Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனாலும் உந்த வயசில அந்தாள் விக்கட் காப்பளரா விளையாடுறார். மின்னல் வேக தகர்ப்புகள், அது இது என்டு போட்டு உழட்டுறாங்கள். இனிப் பாருங்க. அந்தாள் வலக்கையை உயர்த்தினா இப்பிடி, இடக்கையால சொறிஞ்சா இப்பிடி என்டு எத்தினை வரும் என்று.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்கட பழைய மேற்கிந்தியதீவு அணியை உடைக்கேலாது போல. இன்றுடன் அவர்கள் எட்டா இடத்துக்குப் போய்விட்டார்கள். சுவி நந்தனுடன் இப்போது ரசோதரனும் இணைந்திருக்கிறார். பார்ப்போம் (புகைச்சல் மணக்குதோ)
-
நானும் ஊர்க் காணியும்
அதுதான் எல்லா இடமும் கழுவி ஊத்தினமே. வெளியில இருக்கிற ஆக்களும் சரி அங்கே இருக்கிற அவர்களின் நிழல்களும் சரி, செய்கின்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது. நல்லவற்றையே பார்ப்போம். நல்லவற்றையே யோசிப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுங்க. பொறுங்க. ராகுலோட என்னமோ பூசை போட்டிருக்காம். பெங்களூரிடம், குல்தீப் மாதிரி ஒரு சுழளலர் இல்லாதது தெரியுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன நடக்குது. 3 விக்கட். அதுவும் Hazlewood வாறதக்கு முதலே. Hazlewood ன்ர பயத்திலேயே மூன்று பேரும் நடையைக் கட்டிட்டினமோ. களத்தில நின்றால்தானே எங்கள விழுத்தலாம். இல்லாட்டி என்ன செய்வாய் மகனே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பணம்தானே பிரதானம். விளையாட்டெல்லாம் அப்புறம். என்ன நல்ல விடயம் என்றால், வீரர்களும் நல்லா உழைக்கினம். அவர்கள் வாழ்க்கை நன்றாக அமைகிறது. 80களிலும் 90களிலும், எவ்வளவு கதைகள் கேள்விப் பட்டிருப்போம். விளையாடும் காலம் முடிய, வறுமையில் உழன்ற எத்தனை வீரர்கள். நல்ல நேர்த்தி போலத்தான் கிடக்கு. RCBய 163க்கு அமத்திப் போட்டினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
3வது பரிமாற்றத்திலேயே 50 ஓட்டங்களைக் கடந்து விட்டார்கள். வேகமான 50ஆம். அதன் பின்..... ஜயகோ. என்ன ஒரு மாற்றம். அடுத்த 12 பரிமாற்றங்களில் 70 ஓட்டங்கள்தான். அந்த தேவையில்லா ஓட்டமிழப்பால இவ்வளவு பின்னடைவா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ இதுக்குத்தான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ. இனிப் பாருங்க அவர்களின் ஆட்டத்தை. ஹா ஹா....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன உங்கட ஸ்டார்க் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். 30 ஓட்டங்கள் ஒரு பரிமாற்றத்தில். என்னா அடி. துரதிஷ்டவசமான ஓட்டமிழப்பு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. RCB எத்தனை ஓட்டங்கள் அடிப்பார்கள். 180க்கு மேலே அடித்தால், நல்லதொரு போட்டியை கொடுக்கலாம்.
-
நானும் ஊர்க் காணியும்
நல்ல உள்ளம் அவவுக்கு. வீட்ட விட்டு ஆள எழுப்பிறதுக்கும் தானே காசு குடுத்து லான்ட்மாஸ்டர் பிடிச்சு விடுறா. நீங்கள் வேற. நிதர்சனமான உண்மை வசி. படங்காட்டுறதில நம்ம ஆக்கள அடிச்சிக்க முடியாது. படங்காட்ட வெளிக்கிட்டு மற்றவையை மதிப்பதில்லை. ஆனால் அப்பிடியான ஆக்கள் அங்கே கனநாள் வாழமாட்டினம். அவையால முடியாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்ஸ்..... அங்கின என்ன சத்தம். என்ன வாறதோ......🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹா ஹா...நாமதான் சுவி நந்தன் அணிலேயே இல்லையே. எதிர் அணி. வேணுமென்டா அவுஸ்ரேலிய வீரர் தொம்ஸன் என்டு சொல்லலாம். வேஏஏஏகமா பந்தப் போட்டு அவையைத் தூக்குவம். இம்முறை வேறு அணி. Hazelwood போனமுறை 2024ல் விளையாடவில்லை. மற்றைய பந்தாளர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. சிராஜ்ஜப் பாருங்கள். போனமுறையை விட இவ்வருடம் வெறிகொண்டு வீசுகிறார். ஆனால் அணி வேறு. Hazelwoodதான் இம்முறை துருப்புச் சீட்டு
-
நானும் ஊர்க் காணியும்
உண்மைதான். ஜீரணிக்க முடியாத ஆனால் சத்தியமான கேள்வி. ஊரில் நாங்களும் இப்போ வெளிநாட்டினர் தான். சுற்றுலாப் பயணிகளுக்கும் நமக்கும் நூலிழையே வித்தியாசம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு அணிகளும் மிகவும் உறுதியான பந்து வீச்சு அணியுடன் வருகின்றார்கள். நல்லதொரு போட்டியாக அமையப் போகின்றது. ஹேசுல்வூட் மிகவும் சிறப்பாக வீசிக்கொண்டிருக்கிறார். அவர் நல்லதொரு தொடக்கம் கொடுப்பாரேயானால், பெங்களுருக்கு வெற்றி உறுதி.
-
நானும் ஊர்க் காணியும்
மிகவும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களின் பின் ஒரு தொடர்கதை வாசித்த அனுபவம். முந்தி எவ்வளவு தொடர்கதைகளை வாரம் வாரம் வாசிப்போம். முடிந்தது என்பதை இட்டு மகிழ்வதா கவலைப் படுவதா. இதன் பின் என்ன என்று பாகம் இரண்டு வருமோ. இப்போதெல்லாம் அதுதானே. சொல்ல முடியும் என்றால் சொல்லுங்க. எந்தக் காலப்பகுதியில் இது நடந்தது. எப்போது ஊருக்கு நிரந்தரமாகப் போறது. ஊருக்குப் போனாப் பிறகு பாகம் 3 எழுதலாம். வெளிநாடுகளில் இருக்கும் பலபேர் இதைப்பத்தி கதைப்பது உண்டுதானே. ஆனால் உண்மையில் எத்தனை பேர் அங்கே திரும்பிப் போய்விட்டார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப அடுத்த போட்டியில விசயம் இருக்கு. பெங்களூரு கையிலதான் மிச்சம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது பழைய மேற்கிந்தியதீவுகள் அணி மாதிரி. சுவி நந்தன் ஆரம்பத் துடுப்பாட்டம் டெஸ்மன் கெயின்ஸ் கோர்டன் கிறீனிட்ச் மாதிரி. பின்னால ரசோதரன் விவியன் ரிச்சட்ஸ் மாதிரி. ஒருத்தரும் உடைக்கேலாது. ஏலுமென்டா பந்து போட்டுப் பாருங்க 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத்துக்கு மிக இலகுவான வெற்றியாக முடிந்தது. புள்ளிப் பட்டியிலில முதல் இடத்தையும் பிடித்துககொள்கிறார்கள். நம்ம சுவி நந்தன் இணைப்பாட்டம் இன்று சோடைபோய்விட்டது. 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு விக்கட் விழுந்தப் பிறகும், சாம்சனும் பராக்கும் திருப்பி அடிக்கத் தொடங்கி விட்டினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
217 நல்ல ஓட்ட எண்ணிக்கை. ராஜஸ்த்தானின் ஆரம்ப வீரர்கள்தான் இதுவரை போட்டிகளை வென்று கொடுத்தார்கள். நடுவில் வரும் வீரர்களுக்கு ஆட சந்தர்ப்பம் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. இன்று தெரியும் அந்த அணியின் நடுவீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று. கலைத்துப் பிடிப்பார்களா. இதோ சில நொடிகளில்.......
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு உடன்பாடில்லா விடயத்தைச் சுட்டிக்காட்டினேன். தவறாகச் சொல்ல நினைக்கவில்லை. எல்லோரும் சமமே, ஒன்றாகவே உழளுகின்றார்கள் என்று நினைத்தேன். பார்க்கும் பொருள் ஒன்றே ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வைதானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்க வேற. இது விளையாட்டுத்தானே. ஏறுவதும் இறங்குவதும் சகஜம்தானே. பிள்ளைகள்தான் எனது ஆசான்கள். எது சரி என்று எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். மேற்கத்தைய நாடுகளில் எப்படி எப்படி எல்லாம் நாம் வாழ வேண்டும் என்பதிலும், விடயங்களை அணுக வேண்டும் என்பதிலும், அவர்கள்தான் எனக்கு வழிகாட்டிகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவி நந்தன் இணைப்பாட்டம் அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துகள் இருவருக்கும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று நல்ல வசூல் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்களை எல்லாம் சிறுவர்கள் என்று விளித்து, மனதில் ஒரு களிப்பை உண்டாக்கி, IPLஜ ஜிலு ஜிலு ஆக்கிவிட்டீர்கள்.