Everything posted by பிழம்பு
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
தாய்லாந்தினால் இலங்கைக்கு இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை சக்சுரின் நோய்வாய்ப்பட்டுள்ளதாலும் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாலும் அதனை மீள தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கு தாய்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையுடனான தொடர் சந்திப்புகளின் பின்னரும் மிருகவைத்தியர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்தும் சக்சுரினை எப்போது தாய்லாந்திற்கு மீள கொண்டுவருவது என தீர்மானித்துள்ளதாக தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சக்சுரின் தாய்லாந்திற்கு மீள வரக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக மிருகவைத்தியர்கள் குழுவொன்று இலங்கை சென்றது, என தெரிவித்துள்ள அமைச்சர் முழுமையான விபரங்களை திரட்டிய பின்னர் ஜூன் மாதம் யானையை தாய்லாந்திற்கு கொண்டுவரதீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் விலங்குகள் உரிமை பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கும் ரார் என்ற அரசசார்பற்ற அமைப்பொன்று சக்சுரின் மிகமோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து தாய்லாந்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்தே தாய்லாந்து அரசாங்கம் இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது. ஆண்யானைக்கு உடனடியாக சிகிச்சைதேவைப்படுகின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் யானையை தாய்லாந்திற்கு கொண்டுவரஎண்ணியிருந்தோம், எனினும் விலங்கின் நிலைமையை கருத்தில் கொள்ளும்போது கடல் வழியாக கொண்டுவருவதை விட வான்மார்க்கமாக கொண்டுவருவதே சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்தனர் என தாய்லாந்தின் அமைச்சர் தெரிவித்துள்ளார்- கடல்வழியாக கொண்டுவருவது நீண்டகாலம் பிடிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சி 130 விமானத்தில் யானையை ஏற்றுவதற்கான பொருத்தமான கூடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தாய்லாந்து அமைச்சர் பொருத்தமான விமானத்திற்காக காத்திருக்கின்றோம்,விலங்கின் பாதுகாப்பிற்காக பொருத்தமான கூடு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.. இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று யானைகளில்ஒன்று சக்சுரின் தாய்லாந்தின்வெளிவிவகார அமைச்சு யானையின் நிலை குறித்து அறிந்ததும் தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகாரஅமைச்சுடன்இது குறித்து ஆராய்ந்தது. இதன் பின்னர் கொழும்பில் உள்ள தனது தூதரகத்தை இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. கடந்தவருடம் தாய்லாந்து தூதரகம் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு யானை நல்லநிலையில் இல்லை என்பதை அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அது மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டது. தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம் | Virakesari.lk
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி அகழாய்வு கூறும் தமிழர் வரலாறு: குதிரை எலும்புகள், நெற்பயிர் எச்சங்கள் ஆய்வில் கிடைத்திருப்பது ஏன் முக்கியம்? - பாகம் 2 #Exclusive முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 11 பிப்ரவரி 2023 பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, முதல்கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் - கழுகுப் பார்வையில் கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன. கீழடி அகழாய்வு அறிக்கை குறித்த தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகம் இது. தற்போது கீழடி தொல்லியல் தளம் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் வைகை நதி ஓடியிருக்க வேண்டும். பிறகு நதி தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்ட நிலையில், அங்கிருந்த வண்டலின் காரணமாக செறிவுமிக்க விளைநிலமாக கீழடி மாறியது. (தற்போது வைகை கீழடியிலிருந்து வடக்கில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது). இங்கு கிடைத்த உயிரியல் எச்சங்களை ஆய்வுசெய்தபோது, அதில் குறிப்பிடத்தக்க அளவில் நெற்பயிரின் எச்சங்களும் உமியும் கிடைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, அங்கு பெரிய அளவில் நெற்பயிர் விளைவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இங்கு தொடர்ந்து விளைச்சல் அதிகரித்தது. குறிப்பாக நெற்பயிரின் விளைச்சல் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக இந்தப் பகுதியில் வர்த்தகம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட உபரியால், உள்நாட்டு - வெளிநாட்டு வணிகமும் வர்த்தகமும் நடக்க ஆரம்பித்து. மெல்ல மெல்ல கீழடி ஒரு நகர்ப்புறமாக மாற ஆரம்பித்தது. இதனால், வளர்ச்சி அதிகரிக்க இந்தப் பகுதி ஒரு நகர்ப்புற மையமாகவே மாற ஆரம்பித்தது. கீழடியில் கிடைத்த விலங்குகளின் எச்சங்கள் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆராயப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, பல்வேறு வகையிலான விலங்குகள் கீழடி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ளன அல்லது வாழ்ந்துள்ளன. பசு, காளை, எருமை, ஆடு, பன்றி, நாய் போன்ற வீட்டு விலங்குகளும் நீலான் மான் (Nilgai), மறிமான் (Antelope), புள்ளிமான் போன்ற மான் இனங்களும் இங்கே இருந்துள்ளன. பட மூலாதாரம், Archeological Survey Of India படக்குறிப்பு, கீழடியில் கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகள். விலங்குகளின் எலும்புகள் கீழடி பகுதியில் பெரிய அளவில் விலங்குகளின் எலும்புகள் கிடைத்ததை வைத்துப் பார்த்தால், கீழடியின் பொருளாதாரத்தில் அவை முக்கியப் பங்கை வகித்திருக்கக்கூடும். எருமை, ஆடு, செம்மறியாடு ஆகியவையே கீழடி மக்களின் உணவுகளில் முக்கியப் பங்கு வகித்தன. அவற்றோடு ஒப்பிட்டால், உணவில் பன்றியின் பங்கு குறைவாகவே இருந்தது. வீடுகளில் இந்த விலங்குகளை வளர்த்ததுபோக, கொம்புகள், தோல் போன்ற பொருட்களுக்காக மிருகங்களை வேட்டையாடுவதும் கீழடியில் நடந்திருக்கிறது. காட்டு மாடுகள், காட்டெருமைகள் போன்றவை வேட்டையாடப்பட்டிருக்கின்றன. நாய்கள் செல்லப் பிராணிகளாகவோ, பாதுகாப்புக்காகவோ வளர்க்கப்பட்டிருக்கக்கூடும். பட மூலாதாரம், Archeological Survey of India ஆனால், கீழடியில் கிடைத்த விலங்கு ஆதாரங்களிலேயே மிகவும் கவனிக்கத்தக்கது குதிரை பற்றியதுதான். கீழடியில் இருந்த மக்கள் குதிரைகளை வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது தொல்லியல்ரீதியில் மிக முக்கியமானது. "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும், பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்" என்கிறது சங்க காலப் பாடலான பட்டினப்பாலை. அதாவது, "கடல் மூலம் கொணடுவரப்பட்ட வேகமாகச் செல்லக்கூடிய நிமிர்ந்த குதிரைகள், சரக்கு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மிளகு மூட்டைகளும் வடமலையில் இருந்து வந்த தங்கமும் மேற்கு மலைகளில் இருந்து வந்த சந்தனமும் அகிலும்" என்பது இந்த வரிகளின் அர்த்தம். பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, தரையில் செங்கல் பாவிய தளங்களுடன் கூடிய கட்டடத் தொகுதிகள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலேயே தொல்லியல் தளங்களில் குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. (ஆந்திர பிரதேசத்தில் உள்ள வரலாற்று ஆரம்ப கால தொல்லியல் தளமான கொட்டிப்ரோலுவில் நடந்த தொல்லியல் ஆய்வில் சமீபத்தில் குதிரை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.) இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குதிரைகள் சங்க காலப் பாடலான பட்டினப்பாலையில் சொல்லப்படுவதைப்போல, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கக்கூடும். முயல் மற்றும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால், மீனின் எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை. நன்னீர் சங்குகள் கிடைத்திருக்கின்றன. இப்போதைப் போலவே அப்போதும் நத்தைகள் உணவாக இருந்திருக்கக்கூடும். பட மூலாதாரம், Amarnath Ramakrishna படக்குறிப்பு, கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான அணி. கீழடி பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கீழடியின் பொருளாதாரத்தில் கால்நடைகளுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருப்பது தெரிய வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஆய்வு அங்கு நடத்தப்பட வேண்டும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. இந்த இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, கீழடியில் பல இடங்களில் இரட்டை அடுப்புகள் கிடைத்துள்ளன. "ஆனால், கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. அதேபோல, இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை. எடுத்துக்காட்டாக, இங்கு கிடைத்த 'இ', 'எ' பிராமி எழுத்துகளுக்கும் அசோக பிராமிக்கும் வித்தியாசம் உண்டு. அவை இலங்கையில் கிடைக்கும் பிராமி எழுத்துகளுடன் நெருக்கமாக உள்ளன. அதேபோல, 'm' என்ற ஒலிக்குறிப்பைக் கொண்ட அசோக பிராமி எழுத்து பானை ஓடுகளில் இதுவரை கிடைத்ததில்லை," என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இங்கு கிடைத்த பெரும் எண்ணிக்கையிலானை ஓடுகளை தெர்மோலூமினசென்ஸ் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இங்கு கிடைத்த காசுகளைத் தவிர பிற உலோகப் பொருட்களும் அவற்றின் உலோகத் தன்மை குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமர்நாத் சுட்டிக்காட்டுகிறார். இந்த இரண்டு அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் ஆரம்பகால வரலாற்றையும் சங்க காலத்தையும் மேலும் அறிந்துகொள்ள கீழடி மிக மிக முக்கியமான தொல்லியல் தளமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியுமென அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியிருக்கிறார். பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, கீழடியில் அகழ்வாராய்ச்சியில் காலப்படிநிலையைக் காட்டும் படம். தொடர் ஆய்வுகளுக்கான தேவை வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார். பெருங்கற்கால வாழிடங்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தேவையான மிகப்பெரிய ஆய்வுகள் ஏதும் தென்னிந்தியப் பகுதியில் பெரிய அளவில் செய்யப்பட்டதில்லை. மாறாக, இங்குள்ள பெருங்கற்காலப் பகுதிகள் அனைத்தும் இரும்புக் காலத்தோடு தொடர்புபடுத்தி முடிக்கப்பட்டுவிடுகின்றன. அதற்கு அருகில் உள்ள வாழிடப் பகுதிகள், அவற்றில் வாழ்ந்த மக்கள் ஆகியோர் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள். ஒரு பெருங்கற்காலத் தலமும் அதை ஒட்டிய வாழிடத்தலமும் கண்டறியப்படும்போது, எப்படித் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு தற்போது கீழடியில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளை சான்றாகக் கொண்டு செயல்படலாம். அப்படிச் செய்யும்போது தமிழ்நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு எப்படி வளர்ந்தது, தென்னிந்தியாவில் அதை ஒட்டிய பண்பாடுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வின் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்ளலாம்? பெருங்கற்காலப் பண்பாடு என்பது தமிழ்நாட்டில் சங்க காலம் எப்படி இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகச் சொல்லலாம். சங்க கால நகர நாகரீகம் எப்படி இருந்தது என்பதை மேலும் அறிய, கீழடியில் விரிவான ஆய்வுகளைச் செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சங்க காலத்தில் தமிழ்நாட்டின் நகர வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை சங்கப் பாடல்கள் விரிவாக உரைக்கின்றன. கீழடியில் கிடைத்த சில சான்றுகள், இந்த இலக்கிய ஆதாரங்களுக்கான தொல்லியல் ஆதாரங்களின் மூலம் சிறிய அளவிலாவது உறுதிப்படுத்துகின்றன. ஆனால், மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/india-64601317
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
படுகொலைக்கு முன் தினேஷ் ஷாப்டர் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டு இன்று (21) ஐந்து நாட்கள் பூர்த்தியடைந்தும், கொலையாளைகள் அல்லது சந்தேக நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந் நிலையில் குறித்த படுகொலை விவகார விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருப்பதாகவும் மிக விரைவில் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியும் எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் நம்பிக்கை வெளியிட்டார். இந் நிலையில், வர்த்தகர் ஷாப்டரின் பிளவர் வீதி வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை பகுப்பாய்வு செய்யும் போது மற்றொரு முக்கிய விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிளவர் வீதியிலிருந்து காரை செலுத்தி வந்துள்ள தினேஷ் ஷாப்டர், மலலசேகர மாவத்தையில் உள்ள ரொட்ரிகோ லொஜன்சி பிளேவர் எனும் உணவகத்தில் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. எனினும் கொள்வனவு செய்யப்பட்ட சிற்றூண்டிகள் போட்டுக் கொடுக்கப்பட்ட பை மட்டும் ஷாப்டரின் காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, சிற்றூண்டிகள் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர், இருவரால் உட்கொள்ளப்பட்டிருக்கின்றமை தொடர்பில் ஊகிக்க முடியுமான சான்றுகள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளன. இந் நிலையில் இதுவரையிலான விசாரணைகளில் 50 வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது ஷாப்டரின் வீடு மட்டும் அலுவலகத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளிடம் விசாரணையாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களை சந்தேக நபர்களாக கருதாமல், ஷாப்டர் நெருங்கிப் பழகியோர் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்திக்கொள்ள இவ்வாறு அவர்களை விசாரணை செய்வதாக சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர். ஷாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது, சாரதி எவரும் உடன் இருக்கவில்லை என்பதும், குறித்த பயணத்துக்காக ஷாப்டர் காரை அவரே செலுத்திச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், மிக தனிப்பட்ட பயணமாக அவர் அப்பயணத்தை முன்னெடுத்திருப்பதும், அப்படி அவர் இரகசியமாக சந்திக்க சென்ற நபர் அல்லது நபர்கள் யார் என்பது தொடர்பிலும் வெளிப்படுத்தவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. விசாரணையாளர்கள் பிரதானமாக நான்கு கோணங்களில் விசரிக்கும் நிலையில், இதுவரை ஷாப்டரின் கொலையுடன் தொடர்புபட்டதாக எவரையும் கைது செய்ய போதிய சான்றுகள் கிடைக்கவில்லை என அறிய முடிகின்றது. இந் நிலையில் சி.சி.ரி.வி. காணொளிகள், பொரளை மயான கோபுரத் தகவல்களை மிக ஆழமாக ஆராயும் சிறப்புக் குழு, அதன் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய சிலரிடம் இரண்டாவது முறையாகவும் விசாரணை நடாத்தியுள்ளது. அத்துடன் ஷாப்டரின் கொலையின் பின்னர் அவருக்கு நெருக்கமான பலரின் செயற்பாடுகளை 24 மணி நேரமும் சி.ஐ.டி.யினர் கண்காணித்து வருவதாகவும் அறிய முடிகின்றது. இந் நிலையில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டி.ஜி.எச். பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார். பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார். படுகொலைக்கு முன் தினேஷ் ஷாப்டர் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் | Virakesari.lk
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
அகரம் அகழாய்வு தளத்தில ஒரே குழியில் முன்று உறை கிணறுகள் கண்டுபிடிப்பு பிபிசிCopyright: பிபிசி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 7ம்கட்ட அகழாய்வுப் மணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது 8அடி ஆழத்தில் ஒரே குழியில் 2அடுக்கு மற்றும் 3அடுக்குகள்கொண்ட அருகே அருகே 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கிடைப்பது இதுவே முதன் முறை ஆகும்.இது ஆராய்ச்சியாளர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அகழாய்வுப் நடத்தும் பட்சத்தில் இதன் அகலம் உயரம் மற்றும் முழு பயன்பாடும் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் அகரத்தில் கிடைத்துள்ள உறை கிணுறுகளை பற்றி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அகரம் இப்போ சிகரம் ஆச்சு என பதிவு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து கீழடி,கொந்தகை மணலூர் அகரம் ஆகிய நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகரம் அகழாய்வு தளத்தில ஒரே குழியில் முன்று உறை கிணறுகள் கண்டுபிடிப்பு - தமிழில் செய்திகள் (bbc.com)
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு பட மூலாதாரம்,TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் காணொளிக்காட்சி மூலம் சென்னையிலிருந்து இன்று துவக்கிவைத்தார். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள ஏழாம் கட்ட அகழாய்வில் தமிழர் நாகரிகத்தை விளக்கும் வகையில் மேலும் பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. வைகை நதி நாகரிகத்தை முழுமையான முறையில் ஆய்வு செய்யும் பொருட்டு கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் கீழடியில் அகழாய்வு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் 7818 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வு முதல் தற்போது வரை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 தொல்பொருட்களும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய ஆறாம் கட்ட அகழாய்வில் 913 தொல்பொருட்களும் வெளிக்கொணரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட செவ்வண்ண பூச்சு பெற்ற மட்பாண்ட ஓடு, மணிகள், சுடுமண்ணால் ஆன முத்திரை, மாட்டினத்தைச் சார்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்புடன் கூடிய முதுகெலும்பின் முழுமையான பகுதி, எடைக்கற்கள் மற்றும் செங்கல் கட்டுமானங்கள் ஆகியவை முக்கிய கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன. கீழடி அருகே அமைந்துள்ள கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அகரத்தில் மேற்கொண்ட அகழாய்வில் நுண் கற்காலத்தை சார்ந்த கத்திகள், 300 மில்லி கிராம் எடையுள்ள தங்க நாணயம், கரிமமயமான நெல், புகைப்பான் ஆகியவையும், மணலூரில் கட்டுமான அடையாளங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தை அறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த அகழாய்வில் தாதுக்கள் மற்றும் மண் பகுப்பாய்வு, காந்த அளவி மதிப்பாய்வு, புவிசார்வியல் மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு, தொல்லியல் கோட்பாடு மற்றும் முறைகள், உலோகவியல் ஆய்வுகள், தொல் மரபணு பகுப்பாய்வு, பரிணாம வளர்ச்சி மற்றும் மருத்துவ மரபியல், மகரந்த பகுப்பாய்வு, எலும்புகளுக்கான AMS காலக்கணக்கீடு ஆகிய பணிகள் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. கீழடி மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய பகுதிகளிலும் விரைவில் அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு - BBC News தமிழ்
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கொடுமணல்: 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுப்பு – முக்கிய ஆவணம் என தகவல் மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், TN Archeology Department கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணல் பகுதியில், மே 27 ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பட மூலாதாரம், TN Archeology Department இதில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள், பளிங்கு கற்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழி, சுடுமண் அடுப்பு, இரும்பு பொருட்கள் மற்றும் கொள்ளுப்பட்டறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தை கணிக்க உதவும் மனித எலும்புகளை கொண்ட முதுமக்கள் தாழிகள் மிகமுக்கிய தொல்லியல் ஆவணமாக கருதப்படுகின்றன. கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்து தமிழக தொல்லியல்துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் பிபிசி யிடம் பேசினார். "கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் மற்றும் பிற தகவல்கள் உரிய ஆராய்ச்சிக்கு பின்னர் தான் தெரிய வரும். ஆனால், தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆராயும்போது, இந்த பகுதியில் மக்கள் நாகரிகம் இருந்ததும், தொழிற்கூடங்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்றதும் உறுதியாகியுள்ளது." பட மூலாதாரம், TN Archeology Department "பல்வேறு வடிவம் மற்றும் அளவிலான இரும்பு, எஃகு ஆயுதங்கள் மற்றும் நெசவுத் தொழிலுக்கான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, பண்டைய காலத்தில் இப்பகுதி வர்த்தகத்திற்கான முக்கிய நகரமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்தார். மேலும், சமீபத்திய அகழாய்வில் கிடைத்த பல்வேறு வகைகளைச் சேர்ந்த மூன்று முதுமக்கள் தாழிகளில், ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற மனித மண்டை ஓடு, பல், கை மற்றும் கால் எலும்புகள் டி.என்.ஏ ஆய்விற்காக மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ரஞ்சித். பட மூலாதாரம், TN Archeology Department "முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு அவை பாதுகாப்பாக கையாளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கொடுமணலில் மக்கள் வாழ்ந்த காலம் கணக்கிடப்படும்," "பழுப்புசாயம் பூசப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓட்டின் மேல்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன. 'சம்பன்' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட சிறிய குவளை அகழாய்வுக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது," "இதேபோன்று சுமார் 100 தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கலங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 'ஏகன்' என்றப் பெயர் சொல் பொறித்த மட்கலங்களின் ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துகளில் மிகுதியானவை பெயர்ச்சொல்லாக கிடைத்துள்ளன. இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது," என தொல்லியல் துறை அதிகாரி ரஞ்சித் தெரிவித்தார். முதுமக்கள் தாழி எனும் ஈமச்சின்னங்கள் பட மூலாதாரம், TN Archeology Department கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளின் காலம் கி.மு 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கணித்துள்ளார் மூத்த தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜன். "முதுமக்கள் தாழி என்பது இறந்தவர்களுக்காக வைக்கப்படும் ஈமச்சின்னங்கள். தற்போதுவரை, வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கொடுமணலில் கி.மு. 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதர்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இப்போது, உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் கிடைக்கப்பெற்றுள்ள முதுமக்கள் தாழிகளும் இந்த காலத்தை சேர்ந்தவையாகத்தான் இருக்கும். எனவே, அதே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் எலும்புகளாத்தான் இவை இருக்கக்கூடும்" என்கிறார் ராஜன். கொடுமணலில் செப்டம்பர் மாத இறுதிவரை அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது. இதில், மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனhttps://www.bbc.com/tamil/arts-and-culture-54189244
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
தமிழர் வரலாறு: கீழடி கொந்தகை அகழாய்வில் கிடைத்த குழந்தையின் எலும்புக்கூடு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படத்தின் காப்புரிமை https://tnarch.gov.in/keeladi Image caption கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய இடங்களில் இப்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. (கோப்புப்படம்) கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள கொந்தகையில் குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஏற்கனவே கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன. நேற்று, வியாழக்கிழமை கொந்தகையில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இன்று, வெள்ளிக்கிழமை காலையில் நடந்த அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று முழு அளவில் கிடைத்துள்ளது. கொந்தகை ஈமக்காடாக இருந்த இடம் என்பதால் முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இது குறித்து கொந்தகை அகழாய்வு பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். படத்தின் காப்புரிமை Tamil Nadu State Department of Archaeology Image caption இந்த எலும்புக்கூடு ஆண் குழந்தையுடையதா, பெண் குழந்தையுடையதா என்று தெரியவில்லை. "இன்று கொந்தகை அகழாய்வின்போது குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை மூன்று வெவ்வேறு வழிமுறைகளில் புதைக்கும் வழக்கம் இருந்தது. பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டிப் புதைப்பது, தாழியில் வைத்துப் புதைப்பது ஆகிய வழக்கங்கள் இருந்தன. இன்று கொந்தகையில் கிடைத்துள்ள குழந்தையின் உடல் முதல் வழிமுறையில் புதைக்கப்பட்டது. ஏனனில், இன்று கிடைத்துள்ள குழந்தையின் எலும்புக்கூடு இருந்த பகுதியில் மணல் மிகவும் தளர்வாக இருந்தது, " என அவர் தெரிவித்தார். கொந்தகையில் கிடைத்துள்ள எலும்புக்கூட்டின் உயரம் 75 சென்டி மீட்டராக உள்ளது. ஆனால், அது ஆணா, பெண்ணா என்பது குறித்த தெரியவில்லை. பொதுவாக இடுப்பு எழும்பு 'V' வடிவத்தில் இருந்தால் அது ஆண். எலும்பு 'U' வடிவத்தில் இருந்தால் பெண். ஆனால் இந்த எலும்புக் கூட்டில் இடுப்பு எலும்புப் பகுதி சேதமாகியுள்ளதால் வடிவம் சரியாகத் தெரியவில்லை. அகழாய்வில் கிடைத்துள்ள எலும்புக்கூடு உயரம் 75 செ.மீ என்பதால் அது குழந்தையின் எலும்புக்கூடாகத்தான் இருக்கும். ஆனால், குழந்தை இறந்தபோது என்ன வயது என்பது தெரியவில்லை, என அவர் மேலும் தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள மனித எலும்புக்கூட்டை கருப்பு கவரால் குளிக்குள் மூடி வைக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறு நாள் குழியில் இருந்து எலும்புக்கூடு எடுக்கப்பட்டு அதில் இருந்து தேவைப்படும் எலும்புகளை மரபணு சோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறையிடம் ஒப்படைக்கப்டும். உயிரியல் துறையின் மரபணு சோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும். கொந்தகையில் அதிக அளவு மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்து வருகின்றன. எதிர் வரும் காலங்களில் இன்னும் மக்கள் வாழ்ந்ததுக்கான கூடுதல் அடையாளங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொல்லியல் துறைக்கு மிக பெரிய மைல்கல், என்றார் அந்தத் தொல்லியல் ஆய்வாளர்.https://www.bbc.com/tamil/india-53111714
-
நிமிர்ந்த பனை - சூட்
நிமிர்ந்த பனை சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப் போயிருந்தது ஒரு காலம். மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்று பிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சில பேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவன் தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச்சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச்சூழலை பெரிய அளவில் கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவு மக்கள் அடர்த்தியாக வாழும் குடியியல் நிலையையும் கொண்ட பிரதேசம் அது. பகைவனுக்கு முழுமையாக ஒத்துழைத்தது அந்த நில அமைப்பு. அது அவனுக்குச் சாதகமான ஒரு சூழல். அதே சமயத்தில் – இனங்காண முடியாமல் சனங்களோடு இரண்டறக் கலந்திருந்த துரோகிகள் வேறு. இந்தியர்கள் போட்ட எலும்புகளை நக்கிக்கொண்டிருந்தது. இயலுமான அளவுக்கு அவர்களுக்குத் துணைபோன கும்பல்களும் ஆட்களும். இதற்குள் இன்னொரு விடயம் என்னவென்றால் – யாழ்ப்பாண மாநகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வலிகாமம் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதானது இராணுவ அரசியல்ரீதிகளில் மிகமிகப் பிரதானமான ஒன்றாக இந்திய – சிறீலங்காத் தளபதிகள் அப்போதும் இப்போதும் கருதுகிற அளவுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றிருந்த பகுதி இது. அந்தவகையில் – மணலாற்றுக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்ட மையமாகவும் வலிகாமம் பகுதி விளங்கியது. இத்தகைய ஒரு புற நிலைமைக்குள் – உயிர்வாழ்வே உத்தரவாதமற்ற இராணுவச் சூழ்நிலைக்குள் – புலிகள் இயக்கத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு இடையறாது போராடிய வரலாற்று நாயகர்களில் எஞ்சியிருந்தவன் சூட் மட்டும்தான். ராஜன், சுபாஸ், லோலோ, தும்பன், ரெட்ணா, கட்டைசிவா, கரிகாலன்…… என எல்லோரும் அவனைவிட்டுப் போய்விட – அவர்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு போராடியவன் இன்று எங்களை விட்டுப் போய்விட்டான். இப்போது…… அவனது நினைவுகளைச் சுமந்துகொண்டு நாங்கள்…… அந்த இருண்ட இரண்டரை வருடங்கள். அது மிக நெருக்கடியான ஒரு காலகட்டம். வர்ணித்துச் சொல்ல முடியாத ஒரு பயங்கரச் சூழ்நிலை அப்போது நிலவியது. பாசமிகு மக்கள் பாதுகாத்து இடமளிக்கத், தூங்கப்போகும் இரவுகள் தூக்கமற்றுப் போகும். ஓரோசையுமற்று அசையும் இரவில், தூரத்து நாயோசை இந்தியன் நகரும் சேதியைச் சொல்லும். திடீரென ஒரு பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்தச் சூழ்நிலையில் அது இயல்பானது. நாய் குரைப்புச் சத்தம் அகோரமாய் நெருங்கும். அது ஒரு அச்சமூட்டும் குறியீடு. விரிந்து நகர்ந்து வட்டமிட்டுச் சுருங்கி எதிரி முற்றுகையிடுகிறபோது, நாயோசை உச்சகட்டத்தில் இரையும். நெஞ்சு விறைத்துப் போகும். நள்ளிரவின் அமைதி சிதைய ஊர் துடித்து விழிக்கும். தங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மனங்கள் ‘பிள்ளைகளைக்’ காக்கச் சொல்லியும் இறைவனிடம் மன்றாடும். துப்பாக்கிகள் தயாராகும். தேர்வு நெம்பு, தானியங்கிக்கு மாற, சுட்டுவிரல் சுடுவில்லை வளைத்துக் கொள்ளும். இருளை ஊடறுத்து விழிகள் முன்னேறும். எதிரி எதிர்ப்படும் கணத்தில் சன்னங்கள் பாய முற்றுகை உடைபடும். தப்பித்து மீண்டு, சொல்லப்பட்ட இடமொன்றில் சந்திக்கின்ற போது தோழர்களில் ஒருவனோ இருவரோ வந்திருக்க மாட்டார்கள்……. ஆள் விட்டுப் பார்த்து ஆமி இல்லை என்ற பின் மெல்ல நடந்து வீதி கடக்கும் போது, சடுதியாய் எதிர்ப்படும் சிற்றூர்திக்குள்ளிருந்து துப்பாக்கிகள் உறுமும், ஆளையோ, அல்லது ஆடைகளையோகூட சன்னங்கள் துளையிடும். உரப்பைக்குள் இருக்கும் எங்கள் துப்பாக்கியின் சூடு தணியும்போது, நாலாவது வேலி கடந்து நாங்கள் ஓடிக்கொண்டிருப்பம். எம்மை முந்திக்கொண்டு எதிரியின் சன்னங்கள் சீறும். ‘முற்றுகையிடுகிறான் பகைவன்’ என நினைத்து அடித்து உடைத்துக்கொண்டோ, அல்லது வலு அவதானமாக நகர்ந்தோ அவனைக் கடந்து மறுபக்கம் போய் ‘தப்பி வெளியேறி விட்டோம்’ என மகிழும் வேளை இப்போதுதான் முற்றுகைக்குள்ளே வந்து சிக்கிப்போயுள்ளோம் என்பது தெரியவரும். நடந்த தவறு விளங்கும் போது தலை விறைக்கும். ‘பிரச்சினை இல்லாதவை’ எனக் கருதி இரவில் படுக்கப்போகும் இடங்கள், அதிகாலையில் எதேச்சையாகச் சுற்றிவளைக்கப்படுகின்ற துரதிஸ்டம் நிகழும். சந்தர்ப்பவசமாகச் சிக்கிக் கொண்டு விடுகிற அந்த விபரிக்க முடியாத சூழ்நிலைகளில் ‘வாழ்க்கை வெறுக்கும்’. “எல் ரீ ரீ” எனக் கத்திக்கொண்டு இந்தியன் எட்டிப் பிடிக்கும் போது, ‘கதை முடிந்தது’ என்று குப்பியைத் தொடும் வேளையிலும், இறுதி நேர முயற்சியாக உதறிப் பறித்துக் கொண்டு தப்பி ஓடுகிறபோது நெஞ்சுக்குள் தண்ணிவரும். இப்படியாக ஏராளமான மயிரிழைகள். சன்னம் துளைத்தவர்களையும், ‘சயனைட்’ அடித்தவர்களையும் தவறவிட்டு தப்பித்து வந்தபோதெல்லாம், அந்த ஆருயிர் நண்பன் ஓரமாய் இருந்து கண்ணீர் சொரிவான். ஆனால், ஒருபோதும் அந்தப் புலிவீரனின் உள்ளம் தளர்ந்து போனதில்லை. நெருக்கடிகள் கூடிக்கூடி அழுத்திய போதெல்லாம் இறுகிக்கொண்டே போனது அவனுடைய மனவுறுதி. கற்பாறையைப் பிளந்து முளையிடும் துளிராகி – இந்தியர்களின் கூடாரங்களுக்கு நடுவில் அவன் நிமிர்ந்தான். எதிரி வளைத்து நின்ற மண்ணில், கைவிடாத துப்பாக்கியோடு கடைசி வரைக்கும் வலம்வந்து போராட்டத்தை உயிர்த்துடிப்போடு உயர்த்திச் சென்ற வேங்கை அவன். மரணம் அவனது உயிரை உரசிச் சென்ற போதெல்லாம் தப்பித்து மீண்டுவந்து ‘என்ன நடந்ததோ……?’ என ஏங்கி நின்ற எங்களின் முன் கண்குளிரக் காட்சியளித்து ஆச்சரியப்படுத்திய வீரன். கட்டைக் காற்சட்டையும் சேட்டுமாக அந்தச் ‘சின்னப் பொடியன்’ தோற்றத்தில், இந்தியர்கள் பலதரம் ஏமாந்திருக்கிறார்கள். மூலைமுடுக்கெல்லாம் நுழைந்து இந்தியர்கள் ஒத்தியெடுத்த வேளைகளிலெல்லாம், அவன் நேசித்த மக்களால் பொத்திவைத்துப் பாதுகாக்கப்பட்ட குழந்தை. எப்படி அவனால் நின்றுபிடிக்க முடிந்தது……? அது அதிசயம் தான்! ஆனால், அவனைப் பாதுகாத்தது வெறும் அதிர்ஸ்டம் மட்டுமல்ல. விவேகம், புத்திக்கூர்மை, மக்கள் செல்வாக்கு அவனுடைய சின்ன உருவம் இவற்றுக்கு மேலாக அவனுடைய உறுதியும் துணிச்சலும். இவைதான் அவனை உயிர்வாழச் செய்வித்தன. அடுத்த காலை நிச்சயமற்றிருந்த அந்த நாட்களில் அவனோடுதான் நம்பிக்கையோடு தூங்கப் போகலாம். சாவு எங்களைத் தட்டி எழுப்பிய எத்தனையோ தடவைகளில் தப்பி வந்தது அவனால்தான் எனலாம். அப்போது யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த பொட்டம்மானும் தோழர்களும் அவனது ‘ஒழுங்கமைப்பு’ களால் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். ‘மக்கள் நேசம்’ அவனது உயரிய குணாம்சங்களில் ஒன்று. அவன் அவர்களில் வைத்த அன்பு அவர்களை அவனில் பாசம் வைக்க வைத்தது. அந்த நெருக்கம் அலாதியானது; அதுதான் அவனுக்கு கவசமாகவும் இருந்தது. அந்த நேசத்தின் தொடக்கம் – அவன் போராளியான ஆரம்பம். அது 1984 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி. தனது பதினேழாவது வயதில் இயக்கத்தில் சேர்ந்தவன்இ அப்போது முதல் அந்த மக்களுடனேயே வாழ்ந்தான். அந்த மக்களுக்குக் காவலாய் இருந்தான். அவன் மக்களை அணுகிய விதமே வித்தியசமானது அதனால்தான் அவர்கள் அவனை நெஞ்சிலிறுத்தி வைத்திருந்தார்கள். ‘மற்ற இயக்கங்களின் ஊர்கள்’ என்று ஒதுக்கிய கிராமங்களில்தான் தூக்கமும், வேலையும். ‘மற்ற இயக்கங்களின் ஆட்கள்’ எனப்பட்டவர்கள் வீடுகளில்தான் குளிப்பும், சாப்பாடும். எல்லா ஊரையும் எம்முடையதாக்கி, எல்லாப் பேரையும் எம்மவர்களாக்கினான். 31.05.1967 அன்று தனலட்சுமி அம்மாவுக்கும், நவரத்தினம் ஐயாவுக்கும் பிறந்தவனுக்கு விக்னராஜன் என்று பெயரிட்டார்கள். தனது 16 ஆவது வயதிலேயே ‘புலிப்படைப் பொடியளுக்குப் பின்னால்’ திரியத் துவங்கிவிட்டான். பாயில் தலையணை அடுக்கி ஆள்மாதிரிப் போர்த்துவிட்டு இரவில் காணாமல் போனவன்…… ஸ்ரான்லி கொலிச்சில் தம்பியையும், தங்கையையும் இறக்கிவிட்டு, உள்ளே வராமல் மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு மற்றப்பக்கமாப் போனவன்…… போய்ப்போய் வந்தவன்…… ஒருநாள் ஒரேயடியாகப் போய்விட்டான். சூட் ஒரு அற்புதமான போராளி. தனது அழகான ஆளுமையால் தோழர்களைத் தன்னோடு இறுகப் பிணைத்திருந்த நண்பன். கண்டிப்போடும், பரிவோடும் அரவணைத்து வருடிய இனிய காற்று, அவர்களில் அவன் பொழிந்த பாசமே தனி. மனங்குழம்பிப்போகின்ற எந்தப் போராளியையும் ஆதரவோடு கதைத்துத் தெளிவூட்டுகிற போது, அவனொரு பேராசான். முழுமையாக என்று சொல்லாவிட்டாலும் – இயக்கத்தின் நீண்ட வரலாற்று ஓட்டத்தோடு பெருமளவு கலந்து, அமைதியாக, ஆரவாரமில்லாமல் – தனது செயலால் வளர்ந்து – மெல்ல மெல்ல உயர்ந்தவன். சூட் ஒரு சண்டைக்காரன் அல்ல, அதற்காக சண்டை தெரியாதவன் என்றும் சொல்லிவிட முடியாது. அதாவது அவன் தேர்ச்சிபெற்ற யுத்த வீரன் அல்ல. அப்படியானால் அவன் முன்னுக்கு வந்தது? அது சண்டைகளால் அல்ல; சண்டைக்கு வெளியில் நின்று அவன் போராட்டத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகளால். தான் பணியாற்றிய துறைகளிலெல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் பேர் சொல்லும் முத்திரைகளைப் பதித்து வளர்ந்த போராளி. சண்டைக்கு வெளியில் நின்ற எல்லாப் போராளிகளையும் போல அவனும் போர்க் களத்துக்குப் போகத்தான் துடித்தான். ஆனால், அவனது தேவை அவனை அதிலிருந்து தள்ளியே வைத்திருந்தது. ஒரு விடுதலை வீரனின் போராட்டப் பணியானது இராணுவ அளவுகோல் மட்டும் அளவிடப்பட முடியாதது. சண்டையிடுவதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பிரதான அம்சம். ஆனால், அது மட்டுமே போராட்டம் ஆகாது. சண்டை என்பது, போராட்டம் நகர்த்திச் செல்லப்படும் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று. சண்டைகளில் நிற்காத போதும் உண்மையான அர்ப்பண உணர்வோடு வாழ்ந்து – போராட்டத்தின் ஏனைய பரிமாணங்களோடு அபார திறமையாகக் காரியங்களைச் சாதித்த எத்தனையோ போராளிகளுள் அவனும் ஒருவன். இந்தியப்படை வெளியேற்றப்பட்டுவிட்டது. இப்போது அவன் புலனாய்வுத்துறையில். பொட்டம்மானின் உற்ற துணைவர்களாக நின்று, இயக்கத்தையும் – போராட்டத்தையும் – தேசத்தையும் பாதுகாத்த முதன்மையான போராளிகளுள் ஒருவனாக சூட் அல்லும் பகலும் ஓய்வற்றுச் சுழன்றான். துவக்கத்தில் யாழ். மாவட்ட புலனாய்வுத் துறைப் பொறுப்பாளனாகப் பணி. அவன் பொறுப்பை ஏற்றபோது அங்கு இருந்த சூழ்நிலை வித்தியாசமானது. அதனால் மிக்க அவதானமாகவும், மிக்க நிதானமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு அடிகளை வைத்தான். நேற்றுவரை எதிரியினால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பிராந்தியம் இன்று திடீரென – ஒரேநாளில் எங்கள் கைகளுக்கு வந்துவிட்ட காலகட்டம் அது. இந்தியாவின் எச்சசொச்சங்கள் எங்கும் பரவியிருந்த நேரம். ‘மக்களே போல்வர் கயவர்’ என்று அன்றொரு நாள் வள்ளுவன் சொல்லியிருந்ததைப் போன்ற நிலைமை. எவரிலுமே சந்தேகம் எழக்கூடிய சூழல். மிகக் கவனமாக இனங்கண்டு பிரித்தறிய வேண்டும். எங்கள் புலனாய்வு நடவடிக்கைகளில் தவறு நேர்ந்து, அது மக்களைப் பாதித்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புலனாய்வுத் தவறுகளினால் மக்கள் எவ்விதத்திலும் துன்பப்பட்டுவிடக்கூடாது, அத்தகைய அவதானத்துடன் செயற்படும்போது நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் நிதானமானது, துரோகிகளுக்கு வாய்ப்பளித்து அவர்கள் சுலபமாகச் செயற்பட இடமளிக்கவும்கூடாது. இப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையில் பொறுப்பெடுத்து, மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தனக்குரிய பணியை சூட் செய்து முடித்தான். நாட்கள் உருண்டன. புலனாய்வுத்துறையின் முக்கியமான ஒரு போராளியாக, அதன் தாக்குதற் படைப்பிரிவுக்குத் தளபதியாக, இயக்கத்தின் ‘கரும்புலிகள்’ அணி ஒன்றுக்குப் பொறுப்பாளனாக சூட் படிப்படியாக உச்சத்துக்கு வந்தான். இயக்கத் தலைமையினது அதீத நம்பிக்கைக்கு அவன் பாத்திரமானான். முக்கியத்துவம் மிக்க ஒரு கரும்புலித் தாக்குதல். இலக்குப் ‘பெரியது’ எனவே ஒழுங்கமைப்பும் பெரிதாக இருந்தது. திட்டம் தீட்டப்பட்டபோது பொட்டம்மான் சூட்டைத்தான் தெரிந்தெடுத்தார். தியாகமும், துணிச்சலும், இலட்சிய வேட்கையும் போக – மதிநுட்பமும், விவேகமும், செயற்றிறனும் அதிகமாகத் தேவை. இவையெல்லாம் ஒருங்கிணைந்தவன் சூட். ஆனால் தலைவரோ ஆளை மாற்றச் சொன்னார். இந்தப் பணியை விடவும் அதிகமாகப் போராட்டத்துக்கு அவன் பயன்படுவான் என்று அவருக்குத் தெரிந்தது; உண்மைதான் – ஆனாலும், தாக்குதலின் முக்கியத்துவத்தையும், அதன் பிசகாத – துல்லியமான – வெற்றியையும் கருத்திற்கொண்டு பொட்டம்மான் சூட்டைத்தான் வலியுறுத்தினார். இருந்தபோதும் – தலைவரது கருத்திற்கிணங்க கடைசியில் முடிவு மாற்றப்பட்டது. அதன்பின்னர் – எங்களது இன்னுமொரு கரும்புலிவீரன் அந்த ‘இலக்கை’ மிக வெற்றிகரமாகத் தாக்கி அழித்து வரலாற்றைப் படைத்தான். பூநகரிச் சமருக்குப் புறப்படும்போது சூட் தேர்ச்சிபெற்ற ஒரு சண்டைத் தளபதியாக விளங்கினான். ஆனால், அவன் இராணுவ ரீதியில் மேலோங்கியதானது நீண்டகால அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சிகண்டு அல்ல. நன்றாக இனங்காணப்பட்டு, திடீரென அவனுக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. குறுகியகால இராணுவப் பணியையே அவன் ஆற்றினான். ஆனால், அந்தச் சொற்ப காலத்துக்குள்ளேயே, பெருந் தளபதிகளினது மதிப்பையும், பாராட்டையும் அவன் பெற்றுவிட்டிருந்தான். அது ஒரு இலேசான காரியமல்ல. அவனது குறுகியகால இராணுவ வளர்ச்சி அசாத்தியமான ஒரு சாதனை. பூநகரிப் பெரும் போர்க்களம். பல்வேறு படையணிகள், பல்வேறு சண்டைமுனைகள், பல்வேறு வழிமுறைகள். பரந்த ஒரு பிரதேசத்தில் எழுந்து நின்ற எதிரியின் பெரும் படைத்தளம் ஒன்றின்மீது – அதன் அரண்களிலும் சமநேரத்தில் தாக்கி – புலிகள் நிகழ்த்திய மிகப்பெரிய படையெடுப்பு. ஒரு முனையில் சூட்டின் படையணி. எதிரியின் அரண்தொகுதி ஒன்று, சூட்டினது படையணிக்குரிய இலக்கு. அதன் அருகிலிருந்த இன்னொரு அரண்தொகுதி லெப். கேணல் குணாவின் படையணிக்குரிய இலக்கு. இரண்டு அணிகளும் தமது இலக்குகளை வீழ்த்திய பின் ஒன்றிணைந்து பிரதான தாக்குதலணி ஒன்றுக்குத் தோள் கொடுக்கவேண்டுமென்பது திட்டம். ஆனால் விசயம் பிழைத்துவிட்டது. பூநகரி வெற்றியின் முதல் வித்தாக, சண்டையின் ஆரம்ப நாட்களிலேயே குணா வீழ்ந்து போக – அந்தப் பகுதியில் சண்டை திசை மாறிவிட்டது. தமது இலக்கைக் கைப்பற்றிய சூட்டினது அணி முன்னேறிய போது, குணாவினது பகுதி பிசகிவிட்டிருந்தது. எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை; எதிரி அங்கு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தான். துணை சேரவேண்டிய அணிக்குத் துணை கொடுக்க வேண்டிய நிலை. மூர்க்கத்தனமான தாக்குதல் குணாவுக்குரிய பகுதிமீது ஆரம்பித்தது. இறுக்கமான சண்டை. ஆர்.பி.ஜி. குண்டின் சிதறல்பட்டு அவனது எம். 16 உடைந்து போக, அருகில் நின்ற தோழனிடம் ரி. 56 ஐ வாங்கிக்கொண்டு சூட் முன்னேறினான். கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்த எதிரியின் பலமான அரணொன்றை சூட் ஆக்ரோசமாக நெருங்கினான்…… தனி ஆளாகப் பாய்ந்தான். எதிரிக்கு அருகில் அவன் முன்னேறினான்…… மிக அருகில்…… போய்விட்டான்…… போனவன் திரும்பி வரவில்லை. அன்பு, குணா, நவநீதன், பாமா, றூபன், கணேஸ், கோபி, அவன்…… என்று 458 தோழர்கள்…… வெற்றியைத் தந்தவிட்டு வராமலே போய்விட்டார்கள்! தமிழீழம் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறது; அந்த மைந்தர்களின் நினைவோடு; அவர்கள் பெற்றுத் தந்த வெற்றியின் பெருமிதத்தோடு. இப்போது…… நம்பிக்கையோடு காத்திருக்கிறது…… அடுத்த வெற்றிக்காக! நன்றி: விடுதலைப்புலிகள் இதழ்
-
கிட்டண்ணா ஒரு அற்புதமான போராளி
கிட்டண்ணை எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம் இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார்.ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நீண்டவிரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு,அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரணமனிதர் அல்ல கிட்டண்ணை.அவரது எல்லா சிந்தனைகளும் செயல்வடிம் பெறவேண்டும் என்பதில் விடாபிடியானவர்.கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தான்நினைத்ததைச் செய்ய வைக்கும் திறன் அவரதுதனித்துவமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு நேரில்நின்று சரிபார்த்து அவற்றைஒழுங்கமைப்பார் குட்டிசிறியின் மோட்டார்செல்லுக்கு கரி மருந்து அளவு பார்ப்பதிலிருந்து நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை எதுவாயிருந்தாலும் தானே நின்று சரிபார்த்து ஆரம்பித்து வைத்தால்த்தான் அவருக்கு திருப்தி.கிட்டண்ணையின் இராணுவ நிர்வாகத்திறன் உலகறிந்த விடயமாகும் தானே சண்டைக்களங்களில் முன்நின்று வழிநடத்துவது அவரது தனிப்பண்பு.1987 க்கு முன்னைய காலங்களில் யாழ்க் குடாநாட்டிற்குள் இராணுவ நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு அவர் பயன்படுத்தியது தன்வசமிருந்த குறைந்த ஆயுதங்களையும் போராளிகளையும் மட்டுமல்ல எதிரியை முட்டாளாக்கும் தந்திரோபாயத்தையும் தனது மனவலிமையும் சேர்த்தே பயன்படுத்தினார்.நெருக்கடியான நேரங்களில் அவர்காட்டும் மனவலிமை நம்ப முடியாததாய் இருக்கும். அடையாளம் தெரியாத எதிரி அந்த வீரனுக்கு குறிவைத்த ஒரு மங்கலான மாலைப்பொழுது.வழமையாக எரிந்து கொண்டிருக்கும் மின்குமிழ் எரியவில்லை.அவரது கார் நிறுத்தப்பட்டு கதவைத் திறந்து இறங்க முற்படும் வேளையிலேயே அந்தநிழலான உருவத்தின் அசைவு உள் உணர்வுகளை எச்சரிக்கிறது.நிதானிப்பதற்கிடையில் வந்து விழுந்தது கிரனேட் தான் என்று அவசரமாக வெளியேற முற்பட்ட வேளையிலேயே அது வெடித்துவிட்டது.ஆசையாய் வைத்திருந்த சின்னக் காரின் ஸ்ரெயறிங் கிற்குள் சிக்குப்பட்ட காலை இழுத்து எடுப்பதற்கிடையில் வெடித்துவிட்டது.இதுவரை நிகழ்ந்தவை சாதாரணமானவைகள்.எந்த ஒருவருக்கும் ஏற்படகூடியவைதான் ஆனால் அதன்பின்னர் அவர்நடந்து கொண்டவிதம் கிட்டண்ணைக்கேஉரிய தனித்துவம்வாய்தது . முழங்களுடன் துண்டாகிப்போய் துடித்துக்கொண்டிருந்தது அவரது கால் கிரனேட் வந்த திசையைநேக்கி அவரது ரிவோல்வர் மூன்று சூடுகளைச்சுட்டு ஓய்ந்தது.அவரது நினைவு மங்குகிறது.முழுமையாய் இருந்த ஜீன்ஸ் பக்கத்தைக் கிழித்து துண்டாகிப்போன காலுக்குத்தானே கட்டுப்போட்டுக்கொண்டிருக்கையில் நினைவு மேலும் மங்குகிறது. உள் உணர்வு அவரை எச்சரித்தது. கிரனேட் எறிந்தவன் அருகில் வருவான் அவனைச் சுடவேண்டும் என்ற உணர்வு அவரை முழுமையாக மயங்கிப்போய்விடாமல் வைத்திருக்கிறது கிரனேட் எறிந்தவன் வருவான் வருவான் எனத்திரும்பத்திரும்ப நினைத்துத்தன்னை முழுமையாக மயங்கிப்போய்விடாமல் வைத்திருந்தார்.மூன்று சூடுகளைச் சுட்டு விட்டேன்.ரிவோல்வரில் இன்னும் மூன்று ரவைகள்தான் மிச்சமாய் உள்ளது.என்பது என்பது நினைவில் உறைக்கும்போது அவர் மயங்கிக்கொண்டிருந்தார். வைத்தியசாலை இவ்வளவுபக்கத்தில் இருந்தபடியால்தான் அவர் உயிர் தப்பினார் என்பதும் சந்திரசிகிச்சை அறைக்கு எடுத்துச்செல்லப்பட்ட கணத்தில் அவரது இதயத்துடிப்பு முற்றாகவே நின்றுவிட்டிருந்தது.என்பதும் அவர் உயிர் தப்பியது மருத்துவ உலகின் புதினம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள். அவர் காயப்பட்டு இரத்தவெள்ளத்தில் மயங்கிக்கிடந்த இடத்தில் தனது ரிவோல்வரை இறுகப்பற்றியபடி கிடந்தார் என்பதும் தனது ரிவோல்வரில் சுட்டுவிட்ட ரவைக்களுக்குப்பதிலாக புதிய ரவைகளை மாற்றிப் போட்டிருந்தார் என்பதும் ஆனால் நினைவு தப்பிய நிலையில் அவர் வெற்றுக் கோதுகளுக்குப் பதிலாக மீதியாய்இருந்த நல்லரவைகளை வெளியே எடுத்துவிட்டு அந்த இடத்யிற்கே புதிய ரவைகளை போட்டிருந்தார் என்பதும் அனேகம் பேருக்கு தெரியாத விடயங்கள் அன்று மட்டுமல்ல தனது போராட்ட வாழ்வின் ஒவ்வொரு நாட்களிலும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது மனஉறுதியை வெளிப்படுத்தினார். அதுவரை காலமும் யுத்த முனைகளிலும் தாயக பூமியின் எல்லாப் பரப்பிலும் கம்பீரமாய் உலாவிவந்த வேங்கை கால்உடைந்து கட்டிலில் விழ்ந்தபோதும் தன்னைச் சோர்வு சூழவிடவில்லை.எந்தச்சந்தர்ப்பத்திலும் போராட்டத்திற்கான,போராளிகளுக்கான எந்தவொரு வேலையையும் பொறுப்பேற்றுச் செய்ய கிட்டண்ணை தயங்கியதில்லை தனக்கு ஒப்படைக்கப்படும் வேலை தனது தனிப்பட்ட நிலையினை எப்படித் தீர்மானிக்கும் என்பது பற்றி ஆராயாமல் இலட்சியத்திற்காக உழைத்தவர் .தலைவர் அவர்களின் தனிப்பட்ட மெய்க்காவலராக இருந்த போதிலும்சரி தலைவர் அவர்களுக்கு அடுத்தடுத்தபடியான தலைவனாக வளர்ந்து இருந்தபோதிலும்சரி அவர் இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறவே இல்லை. 1983 இன் ஆரம் நாட்கள் எம்மில் பன்னிருவருக்கான பயிற்சி. எல்லாமாக இருபத்தைந்துபேர்வரையில் உள்ளடங்கிய காட்டு வாழ்கை பஸ் ஸில் போய் கிளிநொச்சி அங்காலை எங்கையே இறங்கி இருளும்வரை ரோட்டில் நின்று ரைக்ரரில் ஏறி உள்ள காடெல்லாம் சுத்திச் சுழன்று நடுக்காட்டில் ஒரு சிறியகொட்டிலுக்குப்போய்ச் சேர்ந்தோம் வடக்கு எது கிழக்கு எது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு நின்று அதிகாலை முடிந்து விடியும்போது பார்த்தால் சூரியன் மற்றப்பக்கத்தால் உதிக்கிறது.அனேகமாக உடையார்கட்டுப் பக்கமாக இருக்கவேண்டும். எமது பொறுப்பாளர்களில் அநேகரை தெரியும் சிலரை தெரியாது கிட்டண்ணையை நல்லாகவே தெரியும்.கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பவர்கள் என்றுசொல்லி அவர்தான் எம்மில் இருவருக்கு ஒரு வீட்டில் அறை எடுத்துத்தந்துருந்தார்.தினமும் பின்னேரம் வந்து கோஸ் ரணிங் செய்யச் சொல்லிவிட்டு வாட்டத் தொடங்கினால் மனுசன் என்னத்தைச் சொல்ல வாழ்கை வெறுக்கும்... வேகம், வேகம்,இன்னும் இன்னும் என்று சொல்லி 5 மணிக்கு தொடங்கியது ஏழெட்டு மணிக்கு முடியும்போது அந்தப்பெரிய விராந்தை நிலம் வியர்வையால் நிரம்பி ஓடும் அதுவரை எதுவும் கதை இல்லை இங்கிலீசும் தமிழுமாய் செய் ,செய் ' என்பதுதான் இயலாது என்றால் அப்ப உனக்கு ரெயினிங் இல்லை போ என்னத்தைத்கதைப்பது அதற்குப் பிறகுதான் என்முடன் அன்பாகக் கதைப்பார். ரஷ்ய மொழிபெயர்ப்பான தாய் நாவலை முழுமையாகப்படிக்கும்படி தந்திருந்தார். அது பற்றிக் கேள்விகள் கேட்ப்பார்.பாவலின் நண்பர்களின் பெயர் கேட்ப்பார்.காதலி பெயர் கேட்ப்பார்.ஆரம்பத்தில் வாசிக்கும்போது பழக்கமின்மையால் கரடு முரடானதாகத் தெரியும் மொஸ்கோ மொழி பெயர்ப்பு நூல்களை வாசிப்பதில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர்தான்.இப்படி எமக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தவர் எமது காட்டுப் பயிற்சி முகாமில் இருக்கிறாரா என்று தேடினால் ஆள் வருகின்றார் கையில் அகப்பையுடன் எல்லோரும் நல்லாய்ச் செய்யச் செய்ய வேண்டும் என்றும் தான்தான் இங்கு சமையல் என்று குட்டியாய் லெக்சர் அடித்துக்கொண்டு நின்றுவிட்டுத் தலைவரை கண்டதும் ஓடி ஒழிந்தார்.பெரிய பொறுப்பாளனாய் ஒருவரை எமக்கானசமையல்காரராய்ச் சந்திப்பது நம்பமுடியாத அனுபவமாயும் புதிய பாடமாயும் அமைந்தது.எமது அந்த முகாமின் சமையல் வேலை என்பது அந்தக் காலத்தில் சுலபமானதல்ல குறுகிய காலம் பயிற்சி என்பதால் மிகவும் நெருக்கமான நேர அட்டவணை உடற்பயிற்சி ஆசிரியர் புலேந்தி அம்மான் போட்டு வாட்டிப்போட்டு விட்டால் அடுத்த சந்தோசம் மாஸ்டரின் வகுப்பிற்கு இடையில் உள்ள குறுகிய உணவு வேளையில் சமையல் கொட்டிலுக்குப் போவது நடந்து அல்ல போகும் வேகத்திற்கு அங்கே தடிகளால் கட்டிய சிறாம்பில் உணவு தட்டுகளில் போட்டு மூடி வைத்திருக்கும் கிட்டண்ணையும் ரஞ்சனும் இணைந்து சமையல் மூன்று வேளையும் நேரம் தவறாமல் உணவு கொடுக்க ஒருநாள்கூட நேரம் தவறியதாகவோ வேலையில் சினந்ததாகவோ நினைவில் இல்லை.ஆனால் தங்களது வேலைச்சுமையைக் குறைப்பதற்கான குறும்பு இருக்கும். உணவு தட்டுகளில் இலக்கம் இடப்பட்டுஇருக்கும்.தட்டுக்களை இலக்கம் மாறி எடுப்பவர்கள் அன்றைய சமையல்பாத்திரங்களைக் கழுவிக் கொடுக்க வேண்டும்.ஆரம்பத்தில் தட்டு இலக்க ஒழுங்கில் இருந்தன. பிரச்சனை இல்லை.இடையில் ஒருநாள் எல்லாம் மாறி இருந்தது. யார்பார்த்தது அன்று நாங்கள் பாத்திரம் கழுவினோம்.பார்த்து சிரித்தார்கள் ஆனால் பின்னர் நாங்கள் உசாராகிவிட்டோம்.றெஜிக்கு இலக்கம் ஆறு விக்ரருக்கு இலக்கம் ஒன்பது.அவர்கள் அடிக்கடி கழுவிக் கொடுத்தார்கள் அவர்கள் சரியாக எடுத்தாலும் இவர்கள் விட்டாதானே.இப்படி பம்பலும் குறும்புமாய்த் தான்.ஆனால் கடமை தவறியதில்லை.சமையலில் அலட்சியம் இருந்தது இல்லை. நீண்டகாலஓட்டத்தின்பின் ஒரு நாள் தலைவர் கூறுகிறார்-என்ன கடமையாக இருந்தாலும் அதைப்பொறுப்போற்றுச் செய்யப்பின் நிற்கக் கூடாது. கடமையில் உயர்ந்து தாழ்ந்தது என்றில்லை ஆரம்பகாலத்தில் ஒருமுறை எமது புதிய பயிற்சி முகாம் ஒன்றில் எல்லோரும் வேலைகள் பங்கிட்டு நிர்வாகத்தைச் சீர் செய்து கொண்டு இருந்தவேளை-கிட்டுதானே முன்வந்து அனைவருக்குமான சமையல் வேலையைப் பொறுப்பெடுத்து செய்தார். புதியபோராளிகளுக்கு தலைவர் எடுத்துச் சொல்லும் விடயத்தை அன்று நாங்கள் நேரே கண்டோம்.அது எமக்கு போராட்டம் பற்றியும் ஒரு பாடத்தை வித்தியாசமான முறையில் எடுத்துச் சொல்லியது .கிட்டண்ணை வேலைகள் பொறுப்பேற்பதிலும் அந்தஸ்தினை தரத்தினைப் பார்ப்பது இல்லை.ஆனால் அவர் வேலை ஒழுங்கு செய்யும் விதமும் செய்து முடிக்கும் பாங்கும் அந்த வேலைக்கு ஒரு அந்தஸ்தினை உயர்தரத்தினை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை. கிட்டண்ணை இறுதியாக நாட்டைவிட்டுப் புறப்படும்போது காலத்தில் அவர் மிகவும் நொந்து போயிருந்தார்.இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட தன்னையும் சக போராளிகளையும் விடுவிக்கும்படி சிறையில் உண்ணாவிரதம் இருந்ததும் அதனைத் தொடர்ந்து அவர் யாழ்நகரில் விடுவிக்கப்பட்டதும் அதன் பின்னர் அவர் மணலாற்றுக் காடு சென்று தலைவருடன் இணைந்து கொண்டதும் தெரிந்தவைதான்.தன்னுடன்இறுதிவரை துணைநின்ற போராளிகள் சிறையில் வாடுவதையும் இந்தியர்கள் தன்னைமட்டும் விடுவித்துவிட்டு தன்தோழர்களை சிறையில் வாட்டுவதையும் சொல்லிச் சொல்லி வேதும்புவார் என்ரை கோஸ்டி எல்லாத்தையும் என்னட்டை இருந்து பிரிச்சுப் போட்டாங்கள் மச்சான் என்று சொல்லும்போது அந்த வீரனின் நெஞ்சின்ஈரம் கண்களில் வந்து நிற்கும்.கிட்டண்ணை சர்வதேச தொடர்பாளராக நாட்டை விட்டுப் புறப்படுவது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.எந்த வேலையாக இருந்தாலும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவரது வழமையான நடைமுறைக்கு சோதனையாக வந்தது இம்முடிவு.எங்கோ ஒரு ஜரோப்பிய நாட்டில் எம் தாயக மண்ணை விட்டு வெகு தொலைவில் தான் உயிராய் நேசித்த போராளிகளை விட்டுப் பிரிந்து ..தன் மக்களை விட்டுப்பிரிந்து தாய் தந்தையாய் தன்னை வளர்த்த தலைவரை விட்டுப்பிரிந்து.... நினைத்து நினைத்துக் கலங்கினார். மணலாற்றுக்காடு.நான் அப்போது யாழ் மாவட்ட நிர்வாகத்தை பானுவிடம் ஒப்படைப்பதற்காக யாழ்ப்பாணம் புறப்பட இருந்தேன்.எம்மிடையே நீண்ட பிரிவு வரப்போகிறது என்பது தெரிகிறது.சிறிய வட்டக் கொட்டிலில் வைத்து கதைக்கத் தொடங்கினார்.இயக்கத்தில் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி தலைவரின் எண்ணங்களுக்கு நாம் எப்படி செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி எமது போராட்டத்திற்காக என்ன வேலை ஒப்படைக்கப்பட்டாலும் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் .எமது கடமையை மேலும் மேலும் சிறப்பாகச் செய்வதற்கு வேண்டிய சகல முயற்சிகளிலும் இறங்க வேண்டும் எனக்கு என்ன வேலை எண்டாலும் செயவன் எங்களின்ரை பெடியளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை எண்டாலும் செய்வன்.அதை எப்படி வெள்ளையாய் தோய்ப்பது என்று ஆராய்ச்சி செய்வேன்.எனக்கு இது பிரச்சனை இல்லை. எனது பொறுப்பு மாற்றத்திற்காக சொன்னாரா?அல்லது தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் தனது மனப் போராட்டத்திற்கு தனக்குத் தானே சொன்னாரோ தெரியாது. அவர் சொல்லிகொண்டே இருக்கின்றார்.தூரத்தே கேட்கும் சில் வண்டுச் சத்தத்தைவிட காடு நிசப்தமாய் இருக்கிறது நீண்ட கனத்த மௌனத்தின் பின் எங்கடை சனத்தையும் இந்த மண்ணையும் விட்டுட்டுப் போகப் போறன் மச்சான் இனி எந்தக் காலமோ சொல்லி முடிக்காமல் குமுறிக் குமுறிக் அழத் தொடங்கினார்.எமது தாயகத்தின் மீது எமது மக்களின் மீது எமது விடுதலைப் போராட்டத்தின் மீது எமது தலைவர் மீது அவர் வைத்திருந்த பாசம் பற்று அளவிடமுடியாதது ச.பொட்டு மாசி- 1993 இதழ் 11 வெளிச்சம் இதழில் வெளியானது.
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி நாகரிகம்: ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா? #GroundReport பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள், மண்டைஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த முதல்கட்ட அறிக்கைகூட மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்கிறார்கள் பண்பாட்டு ஆர்வலர்கள். 'மத்திய,மாநில அரசுகளின் கவனமின்மை' தமிழக அரசால் ரூ.22லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி தகவல் மையம் பயன்பாடு இல்லாமல், மதுஅருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நேரில் பார்த்தபோது அறிந்துகொள்ள முடிந்தது. பிபிசிதமிழ் செய்திக்காக ஆதிச்சநல்லூர் கிராமத்தில் உள்ள அந்த மையத்திற்கு நாம் சென்றபோது அந்த மையத்தின் வெளிப்புற கதவுகள் திறந்தே இருந்தன. பாதுகாவலர் யாரும் இன்றி, பயன்பாட்டில் இல்லாத முதுமக்கள் தாழி மையத்தின் ஜன்னல் திறந்து இருந்தது. அதன் வழியாக பார்த்தபோது, சில உடைந்த பொருட்கள் அந்த அறையில் சிதறிக்கிடந்தன. முதுமக்கள் தாழி மையத்தின் தரை தளத்தில் மது பாட்டில்கள் கிடந்தன . மாலை நேரத்தில் சிலர் அந்த மையத்தில் வந்து மது அருந்துவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். Image caption ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம் கீழடி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாக சொல்லும் தமிழக அரசு, ஆதிச்சநல்லூரை மறந்துவிட்டது என்கிறார் சமூக ஆர்வலர் ஜபார். ''முதுமக்கள் தாழி மையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஒரு ஊரில் கிடைத்த பொருட்களை அந்த ஊரில் காட்சிப்படுத்தவேண்டும் என்பது விதி. பல ஆண்டுகள் ஆன பின்னரும் அதற்கான முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் காட்சிப்படுத்தப்பட்டால், இங்குள்ள மாணவர்களுக்கும் பயனளிக்கும் மையமாக இந்த இடத்தை மாற்றமுடியும்,'' என்றார். மாநில தொல்லியல் துறை அமைச்சரின் பதில் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் கேட்டபோது உடனடியாக அந்த மையத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ''முதுமக்கள் தாழி மையம் இருக்கும் நிலையை உணர்த்தும் படங்களை அனுப்புங்கள். உடனடியாக இந்த விவகாரத்தை கவனிப்பேன். தமிழகம் முழுவதும் அகழ்வாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வேலை நடந்துவருகிறது. நிச்சயம் இதை சரிசெய்யலாம்,'' என்று அமைச்சர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய அகழ்வாய்வு ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு நடத்திவரும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூரில் 1902ல் அலெக்சாண்டர் ரியா என்பவரால் அகழ்வுப் பணிகள் தொடங்கியது என்றார். ''ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்றுவரை உலகளவில் ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த கிராமத்தில் கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றை பெர்லின் நகரத்திற்கு ஒரு தொல்லியல் நிபுணர் கொண்டுசென்று அங்கு காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியாவில், அகழ்வு பணிகள் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மத்திய அரசின் தொல்லியல் துறை முதல்கட்ட அறிக்கையைக்கூட வெளியிடவில்லை,'' என்றார் காமராசு. அகழ்வுப் பணிகளுக்காக 114 ஏக்கர் நிலம் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ''2004 மற்றும் 2005ல் மத்திய அரசு நடத்திய அகழ்வு பணிகளில் என்ன தெரியவந்தது என்று எந்தத்தகவலும் வெளியிடப்படாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்துள்ளேன்,'' என்றார். தொடர்ந்துள்ளேன்,'' என்றார். அறிக்கை சமர்ப்பிக்க ஏன் தாமதம்? அகழ்வுப்பணிகளை மேற்கொண்ட அதிகாரி சத்யமூர்த்தியை அணுகினோம். அவர் தான் ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆகின்றன என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கட்ட கண்டுபிடிப்புகள் பற்றிய ஆவணத்தை தொல்லியல் துறையில் சமர்ப்பித்துவிட்டதாக கூறினார். அகழ்வாய்வு ஆவணங்களை தயாரிப்பதில் இருந்த தாமதம் பற்றிக்கேட்டபோது, ''ஆதிச்சநல்லூரில் அகழ்வு பணிகளின்போது நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அதன் காலத்தை நிர்ணயம் செய்தவற்கு இந்தியாவில் நிபுணர்கள் இல்லாத காரணத்தால் இந்த ஆய்வு தகவல்களை வெளியிட தாமதம் நேர்ந்தது. நான் அனுப்பியுள்ள ஆவணத்தை சரிபார்க்க வெளிநாடுகளில் உள்ள நிபுணர்களிடம் அனுப்பியுள்ளார்கள்,'' என்று சத்யமூர்த்தி கூறினார். அகழ்வாய்வில் கிடைத்த துளையிட்ட மண்டைஓடு சத்யமூர்த்தி அகழ்வு செய்து கண்ட பொருட்கள் பற்றி கேட்டபோது,''ஆதிச்சநல்லூரில் இருந்தவர்கள் பலவகையான இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் என்றும் அவர்கள் அருகில் இருந்த துறைமுக நகரத்தில் வணிகர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதுபோன்ற தகவல்களை ஆராய நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்,'' என்றார் சத்யமூர்த்தி. அவர் மேலும் ஐதராபாத்தில் உள்ள நரம்பியல் மருத்துவர் ராஜா ரெட்டி ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடு ஒன்றில் துளை இடப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு சான்று இருப்பதாக கூறியுள்ளார். இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதத்திற்கான காரணங்களைக் கேட்டபோது, அதற்கான காரணங்கள் எதையும் குறிப்பிடாமல், ஆய்வு அறிக்கை ஒய்வு பெற்ற அதிகாரி சத்தியமூர்த்தியிடம் உள்ளதாக மூத்த அதிகாரி ஏஎம்வி சுப்ரமணியம் தெரிவித்தார். மேலும் முதல்கட்ட தகவல்கள் தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 2003-04, 2004-05 ஆவணங்களில் இருப்பதாக கூறினார். ஆய்வு குறித்த தகவல்களை சத்தியமூர்த்தியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் ஓய்வுபெற்ற அதிகாரி சத்யமூர்த்தி ஆய்வறிக்கை தன்னிடம் இல்லை என்றும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் கூறினார். கடந்தாண்டு பிரசுரமான கட்டுரையை மீண்டும் பகிர்ந்துள்ளோம் https://www.bbc.com/tamil/india-41934390
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி - சிந்து சமவெளி - சங்க இலக்கியம்: இணைக்கும் புள்ளி எது? விவரிக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன் கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தைய்யா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசியினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து: கே. கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ப. இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004ல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா முன்பாக நான் சிந்துவெளி தொடர்பாக ஒரு ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தேன். Image caption ஆர். பாலகிருஷ்ணன் கொற்கை - வஞ்சி - தொண்டி போன்ற தமிழகத்தில் உள்ள இடப்பெயர்கள், சிந்துவெளிப் பகுதியில் அடையாளம் தெரியாத இடப்பெயர்களாக இப்போதும் இருப்பதைக் கண்டறிந்து, என்னுடைய ஆய்வை அப்போது முன்வைத்தேன். அஸ்கோ பர்போலா, சங்காலியா, ஐராவதம் மகாதேவன், சவுத்வர்த் ஆகிய அறிஞர்கள் ஏற்கனவே இடப்பெயர்களை வைத்து சிந்துவெளி ஆய்வுகளை நடத்த முடியும் எனக் கூறியவர்கள்தான். அதைத்தான் நானும் பின்பற்றினேன். அப்போதுதான் கொற்கை - வஞ்சி - தொண்டி இடப்பெயர்கள் இருந்தன. ஆனால், அப்போதும்கூட வெறும் இடப்பெயர் சார்ந்த ஒரு ஆய்வாகத்தான் இது இருந்ததே தவிர, அகழ்வாராய்ச்சி சார்ந்த ஆதாரம் ஏதும் இருந்திருக்கவில்லை. அம்மாதிரியான ஒரு ஆதாரத்தை கீழடி கொடுத்திருக்கிறது. கே. கீழடியையும் சிந்து சமவெளி நாகரிகத்தையும் நீங்கள் எப்படி தொடர்புபடுத்துகிறீர்கள்? ப. சிந்து சமவெளி நாகரீகத்தின் முதிர்ச்சியான காலகட்டம் கி.மு. 2500. அது நலிவடைய ஆரம்பிப்பது கி.மு. 1900 காலகட்டத்தில். இப்போது கீழடியில் கிடைத்த தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்து கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட தெர்மோலூமிசென்ஸ் உள்ளிட்ட ஆய்வுகளில் அது கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. நாம் சங்ககாலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுக்கிறோம். அதிலிருந்துதான் தமிழகத்தில் வரலாற்றுக் காலம் துவங்குகிறது. இப்போது ஒரு கேள்வி நியாயமாகவே எழுகிறது. சிந்துச் சமவெளி நாகரிகம் நலிவடைந்தது கி.மு. 1,900ல். தமிழக வரலாற்றுக் காலம் கி.மு. 600ல் துவங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் கி.மு. 1,900க்கும் கி.மு. 600க்கும் இடையில் சுமார் 1,300 ஆண்டுகால இடைவெளி இருக்கிறது. அதேபோல, மொஹஞ்சதாரோ - ஹரப்பா போல, குஜராத்தில் சிந்துவெளி நகரங்களாக தேசல்பூர், லோதல், தோலாவிரா ஆகிய இடங்கள் இருக்கின்றன. அதற்குத் தெற்கே மகாராஷ்டிராவில் தைமாபாத் என்ற இடம் இருக்கிறது. 1960களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம்தான் சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லையாகக் கருதப்பட்டது. அதற்குத் தெற்கே சிந்துவெளி தொடர்பாக எந்த இடமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சிந்துவெளி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த இடம். அவர்கள் எங்கே போனார்கள் என்பது முக்கியமான கேள்வி. அந்த நாகரீகம் ஏன் அழிந்தது, எப்படி அழிந்தது என்ற விவாதம் இப்போது தேவையில்லை. ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? சிலர் அங்கேயே தங்கியிருந்திருப்பார்கள். சிலர் வேறு இடங்களுக்குப் போயிருப்பார்கள். வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்திருப்பார்கள். வேறு பண்பாடுகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பார்கள். அப்படி வெளியேறியவர்கள் அப்போதிருந்த அடையாளங்களைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பார்கள். அல்லது எடுத்துப் போயிருப்பார்கள். ஆனால், கட்டடங்களைஅவர்களால் எடுத்துச் சென்றிருக்க முடியாது. நினைவுகளையும் பெயர்களையும்தான், குறிப்பாக இடப்பெயர்களை எடுத்துப்போயிருப்பார்கள். நம்பிக்கைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவையும் மாறாமல் இருந்திருக்கும். இந்தியாவில் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் புரியாத புதிராக இருக்கிறது. முதல் கேள்வி, சிந்து வெளி மக்கள்பேசிய மொழி என்ன, அவர்கள் யார், அவர்கள் நாகரிகம் எப்படி அழிந்தது? இரண்டாவது கேள்வி, இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லையென்றாலும் தமிழர்களுக்கு முக்கியமான கேள்வி. தமிழர்களுக்கு எப்போதுமே தம்முடைய தோற்றம், தாம் எங்கிருந்து வந்தோம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. சிலர் மத்திய தரைக்கடல் என்று சொல்வார்கள். சிலர் குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று சொல்வார்கள். ஆனால், தோற்றம் குறித்து தமிழர்களிடம் ஒரு கூட்டு மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. முதல் சங்கம், கடைச் சங்கம், கடற்கோள், அழிவு, புலம்பெயர்வு என தங்கள் தோற்றம் குறித்த கேள்வி அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. சிந்துவெளி எப்படி அழிந்தது, தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ஆகிய இரண்டு கேள்விகளுமே வெவ்வேறான, தொடர்பில்லாத கேள்விகளைப் போல இருக்கின்றன. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதில் ஒரு புதிருக்கு தெளிவான விடை கிடைத்தால், இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்துவிடும். கே. இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, சங்க காலம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்? ப. நாம் வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப் பிரிப்பது எழுத்து தோன்றியதைவைத்துதான். எழுத்தின் தோற்றம்தான் இரண்டையும் பிரிக்கிறது. தமிழகத்தில் வரலாற்றின் துவக்க காலம் என்பது தமிழ் பிராமி என்ற தமிழி எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருதுகோள் இருந்தது. சங்க இலக்கியத்தையும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகத்தான் கருதினார்கள். ஆனால், இம்மாதிரி ஒரு இலக்கியம் எழுதப்படுவதற்குப் பின்னணியில் ஒரு சிறப்பான மரபு இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்தில் பல நூல்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அந்த நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஒரு பெரிய இலக்கிய மரபு இருந்தால்தான் தொல்காப்பியம் போன்ற ஒரு நூலை எழுத முடியும். சங்க இலக்கியம்கூட திடீரெனத் தோன்ற முடியாது. சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவது நிகழ்காலப் பதிவுகள் அல்ல. கடையேழு வள்ளல்களைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், அவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்ததாக அர்த்தமல்ல. சமகாலப் பதிவாகவும் இருந்திருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நினைவுகளாகவும் இருந்திருக்கலாம். ஆக, அந்த நிகழ்வுகளுக்கு, அது பற்றி இலக்கியத்திற்கு வயதை நிர்ணயிப்பது மிகக் கடினம். இப்போது கீழடியில் கிடைத்த பொருட்கள்,குறிப்பாக எழுத்துகள் கிடைத்த அதை படிவத்தில் கிடைத்த சில பொருட்கள் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் வயது கி.மு. 580 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே எழுத்தறிவு இருந்த காலம் அல்லது சங்க காலம் என்பது கங்கைச் சமவெளியில் வரலாறு துவங்கிய காலத்திற்கு சமமாக இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை இந்தியாவில் எந்த இலக்கியத்தில் அதிகமாக பார்த்தறிய முடியும் என்ற கேள்வியை முன்வைத்தால், அதாவது சிந்துவெளி தொடர்பான நினைவுகளைக் கொண்ட இலக்கியம் எங்கிருக்கிறது என்று பார்த்தால் சங்க இலக்கியத்தில்தான் இருக்கிறது. சங்க இலக்கியத்தைப் போல நகரங்களைக் கொண்டாடிய இலக்கியம் வேறு இல்லை. நகர வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு வகையான பல்லின மக்கள் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வாழ்க்கை, கடல் வணிக மரபு, தாய்த் தெய்வ வழிபாடு, விளையாட்டுக்கான முக்கியத்துவம் ஆகியவை அந்த நாகரீகத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடும் குறீயீடாக நம் முன் நிற்கின்றன. அப்படி சிந்துவெளிக்கென்று சில விஷயங்களை நாம் அடையாளமாகக் குறிப்பிட்டால், அந்த நான்கைந்து விஷயங்கள் காத்திரமாகப் பேசப்பட்டது சங்க இலக்கியத்தில்தான். அதற்குப் பிறகு இதுபோன்ற குணாதிசயங்களுடன் பொருட்கள் கிடைப்பது கீழடியில்தான். அதனால்தான் சிந்துச் சமவெளி - சங்க இலக்கியம் - கீழடி ஆகிய மூன்றையும் ஒரு புள்ளியில் இணைக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பாக கொற்கை - வஞ்சி - தொண்டி குறித்துப் பேச ஆரம்பிக்கும்போது இப்படி கீழடி போல ஒரு இடம் கிடைக்குமென யாரும் நினைக்கவில்லை. தவிர, கீழடி கிடைத்திருக்கும் இடத்தைப் பார்ப்போம். இந்த இடம் மதுரைக்கு அருகில் இருக்கிறது. மதுரை ஒரு சாதாரணமான நகரமல்ல. சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சி என ஒரு தனி இலக்கியம் இருக்கிறது. அதில் மட்டுமல்லாமல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் மதுரையும் நான்மாடக் கூடலும் பேசப்படுகிறது. பரிபாடல் வைகையைப் பற்றிப் பேசுகிறது. தமிழுக்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பு சங்க இலக்கியத்தில் பேசப்படுகிறது. சங்கப் புலவர்களின் பெயர்கள் ஊர்களை வைத்தே அறியப்பட்டன. அப்படி அதிக புலவர்கள் இருந்தது மதுரையில்தான். "மாங்குடி மருதன் தலைவன் ஆக, - உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாதுவரைக என் நிலவரை" என புறநானூறில் ஒரு பாடல் வருகிறது. அப்படியானால், ஒரு புலவரை தலைவனாக வைத்து மற்ற புலவர்கள்கூடி, கவிதைகள் குறித்து பேசுவது, விவாதிப்பது என்பது சங்க இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறது. மதுரையைச் சுற்றி நிறைய இடங்களில் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அந்த நகரம் இடைக்கால இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் வருகிறது. ஆகவே அந்த நகரத்திற்கு 2600 வருட தொடர்ச்சி இருக்கிறது. அப்படி ஒரு நகரத்திற்கு அருகில் அகழாய்வில் ஒரு நகர நாகரீகம் கிடைப்பது சாதாரணம் கிடையாது. ஆகவே, நம் தொன்மத்திலிருக்கும் சில மரபுகளை இந்த ஒற்றுமை இணைக்கிறது. அதுதான் இதில் முக்கியம். கே. கீழடியில் பெரும் எண்ணிக்கையில் பானை ஓடுகளில் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. 1001 பானை ஓடுகள் இப்படிக் கிடைத்திருக்கின்றன. இதற்கு என்ன முக்கியத்துவம்? ப. எழுத்து வடிவத்தை எடுத்துக்கொண்டால், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப் பழைய எழுத்துவடிவம் சிந்துவெளி எழுத்துவடிவம்தான். சிந்துவெளி எழுத்துகளை இன்னும் நம்மால் படிக்க முடியவில்லை. பொதுவாக, படிக்க முடிந்த எழுத்துகளுக்கு அருகில், படித்தறிய முடியாத எழுத்துகள் கிடைத்தால், இதைவைத்து அதைப் படிக்க முடியும். சுமேரியாவில் அப்படித்தான் படிக்க முடிந்தது. ரொஸட்டா ஸ்டோன் என்ற இருமொழி கல்வெட்டின் உதவியுடன் அவை படிக்கப்பட்டன. ஆனால், சிந்துவெளியில் அப்படி ஒரு விஷயம் கிடைக்காததால், சிந்துவெளியைப் படிக்க முடியவில்லை. அதற்கடுத்து, அசோகன் பிராமியும் தமிழ் பிராமியும் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் படிக்க முடியும். இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு இணைப்புச் சங்கிலி இருந்திருக்க வேண்டும். அவைதான் பானையில் செய்யப்பட்ட கீறல்கள் (Graffiti markers). இந்தக் கிறுக்கல்கள் இரண்டுவிதமாக இருக்கும். பானையைச் செய்தவர் எழுதியிருப்பார். அது பானை ஈரமாக இருக்கும்போதே எழுதப்பட்டிருக்கும். வாங்கியவர் எழுதியிருந்தால், பானை சுடப்பட்ட பிறகு எழுதப்பட்டிருக்கும். கீழடியில் கிடைத்திருப்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அப்படி எழுதக்கூடியவர்கள் நிறையப் பேர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் பெரிய அளவில் கற்றறிந்தவர்களாகவோ, புலவர்களாகவோ இருந்திருக்க வேண்டியதில்லை. சாதாரண மக்களாகவும் இருக்கலாம். இந்த பானைக் கீறல்களை சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கும் இடையிலான ஒரு இணைப்புச் சங்கிலியாக நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் உள்ள கீறல்களைப் போன்ற கீறல்களும் சில பானை ஓடுகளில் கிடைத்திருக்கின்றன. ஆகவே அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க முடியும். மேலும், இம்மாதிரி கீறல்களுடன் கூடிய பானை ஓடுகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்திருக்கின்றன. அவற்றில் 75 சதவீதம் தமிழகத்தில்தான் கிடைத்திருக்கிறது. கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன் குளம் ஆகியவற்றிலும் இம்மாதிரி பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன. கீழடியில், தமிழ் பிராமி கிடைத்த படிநிலைக்குக் கீழே இவை கிடைத்திருக்கின்றன. ஆகவே, அவை தமிழ் பிராமிக்கு முந்தைய காலமாக இருக்கலாம். ஆகவே இந்தக் கீறல்கள் மிக முக்கியமானவை. கே. கீழடியில் சமய வழிபாடு சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லையென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆகவே அங்கு வாழ்ந்த மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எனச் சொல்ல முடியுமா? ப. அப்படிச் சொல்ல முடியாது. கீழடியில் அகழாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் 110 ஏக்கர். வைகை நதிக்கரையில் இதுபோல 293 இடங்கள் இப்படி அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இதுவரை கீழடியில் மூன்று - நான்கு ஏக்கர்கள்தான் தோண்டப்பட்டிருக்கின்றன. மீதியைத் தோண்டும்போது என்ன கிடைக்குமெனத் தெரியாது. இப்போதுவரை வழிபாட்டுக்கூடம் போன்றவற்றுக்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், இது சங்க காலத்துடன் தொடர்புடைய இடம் என்பதால் இதை எச்சரிக்கையுடன்தான் அணுக விரும்புவேன். சங்க கால மக்களை வழிபாடு அற்றவர்கள் எனச் சொல்ல முடியாது. சங்க இலக்கியமே, குறிஞ்சி, முல்லை, மருதம் என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடத்திற்கு ஒரு கடவுள் இருந்தார்கள். தவிர, நடந்து செல்லும் பாதையைப் பாதுகாக்கும் தெய்வங்கள், மரத்தில் இருக்கும் தெய்வங்கள், காட்டில் உள்ள தெய்வங்கள் இருந்தன. பெரும்பாலும் தாய்த் தெய்வ வழிபாடு இருந்தது. இதற்கான ஆதாரம் பிறகு கிடைக்கலாம். ஆனால், நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இம்மாதிரியான வழிபாடு அந்த சமூகத்தின் மையப்பொருளாக இல்லை என்பதைத்தான். சங்க இலக்கியத்தை முழுதாகப் படித்துப் பார்த்தால், அந்தக் கால வாழ்க்கை என்பது, Celebration of lifeஆகத்தான் இருந்திருக்கிறது. அந்த இலக்கியம் வாழ்க்கையைக் கொண்டாடுகிறது. தினசரி வாழ்வைக் கொண்டாடுகிறது. இப்போது கிடைத்திருக்கும் பொருட்கள் அந்த வாழ்வை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், எதிர்கால ஆகழாய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். கே. கீழடியில் விளையாட்டுப் பொருட்கள் அதிகம் கிடைத்திருப்பது குறித்து அதிகம் பேசப்படுகிறது. அதில் என்ன முக்கியத்துவம்? ப. அதில் இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அந்த மக்கள் நிலையான வாழ்வை வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொருளாதாரம் உபரிப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். உள்நாட்டு வணிகம் - வெளிநாட்டு வணிகம் ஆகிய இரண்டுக்கும் கீழடியில் ஆதாரம் கிடைத்திருக்கிறது. ஆகவே, இங்கு வேளாண்மை சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த, வணிகம் சார்ந்த ஒரு பொருளாதாரம் இருந்திருக்க வேண்டும். அதில் உபரி இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். அப்போதுதான் விளையாட்டிற்கு நேரம் கிடைக்கும். அது நாகரிகத்திற்கான முக்கியமான அடையாளம். சிந்துவெளியிலும் இதுபோல விளையாட்டுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. தவிர, சங்க இலக்கியம் விளையாட்டுகள் குறித்து நிறையப் பேசுகிறது. அதை உறுதிப்படுத்துவது போல இந்தப் பொருட்கள் இருக்கின்றன. கே. கீழடி குறித்துப் பேசும்போது ஆதிச்சநல்லூர் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. அந்த இடம் தொல்லியல் ரீதியில் எவ்வளவு முக்கியமான இடம்? ப. அலெக்ஸாண்டர் ரீ முதன் முதலில் 1904ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வைத் துவங்கியபோது, சிந்துச்சமவெளியே கண்டறியப்படவில்லை. 1920களில்தான் சிந்துவெளியில் ஆர்.டி. பேனர்ஜி, எம்.எஸ். வாட்ஸ் ஆகியோர் அகழாய்வில் ஈடுபட்ட பிறகு, சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி குறித்த ஒரு அறிக்கையை கொண்டுவருகிறார். அலெக்ஸாண்டர் ரீ அந்த காலகட்டத்தில் அதை ஒரு புதைமேடாகத்தான் பார்த்தார். அதாவது, இறந்தவர்களைப் புதைப்பதற்கான ஒரு இடமாகப் பார்த்தார். ஆனால், அப்போதே அவர் 30 இடங்களில் இங்கு அகழாய்வு மேற்கொள்ள முடியுமென கண்டறிந்தார். ஆனால், அதற்குப் பிறகு 100 வருடம் அங்கு ஏதும் ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியகரமானது. 2004ல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆய்வு முடிவு தற்போதுவரை வெளியாகவில்லை. ஆனால், கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள பல நதிக்கரைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரை ஆதிச்சநல்லூரிலும் ஆய்வுகள் நடக்குமெனச் சொல்லியிருக்கிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது. https://www.bbc.com/tamil/india-49802510
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி நாகரிகம்: பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நான்காம் கட்ட கீழடி ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் தமிழக தொல்லியல் துறை பல நவீன முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. கடலடி ஆய்வுகளை நடத்தவும் மாநில தொல்லியல் துறை திட்டமிடுகிறது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அங்கே கிடைத்த பொருட்களையும் கட்டட அமைப்புகளையும் வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் ஆகியவை கீழடி பகுதியில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மாநில தொல்லியல் துறை கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த அகழாய்வில் பாரம்பரியமான முறைகளைத் தவிர, அகழாய்வுக்கான சரியான இடங்களைக் கண்டறிய பல புதிய தொழில்நுட்பங்களையும் மாநில தொல்லியல் துறை பயன்படுத்தியுள்ளது. கீழடி கிராமத்தைச் சுற்றி சுமார் 15 சதுர கி.மீ. பரப்புக்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆங்காங்கே பரவிக்கிக்கின்றன. ஆகவே, எந்த இடத்தில் அகழாய்வை நடத்துவது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது முதற்கட்டப் பணி. இதற்கு முன்பாக, தரைமேல் நடத்தப்படும் ஆய்வின் (survey) மூலமாகவே இந்த இடங்கள் தீர்மானிக்கப்படும். ஆனால், இந்த முறை அகழாய்வை துவங்குவதற்கு முன்பாக, செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு மேக்னடோமீட்டர் (magnetometer)மற்றும் தெர்மோ மேப்பிங் (thermomapping)முறைகளை வைத்து நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரடார் (ground penetrating radar - GPR) ) மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. முதலில், கீழடி மற்றும் அதனை ஒட்டியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பாக மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் பானை ஓடுகள், உலோகக் கருவிகள் ஆகியவை கிடைத்திருந்த நிலையில், நிலத்தடியில் உள்ள தனிமங்களை அடையாளம் கண்டுவிட்டு, பிறகு அங்கு அகழாய்வு நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி களிமண், பெரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றைக் கண்டறியும் வகையிலும் நிலத்தடியில் உள்ள சுவர்களை கண்டறியும் வகையிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 450 ஏக்கர் பரப்பில் பத்து முக்கியமான இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதற்குப் பிறகு, மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோமேக்னடிசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த இடத்தை மேக்னெடோமீட்டர் மூலம் தரைவழியாக ஆய்வுசெய்தனர். Image caption ஜிபிஆர் ராடார் மூலம் நிலத்தடியை ஆய்வுசெய்யும் அதிகாரிகள் இந்த மேக்னடோ மீட்டர்களை வைத்து, கீழடியில் பூமிக்கடியில் புதைந்திருந்த 350 மீட்டர் நீளச் சுவர் கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தடியை ஆராயும் ground penetrating radar (GPR) மூலம், அகழாய்வுக்குச் சரியான இடம் கண்டறியப்பட்டது. இதிலிருந்து கிடைத்த முடிவுகளை வைத்துக்கொண்டு, தற்போது கீழடியில் நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் கச்சிதமான இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுவருவதால், அடுத்தடுத்த ஆய்வுகளில் இன்னும் சிறப்பான முடிவுகளைப் பெற முடியுமென தொல்லியல் துறை நம்புகிறது. கீழடியில் மட்டுமல்லாமல், தற்போது உலகம் முழுவதுமே அகழாய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக, உள்ளே புதைந்திருக்கும் சுவர், கட்டட அமைப்புகள், பானைகள், செங்கல்கற்கள், கூரை ஓடுகள், தீமூட்டும் இடங்கள், பாதைகள், நினைவுக் கற்கள் ஆகியவற்றை கண்டறிய இம்மாதிரி மேக்னடோ மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழடிக்கு அடுத்து என்ன? தமிழக அரசின் தொல்லியல் துறை வரும் 2019- 20 ஆண்டில் கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வைத் தொடரவிருப்பதோடு, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களிலும் ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் அகழாய்வுகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விரைவிலேயே கடலடி ஆகழாய்வுகளையும் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. மேலும், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இடங்கள் எவை என்பதை ஆராய்வதற்கான கள ஆய்வும் இந்த ஆண்டு நடத்தப்படவிருக்கிறது. Image caption மேக்னடோமீட்டர் மூலம் ஆய்வுசெய்ததில் நிலத்தடியில் உள்ள சுவர் கண்டறியப்பட்டது இதுதவிர, தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் தொல்லியல் தளங்களைக் கண்டறியும் ஆய்வும் நடத்தப்படவிருக்கிறது. இங்கு இடைக் கற்காலப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் துவங்கப்படவிருக்கின்றன. மதுரைக்கு அருகில் உள்ள கீழடி பகுதியில் தற்போது ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், அதற்கு அருகில் உள்ள கொந்தகை, மணலூர், அகரம் போன்ற பகுதிகளிலும் அகழ்வாய்வுப் பணிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது ஆதிச்சநல்லூரில் தொடரவிருக்கும் ஆய்வு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கான களமாக அடையாளம் காணப்பட்ட ஒரு இடம். இங்குள்ள புதைமேட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1876ஆம் ஆண்டிலும் 1904ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகு சமீபகாலத்தில், 2003 முதல் 2005ஆம் ஆண்டுவரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது. இருந்தபோதும் இது தொடர்பான ஆய்வறிக்கை இன்னும் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே செய்யப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், வெங்கலப் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், மட்பாண்டங்கள் உள்ளிட்டவை கிடைத்திருக்கின்றன. இந்த நிலையில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. Image caption நிலத்தடியில் உள்ள களிமண், இரும்பு போன்ற கனமங்களைக் காட்டும் வரைபடம் கடந்த கால ஆய்வுகளில் தொல்லியல் கால மக்கள் புதைக்கப்பட்ட மேடுகளே ஆய்வுக்குள்ளாக்கப்பட்ட நிலையில், தொல்லியல்துறை இனி மேற்கொள்ளவிருக்கும் ஆய்வில், மக்கள் வாழ்ந்த பகுதிகள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றை நோக்கி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கொடுமணலில் மீண்டும் தொல்லியல் ஆய்வு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகும். 1985லிருந்தே மத்தியத் தொல்லியல் துறை, மாநில அரசின் தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவை அகழ்வுகளைச் செய்திருக்கின்றன. அந்த அகழ்வுகளில் பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்ககாலம் ஆகியவற்றைச் சேர்ந்த பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. கல்மணிகள், இரும்பு உருக்குப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இங்கு இருந்ததும் கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் இங்கே கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு, இது தொடர்பான ஆய்வுகள் தொடராத நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. Image caption ஆய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக ட்ரோன்கள் மூலம் நிலத்தின் மேற்பரப்பு முழுமையாகப் படமெடுக்கப்பட்டது ஆழ்கடல் ஆய்வுகள் தொல்லியல் மேடுகளில் ஆய்வுகளை மேற்கொள்வது தவிர, ஆழ்கடல் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவும் மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மாநில தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், கிரேக்கம், ரோம், அரபு நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்த வணிகத் தொடர்புகளை ஆராயும் வகையில் சங்ககாலம் மற்றும் இடைக்காலங்களில் துறைமுகங்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலத் தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. கடலியல் தேசிய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன. https://www.bbc.com/tamil/india-49790302
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால தண்ணீர்த்தொட்டி! கீழடியில் கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தண்ணீர்த்தொட்டி ( ஈ.ஜெ.நந்தகுமார் ) கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தற்போது தண்ணீர் தொட்டி கிடைத்துள்ளது. இதை மாணவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். கீழடி நந்தகுமார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிம வேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதன்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கீழடி அகழாய்வு நந்தகுமார் கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மண்பாண்டம் குடுவைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர் வழிப்பாதை போன்ற அமைப்பு என ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. சென்ற வாரம் மழை பெய்தாலும் அகழாய்வுப் பணியில் தொய்வு எதுவும் ஏற்படாமல் மிகத் துரிதமாக அகழாய்வுப் பணியானது நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கீழடி அகழாய்வு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தற்போது நடைபெறும் ஆய்வின் முடிவில் மட்டுமே எதையும் கூறமுடியும். சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த் தொட்டி என்று தெரிகிறது. எங்களின் துறைத்தலைவர்கள்தான் வெளிப்படையாகக் கூற அதிகாரம் உள்ளது" என்றனர். https://www.vikatan.com/news/tamilnadu/sangam-era-water-tank-found-in-keezhadi-excavation
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள்; அகலமான செங்கல் சுவர் கட்டிடம் கண்டுபிடிப்பு சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் வெளிநாட்டில் அணியும் அகேட் (agate) வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு கண்டறியப்பட்ட உறைகிணற்றின் உயரமும் தோண்டத்தோண்ட அதிகரித்து கொண்டே செல்கிறது. கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய் ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலங்களில் 23 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய்யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) போதகுரு என்பவரின் நிலத்தில் அகலமான செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களைவிட இது அகலமானது. முருகேசன் நிலத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம் நீண்டு கொண்டே செல்கிறது. இதுவரை 7 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளன. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் அதிக ஆழத்தில் உறைகிணறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு கிடைத்துள்ள அணிகலன்கள், வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் (agate) வகை கல்லில் செய்யப்பட்டவை. இதனால் பழந்தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்துள்ளது உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். https://www.hindutamil.in/news/tamilnadu/510503-keeladi-excavation-2.html
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
'கீழடி ஆய்வில் சங்க காலமும், திராவிட செழுமையும் தெரிகிறது!' -நெகிழும் ஆய்வாளர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய அகழ்வாராய்ச்சித் துறையினரின் ஆய்வில் புதையுண்ட ஒரு நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேலும் தொடர்வதற்குள் சட்டச் சிக்கல் எழவே, ஆய்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வின் திட்ட இயக்குநர் என்ன சொல்கிறார் கீழடி அகழ்வாய்வின் தலைமை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது , "கிபி 300-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் ஆய்வில் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை" என்கிறார். சு.வெங்கடேசன் சொல்வது என்ன கீழடி ஆய்வுகளை தன்னுடைய கட்டுரைகளில் கொண்டு வந்து கொண்டிருக்கும் 'சாகித்திய அகாடமி' விருதாளர் சு.வெங்கடேசன், "கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் 50 சென்ட் வரைதான் அகழாய்வு செய்திருக்கிறார்கள்.முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்துமுதல் இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசும் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம்" என்றார். சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர், ஸ்ரீலட்சுமி , '' கீழடி ஆய்வில் ஏற்பட்டுள்ள தடைகுறித்து,டெல்லி, தலைமை இயக்குனருக்கு தெரிவித்துள்ளோம்; பதிலுக்காக காத்திருக்கிறோம்'' என்கிறார். கீழடி மக்கள் கருத்து என்ன ஆய்வாளர்களுடன் பொதுமக்களும், மக்கள் இயக்க சக்திகளும் கீழடி ஆய்வில் களம் இறங்கியுள்ளனர். அவர்களிடம் பேசியபோது, " கீழடியில் அகழாய்வு செய்துள்ள இடம், தனியாருக்கு சொந்தமானது. அகழாய்வுக்கு பின், தொல் பொருட்களை மட்டும் எடுத்து விட்டு, மீண்டும் நிலத்தை பழையபடியே மூடிக் கொடுப்பதாக, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.தாங்கள் போட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை தாங்களே மீறுவது என்றால், எதிர்காலத்தில் அகழ்வாராய்வுக்கு நிலத்தைக் கொடுப்பதில் பொதுமக்கள் தயங்குவார்கள், கண்டிப்பாக முன்வர மாட்டார்கள் என்ற இக்கட்டான சூழலில் அகழ்வாய்வுத் துறையினர் உள்ளனர்." என்கின்றனர். மு.கருணாநிதியின் அறிக்கை தி.மு.க. தலைவர் கருணாநிதி, "கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையைப் பறை சாற்றுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன" என்று கூறியிருக்கிறார். கி.வீரமணியின் அறிக்கை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, "கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள், ஆய்வில் கிடைத்துள்ளன. தமிழக அரசு அதற்கான நிலம் ஒதுக்கி அதனை அருங்காட்சியகமாக உருவாக்க வேண்டும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அதற்கான தேவையான முயற்சியில் ஈடுபடும்" என்று அறிக்கையில் கூறியிருக்கிறார். ஆய்வாளரின் பெருமிதம் கீழடி ஆய்வில் பணியாற்றிய ஓய்வு துணை கண்காணிப்பாளர் கருப்பையாவிடம் பேசியதில், "பெருமையாக, கர்வமாக உணர்கிறோம். நைல் நதி நாகரீகம் போன்று வைகை ஆற்று நாகரீகம் இந்த கீழடியின் மூலம் உலகத்தின் கண்களுக்கு காணக் கிடைத்திருக்கிறது.பிராம்மி எழுத்து ஓடுகள் நிறைய கிடைத்துள்ளது ஒரு வரப் பிரசாதம்தான். வணிகர்கள் வாழ்வியலும், பெருவணிகர்கள் வாழ்ந்ததற்கான தடமும், தொல்காப்பிய இலக்கியம் சார்ந்த விஷயங்களுக்கான ஆதாரங்களும் கீழடியில் கொட்டிக் கிடைத்திருக்கின்றன. தமிழர்களுக்கான தொன்மை நாகரீக வாழ்க்கை திரும்பக் கிடைத்திருக்கிறது, திராவிட செழுமை தெரிகிறது. அரசாங்கம் கை விரித்தாலும், பொதுமக்கள் புரிந்து கொண்டு கை கொடுக்க முன் வந்துள்ளது நெகிழ வைக்கிறது. சங்ககாலம் என்ற ஒன்று இருந்ததற்கான சான்று ஏட்டளவில், எழுத்தளவில் என்பது போய் கண்ணெதிரே காட்சியளிக்கும் ஆவணமாக இந்த கீழடி ஆய்வு நிருபணம் செய்திருக்கிறது. ஆய்வின் ஒவ்வொரு அடியும் நம்முடைய நாகரீகம் பளிச்சிடுவதை காட்டிக் கொண்டே இருக்கிறது. விரைவில் மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கீழடி புரொஜக்ட் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் கடைசிவரையில் உறுதியாக நின்று "இந்த இடத்தை தோண்டுங்க, விஷயம் இருக்கிறது" என்று சக்சஸ் செய்து கொடுத்தவர். அவரைத்தான் இங்கே பாராட்டியாக வேண்டும். தமிழர் வாழ்க்கையே அல்லவா, திரும்பக் கிடைச்சிருக்கு..." நெகிழ்கிறார் கருப்பசாமி. அன்றே முடிவெடுத்த மெக்காலே இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே ஆற்றிய உரையில், "இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தால் அன்றி, அந்த நாட்டை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என்று நான் நினைக்கவில்லை. அந்த நாட்டின் பழமையான கல்வி முறையையும் கலாசார முறையையும் மாற்ற வேண்டும் என்று நான் இங்கே முன்மொழிகிறேன். இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டைவிட அந்நிய நாடே மேல், சொந்த மொழியை விட ஆங்கில மொழியே மேலானது என்று நினைக்கும்போது, அவர்கள் தங்களது சுயமரியாதையையும், கலாசாரத்தையும் இழப்பார்கள். அப்போது நாம் விரும்பியவாறு அவர்களை உண்மையாக மேலாதிக்கம் செய்ய முடியும்" என்று 18-ம் நூற்றாண்டிலேயே தமிழர்களை என்ன செய்யலாம் என்ன முடிவில் உறுதியைக் காட்டிப் பேசியிருக்கிறார். மெக்காலே கல்வித்திட்டமும் இன்னும் மாறவில்லை, நம்முடைய பாரம்பர்ய மாண்பின் மீதான ஈர்ப்பும் நம்மிடம் இல்லை... மக்களிடம் அடிமைப் புத்தி தொடர அரசுகளே முக்கியக் காரணம். http://www.vikatan.com/news/tamilnadu/70376-keezhadi-excavation-and-sangam-era.art
-
திலீபனின் பசி இன்னமும் தீரவில்லை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்
இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் சிறிய கூடாரம் அமைத்து அதற்குள் திலீபனின் திருவுருவப்படத்தை வைத்து அதற்கு பன்னிரண்டு நாட்களாக தீபம் ஏற்கிக் கொண்டிருந்தோன். சிறுவர்களாக இருந்த போதுதிலீபனின் நினைவுநாட்களில் அவரைக் குறித்த நாகடங்கள், பேச்சுக்கள், கவிதைகள் என்று நிகழ்த்தி அவரது தியாகச் சாவை நினைகூர்ந்தோம். பாடசாலையில் திலீபன் நினைவு நாட்களில் பிரதான வாசலில் அவரது நினைவுநாட்களைக் குறித்த பதாகை ஒன்றை நடுவோம். காலை வணக்க நிகழ்வில் திலீபனுக்காக மலர் தூவி, தீபம் ஏற்றி வணங்குவோம். புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்த காலத்தில் திலீபனின் தியாகம் வன்னி முழுவதும் நினைவகூரப்படும். சமாதான காலத்தில் யாழ்ப்பாணம் போன்ற அரச கட்டுப்பாட்டு இடங்களிலும் அவரை நினைவுகூறுவார்கள். அகிம்சை என்பது என்ன என்பதை உலகத்திற்கு எடுத்துரைத்தவர் திலீபன். இந்தியாவிற்கு அகிம்சைப் போராட்டத்தின் வழியாக காந்தி விடுதலையைப் பெற்றுக் கொடுத்தார் என்று மகாத்மா காந்தி காந்தியை அழைப்பதுடன் காந்தி தேசம் என இந்தியாவை அழைக்கபடுகிறார்கள். அதே இந்தியாவுக்க எதிராகவே திலீபன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை வந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் உண்ணா விரதத்தை மேற்கொண்டார். வாழ்க்கைக் குறிப்பு: ஈழத்தின் யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த திலீபன் (பிறப்பு: நவம்பர் 27, 1963 - செப்டெம்பர் 26, 1987)எனப்படும் பார்த்திபன் இராசையா புலிகளின் ஆரம்பால முக்கிய உறுப்பினராவார். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி தனது உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48 மணிக்கு மரணத்தை தழுவினார். யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபனுக்கு மரணத்தின் பின்னர்,புலிகள் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலையை வழங்கியிருந்தனர். திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்: 1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். 4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5.பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். அகிம்மைப் போராட்டத்தின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றாக கருதப்படும் இந்திய தேசம் திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை. பன்னிரண்டு நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாமல் உண்ணவிரதம் இருந்தார் திலீபன். அகிம்சை என்பது மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படாமல் அல்லது மற்றவர்களை தண்டிக்காமல் தாம்மை வருத்தி முன்னெடுக்கும் ஒரு போராட்டம். காந்தி இந்த அறவழிப் போராட்டத்தையே இந்திய சுகந்தி விடுதலையை வென்றெடுக்கப் பயன்படுத்தினார். ஆனால் இந்திய விடுதலைப் போராளி பகத்சிங்கிற்கு தூக்குத் தண்டணையை ஆங்கிலேயர்கள் வழங்க முடிவுசெய்ய பொழுது தண்டனைக்கான பத்திரத்தில் காந்தி ஒப்பமிட்டதாகவும் அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்மையை ஆதரிப்பது எனவும் கேள்வி எழுப்படுகிறது. திலீபனின் உண்ணா விரத அறப் போராட்டத்திலும் இந்தியா திலீபனுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் இம்சையையே பரிசளித்தது. உலகத்தில் நடந்த அகிம்சைப் போராட்டங்களில் திலீபனின் போராட்டம் ஒரு உன்னதப் போராட்டமாக விளங்குகிறது. இந்த உலகத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எண்ணிவிட முடியாது. பல்வேறு தேவைகளுக்காக பலரும் உண்ணா விரதம் இருக்கிறார்கள். அலுவலகத்தில் சம்பள உயர்வு, கட்சியில் பதவி கோரி,அடிப்படைத் தேவைகளை கேட்டு என்று பல்வேறு காரணங்களுக்காக பலரும் உண்ணா விரத்தில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியலில் உண்ணா விரதம் என்பது ஒரு தந்திரம். நான் உங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தேன் என்று சொல்லிக் கொண்டு பலரும் வாக்குகளை கேட்க வருவதைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலான அரசியல்வாதிகளின் பின்னால் உண்ணா விரதத்தின் வரலாறு இருக்கும். ஆனால் அது போலியான உண்ணா விரதம். பலர் உணர்ச்சி வசப்பட்டு முன்பின் யொசிக்காமல் உண்ணா விரத்திற்கும் செல்வதும் பின்னர் உண்ண விரம் இருந்து சில மணிநேரங்களில் எப்படியாவது அதை கைவிட்டு பழரசம் அருந்துகிறார்கள். இவர்கள் யாரும் உண்ணவிரதம் இருந்து உயிரை துறக்கவில்லை. திலீபனின் உண்ணா நினைவு நாட்களில் மேலும் இரண்டு போலி உண்ணா விரதங்களைப் பற்றி இங்கு குறிபடுதல் பொருத்தமானது. ஒன்று விமல் வீரவனச எனப்படும் சிங்கள இனவாதியின் உண்ணா விரதம். பான்கிமூன் நியமித்த மனித உரிமைகள் தொடர்பான நிபுணர் குழுவை கலைக்க வேண்டும் என்ற ஐ.நாவுக்கு எதிராக விமல் வீரவன்ச உண்ணா விரத நாடகம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். திலீபனுடைய உண்ணாவிரதத்தையும், விமல் வீரவன்சவினுடைய உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு சிங்களக்கவிஞரும் எழுத்தாளருமான புலஸ்தி இப்படி எழுதியிருக்கிறார். 1. திலீபனின் உண்ணாவிரதமானது விளம்பரத்துக்காகச் செய்யப்பட்ட ஒன்றல்ல. ஆனால் விமலினுடையைது விளம்பரத்துக்கானது. 2. திலீபன் மரணம் நிச்சயம் என்பதை முழுதாக ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தில் இறங்கியவர். ஆனால் விமல் சாவை எதிர்பார்க்கவேயில்லை. 3.திலீபன் உண்மையிலேயே விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் விமல், மஹிந்தவிடம் தானும் இருக்கிறேனெனக் காட்டிக் கொள்வதற்காக உண்ணாவிரதம் இருந்தார். 4. திலீபனுக்கு சாவின் மூலமாக கைவிட்டுச் செல்ல ஏதுமில்லை. ஆனால் விமலுக்கு பணம், மாளிகைகள், வாகனங்கள், அரசியல் எனப் பல உண்டு. இந் நிலையில் அவர் உண்மையில் சாக விரும்புவாரா? 5. திலீபனுக்கு உண்ணாவிரதமென்பது தனது அரசியல் எதிர்ப்பைக் காட்டும் ஒரு ஆயுதம். ஆனால் விமலுக்கு தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு நாடகம். (மொழிபெயர்ப்பு: ரிஷான்) அடுத்து தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உண்ணா விரதத்தைப் பற்றிக் குறிப்பிடுதல் பொருத்தமானது. ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் அன்று தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டார். சென்னை சேப்பாகத்தில் உள்ள அண்ணா சதுக்கத்தில் விமல் முன்னெடுத்ததுபோலவே ஒரு சுகபோக உண்ணா விரதத்தை கருணாநிதி முன்னெடுத்தார். காலை உணவை எடுத்துக் கொண்டு வந்த கருணாநிதி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் போர் நிறுத்தப்ப்ட்டது என்று உண்ணா விரதத்தை முடித்தக் கொண்டு மதிய உணவிற்குச் சென்றுவிட்டார். இந்தியாவில் மணிப்பூர் மற்றும் பிற வட கிழக்குப் பகுதிகளில் மெற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை நிறுத்தும்படி கோரி மணிப்பீரைச் சேர்ந்த ஜரோம் சர்மிளா கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உண்ணா விரதம் இருக்கிறார். பலவந்தமாகவே அவருக்கு உணவு ஊட்டப்படுகிறது.இவரது போராட்டம் போன்றவற்றை தவிர்த்துப் பார்க்கையில் இந்தியாவில் உண்ணா விரதத்தை பலர் அரசியல் ஆதாயம் தரும் வெளிப்பாடாக கருதுகின்றனர். ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகமாக முடிவடைதால் உண்ணா விரதப் போராட்டம் என்பதற்கு மதிப்பே இல்லாத நிலையும் காணப்படுகிறது. அரசியலில் பல்வேறு திட்டங்களை மதி நுட்பமாக முன்னெடுத்து வரும் கருணாநிதியால் தமிழகத்தில் பலமுறை முதலமைச்சராக இருந்த கலைஞரால் உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொள்ள முடியாது என்பதே இதில் வெளிப்படுகின்றன உண்மை. ஏனெனில் பசியை யாராலும் தாங்க முடியாது. பசியை தாங்கும் சக்தி மன வலிமையைப் பொறுத்தது. ஆனால் அது ஒரு போராளியால் மட்டுமே முடிந்திருக்கிறது. காந்தியிடம் விமல்வீரவன்சவிடம் கருணாநிதியிடம் இல்லாத மனோதிடம் திலீபனிடம் மட்டமே இருந்தது. அந்த மனோதிடத்தை ஈழ மண்ணிக் அரசியலே உருவாக்கியது. திலீபன் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்றால் அதற்கு அடிப்படையானது ஈழ மண்ணின் வரலாறும் நிலவரமும்தான். தனது தேசம் தொடர்பிலும் மக்களின் விடுதலை தொடர்பிலும் திலீபன் என்ற போராளியிடம் காலம் உருவாக்கிய மனோதிடம்hன் அவரை அத்தகையதொரு மரணப் போராட்டத்தை செய்யத் தூண்டியது. உண்ணா விரதப் போராட்டம் தொடர்பிலும் இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பிலும் முழுமையான புரிதலுடன்தான் திலீபன் போராட்டத்தில் இறங்கினார். அதனால்தான் அகிம்சை தேசம் என்ற இந்தியவின் முகத்திரையை கிழித்து அதன் இம்சை முகத்தை அம்பலப்படுத்த முடிந்தது. ஒரு காலத்தில் திலீபனின் நினைவுநாட்களை பெருமெடுப்பில் நினைவுகூர்ந்த ஈழ மண் இன்று மௌனித்துக் கிடக்கிறது. திலீபனுக்காக தமிழர் தேசத்தில் எழுப்பட்டிருந்த நினைவுத்தூபிகள் எiதையும் சிங்கள இராணுவத்தினர் விட்டு வைத்திருக்கவில்லை. ஏனெனில் திலீபன் என்ற குறியீடு வலிமை மிகுந்தது. அவரது போராட்ட வடிவம் இந்த உலகத்தை என்றும் கேள்விக்கு உள்ளாக்கியபடியிருக்கும். திலீபனின் சிலைகளுக்கும் படங்களுக்கும் தூபிகளுக்கும் அஞ்சிய இராணுவத்தினர் அவற்றை மெல்ல மெல்ல இரவோடு இரவாக அழித்து முடித்துவிட்டனர். திலீபனின் மனோ திடத்திலிருந்து வெளிப்பட்டவைதான் 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்' போன்ற கருத்துக்கள். நினைவுகளில் எழுப்பட்ட திலீபனின் சிலைகளை படங்களை சித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது. திலீபன் தமிழ் மக்களிடத்தில் என்றும் மறக்க முடியாத ஒரு அற்புதப் போராளி. திலீபன் ஈழத் தமிழர்களின் ஒரு குறியீடு. திலீபனின் பசி என்பது மக்களின் பசி. திலீபனினை இன்றும் நாம் நினைவுகூரவேண்டியிருப்பதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. திலீபன் அன்று முன் வைத்த கோரிக்கைகள் இன்றும் இந்திய அரசை நோக்கி மாத்திரமன்றி இலங்கை அரசை நோக்கியும் எழுகின்றன. இருப்பதாறு வருடங்கள் கடந்துவிட்டன. அன்று தொடங்கி இன்னமும் ஈழத் தமிழ்களுக்கு ஒரு தீர்வில்லை. இன்னமும் ஈழத் தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப் படுகின்றனர். பிரகடனப்படுத்தப்படாத ஒரு அவசரகாலச்சட்டம் நிலவுகிறது. பலர் இன்னமும் சிறைகளில் தவிக்கின்றனர். அன்று ஊர்காவல்படைகள் இன்று இராணுவப்படைகளே தமிழர் தாயகத்தில் நிறைந்துவிட்டன. பொலிஸ் நிலையங்களும் பெருகிவிட்டன. அன்று திலீபன் முன்வைத்த பிரச்சனைகள் இன்று உச்ச கட்டத்தை அடைந்துவிட்டன. 27 வருடங்கள் கடந்த பின்னரும் அகிம்சைக்கு தன்னை பலியிட்ட ஒரு ஈழப் போராளி திலீபனின் கோரிக்கைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. 27 வருடங்கள் கடந்த பின்னரும் திலீபனின் பசி இன்னமும் தீராவில்லை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111980/language/ta-IN/article.aspx
-
வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று
ஒரு அவதானம். நான் இணைத்த 'அமிர்தலிங்கத்தின் பிறந்த தின' செய்திக்கு 2 நிமிடத்துக்குள் நீங்கள் பதில் போட்டீர்கள். எமக்காக தன்னுயிரை தியாகம் செய்தவருக்கு 18 மணித்தியாலங்கள் கடந்த பின் அஞ்சலி செலுத்துகின்றீர்கள். இது ஒரு அவதானம் மட்டுமே.
-
வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று
வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்த 'வீரமங்கை' செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு 2011 ம் ஆண்டு இதே தினத்தில் தூக்குத் தண்டணையை நிறைவேற்ற இந்திய அரசு தீர்மானித்திருந்தது. இவர்களுக்கான தூக்குத் தண்டனையை தடுத்து அம் மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27 ) என்ற வீரமங்கை காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச்சாவடைந்தார். இந்நிலையில் 3 பேரது உயிரையும் காக்க அரசுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=714163374328593884#sthash.5qobcRx9.dpuf
-
சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0
ஹிருத்திக் நிஹாலே விடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில பெயர்கள் அடிபட்டு பின்னர் காணாமல் போன கதைகள் நிறைய இருந்தன. நீண்டகாலத்திற்கு இந்த அந்தஸ்துடன் இருந்த பெயர்கள் மிகஅரிதானவை. பொட்டம்மான், பால்ராஜ், சொர்ணம் என மிகச்சிறிய பட்டியல் அது. சொர்ணம் எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்பது சற்று வியப்பிற்குரியது. சிந்தனைக்குரியது. ஏனெனில் இந்த பட்டியலில் உள்ளவர்கள் அளவில் அவர் எந்த காலத்திலும் பிரகாசித்து கொண்டிருந்தவர் அல்ல. அந்த அமைப்பில் இருந்து மிகமோசமான வீழ்ச்சியை சந்தித்த ஒரு தளபதியாகவும் அவர்தான் இருந்தார். எனினும் ஈழத்தமிழர்கள் மத்தியில் அவர் பற்றிய ஒரு மிகையான மதிப்பீடு இருந்து கொண்டேயிருந்தது. உண்மையைச் சொன்னால், அமைப்பிற்கு வெளியிலிருந்த தமிழர்களிடம் மட்டும்தான் அப்படியான அபிப்பிராயம் இருந்ததென்பதல்ல. அமைப்பிற்குள்ளிருந்தவர்கள் மத்தியிலேயே அவர் பற்றியதொரு அதீதமான பிரதிமை இருந்தது. இத்தனைக்கும் அவர் பற்றிய மதிப்பீடுகளளவிற்கு அவரது களச்செயற்பாடுகள் இருந்ததென்று கூற முடியாது. இப்படி சொல்வது பலரை சினமூட்டலாம். ஆயினும் அவர் பற்றிய ஒரு மதிப்பீட்டின் அவசியத்திற்காக இதனையும் பேசவேண்டியுள்ளது. சொர்ணத்தின் ஆரம்ப நாட்கள் 1964ம் ஆண்டு பிறந்த சொர்ணம், திருகோணமலையில்த்தான் வளர்ந்தார். அவரது பிறப்பு யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் என்றபோதும், திருகோணமலையின் அரசடிதான் அவரது வளர்ந்த இடம். தந்தை யோசெப். தாய் திரேசம்மா. திருகோணமலையின் புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி கற்றவர், 1982ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து 1983ம் ஆண்டில்- தனது 19வது வயதில்- பயிற்சிக்காக இந்தியா சென்றார். தமிழ்நாட்டின் சிறுமலையில் நடந்த 3வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றார். இவரது பயிற்சிமுகாம் கூட்டாளிகளில் ஒருவர்தான் கருணா. பயிற்சி முடிந்ததும் யாழ்ப்பாணம் வந்து சில மாதங்கள் நின்றார். அதன்பின்னர் மீண்டும் இந்தியா அழைக்கப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்தது விக்ரர். காரணம், பிறிதொரு பயிற்சிக்காக. அந்த சமயத்தில் இலங்கைத்தீவில் ஆர்.பி.ஜி என்றொரு ஆயுதமே பாவனையில் இருக்கவில்லை. இந்தியாவில் வைத்து சொர்ணம், தேவன் உள்ளிட்ட சிலரிற்கு பயிற்சி வழங்கப்பட்டது. (பின்னர் 1985இல் யாழ்ப்பாணத்தில் பண்டிதரின் முகாம் சுற்றிவளைப்பில்த்தான் இலங்கை படையினர் அதனை முதன்முதலாக கைப்பற்றி கண்கொண்டு பார்த்தனர்) இந்தியாவில் பயிற்சி பெற்ற சமயத்தில் அமைப்பின் தலைவரின் பாதுகாவலர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு விக்ரரினால்த்தான் நடத்தப்பட்டது. அவரது உயர்ந்த தோற்றமும், இயல்பான கறார்த்தன்மையும் விரைவிலேயே அவரை தனித்தன்மைமிக்கவராக அடையாளம் கட்டியது. அவர் எவ்வளவு திறைமைகள் மிகுந்தவராக இருந்திருப்பினும், அவர் வேறு பணிகளில் இருந்திருந்தால் அவ்வளவு விரைவில் அடையாளம் காணப்பட்டிருக்கமாட்டார். அமைப்பின் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்தமை என்பது அவரை விரைவிலேயே ஏணிப்படிகளில் ஏற்றிவிட்டது. பின்னாட்களில் குமரன், வேலவன், இரட்ணம் என எண்ணற்ற உதாரணங்களை கூறமுடிந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகவலர்களாக இருப்பதால், விரைவிலேயே அடையாளம் காணப்பட்டு நட்சத்திரமான முதலாமவர் சொர்ணம்தான். தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களுடன் ஆரம்பநாள் தொட்டு அவர் ஒரு தீவிரம்மிக்க போர்வீரனாக இருந்தார். ஒரு தீவிரம்மிக்க போராளி அவர். செயலின் இரண்டாம் விளைவுகளை சிந்திப்பவராக இருக்கவில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், மூர்க்கத்தனமாக மேடையில் மோதிக்கொள்ளும் மல்யுத்தவீரனின் இயல்பைக் கொண்டிருந்தார். இதனைவிட மேலதிகமாக, அவர் தனது தலைமையை தீவிரமாக நேசிப்பவராக இருந்தார். அந்த விசுவாசம் பற்றி இரண்டாவது கேள்வியை எவருமே கேட்க முடியாது. அதனை தனது வரலாற்றின் மூலம் நிரூபித்தும் விட்டார். ஏனெனில் அவர் மரணித்தபோது, இறுதியாக சொன்ன வாசகங்களில் ஒன்று, தலைவர் மரணிப்பதை தன்னால் கண்கொண்டு பார்க்க முடியாது. அதற்கு முன்பாக மரணித்து விட வேண்டும் என்பதே. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை சகித்து கொள்ள முடியாமல் மரணமான முதலாவது உயிரும் அவர்தான். அவர் களத்தில் கொண்டிருந்த தீவிரத்திற்கும், அமைப்பில் கொண்டிருந்த விசுவாசத்திற்கும் இவற்றை உதாரணமாக சொல்லலாம். கெரில்லாக்களாக வாழ்ந்த விடுதலைப்புலிகளின் ஆரம்பநாட்களில் அவர் ஒரு முன்னுதாரணம் மிக்கவராக விளங்கினார். எல்லாக் காரியங்களும் தீவிரமான உறுதியினாலும், விடாமுயற்சியினாலுமே சாதிக்க முடிபவையாக இருந்தன. உணவில்லாமல் இருக்க வேண்டுமா, இருந்தார். காட்டிற்குள் பதுங்கியிருக்க வேண்டுமா, பதுங்கியிருந்தார். பதுங்கியிருந்து ஒரு தாக்குதலை நடத்த வேண்டுமா, நடத்தினார். நேருக்குநேராக நின்று மோத வேண்டுமா, மோதினார். ஒருதரமும் இமைக்காமல் தனது தலைவரை பாதுகாக்க வேண்டுமா, பாதுகாத்தார். இவையெல்லாம் சேர்ந்து அவரை பிறிதெல்லாரையும் விட தனித்துவமானவராக அவரது தலைவரிடம் அடையாளம் காட்டியது. விடுதலைப்புலிகள் அமைப்பில் பராய வித்தியாசமில்லாமல் பிரபாகரனிடம் ஆத்மார்த்தமான பிணைப்பு கொண்டிருந்தவர்கள் பலர். வயதில் மூத்த அன்ரன் பாலசிங்கத்தில் தொடங்கி 30 வயதில் இறந்த சிலம்பரசன் வரை எண்ணற்ற உதாரணங்களை இதற்கு சாட்சியாக கூற முடியும். இவற்றில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற பகுப்பை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் மதகில் இருந்து அரட்டையடித்து கொண்டிருக்கவில்லை. அப்படிவெட்டியாக இருந்தால்தான் எல்லா நண்பர்களும் ஒன்று சேரவும், யார் முதன்மையானவர் என்ற அபிப்பிராய பேதங்களும் எழும். அவர் தீவிரமான கெரில்லா போராளியாக இரந்தார். அதுதவிர, அவர் தனிப்பட்ட நட்பிற்கும் கடமைக்குமிடையிலான இடைவெளியை பேணினார். இன்னும் துலக்கமாக சொன்னால், தன்னுடன் ஆத்மார்த்தமான நட்புடன் இருப்பவர்களும் தூயவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார். அவர்கள் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் கறைகளை சந்தித்தால், அவர்களை தள்ளி வைக்கத் தயங்கியதில்லை. தான் நம்பிய நிலைப்பாட்டிற்கு அப்பால் சிந்தித்தார் என்பதற்காக அன்ரன் பாலசிங்கத்தை ஒதுக்கி வைக்கவும், தனது எதிர்பார்ப்பபை நிறைவேற்றவில்லை என்பதற்காக சொர்ணத்தை தள்ளிவைக்கவும் தயங்கியவரல்ல. தன்னுடன் ஆத்மார்த்த பிணைப்பை கொண்டிருந்தவர்கள் சரியாக செயற்படவில்லை என்றபோது ஒதுக்கி வைத்தாலும், மிக நெருக்கடியான மனநிம்மதி வேண்டிய சமயங்களில் அவர்களை அழைத்து தனிமையை போக்கிய இரண்டு சம்பவங்கள் உள்ளன. முதலாவது கடாபி தொடர்புடையது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலக்கப்பட்டபோது எழுந்த நெருக்கடி நிலையின்போது ஒருநாள் கடாபியை அழைத்து நீண்டநேரம் தன்னுடன் உட்கார வைத்திருந்தார். கடாபியும் அவரும் கொண்டிருந்த நெருக்கம் பரகசியமானதல்ல. ஆனாலும், இதற்கு சில மாதங்களின் முன்னர்தான் அவரை கண்டபடி திட்டி தனது கண்ணில் விழிக்க வேண்டாம் என அனுப்பியிருந்தார். இரண்டாவது சொர்ணம் சம்மந்தமானது. அது யுத்தத்தின் இறுதி சமயத்துடன் தொடர்பானது. அதனை இறுதியில் பார்க்கலாம். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகவலராக இருந்த சமயத்தில் சொர்ணம் பல சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஒருமுறை இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள் அவர் சிக்கியபோது, சொர்ணம் அவரை காப்பாற்றியிருந்தார். எனினும் இந்த நடவடிக்கையில் சொர்ணத்தின் பங்கு பேசப்படுமளவிற்கு, அதில் முக்கிய பங்கு வகித்த நவத்தின் பங்கு பேசப்படுவதில்லை. நவத்தின் சாதுரியமும், சொர்ணத்தின் மூர்க்கத்தனமாக போராற்றலும் இணைந்து சீக்கிய ரெஜிமென்றின் முற்றுகையிலிருந்து பிரபாகரன் தப்பிக்க உதவியது. இதற்கு உடன் பதிலடி கொடுக்க புலிகள் விரும்பினார்கள். கல்கட் இலக்கு வைக்கப்பட்டார். மணலாற்றின் நித்தியவெட்டையில் உலங்குவானூர்தியில் வந்திங்கியவர் மீது தாக்குதல் நடந்தது. ஹெலிமீது ஆர்பிஜி அடிக்கப்பட்டது. அடித்தது சொர்ணம். முதலாவது அடி மிஸ். அதற்குள் கல்கட் சுதாரித்து அருகிலிருந்த பதுங்குகுழிக்கள் பாய்ந்து விட்டார். இரண்டாவது அடியில் ஹெலி காலி. இந்தியபடைகளின் கட்டளைத்தளபதிக்கு மரணத்தின்வாசனையை முகரச் செய்தார் சொர்ணம். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகளில் பல நட்சத்திரங்கள் மேற்கிளம்பினார்கள். எனினும் அவர்களில் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் இறந்துபோய்விட்டனர். உயர்மட்டநட்சத்திரங்களாக எஞ்சியவர்களில் சொர்ணம் ஒருவர். மற்றவர் பால்ராஜ். இவர்கள் இருவரும்தான் இரண்டாம் கட்ட ஈழப்போரின் வடக்கு நாயகர்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தித்தான் இரண்டாம்கட்ட ஈழப்போரின் அத்தனை நடவடிக்கைகளும் அமைந்தன. இந்திய படைகளின் வெளியேற்றத்தின் பின்னர், விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பண்புமாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை சிறிய கெரில்லா அணிகளாக இருந்தவர்கள் படையணிகளை அமைத்தார்கள். மகளிர்படையணி தவிர்த்து, ஆண்கள் படையணி இரண்டு உருவாக்கப்பட்டன. ஒன்று சாள்ஸ் அன்ரனி படையணி. அதன் தளபதி பால்ராஜ். மற்றது இம்ரான் பாண்டியன் படையணி. இதற்கு சொர்ணம் தளபதி. அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வளலாய் தொடர் காவலரண் தகர்ப்பை அவர்தான் செய்தார். அது பெரிய படைத்துறை அதிசயத்தை ஏற்படுத்திய தாக்குதல் அல்ல. புலிகளிற்கும் பெரிய இராணுவ அனுகூலங்களை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனாலும், ஒரு கெரில்லா இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி காலத்தில், அவை நம்பிக்கை ஏற்படுத்திய தாக்குதல்கள். அவரது தலையாய படைத்துறை சாதனையாக குறிப்பிடத்தக்கது 1992இல் நடந்த கட்டைக்காடு முகாம் தாக்குதல். அந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் மிக நெருக்கடியை சந்தித்திருந்தார்கள். ஆயுதங்களிற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு. வெளிநாட்டு விநியோகம் ஒர் ஒழுங்கிற்கு வரவில்லை. அதுவரை கவனித்த பிரேமதாசாவும் கைவிட்டுவிட்டார். மரபுபடையணிகளை உருவாக்கிவிட்டாயிற்று. ஆனால் ஆயுதங்கள் இல்லை. குறிப்பாக ரவைகள் இல்லை. இராணுவம் ஒரு முன்னகர்வை செய்தால் தாக்கு பிடிக்க முடியாதென்ற நிலை. இயக்கத்தின் நிலைமையை உணர்ந்த சொர்ணம், கட்டைக்காடு முகாமை இலக்கு வைத்தார். அதுதான் ஆனையிறவு பெருந்தளத்தில் ஆயுதசாலை. கடல்மார்க்கமாக வந்த ஆயுதங்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தனது இம்ரான் பாண்டியன் படையணியை வைத்து அவர் அந்த தாக்குதலை மேற்கொண்டார். சில மணிநேரங்களிலேயே முகாமை வழித்து துடைத்து கொண்டு வந்துவிட்டார்கள். மரபுப்படையணியாக மாற்றமடைந்தாலும் அதன் சாவல்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்த சமயத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அவகாசத்தை அவர்தான் ஏற்படுத்தினார். புலிப்பாய்ச்சல் நடவடிக்கை திட்டமிடலின் போது இதன் பின்னர் குடாநாடு வீழ்ச்சியடையும் வரை வடக்கில் நடந்த தாக்குதல்களை ஒன்றில் அவர் வழிநடத்தினார். அல்லது பால்ராஜ் வழிநடத்தினார். தனது சமதையானவர்கள் அல்லது கீழானவர்கள் என யாருடனும் ஒரு இங்கிதமாக நடந்து கொள்ளும் இயல்பை பால்ராஜூம், அதற்கு நேர்மாறான இயல்பை சொர்ணமும் கொண்டிருந்தனர். இதனால் பின்னாட்களில் இருவரும் இணைந்து தாக்குதல்களை செய்ய முடியாமல் போனது. மிகநெருக்கடியான கட்டம் என்றபோது மாத்திரம் புலிப்பாய்ச்சலில் இருவரும் ஒன்றாக களத்தை வழிநடத்தினார்கள். சொர்ணத்தின் யுத்த முறை மிகச்சாதாரணமானது. பழைய இதிகாசபுராணங்களில் வருவதற்கொப்பானது. புதிய புதிய உத்திகளோ அதிர்ச்சிகளோ அற்றது. ஒரு வரியில் சொன்னால், போவார்கள் அடிப்பார்கள் வருவார்கள். மாட்டுவண்டி சவாரியின் வண்டியோட்டி வெறிகொண்டு, மாட்டை குத்தி விரட்டுவதைப்போல அவர் களத்தை வழிநடத்தினார். அவரது யுத்தமுறையில் இரண்டு தெரிவுகள் இருக்கவில்லை. எவ்வளவிற்கெவ்வளவு யுத்ததந்திரங்களில் நம்பிக்கை வைக்கிறானோ அந்த தளபதியின் படையணி காப்பாற்றப்படும். உயிர்களில் நம்பிக்கை வைக்கும் தளபதியின் இலக்கு நிறைவேறுமே தவிர, படையணி காப்பாறப்படுவதில்லை. சொர்ணம் இரண்டாம் வகை. அவரது தாக்குதல்கள் அனைத்துமே அதீதமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியவை. தவளை, கட்டைக்காடு, புலோப்பளை என இரண்டாம் கட்ட ஈழப்போரில் பல உதாரணங்கள் உள்ளன. மண்டைதீவு மட்டும்தான் விதிவிலக்கு. இந்த காலப்பகுதியில் இராணுவமும் அதீத போர்த்தந்திரங்களை கைக்கொண்டிருக்கவில்லை. முதலில் எறிகணை வீச்சு. பின்னர் துப்பாக்கி வேட்டு. பிறகு நகர்வு என்பதைபோல் மேலோட்டமான தந்திரங்களைத்தான் பாவித்தார்கள். இந்த சமயத்தில் மூர்க்கத்தனமாக தாக்கும் இயல்பு கொண்ட சொர்ணம் போதுமானவராக இருந்தார். இராணுவத்தின் நடவடிக்கைகளில் தந்திரோபாயமான மாற்றத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியவர் மேஜர் ஜெனரல் ஜானகபெரேரா. அவரது வழிநடத்தலில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட சூரியக்கதிர் முன்னரெப்போதும் புலிகள் சந்தித்திராத உத்தியிலான நகர்வு. இதன் பின்னர்தான் இலங்கை போரரங்கு இராணுவ உத்திகளிற்கு முக்கியத்துவம் வழங்குவதாக மாறியது. இந்த நகர்வை விடுதலைப்புலிகளினால் எதிர்கொள்ள முடியவில்லை. வன்னிக்கு பின்னகர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியென்பது இன்னொரு அர்த்தத்தில் சொர்ணத்தின் வீழ்ச்சியாக இருந்தது. அவரது போருத்திகள் கடுமையான விமர்சனங்களிற்கு உட்பட்டன. அவர் தனது போர்வாழ்க்கையில் முதலாவது சறுக்கலை சந்தித்தார். திருகோணமலை பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். திருகோணமலை பொறுப்பாளரென்பது, மூதூர் காடுகளில் ஓரிரு நூறுபோராளிகளை வழிநடத்தும் பொறுப்பு. இதன் பின்னர், விடுதலைப்புலிகளின் புதிய தளபதிகள் விரைவாக மேலெழ தொடங்கினார்கள். குறிப்பாக தீபனின் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருந்தது. அதீத இராணுவ யுக்திகளை பிரயோகிக்கும் களத்திற்கு பால்ராஜினால் சட்டென மாறிக் கொள்ள முடிந்தாலும், தீபன் போன்றவர்களின் அதீத தேர்ச்சியின் முன் ஈடுகொடுக்க முடியவில்லை. இது முதல் தலைமுறையினரை ஒருவித அசௌகரியப்படுத்தியது. ஓயாத அலைகள் 03 இன் நான்காம் கட்டத்தில் ஒரு மூத்த தளபதி என்பதன் அடிப்படையில் சொர்ணத்தை விடுதலைப்புலிகள் கைவிடவில்லை. அவ்வப்போது சந்தர்ப்பங்கள் கொடுத்தபடியிருந்தனர். துரதிஸ்ரவசமாக அவரால் ஒருமுறைகூட பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. நவீன களங்களில் கறார்த்ன்மைக்கும், செய் அல்லது செத்து மடி பாணிக்கும் இடமில்லை. அமைப்பின் கெரில்லா போராட்டகால மனநிலையும், நிழல்அரசுக்கால மனநிலையும் வேறானவை. ஒரேமனநிலையுடன் இரண்டையும் அணுக முடியாது. இந்த யதார்த்தம் கடைசிவரை புரியாதவராகவே அவர் இருந்தார். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். கருணாவின் பிரிவின் பின்னர், திருகோணமலையை பொறுப்பேற்க இரண்டாவது தடவையாக அவர் அனுப்பப்பட்ட சமயத்தில் அவரது வாகன சாரதியாக இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து ஒருவன் அனுப்பப்பட்டான். மன்னாரை சேர்ந்த அவன் சற்றே துடுக்குத்தனம் மிக்கவன். சம்பூரில் வாகனம் பயணித்து கொண்டிருந்தது. வீதி மோசமானதாக இருந்ததால், குலுங்கியது. குலுங்காமல் செலுத்த சொல்லி சொர்ணம் சொன்னார். அவன் மெதுவாக வாகனத்தை செலுத்தினான். கூட்டம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்ததால், விரைவாக செலுத்த சொல்லியிருக்கிறார். அவன் விரைவாக செலுத்த மீண்டும் வாகனம் குலுங்கியது. முன்னிருக்கையில் இருந்தவர், சாரதியின் தலையில் அடித்திருக்கிறார். அவன் சட்டென வாகனத்தை நிறுத்திவிட்டான். எதுவும் பேசாமல் வாகனத்தில் இருந்து இறங்கினான். நிதானமாக வாகன சாவியை எடுத்து சொர்ணத்தின் மடியில் போட்டுவிட்டு நடந்தே முகாம் போய்விட்டான். இப்படியொரு சம்பவத்தை இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. http://pagetamil.com/?p=6305 (தொடரும்)
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஜெயபாலன் “TK731 Turkis” என்ற விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டார்:- நோர்வே பிரஜையும் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் இலங்கை நேரம் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் நாடுகடத்தப்பட்டார். வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு 9.20 மணிக்கு துருக்கி ஊடாக அவர் நோர்வேக்கு நடு கடத்தப் பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். 'வுமு731 வுரசமளை' என்ற விமானம் மூலம் அவர் துருக்கி நோக்கி அனுப்பப்பட்டதுடன் அங்கிருந்து நோர்வேக்கு அவர் நாடு கடத்தப் படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சென்று சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று ஜெயபாலன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைதுச் எய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை முதல் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஜெயபாலன் குடிவரவு குடியகல்வு அதிகாரிகரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளில் ஜெயபாலன் வீஸா விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டியதுடன் அதனை அடுத்தே அவரை நாடுகடத்தியதாகவும் குறிப்பிட்டார். ஜெயபாலனை ஞாயிரன்று நோர்வே தூதரக அதிகாரிகளும் சந்தித்திருந்தனர். இன்னிலையிலேயே இந்த நாடுகத்தல் இடம்பெற்றுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99536/language/ta-IN/article.aspx
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தோழர் ஜெயபாலன் கைதும் மரபு சார் எழுத்துலக வக்கிரங்களும்… சிவாசின்னப்பொடி தோழர் ஜெயபாலன் கைது செய்யப்பட்ட விடயம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படு பொருளாக இருக்கிறது. ஏற்கனவே ஈழத்துக்கு சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் தோழர் ஜெயபாலனுக்கு இருக்கும் கவிஞர் நடிகர் என்ற ஊடக வெளிச்சம் அவரது கைதுக்கு அதிக ஒளியை பாச்சியிருக்கிறது. தோழர் ஜெயபாலனின் கைது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் யாழ் மையவாத கருத்து கந்தசாமிகள் …. ஓட்டுக் குழு உறுப்பினன் ரோ ஏஜண்ட் சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி…. ஏன்றெல்லாம் தங்களது வழமையான கருத்தியல் வறுமையின் பாற்பாட்ட சேறடிப்புக்களை செய்திருக்கின்றனர்-செய்தும் வருகின்றனர். ஜெயபாலனின் கைது ஒரு நாடகமாக ஏன் இருக்கக் கூடாது? என்றும் கைது செய்யப்பட்டவரை தொலைபேசியில் பேச அனுமதித்தது? எப்படி என்றும் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் முகநூலில் தாயகம் செல்லப் போகிறேன் என்று ஜெயபாலன் அறிவித்துவிட்டு சென்றதன் மூலம் தன்னை அவர் விளம்பர படுத்த முயன்றிருக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இவர்கள் எல்லோருமே ஜெயபாலனின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் குறைபாடுகளுக்கு அப்பால் அவரது கைதின் மூலம் மகிந்த அரசாங்கம் தமிழர் பேசும் மக்களுக்கு சொல்ல வந்த செய்தியை கவனிக்க மறந்துவிட்டனர்.அல்லது அதை கவனித்தும் அது மக்களைச் சென்றடையக் கூடாது என்று திட்டமிட்டு மறைக்கின்றனர். யாழ்ப்பாணம் சென்ற ஜெயபாலன் அங்கு மீள் குடியேறியுள்ள முசுலீம் தலைவர்களை சந்தித்து தமிழ் முசுலீம் ஒற்றுமை பற்றியும் முசுலீம்களின் பாதுகாப்பு தமிழர்களுடன் ஒன்றுபட்ட இருப்பதிலே தான் தங்கியிருக்கிறது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.இதைத் தான் அவர் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்திருக்கிறார்.தற்போது முசுலீம்களுக்கு எதிராக பௌத்த சிங்கள பேரினவாதிகள் தாக்குதலை தொடுத்திருக்கும் நிலையில் தமிழர்களையும் மோதவைத்து பிளவுபடுத்தி அதன் மூலம் தமிழின அழிப்பையும் தாயக சிதைப்பையும் மேற்கொண்ட வந்த சிறீலங்கா ஆட்சியாளர்களும் ஜெயபாலன் முகமறிந்த ஒரு நடிகானாக வந்து தமிழ் முசுலீம் ஒன்றுமை பற்றி பேசியது பயத்தை உண்டாக்கியது. தோழர் ஜெயபாலனின் நடிகன் கவிஞன் என்ற ஊடக விளம்பரத்தை வைத்தே தமிழ் பேசும் மக்களுக்கு ‘எவராவது தமிழ் முசுலீம் ஒன்றுமைக்கு முயற்சி எடுத்தால் அல்லது அது பற்றிப் பேசினால் அவர்கள் கடத்தப்படுவார்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கை செய்தியை மகிந்தவும் கோத்தபாயவும் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் செய்தி உலகளவில் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் அவரை தொலை பேசியில் பேச அனுமதித்திருக்கிறார்கள். இதை விட தோழர் ஜெயபாலனின் கைது இன்னொரு செய்தியையும் புலம் பெயர்ந்த தமிழருக்கு உணர்த்தியிருக்கிறது. அதாவது அங்கே இப்போது சமாதானம் சகவாழ்வு வந்துவிட்டதாக கூறிக்கொண்டு இங்கேயிருந்து செல்லும் பலர் காணிவாங்குவது கட்டிடம் கட்டுவது முதலீடு செய்வது என்று மறைமுகமாக சிறீலங்கா பௌத்த சிங்கள பேரினவாத அரசின் பொருளாதார இருப்புக்கு துணை புரிந்துகொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பெரும் தமிழ் நிறுவனங்கள் சிலவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உவுகிறோம் என்ற கறிவேப்பிலை காரணங்களை சொல்லிக்கொண்டு திரை மறைவில் மகிந்த அன் கொம்பனியுடன் பெரும் வணிக ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன. ஆனால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சொத்துக்கள் முதலீடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது சமாதனம் சகவாழ்வுக்கு இடையூறானது என்று கையகப்படுத்தப்படலாம் நீங்களும் கைகழுவிவிடப்படலாம் கைது செய்யப்படலாம் அல்லது நாடுகடத்தப்படலாம் என்பதே அந்த செய்தியாகும். இவற்றை முதன்படுத்துவதை விடுத்து— ஜெயபாலன் ஓட்டுக் குழு உறுப்பினன்;…. ரோ ஏஜண்ட்… சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி… என்று சேறடிப்பதன் முலம் இந்த கருத்து கந்தசாமிகள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? யாரை காப்பாற்ற விரும்புகிறார்கள் http://sivasinnapodi.wordpress.com/2013/11/26/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தோழர் ஜெயபாலனின் விடுதலைக்கு குரல் கொடுக்க எம்மை தூண்டியது எது? சிவாசின்னப்பொடி தோழர் ஜெயபாலனும் நானும் நல்ல நண்பர்கள் தோழர்கள்.எங்களுடைய நட்பும் தோழமையும் சுமார் 30 வருடங்கள் பழமையானது.அவர் நலமுடன் திரும்பிவரவேண்டும் என்பதில் நானும் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன்.அதற்கான முயற்சி எடுத்த சிலருடன் நானும் தொடர்பில் இருந்திருக்கிறேன்.அவர் நலமுடன் திரும்புவார் என்ற நான் திடமாக நம்புகிறேன். இந்த இடத்திலே எனது மனச்சாட்சியை ஒரு விடயம் உறுத்துகிறது. ; ஜெயபாலன் என்ற தோழனுக்காக கவிஞனுக்காக ஓங்கி ஒலித்த எங்கள் குரல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவினார்கள் உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறீலங்கா அரச பயங்கரவாதப்படையினரால் கைது செய்யப்பட்டு வருடக்கணக்கில் சித்திரவதைகளை அனுபவித்து விசாரணையின்றி சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான முகம்மறியா உறவுகள் வியடத்தில் ஏன் ஓங்கி உரத்து ஒலிக்க வில்லை? என்பதே அந்த உறுத்தலாகும். தோழர் ஜெயபாலனை விடுவிப்பதற்கு அரசாங்கத்திலுள்ள இரண்டு அமைச்சர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு பிரபலமும் செல்வாக்கும் இருக்கிறது. அந்த பிரபலமும் செல்வாக்கும் கவிஞர் நடிகர் என்ற அடையாளம் தான் எங்களை அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்க தூண்டியது என்றால் நிச்சயமாக அது மனிதாபிமான செயற்பாடாகவோ மனித உரிமை சார்ந்த செயற்பாடாகவோ இருக்காது. தோழர் ஜெயபாலன் ஒரு சாதாரண மணிதராக இருந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் நூற்றோடு நூற்றி ஒன்று என்று கூறி அவரை மறந்திருப்போதும் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வதைமுகாங்களிலும் சிறைகளிலும் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைக்காக தோழர் ஜெயபாலன் விடுதலைக்கு காட்டிய ஓர்மத்துடன் குரல் கொடுக்க முயற்சி எடுக்க எங்களை எது தடுக்கிறது? எங்களுக்குள் இருக்கும் சந்தர்ப்ப வாதமா? இல்லை பிழைப்பவாதமா? http://sivasinnapodi.wordpress.com/2013/11/24/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு: நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் முறைப்படி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுடன் பேசி இருப்பதோடு தூதரகத்தின் ஊடாக ஒரு சட்டத்தரணியையும் ஒழுங்கு செய்திருப்பதாக கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் அவரைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல்கள் ஜெயபாலன் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாகவும், நாளை திங்கட் கிழமை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசா சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின் மீண்டும் விரைவாக நோர்வேக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடவடிக்கைகளே மீதம் இருப்பதாகவும் ஜெயபாலனின் நலன் குறித்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர்சேகுதாவுத் நேரடியாக கவனித்து வருவதாகவும் தெரியவருகிறது. வரமுடியவில்லை அம்மா தீயினை முந்தி உந்தன் திரு உடலில் முத்தமிட... சிங்கமும் நரிகளும் பதுங்கும் நீர்சுனையின் வழி அஞ்சி உயிர் வற்றும் மானானேன். சென்னைச் சுவர்பாலை துடிக்கும் பல்லி வாலானேன். தோப்பாகும் கனவோடு நீ சுமந்த நறுங் கனிகள தின்றதே ஈழத் தமிழன் விதி என்ற பேர் அறியா தேசத்துப் பறவை. துருவக் கரை ஒன்றில் அதன் பீயாய் விழுந்தேனே என் கனிகளச் சுமந்தபடி இறால் பண்ணை நஞ்சில் நெய்தல் சிதைந்தழியும் சேதுக் கரையோரம் படகுகளும் இல்ல. கண்ணீரால் உன்மீது எழுதாத கவிதகளைக் காலத்தில் எழுகிறேன்... -வ.ஐ.ச.ஜெயபாலன்- நன்றி Watch Human முகநூல் 9ஆம் இணைப்பு - கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:- வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் காலை வரை அவர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... என்.சரவணன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில். “...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்.... ...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...” எரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட. ஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட. முஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர். அதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர். யுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/ போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக் கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம். பேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார். அதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.” ஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார். கூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியாகவில்லை. அப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன. இதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது. 10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது. உல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு தள்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர். அரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள். அடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். இந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள். இலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே. அதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார். இது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன. யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை. ஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த கடும் விதிகளை திணித்து வருபவர்களில் முக்கியமானவர்கள் மற்ற நாடு பிரஜைகள் என்பது தான். மகிந்தவின் தம்பிகளான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை. அவரின் அடுத்த தம்பி பசில் ராஜபக்ஷ அமெரிக்க கிரீன் கார்ட் உள்ளவர். யுத்தத்தை நடத்தி முடித்த சரத் பொன்சேகாவும் அமெரிக்க கிரீன் கார்ட்டை கொண்டவர். நாட்டின் அமைதிக்கு மோசமான குந்தகம் விளைவித்த சர்வதேச குற்றசாட்டுக்குரியவர்கள் இவர்கள். இதை எல்லாவற்றையும் உலக அரங்கில் நியாயப்படுத்த நியமிக்கப்பட்ட பாலித கோஹன்ன ஒரு அவுஸ்திரேலிய பிரஜை. இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு. அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது. ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99429/language/ta-IN/article.aspx
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டா கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரிடம் இருந்து இலங்கை நேரம் மாலை கிடைக்கப்பெற்ற தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பிரஜைகளைத் தடுத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்றும் பொறலையில் உள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா? அல்லது பொறலை பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா என்பதனை அவர் தெளிவாக கூறவில்லை. இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டால் பின் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீதி மன்ற நடவடிக்கைகள் அலுவலக நடவடிக்கைகள் நடைபெறாது என்பதனால் திங்கட் கிழமையே நீதிமன்றில் ஆஜர்பபடுத்தி அவரை விடுதலை செய்ய முடியும். இது சதாரண நடைமுறை ஆகும். இந்த நடைமுறையை மீறி விசேடமாக கவனம் செலுத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது ஜனாதிபதியின் விசேட பணிப்பில் நீதவான் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நீதித் துறையின் அனுமதியுடன் விடுவிக்க முடியும். எனினும் சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறை யாவுமே மகிந்த சகோதரர்களின் பிடியில் இருப்பதனால் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் கரிசனை எடுத்தாலும் உடனடி விடுதலை சாத்தியமற்றது. அந்த வகையில் நாளை மறுதினம் திங்கட் கிழமையே இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், புலனாய்வுத்துறையினரின் தீர்மானத்திற்கு அமைவாக நீதித் துறை ஊடாக விடுவிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. அவ்வாறு இல்லாமல் உல்லாசப் பிரயானத்திற்கான விசாவில் சென்று விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் மூலம் தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக தமது நாட்டுப் பிரஜை தடுத்து வைக்கப்பட்டு இருப்பதற்கான காரணத்தை வினவி ராஜதந்திர மட்டத்தில் விடுதலைக்கான முயற்சிகளை எடுக்கலாம் எனவும் தெரியவருகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx