Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால தண்ணீர்த்தொட்டி! கீழடியில் கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தண்ணீர்த்தொட்டி ( ஈ.ஜெ.நந்தகுமார் ) கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தற்போது தண்ணீர் தொட்டி கிடைத்துள்ளது. இதை மாணவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். கீழடி நந்தகுமார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிம வேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதன்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கீழடி அகழாய்வு நந்தகுமார் கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மண்பாண்டம் குடுவைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர் வழிப்பாதை போன்ற அமைப்பு என ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. சென்ற வாரம் மழை பெய்தாலும் அகழாய்வுப் பணியில் தொய்வு எதுவும் ஏற்படாமல் மிகத் துரிதமாக அகழாய்வுப் பணியானது நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட தண்ணீர்த் தொட்டி போன்ற இடத்தில் நீர் சேகரித்து வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கீழடி அகழாய்வு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தற்போது நடைபெறும் ஆய்வின் முடிவில் மட்டுமே எதையும் கூறமுடியும். சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த் தொட்டி என்று தெரிகிறது. எங்களின் துறைத்தலைவர்கள்தான் வெளிப்படையாகக் கூற அதிகாரம் உள்ளது" என்றனர். https://www.vikatan.com/news/tamilnadu/sangam-era-water-tank-found-in-keezhadi-excavation
  2. கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள்; அகலமான செங்கல் சுவர் கட்டிடம் கண்டுபிடிப்பு சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் வெளிநாட்டில் அணியும் அகேட் (agate) வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு கண்டறியப்பட்ட உறைகிணற்றின் உயரமும் தோண்டத்தோண்ட அதிகரித்து கொண்டே செல்கிறது. கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய் ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலங்களில் 23 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய்யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) போதகுரு என்பவரின் நிலத்தில் அகலமான செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களைவிட இது அகலமானது. முருகேசன் நிலத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம் நீண்டு கொண்டே செல்கிறது. இதுவரை 7 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளன. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் அதிக ஆழத்தில் உறைகிணறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு கிடைத்துள்ள அணிகலன்கள், வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் (agate) வகை கல்லில் செய்யப்பட்டவை. இதனால் பழந்தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்துள்ளது உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். https://www.hindutamil.in/news/tamilnadu/510503-keeladi-excavation-2.html
  3. 'கீழடி ஆய்வில் சங்க காலமும், திராவிட செழுமையும் தெரிகிறது!' -நெகிழும் ஆய்வாளர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய அகழ்வாராய்ச்சித் துறையினரின் ஆய்வில் புதையுண்ட ஒரு நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேலும் தொடர்வதற்குள் சட்டச் சிக்கல் எழவே, ஆய்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வின் திட்ட இயக்குநர் என்ன சொல்கிறார் கீழடி அகழ்வாய்வின் தலைமை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது , "கிபி 300-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் ஆய்வில் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை" என்கிறார். சு.வெங்கடேசன் சொல்வது என்ன கீழடி ஆய்வுகளை தன்னுடைய கட்டுரைகளில் கொண்டு வந்து கொண்டிருக்கும் 'சாகித்திய அகாடமி' விருதாளர் சு.வெங்கடேசன், "கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் 50 சென்ட் வரைதான் அகழாய்வு செய்திருக்கிறார்கள்.முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்துமுதல் இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசும் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம்" என்றார். சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர், ஸ்ரீலட்சுமி , '' கீழடி ஆய்வில் ஏற்பட்டுள்ள தடைகுறித்து,டெல்லி, தலைமை இயக்குனருக்கு தெரிவித்துள்ளோம்; பதிலுக்காக காத்திருக்கிறோம்'' என்கிறார். கீழடி மக்கள் கருத்து என்ன ஆய்வாளர்களுடன் பொதுமக்களும், மக்கள் இயக்க சக்திகளும் கீழடி ஆய்வில் களம் இறங்கியுள்ளனர். அவர்களிடம் பேசியபோது, " கீழடியில் அகழாய்வு செய்துள்ள இடம், தனியாருக்கு சொந்தமானது. அகழாய்வுக்கு பின், தொல் பொருட்களை மட்டும் எடுத்து விட்டு, மீண்டும் நிலத்தை பழையபடியே மூடிக் கொடுப்பதாக, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.தாங்கள் போட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை தாங்களே மீறுவது என்றால், எதிர்காலத்தில் அகழ்வாராய்வுக்கு நிலத்தைக் கொடுப்பதில் பொதுமக்கள் தயங்குவார்கள், கண்டிப்பாக முன்வர மாட்டார்கள் என்ற இக்கட்டான சூழலில் அகழ்வாய்வுத் துறையினர் உள்ளனர்." என்கின்றனர். மு.கருணாநிதியின் அறிக்கை தி.மு.க. தலைவர் கருணாநிதி, "கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையைப் பறை சாற்றுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன" என்று கூறியிருக்கிறார். கி.வீரமணியின் அறிக்கை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, "கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள், ஆய்வில் கிடைத்துள்ளன. தமிழக அரசு அதற்கான நிலம் ஒதுக்கி அதனை அருங்காட்சியகமாக உருவாக்க வேண்டும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அதற்கான தேவையான முயற்சியில் ஈடுபடும்" என்று அறிக்கையில் கூறியிருக்கிறார். ஆய்வாளரின் பெருமிதம் கீழடி ஆய்வில் பணியாற்றிய ஓய்வு துணை கண்காணிப்பாளர் கருப்பையாவிடம் பேசியதில், "பெருமையாக, கர்வமாக உணர்கிறோம். நைல் நதி நாகரீகம் போன்று வைகை ஆற்று நாகரீகம் இந்த கீழடியின் மூலம் உலகத்தின் கண்களுக்கு காணக் கிடைத்திருக்கிறது.பிராம்மி எழுத்து ஓடுகள் நிறைய கிடைத்துள்ளது ஒரு வரப் பிரசாதம்தான். வணிகர்கள் வாழ்வியலும், பெருவணிகர்கள் வாழ்ந்ததற்கான தடமும், தொல்காப்பிய இலக்கியம் சார்ந்த விஷயங்களுக்கான ஆதாரங்களும் கீழடியில் கொட்டிக் கிடைத்திருக்கின்றன. தமிழர்களுக்கான தொன்மை நாகரீக வாழ்க்கை திரும்பக் கிடைத்திருக்கிறது, திராவிட செழுமை தெரிகிறது. அரசாங்கம் கை விரித்தாலும், பொதுமக்கள் புரிந்து கொண்டு கை கொடுக்க முன் வந்துள்ளது நெகிழ வைக்கிறது. சங்ககாலம் என்ற ஒன்று இருந்ததற்கான சான்று ஏட்டளவில், எழுத்தளவில் என்பது போய் கண்ணெதிரே காட்சியளிக்கும் ஆவணமாக இந்த கீழடி ஆய்வு நிருபணம் செய்திருக்கிறது. ஆய்வின் ஒவ்வொரு அடியும் நம்முடைய நாகரீகம் பளிச்சிடுவதை காட்டிக் கொண்டே இருக்கிறது. விரைவில் மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கீழடி புரொஜக்ட் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் கடைசிவரையில் உறுதியாக நின்று "இந்த இடத்தை தோண்டுங்க, விஷயம் இருக்கிறது" என்று சக்சஸ் செய்து கொடுத்தவர். அவரைத்தான் இங்கே பாராட்டியாக வேண்டும். தமிழர் வாழ்க்கையே அல்லவா, திரும்பக் கிடைச்சிருக்கு..." நெகிழ்கிறார் கருப்பசாமி. அன்றே முடிவெடுத்த மெக்காலே இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே ஆற்றிய உரையில், "இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தால் அன்றி, அந்த நாட்டை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என்று நான் நினைக்கவில்லை. அந்த நாட்டின் பழமையான கல்வி முறையையும் கலாசார முறையையும் மாற்ற வேண்டும் என்று நான் இங்கே முன்மொழிகிறேன். இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டைவிட அந்நிய நாடே மேல், சொந்த மொழியை விட ஆங்கில மொழியே மேலானது என்று நினைக்கும்போது, அவர்கள் தங்களது சுயமரியாதையையும், கலாசாரத்தையும் இழப்பார்கள். அப்போது நாம் விரும்பியவாறு அவர்களை உண்மையாக மேலாதிக்கம் செய்ய முடியும்" என்று 18-ம் நூற்றாண்டிலேயே தமிழர்களை என்ன செய்யலாம் என்ன முடிவில் உறுதியைக் காட்டிப் பேசியிருக்கிறார். மெக்காலே கல்வித்திட்டமும் இன்னும் மாறவில்லை, நம்முடைய பாரம்பர்ய மாண்பின் மீதான ஈர்ப்பும் நம்மிடம் இல்லை... மக்களிடம் அடிமைப் புத்தி தொடர அரசுகளே முக்கியக் காரணம். http://www.vikatan.com/news/tamilnadu/70376-keezhadi-excavation-and-sangam-era.art
  4. இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் சிறிய கூடாரம் அமைத்து அதற்குள் திலீபனின் திருவுருவப்படத்தை வைத்து அதற்கு பன்னிரண்டு நாட்களாக தீபம் ஏற்கிக் கொண்டிருந்தோன். சிறுவர்களாக இருந்த போதுதிலீபனின் நினைவுநாட்களில் அவரைக் குறித்த நாகடங்கள், பேச்சுக்கள், கவிதைகள் என்று நிகழ்த்தி அவரது தியாகச் சாவை நினைகூர்ந்தோம். பாடசாலையில் திலீபன் நினைவு நாட்களில் பிரதான வாசலில் அவரது நினைவுநாட்களைக் குறித்த பதாகை ஒன்றை நடுவோம். காலை வணக்க நிகழ்வில் திலீபனுக்காக மலர் தூவி, தீபம் ஏற்றி வணங்குவோம். புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்த காலத்தில் திலீபனின் தியாகம் வன்னி முழுவதும் நினைவகூரப்படும். சமாதான காலத்தில் யாழ்ப்பாணம் போன்ற அரச கட்டுப்பாட்டு இடங்களிலும் அவரை நினைவுகூறுவார்கள். அகிம்சை என்பது என்ன என்பதை உலகத்திற்கு எடுத்துரைத்தவர் திலீபன். இந்தியாவிற்கு அகிம்சைப் போராட்டத்தின் வழியாக காந்தி விடுதலையைப் பெற்றுக் கொடுத்தார் என்று மகாத்மா காந்தி காந்தியை அழைப்பதுடன் காந்தி தேசம் என இந்தியாவை அழைக்கபடுகிறார்கள். அதே இந்தியாவுக்க எதிராகவே திலீபன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை வந்த இந்திய அமைதிப்படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து தியாகி திலீபன் உண்ணா விரதத்தை மேற்கொண்டார். வாழ்க்கைக் குறிப்பு: ஈழத்தின் யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த திலீபன் (பிறப்பு: நவம்பர் 27, 1963 - செப்டெம்பர் 26, 1987)எனப்படும் பார்த்திபன் இராசையா புலிகளின் ஆரம்பால முக்கிய உறுப்பினராவார். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி தனது உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1987 செப்டம்பர் 26 அன்று காலை 10.48 மணிக்கு மரணத்தை தழுவினார். யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபனுக்கு மரணத்தின் பின்னர்,புலிகள் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலையை வழங்கியிருந்தனர். திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்: 1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். 4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5.பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். அகிம்மைப் போராட்டத்தின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றாக கருதப்படும் இந்திய தேசம் திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை. பன்னிரண்டு நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாமல் உண்ணவிரதம் இருந்தார் திலீபன். அகிம்சை என்பது மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படாமல் அல்லது மற்றவர்களை தண்டிக்காமல் தாம்மை வருத்தி முன்னெடுக்கும் ஒரு போராட்டம். காந்தி இந்த அறவழிப் போராட்டத்தையே இந்திய சுகந்தி விடுதலையை வென்றெடுக்கப் பயன்படுத்தினார். ஆனால் இந்திய விடுதலைப் போராளி பகத்சிங்கிற்கு தூக்குத் தண்டணையை ஆங்கிலேயர்கள் வழங்க முடிவுசெய்ய பொழுது தண்டனைக்கான பத்திரத்தில் காந்தி ஒப்பமிட்டதாகவும் அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்மையை ஆதரிப்பது எனவும் கேள்வி எழுப்படுகிறது. திலீபனின் உண்ணா விரத அறப் போராட்டத்திலும் இந்தியா திலீபனுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் இம்சையையே பரிசளித்தது. உலகத்தில் நடந்த அகிம்சைப் போராட்டங்களில் திலீபனின் போராட்டம் ஒரு உன்னதப் போராட்டமாக விளங்குகிறது. இந்த உலகத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எண்ணிவிட முடியாது. பல்வேறு தேவைகளுக்காக பலரும் உண்ணா விரதம் இருக்கிறார்கள். அலுவலகத்தில் சம்பள உயர்வு, கட்சியில் பதவி கோரி,அடிப்படைத் தேவைகளை கேட்டு என்று பல்வேறு காரணங்களுக்காக பலரும் உண்ணா விரத்தில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியலில் உண்ணா விரதம் என்பது ஒரு தந்திரம். நான் உங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தேன் என்று சொல்லிக் கொண்டு பலரும் வாக்குகளை கேட்க வருவதைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலான அரசியல்வாதிகளின் பின்னால் உண்ணா விரதத்தின் வரலாறு இருக்கும். ஆனால் அது போலியான உண்ணா விரதம். பலர் உணர்ச்சி வசப்பட்டு முன்பின் யொசிக்காமல் உண்ணா விரத்திற்கும் செல்வதும் பின்னர் உண்ண விரம் இருந்து சில மணிநேரங்களில் எப்படியாவது அதை கைவிட்டு பழரசம் அருந்துகிறார்கள். இவர்கள் யாரும் உண்ணவிரதம் இருந்து உயிரை துறக்கவில்லை. திலீபனின் உண்ணா நினைவு நாட்களில் மேலும் இரண்டு போலி உண்ணா விரதங்களைப் பற்றி இங்கு குறிபடுதல் பொருத்தமானது. ஒன்று விமல் வீரவனச எனப்படும் சிங்கள இனவாதியின் உண்ணா விரதம். பான்கிமூன் நியமித்த மனித உரிமைகள் தொடர்பான நிபுணர் குழுவை கலைக்க வேண்டும் என்ற ஐ.நாவுக்கு எதிராக விமல் வீரவன்ச உண்ணா விரத நாடகம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். திலீபனுடைய உண்ணாவிரதத்தையும், விமல் வீரவன்சவினுடைய உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு சிங்களக்கவிஞரும் எழுத்தாளருமான புலஸ்தி இப்படி எழுதியிருக்கிறார். 1. திலீபனின் உண்ணாவிரதமானது விளம்பரத்துக்காகச் செய்யப்பட்ட ஒன்றல்ல. ஆனால் விமலினுடையைது விளம்பரத்துக்கானது. 2. திலீபன் மரணம் நிச்சயம் என்பதை முழுதாக ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தில் இறங்கியவர். ஆனால் விமல் சாவை எதிர்பார்க்கவேயில்லை. 3.திலீபன் உண்மையிலேயே விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் விமல், மஹிந்தவிடம் தானும் இருக்கிறேனெனக் காட்டிக் கொள்வதற்காக உண்ணாவிரதம் இருந்தார். 4. திலீபனுக்கு சாவின் மூலமாக கைவிட்டுச் செல்ல ஏதுமில்லை. ஆனால் விமலுக்கு பணம், மாளிகைகள், வாகனங்கள், அரசியல் எனப் பல உண்டு. இந் நிலையில் அவர் உண்மையில் சாக விரும்புவாரா? 5. திலீபனுக்கு உண்ணாவிரதமென்பது தனது அரசியல் எதிர்ப்பைக் காட்டும் ஒரு ஆயுதம். ஆனால் விமலுக்கு தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு நாடகம். (மொழிபெயர்ப்பு: ரிஷான்) அடுத்து தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உண்ணா விரதத்தைப் பற்றிக் குறிப்பிடுதல் பொருத்தமானது. ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் அன்று தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டார். சென்னை சேப்பாகத்தில் உள்ள அண்ணா சதுக்கத்தில் விமல் முன்னெடுத்ததுபோலவே ஒரு சுகபோக உண்ணா விரதத்தை கருணாநிதி முன்னெடுத்தார். காலை உணவை எடுத்துக் கொண்டு வந்த கருணாநிதி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் போர் நிறுத்தப்ப்ட்டது என்று உண்ணா விரதத்தை முடித்தக் கொண்டு மதிய உணவிற்குச் சென்றுவிட்டார். இந்தியாவில் மணிப்பூர் மற்றும் பிற வட கிழக்குப் பகுதிகளில் மெற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை நிறுத்தும்படி கோரி மணிப்பீரைச் சேர்ந்த ஜரோம் சர்மிளா கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உண்ணா விரதம் இருக்கிறார். பலவந்தமாகவே அவருக்கு உணவு ஊட்டப்படுகிறது.இவரது போராட்டம் போன்றவற்றை தவிர்த்துப் பார்க்கையில் இந்தியாவில் உண்ணா விரதத்தை பலர் அரசியல் ஆதாயம் தரும் வெளிப்பாடாக கருதுகின்றனர். ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகமாக முடிவடைதால் உண்ணா விரதப் போராட்டம் என்பதற்கு மதிப்பே இல்லாத நிலையும் காணப்படுகிறது. அரசியலில் பல்வேறு திட்டங்களை மதி நுட்பமாக முன்னெடுத்து வரும் கருணாநிதியால் தமிழகத்தில் பலமுறை முதலமைச்சராக இருந்த கலைஞரால் உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொள்ள முடியாது என்பதே இதில் வெளிப்படுகின்றன உண்மை. ஏனெனில் பசியை யாராலும் தாங்க முடியாது. பசியை தாங்கும் சக்தி மன வலிமையைப் பொறுத்தது. ஆனால் அது ஒரு போராளியால் மட்டுமே முடிந்திருக்கிறது. காந்தியிடம் விமல்வீரவன்சவிடம் கருணாநிதியிடம் இல்லாத மனோதிடம் திலீபனிடம் மட்டமே இருந்தது. அந்த மனோதிடத்தை ஈழ மண்ணிக் அரசியலே உருவாக்கியது. திலீபன் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்றால் அதற்கு அடிப்படையானது ஈழ மண்ணின் வரலாறும் நிலவரமும்தான். தனது தேசம் தொடர்பிலும் மக்களின் விடுதலை தொடர்பிலும் திலீபன் என்ற போராளியிடம் காலம் உருவாக்கிய மனோதிடம்hன் அவரை அத்தகையதொரு மரணப் போராட்டத்தை செய்யத் தூண்டியது. உண்ணா விரதப் போராட்டம் தொடர்பிலும் இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பிலும் முழுமையான புரிதலுடன்தான் திலீபன் போராட்டத்தில் இறங்கினார். அதனால்தான் அகிம்சை தேசம் என்ற இந்தியவின் முகத்திரையை கிழித்து அதன் இம்சை முகத்தை அம்பலப்படுத்த முடிந்தது. ஒரு காலத்தில் திலீபனின் நினைவுநாட்களை பெருமெடுப்பில் நினைவுகூர்ந்த ஈழ மண் இன்று மௌனித்துக் கிடக்கிறது. திலீபனுக்காக தமிழர் தேசத்தில் எழுப்பட்டிருந்த நினைவுத்தூபிகள் எiதையும் சிங்கள இராணுவத்தினர் விட்டு வைத்திருக்கவில்லை. ஏனெனில் திலீபன் என்ற குறியீடு வலிமை மிகுந்தது. அவரது போராட்ட வடிவம் இந்த உலகத்தை என்றும் கேள்விக்கு உள்ளாக்கியபடியிருக்கும். திலீபனின் சிலைகளுக்கும் படங்களுக்கும் தூபிகளுக்கும் அஞ்சிய இராணுவத்தினர் அவற்றை மெல்ல மெல்ல இரவோடு இரவாக அழித்து முடித்துவிட்டனர். திலீபனின் மனோ திடத்திலிருந்து வெளிப்பட்டவைதான் 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்' போன்ற கருத்துக்கள். நினைவுகளில் எழுப்பட்ட திலீபனின் சிலைகளை படங்களை சித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது. திலீபன் தமிழ் மக்களிடத்தில் என்றும் மறக்க முடியாத ஒரு அற்புதப் போராளி. திலீபன் ஈழத் தமிழர்களின் ஒரு குறியீடு. திலீபனின் பசி என்பது மக்களின் பசி. திலீபனினை இன்றும் நாம் நினைவுகூரவேண்டியிருப்பதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. திலீபன் அன்று முன் வைத்த கோரிக்கைகள் இன்றும் இந்திய அரசை நோக்கி மாத்திரமன்றி இலங்கை அரசை நோக்கியும் எழுகின்றன. இருப்பதாறு வருடங்கள் கடந்துவிட்டன. அன்று தொடங்கி இன்னமும் ஈழத் தமிழ்களுக்கு ஒரு தீர்வில்லை. இன்னமும் ஈழத் தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப் படுகின்றனர். பிரகடனப்படுத்தப்படாத ஒரு அவசரகாலச்சட்டம் நிலவுகிறது. பலர் இன்னமும் சிறைகளில் தவிக்கின்றனர். அன்று ஊர்காவல்படைகள் இன்று இராணுவப்படைகளே தமிழர் தாயகத்தில் நிறைந்துவிட்டன. பொலிஸ் நிலையங்களும் பெருகிவிட்டன. அன்று திலீபன் முன்வைத்த பிரச்சனைகள் இன்று உச்ச கட்டத்தை அடைந்துவிட்டன. 27 வருடங்கள் கடந்த பின்னரும் அகிம்சைக்கு தன்னை பலியிட்ட ஒரு ஈழப் போராளி திலீபனின் கோரிக்கைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. 27 வருடங்கள் கடந்த பின்னரும் திலீபனின் பசி இன்னமும் தீராவில்லை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111980/language/ta-IN/article.aspx
  5. ஒரு அவதானம். நான் இணைத்த 'அமிர்தலிங்கத்தின் பிறந்த தின' செய்திக்கு 2 நிமிடத்துக்குள் நீங்கள் பதில் போட்டீர்கள். எமக்காக தன்னுயிரை தியாகம் செய்தவருக்கு 18 மணித்தியாலங்கள் கடந்த பின் அஞ்சலி செலுத்துகின்றீர்கள். இது ஒரு அவதானம் மட்டுமே.
  6. வீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்த 'வீரமங்கை' செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு 2011 ம் ஆண்டு இதே தினத்தில் தூக்குத் தண்டணையை நிறைவேற்ற இந்திய அரசு தீர்மானித்திருந்தது. இவர்களுக்கான தூக்குத் தண்டனையை தடுத்து அம் மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27 ) என்ற வீரமங்கை காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச்சாவடைந்தார். இந்நிலையில் 3 பேரது உயிரையும் காக்க அரசுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=714163374328593884#sthash.5qobcRx9.dpuf
  7. ஹிருத்திக் நிஹாலே விடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில பெயர்கள் அடிபட்டு பின்னர் காணாமல் போன கதைகள் நிறைய இருந்தன. நீண்டகாலத்திற்கு இந்த அந்தஸ்துடன் இருந்த பெயர்கள் மிகஅரிதானவை. பொட்டம்மான், பால்ராஜ், சொர்ணம் என மிகச்சிறிய பட்டியல் அது. சொர்ணம் எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்பது சற்று வியப்பிற்குரியது. சிந்தனைக்குரியது. ஏனெனில் இந்த பட்டியலில் உள்ளவர்கள் அளவில் அவர் எந்த காலத்திலும் பிரகாசித்து கொண்டிருந்தவர் அல்ல. அந்த அமைப்பில் இருந்து மிகமோசமான வீழ்ச்சியை சந்தித்த ஒரு தளபதியாகவும் அவர்தான் இருந்தார். எனினும் ஈழத்தமிழர்கள் மத்தியில் அவர் பற்றிய ஒரு மிகையான மதிப்பீடு இருந்து கொண்டேயிருந்தது. உண்மையைச் சொன்னால், அமைப்பிற்கு வெளியிலிருந்த தமிழர்களிடம் மட்டும்தான் அப்படியான அபிப்பிராயம் இருந்ததென்பதல்ல. அமைப்பிற்குள்ளிருந்தவர்கள் மத்தியிலேயே அவர் பற்றியதொரு அதீதமான பிரதிமை இருந்தது. இத்தனைக்கும் அவர் பற்றிய மதிப்பீடுகளளவிற்கு அவரது களச்செயற்பாடுகள் இருந்ததென்று கூற முடியாது. இப்படி சொல்வது பலரை சினமூட்டலாம். ஆயினும் அவர் பற்றிய ஒரு மதிப்பீட்டின் அவசியத்திற்காக இதனையும் பேசவேண்டியுள்ளது. சொர்ணத்தின் ஆரம்ப நாட்கள் 1964ம் ஆண்டு பிறந்த சொர்ணம், திருகோணமலையில்த்தான் வளர்ந்தார். அவரது பிறப்பு யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் என்றபோதும், திருகோணமலையின் அரசடிதான் அவரது வளர்ந்த இடம். தந்தை யோசெப். தாய் திரேசம்மா. திருகோணமலையின் புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி கற்றவர், 1982ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து 1983ம் ஆண்டில்- தனது 19வது வயதில்- பயிற்சிக்காக இந்தியா சென்றார். தமிழ்நாட்டின் சிறுமலையில் நடந்த 3வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றார். இவரது பயிற்சிமுகாம் கூட்டாளிகளில் ஒருவர்தான் கருணா. பயிற்சி முடிந்ததும் யாழ்ப்பாணம் வந்து சில மாதங்கள் நின்றார். அதன்பின்னர் மீண்டும் இந்தியா அழைக்கப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்தது விக்ரர். காரணம், பிறிதொரு பயிற்சிக்காக. அந்த சமயத்தில் இலங்கைத்தீவில் ஆர்.பி.ஜி என்றொரு ஆயுதமே பாவனையில் இருக்கவில்லை. இந்தியாவில் வைத்து சொர்ணம், தேவன் உள்ளிட்ட சிலரிற்கு பயிற்சி வழங்கப்பட்டது. (பின்னர் 1985இல் யாழ்ப்பாணத்தில் பண்டிதரின் முகாம் சுற்றிவளைப்பில்த்தான் இலங்கை படையினர் அதனை முதன்முதலாக கைப்பற்றி கண்கொண்டு பார்த்தனர்) இந்தியாவில் பயிற்சி பெற்ற சமயத்தில் அமைப்பின் தலைவரின் பாதுகாவலர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு விக்ரரினால்த்தான் நடத்தப்பட்டது. அவரது உயர்ந்த தோற்றமும், இயல்பான கறார்த்தன்மையும் விரைவிலேயே அவரை தனித்தன்மைமிக்கவராக அடையாளம் கட்டியது. அவர் எவ்வளவு திறைமைகள் மிகுந்தவராக இருந்திருப்பினும், அவர் வேறு பணிகளில் இருந்திருந்தால் அவ்வளவு விரைவில் அடையாளம் காணப்பட்டிருக்கமாட்டார். அமைப்பின் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்தமை என்பது அவரை விரைவிலேயே ஏணிப்படிகளில் ஏற்றிவிட்டது. பின்னாட்களில் குமரன், வேலவன், இரட்ணம் என எண்ணற்ற உதாரணங்களை கூறமுடிந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகவலர்களாக இருப்பதால், விரைவிலேயே அடையாளம் காணப்பட்டு நட்சத்திரமான முதலாமவர் சொர்ணம்தான். தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களுடன் ஆரம்பநாள் தொட்டு அவர் ஒரு தீவிரம்மிக்க போர்வீரனாக இருந்தார். ஒரு தீவிரம்மிக்க போராளி அவர். செயலின் இரண்டாம் விளைவுகளை சிந்திப்பவராக இருக்கவில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், மூர்க்கத்தனமாக மேடையில் மோதிக்கொள்ளும் மல்யுத்தவீரனின் இயல்பைக் கொண்டிருந்தார். இதனைவிட மேலதிகமாக, அவர் தனது தலைமையை தீவிரமாக நேசிப்பவராக இருந்தார். அந்த விசுவாசம் பற்றி இரண்டாவது கேள்வியை எவருமே கேட்க முடியாது. அதனை தனது வரலாற்றின் மூலம் நிரூபித்தும் விட்டார். ஏனெனில் அவர் மரணித்தபோது, இறுதியாக சொன்ன வாசகங்களில் ஒன்று, தலைவர் மரணிப்பதை தன்னால் கண்கொண்டு பார்க்க முடியாது. அதற்கு முன்பாக மரணித்து விட வேண்டும் என்பதே. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை சகித்து கொள்ள முடியாமல் மரணமான முதலாவது உயிரும் அவர்தான். அவர் களத்தில் கொண்டிருந்த தீவிரத்திற்கும், அமைப்பில் கொண்டிருந்த விசுவாசத்திற்கும் இவற்றை உதாரணமாக சொல்லலாம். கெரில்லாக்களாக வாழ்ந்த விடுதலைப்புலிகளின் ஆரம்பநாட்களில் அவர் ஒரு முன்னுதாரணம் மிக்கவராக விளங்கினார். எல்லாக் காரியங்களும் தீவிரமான உறுதியினாலும், விடாமுயற்சியினாலுமே சாதிக்க முடிபவையாக இருந்தன. உணவில்லாமல் இருக்க வேண்டுமா, இருந்தார். காட்டிற்குள் பதுங்கியிருக்க வேண்டுமா, பதுங்கியிருந்தார். பதுங்கியிருந்து ஒரு தாக்குதலை நடத்த வேண்டுமா, நடத்தினார். நேருக்குநேராக நின்று மோத வேண்டுமா, மோதினார். ஒருதரமும் இமைக்காமல் தனது தலைவரை பாதுகாக்க வேண்டுமா, பாதுகாத்தார். இவையெல்லாம் சேர்ந்து அவரை பிறிதெல்லாரையும் விட தனித்துவமானவராக அவரது தலைவரிடம் அடையாளம் காட்டியது. விடுதலைப்புலிகள் அமைப்பில் பராய வித்தியாசமில்லாமல் பிரபாகரனிடம் ஆத்மார்த்தமான பிணைப்பு கொண்டிருந்தவர்கள் பலர். வயதில் மூத்த அன்ரன் பாலசிங்கத்தில் தொடங்கி 30 வயதில் இறந்த சிலம்பரசன் வரை எண்ணற்ற உதாரணங்களை இதற்கு சாட்சியாக கூற முடியும். இவற்றில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற பகுப்பை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் மதகில் இருந்து அரட்டையடித்து கொண்டிருக்கவில்லை. அப்படிவெட்டியாக இருந்தால்தான் எல்லா நண்பர்களும் ஒன்று சேரவும், யார் முதன்மையானவர் என்ற அபிப்பிராய பேதங்களும் எழும். அவர் தீவிரமான கெரில்லா போராளியாக இரந்தார். அதுதவிர, அவர் தனிப்பட்ட நட்பிற்கும் கடமைக்குமிடையிலான இடைவெளியை பேணினார். இன்னும் துலக்கமாக சொன்னால், தன்னுடன் ஆத்மார்த்தமான நட்புடன் இருப்பவர்களும் தூயவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார். அவர்கள் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் கறைகளை சந்தித்தால், அவர்களை தள்ளி வைக்கத் தயங்கியதில்லை. தான் நம்பிய நிலைப்பாட்டிற்கு அப்பால் சிந்தித்தார் என்பதற்காக அன்ரன் பாலசிங்கத்தை ஒதுக்கி வைக்கவும், தனது எதிர்பார்ப்பபை நிறைவேற்றவில்லை என்பதற்காக சொர்ணத்தை தள்ளிவைக்கவும் தயங்கியவரல்ல. தன்னுடன் ஆத்மார்த்த பிணைப்பை கொண்டிருந்தவர்கள் சரியாக செயற்படவில்லை என்றபோது ஒதுக்கி வைத்தாலும், மிக நெருக்கடியான மனநிம்மதி வேண்டிய சமயங்களில் அவர்களை அழைத்து தனிமையை போக்கிய இரண்டு சம்பவங்கள் உள்ளன. முதலாவது கடாபி தொடர்புடையது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலக்கப்பட்டபோது எழுந்த நெருக்கடி நிலையின்போது ஒருநாள் கடாபியை அழைத்து நீண்டநேரம் தன்னுடன் உட்கார வைத்திருந்தார். கடாபியும் அவரும் கொண்டிருந்த நெருக்கம் பரகசியமானதல்ல. ஆனாலும், இதற்கு சில மாதங்களின் முன்னர்தான் அவரை கண்டபடி திட்டி தனது கண்ணில் விழிக்க வேண்டாம் என அனுப்பியிருந்தார். இரண்டாவது சொர்ணம் சம்மந்தமானது. அது யுத்தத்தின் இறுதி சமயத்துடன் தொடர்பானது. அதனை இறுதியில் பார்க்கலாம். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக விடுதலைப்புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகவலராக இருந்த சமயத்தில் சொர்ணம் பல சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஒருமுறை இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள் அவர் சிக்கியபோது, சொர்ணம் அவரை காப்பாற்றியிருந்தார். எனினும் இந்த நடவடிக்கையில் சொர்ணத்தின் பங்கு பேசப்படுமளவிற்கு, அதில் முக்கிய பங்கு வகித்த நவத்தின் பங்கு பேசப்படுவதில்லை. நவத்தின் சாதுரியமும், சொர்ணத்தின் மூர்க்கத்தனமாக போராற்றலும் இணைந்து சீக்கிய ரெஜிமென்றின் முற்றுகையிலிருந்து பிரபாகரன் தப்பிக்க உதவியது. இதற்கு உடன் பதிலடி கொடுக்க புலிகள் விரும்பினார்கள். கல்கட் இலக்கு வைக்கப்பட்டார். மணலாற்றின் நித்தியவெட்டையில் உலங்குவானூர்தியில் வந்திங்கியவர் மீது தாக்குதல் நடந்தது. ஹெலிமீது ஆர்பிஜி அடிக்கப்பட்டது. அடித்தது சொர்ணம். முதலாவது அடி மிஸ். அதற்குள் கல்கட் சுதாரித்து அருகிலிருந்த பதுங்குகுழிக்கள் பாய்ந்து விட்டார். இரண்டாவது அடியில் ஹெலி காலி. இந்தியபடைகளின் கட்டளைத்தளபதிக்கு மரணத்தின்வாசனையை முகரச் செய்தார் சொர்ணம். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகளில் பல நட்சத்திரங்கள் மேற்கிளம்பினார்கள். எனினும் அவர்களில் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் இறந்துபோய்விட்டனர். உயர்மட்டநட்சத்திரங்களாக எஞ்சியவர்களில் சொர்ணம் ஒருவர். மற்றவர் பால்ராஜ். இவர்கள் இருவரும்தான் இரண்டாம் கட்ட ஈழப்போரின் வடக்கு நாயகர்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தித்தான் இரண்டாம்கட்ட ஈழப்போரின் அத்தனை நடவடிக்கைகளும் அமைந்தன. இந்திய படைகளின் வெளியேற்றத்தின் பின்னர், விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பண்புமாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை சிறிய கெரில்லா அணிகளாக இருந்தவர்கள் படையணிகளை அமைத்தார்கள். மகளிர்படையணி தவிர்த்து, ஆண்கள் படையணி இரண்டு உருவாக்கப்பட்டன. ஒன்று சாள்ஸ் அன்ரனி படையணி. அதன் தளபதி பால்ராஜ். மற்றது இம்ரான் பாண்டியன் படையணி. இதற்கு சொர்ணம் தளபதி. அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வளலாய் தொடர் காவலரண் தகர்ப்பை அவர்தான் செய்தார். அது பெரிய படைத்துறை அதிசயத்தை ஏற்படுத்திய தாக்குதல் அல்ல. புலிகளிற்கும் பெரிய இராணுவ அனுகூலங்களை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனாலும், ஒரு கெரில்லா இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி காலத்தில், அவை நம்பிக்கை ஏற்படுத்திய தாக்குதல்கள். அவரது தலையாய படைத்துறை சாதனையாக குறிப்பிடத்தக்கது 1992இல் நடந்த கட்டைக்காடு முகாம் தாக்குதல். அந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் மிக நெருக்கடியை சந்தித்திருந்தார்கள். ஆயுதங்களிற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு. வெளிநாட்டு விநியோகம் ஒர் ஒழுங்கிற்கு வரவில்லை. அதுவரை கவனித்த பிரேமதாசாவும் கைவிட்டுவிட்டார். மரபுபடையணிகளை உருவாக்கிவிட்டாயிற்று. ஆனால் ஆயுதங்கள் இல்லை. குறிப்பாக ரவைகள் இல்லை. இராணுவம் ஒரு முன்னகர்வை செய்தால் தாக்கு பிடிக்க முடியாதென்ற நிலை. இயக்கத்தின் நிலைமையை உணர்ந்த சொர்ணம், கட்டைக்காடு முகாமை இலக்கு வைத்தார். அதுதான் ஆனையிறவு பெருந்தளத்தில் ஆயுதசாலை. கடல்மார்க்கமாக வந்த ஆயுதங்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தனது இம்ரான் பாண்டியன் படையணியை வைத்து அவர் அந்த தாக்குதலை மேற்கொண்டார். சில மணிநேரங்களிலேயே முகாமை வழித்து துடைத்து கொண்டு வந்துவிட்டார்கள். மரபுப்படையணியாக மாற்றமடைந்தாலும் அதன் சாவல்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்த சமயத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அவகாசத்தை அவர்தான் ஏற்படுத்தினார். புலிப்பாய்ச்சல் நடவடிக்கை திட்டமிடலின் போது இதன் பின்னர் குடாநாடு வீழ்ச்சியடையும் வரை வடக்கில் நடந்த தாக்குதல்களை ஒன்றில் அவர் வழிநடத்தினார். அல்லது பால்ராஜ் வழிநடத்தினார். தனது சமதையானவர்கள் அல்லது கீழானவர்கள் என யாருடனும் ஒரு இங்கிதமாக நடந்து கொள்ளும் இயல்பை பால்ராஜூம், அதற்கு நேர்மாறான இயல்பை சொர்ணமும் கொண்டிருந்தனர். இதனால் பின்னாட்களில் இருவரும் இணைந்து தாக்குதல்களை செய்ய முடியாமல் போனது. மிகநெருக்கடியான கட்டம் என்றபோது மாத்திரம் புலிப்பாய்ச்சலில் இருவரும் ஒன்றாக களத்தை வழிநடத்தினார்கள். சொர்ணத்தின் யுத்த முறை மிகச்சாதாரணமானது. பழைய இதிகாசபுராணங்களில் வருவதற்கொப்பானது. புதிய புதிய உத்திகளோ அதிர்ச்சிகளோ அற்றது. ஒரு வரியில் சொன்னால், போவார்கள் அடிப்பார்கள் வருவார்கள். மாட்டுவண்டி சவாரியின் வண்டியோட்டி வெறிகொண்டு, மாட்டை குத்தி விரட்டுவதைப்போல அவர் களத்தை வழிநடத்தினார். அவரது யுத்தமுறையில் இரண்டு தெரிவுகள் இருக்கவில்லை. எவ்வளவிற்கெவ்வளவு யுத்ததந்திரங்களில் நம்பிக்கை வைக்கிறானோ அந்த தளபதியின் படையணி காப்பாற்றப்படும். உயிர்களில் நம்பிக்கை வைக்கும் தளபதியின் இலக்கு நிறைவேறுமே தவிர, படையணி காப்பாறப்படுவதில்லை. சொர்ணம் இரண்டாம் வகை. அவரது தாக்குதல்கள் அனைத்துமே அதீதமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியவை. தவளை, கட்டைக்காடு, புலோப்பளை என இரண்டாம் கட்ட ஈழப்போரில் பல உதாரணங்கள் உள்ளன. மண்டைதீவு மட்டும்தான் விதிவிலக்கு. இந்த காலப்பகுதியில் இராணுவமும் அதீத போர்த்தந்திரங்களை கைக்கொண்டிருக்கவில்லை. முதலில் எறிகணை வீச்சு. பின்னர் துப்பாக்கி வேட்டு. பிறகு நகர்வு என்பதைபோல் மேலோட்டமான தந்திரங்களைத்தான் பாவித்தார்கள். இந்த சமயத்தில் மூர்க்கத்தனமாக தாக்கும் இயல்பு கொண்ட சொர்ணம் போதுமானவராக இருந்தார். இராணுவத்தின் நடவடிக்கைகளில் தந்திரோபாயமான மாற்றத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியவர் மேஜர் ஜெனரல் ஜானகபெரேரா. அவரது வழிநடத்தலில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட சூரியக்கதிர் முன்னரெப்போதும் புலிகள் சந்தித்திராத உத்தியிலான நகர்வு. இதன் பின்னர்தான் இலங்கை போரரங்கு இராணுவ உத்திகளிற்கு முக்கியத்துவம் வழங்குவதாக மாறியது. இந்த நகர்வை விடுதலைப்புலிகளினால் எதிர்கொள்ள முடியவில்லை. வன்னிக்கு பின்னகர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியென்பது இன்னொரு அர்த்தத்தில் சொர்ணத்தின் வீழ்ச்சியாக இருந்தது. அவரது போருத்திகள் கடுமையான விமர்சனங்களிற்கு உட்பட்டன. அவர் தனது போர்வாழ்க்கையில் முதலாவது சறுக்கலை சந்தித்தார். திருகோணமலை பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். திருகோணமலை பொறுப்பாளரென்பது, மூதூர் காடுகளில் ஓரிரு நூறுபோராளிகளை வழிநடத்தும் பொறுப்பு. இதன் பின்னர், விடுதலைப்புலிகளின் புதிய தளபதிகள் விரைவாக மேலெழ தொடங்கினார்கள். குறிப்பாக தீபனின் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருந்தது. அதீத இராணுவ யுக்திகளை பிரயோகிக்கும் களத்திற்கு பால்ராஜினால் சட்டென மாறிக் கொள்ள முடிந்தாலும், தீபன் போன்றவர்களின் அதீத தேர்ச்சியின் முன் ஈடுகொடுக்க முடியவில்லை. இது முதல் தலைமுறையினரை ஒருவித அசௌகரியப்படுத்தியது. ஓயாத அலைகள் 03 இன் நான்காம் கட்டத்தில் ஒரு மூத்த தளபதி என்பதன் அடிப்படையில் சொர்ணத்தை விடுதலைப்புலிகள் கைவிடவில்லை. அவ்வப்போது சந்தர்ப்பங்கள் கொடுத்தபடியிருந்தனர். துரதிஸ்ரவசமாக அவரால் ஒருமுறைகூட பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது. நவீன களங்களில் கறார்த்ன்மைக்கும், செய் அல்லது செத்து மடி பாணிக்கும் இடமில்லை. அமைப்பின் கெரில்லா போராட்டகால மனநிலையும், நிழல்அரசுக்கால மனநிலையும் வேறானவை. ஒரேமனநிலையுடன் இரண்டையும் அணுக முடியாது. இந்த யதார்த்தம் கடைசிவரை புரியாதவராகவே அவர் இருந்தார். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். கருணாவின் பிரிவின் பின்னர், திருகோணமலையை பொறுப்பேற்க இரண்டாவது தடவையாக அவர் அனுப்பப்பட்ட சமயத்தில் அவரது வாகன சாரதியாக இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து ஒருவன் அனுப்பப்பட்டான். மன்னாரை சேர்ந்த அவன் சற்றே துடுக்குத்தனம் மிக்கவன். சம்பூரில் வாகனம் பயணித்து கொண்டிருந்தது. வீதி மோசமானதாக இருந்ததால், குலுங்கியது. குலுங்காமல் செலுத்த சொல்லி சொர்ணம் சொன்னார். அவன் மெதுவாக வாகனத்தை செலுத்தினான். கூட்டம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்ததால், விரைவாக செலுத்த சொல்லியிருக்கிறார். அவன் விரைவாக செலுத்த மீண்டும் வாகனம் குலுங்கியது. முன்னிருக்கையில் இருந்தவர், சாரதியின் தலையில் அடித்திருக்கிறார். அவன் சட்டென வாகனத்தை நிறுத்திவிட்டான். எதுவும் பேசாமல் வாகனத்தில் இருந்து இறங்கினான். நிதானமாக வாகன சாவியை எடுத்து சொர்ணத்தின் மடியில் போட்டுவிட்டு நடந்தே முகாம் போய்விட்டான். இப்படியொரு சம்பவத்தை இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. http://pagetamil.com/?p=6305 (தொடரும்)
  8. ஜெயபாலன் “TK731 Turkis” என்ற விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டார்:- நோர்வே பிரஜையும் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் இலங்கை நேரம் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் நாடுகடத்தப்பட்டார். வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு 9.20 மணிக்கு துருக்கி ஊடாக அவர் நோர்வேக்கு நடு கடத்தப் பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். 'வுமு731 வுரசமளை' என்ற விமானம் மூலம் அவர் துருக்கி நோக்கி அனுப்பப்பட்டதுடன் அங்கிருந்து நோர்வேக்கு அவர் நாடு கடத்தப் படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சென்று சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று ஜெயபாலன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைதுச் எய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை முதல் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஜெயபாலன் குடிவரவு குடியகல்வு அதிகாரிகரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளில் ஜெயபாலன் வீஸா விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டியதுடன் அதனை அடுத்தே அவரை நாடுகடத்தியதாகவும் குறிப்பிட்டார். ஜெயபாலனை ஞாயிரன்று நோர்வே தூதரக அதிகாரிகளும் சந்தித்திருந்தனர். இன்னிலையிலேயே இந்த நாடுகத்தல் இடம்பெற்றுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99536/language/ta-IN/article.aspx
  9. தோழர் ஜெயபாலன் கைதும் மரபு சார் எழுத்துலக வக்கிரங்களும்… சிவாசின்னப்பொடி தோழர் ஜெயபாலன் கைது செய்யப்பட்ட விடயம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படு பொருளாக இருக்கிறது. ஏற்கனவே ஈழத்துக்கு சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் தோழர் ஜெயபாலனுக்கு இருக்கும் கவிஞர் நடிகர் என்ற ஊடக வெளிச்சம் அவரது கைதுக்கு அதிக ஒளியை பாச்சியிருக்கிறது. தோழர் ஜெயபாலனின் கைது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் யாழ் மையவாத கருத்து கந்தசாமிகள் …. ஓட்டுக் குழு உறுப்பினன் ரோ ஏஜண்ட் சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி…. ஏன்றெல்லாம் தங்களது வழமையான கருத்தியல் வறுமையின் பாற்பாட்ட சேறடிப்புக்களை செய்திருக்கின்றனர்-செய்தும் வருகின்றனர். ஜெயபாலனின் கைது ஒரு நாடகமாக ஏன் இருக்கக் கூடாது? என்றும் கைது செய்யப்பட்டவரை தொலைபேசியில் பேச அனுமதித்தது? எப்படி என்றும் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் முகநூலில் தாயகம் செல்லப் போகிறேன் என்று ஜெயபாலன் அறிவித்துவிட்டு சென்றதன் மூலம் தன்னை அவர் விளம்பர படுத்த முயன்றிருக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இவர்கள் எல்லோருமே ஜெயபாலனின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் குறைபாடுகளுக்கு அப்பால் அவரது கைதின் மூலம் மகிந்த அரசாங்கம் தமிழர் பேசும் மக்களுக்கு சொல்ல வந்த செய்தியை கவனிக்க மறந்துவிட்டனர்.அல்லது அதை கவனித்தும் அது மக்களைச் சென்றடையக் கூடாது என்று திட்டமிட்டு மறைக்கின்றனர். யாழ்ப்பாணம் சென்ற ஜெயபாலன் அங்கு மீள் குடியேறியுள்ள முசுலீம் தலைவர்களை சந்தித்து தமிழ் முசுலீம் ஒற்றுமை பற்றியும் முசுலீம்களின் பாதுகாப்பு தமிழர்களுடன் ஒன்றுபட்ட இருப்பதிலே தான் தங்கியிருக்கிறது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.இதைத் தான் அவர் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்திருக்கிறார்.தற்போது முசுலீம்களுக்கு எதிராக பௌத்த சிங்கள பேரினவாதிகள் தாக்குதலை தொடுத்திருக்கும் நிலையில் தமிழர்களையும் மோதவைத்து பிளவுபடுத்தி அதன் மூலம் தமிழின அழிப்பையும் தாயக சிதைப்பையும் மேற்கொண்ட வந்த சிறீலங்கா ஆட்சியாளர்களும் ஜெயபாலன் முகமறிந்த ஒரு நடிகானாக வந்து தமிழ் முசுலீம் ஒன்றுமை பற்றி பேசியது பயத்தை உண்டாக்கியது. தோழர் ஜெயபாலனின் நடிகன் கவிஞன் என்ற ஊடக விளம்பரத்தை வைத்தே தமிழ் பேசும் மக்களுக்கு ‘எவராவது தமிழ் முசுலீம் ஒன்றுமைக்கு முயற்சி எடுத்தால் அல்லது அது பற்றிப் பேசினால் அவர்கள் கடத்தப்படுவார்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கை செய்தியை மகிந்தவும் கோத்தபாயவும் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் செய்தி உலகளவில் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் அவரை தொலை பேசியில் பேச அனுமதித்திருக்கிறார்கள். இதை விட தோழர் ஜெயபாலனின் கைது இன்னொரு செய்தியையும் புலம் பெயர்ந்த தமிழருக்கு உணர்த்தியிருக்கிறது. அதாவது அங்கே இப்போது சமாதானம் சகவாழ்வு வந்துவிட்டதாக கூறிக்கொண்டு இங்கேயிருந்து செல்லும் பலர் காணிவாங்குவது கட்டிடம் கட்டுவது முதலீடு செய்வது என்று மறைமுகமாக சிறீலங்கா பௌத்த சிங்கள பேரினவாத அரசின் பொருளாதார இருப்புக்கு துணை புரிந்துகொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பெரும் தமிழ் நிறுவனங்கள் சிலவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உவுகிறோம் என்ற கறிவேப்பிலை காரணங்களை சொல்லிக்கொண்டு திரை மறைவில் மகிந்த அன் கொம்பனியுடன் பெரும் வணிக ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன. ஆனால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சொத்துக்கள் முதலீடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது சமாதனம் சகவாழ்வுக்கு இடையூறானது என்று கையகப்படுத்தப்படலாம் நீங்களும் கைகழுவிவிடப்படலாம் கைது செய்யப்படலாம் அல்லது நாடுகடத்தப்படலாம் என்பதே அந்த செய்தியாகும். இவற்றை முதன்படுத்துவதை விடுத்து— ஜெயபாலன் ஓட்டுக் குழு உறுப்பினன்;…. ரோ ஏஜண்ட்… சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி… என்று சேறடிப்பதன் முலம் இந்த கருத்து கந்தசாமிகள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? யாரை காப்பாற்ற விரும்புகிறார்கள் http://sivasinnapodi.wordpress.com/2013/11/26/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/
  10. தோழர் ஜெயபாலனின் விடுதலைக்கு குரல் கொடுக்க எம்மை தூண்டியது எது? சிவாசின்னப்பொடி தோழர் ஜெயபாலனும் நானும் நல்ல நண்பர்கள் தோழர்கள்.எங்களுடைய நட்பும் தோழமையும் சுமார் 30 வருடங்கள் பழமையானது.அவர் நலமுடன் திரும்பிவரவேண்டும் என்பதில் நானும் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன்.அதற்கான முயற்சி எடுத்த சிலருடன் நானும் தொடர்பில் இருந்திருக்கிறேன்.அவர் நலமுடன் திரும்புவார் என்ற நான் திடமாக நம்புகிறேன். இந்த இடத்திலே எனது மனச்சாட்சியை ஒரு விடயம் உறுத்துகிறது. ; ஜெயபாலன் என்ற தோழனுக்காக கவிஞனுக்காக ஓங்கி ஒலித்த எங்கள் குரல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவினார்கள் உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறீலங்கா அரச பயங்கரவாதப்படையினரால் கைது செய்யப்பட்டு வருடக்கணக்கில் சித்திரவதைகளை அனுபவித்து விசாரணையின்றி சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான முகம்மறியா உறவுகள் வியடத்தில் ஏன் ஓங்கி உரத்து ஒலிக்க வில்லை? என்பதே அந்த உறுத்தலாகும். தோழர் ஜெயபாலனை விடுவிப்பதற்கு அரசாங்கத்திலுள்ள இரண்டு அமைச்சர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு பிரபலமும் செல்வாக்கும் இருக்கிறது. அந்த பிரபலமும் செல்வாக்கும் கவிஞர் நடிகர் என்ற அடையாளம் தான் எங்களை அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்க தூண்டியது என்றால் நிச்சயமாக அது மனிதாபிமான செயற்பாடாகவோ மனித உரிமை சார்ந்த செயற்பாடாகவோ இருக்காது. தோழர் ஜெயபாலன் ஒரு சாதாரண மணிதராக இருந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் நூற்றோடு நூற்றி ஒன்று என்று கூறி அவரை மறந்திருப்போதும் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வதைமுகாங்களிலும் சிறைகளிலும் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைக்காக தோழர் ஜெயபாலன் விடுதலைக்கு காட்டிய ஓர்மத்துடன் குரல் கொடுக்க முயற்சி எடுக்க எங்களை எது தடுக்கிறது? எங்களுக்குள் இருக்கும் சந்தர்ப்ப வாதமா? இல்லை பிழைப்பவாதமா? http://sivasinnapodi.wordpress.com/2013/11/24/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/
  11. கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு: நோர்வேயின் இலங்கைக்கான தூதரகம் முறைப்படி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுடன் பேசி இருப்பதோடு தூதரகத்தின் ஊடாக ஒரு சட்டத்தரணியையும் ஒழுங்கு செய்திருப்பதாக கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் அவரைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல்கள் ஜெயபாலன் பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாகவும், நாளை திங்கட் கிழமை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசா சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களை விசாரித்த பின் மீண்டும் விரைவாக நோர்வேக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடவடிக்கைகளே மீதம் இருப்பதாகவும் ஜெயபாலனின் நலன் குறித்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர்சேகுதாவுத் நேரடியாக கவனித்து வருவதாகவும் தெரியவருகிறது. வரமுடியவில்லை அம்மா தீயினை முந்தி உந்தன் திரு உடலில் முத்தமிட... சிங்கமும் நரிகளும் பதுங்கும் நீர்சுனையின் வழி அஞ்சி உயிர் வற்றும் மானானேன். சென்னைச் சுவர்பாலை துடிக்கும் பல்லி வாலானேன். தோப்பாகும் கனவோடு நீ சுமந்த நறுங் கனிகள தின்றதே ஈழத் தமிழன் விதி என்ற பேர் அறியா தேசத்துப் பறவை. துருவக் கரை ஒன்றில் அதன் பீயாய் விழுந்தேனே என் கனிகளச் சுமந்தபடி இறால் பண்ணை நஞ்சில் நெய்தல் சிதைந்தழியும் சேதுக் கரையோரம் படகுகளும் இல்ல. கண்ணீரால் உன்மீது எழுதாத கவிதகளைக் காலத்தில் எழுகிறேன்... -வ.ஐ.ச.ஜெயபாலன்- நன்றி Watch Human முகநூல் 9ஆம் இணைப்பு - கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் தடுத்து வைப்பு:- வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் காலை வரை அவர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
  12. ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... என்.சரவணன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில். “...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்.... ...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...” எரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட. ஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட. முஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர். அதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர். யுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/ போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக் கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம். பேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார். அதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.” ஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார். கூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியாகவில்லை. அப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன. இதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது. 10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது. உல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு தள்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர். அரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள். அடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். இந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள். இலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே. அதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார். இது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன. யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை. ஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த கடும் விதிகளை திணித்து வருபவர்களில் முக்கியமானவர்கள் மற்ற நாடு பிரஜைகள் என்பது தான். மகிந்தவின் தம்பிகளான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை. அவரின் அடுத்த தம்பி பசில் ராஜபக்ஷ அமெரிக்க கிரீன் கார்ட் உள்ளவர். யுத்தத்தை நடத்தி முடித்த சரத் பொன்சேகாவும் அமெரிக்க கிரீன் கார்ட்டை கொண்டவர். நாட்டின் அமைதிக்கு மோசமான குந்தகம் விளைவித்த சர்வதேச குற்றசாட்டுக்குரியவர்கள் இவர்கள். இதை எல்லாவற்றையும் உலக அரங்கில் நியாயப்படுத்த நியமிக்கப்பட்ட பாலித கோஹன்ன ஒரு அவுஸ்திரேலிய பிரஜை. இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு. அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது. ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.​ http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99429/language/ta-IN/article.aspx
  13. கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டா கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரிடம் இருந்து இலங்கை நேரம் மாலை கிடைக்கப்பெற்ற தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பிரஜைகளைத் தடுத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்றும் பொறலையில் உள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா? அல்லது பொறலை பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா என்பதனை அவர் தெளிவாக கூறவில்லை. இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டால் பின் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீதி மன்ற நடவடிக்கைகள் அலுவலக நடவடிக்கைகள் நடைபெறாது என்பதனால் திங்கட் கிழமையே நீதிமன்றில் ஆஜர்பபடுத்தி அவரை விடுதலை செய்ய முடியும். இது சதாரண நடைமுறை ஆகும். இந்த நடைமுறையை மீறி விசேடமாக கவனம் செலுத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது ஜனாதிபதியின் விசேட பணிப்பில் நீதவான் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நீதித் துறையின் அனுமதியுடன் விடுவிக்க முடியும். எனினும் சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறை யாவுமே மகிந்த சகோதரர்களின் பிடியில் இருப்பதனால் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் கரிசனை எடுத்தாலும் உடனடி விடுதலை சாத்தியமற்றது. அந்த வகையில் நாளை மறுதினம் திங்கட் கிழமையே இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், புலனாய்வுத்துறையினரின் தீர்மானத்திற்கு அமைவாக நீதித் துறை ஊடாக விடுவிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. அவ்வாறு இல்லாமல் உல்லாசப் பிரயானத்திற்கான விசாவில் சென்று விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் மூலம் தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக தமது நாட்டுப் பிரஜை தடுத்து வைக்கப்பட்டு இருப்பதற்கான காரணத்தை வினவி ராஜதந்திர மட்டத்தில் விடுதலைக்கான முயற்சிகளை எடுக்கலாம் எனவும் தெரியவருகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
  14. இலங்கை சென்ற தமிழ் நடிகர் திடீர் கைது: ஒற்றுமையை சீர்குலைத்ததாக புகார்! கொழும்பு: தாயார் சமாதிக்கு அஞ்சலி செலுத்த இலங்கை சென்ற தமிழ் நடிகரும், கவிஞருமான ஜெயபாலனை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன், இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார். ஆடுகளம், பாண்டிய நாடு உள்பட சில படங்களில் அவர் நடித்துள்ளார். கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலனின் தாயார் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார். மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு உறவினர் ஒருவரது வீட்டுக்கு அவர் சென்று கொண்டிருந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது, விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர். கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே கவிஞர் ஜெயபாலன் கைது விஷயத்தில் சிங்கள உயர் அதிகாரிகள் மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் அடாவடித்தனமாக நடந்து கொள்வது தெரிய வந்துள்ளது. நேற்றிரவு கவிஞர் ஜெயபாலனை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் காவல்துறை ஒப்படைத்தனர். அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர் – சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். வவுனியாவில் இருந்து ஜெயபாலனை கொழும்பு கொண்டு செல்ல சிங்களர்கள் முயன்று வருகிறார்கள். அவரை ரகசிய இடத்தில் காவலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரை சிங்களர்கள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி சித்ரவதை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=21585
  15. 4ஆம் இணைப்பு:-ஜெயபாலன் இராணுவப் புலனாய்வாரள்களால் கண்காணிக்கப்பட்டு - மாங்குளத்தில் கடத்தப்பட்டு பின் கைதனவரானார் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:- 4ஆம் இணைப்பு:- நீண்ட இடைவெளியின் பின்னர் யாழ்.குடாநாட்டிற்கு சென்றிருந்த ஜெயபாலன் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் அவரது நடமாட்டங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பின் தொடரப்பட்டிருந்த நிலையில் அவர் யாழை விட்டு வெளியேறியிருந்தார். எனினும்; அவரை பின் தொடர்ந்த புலனாய்வாளர்கள் அவரை மாங்குளத்தில் வைத்து கடத்தியதாக தெரியவருகிறது. இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அவரை தாம் கைது செய்திருப்பதாகவும் விசா விதிகளை மீறி ஜெயபாலன் செயற்பட்டார் எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்:- விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவற்துறை அறிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றிருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார் எனவும் கூறிய காவற்துறையினர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும்; அவர் தெரிவித்துள்ளனர். 2ஆம் இணைப்பு:- கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது:- 11:10am கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார். மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை தமிழகத்தில் கழித்து வந்தார். கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. இவரது கைது குறித்து நோர்வே தூதுவராலையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக உறவினர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
  16. இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா ஐ ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன தெரிவித்தார். சுற்றுலா விசாவில் வந்திருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ரோஹன தெரிவித்தார். அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை குடிவரவு,குடியகல்வு துறை அதிகாரிகள் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131122_jeyapalan.shtml
  17. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89129

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.