகம்மா இன்று இருக்கிறார். என்றாலும் அவர் எந்த வயதிலும் மறக்காத சில நடவடிக்கைகள் இருக்கிறது. அதி காலை கிணற்றில் அள்ளி முழுகி, ஞாயிறு உதிக்கையில் சூரிய நமஸ்காரம் செய்வதும், புராணங்களில் இருந்து சில, தனக்குப் பிடித்த உதாரணங்களை தகுந்த இடத்தில் பொருத்தமாக கூறுவதும், பேரப்பிள்ளைகள் தமிழை மறக்காமல், தமிழ் பண்பாட்டை அறிந்து போற்றி வாழவேண்டும் என்ற விருப்பமும் ஆகும். மழையற்றுப் போக சூரியனின் வெப்ப சக்தியால் காடுகளும் அழிந்து நிலம் காய்ந்து வெடித்துப் பாலை நிலமாய் மாற உலகம் துன்புற்றது. அது சூரிய வழிபாட்டிற்குக் காரணமாயிற்று. “………………………… ஓங்கு திரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடரினும்” என மதுரை மருதன் இளநாகனார் சூரியனும் பழந்தமிழர் வழிபட்ட தெய்வமாக இருந்ததைக் கூறுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. என்றாலும் மூத்த மகளும் நாலாவது மகன் குடுப்பத்துடனும் 2003 யாழ் போனபோது, மூத்தமகள், நாலாவது மருமகள், இளைய மகள் எல்லோரும் சேர்ந்து கனகம்மாவுடன் கவனமாக எடுத்து உரைத்ததின் பலனாகா இறுதியில் ஒருவாறு அத்தியடியை விட்டு நகர ஒத்துக் கொண்டார். மனிதரின் வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டமும் பலவிதமான உறவுகள் கடந்து சென்று கொண்டே தான் இருக்கும். ஒவ்வொன்றும் அன்பு, பாசம், நேசம், துன்பம், களிப்பு என்று மனதில் தோன்றும் மொத்த உணர்வுகளையும் உள்ளடக்கியதாய் இருக்கும். எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவுக்கிடையேயான பந்தம், மற்ற எல்லாவற்றையும் விட மேலானது. வாழ்வின் பாதையில் ஆயிரம் பேர் வந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையேயான மனது மட்டும் அருகருகே அமர்ந்து மற்றவர்களை வேடிக்கை பார்க்கும். அவ்வளவு எளிதில் இந்த உறவுக்கயிற்றை வெட்டிவிட முடியாது. அதனாலதான் கனகம்மா இறுதியில் சம்மதித்தார் போலும். என்றாலும் சுவருடன் சாய்ந்து தன் முகத்தை சுளித்து தன் வெறுப்பையும் கோபத்தையும் காட்டிடத் தவறவில்லை. அது அவரின் இயல்பான குணம். அதை யாராலும் மாற்ற முடியாது. "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே .... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா .... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" நன்றி [நாலாவது மகன்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வைத்த அன்புக்கு அடையாளமாக நான் பலவற்றை சொல்லலாம் என்றாலும், நான் ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நான் உடுப்புகளை, அதிகமாக வார இறுதியில் தோய்த்து [கழுவி] நூல் கொடியில் காய்வதற்காக போடுவது வழமை. என்றாலும் இது வார இறுதி என்பதால், சிலவேளை வெளியே நடக்கப் போய்விடுவேன். அப்படியான ஒரு நாள் திடீரென மழை தூர தொடங்கிவிட்டது. கலைமதி, என் உடுப்புகளுடன், அவர்களின் உடுப்புகளும் ஈரமாவதை கண்டார். அவருக்கு ஒரே பதற்றம். என்ன செய்வது என்று புரியவில்லை. அவருக்கு இரண்டு அல்லது இரண்டரை வயது இருக்கும். தாயிடம் ஓடினார். மழையில் என் உடுப்புக்கள் நனைவதை சுட்டிக்காட்டி, அதை முதலில் எடுக்கும் படி அடம் பிடித்தார். இன்றும், அவரை பற்றி எண்ணும் பொழுது, நிழலாக ஆடும் நினைவுகளாக அண்ணி என்னிடம் அதைச் சொல்லுவார். எனக்கும் மறுமொழி வந்து, வேலைகளுக்கு விண்ணப்பித்து, முதல் நிரந்தர வேலையும் இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியலாளர் விரிவுரையாளராக கொழும்பிலேயே கிடைத்தது. ஆகவே அண்ணாவின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினேன். இப்ப வேலை முடிந்து, வீடுவந்தால் அவருடனும், மற்றும் அண்ணாவின் மூத்த பிள்ளைகளுடனுமே பொழுது போக்கு. நேரம் போவதே தெரியாது. அவருக்கு மூன்று வயது தாண்ட, எனக்கும் அரசாங்க கல்வி உதவி தொகை [Scholarship] கிடைத்து ஒரு ஆண்டு மேல் படிப்பிற்கு ஜப்பான் செல்ல வேண்டி வந்தது. அவரை விட்டு பிரிய மனமே இல்லை. அப்படியே அவருக்கும். என்றாலும், நான் விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கி வர விமானத்தில் போவதாக கூறி, ஒருவாறு, அவரும் கட்டி பிடித்து முத்தம் தந்து விடை தந்தார். அப்பொழுது நான் யோசிக்கவில்லை, இது தான் அவரின் கடைசி முத்தம் என்று. இன்றும் என் மனதில், நிழலாக ஆடும் நினைவுகளாக அது இன்றுவரை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. நானும் எல்லோரிடமும் விடைபெற்று, முதல் முறையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமனநிலையத்தின் ஊடாக பயணம் செய்தேன். என்றாலும் விமானத்தில் அயர்ந்து தூங்கும் பொழுது எல்லாம் அவரின் விடை தந்த முத்தம் தான் நிழலாக ஆடும்!! கலித்தொகை 80 இந்த சில அடிகள் என் ஞாபகத்துக்கு வந்தன. "கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் தளர் நடை காண்டல் இனிது!" "ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின் தே மொழி கேட்டல் இனிது!" "ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை அம்புலி காட்டல் இனிது!" ஆமாம் நீ அணிந்திருக்கும் ஒளி திகழும் மணியொலி கேட்கும்படிச் சாய்ந்து சாய்ந்து தளர் நடை போட்டு நீ செல்வதைக் காணும்போது எனக்கு இனிமையாக இருக்கிறது. என் ஐயனே! அன்பு ததும்ப நீ பார்க்கிறாய். "அத்தா அத்தா" என்று அழைக்கிறாய். இந்தத் தேன் மொழியைக் கேட்க இன்பமாக இருக்கிறது. என் ஐயனே வருக! பிறை நிலாவே என் ஐயனிடம் வருக! என்று நான் அழைத்து உனக்கு அம்புலி காட்டுவது இனிமையாக இருக்கிறது. என் செல்லக் குழந்தை கலைமதியை வர்ணிக்க கலித்தொகை போதாது! என்றாலும் அவளின் குறு குறு நடை நடந்து மழலை மொழி பேசி இதயம் கவரும் அழகும் அம்புலிகாட்டி நிலா சோறு ஊட்டிய நினைவுகளும் என் மனதில் இன்னும் புதைந்து இருப்பதை காண்கிறேன்! "காற்று வீசுது காகம் பறக்குது காலைப் பொழுது இருளாய் மாறுது காடைக் கோழி எட்டிப் பார்க்குது காவி வருகிறேன் அன்னம் உனக்கு!" என நிலாவைக் காட்டி கதை சொல்லி, சோறு தீத்தியது "சின்ன பூவே சிங்கார பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ ?" என துயிலவைத்தது எல்லாம் எப்படி மறக்கமுடியும்? எதோ ஜப்பானில் படிப்புடன் காலம் உருள, ஒரு ஆண்டு நிறைவுற்றதே தெரியாமல் போய்விட்டது. அவசரம் அவசரமாக அவளுக்கு சில மின்னணு பொருட்களும் பொம்மைகளும், உடுப்புகளும் மற்றவர்களுக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டு டோக்கியோவில் இருந்து இலங்கை திரும்பினேன். கட்டாயம் இன்னும் ஒரு பெரிய முத்தம் கிடைக்கும் என்ற பெருமிதத்தில்! ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் என்னை அக்கா குடும்பமே வரவேற்றது. அவர்கள் கண்கள் ஈரமாக இருந்தது. அக்கா மெல்ல என் காதில், அண்ணா குடும்பம், ஒரு திருமண கொண்டாட்டத்திற்காக இடைக்காட்டுக்கு போனதாகவும், நேற்று அங்கு எல்லோரும் கல்யாண விழாவுக்கு தேவையான முன் ஏற்பாட்டு அமளியில் இருக்கும் பொழுது, அது மாரி காலம் என்பதால் கிணறு முட்டி இருந்ததாகவும், கலைமதி அவர்களிடம் இருந்து நழுவி, தனிய வீட்டிற்கு பின் பக்கம் போய், தவறுதலாக யாரும் காணாமல் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என கூறினார். எனக்கு, என் மனதில் இடி முழங்கிய மாதிரி இருந்தது. அந்த கடைசி முத்தம், அவளின் குறும்புகள், அவளின் மழலை பேச்சு, என் நெஞ்சில் படுக்கும் அழகு, சித்தப்பா என்று பின்னால் ஓடிவரும் காட்சி .... எல்லாமே நிழலாக ஒன்றின் பின் ஒன்றாக வந்தவண்ணம் இருந்தன. அந்த நாலுவயது குழந்தை என்னை மீண்டும் காணாமலே கண் மூடிவிட்டது!! "மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே மடியில் தவழ்ந்து நெஞ்சை கவர்ந்தவளே மவுனமாய் இன்று உறங்குவது ஏன் ? மகிழ்வு தரும் முத்தங்கள் எங்கே ?" "மயக்கம் தரும் அழகு அழிந்ததோ ? மனதை கவரும் குறும்பு மறைந்ததோ ? மரண தேவதைக்கு இரக்கம் இல்லையோ? மதியென்று இனி யாரை கூப்பிடுவேன்!" முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டியவளே, எல்லாமே இனி நிழலாக ஆடும் நினைவுகள் தானோ ?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "இலங்கையைச் சேர்ந்த தயா நிகஹெட்டியா / Mr Daya Nikahetiya வின் ஆங்கில கவிதை " Amanda , My pretty little sister ..." இன் தமிழ் ஆக்கம்" "அமந்தா, அழகான எங்கள் குட்டி தங்கையே" "அழகான எங்கள் குட்டி தங்கையே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் எம்மை தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?" "வாய் மடித்து கண் சுழன்று வான் உயர கை அசைத்து வாட்டம் இன்றி துள்ளி சென்றவளே வான் இருண்டும் வராதது எனோ ?" "மணலில் கதிரவன் புதையும் மாலையில் மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில் மரணம் தழுவ தொடர்வண்டியின் முன் மடையர் போல் பாய்ந்தது எனோ ?" "செவ்வாய் நீயோ வீடு வந்தாய் செவ் இதழ் நீயோ திறக்கவில்லை செல்வச் செழிப்பாய் பல்லக்கில் வராமல் செத்து சாக்கில் வந்தது எனோ ?" "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்துஎனோ?" "அம்மாவின் அறைக்கு மெல்ல போனது அமைதியாக பக்கத்தில் சற்று இருந்தது அவளது சிறிய விரல்களை விரித்து அழகாக முடியை வருடியது எனோ?" "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி அம்மாவின் கண்கள் பார்த்து பதுமையாக அம்மாவின் முன் நின்று பணிந்து வணங்கி மறைந்தது எனோ?" "எங்கள் அழகிய குட்டி தங்கையே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி அற்று இருப்பதை கண்டாலும் எழுவாய் என்று நம்பியது எனோ?" "தேர்வு முடிவுகளை பெற்ற பிறகு தேய்வு உன்னில் நான் கண்டாலும் தேவதையே திருமகளே நீ உன்னை தேற்றிடுவாய் என்று நம்பியது எனோ?" "என் அழகான சின்ன செல்லமே எங்களை விட்டு போக வேண்டாம்? எங்கள் குறும்பு இளவரசி இல்லாமல் எமக்கு இனி மகிழ்ச்சி எனோ?" "இறந்ததாக எவரும் இன்னும் நம்பவில்லை இன்றும் உனக்காக அம்மா காத்திருக்கிறார் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் அம்மா எண்ணுவது எனோ?" "பள்ளி பையை ரயில் பாதையில் பகுதி பகுதியாக கண்டு எடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பள்ளி புத்தகம் சிவந்தது எனோ?" "மச்சம் கொண்ட உன் சிறுகால் மல்லாந்து என்னை பார்ப்பதை கண்டேன் மயான அமைதியை விட்டு தங்கையே மடிந்தகால் நானென்று சொல்லாதது எனோ?" [மூலம் : தயா நிகஹெட்டியா / Mr Daya Nikahetiya தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "உலகின் மிகப் பழைய சுமேரிய காதல் பாட்டின் தமிழ் ஆக்கம்" ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். பிலடெல்பியா (Philadelphia) பல்கலைக்கழக பேராசிரியரான Noah Kramer இதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார். இது காதல் கணவனுக்காக முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது. இது ஷு-சின் அரசனுக்கு உரைக்கப்பட்டது. இந்த காதல் கடித கவிதை "Bridegroom, dear to my heart, Goodly is your beauty, honeysweet ,........ " அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது. மேலும் இதுவே உலகின் மிகப் பழைய காதல் பாட்டும் ஆகும் . இது கி மு 2030 அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அந்த பெருமை பெற்ற பாடலை என்னால் இயன்றவரை தமிழில் மொழி பெயர்த்து கிழே தருகிறேன். "அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !! உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே, உன் வசீகரம் இனிமையானது,அமுதம் போல் இனிமையானது நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே எனது சுய விருப்பத்தில் நான் உன்னிடம் வருவேன் ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னை உன்னுடன் கொண்டு போ நீ என்னை மயக்கி விட்டாய், எனவே எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன் காதல் தோழனே! படுக்கையறைக்குள் என்னை உன்னுடன் தூக்கி போ மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு என் மதிப்புள்ள காதற் கண்மணியே! உனக்கு என்னை தேன் தர விடு தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே இளைஞனே! உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட விடு வீரனே! நீ என்னை கவர்கிறாய், எனவே என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன் என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார் உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது என்பது எனக்கு தெரியும் மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது என்பது எனக்கு தெரியும் இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு வீரனே! நீ என்னை விரும்புவதால், நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால் எனது எஜமானே! கடவுளே!! பாதுகாவலனே!!! "என்லில்" கடவுளின் இதயத்தை மகிழ்ச்சிபடுத்தும் எனது "ஷு-சின்" அரசனே! உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின், தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின், அளவு சாடியின் மூடி போல அங்கே உன் கையை எனக்காக மூடு [வை] மரச் சீவல் சாடியின் மூடி போல அங்கே உன் கையை எனக்காக விரி [பரப்பு ]" குறிப்பு: ஷு சின்' : கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர். என்லில்: மழை மற்றும் காற்றுக் கடவுள்" தமிழ் ஆக்கம்: [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. நான், என் ஓய்வின் பின், ஒவ்வொரு ஆண்டும் கனடா வந்து போகிறேன்
  9. "எனக்காக பிறந்தவள்" "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால் அரம்பை தேசவில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் துடிக்குள்அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள் துட்டன் அரண்மனைக்குக் கட்டும் கதலிவாழைத் தொடையினாள் [ குற்றால குறவஞ்சியில் நாயகியின் வர்ணனை] நான் வேலை செய்யும் பணிமனையில், எனக்கு ஒரு உதவியாளராக ஒரு பெண் நாளை தனது பதவியை ஏற்பார் என்றும், அவர் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி என்றும், இது அவரின் முதல் வேலை என்றும், ஆகவே அவருக்கு வேலையை பற்றிய அறிமுகமும், பயிற்சியும் வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்கை செய்யும் படி எனக்கு அமைச்சில் இருந்து கடிதம் வந்து இருந்தது. அதில் அவரின் படம், மற்றும் சில விபரங்களும் இருந்தன. வழமையாக எனக்கு கீழ் வேலை பார்க்கும் அணி தலைவரிடம் கொடுத்துவிடுவேன். நான் அதில் நேரடியாக பங்குபற்றுவதில்லை. ஆனால், அவளின் படம், வயது, படிப்பு எனோ என்னை இம்முறை கவர்ந்து விட்டது. நான் பொறியியலாளர் என்றாலும், பொழுது போக்காக இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவன் என்பதால், அவளின் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க, குற்றாலக் குறவஞ்சி ஞாபகம் தான் வந்தது. என் கற்பனையில், எனக்காக ஒருவள் கட்டாயம் பிறந்திருப்பாள், அவள் எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்தேனோ, அதைவிட, குற்றாலக் குறவஞ்சியை விட, அவள் உயர்வாக தெரிந்தாள். 'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி' யாய் .. 'பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்' என இருந்தாள்! முதல் முதலாக அன்று இரவு முழுவது அந்த, அவளின் படம் தான் கண்ணில் வந்து கொண்டே இருந்தது. இது என்ன கொடுமை ? எனக்கு புரியாத ஒரு உணர்வு ? அது என்ன ? அவள் யார் ? அந்த படமும், சிறு குறிப்பும் ஒருவரை அறிய கட்டாயம் காணாது, அப்படி என்றால் ஏன் என் மனம் அதை நம்பவில்லை, 'அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்' அப்படி ஒன்றும் இன்னும் நடை பெறவில்லையே, மனதை தேற்றிக்கொண்டு கொஞ்சம் உறங்க முயன்றேன். "உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து , இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்," புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே; கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு; அவற்றுள் ஒன்று துயர் தரும் மாலைப் பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்தது போல, என்னை திடீரென வாட்டும் இந்த எண்ணமும் மறையட்டும் என்று போர்வையை இறுக மூடிக்கொண்டு கொஞ்சம் அயர்ந்து தூங்கினேன். "சிறு கண் யானை உறு பகை நினையாது, யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப, அருள் புரி நெஞ்சம் உய்த்தர இருள் பொர நின்ற இரவினானே." சிறு கண்களை உடைய மதம் கொண்ட யானை பற்றி பொருட் படுத்தாது, பூ மாலை அணிந்த அன்பு உள்ளம் உடையவளே, எப்படி நீ என்னை காண இந்த கரும் இருட்டில் வந்தாய்? என கேட்டபடி, ஆனால், திடீரென அவள் எதிரே வந்துநின்றதால், எனக்கு கைகால் பதறி. மேலும் பேசுவதற்குச் சொற்கள் வராமற்போகத்தான் தெரிந்தது இது கனவென்று, எனக்கே என் மேல் கோபம் கோபமாக வந்தது. நேரத்தை பார்த்தேன் காலை ஆறு தாண்டி விட்டது. அவசரம் அவசரமாக, காலைக்கடன் முடித்து, நேற்று வாங்கி மிகுதியாக இருந்த இரண்டு பாண் துண்டுகளை வாழைப் பழத்துடன் அருந்தி, சுடச் சுட ஒரு காபி குடித்துவிட்டு, என்னிடம் இருந்த உடுப்புகளில், சிறந்த ஒன்றை தெரிந்த்தெடுத்து கம்பீரமாக பணிமனைக்கு என் மோட்டார்வண்டியில் கொஞ்சம் முந்தியே சென்றேன். "இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என, யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, தான் செய் குறி நிலை இனிய கூறி, ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி, விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?" சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ என்று அவளை வரவேற்று சொல்ல வேண்டும் போல் இருந்தாலும், அவளுக்கு எப்படி என்னை தெரியும், என் உருவமோ, வயதோ, படிப்போ அவளுக்கு தெரியாதே ! அவள் என்னையோ, என் படத்தையோ பார்த்தது இல்லையே ? அவளுக்கு ஆண் நண்பர் இருக்க இல்லையா, அது கூட எனக்கு தெரியாதே? நான் என்னையே நொந்தேன். என்றாலும் என் நெஞ்சு அவள் எனக்காக பிறந்தவள் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. "சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ" கண்களில் இருந்து வெளிப்படுகின்ற ஒளி இரண்டும் சூரிய கதிர்கள் போலும், குளிர்ந்த நிலாவொளி போலும் ஒளிர்கிறதே! தூய்மையான, கருமையான வானம் போலே வட்ட வடிவில் அழகிய கருமையான கண் விழிகளுடன் அவள் அன்ன நடை நடந்து, புது இடம், புது மனிதர் என்பதால் அச்சம், நாணம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் சாதாரணமாக எமது பணிமனையின் வரவேற்பில் காத்து நின்றாள். எதோ அவர்களுடன் கதைப்பதும், அவர்கள் என் அறையை காட்டுவதும் எனக்கு தெரிந்தது. என்றாலும் ஏதும் தெரியாதது போல், என் கோப்புகளை எடுத்து, அதில் மூழ்கி இருப்பது போல இருந்தேன். என்றாலும் கண் என்னை ஏமாற்றிக்கொண்டே இருந்தது. "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும்" கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று விட்டனவோ?. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறந்தனவோ? என மனதில் என்னை அறியாமலே கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தன. வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட" மூங்கில் போல் திரண்டிருக்கும் தோளினையும். மணத்தால் வெறியூட்டும், ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட, வளர்ந்த கூந்தலையும், மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும் . மயில் போன்ற சாயலையும், நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும், கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் தோன்றித் தோன்றாத, கண நேரத்தில் யாதென்றே தெரியாத, அந்த மெல்லிய இடையாளை கண்கள் நாடி சென்றன என் கண் கோப்புக்குள் இருந்ததால், போலும் வரவேற்பில் சிறிது நேரம் காத்திருக்க சொல்லி இருக்கவேண்டும். அவள் எம் பணிமனைக்கு முன்னால் இருந்த தோப்புக்குள் மேய போய்விட்டாள். நான் வண்டு என்றால் அங்கு போயிருப்பேன். என்ன செய்ய ? என்ன கொடுமை? நானும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் ? இதைத்தான் விதி என்பதோ ? யான் அறியேன் பராபரமே! என் ஒரு ஊழியர் உங்களுக்கு ஒரு கடிதம் என்று அந்த நேரம் கொண்டுவந்து தந்தார். அது அம்மாவின் கடிதம். ஒவ்வொரு முறையும் யாரோ ஒரு பெண் பற்றி, இப்ப கொஞ்ச நாளாக வரும். மகனே பார்த்து சொல்லு என்று. அத்துடன் ஒரு புலம்பலும் இருக்கும், எனக்கும் வயது போகிறது. இம்முறையானது சரி என்று சொல்லாயோ என்று ஒரு அதட்டலுடன். சரி அதை அவள் வரும் மட்டும் பார்ப்போம் என்று அதை திறந்தேன். என்ன ஆச்சரியம் அதற்குள் இருந்தது அவளின் இரு படங்களே! அவள் குடும்பத்தை பற்றிய சிறு குறிப்புடன், அவள் பல்கலைக்கழகம் முடித்து, இப்ப வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள் என்றும் அதில் இருந்தது. அது வாசித்து முடிய, அவளும், என் ஒரு ஊழியர் சகிதம் உள்ளே வர சரியாக இருந்தது. நான் விதியை, அதிர்ஷ்டத்தை நம்புபவன் அல்ல. என்றாலும் அவள் வருகையும், அம்மாவின் கடிதமும், அதில் அவளின் படமும் எனோ ஒன்றாக அமைந்து விட்டது. அவள் வந்து அமர்ந்ததும், என் ஊழியர் தன வேலைக்கு திரும்பிவிட்டார். நான் அமைதியாக அவளிடம் சிலகேள்விகளை கேட்டு, எம் வேலைகளைப் பற்றியும் அதில் அவளின் பங்கு பற்றியும் தெளிவு படுத்தினேன். அவளும் ஆவலாக கேட்டது மட்டும் அல்ல, பல கேள்விகளும் கேட்டு மேல் அதிகமாக அறிந்தாள். அது வரவேற்கத் தக்க ஒரு நடத்தையாக இருந்தது. பிறகு பணிமனையை சுற்றி காட்ட மற்றும் சக ஊழியர்களை அவளுக்கு அறிமுகப்படுத்த என் அணித்தலைவருடன் அனுப்பவேண்டியதே மிகுதி, என்றாலும் அதற்கு இடையில் சிறு ஓய்வு எடுத்து, அவளுக்கு காப்பி, பிஸ்கட் பகிர்ந்து நானும் அருந்தினேன். அந்த இடைவெளியில் அவளின் அம்மா அப்பா பற்றி, முன்னமே அம்மாவின் கடித்ததால் அறிந்து இருந்ததால், எதோ அவர்களை முன்னமே தெரிந்தது போல் சில கேள்விகள் கேட்டேன். அவள் திடுக்கிட்டே விட்டாள். அந்த நேரம் பார்த்து, அம்மாவின் கடிதத்தை எடுத்து, அவளின் படத்தை வெளியே எடுத்தேன். தன் படம் என்று அறிந்துவிட்டாள். நானும் விபரமாக அம்மாவின் கடிதத்தை கூறினேன். அவள் கண்களில் எங்கிருந்தோ ஒரு ஒளி பிரகாசித்தது. கூடவே நாணமும் அவளை கவ்வியதை கண்டேன். அது அவளின் சம்மதத்தின் அறிகுறி. இனி கட்டாயம் அவள் எனக்காக பிறந்தவளே! என் உள்ளம் எதோ ஒரு மகிழ்ச்சியில் திளைத்தது. அவளை பார்த்தேன், அவள் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது !! "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "அவளோடு என் நினைவுகள்…" "உன் நினைவு மழையாய் பொழிய என் விழியோரம் கண்ணீர் நனைக்க மென்மை இதயம் அன்பால் துடிக்க அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது " "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய மண்ணை விட்டு நானும் விலக மங்கள அரிசியும் கை மாறியதே!" நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவுபடுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை] வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன் நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்கவேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன் முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர் செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது. செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும், காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும். அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன். உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன். என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி அலசுவதிலேயே காலம் போய்விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலைசெய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது. தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது. மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள். நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும் பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால்,இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது. சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation) காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்லவேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சிலவேளை மதிய உணவும் கொண்டுவந்தாள். நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சிலவேளை உணவுவிடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள். "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில் தென்றலும் தீண்டியதே தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில் சிந்தனை மாறியதே சிந்தனை மாறிய வேளையில் மன்மதன் அம்புகள் பாய்ந்தனவே மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர் வாழிய வாழியவே!" எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும்படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும்கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது. அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13 சனிக் கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற, காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது. "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர கருங்கூந்தல் மேகம் போல் ஆட ஒட்டியிருந்த என் மனமும் உருக விழிகள் இரண்டும் அம்பு வீச மெல்லிய இடை கைகள் வருட கொஞ்சி பேசி இழுத்து அணைக்க கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம் தொட்டு என்னை வருத்தி சென்றது!" முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது, இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை. தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது. நாம் உடனடியாக எமது திட்டத்தை இடைநடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கிவிட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரசவிடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். அதன் பின் நான் வெளிநாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய்விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது. என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன் `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’ `நீ என்னைவிட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய்விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும்வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. "சத்தம் போடாதே" இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer] எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம் என் மனைவிதான் கேக்யை வடிவமைத்தார். ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று யாழ் குடா வடிவில், நடுவில் பனை மரம் அமைத்து, அதன் உச்சியில் மெழுகுதிரி வைக்கக் கூடியதாக நுட்பமான கைவண்ணத்துடன் அமைத்தார். அது முடிய ஜூலை 24 , ஞாயிறு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. நாம் நால்வரும் பிறந்த நாளுக்கான சோடனைகளும் மற்றும் ஏற்பாடுகளும் அதற்க்கு சற்று முன் தான் முடித்தோம். இறுதியாக, எல்லோரும் நித்திரைக்கு போகுமுன், ஒரு வலுவான காபி [strong coffee] குடித்துக்கொண்டு, இலங்கை ஆங்கில வானொலியில் பாடல் கேட்டோம். அது தான் எம்மை கொஞ்ச நேரத்தால் 'சத்தம் போடாதே!' என என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் மௌனமாகியது! ஆமாம், நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள். இப்ப நாம் இருப்பது முற்றும் முழுதான சிங்கள கிராமத்தில். அது என்ன புது விடுகதை என்று யோசிக்கிறீர்களா ?. இது விடுகதை அல்ல, அவசர செய்தியாக வானொலியின் அறிவித்தலே அந்த விடுகதை! 1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என அறிவித்தது தான் அந்த திடுக்கிடும் செய்தி. ஆனால் அதை தொடர்ந்து பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் மௌனமாக்கப் பட்டன என்பதும் அதன் உள் நோக்கமும் பின்பு தான் தெரிந்தது ஞாயிறு மாலை / இரவு தமிழருக்கு எதிரான வன் முறைகள் பெருவாரியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் ராஜரத்ன, அவரின் சகோதரர்கள் எம்மை எல்லா நேரமும் கவனித்த படியே இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு இருப்பது, அந்த கிராமத்தில் இருக்கும் காடையர்களுக்கும் இனவெறியாளருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தெரியக்கூடாது. அதற்கு ஒரே வழி ' சத்தம் போடாதே' . ஏன் என்றால் எமக்கு தெரிந்த மொழிகள் தமிழும் ஆங்கிலமும் தான்! நம் சத்தம் கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும் மற்றும் அன்று இரவு தான் பிறந்தநாள் கொண்டாடட்டம். கிராம மக்கள் பலர் வருவார்கள். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு பிடி கொடாமல் சமாளிக்கவும் வேண்டும். பாவம் ராஜரத்ன குடும்பம் . எந்த மன சோர்வும் இன்றி, தைரியமாக அவர்கள் இருந்ததை நாம் கட்டாயம் போற்றத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இப்ப, இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் கேக் வெட்ட வேண்டும். ஆனால் கேக் யாழ்குடா வடிவில், பனை மரத்துடன்! யார் இதை பார்த்தாலும் ஒரு சந்தேகம் வரக்கூடிய சூழ்நிலை. அது தான் அந்த சிக்கல்! சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு கூறிய காதல் மொழிகள் தான், என் மனைவியின் அழகு பற்றி எண்ணும் பொழுது வரும். அது எனோ எனக்கு தெரியாது. அதில் உள்ள தமிழின் சிறப்பாக கூட இருக்கலாம் அல்லது அதைவிட அவளின் அழகு மேன்மையாக இருக்கலாம் "மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே! காசு அறு விரையே! கரும்பே! தேனே! அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா? இசையே என்கோ? தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னைஒ-என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி, தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி," குற்றம் இல்லாத [24 கரட்?] பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா? ... எனக்கே என்றும் புரியவில்லை. ஆனால் அது இப்ப முக்கியம் இல்லை, ஆமாம் அவள் உடலில் மட்டும் அழகு அல்ல, அறிவிலும் அழகானவள். அது தான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவள் ஒருவாறு மெதுவாக கதைகள் சொல்லி, காரணம் நாம் சாதாரணமாக கதைப்பது தமிழில் தான். எனவே காதும் காதும் வைத்தாற் போல் பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களை நித்திரை ஆக்கிவிட்டார். கொண்டாடட்டம் முடியும் மட்டும் அவர்களும் 'சத்தம் போடாதே' தான்! அவர்கள் தூங்கிய கையோடு, தான் முன்பு வடிவமைத்த கேக்கை, கொஞ்சம் கண்டி நகரம் போல் வடிவை சரிப்படுத்தி, பனை மரத்தை கித்துள் மரமாக மாற்றி அமைத்து, ஓ! அதன் எழிலில் எழுத்தில் சொல்ல முடியாது. ராஜரத்ன கண்டி சிங்களவன் என்பதால், அது அவர்களுக்கும், ஏன் , கொண்டாட்டத்துக்கு வந்தவர்களுக்கும் உற்சாகமும் மகிழ்வும் கொடுத்தது. ஆனால் எம்மால் அதை நேரடியாக பார்த்து ரசிக்க முடியவில்லை ! , நானும் மனைவியும் பிள்ளைகளுக்கு எந்த சிறு சத்தமும் இடையூறும் வராதவாறு கண்ணும் கருத்துமாக , கொண்டாட்டம் முடியும் வரை இருந்தாலும், நாம் இருவரும் அருகில் அருகில் இருந்தது எமக்கு ஒரு சங்க பாடலையும் [அகநானுறு 136] நினைவூட்டி சென்றது. இவளை நன்கொடையாக வழங்கி [சத்தம் போடாதே என கட்டளையிட்டு ஒரு அறையில் இருட்டில் அடைத்து] , ஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள் இரவில் (இந்த பிறந்தநாள் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்.. ஒரே புழுக்கமா இருக்கு அவளுக்கு ! அவள் நெற்றி இப்படி வேர்க்குதே? கொஞ்சம் காற்று வரட்டும் என எண்ணி [ஒரு சாட்டாக அதை என் கையில் எடுத்து], அவள் அழகை பார்க்கும் ஆவலுடன், ஆடையை திறவாய் எனச் சொல்லி, ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை நான் கவர. அய்யோ [அலற முடியாது, 'சத்தம் போடாதே' தடுக்கிறதே என அவள் முழிக்க] உறையில் இருந்து உருவிய வாளைப் போல, அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். [பிள்ளைகள் ஒரு பக்கம், தூங்கி இருந்தாலும், இயல்பாக பெண்களில் எழும்] வெட்கப்பட்டாள் (ஒய்யாரம்?) ஏய், என்னை விடுடா -ன்னு இறைஞ்சுகிறாள் [ஆனால் சத்தம் வராமலே ?]; வண்டுகள் மொய்க்கும் … ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு; கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை, மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, மறைச்சிக்கிட்டு வெட்கப்படுகிறார் "தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், ‘ உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற ‘ என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென நாணினள் இறைஞ்சியோளே பேணி, பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே." 1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாளிகையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது எவ்வளவு தூரம் அரச நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் இந்த வன் முறையில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தம் போடாமல் சொல்லிக்கொண்டு இருந்தன! அது மட்டும் அல்ல, அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின. இவை 'சத்தம் போடாதே. என்ற ஒரு எச்சரிக்கையாக அரசு செய்து இருக்கலாம்? ஏன் இந்த கதை எழுதிக்கொண்டு இருக்கும் ஜுலே 2022 காலப் பகுதியிலும் கொழும்பில், காலி முக ஆர்ப்பாட்ட இளைஞர் குழுவினருக்கு 'சத்தம் போடாதே ' நிறைவேறிக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.! என் கதை வாசிப்பவர்களுக்கு என் ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த கதை பற்றி 'சத்தம் போடாதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Like
  12. "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" பகுதி 02 மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகமும் சிந்து வெளி நாகரிகமும் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது .அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத் தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழு ப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது . இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்ய, அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த, ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்! இச் சின்னஞ் சிறிய இலங்கை தீவு சில இனக் கலவரங்களைக் கண்டு மனித வளம், பொருளாதார வளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற் கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால் தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று இன்னும் அழைக்கப்படுகிறது. இது 37 / 38 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24 தொடக்கம் ஜூலை 30, 1983 வரை அரங்கேறியது. இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். நானும் என் குடும்பமும் உட்பட கப்பலில் யாழ் சென்றோம். இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது . ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? . இது போலவே இந்தியாவிற்குள் 1700 கி மு ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள், இங்கே வாழ்ந்த பழங்குடியினரை திட்டி, கேவலபடுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார். மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள், அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன என Dr ராதாகுமுத முகர்ஜி Phd " இந்து நாகரீகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலை கிழே தருகிறோம். "இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் [தமிழர்களை] கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்." மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான் , இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள் .அங்கு பரசுராமர் இல்லாததால் , அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர் . தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர் . அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும். என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது. ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாக எல்லோரும் அறிய விரும்புவது : *உண்மையில் என்ன நடந்தது ? *இது ஏன் நடந்தது ? *இதற்கு யார் பொறுப்பு ? *இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ? *நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ? இதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும் ,தனது திருக்குறள் 548 இல்: "எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்." என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார். இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !! *"உண்மைகளை வெளிபடுத்துவது " *"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது" *"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது " அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம் . அடுத்த பரம்பரைக்கும் இந்து சம வெளி மற்றும் மாயன் ? போல் தொடராமல் இருக்க . அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும் . இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "Crimes against humanity" Part 02 When we think about Crimes against humanity or genocide, in our past or ancient history , Both Mayan civilization and Indus valley civilization comes into our minds. The Mayan Civilisation thrived during 3000 BC & It reached improbable heights between 300 AD to 700 AD. The Spanish conquered Yucatan (1526-46) of Mayans with their guns. If you want to destroy a racial group , destroy their language. Similarly If you want to destroy the their language, destroy their books It is a indirect form of Genocide!! This is what Spanish done to mayans. This cruelty was done by Spanish Bishop "Diego de Landa" , whose initial assignment was to convert the Mayas to Catholicism after the Spanish conquest. We too encountered such situation in the name of Jaffna public library on the night of May 31, 1981. Over 95,000 unique and irreplaceable Tamil palm leaves (ola), manuscripts, parchments, books, magazines and newspapers, housed within an impressive building inspired by ancient Dravidian architecture, went up in flames like Mayan literature! & were destroyed during the burning that continued unchecked for two nights. The library was one of the largest in Asia. This event was one of the worst book burning events in the 20th century!! Again in 1983, the state- sponsored mobs, in a frenzy, obviously under the influence of alcohol , killed about 3000 people and property damages or loots worth over $300 million U.S. Tamils throughout the world, remember the victims of Black July ’83- 37 / 38 years ago, the state- sponsored pogrom against Tamils in Sri Lanka. The days between July 24 and July 30, 1983, were tragic, and unforgettable, for the Tamils. Even we were in Colombo at that time and had seen all atrocities by our own eyes. When you speak about Genocide, We immediately remember the names of Adolf Hitler & Benito Mussolini. Because they were directly killed over hundred thousands people. However history has many evidences who were more cruel than them. One of them was Spanish Bishop "Diego de Landa". On July 12, 1562, at the main square of the town of Maní, just outside the Franciscan church, Spanish Bishop "Diego de Landa" burnt several thousand objects / about 5000 'idols ' worshiped by the Maya and 27 precious folding books in Maya writing to destroy the Mayan language and culture. This one act deprived future generations of a huge body of Mayan literature in various subjects such as: their history, beliefs, astronomy, science, mathematics , cultivation . Also Many of the so-called idols were Maya sacred books. Only three survived the fires. Scholars consider the destruction of these sacred Maya texts among the most tragic losses of accumulated human knowledge in world history. This was done by a so called religious leaders !! Similarly, Sometime around 1700 BC, ancient Indigenous people of India were attacked and destroyed by invading barbaric tribes- Aryans who were a tribe of Indo-European- speaking, horse- riding nomads. The Rig-Veda, which contains over 1,000 hymns directed to the gods includes praises, blessings, sacrifices, and Curse Against their Enemies, also talk about their conquest of great cities. One such example from Rig veda is given below: "Destroy the fiend shaped like an owl or owlet, destroy him in the form of dog or cuckoo. Destroy him shaped as eagle or as vulture as with a stone, O Indra, crush the demon." [The Rig Veda/Mandala 7/Hymn 104] Let us consider Mahabharata or Vishnu purana as one more last example. Here We find Parasurama also known as the "axe-wielding Rama who is considered as the sixth incarnation of Lord Vishnu & The son of the forest- dwelling sage Jamadagni. The word Parasu means 'axe' in Sanskrit and therefore the name Parasuram means 'Ram with Axe'. One day when sage Jamadagni had away from home, King Kartaveeryarjuna came to the hermitage with his soldiers & and forcefully carried the special cow which served all the needs of the sage for his rituals. Soon Parasurama arrived, hearing what happened from his mother Renuka ,He rushed to Kartaviryarjuna and challenged him for a battle. Parasurama killed him & brought back the special cow home. Kartaveeryarjuna's sons got angry & came to the hermitage . As Parasurama was away, They took revenge for the killing of their father with the life of sage Jamadagni by chopping his head. Parasurama was deeply saddened to know about the killing of his father. He thought that the entire Kshatriya (royal or ruling class) community had become arrogant beyond limit. He took an oath that he would teach them a lesson. It is said that he went around and killed all the kings whom he could find. This he did to twenty one generations of kings. It is said that five rivers of blood started as a result from that place. He alone killed very much more people than combined total people killed by Mongolian king Genghis khan, Adolf Hitler, Joseph Stalin, Benito Amilcare Andrea Mussolini & Mao Zedong However, even after killing of twenty one generations of kings, Kshatriya community again started to grow with one king called mulakan of surya dynasty [Suryavam(n)sham or Solar Dynasty], who escaped from Parasurama as women hide him by surrounding him. He is 8th generation prior to Lord Rama of same Solar Dynasty. As such We can see that A racial group whose have intelligent, valour & power can not be completely destroyed at all . It will always come up again .However It is definitely a set back in the progress of the said racial group Because of this only , every one want know: *What did really happen? *Why did this happen?. *Who were responsible? *Who were supported/behind this atrocities /genocide *Whom to blame/corporate accountability for this human rights violations/International crime? Because of these,Even Valluar who born 2000 years before said in his famous Thirukkural 548: "A ruler inaccessible, un probing and unjust Will sink and be ruined" The king or the ruler who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace. What they ask is very simple. *"Bring the truth to all" *"Punish all culprit who involved directly or indirectly" *"Make this as an example for all" So that it would not continue/repeat further any more , any more generations such as Indus valley people, Mayans etc? It could also stop a serial killer like Parasurama from killing -generations by generations .Also we do not want to wait for another twenty one generations to welcome another Mulakan ,the Saviour ! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  13. "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட ,முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம். இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என கொன்று குவிப்பதோ , அழிப்பதோ மட்டும் அல்ல . அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி , பண்பாடு , பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும் , இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை, வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே! "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!" "விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!!" "கலை வளர்க்க தடை போட்டு அலை அலையாய் ஆமி போட்டு விலை பேசி சிலரை வாங்கி உலை வைக்கும் மந்தரை கெடுத்து சிலை சிலையாய் மக்களை மாற்றி இலை துளிராது வேரையே வெட்டி தலை நிமிரா நெருக்களை கொடுத்து கொலை செய்வது இனப் படுகொலை!!!" போர் குற்றங்கள், இனப்படுகொலைகள் , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவை உலக சமூகத்தில் மனித வரலாறு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும் அத்தகைய குற்றங்களைத் தண்டிப்பது அல்லது அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் வெளிவரத் தொடங்கின. இரண்டாவது உலகப் போரில் [1939–1945 ] ஜெர்மனியரும் ஜப்பானியரும் செய்த கொடுமைகள், குற்றங்கள் போன்றவை மக்கள் வெறுப்பை சம்பாத்தித்து அவைகளுக்கு எதிராக ஒரு பொது சீற்றம் அல்லது கொந்தளிப்பு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும். செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது. இதில், இராணுவத்தோடு சம்பந்தப்பட்ட வர்கள் இரண்டிலிருந்து இரண்டரை கோடியாகவும் (இதில் போருக்கு பின் பிடிபட்டு தண்டிக்கப்பட்ட இராணுவ வீரர்களும் அடங்குவர்) அப்பாவி பொதுமக்கள் நான்கிலிருந்து ஐந்து கோடியாகவும் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டது. போருக்கு பின் போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வியாதியால் 1.3 கோடியிலிருந்து இரண்டு கோடிவரை மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இனச் சுத்திகரிப்பு என்ற பெயரில் ஜெர்மனி நடத்திய 'யூத' இனப்படு கொலைகள் மட்டும் அறுபது லட்சத்திற்கு மேல் ஆகும். இந்தப் போருக்கு காரணமான பெரும்பாலானோர்கள் போரின் முடிவுக்குள்ளாகவே கொல்லப்பட்டு விட்டார்கள். அடால்ஃப் இட்லர் (Adolf Hitler) தற்கொலை செய்துக்கொண்டான். இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (Benito Amilcare Andrea Mussolini) அவன் மக்களாலே கொல்லப்பட்டான். ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகிக்கு பிறகு சரணடைந்தது. போர் முடிந்து போயிற்று. இதை அடுத்து பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அக்டோபர் 18, 1945-இல் 'சர்வதேச இராணுவ தீர்ப்பாயம்' [INTERNATIONAL MILITARY TRIBUNAL] தொடங்கப்பட்டது. 'அமைதிக்கு எதிரான செயல்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெற்றிருப்பது', 'அமைதியை குலைக்கும் செயல்களை வடிவமைத்தல், துவக்குதல் மற்றும் வழிநடத்தல்', 'போர் குற்றங்கள்' மற்றும் 'மனித குலத்திற்கு எதிரான குற்றம் செய்தல்' ஆகியவை குற்றச் சாட்டுகளாக அங்கு முன் வைக்கப்பட்டன. இன்று உலக முழுவதும் இது உருவாக்கிய இரண்டு பெரிய குற்றங்களை பரவலாக தொடர்ந்து கடை பிடிக்கப் படுகின்றன. ஒன்று 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' மற்றொன்று 'இனப்படுகொலை' ஆகும். இவை இரண்டும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் சுதந்திரத்தோடு வாழமுடியும். போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும் என்பதை அதிகமாக எல்லா நாடு களும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளும். உதாரணமாக ,போர் கைதிகளை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல் அல்லது கொடுமைப் படுத்துதல் ஒரு போர் குற்றம் ஆகும். அது போல, எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் [act of Perfidy] ஒரு போர் குற்றம் ஆகும். மேலும் ஒரு போர்க்கால சூழலில், சித்திரைவதை ,இனப்படு கொலை, பெரும் திரளான மக்களை தம் சொந்த இடங்களில் இருந்து துரத்தல், மற்றும் பல வழிகளில் அவர்களை துன்புறுத்துதல் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தல் ஒரு போர் குற்றம் ஆகும். எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் என்பதற்கு இன்றைய கால கட்டத்தில், மே மாதம் , 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற "வெள்ளைக் கொடி சம்பவத்தை" ஒரு உதாரணமாக கூறலாம். அதே போல,பண்டைய காவியத்திலும் (இதிகாசம்) ஒரு சம்பவத்தை கூறலாம். உதாரணமாக, கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை [துருபதனின் மகளான சிகண்டினி என்ற திருநங்கை] முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதே போல,துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். அதனால், துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர், தன் கையில் இருந்த போர்க்கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். அப்பொழுது துரோணரின் தலையை திருட்டத்துயும்னன் தன் வாளால் வெட்டினான். எங்கே கிருஷ்ணன்?, எங்கே தருமன்?, எங்கே தருமம்? அப்படியே, கர்ணனை பல சூழ்ச்சிகளால் கொன்றான் கிருஷ்ணன்! உதாரணமாக, எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட தன் தேர் சக்கரங்களை தூக்கி எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், கர்ணனை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். அதன் படி தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை, கர்ணன் மீண்டும் தூக்கி நிலைநிறுத்தும் நேரத்திற்குள், அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்!! தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை, இப்படி கிருஷ்ணன் விதிமுறைகளை மீறியுள்ளார். மகா பாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக படித்தவர்களும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் கிருஷ்ணர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போது தான் வதைக்கப்பட்டனர். இவை எல்லாம் பகவத் கீதையில் தர்மத்தை பாதுகாப்பதற்காக தான் அவதாரம் செய்தான், அதை ஒரு புறத்தில் தள்ளி வைக்க அல்ல என்ற கிருஷ்ணனின் கூற்றிற்கு, இது முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது. அத்துடன் வஞ்சனை மூலம் வெற்றி கொள்ளுதல், மகாபாரதத்திற்கு முன்பே பிராமண புராணங்களில் காணலாம். இங்கு ஆண்டவன் அடிக்கடி ஏமாற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி அரக்கர்களுடன் அல்லது அசுரர்களுடன் போரிட்ட கதைகளை காணலாம்? மனிதாபிமானத்திற்கு எதிரான அல்லது மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற பதம் முதல் முதலாக 1915 இல், பெரிய பிரித்தானியா [கிரேட் பிரிட்டன்], பிரான்ஸ் மற்றும் ரஷ்யா [Great Britain, France and Russia] , துருக்கிய அரசாங்கம் [Turkish government] , ஆர்மேனியர்களுக்கு [Armenians] எதிராக செய்த படுகொலையை கண்டிக்கும் பொழுது பாவிக்கப் பட்டது. போர் குற்றம் மாதிரி அல்லாமல், இது சமாதான காலத்திலும் போர் காலத்திலும் செய்ய முடியும். இந்த பதம் 1915 இல் இருந்து பாவிக்கப் பட்டாலும், உண்மையில் இரண்டாவது உலகப் போருக்கு பின் 1945 இல் தான் முதலாவது வழக்கு இந்த குற்றச் சாட்டின் கீழ் நடை பெற்றது. திட்டமிட்ட ரீதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களைக் கொல்கின்ற செயலானது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்பது தனிப்பட்ட மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாது, ஒரு சமுதாயத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படுவதாகும். வேறுவகையில் கூறினால், தனியொரு குழுவைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதையே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறிக்கின்றது. பொதுவாக இது, கொலை, முழுமையாக அழித்தொழித்தல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்கு முறைகள் மற்றும் பிற மனிதம் அற்ற செயற்பாடுகள் போன்றவற்றை குறிக்கும். ஆகவே, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படு கொலை ஆகிய இரண்டும் வேறுபட்ட இரு வேறு எண்ணக் கருக்களாகும். அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றத்தில் [ European Colonization of the Americas] அழித்து ஒழிக்கப் பட்ட கணக்கில் அடங்கா பெரு வாரியான உள்ளூர் குடிகள், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெரும் இன அழிப்பு [Holocaust], 1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படு கொலை கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்), நைஜீரிய உள்நாட்டுப் போர் [Nigerian Civil War], மற்றும் கம்போடியா இனப்படுகொலை (Cambodia Genocide) ஆகியன மிகப் பெரிய முதல் ஐந்து மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என இன்று கருதப் படுபவை ஆகும். இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)]என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல் வடிவம் கொடுத்தவராவார். இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவாக்கினார். ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும் அதாவது கிழே தரப்பட்டவைகளை, முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய,குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலை குறிக்கிறது . அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை * கொல்லுதல் *உடலிற்கு அல்லது மனதிற்கு கடும் தீங்கு ஏற்படுத்துதல் / விளைவித்தல். * வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல் *அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல் . *அந்த குழுவின் சீரார்களை கட்டாயப் படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல் . ஆகியவை இனப்படு கொலையாகும்! . இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்றும் நிகழவில்லை என்று பொருள் அல்ல . பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது . ஆனால் இனப்படுகொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல். அவ்வளவுதான் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் "Crimes against humanity" / Part 01 Genocide is generally happened during the war between two races / groups or When the war like situation existed between them or When they had completely different / opposite political / cultural opinions / views / beliefs or When one race become too strong in respect of authority / army / population and there by suppressed the minorities & their rights or When due to some / many reasons one racial group hate the other or combined with all. Hence when you think about genocide you also usually come across War crimes and Crimes against humanity. Let us now examine what is "Genocide" means. It is interesting to note that , the term "Genocide" does not only mean of killing or destroying a racial group by another in thousands , ten thousands or hundred thousands etc, It also means of restricting or destroying the identity of another racial group such as language, culture and traditions as well as peaceful livings & propagation of their future generations "War crimes, Genocide and Crimes against humanity" have been a problem throughout human history, although prosecution of such crimes only really emerged in the 20th century, thanks to general public outrage about crimes committed by German and Japanese forces during the Second World War. Most governments agree that any action which violates international conventions and agreements about warfare is a war crime. For example, abuse of prisoners of war is outlawed by the Geneva Convention, and therefore considered a war crime. Perfidy, the act of wilfully deceiving the enemy, is also a war crime. Crimes against humanity such as torture, genocide, mass deportation, and other acts of persecution are also considered war crimes when they occur during a period of war. In the context of war, Perfidy, an act of deliberate betrayal, is a form of deception in which one side promises to act in good faith with the intention of breaking that promise once the enemy is exposed. Perfidy constitutes a breach of the laws of war and so is a war crime! and is specifically prohibited under the 1977 Protocol I Additional to the Geneva Conventions of 12 August 1949. For example: In Srilanka, on or about 18 May 2009, at the end of Sri Lanka’s civil war. Even in epic, We find, Krishna regularly secures victory for the Pandavas side through purely devious means which stand in direct violation of dharma. Though Kunti advice to Krishna that : “Do whatever is good for them in whatever way you see fit, without hurting the Law (dharma) and without deception, enemy-tamer.”, instead of safeguarding the law, Krishna instructs the Pandavas to do precisely the opposite. “Casting aside virtue, ye sons of Pandu, adopt now some contrivance for gaining the victory.” This bold statement stands in sharp contrast to Krishna’s familiar statement in the Bhagavad Gita, where he asserts that he has been incarnated in order to safeguard dharma, not to cast it aside. How can a reader of the Mahabharata make sense of a God who encourages atrocious ethical misbehaviour among his followers? Some assumed that Krishna became a God at a relatively late stage in the development of the epic. When Arjuna had unlawfully cut off Bhurisravas’ arm, for instance, Bhurisravas rails against him, “Who indeed would commit such a crime who was not a friend of Krishna?” Here, Bhurisravas’ insight is unambiguous; as he understands it, deception and evil invariably characterize Krishna and afflict those associated with him. However, The mythology of trickery begins well before the time of the Mahabharata; in fact, as early as the Brahmanas, the gods employ deceptive manoeuvres quite often in their encounters with the demons. The phrase ‘crimes against humanity’ was first employed internationally in a 1915 declaration by the governments of Great Britain, France and Russia which condemned the Turkish government for the alleged massacres of Armenians as “crimes against humanity and civilization for which all the members of the Turkish Government will be held responsible together with its agents implicated in the massacres”, Unlike war crimes, crimes against humanity can be committed during peace or war. Despite this early use of the term, the first prosecutions for crimes against humanity took place after the Second World War in 1945. Crimes against humanity is defined as various inhumane acts, i.e .,… " murder, extermination, torture, enslavement, persecution on political, racial, religious or ethnic grounds, institutionalized discrimination, arbitrary deportation or forcible transfer of population, arbitrary imprisonment, rape, enforced prostitution and other inhuman acts committed in a systematic manner or on a large scale and instigated or directed by a Government or by any organization or group." However , Crimes against humanity and genocide are two distinct concepts. The basic difference between crimes against humanity and genocide is as follows: Crimes against humanity focuses on the systematic, mass killing of large numbers of individuals. Genocide has a different focus. Genocide focuses not on the killing of individuals, but on the destruction of groups. The 5 Biggest Ever Crimes against Humanity are ; Cambodian Genocide: 2.5 million dead , Nigerian Civil War: 3 million dead ,Holodomor: 7.5 million dead ,Holocaust: 17 million dead and European Colonization of the Americas: Up to 100 million dead. The term "genocide" did not exist before 1944. A Polish-Jewish lawyer named Raphael Lemkin (1900-1959) first proposed the word "genocide" by combining geno-, from the Greek word for race or tribe, with -cide, from the Latin word for killing. Hence "genocide” is an International crime. Genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: * Killing members of the group; * Causing serious bodily or mental harm to members of the group; * Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part; * Imposing measures intended to prevent births within the group; * Forcibly transferring children of the group to another group. This does not mean that there were no genocide before 1944. There were so many evidences in our ancient history ,epics, puranas as well as other religious texts regarding commitment of genocide, though the term genocide is not directly used. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part 02 will follow.
  14. "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில்" "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில் ஓட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன் காட்டின் நடுவே கேம்ப் போட்டு காட்டாத வாழ்வை கனவு கண்டேன்" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது பாட்டா சொல்லி தேவதை வந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டி கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு வானத்தில் இருந்து கூட்டி வந்து இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க முட்டி மோதி நிமிர்ந்து நடந்து பொட்டக் குட்டி பாட்டி பெயரில் லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது" "கட்டு மரமாக வாழ்வில் மிதந்து ஆட்டி படைத்த நினைவுகளை எறிந்து குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து எட்டு திக்கும் துள்ளி குதித்தேன்" "ஊட்டி வளர்த்த அறிவு எல்லாம் வெட்டி எடுத்த அனுபவம் எல்லாம் போட்டி போட்டு மோதிப் பாரென சிட்டுக் குருவி சிறகு அடிக்குது" "ஒட்டி உடையில் அழகு காட்டி சட்டம் போட்டு திமிரு காட்டி பாட்டு படித்து இனிமை காட்டி புட்டி பாலூட்ட மடியில் உறங்குது" "எட்டி உதைத்து செல்லம் காட்டி கட்டி அனைத்து இன்பம் காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தொட்டில் ஆட்ட நொடியில் உறங்குது" "நட்சத்திரம் மறைய கதிரவன் எழ கூட்டம் சேர ஆரவாரம் எழ சொட்டை தலையில் சூடு எழ வெட்கம் கொண்டு கனவும் பறந்தது" "தட்டி தடவி வெளியே வந்து மீட்டு எழுந்து வீடு போய் கூட்டி குழைத்து சுவைத்த கனவை காட்சி படுத்தி தினமும் மீட்டேன்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 02] [பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / பேராதனை, இலங்கை ] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும் இணைந்த கைகளாய், நம்மையும் உலகத்தையும் அறிந்தோம்" "கொஞ்ச ஆண்டு உருள, நண்பர்களை நினைத்தேன் நெஞ்சு நனைய, கண்கள் கண்ணீர் சிந்தின விஞ்சும் வேகத்தில், ஓயாத பலரின் வாழ்வு குஞ்சும் கோழியுமாய், ஊர் உலகம் சுற்றின" "பற்பல ஆண்டுகளின் பின், மீண்டும் கூடுகிறோம் உற்சாகமாக அன்று விட்டுச்சென்ற, அதே இடத்தில் அற்புதமான மகிழ்ச்சியையும், தொலைத்த கிண்டலையும் உற்ற நண்பர்களையும், இதயத்தில் மீண்டும் சிறைபிடிக்க" "அன்று கழித்த நேரம், இன்னும் இதயத்தில் பசுமையாக இன்றும் என் நெஞ்சில், அந்த கிசுகிசுப்பும் கேலியும் குன்று குன்றாய் மரத்தில் வளரும், இலைகளின் கொத்தாய் சான்றாய் நின்றன, அந்த நினைவுகள் என்றும்" "சந்திக்கிறோம் மீண்டும், மனதில் இன்பம் பொங்குது சிந்திக்கிறோம் இளைஞராக, உடலில் துடிப்பு பிறக்குது நிந்தனை செய்கிறது, இன்றைய கவலை கடமை வாழ்வை வந்தனை செய்து, அன்றைய நினைவை மனதில் பதிக்குது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "Memories of university life" [Poem - 02] [published in a memorial magazine / Peradeniya, Sri Lanka] "We sought enjoyment, we inflicted sarcasm One thousand songs fill our souls The withered heart flowers again, and Dances at the thought of getting together" "With fear and trepidation we made it through Year One We lifted ourselves to meet Challenges in Year Two We boldly set forth in Year Three To blossom with mature knowledge in Year Four" "Lots of study between some love and fun Less and less play with exams nearly begun The mind was numb as the learning came to an end The curtain came down as the passing time flew" "University life faded in our minds The good stayed with us, the bad did not Neither ethnic divide nor prejudice tainted us We learned of ourselves and of the world" "As years rolled, I remembered old friends Teared at the thought of past good times Faced the never-ending battles of life As families and friends moved far and wide" "Fifty years on, we gather again In the place we left behind to conquer the world To rediscover old joys and laughter among old friends And to refresh our hearts and our souls" "The time we spent together is still fresh in the heart. All the gossip, all those jokes, remembered still. Like the leaves crowding a tree The memories will always stay with me" "Everything is fresh in our minds as we meet again. Let's laugh, play and rejoice as of old. E’en with life’s many commitments and countless cares Etched in our hearts, those cherished moments will forever stay" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
      • 1
      • Like
  16. "பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 01] [உயிர் எழுத்துக்கள் வரிசையில் / பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / மெல்பேர்ண், ஆஸ்திரேலியா] "அறிவிற்கு பத்தொன்பதில் ஒன்று கூடினோம், அறுபது ஆயிரம் கனவு கண்டோம், ஆறு பாயும் பேராதனை வளாகத்தில், ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டோம்!" "இறுமாப்பு இல்லை வேற்றுமை இல்லை, இதயங்கள் கலந்து கூடிக் குலாவினோம், ஈரம் சொட்டும் மலை அடிவாரத்தில், ஈசனைக் கண்டு பரவசம் அடைந்தோம்!" "உலகத்தை கட்ட பொறியியல் படித்தோம், உண்மையை உணர்ந்து நட்பை வளர்த்தோம், ஊருக்கு ஊர் ஊர்வலம் போனோம், ஊசி முனையிலும் நடனம் ஆடினோம்!" "எறும்புகள் போல் சுமை தாங்கினோம், எண்ணங்கள் வளர்த்து அறிவை கூட்டினோம், ஏற்றம் இறக்கம் எம்மை வாட்டவில்லை, ஏழை பணக்காரன் எம்மிடம் இல்லை!" "ஐயம் அற்ற வாலிப பருவம், ஐயனார் கோயிலிலும் கும்மாளம் அடித்தோம், ஒருவராய் இருவராய் மூவராய் திரிந்தோம், ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்தோம்!" "ஓடும் உலகில் நாமும் ஓடினோம், ஓரமாய் இன்று நினைவில் ஒதுங்கினோம் ஒளவையார் கண்ட நட்பின் மகிமையை, ஒளதடமாய் என்றும் நிலை நாட்டுவோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "Memories of university life" [Poem - 01] [published in a memorial magazine / Melbourne, Australia] "When we were nineteen, We came together, With sixty thousand dreams, Amid the flowing river in Peradeniya campus, Settled with a peaceful mind, and a joyous heart" "With neither vanity nor difference, We grew friendship by mingling hearts, In the Foot of the hill where the water falls, Felt ecstatic in seeking the grace of god!" "We studied Engineering to build the world, We nurtured friendship by understanding truth in all forms, We marched from town to town and Even danced at the top of a pin!" "We carried weight on our shoulders like ants, We widened our thoughts and Increased our knowledge, Ups & Downs never worried us. Poverty or Affluence never within us!" "We were young, fearless & outgoing, Even in temples we enjoyed & romped, We wandered as one, two & three, And reached out promptly to help one another!" "In this moving world, We too have moved along, Today We have paused and remembering the past, The friendship Avvaiyar proclaimed as noble We will continually keep it till we die!" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
      • 1
      • Like
  17. உங்கள் வாழ்த்தும் நன்றிகளும் மேலும் ஆய்வு செய்து தமிழர் வாழ்வில் தொடர்பு உள்ளவற்றை அலசி எழுதத் தூண்டும் நன்றிகள் இருவருக்கும்
  18. அப்படி ஒன்றும் இல்லை, அந்தந்த நேரத்தில், என்னென்ன மனதில் தோன்றுகிறதோ, அவை அவை, என் கிறுக்கிய பதிவில் வரும். அவ்வளவுதான் நன்றி உங்க கருத்துக்கு "போலிச்சாமி வண்டியில் போகிறார்" ....................................................................... "திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் அள்ளி தூவி திருநங்கை ஒன்றை தேடுறான்" "குருவி சாஸ்திரம் கூறி குருட்டு நம்பிக்கை வளர்த்து குருவாய் தன்னை நினைத்து குருதி கொதிக்க குழைகிறான்" "அருள் வேண்டி பத்தினி அருகில் நெருங்கி வந்தால் அருமை பெருமை பேசி அருந்ததி காட்ட நிற்கிறான்" "உருண்டு போகுது வண்டி உருவம் மெல்ல தெரியுது உருவந்து ஆடிய வேலன் உருக்குலைய அதில் இருக்கிறான்" "சுருட்டு வாயில் கொதிக்க சுருக்கி ஆடை உடுத்து சுருதி விலகாது மீட்க சுருண்டு வேலன் படுக்கிறான்" "கருமம் வாழ்வில் ஒழிய கருணை மழை வேண்டி கருப்பு சாமி ஆடியவன் கருவிழி மார்பில் சாய்கிறான்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல்ல; அவர் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தார். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும் நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின் நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான். குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும் சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான். ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்? மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும் 'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான். சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்! ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்! புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும் தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர். "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும், அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும் இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது. ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින් පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා දහවල පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා මදකින් පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ ?' குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன் இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்? தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே இதயம் அலைந்து உன்னைத் தேடுதே! கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது. "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & வலிமை கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. "காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனித்துவமான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். அந்த சுகத்தில் நான் மெளனமாக போய்விடுவேன், ஒரு வார்த்தை கூடப் வாயில் வராது. என் உதடுகளினால் உன்னை முத்தமிட முடியாதலால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுகிறேன், உன்னை வார்த்தைகளால் அலங்கரிக்கிறேன். நான் கவிதை கூட இப்ப எழுதுகிறேன்! நான் என் பல்கலைக்கழக படிப்பை அடுத்த கிழமை பேராதனையில் ஆரம்பிக்கிறேன். இனி உன்னை, பாடசாலைக்கு போகும் பொழுது பார்க்கும் சந்தர்ப்பம் அற்றுப் போகப்போகிறது. அது என்னை வாட்டுகிறது. அது தான் என் உள்ளத்தின் கிளர்ச்சியை, இதுவரை சொல்லாத காதலை, ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு பார்வையிலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, இனிமையான நினைவுகளைத் தூண்டிய அந்த முகத்திடம் எழுதுகிறேன்! பதிலை, என் பெயருடன், முதலாம் ஆண்டு, பொறியியல் பீடத்திற்கு அனுப்பலாம் பிரியமானவளே உனக்காக காத்திருப்பேன்!" அவள் என் பாடசாலையிலேயே, நாவலர் வீதியில் அமைந்த, முன்றலில் மாமரங்கள் செழித்து அழகு பொழிந்த, யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலேயே படித்தாள் அவள் உயர்தர வகுப்பு முதலாம் ஆண்டு மாணவி. இம்முறை நான் மட்டுமே பொறியியல் பீடத்துக்கு அங்கிருந்து தெரிவாகி உள்ளேன், மொத்தமாக பத்துக்கு அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளோம். எம்மை கௌரவித்து பாடசாலையில் நடந்த நிகழ்வுக்கு சாதாரண மற்றும் உயர் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அவள் முன் வரிசையில் தன் தங்கையுடன் இருந்தாள். தங்கை சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவி என்பதை பின்பு தான் அறிந்தேன். என் கண்கள் சந்தர்ப்பம் வரும்பொழுது எல்லாம் மேடையில் இருந்து அவளையே பார்த்தது, இனி எப்ப இவளை பார்ப்பேனென ஏங்கியது! “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத் திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப் படைத்தனன் நல்கமலத் தோனே! ” இங்கே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று என் முன் இருக்கும் உயிருள்ள இப்பெண்ணின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் கம்பனின் மகன் அம்பிகாபதியின் பாடல் கட்டாயம் இவளுக்கு பொருந்தும். இவளைப் படைத்தவன் பிரம்மனாய் ஒருவேளை இருந்தால், நிச்சயம் இவளை உருவாக்குவதற்கு முன் ஒரு மாதிரிக்காக திருமகளை உருவாக்கிய பின் தான் அவளிடம் இருக்கும் குறைகளைச் சரிசெய்து விட்டு இவளை உருவாக்கி இருப்பான் என்பது மட்டும் நிச்சியம்! உனக்கு மட்டும் ஏன் இத்தனை அழகு! என்று நான் ஆச்சரியமாக மீண்டும் மீண்டும் அவளை பார்க்கும் பொழுது தான் அவளின் தங்கையும் வந்து அவள் அருகில் இருந்தாள். நீ இருக்கும் இடமெல்லாம் உன் அழகை அள்ளித் தெளித்து விடுகிறாய் போலும், அதனால் தான் உன் தங்கையும் அழகாவே காட்சியளிக்கிறாளே, என்றாலும் அவளின் முகத்தில் இன்னும் சிறுபிள்ளைத்தனமும் அப்பாவித்தனமும் குடிகொண்டு அக்காவில் இருந்து வேறுபடுத்தி காட்டியது. சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவ மாணவிகளின் சார்பாக அவளின் தங்கையே வாழ்த்துமடல் வாசிக்க வந்தார். அப்ப தான் அவளின் பெயரை இழையினி என்று அறிந்தேன். என்னவளின் பெயரோ பூங்குழலி. "பொன்காட்டும் நிறம்காட்டிப் பூக்காட்டும் விழிகாட்டிப் பண்காட்டும் மொழிகாட்டிப் பையவே நடைகாட்டி மின்காட்டும் இடைகாட்டி நன் பாட்டில் வாழ்த்து கூறினாள்!" உண்மையில் அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அவள், மேடையில் இருந்த எங்களுக்கு கை கொடுத்து, தனிப்பட்ட வாழ்த்தும் கூறினாள். நான் பூங்குழலிக்கு எழுதிய கடிதம் இன்னும் என் கால்சட்டை பாக்கெட்டில் இருந்தது, மெல்ல அதை எடுத்து, அவள் எனக்கு கை கொடுக்கும் பொழுது, அதை அவள் கையில் திணித்து, அக்காவிடம் கொடு என்று மெல்லிய குரலில் கூறினேன். அவளுக்கு அது கேட்டு இருக்கும் என்றுதான் அந்தநேரம் நம்பினேன். அவள் மீண்டும் பூங்குழலியின் பக்கத்தில் போய் இருந்தாள். ஆனால் அந்த கடிதத்தை எனோ கொடுக்கவில்லை, அதை மெல்ல தனது பாடசாலை சீருடையின் பாக்கெட்டில் வைப்பதை மட்டும் கண்டேன். ஒருவேளை பின் தனிய பூங்குழலியுடன் வீடு திரும்பும் பொழுது கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதன் பின் நான் பூங்குழலியை காணவில்லை. நானும் பேராதனை புறப்பட்டு விட்டேன். நான் பேராதனை போய் ஒரு மாதம் ஆகிவிட்டது . இன்னும் ஒரு பதிலும் பூங்குழலியில் இருந்து வரவில்லை. என்றாலும் அவள் இன்னும் என் நெஞ்சில் இருந்து மறையவில்லை. பூங்குழலி என்ற பெயருக்கு ஏற்றவாறு அவள் கூந்தலில் ஒரு ரோசா பூ அன்று, நான் பார்த்த அந்த கடைசி நாளில் அழகு பெற்று இருந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந் தெடுத்த தோள்களை முத்தமிட்டு கொண்டு இருந்தது. அளவோடு பொன் நகைகள் அவள் அணிந்து கொண்டிருந்தாள். அவை அவளுடைய மேனியில் பட்டதனாலோ என்னவோ அவையும் அழகு பெற்றிருந்தன. அழகே ஒரு வடிவமாகி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்? அப்படித்தான் பூங்குழலி அன்று இருந்தாள். அது தான் அவளை இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன் நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?' எனக்கு அதன் தாக்கத்தை வர்ணிக்க முடியாது. ஆனால் அது அவளின் முடிவானால், நான் ஒன்றும் செய்யமுடியாது. நான் அடுத்தநாள், பெப்ரவரி 14 ஆம் திகதி, வகுப்புக்கு போகமுன்பு, ஒரு நற்பாசையில் அன்றும் தபால் ஏதாவது வந்திருக்கா என்று மீண்டும் பார்த்தேன். கொஞ்சம் கனமாக, ஆனால் அனுப்பியவர் விபரம் வெளியே குறிப்பிடாமல் எனக்கு வந்திருந்தது. நண்பர்கள் பலர் அங்கு நின்றதால், அதை உடன் திறந்து பார்க்கவில்லை. மனது எனோ மகிழ்வாக இருந்தது, 'ஹாப்பி வேலன்டைன் டே' என யாரோ யாருக்கோ சொல்லுவது காதில் கேட்டது. என்றாலும் மதிய உணவு இடைவெளியில் என் அறையில் போய் அவசரம் அவசரமாக திறந்தேன். அனுப்பியவர் பெயரை பார்த்தவுடன் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாகத் தான் வந்தது . அது உங்கள் செல்ல நண்பி இழையினி என்று இருந்தது. என்றாலும் அந்த மடலை வாசிக்க தொடங்கினேன் "அன்புள்ள அதிசயமே, என் அன்பே , அன்று நீங்கள் என் கையில் திணித்த அன்புக் கடிதம், அதில் உங்கள் உள்ளங்கை வேர்வையின் நறுமணம் என்னை என்னென்னவோ செய்துவிட்டது. நீங்கள் அப்பொழுது எதோ சொன்னது கூட காதில் விழவில்லை, மன்னிக்கவும்! வரிகள் தொடுத்தல்ல, என் சுவாசம் தொடுத்து, சுவாசம் சுமக்கும் நேசம் தொடுத்து, நேசம் நெய்த உன் பாசம் தொடுத்து, இதழ் வாசம் தேடும் என் காதல் தேசம் தொடுத்து, எத்தனையோ தடவை வாசித்துவிட்டேன்! அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !!, உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது. உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது. நீ என்னை வயப்படுத்தி விட்டாய்,எனவே எனது சுய விருப்பத்தில் நீ கேட்ட பதிலைத் தருகிறேன். காத்து வைத்ததுக்கு மன்னிக்கவும் என் இதயத்திற்கினிய காதலனே. காதலர் தினத்தில் என் பதில் உன்னை அடைய வேண்டும் என்பதால் அன்பே சுணங்கிவிட்டது. நீ என்னை மயக்கி விட்டாய், எனவே எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்! நீயே என் என் மதிப்புள்ள காதற் கண்மணி, அதில் இனி மாற்றம் இல்லை, - அன்புடன், உங்கள் இழை" நான் அழுவதா சிரிப்பதா எனக்குப் புரியவே இல்லை. அவள் இவ்வளத்துக்கு என்னை நம்பிவிட்டாள். இல்லை நான் தந்த கடிதம் பூங்குழலிக்கு கொடுக்கவே என்று சொன்னால், அவள் ஒரு மாதமாய் என்னென்னவோ கற்பனையில் மிதந்து காத்திருந்தவள், எப்படி அதை ஏற்பாளோ? எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை , நான் விரும்பியவளை விட, என்னை விரும்பியவள் எப்பவும் நல்லதே! இப்ப என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்களாக ஆகிற்று, ஒருத்தி, இழையினி என் தவறான கடிதத்தால், என்னை மிகவும் விரும்புகிறவள். மற்றொருத்தி, பூங்குழலி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள், அவளுக்கு இன்னும் என் காதல் தெரியாது. இருவருமே நல்ல அழகு, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல, வித்தியாசம் வயது மட்டுமே. கையில் இருக்கும் பறவையை கண்கள் தேடும் பறவையை நம்பி கைவிடலாமா ? அது தான் இப்ப எனக்குத் தடுமாற்றம்? "உறங்கிக் கிடந்த மனது ஒன்று உறக்கம் இன்றி தவிப்பது ஏனோ? உறவு கேட்ட காதல் கடிதம் கை மாறிப் போனது ஏனோ?" "கண்கள் மூடி கனவு கண்டால் பூங்குழலி அருகில் வருவது ஏனோ? கருத்த கூந்தல் காற்றில் ஆட இழையினி மடல் வரைந்தது ஏனோ?" "காற்றில் இதயத்தில் குரல் கேட்க காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ? காதல் மொழியில் வாழ்த்து அனுப்பி காதலர்தினத்தில் தடுமாற்றம் தருவது ஏனோ?" "காந்தி மடியில் சரணம் அடைந்தேன் காரணம் கூறி விடை கேட்டேன்? காமம் துறந்த முனிவன் அவன் தேடி வந்தவளை தேற்று என்றான்!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" எப்படி முதலாவது சமயம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகியபோது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. இயற்கை அனர்த்தங்களுக்கு எதிரான பயம் தான் சமயத்தை உருவாக்கியிருக்கும். மேலும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம். ஆகவே முதலாவது தெய்வம் அதிகமாக பெண் தெய்வமாகவே இருந்திருக்கும். சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறியுள்ளார். என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உரு வானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப் படுகின்றது. நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன? ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடைய வர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்த வர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார் இக்காலப் பகுதியில் வாழ்ந்த திரு மூலர். இவரே சைவ சித்தாந்தத்தின் சாரம் என்று கருதப் படும் திருமந்திரம் என்னும் நூல் தந்தவர் ஆவார். இந்த நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் செய்யுள் வரி -1421 யில் காணப்படுகிறது. என்னினும் நாம் தமிழரின் வரலாற்றை, அவனின் தோற்றுவாயை சரியாக அறிவோமாயின் இந்த பெருமை பெற்ற தமிழரின் சமயத்தையும் அதனின் தோற்றுவாயையும் கூட நாம் அறியலாம். ஸ்பென்சர் வெல்ஸ் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்" என அழைக்கப்படும் M 20 மக்கள், மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக தென் இந்தியா வந்ததாக அறியமுடிகிறது. மேலும் பல சான்றுகள் சுமேரியர், சிந்து வெளி மக்கள் திராவிடர்கள் என்றும் அவர்கள் பேசியது பழந் தமிழ் என்றும் சுடிக்காட்டுகிறது. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" என்ற எனது மிக நீண்ட தொடர் கட்டுரையில் விபரமாக ஆராயப்பட்டுள்ளது. ஆகவே தமிழரின் சமயம், சுமேரியாவுடனும் சிந்து சம வெளியுடனும் அதிகமாக தொடர்பு கொண்டதாக இருக்கலாம்? உலகின் முதலாவது நாகரிகத்தை அமைத்த சுமேரியர்களுக்கு, பல மர்மமான இயற்கை நிகழ்வுகளிற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் அல்லது விளக்கம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்று இருக்கவில்லை. ஆகவே அவர்கள் இயற்கை சக்திகளை உயிருள்ள ஒன்று என முடிவு எடுத்து, அந்த இயற்கை சக்திகளை கடவுளாக வழிபட தொடங்கினார்கள். இதனால், இயற்கை வழிபாடே அவர்களின் சமயத்தின் மூலமாக இருந்தது. இயற்கை சக்திகளை அப்படியே சக்திகளாகவே அவர்கள் முதலில் வழிபட்டார்கள். எப்படியாயினும், நாளடைவில் காலம் செல்லச் செல்ல மனித உருவம் இந்த சக்திகளுடன் இணைக்கப்பட்டன. இந்த மனித உருவ கடவுள், இயற்கை சக்திகளை கட்டுப்படுத்துவதாக அவர்கள் சிந்திக்க தொடங்கினார்கள். அவர்களின் உலகம் முழுவது ஆண் - பெண் கடவுள்கள் பல பல நிரம்பின. ஏண் உடு அன்னா [En-hedu-ana] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய ஈனன்னை சீர்பியத்தில் [The Exalatations of In-Anna] முதல் பாடலின், "நின் மெய் சர்ர ஒள் தெள்ளயிய [nin-me-sar-ra u-dalla-e-a ]" என்ற முதல் வரியே இன்றளவு சைவத்தின் ஓர் கூறாக இருக்கும் மெய்ஞானத்தை விளம்புகின்றது என்கிறார் முனைவர் கி.லோகநாதன், இதன் கருத்து,சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள் [Lady of all the me's[divine powers], resplendent light] ஆகும். மேலும் சங்க கால தமிழர்கள் கூட முதலில் இயற்கையையே வழி பட்டார்கள். கன்னி மகளிர் தொழும்படி செவ்வானத்தில் திடீரென்று தோன்றிய பிறைச் சந்திரன் என்று குறுந்தொகை - 307 விளக்குகிறது. மேலும் சுமேரியர்கள், தாம் பூமியில் பிறந்தது, கடவுளுக்கு பணி புரியவும் கடவுளை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என கருதினர். கி.பி ஏழாம் நூற்றாண்டு, திருநாவுக்கரசு நாயனாரும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று கூறுகிறார். நாம் ஒவ்வொரு முறையும் வானை நோக்கும் போது, நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது போன்ற பல கேள்விகளுடனும் வியப்புடனும் நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு தமது பதிலாக உலகின் முதலாவது படைத்தல் கதைகளை சுமேரியன் எமக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தந்துள்ளார்கள். மனிதன் உட்பட எல்லாமும் தெய்வீக சக்திகளால் படைக்கப் பட்டவையே என்பது சுமேரியர்களின் நம்பிக்கை. இதற்கு மாறாக, மூத்த சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில், உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக "நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பை போல ஒன்றை இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கூறுயிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது (தொல். மரபியல் 1589). சுமேரிய கடவுள் வெறுமனே மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அத்துடன் அவரின் கருணையை உறுதி செய்ய, தமது கூடிய நேரங்களை வழிபாட்டிற்கும், பிரார்த்தணைக்கும், தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தலுக்கும் ஒதிக்கினார்கள். சுமேரியர்களின் ஆலயம் சிகுரத் [ziggurat] என அழைக்கப்பட்டது. இது குன்று மாதிரி உயரமாக எழுப்பப்பட்டன. சுமேரியாவில் மலைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம், தமிழரின் செல்வாக்கு நிறைந்த புகழ் பெற்ற தெய்வம், முருகன் கூட மலையில் வாழ்வதாகவும்,மக்கள் தமது நோயை, குறைகளை போக்க அவருக்கு காணிக்கை, படையல் செய்வதாக, ஐங்குறுநூறு 243, அகநானூறு 22, போன்ற பாடல்கள் கூறுகிறது. ஆரம்பத்தில் முருகன் உருவமில்லாத மலை கடவுளாக இருந்ததுடன் அவரை ஆவியாகவே / சத்தியாகவே வழி பட்டார்கள். உதாரணமாக குலக் குழுக்களின் பூசாரியாகவும் மந்திரவாதியாகவும் கடமையாற்றும் வேலன் என்ற ஒருவன், பேயோ அணங்கோ தெய்வமோ ஒருவரில் ஆவேசிக்கும் போது, அங்கு வந்து வேலேந்தி வெறியாட்டு ஆடி அதை ஓட்டுகிறான். அவன் உடலில் முருகு என்னும் தெய்வம் ஆவியாக சன்னதமாகி குலங்களுக்கு நற்செய்தி சொல்கிறது என சங்கப்பாடல் வர்ணிக்கிறது. பின் மரத்திலும் கல்லிலும், இறுதியாக மனித வடிவத்திலும் வழிபட்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில், குறிப்பாக ஹரப்பா, மொகெஞ்சதாரோ நகரங்களில் இவர் 5000 வருடங்களுக்கு முன்பே "ஆமுவான்" என்ற மரக் கடவுளாக வழிபடப்பட்டுள்ளார். இயற்கை வழிபாட்டின் படி, சேயோன் → முருகன் → குறிஞ்சிக் கடவுள் அல்லது குறிஞ்சி நிலத் தலைவன் ஆனான்! எனினும் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல் காப்பியத்தில் காணமுடியவில்லை. எனினும் சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. என்றாலும் இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு. சக்தி வழிபாடு, சிவ (பசுபதி) வழிபாடு முதலியன 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞரின் துணி வாகும். சிந்து வெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை முக்கியத்துவத்தின் படி முறைப்படுத்திய மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்த படியாக மும்முகமுடைய கடவுளையும், மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக் கூறியுள்ளார். பெண் தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழி முறை நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர் காட்டும் உண்மையாகும். அங்கு அன்னைத் தெய்வமே முழுமுதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம் .பண்டைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் பொதுவாக தந்திர முறை பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறு பட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வு களையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறையாகும். அதாவது மனதும் உடலும் ஒன்று பட்டு இயங்குவதே தந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித்தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழிபாட்டு முறை ஆகும். ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும் திரவிடரே. ஆரியர் வடநாட்டுப் பழங்குடி மக்களொடு போரிட்டு நாடு கைப்பற்றியதாக வேதத்திற் கூறப்பட்டிருக்கிறது. காலப்போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→ பார்வதி / துர்க்கை ஆனாள்!உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். கி. பி. நாலாவது,அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர், தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற் கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர். பழந் தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக, சிவனுடைய சக்தியாக உருமாறியது. பல தமிழ் இலக்கியங்கள் முருகனை தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டு கின்றன. "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி" என்றும் பாடுகின்றது. சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப் படும்பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம். சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த, தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்தது இருந்தார்கள். உதாரணமாக உயிர், உடம்பு பற்றிய கோட்பாடுகள், ஊழ் - விதியின் வலிமை, ஒரு புனிதமான நோக்கத்திற்காக மரணிப்பது போன்றவைகளாகும். பல வகைப்பாடான கடவுள் தன்மையை [இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள நேர்ந்தாலும், தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது, அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்கு கிறார்கள். மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார். சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன வெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’என்று வினவுகிறார். பொதுவாக தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ என்பர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது. சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று இன்று கூறுவரோ?!யாம் அறியோம் பரா பரமே!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. "கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் குறிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாக தெரியவில்லை. என்றாலும் கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால், அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை. மேலும் கிறிஸ்மஸ் மரத்தின் [Christmas tree] தோற்றம் பற்றி அல்லது கிருஸ்மஸ் தாத்தா [Santa Claus] பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? நீங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] உங்கள் காலுறைகளைத் [stockings] தொங்க விடுங்கள் என உங்க பெற்றோர்கள் உங்களிடம் கூறி இருக்கலாம்? அடுத்த நாள் நீங்க எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மட்டும் அல்ல நீங்கள் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் மேலும் பல வர்ண உறையால் சுற்றப்பட்ட பெரிய பரிசு பொருட்களை கண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் கிருஸ்மஸ் தாத்தா இரவில் புகைபோக்கி [chimney] வழியே கீழே வந்து பரிசு தந்தார் என கூறி இருப்பார்கள். நீங்கள் என்றாவது இதைப்பற்றி சிந்தித்து கேள்வி கேட்டீர்களா? நாங்கள் பொதுவாக பழக்கவழக்கங்கள் நிறைந்த உலகில் தான் பிறந்தோம், வாழ்கிறோம். நாங்கள் அவைகளை பொதுவாக சிறுவயதில் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாம் வளர்ந்த பின்பும், உதாரணமாக மிகச் சிலரே, ஏன், எதற்காக பரம்பரையாக வந்த பழக்கவழக்கங்களை, நாம் பின்பற்றுகிறோம் என்பதை அல்லது ஏன் நம்புகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உண்மையில் அலசுகிறார்கள் அல்லது அறிய முற்படுகிறார்கள். இது எமது சமுதாயத்தின் குறைபாடு என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக நான் பாடசாலையில் பயிலும் பொழுது, எமக்கு சூரிய கிரகணம் சந்திர கிரகணம் பற்றி விளங்கப்படுத்திய ஆசிரியை, அதே கிரகணத்துக்கு விரதம் இருப்பதை கண்டுள்ளேன்? ஏனென்றால், இயல்பாக, அது சரி அல்லது தவறாக இருந்தாலும், நாம், நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன் உண்மையில் கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறதா ? அவர் டிசம்பர் 25 இல் பிறந்தாரா?, நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. பைபிளின் வேதவசனங்கள் இயேசு பிறந்தார் என்ற உண்மையையும் மற்றும் அவருடைய பிறப்பு தீர்க்கதரிசனத்தையும் எவ்வாறு நிறைவேற்றியது என்பதையும் எடுத்து கூறுகிறது. ஆனால் அவர் பிறந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லை. அங்கு அது அமைதியாக உள்ளது. ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சத்துர்னாலியா [சடுர்நலியா / சதுர்னாலியா] எனும் பண்டிகை இத்தாலி முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்கால கொண்டாட்டமாகும். இந்த பண்டிகையை [Bacchanalia or Saturnalia] ரோமனியர்கள், கிருஸ்துக்கு [இயேசுக்கு] முன் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே டிசம்பர் 17-25 க்கு இடையில் கொண்டாடினார்கள் என்பது வரலாறு. இந்த காலகட்டத்தில், ரோமானிய நீதிமன்றங்கள் மூடப்பட்டன, வார இறுதி கொண்டாட்டத்தின் போது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது மக்களை காயப்படுத்தியதற்காக யாரும் தண்டிக்கப் படக்கூடாது என்று ரோமானிய சட்டம் கட்டளையிட்டது. அப்பொழுது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவர்களுக்கு பொம்மைகளும் வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது வர்த்தக நடவடிக்கைகள் பின்தள்ளப் பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப் பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன. 4 ஆம் நூற்றாண்டில், இந்த சதுர்னாலியா என்ற திருவிழாவை அங்கீகரித்து, சதுர்னாலியா பண்டிகையின் இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்த நாள் என்று அறிவித்து, அதன் மூலம் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிபெற்றனர் என வரலாறு சான்றுபகிர்கிறது இன்னும் ஒரு குளிர்காலக் கொண்டாட்டமான யூல் பண்டிகையை [Yule Feast] ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி தொடக்கம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இதனால் இங்கும் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் இலகுவாக இருந்தது. என்றாலும் வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறிஸ்தவத்துக்கு மாறியது. ஸ்கென்டினேவிய மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற சொல் கி.பி. 900 முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவின் திருப்பலி (வழிபாடு) [Christ's mass] என்பதன் சுருக்கம் ஆகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் , கிறிஸ்துவர்களுக்கு உரியது என்றால், ஏன், மற்ற மதத்தவர்களும் அதை கொண்டாடுகிறார்கள்? உங்களுக்கு அதற்கு விடை தெரியுமா ? ஏன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் பொழுது, பரிசு பொருட்களை தமது குடும்பத்துடன், உறவினருடன் மற்றும் நண்பர்களுடன் பரிமாற்றுகிறார்கள் ? மூன்று ஞானிகளும் [wise men] குழந்தை இயேசுக்கு பரிசுகளை வழங்கினார்கள் என்பதாலா ? நாம் இவைகளைப்பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். கிறிஸ்து [இயேசு], மாரி காலத்தில் கட்டாயம் பிறக்கவில்லை என்பதை மிக இலகுவாக நாம் பரிசுத்த வேதாகமம் லூக்கா அதிகாரம் 2 மூலம் அறிந்து கொள்ளலாம். [Luke 2 / The Birth of Jesus]. உதாரணமாக, அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். மேலும் பைபிளும் தன் சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] மூலமும் மற்றும் எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] மூலமும் இதை உறுதிப் படுத்துகிறது. [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] ஆகவே, இவ்வற்றில் இருந்து நாம் அறிவது, இயேசு பிறக்கும் பொழுது, மேய்ப்பர்கள் இன்னும் தங்கள் மந்தைகளை வீட்டிற்கு கொண்டு வரவில்லை, எனவே, நாம் அக்டோபர் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று இலகுவாக ஊகிக்கலாம். எனவே கட்டாயம் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை. உங்களுக்கு இந்த உண்மை ஒருவேளை மனவருத்தத்தை தரலாம், என்றாலும் நாம் இதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் டிசம்பர் 25 என்று தீர்மானித்தது ஐரோப்பாவில் இலகுவாக பரப்பவும், மற்றும் உலகரீதியாக எல்லோரும் கொண்டாடவும், ஏனென்றால், ஆண்டு முடிவிற்கு ஒரு கிழமைக்கு முன்னால் வருவதால், புது வருட கொண்டாட்டத்துடன் இது கலந்து விடுவதால், மத பேதம் இன்றி கொண்டாடும் ஒரு வாய்ப்பை தானாகவே அது ஏற்படுத்திக்கொண்டது எனலாம். கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சமான 'கிறிஸ்மஸ் மரம்' [Christmas tree] ஒரு பிற்சேர்க்கையே. கிறிஸ்து [இயேசு] பிறப்பதற்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்பே, பண்டிகை காலத்தில், இன்று பைன் [தேவதாருமரம்], தளிர் [ பார்வைக்கு நேர்த்தியாய் உள்ள, ஊசி இலை மர வகைகள்] மற்றும் ஃபிர் [கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை] மரங்களால் [pine, spruce, and fir trees] அலங்கரிப்பது போல, அன்று பண்டைய கால மக்கள் பசுமையான மர கொப்புகளை [evergreen boughs] தமது கதவு மற்றும் ஜன்னல்களில் சூனியக்காரிகள், பேய்கள், தீய சக்திகள் மற்றும் நோய்களை விரட்ட [keep away witches, ghosts, evil spirits, and illness], குளிர் காலத்தில் தொங்கவிட்டார்கள். அவையின் தொடர்ச்சியாகவே பிற்காலத்தில் கிறிஸ்மஸ் மரம் ஆரம்பித்து இருக்கலாம் என நம்பப் படுகிறது. ஏசுநாதரின் உயிர்ப்பின் அடையாளமாக பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரத்தை பார்க்கப் பட்டதாகவும், பின் கிறிஸ்மஸ் மரத்தை 1500 ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து [இயேசு] பிறப்பு விழாவில் பயன்படுத்தினார் என்றும் அறிகிறோம். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகையின் மற்ற ஒரு முக்கிய அம்சம் சாண்டா கிளாஸ் என்ற கிருஸ்மஸ் தாத்தா ஆகும். இது ஒரு முழுக்க முழுக்க கற்பனை கதாப்பாத்திரமே. நம்ம ஊர் அம்புலி மாமா கதை போன்றது இதுவாகும். துருக்கியின் மீரா நகரில் பிறந்த நிக்கோலஸ் [Saint Nicholas of Myra] என்ற பாதிரியார் வாரி வழங்கும் குணம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவுவார். குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசு தருவார். பிற்காலத்தில், நிக்கோலஸ் என்பவரே சாண்டாகிளாஸ் [Santa Claus] என மாற்றப்பட்டார் என வரலாறு கூறுகிறது. கிறிஸ்மஸை கடைபிடியுங்கள் என்றோ அல்லது அப்படியான ஒன்றை ஏசுநாதரின் சீடர்கள் [apostles] கடைப்பிடித்தார்கள் என்றோ பைபிள் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும், கிறிஸ்மஸ் மரம் போன்ற ஒன்றைப்பற்றி சொல்லி இருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக எரேமியா 10:2-6 [Jeremiah 10:2-6,] இல், புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று தொடங்கி .. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; கைவினைஞர் அதை தனது உளி கொண்டு வடிவமைக்கிறார். பின் வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். ... அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது என்று கூறி .. அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யாது, அதேநேரத்தில், , நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று முடிக்கிறது. ஆனால் சிலர் இதை பிழையாக வாசித்து, கிறிஸ்மஸ் மரம் அலங்காரமாக வைப்பதால் ஒரு தீங்கும் இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள், ஆனால் அப்படி இங்கு உண்மையில் சொல்லப்படவில்லை? இங்கு சொல்லப்பட்டது , முன்னைய பழக்க வழக்கமான மரத்தை அலங்கரித்து வீட்டில் வைப்பதால் ஒரு பயனும் இல்லை என்றே ஆகும் . இந்த வசனத்திற்கு அடுத்ததாக, அது " கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது" என்று முடிக்கிறது இதுவே, நான் அறிந்த அளவில், கிறிஸ்மஸ் பற்றிய ஒரு உண்மை வரலாறு! எல்லோருக்கும் நேரத்துடன் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள் !! "முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பல்மீன் நடுவண் திங்கள் போலவும் இனிது விளங்கி பொய்யா நல் இசை நிறுத்த இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே" ["பத்துப்பாட்டு – மதுரைக்காஞ்சி"] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  23. "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்] "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!" "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?" "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?" "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?" "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!" "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?" "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?" "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?" "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!" "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?" "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?" "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து]
  24. "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / First poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது] "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!" "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?" "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?" "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?" "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?" "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?" "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?" "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?" "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!" "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?" "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்
  25. "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற் போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால், அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன். இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக் கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia), காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர். பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக் கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம் தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப் பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக் கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும். தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில், "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந் திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மன மில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களே யானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார். இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள். "அவனை நானே அடக்கம் செய்வேன் அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும் அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" (ஆண்டிகான் 85- 87) "I will bury him myself. And even if I die in the act, that death will be a glory. I will lie with the one I love and loved by him" (Antigone 85- 87). உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ் விடத்தில் தோன்றுவது உடமை பூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது, தனது குழந்தை கட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவு கட்கும், சற்று தொலைவான குடும்ப உறவு கட்கும் நீட்டிக்கப் படுகிறது. இதைத் தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம். இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப் போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக் கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன் கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப் படுகிறது. நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச் சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப் பட்டதால் தானே ராமன் பேசாமல் இருந்து விட்டான். அதனால் தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென - சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக் குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண் டெழுகிறாள். சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப் படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக் கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவி மடுக்க வில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு தான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம் தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.