Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"மூன்று கவிதைகள்"
"மூன்று கவிதைகள்" 'உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்' உன்னை நினைத்தே உலகில் இருந்தேன் உண்மைக் காதல் என்று நம்பிவந்தேன் உடலைத் தந்து என்னை மயக்கினாய் உள்ளதையும் பறித்து வீதியில் விட்டாய்! கண்கள் நான்கும் சந்தித்த வேளை விண்ணில் பறந்தேன் அறிவைத் தொலைத்தேன் எண்ணம் மறந்து கையைப் பிடித்தேன் வண்ண அழகில் பொய்யை மறைத்தாய்! மனைவியை மறந்து புத்தன் ஆனான் மணவாட்டியின் ஆட்டத்தில் புத்தி கெட்டேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................................ 'கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே' கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே கன்னியென்னை முகர்ந்து பார்த்து மகிழ்கிறதே கன்னமிரண்டிலும் முத்தம் கொடுத்து பறக்கிறதே கட்டியணைத்து தேன் குடிக்க மேய்கிறதே! பெண்களென்ன காமம் சுரக்கும் உடலா கிண்ணத்தில் ஏந்திக் குடிக்கும் போதையா பெண்மையைப் போற்றி காதலைத் தேடு மண்ணின் பெருமையை அவளிடம் காட்டு! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... 'பட்டாம்பூச்சியின் தேடல்' பட்டாம்பூச்சி பூவைச் சுற்றித் தேடி பச்சைக் கொடியில் தவம் இருந்து பக்குவமாக மலரின் மணத்தை முகருது! பருவக் காளை பூவையரை நாடி பல்வரிசைக் காட்டி பின்னால் தொடர்ந்து பகட்டை நம்பி தன்னையே தொலைக்குது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/30730529339928977/?
-
சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்'
சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்' இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில், முல்லைத்தீவு ஒரு சிதைந்த நிலமாக, ஆனால் இன்னும் நம்பிக்கையின் கல்லறையாக இருந்தது. பசி குண்டுகளை விட சத்தமாக அலறியது. என்றாலும் சரியான உணவின்றி, ஆனால் இன்னும் நம்பிக்கையில் உயிர் வாழும் மக்கள் அங்கு நிறைந்து இருந்தனர். மருந்தின்றி துடிக்கும் குழந்தைகள், குண்டுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட நஞ்சு கலந்த காற்றினாலும் மக்களுக்கு பயம் கலந்து இருந்தது. வீடுகளும் நிலங்களும் எரிந்தன. குழந்தைகள் பால் இல்லாமல் அழுதனர். வயதான பெண்கள் மருந்து இல்லாமல் மயக்கமடைந்தனர். மௌனம் கூட பயமாகத் தோன்றியது. அங்கே விழுந்து கிடந்த பிணங்களை அகற்றவோ அல்லது யார் எவர் என்று அடையாளம் காணவோ அல்லது எத்தனை என்று எண்ணுவதற்கோ அங்கு ஒருவரையும் காண முடியவில்லை. இரதம் நீர்போல் ஓடிக்கொண்டு இருந்தது. பொதுமக்கள் பதுங்கு குழிகளில் ஒழிந்து, வேகவைத்த இலைகளையும் பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொண்டனர். அப்படியான அந்தச் சிதைந்த மண்ணில், ஒரு இளம் பெண் போராளி – மதி – படுகாயமடைந்து, ஒரு தற்காலிக மருத்துவமனைக்குள் தடுமாறி நுழைந்தாள். அவள் முகத்தில் சோர்வு தெரிந்தது, ஆனால் அவள் கண்கள் அமைதியான உறுதியைக் கொண்டிருந்தன. அங்கு 28 வயதான டாக்டர் கஜன், எஞ்சிய மருந்துகளால் உயிர்களை காக்க முயன்று கொண்டு இருந்தார். அவர் சோர்வடைந்த மனதுடன் கைகளை பிசைந்து கொண்டு உட்கார்ந்து இருந்த பொழுது, எந்த வித சலனமும் இன்றி மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த மதியின் கோலத்தைக் கண்டு அவன் திகைத்து விட்டான். என்றாலும் அவள் கண்களும் அவன் கண்களும், அந்த சூழலிலும் சல்லாப்பித்துக் கொண்டன. மதியின் கண்ண்களில், அந்த வேதனையிலும் ஒரு அசைக்க முடியாத உறுதி நிலைத்து இருந்தது. கஜன் அதில் ஒரு மின்னலை உணர்ந்தார். ஆனால் அவன் தன கடமையை மறக்கவில்லை. உடனடியாக அவர் அவளுடைய காயங்களை மெதுவாக சுத்தம் செய்தார். “உன் பேர் என்ன?” என்று மெதுவாகக் கேட்டான். “மதி,” அவள் வேதனையிலும் கிசுகிசுத்தாள். “நீ தோட்டாக்களையும் நம்பிக்கையையும் சுமந்து சென்றாயா?” அவள் லேசாகச் சிரித்தாள். “தோட்டாவை விட நம்பிக்கையை அதிகமாக நான் என்றும் சுமப்பேன்" தள்ளாடும் நிலையிலும் திமிராகப் பதிலளித்தாள். அவன் சிகிச்சை அளிக்கும் பொழுது, அவனது கண்கள் எனோ அவளையே ரசித்துக்கொண்டு இருந்தது. அவள் சிரித்தாள்: "மூச்சுக்கே இடமில்லாத போர்க்களத்தில் நிஜமான காதல் முளைக்குமா?". ஆனால் அவன் மெதுவாக அவள் காதில் குனிந்து சொன்னான், "மீள முடியாத இடத்தில்தான் பாசம் பிறக்கிறது." முதலில், மெளனத்தில் வந்த பார்வைகள். பின்னர் ஒரு புன்னகை. பின் சில வார்த்தைகள். உடைந்த தங்குமிடத்தில், இரவுகள் குண்டுகளால் சூழப்பட்டன, விடியல்கள் விரக்தியுடன் வந்தன. ஆனாலும் காதல் மலர்ந்தது - மென்மையாகவும் ரகசியமாகவும். அவர்கள் கிசுகிசுப்பாகப் பேசினார்கள், திருடப்பட்ட புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். ஒரு நாள் அந்த தற்காலிக மருத்துவமனையின் சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது. தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது அது ஒரு மூடர் கூட்டத்தின் இரத்த வெறி கொண்டாட்டம். அப்பொழுது மதி மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தபடி, “நாம் வேறொரு காலத்தில் பிறந்திருந்தால்...” என்று அவள் தொடங்கினாள். “நீ இன்னும் என் வாழ்க்கையில் நுழைவாய்,” என்று அவன் பதிலை முடித்தான். வெளியே, அரசாங்கப் படைகள் தங்கள் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தன. உணவு லாரிகள் தடுக்கப்பட்டன. பொதுமக்கள் கடத்தப்பட்டனர். பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். வாழ்க்கைக்கு பாதுகாப்பான ஒரு இடமும் காணவில்லை, ஏன் தாயின் கருப்பை கூட பாதுகாப்பாக இல்லாத காலம் அது! அவள் அவனை ஒரு முறை கிண்டல் செய்தாள்: “நான் போர்முனைக்குத் திரும்பிய பிறகு, உன் அன்பான இந்த நோயாளியை நீ மிஸ் பண்ணுவாயா?” "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், உன்னுடன் இருக்க ஒரு டாக்டராக என்னிடம் உள்ள அனைத்தையும் நான் விட்டுவிடுவேன்,” என்று அவன் அதற்க்கு பதிலளித்தான். போரின் இருளில் அவர்களின் இதயங்கள் தொட்டன. மதிக்கு காயங்கள் மட்டுமல்ல, உள்ளத்தின் பயமும் இருந்தது. கஜன் அவற்றையெல்லாம் பொறுமையுடன் சிகிச்சையளித்தார். காயங்களை மட்டும் அல்லாது, உறவின் வெதுவெதுப்பையும் சேர்த்து அளித்தார். கட்டிலில் படுத்தபடி அங்கு சுற்றிலும் நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்தாள் அவள். அவளின் பதினாறு நாள் காதலுக்கு கிடைக்க போகும் பரிசை எண்ணி மட்டும் திக்குமுக்காடி போய் இருந்தாள். அவள் கண்களும் அவன் கண்களும், குண்டுகளின் சொற்ப நேர அமைதிகளுக்கிடையில், அந்த சொற்ப இடைவெளியில், சல்லாப்பித்து கொண்டிருந்தன. முகத்தில் வியர்வை துளிகள் வழிய இதழில் காதல் கசிந்து கொண்டிருந்தது. அவன் வலது கை அவள் கன்னங்களை வருடி கொண்டிருந்தது அவன் இடக்கையோ அவள் இடுப்பின் அளவினை அளந்து கொண்டிருந்தது. அவள் இரு கைகளும் அவன் பின்னந்தலையில் பின்னப்பட்டிருந்தது! மக்கள் பட்டினியில் வாடினர். ஒரு தேயிலை சாயமும், ஒரு பசியும், ஒரு கண்ணீரும் மட்டும் இருந்தது. அரசுப் படைகள் அனுதாபம் காட்டவில்லை. உதவிகளைத் தடுத்தனர். பெண்கள் இழிவுகளுக்கு ஆளாகினர். இளைஞர்கள் காணாமல் போனார்கள். அந்த சூழலில் தான் அவள் இன்னும் மருத்துவ முகாமில் கொஞ்சம் பாதுகாப்பாக, முழுமையாக குணமடைவதற்காக இருந்தாள். அங்கே அவள் சிரிப்பும், கஜனின் இதயமும் நெருக்கமாக மாறியது. அவள் மேலும் அவனை ஈர்த்தாள். அது அவள் வசிகரமா அல்லது அவன் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி. அவனும் அவளும், கொஞ்சம் போர் ஓய்ந்த நேரத்தில், ஒரு சாயங்காலம் குளத்தங்கரைக்கு குளிப்பதற்காக சென்றார்கள். அங்கே குளக்கரைக்கு பக்கத்தில் 'பங்களா'வென்று ஒரு காலத்தில் மரியாதையாக கூறியது, இப்போது அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பாதுகாப்பு" அல்லது "காவலாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த அந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. அவனும் அவளும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் மதி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று. "கஜன் ! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே?" என்று கேட்டாள். "அதை வெட்டி விறகாக்கி விட்டார்கள்?" என்றான் கஜன். அவனின் வகிடு எடுத்து [முடியை பிரித்து] வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் நெடி வீசும் அந்த சூழலிலும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் மதி. அவனும் அவளை ஏறெடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவனை அவள் கண்கள் சுற்றி சுற்றி வந்தது. காதல் அனுக்கள் கசிந்து இருவரையும் கிளர்ச்சி அடையச் செய்தது. 'தடாகத்தில் மீனிரண்டு காமத்தில் தடுமாறி தாமரைப்பூமீது விழுந்தனவோ?! இதைக்கண்ட வேகத்தில், பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ?! காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்.. ஜதி என்னும் மழையினிலே ரதியிவள் நனைந்திடவே, அதில் பரதம்தான் துளிர்விட்டு பூப்போலப் பூத்தாட.. மனமெங்கும் மணம் வீசுது – எந்தன் மனமெங்கும் மணம் வீசுது' ["ஜதி என்னும் மழையில்" அல்லது "இசையின் மழையில்"] என்று அவன் முணுமுணுத்துக்கொண்டு இருந்தான். என்றாலும் அவளுக்கு காதலை விட கடமை பெரிதாக இருந்தது. "நான் இனி உடனடியாக போர்க்கழகத்துக்கு திரும்பணும், கஜன்." என்றாள் மதி. ஆனால் கஜனோ: "மதி, நீயில்லாமல் இந்த முகாமே வீணாகிவிடும். என் வலிமை, என் நம்பிக்கை எல்லாம் நீதான் " என்றான். "நான் போராளி. என் காதலுக்கும் எல்லை இருக்கு டாக்டர்." அவள் மறுத்தாள் அவர்களின் அந்த குறுகிய கால உறவு இருவருக்கும் சங்க இலக்கியக் காதலை நினைவுபடுத்தியது. "அர்ஜுனனின் மகன் அபிமன்யு விராடனின் மகள் உத்தராவை மணக்கிறான் என்றாலும், அபிமன்யு போரில் இறப்பதால், அவர்களின் காதல் விரைவில் முடிவடைந்து விட்டது, டாக்டர் கஜன், நானும் ஒரு போராளி, அது தான் தூர விலக விரும்புகிறேன். இங்கே உங்கள் முன் இருந்தால், ஒரு வேளை இன்று மாதிரி நான் தடுமாறிவிடுவேன். நீங்கள் வாழவேண்டியவர், என்னை விட்டுவிடுங்கள்" என்றாள் மதி. ஆனால் கஜன் குழம்பி இருந்தான். எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின் முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மையள் என்றே தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப (5: 12-18) அந்த குழப்பத்தில் அவனுக்கு உதயகுமாரன், மணிமேகலை ஞாபகம் வந்தது. மணிமேகலை தவநெறி புகுந்தவள் என்பதால், அதற்கு இடையூறாக இருக்கும் உதயகுமாரனின் காதலை, அவனின் தகுதி செல்வாக்கு போன்றவற்றைக்கூட பார்க்காமல், அவனை, அவனின் காதலை தூக்கி எறிந்தாள். இன்று மதியும் அப்படியே! "உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை" அவன் மனம் மௌனமாக பாடியது! அவளுடைய இறுதிக் காலைப் பொழுதில், கஜன் அவளுக்கு பாதி பிஸ்கட்டை - அவன் பாக்கெட்டில் இருந்த கடைசி பிஸ்கட்டையும் கொடுத்தான். மற்றும் படி உப்பில்லா காஞ்சி இன்னும் அங்கு இருந்துகொண்டு தான் இருந்தது. “உன்னுடைய மீட்பு சிற்றுண்டி,” என்று அவன் நகைச்சுவையாகச் சொன்னான். அவள் முதல் முறையாக - முழுமையாக, அழகாக - சிரித்தாள். அந்த நொடியே வான்வெடி தாக்கியது. குண்டு விழுந்தது. பூமி பிளந்தது. மதி சிதைந்தாள். புகை நீங்கியதும், எஞ்சியிருப்பது சிவப்பு மண், இடிபாடுகள் மற்றும் அமைதியின் கசப்பான சுவை மட்டுமே. மதி போய்விட்டாள். கஜன் மட்டும் உயிரோடு! கஜன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார், ஆனால் மீண்டும் ஒருபோதும் முழுமையாக இல்லை. அவளுடைய இரத்தம் அவன் நினைவுகளைக் கறைபடுத்தியது, அவளுடைய சிரிப்பு ஒவ்வொரு அமைதியான மணி நேரத்திலும் எதிரொலித்தது. அவர்களின் காதல் இறக்கவில்லை. அமைதியிலும், மண்ணிலும், பல கதைகளைப் புதைத்த ஒரு போரின் வடுக்களிலும் அது நிலைத்திருந்தது!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................................................ சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்' [200 வார்த்தைகளில்] இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்காலத்தில், முல்லைத்தீவு சிதைந்த நிலமாக இருந்தது — பட்டினி, பீரங்கி தாக்குதல்கள், பயம் நிரம்பிய நாட்கள். அந்தப் பூமியில் காயமடைந்த இளம் பெண் போராளி மதி, ஒரு தற்காலிக மருத்துவமனைக்குள் தடுமாறி நுழைந்தாள். அங்கே, 28 வயதான டாக்டர் கஜன், குறைந்த மருந்துகளுடனும் துடிப்பான மனதுடனும் உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருந்தார். மதியின் கண்களில் அவர் வீரத்தையும் வேதனையையும் பார்த்தார். மௌனத்தில் ஏதோ மின்னி இருவரையும் ஈர்த்தது. அதில் ஒரு காதல் தீபம் ஒளிர்ந்தது. இரவும் பகலும் வெடிப்புகளால் அச்சமுற்றிருந்தன. ஆனால், காயங்களுக்கு மருந்து போடுவதற்கும் மரணத்தைத் தவிர்ப்பதற்கும் இடையில், அவர்கள் திருடப்பட்ட அரவணைப்பு தருணங்களை மறக்கவில்லை. ஒரு விடியற்காலை, பிஸ்கட்டை அவளிடம் ஒப்படைத்த அந்த நிமிடத்தில், வான்வழித் தாக்குதல் பூமியையே பிளந்தது. புகை நீங்கியபோது, இரத்தத்தில் மதியின் உடல் துண்டு துண்டாக கிடந்தது. கஜன் உயிர் தப்பினார் — அந்த காதல் மரணிக்கவில்லை — அது மண்ணில், மெளனத்தில், அவன் விழிகளில் வாழ்ந்துகொண்டே இருந்தது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 1830 [சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்'] / எனது அறிவார்ந்த தேடல்: 1248 https://www.facebook.com/groups/978753388866632/posts/30719807144334530/?
-
"அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6]
"அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6] ஆகஸ்ட் 6, 1945 அன்று, இரண்டாம் உலகப் போரின் போது (1939-45), ஒரு அமெரிக்க B-29 குண்டுவீச்சு விமானம் உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசியது, மூன்று நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது B-29 நாகசாகியின் மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. ஒரு ஆகஸ்ட் 6, மற்றும் ஆகஸ்ட் 9, ஆகிய தேதிகளில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு நான் சென்ற போது, அங்கு முன்பு ஏற்பட்ட பேரழிவை என் கண்களால் நேரடியாக பார்த்த பிறகு, முன்பு அறிவும் உண்மையான விளக்கமும் வர நீண்ட காலமாக இருந்ததாக உணர்ந்த நான், இப்போது, அது எனக்கு வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல ஆயிரக் கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத் தினம் அனுசரிக்கப் படுகிறது. உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. ஆனால் "லிட்டில்பாய்' என்கிற இந்த அணுகுண்டு வாங்கிய உயிர் பலி எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்துக்கும் மேல். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இத் தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலை குலைந்தன. கதிர்வீச்சு காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. எனது அதிர்ஷ்ட்டம் இந்த இரண்டு நினைவு நாளிலும், நான் அங்கு ஷிமோனோசெக்கி பல்கலைக்கழகம், ஜப்பானில், கல்வி கற்றபொழுது நேரடியாக கலந்து அஞ்சலி செலுத்தியது ஆகும். "அமெரிக்கர் தனது வேகமான மற்றும் சக்திவாய்ந்த B-29 விமானத்தில் பறந்து, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களுக்கு எதிராக வீசினர்! பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளாலும் நிரப்பப்பட்ட ஒரு ஒற்றை எறிபொருள். பத்தாயிரம் சூரியன்களைப் போல பிரகாசிக்கும் புகை மற்றும் நெருப்பின் ஒரு ஒளிரும் தூண், அதன் அனைத்து வலிமையிலும் எரிந்து உயர்ந்தது! அது இரகசிய ஆயுதம், இரும்பு இடி, ஒரு பிரம்மாண்டமான மரண தூதர், இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் முழு மக்களையும் சாம்பலாக்கியது! "பிணங்கள் மிகவும் எரிந்து, அடையாளம் காண முடியாத அளவுக்குப் போயிருந்தன. முடி மற்றும் விரல் நகங்கள் உதிர்ந்து விழுந்தன, மட்பாண்டங்கள் காரணமின்றி உடைந்தன. ... உணவுப் பொருட்கள் விஷமாகிவிட்டன. தப்பிக்க, வீரர்கள் தங்களைத் தாங்களே கழுவிக் கொள்ளவும், தங்கள் உபகரணங்களை கழுவவும் ஓடைகளில் குதித்தனர்!" On August 6, 1945, during World War II (1939-45), an American B-29 bomber dropped the world’s first uranium gun-type atomic bomb (Little Boy) over the Japanese city of Hiroshima and Three days later, a second B-29 dropped another plutonium implosion-type atomic bomb (Fat Man) on Nagasaki. Some time knowledge & true interpretation was a long time in coming, but, I believed, it did arrive now, After seeing with my own eyes the devastation wreaked upon Hiroshima & Nagasaki, when I visited there on August 6, & August 9, respectively, When I was at University of Shimonoseki,Japan.! Every August 6, "A-Bomb Day", the city of Hiroshima holds the Peace Memorial Ceremony to console the victims of the atomic bombs and to pray for the realization of lasting world peace. "The American flying in his swift and powerful B-29, hurled against the cities of Hiroshima and Nagasaki a single projectile charged with all the power of the universe. An incandescent column of smoke and fire, as brilliant as ten thousand suns, rose in all its splendor. It was the secret weapon, the iron thunderbolt, a gigantic messenger of death, which reduced to ashes the entire population of Hiroshima and Nagasaki. The corpses were so burnt they were no longer recognizable. Hair and finger nails fell out, Pottery broke without cause. ... Foodstuffs were poisoned. To escape, the soldiers threw themselves in streams to wash themselves and their equipment." கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna "அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6] https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02JNJngNMaMgn2mKjwbkkUFUgMkQhEFV7oZ4kV76JghCZnRX6pebmt6aF6PuhHtm5bl?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 16 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 16 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'முதல் முடிசூட்டு விழா முடிந்து ஆறு மாதங்களில், இரண்டாவது முடிசூட்டு விழா?' தேவநம்பியதிஸ்ஸ மன்னராக முடிசூட்டு விழா செய்யப்பட்டபோது, பல அதிசயங்கள் நடந்தன. பல விலைமதிப்பற்ற, அரிய பொருட்கள் தானாகத் நிலத்திலும் கடற்கரையிலும் தோன்றின. இது பற்றிய விபரங்களை, தீபவம்சம் மற்றும் மகாவம்சம் அத்தியாயம் 11 ஐப் பார்க்கவும். அசோக மன்னன் தான், அந்த அரிய பொருட்களுக்கு தகுதியானவர் என்று தேவநம்பியதிஸ்ஸ கருதி, அவைகளை அசோகரிடம் அனுப்பினார். அதற்குப் பதிலாக, அசோகன் தானும் தேவனம்பியதிஸ்ஸனுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பியதுடன், இலங்கை அரசன் தேவநம்பியதிஸ்ஸனை இரண்டாவது முடிசூட்டு விழாவை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். எனவே தேவநம்பிய தீசன் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது முடிசூட்டு விழாவை முதலாவது நடந்து ஆறு மாதத்தால் நிறைவேற்றினார் என்று இலங்கை நாளாகமம்கள் கூறுகின்றன. இங்கு தான் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது. அந்தக் காலத்தில் கடல் மார்க்கமான தூர இடத்து, நாட்டுக்கு நாடு [அல்லது போக்குவரத்து] வியாபாரம், மிகக் குறைவு. மேலும் தாம்ரலிப்தா [port Tamralipti] துறை முகத்தில் இருந்து எதாவது ஒரு கப்பல் புறப்படுவதை காண்பதும் இன்னும் ஒரு பிரச்சனை. இது தற்காலத்தைய மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தம்லக் எனுமிடத்தில் இருந்ததாக நம்பப் படுகிறது. அது மட்டும் அல்ல, அன்றைய காலத்தில் காற்றின் துணையுடன் தான் கப்பல்கள் நகர்ந்தன. எனவே போவதற்கு தென்மேற்கு பருவக்காற்றும், திரும்பி வருதலுக்கு வடகிழக்கு பருவக்காற்றும் தேவை. அது மட்டும் அல்ல, அவர்கள் ஏறத்தாழ 300 மைல்கள், மகத இராச்சியத்தின் தலைநகரம் பாடலிபுத்திரம் [Pataliputra] போக நடக்கவும் வேண்டும். இது ஒரு பக்க தூரமே. எனவே, எல்லா காலநிலையும் சரியாக இருந்தால், ஒரு சுற்று பயணத்தை முடிக்க ஒரு ஆண்டு ஆவது கழியும். அது மட்டும் அல்ல, தேவநம்பிய தீசன் அனுப்பிய பரிசு பொருட்களுடன் வந்த தூதுவர்கள், அங்கே, பாடலிபுத்திரத்தில் ஐந்து மாதம் நின்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. எனவே முதலாவது முடிசூட்டு விழாவின் பின் இலங்கையை விட்டு வந்தவர்கள், ஐந்து மாதம் தங்கிய பின், அசோகனின் செய்தியுடன் எப்படி ஆறு மாதத்துக்குள் திரும்பி போனார்கள் என்பது நம்பமுடியாத கற்பனையே! தேவநம்பியதிஸ்ஸ தனது இரண்டாவது முடிசூட்டு விழாவை ஆறு மாதங்களுக்குப் பிறகு நடத்தினார் மற்றும் மிகப் பெரிய இந்தியப் பேரரசுடன் தேவநம்பியதிஸ்ஸ நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பதும், ஆசிரியரின் ஒரு பொய்யான புகழ்ச்சி சோடனையாகவே இருக்க வேண்டும். என்றாலும் மறைந்த கலாநிதி எஸ்.பரணவிதான அதற்கு சில நொண்டிக் காரணங்களை கட்டாயம் கூறியிருப்பார். கலிங்கப் போருக்குப் பிறகு, பேரரசர் அசோகன் (கிமு 268–232) பௌத்த மதத்திற்கு மாறிய பிறகு, இரண்டாம் முறை, ஒரு தார்மீக மாற்றத்தையும் பௌத்த கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பையும் குறிக்கும் முகமாக ஒரு குறியீட்டு தர்ம முடிசூட்டு விழாவிற்கு உட்பட்டதாகக் அசோகவதனம் போன்ற புத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்ப ஏன் தேவநம்பியதிஸ்ஸாவும் இரண்டாம் முறை முடிசூட்டு விழா நடத்தினான் என்பதற்கு ஒரு காரணம் காண்கிறோம். அதாவது மீண்டும் ஒரு ஒற்றுமை இருவருக்கும் இடையில் ஏற்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம்! என்றாலும் ஆறுமாதத்துக்குள் முடிசூட்டு விழா மீண்டும் நடப்பதற்கு எந்த சாத்தியமும், நாம் சுட்டிக்காட்டியவாறு கட்டாயம் இல்லை. Part: 16 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Six months after the first coronation, the second coronation took place?' When Devanampiyatissa was consecrated as king, and many miraculous things happened, and rare items came to him. Refer the chapter 11 of the Dipavamsa and the Mahavamsa. Quite a lot of invaluable items appeared in land and along the coast. Devanampiyatissa considered only the King Asoka was worthy of those, and sent those to Asoka. Asoka in turn sent something in return to Devanampiyatissa, and requested him to have a second coronation. Devanampiyatissa, dutifully, had a second coronation six months after his first coronation. This is quite impossible from the travel logistics involved in those days. Merchant ships were few in those days, and finding a one departing to the port Tamralipti is another problem. There were no mechanised vessels in those days, and the vessel had to take the South-West Monsoon to go and return by the following North-East Monsoon. They had to walk from Tamralipti, near the confluence of the River Ganges with sea, to Pataliputra, about another three hundred miles one way and back to Tamralipti. It would have taken more than a year even everything was favourable to complete the round trip. They also stayed at Pataliputra for five months. Devanampiyatissa had his second coronation six months after the first is therefore not logistically possible, and it was quite unwarranted to have the second coronation in six months of the first coronation. This must be to flatter that Devanampiyatissa had close connection with the greatest Indian Empire. Late Dr. S. Paranavitana would give some lame duck reasons for it. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 17 தொடரும் / Will Follow பகுதி Part: 16 https://www.facebook.com/groups/978753388866632/posts/30703835682598343/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 15 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 15 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உலகின் முதல் பேனா நண்பர் யார்?' இரண்டாவது மகன் திஸ்ஸ, முத்தசிவாவின் மரணத்திற்குப் பிறகு தேவநம்பியதிஸ்ஸ என்ற அடைமொழியுடன் அரியணை ஏறினார். ‘கடவுளுக்குப் பிரியமானவர்’ என்ற அடைமொழி கொண்ட தேவநம்பிய மன்னன் வேறு யாரும் இலங்கையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவநம்பியதிஸ்ஸ, முத்தசிவாவின் அகவை இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருந்தால், திஸ்ஸ [தேவநம்பிய திசா] குறைந்தது அகவை 147 க்கும் 157 க்கும் இடையில் [between 137 - 30 + 40 & 137 - 20 + 40] வாழ்ந்திருப்பான். தொடர்ச்சியாக மூன்று மன்னர்களின், மிக நீண்ட வாழ்க்கை நம்பமுடியாதவையாக இருக்கின்றன. மூத்த மகன் அபயாவுக்கு என்ன நடந்தது என்பது எந்த இலங்கை வரலாற்றிலும் இல்லை. அது ஏன் என்று புரியவில்லை. மேலும் பொதுவாக அரச வழக்கத்தின் படி, மூத்தமகன் தந்தைக்கு பின் அரசனாவான், ஆனால் இங்கு இரண்டாவது மகனே அரனாகிறான். எனவே இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இதற்கு எதாவது காரணம் இருக்கலாம்? அதை தேடித் பார்க்கும் பொழுது, அசோகனும் இரண்டாவது மகன் என்பதை அறிந்தேன். அதாவது, அசோகர் பேரரசர் பிந்துசாரரின் இரண்டாவது மகன், அவர் முதல் மகன் அல்ல. அவரது மூத்த சகோதரர் சுசிமா [Susima] தான் அரசுக்கு வாரிசாக இருந்தார். என்றாலும் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, சுசிமாக்கு பதிலாக இரண்டாவது மகன் அசோகன் பேரரசரானார் என்பது வரலாறு ஆகும். மேலும் அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்கள் மூலம் அவர் 'தேவாநம்பிய' என்ற அடைமொழியைக் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது அல்லது உறுதிப்படுத்தப் படுகிறது. அப்படி என்றால், அசோகரும் அதே போல் திஸ்ஸவும் [தீசனும்] இரண்டாவது மகன். இருவருக்கும் ஒரே அடைமொழி. அது மட்டும் அல்ல, அவர்கள் என்றுமே ஒருவரை ஒருவர் பார்க்காமல், ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கு அப்பால் வாழ்ந்து, இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, நட்பைப் பேணி வந்தனர் என்று இலங்கை நாளிதழ் கூறுகிறது. இவைகள் தான் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது? திஸ்ஸனை அசோகனுடன் இணைத்து புகழ் சேர்ப்பதற்காக புனையப்பட்ட, ஒரே மாதிரியான தகவல்களா அல்லது ஒற்றுமையா, என்று ஒரு சந்தேகம் வலுக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்? மேலும் தேவநம்பியதிஸ்ஸ அசோக மன்னரின் நெருங்கிய நண்பராக இருந்தார், இருப்பினும் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததில்லை என்பதால், மறைந்த திரு.எஸ்.யு.குணசேகரம் அவர்கள், இவர்கள் இருவரையும், உலகின் முதல் 'பேனா நண்பர்கள்' என்று ஊகிக்கிறார்; 'S. J. Gunasekaram – Selected Writings, Evelyn Rutnam Institute Publication 1985.' என்ற குறிப்பில், பக்கம் 56 ஐப் பார்க்கவும். மேலும் தீபவம்சத்தின் நாயகன் தேவநம்பியதிஸ்ஸ ஆகும். Part: 15 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who is the first pen friend in the world?' Tissa, the second son, ascended the throne with the epithet Devanampiyatissa after the death of Mutasiva. It is very important to note that there is no other king in Lanka with epithet Devanampiya, ‘beloved of the god’. If Mutasiva had his second son at the age of fifty, then Devanampiyatissa too must have lived greater than one hundred years. Three consecutive succession of very long life is quite unbelievable. There is no record of what happened to the eldest son Abhaya in any of the chronicles. This is very significant. Devanampiyatissa was very intimate friend of the King Asoka, though both never met each other as per all the chronicles. Strangely, the Emperor Asoka too had the epithet’ Devanampiya’ they lived more than one thousand five hundred miles apart along the travel way, and they maintained the friendship two thousand three hundred years ago. That is why Late Mr. S. U. Gunasegaram speculated them as the first pen friends in the world; see the page 56 of the Reference 'S. J. Gunasekaram – Selected Writings, Evelyn Rutnam Institute Publication 1985.' Devanampiyatissa is the hero of the Dipavamsa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 16 தொடரும் / Will Follow பகுதி Part: 15 https://www.facebook.com/groups/978753388866632/posts/30653676487614263/? தாராளமாக உங்கள் கருத்து எழுதலாம். பதில் தேவைப்படின் கட்டாயம் சரியான, பொருத்தமான பதில், வேண்டப்படின் சான்றுகளுடன் தரப்படும் நன்றிகள்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 14 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 14 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'முத்தசிவா அல்லது மூத்தசிவா' மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவரையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழரினதும் வருகையை செயற்கையாக, புத்தரின் மரணத்துடன் ஒத்து போக சரி செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் தெரிகிறது.[The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. உதாரணமாக, இந்த தந்திரத்தால், விஜயனிற்குப் பிறகு ஆட்சி அமைத்த சில அரசர்களின் ஆட்சி காலத்தை நீடித்தது தெரிய வருகிறது, குறிப்பாக தந்தையும் மகனுமாக '130' ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என குறிப்பிடுகிறார் ?. மன்னன் பண்டு அபயன் 70 ஆண்டுகளும் அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் முத்தசிவ அல்லது மூத்தசிவா [Mutasiva] பண்டுகவின் மகன் (மகாவம்சத்தின்படி பண்டுகாபயா) என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்கிறது. [King Pandukhabaya, nephew of Abhayan was supposed to have ruled from 377 BC – 307 BC that is 70 years. Muttasivan, son of Pandukhabaya ruled for 60 years from BC 307 to BC 247] , இதில் இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால், அறிவிற் சிறந்த அரசன் பாண்டு அபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் என்றும் அதன் பின்பு தான் எழுபது வருடகாலம் சீரும், செல்வமும் மிக்க அனுராதபுரத்திலிருந்து அவனுடைய ராஜ்யத்தை ஆண்டு வந்தான் என்கிறது மகாவம்சம். அதாவது அவன் 107 ஆண்டுகள் வாழ்ந்துள்ளான். அதே போல முத்த சிவனும், 37 அகவையில் ஆட்சிக்கு வந்த தந்தையின் 70 ஆண்டு ஆட்சியின் பின் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்றால், அவன் ஏறத்தாழ 130 / 140 அகவைக்கு மேல் வாழ்ந்து இருக்க வேண்டும். கௌதம புத்தரே தனது எண்பதாவது அகவையில் இறந்தது குறிப்பிடத் தக்கது. முத்தசிவனின் நீண்ட அறுபது ஆண்டுகால ஆட்சியைப் பற்றி இரண்டு முதன்மை வரலாற்று நூல்களும் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. பெயர் தமிழில் ஒலிக்கிறது, ஒரு காரணமாக் கூட இருக்கலாம்? அதேவேளை, முத்தசிவனின் [மூத்தசிவனின்] பிறப்பு பற்றி எந்த செய்தியும் அங்கு இல்லை. ஆனால், பாண்டுஅபயன் [பண்டுகாபய] தனது மனைவி, சுவன்னபலியை [Suvannapali] பதினாருக்கும் பதினெட்டு வயதுக்கும் இடையில் சந்தித்து உள்ளான். ஆகவே மூத்த மகன் அதிகமாக இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருக்கலாம் என்று நாம் ஊகித்தால், மூத்தசிவன் குறைந்தது அகவை 137 க்கும் 147 க்கும் இடையில் [between 107 - 30 + 60 & 107 - 20 + 60] வாழ்ந்திருப்பான். எது என்னவென்றாலும், முத்தசிவா என்ற பெயர் தமிழில் இருந்தாலும் ஒரு கண்டுப்பிடிக்கப்பட்ட மன்னராகத்தான் அதிகமாகத் இருக்க வேண்டும். முத்தசிவனுக்கு அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மத்தபய, மித்த, மகாசிவன், அசேலன், சூரதிச்சன் அல்லது திஸ்ஸ, மற்றும் கிரா என பத்து மகன்கள் இருந்தனர். அவருக்கு அனுலா மற்றும் சிவாலி அல்லது சிவால என்ற இரு மகள்களும் இருந்தனர் [Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa and Kira. He had two daughters too, Anula and Sivala.]. Part: 14 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Mutasiva' Mutasiva is the son of Panduka (Pandukabhaya as per the Mahavamsa) and he ruled for sixty years. Both the chronicles have nothing much to say about the long sixty year rule of Mutasiva. The name is sounding Tamil, and that might be the reason for the briefness. Pandukabhaya met his wife, Mutasiva’s mother, when he was just past the age of sixteen. If Mutasiva was born when Panduka was thirty years of age, then Mutasiva would have lived to a very old age of one hundred and thirty seven [(107-30)+60, to the age of 137.] Mutasiva must therefore be an invented king even though the name sounds Tamil. Mutasiva had ten sons, Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa and Kira. He had two daughters too, Anula and Sivala. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 15 தொடரும் / Will Follow படங்கள் எதுவும் இங்கு பதியமுடியாமல் இருப்பதால், என் வலைத்தளத்தில் பதிவிட்டதின் லிங்க் கீழே தருகிறேன் , முழுமையாக பொருத்தமான படங்களுடன் பார்க்க, நன்றி "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English https://www.facebook.com/groups/978753388866632/posts/30595874916727754/?
-
"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)
நன்றிகள் எல்லோருக்கும்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
படங்கள் எதுவும் இங்கு பதியமுடியாமல் இருப்பதால், என் வலைத்தளத்தில் பதிவிட்டதின் லிங்க் கீழே தருகிறேன் , முழுமையாக பொருத்தமான படங்களுடன் பார்க்க, நன்றி "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English பகுதி Part: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/29968431062805479/? பகுதி Part: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/30013577051624213/? பகுதி Part: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/30068518139463437/? பகுதி Part: 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/30105666255748625/? பகுதி Part: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/30161651290150121/? பகுதி Part: 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/30204580629190520/? பகுதி Part: 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/30260658360249413/? பகுதி Part: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/30300043636310885/? பகுதி Part: 09 https://www.facebook.com/groups/978753388866632/posts/30356005957381319/? பகுதி Part: 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/30399336926381555/? பகுதி Part: 11 https://www.facebook.com/groups/978753388866632/posts/30456053434043237/? பகுதி Part: 12 https://www.facebook.com/groups/978753388866632/posts/30483223777992869/? பகுதி Part: 13 https://www.facebook.com/groups/978753388866632/posts/30526502570331656/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 13 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 13 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பண்டுக அல்லது பண்டுகாபயா' பண்டுவாச (பண்டுவாசுதேவா) வுக்கு பத்து மகன்கள் மற்றும் ஒரு மகள் [சித்ரா / Citta] இருந்தனர். சித்ரா மிகவும் கவர்ச்சிகரமான அழகிய பெண்ணாக இருந்தாள். பண்டுவாச முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் அபய [Abhaya] இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அமிதோதனாரின் பேரன் ஒருவரின் [திகாயுவின் / Dīghāyu] மகன் [திககாமனி / Dighagamani/ காமனி ] பண்டுவாசனின் மகளுடன் [சித்ரா] காதல் தொடர்பு வைத்திருந்தான், மேலும் அபயாவின் முடிசூட்டு விழாவின் போது ஒரு மகன், பண்டுக [Panduka], சித்ராவுக்கு (மகாவம்சத்தின்படி பண்டுகாபயா / Pandukabhaya) பிறந்தான். பண்டுகாவின் மாமா, அபய இறந்தபோது அவனுக்கு இருபது வயது என்றும், அடுத்த பதினேழு ஆண்டுகள் கொள்ளையனாக வாழ்ந்ததாகவும் தீபவம்சம் கூறுகிறது. பின்னர் அவன் தனது தாய் மாமன்கள் ஏழு பேரைக் கொன்று முப்பத்தேழு வயதில் அரியணை ஏறினான். ஆகவே இலங்கையில் பதினேழு ஆண்டுகள் அரசர் இல்லாமல் இருந்தது, ஆனால் ஒரு பிரதிநிதி மன்னருக்குப் பதிலாக நாட்டை நிர்வகித்தார். அதன் பின், பண்டுக நீண்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். தீபவம்சம் பாண்டுகாவை சுமார் ஆறு வசனங்களில் விவரிக்கிறது, ஆனால் மகாவம்சம் இதையே இரண்டு அத்தியாயங்கள், 9 மற்றும் 10 இல் விவரிக்கிறது, இது சுமார் நூற்று முப்பத்தைந்து பாடல்களாக விரிவடைந்து இருக்கிறது. அவர் இறக்கும் போது அவருக்கு நூற்று ஏழு வயது [107 வயது] இருக்க வேண்டும்? என்றாலும் அந்த பழுத்த வயதில் தீவிரமாக ஆட்சி செய்தார் என்று மகாவம்சம் கூறுகிறது. மற்றொரு ஆச்சரியமான நூல் ஆசிரியரின் கண்டுபிடிப்பு? இருப்பினும், இராசவலியில் பண்டுகாபயா 1 மற்றும் பண்டுகாபயா 2 என்ற இரண்டு மன்னர்களின் ஆட்சியில், மொத்தம் நூறு ஆண்டுகாலம் ஆட்சி நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மன்னர்களின் ஆட்சி காலப் பட்டியலைப் பார்க்கவும். தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகியவற்றில் உள்ள மன்னர்களின் ஆட்சி கால [இறையாண்மைகளின்] பட்டியல் ஏறக்குறைய ஒத்ததாக உள்ளது. இருப்பினும், பாண்டுகாபயா1 க்குப் பிறகு உள்ள கால அட்டவனையுடன் ஒப்பிடும் போது, இராசவலியாவில் உள்ள பட்டியல், பெயர்கள், ஒழுங்கு மற்றும் ஆட்சியின் நீளம் ஆகியவற்றில் மிகவும் குழப்பம் காணப்படுகிறது. மகாவம்சத்தில் பண்டுவாசுதேவ (தீபவம்சத்தில் பண்டுவாச) முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார், இராசவலியவில் பண்டுவாசுதேவ முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அபய இராசவலியத்தின்படி இருபத்தி இரண்டு ஆண்டுகளும் மற்ற இரண்டு நூலின் வரலாற்றின்படி இருபது ஆண்டுகளும் ஆட்சி செய்தார். மேலே கூறியது போல், இராசவலிய மிகவும் பிற்பகுதியில் தொகுக்கப் பட்டது. மேலும் மற்ற இரண்டு வரலாறுகளிலும் இருந்து மிகவும் வேறுபட்டு காணப்படுகிறது. பகுண்ட [Pakunda] தீபவம்சத்தில் பண்டுக என்றும் பகுண்டாக [Panduka and Pakundaka] என்றும் அழைக்கப்படுகிறார், ஆனால் மகாவம்சத்தில் பாண்டுகாபயா [Pandukabhaya] என்று அழைக்கப்படுகிறது. சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் இளையகுமாரன் பண்டுவாசதேவ, வியனுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றான் என்கிறது மகாவம்சம். எனவே பண்டுவாசதேவனின் தாய் ஒரு தமிழிச்சி எனத் தெரியவருகிறது. அவனின் மகள் வழிப் பேரனான, பண்டுகாபயனின் [பண்டுகவின்] மகன் மூத்தசிவா [Mutasiva meaning: Elder siva] ஆகும். இதில் இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால், பண்டுகவின் தந்தை, கௌதம புத்தரின் தந்தையின் இளைய சகோதரன், அமிதோதனாரின் பேரன் திகாயுவின் [Dīghāyu] மகன் ஆகும். இதன் மூலம் மீண்டும் புத்தருடன் இலங்கைக்கு இரத்த தொடர்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதாகும். Part: 13 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Panduka or Pandukabhaya' Panduvasa (Panduvasudeva) had ten sons and one daughter, very fascinating girl. Panduvasa reigned for thirty years, and his son Abhaya ruled after him for twenty years. The son of one of the Amitodana’s grandson had affairs with the daughter of Panduvasa, and a son Panduka (Pandukabhaya as per the Mahavamsa) was born, the same time as Abhaya’s consecration. Dipavamsa simply says that Panduka was twenty years when his uncle Abhaya died, and lived as a robber for the next seventeen years. Then he killed seven of his maternal uncles and ascended to the throne at the age of thirty-seven. Lanka was without king for seventeen years, but with a regent. Panduka ruled for lengthy seventy years. The Dipavamsa describes Panduka in about six verses, but the Mahavamsa elaborate the same in two chapters, 9 and 10, running into about one hundred and thirty five verses. He must be one hundred and seven years old [107 years] when he died, ruled actively at that ripe age, another invention. There are, however, two Pandukabhayas, Pandukabhaya1 and Pandukabhaya2, in the Rajavaliya with the combined reign of one hundred years. Refer the List of Sovereigns in this regard. The list of sovereigns in the Dipavamsa and the Mahavamsa is almost similar. However, the list in the Rajavaliya is much confusing when compared with the other two chronicles after thePandukabhaya1, in the names, order and the lengths of reigns. Panduvasudeva in the Mahavamsa (Panduvasa in the Dipavamsa) ruled for thirty years, Panduvasudeva of the Rajavaliya ruled for thirty-two years. Abhaya ruled for twenty-two years as per the Rajavaliya and twenty years as per the other two chronicles. As stated above, the Rajavaliya is composed much later, and differs very much from the other two chronicles. Pakunda is also known as Panduka and Pakundaka in the Dipavamsa, but known as Pandukabhaya in the Mahavamsa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 14 தொடரும் / Will Follow
-
"உண்மையை நிலைநாட்டுங்கள்! / உண்மையை நம்புங்கள்!!" [கருப்பு ஜூலையை முன்னிட்டு]
"உண்மையை நிலைநாட்டுங்கள்! / உண்மையை நம்புங்கள்!!" [கருப்பு ஜூலையை முன்னிட்டு] எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ எங்கே உலகம் குறுகிய பார்வையால் சிதைந்து பிரிந்து போகாமல் இருக்கிறதோ எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து வார்த்தைகள் பிறக்கிறதோ எங்கே அயராத முயற்சி சோர்வுயின்றி முழுமை நோக்கி கரங்களை நீட்டுதோ எங்கே பகுத்தறிவின் தெளிவான நீரோடை பாலைவன மணலில் வழி தவறிப் போகவில்லையோ எங்கே எப்பொழுதும் விரியும் சிந்தனையும் செயலும் மனதை முன்னோக்கிச் செலுத்துகிறதோ அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என் தந்தையே என் நாட்டை விழித்தெழச் செய்யுங்கள்! [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free; Where the world has not been broken up into fragments by domestic walls; Where words come out from the depth of truth; Where tireless striving stretches its arms towards perfection; Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led forward by thee into ever-widening thought and action-- Into that heaven of freedom, my father, let my country awake.” (இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore வங்காள மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali))
-
சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை]
சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை] அது ஜூலை 1983, இலங்கையின் தலைநகரம் கொழும்பு, ஈரப்பதமான, சாம்பல் நிறத்துடன் அதன் வழக்கமான பருவ மழையின் தாக்கத்தில் ஆழ்ந்து யோசனை செய்துக் கொண்டு இருந்தது. ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மிக்க மாணவர்கள் கூடும் மண்டபங்களுக்குள், ஒரு அமையான, ஆனால் ஆவேசமான எதிர்ப்பு அங்கொன்று இங்கொன்றாக மின்னியது. அதன் குரல்கள், ஒரு மூலையில் குளிர்பானத்தை இரசித்து சுவைத்துக் கொண்டு இருந்த இரண்டு காதலர்கள் காதிலும் விழுந்தது. ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இறுதியாண்டு அரசியல் அறிவியல் மாணவன் பிரதீபன் மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்த உற்சாகமான தமிழ் இலக்கிய பட்டதாரி இரண்டாம் ஆண்டு மாணவி அருந்ததி. அவர்களின் காதல் அமைதியாக அங்கே இரண்டு ஆண்டுகளாக பூத்து குலுங்கின. திருமண மேடையில் இன்னும் அருந்ததி பார்க்கவில்லை என்றாலும், தினம் அருந்ததியை பார்த்தவண்ணம் தான் பிரதீபன் இருந்தான். அவர்கள் பல்கலைக்கழக வாளாவிலும், பூந்தோட்டத்திலும் நூலகத்திலும், உணவகத்திலும் சந்திக்கத் தவறுவதில்லை. அவர்கள் இலக்கியம் பேசிக் கொண்டே காதல் வளர்த்தார்கள். பாவேந்தர் பாரதியையும் பாரதிதாசனையும் படித்து, அதில் அரசியல் காணும் பிரதீபனுக்கும், சங்க இலக்கியத்தை நயமாக வாசித்து அதில் காதல் சுவை காணும் அருந்ததிக்கும் இடையில் பசுமைக் காதல் வளர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் நீதியைக் கனவு கண்டான். அவள் இன்பக் காதலைக் கனவு கண்டாள். என்றாலும் ஒன்றாக, அவர்கள் சமமான, ஒன்றுபட்ட மற்றும் அமைதியான எதிர்காலத்தைக் கனவு கண்டார்கள். ஆனால் வரலாற்றில் ஜூலை 23 இல், வேறு திட்டங்கள் இருந்தது அவர்கள் இருவருக்கும் தெரியாது! ஜூலை 23 ஆம் தேதி, சில அரசுக்கு எதிரான தமிழ் இளைஞர்களால், 13 இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி இடி முழக்கம் போல வெடித்தது. அதைத் தொடர்ந்து வந்தது துக்கம் அல்ல - மாறாக அரசால் திட்டமிடப்பட்ட பழிவாங்கல். அருந்ததியும் பிரதீபனும் அமைதியான இரவு உணவிலிருந்து திரும்பி வந்தபோது, வீதிகள் போர்க்களங்களாக மாறின. வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தடிகளுடன், கையில் தீப்பிழம்புகளையும், கண்களில் வெறுப்பையும் ஏந்திய சிங்கள கும்பல்கள், கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகங்களைப் போல தமிழ் வீடுகளை வேட்டையாடினர். அவர்களின் தங்குமிடம், அவர்களின் புகலிடம் தீக்கிரையாக்கப்பட்டது. ஒரு சில மணித்தியாலத்துக்குள் 3,000 உயிர்கள். 18,000 வீடுகள். 5,000 வியாபாரங்கள். நெருப்பு மட்டுமல்ல, கலங்காத மௌனமும் எரிந்தது. மகாவம்சத்தில் ஒரு கதை இருக்கிறது. 'கர்ப்ப பெண்ணான, ராணி விகாரமகாதேவிக்கு விசித்திரமான ஆசைகள் ஏற்பட்டன. தமிழ் மன்னன் எல்லாளனுடைய வீரர்களிலே முதல் வீரனுடைய கழுத்தை வெட்டிய கத்தியைக் கழுவ உதவிய நீரை, வெட்டுண்ட அந்த தலை மீது நின்று கொண்டு குடிக்க வேண்டும் அது என்கிறது' மகாவம்சம் அத்தியாயம் 22 - 44 & 45 . அந்தக் காடையர் கூட்டத்தை கண்ட இருவருக்கும், அவர்களின் 'கொடூர அவா' எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. உடனடியாக அவர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர். என்றாலும் அவர்களைச் சிக்கவைத்து விட்டன. பிரதீபனைத் துரத்தி, சாலையில் பாய்ந்து பிடித்து, சாலையின் நடுவில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். அவன் மார்பில் ஒரு டயர் சுற்றிப் போட்டு, மண்ணெண்ணெய் நனைந்த துணியால் எரிக்கப்பட்டது. அவனுடைய அலறல் சத்தம் அவள் கதை அடைத்தது. அருந்ததி தானும் விழ முயன்றால். ஆனால், அவர்களில் இருவர் அவளை பிடித்து ஏதேதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவள் தவித்து கண்ணீர் சிந்தியபடி துடித்துக் கொண்டு நின்றாள். அவர்கள் சிரித்தார்கள். பத்தினி தெய்வம் என்று இன்னும் இலங்கையில், சிங்களவர் உட்பட, வழிபாடும் கண்ணகி போல் அவள் கண்கள் சிவந்து எரிந்து கொண்டு இருந்தன. அவர்களுக்கு அவளின் கண்ணைப்பற்றி, பெண்மை பற்றி பிரச்சனை இல்லை. அவளின் உடலுக்காக ஒன்றின்பின் ஒன்றாக மிருகங்களாக வரிசையில், பிரதீபனின் உடல் எரிந்து முடியுமட்டும் ஆனந்தமாக வேடிக்கை பார்த்தனர். “மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்” என்றார் வள்ளுவர்' ஆனால் மிருகங்களுக்கு அது தெரியப்போவதில்லை. அவர்களின் காம அவசரத்தில், அவளின் ஆடைகளை கிழித்தனர், பலர் சேர்ந்து கற்பழித்தனர். அவளுடைய தந்தையாக இருக்கும் அளவுக்கு வயதானவர்களால் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். “காதலுக்கு நான்கு கண்கள், கள்வனுக்கு இரண்டு கண்கள், காமுகனின் உருவத்தில் கண்ணுமில்லை காதுமில்லை” அவளின் இலக்கிய வாய் முணுமுணுத்தது! பின்னர் தெஹிவளை கடற்கரையின் மணல் திட்டுகளில், மயக்க நிலையில், அவள் இறந்து விட்டாள் என்று அவளின் உடலை தூக்கி எறிந்தனர். அங்கே வீதி ஓரத்தில் புத்தர் சிலையாக இருந்தார்! இத்தனைக்கும் இலங்கை அரசு எந்த ஊரடங்கு சட்டமோ அல்லது காவல் துறையினரையோ பயன்படுத்த வில்லை. தூண்டி விடப்பட்ட காடையர் கூட்டத்தின் விசித்திரமான ஆசைகள் நிறைவேறட்டும் என்று ஒரு சில நாள் காத்திருந்தது! அங்கு ஆர்ப்பரிக்கும் அலைகள் அவளுடைய முனங்குதலைக் கண்டு, தங்கள் கைகளால் அவளை ஆறுதல் படுத்தின. கதிரவன் தன் கரங்களைப் பரப்ப, காகங்கள் கூடிப் பறக்க அவள் சற்று கண்களைத் திறந்தாள். என்றாலும் அவள் உடம்பால் எழுந்திருக்க முடியவில்லை. மீண்டும் அங்கே கண்மூடிக் கிடந்தாள்! பின்னர், விதி தலையிட்டது. அன்று காலை கடற்கரையில், தன் மனைவியுடன் நடந்து சென்ற கொண்டு இருந்த, நடுத்தர வயது சிங்கள மருத்துவர் டாக்டர் விஜேசிங்கே [විජේසිංහ], இரத்தக்கறை படிந்த, அரைகுறை கிழிந்த உடுப்புடன் ஒரு பெண்ணின் உருவத்தை அலைகளின் மோதலுக் கிடையில் கண்டார். அவரது மனசாட்சி அவரது பயத்தை விட வலிமையானது. அவரும் அவரது இரக்கமுள்ள பள்ளி ஆசிரியரான மனைவி நேத்மியும் [නෙත්මි], அருந்ததியை தமது வீட்டிற்கு காவிச் சென்று, நடுங்கும் கைகளால் அவளது காயங்களைக் கழுவி, அதற்கு ஏற்ற, தன்னிடம் இருந்த முதல் உதவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தார். அதன் பின் அவளுக்குக் கஞ்சி மற்றும் இளநீர் கொடுத்தார்கள். என்றாலும் அவள் பேசவே இல்லை. அவள் தான் யார் என்று, தனக்கு என்ன நடந்தது என்று மூச்சு விடவே இல்லை. அவர்களும் அதைக் கேட்கவில்லை. என்றாலும் அவள் ஒரு தமிழிச்சி என்று மட்டும், அன்று நிலவிய சூழலால் அவர்களுக்கு புரிந்தது. அவர்கள், அவளை ஒரு அப்பாவி இலங்கைப் பெண்ணாக மட்டுமே பார்த்தார்கள். அப்பத்தான் அவளுக்கு புத்தர் இன்னும் வாழ்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது! மூன்று நாட்கள், வீட்டிலேயே அவர்களால் முதலுதவி. உணவு, சுகாதாரம், பாதுகாப்பு என எல்லா வசதியும் இரகசியமாக செய்தனர். பிறகு இறுதியாக, அனைத்துலக கண்களை நிர்வகிக்க அல்லது சரிசெய்ய அரசு தயக்கத்துடன் ஊரடங்கு உத்தரவு கொண்டு வந்ததும், டாக்டர் விஜேசிங்கே தனது மருத்துவமனை சலுகைகளைப் பயன்படுத்தி, அவளை ஒரு தொலைதூர உறவினராகக் காட்டி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்தார். அங்கு, அருந்ததி மெதுவாக குணமடைந்தாள். ஆனால் ஞாபகங்கள் 'மனிதம்' எரிந்த அந்த நிலத்தில் தான் இருந்தன. பிரதீபனின் அழுகையும், தன்னைப்போல பரிதாபமடைந்த பெண்களின் ஓசையும், மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன. பல மாதங்களின் பின் அவளுடைய உடல் குணமடைந்தது - ஆனால் அவளுடைய ஆன்மா மட்டும் குணமடையவில்லை. அது இன்னும் எதையெதையோ தேடிக் கொண்டு இருந்தது. பௌத்தத்தில் உள்ள ஐந்து கட்டளைகளில் (பஞ்ச - சீலம்) மூன்றாவது கட்டளை “Kāmesu micchācāra veramaṇī sikkhāpadaṃ samādiyāmi” என்கிறது, அதாவது, “பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து விலகுவதற்கான பயிற்சி விதியை நான் ஏற்றுக்கொள்கிறேன்.” என்கிறது. ஆனால் அவள் அதை நம்பும் நிலையில் அன்று - பிரதீபனை எரித்து, தன்னை அனாதையாக்கி, தன் உடலை கெடுத்த அந்த மிருகங்களை பார்த்த பொழுது, கொடூரத்தை அனுபவித்த பொழுது இருக்கவில்லை. ஆனால் இன்று டாக்டர் குடும்பத்தை பார்த்த பொழுது கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள். ஆனால் இன்னும் அவள் சில நேரங்களில் தூக்கத்தில் கத்தினாள். அவள் சில நேரங்களில் கண்ணாடியில் பிரதீபனின் எரியும் கண்களைப் பார்ப்பாள். அவள் திருமணத்தை முற்றிலும் மறுத்தாள். அதுமட்டும் அல்ல, அவள் தன் மேல் இன்று காட்டும் அனுதாபத்தை மறுத்தாள். அவள் நினைவு முழுமையாகத் திரும்பிய போது, அவள் நீதியின் குரலாக எழுந்தாள்! விஜேசிங்கே குடும்பத்தால் சகோதரியாக போற்றப் பட்ட அவள், இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழ்ப் பெண் அருந்ததி பிரதீபன் என்று தன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன், அவள் ஒரு மனித உரிமை வழக்கறிஞரானாள். அவளது தீ மெதுவாக ஆனால் வலுவாக எரியத் தொடங்கியது! அவள் வெலிக்கடை முதல் செம்மணி வரை, கொக்கடிச்சோலை முதல் முள்ளிவாய்க்கால் வரை வழக்குகளை எதிர்த்துப் போராடினாள். கருப்பு ஜூலையையோ அல்லது அதைத் தொடர்ந்து வந்த இருண்ட மௌனத்தையோ அவள் ஒருபோதும் மறக்கவில்லை. இன்று ஜூலை 23, 2025. கொழும்பு மீண்டும் வெட்கத்தின் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது 62 வயதான அருந்ததி, விஜேசிங்கே குடும்பத்துடன் நடந்து செல்கிறார் - ஒருபுறம் வயதான டாக்டர் விஜேசிங்கே, மற்றும் அவரது பேரன், சட்டக் கல்லூரி மாணவன், மறுபுறம் ஓய்வுபெற்ற ஆசிரியை நேத்மியும் மற்றும் அவரது பேத்தி பாடசாலை மாணவி. "நீதி தாமதமானது இனப்படுகொலை மறுக்கப்பட்டது" என்று எழுதப்பட்ட ஒரு பலகையை சிங்களத்திலும் தமிழிலும் ஏந்தி, அவர்கள் காலி முகத்திடலைக் கடந்து ஜனாதிபதி செயலகத்தின் வாயில்களை நோக்கி நடக்கிறார்கள்! பிரதீபனின் புகைப்படத்தை டாக்டரின் பேத்தி தூக்கி பிடித்துக் கொண்டு இருந்தாள். பேரன் புத்தரின் பஞ்சசீலத்தை காட்சிப் படுத்திக் கொண்டு நடந்தான். கூட்டமும் மெல்ல மெல்ல இணைகிறது. சில சிங்களவர்கள். பல தமிழர்கள். அவள் மனுவைப் படிக்கிறாள். அவள் குரல் நடுங்குகிறது, ஆனால் பயத்துடன் அல்ல. "நாம் எனக்காக மட்டும் நடக்கவில்லை, ஆனால் திரும்பி வராத அனைவருக்காகவும். காதலர்கள் எரிந்ததற்காக, சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்காக, நமது அவமானத்தைத் தாங்கிய மண்ணுக்காக / I walk not for myself alone, But for all those who never returned. For the lovers burned, the sisters raped, For the sand that holds our shame" அவள் நடைபாதையில் ரோஜாக்களை தூவினாள். அவள் காற்றில் கிசுகிசுத்தாள்: "கருப்பு ஜூலை 1983 இல் முடிவடையவில்லை. ஆனால் நம்பிக்கையும் இன்னும் இல்லை / Black July didn’t end in ’83. But neither did hope.” அங்கு கூடிய எல்லோரும் ஒன்றாக முழக்கமிடடனர்: . "நியாயம் தாமதிக்கப்படும் போது, அது இன அழிப்பு என்றே கருதப்படும் / When justice is delayed, it is considered genocide" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 12 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 12 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'புத்தருடன் இலங்கைக்கு இரத்த தொடர்பு உள்ளதா?' சுத்தோதனர் (Suddhodana) கௌதம புத்தரின் தந்தையும், சாக்கிய குல கபிலவஸ்துவின் மன்னராவார். இவருக்கு தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின் படி, தோதோனன், சக்கோதனன், சுக்கோதனன், அமிதோதனன் என்ற [Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana] நான்கு சகோதரர்கள் இருந்தனர். ஆனால் இராசவலியின் படி இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் மட்டுமே ஆகும். இவர்களின் இளைய சகோதரர் அமிதோதனாக்கு பண்டு [Pandu] என்ற ஒரு மகனும் இருந்தார். அவர் புத்தரின் குலத்தைச் சேர்ந்தவர், அதனால் அவர் சக்க இளவரசர் பாண்டு [Sakka prince Pandu] என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு ஏழு இளவரசர்களும் கச்சனா (மகாவம்சத்தின் படி Bhaddakaccana / பத்தகச்சனா / Buddhakachchana / புத்தகாஞ்சனா) என்ற ஒரு இளவரசியும் இருந்தனர். கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த உயர் குடியினளான அவளை பண்டுவாசுதேவன் மணம் செய்துகொண்டு அவளை தன் இராணியாக்கினான். அவளுடன் வந்தவர்களைத் தன்னுடன் வந்தவர்களுக்கு மணம் செய்து வைத்தான். மகாவம்சத்தில் ,பாடம் 8-22 முதல் 8-23 வரை, பத்தகச்சனா இலங்கைக்கு வருவது பற்றி, மற்றொரு அற்புதமான கதையைக் காண்கிறோம். அரசன் தன் மகள் பத்தகச்சனாவை முப்பத்தி இரண்டு தோழிகளுடன் விரைவில் கப்பலேற்றி, கங்கையில் கப்பலைப் போகவிட்டான். எவரால் முடியுமோ அவர்கள் என் மகளை எடுத்துக் கொள்ளட்டும்’ என்றான் என்கிறது அந்த வரிகள். பண்டுவாசுதேவா (பண்டுவாச) கூட முப்பத்திரண்டு அமைச்சர்களின் மகன்களுடன் தான் இலங்கை வந்தான் அதே மகாவம்சம்; மேலும் பதினாறு இரட்டையர்கள் முப்பத்தி இரண்டை ஆக்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்க. ஏனென்றால் விஜயனையும் சேர்த்து அவனுடன், அவன் பெற்றோருக்கு பிறந்தவர்களும் முப்பத்தி இரண்டு தான்! பத்தகச்சனாவும் முப்பத்திரண்டு இளம் பெண் தோழிகளுடன் தான் இலங்கை வந்தார், மற்றொரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. அதுமட்டும் அல்ல, அனைவரும் வழி தவறாமல் இலங்கைக்கு வந்தனர்! அத்துடன் முன்னமே வந்த, பண்டுவாசுதேவாவின் (பண்டுவாச) தோழர்களான முப்பத்திரண்டு இளம் ஆண்களும் இந்த முப்பத்திரண்டு இளம் பெண்களை மணந்தனர். அதேநேரம் பண்டுவாசுதேவா பத்தகச்சனாவை மணந்தார். இன்னொரு நம்பமுடியாத கதை! வழக்கம் போல், திருமணமான முப்பத்திரண்டு சோடிகளும் திருமணத்திற்குப் பிறகு மறைந்து விடுகிறார்கள்!. மகாவம்சத்தின்படி அமிதோதனனின் ஏழு பேரன்களில் ஆறு பேர் இலங்கைக்கு வந்து குடியேறினர். புத்தருடன் இரத்த தொடர்பை ஏற்படுத்த கண்டு பிடிக்கப்பட்ட மற்றொரு கதை அங்கு காணப்படுகிறது; புத்தரின் இரத்த உறவை இலங்கை வரலாற்றில் புகுத்த ஆசிரியர் மிகவும் ஆர்வமாக கதையின் போக்கை அமைத்திருப்பது வெள்ளிடைமலை. இராசவலியில் பண்டுவாசுதேவரின் கதை மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டதை விட மிகவும் வித்தியாசமானது, ஆனால் அது இங்கே விவரிக்கப்படாது. இராசவலியின் பக்கங்கள் 21 மற்றும் 22 இல் கொடுக்கப்பட்டுள்ள நம்பமுடியாத புராணக் கதை ஆசிரியரின் அளவு கடந்த கற்பனை. எனவே இது எந்த தீவிரமான விமர்சனத்திற்கும் தகுதியற்றது. இலங்கைக்கும் துத்துக்குடிக்கும் இடையில் கடல் இல்லை என்று இராசவலி கூறுகிறது. துாத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்படுகை அல்லது கடலின் அடித்தளம் கிழக்கு-மேற்கு திசையில் உள்ள பாத்திமெட்ரிக் வரையறைகளின்படி சில இடங்களில் ஆயிரம் மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. பாத்திமெட்ரிக் வரையறைகள் [Bathymetrical contours] கீழே காட்டப்பட்டுள்ளன. இந்த மகாவம்ச காலத்தில், இரண்டாயிரம் ஆண்டளவில், அது நிலமாக இருக்க சாத்தியமில்லை. மன்னார் (தலை-மன்னார் அல்ல) மற்றும் கிழக்கு-மேற்கு திசையில் இந்தியாவை இணைக்கும் கோட்டிற்கு வடக்கே உள்ள கடற்படுகை அல்லது கடலின் அடித்தளம் கோட்டின் தெற்கே உள்ள கடற்படுகை அல்லது கடலின் அடித்தளத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது. கடற்படுகை அல்லது கடலின் அடித்தளம் அந்த கோட்டின் வடக்கே சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 மீ முதல் 25 மீ வரை இருக்கலாம், மேலும் கடலின் அடிப்பகுதி அந்த கோட்டின் தெற்கே மிகவும் ஆழமாக இருக்கும். கடந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குள் கடல் மட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது, இருப்பினும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த, கடந்த பனிப்பாறை காலத்தில் கடல் மட்டம் சுமார் 120 மீட்டர் குறைந்திருக்கலாம்? ஆனால், 1000மீட்டர் முதல் 4000மீட்டர் வரையிலான பாத்திமெட்ரிக் அளவுகளுடன் ஒப்பிடும்போது 120மீ வீழ்ச்சி அற்பமானது ஆகும். Part: 12 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is Lanka have blood connection with the Buddha?' The Buddha’s father Suddhodana had four brothers as per the Dipavamsa and the Mahavamsa, but two younger brothers as per the Rajavaliya. The younger brother was Amitodana and he had a son Pandu. He belonged to the Buddha’s clan and that is why he is called Sakka prince Pandu. He had seven princes and one princess called Kaccana (Bhaddakaccana as per the Mahavamsa). She came to Lanka and Panduvasa made her his queen. Bhaddakaccana’s coming to Lanka is another fabulous story in the Mahavamsa, 8-22 to 23. Panduvasudeva (Panduvasa) came with thirty-two sons of ministers; remember sixteen twins make thirty-two. Coincidentally Kaccana too came with thirty-two young women friends, another happy coincidence. All came without losing ways to Lanka! Thirty-two sons married the thirty-two young women, another smart story telling! As usual, the thirty-two married couples are forgotten forever after the marriage. Six of the Amitodadana’s seven grandchildren also came to Lanka and settled in Lanka as per the Mahavamsa. It is another invented piece to have blood connection with the Buddha; author must be too eager to have Buddha’s blood relations in Lanka. Panduvasudeva’s tale in the Rajavaliya is very much different from that given in the Mahavamsa, but it will not be described here. The incredible mythical story given in the pages 21 and 22 of the Rajavaliya is the flight of fancy of the author, which merits no serious criticism. The Rajavaliya says that there was no sea between Lanka and Tuttukudi. The seabed levels between Tuttukudi and Lanka is greater than one thousand meters at some stretches as per the Bathymetrical contours in the East-West direction. Bathymetric contours are shown below It is impossible to be land in the time of the episode. The seabed levels north of the line connecting Mannar (not Talai-Mannar) and India in the East-West direction is very much different from the levels south of the line. The seabed levels may be around 10m to 25m below the Mean Sea Level to the North of that line, and the seabed levels are much deeper to the South of that line. No change in seabed level would have taken place within the last two thousand five hundred years, though sea level might have dropped by about 120m during the last glacial period, which ended about seven thousand years back. . The 120m drop is insignificant compared to the Bathymetric levels of 1000metre to 4000metre. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 13 தொடரும் / Will Follow படங்கள் இங்கே பதியமுடியாமல் இருக்கிறது. மன்னிக்கவும்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 11 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 11 விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / பண்டுவாச[ன்] அல்லது 'பண்டுவாசுதேவ[ன்]' முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயன், தனக்குப் பின் ஆட்சி செய்ய ஒரு பிள்ளையும் இல்லாமல் இறந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன் தனது சகோதரரான சுமித்தாவிடம் தனது அரசை தொடர்ந்து ஆள இலங்கைக்கு வருமாறு செய்தி அனுப்பினார். என்றாலும் விஜயனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சருமான உபதீச[ன்], விஜயனின் இறப்பின் பின்பாக, தன் பெயரில் உபதிஸ்ஸ நுவர எனும் ஒரு நகரத்தைக் கட்டி, இளவரன் பண்டுவாச[ன்] வரும் வரை சிறிது காலம் ஆட்சியில் இருந்தான். உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் (Saaligrama Brahamin) என ஹம்பிர்ய் வில்லியம் கோட்ரிங்கன் (Humphry William Codrington / 11 November 1876 – 7 November 1942)) எழுதியுள்ள "இலங்கையின் சுருக்கமான வரலாறு [A Short History of Ceylon - 1926]" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புத்தமதம் அப்பொழுது இலங்கையில் இல்லை என்பதும் வெளிப்படையாகத் இதன் மூலம் தெரிகிறது. அப்படி என்றால் புத்தரின் இலங்கை வருகை, அதன் நோக்கம் மற்றும் புத்த சமயம் பரப்பவென புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயன் எல்லாம் என்னவாயிற்று? மகாவம்சத்தின்படி சுமித்தாவின் இளைய மகன் பண்டுவாசுதேவா இலங்கைக்கு, அந்த பொறுப்பை ஏற்க வந்தான். எனவே, இவன் இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் விஜயனின் தாமிரபரணி இராச்சியத்திலிருந்து வடக்கே ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில், தற்கால மன்னார் மாவட்டத்தில், உபதீசனால் அமைக்கப்பட்டு இருந்த, உபதீச நுவாரா (Upatissa Nuwara) என்ற இடத்தில் இராச்சியம் அமைத்து, (இதனை விஜிதபுரம் என்றும் அழைப்பர்) அதன் மன்னரானார். ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை 'பண்டுவாச' என்று பெயரிடுகிறது. மேலும் விஜயனுடன் இவன், எவ்வாறு தொடர்பு கொண்டவன் என்று எந்த குறிப்பும் பதியாததால், இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் இன்று வாதிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது 'வாசி' யின் திரிப்பாகும், எனவே 'பாண்டியவாசி' என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality]. கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான். இவன் 'பாண்டியவாசி' என்பது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்? கொஞ்சம் நடு நிலையாகச் சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான். இராணி பாண்டிய நாட்டைச் சேர்ந்தவள் என்பதால், அவளின் பரிந்துரையும் அங்கு இருந்து இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம். மேலும் இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். இதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான். Part: 11 / The important narrative about the consequent kings and the related affairs / 'Panduvasudeva' Vijaya ruled for thirty- eight years and died without any son to rule after him. He sent a message to his brother Sumitta prior to his death to come to take over his kingdom. Panduvasa came as per the Dipavamsa (Panduvasudeva as per the Mahavamsa). How Panduvasa is related to Vijaya is not given in the Dipavamsa. Panduvasudeva is the youngest son of Sumitta, the brother of Vijaya as per the Mahavamsa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 12 தொடரும் / Will Follow
-
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”
நன்றிகள் எல்லோருக்கும் !!
-
"பத்து வயதில் பிரகாசிக்கும் எங்கள் நட்சத்திரம், திரெனுக்கு" [18 / 07/ 2025]
"பத்து வயதில் பிரகாசிக்கும் எங்கள் நட்சத்திரம், திரெனுக்கு" [18 / 07/ 2025] பத்து அகவையில் காலெடுத்து வைப்பவனே பக்குவமாய் பழகும் பண்பாட்டு நட்சத்திரமே பரந்த இங்கிலாந்தில் பிறந்த திரனே [Dhiran] பந்தாடும் அழகில் பரவசம் அடைகிறேனே! ஆர்சனல் வீரன்போல் ஆட்டத்தில் ஆடுபவனே ஆர்வமாய் பாய்ந்து தடுக்கும் புலியே ஆகாயத்தை ஒளிரவைக்கு மைக்கல் ஜாக்சனே ஆச்சரியம் கொள்கிறேன் உன் திறமையிலே! இனிய தம்பிகள் நிலன் மற்றும் ஆரினுடன் இரவியின் மூன்று குதிரைகளாக பயணிப்பவனே இன்றும் என்றும் பெற்றோரின் ஆசிகளுடன் இல்லமும் நாடும் மகிழ வாழ்கவாழ்கவே! தேர்வுகள் கடந்து வலிமைகளை பெற்று தேசத்தின் வீரனாய் எழுந்து வருபவனே தேவதை ஆன அம்மம்மாவின் வாழ்த்து தேய்ந்து போகாமல் உன்னை வழிநடத்துமே! மேலே இருந்து அம்மம்மா பெருமையடைய மேடு பள்ளம் தாத்தா வழிகாட்டிட மேன்மை தங்கிய எங்கள் பேரனுக்கு மேள தாளத்துடன் அகவைதின வாழ்த்துக்கள்! நடனக் கலைஞனே விளையாட்டு வீரனே நன்மதிப்புகள் பாரினில் ஓங்கி ஒளிர நயவஞ்சகர்கள் தூர விலகிப் போக நம்பிக்கை ஒளிர பத்துதீபம் எரியட்டுமே! என்றென்றும் அன்புடன் உங்கள் தாத்தா கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
-
"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)
"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது. 1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்! அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது வரை முறையான விசாரணை அல்லது அதற்கு ஏற்ற நீதி இல்லை. எதோ ஆரம்பித்தார்கள். தீர்ப்பளித்தார்கள். கிடங்கில் போட்டார்கள். புண்ணிய புத்த பூமியில் புத்தரின் முறையான போதனையைக் கேட்க ஒருவரும் இல்லை. அங்கொன்று இங்கொன்றாக பலர் பரந்து இருக்கிறார்கள். ஆனால், மௌனமாக? ஏன் புத்த சிலைகள் கூட ஆக்கிரமிப்பில் தான் ஈடுபடுகிறது! அவர்களின் உடல்கள் செம்மணியில்த் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன. இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் ! இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது! அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே! அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர். காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட. அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள். என் இனமே என் சனமே … நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள். ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப் பையும் சத்தமில்லா சாட்சிகள்! சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும். செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்! அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்! நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
'கடைக் கண்ணாலே இரசித்தேனே'
'கடைக் கண்ணாலே இரசித்தேனே' கடைக் கண்ணாலே இரசித்தேனே அன்று கடைத் தெருவிலே ஒன்றாய்ப் போனோமே! இடைவெளி விட்டு நடந்து சென்றாலும் இடையை வருட உன்கை மறக்கவில்லையே! பொதுநூலகம் புத்தகம் மட்டுமா தந்தது பொறுமையாக அழகைப் பார்க்கவும் விட்டதே! பொறாமை கொண்டேன் உன்னைக் கண்டு பொங்கி எழுந்ததே காதலும் காமமும்! பொய்யிலே பிறந்த கவிதாயினி நானல்ல மெய்யிலே கவர்ந்த காந்தை இவளே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 10 / 'மே பௌர்ணமி நாளில் விஜயன் இலங்கையில் தரையிறங்க முடியுமா?' புத்தர் ஒரு முழு மதி நாளில் மே மாதம் இறந்ததாக நம்பப் படுகிறது. வடகிழக்கு பருவமழை [The Northeast monsoon] நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி காலங்களில் பொதுவாக செயலில் இருக்கும். ஆனால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இலங்கையை நோக்கி பயணிக்க துணையாக எந்த பருவக்காற்றும் [Monsoonal wind] இருக்காது. எனவே கப்பல் காற்று துணை இல்லாமல், சும்மா கடலில் மிதக்கத் தான் விடமுடியும் [as the ship was left to drift], அப்படி என்றால், நீரிழப்பு மற்றும் பட்டினியால் [de-hydration and starvation] அவர்கள் இறக்கவேண்டிய சூழ்நிலைதான் இருந்து இருக்கும். திரும்பியும் இந்தியாவின் மேற்கு கடற்கரையை உடனடியாக அணுகவும் முடியாது. காரணம் அவர்கள் தென்மேற்கு பருவக்காற்றுக்கு [South-West Monsoonal wind] காத்திருக்க வேண்டும். பருவக் காற்று ஒரு ஆண்டு நிகழ்வாகும். [Monsoonal wind changes are annual events] தென்மேற்கு பருவக்காற்று அவர்களை மீண்டும், ஆரம்பித்த இடத்துக்கே [இந்தியா] கொண்டு போகும். எனவே, விஜயன் புத்தர் பரிநிர்வாணம் (பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும் / parinirvana) அடைந்த மே மாத பௌர்ணமி தினத்தில் கட்டாயம் இலங்கையை அடைந்து இருக்க முடியாது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படுகிறது. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு. எவரின் நம்பிக்கையையும் நான் திறனாய்வு செய்யவில்லை, ஆனால் அறிவியல் ரீதியாக அதற்கான உண்மையான வாய்ப்பு உண்டா இல்லையா என்று மட்டும் அலசி ஆராய்ந்தேன்! தீபவம்சத்தின் 17 ஆவது பாடத்தின் தொடக்கத்தில், இலங்கை ஒரு நீல் சதுர வடிவானது [rectangular shape] என்று குறிப்பிடுகிறது. அதாவது, இலங்கை எனும் சிறந்த தீவு முப்பத்திரண்டு யோசனை நீளமும், பதினெட்டு யோசனை அகலமும் கொண்டது, அதன் சுற்றுப்பாதை நூறு யோசனை; அது கடலாலும், ஒரு பெரிய புதையல் சுரங்கத்தாலும் சூழப்பட்டுள்ளது. அது ஆறுகள், ஏரிகள், மலைகள் மற்றும் காடுகளைக் கொண்டுள்ளது என்கிறது. இங்கு யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப் பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்து வேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்தின் வடக்கு பக்கத்தைப் பற்றி தெரியாது அல்லது அதைப் பற்றி அறிவு இல்லை என்று கருதலாம். இணைக்கப்பட்ட இலங்கை படத்தில், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் வடக்கு பக்கம் குறுகிப்போவதை காண்க. அதை, கீழே உள்ள இலங்கை வரைபடத்தில், தடித்த கோட்டில் குறித்து காட்டப்பட்டுள்ளது. இதுவரை, விஜயனின் வருகை, அவரது தோழர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவை விவாதிக்கப்பட்டது. விஜயனைத் தொடர்ந்து, விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் தொடரும். Part: 10 / 'Can Vijaya land in Sri Lanka on May full moon day?' The Buddha died on a full moon day in the month of May. The Northeast monsoon is active in the months of November, December, January and February, see the Lanka map given below. There is no prevailing Monsoonal wind during March, April and May to assist them towards Lanka, and they would have died of de-hydration and starvation, as the ship was left to drift. There is no way that they could have turned around to reach the Western coast of India, to the ports of Suppara and Bharukaccha, as they had to wait for the South-West Monsoonal wind. Monsoonal wind changes are annual events. The South-West Monsoon would have brought them back to the place where they started. The story of Vijaya is a hoax and it is invented by the monks for their wellbeing, and to erase the trace of the aboriginal inhabitants of Lanka. The starting verse of the chapter 17 of the Dipavamsa describes Lanka as rectangular shape country. The author or the authors of the Dipavamsa never had the knowledge of the country North of Anuradhapura. See the Lanka map below with the narrowing landscape North of Anuradhapura with thicker outline. Arrival of Vijaya, his companions, and its historical relevance have been discussed so far, and the narrative about the consequent kings and the related affairs will follow. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 11 தொடரும் / Will Follow
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 09 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 09 / 'தம்பபாணி எங்கே ?, விஜயன் எப்போது இலங்கையில் இறங்கினான்? குவேனி யார்?' இலங்கையில் வரலாற்றில், தம்பபாணி என்று அழைக்கப்படும் கடற்கரை நகரம் ஒன்றும் இல்லை. இருப்பினும் இந்தியாவில், தமிழ் நாட்டில், எதிர் கடற்கரையில், தாமரபரணி என்ற நதி இருந்து உள்ளது. தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டின்படி புத்தர் இறந்த நாளில் விஜயனும் அவரது தோழர்களும் இலங்கையில் தரையிறங்கினர். இருப்பினும், இராசாவலியத்தின்படி, புத்தர் இறந்த ஏழாவது நாளில் அவர்கள் இலக்கில்லாமல் அல்லது தெளிவான திசையின்றி நகரத் தொடங்கி, ஒரு வியாழன் அன்று, புத்தர் இறந்த சிறிது சிறிது காலம் கழித்து, இலங்கையில் தரையிறங்கினார்கள். இராசாவலியவில் கொடுக்கப்பட்டுள்ள விவரம், வான சாஸ்திரம் [வானியல்] ரீதியாக விஜயன் தரையிறங்கும் நாளை ஒருவேளை கணிக்க உதவலாம். அப்படி இல்லை என்றால், விஜயன் என்றுமே தரையிறங்கவில்லை. முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேனியும் [குவேணியும் / குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது. மேலும் இராசாவலியின்படி, குவேனிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தனவென்றும், அவள் விஜயனைப் பார்த்த நொடியில் ஒன்று மறைந்து, சாதாரண பெண் போல் இரு மார்பகங்களுடன் தோன்றினால் என்கிறது. இன்னும் ஒரு அமானுஷ்ய நிகழ்வைக் [இயல்பான வாழ்வில் காணாத விடயங்கள்] இங்கு காண்கிறோம். இது திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் மீனாட்சி தேவியிலிருந்து நகலெடுக்கப்பட்டதாக இருக்கலாம்? மீனாட்சி பிறப்பில் மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாகவும்; தன்னை மணம் முடிப்பவரை பார்த்தவுடன் நடுவில் இருக்கும் மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் என்ற நிலையில், கயிலை மலையில் சிவன் மீனாட்சியை கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்தது என இந்து புராணம் கூறுகிறது. மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க சந்தர்ப்பம் இருக்கிறது என்று தோன்றுகிறது? மேலும் துரத்தப்பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப்பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளப் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது குழந்தை பிறந்து இருந்தால், அந்த வாரிசுகளை, கண்டுபிடித்து கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது? குரூரமான தர்க்கம் என்னவென்றால், துறவி ஆசிரியர்கள் தங்கள் பரம்பரையில், பூர்வீக இரத்தத்தை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை என்பதே, அதனாலதான், குவேனியின் இரண்டு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமல், முற்றாக மறைந்து போகிறார்கள். Part: 09 / where is Tambapanni ?, When Vijaya landed ? Who is Kuveni? It is strange to note that there is no coastal town called Tambapanni in Lanka, however there is a river called Tamaraparani on the opposite coast in the Tamil country in India. Vijaya and his companions landed in Lanka on the day the Buddha died as per both the Dipavamsa and the Mahavamsa. As per the Rajavaliya, however, they were set to drift on the seventh day after the death of the Buddha, and they landed on a Thursday, must be after quite some time of the Buddha’s death. The detail given in the Rajavaliya may help to pin point the arrival of Vijaya to Lanka astronomically, if at all he ever landed! Vijaya did not marry as per the Dipavamsa, but he married twice as per the Mahavamsa and the Rajavaliya. He sent away the first wife, Kuvanna (Kuveni in the Rajavaliya), and the kids from her to marry a royal princess from the Pandya kingdom. Vijaya and Kuvanna must be of human species to have offspring. If two belong to different species then there will not be any offspring from their union. Incidentally, Kuveni had three breasts and one disappeared the moment she saw Vijaya as per the Rajavaliya, another supernormal happening. Incidentally, Vijaya and his companions must have married before their deportation too, as kids were put on one ship and the wives were put on another ship and landed at Naggadipa and Mahilaratrha (Mahiladipaka as per the Mahavamsa) respectively. Vijaya must in fact, may have married thrice, once in his native place and twice in Lanka. They were all forgotten thereafter, a usual practice in the chronicles. Kuveni left with her two kids when Vijaya asked her to leave so that he could marry the Tamil princess from the Pandya kingdom, and her relatives promptly murdered her. Her two kids, the son and the daughter escaped to the hill country, married each other; another incestuous marriage typical of the Lanka chronicles. The two Lanka born kids of Vijaya have simply disappeared into oblivion. The cruel logic is that the monkish authors did not want to acknowledge the native blood in their lineage and simply made them disappear in their story, rather in the chronicles. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 10 தொடரும் / Will Follow
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 08 / 'தீபவம்சம், மகாவம்சம் இரண்டிலும் சிங்கபாகு கதையின் வேறுபாடு' சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தை கொன்றதாக தீபவம்சம் கூறவில்லை. அதேவேளை, சிங்கபாகு தன் சகோதரியை தகாத முறையில் திருமணம் செய்து கொண்டார் என்றும் வெளிப்படையாகக் கூறவில்லை. மேலும் விஜயனுக்கு எழுநூறு கூட்டாளிகள் இருந்ததாகவும் கூறவில்லை. தீபவம்சத்தின்படி, 9-10 மற்றும் 9-16, எழுநூறு பேரில் விஜயன், அவனது வேலையாட்கள், அவனது உறவுகள் மற்றும் கூலிக்கு அமர்த்திய வேலையாட்களும் அடங்குவர் என்கிறது. ஆனால், சிங்கபாகு தனது சிங்க தந்தையைக் கொன்றதாகவும், எந்த வருத்தமும் இல்லாமல் தனது சிங்கத் தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை வெகுமதிக்காக மன்னரிடம் வழங்கினார் என்றும் மகாவம்சம் வெளிப்படையாகக் கூறுகிறது. விஜயனுக்கு, விஜயனைப் போலவே தீய குணங்கள் கொண்ட, அவனைப் பின்பற்றும் எழுநூறு பேர் இருந்தனர் என்றும், தீபவம்சத்தில் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் அனைவரும் வேலையாட்களோ, கூலிக்கு அமர்த்திய வேலையாட்களோ அல்ல என்றும் அது கூறுகிறது. விஜயன் பிறந்த அதே நாளில் இந்த எழுநூறு ஆண்களும் பிறந்ததாக இராசாவலிய வெளிப்படையாகக் கூறுகிறது. காலப்போக்கில் ஒரு கதை எப்படி திரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் இங்கு பார்க்கலாம். தீபவம்சத்தின்படி, விஜயனும் அவனது ஆட்களும் சென்ற கப்பல், வழி தவறி, முதலில் சுபாரா [Suppara] அடைந்தது, அங்கே, கப்பலில் இருந்த அனைவரையும் சுபாரா மக்கள் விருந்தோம்பல் செய்தனர் என அறிகிறோம். எவ்வாறாயினும், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் காட்டுமிராண்டித் தனமாக அங்கும் செயல்பட்டனர். எனவே விருந்தோம்பல் வரவேற்பு விரைவில் விரோதமாக மாறியது. அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி, மீண்டும் பாருகாச்சாவில் [Bharukaccha] இறங்கினர். அவர்கள் மீண்டும் தவறாக நடந்து கொண்டதால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப் பட்டனர். சுபாரா மற்றும் பருகச்சா ஆகியவை இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள பண்டைய வர்த்தக துறைமுகங்கள் ஆகும். மேலும் அசோகரின் ஆணைகள் இந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. என்றாலும் மகாவம்சம் பருகச்சாவில் இரண்டாவது தரையிறக்கத்தைத் முற்றாகத் தவிர்க்கிறது. மகாவம்சத்தின் 6 ஆம் அத்தியாயம் விஜயனின் பிறப்பு மற்றும் அவரது வருகையைப் பற்றி பேசுகிறது. மகாவம்சத்தின் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமான கதை தீபவம்சத்தில் இல்லை. மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிக்கிறார். மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை விட, விஜயனின் பிறப்பு மற்றும் திருமணம் பற்றிய விபரங்கள், இன்னும் விரிவாக இராசாவலிய கொண்டுள்ளது. விஜயனும் அவனது கூட்டாளிகளும் வேறு எந்த இடத்திலும் இறங்காமல் நேராக இராசாவலியின்படி இலங்கைக்கு நகர்ந்து, மற்ற இரண்டு நூல்களுக்கு மாறாக, தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota] இறங்கினர். தம்மன்னா-தோட்டா இருந்த இடத்தில் எதுவுமே இல்லை! இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் செப்பு நிறமுடைய மண் அல்ல, ஆனால் சில இடங்களில் சுத்தம் செய்யப்பட்ட மணல் மண்ணாகும். மற்ற இடங்களில் சுத்தமில்லாத மணல் மண்ணாகும். அவர்கள் இறங்கிய இடம் செப்பு நிற மண் என்றும் அந்த இடம் தம்பபாணி [Tambapaṇṇi (copper-palmed)] என்றும் அழைக்கப்பட்டது என்று தீபவம்சம் 9 - 30 கூறுகிறது. அதாவது, தரையின் சிவப்பு நிற தூசி அவர்களின் கைகள் முழுவதையும் மூடியது; அதனால் அந்த இடம் தம்பபண்ணி (செப்பு நிற பூமி / copper coloured earth ) என்று அழைக்கப்பட்டது. அவர்கள் தம்பபாணி என்ற பகுதியில் இறங்கியதாக மகாவம்சம் 6 - 47 கூறுகிறது. அதாவது விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபாணி என்றழைக்கப்படும் பகுதியில் கரையேறினன். தகாகதர் [Tathagata] நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட்சங்களிடையே [two twinlike sala-trees] அமர்ந்த அதே நாளில் இது நடந்தது என்கிறது சுபாரா (சோபரா) மற்றும் பாருகாச்சா (Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha)) ஆகிய இரண்டு இடங்களும் அசோகரின் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தில் கீழே காட்டப்பட்டுள்ளது. Part 08 / 'How Sihabahu story in both Dipavamsa & Mahavamsa varies?' The Dipavamsa does not say that Sihabahu killed his lion father. It also does not explicitly say that Sihabahu incestuously married his sister. It also does not say that Vijaya had seven hundred companions. As per the Dipavamsa, 9-10 and 9-16, the seven hundred included Vijaya, his manservants, his relations and hired workmen. The Mahavamsa explicitly says that Sihabahu killed his lion father, and without any remorse presented the severed head of his lion-father to the king for a reward. It also says that Vijaya had seven hundred followers of same character as of Vijaya, and not servants or workmen as stated in the Dipavamsa. The Rajavaliya explicitly says that seven hundred boys were born on the day Vijaya was born. One can see how a story is twisted and turned on and on with the passage of time. The ship on which Vijaya and his men were forced to drift lost her way and bearings reached Suppara first as per Dipavamsa and all in the ship were hospitably welcome by the people of Suppara. Vijay and his companions, however, acted barbarously and the hospitable reception soon turned into hostile reaction. They fled the place, and landed again at Bharukaccha. They misbehaved again and had to leave the place. Suppara and Bharukaccha are ancient trading ports on the western coast of India, in Maharashtra and Gujarat, and Asoka’s edicts are found nearby these places. The Mahavamsa omitted the second landing at Bharukaccha. The chapter 6 of the Mahavamsa deals with the Vijaya’s birth and his arrival. The descriptive narrative given in this chapter of the Mahavamsa is not in the Dipavamsa. Mahanama, author of the Mahavamsa, fabricated a story for the serene joy and emotion of the pious. The Rajavaliya also consist of narrative of Vijaya’s birth and marriage more elaborate than given in the Mahavamsa. Vijaya and his companions drifted straight to Lanka as per the Rajavaliya without landing at any other places, contrary to the other two chronicles, and landed at Tammantota. There is no clue where Tammantota was! Seacoasts around Lanka are not copper coloured soils, but are sandy soils washed clean at some places and not clean at the rest of the places. The Dipavamsa claims that the place they landed was copper coloured soils and the place was called Tambapanni, 9 - 30. The Mahavamsa says that they landed at a region called Tambapanni 6 - 47. See the map below showing the extent of Asoka’s empire in which Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha) are shown. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 09 தொடரும் / Will Follow
-
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!” செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 07 "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English] [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 07 / 'பண்டைய கபிலவஸ்து நகரின் சாக்கியர்கள்' கௌதம புத்தரின் பிறப்பு காரணமாக இந்த 'சாக்கியர்கள்' என்ற பழங்குடி நன்கு அறியப்படுகிறது. "சாக்கியர் (Shakya) " என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல் அநேகமாக சமஸ்கிருத மூலமான śak (शक् / சாக்) (śaknoti (शक्नोति), அல்லது śakyati (शक्यति) அல்லது śakyate (शक्यते)) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது ''முடிந்தவராக, தகுதியானவராக, சாத்தியமானவராக அல்லது நடைமுறைப்படுத்தக் கூடியவராக [‘to be able, worthy, possible or practicable’]'' என்று பொருள்படும். உதாரணமாக, சமசுகிருதத்தில் சாக்கியம் என்பது ஆற்றலுடையவர் என்று பொருள் படுகிறது. பிராமணர்களை விட சத்திரியர்களின் [Kshatriyas] மேன்மை குறித்து புத்தர் பிராமண அம்பத்தருடன் விவாதித்தபோது, இவர்களுக்கான ‘சாக்கியர்’ [‘Shakya’] என்ற பெயரின் தோற்றம், அம்பத்த சுத்தத்தில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்பத்தசுத்த, சாதியின் கொள்கைகளையும் பிராமணர்களின் பாசாங்குகளையும் கண்டிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. பழங்குடியினரின் மரபுகளின்படி, ஒக்காக்கா மன்னர் [King Okkaka], அவருக்கு விருப்பமான மற்ற ராணியின் மகன் ஜந்துகுமாருக்கு [Jantukumara] அரச அதிகாரத்தை வழங்கும் பொருட்டு, முதல் ராணி பெற்ற தனது ஒன்பது குழந்தைகளை நாட்டைவிட்டு வெளியேற்றினார். வெளியேற்றப்பட்ட குழந்தைகளில் பிரியா, சுப்ரியா, ஆனந்தா, விஜிதா, விஜிதாசேனா ஆகிய ஐந்து இளவரசிகளும் உக்கமுக, கரண்டு, ஹஸ்தினிகா, சினிசுரா ஆகிய நான்கு இளவரசர்களும் [five princesses namely Priya, Supriya, Ananda, Vijitha, Vijithasena and four princes namely Ukkamukha, Karandu, Hastinika and Sinisura.] அடங்குவர். அவர்கள் இமயமலை நோக்கிச் சென்று கபில முனிவர் தானமாக வழங்கிய நிலத்தில் கபில்வஸ்து என்ற கிராமத்தை நிறுவினர். அவர்கள் தங்களை சத்திரியர்களின் உயர்ந்த இனமாகக் கருதியதால், நான்கு இளவரசர்களும் இளவரசிகளும் தங்கள் மூத்த சகோதரி பிரியாவுக்கு தாய் பட்டத்தை அளித்து அவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இந்த எட்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் சந்ததியினர், பண்டைய இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில், சாக்கியர் என்று அழைக்கப்பட்டனர் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. எனினும் இப்படியான புராணக்கதைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வேத காலத்தின் பிற்பகுதியில் கபிலவஸ்து பகுதியில் குடியேறிய இந்தோ - ஆரியப் பழங்குடியினரை, வரலாற்றாசிரியர்கள் சத்திரியர் என கண்டறிந்தனர். புத்தரின் தாய், தேவ்தா கிராமத்தைச் [village Devdah] சேர்ந்த சத்திரியர் குலத்தைச் சேர்ந்தவர். இளவரசர் சித்தார்த்தாவை மணந்த இளவரசி யசோதரா கூட தேவ்தா கிராமத்தின் சத்திரியர் குலத்தைச் சேர்ந்தவர் ஆகும். சகோதர சகோதரிகளால் தாய் அந்தஸ்தைப் பெற்ற மூத்த சகோதரி பிரியா அல்லது சீதா தொழுநோயால் பாதிக்கப்பட்டார். சத்திரிய சகோதரர்கள் அவளைத் தங்கள் பிரதேசத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று, அவள் தங்குவதற்கு ஒரு பெரிய நிலத்தடி அறையைத் தோண்டி, அதில் நிறைய உணவு மற்றும் தண்ணீருடன் தங்க வைத்தனர். இதற்கிடையில், பெனாரஸ் [காசி அல்லது வாரணாசி] மன்னர் ராமருக்கும் தொழுநோய் ஏற்பட்டது. தன் மகனுக்கு அதிகாரத்தை கொடுத்து விட்டு காட்டிற்குச் சென்றான். காட்டு விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கோலா மரத்தின் துளைக்குள் [hollow of a Kola tree] வாழத் தொடங்கினார். ஒரு நாள், பிரியாவின் குழிக்குள் புலி நுழைய முயன்றபோது, அவள் அலறும் சத்தத்தை ராமர் கேட்டார். மறுநாள் காலை அந்த இடத்தைப் பார்க்கச் சென்ற ராமர், அதற்குள் பிரியாவைக் கண்டார். அவளைப் பற்றி விசாரித்தபோது, அவள் முழு கதையையும் சொன்னாள். ராமர் அவளைக் குணப்படுத்த முன்வந்தபோது, அவள் தன் குடும்பம், சாதி மற்றும் இனத்தை இழிவுபடுத்துவதை விட, இறப்பதை விரும்புவதாகக் கூறி மறுத்தாள். என்றாலும் ராமர் தன்னை பெனாரஸின் சத்திரிய மன்னர் என்று அறிமுகப்படுத்தினார். ராமரின் பரம்பரையை அறிந்த பிரியா ஒன்றாக வாழ சம்மதித்தார். அவள் மெதுவாக குணமடைந்தாள். இதற்கிடையில் 32 மகன்களைப் பெற்றெடுத்தாள் என்கிறது இந்தக் கதை. Part: 07 / 'Shakyas of Kapilvastu' The tribe is well known due to the birth of Gautam Buddha in the same. The etymology of the word “Shakya” is probably related to the Sanskrit word Sak which means ‘to be able, worthy, possible or practicable’. The origin of ‘Shakya’ name for them is well recorded in Ambattha Sutta when Buddha debated with Brahmin Ambattha on the superiority of Kshatriyas over Brahmins. According to Buddha, as per traditions prevalent in the tribe, King Okkaka banished his nine children from first queen to give royal power to Jantukumara, son of his favorite other queen. The expelled children included five princesses namely Priya, Supriya, Ananda, Vijitha, Vijithasena and four princes namely Ukkamukha, Karandu, Hastinika and Sinisura. They went towards Himalaya and founded the village of Kapilvastu on the land donated by sage Kapil. As they considered themselves superior races of Kshatriya, the four princes and princesses married among them after giving the title of mother to their elder sister Priya. Then onwards, eight children and their descendants were known as Sakya in the social and political circles of ancient India. Keeping legends aside, historians have traced Shakyas as a warrior Indo-Aryan tribe who migrated and settled in the region of Kapilvastu in the late Vedic period. The mother of Buddha belonged to the Shakya clan of village Devdah. Even princesses Yashodhara, married to prince Siddhartha, belonged to the Shakya clan of village Devdah. The elder sister, Priya or Sita, who was given the status of mother by rest brothers and sisters contracted leprosy. The Shakya brothers then took her out of their territory and dig a big underground room for her stay with lots of food and water stored in it. Meanwhile, King Rama of Benares also contracted leprosy. He abdicated the power to his son and left for the forest. He started living in the hollow of a Kola tree to protect himself from the wild things. One day, he heard the screams of Priya when a tiger was trying to enter her pit. Next morning, he went to see the location and found Priya inside it. When he enquired about her, she told the entire story. When Rama offered to cure her, she refused saying that she will prefer to die than to disgrace her family, caste and race. Rama then introduced himself as Kshatriya King of Benares who started living in the forest due to leprosy. Knowing Rama’s lineage, Priya agreed to live together. She was slowly cured and meanwhile gave birth to 32 sons நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 08 தொடரும் / Will Follow
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 06 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 06 / 'விஜயாவின் தந்தை சிங்கபாகு (சிங்க = சிங்கம், பாகு = கை) யார்?' விஜயனின் தந்தை சிங்கபாகுவின்பிறப்பு உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. சிங்கபாகுவும் அவரது சகோதரி சிங்ஹசீவலியும் (சீவாலி / சிங்கவல்லி) சிங்கத்திற்கும் மனித இளவரசிக்கும் பிறந்தவர்கள். சிங்கம் மற்றும் மனிதர்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை பொருந்தவில்லை. ஆகவே, எந்த சந்ததியும் இருந்திருக்க முடியாது. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே தகாத திருமணம் மூலம், அவர்களுக்கு முப்பத்திரண்டு மகன்கள் பிறந்ததாக தீபவம்சம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக பிறந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இந்த கதை வடகிழக்கு இந்தியாவில் நடந்தது என்று கூறியிருந்தாலும், இந்தியாவின், அந்தப் பகுதிகளில், இந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை? விஜயா மற்றும் சுமித்தா இரட்டையர்களில் மூத்தவர்கள். மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இப்படியான, காணாமல் போகும் சம்பவங்கள், இந்த நூல்களில் அடிக்கடி நிகழ்கிறது. பதினாறு இரட்டையர்களின் கதை அம்பத்தாவின் புத்த புராணத்திலிருந்து [Buddhist Legend of Ambattha] நகலெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கு, அந்த புராணத்தில், நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகளுக்கு இடையே திருமணங்கள் நடந்தன. ஐந்து சகோதரிகள் இருந்தனர், மூத்தவர் திருமணம் செய்து கொள்ள யாரும் இல்லாமல் இருந்தார். அவள் தொழுநோயால் பாதிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டாள். அதே நேரத்தில் பெனாரஸின் [காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி] மற்றொரு மன்னரான ராமரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் காட்டில் சில இலைகளை சாப்பிட்டு, தொழுநோயை குணப்படுத்தினார். அவ்வேளையில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூத்த சகோதரியை தற்செயலாக அவர் சந்திக்க நேர்ந்தது. தகுந்த இலைகளை உண்ணுமாறு ராமர் அவளுக்கு அறிவுறுத்தியதால், அவளும் நோய் நீங்கினாள். அவர்கள் பின்னர் திருமணம் செய்து பதினாறு இரட்டையர்களைப் பெற்றனர். மேலும், இரண்டு கதைகளும் புத்தர் பழங்குடியினரை விஜயனின் பழங்குடியினருடன் இணைக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதா அல்லது அந்த கதையில் இருந்து பதினாறு இரட்டையர்களைப் பற்றிய நகலெடுக்கப்பட்டதா? எனக்குப் புரியவில்லை. இராசாவலிய இதை விவரிக்கிறது. இராசாவலியின் பக்கங்கள் 10 முதல் 13 வரை பார்க்கவும் [அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு சகோதரிகளில் ஒருவரை மனைவியாகக் கொண்டு, மூத்த சகோதரியைத் தங்கள் தாயாகக் கருதி, அரச அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேற்கூறிய நான்கு இளவரசர்களின் மூத்த சகோதரி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கிடையில், பாரனேஸ்? [city of Baranes?] நகரத்தில் ஆட்சி செய்த மன்னன் ராமன், தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தனது மகனுக்கு அரியணையை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு காட்டில் நுழைந்து, இறக்கத் தீர்மானித்தார். குழிக்குள் ஒரு மனிதனைப் பார்த்து அவர் "நீங்கள் யார்?" என்று கேட்டார். "நான் ஒரு பெண்," என்று பதில் வந்தது, இப்படி கதை தொடர்கிறது.]. மேலும் பண்டைய இலங்கை நாளிதழ்கள் முழுவதிலும் ஒரு கொடூரமான தர்க்கமும் காணப்படுகிறது. அது எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் அல்லது தீயவராக இருந்தாலும், அவர் புத்த மதத்திற்கு மாறிய தருணத்தில் அவர் மகிமைப்படுத்தப்படுவார் என்பதே ஆகும்; முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன. புத்தரின் அனைத்து நினைவுச்சின்னங்களும், இந்த கொடூரமான தர்க்கத்தைக் கேட்டு, அவர்களின் புனித நினைவுச் சின்னங்களுக்கான கொள்கலன்களில் [reliquaries], அழுது நெளிந்து கொண்டிருக்கும் என்று எண்ணுகிறேன்! Part:06 / 'Who is Vijaya’s father, Sinhabahu (Sinha = Lion, Bahu = Arm)?' The birth of Vijaya’s father, Sihabahu, is biologically impossible. Sihabahu and his sister Sihasivali (Sivali) are born to a lion and to a human princess. The number of chromosomes in lion and humans do not match, and there could not have been any offspring, an illogical invention. There is an incestuous marriage between the brother and the sister. The Dipavamsa says they had thirty-two sons, but the Mahavamsa says that they had twins sixteen times. The narration took place North-Eastern India, and there is no mention of these events in that part of India. Vijaya and Sumitta was the eldest of the twins. There is no information about what happened to the rest. This happens very often in the chronicles. The story of sixteen twins must have been copied from the Buddhist Legend of Ambattha. There, in that legend, also incestuous marriages took place between four brothers and four sisters. There were five sisters and the elder one was without any one to marry. She became afflicted with leprosy and she was left in a jungle. At the same time another king of Benares, Rama, was also afflicted with leprosy. He happened to eat some leaves in the jungle, and cured of leprosy. He happened to meet the elder sister who was afflicted similarly with leprosy, a happy coincidence again. Rama advised her to eat the appropriate leaves and she too became cured of the disease. They then married and had sixteen twins, all boys. The incestuous marriage and having sixteen twins seems to be quite regular in the chronicles. Also, both story may be easily guessed that an attempt has been made to link Buddha tribe with the tribe of Vijaya and followers of both sides or just copied? Rajavaliya narrates this, but not as the legend of Ambattha. See the pages 10 to 13 of the Rajavaliya. There is a cruel logic running throughout the Lanka chronicles that however bad or evil one may be, but he would be glorified the moment he converted to the Buddhism; all the sins committed earlier are washed off. All the relics of the Buddha’s must be writhing in their reliquaries on this cruel logic! நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 07 தொடரும் / Will Follow
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 05 / 'அசோகன் என்பவன் யார்? மத்திய இந்தியாவில் உள்ள உஜ்ஜயினிக்கு, தந்தை பிந்துசாரர் ஆட்சியில் இருந்தபோது, பேரரசரின் பிரதிநிதியாக அசோகன் அனுப்பப்பட்டார். அங்கு விதிஷாவில் உள்ளூர் தொழிலதிபரின் அழகான மகள் மகாதேவி சாக்ய குமாரி மீது அசோகன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். அவள் வணிகர் சாதியைச் சேர்ந்தவள். மகிந்த என்ற மகனையும் சங்கமித்தா என்ற மகளையும் பெற்றெடுத்தார். அசோகன், தீபவம்சம் 6 - 22 இன் படி தனது நூறு சகோதரர்களையும், மகாவம்சம் 5 - 20 இன் படி தொண்ணூற்றொன்பது சகோதரர்களையும் அரியணை ஏறுவதற்கான போரில் கொன்றார். என்றாலும் பல வரலாற்று அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். ஒரு சில கொலைகள் ஒருவேளை நடந்து இருக்கலாம்?, ஆனால் நூறு ஆக முடியாது என்கின்றனர். மன்னன் அசோகர் முடிசூடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது; தீபவம்சம் 6-18 பார்க்கவும். இது அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு 13 உடன் நேரடியாக முரண்படுகிறது. அந்த ஆணையில் : 'தேவர்களின் பிரியமான பியாதாசி [பியதசி / Piyadasi.], முடிசூட்டுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்தை வென்றார் என்று வரலாற்று குறிப்பு பதியப்பட்டுள்ளது. [It reads, in part: “Beloved-of-the-Gods, King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. One hundred and fifty thousand were deported, one hundred thousand were killed and many more died (from other causes)]. கலிங்கத்தை வெற்றி பெற்ற பிறகு, கடவுளுக்குப் பிரியமான அசோகன், தம்மத்தின் [தம்மம் என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கும் ஒரு பௌத்தக் கோட்பாடு] மீது வலுவான விருப்பத்தை உணர்ந்தார். முடிசூட்டப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான், தம்மத்தை நோக்கி உணர ஆரம்பித்ததாக அசோகன், தானே கூறுகிறார். இருப்பினும், தீபவம்சம், 6-18, முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என்று, அசோகனின் கூற்றுக்கு மாறாக, கூறுகிறது? அவருடைய பிள்ளைகளான மகிந்தவும் சங்கமித்தமும் கூட கற்பனையான பாத்திரங்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். மொகாலிபுத்த தீசர் கூட ஒரு கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரமாக இருக்க வேண்டும்?; பிரம்மாவின் உலகத்தில் இருந்து எவரும் வந்திருக்க முடியாது, அப்படி ஏதாவது ஒரு உலகம் இருந்தால் தானே! மகிந்த மற்றும் சங்கமித்தா, அவர்களின் தாய் தேவி மற்றும் மொகாலிபுத்த தீசர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் அவர்கள் பிறந்த இடத்தில் உள்ள இந்திய ஆதாரங்களில், இதுவரை ஒன்றுமே இல்லை. அசோக மன்னன் பாறைகள் மற்றும் தூண்கள் மீதான தனது ஆணைகளுக்கு மிகவும் பிரபலமானவர், ஆனால் இந்த மூன்று நூல்களிலும் இந்த ஆணைகள் குறித்து ஒன்றுமே இல்லை. கலிங்கப் போரின் கொலைகளும் பயங்கரமான விளைவுகளும் அவரது வாழ்விலும் ஆட்சியிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கலிங்கர்கள் அவருடைய இரத்த உறவுகள் இல்லாத போதிலும், அவரது மன வருத்தம் பதின்மூன்றாவது பாறை ஆணையில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், அசோகன் தனது நூறு சகோதரர்களைக் கொன்றதற்கு கட்டாயம் அவர் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டாரா? என்று உங்களை கேட்கத் தோன்றுகிறது. Part: 05 / 'Who is Asoka?' The Emperor Asoka married a woman of no royal blood, Devi, when he was in Ujjain as sub king; she belonged to merchant caste. She gave birth to a son Mahinda and a daughter Sanghamitta. Asoka, as per the chronicles, murdered his one hundred brothers, as per the Dipavamsa 6 – 22, and ninety-nine brothers as per the Mahavamsa 5 - 20, to ascend the throne. Many scholars dispute this. A few killings would have taken place, but could not be hundred. It is claimed that the King Asoka converted to Buddhism three years after his coronation; see Dipavamsa 6-18. This is in direct conflict with the Asoka’s Major Rock Edict 13. It is stated in that Edict: ‘Beloved of the Gods King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. After the Kalingas had been conquered, Beloved of the Gods came to feel strong inclination towards the Dhamma. Asoka says that he started feeling towards Dhamma eight years after his coronation, however, the Dipavamsa, 6-18, states that it was three years after the coronation. Many scholars believe that his children Mahinda and Sanghamitta are fictitious characters. Even Moggaliputta Tissa too must be an invented character; no one could have descended from Brahma’s world, if at all there is any such world! There are no references to Mahinda and Sanghamitta, their mother Devi and Moggaliputta Tissa in the Indian sources in their birthplace. The king Asoka is very famous for his edicts on rocks and pillars, but all the three chronicles are silent on these edicts. The killings and the terrible consequence of the Kalinga war is a watershed event in his life and reign. The Kalingas were not his blood relations. His remorse is etched on the Thirteenth Rock Edict, which is still being heard by many. Would not Asoka have expressed remorse of his previous killing of his one hundred brothers? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 06 தொடரும் / Will Follow
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 04 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 04 / 'இந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் மூன்று பௌத்த சபைகள் யாவை?' இந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் மூன்று புத்த சபைகள் பற்றிய விவரங்கள் இங்கு கூறப்பட்டு உள்ளன. முதல் சபையின் விவாதம் ஏழு மாதங்கள் நீடித்தது. இரண்டாவது சபையில் எட்டு மாதங்கள் விவாதம் நடந்தது. மூன்றாவது சபை ஒன்பது மாதங்கள் நீடித்தது; தீபவம்சத்தின் 5-5, 5-29 மற்றும் 7-59 ஐப் பார்க்கவும். சபைகளின் காலங்கள் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது மாதங்கள் என்ற ஒரு நேர்த்தியான ஏறுவரிசையில் உள்ளன என்று ஒருவர் ஆச்சரியப்படலாம்? ஆனால், தற்செயல் நிகழ்வுகள், அதிசய நிகழ்வுகள், அற்புதமான நிகழ்வுகள் மற்றும் பறத்தல், முன்னோக்கிப் பார்த்தல், தொலைநோக்குப் பார்வை, முன்னறிவித்தல் மற்றும் கணித்தல் [coincidences, miraculous happenings, fabulous events, and super human abilities like flying, foreseeing, farseeing, foretelling, and predicting] போன்ற அதீத மனித திறன்கள் இந்த நூல்கள் மூன்றிலும் காணப்படுகின்றன. இவை மத நூல்களில், ஒரு அலங்காரங்களாக அல்லது ஒப்பனையாக கூறுவது மிகவும் வழக்கமானவை. உதாரணமாக, ஒருவரின் ஆடை மணிகளால் அலங்கரிக்கப்பட்டதாக விவரிப்பது அல்லது கட்டிடத்தை சிற்பங்களால் அலங்கரித்ததாக கூறுவது போன்ற ஒரு அலங்கரிப்பையே இங்கு காண்கிறோம். ஆனால் இவை உண்மையான வரலாற்று நிகழ்வுகள் அல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்! பிரம்மாவின் உலகில் இருந்து மொகாலிபுத்த தீசர் (Moggaliputtatissa; கிமு 327–247), [ஏன் இந்து கடவுள் உலகத்தில் இருந்து?] கீழே இறங்கி வந்து ஒரு பிராமண குடும்பத்தில் பிறப்பார் [ஏன் பிராமண குடும்பத்தில் இருந்து?], மேலும் ஒரு சிறந்த ஆசிரியராக புத்த மதத்திற்கு மாறுவார் என்றும் இரண்டாவது பௌத்த சபையின் முடிவில் முன்னறிவித்தார்கள். இவர் மகிந்தவை அதிகாரப்பூர்வமாக மதத் தலைவராக்கினார். இரண்டாவது பௌத்த சபைக்கு, நூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது பௌத்த பேரவை நிகழும் என்றும் இங்கு முன்னமே எதிர்கூறப்பட்டது. இந்த மூன்றாவது சபை, மகிந்த மற்றும் மொகாலிபுத்த தீசர் பற்றி பின்னர் விவாதிப்போம். Part: 04 / 'What are the three Buddhist Councils, which allegedly took place in India?' There are details about three Buddhist Councils, which allegedly took place in India. The deliberations in the first council lasted seven months. The deliberations in the second council lasted eight months. That in the third council lasted nine months; see 5-5, 5-29 and 7-59 of the Dipavamsa. One might wonder that the durations of the councils are in a neat ascending order of, seven, eight and nine months. There are so many coincidences, miraculous happenings, fabulous events, and super human abilities like flying, foreseeing, farseeing, foretelling, and predicting in the chronicles. These are quite usual as religious adornments or embellishments, but these are not genuine historical events. Theros foresaw at the end of the second Buddhist Council that Moggaliputta Tissa from Brahma’s world [Why Hindu god's world?] would come down and would be born into a Brahman family [Why Brahman family?], and would convert to the Buddhism to become a great teacher. He ordained Mahinda. The Third Buddhist Council was also predicted to occur one hundred and eighteen years after the second Buddhist Council. We will discuss more about this Third council, Mahinda, and the Moggaliputta Tissa later. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 05 தொடரும் / Will Follow