Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. அன்னையர் நாள் / Mother's Day [12 மே 2024 / 12 th May 2024] அன்னையர் நாள் விடுமுறை தினம், அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் [Anna Jarvis] அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் [Grafton, West Virginia] உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. உதாரணமாக ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் மே மாதத்திலும், அயர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவை மார்ச் மாதத்திலும் கொண்டாடுகின்றன. சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந் ஜார்விஸ் [Mrs. Ann Marie Reeves Jarvis] என்ற பெண்ணின் மகள் அனா ஜார்விஸ் [Anna Jarvis] முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். அதன் பின், அனா ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். தம் எண்ணத்தை, அனா ஜார்விஸ் பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது. இங்கிலாந்தை பொறுத்த வரையில் அங்கு பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்த விழா கொண்டாடப் பெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அங்கு “லென்ற்” [Lent] என்ற வழிபாடு இருந்ததாகவும், “லென்ற்” என்ற வார்த்தையின் அர்த்தம், இளவேனிற் காலத்தின் முதல் நாள் என்றும், பனியும் குளிரும் முடிய, பயிர் போடும் காலம் இது என்றும், அது பின் சமயமயப்பட்டது என்றும் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து, 16ம் நூற்றாண்டில் தாய்மை ஞாயிறு ["MOTHERING SUNDAY"] என்ற நாள் முதன் முதலாக அனுசரிக்கப் பட்டதாகவும், அதுவே பின்னாளில் அமெரிக்காவின் தாக்கத்தால் இங்கிலாந்திலும் அன்னையர் நாள் ["Mother's Day"] என மாறியது என்கின்றனர். Mother's Day is a celebration honoring the mother of the family, as well as motherhood, maternal bonds, and the influence of mothers in society. It is celebrated on various days in many parts of the world, most commonly in the months of March or May, For example, the most of countries such as Canada, Sri Lanka, India, Germany, Italy, Japan, New Zealand, Ausralia, America etc celebrates on May and few countries such as United Kingdom & Ireland on March. The origin of Mother’s Day as we know it took place in the early 1900s. A woman named Anna Jarvis started a campaign for an official holiday honoring mothers in 1905, the year her own mother died. The first larger-scale celebration of the holiday was in 1908, when Jarvis held a public memorial for her mother in her hometown of Grafton, West Virginia. Over the next few years, Jarvis pushed to have the holiday officially recognized, and it was celebrated increasingly in more and more states around the U.S. Finally, in 1914, President Woodrow Wilson signed a proclamation making Mother’s Day an official holiday, to take place the second Sunday of May. In the UK, actually they don’t have “Mother’s Day”. Although it’s popularly referred to as Mother’s Day, due to American influence, the correct term is “Mothering Sunday”, which began as a religious festival in the Middle Ages and is many hundreds of years older than the purely secular and commercial Mother’s Day, celebrated in the USA and some other countries. Historians believe it evolved from the 16th-century Christian practice of visiting mothers in the season of Lent. "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா.... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "என் உழைப்பும் உயர்வும் உன்கனவேயம்மா... உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா.... நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயம்மா" "தாயின் காலடியும் ஒரு ஆலயமே.... அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே - நான் கண்ட முதல் வைத்தியரும் நீயம்மா" "மண்ணும் பெண்ணும் என்சுவாசமே அம்மா.... தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா - என் அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே" "நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே என்றும் நான் உன் மழலை அம்மா.... தெய்வம் உனக்கு தந்த குழந்தை அம்மா" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்) "In my heart, The god I pray is you Mother is only my prime god" "My Sincerity & honesty- is you The life, I am living- is yours You become flowered creeper with my pregnant" "Again I need one more time- your womb My work & advancement - is your dream your smelling flower- is my life" "Even shoot from roots- wood apple is wood apple Even child fly anywhere- it is your feather My light house for my life- is you " "Even scent from your foot step- is a temple which is a peace of mind for me You are my first doctor " "Earth & woman are breath for life Chastity is a cultured behaviour of you You felt fear on my cry & felt happy on my laugh" "I call you as "Amma" - is your blessing I am Always your - hailing toddler Your god gifted child - is me " (Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna)
  2. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 09 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING" பண்டைய பதிவுகளில் இருந்தும் இன்றைய நடை முறைகளில் இருந்தும் ஒரு அறிவு பூர்வ ஊகத்தின் அடிப்படையில் உணவு வரலாற்றாளர்கள், எப்படி பாதுகாப்பான உணவு என்பதை முதலில் ஆதி மனிதன் கண்டுபிடித்தான் என்பதற்கு விடை தேடினர். ஆதி மனிதர்கள் மற்ற விலங்குகளை கவனித்தல் மூலம் உணவுகளை தேர்ந்து எடுத்தார்கள். உதாரணமாக, மற்ற விலங்குகள் எதை உட்கொள்கின்றன, எதை தவிர்க்கின்றன என்பதை கவனித்து பின்பற்றினார்கள். மேலும் ஒரு உணவு அது உட்கொண்ட பின் நோயை உண்டாக்கினால், அதை மற்றவர்களும் தவிர்த்தார்கள். இப்படியான சோதனை மற்றும் பிழை [trial and error] அடிப்படையிலும் பாதுகாப்பான உணவுகள் தேர்ந்து எடுக்கப்பட்டன என்கின்றனர். எனினும் தொழில் நுட்ப அறிவின் முன்னேற்றம் இறுதியாக - திரும்பவும் சோதனை மற்றும் பிழை அடிப்படையில் - தீங்கு விளைவிக்கக் கூடிய உணவை நுகரக் கூடிய உணவாக மாற்ற உதவியது. உதாரணமாக, இறைச்சி பதப்படுத்தப்பட்டது, கொட்டைகள் கொதிக்கவைக்கப்பட்டன, காய்கறிகள் உரிக்கப்பட்டன. மேலும் விலங்குகளை வீட்டு மிருகமாக மாற்ற முன்பு சாத்தியமான காய்கறிகளை விலங்குகளுக்கு முதலில் கொடுத்து பரிசோதனை செய்திருக்க அவர்களுக்கு வாய்ப்பு எதுவும் இருந்திருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டு வளர்ப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட முன்னைய காட்டு தாவரங்களான கோதுமை, பார்லி, அரிசி, தினை, கம்பு, உருளைக்கிளங்கு போன்ற முதன்மையான தாவரங்கள், மனிதன் உட்கொள்ளும் முன் சமைத்தல் அவசியம் ஆகிறது. ஏனென்றால் அவை சமைக்கப்படாத நிலையில் நச்சுத் தன்மையை அல்லது சீரணிக்க முடியாத பொருள்களை அல்லது எதிர் - ஊட்டப் பொருள்களை [antinutrients] கொண்டிருப்பதாகும். ஆனால், சமைத்த பின் அவை செயலிழக்க செய்யப்படுகின்றன அல்லது மட்டுப் படுத்தப் படுகின்றன அல்லது குறைக்கப் படுகின்றன. ஆகவே நெருப்பை சமையலுக்கு பாவிக்கத் தொடங்கியது தான் இப்படியான தாவரங்களை வீட்டுப் பாவனைக்கு மாற்ற தூண்டியது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதுவே மனித பண்பாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணியாகும். அத்துடன் இது மேம்படுத்தப் பட்ட ஆரோக்கியத்தையும் கொடுத்தது. உணவு வரலாற்றாளர்கள் திறந்த வெளி நெருப்பில் உணவை வாட்டுதல் அல்லது சுடுதல் முதலில் தற்செயலாக ஏற்பட்டது என - நாம் முன்பு குறிப்பிட்டவாறு - கருதுகிறார்கள். என்றாலும் கொதித்தல் அப்படி தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மிகவும் கவனமாக இதற்காக வடிவமைக் கப்பட்ட கருவிகள் மூலம் அடைந்த ஒரு செய்முறையாகும். மனிதகுலத்தின் நாகரீகத்தின் வரலாற்றுக்கு முந்தைய கட்டத்திலிருந்தே, ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல மனதைக் கட்டியெழுப்ப உணவின் இன்றியமையாத தன்மையை மனிதன் உணர்ந்தான். நன்கு உணவளிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும், வலிமையானவர்களாகவும் இருப்பதையும், உணவு இல்லாதவர்களை விட அவர்கள் அதிக வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக இருப்பதையும் அவனால் கவனிக்க முடிந்தது . என்றாலும், கடந்த 150 ஆண்டுகளில் மட்டுமே நமது அன்றாட வாழ்க்கையில் உணவு வகிக்கும் முக்கிய பங்கை புறநிலையாகவும் அறிவியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள எம்மால் முடிந்தது. மனித உடலின் வளர்ச்சியிலும், உடலை ஆற்றலுடன் வைத்திருப்பதிலும் உணவின் பங்கை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்த சமீபத்திய அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே. உண்மையில் மனிதர்கள் உட்பட எல்லா உயிர் இனங்களின் உணவுத் தேவையை இயற்கை நன்கு கவனித்துக் கொண்டது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற தாவரங்களை வளர்க்கக்கூடிய விவசாய நிலத்தை அது எங்களுக்கு வழங்கியுள்ளது. அது கடலை மீன்களாலும், நிலங்களை இறைச்சி, பால் மற்றும் பிற உணவுப் பொருட்களையும் தரக்கூடிய விலங்குகளாலும் நிரப்பினது. உணவுப் பொருட்களைப் பயிரிடுவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் வழிகளைக் கண்டறியும் திறனை அது மனிதனுக்கு வழங்கியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிகால மனிதன், காலப்போக்கில், வேட்டையாடுவதில் இருந்து விவசாயத்திற்கு மாறினான், இது நாகரீக வாழ்க்கையின் தொடக்க புள்ளியாக அமைந்தது. ஒருவகையில் மனிதன் ஆறாவது அறிவைப் பெற்றுள்ளான். அனைத்து உணவுப் பொருட்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவை. ஆடையில்லாமல் மனிதன் பாதி என்று தமிழ்ப் பழமொழி உண்டு; உணவு இல்லாமல் மனிதன் உயிரற்றவன் என்று சொல்லலாம். ஓராண்டு அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பருவமழை பொய்த்தால், விவசாய விளைபொருட்கள் கிடைக்காமல், கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்தின் ஒழுக்கத்தைக் கெடுக்கும். அனுதாபம், அன்பு, பரோபகாரம் போன்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் விலகும். சமூகம் தன் கலாச்சாரத்தை இழந்து, வாழ்க்கை தரம் சீரழியும். சமுதாயத்தின் இந்த முழு அமைப்பும் உணவை மையமாகக் கொண்டது. மனிதன் உணவுக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனவே நம் தமிழர்கள் பசியை ஒரு நோய் என்று வர்ணித்தனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். உடை, உறைவிடம் இல்லாமல் கூட சமூகம் இருக்க முடியும் ஆனால் உணவு இல்லாமல் இருக்க முடியாது. ஆதி மனிதனின் பல போராட்டங்கள் உணவை மையப்படுத்தியே இருந்தன. "ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது." இது வயிறுக்கு மனம் சொல்லுகிற செய்யுள்!!! துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே, கிடையாதபோது, ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; கிடைத்தபோது இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; ஆதலினால் உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது என்கிறார் ஔவையார். இனி உலகிற்கு முதல் முதல் நாகரிகம் தந்த பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் பற்றிப் பார்ப்போம். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 10 தொடரும் FOOD HABITS OF TAMILS / PART 09 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING" How did the first peoples know which foods were "safe" to eat? Food historians make educated guesses based on ancient records and modern practices. Based on this evidence, they presume foods were selected or rejected based on observation (they were avoided by the other animals in the area) in conjunction with basic trial and error (if it made the taster sick, it was unlikely others partook). Advances in technology eventually resulted in the ability (again, probably a matter of trial and error) to modify potentially harmful foods into consumable staples. Meat was preserved; nuts were boiled, vegetables were peeled. Before the domestication of animals, it is unlikely that potential vegetable food would have been given to any other animal species first, to see what effect these would have (perhaps one of the earliest functions of the dog, besides scavenging, was an 'experimental' animal to test 'new' foods -- a procedure known to have been practiced in some recent African communities). All of the major domesticated plant foods, such as wheat, barley, rice, millet, rye, and potatoes, require cooking before they are suitable for human consumption. In fact, in a raw state, many plants contain toxic or indigestible substances or antinutrients. But after cooking, many of these undesirable substances are deactivated, neutralized, reduced, or released; Thus, the use of fire to cook plant foods doubtless encouraged the domestication of these foods and, thus, was a vitally important factor in human cultural advancement. Also Improved health must certainly have been one result of the discovery of cooking, Food historians generally agree the first cooking method was roasting over an open fire. Discovery is attributed to happy accident as explained earlier .Boiling was no accident. It was a carefully considered process achieved with tools crafted specifically for the purpose. From the very prehistoric stage of the civilization of mankind man has realized the indispensability of food for the building up of healthy body and sound mind. He is able to notice that people who are well fed live longer and are stronger and they are able to do more work than those who do not have enough to eat. Yet it is only during the last 150 years that we are able to understand objectively and scientifically the important role that food plays in our daily life. Thanks to the recent scientific investigations that we are able to know clearly, the place of food in the growth of human body, as well as in ending the body with energy. Nature has taken good care of food needs. She has given us farm land where vegetables, fruits, grains and other plants can be grown. She has filled the ocean with fish and the lands with animals that supply meat, milk and other food products. She has blessed us with the ability to find ways to cultivate and produce food products. Primitive man, in course of time, turned from hunting to farming and this marked the starting point of civilized life. In a way man is endowed with sixth knowledge. All the food products are necessary for human life. There is a Tamil saying that man is half without dress; we may say man is lifeless without food. If the monsoon fails for just one year or two three years, then there will be no agricultural products and consequently people will suffer by severe drought. This will spoil the morality of the society. All the high qualities like sympathy, love and philanthropy will be dislocated. The society will lose its culture and standard of life will be degraded. This whole structure of the society centered on food. Man is ready to give anything for the sake of food. So our Tamils described hunger as a disease. The food, dress and shelter are the basic requirements for man. Society can exist even without dress and shelter but never without food. Many of the struggles of the primitive man were centered on food. "If I ask you to give up a day's food, You won't If I ask you to eat two day's food, You won't Never will you understand my torment, It's hard to live with you, my dreaded appetite" [Avvaiyar's Good conduct (Nalvazhi)] O my stomach, You will not know my sorrow even for a day; So living with you is very difficult for me says poet Auvaiyar. Which actually point out the importance of food & its habits. Now let's look at the food habits of the ancient Sumerians who gave the first civilization to the world Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 10 WILL FOLLOW
  3. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 08 ஒரு நல்ல சமுதாயம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகளில் பல பண்புகளை காண்கிறோம், இது இன்றைய சமுதாயத்திற்கும் பொருந்துவதாகவே காணப்படுகிறது. இந்த பண்புகள் குறைதலும் அல்லது இல்லாமல் போவதும் சீரழிவிற்கு சில காரணங்கள் ஆகலாம் எனவும் கருதத் தோன்றுகிறது. 'ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் பண்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் செரிவேனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடாது உயிரேவவ்வல் பொரையெனப் படுவது பொற்றரைப் பொறுத்தல்' (கலி.133) உதாரணமாக இதில் ‘போற்றுதல் என்பது, புணர்ந்தாரை பிரியாமை' என்ற ஒரு வரியை சற்று விரிவாக்கப் பார்ப்போம். அதாவது தம்மோடு கலநதோரைப் பிரியாமலிருத்தலே உறவைப் போற்றுதல் என்கிறது இந்த வரி. உதாரணமாக காதலிப்பதும் பின் ஏமாறுவதும் இன்றும் எம் சமுதாயத்தில் காண்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சங்க காலத்தில், கள்ளூர் என்னும் ஊரில் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தையும், அதை மறுத்து பொய் கூறிய அவனுக்கு ஊரறிய கொடுத்த தண்டனையையும், அதனால் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்பையும் அகநானூறு 256 பாடுகிறது. "தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய அறனிலாளன்,''அறியேன்'' என்ற திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, நீறு தலைப்பெய்த ஞான்றை, வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே." கள்ளூர் என்னும் ஊரில் ஒருவன் ஒரு அழகியை காதலித்து ஏமாற்றித் துரோகம் செய்கிறான், அதை விசாரித்த கள்ளூர் அவை, அவனில் குற்றம் கண்டு, அவனை ஊரார் பார்க்க, மரத்தில் கட்டி, கொதிக்கும் சாம்பலினை தலையில் கொட்டினார் என்கிறது. "கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ? - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ?" என்றான் பாரதிதாசன். இப்படி பலர் பல காரணிகளை சுட்டிக்காட்டி ஊடக வழியாக தமது கருத்துக்களை அல்லது ஆய்வுகளை இன்று வெளியிடுவதை காண்கிறோம். எனவே அவைகளில் பெரும்பாலாக காணப்பட்டவையை இயன்றளவு தவிர்த்து, வேறு ஒரு கோணத்தில், இன்றைய நாகரிக உலகிற்கு ஓரளவு ஏற்றவாறு, கீழ் சுட்டிக்காட்டியவாறு அட்டவணைப்படுத்தி, ஒவ்வொன்றாக அதற்கான விளக்கத்தையும் எமது கருத்தையும் இயன்ற அளவு மேற்கோள்களையும் [References], அதனால் ஏதாவது விளைவுகள் பாதிப்புக்கள் ஏற்படும் என்றால் அவைகளையும் எடுத்துக் காட்ட உள்ளோம். 1] பாலியல் நோக்குநிலை [sexual orientation] 2]குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family] 3] இணைய கலாச்சாரம் [internet culture] 4 தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology] 5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture]. 6] பிரபலங்களை வழிபாடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture] 7] வரலாற்று அழிப்பு [Erasure Of History] 8] போதைமருந்து துஷ்பிரயோகம் [Drug Abuse] 9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture] 10] அறநெறி சரிவு அல்லது சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு [decline of morality] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 09 தொடரும்
  4. "தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!" "தோழனாய் நீயிருக்கத் துன்பமேது அன்பே ஆழமான உன்இதயத்தில் நானே இருப்பேனே! அழகான என்னுடலும் உனக்கே தருவேனே அழலாக பாசம் நெஞ்சில் சுடர்விடுகிறதே ஈழம் தந்த வீரனே வாழ்கவாழ்கவே!" "காதலர் தினம் ஆண்டுக்கு ஒன்றல்ல காலம் முழுவதும் அன்பின் நாளே! காமம் ஒருபக்கம் நட்பு மறுபக்கம் காத்திருப்பேன் என்றென்றும் எந்தன் பாதிக்கு கார்த்திகை தீபத்தின் நாயகன் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 09 ஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ, அந்த ஒழுக்கம் வழக்கமாகி, மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு சங்கலித் தொடராக காலம் காலமாக காத்து வரப்படும் ஒரு வாழ்க்கை முறையாக, பாரம்பரியமாக மாறுகிறது. எனவே நாம் தமிழரின் பாரம்பரியத்தின் மூலத்தை பரந்த அளவில் அறிய நாம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியங்களை ஆராயவேண்டும். இவ்வகையில், தமிழர்கள் நீரின் மீது கொண்டிருந்த பண்பாட்டு தொடர்பை நிறைய அங்கு காண்கிறோம். அது மட்டும் அல்ல நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் கூட தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்', தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே' என்பவை அவற்றுள் சில ஆகும். அத்து டன் நீர் குளிர்ச்சியினையுடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர்' என்றே அன்றில் இருந்து இன்று வரை தமிழர்கள் வழங்கி வருகின்றனர். அப்படியான நீரில் நீராடுவதே [குளித்தலே] ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருத்தப்பட்டது. குளித்தல் என்பதின் பொருள் குளிர்வித்தல், அல்லது வெப்பம் தனித்தல் (to get rid of the accumulated heat within our body to get refreshed), எனவே குளியல் அழுக்கை நீக்க மட்டும் அல்ல உடலை குளிர்விக்கவும் என்றாகிறது. மனிதர்களுக்கு உள்ள பல நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். எனவே ஒரு ஒழுங்கு முறையில் உடலை குளிர்விக்க வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி, வாய் மற்றும் காது வழியாக வெளியேறும் என்று அன்று நம்பினார்கள். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அன்று குளத்திலோ ஆற்றிலோ பொதுவாக குளித்தார்கள். உதாரணமாக குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நனையத் தொடங்கும். அப்ப வெப்பமும் கீழிருந்து மேல் எழும்பி வெளியே போகும். குளத்தில் இறங்கும் முன் உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்குவார்கள். இது உச்சந்தலைக்கு கீழ் இருந்து மோலாக எழும் வெப்பத்தால் அதிக சூடு ஏற்படுவதை தடுப்பதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கை ஆகும். என்றாலும் அறிவியல் ரீதியாக உடல் வெப்பம் இலகுவாக தோலினூடாக வெளியேறலாம் என்பதுடன், காலில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, இல்லை உச்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, எந்த காரணத்தையும் அறிய முடியவில்லை. எனினும் குளிக்க தொடங்கும் பொழுது, அதன் குளிர் அல்லது வெப்ப தன்மையை அறிய, முதலில் காலை நனைப்பது அல்லது அல்லது தலை உச்சியை நனைப்பது அல்லது கையை அலம்புவது ஒரு வழமையாக இருப்பதைக் காண்கிறோம். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி' எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ஔவையாரும் “சனி நீராடு” என்று ஆத்திசூடிப் பாடலில் கூறுகிறார். இதை பெரும் பாலோர் " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என பொருள் கொள்கின்றனர், எனினும் சனித்தல் என்னும் தொழிற் பெயரின் அடியாக சனி என்னும் சொல் வருவதால், அதற்கு உண்டாதல், பிறத்தல், தோன்றுதல் என அகராதியில் பொருள் இருப்பதால், சனி நீராடு என்னும் சொல் புதிதாகத் தோன்றும் நீரில் நீராடு எனவும் சிலர் பொருள் கற்பிக்கிறார்கள். எனவே அது ஊற்றுநீர் மற்றும் கிணற்றுநீரைக் குறிக்கலாம். மேலும் சிலர் அதன் பொருளை விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு, "வைகறையில் [dawn] நீராடு " என்றும் உரை எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இனி தமிழ் இலக்கியம் நீராடலை எப்படி கூறுகிறது என்று இரு பாடல்கள் மூலம் பார்ப்போம். முதலாவதாக நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழந்ததைக் கூறும் பரிபாடல் என்ற சங்க பாடலில், பாடல் 16 இல், இளம் பரத்தை ஒருத்தி, தன் தோழியர்களுடன் வையையில் நீராடிக்கொண்டிருந்தாள். அவர்களிற் சிலர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து அப்பரத்தையின் மீது பீச்சி அடித்தனர். அச் சிவப்புச் சாயம் குரும்பை போல் விளங்கிய அப் பரத் தையின் மார்பகத்தின் மீது பட்டது. அதனை அவள் முற்றவும் துடையாது, தான் உடுத்திருந்த பெரிய சேலையின் முன்தானையால் ஒற்றிக் கொண்டாள். அதனால் அச்சிவப்புக் கறை அவள் முன்தானையிலும் ஏறிக் கொண்டது. அதேநேரம் தலைவன் அவளை நாடி வந்தான் என்பதை "சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள், பெருந்தகை மீளி வருவானைக் கண்டே, இருந்துகில் தானையின் ஒற்றி" என்ற வரியில் காண்கிறோம். இந்த, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப் பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது என்பது இங்கு புலப்படுகிறது. பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடை பெறுகிறது. ஆனால், "கோழி அழைப்பதன் முன்னம், குடைந்து நீராடுவான் போந்தோம்" என்கிறாள் ஆண்டாள், அதாவது கோழி கூவும்முன் – அதாவது இன்னும் இருள் பிரியாத நேரத்தில், அதி காலையில் குளத்தில் நீராட என்கிறது. இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது எனலாம். ஆண்டாள் பாடலில் சுட்டிக் காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது. பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என கூறுவார்கள் நாமும் அதைக் கேட்டு நடந்திருப்போம். அதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் உண்டு. உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது போகலாம். இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கலாம் என்பதே அந்தக் காரணம் ஆகும் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 10 தொடரும்
  6. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 22 சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை "குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது. மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்ட தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும். எனவே தான் சாதாரண சிங்கள மக்கள், வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை, மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள். 1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க பண்டாரம்’ [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார். அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977, 1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese] உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டு வந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத் தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள். [The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளீரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம் - இனம் மாற்றம், கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது. [படம் : 01 அல்லது Table 10: Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used. The fact that the Sinhala and Tamil languages share in common 4000+ words also may point to a time where both languages were less divergent. (Please note that the table numbers are as denoted in the original document.)] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem? https://www.facebook.com/groups/978753388866632/posts/5137468916328371/?] பகுதி: 23 தொடரும்
  7. "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்" தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம். அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல் களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது? இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிரையும் குடும்பத்தின் வயிரையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தைப் பார்ப்பதில்லை? இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழன் சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான். சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் மாறு பட்ட நம்பிக்கைகள் பரவிக்கிடக்கின்றன. இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இது போல எண்ணற்ற குறிப்புக்களைக் காண முடியும். மேலும் சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர். கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர். ”கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென” என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங் கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் இங்கு குறிப்பிடுகின்றன? எந்த பத்துப் பொருத்தங்களை பார்த்தார்கள் என்பதில் தான் திருமணத்தின் மகிமை தங்கி உள்ளது என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே" குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந் திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது. "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்." தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும். திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. இதை குறுந்தொகையில் 40 இப்படி கூறுகிறது. "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறிய வாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!! ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய! உனது நட்சத்திரங்கள் நிலைத்து வளரட்டும்! என்று அந்த பாடல் அவனை வாழ்த்துகிறது. "குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாள்மீன்;" இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார். மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர். "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" [பட்டினப்பாலை] இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  8. புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்" "பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில் தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!" "மாலைக் காற்று மெதுவாய் வீச பாடும் குயில்கள் பறந்து செல்ல வானவில் ஜாலங்கள் புரிய மனதை நெருடி மகிழ்ச்சி தர நாணம் கொண்ட என்னவளை நினைத்து என் எண்ணத்தின் பெரு வெடிப்பில் சிதறிய அவள் அழகுத் துகள்களை பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து ஓவியம் ஆக்கினேன்!" "அகன்ற மார்பும் சிறுத்த இடையும் ஒரு பக்கம் சரிந்த கார் குழலும் இதலைத் தொட்டு கோர்த்த இரு கைகளும் இதழில் மலரும் புன்னகையும் தோளில் சரிந்து விழுந்து முழங்காலை துப்பட்டா கொஞ்ச அந்த அழகு சிலை என் இதய பெரு வெடிப்பின் அழகு துகள்களே!" "அவள் அழகில் தென்னை மரமும் குனிந்து ரசிக்க ஞாயிறும் மயங்கி துயில் போக தில்லை நடராஜன் ஒரு காலில் கூத்தாட அவள் கயல் விழிகள் இமைத்தன என்னைப் பார்த்து நாணம் கொண்டன!!" கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  9. "காத்திருப்பேன் உனக்காக" படை படையாக ஒன்றின் பின் ஒன்றாக பொங்கி எழுந்து வரும் கடல் அலைகளின் அசைவிலே, அவ்வற்றின் அசைவிற்கு தாளம் போடுவது போல, அங்கு கடற்கரையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள், தம் பனை ஓலைகளை அசைத்தன. அது மாலை நேரம், பகல் முழுவதும் உழைத்து சோர்வு அடைந்த தொழிலாளியின் பெரு மூச்சு போல, கதிரவனும் ஓடிக் களைத்து பிரியா விடை பெற்றுக் கொண்டு இருந்தான். வீசி வந்த கடற்கரை காற்று, அள்ளி வந்த வெண் மணலையும் சருகுகளையும், கவிதாவின் மேல் கொட்டி. அது எதோ ரகசியங்களை கவிதாவிடம் கிசுகிசுத்தது போல் இருந்தது. காலத்தின் ஆழத்தில் தொலைந்து போன காதலின் எதிரொலிகளை அலைகளும் அவளுக்கு நினைப்பூட்டிக்கொண்டு இருந்தன. அவள் கரையோரம் அசையாமல் வெறுத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். அர்ஜுன் இல்லாதது அவளது உள்ளத்தில் ஒரு குழியை செதுக்கியிருந்தது, அது காலப்போக்கில், கடலின் மென்மையான தாலாட்டுகளால் நிரப்ப முடியாத வெற்றிடமாகியது. பகல்களை அவளுக்கு இரவுகளாகவும், இரவுகளை முடிவில்லாத தனிமையாகவும் மாற்றியது, கடற்கரை மணலில் நிழலாடிய நினைவுகளில் அவள் இன்று சங்கமித்து விட்டாள். அவர்களின் கடந்த கால நெருக்கமான காட்சிகள் அவள் கண்களுக்கு முன்பாக நடனமாடின - சிரிப்பு மற்றும் மென்மையின் தருணங்கள், நிலவொளிக்கு அடியில் திருடப்பட்ட முத்தங்கள் மற்றும் வாக்குறுதிகள் அலைகளின் தழுவலில் அவள் நெஞ்சில் கிசுகிசுத்தன. ஆனால் அவள் விரல்களில் மணல் துகள்கள் போல, நழுவிச் சென்ற அன்பின் கொடூரமான நினைவூட்டலாக அது இன்று அவளுக்கு இருந்தது. காகங்கள் கூட அவளுடன் கலக்க விரும்பாதது போல, கெந்திக் கெந்திக் மண்ணில் தாவி பறந்து கொண்டு இருந்தன. மனோரம்மியமான அந்த கடற்கரை மாலைப் பொழுது அவளுக்கு எரிச்சல் ஊட்டியது போலும், அவள் அந்த கடற்கரையின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பாறையில் ஏறி குந்தி இருந்தாள். சில சின்ன சின்ன கற்களை எடுத்து, கரை நோக்கி வரும் அலைகளுக்கு குறி பார்த்து எறிந்தாள். ஆனால் அலைகள் ஓயவில்லை. அது ஒவ்வொரு முறையும் அவளது மென்மையான பாதங்களை தழுவி முத்தமிட்டு சென்றன. கவிதாவின் இன்றைய பைத்தியக்காரத் தனத்தின் ஆழத்தில், மனம் உடைந்த எண்ணங்கள் மற்றும் சிதைந்த கனவுகளின் எச்சங்கள் இன்னும் இருந்தன. கடலோரத்தில் புராணங்களில் வரும் பேயாக அலைந்து திரிந்தாள், அலையினால் அடித்துச் செல்லப் பட்ட மணலில் தடம் பதித்த அவளது காலடிகள், மீண்டும் இன்னும் ஒரு அலையால் அடித்து அழிக்கப் படுவதை பார்த்து தனக்குள் சிரித்தாள். காற்றினால் கலைந்த தலைமுடியை அவள் பொருட்படுத்தவில்லை. அவளது கண்கள் அன்பை, காதலை, தன் அழகை தேடுவதை நிறுத்தி விட்டது . அது பல ஆண்டுகளாக அவளுக்கு இரக்கமற்றவையாக இருந்தன, ஒரு காலத்தில் துடிப்பான, வசீகரமான பெண்ணாக இருந்த அவளது வாழ்வு, பழங்கதையாகி விட்டது. முணுமுணுப்புகளுக்கும் பரிதாபப் பார்வைகளுக்கும் நடுவே கவிதா கடலோரத்தில், இடிந்து விழும் அலைகளுக்கும், உப்பு முத்தமிட்ட தென்றலுக்கும் நடுவே, தன் காதலனின் கரங்களில் அவள் மிகவும் மகிழ்வுடன் இருப்பது போல ஒரு புன்சிரிப்புடன் இருக்கிறாள். என்றாலும் நீண்ட காலமாக மறைந்து போன ஒரு அன்பின் நினைவுச் சின்னம் போல இன்று அவளுடைய தலைமுடி வெள்ளி நிறமாக இருக்கிறது. அவளுடைய தோல் சுருங்கியுள்ளது, ஆனால் அவள் கண்கள் வானம் கடலை சந்திக்கும் அடிவானத்தில் நிலைத்திருந்து, இன்னும் அவனுக்காக காத்திருக்கிறாள். என்றும் தணிக்க முடியாத ஏக்கத்தில் அவள் இதயம் வலிக்கிறது, அவள் காற்றில் கிசுகிசுத்தாள், "என் அன்பே, நான் காத்திருப்பேன் உனக்காக, காலம் முடியும் வரை." வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ள, யாழ்ப்பாண குடா நாட்டின், கடற்கரையின் வசீகரத்தை அனுபவிக்க வரும் ஒவ்வொரு பார்வையாளர்களையும் ஈர்க்கும் அமைதியான ஒரு அழகிய கடற்கரை நகரத்தில், கவிதா என்ற இந்த பெண், இளமைப் பருவம் பூத்துக் குலுங்க வாழ்ந்து வந்தாள். "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! கோல முழுதும் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்த தனிப்பூவோ?" என்று பாரதிதாசன் நிலவின் அழகை வர்ணித்தான். ஆனால் இவளோ அன்று அந்த நிலவே நாணும் அளவுக்கு வசீகரமாக இருந்தாள். அழகிலும் மட்டும் அல்ல, ஒரு இரக்கத்திற்கான மனோபாவத்திலும், அறிவிலும் கூட சிறந்து விளங்கினாள். அவள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முதல் படிப்பை தொடரும் பொழுது, நடந்த பகிடிவதையின் (ragging, ரேகிங்க்) பொழுதுதான் நான்காம் ஆண்டு அர்ஜுனை சந்தித்தாள். "ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும் சீனியருக்கும் ஜூனியருக்கும் கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும் ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும் நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்" கவிஞர் வாலியின் வரி இவர்கள் இருவருக்கும் பொருந்தும். அவர்கள் இருவரும் அன்றில் இருந்து நட்பில் பின்னிப்பிணைந்தனர். தேன் போன்ற இனிய சொற்களைப் பேசும், திரண்ட, மென்மையான தோள்களைக் கொண்ட கவிதாவின் குளிர்ச்சியான பூப்போன்ற கண்கள் அம்புகளைப் போல் அவன் நெஞ்சை துளைத்தது. அவளும், அவனின் அலைகளைப் போல நடனமாடும் சிரிப்புக்கும், அவனின் கடல் ஆழத்தின் மர்மங்களைப் போன்ற கண்களுக்கும் அந்த கணமே தன்னை முழுதாகக் கொடுத்து விட்டாள். அவள் அவனை, தன்னைப் போலவே நம்பிவிட்டாள். அவளின் காதல், குளத்தில் தாமரை போல தூய மற்றும் நம்பிக்கைக்குரியதாக மலர்ந்தது. சிறப்பான பட்டப்படிப்புக்குப் பிறகு, அர்ஜுன் அமெரிக்காவிற்கு உயர் படிப்பிற்காக ஒரு பயணத்தைத் தொடங்கினான், அவனைப் பிரிய போகிறோமே என்ற ஏக்கத்தால் கவிதாவின் இதயம் கனத்தது, அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. ஒரே ஒரு ஆண்டுதான் அவர்களின் நேரடியான நெருக்கமான காதல் வாழ்வு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் கடற்கரையிலும் இருந்தது. ஆனால் அவளைப் பொறுத்தவரையில் அது மாற்ற முடியாத, மறக்க முடியாத இணைந்த வாழ்க்கை. அனல் பறக்கும் காற்றும், சுட்டெரிக்கும் மணலும், விடியும் வெண்ணிலவும், தன் விருந்துக்கு வரவேற்க, அலைகளோ, ஒன்றன் மேல் ஒன்றாய், முந்தி வந்து முத்தமிட, முன்னும் பின்னுமாய் கை கோர்த்தும் கோர்க்காமலும் நடந்து, அர்ஜுனும் கவிதாவும் கால்கள் நீரில் நனைய தம்மை மறந்து அனுபவித்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். ஏன் இந்த அவசரம் என்னவனுக்கு என்று அவளுக்குள் ஒரு ஊடலும் வந்தது. என்றாலும் அவனின் வாக்குறுதியிலும் அவன் மேல் இருந்த நம்பிக்கையிலும், அந்த கடைசி நாளை அவனின் விருப்பத்தின் படியே தன்னை முழுமையாக சமர்ப்பித்தாள். மெல்லிய பூங்காற்று மென்மையாய் மேனி மேல் ஊடுறுவ, மெய் சிலிர்த்து நின்றாள், அவன் பேரழகினைக் கண்டு! பிரிய மனமில்லாமல் அவனும் பிரிந்தான், கவிதாவிடம் பிரியா விடைப்பெற்று!!! முதலில், அவர்களுக்கிடையில் இலங்கை - அமெரிக்கா என்று தூரம் பெரிதாக இருந்தாலும், இன்றைய இணையத்தள மேம்பாட்டால் அது வெல்லக் கூடியதாகத் அவளுக்கு தோன்றியது. காதல் மற்றும் ஏக்க வார்த்தைகளை சுமந்து கொண்டு தினம் தினம் வீடியோ அழைப்பு கண்டங்கள் கடந்து முன்னும் பின்னுமாக பறந்தன. ஆனால் காலப் போக்கில், அவை, அவனிடம் இருந்து அரிதாகவே வரத் தொடங்கின. தனக்கு படிப்பு, ஆராச்சியென காரணம் சொல்லிக் கொள்வான். அதுமட்டும் அல்ல, அந்த சில அழைப்புகளும் அவற்றின் உள்ளடக்கங்கள் ஒரு காலத்தில் இருந்ததைப் போன்று இல்லாமல் வெறும் சம்பிரதாயமாக எதிரொலித்தன. இறுதியில், முற்றிலுமாக திடீரென நின்று விட்டது. அவனின் தொலை பேசியோ, ஈ மெயிலோ, முகநூலோ எல்லாமே முடங்கிவிட்டது. காதல் மழை பொழிந்த அந்தி நேரம் அமைதி பெற்று விட்டது. கடற் கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்து விட்டது. ஓடங்களும், மீன்பிடி படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் மீன் தேடச் சென்ற பறவைகள் கூட இருள் வருகிறதுவென கரைநோக்கி பறந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்த வெளியைக் கொடுத்தது. அதற்கு அப்பால் பனை மரங்களும் புதர்ச்செடிகளும் கொஞ்சம் இருந்தன. பனை ஓலைகள் மற்றும் பற்றைகள் ஆடவில்லை; அசையவில்லை. நாலா பக்கமும் அமைதி நிலவியது. கதிரவன் சிவந்து, கடலும் வானும் கலக்கும் அடிவானத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில கதிரவனின் செங்கதிர்களை பட்டும் படாமலும் மறைத்தன. கவிதா ஒரு பாறையில் இருந்தபடி கடலை பார்த்தாள். கடலின் மெல்லிய அலையில் ஒரு சிறிய ஓடம் மிதந்து வந்து கொண்டு இருந்தது, அது அலையுடன் மெள்ள மெள்ள மேலும் கீழும் ஆடி ஆடி அசைந்தது. அந்தப் படகில் அவன், அர்ஜுன், அவளை வா வா என்று அழைப்பது போல கை அசைத்துக் கொண்டு இருக்கிறான். கொஞ்சம் வயது போய், முறுக்கு மீசையுடனும் ஆனால் மிடுக்கான தோற்றத்திலும், கொஞ்சம் வெளிறிய தலை முடியுடனும் அவன், அவனே தான்! கவிதா பாறையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு எதோ முணுமுணுத்தாள். தூரத்தில் தெரிந்த ஓடம் அசையாமல் நின்று அவளுடைய முணுமுணுப்பை கவனமாகக் கேட்டது. ஏன் வானமும், பூமியும் கூட அந்த முணுமுணுப்பைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றது! கதிரவன் கூட அந்த முணுமுணுப்பை கேட்க கடலை அடைந்தும் முழுகி மறையாமல் தயங்கி கொஞ்சம் நின்றது. "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?" பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் பாடல் வரிகள் அது. கவிதாவின் உள்ளத்தில், அவளின் சோகத்தை அது காட்டியது. அப்பாடலின் சொற்களோடு அவள் கண்ணீரும் கடலில் கலந்து அர்ஜுனிடம் சென்றது, ஆனால் அவன் ஓடத்தில் இருந்து மறைந்து விட்டான். அதில் யாரோ ஒரு முதியவர் மீனுடன் திரும்பிக் கொண்டு இருந்தார், அவன் இப்படி இனி எத்தனை தடவை ஏமாற்றுவானோ? வருடங்கள் கரையில் மோதிய அலைகளைப் போல உருண்டோடின, ஆனால் கவிதா தன் காதலில், நம்பிக்கையில் உறுதியாக இருந்தாள். அவளுடைய பெற்றோர் மற்றும் மூத்தவர்கள் முன்வைத்த வரன்களையும் அவள் மறுத்துவிட்டாள், அவளுடைய இதயம் தன் ஆன்மாவில் அழியாத முத்திரையை பதித்த அர்ஜுனனுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு மாலையும், அவள் கடற்கரையோரம் நடந்து செல்வாள், அவள் அந்த கடைசி நாளில் அவனுடன் அனுபவித்த அந்த ஒதுக்குப்புறத்தில், அந்த பாறையின் மேல் குந்தி இருப்பாள். அவளுடைய பார்வை வெறிச்சோடி இருக்கும். படபடத்து வேலைக்கு ஓடும் மனிதர்களில் சிலர் அவளை எட்டிப் பார்ப்பார்கள். வண்டி இல்லாத பாதையும் மக்கள் இல்லாத வீதியும் தான் இப்ப அவளை வரவேற்கிறது. ஒவ்வொரு சூரிய அஸ்தமனத்திலும் அவள் இன்னும் மெல்லிய குரலில் "நான் காத்திருப்பேன் உனக்காக" என்று சொல்ல மட்டும் மறக்க மாட்டாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால், Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015). ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம் ................................................................... "மகாவம்சம் சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ] "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது .... அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ... love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ... took her upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.] "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back] என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”? ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala). There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. / பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது] Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும் பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa and the Saddhammasaṅgaha. According to the Dīpavaṃsa and the Mahāvaṃsa, the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa, and Saddhammasaṅgaha further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
  11. புதுக் கவிதை / நவீன கவிதை: "விடுதலையின் வித்து" "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டு, உரம் இட்டு கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!" "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்றுச் சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!" "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் சிந்தியது ஒருமுறை போராடி உலகுக்கு கொண்டு சென்றான் விதையை விதைத்தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் இவன் தான் மாண்டு தன் இனத்துக்கு தினை கொடுத்தான்! விடுதலையின் வித்தாக வீழ்ந்த இவன்!" "ஒருமுறை நீங்கள் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்தீர்கள், பெருமையுடன் அனைத்தையும் கொடுத்தீர்கள் அது தேர்தல் காலம்! ஒருமுறை எடுக்கக்கூடிய அனைத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் அது நீங்கள் தன்னாட்சி அமைத்த காலம்!! அச்சமும் பசியும் இன்று கூத்தாடுகிறது! விதை விதைக்க விடுதலையின் வித்தாக இனி யார் வருவார்?" "நாம் வாழ்ந்தோம் விதை விதைத்தோம் அது கனவாகி விட்டது! நாங்கள் முடிக்கவில்லை இடையில் தடுமாறிவிட்டது இன்னும் சிலர் எரிகின்றனர் இன்னும் சில இதயங்களில் இரத்தம் வழிகிறது!!" "நான் இந்த பூமிக்கு ஏக்கத்துடன் வந்தேன் ஏன் எதுக்கு, என்ன தேவை என்று தெரியாது? என்னைத் தாண்டிய ஒரு இணைப்புக்காக பசியோடு வருகிறேன் ஆன்மீக அம்சங்களுக்காக திறமையான வாழ்க்கை முறைக்காக விடுதலை உணவுகளுக்காக துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் உள்ள ஒரு நாட்டுக்கு வருகிறேன் இழந்ததும் திருடப்பட்டதும் மறுக்கப்பட்டதும் அனைத்திற்கும் விதையாக விடுதலையின் வித்து ஆக வருகிறேன்!" "சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு விதையாக சுரண்டி வாழ்க்கை வாழ்பவருக்கு அம்பாக உடைந்த இணைப்புகளுக்கு பூணாக உங்கள் இதயத் துடிப்பை என் காது கேட்கிறது உங்கள் வேதனையும் உங்கள் கண்ணீரும் என்னை மண்ணுக்கு இழுக்கிறது விடுதலையின் வித்தாக!!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07 இன்றைய சமுதாயத்தின் சில அம்சங்களில், பெரும்பாலானவை இன்று அதிகமாக சீர்குலைகிறது அல்லது சரிகிறது என்பதை பலர் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது குறைந்தது அவையை கவனத்தில் எடுத்து ஒரு ஆய்வுக்காவது உட்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். எது எப்படியாயினும் விஞ்ஞானத்தை நாம் முழுக்க முழுக்க அறநெறி அல்லது வாழ்க்கைத் தரங்களில் [morality or living standards] இன்று உணரப்படும் சரிவுக்கு பொறுப்பு கூற முடியாது, அதே மாதிரி மக்கள் கூறும் இந்த சரிவுக்கு மதம் பொறுப்பு என்று முற்றிலும் கூறுவதற்கும் இல்லை. இந்த "சரிவு", பொது மக்களிடையே, மதச்சார்பற்ற இடது சாரிகளால் மற்றும் மத சார்பான வலது சாரிகளால் [secular left and the religious right], மிகைப்படுத்தப் படும் பிரசாரம் போலவும் தெரிகிறது. மற்றும் ஊடகங்களின் கவர்ச்சியான கெட்ட செய்திகளால் வசப்படுத்தும் அல்லது வசீகரத்தைச் செய்யும் [media's fascination with bad news] செயலாகும் எனவும் நம்பத் தோன்றுகிறது. இது இன்று ஒரு வருந்தத்தக்க விளைவு ஆகும் என நாம் கட்டாயம் நம்பலாம். அது மட்டும் அல்ல, பெரும்பாலான பொதுமக்களின் ஒட்டு மொத்த அறிவியல் மற்றும் கணித கல்வியறிவின்மையும் [overall scientific and mathematical illiteracy] இதற்கு ஒரு காரணம் ஆகும். உதாரணமாக சாக்ரடீஸ் [Socrates] அன்று, எழுத்துக்களின் எழுச்சியை விரும்பவில்லை, எதிர்கால தலைமுறையினருக்கு நினைவு கலை இதனால் அழிக்கப்படும் என அவர் வருத்தப் பட்டார். அவரைப் போன்ற கொள்கையுள்ள பலர் இன்றும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நாம் நினைவில் வைத்துக்கொள்ள இந்த எழுத்து என்ற மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை, என்றும், ஆனால் அவை, எமக்கு நினைவூட்டிடவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது [You have not discovered a potion for remembering, but for reminding] என வாதாடினார் சாக்ரடீஸ். மேலும், அவர்கள் தங்கள் நினைவகத்தை பயன்படுத்தி பயிற்சி செய்ய மாட்டார்கள், மாறாக, அவர்கள் எழுத்தில் தங்கள் முழு நம்பிக்கையை வைப்பார்கள் என்றார். அதே மாதிரி, மனப்பான்மை கொண்ட 19 ஆம் நூற்றாண்டின் லுட்யைட்கள் [எந்திர உடைப்புக் கிளர்ச்சியாளர்/ Luddites] ஆரம்ப துணி [ஜவுளி] இயந்திரங்களை அழித்தனர். 19ஆம் நூற்றாண்டின் பின்னர் உலகில் ஏற்பட்ட சமூக, விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியானது நாகரிகமுள்ள மனித வாழ்வின் விழுமியங்களை மாசுபடுத்தியதாக அமைந்துவிட்டது என்று கூறுவதில் சில உண்மைகளும் உண்டு என்பது போல சில நிகழ்வுகளையும் இன்று காண்கிறோம். அவைகள் பலவற்றை வேறு வடிவங்களில் இதிகாசம் புராணம் மற்றும் வரலாற்றிலும் முன்பே கண்டுள்ளோம். உதாரணமாக ஒரு உலகளாவிய வரலாற்று ஆய்வு, ஓரினச்சேர்க்கை [homosexuality] ஒன்றும் புதியது அல்ல என்கிறது. கி மு 385 இல் பிளாட்டோ ஆண்களுக்கு இடையிலான காதல் மிகவும் உயர்ந்த அன்பின் வடிவம் என்றும், பெண்களுடனான பாலியல் தொடர்பு ஒரு காமம் மற்றும் இனப்பெருக்கத்திற்கான வழி மட்டுமே என்றும் வாதாடுகிறார் [Plato argues that love between males is the highest form of love and that sex with women is lustful and only for means of reproduction]. கி மு 326 இல் ஓரின / இருபால் இராணுவ தலைவர் அலெக்ஸாண்டர், பெரும் தலைவர் [Gay/bisexual military leader Alexander the Great], மில்லியன் கணக்கான மக்களை ஓரின நட்பு - "ஹெலனிஸ்டிக்" [gay-friendly Hellenistic culture] கலாச்சாரத்திற்கு மாற்றினார். கிரீக்கில் [Greek] ஆரம்பித்த இந்த கலாச்சாரம், ரோமன் ஆட்சியிலும் தொடர்ந்ததை வரலாறு காட்டுகிறது. முக்கிய சமயங்களை நோக்கும் பொழுது, பிராமண இந்து புராணம் [mythology], கிருஷ்ணர் அரவான் என்ற மகாபாரத வீரனை மணந்ததாகவும், மற்றும் அய்யப்பா கடவுள் சிவபெருமான் மற்றும் கிருஷ்ணருக்கு பிறந்தார் என்றும் கூறுகிறது. எனவே இந்து புராணங்களிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளையும் [Homosexuals and transgenders] காண்கிறோம். மேலும், பொது காலத்திற்கு முன் 200 க்கும் பொது காலம் 300 க்கும் இடையில் அதிகமாக எழுதப் பட்ட, பழங்கால சமசுகிருத பிராமண இந்துச் சட்டமான மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதியில், அத்தியாயம் 11 இல் செய்யுள் 174 & 175 இல், அயோனி (Non-Vaginal sex) பாலியல் பற்றி கூறப்பட்டுள்ளது. உதாரணமாக ஆணும் ஆணும் கூடினால், அந்தந்த சூழலை பொறுத்து, அதற்கு பரிகாரமாக ஒரு வித தவம் கடைபிடிக்க வேண்டும் அல்லது தனது உடையுடன் குளிக்க வேண்டும் என்கிறது .[If someone ejaculates his semen in a man, he should perform the Santapana penance [174] & If a twice-bom [the condition or rank of a Brahman] has sexual intercourse with a man, in an ox-cart, on water, he should bathe with his clothes on.] அதாவது அது அசுத்தமானது என்று கருதி அதற்கு ஒரு பரிகாரத்தை மட்டும் எடுத்து கூறுகிறது. மற்றும்படி ஓரினச்சேர்க்கை பெரிய விடயமாக அங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. லேவியராகமம், அதிகாரம் 18:22 இல் "பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது." என்றும் ஆதியாகமம் 1:27, 28 இல் "ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார்,பின் அவர்களிடம் 'நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்தார்" என்கிறது பைபிள். எனவே ஓரினச்சேர்க்கையை பைபிள் கண்டனம் செய்கிறது எனலாம். அவ்வாறே 27:55 இல், “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” என்றும் கூறினார் என்கிறது குர்ஆன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 08 தொடரும்
  13. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 08 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING" எமது உடல் எப்படி எப்பொழுது மாற்றம் அடைந்தது என்பதை முழுமையாக கண்டறியவும், எமது முதாதையர் என்னத்தை பெரும்பாலும் உட்கொண்டார்கள் என்பதை அறியவும், தொல்லுயிர் எச்சங்களை / புதைபடிவங்களை [fossil] நாம் ஆய்வு செய்ய வேண்டும். எமது முன்னைய முதாதையர் வாலில்லாக் குரங்கினம் போன்ற ஆசுத்திராலோபித்தசினெசுச் [Australopithecus] ஆகும். இது ஹோமோ எரக்டஸிற்கும் கொரில்லாவிற்கும் இடைப்பட்டதாகும். இது பெரிய பெருங் குடலைக் கொண்ட பெரிய தொந்தியை கொண்டிருக்கிறது. இது பலமான தாவரப் பொருள்களை சமிக்க உதவுகிறது. மேலும் கடினமான தாவரப் பொருட்களை அரைக்கவும் நொறுக்கவும் ஏற்றவாறு இதன் பற்கள் பெரிய தட்டையாக உள்ளது. இந்த ஆசுத்திராலோ பித்தசினெசுச் தான் முதல் முதல் மரத்தில் இருந்து ஆப்ரிக்கா வனாந்தரத்திற்கு கீழ் இறங்கி வந்து, அங்கு, சமதளப் புல் வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த விலங்குகளை சாப்பிட ஆரம்பித்த இன்றைய மனிதனின் முதாதையர் ஆகும். இந்த மாற்றம் தான், அதன் உடல் உட்கூறு அமைப்பில் [anatomy] பெரும் மாற்றத்தை ஏற்படுத்த அடியெடுத்துக் கொடுத்தது. ஹொமினிடுகளில், முள்ளந்தண்டு படிப்படியாக நேராகிக் கொண்டு வருவதையும், மூளையின் கனவளவு கூடிக் கொண்டு வருவதையும், முக அம்சங்கள் மாறிவருவதையும், பல்லமைப்பின் மாற்றத்தோடு சேர்ந்து மெல்லுவதற்கான தசைநார்கள் குறைந்து வருவதையும் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன. 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அது பரிணாம மாற்றத்தை கண்டு மனிதன் போன்ற அமைப்பையும் கூர்மையான பற்களையும் 30% பெரிய மூளையையும் பெற்றது. மூளையின் முக்கியத்துவத்தை “எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்ற ஒரு பழமை வரி சுட்டிக்காட்டுகிறது. இந்த மாற்றம் அடைந்த ஹொமினிட்டுகளை [hominids] ஹோமோ ஹபிலிஸ் (Homo habilis) என அழைத்தனர். என்றாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய, எமது முதல் மனித முதாதையர் என நம்பப்படும் ஹோமோ எரக்டஸ் எனப்படும் எழுநிலை தொல்முன்மாந்தன் ஆகும். இது இன்னும் பெரிய மூளையையும், சிறிய தாடையையும் சிறிய பற்களையும் கொண்டிருந்தன. இதற்கு காரணம் கூர்ப்பின் தேர்வு வழி மூலம் மனிதரின் உணவுப் பழக்கம் மாறிவிட்டது ஆகும். இந்த ஹோமோ எரக்டஸ் எம்மைப்போன்ற உடல் அமைப்பை கொண்டிருந்ததுடன் குட்டையான கையையும் நீண்ட கால்களையும் கொண்டிருந்தன. மேலும் பெரிய தாவரப் பொருட்களை பதப்படுத்தும் குடலை இழந்தன. இதனால் இப்ப இந்த ஹோமோ எரக்டஸ் நிமிர்ந்து நடக்கவும் மட்டும் அல்ல, அவை ஓடக் கூடியதாகவும் புத்திசாலியாகவும் இருந்தன. பேராசிரியர் வரங்ஹத்தின் [Professor Wrangham] கூற்றின் படி, ஆதி மனிதன் எப்படி சமைப்பது என்பதை கற்றுக்கொண்டது, எமது குடலை சிறிதாக்கியது. நாம் எமது உணவை சமைத்ததும், சமிபாடு நிகழ, பெரிய குடல் அவசியம் இல்லாமல் போய்விட்டது. எமது இந்த ஜீரண [செரிமான] அமைப்பின் மாற்றம் எமது மூளை பெரிதாக உதவியது. சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப் பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும். இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட 'சமை' என்ற வினைச் சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும். சுருக்கமாக கூறுவதாயின் இது, உணவுப் பொருளின் சுவை, தோற்றம், ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன்படுத்தி மாற்றுவதாகும். கிரிஸ் ஓர்கன், சார்லஸ் நுன், சாரின் மச்சாண்டா மற்றும் ரிச்சார்ட் வரங்ஹம் [Chris Organ, Charles Nunn, Zarin Machanda, and Richard Wrangham] ஆகிய ஆய்வாளர்கள், சமைப்பது சுமார் 1.8 மில்லியன் ஆண்டிலிருந்து 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக கூறுகின்றனர். சமைத்தல் என்பது மனிதக் கூர்ப்பின் முக்கிய அம்சம் என வரங்ஹம் குறிப்பிடுகிறார், இது மனிதனுடைய நேரத்தையும் வேலையையும் இலகுவாக்கியதால், அது மூளை வளர்ச்சிக்கு வித்திட்டது என கூறுகிறார். அவர் ஆரம்ப மனிதனின் குடல் அளவு குறையும் சதவீதத்திற்கு இணையாக, மூளையின் வளர்ச்சி அதிகரித்திருக்கும் என மதிப்பிடுகிறார். எப்படியிருந்தாலும் அதிகமான ஏனைய மனிதவியலாளர்கள் [anthropologists] இதற்கு எதிராக கூறுகின்றனர், அவர்கள் சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதன் சமையலைத் தொடங்கினான் என்பதற்கு ஆதாரங்களை முன்வைக்கின்றனர். நாம் உண்ணும் பொருட்கள் அனைத்தும், எம் உடலுக்குள் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு, துகள்களாக மாற்றப்பட்டு அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மற்றும் நன்மை தரும் பொருட்கள் ஆகியன இரத்தத்திலும் உடலின் உயிரணுக்களிலும் சேர்ந்து ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு உணவுப் பொருட்கள் நறுக்கப்படுவதும் துணுக்குகளாக்கப் படுவதும் நமது செரிமான அமைப்பில் அல்லது குடல் பகுதியில் நடைபெறுகின்றன. உணவுப் பண்டத்தை முதன் முதலாக வாயில் கடிக்கும் போதே செரிமானப் பணி துவங்கி விடுகிகிறது. வாயில் உணவு துண்டுகளாக்கப் பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ் நீருடன் கலக்கிறது. பின்னர் நாவினால் இவ்வுணவுப் பண்டம் பிசையப் பெற்று சிறு சிறு உருண்டைகளாகிறது. இவ்வுருண்டைகள் உணவுக் குழாய் மூலம் வயிற்றுக்குள் தள்ளப் படுகின்றன. பின்னர் இவை சிறிது சிறிதாக வயிற்றி லிருந்து சிறுகுடலுக்குள் செல்கின்றன. இங்கு தான் உணவு பெருமளவு செரிமான மடைகிறது. குடலில் இருக்கும் பல நுண்ணுயிர்கள் (சில வகை பாக்டீரியாக்கள்) உணவுப் பொருளை சிதைத்து குடல் செல்களுக்கு [cells / உயிரணு] ஆற்றலை விநியோகிக்கிறது. ஆகவே சமைத்த உணவை சாப்பிடும் போது, ஊட்டக் கூறுகளை அல்லது போசாக்கை விடுவிக்க எமது வயிறு பெரிதாக வேலை செய்யத் தேவையில்லை. ஆகவே மூளைக்கு சக்தி கொடுக்க அங்கு நிறைய சக்தி இருந்தது. மூளை செயல்படுவதற்கு மிக அதிக அளவு ஆற்றலைக் கோருகிறது. மனிதனின் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு மூளையின் இயக்கத்திற்குத் தேவைப் படுகிறது. மேலும் சமத்த உணவு கூடிய ஆற்றலை விடுவிப்பதுடன், அதை ஜீரணிக்க குறைந்த ஆற்றலையே உடம்பு பாவிக்கிறது, அது மட்டும் அல்ல, சமையல் செய்து சாப்பிடும் ஒரு பிராணி, பூமியின் அதி உன்னத புத்திசாலி உயிர் இனமான மனிதன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 09 தொடரும் FOOD HABITS OF TAMILS / PART 08 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING" To understand how and when our bodies changed, we need to take a closer look at what our ancestors ate by studying the fossil records. Our earliest ancestor was the ape - like Australopithecus. Australopithecus had a large belly containing a big large - intestine, essential to digest the robust plant matter, and had large, flat teeth which it used for grinding and crushing tough vegetation. None the less, it was Australopithecus that moved out of the trees and onto the African savannah, and started to eat the animals that grazed there. And it was this change of habitat, lifestyle and diet that also prompted major changes in anatomy. The eating of meat ties in with an evolutionary shift 2.3 million years ago resulting in a more human -looking ancestor with sharper teeth and a 30% bigger brain, called Homo habilis. The most momentous shift however, happened 1.8 million years ago when Homo erectus - our first "truly human" ancestor arrived on the scene. Homo erectus had an even bigger brain, smaller jaws and teeth. Erectus also had a similar body shape to us.Shorter arms and longer legs appeared, and gone was the large vegetable - processing gut, meaning that Erectus could not only walk upright, but could also run. He was cleverer and faster. According to Professor Wrangham - When Our earliest ancestor started to cook, this Cooking made our guts smaller. He says. "Once we cooked our food, we didn't need big guts. "They're costly in terms of energy. Individuals that were born with small guts were able to save energy, have more babies and survive better. Preparing food with heat or fire is an activity unique to humans, and scientists believe the advent of cooking played an important role in human evolution. Phylogenetic analysis by Chris Organ, Charles Nunn, Zarin Machanda, and Richard Wrangham suggests that human ancestors may have invented cooking as far back as 1.8 million to 2.3 million years ago. Wrangham proposes that cooking was instrumental in human evolution, as it reduced the time required for foraging and led to an increase in brain size. He estimates the percentage decrease in gut size of early humans directly correlates to the increase in brain size. Most other anthropologists, however,- as No known clear archaeological evidence for the first cooking of food has survived - believe that cooking fires began only about 300,000 years ago, when hearths started appearing. Cooking food breaks down its cells, meaning that our stomachs need to do less work to liberate the nutrients our bodies need. This, freed up energy which could then be used to power a larger brain. The increase in brain-size mirrors the reduction in the size of the gut. Significantly found that the reduction in the size of our digestive system was exactly the same amount that our brains grew by. It is also found that not only does cooked food release more energy, but the body uses less energy in digesting it. Humans - the cleverest species on earth - are also the only species that cooks. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 09 WILL FOLLOW
  14. "மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரை தாழ்த்தாமல் வாழ முடியாது!" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும்மழை பொழிந்தால் திட்டித் தீர்க்கிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்!" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்!" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் தெரிந்தவனுக்கு வாழ்வு மகிழ்வு சிம்மாசனம் தேடுபவனுக்கு மகிழ்ச்சி இல்லை!" "பணக்காரன் மூட்டை முடிச்சை பதுக்குகிறான் பஞ்சம் பிடித்தவன்போல் என்றும் அலைகிறான் பட்டினி கிடந்தாலும் சாதாரண மனிதன் பங்கிட்டு அதையும் கொடுத்துச் சாப்பிடுகிறான்!" "உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பதல்ல உன்னிடம் என்ன இருக்கிறதுதான் முக்கியம் உலோபியாக சேர்த்து வைப்பதை விட உரிமையுடன் கொஞ்சத்தையும் சரியாக அனுபவி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "விதவையின் கனவு" நான் பதினெட்டு வயதை தாண்டிய குமரிப்பெண்ணாக இருந்தபொழுது, காதல் , காமம் பற்றிய எண்ணங்கள் திறந்தவையாக எனக்கு இருந்தன. நான் ஒளிவு மறைவு இன்றி என் நண்பிகளுடன் சுதந்திரமாக அரட்டை அடிப்பேன். ஆனால் என் கணவர் அதற்கு எதிர்மாறு. அவர் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பாரம்பரியமான கட்டுப்பாடுகளுடன் காணப்பட்டார். நாம் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கிய பொழுது, மூன்று நான்கு முறை சந்தித்த பின்பு தான் முதல் முத்தமே தந்தார். நானும் ஒவ்வொரு சந்திப்பிலும் அவருக்கு சில சந்தர்ப்பங்களை வழங்கியும் பார்த்தேன், ஆனால் அவர் என்னைப்பற்றி முழுதாக அறிவதிலேயே காலம் கடத்தினார். என்றாலும், காலம் மெல்ல மெல்ல நகர அவரின் புனித காதலை, உண்மையான அன்பை உணரத் தொடங்கினேன். மூன்று நான்கு மாதம் ஆகும் பொழுது, எனக்குள் இருந்த காமத்தை விட , அவர் மேல் பாசம் வளரத் தொடங்கி, என் முன்னைய சுதந்திர பறவை நிலையில் இருந்து, இவர் தான் இனி என் ஆள் என்ற உரிமை நிலை தோன்றிவிட்டது. என்னாலேயே நம்ப முடியவில்லை, எப்படி மாறினேன் என்று! ஆமாம், அவர் இல்லாமல் நான் இல்லை என்றாகி விட்டது!! அவர் என் மேல் அக்கறை, பாசம் மற்றும் மரியாதையை வெளிப்படையாகவே காட்டினார். அவர் மிகவும் கனிவாகவும் உண்மையாகவும் எந்த ஒளிவு மறைவும் இன்றி என்னுடன் பழகத் தொடங்கினார். அப்ப தான் நான் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உண்மையில் உணர்ந்தேன், காமம், கேளிக்கை மட்டும் வாழ்வு அல்ல, அன்புடன் , விட்டுக் கொடுப்புடன், ஒருவரை ஒருவர் புரிந்து, தங்கி, மனம் ஒத்து மகிழ்வதே வாழ்வு என்று அறிந்தேன். அது என்னில் பல மாற்றத்தையும் ஏற்படுத்தியது. பெற்றோர்கள், மூத்தோர்கள் சம்மதத்துடன் என் திருமணம் நவம்பர் மாதத்தில் சிறப்பாக நடைபெற்றது. நான் மனைவி என்ற நிலையை அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டேன். அவர் மீது என் ஈர்ப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மின்சாரம் போலும் இருந்தது. நாம் இருவரும் வாழ்க்கை இன்பங்களுக்கு ஒரு ஒழுங்கு முறையில் முன்னுரிமை கொடுத்து இருவரும் அவ்வற்றை பகிர்ந்து நம்பிக்கையான மகிழ்வுடன் இருந்தோம். "நெஞ்சை பறித்தவன் என்னை சந்தித்தான் தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினான் கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!" "மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் அஞ்சா நெஞ்சத்தான் எதோ உளறினான் நஞ்சு கலந்து காதல் வீசினான்!" "கொஞ்சி பேசி இன்பத்தில் பூத்தான் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தான் நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னான் பஞ்சு மெத்தையில் தழுவி உறங்கினோம்!" நாம் ஆறு ஆண்டுகள் பிரிக்க முடியாதவர்களாக ஒன்றாக இரு உடல் ஒரு உயிராக இருந்தோம். ஆனால் இயற்கைக்கு அது பொறுக்கவில்லை போலும், எமது ஆறாம் திருமண நாளில் கண்டறியப்படாத ஒரு குறைபாட்டால் திடீரென மயங்கி என் மடியில் விழுந்தார். அவருக்கு இதற்கு முன் எந்த உடல் குறைபாடும் வெளிப்படையாக இருந்ததில்லை. உடனடியாக வைத்தியசாலை விரைந்தாலும், போகும் வழியிலேயே அவரின் கடைசி மூச்சு நின்றுவிட்டது. அவரை எம்மால் காப்பாற்ற முடியவில்லை. எனது இருபத்தி ஒன்பது வயதில் நான் விதவை ஆகினேன். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இப்ப தனி ஆள். அவரின் மனைவி என்ற அடையாளம் மறைந்து விதவை தாயாகி விட்டேன். என் இரு பிள்ளைகளையும் உற்றுப்பார்த்தேன். அவர்களின் உருவில் அவரையே கண்டேன். நான் குமரிப் பெண்ணாக சுதந்திரமாக திறந்த எண்ணங்களுடன் இருந்த அந்த நிலையில் இப்பவும் இருந்து இருந்தால், ஒருவேளை நான், சில மாதங்கள் கழிய, துக்கம் ஓரளவு தணிய, இன்னும் ஒரு துணை தேடி இருப்பேன். ஆனால் அவரின் அன்பு , அளவில்லா அக்கறை என்னை முற்றாக இன்று என்னை அறியாமலே மாற்றி விட்டது! "அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?" "இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டேன் இருளில் இன்று மருண்டு துடிக்கிறேன் ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன ஈழ மண்ணின் இளைய மகனே? " "உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறேன் உந்தன் செல்லங்கள் அப்பாவை தேடுது ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறேன்? " "எண்ணம் செயல் எல்லாம் நீயே எங்கள் வீட்டு ஆண்டவனும் நீயே ஏக்கம் தவிப்பு சுடுகுது எம்மை ஏமாற்றம் தந்து பிரிந்தது ஏனோ?" எம் வீடு வெறிச்சோடி விட்டது. எனக்கு என் எதிர்காலம் பற்றி கற்பனை செய்யவே முடியவில்லை. அவரின் படத்தின் முன் கண்ணீர் துளிகள் விழுந்த வண்ணமே இருந்தன. என் மகனும் மகளும் அருகில் வந்து இரு கண்களையும் துடைத்து, நாம் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொன்னார்கள். அவர்களின் ஒவ்வொரு செய்கையும் அவரையே நினைவூட்டின. ஒரு கணவனாக என்னுடன் வாழ்ந்தவர் இரு பிள்ளைகளாக இன்று வாழ்வதைக் காண்கிறேன்! இப்ப என் கனவு எல்லாம், என் கணவரின் வாரிசுகளான இருவரையும் அவர் எனக்கு சொல்லிய , காட்டிய வழியில், வளர்த்து, நல்ல நிலையில், சமுதாயத்தின் முன் இவர்கள் அவரின் பிள்ளைகள் என பெருமை அடையச் செய்வதே! கட்டாயம் அது நடக்கும். எனக்கு அவர் ஊட்டிய நம்பிக்கை மற்றும் திடம் அப்படியே இருக்கு! அவர் உடல் தான் எரிந்ததே தவிர, அவரின் வழிகாட்டல் அழியவில்லை!! "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" அன்புடன் அப்பனின் மனைவி ராசாத்தி [நான் என்னை விதவை என்று சொல்லவிரும்பவில்லை, அவர் என்னுடன் இன்னும் வாழ்கிறார். இரவில் இன்னும் என்னை கட்டி அணைத்து ஆறுதல் தருகிறார். நான் தனி ஆள் என்ற உணர்வு இப்ப என்னிடம் இல்லை] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. "சங்க காலத்துக் காதல் பிரச்சனை?" சங்ககாலம் எதிர்ப்பற்ற காதல் வாழ்வுக்கு மட்டும் உடனாகி இருந்துவிடவில்லை. பல பாடல்கள் காதல் வாழ்வைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் சங்க காலத்துக் காதலிலும் பிரச்சனைகள் இருந்தன. அவை ஊர்வம்பாய் பேசப்பட்டன. இதை "அம்பல்" என்றும் "அலர்" என்றும் சங்க கால மக்கள் வழங்கி வந்தனர். "அம்பல்" என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் கருத்து கொள்ளலாம். இது ஒரு வித கிசுகிசு என்று கூட சொல்லலாம். ஊர்வம்பு என்றாலே பொதுவாக பெண்களையே குறிக்கும். "தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்" என்று நற்றிணையில் கபிலர் கூறுகிறார். காலையில் ஒரு பெண்ணிடம் ஒரு செய்தியைச் சொன்னால் போதும், மதியத்துக்குள் அச்செய்தி ஊருக்குள் பரவிவிடும் என்று பொதுவான கதை உண்டு. கூடியிருந்து முணுமுணுத்துப் அடுக்களைப் புகையைப் போல அதை பரப்புவார்களாம். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையிலே ஒரு காட்சி வருகின்றது. ஒரு பெண் ஆடவன் ஒருவனைக் காதலிக்கின்றாள். அதைத் தெரிந்து கொண்ட அயல் பெண்கள்; அந்தப் பெண்ணின் தாய் தெருவில் போகும் போது கடைக்கண்ணால் பார்த்து தம் மூக்கின் மேல் சுட்டுவிரலை வைத்து அவளை இகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள். அவமானத்தால் குறுகிப் போன தாய் வீடு திரும்பி வந்து காதலித்து தனக்கு வசை தேடித்தந்த தன் மகளைத் தடி எடுத்து நன்றாக அடித்து விடுகின்றாள். இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்! மேலும் இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ ஓடி விடுவது தான். ஊரைப் பற்றிக் கவலைப்படாதே.. எப்போதும் அலர் தூற்றும் ஊர்.. அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் தோழி!! "சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் சேர்த்தி மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை; அலைப்ப அலந்தனென்; வாழி தோழி! கானல் புதுமலர் தீண்டிய, பூநாறு குரூஉச் சுவல் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉம்; இயல்தேர்க் கொண்கனொடு செலவு, அயர்ந் திசினால் யானே அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!" [நற்றிணை - 149] இன்று எத்தனையோ பெற்றார் காதலித்தவனோடு மகள் ஓடிவிட ஐயோ முதலே தெரிந்திருந்தால் கட்டுப்படுத்தி வைத்திருக்கலாமே என்று கவலைப்படுவதைக் காண்கின்றோம். என்னுடைய அறியாமையால் பிள்ளை போய்விட்டதே என்று தன்னைத்தான் நொந்து கொள்ளும் ஒரு தாயின் அவலத்தை காண்கின்றோம். இது போல மகளை நினைத்து ஏங்கும் தாயை அகநானூற்றிலும் காண்கிறோம்! தலைமயிரும் [கூந்தலும்] சுருண்டு படிந்துள்ளது. முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் என்னும் இயல்பினை அமைந்தனள் -என்று- என் கண்களே பல முறை பார்த்து எனது நெஞ்சமானது நேற்றும் ஐயுற்றது. அதன் பின்னும் எனது அறியாமையால் யான் என் மகளை வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்யாது விட்டேன் என புலம்பும் ஒரு தாயை இங்கு காண்கிறோம். இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்! அவள் நடக்கும்போது ஒலிக்கும் தன் காலிலுள்ள சிலம்பைக் கூடக் கழற்றி வைக்காமல் சென்றுவிட்டாள்... என்னை விட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்..... இவள், என் மகள்... தரிசு நிலத்திற்கு போனாலோ? ... சுனையில் நீர் இல்லாததால் அங்கே புறா புதிய நெல்லிக்காயை குத்தி சாப்பிடுங்கள், அங்கே வறண்ட தண்டுகள் மற்றும் நெல்லிக்காய்கள் மேற்கு காற்றினால் கீழே விழுந்து குவிந்து கிடந்தது பளிங்கு போல் தெரியும். அப்படியான வறண்ட நிலத்தைக் கொண்ட காட்டு வழியில் சென்று கொண்டிருப்பாளோ?.... இல்லை.. கையில் கூர்மையான வேல் வைத்திக்கும் காளை போன்றவனுடன் சென்று கொண்டிருப்பாளோ?.... இல்லை.. காளையின் பொய்யுரையை நம்பிச் சென்று கொண்டிருப்பாளோ?..... இல்லை.. தேக்கின் அகன்ற இலைப்புதர் போல் தோன்றும் குடிசையில் வாழும் கானவர் சிறுகுடி முற்றத்தில் வேகவைத்த புலால் உணவை உண்டு கொண்டிருப்பாளோ?... புலம்புகிறாள் தாய் !! "கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும் சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண் கண்துணை ஆக நோக்கி நெருநையும் அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும் அறியா மையிற் செறியேன் யானே பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன் அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள் சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக் கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய் அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக் கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச் சேக்குவள் கொல்லோ தானே தேக்கின் அகலிலை குவித்த புதல்போல் குரம்பை ஊன்புழுக்கு அயரும் முன்றில் கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே." [அகநானூறு 315] பெண்களைப் பெற்றோர் அவர்களைத் திருமணம் செய்துகொடுக்கும் வரையிலும் தமது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வதாக அடிக்கடிப் புலம்புவது கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. சங்க காலத்திலே குழந்தைப் பருவம் முதல் பெண்கள் அணிந்திருக்கும் சிலம்பை அவர்களின் திருமணம் நடப்பதற்கு முன்பு அகற்றுவார்கள். அதனைச் சிலம்பு கழிதல் என்பார்கள். இன்றைய வளைகாப்பு போல அந்த நிகழ்வும் விழாவாக நடைபெற்றுள்ளது போலும். ஒரு வசதியான குடும்பத்துப் பெண் தன் ஏழைக் காதலனோடு ஓடிச் சென்று விடுகிறாள். கணவன் வீட்டிலே அவளின் சிலம்பு அகற்றும் விழா நடக்கின்றது எளிமையாக! அதைப் பெண்ணின் தாய் கேள்விப் படுகின்றாள். ஐயோ என் பிள்ளைக்கு புல்வேய்ந்த குடிசை வீட்டில் வறுமையுடன் விழா நடக்கிறதே! எங்கள் வீட்டில் என்றால் எப்படிச் சீரும் சிறப்புமாகச் செய்திருப்போம் என்று வருந்துகிறாள் அந்தத் தாய்! "கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை: ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு, மங்கையர் பல பாராட்ட, செந் தார்க் கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல் சேயிழை மகளிர் ஆயமும் அயரா; தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக் காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப் பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர, இவை கண்டு, இனைவதன் தலையும், நினைவிலேன், கொடியோள் முன்னியது உணரேன், ''தொடியோய்! இன்று நின் ஒலி குரல் மண்ணல்'' என்றதற்கு, எற் புலந்து அழிந்தனள் ஆகி, தற் தகக் கடல்அம் தானை கை வண் சோழர், கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன, நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து, தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல் ஓமை நீடிய உலவை நீள் இடை, மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல், துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின் அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த 20 சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி, ''சிறப்பும் சீரும் இன்றி, சீறூர் நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ, மேயினள்கொல்?'' என நோவல் யானே. " [அகநானூறு 369] சீரும் சிறப்பும் இல்லாத அவன் மனை. ஏழைப் பெண்கள் வாழும் புல் வேய்ந்த குடிசை. அதன் முற்றத்துத் தூணில் ஒரே ஒரு பசு மட்டும் கட்டியிருக்கும். ஏதுமில்லாது வறுமையில் வாடும் அந்த மனையில் சிலம்பைக் கழற்றி வைக்கும் திருமணம் நடை பெறுகிறதே என்ற செய்தி அகநானூற்றில் [369] காணப்படுகின்றது. துணிவோடு கல் நெஞ்சத்துடன் நீ அறியாத நாட்டுக்கு, தகைமை இன்றி உன்னை அழைத்துச் செல்லும் சிறுமைக் குணம் படைத்தவனுக்கு ஒத்தவளாகச் சென்றுவிட்டாய். இதுதான் உன் மடமைத் தகுதி என்று ஏசுகிறாள் அந்த தாய் தனது வேதனையில்.. . அது மட்டும் அல்ல, மகளே! என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணிந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர்... அவர்கள் இப்போது தவிக்கின்றனர்... நீ ஊட்டாததால்... நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது.... மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை.... நீ நீர் ஊற்றாததால்.... நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை.... அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை..... இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன்..... அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை... வளையல் அணிந்தவளே!... “இன்று நீ தலை முழுகும் நாள்” என்றேன் [“This is the day of bathing after your menses”] தன்னைத் தாய் 'தலை முழுகப் போகும் நாள்' என்று தாய் கூறியதாக நினைத்து சினந்து நீ வருந்துகிறாய் என புலம்பும் தாயை காண்கிறோம். இங்கே வறுமைப்பட்ட இடத்திலே வாழ்க்கைப்பட்டு விட்டாளே என்ற எண்ணப்பாடுடைய ஒரு தாயைச் சந்திக்கின்றோம்! மகள் புகுந்த வீட்டை விட தன் வீடே பண வசதியில் சிறந்தது என்ற எண்ண ஏற்றத்தாழ்வை இன்றுபோல அன்றும் பார்க்கின்றோம். பெரியோரை வியத்தலும் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை என்ற சங்கப் பண்பு நெறி அடிபட்டுப் போவதை இங்கே காண்கிறோம்.! இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. பந்தபாசத்தில் சீர்காழி பாடிய, மாயவநாதனின் ‘நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ’ என்ற பொருத்தமான பாடலை தேடி எடுத்து பதிந்ததுக்கு மிக்க நன்றி !
  18. நன்றி "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழ பழகி விட்டேன்!” "எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது பேரப் பிள்ளைகள் தனிமை போக்க ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!” "உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் பிறந்தநாள் கூட்டுது வயதை ஒருபக்கம் பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது அவளை நினைக்க அழுகை வருகுது வாழ்வை நினைக்க ஆத்திரம் வருகுது மரணத்தை நினைக்க மகிழ்ச்சி வருகுது!!”
  19. நன்றி இறப்பு ஒரு திடீர் சம்பவம். வேலைக்கு போனவர் மதியம் அளவில் மயங்கி விழுந்து வைத்தியசாகையில் உடனடியாக கொண்டுபோய் ஆனால் அன்றே விடியப்பறம் 4 மணி அளவில் 'இனி நான் சாகிறேன்' என்ற கடைசி வார்த்தையுடன் எம்மை விட்டு பிரிந்தார். [08 / 06/ 2007] அவரின் இரத்தம் முழுவதும் நஞ்சாகி விட்டது. கொரோனா மாதிரி ஒரு தொற்று நோய். பாக்டீரியாவால் பரவுவது எல்லா இயக்கமும் உடனடியாக நின்றுவிட்டது. Meningitis அதன் பெயர். மூச்சு / தொடுதல் … இப்படி பரவுவது. அப்பொழுது பிள்ளைகள் படித்துக்கொண்டு இருந்தார்கள்.
  20. "தளிராடும் தூறலில்" "தளிராடும் தூறலில் தாங்காத மோகத்தில் துளிர்விடும் இன்பக் காதல் நினைவில் ஒளிவீசும் உன் ஈர்ப்பு விழிகளில் எளிமை கொண்ட வீரநடை காண்கிறேன்! குளிர் காய்கிறேன் ஈரமாய் நனைகிறேன்!" "எண்ண முடியா உடல் கவர்ச்சியும் எண்ணம் புரியா மௌனத்தின் அழகும் வண்ணம் போடும் ஆகாயத்தின் எழிலும் மண்ணில் விழும் துளிகள் சொல்கின்றனவே! விண்ணில் உன் முகம் தெரிகிறதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. "தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 08 நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என்றும், இலக்கிய வழக்கில் திலகம் என்றும் பொதுவாக கூறுவர். உதாரணமாக, திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில்: "கடலணி திலகம் போலக் கதிர்திரை முளைத்த தன்றே" என்று பாடுகிறார், அதாவது கதிரவன் கடலுக்குப் பொட்டு இட்டது போல் தோன்றியது என்கிறார். ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக் கொண்டாள் என பரிபாடல் 11 வரி 99 ,100 இல், "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே, கொற் றவை கோலம் கொண்டு, ஓர் பெண்." என்று கூறுகி றது. முதல் பாடலில் அழகையும் இரண்டாவது பாடலில் அதற்கு ஒரு புராணத்தையும் காண்கி றோம். ஆண் பெண் படைப்பின் அடிப்படை நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை அறிந்த ஆதி கால மனிதன், அப்படி தாய்மை அடைந்த பெண்களை பெருமைபடுத்தி மதித்தான். அன்று ஒரு இனக் குழுவாக வாழ்ந்த மனிதனை தாய்மை யடைந்த பெண் அரவணைத்து வழி நடத்தி சென்றாள். இதனால் அவள் போற்றப்பட்டு அவளை தெய்வமாக வழிபட்டான், அப்பொழுது அவள் கொற்றவையாக ஒரு சுயாதீனமான தெய்வமாக இருந்தாள். ஆனால் அவள் பின்னர் சிவாவுடன் இணைந்தார் / விவாகம் செய்யப்பட்டார் அதற்கு ஒரு புராணமும் கற்பித்தார்கள் என்பதே உண்மை யாகும். பத்து பாடல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையும் சூரர மகளிரின் (தெய்வ மகளிரின்) மணம் கமழும் திலகமிட்ட நெற்றியை மறைக்காமல் தலை மாலை இருக்கும்படிக் கூந்தலின் மேல் அணிவித்திருந்தனர் என்பதை "பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் "என்று பாடுகிறது. இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடத்தை ஆக்ஞா சக்கரம் [Ajna Chakra or third-eye chakra] என்கிறது யோகக் கலை. நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் [seat of memory and thinking] உரிய இடம் இது வாகும். அதனால் தான், எம் மனம் துக்கம் அடையும் போது, தலைவலியும் அதிகரிக்கிறது எனலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது, இதனால் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது [prevent the loss of "energy"] என்கிறார்கள். அத்துடன் நாம் பொட்டு வைக்கும் பொழுது, அந்த இடம் அழுத்தப் படுகிறது. இது முகம் தசைகளுக்கு [face muscles] இரத்தம் வழங்க உதவுகிறது. எனவே, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் பொட்டுவைப் [sticker Pottu/bindi] பயன் படுத்துதல், அழகு படுத்துவதை தவிர வேறு ஒரு பெரும் பயனையும் அளிக்காது. பொட்டு வைக்கும் அந்த இடத்தின் சிறப்பை திருமூலர் அருளிய திருமந்திரம், தனது பாடல் 666 இல்: "ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்",என்று அழகாக கூறுகிறார், அதாவது, உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும் என்கிறார். அதையே தமிழ் ஆய்வாளர், மறைமலையடிகள், தாம் எழுதிய “யோக நித்திரை அல்லது அறிதுயில்” என்ற 1922 ஆண்டு நூலில் :" புருவங்களுக்கு நடுவே உட்செல்லும் இடை வெளியில் உயிரின் அறிவு எல்லார்க்கும் முனைத்து விளங்குகிறது” என்கிறார். சங்க காலத்து மக்கள் வண்ணங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள். ஆண்களும் பெண்களும் அன்று இடுப்பிற்கு மேல் ஆடை ஒன்றும் அணிவதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக பல்வேறு வண்ணங்களில் நறுமணச் சாந்துகள் கொண்டு பொதுவாக மகளீர் தமது நெற்றியிலும், தோளிலும், மார்பகங்களிலும் அழகிய ஓவியங்களை வரைந்து கொண் டார்கள். அதை தொய்யில் எனவும் அழைப்பர். பச்சை குத்துதல், மருதாணிச் சித்திரங்கள் போன்ற உடலோவியம் அதுவாகும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை - 276 இல், நான் இவளது நிமிர்ந்து எழுந்த அழகிய முலைகளில் ஒளி பெறுமாறு தொய்யில் எழுதியதும் இவளைப் பாதுகாப் பவர்கள் முற்றிலும் அறியார் என்ற "உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்" வரியும், அகநானூறு 239 இல், மகளிர் மார்பகத்தில் புள்ளியுடன் கூடிய தொய்யில் எழுதிக் கொண்டிருப்பர். அது அவர்கள் மேனியில் பொறிக்கப்பட்டிருக்கும் சுணங்கு [மகளிர் மேனி யில் தோன்றும் நிறப்பொலிவு அல்லது மேனிநிற மாற்றம்]. அணிகலன்களுடன் திகழ்வர். அவர்கள் வளரும் பிறை நிலாவைத் தொழும் மாலை நேரம். நான் இங்கே இருக்கிறேன் என்ற "புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம், புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய" வரியும் இதை உறுதி படுத்துகிறது. அதே போல அழகுறப் பூங்கொடி வடிவில் எழுதியதை சோழர் காலத்தைச் சேர்ந்த பெருங்கதை யில்: “பழுதற அழகொடு புனைநலம் புனையாக் குங்குமம் எழுதிக் கோலம் புனைந்த“ என்ற வரி மூலம் காண்கிறோம். எனவே இன்று மக்கள் தங்கள் உடலில் தற்காலிக அல்லது நிரந்தர பச்சை குத்திக் கொள்வதும் மருதாணி [Henna] இட்டுக் கொள்வதும், உடலில் தொய்யில் இடும் அல்லது ஓவியம் வரையும் பண்டைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும். இன்று கைவிரல்களிலும், கால்களிலும் மருதாணி பூசுவது ஒரு சிறப்பான பழக்கமாக திகழ்கிறது. இலையின் சாறினால் சிவந்த மரு [மச்சம் மாதிரி யான சிறு புள்ளி / Skin Tag] தோன்றுவதால் மருதாணிக்கு பழைய பெயர் மருதோன்றி ஆகும். என்றாலும் இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்தார்கள். எனவே, இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன் படுத்தினார்கள். இது எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டதும் ஆகும். சங்க காலத்தில் மருதாணியைப் பற்றிய குறிப்பு ஒன்றை பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் காண்கிறோம். அதில் "றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை, முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து" என்ற வரிகளில் எறிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணி பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டது தலைவியின் கைகள் என்கிறது. ஆனால் இதற்கு இன்னும் ஒரு பொருளாக, எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன எனவும் சிலர் கூறுவார். எனவே மெஹந்தி [mehandi] என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது என்பதே சரியாகும். மேலும் தமிழர்களுக்கு இடையில் எந்த விழா நடந்தாலும் அது மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை பெரும் வழக்கம் பாரம்பரியமாக இன்னும் தொடர்கிறது. ஒரு உதாரணமாக பெண்கள் கூந்தலில் மலர் சூட்டும் பழம் பழக்கத்தை பார்ப்போம். ஐங்குறுநூறு 93, பல மலர்கள் சூடிய ஒரு பெண் ணின் கூந்தலை சூழ்ந்து கொண்டு வண்டு மொய்ப் பதை, "பல் பொழில் தாது உண் வெறுக் கைய ஆகி, இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே" என்று கூறுகிறது. அதே போல புறநானுறு 61, "கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்" என்ற வரிகளால் கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழை போடு கூடிய பூவைச்செருகியிருக்கும் உழத்தியர் என்கிறார். ஆனால் கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள். அந்த மரபு இன்னும் கிராமப்புறங்களில் அப்படியே காணப்படுகிறது. கைம்பெண் மட்டும் அல்ல அன்று கணவன் விலகி இருந்தாலும் மனைவி புது மலர் சூடாமல் இருப்பதை புறநானூறு 147 , உன் மனைவி தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வது தான் என பொருள்பட " அம் மா அரிவை, நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல், மண்ணூறு மணியின் மாசு அற மண்ணிப், புது மலர் கஞல இன்று பெயரின், அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே" என்கிறார் புலவர். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 09 தொடரும்
  22. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 21 சிங்கள அறிஞர் முதலியார் குணவர்தன, ஆனந்தா பாடசாலையில், 28.09.1918 , சிங்களத்தின் இலக்கணம் திராவிடம் என்கிறார் [Sinhala scholar Mudliyar Gunawardena at a lecture delivered at Ananda College on 28.09.1918 had stated "....the science of exmination of the structure of a sentence is called its grammar. The grammar of the Sinhala language is Dravidian...] பேராசிரியர் J. B. திஸ்ஸநாயக்க, தனது "சிங்களத்தை புரிந்து கொள்ளுதல் " என்ற புத்தகத்தில், பக்கம் 118 இல், தெற்காசியாவின் மொழிகளில், சிங்களம் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அதற்க்கு காரணம் அது இந்தோ ஆரியன் மற்றும் தமிழுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு என்கிறார் ["Prof. J. B. Dissanayake in his book "Understanding the Sinhalese" at page 118 states "....Sinhala occupies a unique position among the languages of South Asia because of its close affinity, with two of the major linguistic families of the Indian sub continent Indo-Aryan and Dravidian..."]. இதில் இருந்த நாம் இலகுவாக ஊகிக்கலாம், சிங்கள எழுத்து கட்டாயம் ஆரிய மொழியும், திராவிட மொழியும் தெரிந்த ஒருவரோ அல்லது பலராலோ தான் உண்டாக்கப் பட்டு இருக்கும் என்பது. மேலும் அரபு நாட்டில் இருந்து இலங்கைக்கு ஏழாம் நூற்றாண்டில் குடியேறியவர்களின் சந்ததி, இன்று முஸ்லீம் என்றும் சோனகர் என்றும் அழைக்கப் படுபவர்கள், எல்லோரும் வீட்டில் தமிழ் பேசுபவர்களாகவே மாறினார்கள். காரணம் தமிழ் தான் அங்கு பாவனையில் இருந்துள்ளது. சிங்களம் அங்கு பாவனையில் இருந்து இருந்தால், கட்டாயம் சிங்களமே பேசி இருப்பார்கள் ?. மற்றும் விஜயபாகுவின் அரச கட்டளைகள் (A.D. 1056-1111) சிங்களத்திலும் தமிழிலும் இருப்பது குறிப்பிடத் தக்கது [Arab settlers came to Ceylon about 7th century A.D. Their descendants are now called Muslims and Moors. They learned Tamil because that would have been the language in use. Also Royal edicts of Vijayabahu (A.D. 1056-1111) were in Sinhala and Tamil]. இது விஜயபாகுவின் ஆட்சியில் பெரும் தொகையான குடிமக்களாக தமிழர்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது. தீபவம்சம், மகாவம்சம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், மகாவம்சம் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி தமிழருக்கு எதிரான போக்கை கையாளுவதைக் காணலாம். உதாரணமாக, கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை ஆட்சி செய்த சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்களையும் தீபவம்சம் ராஜகுமாரர்கள் [princes] என கூறும் அதே வேளையில், அதற்குப் பிறகு எழுதப்பட்ட மகாவம்சம், அவர்கள் இருவரையும் குதிரை வியாபாரியின் மகன்மார்கள் [sons of a horse trader] என்றும், வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறுகிறது. இது, வரலாற்றில் எந்த பெரிய வேறுபாடு ? உங்களுக்கு தலை சுத்துகிறதா? ஆனால் தீபவம்சம் அவர்கள் சோழநாட்டில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ வந்தவர்கள் என்று கூறவே இல்லை. அதே போல எல்லாளனை தமிழ் இளவரசன் என்றோ அல்லது சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றோ தீபவம்சம் கூறாத வேளையில், தீபவம்சத்தை 150 / 200 ஆண்டுகளின் பின் விரிவாக்கிய மகாவம்சம் முரண்பாடான கருத்தை அங்கு பதிவிடுகிறது. தீபவம்சம் தமிழர் விரோத வெறுப்பைக் பொதுவாக எங்கும் கக்கவில்லை. ஆனால் அது புத்த மாதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது. அபய [Abhaya] அல்லது துட்டகைமுனுவின் தந்தையின் பெயர் காக்கவன்ன [Kakkavanna]. அதே போல வன்னியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின் பெயர் பண்டாரவன்னியன், அவனை காட்டிக்கொடுத்தவனின் பெயர் காக்கவன்னியன். பெயர் காக்கவன்ன குரல் ஒலியில் காக்கவன்னியனுடன் ஒன்றாகிறது [phonetically similar]. அது மட்டும் அல்ல, தீபவம்சம் காக்கவன்னவுக்கும், மூத்தசிவ அல்லது தேவநம்பிய தீசனுக்கும் இடையில் என்ன உறவு என்று கூறவும் இல்லை. மகாவம்சத்தில், சிங்கத்துடன் வங்க நாட்டு இளவரசி புணர்ந்து இரு மனித பிள்ளைகளை பெற்றார் என்றும், அந்த சகோதரங்கள் தங்களுக்குள் திருமணம் செய்து விஜயன் பிறந்தான் என்றும் கூறுகிறது. உங்களில் பலர் அடிப்படை உயிரியல் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு ஆண் சிங்கமும் ஒரு மனித பெண்ணும் புணர்ந்து சந்ததி உண்டாக்கும் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. உதாரணமாக, சிங்கம் 36 குரோமோசோம்கள் / உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள் கொண்டு உள்ளது , அதேவேளை மனிதன் 46 குரோமோசோம்கள் [Lions have 36 chromosomes and humans have 46 chromosomes.] வைத்திருக்கிறான். அத்துடன் அவைகளின் வகைகளும் முக்கியம் [the types of chromosomes are also important.] எனினும், சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இதற்கு காரணம் இந்த இரு இனத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை என்பதால், மற்றும் அவைகளின் குரோமோசோம்கள் மிகவும் ஒத்த தன்மையாக இருப்பதால் ஆகும், அப்படியே புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (Tigon) ஆகும். அத்துடன் இவை பெருபாலும் மலட்டுவாகவும் [sterile] இருக்கின்றன. இன்னும் ஒரு உதாரணமாக, குதிரையையும், கழுதையையும் எடுத்தால், அவை முறையே 38, 36 குரோமோசோம்கள் கொண்டுள்ளன. அவைகள் புணர்ந்து கோவேறு கழுதை [mules] பிறக்கிறது. அது எப்பொழுதும் மலடும் ஆகும். சிங்கத்தையும் , மனிதனையும் இனி கருத்தில் கொண்டால், இங்கு குரோமோசோம்கள் வேறுபாடு பத்து ஆகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் சந்ததி உண்டாகாது. அப்படி என்றால், விஜயன் என்று உண்மையான ஒருவர் இருக்க முடியாது? இது நான் சொல்லவில்லை. அறிவியல் சொல்லுகிறது! கழுதையும் குதிரையும் ஒரே பேரினம் [genus], ஆனால் வெவ்வேறு இனங்கள். குரோமோசோம்கள் சொற்ப வித்தியாசம். எனவே தான் கோவேறு கழுதை முற்றிலும் மலடாகவே பிறக்கிறது. மனிதனும் சிங்கமும் ஒரே பேரினமும் இல்லை [do not even belong to same genus] . எனவே, சாகசப் பெண்ணை [adventurous woman] சிங்கம் உண்பதுதான் இறுதியாக நடந்து இருக்கும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 22 தொடரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.