Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்பாட்டான்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by செம்பாட்டான்

  1. மாற்றுக் கருத்து இல்லை. களவு களவுதான். நாமதான் எமது சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று படுகின்றது.
  2. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அவர்கள் இருவரையும் மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்பதே. என்ன நடக்கிறது என்ற புரிதல் நமக்கும் போதாதே என்பதுதான். பெட்டிக்கடை என்று சொன்னதற்குக் காரணம். பெட்டிக் கடையில், ஒரு 30 பவுன்ட்ஸ் எடுத்திருந்தால், என்ன மாதிரி எதிர்வினை ஆற்றியிருப்போம். ஆனால் 3 மில்லியன் பவுன்ட்ஸ் என்டவுடன் கோபம் வருகிறது. உன்மையில், விகிதாதாரத்தின் அடிப்படையில், இரண்டும் ஒன்றுதான். ஒரு 200,000ல் இருந்து 30 எடுப்பதும், 20 பில்லியனில் இருந்து 3 மில்லியன் எடுப்பதும். இரண்டும் தவறு. முழு விபரமும் சரியாக அறிந்தால் நன்றாக இருக்கும். அரசின் விசாரணை வெளியே வரும் என்று நினைக்கிறேன்.
  3. இதை இப்போதுதான் பொறுமையாக வாசிச்சு விளங்கப் பார்க்கிறேன். சுருங்கச் சொன்னால், பணம் பாதாளம் வரையும் பாயும் என்று சொல்வார்கள். இந்த நிறுவனம் 20 பில்லியன் பவுண்ட்ஸ் கணக்கில வியாபாரம் செய்திருக்கிறது. இது மிக மிகப் பெரும் தொகை. எனது/எமது சிற்றறிவுக்கு மிக மிக வெளியே உள்ள விடயம் இது. இலகுவாக, அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். இந்தத் திரியில், ஏதோ பெட்டிக்கடை கணக்கில் கதைத்துக் கொண்டு இருப்பதுபோலப் படுகிறது. இந்த வங்குரோத்தில், மிகப் பெரிய தலைகள் எல்லாம் ஈடுபட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் கூட. ஓரிருவர் மாட்டுப்பட மிகுதி எல்லோரும் தப்பிப்பதே இவ்வாறான இடங்களில் பொதுவான அம்சம். அதுக்காக, அந்த தம்பதியினர் இருவரும் பாவம் என்று சொல்லவரவில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும் என்று நினைக்கிறேன். (அவர்களுக்கு எவ்விதத்திலும் ஆதரவு குடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த செய்தியின் மூலம்தான் அவர்களைப் பற்றி அறிகிறேன்). இந்தக்களத்தில், முதலாளிகள் இருவரும் தமிழர்கள் என்றபடியால, கொஞ்சம் ஆர்வமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். சிலருக்கு, அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரிந்தும் இருக்கலாம்.
  4. இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது. அடுத்த போட்டியில் என்ன நடந்தாலும், அதிக வெற்றிகள் பெற்ற அணி என்னும் அடிப்படையில், இந்தியாதான் நான்காவது அணி. அரையிறுதியில் இந்தியா அவுஸ்ரேலியாவுடன் மோதும் என்று நினைக்கிறேன். தென்னாபிரிக்கா அடுத்த போட்டியில் அவுஸ்ரேலியாவை வென்றால், தென்னாபிரிக்கா முதல் இடம் பிடிக்கும். அவ்வாறாயின், இந்தியா தென்னாபிரிக்காவுடன் மோதும். ஆனால் தென்னாபிரிக்கா வெல்லுமாமாமாமா.
  5. இந்தியா இலகுவாக வெல்லப் போகுது. மழை வராட்டிச் சரி. கிராந்தி முதலாவது விக்கட்டைக் கைப்பற்றினார். தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
  6. உங்களிடம் மாட்டுப் படும் வீரர் பாவம். உண்டு இல்லை என்று ஆக்கி விடுவீர்கள். ஏதாவது ஒருவரைப் பிடித்துக் கொள்வது. கிராந்தி அவ்வளவு மோசமில்லை. மித வேகப் பந்துவீச்சாளார். விக்கட் எடுக்கவில்லையே ஒழிய, அவவின் பந்திவீச்சு மோசமில்லை.
  7. ஆமாம். அவவின் வளர்ப்புப் பெற்றோர் கதைக்கிறதக் கேக்க வேணும். அருமையான மனிதர்.
  8. இந்த இருவரும் யார் 100 அடிக்கிறது என்று போட்டி போடினம் போல. இந்த அவுஸ்ரேலியப் பெண்கள் வேறு ஒரு உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
  9. அவுஸ்ரேலியா மெதுவாக வெற்றியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்த இணையே முடிச்சு வைக்கும் போல கிடக்கு!
  10. மழையுடன் விளையாட்டு. இனிதே முடிந்தது. நாடீன் மீண்டும் தாக்கினார். 16 பந்துகளில் 41 ஓட்டங்கள். அவர் இருக்கும் வரையும், முன்னுக்கு வருபவர்கள் அழுத்தமில்லாமல் விளையாடலாம்.
  11. இதிலே குழம்புவதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொரு போட்டித் தொடரிலும், சிறு சிறு மாற்றங்களுடன் விதிகள் அமல்படுத்தப் படும். அதை நாம்தான் கவனிக்க வேண்டும். தொடர் தொடங்க முதலே தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். நாம் பார்ப்பதில்லை. அதுவும், இந்த ஒருநாள், இப்போ T20 போட்டிகள் வந்தகாலம் தொட்டே, ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதி. அடிப்படை விதிகளில் மாற்றமில்லை. மற்றம்படி, போட்டியை மேம்படுத்த, காலநிலையை கருத்தில் கொண்டு, இருக்கின்ற வசதிகளைப் பார்த்து, சில பல சிறிய மாற்றங்களைச் செய்வார்கள். இது காலாகாலமாக கிரிக்கட்டில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எப்போதும் நமக்குப் பிடித்தபடிதான் நடக்க வேண்டும் என்று நினைக்க முடியாதுதானே. அத்தோட, கிரிக்கட் மட்டும்தான், பல வேறுபாடுகள் உள்ள ஒரே ஒரு விளையாட்டு. டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், T20 போட்டிகள், இப்போ 100 பந்துகள் போட்டிகள். ஒரே விதியை எல்லாப் போட்டிகளிலும் பின்பற்ற முடியாது. சுவாரசியம் கெட்டுவிடும். போட்டிகளை முடிக்க முடியாது.
  12. தென்னாபிரிக்க மகளிர் அந்த மோசமான தோல்விக்குப் பின் (இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற 69 ஓட்டங்கள்), சிறப்பாக விளையாடுகிறார்கள். தோல்வியிலிருந்து பாடம் படிப்பது என்று சொல்லுவார்கள்.
  13. நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். விதி முறைகள் முதலே வகுப்பட்டவை. அதன்படி எல்லோரும் ஒத்துக்கொண்டு விளையாடுவார்கள். நினைத்தது போல் மாற்ற முடியாது. கிரிக்கட்டில் அடிப்படை விதிகள் மாற்றவே முடியாதவை. மற்றயவை, போட்டியை நடத்தும் நாட்டிடம் விட்டுவிடுவார்கள். அதுவும் மழை சம்பந்தமான விதிகள் மாறுபடுவது உண்டு. ஆனால், அதிலும், சில விதிகள் மாற்ற முடியாதவை. ஒருநாள் போட்டிகளில் 20 பரிமாற்றங்கள் கொடுக்கப் பட்ட நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் போட்டி முடிவில்லாமல் முடிவடையும். T20 போட்டிகளில், அது 5 பரிமாற்றங்கள். இப்போ புதிதாக வந்துள்ள 100 பந்துகள் போட்டியில், 25 பந்துகள் விளையாடினாற்தான், ஒரு முடிவு கிடைக்கும்.
  14. இவ்வளவு போட்டிகள் பார்க்கிற பையனுக்கே இவ்வளவு குழப்பம் என்றால், மற்றவர்கள், என்ன வந்தாலும் சரி என்றுதான் இருப்பார்கள். சில விதிகள் கட்டாயம் தேவைதான், சமநிலையை மேம்படுத்த.
  15. அப்பிடி இல்லை. குறைந்தது 20 பரிமாற்றங்கள் விளையாடினாப் பிறகுதான், மிச்ச கணக்கு வழக்கெல்லாம். ஆண்கள் என்றாலென்ன, பெண்கள் என்றாலென்ன, இதுதான் முதலாவது நிபந்தனை. 20 பரிமாற்றங்கள் விளையாட முடியாமல் போகும்போதுதான் போட்டி கைவிடப்படும்.
  16. முடிவடைந்த போட்டி என்னும் அடிப்படையில், இலங்கைதான் குறைந்த ஓட்டங்களைப் பெற்றது. எத்தினை பந்துப் பரிமாற்றம் என்பது பொருட்டல்ல. 50 பரிமாற்றப் போட்டியே குறைந்த பரிமாற்றங்களில் முடியலாம்தானே. 20 பரிமாற்றத்தில் துரத்தி அடிக்கலாம்தானே.
  17. ஓ அப்பிடியா. அந்த சட்டத்தை நான் அறிந்திருக்கவில்லை. இந்தியா செய்யவேண்டியது, நியுசிலாந்தை வெல்லவேண்டியது. அரை இறுதியில் அவுஸ்ரேலியாவுடன் மோதிறதும் நல்லதுதான். அவர்களிடம் இறுதிப்போட்டிகளில் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இப்போ அரை இறுதியில் மோதிப்பாக்கலாம்.
  18. 7 ஓட்டங்களால் அமோக வெற்றி. இலங்கை எல்லா விதமான தவறுகளைச் செய்தது. பிடிகளைத் தவற விட்டனர். தவறுதலான களத்தடுப்புகள். வங்காளத் தலைவியின் மிக அருமையான ஆட்டம். எல்லாம் சேர்ந்து கடைசிப் பரிமாற்றத்தில் எல்லாம் மாறியது. அதில் முதல் நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுகள். பிடியை எடுத்தனர். ஓட்டமிழப்புச் செய்தனர். எல்லாத் தவறுகளும் சரி செய்யப் பட்டன. வெற்றி இனிமையானது.
  19. தொடர்ந்து 4 விக்கட்டுகள். தலைவி சாமரி
  20. வங்க மகளிர் மெதுவாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். போற போக்கில என்ன நடக்கப் போகுதோ.
  21. என்னா ஒரு வில்லத்தனம். எப்பிடி எல்லாம் யோசிக்க வைக்குது. 🤣
  22. அப்பிடியும் வாறனான். ஆரேன் பதில் அளித்தால், அதை அமத்திப்போட்டு வரலாம். அப்பிடி இல்லாதபோதுதான் சுத்திவளைச்சு வரவேண்டிக் கிடக்கு. நீங்கள் சொலவதைப் பார்த்தால், எல்லோரும் ஏதோ ஒரு சுத்திவளைப்பில்தான் உள்ளீர்கள். ம்ம்ம். சுத்தி வளைப்பு நமக்கென்ன புதுசா. ☹️
  23. கேள்வி. எப்பிடி இந்தத் திரிக்குள் வருகிறீர்கள். Yarl.com தளத்துக்கு வந்தால், புதிய பதிவுகள் என்ற தலைப்பின் கீழ் இந்தத் திரி சிலவேளைகளில் தெரியும். சிலவேளைகளில் தெரிவதில்லை. தெரியாவிடில், சுத்தி அடிச்சுத்தான் வரவேண்டிக் கிடக்கு. கருத்துக்களம் போய், ஆடுகளத்துக்குப் போய், இங்க வந்து, கடைசிப் பக்கம் வந்து..., ஸ்ஸ்ப்பா..... என்டு இருக்கும். ஏதாவது இலகு வழி இருக்கா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.