Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்பாட்டான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செம்பாட்டான்

  1. என்ன வசி.... இதுக்குப் போய். வாங்க இனி ஆராயாலாம். என்ன களத்தில் உள்ள "விற்பன்னர்கள்" பாடுதான் இப்போ கரைச்சல்.
  2. வரே வா. என்ன ஒரு சம்பவம். பஞ்சாப் ஆபார வெற்றி. Thriller in Mullanpor @ஈழப்பிரியன் என்ன சொல்றேல் குறைந்த ஓட்டங்களுடன் KKR. எப்பவுமே சொல்வது. விளையாட்டில், முடியும் வரை அது முடியவில்லை. மீண்டும் நிருபணமாகியிருக்கிறது. சாகலின் உருட்டலில் உருண்ட கொல்கத்தா. வாவ்.
  3. என்ன நடந்திச்சு. இப்பத்தான் கடையைத் திறந்தா, பெரிய சம்பவமா எல்லோ பண்ணி வைச்சிருக்கினம். பஞ்சாப் பஞ்சாகப் பறந்துதா. அடுத்த முட்டையுமா. தொடர் முட்டைத்தாக்குதல்.
  4. அட அந்த முனாவா. மூவன்னா என்டத் தான், கொஞ்சம் குழம்பிட்டன். அப்ப சரி. தலையையும் ஆட்டத்தில் சேர்த்துக்கலாம். என்ன இப்பிடி சொல்லிப் போட்டீங்கள். ஆறுமுகம் ஏறினா நம்மபாடு அதோகதிதான். விடக்கூடாது. மந்திர தந்திரம்தான் போடவேணும் போல.
  5. அப்பிடித்தான் கதை இப்போ. எல்லாம் அவர் மயம். வென்றால் அவர், தோற்றால் அணி. இந்தப் போக்கு மாறவேயில்லை. தரவுகளின் அடிப்படையில், தொடரந்து ஜந்து தோத்தால், அடுத்த போட்டியை வெல்வதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதுபோல் நடந்தது. எல்லாம் ஒன்றாக நன்றாக இருந்தது. அவர்கள் மிகவும் நன்றாகவே விளையாடினார்கள். லக்னோ பந்து வீச்சு மாற்றங்கள் நினைத்தபடி எடுபடவில்லை. அதுவும் 19வது பரிமாற்றத்தை தாக்கூருக்குக் கொடுத்தது. அவருக்குத்தான் இன்று செம அடி. அதன் பின்னும் அவருக்குக் கொடுக்க, அவரும் கூச்சமில்லாமல் நன்றாகவே போட்டுக் கொடுத்தார். அதுவும் அந்த full tose எல்லாம். எங்க போய் அழ. ஏழு ஓட்டங்கள் அந்தப் பந்தில். ஒவ்வொரு பந்தையும் அடியடா என்று போட்ட மாதிரியே இருந்துது. என்னமோ, தலசிவயோக நமக.
  6. அதென்னங்க மூனா. எனக்கு தமிழ்நாட்டு அரசியல் ஞானம் அவ்வளவு இல்லீங்க😁 நீங்கள் எங்க வீட்டு மருமகனைச் சொல்லேல்லதானே
  7. அப்பிடி இல்லைங்க. அவர் விட்டுக்குடுத்த அந்த 13 ஓட்டங்களையும் அடிக்க தல எவ்வளவு பாடுபட வேண்டிக் கிடந்தது. அந்தக் கஷ்டத்துக்காகத்தான்.... அதுவும் 43 வயசில. அத்தோட நூருக்கு வயசிருக்கு. அவர் இன்னும் கனக்க வெல்லலாம். 😁🤣
  8. என்ன மாயமோ. என்ன மந்திரமோ. நினைச்சா கவிதை அருவியாக் கொட்டுது. இடைக்கிடை மானே தேனே என்று போட்டுக் கிடுங்க.😁 சுவி நந்தனுக்கு இணையா நாங்களும் ஒரு இணைப்பாட்டத்தைப் போட்டிருக்கிறம். அங்க இங்க என்டு கொஞ்சம் சறுக்குது. நின்று ஆடித்தான் பார்ப்போமே. தோனியே நின்று ஆடும் போது...... 🥰
  9. உண்மைதான். அவர் வந்து துரத்தலில் ஸ்திர நிலையைக் கொண்டு வந்துவிட்டார். அவர் ஆட்டமிழந்திருந்தால், எல்லாம் மாறியிருக்கும். லக்னோவும் ஒரு பிடிய விட்டினம் (பிடிச்சிருந்தாலும், பெரிய பாதிப்பு இருந்திருக்காது என்று நினைக்கிறன். அவர்கள் ஏலவே கிட்ட வந்திட்டினம்).
  10. இப்போ எல்லாம் அல்லோல கல்லோலப் படப் போகுது. ஒரே தோனிதான் இன்று முழுக்க. நாம கடையைச் சாத்திப் போட்டுப் போவம்.
  11. தாக்கூர் போட்டியை சென்னைக்குக் குடுத்து விட்டார்
  12. அந்த வீரனின் போராட்டம் எவ்வளவு கனதியானது என்றால், நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பை, அவர் இவ்வாறுதான் ஆரம்பித்தார். தனது பச்சை மேலாடையைச் சுட்டிக்காட்டி, "அடுத்த வருசம் எதைப் பற்றி கதைக்கப் போறம்" பத்திரிகைகளும் நிருபர்களும் கடந்த 14 வருடங்களாக அவரின் 2011 meltdownஜயும், இந்த வருடமாவது வெல்வாரா என்பதையும் திரும்பத் திரும்ப கதைத்தபடி. அவரின் மேல் இருந்த அழுத்தம் சொல்லி அடங்காது. ஒரு வீரனுக்கு இவ்வளவு மன உழைச்சல் கூடாது. இந்த வெற்றி, அவரின் விளையாட்டை வாழ்வை புரட்டிப் போட்டிருக்கிறது. இனி நிதானமாக மற்றைய major எல்லாத்தையும் விளையாடலாம். இன்னும் எத்தனை வெல்வார் என்று பாரக்க ஆசை. டைகர் வூட்ஸ் 15 தடவை வென்றிருக்கிறார். ரோரிக்கு இது ஜந்தாவது.
  13. CSK, அவரை 3 வருசமா அணியில வைத்திருக்கினம். போன ஏலத்திலே திரும்பவும் வாங்கி இருக்கினம். 2022ல் நடந்த U19 உலகக்கிண்ண வெற்றியாளர்.
  14. சென்னை வெல்லுதோ இல்லையோ. விசில் போடும் கூட்டத்துக்கு இது காணும். தோனி எடுத்த review. பூரானை அனுப்பி வைத்தது. தோனி எறிந்த பந்து ஓட்டமிழப்பைச் செய்து சமத்தை அனுப்பி வைத்தது. தோனி பிடித்த பிடி, மிக மிக உயரே சென்ற பந்தை பிடித்த பிடி, பாந்தை அனுப்பி வைத்தது. இதுவே காணும் இன்றைக்கு. அதோட இப்போட்டியை வென்றுவிட்டால்.... ஜயகோ. இப்பவே கண்ணக் கட்டுதே.
  15. 179வரையும் அடிக்கலாம். மனதைத் தளர விட்டுடாதீங்க😁
  16. CSKக்கு எல்லாம் நல்லபடியாப் போய்க்கொண்டிருக்கு. நமக்கு முட்டைதாறதில அவ்வளவு விருப்பம்.
  17. வாவ். என்ன ஒரு பிடி. திரிப்பாதி.... நீ ஒரு விண்ணன்தான். மேலே எழுந்த பந்தை சரியாகக் கணித்து, மிகவேகமாக ஓடிக்கொண்டே பிடித்தார். வாவ். முதலாவது விக்கட் விழுந்தது.
  18. CSK துரத்துவதற்கு முடிவு செய்திருக்கினம். அணியில் இரு மாற்றங்கள். அஸ்வினையும் டெவோன் கான்வேயையும் தூக்கியாச்சு. ஷேக் ரசிட் ஆரம்பத் துடுப்பராகவும் ஒவோட்டனும் அணியில் இணைந்திருக்கினம். ஷேக், 19 வயதுக்குட்பட்ட அணியில் சிறப்பாக விளையாடினவர். இப்போது 20 வயதாகுது. மூன்று வருடமாக அணியில் இருக்கிறார். முதன் முதலாக விளையாடப் போகிறார். இஞ்ச, முட்டைக் கறி வேண்டாம். வேற ஏதாவது, நல்ல உறைப்பா, ஒண்ட வையுங்க. 🤣 இன்று வென்றால்தான், மேலே வரமுடியும். வெல்லுவினமா. பூரான் என்ன கட்டங்கட்டி வாறாரோ தெரியா. எதுக்கும் பூரானுக்கு ஒரு பூசையைப் போடவேண்டியதுதான்
  19. CSKன் மீள் எழுச்சி இன்று ஆரம்பமாகிறது என்ற எதிர்பார்ப்பு எகிர்கிறது. CSKன் எழுச்சி யாழ் களத்தையும் புரட்டிப் போடும்.
  20. ஆமாம். சில நாட்களின் முன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் வெற்றியாளர். சாகித் தீகலா, Sahith Theegala, என்னும் இந்திய வம்சாவளி வீரர் விளையாடியிருந்தார். இவர் இந்தியப் பெற்றோருக்கு கலிபோரினியாவில் பிறந்தவர். இப்போட்டியில் 29வது இடத்தைப் பிடித்தார். இவர் மிகத் திறமையானவர். இவ்வாறான major போட்டியொன்றை வெல்லக்கூடிய வீரர் என்று வகைப்படுத்தப் பட்டவர். நான்கு நாட்கள் எப்படி விளையாடுவினம் என்பதுதான் இங்கே கணக்கே. டெஸ்ட் போட்டிகள் மாதிரித்தான். பல தடைகளைக் கடந்து வரவேணும். முக்கியமாக மனத்தடையும் அழுத்தமும். கோல்பில் நீயே ராஜா, நீயே வில்லன். மற்றவர்கள் ஒரு காரணியே இல்லை. இன்னொருவர், அக்ஸய் பாத்தியா, Aksay Bhatia. இவரும் கலிபோர்னியாவில் பிறந்தவர். நான்கு நாட்களும் விளையாடி, 42வது இடத்தைப் பிடித்தார்.
  21. 2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி நாளில 15வது ஆளாக வந்தார். அன்றிலிருந்து, ஒவ்வொரு வருடமும் அவரின் முயற்சிகள் கைகூடவேயில்லை. கோல்பில் நான்கு முக்கிய போட்டிகள் உள்ளன. எல்லாவற்றையும் வென்றவர்கள் வெகு சிலரே. கடைசியாக வென்றவர் டைகர் வூட்ஸ், Tiger Woods. ரோரி 2014ஆம் ஆண்டு மூன்றாவது போட்டியை வென்றார். மாஸ்டர் போட்டியை வென்றால் நான்கு பெரும் போட்டிகளையும் வென்றவர் என்று போற்றப்படுவார், Grandslam Champion. அந்த 2011 meltdown லிருந்து அவரால் வெளிவரவே முடியவில்லை. ஒவ்வொரு வருடப் போட்டிகளிலும் அவரின் மேலான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருந்தது. இறுதியில் 2025 அவரின் ஆண்டாக அமைந்தது. அவர் இப்போ Grandslam Champion. நான்கு முக்கிய போட்டி வெற்றியாளர். அவரின் மேல் இருந்த அழுத்தம், மனச் சோர்வு, படபடப்பு எல்லாம் பறந்தன. ஒரு வீரனால் எவ்வளவுதான் தாங்க முடியும். எல்லாவற்றையும் தாங்கினார். இவ்வருடமும் அவ்வளவு இலகுவான வெற்றியாக அமையவில்லை. இன்றும் நான்கு புள்ளிகள் முன்னிலையில், போட்டியை ஆரம்பித்தவர், எல்லா விதமான தவறுகளையும் செய்தார். 2011 மீண்டுமா என்று படபடப்புடன் உலமே பார்த்துக் கொண்டிருந்தது. கடைசியில் இருவர் ஒரே புள்ளிகளைப் பெற, போட்டி playoff நோக்கிச் சென்றது. அவர் யோசித்திருப்பார், என்னடா நடக்குது. ஏன் இந்தப் போட்டி மட்டும் எனக்கு இந்த ஆட்டம் காட்டுது என்று. அப்படியான நாள் இன்று. இறுதியில், playoffல் ஒரு புள்ளியைப் பெற்று, போட்டியைத் தனதாக்கிக் கொண்டார். இப்படம் எல்லாக் கதையையும் சொல்லும்.
  22. சொல்லமாட்டாங்க. சொல்லவே மாட்டாங்க. நாமதான் அடிச்சுப் பிடிக்க வேணும். அங்கால CSK யும் ஏதாவது மாஜாயாலம் நடக்குமா என்று முயற்ஙி செய்யினம். அவையின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன், தோனியிடம் மந்திரக்கோல் இல்லை என்று வேற சொல்லியிருக்கிறார்.
  23. ஆட்டத்தின் பின், அவர் இதை கால்சட்டைப் பையில இருந்து எடுத்துக் காட்டினார். இது orange ஆமிக்காக என்று ஒற்றையில எழுதி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை.
  24. இந்த நால்வரும், சுவியின் தலைமையில், போராடித்தான் ஆகவேணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.