Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 66 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 66 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 3 இந்தியாவில் நடந்த முதல் பௌத்த பேரவையைப் பற்றியது, அது இலங்கையுடன் நேரடி வரலாற்றுத் தொடர்பு இல்லை. புத்தர் இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, அதாவது பரிநிர்வாணத்திற்குப் பிறகு, இந்த சபை தொடங்கப்பட்டது. இந்த முதலாம் பேரவை ஏழு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. இந்த பேரவை அல்லது சபை பிம்பிசாரரின் [Bimbisara] மகனான அஜாதசத்துரு (Ajatashatru) மன்னனின் [the king Ajatasattu, the son of Bimbisara] தலைமையில் நடந்தது. இங்கே 3-1 & 2 இப்படி கூறுகிறது: இணையிலாதவராகிய பகவான் - ஐந்து கண்களேப் பெற்றிருந்த அண்ணல் - எண்பத்து நான்கு வருடங்கள் வாழ்ந்து உலகில் தமது கடமைகள் அனைத்தையும் எல்லாவிதத்திலும் நிறைவேற்றி முடித்ததும், குஸிகாகரத்தில் இரண்டு சால விருட்சங்களுக்கு இடையேயுள்ள புனிதமான இடத்தில், வைசாக பெளர்ணமி தினத்தன்று உலக ஜோதி அணையலாயிற்று. இங்கு வைசாக பெளர்ணமி என்பது, புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளாகும் இங்கே ஐந்து கண்கள் என்பது, [1] சாதாரணக் கண் – மனிதர்களுக்கு பொதுவான கண், உட்புற உலகைப் பார்க்கும் திறன். [2] தெய்வீகக் கண் – இது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன் ஆகும், இது தொலைதூர இடங்கள், மறைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் இருப்பின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள உயிரினங்கள் உட்பட மனித உலகத்திற்கு அப்பால் பார்க்க அனுமதிக்கிறது. இது கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்கவும் உதவும் சக்தி. [3] ஞானக் கண் – ஞானம் வாய்ந்த பார்வை, எல்லா விடயங்களின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ளும் திறன். [4] அகில பார்வைக் கண் – பிரபஞ்சத்தில் உள்ள மற்றும் நடக்கும் அனைத்தையும் அறியும் புத்தரின் திறமை இதுவாகும். இது முழுமையான மற்றும் வரம்பற்ற அறிவைக் குறிக்கிறது. [5] முத்திக் கண் – முத்தியின் (நிர்வாணம் / மோட்சம்) உண்மை பாதையை அறிந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் அறிவு. என்றாலும், மகாவம்சத்தின் தொடர்ச்சியான சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தின் படி, புத்தர் எண்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்று கணக்கிடுகிறது [624 - 544 = 80]. எனினும் புத்தர் எண்பது அல்லது எண்பத்து நான்கு ஆண்டுகள் வாழ்ந்தாரா என்பது இந்த ஆய்வின் நோக்கம் அல்ல. ஆனால் ஒரு முரண்பாடு இங்கு தெரிகிறது. எது என்னவென்றாலும், புத்தர் எண்பது வயது வரை வாழ்ந்தார் என்பது பொதுவாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அத்தியாயம் 4 & 5 இரண்டாவது மற்றும் மூன்றாவது பௌத்த சபை பற்றியது. புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது பௌத்த பேரவை நடைபெற்றது. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் பல தந்தை கொலைகள் [parricides] பதிவாகியுள்ளன. அத்தியாயம் 4 இப்படி ஆரம்பிக்கிறது: 1,அஜாதசத்துருவினுடைய [Ajatashatru / Ajatasattu] மகன் உதயபத்ரகன் [Udayin or Udayabhadra அல்லது உதயணன்], இத் துரோகி தந்தையைக் கொன்றுவிட்டு பதினறு வருடம் ஆண்டான். 2. உதயபத்ரகனுடைய மகன் அனுருத்திரன் [Anurudhha] தனது தந்தையைக் கொன்றான். அனுருத்திரனுடைய மகன் முண்டன் [Munda] என்பவனும் அதே போல் செய்தான். 3. துரோகிகளும் முட்டாள்களுமான இந்த குமாரர்கள் ஆட்சி நடத்தினர். இந்த இரண்டு பேர்களுடைய ஆட்சியில் எட்டு வருடங்கள் கழிந்தன. 4. முண்டனுடைய மகன் நாகதாசகன் [Nagadarshaka ] தனது தந்தையைக் கொன்றான். இந்தக் கொடுமையைச் செய்தவன் பிறகு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினன். 5. பிரஜைகள் வெகுண்டெழுந்தனர். "தந்தையைக் கொல்பவர்கள் வம்சமாக அரசு இருக்கிறதே" என்று. பிறகு, சிசுநாகன் [Shishunaga] என்ற பெயருடைய மந்திரியை அரசனாக்கினார். அவருடைய மகனும் பின் அரசனுமான கலாசோக [கலாசோகர் / Kalashoka or Kakavarna] தலைமையில் தான் இரண்டாவது பௌத்த பேரவை நடந்தது, மேலும் அது எட்டு மாதங்கள் தொடர்ந்தது. எனினும் இந்திய வரலாற்று ஆதாரங்கள் எதிலும், உதாரணமாக, சமகால இந்திய கல்வெட்டுகளோ அல்லது நூல்களோ கலாசோகர் என்ற பெயரில் ஒரு அரசனைக் எங்கும் குறிப்பிடவில்லை . சில அறிஞர்கள் கலாசோகனை ஒரு கற்பனை அரசராகக் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இந்த அத்தியாயம் இலங்கைக்கு எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லை. Part: 66 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 3 is about the First Buddhist Council that took place in India, and it has no direct historical connection with Lanka. This council commenced four months after the Buddha’s death, Mahaparinirvana, and continued for seven months. The Council took place under aegis of the king Ajatasattu, the son of Bimbisara. Here 3-1 says: WHEN the Conqueror the incomparable, he who has the five eyes [The five eyes possessed by the Buddha are the bodily eyes (mamsacakkhu), the heavenly eye (dibba ) by which he sees everything that comes to pass in the universe, the eye of understanding (knowledge), the eye of omniscience, and finally the Buddha-eye by means of which he beholds the saving truth.] / had lived eighty-four years and had fulfilled all his duties in the world. The detail given in the Culavamsa, the continuation of the Mahavamsa, works out that the Buddha lived for eighty years [624 - 544 = 80]. It is irrelevant to the purpose of this analysis whether the Buddha lived for eighty or eighty four years, but there is an anomaly. It is generally agreed that the Buddha lived to the age of eighty. Chapter 4 & 5 are about second and third Buddhist Council. The Second Buddhist Council was took place in India one hundred years after the Buddha’s death. Many parricides are reported at the start of this chapter. [Chapter 4 / WHEN Ajatasattu's son Udayabhaddaka had slain him he, the traitor, reigned sixteen years. Udayabhaddaka's son Anuruddhaka slew (his father) and Anuruddha's son named Munda did likewise. Traitors and fools, these (sons) reigned over the kingdom; in the reign of these two (kings) eight years elapsed. Hun-la's son Nagadasaka slew his father and then did the evildoer reign twenty-four years. & so on] This council took place under the aegis of the king Kalasoka, and continued for eight months. There is no reference to a king by the name Kalasoka in any of the Indian sources. Some scholars consider Kalasoka a fictitious king. However This chapter also has no historical relevance to Ceylon. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 67 தொடரும் / Will follow துளி/DROP: 1943 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 66 https://www.facebook.com/groups/978753388866632/posts/32868952312753325/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 65 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 65 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 2 புத்தரின் குலத்தைப் பற்றியது, இலங்கையில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகள் பற்றியது அல்ல. புத்தரின் உடனடி முன்னோர்களின் பெயர்கள் மற்றும் அவரது தந்தையின் சகோதரர்களின் பெயர்களும் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மாயா அல்லது மகா மாயா [Maya] என்பவள் சித்தார்த்தாவின் [Siddhattha] தாய் என்றும், புத்தர் பிறந்த சில நாட்களில் மாயாதேவி இறந்து விட்டதால், வளர்ப்புத் தாயாக, பஜாபதி [மகாபிரஜாபதி கௌதமி /Mahāprajāpatī Gautamī / Mahāpajāpatī Gotamī or Pajapati] பராமரிப்பாளர் ஆனார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தா பத்தகச்சனை [யசோதரை / Yaśodharā or Yashodhara or Bhadrakātyāyani] மணந்தார், ராகுலன் [Rahula] அவர்களின் மகன், 2-24 இல் போதி சத்துவராகிய [Bodhisatta / அதாவது "அறிவொளிக்கான அல்லது ஞானத்துக்கான பாதையில் இருப்பவர்" - அடிப்படையில் மற்றவர்கள் அறிவொளியை அடைய உதவுவதற்காக தங்கள் சொந்த நிர்வாணத்தை தாமதப்படுத்துவதன் மூலம் புத்தராக மாற முயற்சிப்பவர்; இது பௌத்தத்தில் ஒரு முக்கிய கருத்தாகும்.] இளவரசர் சித்தார்த்தருடைய ராணி [மனைவி] பத்தகச்சனா; அவரது மகன் ராகுலா என குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், "The harvard oriental series volume 28 buddhist legends" என்ற புத்தகத்தில், பக்கம் 2 இல் சித்தார்த்தா தனது பத்தொன்பது வயதில் தனது உறவினரான யசோதராவை மணந்தார் என்று கூறுகிறது. வேறு சில ஆவணங்களின் படியும் யசோதரா என்பது சித்தார்த்தாவின் மனைவியின் பெயராகத் தெரிகிறது. என்றாலும், சித்தார்த்தாரின் மனைவியின் பெயர் பத்தகச்சனாவா அல்லது யசோதராவா என்பது முக்கியமல்ல. இருப்பினும், இந்த முரண்பாடுகள் நாளிதழிலில் உள்ள வேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகின்றன. கௌதம புத்தரின் சரியான பிறப்பு மற்றும் இறப்பு தேதிகள் நிச்சயமற்றவை, ஏனெனில் வெவ்வேறு புத்த மரபுகள் அவற்றை வித்தியாசமாக பதிவு செய்துள்ளன. அவைகளில் இரண்டு முக்கிய காலக்கெடு: [1] நீண்ட காலவரிசை ["long chronology"] / இலங்கை & தென்கிழக்கு ஆசியா: இது இலங்கை வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டது (சூளவம்சம் அல்லது சூலவம்சம் மற்றும் மகாவம்சம் போன்றவையை / as per the Culavamsa, the continuation of the Mahavamsa.). பேரரசர் அசோகரின் முடிசூட்டு விழாவுக்கு 298 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் பிறந்தார், அதற்கு 218 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார், மற்றும் கிமு 326 இல் அசோகர் அரசரானார் என்று இந்த நூல்கள் கூறுவதால், புத்தரின் தேதிகள்: பிறப்பு: கிமு 624 மரணம் (பரிநிர்வாணம் / parinirvana): கிமு 544 [பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும்] [2] குறுகிய காலவரிசை ["short chronology"] / இந்திய மற்றும் திபெத்திய ஆதாரங்கள்: புத்தர் அசோகரின் முடிசூட்டுக்கு 180 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார், அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார், மற்றும் கிரேக்க பதிவுகளின் அடிப்படையில், அசோகரின் உண்மையான முடிசூட்டு விழா கிமு 268 இல் நடந்தது எனக் கணிக்கப்பட்டது. இதனால் புத்தரின் தேதிகள்: பிறப்பு: கிமு 448 இறப்பு: 368 கி.மு எதுவென்ன வென்றாலும், பொதுவாக, பாரம்பரியமாக, கி மு 544 ஐ எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே இலங்கை, மியான்மர் மற்றும் இந்தியாவில், புத்த சகாப்தத்தை (BE) ஆண்டு 1 அல்லது கிமு 544 என தேதியிடுகிறது. அதாவது பிந்தைய தேதியிலிருந்து புத்த சகாப்தத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதேவேளை, தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸில், அதை ஆண்டு 0 அல்லது கிமு 543, எனக் கணக்கிடுகிறார்கள். எனவே, சுருக்கமாக, இலங்கை பாரம்பரியத்தின் படி: புத்தர் கிமு 624 இல் பிறந்தார். 35 வயதில் (கிமு 589) ஞானம் அடைந்தார். கிமு 544 இல் காலமானார். இது புத்த நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. Part: 65 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The chapter2 is about Buddha’s clan and not about any real historical events that took place in Lanka. The names of the Buddha's immediate forefathers and the names of his father’s brothers are also given in this chapter. Maya was the mother of Siddhattha and she died soon after the marriage and Pajapati became the caretaker mother. Siddhattha married Bhaddakaccana and Rahula was the son, 2-24 [24 The consort of the prince Siddhattha, the Bodhisatta, was Bhaddakaccana ; her son was Rahula.]. However The Reference "The harvard oriental series volume 28 buddhist legends" says on page 2 that Siddhattha married his cousin Yasodhara when he was nineteen years of age. Yasodhara seems to be the name of the wife of Siddhattha as per some other documents too. It is not very important whether the name of the wife of Siddhatta is Bhaddakaccana or Yasodhara. However, these anomalies are there to indicate the deficiencies in the chronicle. The dates of Gautama's birth and death are uncertain. Buddhist texts present two chronologies which have been used to date the lifetime of the Buddha. The "long chronology," from Sri Lankan chronicles, states that the Buddha was born 298 years before the coronation of Asoka, and died 218 years before his coronation. According to these chronicles Asoka was crowned in 326 BCE, which gives the dates of 624 and 544 BCE for the Buddha [as per the Culavamsa, the continuation of the Mahavamsa.] which are the accepted dates in Sri Lanka and South-East Asia. Indian sources, and their Chinese and Tibetan translations, contain a "short chronology," which place the Buddha's birth at 180 years before Asoka's coronation, and his death 100 years before Asoka's coronation. Following the Greek sources of Asoka's coronation, this dates the Buddha at 448 and 368 BCE. So, According to the traditional dating the Buddha was born in 624 BC, attained Awakening 35 years later in 589 BC and entered Parinibbāna in 544 BC. It is from the latter date that we take the Buddhist Era (Thailand, Cambodia and Laos date it as year 0 or BC 543, Sri Lanka, Myanmar and India as year 1 or BC 544). நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 66 தொடரும் / Will follow துளி/DROP: 1942 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 65 https://www.facebook.com/groups/978753388866632/posts/32853127131002510/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
நன்றி
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 64 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 64 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை புத்தர், கேவத்தா (கேவாத்தா) வுக்கு கூறிய கேவத்தா சுத்தத்தில் (Kevatta (Kevaddha) Sutta), தெளிவாகக் தன் நிலைப்பாட்டை கூறியிருக்கிறார். புத்தர், தான் மறைக்கப்பட்ட, இரகசியமான மற்றும் மர்மமான, குறிப்பாக இயற்கைக்கு அப்பாற்பட்ட [அமானுஷ்ய] சக்தியின் அற்புதங்களையும் தொலைமனமுணர்தலையும் [டெலிபதியின்] அதிசயத்தையும் [the miracles of psychic power and miracle of telepathy.] விரும்பவில்லை, நிராகரிக்கிறேன் மற்றும் வெறுக்கிறேன் என்று தெளிவாகக் கூறுகிறார். அது மட்டும் அல்ல, புத்தர் இரக்க குணம் கொண்டவர், மனிதர்களிடையே அரிதாகவே காணப்பட்டார். அவரது அனுதாபம், அனைத்தும் தழுவியதாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது. புத்தரின் போதனையானது அனைத்து உயிர்களிடத்தும் உலகளாவிய அன்பு மற்றும் இரக்கத்தின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வத்தூபம சூத்தம் (மஜ்ஜிம நிகாயம் / Majjhima Nikaya 7) என்றால், ஒரு பொருளுக்குப் (வத்து) ஒப்பீடு (உபமா) என்பதாகும். சங்கத்தின் ஒரு உறுப்பினரான உத்திய சந்தி மிகவும் தற்பெருமை கொண்டவனாக இருந்தான். புத்தர் அவருக்கு இந்த உபதேசத்தை வழங்கினார். இதில் முக்கிய கருத்து என்னவென்றால்: தர்மத்தை உணர மனம் தூய்மையாக இருக்க வேண்டும். தற்பெருமை, ஆசை, கோபம் ஆகியவற்றை விடுதல் வேண்டும். புத்திசாலித்தனம் மட்டும் போதாது, நல்ல பண்புகளும் வேண்டும். நல்ல எண்ணங்களைக் கொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும். என்பதாகும். அதேபோல, லக்ஷண சூத்தம் (Digha Nikaya 30) என்றால், லக்ஷண என்றால் அம்சங்கள் அல்லது தனிப்பட்ட இலட்சணங்கள் என்பதாகும். இந்த சூத்தத்தில், புத்தரின் 32 விசேஷ உடல் அம்சங்கள் பற்றிய விளக்கத்தைக் காணலாம். புத்தர் ஒரு மாபெரும் ஒளிவாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தார். அவருடைய அழகிய மற்றும் விசேஷமான உடல் அமைப்பு பலரையும் கவர்ந்தது. துறவிகள், அரசர்கள், மற்றும் பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது, புத்தர் இந்த 32 இலட்சணங்கள் அவருடைய முந்தைய நல்ல கர்மங்களின் விளைவாக வந்தன என்று கூறினார். சுருக்கமாக, லக்ஷண சூத்தம் எதையும் அமானுஷ்யமாக பார்க்காமல், நல்ல செயல்களின் மூலம் உயர்ந்த நிலை பெறலாம் என்று உணர்த்துகிறது. புத்தர் ஒரு மாமேதாவியாக, மாபெரும் போதகராக ஆனது அவரது நல்ல மனநிலை, தர்ம வழி, மற்றும் கடந்த பிறவிகளில் செய்த கர்மங்களின் பலனாகும் என்கிறார். பௌத்தம் உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றாகும் என்பதையும், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அவரின் உண்மையான போதனை வழியில், மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்றும், தியானம், ஆன்மீகம் மற்றும் உடல் உழைப்பு மற்றும் நல்ல நடத்தை ஆகியவை ஞானம் அல்லது நிர்வாணத்தை அடைவதற்கான வழிகள் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். இதைத்தான் புத்தபிக்குகள் கடைபிடிக்கவேண்டும். ஒழுகவேண்டும். சாதாரண பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும். அப்படி எத்தனை புத்த பிக்குகளை இலங்கையில் பர்மாவில் காண்கிறீர்கள்? அப்படியானால், அவரின் இலங்கைக்கான மூன்று வருகைகளிலிருந்தும் நீங்கள் என்ன நல்ல நடத்தைகளைக் கற்றுக் கொண்டீர்கள்? இது உண்மையான புத்தரின் வருகையா அல்லது வெவ்வேறு நோக்கங்களுக்காக இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தயவு செய்து சிந்தித்து முடிவு செய்யுங்கள்? இன்னும் ஒரு வரலாற்று உண்மையையும் நான் கூறவேண்டும். கடவுளைப் பற்றி அவர் [புத்தர்] அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அதோடு, தானே கடவுள் என்றும் அவர் ஒருபோதும் உரிமை பாராட்டவில்லை. பார்க்கப்போனால் தன் சீடர்களுக்கு அவர் இப்படி சொன்னதாக குறிப்பிடப்படுகிறது: “ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்தாலும், அவருக்கு என்னுடைய அன்றாட வாழ்க்கை மீது அக்கறை இருக்குமென்று கற்பனை செய்யக்கூட முடியவில்லை, மனிதனுக்கு உதவி செய்ய விருப்பமுள்ள அல்லது அதற்குரிய சக்தியுள்ள எந்தக் கடவுளும் இல்லை.”நிச்சயமாகவே கடவுள் நம்பிக்கையை கற்பிக்கவுமில்லை, அது அவசியம் என்று சொல்லவும் இல்லை” என்கிறார். புத்த மதத்தை பின்பற்றுகிற சராசரி நபர்கள் இப்போது விக்கிரகங்களையும் நினைவுச் சின்னங்களையும், கடவுட்களையும் பேய்களையும், ஆவிகளையும் முன்னோர்களையும் வணங்குவதிலேயே மூழ்கிப்போயிருக்கிறார்கள்; அதோடு புத்தர் கற்பிக்காத அநேக சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதிலுமே மூழ்கிப்போயிருக்கிறார்கள். இலங்கையில் இயக்கர்கள், நாகர்கள், என்ற இரு குழுக்கள் இருந்ததாகவும், இயக்கர்கள் எலு மொழியையும் நாகர்கள் தமிழையும் பேசியதாகவும் எலு மொழி பாளியுடன் கலந்து சிங்கள மொழியாக மாறியதாகவும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் எலு, பாளியுடன் கலந்ததற்கும் அது சிங்களமாகப் பரிணாமம் அடைந்ததற்கும் எந்தவொரு தர்க்கரீதியான வரலாற்று ஆதாரங்களும் காணப்படவில்லை. 12ம் நூற்றாண்டுக் காலப் பகுதிவரை தமிழ் - சிங்களம் என்ற மொழி ரீதியான முரண்பாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களை யாரும் குறிப்பிட்டதில்லை. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டி அரசனால் சிறைப் பிடிக்கப்பட்ட Robert Knox என்ற ஆங்கிலேயர், அங்கிருந்து தப்பி வடக்கு நோக்கிச் சென்ற போது அனுராதபுரத்தை அடைந்தார். பின்னர் 1681இல Historical Relation of the Island of Ceylon என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்த நூலில், அனுராதபுரத்தை அடைந்த Robert Knox அந்த மக்களுக்குச் சிங்களம் விளங்கவில்லை என்றும், அவர்கள், தன்னை தலைவனிடம் தான் கூட்டிச் செல்லப்பட்ட போது, அவனுடன் உரையாடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது என்றும் அங்கிருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் எழுதியிருந்தார். இலங்கையில் பௌத்த மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுராதபுரத்திலேயே சிங்களமொழி பரந்தளவில் பேசப்படாது இருந்திருக்குமானால், இந்த மொழியின் பரந்துபட்ட வளர்ச்சி என்பது மிகவும் அண்மைக் காலத்துக்குரியது என்று புலனாகின்றது Part: 64 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Please note that In the Kevaddha Sutta (Digha Nikaya Sutta 11 in Maurice Walshe’s translation), The Buddha says, He dislikes, rejects and despises the miracles of psychic power and miracle of telepathy. The Buddha was possessed of a quality of compassion, seldom seen among men. His sympathy was all embracing and spontaneous. The Buddha’s teaching is based and built on a conception of universal love and compassion for all living beings. In the Vatthupama Sutta (Majjhima Nikaya 7) the Buddha says, “he abides pervading that all-encompassing world with a mind imbued with loving kindness, abundant, exalted immeasurable, without hostility, without ill will. He abides pervading one quarter with the mind imbued with compassion.” and “In the Lakkahan Sutta (Digha Nikaya sutta 30) it is stated, “the Tathagata rejects harsh speech, abstains from it, spoke what was blameless, pleasing to the ear, agreeable, reaching the heart, urbane, pleasing and attractive to the multitude.” Please note that Buddhism is one of the world's largest religions and originated 2,500 years ago in India. Buddhists believe that the human life is one of suffering, and that meditation, spiritual and physical labor, and good behavior are the ways to achieve enlightenment, or nirvana. If so, What good behaviors you have learnt from all three visits. Please think and decide Whether this would be a real Buddha's visits or fabricated one for different purposes ? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 65 தொடரும் / Will follow துளி/DROP: 1941 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 64 https://www.facebook.com/groups/978753388866632/posts/32842378748744015/?
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 04 அத்தியாயம் 4 - கதிர்காமம் மற்றும் மட்டக்களப்புக்கு ஒரு யாத்திரை ஒரு நாள் முழுமையான ஓய்வின் பின், யாழ்ப்பாணத்தின் அறிவுசார் இதயத்தை விட்டுவிட்டு கதிர்காமத்தின் ஆன்மீக நெருப்புக்காக, ஆரனும் அனலியும் கதிர்காமம் நோக்கி ஒரு பயணத்தை மேற்கொண்டனர். தடாகங்கள், நெல் வயல்கள் மற்றும் காடுகளைக் கடந்து செல்லும் போது, அனலி ஜன்னலில் சாய்ந்தாள், அவள் கண்கள் நாரைகளின் கூட்டத்தைப் பின்தொடர்ந்தன. "தமிழர்களும் சிங்களவர்களும் ஏன் கதிர்காமத்தை வணங்குகிறார்கள் தெரியுமா?" என்று அவள், அவனிடம் கேட்டாள். ஆரன் தலையசைத்தான். "ஏனென்றால் இங்கே முருகன் தமிழ் கடவுள் மட்டுமல்ல - அவர் தீவின் பாதுகாவலர். அவர்கள் அவரை ஸ்கந்தன் என்று அழைக்கிறார்கள், நாங்கள் அவரை கதிர்காம முருகன் என்று அழைக்கிறோம். அரசியல் பிரிக்கும் இடத்தில் பக்தி ஒன்றுபடுகிறது." என்றான். ஆரனுக்கு இப்ப வரலாறு தானாக புரிய ஆரம்பித்து விட்டது. அவர்கள் வந்தபோது, கோயில் மணிகள் ஒலித்தன. கற்பூரம் மற்றும் மல்லிகையின் நறுமணம் காற்றை நிரப்பியது. சிங்கள பக்தர்கள் தாமரை மலர்களை ஏந்திச் செல்ல, தமிழ் யாத்ரீகர்கள் 'முருகனுக்கு அரோஹரா' பாடினர். இங்கே, மொழியின் எல்லைகள் மங்கலாகின - நம்பிக்கை அவற்றை ஒன்றாக இணைத்தது. புலம்பெயர்ந்த நாடுகளில் சிதறிக்கிடக்கும் தனது குடும்பத்திற்காக அனலி ஒரு பிரார்த்தனையை கிசுகிசுத்தாள். ஆரன் தன் தாய் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்று மௌனமாக பிரார்த்தனை செய்தான். மாலை தீப வழிபாடு தொடங்கியதும், ஆரன் அனலியை நோக்கி சாய்ந்தான். “உனக்கு தெரிகிறதா? இங்கே, அன்பும் பக்தியும் தான் மக்கள் மனதில். முருகன் இப்படியான காடுகளில்தான் குறத்தி வள்ளியைத் தேர்ந்தெடுத்தான். தெய்வீக அன்பு - என்றும் சாதி, சமூகம் மற்றும் மக்களுக்கிடையான தூரத்தை வெல்ல வேண்டும் என்பதை அவர் [முருகன்] நிரூபித்தார்.” என்றான். கருணை பொழியும் கதிர்காம முருகா கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன் கண்கள் இரண்டும் அழகில் மயங்குது சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள் சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய் சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட சங்கமம் ஆகிறாள் என்னுடன் இன்று அவள் கண்கள் மின்னின. “நாங்களும் அப்படித்தான் ஆரன். நீ கனடா நான் யாழ்ப்பாணம். நாங்களும் இந்தக் காடுகளில் எல்லைகளைக் கடக்கிறோம்.” என்றாள். பின் இருவரும், கதிர்காம ஆலயத்தில் இருந்து திரும்பும் பொழுது, "எல்லாளனுடன் போர் தொடங்குவதற்கு முன், துட்டகாமினி கதிர்காமம் சென்றான் என்றும், 'என் கரங்களில் பலமில்லை, உன் அருள் தான் என்னை வழிநடத்தும்' என்று முருகனை வேண்டினான் என்றும், முருகன் புன்னகையுடன் கையில் இருந்த வேலை உயர்த்தி, அருள்வாக்கு அளித்ததாகக் சிங்கள மக்களிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது" என்றாள். ஆரனுக்கு சிரிப்பு தான் வந்தது, எல்லா உயிர்களுக்கும் நீதியாக 44 ஆண்டுகள், சமநிலையில் அரசாட்சி செய்தவனைக் கொல்ல தமிழ் ஆண்டவனே ஆசீர்வதித்தது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதன் பின் இருவரும் அடர்த்தியாக சந்தன மரங்கள் நிறைந்த காடாக உள்ள கதிர்காம மலை போக முடிவெடுத்தார்கள். இதை கதிர்மலை அல்லது கதிரை மலை என்று கூறுவர். மலை மேல் செல்ல ஜீப் வசதிகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் படிகள் வழியே நடந்து ஏறிச் சென்றார்கள். அக்காவின் மகள் ஜீப்பில் சென்றார். அவர்கள் வழி வழியே இளைப்பாறி, மெதுவாக தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டு கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஏறினார்கள். மேலே எற எற மெளனமான குளிர் மெதுவாக அவர்களை அணைத்தது. ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கும் மழைத்தூறல் மரங்களின் இலைகளில் இருந்து நழுவி நழுவி விழுந்துகொண்டு இருந்தன. இருபுறமும் படர்ந்து கூடவே வந்த மலைகளின் முகடுகளை எல்லாம் போர்த்திக் கொண்டு நகர்ந்து சென்றன சில மேகங்கள். பக்தி பரவசம் கொண்ட அந்த சூழலிலும் அவர்கள் தங்கள் காதல் பரவசத்தை மறக்கவில்லை. அவர்களின் உரையாடல் பல நேரங்களில் இளமைகளின் காதல் உணர்வில் அரும்பிய பேச்சாகவே இருந்தன. கண்களில் ஒரு காதல் தேடல் கரை புரண்டு ஓடுது மனதில் கதிரவன் ஒளியில் ஆரன் மட்டுமே கந்தன் கடம்பனாய் என்னை வாழ்த்துகிறேன் உன்னைக் காண தனிமை ஏங்குதே ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே வள்ளி நானோ முருகன் நீயோ வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ அவர்கள் இறுதியாக மலையுச்சியில் நடப்பட்டுள்ள வேல் வணங்கி, இம்முறை அக்கா மகளுடன் ஜீப்பில் திரும்பினார்கள். அவர்களது பயணத்தின் அடுத்த கட்டம் அவர்களை கிழக்கு நோக்கி, வந்தோரை வாழவைக்கும் இன்முகமும், ஊரெங்கும் குளிர்பரப்பும் வாவிகள் [ஏரிகள்], புராணக்கதைகள் மற்றும் பாடல்களின் நிலமான மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றது. ஆங்கே அவர்கள் இருவரும் வாவிக்கு அருகில் நின்று நிலவொளியை ரசித்துக் கொண்டு நின்றார்கள். அப்பொழுது, நீர் ஓடும் ஒலி, அவர்களின் மனதிற்கு அமைதியையும் புத்துணர்வையும் கொடுத்துக் கொண்டு இருந்தது, தாமும் அதற்கு ஆதரவு கொடுப்பது போல, பறவைகளின் ஆரவார ஒலி அமைந்து இருந்தது. "இந்த நீரொலியும், பறவைகளின் கீதமும் அதனோடு சேர்ந்து வீசுகின்ற தென்றலும் ... எனக்கு, எங்களை வாழ்த்தும் ... ஒரு ஆசீர்வாதம் போல இருக்கிறது. உனக்கு ஆரன் ? என்று கேட்டாள். ஆரன் (சிரித்துக் கொண்டு), "ஆமாம், இந்த ஒலிகள், அன்பின் மொழி போன்றது. கண்ணுக்குத் தெரியாத ஒன்று - ஆனாலும், நதி கடலுடன் இணைவது போல, அது நம்மைச் சுமந்து செல்கிறது, இணைக்கிறது." என்றான். பின், “மீன் பாடும் ஒலியை நீ கேட்டாயா?” அனலி திடீரென்று கேட்டாள். “ஆம்,” ஆரன் சிரித்தான். “17 ஆம் நூற்றண்டுக்ளில் இருந்து ஒருவகை மீன் பாடுவதை மீனவர்கள் கேட்டுள்ளார்கள் என்று குறிப்புகளில் உண்டு. எனினும் மட்டக்களப்பின் பாடும் மீனின் மெல்லிசையை உண்மையான காதலர்கள் மட்டுமே கேட்க முடியும் என்று என் பாட்டி சொல்லுவதைக் கேட்டுள்ளேன்.” என்றான். இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் “நீரரமகளீர்” இசைக்கும் இசை என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு என அழைக்கப்படுவதாக, தன் தாத்தா பாட்டிக்கு கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது என ஆரன் அவளிடம் எடுத்துக் கூறினான். இப்படி சிறப்புற்று விளங்கும் மீன்பாடும் மட்டு நகருக்கு வடக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் கிரான் பிரதேச செயலக எல்லைக்குள் சந்திவெளிக்கு அப்பால் குறிஞ்சி, முல்லை மருதம் என்று மூன்று நிலங்களும் ஒருங்கே அமைந்து, பச்சை ஆடைபோற்றி படர்ந்து பூத்துச் சிரிக்கும் 'திகிலி' என்று அம்மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திகிலிவெட்டை எனும் கிரமத்துக்கு அதன் பின் அவர்கள் சென்றனர். சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி சோம்பலில்லாம ஏர் நடத்தி கம்மா கரையை ஒசத்திக் கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி சம்பா பயிரை பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு... எனும் பட்டுக்கோட்டையின் பாட்டை செயல்வடிவில் அங்கு அவர்கள் பார்த்து ரசித்தனர். கலித்தொகையில் உள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களில் 37 ஆவது பாடல் அப்பொழுது அனலிக்கு நினைவுக்கு வந்தது. அங்கே குறத்தி ஒருத்தி தன் காதல் குறித்து தோழியிடம் கூறுகிறாள். “நான் வயலில் இருக்கும் போதெல்லாம் வில்லும் அம்பும் ஏந்திய இளைஞனொருவன் தப்பி ஓடிய மானின் காலடி தேடிக் கொண்டு வருவது போல நடித்துக் கொண்டு தினமும் வருவான்; வந்து என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான்; ஆனால் எதுவும் பேசாமல் போய் விடுவான். இரவில் நான் படுக்கையில் இருக்கும் போது இவன் ஏன் வருகின்றான் என்று நினைத்துப் பார்த்தேன். அவன் பார்வையில் என் மேல் அவனுக்கு விருப்பம் உள்ளது போலத் தோன்றியது. அதுபற்றி அவனோடு பேச நினைத்தேன்; ஆனால் நான் பெண்; முன் பின் தெரியாதவன்; எப்படி நானே பேசத் தொடங்குவது என்று நினைத்து பேசாமல் இருந்தேன்; என்கிறது அந்த பாடலில் ஒரு பகுதி அவள் அதை ஆரனிடம் ஒரு வித வெட்கத்துடன் கூறினாள். ஆரனுக்கு அதன் அர்த்தம் புரிந்தது. அந்த வெட்டவெளி வயலில், அவன் அவளை தன்னுடன் நெருக்கமாக அனைத்து, இப்ப காதில் மெல்ல கூறாயோ என்றான். அவள் திகைத்தாலோ என்னவோ, மௌனமாக ஆனால் அணைத்த கைக்குள்ளேயே அப்படியே நின்றாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் துளி/DROP: 1940 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 04] https://www.facebook.com/groups/978753388866632/posts/32821724707476086/?
-
"மூன்று கவிதைகள் / 14"
"மூன்று கவிதைகள் / 14" 'புகைப்படக் கவிதை' தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும் மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ------------------------------------------- 'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு' மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே! கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ------------------------------------------- 'திசையறியாத மனிதர்கள்' அநீதி பாகுபாடு இரண்டிலும் தவித்து சோற்றுக்கும் வீட்டுக்கும் வழிகள் அற்ற அகதிகளே திசையறியாத மனிதர்கள் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1939 ["மூன்று கவிதைகள் / 14" https://www.facebook.com/groups/978753388866632/posts/32806741562307734/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 63 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 63 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை புத்தர், ஞானமடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் இரண்டு நாகர் அரசர்களுக்கு இடையே இரத்தின அரியணை [சிம்மாசனம்] தொடர்பாக போர் ஏற்படப் போவதை உணர்ந்தார். உடனே, புத்தர் இலங்கைக்கு பறந்து சென்று, நாகர்களை பயமுறுத்தி, தனக்காக அந்த அரியணையைப் பெற்றார். இங்கு, உலகைத்தை துறந்த புத்தரின் கொள்கையை, மகாவம்சம் வெளிப்படையாக மீறுகிறது. புத்தர், தனது 29 வயதில், தனது சொந்த அரியணையைத் துறந்து, தனது இளம் மனைவி, மற்றும் பிறந்த குழந்தை ராகுலன் [ராகுலா / Rahula] மற்றும் அரச அரண்மனை வாழ்க்கையின் சுகம் போன்றவற்றை விட்டு வெளியேறினார். புத்தர் பிம்பிசார மன்னரின் [King Bimbisara] தலைநகரான ராஜகஹாவுக்கு [ராஜகஹா, ராஜ்கிர் என்றும் அழைக்கப்படுகிறது, இது மகத இராச்சியத்தின் தலைநகராக இருந்த இந்தியாவின் ஒரு பண்டைய நகரமாகும். / Rajagaha, also known as Rajgir, was an ancient city in India that was a capital of the Magadha kingdom.] கால்நடையாகச் சென்றார். அங்கு பிம்பிசார புத்தருக்கு தனது அரசை வழங்கினார். புத்தர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். எனவே புத்தர் இரண்டு முறை அரியணையைத் துறந்தார், புத்தர் ஞானம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிம்மாசனத்தை ஏற்றுக்கொண்டார் என்பது அபத்தமானது. 1- 58, 59 & 60 பார்க்கவும். போர்க் களத்துக்கு மேலாக வானவெளியில் சஞ்சரித்த வண்ணம் மன இருளை அகற்றும் மகானாகிய குருநாதர், நாகர்கள் மீது அடர்ந்த இருள் கவியச் செய்தார். பீதியினால் துயரமுற்றவர்களைத் தேற்றி மீண்டும் அங்கு ஒளி ஏற்படச் செய்தார். அருள் ஞானியைக் கண்டதும் அவர்கள் களிப்புடன் அவர்தம் பாதத்தைப் போற்றினர். பின்னர் அச்சந் தீர்க்கும் அண்ணல், அவர்களுக்குச் சமாதான நெறியைப் போதித்தார். போரிட்ட இரண்டு நாகர்களும் மகிழ்வுடன் ஒன்று பட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாக இருந்த சிம்மாசனத்தை புத்தருக்கே அளித்தனர். புத்தர் கீழே இறங்கி அங்கிருந்த அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாம தேரர், புத்தரின் புனிதம் அல்லது தெய்வீக ஒளியைக் குறித்துக் காட்டிட, வரையப்படும் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டப் படத்தை உண்மையில் களங்கப்படுத்துகிறார். அது மட்டும் அல்ல, இந்த நிகழ்வும், "நாகதீப வருகை இதோ முடிவடைகிறது" என்று முடிவுக்கு வருகிறது. அதே நிகழ்வு தீபவம்சத்தில், "இங்கு நாகர்களை வெல்வது முடிவடைகிறது.". அதாவது தீபவம்சம் வெளிப்படையாக நாகர்களை அடக்கி வெல்வதை மறைக்காமல் கூறும் அதே நேரத்தில், மகாவம்சம், அதே நிகழ்வை, [புத்தரின்] நாக தீப வருகை முடிவுக்கு வருகிறது என்று முடிகிறது. மகாநாம தேரர், இராஜதந்திர வசனங்களால் குற்றச் செயல்களை மறைப்பதை எவரும் உணரமுடியும்? அது தான் நாம் இன்றும் இலங்கை அரசிடம் காண்பது? நாக மன்னன் மணியக்கிகன் [Maniakkhika] புத்தரை கல்யாணியில் [Kalyani / இலங்கை பௌத்த மரபின்படி, இலங்கையில் "கல்யாணி" என்பது களனிப் பகுதியைக் குறிக்கிறது] உள்ள தனது இராச்சியத்திற்குச் வரும்படி கேட்ட அழைப்பை ஏற்று, புத்தர் தான் ஞானமடைந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கைக்கு மூன்றாம் தடவையாக, நாகத்தின் சக்தியின் இருப்பிடமான கல்யாணிக்குச் ஐந்நூறு தேரர்களுடன் பறந்து சென்றார். அங்கே இரத்தினங்கள் பதித்த மண்டபத்தின் கீழே பிக்குகளுடன் அமர்ந்தார். பின்னர், இரக்கமே உருவான பகவான், அங்கு உபதேசம் செய்த பின்பு எழுந்து அங்கிருந்து புறப்பட் டார் என்று மகாவம்சம் கூறுகிறது. இன்னும் ஒன்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது புத்தரின் மூன்றாவது வருகையும் போதனையும் ஆகும். அவ்வாறாயின், புத்தரின் மூன்றாம் வருகையின் பொழுது, புத்தருடன் ஐந்நூறு தேரர்கள் ஏற்கனவே வருகை தந்து, கூடியிருந்த பெரும் கூட்டத்திற்கு சமய உரை நிகழ்த்தி, அனைவரையும் பௌத்த மதத்திற்கு மாற்றியபின், சுமார் இருநூற்று முப்பது வருடங்களின் பின்னர், இலங்கையில் புத்த மதத்தை போதித்து நிலை நாட்டிட, மகிந்த தேரரின் வருகையின் அவசியம் என்ன? ஒருவேளை தேரர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணமாக இருக்கலாம்! மகிந்த தேரர் ஒரு கற்பனையில் கண்டுபிடித்த நபர் என்பதற்கு இந்த நம்பமுடியாத நிகழ்வும் ஒரு காரணமாகும். மகாவம்சத்தின் அத்தியாயம் 1 புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை உள்ளடக்கியது. புத்தரின் காற்றில் பறந்து வரும் மூன்று பயணங்கள் வெறுமனே கற்பனையான நிகழ்வுகளாகத் தான் இருக்க வேண்டும். மேலும் இந்த அத்தியாயம் இலங்கை வரலாறுகளுடன் எந்த தொடர்பும் இல்லை. புத்தர், மனிதனாக இருந்ததால், 500 தேரர்களுடன் சேர்ந்து காற்றில் பறக்கும் திறன் இருந்திருக்க முடியுமா? 'பறவையை கண்டான்.. விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான்' இது தான் நான் அறிந்தது. எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது லட்சக்கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டால், அவர்களுக்கு என்ன ஆனது? மீண்டும் அவர்களை மதமாற்றம் செய்ய மகிந்த தேரர் அனுப்பப்பட்டது ஏன் ? அல்லது புத்தர் சரியாக போதிக்கவில்லையா? கேவத்தா (கேவாத்தா என்றும் உச்சரிக்கப்படுகிறது / Kevatta) புத்தரைப் பின்பற்றிய நாலந்தாவைச் சேர்ந்த ஒரு வீட்டுக்காரராக பௌத்த நூல்களில் கூறப்படுகிறது. இவர் புத்தரை அணுகி, மக்களில் நம்பிக்கையைத் தூண்டுவதற்காக அற்புதங்களைச் செய்ய தனது துறவிகளை ஊக்குவிக்குமாறு பரிந்துரைத்தார். இருப்பினும், புத்தர் இந்த யோசனையை நிராகரித்தார், அமானுஷ்ய சக்திகளின் அற்புதக் காட்சிகள் ஞானத்தின் உயர்ந்த வடிவம் அல்ல என்று விளக்கினார். அதற்கு பதிலாக, புத்தர் மிகப்பெரிய அதிசயம் "அறிவுரையின் அதிசயம்" என்று கற்பித்தார் - ஞானம் மற்றும் புரிதல் மூலம் மற்றவர்களை அறிவொளியை நோக்கி கற்பிப்பதற்கான திறன். அது என்றார். அதாவது, புத்தர் பதிலளித்த போது, அங்கே மூன்று வகையான அமானுஷ்ய நிலைகள் இருப்பதாக கீழே உள்ளவற்றைக் கூறினார்: 1. பல மனிதர்களாகத் தோன்றுவது, கண்ணுக்குத் தெரியாமால் தன் உருவத்தை மறைப்பது, சுவர்களைக் கடந்து செல்வது, காற்றில் பறப்பது, தண்ணீரில் நடப்பது போன்ற அமானுஷ்ய சக்தியின் அற்புதம். இவை அனைத்தும் சாதாரண மக்களால் செய்ய முடியாத உடல் ரீதியான செயல்கள். 2. மற்றவர்களின் மனதைப் படிக்கும் அதீத சக்தி. 3. மனிதர்களின் மனவளர்ச்சிக்கு ஏற்ப, அவர்களின் நலனுக்காக, அவர்களுக்கு ஏற்ற தகுந்த முறைகளைப் பயன்படுத்தி வழிகாட்டும் அமானுஷ்ய சக்தி. மக்களைக் கவர்வதற்காக முதல் இரண்டு அமானுஷ்ய சக்திகளை தங்கள் சொந்த நலனுக்காக வெளிப்படுத்தும் ஒரு துறவி, ஒரு ஷாமன் [ஒரு ஷாமன் என்பவர் அமானுஷ்ய சக்திகளை பாவித்து ஆன்மீக குணப்படுத்துபவர் மற்றும் அதை பயிற்சி செய்பவர் / A shaman is a spiritual healer and practitioner] அல்லது ஒரு மந்திரவாதியின் செயல்பாட்டிலிருந்து வேறுபட்டவர் அல்ல என்று அவர் கற்பித்தார். இவ்வாறான உலக அதிசயங்களைச் செய்யும் துறவி, அவமானம் மற்றும் அருவருப்புக்கு ஆளாவதாக புத்தர் கூறினார். ஏனென்றால், இத்தகைய செயல்கள் மதம் மாறுபவர்களையும் பின்பற்றுபவர்களையும் ஈர்க்கலாம் மற்றும் வெற்றி பெறலாம், ஆனால் அவை அவர்களின் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவாது. அதனால்த் தான், இதுபோன்ற அற்புதங்களின் ஆபத்தை கண்டு, நான் அவற்றை வெறுக்கிறேன், நிராகரிக்கிறேன், ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். இப்போது சொல்லுங்கள், புத்தர் மழை, இருள் மற்றும் பலவற்றால் அவர்களின் இதயங்களை பயமுறுத்தி, தீவின் பூர்வீக குடிமகனை விரட்டியடிப்பாரா? மேலும் அவர் பல சகோதர, தேரர்களுடன் வான்வழியாக இலங்கைக்குச் பறந்து செல்வாரா? நீங்களே முடிவெடுங்கள். Part: 63 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The Buddha, after five years of his enlightenment, perceived the potential war about to occur between two Naga kings in Lanka over a gem set throne. The Buddha, flew to Lanka, and terrorized the Nagas, and got the throne for himself. The Mahavamsa violates the principle of the Buddha who renounced the world. The Buddha, when he was 29 years of age, renounced his own throne and walked away leaving his young wife, and the just born infant son Rahula, the comfort of the Royal palace life etc. The Buddha went on foot to Rajagaha, the capital of King Bimbisara where Bimbisara offered his kingdom to the Buddha. The Buddha declined the offer. The Buddha therefore renounced throne twice and it sounds absurd that the Buddha accepted a throne again, five years after attaining the enlightenment, Please check, 1- 58, 59 & 60 [58 Hovering there in mid-air above the battlefield the Master, who drives away (spiritual) darkness, called forth dread darkness over the nagas. Then comforting those who were distressed 59 by terror he once again spread light abroad. When they saw the Blessed One they joyfully did reverence to the Master's feet. Then preached the Vanquisher to them the 60 doctrine that begets concord, and both [nagas] gladly gave up the throne to the Sage]. Mahanama, the author of the Mahavamsa, is really tarnishing the halo image of the Buddha hollow. This event is described as; “Here ends the Visit to Nagadipa”. The same event is described in the Dipavamsa as; here ends the conquering of the Nagas. Mahanama is camouflaging the criminal actions with diplomatic verses. The Naga king Maniakkhika invited the Buddha to visit his kingdom at Kalyani, and the Buddha visited Kalyani, the seat of Naga’s power, eight years after his enlightenment. The Buddha again flew to Lanka along with five hundred brotherhoods, Theras. If so, What is the need for the visit by Mahinda Thera after about two hundred and thirty years as five hundred Theras have already visited, along with the Buddha and deliver religious address to an assembled large group of people to convert all of them to buddhism? Perhaps it was a pleasure trips for the Theras! This is also an indication that Mahinda Thera, is an invented personality. The Chapter 1 of the Mahavamsa covers the three visits of the Buddha to Lanka. The Buddha’s three flying visits are simply imagined events, and have no historical relevance to Ceylon. As the Buddha, being a human, couldn’t have had the ability to fly at all along with 500 Theras? What I still don't understand is, if millions of souls were converted to Buddhism when the Buddha visit to Srilanka, what happened to them? Why was Mahinda sent to convert them again ? or did the Buddha not teach correctly? When Buddha replied, "Kevatta, He said that there were three kinds of supernormal levels: 1. The marvel of supernormal power to appear as many persons, to pass through walls, to fly through the air, walk on water. All these are physical actions the ordinary people cannot perform. 2. The supernormal power to read other people's minds. 3. The supernormal power to be able to guide people according to their mental development, for their own good, using suitable methods that fit these people. He taught that a monk who displays the first two supernormal powers for their own sake in order to impress people, is no different from the performance of a shaman or a magician. The Buddha said that a monk who practices such worldly miracles is a source of shame, humiliation and disgust. This is because such actions may impress and win converts and followers, but they do not help them put an end to their suffering. He further said That is why, seeing the danger of such miracles, I dislike, reject and despise them. Now tell me will Buddha struck terror to their hearts by rain, darkness and so forth & chased away the original inhabitant of the island? and further will he fly through air with many number of brotherhoods, Theras to Lanka? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 64 தொடரும் / Will follow துளி/DROP: 1938 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 63] https://www.facebook.com/groups/978753388866632/posts/32800741409574416/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 62 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 62 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை புத்தர், இந்த பயங்கரவாத செயலுக்குப் பிறகு வட இந்தியாவில் உள்ள உருவேலவுக்குத் [Uruvela] திரும்பினார். இலங்கையின் பூர்வீகக் குடிகளை விரட்டியடிக்கும் இந்த அத்தியாயத்தின் முடிவு எளிமையாகச் சொல்லப்படுகிறது அல்லது விளக்கப்பட்டுள்ளது: 1 - 42 & 43 பார்க்கவும் : "இவ்வாறு மஹியங்கனை-தூபம் முடிந்தது. அவர் [புத்தர்] எங்கள் தீவை மனிதர்களுக்குத் தகுந்த வசிப்பிடமாக மாற்றியதும், வலிமை மிக்க ஆட்சியாளரும், வீரம் மிக்க வீரருமான புத்தர் உருவேலவுக்குப் புறப்பட்டார்" என்று முடிகிறது. "என்ன ஒரு உருமறைப்பு [camouflage] இது!" அதாவது, வாசிப்பவர்களின் புலனுக்கெட்டாத வகையில், உண்மையை மறைப்பதற்கான ஒரு உத்தியாக இது தெரிகிறது. அதே நேரம், தீபவம்சத்தில், உண்மையை உண்மையாகவே, "இங்கே இயக்கர்களின் அடிபணிதல்" என்று வெளிப்படையாக முடிவு விவரிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில், குறிப்பாக இன்றைய பீகாரில், கௌதம புத்தர் ஞானம் பெற்ற பகுதிக்கு உருவேலா என்பது ஒரு பண்டைய பெயர், இது இப்போது புத்த கயா என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு முக்கிய பௌத்த யாத்திரைத் தளமாகும். தொலைதூரத்தில் இருந்து வந்த ஒருவரால் அல்லது வேறு ஒரு நாட்டில் இருந்து வந்த ஒருவரால், இலங்கையின் பூர்வீக மக்களை அடிபணித்தலும் வெருட்டி பாரம்பரிய இடத்தில் இருந்து அகற்றுவதும் கட்டாயம் அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். இதை ஞானம் பெற்ற புனித புத்தர் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!. என்ன பாவம் செய்தாரோ புத்தர் நான் அறியேன்? இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)] என்பவரே இனப்படு கொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். இனத்தை [இனம், தேசம் அல்லது பழங்குடி] குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை ["கொலை, நிர்மூலமாக்கல்"] குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து 1944 ஆம் ஆண்டு "கைப்பற்றப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் ஆக்ஸிஸ் ஆட்சி" [Axis Rule in Occupied Europe] என்ற புத்தகத்தில் உருவாக்கப்பட்டது. ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும். இது முதலில் "ஒரு தேசம் அல்லது ஒரு இனக்குழுவின் அழிவு" [“the destruction of a nation or an ethnic group”] என்று பொருள் கொள்ளப்பட்டது. 1946 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் (UN) பொதுச் சபையானது, தீர்மானம் 96 இல் சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படு கொலையை ஒரு குற்றமாக உறுதி செய்தது, அதில் "கொலை என்பது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வதற்கான உரிமையை மறுப்பது போல, இனப்படுகொலை என்பது முழு மனித குழுக்களின் இருப்பு உரிமையை மறுப்பதாகும்; இவ்வாறு, மனித இருப்பதற்கான உரிமையை மறுப்பது, உண்மையில் மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றாகும். மேலும் தார்மீக சட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உணர்வுக்கும் மற்றும் நோக்கங்களுக்கும் முரணானது ஆகும். டிசம்பர் 9, 1948 இல், ஐ.நா பொதுச் சபை தீர்மானம் 260A நிறைவேற்றப்பட்டு, அல்லது இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை பற்றிய மாநாடு நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 12, 1951 இல் இவை நடைமுறைக்கு வந்தது [December 9, 1948, the UN General Assembly adopted Resolution 260A, or the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, which entered into force on January 12, 1951.] "வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் இனப்படுகொலை மனிதகுலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்று தீர்மானம் குறிப்பிட்டது. இனப்படுகொலையை தடுப்பது தொடர்பான உடன்படிக்கையின் 2ஆம் கட்டுரையின் படி: ஒரு தேசிய, கலாச்சார, இன அல்லது சமயத்தின் மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படும் பின்வரும் செயல்கள்: (அ) அந்த இன அல்லது குழுவின் உறுப்பினர்களைக் கொல்லுதல்; (ஆ) இன உறுப்பினர்களுக்குக் கடுமையான உடல் அல்லது மனதிற்குத் தீங்கு விளைவித்தல்; (இ) இனத்தின் இருப்பு சார்ந்த வாழ்க்கையை அழிப்பதற்கான சூழ்நிலையைத் திட்டமிட்டு ஏற்படுத்துதல் .... மற்றும் பலவற்றைக் கூறுகிறது. அப்படியானால், (ஆ) & (இ) வின் படி, இலங்கையின் பூர்வீக குடிகளை விரட்டியடிக்கும் மேற்கண்ட புத்தரின் செயல் நிச்சயமாக மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். ஆனால், நிச்சயமாக இன்றைய நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்த புத்தர் இந்தச் செயலைச் செய்யமாட்டார். ஆனால், மகாவம்ச ஆசிரியர் தான் புத்தரை முன்னிறுத்தி இந்த செயலுக்கு அத்திவாரம் போட்டுள்ளார் என்பதே உண்மை! Part: 62 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The Buddha, after this terrorist act, returned to Uruvela, in North India. The end of this episode of driving away the original inhabitants of Lanka is simply said or glossed over as: "Thus was 42 the Mahiyangana-thupa completed. When he had thus made 43 our island a fit dwelling-place for men, the mighty ruler, valiant as are great heroes, departed for Uruvela. 'Here ends the Visit to Mahiyangana' ”. What a camouflage it is! The same visit is described as “Here ends the subjection of Yakkhas” in the Dipavamsa. The subjection of the native people of Lanka by a person from a faraway place is simply titled as a ‘Visit to Mahiyangana’ in the Mahavamsa. It is a crime against humanity. The term “genocide”, made from the ancient Greek word genos (race, nation or tribe) and the Latin caedere (“killing, annihilation”), was first coined by Raphael Lemkin, a Polish-Jewish legal scholar, in his 1944 book Axis Rule in Occupied Europe. It originally means “the destruction of a nation or an ethnic group”. In 1946, United Nations (UN) General Assembly affirmed genocide as a crime under international law in Resolution 96, which stated that “Genocide is a denial of the right of existence of entire human groups, as homicide is the denial of the right to live of individual human beings; such denial of the right of existence shocks the conscience of mankind … and is contrary to moral law and the spirit and aims of the United Nations.” On December 9, 1948, the UN General Assembly adopted Resolution 260A, or the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, which entered into force on January 12, 1951. The Resolution noted that “at all periods of history genocide has inflicted great losses on humanity”. Article II of the Convention clearly defines genocide as any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group. If so, the above act of driving away the original inhabitants of Lanka, Will definitely a crime against humanity. But Definitely The Buddha who was born in Lumbini, in what is now Nepal, would not do this act. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 63 தொடரும் / Will follow துளி/DROP: 1937 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 62] https://www.facebook.com/groups/978753388866632/posts/32792834707031753/?
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 03 பகுதி: 03 - யாழ்ப்பாண நூலகத்தின் வழியாக ஒரு நடைப்பயணம்: மாலை கதிரவன் யாழ்ப்பாணத்தின் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட தெருக்களில் மெதுவாக அமர்ந்திருந்தது. ஆரன் தங்கி இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல், யாழ் நகர மையத்துக்குள் இருந்த காரணத்தால், அனலி தன் ஸ்கூட்டரில் அங்கு தனியாக வந்து, ஆரனும் அனலியும் யாழ்ப்பாண பொது நூலகத்தை நோக்கி நடந்தார்கள். அவள் இன்று யாழ் நகருக்குள் மட்டுமே நிற்பதாலும், வீட்டில் இருந்தே வருவதாலும், அக்காவின் மகளை கூட்டிவரவில்லை. நூலகத்தின் வெள்ளை குவிமாடங்கள் அறிவுக் கோயில் போல வானத்தில், பனைமரங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து நின்றது. ஆரன், அங்கு அருகில் வந்ததும், தன் நடையை கொஞ்சம் இடைநிறுத்தி விட்டு, அதன் பிரமாண்ட புது கட்டிடத்தையும் அழகையும் பார்த்தான். ஆரன்: “இந்த நூலகம் அனைத்து தமிழர்களின் பெருமை என்று என் இரண்டு பாட்டாவும் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். அங்கு அரச சிங்கள காடையர்களாலும் அரச காவலர்களாலும் தொண்ணூறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், பனை ஓலைகள் ... முற்றாக எரிக்கப்பட்டது, எங்கள் மக்களின் ஆன்மா எரிக்கப்பட்டது போல இல்லையா” என்று கேட்டதும் அனலியின் கண்கள் நினைவுகளால் மங்கின. அனலி: “ஆம். 1981 இல் அது எரிந்தபோது என் தாத்தாவும் அழுதார் என்றும், எங்கள் கடந்த காலம் சாம்பலாக மாறுவதைப் பார்ப்பது போல் இருந்தது என்றும், அவர் என்னிடம் கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆம், இத்தனை வருடங்களுக்குப் பிறகும், நாங்கள் இன்னும் அந்த காயத்தை சுமக்கிறோம்.” என்றாள். மேலும் யாழ் நூலகம் எரிந்தபொழுது அதன் தலைமை நூலகராக கடமையாற்றிய, திருமதி ரூபவதி நடராஜா எழுதிய 'யாழ்ப்பாணம் பொது நூலகம், அன்றும் இன்றும்' என்ற தமிழ் புத்தகம் மற்றும் சந்தரெசி சுதுதுங்க, இன்றைய சிங்கள இலக்கிய கவிஞர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், சிங்களத்தில் எழுதிய “தீப்பற்றிய சிறகுகள்" என்ற கவிதை தொகுப்பு கட்டாயம் வாசிக்க வேண்டியவை என்றாள். யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார் நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம் இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது அவர்கள் இருவரும் புதுப்பிக்கப்பட்ட புனித மண்டபங்களுக்குள், தங்கள் காலணிகளை வெளியே கழட்டிவிட்டு, உள்ளே நுழைந்தனர். வெள்ளைச் சுவர்கள் மின்னின, அலமாரிகள் மீண்டும் புத்தகங்களால் நிரம்பியிருந்தன. ஆனாலும் ஆரன் ஒரு பேயைப் போல ஒரு அமைதி நீடித்ததை உணர்ந்தான். அவன் கிசுகிசுத்தான்: “இது மீண்டும் அழகாக இருக்கிறது, ஆனால் நீ உணர்கிறாயா ... இந்த அழகு எரிந்த அரிய புத்தகங்கள், ஏடுகள் இல்லாமல் முழுமையடையும் என்று?” அனலி: “ஏனென்றால் நினைவை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. எரிந்த பக்கங்கள் - சங்க இலக்கியப் பிரதிகள், ஓலை கையெழுத்துப் பிரதிகள் - அவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. இருப்பினும், அதை மீண்டும் கட்டியெழுப்புவது நமது எதிர்ப்பு. நாம் அழிக்கப்பட மாட்டோம் என்பதைக் எடுத்துக் காட்ட.” ஆரன், அங்கே அலமாரியில் இருந்த புத்தகங்களில் ஒன்றைத் தொட்டான். அது கனமாக இருப்பதாக உணர்ந்தான், அதன் எடையால் அல்ல, அது சுமந்து சென்ற வரலாற்றால். அவர்கள் நூலகத்தின் உள்ளே இன்னும் ஆழமாக நடந்து செல்லும் போது, ஆரன் மெதுவாக அனலியை நோக்கினான். “அனலி, நான் ஏன் உன்னுடன் இங்கு வர விரும்பினேன் தெரியுமா?” என்று கேட்டான். அனலி (மெல்லச் சிரித்தபடி): “நூலகத்தைப் பார்க்கத்தானே?” என்றாள். ஆரன்: “இல்லை. புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் பார்க்கத்தான். அதை தன் இரத்தத்தில் உணரும் ஒருவருடன் நினைவுபடுத்திக் கொள்ளத்தான். இந்த நூலகம் மீண்டும் கட்டப்பட்டது, ஆனால் இன்னும் வடுக்களை சுமந்து கொண்டு இருந்தாலும் அது பலத்துடன் எழுந்து நிற்கிறது. இப்போது உன்னைப் பார்க்கும் போது, நீயே இந்த நூலகம் போல தோன்றுகிறாய், அதே பலத்தை உன்னிலும் நான் காண்கிறேன்” என்றான். அனலியின் கன்னங்கள் சிவந்து, அவள் தன் பார்வையைத் மறுபக்கம் திரும்பினாள். என்றாலும் அவள் கை அருணின் கையை இன்னும் இறுக்கமாக பிடித்தது. அந்த நொடியில், நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின, ஆனால் அந்த சாம்பலின் நடுவே ஒரு விதை முளைத்தது போல, ஆரனின் உள்ளத்தில் அனலி மலர்ந்தாள். “நீயே என் வேர்,” என்ற அவன் சொற்கள் பழைய ஓலைச் சுவடிகளின் சப்தத்தைப் போல அனலியின் உள்ளத்தில் ஒலித்தன. அந்த நொடியில்— மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன, மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின, நூலகத்தின் அமைதி இரு இதயங்களுக்கான தெய்வீகத் தாலாட்டானது. அவர்கள் ஒரு ஜன்னல் அருகே அமர்ந்தனர், சூரிய ஒளி உள்ளே ஊடுருவியது. பழைய காகிதத்தின் வாசனை அவர்களைச் சுற்றி மிதந்தது. அனலி: “ஆரன், புலம்பெயர்ந்தோர் (Diaspora) ஏன் திரும்பி வர வேண்டும் என்று உனக்குப் புரிகிறதா? எரிந்துபோன நூலில் சில பக்கங்கள், சில சொற்கள் அழிந்துபோயிருக்கும். அவற்றை நாம் மீண்டும் எழுதிக்கொள்ள முடியாது. ஆனாலும் மீதமுள்ள பக்கங்களின் வழியே அந்த நூல் இன்னும் வாழ்கிறது. அதுபோலவே, அழிந்தாலும், சிதைந்தாலும், ஒரு இனத்தின் வரலாறு, கலாசாரம், நினைவுகள் இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு தலைமுறையினரும் (diaspora உட்பட) திரும்பி வருவதும், பேசுவதும், எழுதுவதும்—அந்தக் கதையைத் தொடரும் ஒரு முயற்சியே ஆகும். அதனால்த்தான் அவர்களின் ஒவ்வொரு வருகையும் மற்றும் நினைவுகளும் அழிந்த பக்கத்தின் பின் தொடரும் எழுத்தாகிறது" என்றாள். ஆரன்: “ஆம். அது உண்மையே, நாம் திரும்பி வராவிட்டால், கடைசிப் பக்கம் காலியாகவே இருக்கும். ஒருவேளை நம் காதல் கதை கூட, மீண்டும் எதையாவது எழுதுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம்?” என்றான். அவர்களின் இந்த புரிந்துணர்வுகளாலும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மரியாதையாலும், நினைவுகளின் அலமாரிகளில், ஆரன் மற்றும் அனலியின் பிணைப்பு ஆழமடைந்தது. அது இரண்டு இதயங்களின் அன்பு மட்டுமல்ல, ஒரு மக்களின் அமைதியான சபதம்! நெருப்பிலும் கூட அறிவு நிலைத்திருக்கும். புலம்பெயர்ந்தாலும் கூட காதல் தன் தாய் மண்ணில் மலரும். 'சொற்கள் எரிந்தாலும், நூலின் சுவாசம் எரியாது பக்கங்கள் சிதைந்தாலும், கதை மறைவதில்லை நினைவின் சாம்பலில் இருந்து, புதிய வரிகள் பறவையாய் பறக்கும் ஒவ்வொரு தலைமுறையும், அழிந்த பக்கத்தின் பின் தொடரும் எழுத்தாக மாறும்' மறுநாள் காலை, ஆரன் மற்றும் அனலி யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை புத்த ஸ்தூபி தளத்தின் இடிபாடுகளுக்கு முன் நின்றனர். அங்கே பனை மரங்களால் சூழப்பட்ட சூரியனுக்குக் கீழே அவை வெள்ளை குவிமாடங்களாக மின்னின. இது கிட்டத்தட்ட கி.மு. 3ம் நூற்றாண்டு – கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்தில் பயன்பட்ட ஒரு பழமையான கல்லறை / மெகாலிதிக் தளம் [ancient burial site / megalithic site] ஆகும். அங்கு கண்டு எடுக்கப்பட பொருள் கலாச்சாரம் [material culture] - பானைகள், மணிகள் மற்றும் கல்வெட்டுகள்- pots, beads, and inscriptions - வலுவான தமிழ் தென்னிந்திய தொடர்புகளைக் காட்டுகிறது, இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்துவதுடன், ஆரம்பகால தமிழர்களில் சிலர் பௌத்த மதத்தைப் பின்பற்றியதையும் கூறுகிறது என்று அனலி பெருமையுடன் விளக்கினார். “பாருங்கள், ஆரன் ... தமிழர்கள் ஒரு காலத்தில் எப்படி பௌத்த மதத்தில், கி.மு. 3ம் நூற்றாண்டு – கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்தில் இணக்கமாக வாழ்ந்தார்கள் என்பதைக் இது வெளிப்படையாக காட்டுகிறது. நமது நிலம் போர்களை மட்டுமல்ல, ஞானத்தையும் சுமந்தது. ஆனால் இன்று அது சிங்கள பௌத்தமாக, ஐந்தாம் ஆறாம் ஆண்டில், பாளியில் எழுதிய மகாவம்ச பௌத்தமாக, தமிழரை பிரிப்பதே, இன்றைய முக்கிய பிரச்சனை, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இந்த கால கட்டங்களில், கி.பி 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8 ஆம் நூற்றாண்டு வரை சிங்களம், ப்ரோட்டோ-சிங்களமாக [Proto-Sinhala] மட்டுமே இருந்தது ” என்றாள். மேலும் எண்ணற்ற தொன்மையான தமிழர் வாழ்வியலை தன்னுள் அடக்கிக் கொண்டு இனவாத அடக்குமுறையில் வெளிப்படாமல் இராணுவ பிரசன்னத்தோடு இன்னும் இருக்கிறது. இது இன்று சிங்களத்திடம் மாட்டி அதன் பெயர் கதுருகொட என மாற்றியமைக்கப்பட்டது என்று அழுத்தமாக கூறியவள், தமிழர்வாழ்வியல் ஆய்வில் கீழடி ஆதிச்ச நல்லூர் போல ஆய்வு செய்யப்பட வேண்டிய பெரு நிலப்பகுதி ஆகும் என்றாள். ஆரன் அவள் சொல்லுவதை உன்னிப்பாக கேட்டான், ஆனால் அவன் கண்கள் கந்தரோடை இடிபாடுகளை விட அவள் மீது அதிகமாக பதிந்தன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கற்கள் இன்னும் உயிர்வாழ முடியும் எனறால், ஒருவேளை காதல் கூட, அது உண்மையாக இருந்தால், பல நூற்றாண்டுகளாக, தாஜ்மகால் போல் வாழலாம் என்று அவன் சிந்தனை விசித்திரமாக விரிவடைந்தது. அனலி அவனது மௌனத்தை, எதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்தாள். உடனே, "நீ என்ன யோசிக்கிறாய்?" என்று ஆச்சரியமாக கேட்டாள். அவன் தயங்கினான், பின்னர் சிரித்தான். “ஒருவேளை ஒரு நாள், மக்கள் இந்தக் கற்களைப் பற்றி மட்டுமல்ல... நம்மைப் பற்றியும் பேசுவார்கள்.” என்றான். அங்கு காணப்பட்ட கல்லுக் கோபுரத்தை [ஸ்தூபங்களைப்] பார்ப்பது போல் நடித்து, அவள் மறு பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் வரலாற்றை கற்றுத்தருபவள் என்ற நிலையிலிருந்து, இப்போது வரலாறாக வாழ்கிறவள் என்ற உணர்வில், அவளின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது. “காலம் கடந்தும் நிற்கும் கோபுரம் போல, நம் காதலும் ஒருநாள் வரலாறாகிப் போகலாம்” என்று அவளின் இதயம் எழுதிக்கொண்டு இருந்தது. பின் அனலி மெதுவாக அவன் காதில், "ஆரன், அப்பா உன்னை நம்பி, என்னை அனுப்பினார் உனக்கு வரலாறு காட்டிட , கற்பிக்க ... ஆனால் நான் இப்ப என் இதயத்தையே கையளிக்கிறேன்.” என்றாள். " நானும் கூட என்னவாம், … நான் நிலத்தின் வேர் தேட வந்தேன், ஆனால் கண்ட வேர் ... ” அவன் அதற்கு மேல் சொல்லவில்லை. மௌனமாக அனலியை பார்த்துக்கொண்டு நின்றான். ஒருவேளை அனலியின் அப்பாக்கு கொடுத்த வாக்குறுதி தடுத்திருக்கலாம்? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் துளி/DROP: 1936 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 03] https://www.facebook.com/groups/978753388866632/posts/32777130171935540/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 61 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 61 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் மகாவம்சத்தில் குறிக்கப்ட்ட விடயங்களில், என் கருத்துக்களில் இருந்து, உங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் / நம்பிக்கைகள் அல்லது வேறு சான்றுகள் இருக்கலாம். நான் கேள்விகள் அல்லது கருத்துகள் அல்லது பதில்களை இட்ட இடங்களில், உங்களுக்கு வேறுபாடு இருப்பின், அதற்கான உண்மையான ஆதாரங்களுடன் உங்கள் மதிப்புமிக்க கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. இது நமது புரிதல் / அறிவை மேலும் மேம்படுத்துவதோடு நமது எண்ணங்களை / செயல்களையும் சரி செய்யும். நான் எந்த ஒரு குறிப்பிட்ட நபரையும் / நம்பிக்கையையும் விமர்சிக்கவில்லை, மகாவம்சத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமே எனது எண்ணங்களை அங்கு அறிவியல் ரீதியாக பகிர்ந்து கொள்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும். மகாவம்சமானது பாளி மொழியில் வேண்டுமென்றே, தேர்ந் தெடுக்கப்பட்ட நீக்குதல்கள் மற்றும் தாராளவாத சேர்த்தல்களுடன், தீபவம்சத்தின் மறுசீரமைப்பாகக் கருதப்படலாம். கி.பி. நான்காம் நூற்றாண்டில், தீபவம்சம் தொகுக்கப்பட்டு, நூற்று முதல் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மகாவம்சம் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) , Ph. D., 1912 இல் மகாவம்சத்திதினை மொழிபெயர்ப்பு செய்தார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு 271 பக்கங்களைக் கொண்டது. மகாவம்சம் தீபவம்சத்தின் அதே காலகட்டத்தை உள்ளடக்கியிருந்தாலும், தீபவம்சத்தை அடிப்டையாகக் கொண்டு தொகுத்து இருந்தாலும், அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மன்னன் மூலம், தமிழர் விரோத விடயத்தை விதைக்க அதிக எண்ணிக்கையிலான பிரிவுகள் அல்லது அத்தியாயங்கள் ஆக்கப்பட்டு, மிகவும் பெரிதாக்கப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் இருபத்தி இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளன. ஆனால் அதே காலகட்டத்தை உள்ளடக்கிய, மகாவம்சத்தில் முப்பத்தேழு பிரிவுகள் உள்ளன. துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் விவரிப்பு அத்தியாயம் 22 முதல் அத்தியாயம் 33 வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது; மகாவம்சத்தில் அத்தியாயங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் அது தான். பூர்வீகப் பெண்மணியான இயக்கர் குலம் சேர்ந்த [யக்கினி] குவேனி என்றும் சொல்லப்படும் குவண்ணாவின் அத்தியாயமும் மகாவம்சத்தில் கூடுதலாக உள்ளது. இந்த யக்கினி குவண்ணா பற்றி ஒரு அத்தியாயமும் கூட தீபவம்சத்தில் இல்லை. கதை மற்றப்படி ஒன்றுதான், ஆனால் தமிழருக்கு எதிரான நோக்கம் மகாவம்சத்தில் வலுக்கட்டாயமாக, வெளிப்டையாகக் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அத்தியாயம் 1: 1-20 ‘... இந்த அத்தியாயத்தில், இயக்கர்களால் (Yaksha) நிரம்பிய இலங்கை நாட்டில், தனது நம்பிக்கையை நிரந்தரமாக நிலை நிறுத்த வேண்டும் என்றால், இயக்கர்கள் (முதலில்) விரட்டப்பட வேண்டும் என்று ஞானம் பெற்ற புத்தரின் இதயத்திலிருந்து வருகிறது. ஆகவே தான் புத்தர், இயக்கர்களை விரட்ட இலங்கை சென்றார். இயக்கர்கள் இலங்கையின் பல பூர்வீக குடிகளில் ஒரு குழுவாக அன்று இருந்தனர். மேலும் இந்த மகாவம்சத்தில், ஞானம் பெற்ற புத்தர், தனது நம்பிக்கையை நிலைநிறுத்த அவர்களை தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்ற விரும்பினார் என்று கூறுகிறது. தீவின் பூர்வீக குடிகளான இயக்கர்களை, அவர்கள் பாரம்பரியமாக ஒன்றுகூடிய போது, கனமழை, இருள், புயல் போன்றவற்றை உருவாக்கி, அவர்களின் இதயத்தில் பயங்கரத்தை உண்டாக்கி, தனது நம்பிக்கைக்காக, நிலத்தை கைப்பற்றுவதற்காக, அவர்களை பயமுறுத்தினார் என்கிறது. ஆதிவாசிகளான இயக்கர்கள், பயத்தில் மூழ்கி, கருணையுள்ள, அன்புவடிவான? புத்தரின் கட்டளைப்படி, கிரிதீபா [Giridipa] என்ற வேறு ஒரு தீவுக்கு [இடத்திற்குச்] செல்ல ஒப்புக்கொண்டனர். இதை 1-17 முதல் 30 வரை மகாவம்சத்தில் பார்க்கவும். இரக்கமுள்ள புத்தரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது அவரின் பலவந்தத்தின் கீழ், தீவின் பூர்வீக குடிகள் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டனர். உலகப் புகழ்பெற்ற உலகத்தை துறந்த புத்தரால், இப்படித்தான் இலங்கைத் தீவு நம்பிக்கைக்குக் கொண்டுவரப்பட்டது என்கிறது? தமிழர்களுக்கு எதிரான முதல் விஷம் 1 - 41 இல் இருந்து 43 வரை ஏப்பம் விடுகிறது; உதாரணமாக 1 - 41: ' துட்டகாமினி மன்னன் தமிழர்களுடன் போரிட்டபோது, இந்த இடத்தில் தங்கியிருக்க நேரிட்டது. அப்போது இந்தச் சேதியத்தை [ஒரு பௌத்த தூபி அல்லது நினைவுச் சின்னத்தை] எண்பது முழ உயரமுள்ளதாகக் கட்டினான். இந்த விதமாக, மஹியங்கனை தூபம் [Mahiyangana-thupa / மஹியங்கன தூபம் இலங்கையில் உள்ள ஒரு புனித பௌத்த தூபியாகும். இந்த இடம் தான், புத்தர் முதன்முதலாக இலங்கைக்கு வருகை தந்த இடமாக நம்பப்படுகிறது?] இறுதியாக பூர்த்தி ஆயிற்று என்கிறது. தீபவம்சம் எல்லாளன் என்ற அரசனை தமிழன் என்று அடையாளப் படுத்தவில்லை, ஆனால் மகாவம்சம் துட்டகாமினியின் தமிழர் மீதான போர் என்று கூறுகிறது. தீபவம்சம் எல்லாளனை சோழ நாட்டிலிருந்து வந்தவன் என்று அடையாளம் காட்டவில்லை. அது மட்டும் அல்ல, தென் இந்தியா வரலாற்று குறிப்புகளோ அல்லது இலக்கிய குறிப்புகளோ சோழ இளவரசர்களில் ஒருவரான எல்லாளன் இலங்கைக்குச் சென்று நீண்ட காலம் ஆட்சி செய்ததாகக் எந்த பதிவுகளும் இல்லை. கரிகால் சோழன் [Karikaal Cholan] தமிழர்களின் அன்புக்குரிய மன்னன், நாம் அனைவரும் அறிந்த மூத்த சோழ மன்னன். கரிகால் சோழனுக்கு முந்தைய பிற சோழர்கள் வெறும் இதிகாச அல்லது புராணக்கதை மன்னர்களே [legendary kings]. இருப்பினும், இங்கு எல்லாளன் மன்னன் கரிகால் சோழன் மன்னனுக்கும் முந்தையவன். எனவே, மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமா சோழர்களின் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் என்று எண்ணுகிறேன்? கரிகால் சோழன் கிபி 90 இல் இருந்தான், ஆனால் எல்லாளன் கி மு 145 முதல் 101 வரை இருந்தான். இன்னும் ஒன்றையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மகாசேனன் (கி பி 277 - 304) காலத்தில் தான் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. இதற்கு முக்கிய காரணம், மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவரான சங்கமித்ரர் ஆகும். இவர், கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார் என்பது வரலாறு. ஆகவே அதன் பின் மகவாசம் எழுதிய தேரவாதத்தை சேர்ந்த மகாநாமாவுக்கு, கட்டாயம் சோழர்கள் மேலும் தமிழர்கள் மேலும் ஒரு வெறுப்பு இருந்து இருக்கும். அதன் விளைவு தான், அவர் கண்டுபிடித்த, பெரிது படுத்தப்பட்ட , தமிழ் சோழ மன்னனும் துட்டகாமினி போரும் என்று எண்ணுகிறேன்? Part: 61 / Appendix – Summary of the Mahavamsa / You may have different opinions / beliefs or evidences from me. Where ever I have arised Questions or posted comments / Answers, your valuable comments with true evidences are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought based on the incidents mentioned in each chapters of Mahavamsa, nothing more than else. The Mahavamsa can be considered as the intentional re-arrangement of the Dipavamsa with selective deletions and liberal additions in choice Pali language. It is believed to be composed in the beginning of the sixth century, about one hundred to one hundred and fifty years after the compilation of the Dipavamsa. Any references given below is, unless stated otherwise, to the translation of the Mahavamsa by Wilhelm Geiger, Ph. D., 1912. The English translation runs into 271 pages. Though the Mahavamsa is covering the same period as the Dipavamsa, it is much enlarged to have greater number of Sections or Chapters to sow the seeds of anti-Tamil venom through a selected king. There are only twenty two Sections in the Dipavamsa, but there are thirty seven sections in the Mahavamsa, covering the same period. The narrative of Dutthagamani is elaborated from Chapter 22 to Chapter 33; the main reason for the increase in the chapters in the Mahavamsa. The episode of the native lady, Yakkhini Kuvanna, is also an addition in the Mahavamsa. This Yakkhini Kuvanna episode is not in the Dipavamsa. The story is otherwise the same, but the anti-Damila intent is forcefully expressed in the Mahavamsa. Chapter 1: 1-20 ‘…Lanka filled with the Yakkhas, the Yakkhas must (first) be driven forth’; this is from the heart of the enlightened Buddha. The Buddha went to Lanka to drive out the Yakkhas to win Lanka for the Faith. The Yakkhas was one group of the many original inhabitants of Lanka, and the enlightened Buddha wanted to drive them out of their homeland to establish his Faith. He terrorized the original inhabitants of the island, the Yakkhas, just to win their land for his Faith, when they were having their traditional gathering, by causing terror into their heart by producing heavy rain, darkness, storm etc. The Actions of the Buddha, as described in the Mahavamsa, are despicable acts of terrorism to subdue the original inhabitant of the island. The Yakkhas, the original inhabitants, were overwhelmed by fear and agreed to go to another place as commanded the benevolent Buddha, to Giridipa, 1- 17 to 30. The original inhabitants of the Island were compelled to relocate under duress by the compassionate Buddha. This is how the island Lanka was won to the Faith by the renowned world renouncing Lord Buddha. The first venom against Tamils is belched in the 1 - 41; 'The king Dutthagamani, dwelling there while he made war upon the Damilas, built a mantle cetiya over it eighty cubits high.' The Dipavamsa does not identify the king Elara as Damila, but the Mahavamsa says Dutthagamani’s war upon Damilas. The Dipavamsa does not identify Elara as from the Cola country. There are no records in the Cola annals that one of their princes, Elara by name, went to Lanka and ruled for a long time. Karikaal Cholan is a beloved king of Tamils, and he is the oldest Chola king we all know. Other Cholas prior to Karikaal Cholan are mere legendary kings. However, the king Elara is even earlier to the king Karikaal Cholan. Mahanama, the author of the Mahavamsa, created a new history of Cholas. Karikaal Cholan is around 90 A. D. but Elara is 145 to 101 B. C. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 62 தொடரும் / Will follow துளி/DROP: 1935 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 61] https://www.facebook.com/groups/978753388866632/posts/32760849530230271/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 60 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சம் என்பது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு மட்டுமே, வேறு எதுவும் இல்லை!' அத்தியாயம் 22: வசபா மன்னர் [வசபன் / king Vasabha] பல புத்த கட்டிடங்களையும், நீர்ப்பாசனப் பணிகளையும் கட்டினார். அவர் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். வசபாவின் மகன் திஸ்ஸன் [வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் / Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I, also known as Gajabahuka Gamani] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவன், பிரபல சேர (இன்றைய கேரள) மன்னன் செங்குட்டுவன் அழைப்பின் பேரில் இந்திர விழாவில் பங்கேற்க தமிழகம் சென்றார். அவர் திரும்பியவுடன் பத்தினி வழிபாட்டைக் இலங்கைக்கு கொண்டுவந்து, பத்தினி கண்ணகியைப் போற்றும் வகையில் பெரஹெரா விழாவைத் [Perahera festival] தொடங்கினார். சயாமிலிருந்து [தாய்லாந்து / Thailand அல்லது முன்னர் சயாம் / Siam ] வந்த துறவிகளின் தூண்டுதலின் பேரில் 1775 கி.பி.க்குப் பிறகுதான் புத்தரின் பல் தாது [Buddha’s tooth relic] திருவிழாவுடன் தொடர்புடையது. பதினெட்டு நூற்றாண்டு பழமையான பத்தினி வழிபாடு மற்றும் பெரஹெரா திருவிழாவுடன் ஒப்பிடும் போது, இந்த பிக்குகள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அத்தியாயங்களை மிக சமீபத்தில் தான் உருவாக்கினர். தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் பெரஹெரா விழா முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிய இராச்சியத்தின் தமிழ் மன்னன் சயாமிலிருந்து (தாய்லாந்து) இந்த துறவிகளை அழைத்தார் என்றும் மற்றும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரிவுகளின் துறவிகள் தான் பெரும்பாலும் அடுத்தடுத்து இலங்கை அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளில் கொடூரமான பங்கைக் கொண்டிருந்தனர் என்பது அண்மைய வரலாற்று உண்மை. கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகுவின் [Gajabahukagamani or Gajabahu I ] மாமனார் மகல்லக்க நாகன் [Mahallaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். கஜபாகுவின் மகன் பதிக திச்சன் [Bhatika Tissa] இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன் பின், பதிக திச்சனின் இளைய சகோதரர் திஸ்ஸ (கன்னிததிஸ்ஸ / Kanittha Tissa) பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Cula Naga, or Khujjanaga, also known as Kuhun Na] தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது இளைய சகோதரர் குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் [Kuda Naga or Kunchanaga] தனது சகோதரனைக் கொன்று ஓராண்டு ஆட்சி செய்தார். முதலாம் சிறிநாகன் [Sirinaga] குஞ்சநாகாவை தோற்கடித்து பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகன் அபயா [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் [22 - 37. The son of Sirināga, the royal lord called Abhaya, .... 38. ... This king governed twenty-two years.] அவரது இளைய சகோதரர் திச்சன் [திஸ்ஸாக / Tissaka] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [22 - 39. His younger brother, known as king Tissaka, ... 45. This royal ruler governed twenty-two years.] . திஸ்ஸாகவின் மகன் இரண்டாம் சிறிநாகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [46. Tissa’s own son, known by the name of Sirināga, reigned full two years over the Island.]. ஆனால், மகாவம்சத்தில், முதலில் திஸ்ஸாக [Tissaka] வையும் அடுத்ததாக அபயா [Abhaya] வையும் ஆட்சி செய்ததாக கூறுகிறது? இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தந்தை இறந்த பின் ஒரு வருடம் ஆட்சி செய்தார். முதலாம் சங்க திச்சன் [Sangha Tissa I] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். இவன், விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் ஆவான். அதன் பிறகு விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த மற்ற இரு அமைச்சர்களான சிறிகங்கபோதி [Siri Sangha Bodhi I, also known as Siri Sanghabodhi] இரண்டு ஆண்டுகளும், அதன் பின் மற்ற அமைச்சரான கோதாபயன் அல்லது மேகவண்ணாபயன் அல்லது அபய மேகவன்னா [Gothabhaya, also known as Meghavannabhaya, Gothakabhaya, Abhaya Meghavanna and Goluaba,] பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவருடைய மகன் ஜெத்ததிஸ்ஸ [சேட்டதிச்சன் / Jettha Tissa I also referred to as Detu Tiss, Kalakandetu Tissa, and Makalan Detu Tissa] பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். சேட்டதிச்சனின் தம்பியான மகாசேனன் [Mahasena, also known in some records as Mahasen] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது ஆட்சியில் ஒருவித மத மோதல்கள் நடந்தன. உதாரணமாக, மகாசேனன் மற்றும் முதலாம் சேட்டதிச்சன் ஆகிய சகோதரர்கள் இருவரும் சங்கமித்ரர் என்ற சோழ நாட்டு மகாயான பௌத்தம் என்ற பௌத்தப் பிரிவு மதத்தலைவரின் சீடர்களாவர். சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான முதலாம் சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் சங்கமித்ரர் முதலாம் சேட்டதிச்சனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனனோ தன் அண்ணன் போல் அல்லாமல் சங்கமித்ரர் மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவன் காலத்தில் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. மேலும் மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்திருக்கிறான். இன்னும் ஒன்றையும் கவனியுங்கள் இங்கு சங்கமித்ரர், தமிழ் பேசும் ஆண் புத்த பிக்கு, இவரின் பெயர் பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா வுடன் தொடர்பு படுகிறது. அந்த நேரம் தமிழர்களும் மகாயான பௌத்த தழுவியவர்கள் என்பதும் வெள்ளிடை மலை. இதை இலங்கையில், வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வு என்று இன்று ஈடுபடும் முழுக்க முழுக்க சிங்கள நபர்களைக்கொண்ட ஆய்வாளர்களுக்கு புரியாதது எனோ? அல்லது அவர்களுக்கு சரியான நேர்மையான அறிவு இல்லையா ? யாம் அறியேன் பராபரமே! ஆனால் ஒன்று மட்டும் உண்மை, மகாசேனன் மாதிரி, சைவக் கோயில்களை இடித்து அழிப்பதில் மட்டும், பச்சை, நீலம் அல்லது சிவப்பு கொடிகளை ஏந்தினாலும், கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மொத்தம் 105 பக்கங்களில், அத்தியாயம் 18 முதல் அத்தியாயம் 22 வரை உள்ள சுமார் 16 1/2 பக்கங்களில் மட்டுமே மொத்தம் 61 மன்னர்களில் 54 மன்னர்கள் பற்றி, அதாவது சுமார் 89 சதவீத மன்னர்கள் பற்றி பேசுகிறது. மீதமுள்ள, ஆரம்ப ஆட்சியாளர்கள், நாம் முன்பே விளக்கமாக கூறியது போல, கண்டுபிடிக்கப்பட்ட மன்னர்களாக இருக்க வேண்டும்? எனவே தான் அதற்கான கதைகளை சோடிப்பதற்காக, பல பக்கங்களை எடுத்துள்ளார்கள் போலும்? மேலே காட்டப்பட்டுள்ள அரசர்களில் பெரும்பாலோர், பெயர்களின் அடிப்படையில், ஏற்கனவே விவரிக்கப்பட்ட வாறு, தமிழர்களுடன், தமிழ் பண்பாட்டுடன் தொடர்பு உடையவர்களாகவே தெரிகிறது. மேலும் தீபவம்சத்தின் பெரும்பாலான பக்கங்கள் வரலாற்றை விட, நம்பிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. அதனால்த் தான் மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் [Hermann Oldenberg] தீபவம்சத்தை "ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவுகள்" என்று அழைக்கிறார். இது பௌத்தத்திற்கு ஆதரவானதே தவிர, என்றும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. இருபதாம் நூற்றாண்டின் அல்லது அதற்குப் பிறகு, பெரும்பாலான மிகவும் பேராசை கொண்ட துறவிகளும் அரசியல்வாதிகளும், இந்த விசுவாசப் பதிவை, விஷமிகுந்த தமிழர் விரோதமாக மாற்றினார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு அடியெடுத்து கொடுத்தது, இதன் பின் 150 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மகாவம்சமாக இருக்கலாம்? Part: 60 / Appendix – Dipavamsa / 'The Dipavamsa is just an ancient Buddhist historical record & nothing else!' Chapter 22: The king Vasabha constructed many Buddhist buildings, and irrigation works. He ruled forty four years. The son of Vasabha, Tissa, ruled for three years. His son, Gajabahukagamani, ruled twenty two years. He went to Tamilnadu to participate in the Indra Vill(zz)a festival on the invitation of the famous Chera (present day Kerala) king Senggutuvan. He brought the Pattini cult on his return and initiated the Perahera festival to honour the Pattini, Kannagi. Buddha’s tooth relic came to be associated with festival only after 1775 A. D. on the instigation of the monks who came from Siam. These monks formed the Malwatte and the Askiriya Chapters of very recent origin when compared with the eighteen century old procession of the Pattini worship, and the Perahera festival. Perahera festival is first recorded in the Tamil Epic Silappthikaram. Ironically, the Tamil king of Kandyan kingdom invited these monks from Siam (Thailand) and the monks of the Malwatte and the Askiriya Chapters played diabolical role in the anti Tamil pogrom perpetrated by the successive Sri Lankan Governments. Mahallakanaga, father in law of Gajabahukagamani, ruled for six years. His, Gajabahu’s, son, Bhatutissa, ruled for twenty four years. Younger brother of Bhatutissa, Tissa (Kannithatissa), ruled for eighteen years. His son Khujjanaga ruled for two years after the death of his father. His younger brother Kunjanaga put his brother to death and ruled for one year. Sirinaga defeated Kunjanaga and ruled for nineteen years. His son Abhaya ruled for twenty two years. His younger brother Tissaka ruled for twenty two years. His son Sirinaga ruled for two years. His son Vijayakumara ruled for one year after death of his father. Samghatissa reigned for four years. The king Samghabodhi reigned for two years. Abhaya Meghavanna ruled for thirteen years. His son Jetthatissa ruled ten years. Mahasena, the younger brother of Jetthatissa, ruled for twenty seven years. Some sort of religious conflict took place in his reign. About 16 pages and a half page, from the Chapter 18 to the Chapter 22, out of the 105 pages speaks about 54 kings out of 61 kings, about 89 percent of the kings. The rest, the purported initial rulers, must be invented kings. Quite a large proportion of the kings, as shown above, are Tamils. The most of the pages of the Dipavamsa are devoted to the Faith than to the history. That is why the translator, Hermann Oldenberg, calls the Dipavamsa as “An ancient Buddhist Historical Records”. It is pro Buddhism, but not anti Tamil. Avaricious and greedy monks and the politicians of the twentyieth century and afterwards without any compunction turned this record of Faith into venomous anti Tamil hatred. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 61 தொடரும் / Will follow துளி/DROP: 1934 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60] https://www.facebook.com/groups/978753388866632/posts/32744509148530976/?
-
'ஊன்றுகோல்'
'ஊன்றுகோல்' காத தூரத்தையும் நொடியில் கடந்து காற்றைக் கிழித்து ஓடிய கால்கள் காடு மேடு அளந்த பாதம் காலக் கொடுமையால் துணை தேடுது! பூண் சூட்டிய நுனியைப் பிடித்து கண்ணின் மங்கிய ஒளியில் பார்த்து மண்ணைத் தடவி மெல்ல நடக்கிறேன் வண்ணக் கொடியாளாக இன்று ஊன்றுகோல்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1933 ['ஊன்றுகோல்'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32731437279838163/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 59 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 59 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'சந்தமுகன் சிவா ஒரு தமிழனும் ஒரு சைவனுமே!' சந்தமுகன் சிவா [Chandamukha Siva] எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தார். தமிழாதேவி [Damilidevi / Damiladevi] என்று அழைக்கப்படும் அவரது ராணி மனைவி கிராமத்திலிருந்து கிடைத்த தனது வருவாயை தனது கணவர் மன்னனால் கட்டப்பட்ட அரமாவிற்கு [Arama / பௌத்தத்தில் அரமா என்பது ஒரு துறவற இல்லம்] வழங்கினார். கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார்.[five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன்?. இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன். மேலும் பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon] மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது. "பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு உறைபதி என்னும் உலகு." (குறள்-1015) எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498 "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த" என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது. யசலாலக்க என்ற குடும்பப்பெயர் கொண்ட திஸ்ஸ மன்னன் (Yassalalaka Tissa) எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தான். முந்தைய இரண்டு ஆட்சிகளின் நீளம் ஒரேயளவாக, எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் என்பது விசித்திரமானது. அதன் பின் வாசல் காவலாளியின் [royal gatekeeper] மகன் சுபகராஜன் அல்லது சுபா [Subha] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அத்தியாயம் 21-ல் உள்ள மேற்கண்ட அரசர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்கலாம்.? தமிழர் என்பதை அவர்களின் பெயர்களிலும் மற்றும் சிவா என்ற பெயர்களின் மூலம் சைவ மதத்தையும் காண்கிறோம். Part: 59 / Appendix – Dipavamsa / 'Chandamukha Siva is a Tamilian and a Shaiva or Shaivite!' Siva Candamuki ruled for eight years and seven months. His queen consort who is known as Damiladevi bestowed her revenues from the village to the Arama built by her husband king. King Tissa with surname Yasalala ruled for eight years and seven months. It is strange that the lengths of the two previous reigns are eight years and seven months. Subha, the son of a doorkeeper, ruled for six years. All the above kings in the chapter 21 could be Tamils. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 60 தொடரும் / Will follow துளி/DROP: 1932 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 59] https://www.facebook.com/groups/978753388866632/posts/32721565764158648/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 58 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 58 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இலங்கையை ஆண்ட முதல் அரசி அனுலா [அனுலாதேவி]' வட்டகாமினி மூன்று பிடகங்களையும் [திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும். பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும். அதன்படி மூன்று வகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது. அவை: சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவையாகும். இந்த மூன்று பிடகங்களில் அடங்கிய இருபத்தொன்பது நூல்களையும் பௌத்த சமயத்தின் மூல நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற் கூறப்படும் சமயக்கொள்கைகளே தேரவாதம் என்று கருதப்படுபவை.] அட்டகதாவையும் [அட்டகதா, பண்டைய இந்தியா மற்றும் இலங்கையின் சமூகம், கலாச்சாரம் மற்றும் மத வரலாறு பற்றிய பல தகவல்களை வழங்கும் பாலி பௌத்த நியதியின் வர்ணனைகள். / atthakatha, commentaries on the Pali Buddhist canon that provide much information on the society, culture, and religious history of ancient India and Sri Lanka.] புத்தக வடிவில் எழுதினார். ஆனால், இவை எந்த மொழியில் எழுதப்பட்டன என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் கட்டாயம் சிங்கள மொழியில் இல்லை, காரணம் அப்பொழுது சிங்கள மொழி என்று ஒன்று உலகிலேயே இல்லை. மகசுழி மகாதிஸ்ஸ [மகசுழி மகாதீசன் / Mahaculi Mahatissa], வட்டகமணியின் மரணத்திற்குப் பிறகு, பதினான்கு ஆண்டுகள் நீதியாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்தார். அவரும் பல நல்ல வேலைகளைச் செய்திருப்பதாகத் தோன்றியது. எனினும் அவருடைய பூர்வீகம் தீபவம்சத்தில் கூறப்படவில்லை. பின்னர் வட்டகமணியின் மகன் சோரநாகன் [Chora Naga also known as Coranaga or Mahanaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனாக ஆட்சி செய்தான். சோரநாகாவிற்குப் பிறகு, மகசுழி மகாதீசனின் மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் அரசன் முதலாம் சிவன் அல்லது சிவா [Siva I] அனுலாவுடன் இணைந்து ஓராண்டு இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தான். பின்னர் ஒரு வெளிநாட்டில் இருந்து வடுகன் [வடுகா / Vatuka / அனுலாவின் இன்னும் ஒரு துணைவன். பின்னர் அவளால் விஷம் கொடுக்கப்பட்டார். இவர் முதலில் அனுராதபுரத்தில் தச்சராக இருந்தார்.] என்ற பெயருடைய ஒரு ராஜா, ஒரு தமிழன், ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். இங்கு வடுகா ஒரு தமிழன், 21 - 27, வெளிநாட்டிலிருந்து வந்தவன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் ஒரு தமிழன் வெளிநாட்டிலிருந்து வந்ததாக உள்ள ஒரே ஒரு உதாரணம் இதுதான்!. அதன் பிறகு, திஸ்ஸ [தருபாதுக திச்சன் / Darubhatika Tissa] என்ற விறகு வெட்டுபவன் ஒரு வருடம் ஒரு மாதம் ஆட்சி செய்தான். அப்போது தமிழ் மன்னன் என்றழைக்கப்படும் நிலயா [நிலியன் / Nilaya or Niliya] என்ற நபர் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த தமிழ் மன்னன் இந்தியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படவில்லை. அனுலா என்ற பெண் இந்த சிறந்த மேற்கூறிய நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் இறுதியாக தானே ஆட்சி செய்தாள். அந்த சிறந்த மனிதர்கள் யார் என்று துல்லியமாக கூறப்படவில்லை என்றாலும், அவர்கள் திஸ்ஸ, சிவா, வடுகா, (மற்றொரு) திஸ்ஸ, மற்றும் நிலயா [Tissa, Siva, Vatuka, (another) Tissa, and Nilaya] என்று தெரிகிறது, சோரநாகன் ஒரு கொள்ளைக்காரனைப் போல ஆட்சி செய்ததால் சோரநாகனை சிறந்த நபராக விவரிக்கப்பட மாட்டார் என்று எண்ணுகிறேன். பின்னர் மகசுழி மகாதீசனின் இரண்டாவது மகன் குடகன்ன திஸ்ஸன் அல்லது குடகன்ன தீசன் [Kutakanna Tissa, also known as Makalan Tissa] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அத்தியாயம் 21: குடகன்ன தீசனின் மகனான இளவரசர் பாதிகாபய அபயன் அல்லது பட்டிகாபய அபயா (Bhatikabhaya Abhaya), பிக்குகளுக்கும் புத்த மதத்திற்கும் நிறையச் நம்மை செய்து இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். குடகன்ன தீசனின் மற்றொரு மகன், இளவரசர் மகாதாதிக மகாநாகன் [Mahadathika Mahanaga], இவனும் பிக்குகளுக்கும் புத்த மதத்திற்கும் நிறையச் செய்தார். அவர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். குடகன்ன தீசன் மற்றும் மகாநாகன் என்ற பெயர்கள் குறிப்பிடுவது போல், இவர்களும் தமிழர்களாக இருக்கலாம்? மகாதாதிக மகாநாகனின் மகன் அமந்தகாமினி அபயன் [Amandagamani Abhaya, also referred as Aḍagamunu] ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்தான். தட்டிக [Dathika] என்பது தமிழ்ப் பெயர், 20-18 ஐப் பார்க்கவும், எனவே மகாதாதிக [மகாதட்டிக] என்பதும் தமிழ்ப் பெயர். இவர் விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அமந்தகாமினி தமிழரான மகாதாதிகாவின் மகன். எனவே அமந்தகாமினியும் தமிழர்தான். எனவே, அவரது தம்பி கனிராஜனு திஸ்ஸனும் [Kanirajanu Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த தமிழனாகத் தான் இருக்க வேண்டும். அமந்தகாமினியின் மகன் சூலபாயன் [Chulabhaya] ஓராண்டு ஆட்சி செய்தான். அமந்தவின் (அமந்தகாமினியின்) மகள் , சிவாலி ரேவதி [Sivali] நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். அமந்தகாமினியின் சகோதரியின் மகன் இளநாகா [Ilanaga, also known as Elunna] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். Part: 58 / Appendix – Dipavamsa / 'The first queen to rule Sri Lanka was Anula [Anuladevi]' Vattagamani caused the three Pitakas and the Atthakatha to be written in book form. The language in which these were written is not specified. Mahaculi Mahatissa reigned, after the death of Vattagamani, fourteen years justly and righteously. He seemed to have done many meritorious works too. His ancestry is not given in the Dipavamsa. Then Coranaga, son of Vattagamani, ruled like a robber for twelve years. After Coranaga, Mahchuli’s son, Tissa, ruled three years. Then king Siva cohabited with Anula and ruled for one year and two months. Then a king from a foreign country, Vatuka by name, a Damila, ruled for one year and two months. This is clearly stated that Vatuka is a Damila, 21 – 27, and came from a foreign country. This is the only instance in the Dipavamsa that a Damila came from a foreign country. Then a wood cutter by the name Tissa ruled for one year and one month. Then a person called Nilaya, known as the Damila king, ruled for three months. It is not stated that this Damila king came from India. A woman, Anula, killed these excellent persons and ruled for four months. Though it is not stated precisely who those excellent persons are, but it seems that they are Tissa, Siva, Vatuka, (another) Tissa, and Nilaya, as Coranaga wouldn’t have been described as excellent person because he ruled like a robber. Then Mahachuli’s second son, Kuttikannatissa ruled for twenty two years. Chapter 21: Prince Abhaya, the son of Kuttikanna, did quite a lot to the Bikkhus and to the Buddhism. He ruled for twenty eight years. Another son of Kuttikanna, prince Naga, also did quite a lot to the Bikkhus and the Buddhism. He reigned for twelve years. Kuttikanna and Naga could be Tamils as their names indicate. Amandagamani, the son of Mahadathika ruled for nine years and nine months. Dathika is a Tamil name, see 20-18, and therefore Mahadathika is also a Tamil name. He forbade the killing of animals. Amandagamani is the son of Mahadathika who is a Tamil. Therefore Amandagamani is also a Tamil. His younger brother Kanirajanu must also be a Tamil, ruled for three years. Amandagamani’s son, Culabhaya ruled for one year. The daughter of Amanda (gamani?), Sivali Revathi ruled for four months. Illanaga, a son of Amanda’s sister ruled six years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 59 தொடரும் / Will follow துளி/DROP: 1931 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 58] https://www.facebook.com/groups/978753388866632/posts/32716283924686832/?
-
"மூன்று கவிதைகள் / 13"
"மூன்று கவிதைகள் / 13" 'பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே' பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே வஞ்சனை இல்லா கம்பீர நாயகனே! கொஞ்சும் மொழியாலே உன்னைத் தாலாட்டவா தஞ்சம் தேடி என்னிடம் வந்தவனே மிஞ்சும் அழகு மகிழ்ச்சி தருகுதே! துள்ளும் ஆசை இதயத்தில் எழ சொல்லும் வார்த்தைகள் தேனாய் இனிக்க கள்ளும் தராத மயக்கம் வர உள்ளும் புறமும் நீயே தோன்ற அள்ளும் ஆசை அலையாய் பாயுதே? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ----------------------------- ''புகைப்படக் கவிதை'' "பெண்ணில் பிறந்தவன் அவளையே நாடுகிறான் மண்ணில் தவழ்ந்தவன் அதுவே ஆகிறான்! வண்ண விளக்கில் அணிச்சலை வெட்டுகிறான் வண்ணாத்திப் பூச்சியாய் மகிழ்ச்சியில் பறக்கிறான்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ----------------------------- மின்னலாய் ஒரு பின்னல் [ஆரம்பம் - முடிவு - தொடக்கம் - கடைசி] ஆரம்பம் சரியாக அமைந்தால் நண்பா முடிவு மகிழ்வாக மலருமே! தொடக்கம் கோணலாக மாறினால் கடைசிப் பலன் என்றும் பூச்சியமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1930 ["மூன்று கவிதைகள் / 13"] https://www.facebook.com/groups/978753388866632/posts/32706564062325485/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
எல்லோருக்கும் நன்றிகள்! இது 144 பகுதிகள் . இன்னும் தொடரும். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றிகள் !
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 02 அத்தியாயம் 2 - நகுலேஸ்வரம் மற்றும் கோணேஸ்வரத்தில் உள்ள பண்டைய தொடர்புகள் மறுநாள் காலை, சூரியன், அனலியின் வீட்டிற்கு அருகில் இருந்த யாழ்ப்பாணக் குளத்தின் மீது உதயமாகி, வானத்தை காவி மற்றும் ரோஜா நிறங்களில் குளிப்பாட்டியது. ஆரனும் அனலியும் கீரிமலையை நோக்கி ஒன்றாகப் பயணித்தனர். அங்கு, காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, தீர்த்தத் திருத்தலமான நகுலேஸ்வரம் கோயில் பெருமையுடன் நின்றது. இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும் [பல ஆலமரங்களைப் போல அல்லாமல், கல்லால மரத்திற்கு விழுதுகள் இல்லை. இது ஒரு அரிய வகை மரமாகும்], தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட இந்த ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் [இந்துக் கோவில்களில் கருவறை அல்லது மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை அல்லது மதில் பகுதி] ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர் என்பது வரலாறாகும். மல்லிகை மற்றும் கடல் உப்பு கலந்த நறுமணத்தால் காற்று நிரம்பியிருந்தது. அங்கே யாத்ரீகர்கள் [பயணிகள்] வெறுங்காலுடன் நடந்து, சிவனிடம் பிரார்த்தனை செய்தனர். புனித கீரிமலை தீர்த்தக் கேணி அருகே ஆரன் குளிர்ந்த நீரைத் தொடக் குனிந்து, “இந்த நீரூற்று கூட நினைவாற்றலைக் கொண்டுள்ளது என்று சொல்கிறார்கள், இல்லையா?” என்றான். அனலி (சிரித்துக்கொண்டே): “ஆம். புராணக்கதைகள் முனிவர்களும் மன்னர்களும் இங்கு நீராடியதாகக் கூறுகின்றன. அது மட்டும் அல்ல, தட்சிண கைலாச புராணம் யாழ்ப்பாணத் திருநாகுலேஸ்வரத்தைக் குறித்து, “வடகைலாசத்தில் சிவன் எவ்வாறு நிலைபெற்றானோ, அதுபோல் தென்கடலோரத் தலங்களில் நாகுலேஸ்வரத்தில் அவன் அருளுருவாகத் திகழ்கிறான்.” என்று சொல்வதுடன், அந்த புராணத்தின் படி, நாககுலர் வழிபட்ட சிவலிங்கம் தான் இன்றைய திருநாகுலேஸ்வரம் ஆகும். இதனால் தான், இத்தலம் தட்சிண கைலாசம் (தென் கைலாசம்) என்று போற்றப்படுவதுடன், அத்தகைய புராணக் குறிப்பினால், யாழ்ப்பாணம் மட்டும் ஒரு நகரமல்ல, பண்டைய சைவ மரபின் உயிரோடு வாழும் சாட்சியம் என உணரலாம் என்று ஒரு விரிவுரையை ஆரனுக்கு நடத்தினாள். ஆரன் தண்ணீரைப் பார்த்தான். ஒரு கணம், அவன் தனது பிரதிபலிப்பை மட்டுமல்ல, தனக்கு முன் இருந்த எண்ணற்ற தலைமுறையினரையும் - போர்வீரர்கள், கவிஞர்கள், துறவிகள் - ஒரு காலத்தில் அவன் நின்ற இடத்தில் நின்றதையும் காண்பதாக உணர்ந்தான். பின்னர், அவர்கள் திருகோணமலைக்கு நீண்ட பயணம் சென்றனர், அங்கு கடல் முடிவில்லாமல் நீண்டு, கருப்பு பாறைகளில் மோதியது. கோணேஸ்வரம் கோயில் சுவாமி பாறையில் [Swami Rock / Kōṇāmalai] ஒரு ரத்தினம் போல உயர்ந்து, அதன் கோபுரம் வானத்தை முத்தமிட்டது. அனலி, மென்மையான தொனியில், “இந்தக் கோயிலும் ஒரு காலத்தில் தட்சிண கைலாசம் [Dakshina Kailasam], அதாவது தெற்கு கைலாசம் என்று அழைக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் இதை அழிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அது இருந்தது என்பது வரலாறு. 7 ஆம் நூற்றாண்டில், இந்த ஆலயத்தைப் புகழ்ந்து, பெருமையை பறைசாற்றி, திருஞானசம்பந்தர் ஒரு நீண்ட தேவாரம் பாடினார் எனறால், அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அது இருந்தது தெரியவருகிறது. ஆனால் இடிக்கப்பட்ட பிறகும், அதன் ஆன்மாவை அடக்கம் செய்ய அவர்களால் முடியவில்லை.” என்றாள். அதன் பின், அனலி அதில் ஒரு தேவாரத்தை ஆரனுக்கு படித்துக் காட்டினாள். நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. "தட்சிண கைலாசம்" என்பது பல கோயில்களைக் குறிக்கும் ஒரு பெயர், இது "தென் கைலாசம்" என்று பொருள்படும். கேரளாவில் உள்ள செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோயில், ஆந்திர நாட்டில் உள்ள திருக்காளஹஸ்தி மற்றும் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி, இலங்கையில் உள்ள திருகோணமலை போன்ற பல்வேறு இடங்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரன்: “அப்படியானால் கற்களை உடைத்து கடலுக்குள் விழுத்தினாலும், அந்த இடத்தின் ஆன்மா இன்னும் அங்கு உயிர்வாழ்கிறது?” ஆச்சரியமாகக் கேட்டான் அனலி (அவனது கண்களைப் பார்த்து): “நம்மைப் போலவே. நம் மக்கள் நிலங்கள், வீடுகள், உயிர்களை இழந்துள்ளனர். ஆனால் தமிழ் ஈழத்தின் ஆன்மா இன்னும் சுவாசிக்கிறது. அதனால்த்தான் புலம்பெயர்ந்தோர், குறைந்தது விடுமுறையிலாவது, திரும்பி வர வேண்டும். உலகிற்கு நாம் அழிக்கப்படவில்லை என்பதை நினைவூட்டுவதற்காக.” என்றாள். "ஆரன், இது உடைக்கப்பட்டது முதல் தடவை அல்ல, முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் (பொ.பி. 277 - 304) என்ற மகாவம்சத்தின் பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாகவே இருக்கலாம். அதாவது கி பி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டிலும் இது இருந்துள்ளது மட்டும் அல்ல , அது அழிக்கப்பட்டதும் தெரிய வருகிறது" என்று மேலதிக விளக்கத்தை அனலி கூறினாள். ஆரன், அவளின் அந்த வார்த்தைகள் தனக்குள் ஆழமாக ஏதோ ஒன்றைத் தூண்டுவதை உணர்ந்தான். 1983 இல் ஏற்பட்ட கொழும்பு இனக்கலவரத்தால், அந்தக் கொடுமையை நேராக பார்த்து, அதில் இருந்து ஒருவாறு தப்பி, சரக்கு கப்பலில், தம் தம் பெற்றோருடன் யாழ் போனபின், இலங்கையை விட்டு நிரந்தரமாக கனடா போய், அதன்பின் இன்றும் விடுதலையிலாவது திரும்பி வரத் துணியாத தனது பெற்றோரையும், பாட்டி, பாட்டாக்களையும் அவன் நினைத்தான். இப்போது அவன் புரிந்துகொண்டான் - வெளிநாட்டில் வாழ்ந்து துக்கப்படுவது போதாது. உண்மையான நினைவுச் செயல் - திரும்பி திரும்பி வருவது, இங்கே நின்று நிலத்திற்கு மீண்டும் உயிர் ஊதுவது. சுவாமி பாறையின் விளிம்பில் அவர்கள் ஒன்றாக நின்றபோது, கீழே உள்ள கடல் ஒரு நித்திய சாட்சியைப் போல கர்ஜித்தது. ஆரன்: “அனலி, இந்தக் கடல் பேசுவதை நீ எப்போதாவது உணர்ந்தாயா?” அனலி (லேசாகச் சிரித்தபடி): "இந்தக் கடல் வெறும் நீல நிறம் மட்டுமல்ல .... அது நினைவுகளால் நிரம்பியுள்ளது ... ஒவ்வொரு அலையும் ஒரு காலத்தில் இழந்த ஒன்றைத் திருப்பித் தருகிறது — ஒரு பண்டைய வரலாறு - நமது முன்னோர்களின் குரல்கள் - நம் இதயங்களுக்குள் ஆழமாகப் புதைந்திருக்கும் காதல் .... ஆமாம், அவை கரையில் நின்று ஒரு நொடிக்கேனும் எங்களைத் தழுவும். மீண்டும் அலை பின்வாங்கினாலும், அந்த நொடியின் அர்த்தம் நித்தியமாகவே நம்முள் வாழ்கிறது.” அவள் அவன் முகத்தை நெருக்கமாக பார்த்துக்கொண்டு, தன் இரு கைகளையும் நீட்டினாள். அவன், அவள் கையைத் தொட்டபோது, அவனுக்கு மண்ணின் நெருப்பைத் தொட்டது போல் இருந்தது. அது வெப்பமாகவும் அதேநேரம் நிதானமாகவும், ஆழ்வேர்கள் போல இந்தத் தீவின் உள்ளத்தோடு இணைந்திருந்தது. அந்தத் தொடுதலின் நொடியில், அவன் இனி அந்நியன் அல்ல, பாரம்பரியத்தின் சிதைந்த துணுக்குகளைத் தேடும் அலைந்து திரியும் அகதி மகனும் அல்ல. ‘இது என் நிலம், இது என் மூச்சு, இது என் வீடு என முதல் முதல் உணர்ந்தான். என்றாலும் அவன் அனலியின் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை. கரையை தொட்ட அலைகள், அடுத்தகணம் திரும்பிப் போவதுபோல, மெதுவாக கொஞ்சம் விலகி நின்றான். அங்கே ராவணனின் சிலை, சுவாமி பாறையின் விளிம்பில், அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றது. ஆரனுக்கும் அனலிக்கும் - அந்த இரண்டு ஆன்மாக்களுக்கும் - இடையிலான தொடர்பு, சிதறடிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் பண்டைய தாயகத்திற்கும் இடையிலான தொடர்புக்கும் மேலாக பின்னிப் பிணைந்திருப்பதாக இருவரும் உணர்ந்தாலும், எனோ, வெளிப்படையாக, குறிப்பாக ஆரன் காட்டிக் கொள்ளவில்லை. திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலில், காடுகள், மலைகள் மற்றும் உள்நாட்டில் உள்ள கிராமங்களுக்குப் பின்னால், மாலை சூரியன் மறைந்தது. அப்பொழுது அலைகள் மீது தங்க ஒளி விழுந்து, உருகிய செம்பு போல அவற்றை வரைந்தது. ஆரன், அனலியின் அருகில் குன்றின் மீது நின்று, முடிவில்லா கடலைப் பார்த்தான். "உனக்குத் தெரியுமா ஆரன்," என்று அவள் மெதுவாகச் சொன்னாள், "இங்கிருந்து, கப்பல்கள் ஒரு காலத்தில் தமிழகம், கம்போடியா, சீனாவுக்குக் கூடப் பயணித்தன. இந்தக் கடல் வர்த்தகத்தை மட்டுமல்ல, நாகரிகங்களுக்கிடையில் காதல் கடிதங்களையும் கொண்டு சென்றது." என்று அனலி, தனது சக்கர தோடு கழுத்தைத் தொட, சடை பின்னல் அவிழ்ந்து விழ, சலங்கைக் கால் இசை எழுப்ப, மென்மையான புன்னகையுடன் கூறினாள். அவன் அவளை, அவள் தலை முதல் கால் வரை ஏறிட்டுப் பார்த்தான். முதல் முறையாக, அனலி அவன் கண்களில் ஒரு பிரகாசத்தைக் பார்த்தாள். அவள் இதயம் மகிழ்ச்சியில் நடுங்கியது. என்றாலும், வெளியே எந்த உணர்வையும் காட்டாமல், வெறும் ஒரு வழிகாட்டிபோல, “ஆரன் ... என் அப்பா உனக்கு வரலாறு கற்பிக்க என்னை அனுப்பினார். ஆனால் அதற்கு பதிலாக ... நான் உன்னுடன் ஒரு புதிய கதையை எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.” என்று எதோ ஒன்றைச் சொல்லாமல் சொன்னாள். ஆரனின் குரல் கிட்டத்தட்ட உடைந்தது. “அனலி, நான் என் வேர்களைத் தேடித்தான் இங்கு வந்தேன். ஆனால் அது இப்ப நீயும் தான் அதில் ஒன்று என்ற உணர்வு அரும்புகிறது. என்னால் அதை இனியும் மறைக்க முடியவில்லை" என்று அவளைத் தன் மார்பில் அணைத்தான். அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது சோகம் அல்ல - ஆழமான, இனிமையான, ஆனால் பயமுறுத்தும் மகிழ்ச்சி ஒன்று. அப்பா என்ன சொல்வாரென்று ! அவள் தனக்குள் கிசுகிசுத்தாள், “இந்தப் பயணத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என்று அப்பா என்னிடம் கேட்டால், நான் சொல்வேன் - நம் நிலம் உயிருடன் இருக்கிறது, என் இதயமும் கூட ... " ஆரன் மெதுவாக தன் கைகளை எடுத்தான். ஆனால், அவள் விலகவில்லை. தெய்வங்கள் தாங்களாகவே தங்கள் ஆசீர்வாதத்தை வழங்குவது போல், தொலைவில் கோயில் மணிகள் ஒலித்தன. அந்த மணி ஓசையிலும், அனலியின் தந்தையின் வார்த்தைகளும் சேர்ந்து ஒலித்தன. "அனலி, ஆரன் நான் உங்களை நம்புகிறேன், நீங்கள் இருவரும் எங்கள் நிலத்தின் வரலாற்றைக் - கற்றுக்கொடுக்க - கற்றுக்கொள்ள - போகிறீர்கள், அந்த பொறுப்பு இருக்கட்டும்" ஆனால், அவர்கள் ஒன்றாகப் பயணித்தபோது - கோயில்களில் கதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, கடற்கரைகளில் நடந்தபோது, இழப்பு, புலம்பெயர்வு, மற்றும் நம்பிக்கை பற்றிப் பேசும்போது - அவர்கள் தங்களுக்குள் ஆழமான இன்னும் ஒன்றையும் கண்டுபிடித்தனர். வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? நம்பிக்கை நட்பாக மாறியது. நட்பு நெருக்கமாக மாறியது. மெதுவாக, அவர்கள் இருவருமே திட்டமிடாமல், காதல் மலர்ந்தது. ஆனால் அதை எல்லை தாண்டாமல், வெளியே காட்டாமல் பார்த்துக்கொண்டனர். நல்ல காலம், அக்காவின் மகள் வந்தது அதற்கு பெரும் உதவியாக, ஒரு காவலாக இருந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1929 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 02] https://www.facebook.com/groups/978753388866632/posts/32698811869767371/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 57 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 57 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'ஐந்து தமிழ் மன்னர்களும் எதிர்க் கடற்கரையைச் சேர்ந்தவர்களா?' காக்கவண்ணனின் மகன் அபயாவைப் பற்றிய தீபவம்ச தகவல்களில், மகாநாம மகிழ்ச்சியடையாமல் இருந்திருக்கலாம்? இதனால், அவர் மகாவம்சத்தில் பல கூடுதல் விவரங்களை விரிவுபடுத்தி சேர்த்தார் மற்றும் புதியவைகளை கற்பனையில் கண்டுபிடித்து சேர்த்தார் என்று நம்புகிறேன். தீபவம்சத்தில் 18 - 53 முதல் 54 வரையிலான இரண்டு வசனங்களில் மட்டுமே அபயா அரியணை ஏறுவது பற்றி கூறப்பட்டு இருந்தது; இருப்பினும், மகாவம்சம் அதை நான்கு அத்தியாயங்களாக விரிவுபடுத்துகிறது, 22 முதல் 25 வரை, அபயாவின் பிறப்பு முதல் எல்லாளனை வென்றது வரை முந்நூற்று அறுபத்தைந்து வசனங்களைக் கொண்டுள்ளது. தீபவம்சம், 18-53, இளவரசர் அபயா [Abhaya] (துட்டகாமினி) காக்கவண்ணாவின் மகன் என்று கூறுகிறது, அதேசமயம் மகாவம்சம் அவரை கக்கனவண்ணனின் உயிரியல் மகன் அல்ல என்று விவரிக்கிறது. இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், தமிழ் சிப்பாய் ஒருவரின் தலையை வெட்டப் பயன்படுத்தப்பட்ட வாளில் இருந்த, இரத்தக் கறை படிந்த நீரைக் குடித்த விகாரமகாதேவியின் மகாவம்ச கதை, தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. அது மட்டும் அல்ல, தீபவம்சத்தில் இளவரசன் அபயாவின் தாயாகக் கூட விகாரமகாதேவி குறிப்பிடப்படவில்லை. துட்டகாமினி இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். 18 -54 பார்க்கவும். அத்தியாயங்கள் 19 மற்றும் 20 ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகவும் மற்றும் கலந்தும் இருக்கின்றன. எனவே, இரண்டையும் ஒன்றாகச் சுருக்கமாக இங்கு தருகிறேன். மன்னன் (துட்டகாமினி) விலையுயர்ந்த அரண்மனையை கட்டினான். மேலும் இந்தியாவிலிருந்து பதினான்கு தேரர்களை சம்பிரதாயமாக அடித்தளம் அமைப்பதற்காக அழைத்தான். அவர்களின் பெயர்கள் இந்தகுட்டா(1), தம்மசேனா(2), பியதாசி(3), புத்தர்(4), தம்மம்(5) சம்கா(6), மித்தனா(7), அனத்தனா(8), மகாதேவா(9), தம்மரக்கிதா(10), உத்தரா(11), சிட்டகுட்டா(12), இந்தகுட்டா(13), சூரியாகுட்டா(14) ஆகும். [Indagutta(1), Dhammasena(2), Piyadasi(3), Buddha(4), Dhamma(5) Samgha(6), Mittana(7), Anattana(8), Mahadeva(9), Dhammarakkhita(10), Uttara(11), Cittagutta(12), Indagutta(13), and Suriyagutta(14)] தீபவம்சம், 18-47, சேனா மற்றும் குட்டா [Sena and Gutta] ஆகியோர் தமிழ் இளவரசர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே குட்டா என்பது தமிழ்ப் பெயர். பதினான்கு பிக்குகளில் நால்வரின் பெயர் ‘குட்டா’ என்று முடிகிறது. எனவே அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும்? அதுமட்டும் அல்ல, மகாதேவா என்பது தமிழர்களிடையே மிகவும் பொதுவான பெயர். சேனா என்பது தமிழ்ப் பெயர்களின் பொதுவான முன்னொட்டு; சேனாதிராஜா, ராஜசேனன், சேனாவரையர் [Senathirajah, Rajasenan, Senavaraiyar] போன்றவர்கள். எனவே தம்மசேனாவும் தமிழராக இருக்கலாம். பதினான்கில் ஆறு பேர் தமிழர்கள், இதைவிட அதிகமாகவோ அல்லது முழுமையாகக் கூட இருக்கலாம்? எல்லாளன் மற்றும் துட்டகாமினி ஆகிய இருவரும் பண்டைய இலங்கையின் நாட்டுப்புறக் கதைகளில் சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும்; எல்லாளன் ஒரு நியாயமான ஆட்சியாளராகவும், துட்டகாமினி ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராகவும் காணப்படுகிறார்கள். அவர்களுக்கிடையேயான சண்டையை மகாநாம தேரர் தனது தமிழர் விரோத உணர்வை முன்னெடுப்பதற்காக கண்டுபிடித்தார். தீபவம்சத்தின்படி துட்டகாமினியால் இந்திய எதிர்ப்பு அல்லது தமிழர் எதிர்ப்பு எதுவும் காட்டப்படவில்லை, ஆனால் மகாவம்சத்தின்படி சிறு வயதிலிருந்தே அவருக்கு அந்த உணர்வு இருந்தது. துட்டகாமினி மகாவிகாரையையும் கட்டினார். காக்கவண்ணாவின் மற்றொரு மகன் சத்தாதிஸ்ஸ [சத்தா திச்சன் / Saddhatissa], அபயாக்குப் (துட்டகாமினி) பிறகு பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரும் சில கட்டிடங்களை கட்டினார். சத்தாதிச்சனின் மகன் துலத்தன் [துலத்தன / Thulathana] ஒரு மாதம் பத்து நாட்கள் மட்டுமே ஆட்சி செய்தான். பின்னர் சத்தாதிச்சனின் மகன் லஜ்ஜிதிஸ்ஸ [லஞ்ச திச்சன் / Lajjitissa] மன்னன் ஒன்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தான். பின்னர் அவரது இளைய சகோதரர் கல்லாடநாகா [கல்லாட நாகன் / Khallatanaga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் தனது தளபதியால் கொல்லப்பட்டார். மேலும் தளபதி ஒரு நாள் மட்டுமே ஆட்சி செய்தார். கல்லாட நாகனின் தம்பியான வட்டகமணி [வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் / Valagamba, also known as the Great Black Lion, Vattha gamani Abhaya and Valagam Abha], தளபதியைக் கொன்று ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் ஐந்து தமிழ் மன்னர்கள், அலவத்த [புலகத்த] சபியா (பாகிய), பனய, பழைய மற்றும் தட்டிக [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன் / Alavatta (Pulahattha!), Sabhiya (Bahiya!), Panaya, Palaya, and Dathika] ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்றி பதினான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் வரை ஆட்சி செய்தனர் [19-15 :15. The five kings Ālavatta (Pulahattha!), and Sābhiya (Bāhiya!), Panaya, Palaya, and Dāṭhika reigned fourteen years and seven months.]; இதில், 20-15 முதல் 17 வரை பார்க்கவும். இந்த தமிழ் மன்னர்கள் ஒருவரையொருவர் கொன்றனர். பின்னர் முந்தைய அரசன் வட்டகமணி திரும்பி வந்து தமிழன் தட்டிகனைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மேற்குறிப்பிட்ட ஐந்து தமிழர் அரசர்களின் தனித்தனி ஆட்சியின் நீளத்திற்கு 20-15ஐக் காண்க [15. (After that time) the Damila Pulahattha reigned three years, and the general Bāhiya two years.]. இந்த ஐந்து தமிழ் மன்னர்களும் சோழ நாட்டிலிருந்தோ அல்லது எதிர்க் கடற்கரையில் இருந்தோ வந்தவர்கள் என்று தீபவம்சம் கூறவில்லை. இந்த ஐந்து தமிழ் மன்னர்களைப் பற்றி மகாவம்சத்தில் மகாநாமாவின் கொடூரமான கட்டுக்கதை சுவாரஸ்யமானது. தீபவம்சத்தில் உள்ள ஐந்து தமிழர்கள் மகாவம்சத்தில் ஏழு தமிழர்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இன்னொரு பிராமணனும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளான்; இதை, மகாவம்சத்தின் 33 - 37 முதல் 61 வரை பார்க்கவும். மகாவம்சம் மறைமுகமாக ஏழு தமிழர்களும் எதிர்க் கடற்கரையைச் சேர்ந்தவர்கள் என்று குறிக்கிறது 33 - 39. Part: 57 / Appendix – Dipavamsa / 'Were all five Tamil kings from the opposite coast?' Mahanama might not have been happy with this and he elaborated, added and invented many extra details in the Mahavamsa. Ascending to the throne by Abhaya is covered in only two verses, 18 – 53 to 54 in the Dipavamsa; however, the Mahavamsa elaborates it into four chapters, 22 to 25, consisting of three hundred and sixty five verses, from the birth of Abhaya to the victory over Elara. The Dipavamsa, 18-53, says that the prince Abhaya (Dutthagamani) was the son of Kakkavanna, whereas the Mahavamsa describe him as not the biological son of Kakkanavanna. Another important point is that the story of Viharamahadevi drinking the blood stained water dripping down the sword, as stated in the Mahavamsa, which was used to behead a Tamil soldier is not at all mentioned in the Dipavamsa. Viharamahadevi is not mentioned as the mother of the prince Abhaya in the Dipavamsa. Dutthagamani ruled for twenty four years, 18 -54. The Chapters 19 and 20: There are overlaps and mix ups between chapters 19 and 20. It is, therefore, decided to summarize both together. The king (Dutthagamani) built a costly palace, and invited fourteen Theras from India for the ceremonial laying of the foundation. Their names are Indagutta(1), Dhammasena(2), Piyadasi(3), Buddha(4), Dhamma(5) Samgha(6), Mittana(7), Anattana(8), Mahadeva(9), Dhammarakkhita(10), Uttara(11), Cittagutta(12), Indagutta(13), and Suriyagutta(14). It was stated in the Dipavamsa, 18-47, that Sena and Gutta were Damila princes. Therefore Gutta is a Tamil name. The four among the fourteen Bikkhus are ending with ‘gutta’. They must, therefore, be Tamils. Mahadeva is a very common name among Tamils. Sena is also a common prefix of Tamil names; Senathirajah, Rajasenan, Senavaraiyar etc. Therefore Dhammasena could also be a Tamil. Six out of fourteen are Tamils, could be more or all. Both, Elara and Dutthagamani, must be great rulers in the folklores of ancient Ceylon; Elara as a just ruler and Dutthagamani as a great builder. Mahanama invented the fight between them to advance his anti-Tamil sentiment. No anti Indian or anti Tamil sentiment is shown by Dutthagamani as per the Dipavamsa, but he did have that sentiment from the very young age as per the Mahavamsa. He constructed the Mahavihara too. Saddhatissa, another son of Kakkavanna, ruled after Abhaya (Dutthagamani) for eighteen years. He too constructed some buildings. Thulathana, son of Saddhatissa, ruled only for one month and ten days. Then king Lajjitissa, son of Saddhatissa, ruled for nine years and six months. Then his younger brother, Khallatanaga ruled for six years. He was murdered by his commander in chief, and the commander in chief ruled for one day. Vattagamani, the younger brother of Khallatanaga, killed the commander in chief and ruled for five months. Then five Damila kings, Alavatta (Pulahattha!), Sabhiya (Bahiya!), Panaya, Palaya, and Dathika captured the power and ruled for fourteen years and seven months, 19-15; see also 20-15 to 17. These Damila kings killed each other, one after the other. Then the previous king Vattagamani came back and put the Damila Dathika to death and ruled for twelve years. See 20-15 for the length of the individual reigns of the above five Damila kings. The Dipavamsa does not say that these five Damila kings came from Soli country or from the opposite coast. It is interesting to note the cruel play of Mahanama in the Mahavamsa about these five Damila kings. The five Damilas in the Dipavamsa is expanded to seven Damilas in the Mahavamsa. Another Brahmin is also invented; see 33 – 37 to 61 of the Mahavamsa. The Mahavamsa indirectly indicate that the seven Damilas are from opposite coast, 33 - 39. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 58 தொடரும் / Will follow துளி/DROP: 1928 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 57] https://www.facebook.com/groups/978753388866632/posts/32682586788056546/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 56 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 56 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'சேனா, குட்டா மற்றும் எல்லாளன் நீதியாக ஆட்சி செய்தார்கள் என்றால், ஏன் கொல்லப்பட்டார்கள்?' காந்தாரதேசம் அல்லது காந்தாரா என்பது, இன்றைய வடமேற்கு பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பண்டைய இந்தோ-ஆரியப் பகுதி ஆகும் [Gandhara was an ancient Indo-Aryan region in present-day north-west Pakistan and north-east Afghanistan.] இலங்கைத் தீவு 17-1 & 2 இல் செவ்வக வடிவமாக விவரிக்கப்பட்டுள்ளது. [1-2. The excellent island of Laṅkā is thirty-two yojanas long, eighteen yojanas broad, its circuit is one hundred yojanas; it is surrounded by the sea, and one great mine of treasures. It possesses rivers and lakes, mountains and forests.] இது பற்றி ஏற்கனவே நாம் கேள்விகளுடன் விளக்கம் கொடுத்துள்ளோம். இதன் மூலம், அனுராதபுரத்திற்கு வடக்கே உள்ள தமிழ்ப் பகுதியின் குறுகலான வடிவம் தீபவம்சத்தின் ஆசிரியருக்குத் தெரியாது என்பது தெளிவான அறிகுறியாகும். அத்தியாயம் 17- 1 முதல் 74 வரை நான்கு முன்னாள் புத்தர்களைப் பற்றிய விவரங்கள் உள்ளன. 75 முதல் 92 வரையிலான வசனங்கள் ஏற்கனவே நடந்ததைச் சுருக்கமாகக் கூறுகின்றன. மூத்தசிவனின் நான்காவது மகன் உத்தியா [Uttiya], [17-93 Then (followed his) other four brothers, the sons of Muṭasīva. Prince Uttiya reigned ten years.] தேவநம்பியதிசாவுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகிந்த தேரர் தனது அறுபதாவது ஆண்டு முடிவில், [17-95. When the twelfth year (after his Upasampadā) had been completed, Mahinda came hither; at the end of his sixtieth year he attained Nibbāna on the Cetiya mountain], உத்திய ஆட்சியின் போது காலமானார்; அதாவது அவரின் 20 ஆவது வயதில், புத்த பிக்குவாக பதவி வகித்ததில் இருந்து என்கிறது. எனவே, அவர் எண்பது வயதாக இருக்கும் போது இறந்திருக்க வேண்டும்; அதாவது , புத்தர் இறந்தபோதும் அவருக்கு அதே 80 வயது. இது மற்றொரு கண்டுபிடிக்கப்பட்ட தற்செயல் நிகழ்வாக இருக்க வேண்டும்? அத்தியாயம் 18 முக்கியமாக மத விடயங்களைப் பற்றி பேசுகிறது. ஆனால் ஏழு மன்னர்களின் ஆட்சியையும் சுருக்கமாக குறிப்பிடுகிறது. தேரி சங்கமித்தா 18-11 முதல் 12 வரை பத்து பிக்குனிகளுடன் இலங்கைக்கு வந்தார் [11. The Therī Saṅghamittā, and wise Uttarā, Hemā, and Pasādapālā, and Aggimittā, Dāsikā, – 12. Pheggu, Pabbatā, and Mattā, Mallā, and Dhammadāsiyā, these young Bhikkhunīs (these eleven Bhikkhunīs?) came hither from Jambudīpa.]. தேரி சங்கமித்தா, ஞானமுள்ள உத்தரா, ஹேமா, பசாதபாலா, அக்கிமித்தா, தாசிகா, - 12. பேகு, பப்பாதா, மத்தா, மல்லா, மற்றும் தம்மதாசியா, இந்த இளம் பிக்குனிகள் (இந்த பதினொரு பிக்குனிகள்) இந்தியாவில் இருந்து வந்தார்கள். இருப்பினும், தேரி சங்கமித்தா 15 -78 படி மற்ற எட்டு பிக்குனிகளுடன் மட்டுமே வந்தாள் என்று கூறுகிறது? [78. Wise Saṅghamittā and clever Uttarā, Hemā and Māsagalla, Aggimittā, chary of speech, Tappā and Pabbatacchinnā, Mallā and Dhammadāsiyā,]. புத்திசாலியான சங்கமித்தா மற்றும் புத்திசாலி உத்தரா, ஹேமா மசகல்லா, அக்கிமித்தா, பேச்சு திறமை கொண்ட , தப்பா, பப்பாட்டச்சின்னா, மல்லா மற்றும் தம்மதாசியா, - 79. இந்த பிக்குனிகள்]. இந்த 18 ஆம் அத்தியாயத்தில் மட்டும் 45வது வசனத்திலிருந்து இலங்கையின் வரலாற்றுக் கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. முத்தசிவனின் [மூத்தசிவனின்] மற்றொரு மகனான சிவன் [Siva],18 - 45 : உத்தியவுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். 18-46 : சுரதிசா [Suratissa] சிவனுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். 18 - 47 : இரண்டு தமிழ் இளவரசர்களான சேனா மற்றும் குட்டா [Sena and Gutta] ஆகியோர் சுரதிசாவை வென்று பன்னிரண்டு ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தனர். ஆனால், மகாவம்சம் அவர்கள் இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் என்று கூறுகிறது. எனவே இவர்களின் ஆட்சி காலம், பன்னிரண்டா அல்லது இருபத்தி இரண்டு ஆண்டுகளா என்பது நிச்சயமற்றது; மகாவம்சத்தின் 21 - 10 ஐப் பார்க்கவும். இருப்பினும், இரண்டு நாளாகமங்களிலும் [chronicles] இவர்கள் இருவரும் நேர்மையான ஆட்சியாளர்கள் என்று குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது. மற்றுமொரு முக்கியமான விடயம் என்னவெனில், இவ்விரு தமிழர்களும் சோழ நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றோ எதிர்க் கடற்கரையிலிருந்து வந்தவர்கள் என்றோ தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை. எனவே, அவர்கள் அநுராதபுரத்திற்கு வடக்கே உள்ள தமிழர் பகுதிகளில் இருந்து வந்திருக்க முடியும்? இருவரும் தமிழ் இளவரசர்கள் என்று மட்டும் தீபவம்சம் குறிப்பிட்டது, இருப்பினும், வழக்கம் போல், மஹாநாம தேரர் இருவரும் தமிழர் ஆனால் குதிரை வியாபாரிகளின் மகன்கள் என்று ஒரு கதையைக் கூறுகிறார். 18 - 48 : பின்னர் அசேல [Asela] இந்த இருவரையும் கொன்று பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் இளவரசர் எல்லாளன் அசேலனைக் கொன்று நாற்பத்து நான்கு ஆண்டுகள் நேர்மையாக ஆட்சி செய்தார். தீபாவம்சத்தில் கூறப்பட்டுள்ளதை 18 ஆம் அத்தியாயத்தின் 49 ஆம் வசனத்தில் இருந்து, இறுதி வரையில் சொல்லுக்குச் சொல் கூறுவது முறையானதாகக் கருதுகிறேன். [49. A prince, Elāra by name, having killed Asela, reigned righteously forty-four years. 50. Avoiding the four evil paths of lust, hatred, fear, and ignorance, this incomparable monarch reigned righteously. 51. (Once) no rain fell during a whole winter, summer, and the rainy season. (Then) continually the cloud rained, rain fell during seven times seven days. 52. There were three cases which the king decided; (after that) rain fell only during the night and not in day-time. 53. A prince, Abhaya by name, the son of Kākavaṇṇa, whom the ten warriors surrounded, whose elephant was Kaṇḍula, – 54. put thirty-two kings to death and alone continued the royal succession. This prince reigned twenty-four years.] 49. எல்லாளன் என்ற இளவரசன், அசேலனைக் கொன்று, நாற்பத்து நான்கு ஆண்டுகள் நீதியுடன் அரசாண்டான். 50. காமம், வெறுப்பு, பயம், அறியாமை ஆகிய நான்கு தீய வழிகளையும் தவிர்த்து, இந்த ஒப்பற்ற மன்னன் நேர்மையாக அரசாண்டான். 51. (ஒருமுறை) முழு குளிர்காலம், கோடை மற்றும் மழைக்காலங்களில் மழை பெய்யவில்லை. (பின்னர்) தொடர்ந்து மேகம் மழை பெய்தது, ஏழு தரம் ஏழு பகலும் மழை பெய்தது. 52. மன்னர் தீர்ப்பளித்த மூன்று வழக்குகள் இருந்தன; (அதன் பிறகு) மழை இரவில் மட்டுமே பெய்தது, பகலில் பெய்யவில்லை. 53. ஒரு இளவரசன், அபயா என்ற பெயருடைய, காக்கவண்ணனின் மகன், அவனை பத்து வீரர்கள் சூழ்ந்து இருந்தனர். அவருடைய யானை கந்துலா (Kandula) , - 54. முப்பத்திரண்டு அரசர்களைக் கொன்று, தனியாக அரச வாரிசைத் தொடர்ந்தார். இந்த இளவரசன் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். Part: 56 / Appendix – Dipavamsa / 'If Sena, Gutta and Elara ruled justly, why were they killed?' Gandhara is the ancient name for a region corresponds to the Peshawar valley area in the Khyber Pakhtunkhwa Province of Pakistan, formerly the North West Frontier Province, and an area of mountain ranges, rivers, fertile valleys, and arid plains. The island is described as rectangular shape in 17-1, and this is already addressed elsewhere. It is a clear indication that the narrowing shape of the Tamil area north of Anuradhapura is not known to the author(s) the Dipavamsa. There are details about four former Buddhas in the chapter 17- 1 to 74. The Verses 75 to 92 are summary of what happened already. Uttiya, fourth son of Mutasiva, ruled for ten years after Devanampiyatissa, 17-93. Mahinda Thera passed away at his sixtieth year, 17-95, during the reign of Uttiya; sixtieth year must be from his ordination at twenty years. He must have, therefore, died when he was eighty years old; same age as Buddha when he died. It must be another invented coincidence. The Chapter 18 speaks mainly of religious matters, but briefly mentions the reigns of seven kings. Theri Sanghamitta came to Lanka with ten other Bhikkhunis, 18 -11 to 12 [11. The Therī Saṅghamittā, and wise Uttarā, Hemā, and Pasādapālā, and Aggimittā, Dāsikā, – 12. Pheggu, Pabbatā, and Mattā, Mallā, and Dhammadāsiyā, these young Bhikkhunīs (these eleven Bhikkhunīs?) came hither from Jambudīpa.]. However, she came with eight other Bhikkhunis as per 15 -78 [78. Wise Saṅghamittā and clever Uttarā, Hemā and Māsagalla, Aggimittā, chary of speech, Tappā and Pabbatacchinnā, Mallā and Dhammadāsiyā, – 79. these Bhikkhunis]. Historical accounts of Lanka are given from verse 45 only in this chapter. Siva, another son of Mutasiva, ruled ten years after Uttiya, 18 - 45. Suratissa ruled ten years after Siva, 18-46. Two Damila princes, Sena and Gutta, conquered Suratissa and righteously ruled for twelve years, 18 - 47. It is uncertain whether the rule was twelve or twenty two years long as the Mahavamsa says they ruled for twenty two years; see 21 – 10 of the Mahavamsa. It is, however, specifically stated that the rules were righteous in both the chronicles. The other most important point is that the Dipavamsa does not state that these two Damilas came from the Soli country or from the opposite coast. They could have come from the Tamil areas north of Anuradhapura. The Dipavamsa is specific that both are Damila princes, however, as usual, Mahanama invented a story that both are Damilas and sons of a horse transporter. Then Asela put these two to death and ruled for ten years, 18 - 48. Then prince Elara killed Asela and reigned righteously for forty four years. It is considered proper to give what is stated in the Dipavamsa verbatim from the verse 49 to the end of the chapter 18. Quote “A prince, Elara by name, having killed Asela, reigned righteously for forty four years. Avoiding the four evil paths of lust, hatred, fear, and ignorance, this incomparable monarch reigned righteously. (Once) no rain fell during a whole winter, summer, and the rainy season. (Then) continuously the cloud rained, rain fell during seven times seven days. There were three cases which the king decided; (after that) rain fell only during the night and not in day time. A prince, Abhaya by name, the son of Kakkavanna, whom the ten warriors surrounded, whose elephant was Kandula, put thirty two kings to death and alone continued the royal succession. This prince reigned twenty four years.”Unquote It is important to note that it is not stated in the Dipavamsa that Elara was a Tamil. It does not say that he came from Jambudipa (India) or from Soli country. Another important point is that the Dipavamsa does not say that Abhaya (Dutthagamani) killed Elara. Dipavamsa simply says that the prince Abhaya killed thirty two kings. It could be that Elara met with natural death after the long forty four years of reign, and then thirty two local chieftains divided the country among themselves, and they were all, one by one, put to death by Abhaya. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 57 தொடரும் / Will follow துளி/DROP: 1927 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 56] https://www.facebook.com/groups/978753388866632/posts/32667540059561219/?
-
'காதல் சிறகினிலே'
'காதல் சிறகினிலே' காதல் சிறகினிலே ஒரு வெடிப்பு மோதல் தந்து தூர விலகுது! சாதல் கண்களில் அருகில் தெரியுது கூதல் காற்றும் நெஞ்சை வருடுது! காற்றின் கீதம் எனக்குப் புரியவில்லை வேற்று மொழியாக இதயத்தைத் தாக்குது! கூற்றவன் என்னைக் கட்டி அணைத்து கற்ற அறிவையும் மெல்ல அறுக்கிறான்! பிடிக்கும் என்று முத்தத்தால் கூறியவளே நடிக்கும் உன்னை நம்பியது எனோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1926 ['காதல் சிறகினிலே'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32650780024570556/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 55 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 55 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தரின் வலது காறை எலும்பு எப்படி சொர்க்கத்திற்குச் சென்றது?' தேவநம்பியதிஸ்ஸ தூபாவைக் [Thupa / ஒரு புனித நபரின் சாம்பலின் மேல் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம்.] கட்டுவதாக உறுதியளித்தார். மேலும் மகிந்த தேரரை வணங்குவதற்கு ஒரு நினைவுச்சின்னத்தைக் [புத்தரின் தாதுவைக்] கண்டுபிடிக்குமாறு கோரினார். மகிந்த, சுமணாவை [Sumana] பாடலிபுத்திரத்திற்குச் [Pataliputta] சென்று அசோகனிடம் புத்தரின் தாது [relic] ஒன்றைக் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அசோகன் மகிழ்ச்சியுடன் அன்னதானக் கிண்ணத்தை நினைவுப் பொருட்களால் [தாதுவால்] நிரப்பினான். அதன் பிறகு சுமணா தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்று வலது காறை எலும்பைப் பெற்றான். பின் அவன் பாடலிபுத்திரத்திற்கு எப்படி பறந்து சென்றார் என்பதும் அவர் எப்படி தேவ உலகத்திற்குச் சென்றார் என்பதும் மற்றொரு அதிசயம். அதை விட அதிசயம், புத்தரின் தாதுவை எட்டுப் பகுதிகளாக பிரித்து, தூபாக்கள் [Thupas] அதன் மேல் எழுப்பிய பின், எப்படி இந்திரன் புத்தரின் வலது காறை எலும்பை முழுதாகக் எடுத்துக்கொண்டு தேவலோகம் போனார் என்பது? என்றாலும் இந்த கேள்விகளை தற்காலிகமாக ஒருபுறம் தள்ளி வைப்போம். தேவலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த நினைவுச்சின்னம் [தாது] இலங்கைக்கு பறந்து எடுத்துச் செல்லப்பட்டது ? மேலும் முந்தைய புத்தர்களின் [previous Buddhas] கதைகளும் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த கௌதம புத்தருக்குப் பிறகு தான் புத்த சமயமே, அப்படி என்றால், முன்னையவர்களை எப்படி முந்தைய புத்தர்கள் என்று கூறலாம்? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் புத்தரே பிராமண சமயத்தில் தான் பிறந்தார், இருந்தார். அவர் அங்கு புரட்சி ஒன்றையே செய்தார் என்பதே உண்மை. மற்றும்படி மாற்றுச் சமயம் அவர் அமைக்கவில்லை! ராணி அனுலா [Queen Anula] தானும் மத சபையில் சேர விரும்பினார். அதனால், பின்னர் மகிந்த தேரர் தனது சகோதரி சங்கமித்தாவை இலங்கைக்கு அழைத்து வந்து பெண்களுக்கு, அவர்களை பெண் துறவியாக்கும் சடங்கு செய்ய முடிவு செய்தார். தீபவம்சத்தின்படி சங்கமித்தாவின் சகோதரியின் மகன் தான் சுமணா. 15-93 ஐ பார்க்கவும் [(மகள் சங்கமித்தாவுக்கு அசோகன் பதிலளித்தார்:) "உங்கள் சகோதரியின் மகன் சுமணா மற்றும் என் மகன், உங்கள் மூத்த சகோதரர், / (93. the great Sage has communicated to me the message of my brother.” (Asoka replied:) “Your sister’s son Sumana and my son, your elder brother]. இருப்பினும், சுமணா மகாவம்சத்தின்படி சங்கமித்தாவின் மகன் ஆவார். 13-5 ஐ பார்க்கவும் [மற்றும் சங்கமித்தாவின் மகனும், அதிசயமான பரிசு பெற்ற புதிய ஆண் துறவி சுமணா, / and also Sanghamitta’s son, the miraculously gifted samanera Sumana]. இன்னும் ஒன்றையும் நான் இந்த இடத்தில் சொல்லவேண்டும். மகவசத்தின் படி, மேலும் அசோகர் 84,000 மடங்களைக் கட்ட முடிவு செய்தபோது, அவர் மீண்டும் நிலத்தை அகழ்ந்து, முன்பு நிலத்தின் கீழ் புதைத்த ஏழு இடங்களில் இருந்து நினைவுச்சின்னங்களைப் பெற்றார். என்றாலும் நாகர்கள் வசம் இருந்த எட்டாவது புத்தரின் தாதுப் பகுதியை அவரால் பெற முடியவில்லை. ஆனால், பேரரசர் அசோகா தோல்வியுற்ற அந்த எட்டாவது புத்தரின் தாதுவை, துட்டகாமினி, நாகரின் பாதாள உலகத்திலிருந்து பெற்றதாக மகாவம்சம் பெருமையாக கூறுகிறது. இது இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மூன்றாவது தாதுவா ? இது சம்பந்தமாக மகாவம்சத்தின் முப்பத்தொன்றாம் அத்தியாயத்தை வசனம் 65 இல் இருந்து பார்க்கவும். [The naga said: If thou shalt see the relics, venerable sir, take them and go.’ Three times the thera made him repeat this (word), then did the thera standing on that very spot create a (long) slender arm, and stretching the hand straightway down the throat of the nephew he took the urn with the relics, and crying: Stay, naga !’ he plunged into the earth and rose up (out of it) in his cell. The naga-king thought: The bhikkhu is gone hence, deceived by us,’ and he sent to his nephew to bring the relics (again). But when the nephew could not find the urn in his belly he came lamenting and told his uncle. Then the naga king also lamented: We are betrayed,’ / வணக்கத்துக்கு உரியவரே, தாது உங்கள் கண்ணில் பட்டால், எடுத்து செல்லுங்கள் என்று நாகராஜன் கூறினான். தேரர் இவ்வார்த்தைகளை மூன்று முறை திருப்பச் சொல்லும் படி செய்தார். பிறகு, தேரர் அந்த இடத்தில் நின்றவாறே, தமது கையை நீளுமாறு செய்தார். நீண்ட அவரது கை [நாகராஜனின்] மருமகனுடைய தொண்டைக்குள் நுழைந்து சென்றது. [அங்கு, வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த] தாதுவுடன் இருந்த பேழையைக் கையில் எடுத்துக்கொண்ட அவர், ' நாகா நில்' என்று இரைந்து விட்டு, பூமிக்குள் புகுந்து மறைந்து, தமது இடத்தில் வந்து தோன்றினார். தம்மால் ஏமாற்றப்பட்டு பிக்கு இங்கிருந்து போய்விட்டார் என்று எண்ணிய நாகராஜன், தாதுவை இனி கொண்டுவா என்று மருமகனுக்கு சொல்லி அனுப்பினார். ஆனால், தன் வயிற்றுக்குள் பேழையைக் காணாத மருமகன் அழுது புலம்ம்பிக்கொண்டே அரசனிடம் வந்தான்] சங்கமித்தாவை போதிமரக் கிளையுடன் அனுப்ப அசோகன் மூன்று அரசுகளையும், விந்திய மலைத் தொடர்களையும் [Vindya mountain range], பெரும் காடுகளையும் கடந்து சமுத்திரத்தை அடைந்தான். இலங்கைக்கு போதிமரக் கிளை [அரசமரக் கிளை / Bo branch] செல்லும் வழியில் நாகர்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. தீபவம்சத்தில் அரசமரக் கிளையைக் கண்டு நாகர்கள் மகிழ்கிறார்கள். நாகர்கள் அரசமரக் கிளையைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கடல் வழி முழுவதும் வழிபடுவதாகவும் காட்டப்படுகிறது. நாகர்களின் தாராள மனப்பான்மைக்கான தீபவம்சத்தை, 16 - 8 முதல் 29 வரை பார்க்கவும். என்றாலும், எப்பொழுதும் பகைமையையும் முரண்பாட்டையும் உருவாக்கும் பழக்கம் கொண்ட மகாநாம தேரர் [Mahanama], நாகர்கள் முதலில் அரசமரக் கிளையை எடுக்க முயன்றார்கள் என்றும், ஆனால் சங்கமித்தா ஒரு கிரிஃபின் [யாளி / griffin / a mythical animal typically having the head, forepart, and wings of an eagle and the body, hind legs, and tail of a lion / ஒரு புராண விலங்கு. கிறிப்பன் அல்லது கிரிஃபின் ஒரு சிங்கத்தின் உடல், வால் மற்றும் பின் கால்கள் மற்றும் கழுகின் தலை மற்றும் இறக்கைகள் கூடிய ஒரு பழம்பெரும் உயிரினமாகும்] வடிவத்தை எடுத்து நாகர்களை பயமுறுத்தினாள் மற்றும் அவர்களை அடிபணியச் செய்யும்படி கட்டாயப்படுத்தினாள் என்கிறது. அவநம்பிக்கை மற்றும் முரண்பாடுகளை விதைப்பதற்காக சமூகங்களுக்கு இடையில் நிலவும் நட்பு சூழ்நிலையை மகாநாம தேரர் சிதைத்தார். எனினும், அக்காலத்தில் இலங்கை முதல் காந்தாரம் வரை நாகர்கள் வாழ்ந்ததாக தீபவம்சத்தில் உள்ள தகவல்களில் இருந்து ஊகிக்க முடிகிறது. Part: 55 / Appendix – Dipavamsa / 'How did Buddha's right-collar bone go to heaven?' Devanampiyatissa promised to build a Thupa, and requested Mahinda Thera to find a relic so that he could worship. Mahinda asked Sumana to go to Pataliputta and obtain relic from Asoka. Asoka gladly filled alms-bowl with relics. Then Sumana went to Indra, the head of Devas, and obtained the right-collar bone. He flew to Pataliputta, but how he managed to go to Deva’s world is another miracle. Ignoring the details, the relic was brought to Lanka. Stories of previous Buddhas are also stated in this Chapter. The Buddha prophesied at his deathbed that ‘they will deposit a relic of my body in the most excellent island’, 15-73. The author of Dipavamsa never anticipated that they would bring another relic of the Buddha, the tooth relic. He would have, otherwise, stated two relics instead of one. Queen Anula wanted to be admitted to the Order. Mahinda Thera then decided to get his sister Samghamitta to Lanka to perform ordination of women. Sumana is the son of the sister of Samghamitta as per the Dipavamsa, 15-93. He is, however, the son of Samghamitta as per the Mahavamsa, 13-5. Asoka crossed three kingdoms, Vindya mountain range and great forest to reach the ocean to send off Sanghamitta with the Bo branch. Numerous mentions of Nagas on the way of the Bo tree branch to Lanka. Nagas are happy to see and go along with the Bo branch in the Dipavamsa. Nagas are shown to be very happy about the Bo branch and venerating all the way along sea passage. See the Dipavamsa, 16 – 8 to 29, for the liberal and generous way the Nagas accompanied the Bo branch along the sea passage. Mahanama, who is always in the habit of creating enmity and discord, says Nagas tried first to take the Bo branch, but Sanghamitta took the form of a griffin and terrified the Nagas and forced them to seek submission. Mahanama distorted the prevailing friendly atmosphere among communities to sow distrust and discord. It can be inferred from the information in the Dipavamsa that Nagas were living from Lanka to Gandhara at that time. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 56 தொடரும் / Will follow துளி/DROP: 1925 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 55] https://www.facebook.com/groups/978753388866632/posts/32637271075921451/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 54 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 54 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'எதிர்காலத்தில் நடக்கும், தனிப்படட ஒருவரின் சம்பவங்களை முன்னறியும் திறன் உண்மையா?' இந்த நூல்களில், எதிர்காலத்தில் நடக்கும் ஒன்றை நேரத்துடன் முன்னமே பார்க்கும் திறன், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை வாய்மொழியாகக் முன்னறிவிக்கும் திறன், மற்றும் அறிவு, பகுப்பாய்வு அல்லது அவதானிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்கால நிகழ்வைப் பற்றி கணிக்கும் திறன் [Foreseeing, foretelling and predicting] ஆகியவை அடிக்கடி நிகழ்கின்றன. குறிப்பாக புத்தரின் வாயிலிருந்து, 12-30. இல், "மரியாதைக்குரிய ஐயா, புத்தர் உங்களைப் பற்றி முன்னறிவித்துள்ளார்: எதிர்காலத்தில், துறவி மகிந்த தீவுக்கு புத்த மதத்தைக் கொண்டு வருவார். புத்தரின் போதனைகளைப் பரப்புவார், சன்மார்க்கத்தை நிலைநாட்டுவார், துன்பங்களிலிருந்து விடுபட உதவுவார். வலிமையான மற்றும் நிலையான பாதையில் அவர்களை வழிநடத்துவார். அவருடைய பணி பலருக்கும் நன்மை பயக்கும்." என்கிறது. பௌத்தர்கள் இவற்றை நம்பலாம், ஆனால் இவை நிதானமான, உண்மையான வரலாறு அல்ல. இராமாயணம், மகாபாரதம் போல ஒரு புராணக் கதையே! அது மட்டும் அல்ல அங்கிருந்தும் பல நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புத்தர் இன்னும் ஒரு முன்னறிவித்தலில், 15-73, “அந்த நேரத்தில் தீவு, தம்பபாணி [Tambapaṇṇi] என்ற பெயரில் அறியப்படும்; அந்த மிகச்சிறந்த தீவில் அவர்கள் என் உடலின் ஒரு நினைவுச்சின்னத்தை [தாதுவை] அங்கு வைப்பார்கள்." இந்த குறிப்புகளில் உள்ள நினைவுச்சின்னம் புத்தரின் வலது காறை எலும்பு [right-collar bone] ஆகும், இது இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடமான, தூபாராமயவில் (Thuparamaya) கௌதம புத்தரின் எலும்பு எச்சம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நூல் எழுதிய பக்திமான்களுக்கு, சர்வ ஞானியான புத்தர் தனது உடலில் இரண்டு நினைவுச்சின்னங்களை இலங்கையில் வைத்திருப்பார் என்று அன்று அவர்கள் உணரவில்லை போலும்! தீபவம்சத்தில் உள்ளிணைக்கப்பட்ட வலது காறை எலும்பும் மற்றும் அசாதாரண அளவிலான பல்லும் இந்த இரண்டும் ஆகும்! தீபவம்சத்திற்கு எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Cūḷavaṃsa) பல்லின் வருகை கண்டு பிடிக்கப்பட்டது; அது புத்தர் இறந்து சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகும். சூலவம்சத்தின் [Culavamsa] வருங்கால ஆசிரியர் ஒருவர், புத்தரின் பல் என்ற மற்றொரு நினைவுச்சின்னத்தின் வருகையை கண்டுபிடிப்பார் என்று தீபவம்சத்தின் ஆசிரியர் அன்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை அல்லது முன்னறியவில்லை அல்லது அவரால், இதையும் புத்தரின் வாயிலிருந்து பெற முடியவில்லை? 'Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998' என்ற புத்தகத்தின் பக்கம் 411 இல், பல்லின் அளவை 2 அங்குல நீளம் மற்றும் ஒரு அங்குல விட்டம் எனக் கூறுகிறது. 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' இல், பக்கம் 176 இல், சிவனொளிபாத மலையின் [ஆடம்ஸ் சிகரம் / Adam’s Peak] மீது ஐந்தடி ஏழு அங்குல நீளமும், இரண்டடி ஏழு அங்குல அகலமும் கொண்ட தடயத்தை கூறுகிறது. இரண்டும் மனித இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. புத்த துறவிகள் தங்கள் கற்பனைகளில் இவற்றைக் கண்டுபிடித்தனர். மேலும், 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' என்ற குறிப்பின் பக்கங்கள் 31 மற்றும் 32 இல், பல் நினைவுச் சின்னம் போர்த்துக்கேயர்களால் [Portuguese] கைப்பற்றப்பட்டு, அதைத் தூளாக்கி, பொடியை எரித்து சாம்பலாக்கி, பின்னர் கடலில் கரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலே மேற்கோள் காட்டப்பட்ட அளவீடு, 1815 இல் கண்டியைக் கைப்பற்றிய பின்னர், அதாவது, போர்த்துக்கேயர்களால் அசல் அழிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அளவீடு செய்யப்பட்டது ஆகும். என்றாலும் பல்லை பாதுகாக்கும் துறவிகள், புத்திசாலித்தனமாக இரண்டு கதைகளை கண்டுபிடித்தனர். ஒரு கதையில், அழிக்கப்பட்ட பல் உண்மையில் அசல் மூலத்தின் நகல் என்கிறது. இரண்டாவது கதையில், தூளாக்கி, பொடியாகிய பல், தெய்வீக சக்தியால், ஒன்றிணைத்து அசல் பல்லாகி, முன்னைய வடிவத்திற்கு மீண்டும் வந்தது ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேடம் எலனா பெத்ரோவ்னா பிளவாத்ஸ்கி [Helena Petrovna Blavatsky, அல்லது பொதுவாக எலனா பிளவாத்ஸ்கி அல்லது பிளவாத்ஸ்கி அம்மையார் என்பவர் பிரம்மஞானத்தையும் பிரம்மஞான சபையையும் தோற்றுவித்தவர் ஆவார்.] இலங்கைக்கு விஜயம் செய்தார், மேலும் பல்லின் நினைவுச்சின்னம் அவருக்குக் காட்டப்பட்டது. அப்பொழுது, அது ஒரு முதலையின் பல்லின் அளவு பெரியது என்று உடனடியாக கூச்சலிட்டார். 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' என்ற குறிப்பின் பக்கம் 246 இன் கீழே பார்க்கவும். அத்தியாயம் 13 இல் நிறைய அற்புதங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. எட்டு நிலநடுக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தன. அத்தியாயம் 13 முக்கியமாக மத விடயங்களைப் பற்றியது, மேலும் மத விடயத்தின் உரிமைகள் மற்றும் தவறுகளை பகுப்பாய்வு செய்வது இங்கு எமது நோக்கம் இல்லை. அத்தியாயம் 14, மத விடயங்கள், பூகம்பங்கள், விகாரைகள் கட்டுதல் போன்றவற்றைப் பற்றியது, மேலும் இது பற்றி கருத்து தெரிவிப்பது எமக்கு அவசியம் இல்லை. தமிழர்களின் நேர்மையான நலனை நேரடியாக பாதிக்காத எந்த மத விடயத்திலும் கருத்து தெரிவிக்கப்படாது. அதில் எமக்கு அக்கறையில்லை. மகிந்த தேரர் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஜம்புதீபாவிற்கு (இந்தியாவிற்கு) திரும்பிச் செல்ல விரும்பினார். காரணம், இலங்கையில் வழிபட புத்தரின் நினைவுச்சின்னம் இல்லை என்று சுட்டிக்காட்டினார், 15 - 1 முதல் 5 வரை பார்க்கவும். Part: 54 / Appendix – Dipavamsa / 'Is it true that an individual can predict future events?' Foreseeing, foretelling and predicting happen very often, and especially from the mouth of the Buddha, 12-30. The Buddhists may believe these, but these are not sober history. Buddha foretold, 15-73, “...they will deposit a relic of my body in the most excellent island”. The relic in reference is the right-collar bone of Buddha, which was allegedly interned in the Thuparama. Unfortunately for the pious, the omniscient Buddha didn’t realize that there would be two relics of his body, the right collar bone which was interned in the Dipavamsa and a tooth of abnormal size. The arrival of tooth relic was invented in the Culavamsa which was written about seven hundred years after the Dipavamsa; about one thousand two hundred years after the Buddha’s death. The author of the Dipavamsa never expected a future author of the Culavamsa would invent the arrival of another relic, the tooth of Buddha, and therefore could not get this also from the mouth of the omniscient Buddha. Page 411 of ref - 'Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998' gives the size of the tooth relic as 2inches in length and one inch in diameter. Page 176 of ref - 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' gives the footprint on the Adam’s Peak as five feet seven inches in length and two feet seven inches in breadth. Both could not belong to a human kind. Monks invented these in their flight of fancies. Furthermore, on the pages 31 and 32 of the Reference 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' , it is stated that the tooth relic was captured by the Portuguese and it was ground to powder, burnt the powder into ashes and then dissolved the ashes in the sea. The measurement quoted above was made just after the conquest of Kandy in 1815, more than two hundred years after the destruction of the original by the Portuguese. The custodian monks smartly invented two stories. One storey was that the obliterated tooth was in fact a copy of the original and the other storey was that the ground tooth reformed to its shape by the divine power. Madame Helena Petrovna Blavatsky visited Ceylon during the latter part of the nineteenth century and the tooth relic was shown to her, and she immediately exclaimed that it was as large as that of an alligator. See the bottom of the page 246 of the Reference 'The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003' . Quite a lot of miracles are described in the chapter 13. Eight earthquakes occurred one after the other. Chapter 13 is mainly of religious matters, and it is not intended here to analyse the rights and wrongs of the religious matter. Chapter 14 is also about religious matters, earthquakes, construction of viharas etc., and it is not intended to comment on these. Any religious matter, which is not directly jeopardizing the bona fide interest of the Tamils, will not be commented upon. Mahinda Thera wanted to go back to Jambudipa (India) after about five months, indicating that there is no relic of Buddha in Lanka to worship, 15 – 1 to 5. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 55 தொடரும் / Will follow துளி/DROP: 1924 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 54] https://www.facebook.com/groups/978753388866632/posts/32626689843646241/?
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 பகுதி: 01 - நல்லூர் திருவிழாவுக்கு வருகையும் & சந்திப்பும் ஆகஸ்ட் 2025 சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது பொன்னிறமாக பிரகாசித்தது. அதன் குறுகிய பாதைகளில் மாலைகள், இனிமையான கற்பூரப் புகை மற்றும் தவில் மேளங்களின் இன்னிசை ஒலிகளால் அதன் அரவணைப்பு நிரம்பியிருந்தது. நல்லூர் முருகன் திருவிழா அதன் உச்சத்தை எட்டியிருந்தது - ஆயிரக்கணக்கானோர் பிரகாசமான வேட்டிகளையும் அழகு மின்னும் புடவைகளையும் அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டனர். அவர்களின் கண்கள் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்ட தமிழ் கடவுளான, 'அலங்காரக் கந்தனைச்' சுமந்து செல்லும் தேரை நோக்கி உயர்ந்தன. “பஞ்சம் படை வந்தாலும் பட்டினி தான் வந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன் தஞ்சமடி” என்று நல்லைக் கந்தனின் புகழை யோகர் சுவாமிகள் பாடுகிறார். முருகன் என்றால் அழகன் என்பர். அழகன் என்றால் இலங்கை வாழ் மக்களைப் பொறுத்தவரையில் மனக் கண்ணில் தெரிபவன் நல்லூர்க் கந்தனேயாவான். அப்படியான முருகனின் திருவிழாவில் கலந்துகொள்ள, ஆரன் வேட்டி மற்றும் வெள்ளை சட்டையுடன், பெரிதாக எந்த ஆடம்பரமும் இல்லாமல், என்றாலும் தேர்த் திருவிழா காலை என்பதாலும், யாழ் வெக்கையான பகுதி என்பதாலும், சன் கிளாஸ் (Sun Glass) அணிந்து இருந்தாலும், அதை சரிசெய்து, ஒரு வெளிநாட்டவரைப் போல அதிகமாகத் தோன்றாமல் இருக்க முயன்றான். பிறந்து வளர்ந்தது எல்லாம் வெளிநாடு என்பதால், அவனுக்கு இயல்பாக தமிழ் பேசுவது கடினமாக இருந்தது. ஆனாலும், கோயில் மணிகள் முழங்கும்போது, அவனுக்குள் ஏதோ ஒரு ஒலி எழுந்தது. இந்த ஒலி ... அவனின் தந்தை மற்றும் அம்மா, உயர் வகுப்பு படிக்கும் பொழுது, தம் தம் பெற்றோருடன் இலங்கையை விட்டு வெளியேறும் பொழுது, என்னென்னெ நடந்தது என்று, அவனுக்குச் சொன்ன கதைகளில் ஒலித்த ஒலி, அது அவனின் தாத்தா பாட்டியின் இதயத் துடிப்பு! கோயிலின் கிழக்கு வாயிலுக்கு அருகில் ஒரு மூலையில் திரும்பி நின்றான். அப்போது தான் அவன் அவளைப் பார்த்தான். அனலி தன் சகாக்களுடன், நல்லூரில் தற்காலிகமாக அமைந்துள்ள, 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' என்ற நிறுவனத்தின் விளம்பர குடிலில், தங்கள் நிறுவனத்தை அறிமுகப்படுத்திக் கொண்டும், அதேவேளை பக்தர்களுக்கு சக்கரைத் தண்ணீர் வழங்கிக் கொண்டும் நின்றாள். அவளுடைய சேலை சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் மின்னி, தெய்வத்தின் அலங்காரங்களை கிட்டத்தட்ட எதிரொலித்தது. அவளுடைய தலைமுடியில் இருந்த மல்லிகை, தூபத்துடன் கலந்த ஒரு நறுமணத்தை வெளியிட்டது. அவளுடைய சகாக்கள் ஏதோ கிசுகிசுத்ததைப் பார்த்து அவள் சிரித்தாள், அவளுடைய சிரிப்பு திருவிழா சத்தத்தை விட அதிகமாக அவன் உள்ளத்தில் பதிந்தது. சுற்றுலா பற்றி மேலதிக விபரங்களை நேரடியாக அறியும் சாட்டில், ஆரன் அங்கு சென்றான். அவன் இதயம் மிருதங்கத்தை விட பலமாக துடித்தது. தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாற, “மன்னிக்கவும்,” என்று கூறிக் கொண்டு, சக்கரைத் தண்ணீரை கொஞ்சமாக வாங்கிக் கொண்டு, “வடக்கு கிழக்கு சுற்றுலா ஏற்பாடு பற்றி விபரமாகக் கதைக்கலாமா? ” என்று அனலியிடம் கேட்டான். அனலி அவனைப் பார்த்தாள், அவள் கண்கள் குறும்புத்தனமாக இருந்தன. “ஆமாம் … தாராளமாக, ஆனால், அதற்கு முதல், நீங்கள் இந்த சக்கரைத் தண்ணீரை குடிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறீர்களா? இது மிகவும் இனிப்பானது. யாழ்ப்பாணத்தைப் போலவே.” என்றாள். ஆனால் அவன் உள்ளம், 'ஆமாம் மிகவும் இனிப்பானது உன்னைப் போலவே' என்று சொல்ல துடித்தாலும், அவளின் கடைவிழி பார்வையில், கொஞ்சம் தடுமாறி, தனக்கு தெரிந்த தமிழில், அவன் வாய் தனக்குள் முணுமுணுத்தது. பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? அவளுடைய சகாக்கள் சிரித்தனர். ஆரன், ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, “நான் மேப்பிள் சிரப்பை [பாகு / syrup] சாப்பிட்டு வளர்ந்தவான். சக்கரை ஒன்றும் எனக்குப் பெரிது இல்லை" என்றவன், தான் முதலில் சொல்ல விரும்பியதைச் சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. "ஒருவேளை யாழ்ப்பாணத்தின் இனிப்பு கொஞ்சம் வலிமையானதாக இருக்கலாம், உன்னைப்போல” என்று அவளை ஏறிட்டுப் பார்த்தான். தினமும் அவன், தன் வேலைத்தளத்தில் பல பெண்களோடு கதைக்க, பழக நேரிடும். சில நேரங்களில் அருகில் நெருக்கமாக அமர்ந்தும் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஏற்படாதா ஓர் உணர்வும் புது மாற்றமும் அவளுக்கு எதிராக இப்ப நிற்கும் பொழுது ஏற்படுவது அவனுக்குப் புரியவில்லை. ‘என்ன பொண்ணு டா இவ’ என சொல்லத் துடித்த நா வை அடக்க முடிந்தாலும், மனதை அடக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் ‘என்ன பொண்ணு டா இவ’ என்றே மனசு முணுமுணுத்தது. அனலி புருவத்தை உயர்த்தி, “மேப்பிள் சிரப்? .. அப்ப … நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவரா?” என்று கேட்டாள். “ஆம். கனடா. முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். பிரச்சனைகளின் போது என் பெற்றோர் வாலிப வயதில் இங்கிருந்து வெளியேறினர்.” அவனின் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாறினாலும், சமாளித்து முழுமையாகத் தமிழில் கூறினான். அவள் புன்னகை கொஞ்சம் தணிந்தது. "அப்போ நீங்கள் சரியான நேரத்தில் தான் வந்து விட்டீர்கள். நல்லூர் திருவிழா உள்ளூர்வாசிகளை மட்டும் வரவேற்காது, புலம்பெயர்ந்தோரையும் வரவேற்கிறது." என்றாள். பின் அந்த குடிலில் இருந்த மேசை அருகில் போய், தானும் அமர்ந்து அவனையும் அமரச் சொன்னாள். அப்போது, தங்கத் தேர் தெருவில் திரும்பும் போது கூட்டம் அலை மோதியது. மணிகள் முழங்க, சங்குகள் முழங்க, "வேல் வேல்!" என்ற கோஷங்கள் காற்றை நிரப்பின. ஆரனும் அனலியும், சுற்றுல்லா பற்றிய உரையாடலை சற்று நிறுத்தி, வெளியே எட்டிப் பார்த்தனர். ஆனால், பக்தர்களின் அலையால் இருவரும் மிக நெருக்கமாக தள்ளப்பட்டு, தோளோடு தோள் நின்று, பூக்களால், தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரக் கந்தனை வழிப்பட்டனர். அனலி கிட்டத்தட்ட பயபக்தியுடன் அவனின் காதில், "நல்லூர் ஒரு கோயில் அல்ல, யாழ்ப்பாணத்தின் இதயம்" என்று கிசுகிசுத்தாள். ஆரன் அவளைப் பார்த்தான் - அவள் ஒரு அழகு தேவதை போல் அவனுக்கு இருந்தது. அவள் கண்கள் எண்ணெய் விளக்குகளைப் போல அவன் இதயத்தில் பிரகாசித்தன. தேர் விலகிச் செல்லும் போது, கூட்டம் குழுக்களாகப் பிரிந்தது - சிலர் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி கடைகளுக்குச் சென்றனர், மற்றவர்கள் காவடி நடனக் கலைஞர்களுக்காக வாசிக்கும் மேளதாளங்களை நோக்கிச் சென்றனர். கூட்டம் குறைய, அவர்கள் மீண்டும் மேசைக்குப் போய், சுற்றுலா ஏற்பாடு பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால், ஆரன் அனலியே சுற்றுலா வழிகாட்டியாக வரவேண்டும் என்று வலியுறுத்தினான். அப்பொழுது அனலியின் அக்காவின் குட்டி மகள், அவளது கையை இழுத்து, “சித்தி, நாமும் காவடி நடனத்தைப் பார்ப்போம்!” என்று கெஞ்சினாள். அனலியின் அப்பா தான் இந்த நிறுவனத்தின் முகாமையாளர். அப்பாவை கேட்டு நாளை பதில் சொல்லுகிறேன் என்று அவனது தொடர்பு இலக்கத்தை அவசரம் அவசரமாக பதித்துக் கொண்டு, தன் அக்காவின் மகளுடன் காவடி நடனம் பார்க்கப் புறப்பட்டாள். அவனின் மனதில் அவளின் அழகு, பேசும் தொனி ஒரு சொல்ல முடியாத உணர்வைக் கொடுக்க, அவன் ஒரு தைரியத்தை வரவைத்துக் கொண்டு உச்சந்தலை முதல், முன் பாதம் வரை அவளைப் பார்வையிட்டான். உச்சந்தலையில் குங்கும பொட்டில்லை, காலில் மெட்டியில்லை. 'கலைந்துபோன அவளின் கூந்தலை கண்டு, கட்டிபோட்டிருந்த அவன் மனமும் கொஞ்சம் கலைந்தே போனது !' ஆரன் தயங்கி, “நானும் உங்களுடன் சேர்ந்து கொண்டால் உங்களுக்கு ஆட்சேபனையில்லையா?” என்று கேட்டான். அனலி அவனிடம் ஒரு குறும்புத்தனமாக புன்னகைத்து, “ காவடி நேரடியாக பார்ப்பது இதுவா முதல் முறை” என்றாள். ஆனால், அவன் மௌனமாக, அவர்களுடன் ஒன்றாகக் காவடி நடனக் கலைஞர்களிடம் நடந்து சென்றான். ஆண்கள் வெறுங்காலுடன், மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட காவடியை தோளில் சுமந்து, தாளத்துக்கு ஏற்றவாறு உற்சாகமாக நடனம் ஆடினர். அதேவேளை ஒரு குழந்தைகள் குழு குச்சிகள் மற்றும் வண்ண காகிதங்களால் செய்யப்பட்ட பொம்மை காவடிகளை ஏந்திச் சென்றது. அவர்களில் ஒரு குழந்தை ஆரன் மீது மோத, பொம்மைக் காவடி நிலத்தில் தவறி விழுந்து, சிறிது அலங்கோலமாகி விட்டது. ஆரன் சாரி [sorry] என்று சொல்லி, அதை எடுத்து கொடுத்தான். அனலி சிரித்தாள். “பார்த்தாயா? குழந்தைகள் கூட நீ இங்கே சேர்ந்தவனா என்று சோதிக்கிறார்கள்.” என்றாள். ஆரனுக்கு, யாழ்ப்பாணம் அவனது பெற்றோரின் நினைவாக மட்டும் அல்ல. அது குறும்புத்தனத்தையும் அழகையும் சுமந்த ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில், அவனுக்கு முன்னால் உயிருடன் நின்றது. அனலியை பொறுத்தவரை, புலம்பெயர்ந்த அந்நியன் மற்றொரு பார்வையாளர் மட்டுமல்ல. அவன் நல்லூரை நோக்கிப் பார்த்த விதம் - உடைந்த வேர்களைத் தைக்க முயற்சிப்பது போல - அவளை அமைதியாகத் தொட்டது. அன்று இரவு, கோயில் கோபுரங்களுக்கு மேலே பட்டாசு வெடித்தபோது, ஆரன் நினைத்தான்: ஒருவேளை யாழ்ப்பாணம் வந்தது கடந்த காலத்தைக் கண்டுபிடிப்பது பற்றியதாக மட்டும் அல்ல, அது எதிர்காலத்தைக் கண்டுபிடிப்பது பற்றியதாகக் கூட இருக்கலாம்? என்று. அன்று மாலை, கோயில் வருகைக்குப் பிறகு, ஆரன், அனலி தந்தையின் வீட்டோடு சேர்ந்த 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' டின் முதன்மை அலுவலகத்திற்கு சென்றான். அனலியின் தந்தையுடன் அங்கு அமர்ந்தான். தெருவில் இருந்து மல்லிகை மற்றும் வறுத்த நிலக்கடலையின் வாசனை அங்கு வீசிக்கொண்டு இருந்தது. அனலியின் தந்தை ஆரனை அளவான புன்னகையுடன் பார்த்து, ' கான் ஐ ஹெல்ப் யு? [can I help you]' என்று கேட்டார். அவன் வந்த நோக்கத்தை விபரமாகச் சொன்னான். “ஆரன், நீ கனடாவில் இருந்து இவ்வளவு தூரம் வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிலத்தின் மீது இவ்வளவு அன்புடன் பேசுகிறாய். ஆனால் சொல்லுங்கள் - ஏன் எங்கள் மகளை சுற்றுலா வழிகாட்டியாக, இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார் ஆரன் மரியாதையுடன் அவரை அழைத்து, "நான் வெளிநாட்டில் பிறந்திருக்கலாம், ஆனால் என் வேர்கள் இங்கேதான். புலம்பெயர்ந்த நம்மில் பலர் கதைகளை மட்டுமே கேட்கிறோம். ஆனால் நாம் நம் கண்களால் இந்த நிலத்தைப் பார்க்க வேண்டும். அனலி சுற்றுலா துறையிலும் வரலாற்றிலும் கல்வி பயின்றவள் என்று அறிகிறேன். எனவே, நாம் பார்க்கவேண்டிய இடங்களையும் அந்தந்த இடத்தைப்பற்றி சரியான விபரத்தையும் தரக்கூடியவள் என்று எண்ணுகிறேன். அதனாலத்தான் ... '' என்று இழுத்தான். ' மற்றும்படி, இந்த அறிவுகளுடன் யார் வந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று முடித்தான். “ஆரன், உன் வேர்களை மீண்டும் கண்டுபிடிக்க வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாய். நான் உன்னுடன் ஒரு பெரியவரை அனுப்பினால், நீ கவனமாகப் பேசும் வார்த்தைகளை மட்டுமே கேட்பாய். ஆனால், உன் விருப்பம் படி அனலி வழிகாட்டியாக வந்தால், இருவரும் சுதந்திரமாகப் பேசுவீர்கள் - இளைஞர்களாக, சமமாக. உண்மை வரலாறு ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்திற்குப் பரவும் என்று நம்புகிறேன்” அனலி ஆச்சரியத்துடன் அப்பாவைப் பார்த்தாள். அப்பா (புன்னகையுடன்): “ஆமாம், குழந்தாய். ஆரனின் மரியாதையையும் உன் ஞானத்தையும் நான் நம்புகிறேன். நீ நம் நிலத்தின் வரலாற்றைக் கற்றுக் கொடுக்க, அதை இன்றைய நிலைமையில் இருந்து எடுத்துச் செல்லப் போகிறாய். அவ்வளவுதான் ” என்றார். ஆரன் நன்றியுடன் தலை குனிந்தான். “நான் அனலியை என் சொந்த சகோதரியைப் போலவே மரியாதையுடன் நடத்துவேன்.” என்றான். அனலியின் தந்தை தலையசைத்தார். "நீ நன்றாகப் பேசுகிறாய், ஆரன். இவை புனிதமான பயணங்கள் - நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், கதிர்காமம், நல்லூர். உனது நோக்கம் - பண்பாடு மற்றும் வரலாறு என்பதால், நாங்கள் உன்னை நம்புகிறோம்." அனலியின் தந்தை, ஆரனின் கண்களைப் பார்த்து, அங்குள்ள நேர்மையை அளந்து, இறுதியாக தலையசைத்தார். "சரி. போ. பயணம் செய், கற்றுக்கொள், பெரியவர்கள் கூட மறந்துவிட்ட கதைகளுடன் திரும்பி வா" என்றார். அருகில் அமர்ந்திருந்த அனலி கீழே பார்த்தாள், ஆனால் அவள் கண்கள் உற்சாகத்தால் பிரகாசித்தன. அவள் தான், தனக்கு ஒரு துணையாக, அக்கா மகளையும் - பாடசாலை விடுமுறை என்பதால் - கூட்டிப்போகவா என்று கேட்டாள். அவளுடைய தந்தை , “அப்படியானால் ஓகே , ஆனால் கவனமாக. நினைவில் கொள்ளுங்கள் - நீங்கள் உங்கள் இளமையை மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் கண்ணியத்தையும் சுமக்கிறீர்கள். ஆரன், நீ அவளைப் பாதுகாக்கவும். அவள் துக்கத்துடன் அல்ல, அறிவுடன் திரும்பட்டும்.” என்றார். அன்று இரவு, மேசை விளக்கின் கீழ், அனலி தனது நாட்குறிப்பில் எழுதினாள் : “நாளை நான் ஆரனுடன் நடப்பேன்; அந்நியனோடு அல்ல, அவன் மறந்துபோன பாரம்பரியத்தின் கதவுகளைத் திறக்கும் ஒரு வழிகாட்டியாக! அவன் காலடி பாதைகளில் எம் முன்னோரின் நிழல்கள் விழித்தெழட்டும் என் வார்த்தைகளில் நாம் இழந்த வரலாறு மீண்டும் உயிர்பெறட்டும்!” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/32609831688665390/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 52 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 52 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தர் சரியாகக் கற்பிக்கவில்லையா?' புத்தரின் இலங்கை வருகையின் போது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பலகோடி ?? ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. அவர்கள் விஜயன் வரும் பொழுதும் அதற்குப் பிறகும் இலங்கையில் இருந்து இருந்தால், தானாகவே புத்த மதம் அங்கு தழைத்து ஓங்கி இருக்கும். ஆனால், அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து சென்ற பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் அவரது கொள்கைகளை விட்டுவிட்டு முந்தைய கொள்கைகள் மற்றும் சிவ மற்றும் நாக வழிபாடுகளுக்கு திரும்பிச் சென்றனவா? அல்லது புத்தர் சரியாகக் கற்பிக்கவில்லையா? எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் சொல்லவும். பழங்கால அல்லது இன்றைய உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒருவர் தனது போதனைகளை முதலில் தான் பிறந்து வளர்ந்த நாட்டிலேயே நிறுவ முனைகிறார். அதன் பிறகு மற்ற நாடுகளுக்கு பரவலாம் அல்லது பரவாமல் போகலாம். ஏனென்றால் அவர்கள் குறிப்பாக தங்கள் நாடு, அவர்களின் மொழி, அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தை அறிந்திருக்கிறார்கள். மேலும் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாடுகளுக்கு, அந்த பண்டைய காலத்தில் கடினமாக இருந்தது. இரண்டாவதாக, புத்தர் விஜயனின் வருகைக்கு முன் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்தார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. புத்தர் முதலில் வந்தபோது, பல தெய்வீக மனிதர்கள் (தேவர்கள்) கூடினர், மேலும் அவர் அவர்களுக்கு தனது போதனைகளை போதித்தார். இதன் விளைவாக, ஏராளமான உயிரினங்கள் [many kotis of living beings] பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டன. எனக்கு இதில் புரியாதது, தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு போதனை ஏன் ? எதற்காக ?? அவ்வாறே, அவர் தனது இரண்டாவது வருகையின் போது, கடலிலும் நிலத்திலும் வாழ்ந்த ஏராளமான நாகர்களுக்கு கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களில் எண்பது கோடி [eighty kotis] பேர்?? பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இலங்கை சனத்தொகை, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 23.50 மில்லியனை எட்டும் என்று இன்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது [ஒரு கோடி என்றால் பத்து மில்லியன்] இப்பதான் மொத்த சனத்தொகை அல்லது போதனைகளை கேட்கக்கூடிய அறிவுள்ள உயிரினங்கள் 2.35 கோடியை எட்டப்போகிறது. அப்படி என்றால், எண்பது கோடி இப்ப இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின், இரண்டரைக்கோடி ஆகிவிட்டதா? தனது மூன்றாவது வருகையின் போது, புத்தர் மீண்டும் போதித்தார். புறப்படுவதற்கு முன், அவர் தனது கால்தடங்களை சுமனகுடாவில் (Sumanakuta / A mountain peak in Ceylon / இப்போது ஸ்ரீ பாத அல்லது ஆதாமின் சிகரம் என்று அழைக்கப்படுகிறது) விட்டுச் சென்றார். புத்தர் ஏற்கனவே இலங்கையில் தனது போதனைகளைப் பரப்பியிருப்பதால், விஜயனும் அவனது சீடர்களும் வந்தபோது புத்த மதம் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், சிவன் மற்றும் நாகா (பாம்பு தெய்வங்கள்) வழிபாடுகள், மன்னன் தேவநம்பிய திஸ்ஸாவின் காலம் வரை தொடர்ந்தன என்பதே உண்மையான வரலாற்றுச் சான்றுகள். பிற்காலத்தில் இந்திரன் கடவுள் கூட? [ இந்திரன் ஒரு இந்து கடவுள், அவர் எப்படி புத்த சமயத்தை பரப்ப துணை போனார் ?, தேவலோக துரோகியா?] புத்த துறவி மகிந்தவை இலங்கைக்கு சென்று பௌத்தத்தை பரப்புமாறு அறிவுறுத்தினார். மகிந்த தீவில் பௌத்தத்தை கொண்டு வருவார் என புத்தரே முன்னறிவித்ததை [ ஏன் புத்தர், தானே புத்த கொள்கையை இலங்கைக்கு கொண்டு வந்ததை, அதுவும் மூன்று தடவை என்பதை, மறந்து விட்டாரா?] இந்திரன் மகிந்தவுக்கு நினைவுபடுத்தினார். Part: 52 / Appendix – Dipavamsa / 'Did the Buddha not teach correctly?' What I still don't understand is that if billions of souls, including Nagas and Devas, converted to Buddhism during Buddha's visit to Sri Lanka, what happened to them? Why was Mahinda Thera sent to convert them? Or after the Buddha came and went, did all those beings abandon his principles and go back to the previous principles and Siva & Naga worships? Or did the Buddha not teach correctly? If one takes a look at the history of the ancient world, one tends to establish his teachings first in the country where he was born and brought up. After that it may or may not spread to other countries. Because they especially know their country, their language, their environment and culture. And transportation, especially to foreign countries, was a difficult at the time. Second, the Buddha visited Ceylon three times before Vijaya's arrival, and on his first visit, the Devas assembled, and in their assembly the Master preached them the doctrine. The conversion of many kotis of living beings took place Similarly, in the second visit, he, the Lord, established in the (three) refuges and in the moral precepts eighty kotis of snake-spirits, dwellers in the ocean and on the mainland. And on the third visit, the merciful Lord, had preached the doctrine there, he rose, the Master, and left the traces of his footsteps plain to sight on Sumanakuta / A mountain peak in Ceylon If that is the case, Buddha's teachings must have been there at the time of Vijaya's arrival, but Siva worship and Naga worship have been continued there till the time of Devanampiya Tissa and Even the great Indra sought out the excellent thera Mahinda and said to him: `Set forth to convert Lanka; by the Sam buddha also hast thou been foretold (for this). நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 53 தொடரும் / Will follow துளி/DROP: 1921 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 52] https://www.facebook.com/groups/978753388866632/posts/32588228377492388/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 53 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 53 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'மகிந்தவும் சங்கமித்தாவும் கற்பனை கதாபாத்திரங்களா?' மூத்தசிவனின் முதல் மகனான அபயாவுக்கு என்ன நடந்தது என்று தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை. மகாவம்சமும் அவனைப் பற்றி மௌனமாக இருக்கிறது. சுருக்கமாக, இலங்கை பண்டைய நூலின் படி, அசோகா & தேவநம்பியதிஸ்ஸ இருவரும் சமகாலத்தவர்கள், ஒரே மாதிரியான பட்டப்பெயர்களைக் கொண்ட , ஒரே மாதிரியான சமயத்தைக் கொண்ட, ஒரே மாதிரியான இரண்டாவது மகனாக, நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இவை கற்பனையாக ஒருவருக்கு ஒருவர் இணைக்கப்பட்ட ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனவே, இலங்கையின் திஸ்ஸா இந்தியாவின் உண்மையான அசோகரின் கார்பன் நகலாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் அசோகருக்கு உறுதியான சான்றுகள் உள்ளன. ஆனால், இலங்கையில் தேவநம்பியதிசாவைப் பற்றி தொல்பொருள் அல்லது கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மகிந்த மற்றும் சங்கமித்தா பிறந்த ஆண்டு இலங்கையின் பண்டைய வரலாற்று நூலில் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு சந்தேகத்தை கொடுக்கிறது. எனவே, இது நம்பகமாக இல்லை. காரணம் இருவரும் கண்டுபிடிக்கப்பட்ட கதாபாத்திரங்களாக இருக்கலாம். ஏனென்றால், மகிந்த மற்றும் சங்கமித்தா அவர்களின் பிறந்த இடமான இந்தியாவில் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனவே தேவநம்பியதிஸ்ஸ, மகிந்த மற்றும் சங்கமித்தா கற்பனை பாத்திரங்களாகத் தோன்றுகிறது? இது ஏற்கனவே விரிவாக விளக்கப்பட்டுள்ளது, ஆனால் சுருக்கமாக கீழே தருகிறேன்: மகிந்தவையும் சங்கமித்தாவையும் குறிப்பிடும் இந்திய ஆதாரங்கள் இல்லை. அசோகரின் கல்வெட்டுகளோ, ஆணைகளோ மகிந்தவையோ, சங்கமித்தாவையோ குறிப்பிடவில்லை. மகிந்த உண்மையிலேயே இளவரசராகவும், அசோகரின் மகனாகவும் இருந்தால், குறைந்தபட்சம் ஒரு இந்திய ஆதாரம் அல்லது கல்வெட்டு அவரைக் குறிப்பிடும் என்று எதிர்பார்க்கலாம். தேவநம்பியதிஸ்ஸ மற்றும் அசோகரின் நட்பும் சந்தேகத்திற்குரியது. அவர்கள் நேரில் சந்திக்காத போதிலும், அவர்கள் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க அசோகரின் பதிவுகளில் இருந்து எந்த ஆதாரமும் இல்லை. மற்றொரு முக்கிய பிரச்சினை தேவநம்பியதிஸ்ஸவின் இரண்டாவது முடிசூட்டு விழா மற்றும் பயண நேரங்களின் சாத்தியக்கூறு ஆகும். அசோகரின் செல்வாக்கின் கீழ் தேவநம்பியதிஸ்ஸ இரண்டாவது முடிசூட்டுக் கொண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது, ஆனால் அந்த நாட்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணம் பருவக்காற்றை நம்பியிருந்தது. ஒரு சுற்றுப்பயணம் பல பல மாதங்கள் ஆகலாம், போய் வர அண்ணளவாக ஒரு ஆண்டு ஆகும். எனவே இந்த நிகழ்வுகள் மிகவும் சாத்தியமற்றது. இவை விபரமாக முன்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் புராண கதைகளுக்கான சாத்தியமான காரணங்கள் சமயச் சட்டமாக்கல்: இலங்கையின் பௌத்த பாரம்பரியம், தீவின் ஆட்சியாளர்களை நேரடியாக அசோகருடன் இணைக்கும் வகையில் இந்தக் கதைகளை உருவாக்கி, அதன் மூலம் இலங்கையில் பௌத்தத்தின் புனிதத் தன்மையை வலுப்படுத்தி யிருக்கலாம்? மன்னராட்சி முறை: தேவநம்பியதிசாவை அசோகருடன் தொடர்புபடுத்துவது, இலங்கை மன்னரை சக்திவாய்ந்த மௌரியப் பேரரசுடன் இணைப்பதன் மூலம் அவருக்கு அதிக அங்கீகாரத்தை அளித்திருக்கும். இலங்கை ஆதாரம் இலங்கையில் காணப்படும், மிஹிந்தலை போன்ற கல்வெட்டுகள், மகிந்தவைக் குறிக்கும் ஒப்பீட்டளவில் [ஆனால்] பிற்கால கல்வெட்டுகள் ஆகும். மகிந்த மற்றும் சங்கமித்தாவுடன் தொடர்புடைய ஸ்தூபிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் (மிஹிந்தலை மற்றும் அனுராதபுரத்தின் போதி மர ஆலயம் போன்றவை) பாரம்பரியத்தால் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன, ஆனால் அவற்றின் கல்வெட்டுகள் ஒப்பீட்டளவில் பிந்தியதாகவே காணப்படுகிறது. அவற்றின் இருப்பை உறுதிப்படுத்தும் சமகால கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. Part: 53 / Appendix – Dipavamsa / 'Are Mahinda and Sanghamitta invented personalities?' Devanampiyatissa ruled for forty years. Though the Ceylon chronicles give 37 years for Asoka, the Indian sources give 36 years for Asoka after coronation. Asoka commenced ruling four years before the coronation. Therefore, both Asoka and Tissa had same length of reigns, forty years. Asoka is the second son of his father and Tissa is the second son of his father Mutasiva; another coincident. Dipavamsa is silent on what happened to the first son of Mutasiva, Abhaya. The Mahavamsa is also silent about the first son of Mutasiva. In summary, both are contemporaries, intimate friends with similar sounding names with same length of reigns, the same religion, and the second sons. They had not met each other and separated by more than one thousand five hundred miles in travelling distance. It is quite impossible to be true about two thousand three hundred years ago! These must have been invented coincidences; Tissa of Lanka must be carbon copy of the real Asoka of India. There are concrete evidences for Asoka all over India, and there is no archaeological or inscriptional evidence about Devanampiyatissa in Ceylon. Year of birth of Mahinda and Samghamitta are precisely given in the Ceylon chronicles. The reason could be that both are invented personalities. There are no information about Mahinda and Samghamitta in their birthplace, India. Therefore, Devanampiyatissa, Mahinda and Samghamitta must be invented personalities. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 54 தொடரும் / Will follow துளி/DROP: 1922 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 53] https://www.facebook.com/groups/978753388866632/posts/32596343023347590/?
-
சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025
சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025 இன்று கார்த்திகை தீபம். ஆனால் இந்த நாள், தீபத்தின் ஒளி மட்டுமல்ல — மண்ணுக்குள் உறங்கும் நினைவுகளின் நெஞ்சைத் திறந்து வைக்கும் நாள் இது. இரவு வானம் கருந்துகிலும் அணிந்து, சோகமும் நம்பிக்கையும் கலந்த நட்சத்திரங்களால் நிரம்பிக் கிடந்தது. மெல்ல வீசும் காற்றில், எரியும் விளக்குகளின் புகையோடு கலந்த தூப வாசனை — அது எந்த ஆலயத்திலிருந்தும் அல்ல … அது ஒரு வரலாற்றின் உயிர்வாசனை. ஆதித்தன், கைப்பிடி அளவு எண்ணெய் விளக்கை தன் உள்ளங்கையில் தாங்கியவாறு, மெதுவாக அந்த நினைவுத் திடலுக்குள் நுழைந்தான். புல்லின் மேல் இன்னும் பனித்துளிகள். சின்னச் சின்ன மண் மேடுகளில் சிவப்பு – மஞ்சள் ரிப்பன் கட்டப்பட்ட குச்சிகள். ஒவ்வொரு தீபமும் ஒரு உயிர். ஒவ்வொரு சுடரும் ஒரு கதை. அங்கே அவள் நின்றிருந்தாள். சாம்பிராணி நிறச் சேலையில், கரும்பச்சை மேல்சட்டையுடன் — முகத்தில் சோகமில்லை, ஆனால் ஒரு பெரும் அமைதி. அந்த அமைதி தான் அவனைத் திடீரென தடுத்து நிறுத்தியது. “நீங்க…” என்றவாறு அவள் பார்வை அவன்மேல் தங்கியது. “நான் ஆதித்தன்…” என்றான் மெல்ல. “நான் இங்கே வணங்க வரவில்லை … தேட வந்தவன்.” அவள் மெதுவாக ஒரு விளக்கைத் தன் முன்னால் வைத்து ஏற்றினாள். “தேடுபவர் எல்லாம் இழந்தவர்கள்தான்,” என்றாள். “சிலர் மனிதரைத் தேடுவார்கள்… சிலர் தங்களைத் தாங்களே தேடிவிடுவார்கள்…” ஒளி அவள் முகத்தில் விழ, அவள் ஒரு நிழலும் ஆனாள்… ஒரு தீபமும் ஆனாள். “எவர் நினைவுக்கு?” என்று அவன் கேட்டான். “எனக்குத் தெரியாத ஒருவருக்கு… ஆனால் அவர் இல்லையென்றால், நான் இன்று இங்கே இருக்க மாட்டேன்,” என்றாள். ஒரு கணம் — வானம் இன்னும் கருமையானது போல தோன்றியது. பிறகே — அருகிலிருந்த நூறு தீபங்களும் ஒன்றாக மினுங்கின. அந்த ஒளி — அவனுக்குள் புதைந்திருந்த தந்தையின் முகத்தை எழுப்பியது. அண்ணனின் குரலினை ஒலிக்க வைத்தது. அம்மாவின் வாசத்தை மீட்டுக் கொண்டுவந்தது. “நீங்க பயப்படவில்லையா ?” என்றான். “இல்லை,” என்றாள். “தீபம் எரிய பயந்தா, இருளே ராஜா ஆகிவிடும்…” அவன் சிரித்தான். மூன்று வருடங்களாகச் சிரிக்க மறந்த உதடுகள் — இன்று கார்த்திகையின் காரணமாக சிரித்தன. அவள் பெயர் தீபிகா. ஒரே எழுத்தை மாற்றினால் போதும் — அவளே ஒரு தீபம். அவள் தன் கைகளால் இன்னொரு விளக்கை ஏற்றி அவனிடம் கொடுத்தாள். “இது உங்களுக்கல்ல,” என்றாள், “உங்களுக்குள் இன்னும் வாழ்கிறவர்களுக்கு…” அவன் கண்களில் நீர் தேங்கியது. அதே நீரில்தான் — ஒரு காதல் முளைத்தது. அது உடனடியான காதல் இல்லை. அது தோன்றி வளர்ந்த தீபக்குஞ்சு. மௌனத்தில் ஏற்பட்ட உறவு. கண் மொழியில் உருவான இரு உள்ளங்களும் இணைந்த நிலை வலியில் மலர்ந்த நம்பிக்கை. தூரத்தில் ஒரு பழைய பாடல் ஒலித்தது : "விளக்கேற்றும் இரவினிலே விழிகளில் விழுந்த கனவினிலே அகம் திறக்கும் அன்பினிலே உலகம் மறந்த தருணமிதே..." அவர்கள் இருவரும் ஒன்றாக நின்றிருந்தனர். மற்ற எந்தச் சொற்களும் தேவையில்லை. இந்த கார்த்திகை தீபம் — ஆதித்தனுக்கு, அகதி என்ற அடையாளத்தை அழித்தது. தீபிகாவுக்கு, புதுவாழ்வு என்ற அர்த்தத்தைக் கொடுத்தது. நூறு தீபங்கள் முன் இரு இதயங்கள் ஒரே சுடரில் ஒன்றாயின. 2025 நவம்பர் 27 அன்று எரிந்த தீபம்… இன்னும் அவர்களின் உள்ளத்தில் அணையாமல் எரிகிறது. விளக்கின் சுடர் காற்றில் ஆடியது. ஆனால் அது அணையவில்லை. அந்த இரவின் அமைதி — சொற்கள் இல்லாத சங்கீதம். நூற்றுக்கணக்கான உயிர்களின் மௌன ஒலி காற்றில் நின்று கொண்டிருந்தது. ஆதித்தனும் தீபிகாவும் ஒன்றாக நிற்பதாலோ, அல்லது அவர்களைச் சுற்றி திரண்ட நினைவுகளாலோ, இந்த மண் ஒரு கணம் உயிர்பெற்றது போலவே இருந்தது. “நீங்க எங்கிருந்திங்க?” என்று தீபிகா திரும்பவும் கேட்டாள். “பல இடங்களில்…” என்றான் அவன். “ஆனா எந்த இடத்திலும் இல்லை.” அவளுக்குப் புரிந்தது. இது ஒரு அகதியின் பதில். நாட்டை இழந்த ஒரு ஆணின் வாக்கியம். அவள் சொன்னாள்: “நீங்க இங்கே இருக்கிங்கன்னு மட்டும் தான் இப்போ முக்கியம்.” அந்த வார்த்தைகள் காற்றை அல்ல, அவன் உள்ளத்தைக் குத்தியன. முதன்முறையாக — அவன் “உள்ளே” உணர்ந்தான். அவர்கள் இருவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினர். தீபங்கள் இடையே அமைந்த அந்த குறுகிய பாதை — இரண்டு உலகங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தது. ஒவ்வொரு விளக்கும் கடந்து செல்லும் போது தீபிகா ஒரு பெயரைச் சொன்னாள். ஒரு சகோதரன்… ஒரு காதலன்… ஒரு சிறுவன்… ஒரு தாய்… ஆதித்தனுக்கு தெரியாத முகங்கள். ஆனால் அவன் உணர்ந்து கொண்டிருந்த வலி. “நீங்க இங்கே ஒவ்வொருவருக்கும் விளக்கு ஏற்றுறீங்களா?” என்றான். “இல்லை…” “நான் என் எதிர்காலத்துக்காக ஏற்றுறேன்,” என்றாள். அவன் திடீரென நின்றான். “எதிர்காலம்?” “ஆமா… இந்த மாதிரி ஒரு நாள்ல என் குழந்தை விளக்கு ஏத்த வேண்டாம்னு எதிர்காலம்.” அந்த ஒரு வாக்கியம் அவனுக்குள் ஒரு நாடு உருவாக்கியது. அவன் கண்களில் ஒரே நேரத்தில் இருளும், ஒரே நேரத்தில் ஒளியும் பளிச்சிட்டன. முதல் முறையாக, அந்த மண்ணை அவன் மன்னித்தான். அந்த வானத்தை அவன் ஏற்றுக் கொண்டான். அவர்கள் அருகே ஒரு சின்ன பையன் வந்து நின்றான். அவன் கைவிரலில் அழிக்காத மெழுகு. “அண்ணா… உங்க விளக்கு அணையுது” என்றான். ஆதித்தன் சிரித்தான். “அது வெளிச்சம் முடிவதால இல்லை, காற்று பயப்படுத்துறதால தான்.” அருகே நின்ற தீபிகா ஒரு குச்சியை எடுத்து அவன் விளக்கை மீண்டும் ஏற்றினாள். அந்தச் சுடர் — இருவர் உள்ளங்களையும் ஒன்றாக எரிய வைத்தது. அது விளக்கின் சுடர் அல்ல. அது நம்பிக்கையின் நெருப்பு. அன்றிலிருந்து… அவர்கள் தினமும் சந்திக்கவில்லை. ஆனால், வாரம் ஒருமுறை, அதே நினைவுத் திடலில், ஒரே நேரத்தில், விளக்குடன் வந்தனர். ஒன்றும் பேசாது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பார்கள். பேசத் தொடங்கிய நாள், மழை பெய்த நாள். மண்ணின் ஈரம் மணந்த இரவு. “நீங்க போர்ல யாரையாவது இழந்திருக்கீங்களா?” என்று அவள் கேட்டாள். அவன் தூரத்தை பார்த்தான். “இழக்காம இருக்கிறவங்க யாரு தீபிகா?” “நான் என்னையே இழந்தேன்.” அவள் மெல்ல அவன் கைமீது தன் கையை வைத்தாள். “அப்படின்னா, இப்ப நான் உங்க கண்ணாடி…” “உங்களையே திரும்ப காட்டுறவன் மாதிரி…” அவன் பேசவில்லை. விசும்புதல் மட்டுமே பதிலாய் இருந்தது. அந்த நாள்தான், கார்த்திகாவின் துணி நிறமான சிவப்பும், மஞ்சளும் அவனுக்குப் ‘கொடி’யானது. அந்த இரவுதான், ஒரு கன்னத்தின் மீது முதல் முத்தம் விழுந்தது. அது ஆசையல்ல. அது — மீட்பு. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [[ஒரு வருடம் கழிந்தது 27 நவம்பர் 2026. அதே இடம். ஆனால் இப்போது — இரண்டு அல்ல, மூன்று விளக்குகள். நடு விளக்கு — புதிய உயிரின் சுடர். தீபிகா மெதுவாக கிசுகிசுத்தாள்: “இது நம்ம நினைவுகளின் குழந்தை…” ஆதித்தன் அந்த தீபத்தை பார்த்தவண்ணம் சொன்னான்: “இது இனி மரணத்துக்கான நாள் இல்லை…” “இது பிறப்பு நாளாகும்…” அந்த வானத்தில் ஒரு நட்சத்திரம் கூடுதலாகத் தோன்றியது. அது மாவீரன் அல்ல. அது — வாழும் வீரன்]] துளி/DROP: 1920 [சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32568321442816415/?