Everything posted by villavan
- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
- தவிக்கும் தன்னறிவு
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
@ரசோதரன் அண்ணை உங்கை முந்தி பயிற்சி செய்தவர் தானே, அவர் சொன்னாக் கேட்பினம் சில நேரம். வடமராட்சி கிழக்கு எனக்குத் தெரிஞ்ச காலம் முதல் எல்லா அரச திணைக்களங்களாலையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடேயே அணுகப்பட்டு வந்திருக்குது. இ.போ.ச மட்டும் என்ன விதி விலக்கா?
-
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
வருத்தத்திற்குரிய நிகழ்வு. ஆநிரை நல்ல உவமானம் @ரசோதரன் அண்ணை, அதை வைத்து நனவிடை தோயும் போது, ஆடு - கறுப்பாடு மேய்ப்பன் - ஏய்ப்பன் மீட்பன் - அழிப்பன் கடவுள் - சாத்தான் எல்லாமே ஒன்று போல் தான் தெரிகிறது, பார்வையின் கோணம் மாறும் போது.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
ஒரு பயணமும் சில கதைகளும்
ஆட்சியைப் பிடிப்பதற்கு மிகவும் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட முறையே இது மட்டும் தான் அண்ணை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இது மட்டும் எப்போதும் தொடர்ந்திருக்கும். சமூக அரசியல் விஞ்ஞானத்தின் பால பாடம் ☠️.
-
கதைப்படங்கள்
- sdgdcsuy8gca7dg3.jpg
-
வணக்கம்
வணக்கம் ரதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். கன பேர் அக்பராலை வெளிக்கிட்டு கடைசியா யாழில் தான் சந்திக்கிறம் போல.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
விசில், மெல் கிப்சன் நடித்த பொண்ணுங்களுக்கு என்ன தான் வேணும் (What Women Want) என்ற படத்தின் உல்டா என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு கிடைக்கவே கூடாத சக்தி இது தான். எப்படியோ பெண்களுக்குக் கல்யாணம் ஆன கொஞ்சக் காலத்தில் கிடைத்து விடுகிறது (என்று தாங்களே நம்பத் துவங்கி விடுகிறார்கள்) 😁.
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அருமை அண்ணை. விற்கிற அளவுக்கில்லாட்டிலும் அம்மம்மாவுக்கு வேப்பம்பூ ஆய்ந்து குடுத்திருக்கிறன். உங்கள் எழுத்துக்குள்ளால் போகும் போது வேம்பு, மலைவேம்பு எல்லாம் தலைக்கு மேலே நிற்கிறது போன்ற உணர்வு.
- 6cr8dk6cr8dk6cr8.jpg
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்.
-
அழகான புத்தகக்கடை
உண்மையிலேயே மிக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி @Kavi arunasalam அண்ணை.
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
புதுசா இருக்கு. பனங்காட்டுக்கை சிங்கம் எப்ப போனது? 😁 நல்ல அனுபவப் பகிர்வு. நினைச்சுப் பாக்க இப்பவே கிர் எண்டுது.
-
இதயங்களின் மொழி
penetration test மாதிரி முதல் மூன்றைத் திறந்தால் தான் மற்றது தெரிய வரும் போல. எங்கடை batch இலையே 5,6 பேருக்கு மாரடைப்பு வந்திட்டுது. சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.
-
குளிக்கும் வேலை
அநேகமாக கலியாணத்துக்குப் பின்னராத் தான் இருக்கும் என்ன? 🤣
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
இலங்கையின் பிக்காசோ என்று கூறக்கூடிய சிறந்த ஓவியர் அவர். நீங்கள் சொல்வது போல் உலகம் முழுக்க இப்போது கலைகளில் ஈடுபாடும் நாட்டமும் குறைந்து சென்றாலும், எமது பிரதேசங்களில் அதற்கான இரசனை வெகு குறைவு, தென்பகுதியில் அவர்களின் வாழ்க்கையோடு கலை ஒன்றியிருப்பதைப் பார்த்து பொறாமையாயிருக்கிறது. கலாரசனை குறையும் போது தரமின்றிய படைப்புகளையே தூக்கிப்பிடித்து அது மேலும் மேலும் அழிவுச்சுழலுக்குள் கலையைத் தள்ளுவதால், இரசனையும் மேலும் மேலும் முடமாகிக் கொண்டே போவது தான் கொடுமை.
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
நன்றிகள் @suvy அண்ணை. எல்லாம் வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் என்று ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகம் தான்.
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
நன்றி @Kavi arunasalam அண்ணை, நான் சொல்ல வந்தது, பொதுவாக மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி. ஒரு ஓவியம், ஆயிரம் சொற்களால் சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லிவிட முடியும் என்பதும், இன்னொரு பரிமாணத்தை வாசகரிடம் ஏற்படுத்த வல்லது என்பதும் உண்மையாயிருந்தாலும், அதைப் படைக்கும் ஓவியர்களுடைய முயற்சியும் மற்றும் ஓவியங்களின் சிறப்பும் எல்லாருக்கும் விளங்குவதில்லை, அல்லது காலம் எடுக்கும். இப்போது ஏஐ வந்தாப்பிறகு, அந்த ஓவியர்களின் சிறப்பு இன்னும் விளங்காமற் போய்விடும் என்ற ஆதங்கத்தைத் தான் சொல்லியிருந்தேன்.
-
Am an atheist - சோம.அழகு
எந்தவொரு கோட்பாட்டுக்குப் பின்னாலும் படுதீவிரமாகப் பின் திரள்வது தான் பொதுவாக உலகம் முழுக்கவுள்ள சிக்கல். அவர்கள் தமக்கென்று எதிரிகளைக் கட்டமைப்பது தாம் செய்வதே சரியென்பதைத் தம் மனதுக்கு சமாதானப் படுத்தத் தான். அப்படி எந்தத் தீவிரக் கொள்கையாளர்களும் தம் எதிரிகளோடு நடுநிலையாளர்களையும் சேர்க்கத் தவறுவதில்லை. அவர்களுக்குத் தான் எல்லாப் பக்கமும் நெருப்பு. இதில் சிரிப்பு என்னவென்றால், பலருக்கும் தாங்கள் ஏதோ ஒன்றில் பக்கச் சார்பாக, அதுவும் தீவிரமாக இருப்பதே தெரிவதில்லை. அது ஆழ்மனதின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம், அதனாலோ என்னவோ. வரலாறு என்பது கொஞ்சம் உண்மை, நிறையப் பொய் சேர்த்து எழுதப்படும் புனைவு என்பதையும் உலகம் முழுக்க உள்ள கதைகள் மனிதரில் உள்ள இயற்கை உணர்வுகளை மையமாக வைத்து எழுந்தவை என்பதையும் மறுக்கவியலாது. மனித மேம்பாட்டை வலியுறுத்துபவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டியது தான்.
- தொன்மம்.jpg
-
செவ்வந்தியில் செவ்வந்தி
வடிவேலு பேக்கறி வாங்கின கதை வெளியிலை போனது போலை, சில கதைகள் எப்பிடி போகுது யாராலை போகுது எண்டு தெரியாது, ஆனால் முதலுக்கு சேதம் தான் 😁. ஒண்டுமே இல்லாத விசயங்கள் எத்தினையோ பேரைப் பிரிப்பதில் நம் ஊரவர்களுக்கு ஒரு வாலாயம். கை எல்லாம் சரியாகிட்டுதோ அண்ணை?